பகவத் விஷயம் காலஷேபம் -38– திருவாய்மொழி – -1-4-6 ….1-4-11 –ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

எங்கள் ஆற்றாமை பரிஹரித்திலர் ஆகிலும் தம்முடைய நாராயணத்வம் ஒறுவாய்ப் போகாமே நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கோள்–என்று நின்றது கீழ் –
இதுக்கு அவர்க்கு மறுமாற்றம் -நம்முடைய நாராயணத்வம் அழிய வமையும் -தரம் அல்லாதார் உடன் கலந்து வரும் அவத்யத்தில் காட்டில் -என்று இறே
நமக்கு அவத்யம் வாராமே -எங்கள் சத்தையும் கிடைக்கைக்கு ஒரு வழி யுண்டு -தாம் அழகு செண்டேறப் புறப்படுதல் –
அழகு காட்டுகையும் -விளையாட -ஆஸ்ரிதர் நெஞ்சில் படும் படி -பக்தாநாம் -செண்டு -பந்து -செண்டு சிலுப்பி -குதிரை ஏறி புறப்படுதல் –
ஆனைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன சில உண்டு இறே -அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கு ஸ்வரூப ஹானி வாராது
-நாங்களும் ஜாலக ரந்த்ரத்தாலே கண்டு ஜீவித்துக் கிடப்புதோம் -ஒரு வகையான ஜன்னல் -உள்ளே உள்ளார் காணலாம் -வெளியில் உள்ளார் உள்ளே காண முடியாதே –
-இப்படி அவிருத்தமாகச் செய்யலான பின்பு அத்தைச் செய்யச் சொல் -என்று ஒரு வண்டை இரக்கிறாள்-
ஆறாம் பாட்டில் பகவத் ஏக போகனாய் இருக்கும் என்றார் -ரூபவானுமாய் க்ருபாவானுமாய் கம்பீர ஸ்வபாவனுமாய் இருக்கும் என்றார் -மதுகரம் இ றே

கண்டவாற்றால் தனதே உலகு என நின்ற காண் தகு தோள் அண்ணல்-ஸ்வஸ்தி கிரி -அத்தியூரான்-இமையோர் தலைவன் -அமரர்கள் அதிபதி –
தனது நெஞ்சுக்கு உபதேசம் -இங்கே நம்மாழ்வார் திருக்கோலம் -தொழுது எழு-வையம் கண்ட வைகாசி திருநாள் -திருக் காஞ்சி கருட சேவை –
அருளாத நீர் –திருநாமம் சேவிக்கும் படியான ஆழ்வார் த்வரை இதில் -இன்றும் கருட சேவை நம்மாழ்வார் திருவீதி வழியாகவே உத்சவம் –

அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

அருளாத நீர் -அபராத பூயிஷ்டை -அருளக் கடவோம் அல்லோம் -சங்கல்பம் கொண்ட
அருளி-சங்கல்பம் குலைந்து ஒரு கால் கிருபை பண்ணி யவராவி துவரா முன் –
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று –கிருபா சமுத்ரமான பெரிய திருவடி -கடவீர் -நடத்திக் கொண்டு -கஜேந்திர ஆழ்வானை ரஷித்தால் போலே –
அருளாழி யம்மானைக் கண்டக்கால்-திருச் சங்கு சக்கரம் ஏந்திய ஸ்வாமி-அடையாளம் –
இது சொல்லி
அருளாழி வரி வண்டே -தர்ச நீயமான புகரை உடைத்தான வண்டு -கடகர் உடைய சார க்ராஹ்யத்தையும் -உபதேச முத்ரை உண்டே –ரூப சோபையும்
யாமும் என் பிழைத்தோமே-வாராமை அவனது குற்றமே –

அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
ஏதத் வ்ரதம் மம -என்று அருளுகைக்கு சங்கல்பித்து இருக்குமா போலே -பராங்குச நாயகியை -அருளாமைக்கு சங்கல்ப்பித்து இருக்கிற நீர்
மயர்வற மதி நலம் அருளினன் -என்று நெஞ்சு உருகிக் கிடக்குமவர் –அருளாத நீர் –என்கிறது -என்ன
தசா விசேஷம் என்று அறிகிறிலோம்-வியாக்யானம் பண்ண மாட்டிலோம் -நம்பிள்ளை
ஸ்ரீ நாதமுனிகள் கண்ணி நுண் சிறுத்தாம்பு 12000 சாதனமாக இல்லை -அதிகார பூர்த்தி – பாத்ரமாவதற்கு –
அருளாத நீர் –என்று ஒரு திரு நாமம் சாற்றுகிறாள்
அன்றிக்கே தயா விசேஷம்-விஷயம் – பெறாமையாலே தயை குமர் இருந்து-அனுபவ யோக்யதை இல்லாமல் – தயை பண்ணாது இருக்கிற நீர் –
தயைக்கு விஷயம் போரும் இடத்தில் தயை பண்ணி என்னவுமாம் –
துஷ்க்ருதாம் பிரதானே -அபராதம் செய்தவர் -கோஷ்டிக்கு நானே தலைவர் -நிறைய சோறு உனக்கு கிடைக்குமே
-மித தோஷ வாதிகளை எதற்காக பார்க்கிறீர் -கமலா காந்தா -உலகம் உண்ட பெரு வாயன் மகிஷி -நான் போனால் உனக்கு பட்டினி தான் -தயா சதகம் –
அருளி -அருளே நிரூபகமான ஸ்வரூபம் உம்மது
நிர்தயர்க்கும் ஐயோ என்ன வேண்டும் தசை அவளது -அருளாது ஒழியும் படி எங்கனே –
அவராவி துயரா முன் –அருளி–
பின்னையும் அருளைத் தவிரீரே -அது அசத் சமம் ஆவதற்கு முன்னே அருளப் பாரும்
அவளுடைய பிராணன் பசை அற உலருவதற்கே முன்னே அருளப் பாரும்
ஜீவந்தீம் மாம் யதா ராமஸ் சம்பாவயதி கீர்த்தி மான் -என்னுமா போலே

அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
நாங்கள் சொல்லும் அத்தனையேயோ வேண்டுவது -அவன் அருளப் புகா நின்றானோ என்ன நீங்கள் அறிவிக்கும்
அத்தனையே வேண்டுவது -அதிகாரி என்று அறிவிக்க -ஒன்றே வேண்டியது அருள் பெற
-கொடுவருவாரும் அங்கே உண்டு –
அருளாழிப் புள் –
அருள் கடலான புள்
வெஞ்சிறைப் புள் என்றாள் கொண்டு போன படியால்
இப்போது வரவுக்கு உடலாகையாலே –அருளாழிப் புள் –என்கிறாள் –
கடவீர்
அனுகூலர் கண்டு வாழுகைக்கும்-ஸூக ஸ்பர்சத்தாலும் ஆகப்போகாதே பிசுகிச் சுழியா நிற்கும் இறே
அசேதன சமாதி -பிசுகிச் சுழிகை -மந்தமாக நடத்தல் -ஸூக ஸ்பர்சம் நீடிக்க வேண்டுமே –
அசேதனமான ரதத்தோபாதி வடிவம்பாலே தாக்கி நடத்த வேணுமாயிற்று-அன்று தேர் கடாவிய பெருமான் -நித்ய சூரியையும் அப்படியே
எங்கே தான் என்னில்
அவர் வீதி
அவள் தெருவிலே -அங்கனே ஒண்ணுமோ ஒரு தெருவிலே பல கால் புக்கவாறே இது வெருமன் அன்று என்று இரார்களோ என்னில்
மழை கொலோ வருகிறது -என்று பார்க்க அது கண்டு இவ் ஊர் பிணக்கின்றதே –
ஒரு நாள்
நாங்கள் ஜீவித்துக் கிடக்கைக்கு ஒரு நாள் போக அமையும்
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
பெரிய திருவடியும் மிகை –
தாமரையாள்-பெரியாழ்வார் -4-9-2-என்னும் படி அருள் கடல் ஆனவன் இ றே
கிருபா சமுத்திர பெருமாள் -அருள் மா கடல் அமுதே உனது அடியே சரணாமே –
அன்றிக்கே
அருளாழி யம்மானைக் கண்டக்கால்-
திருவடி ஒருவனுமாய் இருந்ததோ -அங்கு கையாளாய் உள்ளாரடைய நம் பரிகரம் அன்றோ -கையாலே உள்ளார் -கைகளிலே ஆளாக உள்ளார் -சாடு
-அருளை நிரூபகமாக உடைய திரு வாழியைக் கையிலே உடையவன் -அருளார் திருச் சக்கரம் -திரு விருத்தம் -33-இ றே –
சர்வேஸ்வரனுக்கும் கைக்குரியாப்பை -கை மாற்று -வாங்குவது இங்கே இறே –
சுருங்கி பரிமாணம் -கை அரிசி -ஒரு வாய் உண்டு வருகிறேன் -அளவுப் பேச்சு -ஆப்பை அளவு
-சர்வேஸ்வரன் பக்கல் அருள் மறுத்தாலும் அருள் கூடி கட்டி நிற்கும் இடம் இறே -ஆழி அன்றோ -கூடி இருக்குமே
இது சொல்லி யருள்
இத்தனையும் சொல்லி யருள வேண்டும்
ஏது என்னில் –அருளாழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் -என்கிற வார்த்தையைச் சொல்லி யருள வேண்டும்
அருளாழி வரி வண்டே-
1–ஸ்ரமஹரமான அழகியதான வண்டே என்னுதல்
2–வடிவு சிறித்து இருக்கச் செய்தே காம்பீர்யம் பெருத்து இருக்கிற படியைச் சொல்லுதல்
3–ஆழி -வட்டமாய் சுழலப் பறக்கிற வண்டு -என்னுதல்
கடகருடைய ஆத்மா குணத்தோபாதி ரூப குணமும் உத்தேச்யம் -என்கை –

யாமும் என் பிழைத்தோமே–
நாங்கள் என்ன தப்புச் செய்தோம்
தாம் பிரிந்து துவள விட்டு வைத்தால் போலே நாங்களும் க்ரமத்திலே பெறுகிறோம் என்று ஆறி இருந்தோமோ
திர்யக்கின் காலில் விழுவாரும்-தூது விடுவாரும் தாமாய் இருக்க -லோக நாதம் புரா பூத்வா சுக்ரீவம் நாதம் இச்சதி -திர்யக்
அத்தலை இத்தலையாயும் வாராது இருக்க தம்மதோ குற்றம் -எங்களதோ –பிரிநிலை ஏகாரம் -என் பிழை அல்ல -அவன் பிழை தான் –

———————————————————————————-

அவதாரிகை –

தந்தாமுடைய அபராதத்தைப் பாராதே –அருளாழி புட்கடவீர் அவர் வீதி என்று சொல்லும் அத்தனையோ வேண்டுவது என்று அவர்க்கு கருத்தாக
எங்கள் குற்றம் ஒன்றுமேயோ பார்ப்பது -தம்முடைய அபராத சஹத்வம் பார்க்கக் கடவதன்றோ -என்று சொல் என்று தன் கிளியை இரக்கிறாள்
ஏழாம் பாட்டில் தான் சர்வஜ்ஞ்ஞன் ஆகிலும் ஆசார்யர் பக்கல் கேட்ட வார்த்தை யல்லது அருளிச் செய்யான் என்று அவனுடைய ஆப்தியை அனுசந்தித்தார்
குற்றம் பொருப்பிக்கும் பிராட்டிமார் உடன் கூடி இருந்தும் அபராதத்தைப் பார்க்கிறானே -(நான்கு தூது திருவாய் மொழியிலும் திருமால் -மிதுனம் சப்தங்கள் உண்டே)

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7-

அவள் உம்முடைய அநவதிக கிருபை தாண்டியா இவள் பிழை
ரூப -உள்வாய் -அக்கமலத்து இலை போலும் திருமேனி அடிகள் -வடிவில் இளமையாலும்
என் பிழை கோப்பது போல்
பனிவாடை ஈர்கின்றது-ஈர்க்கின்ற -பாட பேதம் –
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு -அபராத சஹத்வத்தை நினைவு படுத்துகிறாள் -நிதான உயிர் பாசுரம்
பிழையை நினைப்பதே அருள் -சீறி அருளாத -கொண்ட சீற்றம் ஓன்று உண்டு போலே
திருமாலார் -அருளும் பார்வையும் அவள் இடம் -அருளுவிக்கும் அவளுக்கு நல்லராய் –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று கிருபா குணம் -ஸ்வா பாவிகம்
ஒரு வாய்ச் சொல் -ஒரு வார்த்தை பேசுவாய்
என் பிழைக்கும் இளம் கிளியே-கிளி நெருக்கம் -என்பு இளைக்கும் எலும்பை செதுக்கப் படும் படி ரூபம் இளமை
யான் வளர்த்த நீ யலையே-நீ அல்லையா
நூல் இழையை கோப்பது போலே

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
தோள் -சதை -அப்புறம் எலும்பு -அவை இல்லாம் இல்லை -உலர்ந்து போக்யிருக்கிறாள்
எலும்பும் நரம்புமே யாம்படி சரீரம் தான் போர க்ரூசமாயிற்று –எலும்பைத் துளைத்து அதிலே மூர்த்தமாய் இருப்பதொன்றை வ்யாபரித்தால்
போலே யாயிற்று பனி வாடை ஈர்கின்றது -நஞ்சூட்டின வாடை யானது இருக்கிற படி
ரூபம் இல்லாத காற்று ரூபம் எடுத்து ஊசி நூல் கொண்டு –
பாம்போ பவன் மாருதம் -என்று நாயகனுக்கு இருக்குமா போலே இரா நின்றது காணும் இவ்வாடை இவளுக்கு
பத்ம சௌள கந்தி கவஹம் – கலம்பகன் சூடுவாரைப் போலே தாமரை ஓடை செங்கழுநீர் ஓடைகளிலே சென்று புக்கு
பூவில் இழியில் அதில் வெக்கை திட்டும் -என்று மேல் எழ நின்று அபரிமிதமான பரிமளத்தை கொய்து கொண்டு வாரா நின்றது
அரி மிதியான -வண்டு காலால் மிதிக்கப்பட்ட -என்றுமாம்
-சிவம் கலப்பற்று பசும் தென்றலாய் இரா நின்றது -அதாவது புறம்பே சிலர்க்கு உடம்பு கொடுத்து சுணங்கு அழியாதே தாய்த்தலை தென்றலாய் இருக்கை
தாய்த் தலை தென்றல் -பிரதமம் ஸ்லாக்கியமான தென்றல் –
சோக விநாசநம் -நம்மை இனி பிராணன் உடன் வைத்து நலியாது போலே இருந்தது -பிராணனை போக்கி -நல்லது பண்ணும்படி –
தன்யா -காற்று வாரா நின்றது என்றால்-ஏகாந்த ஸ்தலம் தேடித் படுக்கை படுப்பவர்களும் சிலரே
லஷ்மண சேவந்தே-இது எப்போது வருவது என்று இருப்பார்கள்
பாம்போ பவன் மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே -பாடபாக்னி -கடலுக்குள் வெப்பமான அக்னி போலே –
இப்படி மகிஷியானவள் வாடைக்கு இடைந்து நோவு படா நிற்க இத்தை பரிஹரிக்கைக்கு அவர் கடல் அடைப்பது –
படை திரட்டுவது ஆகிற படி
நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிரிந்தவாறே அந்தர ஜாதி காலிலே துகையுண்பதே இப்படி –

அந்தரத்திலே ஜாதம் ஆனது -ஆகாசத்தில் பிறந்த வாயு -மனிசர் இல்லாத -மற்றோர் ஜாதி -குரங்கு -வாயு புத்திரன்
காற்றின் காலிலே -பாம்போ பாவனா மாருதம் -திருவடி இடம் பிரார்த்தித்து
செந்தீயை தழுவி அச்யுதன் என்னும் -மெய் வேவாள் –வாயு சூனு -ஹனுமான் கட்டி -நெருப்பைக் கட்டி –

என் பிழையே நினைந்து அருளி –
நான் படுகிற கிலேசம் போராது-என்று கீழ் அண்டைச் சிகை வாசியா நின்றார் -பழைய கணக்கில் உள்ள நிலுவையை விசாரிக்கை –
அவிஜ்ஞ்ஞாதா வாகை தவிர்ந்து -சஹஸ்ராம் ஸூ என்கிறபடியே இப்போது தோஷத்தில் சர்வஜ்ஞராய் யாயிற்று இருப்பது
அடியார்கள் பாபங்களை ஒன்றும் அறியாதவன் -சர்வஜ்ஞ்ஞன் இதில் பட்டம் பெற்றீர் –
ஏதாவது குற்றம் இருக்கா தேடுகிறீரோ -ஏதாவது நல்லது இருக்கா பார்க்கிறேன் –
வித்வான் -தோஷம் பார்ப்பவர் -கை கொள்ள -தோஷோ யத்யபி -தோஷாவானாலும் விடேன் -பெருமாள் -கைக் கொள்ள பார்ப்பவர் அங்கே –
யருளாத திருமாலார்க்கு
ந கச்சின் ந அபராதயாதி -என்பாரும் அருகே இருக்கே எங்கள் குற்றம் பார்த்து அவன் பக்கல் முகம் பெற இருக்கிறாரே -என்று நஞ்சீயர் அருளிச் செய்யும் படி
ராஷசியை விட நீசனாக போனேனே —
நான் இப்படி நோவு பட வேண்டுகிறது -அவனுக்கு அவள் முகம் கொடுத்து அங்கே துவக்குகை இறே என்று இன்னாதாகிறாள் -என்று பிள்ளான் பணிக்கும் படி
திருவின் இடத்தில் மாலாய் இருக்கும் –அவள் முகம் கொடாள்–நஞ்சீயர்
திருவின் மாலுக்கும் விஷயமாய் இருப்பவர் -பிள்ளான்
உறவு உள்ள இடத்திலே இ றே வெறுப்பு உள்ளதும்
அருளாது ஒழிகிறது என்-என்றால் -தந்தாம் குற்றம் பாராதே அருளச் சொல்லும் இத்தனையோ வேண்டுவது –என்று சொல்ல நினைத்தாராகில்
நீங்கள் தான் இங்கனே சொல்லுங்கோள்-என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு –என்னுங்கோள்
என் குற்றத்தைப் பார்த்து தமிக்க நினைத்தார் ஆகில் தம் பொறையாகிற நேர்ந்தரவை -செல்லுச் சீட்டை – காட்டுங்கோள் –
சுவாமிகளான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றம் செய்யப் போமோ -என்னுங்கோள்
ஆஸ்ரயத்துக்கு தக்கபடி யன்றோ எல்லாம் -நாங்கள் குற்றம் செய்வது எங்கள் அளவிலே -தாம் பொறுப்பதும் தம் அளவிலே யன்றோ
நீரோ விபு -அவள் அணு -அனுமாத்ர பிழை -விபூ மாத்ர ஷமை
திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள் –
தேவரீர் கிருபைக்கு தண்ணீர் துரும்பாக ஏதேனும் ப்ரதஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்று உண்டோ -என்று நம்பிள்ளை அருளிச் செய்யும் படி
ஓதி நாமம் குளித்து –உச்சிதன்னால் –பாதம் நாளும் பணிவோம் –உபாய புத்தியாக -திருப்புல்லாணி —
ஈஸ்வர பிரவ்ருத்தி விரோதி ஸுவ பிரவ்ருத்தி –
தகவினுக்கு
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -என்று சொல்லும் படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள்
-என்ன தப்பு செய்தாள்-கிம் கோப மூலம் -என்றாள் இ றே தாரை
ராஜ புத்ரர்களை நாலு மாசம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் போக பிரவணராய் இருந்தவற்றை ஒன்றும் புத்தி பண்ணாதே –
உம்முடைய கோபத்துக்கு அடி என் என்றாள் இ றே -காமம் கோபம் ஒரே தாய் வயிற்று பிள்ளைகள் -விஸ்வாமித்ரர் கதை -தாரை –
அவர்கள் பொறையை நினைத்து இருந்த கனத்தாலே
மநு ஜேந்திர புத்ர-அறுபதினாயிரம் ஆண்டு -செய்தார் செய்த குற்றங்களை பொறுத்துச் சேர விட்டு- ஆண்டு கொண்டு போந்தார் உங்கள் தமப்பனார்
அவன் வயிற்றிலே பிறந்து குற்றம் செய்தோம் என்று தலை யறுக்க வந்து நின்றீர் நீர் -அழகியதாய் இருந்தது உங்களுடைய போக்கு
கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேச -சாஸ்திர வஸ்யதையும் அன்றிக்கே -கண்டதிலே கடுக சாபலத்தைப் பண்ணி மீள மாட்டாத திரியக்குகளை
நீரே -இழந்த போகங்களை புஜிப்பது -என்று சேர விட்டு
நீர் சொல்லிற்று செய்தன வென்று தலை யறுக்க வந்து நின்றீர் -இப்படி சொல்லலாம் படி இறே இவர் பொறை இருப்பது
பதிகத்துக்கு நிதானம் அபராத சஹத்வம் தானே
ஒரு வாய் சொல்
ஒரு வாய் -என்றது ஒரு வார்த்தை என்றபடி –சொல் என்றது -சொல்லு என்றாய் -ஒரு வார்த்தை சொல்லு என்றபடி
என் பிழைக்கும் இளம் கிளியே
1–மௌக்யத்தாலும்-ஸ்நிக்தமான பணிதியினாலும் -வடிவில் பசுமையாலும் -வாயில் பழுப்பாலும் -நாயகனுக்கு ஸ்மாரகமாய்-
எலும்பை இழைக்கிற கிளி -என்னுதல்
2–என் பிழைக்கும் -என் தசையை அறிவித்தால் என்ன தப்புண்டாம்
யான் வளர்த்த நீ யலையே
1–ஸ்ரீ யபதியாய் -தான் தோன்றியாய் இருப்பார் செய்வதை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ –
2–கலந்து பிரிந்தார் செய்வதை வளர்ந்தவர்களும் செய்வார்களோ
யான் வளர்த்த நீ யலையே
3–அவன் தான் இப்படிச் செய்ய வேண்டிச் செய்தானோ -என்னோட்டை சம்பந்தம் அன்றோ அவன் இப்படிச் செய்தது
அப்படி என்னோட்டை சம்பந்தம் உனக்கும் உண்டான பின்பு நீ நலியச் சொல்ல வேணுமோ
யான் வளர்த்த நீ யலையே
4–எனக்குத் தக்கப் போலே யன்றே நீயும் இருப்பது -உனக்கு குறையோ –

மமைவ துஷ்க்ருதாம் கிஞ்சித் மஹத் -தன் குற்றத்தை -ஸ்ரீ சீதா பிராட்டி சொல்லிக் கொண்டது போலே -இங்கும் பராங்குச நாயகி –

—————————————————————————————-

அவதாரிகை

முன்பு இவள் வார்த்தை சொல்லிக் கொண்டாடுகையாலே தரித்து இருந்த பூவை யானது இவள் உறாவப் புக்க வாறே தானும் உறாவப் புக்கது
அத்தைப் பார்த்து -முன்பே என் தசையை அறிவி என்ன -செருக்கு அடித்து இருந்தாய் நானோ முடியா நின்றேன்
-இனி உன்னை ரஷிப்பாரைத் தேடப் பாராய் -என்கிறாள் —பூவை எனபது நாகணவாய்ப் புள் -அதாவது ஒரு பஷி விசேஷம் –
எட்டாம் பாட்டில் ஆசார்யனுடைய தேக யாத்ரையே இவனுக்கு ஆத்ம யாத்ரை என்கிறார்

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே--1-4-8-

ஆச்சார்ய லஷணம் முதல் 7 பாசுரங்கள் -மேலே மூன்றும் சிஷ்ய லஷணம் சொல்லும் என்றும் ஒரு நிர்வாகம்
பஷி தூது இத்துடன் முடியும் -மேலே வாயு -நெஞ்சு தூது –
நீயலையே சிறு பூவாய்-முக்தமான பால்யத்தால் சிறிய பூவாய் -சிறு குறுக்கே உருவத்தில் அங்கு
நெடுமாலார்க்கு என் தூதாய் -நல்லது தீயதாக அசூயை -தீயது நல்லதாக வாத்சல்யம் -நிரதிசய வாத்சல்யம் கொண்டவன் அவன்
-நெடுக்கிய காலத்தில் நிரதிசய வாத்சல்யம் கொண்டு பித்தராகிய
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்-செருக்கு அடித்து -செல்லப் பிள்ளைத் தனத்தால் -செய்யாமல் ஒழிந்தாய்
நீ அல்லையோ
சாயலோடு மணிமாமை -ஒளியுடன் கூடிய அழகிய நிறம்
தளர்ந்தேன் நான் -முடியப் போகிறேன்
இனியுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே-ஊட்டுவாரை -புறம்பே சென்று ஆராய்ந்து கொல்
கடக கிஞ்சித் காரம் செய்யாதது தன் இழவு என்றதாயிற்று –
கடகர் உடைய பருவ சிறுமையும் உத்தேச்யம்

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
என் தசையை அறிவிக்க வேணும் என்ன -அறிவியாதே இருந்த உன்னாலே வந்ததன்றோ இது -சாயலோடு மணிமாமை தளர்ந்தேன்-
அறிவித்தால் வாராது இருந்தானே யாகில் இறே அவனுக்கு குறையாவது -பகவல் லாபம் சேர்ப்பாராலே என்று இருக்கிறாள்
அவ்யவதா நே ந சம்பந்தம் எம்பெருமான் உடனேயாய் இருக்க ஆசார்யனை விரும்புகிறது பண்ணின உபகாரத்தைப் பற்ற இறே
ஆததீத யதோ ஜ்ஞானம் தம் பூர்வமபி வாதயேத்-என்னா நின்றது இறே —

இதுக்கு ஸ்வா பதேசம் -சாஷாத் தொடர்பு உண்டே ஜீவ பர -அவ்யவதானம் -நேரடி சம்பந்தம் -உபகரித்தவர் ஆச்சார்யர் –
ஸ்வரூப ஞானம் இருந்தால் தான் கிட்டும் -அத்தை அருளும் -ஆச்சார்யர் – -உத்தாரகத்வா – பிரதமம் கிரியமான ஆச்சார்யர் நினைந்தே
குரு பரம்பரை அனுசந்தேயம் -லௌகிக விஷய -வைதிக விஷயத்திலும் – ஆத்மாத்யிமிகம் விஷயத்திலும் -ஆசார்யரை வணங்கியே கார்யம் கை கூடும்

சிறு பூவாய்
உன் பருவம் நிரம்பாமை இறே நம் கார்யத்தைக் கெடுத்தது -சிறு பிள்ளைத்தனத்தால் –
நெடுமாலார்க்கு
அவருக்கு வ்யாமோஹத்தை உண்டாக்கி கொடு வர வேணும் என்று இருந்தாய் அல்லையே
என் தூதாய் –
எனக்கு அவர் பக்கல் வ்யாமோஹம் தான் இல்லாமை இருந்தையும் அன்றே –
வயிற்றில் பிறந்த உங்களைக் கொண்டு அபிமதம் சேர்க்க வேண்டும் படி அன்றோ எந்நிலை

நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்-இனி -20 தடவை -கதறும் படியான நோய் அன்றோ –
ஸ்ரீ பரத ஆழ்வான் நோய் என்றால் சாதுர்த்திகமாய் இராதே-நாலாம் நாள் சாயங்காலம் வரும் நோய் -சாதுர்திகம் -இல்லையே -போகாத நோய் அன்றோ
எனது நோய் -சிறப்பான நோய் -வ்யாவர்த்திகமான நோய் -என்றவாறு –
ஜடிலம்-நல்ல மாலை வந்தால் பிள்ளை பரதன் மயிருக்காய் இருந்தது -என்று ஆயிற்று சக்கரவர்த்தி வாய் விடுவது –
அவனாயிற்று சடை புனைந்து இருக்கிறான்
சிர வசனம் –
நல்ல பரிவட்டம் கண்டால் இது பிள்ளைக்காம் என்று வாய் விடுவார்கள் -அவன் அன்று மரவுரி உடுத்து இருக்கிறான்
ப்ராஜ்ஞ்ஜலிம் –
அவர்கள் இரந்து கொடுக்கப் பெருமவன் தன் அபிமதத்துக்குத் தான் இரப்பாளனாய் இருந்தான்
பதிதம்புவி
அங்கே பரதம் ஆரோப்ய -என்னும் நிலை பெற்றது இல்லை -படுக்கை உறுத்தும் என்று மடியிலே கண் வளருமவன் யாயிற்று தரைக்கிடை கிடக்கிறான்
ததர்ச ராமோ துததர்சம்
வைத்த கண் வாங்காதே கண் கொண்டு இருக்கும் பெருமாளுக்கும் கண் வைக்க ஒண்ணாத படி இருக்கிறவனை
யுகாந்தே பாஸ்கரம் யதா
பெருமாள் ஒருவருக்கும் கண் வைக்க ஒண்ணாமையே யன்றிக்கே ஜகத் உபசம்ஹாரம் பிறக்கப் புகுகிறதோ என்னும் படி இருந்தான்

நோய் எனது நுவல் என்ன
என் தசையை அங்கே சென்று சொல் என்ன சொல்லாதே இருந்து ஒழிந்தாய் –நுவலாதே இருந்தாய் -என்னுதல்
நுவலாதே ஒழிந்தாய் என்னுதல் செய்ய அமையாதோ இரட்டிப்பு என் என்னில் -வந்து ஒழிந்தான் போய் ஒழிந்தான் -என்னக் கடவது இ றே
-வழக்கச் சொல் இருக்கிறபடி –
-இரண்டு தர்மியையும் ஒரு உக்தி மாத்ரத்தாலே நோக்கலாய் இருக்க வன்றோ நீ ஆறி இருந்தது –
நுவலாதே -வழக்கச் சொல் -திசைச் சொல் -பாசுரச் சொல் -மூன்று வகை-
-நெடுமாலார்க்கு எனது -என்னை -உனக்கும் நெய்யடிசில்-மூன்றையும் இழக்க வேண்டுமே
அதுக்கு இப்போது வந்தது என் -என்ன
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் –
சமுதாய சோபையோடு நிறத்தில் பௌஷ்கல்யமும் இழந்தேன் -உயிர் உடன் உடலையும் இழந்தேன்-
-இனிப் போய் அறிவிக்கிறேன் என்று த்வரிக்கப் புக்கது –
கதே ஜலே சேது பந்தம் போலே –இனி -தளர்ந்தேன் -இனி -அறிவித்தால் என்ன லாபம் உண்டு
நான் இனியுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே-
இனி உனக்கு ரஷகரைத் தேடப் பாராய் -அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்க்கப் போகாது -என்று இருக்கிறாள்
பெரிய திருமலை நம்பி தம்முடைய அந்திம தசையில் தமக்கு ஒரு வெண்ணெய்க்கு யாடும் பிள்ளை யாயிற்று திருவாராதனம் –
அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி யுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே -என்றாராம்
பூவைப் பார்த்து இல்லை பூவைப் பூ வண்ணனை நோக்கி அருளிச் செய்தார் –

—————————————————————————————

அவதாரிகை –

சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் -என்று இருக்கிற சமயத்தில் ஒரு வாடை வந்து உடம்பிலே பட்டது -இதினுடைய தோற்றரவு
இருந்த படியாலே வெறுமனன்று-
மகாராஜருடைய மிடற்று ஓசையில் தெளிவைக் கேட்டுத் தாரை -பூர்வ ஷணத்திலே வாலி கையாலே நெருக்குண்டு போனவர் இப்போது இப்படி
தெளிவாக வந்து அறை கூறுகிற இது வெறுமனல்ல-இதுக்கு ஒரு அடி உண்டு என்றாள் போலே இவளும் –
தேன நாதேன மஹதா -புனர்வாஹ்வானாம் சங்காம் -நாமி பலம் -நிவாச வ்ருஷ சாதூனாம் -ஆபன்னாம் பராம் கதிம் -பின்னால் இருக்க வேண்டும்
இவ்வாடைக்கு ஒரு அடி உண்டாக வேணும் –என்று பார்த்து -ராஜாக்கள் ராஜ த்ரோஹம் செய்தவர்களை நாழிகைக்கு வேற்காரரை வர
விடுமா போலே நம்மை நலிகைக்கு சர்வேஸ்வரன் இவ்வாடையை வர விட்டானாக வேணும் என்று பார்த்து வேற்காரர் கொடு போய்
நலியப் புக்கவாறே நிதியுண்டு என்பாரைப் போலே –நாடாத –வைக்கவே வகுக்கின்ற –கைங்கர்யம் -அதுவே நிதி யுண்டு -என்கிறார் –
நான் சொல்லுகிற வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்தால் -அத்தலையால் வரும் நன்மை வேண்டா என்று இருந்தான் ஆகில்
அவசியம் வந்து என்னை முடிக்க வேணும் -என்று அவ்வாடையை இரக்கிறாள்-ஈராய் எனதுடலே
ஒன்பதாம் பாட்டில் ஆசார்ய சம்பந்த மாத்ரமே சத்தா தாரகம் -இதர ஸ்பர்சம் சத்தா பாதகம் –என்கிறார்

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-

முடிப்பதாக அவன் பக்கல் நின்றும் வந்ததொரு வாடையை பார்த்து -நிருபாதிக பந்துவுக்கு ஒரு வார்த்தை சொல்லி
அத்தையும் அவன் ஏற்றுக் கொள்ளா விடுல் ஈராய்
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் -உரைத்து ஈராய் -எனது உடலே –வாடைக் காற்றை -அனுப்பி தகைக்க-அத்தையே திருப்பி அனுப்புகிறாள்
ஊடு -நடுவில் -அவனுக்கும் அவளுக்கும்
நாடாத
மலர் நாடி நாடோறும் நாரணன் தன்வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று –சொல்லி சமாதானம்
மீண்டும் நலிய -ஒழிக்க ஒழியாத சம்பந்தம் உள்ள ஸ்வாமி காரணங்களை தயார் படுத்தி வைத்து இருக்கிறேன்
நாடாத மலர் -தனிச் சிறப்பு -ஆத்மபுஷ்பம் அன்றோ -சமர்ப்பிக்கிறேன்
வீடாடி-வீடு விச்லேஷத்தில்
வீற்றிருத்தல்-தனிமையிலே
வினையற்றது -பாக்ய ஹீனர்களுக்கு கிருத்யம்
என் செய்வதோ
என்று உரைத்து -பின்பு ஈராய்
பின் அவன் என்ன பதில் சொல்வான் சொல்ல வில்லை -அனுகூல உத்தரம் பெற்றிலை யாகில் இராத படி வெட்டி விடும்
கடகர் அவஸ்தா விசேஷத்தில் பாதகர் ஆகிலும் -அதில் தாத் பர்யம் இல்லை -கார்யகரர் ஆகில் உத்தேச்யம் –

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
ஆத்ம புஷ்பத்தை சொல்கிறது -என்பாரும் உண்டு –
அங்கன் அன்றிக்கே -ஜீயர் -எண்டிசையும் உள்ள பூக்களைக் கொண்டு -4-7-8–என்கிறபடியே தேட அரிய புஷ்பங்கள் எல்லாம் தேடி -என்று அருளிச் செய்வர்
இது தான் ஒருநாள் தேடி விடுகை அன்றிக்கே
நாடோறும் –
விச்சேதியாத படி கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெரும் வஸ்துவுக்கு விச்சேதம் ஸ்வரூப ஹானி இ றே -அகிஞ்சத்கரத்வ சேஷத்வ அனுபபத்தி –
நாரணன்
நித்ய பரிசர்யை பண்ண வேண்டும்படி சர்வ சுவாமி யானவன் –

நாடாத -தேடப் போகாதது ஓன்று இல்லை -ஆத்மா ஈஸ்வரனுக்கு சேஷ பூதன் தத் ஏக ரஷணம் உணர்த்தியே சமர்ப்பணம்
ஆத்மாவைத் திருத்துகையே -ஸ்வரூப ஞானம் சேஷ பூதன் பரதந்த்ரன் ஆத்மா என்ற உணர்வு
இத்தை உணர்த்த ஸ்ரீ கீதா ஸ்லோகம் -சரம ஸ்லோகம் அப்புறம் -ஏதத் பரமம் குஹ்யம் -ஸ்ரீ கீதா சாஸ்திரம் விரித்து உரைப்பவன்
-பரம பக்தன் போலே தன்னையே வந்து அடைவான் -என்கிறான் –
பக்தி பண்ணும் ஆனந்தம் இதனாலும் எனக்கு கிட்டுமே -அது தான் காரணம் -பக்திக்கு நிகர் -அது போலே நாடாத மலரும் ஆத்மசமர்ப்பனமும் ஒன்றே

வாடாத மலர் அடிக்கீழ்
செவ்வி மாறாத பூப் போலே இருக்கிற திருவடிகளின் கீழே
ஸ்வரூப ஹானியாலும் விட ஒண்ணாத படி நிரதிசய போக்யமான திருவடிகள்
ஆசன பத்மத்தில் அழுந்தின திருவடிகள் -மேலே உள்ள நாரணன் தன்னை மாற்றினாலும் -மேல் நிற்பதை பார்க்காமல் விட ஒண்ணாத திருவடிகள் என்கிறார்
வைக்கவே -சேர்க்கவே
வகுக்கின்ற -உண்டாக்கிற்று -ஸ்ருஷ்டத்வம் வனவாசாயா -போலே -பெற்ற பயனைப் பெற ஸ்ரீ தண்ட காரண்யம் சென்று -நடக்கும் பெருமாளை சேவிக்காதே –
ராமம் தசரதம் வித்தி -காடு பூ சூடிற்று அயோத்யா இழந்தது -ஆத்மபுஷ்பம் இருப்பதே அவன் திருவடிகளுக்கு சமர்ப்பிக்க தானே
இப்படி வகுத்ததுமாய் ஸூலபமுமாய் நிரதிசய போக்யமுமான திருவடிகளிலே சர்வ கைங்கர்யங்களையும் பண்ண வாயிற்று இத்தை உண்டாக்கிற்று
நாரங்களுக்கு பிராப்தம் பிராப்யம் –வகுத்த -தத் புருஷ சமாசம் /அனைத்துக்குள்ளும் -ஸூ லபன் -பஹூ வ்ரீஹி சமாசம்
சேஷ பூதனுக்கு கிஞ்சித் கரித்து ஸ்வரூப சித்தி யானால் போலே சேஷிக்கும் கிஞ்சித் கரிப்பித்துக் கொண்டு இறே ஸ்வரூப சித்தி ‘
கைங்கர்யம் -நிதி ஸ்தானம் -கொடுத்தால் கொடுத்தவனுக்கு ஏற்றமா பெற்றவனுக்கு ஏற்றமா -கைங்கர்யம் இருவருக்கும் நிதி –
லௌகிக நிதி போல இல்லை -ராஜா வுக்கு வரி கட்டுவது போலே இல்லையே -கைங்கர்யம் கொண்ட அவனுக்கும் நிதி இது
-வாடாத மலர் -என்பதால் சேஷித்வ சித்தி -மலர் அடிக் கீழ் வையாத போது வாடும் -தளிர் புரையும் திருவடி என் தலை மேலே -சுடர் அடி தொழுது எழு -தான் துயர் அறும்
இப்படி இருக்க
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
வீடு -என்று விடுகை -அதாவது -விச்லேஷிக்கை
ஆடுகை -அவஹாகிக்கை
வீற்று இருக்கை யாவது -விச்லேஷத்தில் மூர்த்த அபிஷிக்தையாய் இருக்கை -துன்பத்தில் ஆழ்ந்து இருப்பதற்கு பட்டாபிஷேகம் –
வினை யறுகை யாவது -நல் வினை யறுகை
இப்படி பாஹ்ய ஹானியால் விசேஷத்தில் அபிஷேகம் பண்ணி தம்மை பிரிந்து இருக்கிற இப்பொல்லாத இருப்புண்டு -இது என் செய்யக் கடவதோ -என்னுதல்
அன்றிக்கே –வீற்று இருத்தல் -வேறு பட்டு இருத்தல் என்றுமாம் –
தம்மையும் பிரிந்து தம்மோடு ஒரு சம்பந்தத்தையிட்டு பந்துக்களும் கை விட அவர்களையும் விட்டு வேறு பட்டு இருக்கிற
இவ் வஸ்து என் செய்யக் கடவதோ -என்னுதல்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் -தம்மால் இழிப்புண்டு –9-7-2-என்றும் சொல்லக் கடவது இ றே

ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே —
வேற்காரர்-அரசின் காவல்காரர் – அங்குத்தை வார்த்தையை இங்கே சொல்லி இங்குத்தை வார்த்தையை அங்கே சொல்லித் திரியுமா போலே
அங்கோடு இங்கோடாய்த் திரியா நின்றது ஆயிற்று
ஊடு என்று உள்ளாய்-ஆடுகை -சஞ்சரிக்கை –அங்கே அந்தரங்கமாக சஞ்சரிக்கை -கொங்கு வண்டு கரியாக வந்தான் -போலே அவன் பஷத்து வாடை
அன்றிக்கே சம்ச்லேஷ சமயத்திலே கிட்டி வர்த்தித்துப் போந்த நீ -என்னுதல்
உரைத்து
நித்ய கைங்கர்யத்துக்கு இட்டுப் பிறந்த வஸ்து இப்படி இருக்கக் கடவதோ என்று அறிவித்தால்
அத்தலையால் வரும் கைங்கர்யமும் நமக்கு வேண்டா என்று இருந்தான் ஆகில் அவசியம் வந்து அவனோட்டை பிரிவுக்கு சிளையாத
என் உடலை முடித்து விட வேணும் -என்று காலைப் பிடித்து -வாடையை-வேண்டிக் கொள்ளுகிறாள்

——————————————————————————

அவதாரிகை –

அல்லாத வற்றை எல்லாம் விட்டு நெஞ்சைத் தூது விடுகிறாள் -என்பாரும் உண்டு அப்போது விடல் என்றது -அவனை விடாதே கொள் என்கை-
அன்றிக்கே -கீழில் பாட்டில் –-வைக்கவே வகுக்கின்று -என்று கைங்கர்யம் பிரச்துதமானவாறே தாய் முலையை நினைத்த கன்றே போல்
திரு உள்ளம் பதறி சரீரத்தை விட்டுப் போகப் புக்கது –நம் கார்யம் ஓர் அறுதி பிறக்கும் அளவும் நீ என்னை விடாதே கொள்-என்னுதல் –

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –-1-4-10-

பறவை /வாடை -கீழே -ஆத்மபுஷ்பம் ஆழ்வார் இடம் சொல்லாமல் போக –முந்துற்ற நெஞ்சு –முன் பாசுரம் போலே இல்லாமல்
தானே போகும் நெஞ்சிடம் தன் காரியமும் செய்ய பிரார்த்திக்கிறார்
அதூர வர்த்தி —வ்யூஹத்தில் தூது -என்பதற்கு இந்த பாசுரம்
உடல் ஆழிப் பிறப்பு -சக்கரம் சுழல்வது போலே சம்சார ஸ்தலம்
வீடு -ஏதன் நிவ்ருத்தி -மோஷ
உயிர் -போக்தாவான ஜீவாத்மா
முதலா -நிர்வாஹகனாய்
முற்றுமாய் -போக்கியம் போக உபகரணம் தனக்கு பிரகாரமாக கொண்டு
கடலாழி நீர் தோற்றி -ஷீராப்தி சந்நிஹிதனாய்
அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லிஅடல் -ஆஸ்ரித விரோதி -அர்த்தமாக மிடுக்கு உள்ள திரு ஆழி -சுவாமி
இது -வர்த்தமான இந்த ஆர்த்தியை
விடலாழி மட நெஞ்சே -விடல் ஆழி மட நெஞ்சே -உள்ளத்தை தூது
வினையோம் என்றாம் அளவே-அவன் உடன் ஒன்றாக சேர்த்து –
அவனை விடாதே
என்ன விடாதே -இரண்டுமாம் –

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
உயிரினுடைய உடலாழி பிறப்பு -ஆத்மாவினுடைய சஹஜமான பிறப்பு
வீடு முதலா முற்றும் ஆகைக்காக -மோஷாதி புருஷார்த்தங்களை பெறுகைக்காக-சரீரத்தினுடைய வட்டமான பிறப்பு
அன்றிக்கே –
ஆழி என்று கடலாய் -அத்தாலே காம்பீர்யமாய் -அசங்க்யேயமான ஜன்மம் என்னுதல்
வீடு -மோஷம் -சிருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷம் ஆகையாலே சொல்லுகிறது
அன்றிக்கே –
வீடுயிர் -ஜன்மங்கள் தோறும் உண்டான சரீரஸ்தமான ஆத்மாக்கள்
உயிர் தொடக்கமான மற்றும் உண்டான கார்ய ஜாதத்தை உண்டாக்குகைக்காக
ஆய்– பஹூச்யாம் என்கிறபடி தன் விகாசமே யாகையாலே
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
ஆழி நீர் -ஆழிய நீர் -அப ஏவ சசார்ஜ தௌ-என்கிறபடியே மிக்க ஜலத்தை உண்டான ஏகார்ணவத்தை உண்டாக்கி
இவ்வருக்கு உண்டான சிருஷ்டி யாதிகளுக்காக அங்கே வந்து கண் வளர்ந்து அருளும்

அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
ஸ்ருஜ்ய பதார்த்தாங்களுக்கு விரோதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்காக ஆசிலே வைத்த கையும் தானுமாயிற்று கண் வளர்ந்து அருளுவது
கண்டக்கால் -என்னிலும் உனக்கு அன்றோ பேறு முற்படுகிறது -சந்த்ரே த்ருஷ்டி சமாகம -போலே கண்டாரை காணும் அத்தனை இறே தனக்கு
சீதையை தொட்ட காற்றே என்னைத் தொடு -சீதை கண்ட சந்த்ரனை காணப் பெற்றேனே -பெருமாள் கடல் கரையில் –
இது சொல்லி -வைக்கவே வைக்கின்று -என்கிற வார்த்தையைச் சொல்லி -என்னுதல்
சிருஷ்டிக்கு பிரயோஜனம் -விசித்ரா தேக சம்பந்தி ஈச்வராய நிவேதிதம் -என்கிறபடியே தேவர் திருவடிகளிலே
சர்வ கைங்கர்யங்களையும் பண்ணுகை யன்றோ -என்கை
விடல் என்கிற பதம் மேலே அன்வயிக்கிறது
ஆழி மட நெஞ்சே
அளவுடையையாய்– பவ்யமான நெஞ்சே என்னுதல்
சுழன்று வருகிற– பேதை நெஞ்சே -என்னுதல்
வினையோம் ஒன்றாம் அளவே விடேல்
சிருஷ்டிக்கு பிரயோஜனம் அங்கே அவரைக் கிட்டி அடிமை செய்கையாய் இருக்க பிரிகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நாம்
அவரோடு சேரும் அளவும் நீ அவரை விடாதே ஒழிய வேணும் –
சிருஷ்டிக்கு பிரயோஜனம் தேவரீர் கைங்கர்யம் என்பதைச் சொல்லி –நான் சேரும் வரை அவனை விடேல்
என்னை விடேல் -என்றுமாம்

————————————————————————————

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழியில் சப்த மாதரத்தை அப்யசிக்கவே அமையும் திரு நாட்டைப் பெறுகைக்கு-என்கிறார்
சமன் கொள் வீடு -தரும் தடம் குன்றமே -திருமலையே அருளும் -பாவின்னிசை பாடித் திரிவனே -இசையே போரும் –

அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-

அளவியின்ற –இயன்ற -கடந்த அளவுக்கு உட்படாத -மேலே சொல்லும் உலகு பரத்வ சௌ லப்யங்களுக்கு விசேஷணம்
வேழுலகத்தவர் பெருமான் -பரத்வம்
கண்ணனை -சௌலப்யம் -ஆஸ்ரித சுலபன்
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் -தூது விட்டு -அனுபவ கர்ப்பமான இப்பதிகம் அருளிய வண்மை
வாய்ந்துரைத்த -ஞான பிரேமங்களால் கிட்டி அருளிச் செய்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் –உள்- உள்ளே பாவ பந்த பிரகாசமான -அவன் இடமே ஈடுபட்ட நெஞ்சு –
இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் -இனிதான சப்த மாத்ரத்தாலே
வானோங்கு பெரு வளமே-கைங்கர்ய சாம்ராஜ்யம் –
இழவு தீர வந்து தோன்றி -திரு முகம் காட்டியதை அருளிச் செய்கிறார் -பெரிய வாச்சான் பிள்ளை –
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் -மா முனிகள் மன்னார் குடி ராஜ கோபாலன் -சகி வெறி விலக்கு பதிகம் -அவைஷ்ணவ கட்டுவிச்சி –
தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து -அடுத்த பாசுரம் -தோழி சொன்னதையே -வண் துவாராபதி மன்னன் சப்தம் கேட்ட உடனே –
அதே போலே இங்கும் –கண்ணனை பாடுவதாக இங்கே சொல்லி -ஷீராப்தி நாதன் அரை குலைய தலை குலைய வந்து
சேவை சாதிக்க -ஆழ்வாருக்கு அன்று அருளை ஈந்த கண்ணன்
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா –28 வரை தவித்து தூது விட -29 /30 பாசுரங்கள் -ஆலிங்கனம் செய்து –
இறுதி பிரபந்தம் -நாலாயிரத்துக்கும் -கூட -ஆர்த்தி தீர்த்தான் -தன் திருவடி ஈந்தான்
அளவு இயன்ற -அளவுக்கு உட்பட வந்து முகம் காட்டினான் என்றபடி இங்கும் –

அளவியின்ற வேழுலகத் தவர் பெருமான் கண்ணனை
வியந்த என்கிற இது –வியன்ற -என்று கிடக்கிறது -தவ்வுக்கு றவ்வாய்-அளவு இயந்த-
-வியத்தல் —இயத்தல்-கடத்தல் -அளவைக் கடந்து இருக்கும் -என்றபடி -அபரிச்சேத்ய மஹிமனாகை
இத்தால் இத்தசையில் முகம் காட்டுகைக்கு ஈடான ஜ்ஞானாதி குண பூரணன் -என்கை
சர்வஜ்ஞன் -ஆழ்வார் பட்ட பாட்டை அறிந்து முகம் காட்டி அருளிய சர்வஜ்ஞத்வம் இங்கே விவஷிதம் –
நாரணனைக் கண்டக்கால் -ஊன ஷோடச வர்ஷ -12 வயசு பெருமாள் அப்பொழுது -சக்கரவர்த்திக்கு யுத்தம் அனுப்பாது இருக்க 16 ஆக வில்லை சொல்வதே நோக்கு
அது போலே இங்கு -அடியேன் உட்பட -ஏழு உலகத்தவர் சொல்வது தம்மையும் விடாமல் அருளியதை சொல்வதில் நோக்கு –
வேழுலகத்தவர் பெருமான் -நாராயணத்வம் விகலாமாகாத படி சர்வேஸ்வரன் ஆனான் -ஏழ் உலகத்தவர் என்னவே -தாமும் அதிலே அந்தர்பூதர் இறே
கண்ணனை -இவ்வளவிலே வந்து முகம் காட்டிற்று இலன் என்ற குற்றம் தீர வந்து முகம் காட்டுகையாலே ஆஸ்ரித ஸூலபனானவன் –
திருக் கண்களை யுடையவன் -கண்ணைக் காட்டி அருளினான் -அதனாலே கண்ணன் சப்தம் இங்கே -என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு தூது விட்டாரே –
பத்துடை அடியவரில் கிருஷ்ணாவதாரத்தில் அனுபவிக்கப் பார்த்து -அது கிடையாமையாலே தூது விட்டார் ஆகையாலே
இங்கு முகம் காட்டினான் கிருஷ்ணன் என்னவுமாம்
இத்தால் அவனுடைய மேன்மையும் சௌலப்யமும் நிலை நின்றது -இவருக்கு முகம் காட்டின பின்பு யாயிற்று -என்றபடி

மேன்மை -புண்டரீகாஷன் -சர்வாதிகத்வம் –வேழுலகத் தவர் பெருமான்
கண்ணனை -பரத்வம் –கிருஷ்ணன் -சௌலப்யம்
கண்ணுக்கு விஷயம் -பெரு நிலம் கடந்த நல்லடிப் போது -அலற்றுவன் –தழுவுவன் அமர்ந்தே -கிருஷ்ண அவதார சத்ருசம் -உலகம் தொட்டு அது -ஊரைத் தொட்டு இது -ஆயன் -மாயன் -ஸ்ரீ கிருஷ்ண ஷேத்ரம் பூம் கோவல் தொழுதும் போ நெஞ்சே –கண் கூடாக திரு விக்ரமனே கண்ணன் –

வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அகால பலி நோ வருஷோ -என்கிறபடியே திரு நகரியும் தளிரும் முறியுமாயிற்று–பல்லவும் மொட்டுமாயிற்று – நம் ஆழ்வாருக்கு சேவை சாதித்த பின்பு –
பரத்வாஜர் வரம் கேட்க சொல்லி பெருமாள் -கேட்ட வார்த்தை-வியாஜ்யம் இது -பெருமாள் இல்லாத பொழுது காலம் அல்லா காலத்திலும் வாடிற்று –
வயலுக்கும் வளப்பம் -குரு கூருக்கும் வளப்பம் -இங்கும் கண்ணன் வந்ததால் வளப்பம் –
வாய்ந்து உரைத்த -வாய்கை -கிட்டுகை-அதாவது பாவ பந்தத்தை உடையராகை-நெஞ்சு பிணிப்புண்டு சொன்னதாய் இருக்கை
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
அபரிச்சேத்ய வஸ்துவுக்கு வாசகம் ஆகையாலே தானும் அபரிச்சின்னமாய் -பெருமையில் அளவுக்கு உட்படாத –
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத தாய் இருக்கிற ஆயிரத்துள்
இடைச் செருகல் மிகைப் பாடல் என்று சொல்ல முடியாதே –அந்தாதி என்பதால் –

வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –
இப்பத்தின் உடைய நன்றான உரையாலே -பால் குடிக்க நோய் தீருமா போலே இத் திருவாய் மொழியில் இனிய சொல்லாலே பெறலாம்
ஸ்வயம் பிரயோஜனமான இத்தாலே சம்சாரத்திலே சங்குசிதமான நிலை போய் பரம பதத்தில் போய் ஸ்வ ஸ்வரூபத்தைப் பெற்று
விஸ்த்ருதனாகை யாகிற நிரவதிக சம்பத்தைப் பெறலாம் -இங்கேயே பெறலாம் -ஸ்வேன ரூபேண அபிநிஷ்பந்த்யதே –பெரும் வளமே –
உபாயாந்தரம் இல்லை -சாதனத்வம் இல்லை -போக்யத்வம் ஆகும் என்றபடி —

முதல் பாட்டில் ஒரு நாரையைத் தூது விட்டாள்-
இரண்டாம் பாட்டில் அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தை சில குயில்களுக்குச் சொன்னாள்
மூன்றாம் பாட்டில் நான் பண்ணின பாபமேயோ மாளாது என்று சொல்லுங்கோள் -என்று சில அன்னங்களை இரந்தாள்
நாலாம் பாட்டில் சில மகன்ற்றில்களைப் பார்த்து என் தசையை அங்கே சென்று சொல்ல வல்லிகளோ மாட்டிகளோ என்றாள்
அஞ்சாம் பாட்டில் சில குருகளைப் பார்த்து தன்னுடைய நாராயணத்வம் ஒருவாய்ப் போகாமே நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கோள்
ஆறாம் பாட்டில் ஒரு வண்டைக் குறித்து தம்முடைய நாராயணத்வத்துக்கு ஒரு ஹானி வாராமே எங்கள் சத்தையும் கிடக்கும்படி
இத்தெருவே எழுந்து அருளச் சொல் என்றாள்
ஏழாம் பாட்டில் ஒரு கிளியைக் குறித்து -இத்தலையில் அபராதத்தைப் பார்க்கும் அத்தனையோ தம்முடைய அபராத சஹத்வத்தையும்
ஒரு கால் பார்க்கச் சொல் என்றாள்
எட்டாம் பாட்டில் தான் உறாவினவாறே முன் கையில் இருந்த பூவையும் உறாவ நானோ முடியா நின்றேன் நீ உனக்கு ரஷகரைத் தேடிக் கொள் -என்றாள்
ஒன்பதாம் பாட்டில் ஒரு வாடையைக் குறித்து என் தசையை அங்கே சென்று அறிவித்தால் அவன் அவள் நமக்கு வேண்டா என்றான் ஆகில்
என்னை வந்து முடிக்க வேணும் என்று இரந்தாள்
பத்தாம் பாட்டில் தன் நெஞ்சைக் குறித்து நம் கார்யம் ஓர் அறுதி பிறக்கும் அளவும் நீ அவனை விடாதே கொள் என்று போக விட்டாள்
நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

முதல் பாட்டில் ஆசார்யனுடைய ஞான வைபவத்தை அருளிச் செய்தார் –சிறகுகள்
இரண்டாம் பாட்டில் மதுர பாஷியாய் இருக்கும் என்றார்
மூன்றாம் பாட்டில் சார அசார விவேகஞ்ஞன் என்றார் -அன்னம்
நாலாம் பாட்டில் விக்ரஹ சௌந்தர்யத்தை அனுசந்தித்தார் -நீல மகன்றில்காள்
அஞ்சாம் பாட்டில் நினைத்தது கிட்டும் அளவும் சலியாத சுத்த ஸ்வ பாவன் என்றார் -இறை தேடும் சிறு குருகே
ஆறாம் பாட்டில் -பகவத் ஏக போகனாய் இருக்கும் என்றார் –ரூபவானுமாய் க்ருபாவானுமாய் கம்பீர ஸ்வபாவனுமாய் இருக்கும் என்றார் -அருள் ஆழி வரி வண்டு-மதுகரம் இ றே
ஏழாம் பாட்டில் தான் சர்வஜ்ஞ்ஞன் ஆகிலும் ஆசார்யர் பக்கல் கேட்ட வார்த்தை யல்லது அருளிச் செய்யான் என்று அவனுடைய ஆப்தியை அனுசந்தித்தார் -கிளி
மேலே சிஷ்ய லஷணம்
எட்டாம் பாட்டில் ஆசார்யனுடைய தேக யாத்ரையே இவனுக்கு ஆத்ம யாத்ரை என்றார் -இன் அடிசில் வைப்பாரை நாடாயே –
ஒன்பதாம் பாட்டில் ஆசார்ய சம்பந்த மாத்ரமே சத்தா தாரகம் –இதர ஸ்பர்சம் சத்தா பாதகம் -என்றார்
உரைத்து -யாராய்- எனதுடலே –ஆச்சார்யா சம்பந்தம் சத்தை-பனி வாடாய்-பிரகிருதி ப்ராக்ருதங்கள் பாதகம் –
பத்தாம் பாட்டில்
ஆக இப்படி ஜ்ஞானவானுமாய்
மதுர பாஷியாய்
சார அசார விவேகஞ்னுமாய்
தர்ச நீயனுமாய்
சுத்த ஸ்வ பாவனுமாய்
க்ருபா காம்பீர்யங்களை உடையனாய்
சிரோ உபாசித்த சத் வ்ருத்த சேவ்யனுமாய்
லோக பரிக்ரஹம் உடையனுமாய்
சச் சிஷ்யனாலே ஏவம் பூதனான ஆசார்யனுடைய தேக யாத்ரையே தனக்கு ஆத்ம யாத்ரையாய்
இதர ஸ்பர்சமும் தனக்கு பாதகமுமாய்
இப்படி சதாசார்யா சேவை பண்ணுகையாலே பகவத் கைங்கர்யத்திலே பிரவணமாய்
நின்னிடையேன் அல்லேன்–8-2-10- என்று நீங்கி
ஓர் கோல நீல நன் நெடும் குன்றம் வருவது ஒப்பான நாண் மலர்ப் பாதம் அடைந்தது நம் திரு உள்ளம் -என்று தலைக் கட்டினார்

————————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

தத் காங்ஷித -ஆசை பட்ட
அனதிகம முனி விஷண்ணன் -கிட்டாமையால் சடகோப முனி சோகப்பாட்டு
பிராப்தோ தசாஞ்ச –தசையை அடைந்து
ஹரி புக்த வியுக்த நார்யா-கலந்து பிரிந்த நாயகி நிலை அடைந்து
சர்வ அபராத சகாயம் அவபோக்த்யா–நினைவு படித்து
தூத்யா
சௌரே
சு தோஷ -தனக்கு தோஷம் இருப்பதையும்
சதுர்த்த

————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

அன்யாபதேசம் ஸ்வா பதேசம் இரண்டு ஸ்லோகங்கள்

த்ராணே பத்தத் த்வஜ்வாத் – ரஷணத்துக்கு கொடி கட்டி
சுப நயன தயா –
சுவார்த்த லாபே அர்த்திபாவாத்
மேக ஸ்வ பாவாத்
ஜகத் உப ஜனன ஸ்தாபன அதி ப்ரீதியாத்
காருண்ய ஆப்தத் யோகாத்
அனுகத மகிஷி சந்நிதி
சங்க தீர்க்க –நெடு மால்
நாநா பந்த்யாத்
சகல வித பந்து சு ரஷ
ஆஸ்ரித அபராத

தூத நீத்யா
சத்வீ பவ்யான் -பவ்யமான சிஷ்யர்கள் உடன் கூடிய ஆச்சார்யர்
சு வாச -மதுர பாஷி
சு சரித்த சுபகான் நல்ல நடத்தை
கிருஷ்ண சாரூப்யம் வர்ணான் நீல
ஸுவ ஆகார உதார சீலன் -உண்ணும் -வண் துவரை பெருமானே தாரகாதி -சிஷ்யருக்கும் வழங்கும் உதாரர்
தனுத்ருத பகவன் லஷணம் சங்கு சக்கரம் தரித்து ஆழி வரி வண்டே
பால்ய குப்தான் இளம் கிளியே முன்னோர் மொழிந்த
சாஸ்திர -சாத்திர -மாணாக்கர்கள் –ஸ்வாஸ் சந்த வ்ருத்தீன் -சிறு பூவாய் -சிஷ்யருக்கு வசப்பட்டு
அபிகத சிரிசான் -சீதள ஸ்வ பாவன் -பனி வாடை
அந்தரங்க யுக்தி யோகான் –

———————————————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 4–பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்

அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்-————–4-

————————————————————————————————
அவதாரிகை –

இதில் அபராத சஹத்வத்தை அறிவியுங்கோள் -என்று
தூத ப்ரேஷணம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அவதார சௌலப்யத்தை யுபதேசித்து
அவனை ஆஸ்ரயியுங்கோள் என்று பிறர்க்கு உபதேசித்த இடத்தில்
அதில் அவர்கள் விமுகராய் இருக்கையாலே அவர்களை விட்டு
குண சாம்யத்தாலே கிருஷ்ணாவதாரத்தோடு போலியான த்ரிவிக்ரம அவதாரத்தை அனுசந்தித்து
தச் சரணங்களை திரிவித கரணங்களாலும் அனுபவிக்க பாரித்த இடத்தில்
அது முற்காலத்திலே யாய் தாம் பிற்பாடர் ஆகையாலே
பாரித்த படியே அனுபவிக்க பெறாமல் கலங்கின தசையில்
மதியினால் குறள் மாணாய உலகு இரந்த கள்வரான
அத்தலைக்கு அறிவிக்க வேணும் என்று
கடகரை அர்த்தித்துச் சொல்லும் க்ரமத்தை
கலந்து பிரிவாற்றாளாய் தலை மகள் -என் அபராதத்தைப் பார்த்து பிரிந்து போனவருக்கு
கிங்கோப மூலம் மனுஜேந்திர புத்திர -என்னும்படி
தம் அபராத சஹத்வத்தையும் ஒரு கால் பார்க்க கடவது அன்றோ என்று சொல்லுங்கோள் என்று
தன் உத்யானத்தில் வர்த்திக்ற பஷிகளை
தன் பிராண ரஷணத்துக்கு உறுப்பாக தூது விடுகிற பேச்சாலே
சொல்லச் சொல்லுகிற –அஞ்சிறைய மட நாரையில் -அர்த்தத்தை
அஞ்சிறைய புட்கள் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் —

—————————————————————————————————-

வியாக்யானம்–

அஞ்சிறைய புட்கள் தமை-
விலஷணமான பஷங்களை உடைய பஷிகளை
அஞ்சிறைய மட நாராய் -என்று இ றே அருளிச் செய்தது –

புட்கள் -என்றது –
இனக் குயில்காள் –
மென்னடைய அன்னங்காள் –
நன்னீலமக அன்றில்காள் –
வண் சிறு குறுகே-
ஆழி வரி வண்டே –
இளங்கிளியே
சிறு பூவாய் –
என்று இப்படி அருளிச் செய்தவற்றை —

யாழியானுக்கு நீர் –
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் மடலாழி யம்மானை -என்றத்தை கடாஷித்த படி –
முதல் தூதுக்கு விஷயம் வ்யூஹம் இ றே –

நீர் –
வ்யூஹத்தையும் பேதித்துக் காண வல்ல நீங்கள் –

என் செயலைச் சொல்லும் என விரந்து-
என் செயலை தர்சிப்பியுங்கோள் என்று அர்த்தித்து –

என் செயலாவது –
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் -என்றும்
என்நீர்மை -என்றும்
நன்னீர்மை இனி அவர் கண் தங்காது -என்றும்
மல்கு நீர் கண்ணேர்க்கு -என்றும்
அவராவி துவரா முன் -என்றும் –
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் -என்றும்
தன் ஆற்றாமையை ஆவிஷ்கரித்தமை –
என் பிழையே நினைத்து அருளி
அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு
என்று ஒரு வாய்ச் சொல் -என்று
அவன் அபராத சஹத்வத்தை ஆவிஷ்கரித்ததும் இதில் ஸூசிதம் –
இப்படி ஆற்றாமையை ஆவிஷ்கரித்து –
விஞ்ச நலங்கியதும் –
மிகவும் நலம் குலைந்ததும்

மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் –
ஆழ்வார் இங்கே
இவ்விடத்திலே
கூப்பீடு கேட்கும் இடமான கடலிலே
அடலாழி அம்மானான நாயகனைத் தேடி –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யான் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்று மலங்கியதும்
பக்தி அதிசயம் –
மதி எல்லாம் உள் கலங்கின பக்தி பிரபாவம் –

வளம் -பெருமையும் சம்பத்தும்
நலங்குதல் -நலம் கேடு
மலங்குதல் -திண்டாட்டம் –

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: