பகவத் விஷயம் காலஷேபம் -37– திருவாய்மொழி – -1-4-1…..1-4-5-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பிரவேசம்

பரத்வத்தையும் -பஜநீயதையும் -சௌலப்யத்தையும்-அனுபவித்து ஹிருஷ்டராய் -தாமாய்ப் பேசினார் கீழ் –
இதில் தாமான தன்மை அழிந்து ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் -ஹர்ஷத்தால் சொல்லும் பாசுரம் போய்
ஆற்றாமையால் சொல்லும் பாசுரமாகச் செல்கிறது
அயமபர காரக நியம -என்னுமா போலே கீழ்ப் போந்த ரீதி ஒழிய வேறு ஒன்றாய் இறே இருக்கிறது –
முற்காலத்திலே அல்பம் விவஷிதனாய் இருப்பான் ஒருவன் -வீத ராகராய் இருப்பார் பரிக்ரஹித்துப் போருகிறதாய்
ஒன்றாய் இருந்தது–தத்வபரமாக அடுக்கும் என்று இத் திருவாய் மொழி யளவும் வர அதிகரித்து –
இத் திருவாய் மொழி அளவிலே வந்தவாறே -இது காமுக வாக்யமாய் இருந்ததீ-என்று கை விட்டுப் போனானாம்
நிதித்யாசிதவ்ய -என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன் பாஹ்ய ஹானியாலே –
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் –என்ற இது -அனுபவிக்கிறார் -என்று பிள்ளான் பணிக்கும் என்ற இது
இவருக்கு முனியே நான்முகன் -அளவும் உள்ளது மானஸ அனுபவம் ஆகையாலே -அத்தோடு சேர விழும் இறே
அனுபவிக்கப் பாரிக்கிறார் -என்கிறவிடம் இத்தோடு போரச் சேர்ந்து இருக்கும் –
திரு உலகு அளந்து அருளினவனுடைய திருவடிகளை அனுபவிப்பதாக ஒருப்பட்டுக் கட்டிக் கொண்டார் –
அது ஒரு கால விசேஷத்திலேயாய்-தாம் பிறபாடராய்த் தோற்றுகையாலே
துணுக் என்று தாமான தன்மை இழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் -ஹர்ஷத்தால் சொல்லும் பாசுரம் போய்
-ஆற்றாமையாலே சொல்லும் பாசுரமாய் விட்டது-

ஆர்த்தோ வா யதி வா த்ருப்த–உயிரை விட்டாவது ரஷிப்பான்-பெருமாள் -என்கிற விஷயத்தை அனுபவித்த
இவர்க்கு இழவு வருகைக்கு பிரசங்கம் என் என்னில்
ஆமத்தில் சோறு பாதகம் –என்னுமத்தாலே நிதாநஜ்ஞாரான பிஷக்குகள் போஜன நிரோதனம் பண்ணுமா போலே
மேல் வரும் அனுபவங்கள் சாத்மிக்கைக்கு நாலடி பேர நின்றான்
நல்லடிப்போது மூவடி பேசி -ஆனந்தம் மிக்கு -நாலடி ஒதுங்கி நின்றான் -ராசக் க்ரீடையில் மறைந்தால் போலே –
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் இறே -பட்டினி தன்னை மறைக்கை தானே –
அனந்தரம் கலங்கினார் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் இறே இப்படி கலங்கினார்
அவன் தானே கொடுத்த அறிவும் விச்லேஷத்தில் அகிஞ்சித்கரமாம் படி இறே அவனுடைய வைலஷண்யம்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் –என்று இருந்தவள் தானே வேண்யுத்கர நாதிகளிலே ஒருப்பட்டாள் இறே
ஹம்ச காரண்ட வாகீர்ணாம் வந்தே கோதாவரீம் நதீம் -என்றும்
அசோகா சோகாப நுத சோகோ பஹத் சேதசம்-என்றும் இறே இவர்கள் வார்த்தையும் -நதியிடமும் மரத்திடமும் பேசினார்களே –

பிராட்டிமார் தசை தான் உண்டாகிறபடி எங்கனே என்னில் -1-அனன்யார்ஹ சேஷத்வத்தாலும் -2–அநந்ய சரணத்வத்தாலும் –
3-அன்வயத்திலே தரித்து -4–வ்யதிரேகத்தில் தரியாது ஒழிகையாலும்–5-தத் ஏக போகராகையாலும் –6-அவர் நிர்வாஹகனாக
இத்தலை நிர்வாஹ்யமாகையாலும் பிராட்டிமார் தசை உண்டாகத் தட்டில்லை -கடி மா மலர்ப் பாவை யுடன் -சாம்ய ஷட்கம்-
ஆனால் பிராட்டி தானாகப் பேசுவான் என் என்னில் தாமரை திருவடிகளுக்கு போலியாய் இருக்க -வையம் கொண்ட தடம் தாமரை
-என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போலே இங்கு பிராட்டியாகப் பேசுகிறது முற்று உவமை இருக்கிற படி
ராஷர்ஷி ப்ரஹ்ம ரிஷியான பின்பு ஷத்ரியத்வம் பின்னாட்டிற்று இல்லை இ றே -எதிர்த் தலையில் பும்ச்வத்தை அழித்து
பெண்ணுடை உடுத்தும் படி இ றே அவனுடைய புருஷோத்தமத்வம் இருப்பது -ஆடவர் பெண்மையை அளாவும் தோளினாய் –

கூடும் இடம் குறிஞ்சி -அதுக்கு பூதம் -ஆகாசம் -பிரியும் இடம் -பாலை -அதுக்கு பூதம் -தேஜஸ் ஸூ –
ஊடலுக்கு ஸ்தானம் -மருதம் -அதுக்கு பூதம் -வாயு -பிரிந்தார் இரங்கும் இடம் -நெய்தல் -அதுக்கு பூதம் -ஜலம் –
போக்கு எல்லாம் பாலை -சொல்லி இருக்கும் ஐம் பால்
பிரிந்தார் இரங்குவது நெய்தல் யாகையாலே -கடல் சார்வு நெய்தல் —பிராட்டி தானும் தன பரிகரமுமாக லீலா உத்யானத்தில் புறப்பட்டாளாய்
-தோழிமார் பூக் கொய்கையிலே அந்ய பரைகளாக-நாயகனும் தன்னோராயிரம் பிள்ளைகளும் தானுமாக வேட்டைக்குப் புறப்பட்டு வர
ஏவுண்ட மிருகம் இவனை இந்த உத்யானத்திலே தனியே கொண்டு வந்து மூட்டி அது மறைய தைவ யோகத்தாலே இருவருக்கும் சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாய்
-கூட்டின தைவம் பிரிக்கப் பிரிந்து
இனி இரண்டு தலையையும் அழித்தாகிலும் கிட்ட வேணும் -என்னும் ஆற்றாமை பிறந்து தன் பரிசரத்தில் உள்ளார் -எம்மில் முன் அவர்க்கு மாய்வர் -9-9-5–என்கிறபடி
தளர்ந்து -கால் நடை தருவார் இல்லாமையாலே அப் பரிசரத்தில் வர்த்திக்கிற சில திர்யக்குகளைப் பார்த்து இவை வார்த்தை சொல்ல மாட்டாது
என்னுமது அறியாதே இவற்றுக்கு பஷபாதம் உண்டாய் இருந்ததாகையால்-
தம்மிடம் பஷ பாதம் -கமான சாதனம் -பாஷம் இறகுகள் பாதமாக காலாக கொண்ட -வீசும் சிறகால் பறக்குமே
கடுகப் போய் நம் கார்யம் செய்ய வற்று என்று கமன சாதனமான பஷபாதமே பற்றாசாக
ராவண மாயையால் வரும் அதி சங்கையும் இல்லாமையாலே கண்ணால் கண்டவற்றை எல்லாம் தூது விடுகிறாள்
சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர ஜாதி வீறு பெற்றால் போலே காணும் ஆழ்வார்கள் திருவவதரித்து
திர்யக் ஜாதி வீறு பெற்ற படி என்று பட்டர் அருளிச் செய்வர்
இனி இவர்க்கு யாத்ருச்சிக்க சம்ச்லேஷமாவது -அநாதி காலம் இவரைத் தன்னோடு சேர விடுகைக்கு அவசர ப்ரதீஷனாய்ப் போந்தவன் இவர் பக்கல்
அப்ரதிஷேதம் உண்டாவதொரு அவகாசம் பெற்று -அவன் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற இது -இது தான் யதேச்சை-
இவர்க்கு விச்லேஷமாவது -அவன் கொடுத்த ஜன்மம் பேற்றோடு தலைக் கட்டப் பொறாமை
தூது விடுகைக்கு பற்றாசு தான் எது என்னில் -தன் மேன்மையாலே இத்தலையில் தண்மை பாராதே வந்து கலந்தான் -கிட்டினவாறே
தோஷ தர்சனத்தைப் பண்ணினான் -பிரிந்த அளவில் இது வன்றோ இருந்தபடி என்று அநாதரித்தான்
தோஷ தர்சனம் பண்ணும் அளவே அன்றிக்கே தமக்கு அபராத சஹத்வம் என்ற ஒரு குணம் ஓன்று நிரூபகமாய் இருப்பது ஓன்று –
அத்தை அறிவிக்க வரும் என்று அந்த அபராத சஹத்வம் பற்றாசாக தூது விடுகிறாள் –

அபராத சஹயத்வ திருவாய்மொழி
மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லை –
சம்பந்த உபாய பலங்களில்-உணர்த்தி துணிவு பதற்றம் -பிரஜ்ஞ்ஞா அவஸ்தைகளில் தோழி தாயார் மகள்
3 தோழி /7 தாய் /17 மகள் -பிரேமத்தால்
73 தானான பேச்சு
அவஸ்தைகளில் –
பிரணவம் -தோழி -சம்பந்த உணர்வு
நமஸ் -உபாயத் துணிவு தாய் -/பதற்றம் –
தலைமகள் -பலன்கள் -ஆறி இருக்காமல் -பலத்தில் பதட்டம் –
நான்கு தூது -வ்யூஹ விபவ பரத்வ த்வயத்தில் அர்ச்சையில்
அபராத சஹத்வம் பற்றாசாக முதல் தூது -மகள் பாசுரம்
கிளி மொழியாள்-அனன்யா ராகவேணாம் -சூர்யன் பிரபை -அநந்ய சேஷத்வம்
உடன் ஸ்ரீ தண்ட காரண்யம் வந்து -நரகம் ஸ்வர்க்கம் -அறியாமல் பேச -முன்னாக புறப்பட்டு -சம்ச்லேஷித்தில் தரித்தும்
விச்லேஷத்தில் தரியாமை -மீன் தண்ணீர்
ததேக போக்யத்வம் -சா பத்ன்யா விசாலாட்சி -பெரிய பெருமாளை கூட பார்க்காமல்
அவனாலே நிர்வாஹம் -வில்லை நம்பியே -தத் தஸ்ய சத்ருசம்-

தூது விடல் /மடல் எடுப்பது /அநுகாரம் /ஊடல் பிரணய ரோஷம் – -காம சாம தேவன் – /கூடல் -அசேதனங்கள் காலில் விழுந்து -பேற்றுக்கு த்வரிக்கை –
புருஷோத்தமன் அன்றோ -பெண்ணுடை உடுத்தப் பண்ணுமே -சகுந்தலை -த்ரௌபதி -தோழிகள் ஆணுடை உடுத்த பாரித்தார்கள்-
கூடாரை பாசுரம் –பராவர குருக்கள் சூட்டும் ஆத்ம பூஷணங்கள் –
ராஷர்ஷி ப்ரஹ்ம ரிஷியான பின்பு ஷத்ரியத்வம் பின்னாட்டிற்று இல்லை -மீண்டும் நாட்டுக்கு போக வில்லை
ஆழ்வார் மீண்டும் தானாக அருளிச் செய்கிறாரே –
பெண்ணான தன்மை -பாவம் -உடல் அளவில் மாற்றம் இல்லை -மனசால் அடைந்த பெண் தன்மை
ஸ்வாமித்வ-ஆத்மத்வ -ஆத்மா சரீர /சேஷித்வ/பும்ச்த்வ -நான்கும் ஸ்வாமித்வ
குணங்கள்
நாம் சொத்து சரீரம் தாசன் சேஷம் ஸ்திரீ -மனசில் பட்டால் பெண் தன்மை –இந்த தன்மைகள் மாறாதே -திரும்பாதே –
அச்யுத சதகம் -தேசிகன் பிராக்ருத பாஷையிலும் சாதாரண சமஸ்க்ருதத்திலும் அருளிச் செய்தார்
காவேரி இக்கரையிலும் அக்கரையிலும் சுழித்துக் கொண்டு ஓட -நடுவுவிலும் ஓடும் -ஆண் பாவனை பெண் பாவனை இரண்டையும் போலே
நான்கு பாவனைகளும் உண்டு எப்பொழுதும் ஆழ்வாருக்கு -மாறாதே –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரினாம் -ஆடவர் பெண்மையை அளாவும் தோளினாய் -நாம் அனைவரும் ஒருத்தி -விஞ்சி நிற்கும் தன்மை -ஜன்ம சித்தி உண்டே –
அடியோம் என்பர் -அடிச்சியோம் என்பர் -உள்ளத்தில் உள்ள தன்மை மாறாதே –
அன்யாபதேசம்/ ஸ்வாபதேசம் -சம்சார சாம்ராஜ்யம் -பிள்ளை லோகாச்சார்யர் –
உத்யானம் -புன்னை அம் பொழில் சூழ் -திரு விண்ணகர் -லீலா விபூதி -ஸ்வதந்திர அனுபவம் தோழிகள் உடன் ரமிக்கும் –
பூ காதல் -அந்ய பரை -ஸூ போக்யத்வம் -ஸ்வ தந்திர போக அனுபவ -சஹகாரி -தோழிகள் -அல்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
தூர்த்தேஷூ -விஷயாந்தரங்களில் ஈடு பட
காட்டி நாடி களிறும் புள்ளும் மடிய வேட்டை யாடி விளையாடி பரம சாம்யா பத்தி உள்ளார் உடன் -தன்னேராயிரம் பிள்ளைகள் -ரஷணத்துக்கு பரிவார்கள் உண்டே
ராவணாதிகள் -காமாதிகள் -முடிக்க -கூட்டத்துடன் இருப்பவரை மிருகம் -திரு வெள்ளறை வெள்ளைப் பன்றி பிரித்தால் போலே
மாயமான் -ராவணன் மிருகம் -தனியாக்கி -ச ஏகாகி ந ரமேத -பகவான் சுய மேவ விஷயீ கரிக்க –
ஆள் வேணும் அவன் நினைக்க -விஷயாந்தரம் வேணும் என்று சேதனன் நினைக்க -ஓன்று பத்தாக்கி நடத்தும் தெய்வ யோகம் -யாத்ருச்சிக ஸூ ஹ்ருதம்
தோஷம் அவன் கண்ணில் பட -அபராத சஹாத்வம் நிரூபக தர்மம் உண்டே அது இவள் கண்ணில் பட -என் பிழையே நினைந்து அருளி -அருளாத திருமால் –
இது1-4- முதல் தூது -மேல் -ஆறாம் பத்தில்-6-1/6-8- இரண்டு தூது -மேலே –9-7-
தம் பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும் தமரோட்டை வாசமும் மறப்பித்த
ஷமா தீஷா சாரச்ய சௌந்தர்யங்களை உணர்த்தும்
வ்யூஹ விபவ பரத்வத்வய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் -சூர்ணிகை -156-

——————————————————————————-

அவதாரிகை –

தன் பரிசரத்தில் வர்த்திப்பதொரு நாரையைப் பார்த்து -என்றும் சேவலைக் கார்யம் கொள்ளுவார் பேடையை முன்னாகக் கார்யம் கொள்ள வேணும் -என்று
இருக்கும் தம் வாசனையாலே பேடையை முன்னிட்டுச் சேவலைப் பற்றி நீ என் தசையை அறிவித்து என்னையும் அவனையும் சேர்க்க வேணும் -என்கிறாள்
முதல் பாட்டில் ஆசார்யனுடைய ஞான வைபவத்தை அருளிச் செய்கிறார் —
பகவத் விஷயம் போலே ஆச்சார்யனைப் பற்றவும் புருஷகாரம் வேணும் —

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-

அஞ்சிறைய மட நாராய் -தேட வேண்டிய தேவை இல்லையே -திருவடிக்காக சீதை காத்து இருக்க வேண்டியதே -இங்கே நல்லார் நவில் திருக் குருகூர் -தனக்கு பவ்யமான -மிதுனம்
செல்லுகைக்கு ஈடான அழகிய சிறைகள் -வ்யூஹம் போக வேண்டுமே -மிதுனத்தால் வரும் துவட்சியால் வந்த மடப்பம் ஒடுக்கம் —
அளியத்தாய் -அளிக்கத்தக்க ஸ்வ பாவம்
நீயும் -சேவலை ஒழியச் செல்லாத நீயும்
நின்அஞ்சிறைய சேவலுமாய் -உன்னோட்டை சேர்த்தியால் வந்த புதுக் கணிப்பு கொண்ட சேவல்
யாவா என்று எனக்கு அருளி -ஐயோ ஐயோ என்று கிருபை பண்ணி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு -கருடத்வஜனுக்கு தூது -விரோதி விஷயத்தில் வெப்பம் -இவளை பிரித்து போனபடியால் —அம்சிறை கூட்டி வந்தால்
ரஷணத்துக்கு கொடி கருடப்புட்கொடி
புள் என்னும் வாகனத்தால் உயர்த்தப் பட்டவன்
என் விடுதூதாய்ச் சென்றக்கால் -கைங்கர்யம் கிட்டாதே -ஆல்
வன் சிறையில் -முகம் பார்த்து வார்த்தை கேளாத வலிய சிறை –
ஓலக்கம் நிறுத்தி -நாரைக்கு அர்க்க்யம் பாத்யம் சமர்ப்பித்து முகம் பார்த்தி பேச வேண்டுமே
அவன் -ஸூ சிலன் ஆஸ்ரித பரதந்த்ரன்
வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ-வைக்க மாட்டான் -கூடாதது கூடுமோ -ஒ அசைச் சொல் -சத்காரம் பண்ணுவார் –
10 மாசம் நான் சிறை இருந்தேனே -நீ கொஞ்சம் இருந்தால் என்ன -பிறருக்கு சிறை இருப்பது -பெரிய தர்மம்
கடகர் -கார்ய தேசிகத்வ ஸசகம் -சேர்ப்பாரை பஷிகள் ஆக்கி -ஞான கர்மங்களை -அனுஷ்டானம் -ப்ரேமம் –
ஞான பிரேமங்களை சிறகாக்கி -பஷத்வயம்
பேடை சேவல் -பரஸ்பர நீச பாவம் –

அஞ்சிறைய
பிரஜை தாயினுடைய அவயவங்கள் எல்லாம் கிடக்க முலையிலே வாய் வைக்குமா போலே -கமன சாதனமான சிறகிலே யாயிற்று முற்பட கண் வைத்தது –
நீர் பாய்ந்த பயிர் போலே பரஸ்பர சம்ச்லேஷத்தால் பிறந்த ஹர்ஷம் வடிவிலே தொடை கொள்ளலாம்-அறியலாம் -படி இரா நின்றது -சிறை என்று சிறகு
ஆசார்யன் ஜ்ஞானத்தை அனுமித்து சிஷ்யன் உபசத்தி பண்ணுமா போலே சிறகிலே கண் வைக்கிறாள் –
மட –
ஏவிக் கார்யம் கொள்ளலாம் படி பவ்யத்தை தோற்ற இருந்தது –
சம்ச்லேஷத்திலே துவண்டு தூது போகைக்கு யோக்யமாம் படி இருக்கை
நாண் மடம் அச்சம் என்று ஸ்த்ரீத்வமாய் -பிரிவிலே வியசனம் அறியும் தன இனமான பேடையைப் பார்த்து சொல்லுகிறாள்
நாராய் –
அம்மே -என்னுமா போலே

மட -தயாதி ஆத்மகுணங்கள்
நாராய் -வெளுப்பாய் -சுத்த சத்வ பாவம்
மத்ச்யாதிகலையே தியானம் உரு மீன் வரும் அளவும் காத்து இருப்பது போலே ஆச்சார்யர் ப்ரஹ்ம தியான பரர்-ஸ்வா பதேசம்
நாராய் -சுவரத்துக்கு தாத்பர்யம் -கட்கத சுரம் -வருத்தத்தில் குழந்தை தாய் கண்டு கூப்பிடுமா போலே –
பிரிவும் பிரிய பரத்வமும் உண்டே- சங்க விச்வாசங்கள் தோற்றுமே சுரத்திலே
அபிமுக -ஞானம் கொடுக்கும் ஆச்சார்யர் தாயை விட -உடையவர் இடம் திட விசுவாசம் –

அளியத்தாய்-
அவன் பொகட்டுப் போன சமயத்திலே ஆற்றாமை அறிவிக்கலாம் படி வந்து முகம் காட்டின அனுக்ரஹ சீலதை இருந்தபடி என் –
அளி -கிருபை -கிருபை பண்ணத் தக்கதாய் -என்றபடி
பம்பா தீரே ஹனுமதா சங்கதா-போலே வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்க தாய் முகத்திலே விழித்தால் போலே
செங்கழு நீர் மற்றும் தாமரை புஷ்பங்கள் கண்டதும் பிராட்டியை கண்டது போலே பெருமாள் மயங்கி நிற்கும் போது அன்றோ திருவடி வந்தது –

தொட்ட இடம் எல்லாம் ஸ்ரீ இராமாயண பிரமாணங்கள் நம் ஆச்சார்யர்களுக்கு
நெஞ்சை கொள்ளை கொண்டு ஆற்றாமை மிகப் பண்ணுமே இவை அதனால் வழி பறிப்பார் என்கிறார் இவற்றை

நீயும் –
ச ப்ராதுச் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -சீதாமுவாச -என்றபடி
என்றும் சேவலைக் கார்யம் கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப் போலே காணும் கார்யம் கொள்ளுவது
நின் அஞ்சிறைய சேவலுமாய் –
நின் சேவலுமாய் -பேடையை இட்டாயிற்று சேவலின் பக்கலில் பிரதிபத்தி -ஸ்ரீ யபதி —என் திருமகள் –சேர் மார்பன் போலே என்னுமா போலே
நாரையும் பிராட்டியும் ஆழ்வாருக்கு ஒன்றே -ஸ்ரீ யபதி –நின் சேவல்
நின்-அஞ்சிறைய சேவலுமாய் -பெண் அணைந்த வடிவு -என்று தோற்றா நின்றது ஆயிற்று
அது இட்ட வழக்கான நீயும் நீ இட்ட வழக்கான சேவலுமாய்
யாவா என்று
ஐயோ ஐயோ என்று
நின் அஞ்சிறைய சேவலுமாய் -மிதுனமாய் இருக்கிறது தன் ஆர்த்தி பரிஹரிக்கைக்கு என்று இருக்கிறாள்
புருஷகாரமும் பிராப்யமும் மிதுனமே உத்தேச்யம்
எனக்கு
1–ஏஹி பஸ்ய சரீராணி -என்று விரஹம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள்
2–அவனோடு கலந்து பிரிந்து -கண்ணாலே காணப் பெறுவது காண் என்று அபேஷையோடு இருக்கிற எனக்கு
அருளி
இரப்புக்கு செய்ததாகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி -ச்வார்த்த நிரபேஷ -பர துக்க நிரசனம் -தயை –
தயை பண்ணுகைக்கு அத்தலை குறைவற்றாப் போலே யன்றோ தயா விஷயமான இத்தலை குறைவற்றபடி
அத்தலை -பேடை சேவல் /பிராட்டி பெருமாள் -மிதுனம் -குறை அற்று இருக்க –
இத்தலை -குறை வற்று -ஆகிஞ்சன்யம் அனந்யகதித்வங்கள் இங்கே உண்டே
பகவத் விஷயத்திலும் உபகரிப்பார் பிரத்யுபகாரத்துக்கு அல்ல உபகரிப்பது
ப்ரஹ்ம வித்யை கொடுத்து தர்ம மார்க்கத்தில் நம்மை ஆச்சார்யர்களுக்கு பிரத்யுபகாரம் செய்யலாவது இல்லை
-முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அனபையே
தங்கள் கிருபையாலே யாயிற்று -உபய விபூதி உக்தனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு சத்ருசமாக உபகரிக்கலாவது இல்லையே இவனுக்கு
விக்ராந்தஸ்வம் சமர்த்தஸ்வம் ப்ராஜ்ஞஞஸ் வாநரோத்தம –என்றால் போலே இறே இவள் இவற்றை ஸ்லாகித்தது
நாரை வெட்கப்படும் அன்றோ ஆழ்வார் கொண்டாடி -சீதை திருவடியைக் கொண்டாடினது போலே –
பிரிந்து இருப்பவள் நோவு படுவாள் என்கிற அறிவு கொண்டவரே –

எங்களை இங்கன் கொண்டாடுகிறது என் -உன் தசையைக் கண்டும் பொகட்டு போனவன் எங்கள் வார்த்தை கேட்கப் புகா நின்றானா –
இனித்தான் -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்கிறபடியே அங்குள்ளார் பரம சாம்யா பன்னராய் அன்றோ இருப்பது
நாங்கள் அவனுக்கும் அவர்களுக்கும் வாசி அறியும் படி என் என்று அன்றோ நாங்கள் இருப்பது -என்று அவற்றுக்குக் கருத்தாக மேல் வார்த்தை சொல்கிறாள்
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு –
அவர்கள் பரம சாம்யா பன்னராய் இருக்கையாலே -தனக்கு வ்யாவர்த்தக விசேஷணமாய் பெரிய திருவடியை த்வஜமாக உடையவனாக இருக்கும்
விரோதியைப் போக்கிக் கொண்டு வருகைக்கு அங்கே நமக்கு ஆள் உண்டு என்கிறாள் ஆதல்
நிரதயமாகப் பிரித்துக் கொண்டு புகையாலே அக்ரூர க்ரூர ஹ்ருதய -என்னுமா போலே சொல்லுகிறாள் ஆதல்
புள் உயர்த்தார்க்கு
புள்ளாலே வஹிக்கப் பட்டவர் -என்னுதல்
புள்ளை த்வஜமாக உடையவர் -என்னுதல்
என் விடுதூதாய்ச்
அவன் ஆள் விட இருக்கக் கடவ நான் அன்றோ விடுகிறேன்
விடு
க்ரியதாம் -என்கிறபடியே நான் ஏவ வன்றோ நீங்கள் போகிறது –
பெரு மிடுக்கரான பாண்டவர்கள் கிருஷ்ணனை தூது விட்டால் போலேயோ-தானே போன கண்ணைப் போலே அன்று -அவன் தூது விட்டு நான் சேர்ந்தால் சேஷத்வ பாரதந்த்ர்யம் கொத்தை-அவன் என்னை விட மயங்கி தூது விட ஷமன் அல்லாமல்
ருக்மிணி எழுதி ப்ராமணரை விட கண்ணன் அவள் வலியவள் என்றானே-
விடு -இவள் விட அவை போகும் -தானே போன கண்ணன் போலே இல்லையே -தூது போவதற்காக அவதரித்தானே
கிரியதாம் -முகப்பே கூவிப் பணி கொள்ள வேண்டும் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் பிரார்த்திக்க வேண்டுமே
சஞ்சயன் தூது போலே இல்லை –திருவடி போலே அன்றி மிதுனத்துக்கு மிதுனம் தூது -அதி ஆர்த்தி யான நான் விடு தூது

சென்றக்கால் –
1–அபலையாய் அத்யார்த்தையான நான் ஏவ வன்றோ போகிறது -பரார்த்தமாக தூது போகை கிடப்பது ஒன்றோ –
சென்றக்கால் –
2–எனக்கு முன்னே உங்களுக்கு உத்தேச்யம் அன்றோ சித்திக்கப் போகிறது -உங்கள் போக்கு அடிக் கழஞ்சு பெறாதோ
வன் சிறையில்
இவள் பாடு நின்றும் சென்றவற்றை சிறையிட்டு வைக்கிறான் அன்றே
இவர்களுக்கு முகம் கொடாதே அந்ய பரனாகை இறே இவைகளை சிறையிட்டு வைக்கை யாவது
என் சினம் தீர்வன் -அரையர் அபிநயம் -அடித்தால் மகா பாக்யம் என்று இருப்பான் -முகம் மாற வைத்து அபிநயம் –
ராஜ புத்ரர்களுக்கு பிராப்த காலங்களிலே வெற்றிலை இடாத போது மாந்துவர்கள் இறே
என் விடு தூதாய் சென்றக்கால் -வன் சிறையில் அவன் வைக்கில்
நீங்கள் ஏதேனும் அவனுக்குத் தூது போகிறிகளோ-சிறை கட்டுதல் சிங்க விளக்கு எரித்தல் -செய்யில் செய்வது என் என்று கூசுகைக்கு –
பிரம்மாஸ்திரம் கொண்டு சிறை பட்டாரே திருவடி
சிங்கம் பொம்மை தலையில் வைத்து வாலில் நெருப்பு வைத்தார்களே
எனக்கு தூது போனாரை-பரிஷ்வங்கோ ஹனுமதா -என்னுமா போலே மார்பிலே அணைக்கும் காணுங்கோள் –
நான் அணைய ஆசைப்படுகிற மார்பன்றோ உங்களுக்கு பரிசிலாக புகுகிறது –
நீர் இருக்க –தூது விட்ட பிழை –என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே -திரும்பியே வருதல் இன்றியே திருத் துழாய் பெற்றதே
ஆமருவி அப்பன் -ஓர் மாது -இறையே இயம்பி காணே-பரிஷ்வங்கம் -சிரசா வஹிப்பானே –
அவன் வைக்கில்
வ்யச நேஷூ மனுஷ்யாணாம் -என்று இருக்குமவன் வைக்குமோ -சிரசா வஹியானோ
வைப்புண்டால் என் செய்யுமோ –
அது பொல்லாதோ கிடைக்குமாகில்
பரார்த்தமாக சிறை இருக்க கிடைப்பது ஒன்றோ
ராவணன் தேவ ஸ்திரீகளை சிறையிட்டு வைக்க தான் அவர்கள் காலில் விலங்கைத் தன் காலில் கோத்து சிறை மீட்டவள் இ றே
சிறை இருந்தவள் ஏற்றம் போலே உனக்கும் ஏற்றம் உண்டாகுமே –

————————————————————————————-

அவதாரிகை –

சில நாரைகளை தூது போக வேணும் என்று இரந்தாள் கீழே-
அங்கே போனால் சொல்லும் பாசுரத்தை குயில்களுக்குச் சொல்லா நின்றாள் –அந்ய து பக்ராந்த மன்யதா பதிதம்-என்னும்படியாய் வந்து விழுந்தது
காதை தொட்டால் இடுப்பை அசைப்பது போலே
தேர் அழுந்தூர் -இறையே இயம்பிக் காண்-சொல்லி தங்கு காலாகும் -திருக் கண்ணபுரம் -அங்கும் இப்படியே
கலங்கி இருப்பதே ஆழ்வார் பிரகிருதி
இத்தனையும் கலங்கிற்று இலள் ஆகில் இவள் பிரிந்த விஷயத்துக்கும் நாட்டார் பிரிந்த விஷயத்துக்கும் வாசி இன்றிக்கே ஒழியுமே
இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணாதிக விஷயத்துக்கு நமஸ்காரமாம் அத்தனையே இறே
இரண்டாம் பாட்டில் மதுர பாஷியாய் இருக்கும் என்கிறார் –

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

என்-எனக்காக தன்னை எழுதிக் கொடுத்த
செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு-புண்டரீகாஷன் -பல காரணங்களால் -நான் பிரிந்து வெளுத்து இருக்க -அவன் பிரிவே காரணம்
பெருமானார்க்கு -எட்டாமல் போனவருக்கு
கலந்த போது தாமரைக் கண்ணன் பிரிந்த சர்வாதிகன்
என் தூதாய்
என் செய்யும் -என்ன தப்பாகும்
உரைத்தக்கால்
இனக்குயில்காள் -திரளான கூட்டங்கள் -பலவாக இருப்பதால் கார்யகரம் என்று தூது-ஆச்சார்யர்கள் ஓன்று கூடி இருப்பார்கள்
நீரலிரே-ஸ்ராவ்யமான -நீர்மை உடைய அலீரே –
முன் செய்த முழு வினையால் -அநாதி காலம் செய்த
திருவடிக் கீழ் குற்றேவல் -அந்தரங்க வ்ருத்தி
முன் செய்ய முயலாதேன் -சாதனம் விருப்பம் கூட இல்லாமல்
அகல்வதுவோ விதி
யினமே-இன்னமே –
கடகர் உக்தி மாதுர்யம் -போதரிக் கண்ணினாய் நா விடையாய் -எல்லெ இளம் கிளியே -/சமவாயமும்— ஓன்று கூடி ஆச்சார்யர்கள் இருப்பதும் —ஸூசகம்  

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு
என் –
பிரிந்த சமயத்திலும் -என்னுடையவன் -என்று சொல்லலாம்படிகாணும் கலக்கிற சமயத்திலே அவன் இவள் இட்ட வழக்காய் இருந்தபடி
அன்றிக்கே -பிரிகிற சமயத்திலே தான் வரும் அளவும் இவள் தரிக்கைக்காக -இது எங்கே இருக்கில் என் -எங்கே போகில் என் -உன் சரக்கன்றோ
-என்று சொல்லிப் போமே-அத்தாலே ஆகவுமாம்
திருக் குருகூரிலும் திருப் பாற்கடலிலும் ஸ்ரீ வைகுண்டத்திலும் ஆழ்வார் சொத்து தானே அவன் –
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு-
1–ஸ்வாபாவிகமான ஐஸ்வர்யத்தாலும் சிவந்து இருக்கும்
2–ஸ்வகீய வஸ்துக்கள் பக்கல் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கும்
3–மதுபாநபத்தரைப் போலே இவளோட்டை கலவியாலும் சிவந்து இருக்கும்
பிரிவாலே அரையாறு பட்டு சிவந்து இருக்கும்
இவை எல்லாம் இவள் அனுபவித்தவள் இறே

தூதர்களுக்கு அடையாளம் சொல்லி விடுகிறாள் இதில் -தஸ்ய யதா -புண்டரீகாஷம் ஏவ அஷிணி
வெஞ்சிறைப்புள் -இவள் அனுபவித்து -ராஜ்ய கார்யம் எல்லாம் கிடக்க ஒரு அபலை பக்கல் இப்படி சரக்காய் இருக்கவோ என்று எடுத்துக் கொண்டு போனாரே –
இப்பாசுரம் பிரிவில் பாசுரம் -கலந்த பொழுது இருந்தததை சொன்னால் -தூதுக்கு அடையாளம் சொல்லலாமா –
தாம் பார்த்த திருக்கண் அடையாளம் –
பிரிவு ஆற்றாமையால் -திரும்பி பார்க்குமே -கண்ணில் சிகப்பு இரட்டித்து இருக்குமே -அத்தையும் பார்த்தாளே பராங்குச நாயகி –
மை வண்ண –குஞ்சி குழல் பின் தாழ-குஞ்சி முன்னே தூக்கிப் பிடித்து இருக்கும் –இவள் எப்படி பின் குழல் தாழ்வதை பார்த்தாள்-
யாரேனும் பின்னால் வருகிறார்களா பின்னால் திரும்பி பார்த்தானாம் -இத்தை பரகால நாயகியும் பார்க்குமே
பர்வர்த்தித கந்தரம் -உரலில் -திரும்பி திரும்பி பார்த்தானாம் ஸ்மித புல்லாதாரம் பல்லவம் -கோபால விம்சதி -சிரித்தானாம் –
இரட்டைத் திருப்பதி பிரியா விடை இன்றும் சேவிப்போம் இந்த திரும்பி பார்ப்பதை

முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வர்யம்
மூன்றாம் திருவாய் மொழியிலே வாத்சல்யம்
இத் திருவாய் மொழியிலே கலவியும் பிரிவும்
என் பெருமானார்க்கு –
1–பிரிகிற போது கண்ணாலே நோக்கி அனந்யார்ஹை யாக்கிப் போன படி
2–ஸ்வபாவிகமான ஐஸ்வர்யத்துக்கு மேலே -இத்தலையில் ஒடுக்கு மாட்டால் உண்டான ஐஸ்வர்யமும் உண்டாகையாலே இரட்டித்து இருக்கும் இறே–விஸ்லேஷத்தில் என் பெருமானார்க்கு என்று சொல்லலாம் படி அனைத்தையும் கொள்ளை கொண்டவன் –சர்வ ச்வாபஹாரம் -ஞானம் பக்தி வைராக்கியம் –அச்சம் நாணம் மேடம் பயிர்ப்பு -அனைத்தையும் அபஹரித்து -கழல் வளையை கழல் வளையே ஆக்கினாரே -ஒடுக்கு மாட்டு -மாட்டை ஒடுக்கி முட்டுக் கோல் கொள்ளுகை-மாடு -தனம் -அந்தணர் மாடு

என் தூதாய்
கடல் ஏறி வடிந்தால் போலே காணும் கிடக்கிறது
அவனோடு கலந்து பிரிந்து வெறும் தரையாய் இருக்கிற எனக்கு தூதாய் –
குயில்களுக்கு தன்னைக் காட்டுகிறாள் -பெருமாள் அணைத்து போனதை காணலாம் -முடிவில்லாத சம்ச்லேஷம் -ஸ்வப்னம் போலே –
என் செய்யும் உரைத்தக்கால் –
உபய விபூதியும் கண்டது-சிருஷ்டித்தது – உங்களுக்கு கிஞ்சித்கரிக்க என்று இருக்கிறாள் -என் செய்யும் உரைத்தக்கால் -சுரம் கொண்டே பொருள்
பூரி தானம் பண்ண வில்லை கிஞ்சித் கரிக்க -கடக்க கிருத்யம்-பிரத்யுபகாரம் செய்யலாவது இல்லையே
பொன்னுலகு ஆளீரோ -குயில் காட்டும் நிலத்தில் வாழ்வோம் –
உரைத்தக்கால் -என் செய்யும்
அவனைக் கொடு வந்து சேர்க்கைச் சொல்லுகிறேனோ -ஒரு உக்தி நேர்ந்தால் என் செய்யும்
அறிவிப்பே அமையும் –சொல்வதே உங்களுக்கு கிருத்யம் -அவன் பதறி வருவான் -உரைப்புக்கு காத்து இருப்பவன் –
உரைத்தக்கால் பகவான் என் செய்யும் என்றுமாம் -வருவான் திண்ணம் -வாசா தர்மம் –
இனக்குயில்காள் –
என்னைப் போல் தனி இருக்கிறீர்கள் அன்றே
நீரலிரே-
நீர்மைக்கு நீங்கள் அன்றோ –
நீர் பவ்யதா பரம் -வளர்த்ததனால் சில வார்த்தை சொல்பவனாக இல்லாமல் கிருபையால் பேசினதாக இவள் நினைவு
நீர் அலீரே –
நானும் அவனுமான போது கேட்ட வார்த்தைக்கு பிரதி வசனம் பண்ணின நீங்கள் அவன் பிரிந்தவாறே வேறு சிலர் ஆனிகளோ

முன் –
தான் பாபம் பண்ணிப் போருகிற காலம் சாவதியோ
செய்த –
சங்கல்ப்பித்து விட்ட அளவேயோ
முழு வினையால் –
அது தன்னில் ஏதேனும் அகஞ்சுரிப் பட்டதுண்டோ -குறைப்பட்டு போதல் -என்னால் பரிக்ரஹிக்கலாதல் -தன்னால் பரிஹரிக்க ஒண்ணாது ஒழிதல் செய்யில்
அன்றோ எனக்கு இழக்க வேண்டுவது –
பரியனாக வந்த அவுணன் -அவருக்குத் தக்க பரிஷ்டம் வேண்டுமே -சர்வ பாபேப்யோ –முழு வினை
மேரு மந்த்ரோ மாத்ரோபி –சாகல்யம் -மகத்யம் –-அனைத்தும் -ஒவ் ஒன்றுமே பெரியது -என்றபடி
திருக் கோட்டியூரிலே தெற்கு ஆழ்வான் கோளரி யாழ்வானுக்கு தீர்த்த துறையிலே சொன்ன வார்த்தை –
ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாது காண்-
நான் போக்கிக்க மாட்டேன் அவன் போக்குவேன் என்றார் அதனால் பேறு நிச்சயம் -நீங்கள் அறிவித்தாலே போதுமே
தெற்கு ஆழ்வார் கையிலே திரு வாழியாலே வினையை அறுத்துக் கொண்டு போக்கில் அத்தனை ஒழிய ஓன்று இரண்டு முழுக்கால்
போகாது காண் நான் பண்ணின பாபம் -என்று – கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –
திருவடிக் கீழ் –
பிராமணர் பிச்சு ஏறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே இவர் பிராட்டியானாலும் முலையால் அணைக்க நினையார்
-திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை –ஆழ்வார் தன்மை மாறாதே –சேஷத்வம் ஸ்வபாவம் –
குற்றேவல் –
திருவடிகளில் கிட்டி அந்தரங்க வ்ருத்தி பண்ண ஆசைப்படும் அத்தனை
திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன்
இடம் காலம் இரண்டாலும் முன் -முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று -அங்கும் -பயம் வரும் முன் இடம் முன் காலம் முன் –
1–ஏற்கவே கோலாத நான் -என்னுதல்
2–முன் கிரியதாமிதி மாம் இவ -என்கிறபடி இன்னத்தைச் செய் என்று ஏவ திரு முன்பே அடிமை செய்ய முயலாதேன் -என்னுதல் –

அகல்வதுவோ விதியினமே —
1-திருவடிகளில் அடிமை செய்கைக்கு ஈடாக இருப்பதொரு சாதன அனுஷ்டானம் என் தலையால் பண்ணாத நான் அகன்றே போம் இத்தனையோ
முதல் இல்லாதார் பலிசை இழக்கும் அத்தனை அன்றோ -என்ன –முதல் இல்லாதார் அன்றோ பலிசை இழப்பார்
2-விதி விதானம் -புண்யமாய்-அனந்தன் மேல் கிடந்த புண்ணியனே -அவனைச் சொல்லி இனம் அவனையே உபாயமாக கொண்டவர்கள் அகல்வதுவோ –
அவன் தானே முதலாக இருக்கும் கோஷ்டி இறே இவர்கள் கோஷ்டி-
களை கண் மற்று இலேன் -என்றும்
உன் சரண் அல்லால் சரண் இல்லை -என்றும்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை -என்றும் -பிரபன்ன ஜன சாதகாம்புஜம் -போலே பயிர்களே நீர் தேடித் போகாதே
நெறி வாசல் தானாய் நின்றானை -என்றும்
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் -என்றும் –
வாழும் சோம்பர் -என்றும் -உபாய அனுஷ்டானத்தில் சோம்பி கைங்கர்யம் செய்து வாழும் சோம்பர்
இப்படிகளில் இறே இவர்கள் கோஷ்டியிலும் வார்த்தைகளும் இருக்கிற படி
விதியினமே
3-விதியினன் -என்றாய் -பாபத்தை உடையேனான நான் அகன்றே போம் அத்தனையோ -என்னுதல்
4-இனம் -என்கிற இத்தை –இன்னம் என்றாக்கி -எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும்
இத்தனையோ -என்கிறாள் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் பணிக்கும் படி —விதியினம் -பாவியோம் -என்றபடி
பாவமே செய்த பாவியானோம் என்றபடி-
முயலாதேன் –இன்னம் அகவதோ விதி -இழந்த கால சோக விஷயம் த்வரையும் சூசகம்
விதியினம் -விதி புண்ணியம் உடையோம் -எதற்காக அகல்வது -ததேக ரஷகத்வ விசுவாசம் சூசகம்
பாபத்தை உடையோம் -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் உள்ளோமே –

————————————————————————————-

அவதாரிகை –

அகல்வதுவோ -என்றால் போலே சொல்லுகிற பக்தி வாதங்கள் -உபசார உக்திகள் -நமக்குத் தெரியாது -அவசியம் அநு போக்தவ்யம் -என்று சொல்லுகிறபடியே
அனுபவித்தே அற வேணும் -என்று ஈஸ்வர அபிப்ப்ராயமாகக் கொண்டு -நான் பண்ணின பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று
சொல்லுங்கோள்-என்று சில அன்னங்களை இரக்கிறாள்
மூன்றாம் பாட்டில் சார அசார விவேகஞ்ஞன் என்கிறார் –

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-

விதியினால் -பாக்ய வசத்தால் /-போக சாஸ்திரம் படி கலக்கும்
பெடை மணக்கும்-மிதுனமாக இருப்பதாலே மணக்கும்
மென்னடைய அன்னங்காள் -நடையோடு இயன்று நாணி ஒலிக்கும் நறையூர்
நடை அழகையும் -சுத்தி யையும் யுடைய
மதியினால் -இத்ரான் அபேஷை-மகா பலி ஔதார்யம் -சேர்ந்த உபாயம் அறிந்து
குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு -தாழ நின்று எட்டாமல் வளர்ந்த
மதியிலேன் -களவு அறியாத மதி கேடி -நம் ஆழ்வாரையும் ஏமாற்றும் அளவு யோசித்து -அதி தூர தர்சனன்
வல்வினையே -அனுபவ விநாச்யம் இல்லாத வலிய வினை
என் வினை மட்டுமே மாளாததோ-சிந்தயந்தி பெற்றாளே -நான் தீர்க்க சிந்தயந்தி அன்றோ
மாளாதோ வென்று -மாலை விடாமல் சங்கல்ப்பித்து உள்ளானே
ஒருத்தி -அந்த மான் என்றால் -எய்த கையன் அறிவானே -இவனும் வேட்டை ஆட வந்தவன் தான் -தாமே அறிவானே
மதி எல்லாம் உள் கலங்கி -நீர் கொடுத்த மதி எல்லாம் -ஆஸ்ரயத்துடன் கலங்கி
மயங்குமால் என்னீரே —
ஆச்சார்யர் உடைய வை லஷண்யம் –நல்ல நடத்தை -மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் –ஸ்ரேஷ்டமும் – மணக்கும் தோற்றும்

விதியினால்
1–நீங்கள் சாஸ்திரம் சொல்லுகிறபடி கலக்கையாலே பிரிவின்றியே இருந்தி கோள்-
இவள் அடைவு கெடக் கலக்கை இறே எனக்கு பிரிவு வந்தது -என்கிறாள் –
2–உங்களுடைய பாக்யத்தாலே -என்னுதல் –
3–என்னுடைய பாக்யத்தால் என்னுதல்
அபிமத சம்ச்லேஷம் புண்ய பலம் -அபிமத விச்லேஷம் பாப பலம்
தங்களுடைய ஸூக்ருத்தத்தாலே அன்றியே இவை சேர விருக்கிற இருப்பு இவள் பாக்யமாகவுமாம் –
பெருமாள் பிராட்டியைப் பிரிந்து கடலும் மலையும் அரித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே -ராஜ்ய தாரங்களை இழந்த மகா ராஜரைக் கண்டு
அவர் குறை தீர்ந்த பின் இறே தம் யளவில்-இழவில்- நெஞ்சு சென்றது
அங்கன் அன்றிக்கே இவை குறைவற்று இருக்கிற இது தான் இவள் கார்யமாய் இருக்கும் இறே
நீர்மை உடையாருக்குத் தந்தாம் இழவிலும் பிறருடைய இழவே நெஞ்சில் முற்படப் படுவது –

பெடை மணக்கும்
பேடையோடே கலக்கும் -பேடையினுடைய கருத்து அறிந்து -அத்தை உகப்பிக்கை –
பிராட்டி கருத்து அறிந்து அவனும் கார்யம் செய்ய வேண்டும் என்றபடி –
மென்னடைய அன்னங்காள்
இவ்வன்ன நடை கொண்டோ என் கார்யம் செய்யப் புகுகிறது
சா ப்ரச கலந்தீ -என்னுமா போலே இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷம் செவிப்பட -அனந்தரம் மது பானத்தாலே வந்த கலக்கமும் தெளிந்து
-கழுத்தில் மாலையும் அறுத்துப் பொகட்டு -இந்தச் சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது -என்று தாரையைப் புறப்பட விட –
தேற்றமாய் வந்து திற -தேராமல் வந்து திறந்த தாரை போலே இல்லாமல் -அங்கே வியாக்யானம்
தாரையை -எண்ணெயை -விட்டு ஆற்ற சிலேடை –அவள் கல்வியால் உண்டான பாரவச்யம் அடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாள்
போலே இரா நின்றதாயிற்று இவற்றின் நடையும்
-இளைய பெருமாளுடைய திரு உள்ளத்தில் சிவ்ட்கு தாரையை இட்டு ஆற்ற வேண்டிற்று காணும்
சா -ஒரு கலவியும் பிரிவும் வேண்டாத படியான நடை அழகை உடையவள்
ப்ரஸ் கலந்தீ –-சம்ச்லேஷத்தால் உண்டான த்வட்சியாலே தடுமாறி -அடி மேல் அடியாக இட்டு வைத்தாள்
மதவிஹ்வலாஷீ –-மதுபா நாதிகளால் தழு தழுத்த நோக்கை உடையாளாய் இருந்தாள்
ப்ரலம்ப காஞ்சீ குண ஹோம ஸூ தரா –அரை நூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையில் கிடந்த படியே பேணாதே வந்தாள்
ச லஷணா-சம்போக சிக்னங்கள் காணலாம் படி வந்தாள்
லஷ்மண சந்தி தானம் ஜகாம -தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்
தாரா -தாரை யானவள்
இளைய பெருமாள் திரு உள்ளத்துக்கு சிவட்கு எத்தாலே ஆற்றலாம் என்று மகா ராஜரும் திருவடியும் விசாரித்து
வேறு ஒன்றால் ஆற்றுமது அல்ல -தாரையை இட்டு ஆற்ற வேணும் -என்று தாரையை விட விட்டார்கள்
நமிதாங்க யஷ்டி -கிஷ்கிந்தா -33-37–உருக்கு பதத்திலே வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போலே இத் துவட்சி நிரூபகம் இவளுக்கு என்று
தோற்றும்படி இருந்தாள் –அப்படிப் பட்ட நடை அழகாலே அவரைத் துவக்கி கார்யம் கொள்ளவற்று இவையும் -என்று இருக்கிறாள் –

மதியினால் –
அவர் சால தூர தர்சிகள் கிடி கோள் -ராவணனைப் போலே தலை யறுத்து விட ஒண்ணாத படி ஔதார்யம் என்ற ஒரு குண
லேசத்தை ஏறிட்டுக் கொண்டு இருந்தான்
இந்த்ரன் ராஜ்யத்தை இழந்து நின்றான் -இரண்டுக்கும் அவிருத்தமாக செய்யலாவது என் என்று
கோ சஹச்ர பிரதாதாரம் -என்கிறபடியே கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு நீர் ஏற்று அவனுக்குக் கொடுத்த விரகர்க்கு
குறள் –
கோடியை காணி யாக்கினால் போலே -பெரிய வடிவு அழகை கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படி சிறுக்கின படி
மாணாய்
உண்டு -என்று இட்ட போதொடு இல்லை -என்று தள்ளிக் கதவடைத்த போதொடு வாசியற முகம் மலர்ந்து போம்படி
இரப்பிலே தழும்பு ஏறின வடிவை உடையனாம் படி
ப்ரஹ்மச்சாரியாய்-பக்கத்து வீட்டில் பண்ணினதை பண்ணி விடுவேன் பயப்படுத்தி -கதை
ஸ்ம்ருதி மதி புத்தி பிரதிஜ்ஞ்ஞை / ஸ்ம்ருதி பழைய பற்ற /மதி ஆகாம /புத்தி தற்காலம் / பிரதிஜ்ஞ்ஞை முக்காலமும்
வுலகிரந்த கள்வர்க்கு
தன் சங்கல்ப்பித்தினால் உண்டாக்கின லோகத்தை கொள்வன் நான் -என்று இரந்த கள்வர்க்கு –
வேதத்துக்கு சொல்வதற்கு விஷயமாகக -ஜன்ம கர்ம மே திவ்யம் சொல்லிக் கொள்ள கதை வேணுமே -தானே செய்து கொண்ட மதி
வஞ்சகர்க்கு-என்று திருமாலை யாண்டான் நிர்வஹிக்கும் படி -முக்த ஜல்பிதங்களால்-
இரந்தது மூன்று அடி -பெற்றது உலகு -சொன்னது ஓன்று பெற்றது ஓன்று -சிற்றடி காட்டி பெரிய அடி கொண்டு அளந்ததும் –
எம்பெருமானார் -ஒன்றை நினைத்து ஒன்றைச் செய்தவர்க்கு -என்று அருளிச் செய்வர்
மகா பலியை வஞ்சித்ததும் என்னை -மன்னன் சரிதைக்கே மாலாகி பொன் பயந்த ஆழ்வாரை -வசீகரிக்கைக்காக
கீழ் தான் -பெரு நிலம் கடந்த நல்லடிப் போது -என்று இறே ஆசைப் பட்டதும்
உலகம் கொண்ட அடியன் அறுவரு மேனி மாயத்தான் ஆகிலும் கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்றும்
அன்று ஒரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று ஓன்று ஒரு கால் சொல்லாது உலகு -என்றும் இறே இவர் கிடப்பது
திரு மங்கை ஆழ்வாரும் -முன்னம் குறள் உருவாய் மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகி பொன் பயந்தேன் -என்று
இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச் செயலுக்கு இ றே

மதியிலேன் –
பிரிகிற சமயத்திலே -போகாதே கோள் -என்றேன் ஆகில் இப்பாடு படாது ஒழியல் ஆயிற்றே -அறிவு கேடியானேன்
வல்வினையே மாளாதோ –
இவள் ஒரு தீர்க்க சிந்தயந்தீ யாயிற்று -எல்லைச் சதிரியாய் குரு தர்சனத்திலே முடிந்தாள் இறே அவள்
தச் சிந்த விமலாஹ் லா தேத்யாதி –அவன் பக்கல் நெஞ்சை வைக்கையாலே புண்ய பலம் அனுபவித்தாள்
அன்னினைவின் படி அனுபவிக்கப் பெறாமையாலே பாப பலம் அனுபவித்தாள்
ஆகையால் புண்ய பாபங்கள் இரண்டையும் அரை ஷணத்தில் அனுபவித்தாள் இ றே அவள்
வென்று ஒருத்தி
1-ஒருத்தி என்றால் அறியுமோ என்னில் எய்தவன் கை உணராதோ
இன்ன காட்டில் மான் பேடை ஏவுடனே கிடந்தது உறையா நின்றது -என்று ஊரில் வார்த்தை யானால் எய்தவன் கை உணராதோ
நீ யன்றோ எய்தாய் என்று சொல்ல வேண்டா இ றே
ஒருத்தி
2-சம்சார விபூதியில் உள்ள இவள் ஒருத்தியும் இ றே
சம்சாரிகள் புறம்ப்ர் அந்ய பரர
நித்ய ஸூரிகளுக்கு விச்லேஷம் இல்லை
மற்றை ஆழ்வார்கள் இவருக்கு அவயவமாய் இருப்பார்கள்
பூதத் தாழ்வார் தலை -பொய்கை பேய் ஆழ்வார்கள் -திருக் கண்கள் -பெரியாழ்வார் -திரு முகம்
திருமழிசை ஆழ்வார் -கண்டம் -குலசேகரர் திருப் பாண் ஆழ்வார் -திருக் கரங்கள்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திரு மார்பு -திரு மங்கை ஆழ்வார் -திரு நாபி -மதுரகவிகள் எம்பெருமானார் -திருவடிகள் –

மதி எல்லாம் உள் கலங்கி
1–மதி கலங்கி
அறிவு அழிந்தாள் என்னுங்கோள் -தன் அறிவு அழிந்தாள் ஆகிலும் நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பர்-
2–மதி எல்லாம் கலங்கி
நாம் கொடுத்த அறிவு கொண்டு -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இரானோ என்று இருப்பர் –சொல்லினால் சுடுவேன் –மாசு என்று விடுவேன் –
அறிவு தந்தார் தாம் அன்றோ என்று அறிவியுங்கோள் -பின்னை கொல் நிலமகள் கொல் மலர் மா மகள் கொல் -அன்றோ இவள் –
தாம் மயர்வு அறுத்துத் தந்த ஜ்ஞானப் பரப்பு எல்லாம் கலங்குகைக்கு உடலாயிற்று என்னுங்கோள்
மேல் எழச் சிறிது கலங்கிற்றாகிலும் பின்னையும் நாம் கொடுத்த அறிவு அன்றோ -அப்படி கலங்குமோ என்பர்
3–மதி எல்லாம் உள் கலங்கி
தாம் தந்த மயர்வறு மதி நலம் -எல்லாம் அடி மண்டியோடே கலங்கிற்றே என்னுங்கோள் -அத்தனையோ நாம் இருந்தோம்
பின்பு நாம் போனவாறே அறிவு கொடுத்துக் கொள்ளுகிறோம் என்று இராமே
மயங்குமால் –
மயங்கினாள் என்னில் -இனிப் போனால் செய்வது என் என்று இருப்பர் -முடியும் தசை யாயிற்று என்னுங்கோள்
என்னீரே —
உங்கள் தலையிலே பழியைத் துடைக்கப் பாருங்கோள்
அறிவித்த பின்பு வாராது ஒழிந்தால் அவனதன்றோ அவத்யம்
ஆர்த்த த்வனி பொறுக்க மாட்டான் -அறிவியுங்கோள்
என்னீரே –
உங்களுக்கு ஸ்வரூபம்
அவனுக்கு குணம்
எனக்கு சத்தை
உங்களுக்கு ஒரு உக்தி

——————————————————————————————-

அவதாரிகை –

அனுபவித்தாலும் மாளாதது நான் பண்ணின பாபமேயோ -என்று நின்றது கீழ்
இவள் அனுபவித்தாளோ பின்னை என்னில் -அவன் அரை ஷணம் தாழ்ந்து முகமும் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தாள் இ றே
இவ்வளவிலே சில மகன்றில்கள் நமக்கு கிஞ்சித்கரிக்க நல்லவளவு என்று –
முளைக்கதிரை -குறுங்குடியுள் முகிலை –அளப்பரிய ஆரவமுதை –அந்தணர் தம் சிந்தனையை -நாமங்கள் ஓன்று ஒன்றாகச் சொல்லி
கிட்டே போய் பரகால நாயகியை முகம் பார்த்ததாம் –திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -இன்னும் கிட்டே -வருக என்று-
மடக்கிளியை கை கூப்பி வணங்கினாளே-ஆளவந்தார் -கோஷ்டி என்று ராமானுஜர் கோஷ்டியை கை கூப்பி பெரிய நம்பி -வாளா இருந்தார்
-நாங்கள் இங்குத்தைக்கு செய்ய வேண்டுவது என்ன என்று வந்து முகம் காட்டிற்றனவாக கொண்டு அவற்றைப் பார்த்து
என் தசையைக் கண்டு வைத்து இரங்காதே போனவனுக்கு நான் எத்தைச் சொல்லுவது -என்று நிராசையாய் பின்னையும்
படை திரட்டி -அவர்களுக்காகாவது பெருமாள் இரங்குவார்-என்ற நினைவால் ஸ்ரீ பரத ஆழ்வான்–போலே சாபலத்தாலே
பல கால் சொல்லு மறுத்தார்களுக்கு சொல்லுவாரைப் போலே இத்தனையும் சொல்ல வல்லிகளோ மாட்டிகளோ -என்கிறாள் –
நாலாம் பாட்டில் விக்ரஹ சௌந்தர்யத்தை அனுசந்திக்கிறார்

என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-

என்நீர்மை கண்டிரங்கி -ஆலிங்கன சமயத்தில் சிறிது -கை தளர வெளுத்த என்னைக் கண்டும் இரங்காமல்
இது தகாதென்னாத -இந்த விச்லேஷம் தாங்க மாட்டாள்
என்நீல முகில் வண்ணர்க்கு-காள மேக திருமேனியைக் காட்டி -ஊட்டாமல்
என் சொல்லி யான் சொல்லுகேனோ –
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று-ஆதரயணீயமான -அவளுடைய சத்பாவம் -அவருடைய சத்பாவம் -தங்காது
அவர் -நாயகி கௌரவத்தால் -உம் கண் -என்று அவைகள் சொல்ல வேண்டும் படி
அவர் -தூதர் வார்த்தையாக பராங்குச நாயகியைச் சொல்லவுமாம்
ஒரு வாய்ச் சொல் -வாசா தர்மம்
நன்னீலமகன்றில்காள் -நீர் உண்ட காள மேகம் -அவனைப் போன்ற வண்ணம் கொண்டவை –
நல்குதிரோ நல்கீரோ -முதலிலே இப்படி -த்வரையின் மிகுதியால் –
கடகர் உடைய ரூப வைலஷண்யம் சொல்லிற்று

என்நீர்மை கண்டிரங்கி –
என் நீர்மை யுண்டு -என் ஸ்வபாவம் -என் மார்த்வம் -துக்கம் -மென்மை இரண்டுமாம் –
கண்டிரங்கி இது தகாதென்னாத-
இத்தைக் கண்டு தயை பண்ணி -நாம் பிரியுமது தகாது -என்னாதே பொகட்டுப் போனவருக்கு
பட்டரை ஒரு தமிழன் –கேட்டு இரங்கி –என்னாதே கண்டு இரங்கி -என்னப் பெறுமோ என்ன
அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்த படி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ
இப்படி கூடுமோ என்னில் புல்லிக் கிடந்தேன் -திருக் குறள் -1187- இத்யாதி காதலர் தொடுவுழி -குறும் தொகை -399-இத்யாதி
உனக்கு இத் தமிழ் போதாதோ -என்றார்
புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக் கொண்டதே பயிர்ப்பு -பசலை –வை வர்ண்யம் -புடை சிறிது அளவில் –
தொடு உழி தொடு வுழி–நீங்கி –விடு உழி விடு உழி – ஊர் கேணி பாசி போலே –
ஸ்ரீ ரெங்க நாத மணி பாதுகை -நடுவில் குறுகி -ஸ்ரீ பாத ரஷை படாததால் இளைத்து போனதே –

என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
இத்தசையிலும் என்னுடையவன் என்னும் படி காணும் முகம் கொடுத்த படி கலந்த போது –
அவர்க்கு நான் சொல்லி விடுவது எத்தை -என்கிறாள்
திரு முகம்-பிராட்டியின் முகம் –திரு முகம் -ராஜ சாசனம் ஸ்ரீ முகம் -என்றுமாம் – மறுத்து போனவருக்கு எத்தைச் சொல்வது என்கிறாள் காணும்
இங்கன் சொல்லுவான் என் என்னில் கண்டு இரங்காதவரோ-கேட்டு இரங்கப் புகுகிறார் -என்னுமத்தாலே –
கண்டானோ பின்னை -என்னில் ஏன் -கண்டிலனோ -கலக்கிற சமயத்தில் கை நெகிழ்ந்த இடம் எல்லாம் வெளுக்கக் கண்டு இருக்குமே
அன்றிக்கே -இவ்வளவிலே சந்நிஹிதனாய் என் தசையைக் கண்டு இதுக்கு ஒரு போக்கடி பாராதே உங்கள் பக்கலில்
கேட்டு அறிய இருக்கிறவருக்கு என்னவுமாம் -தன்னுடைய வைலஷண்யம் அறிந்து -பிரிந்து இருக்கும் பராங்குச நாயகி -நிலைமை அறிபவரே
என் நீர்மை
அவனை அனுபவிக்குமதிலும் -அவனைப் பிரிந்து நோவு படுகிற தன் ஸ்வபாவத்தைக் கட்டிக் கொண்டு கிடக்க அமைந்து இரா நின்றது காணும்

நீர்மைக்கும் என் நீர்மை -தனது ஸ்வ பாவத்தை கட்டிக் கொண்டு –சொல்லிக் கொண்டு -என்றபடி –
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே-காரார் திருமேனி காணும் அளவும் போய் -ஆசை துடிப்பு -உற்ற நல நோய் இது தேறினோம் –
அவனை அடைந்து அனுபவிப்பதிலும் இந்த நீர்மை உத்தேச்யம் -என்றவாறு மமகாரம் த்யாஜ்யம் -மற்ற இடங்களில்

கண்டிரங்கி
எத்திறம் என்னா -மோஹித்து உடம்பு வெளுத்து கிடக்கும் படி கண்டால் பிரியப் பொறாது என்று இருக்க வேண்டாவோ–
கைமுதிக நியாயம் -கலந்த பொழுதே மோஹித்தவள் பிரிந்த பொழுது இந்நீர்மை அடைய சொல்ல வேணுமோ –
இது
விரஹ விசனம் -‘தன் தசை தான் தனக்கும் பேச்சுக்கு நிலம் அல்ல காணும் -பேதை பாலகன் அதாகும்
நீர்மை -விஸ்லேஷ அசஹ மார்த்வம் -விரஹ விசனம் —
என் நீல முகில் வண்ணர்க்குஎன் நீலஎன் முகில் வண்ணர்க்கு
என் நீல-அடியில் வடிவைக் காட்டிக் காணும் அனந்யார்ஹம் ஆக்கிற்று
இவ்வடிவில் புகர் அகவாயிலும் சிறிது உண்டாகப் பெற்றது இல்லை
இல்லையோ என்னில் யாமுடை ஆயன் தன் மனம் கல்லிறே-9-9-5-
என் சொல்லி யான் சொல்லுகேனோ
என்ன பாசுரத்தை இட்டு எத்தை நான் உங்களுக்கு சொல்லி விடுவது
நான் சொல்லி விட -காத்து கொண்டு -இருக்கிறவன் நீங்கள் சொல்லும் அளவையோ பார்த்து இருக்கிறது
சக்கரவர்த்தி ஓலை அனுப்பி கணக்கன் ஓலை கேட்கப் புகுகிறானோ-
கண்டு இரங்காதவர்க்கு நான் எத்தைச் சொல்லுவது என்று நிராசையாய் பின்னையும் சாபல அதிசயத்தாலே வார்த்தை சொல்லுகிறாள்
திரு முகம் மறுத்தவன் கடையீட்டுக்கு கேட்கப் புகுகிறானோ-
கடையீடு கொள்ளுதல் -வாசல் காப்பான் இடம் சொல்லி -சாஷான் நாயகன் இடம் சொல்ல முடியாதே
ஸ்ரீ கோபிமார்-அதவா கிம் ததாலாபை -என்ற அனந்தரத்திலே அப்யசௌ மாதரம் த்ரஷ்டும் சக்ருதப்யாகமிஷ்யதி -என்னுமா போலே
-இக் கிருஷ்ணன் பிதற்று ஒழிய வேறு ஓன்று இல்லையோ -என்னா -கலந்த நாம் அன்றோ வேண்டாதது -பெற்ற தாயைக் காண
வாகிலும் இங்கனே ஒரு கால் போதானோ என்பார்கள் இ றே-நிராசை நப்பாசை இரண்டுக்கும் திருஷ்டாந்தம்
நன்னீர்மை
நல்லுயிர்
இனி
ஆனவளவும் கால் கட்டிப் பார்த்தாள் போலே காணும் –
கால் கட்டுகை -போகிறவனை தடுக்கை -வருந்தி தரித்து இருந்தால் -கால் காற்று -பிராணன் -போகும் உயிரை தடுத்து இருந்தேன் -என்றுமாம்
அவர் கண் தங்காது
சேஷியான உம்முடைய பக்கலிலே தங்கில் தங்கும் அத்தனை –
அவர்களுக்குக்காக தங்காது -சுரத்துக்கு -சூ சித்தம் –இனி அவர் அழுத்தி -பராங்குச நாயகி இடம் -தங்காது -அங்கே இருக்காது உம்மிடம் தங்கினாலும் தங்கலாம்
-ந சாஸ்ய மாதா -சுந்தர-36-பெருமாள் பக்கல் குறையேயாய்-தன பக்கல் குறை தோற்றாதபடி பிராட்டி வார்த்தை அருளிச் செய்தவாறே
-திருவடி -நாமோ தான் இங்கு நன்றாகச் செய்தோம் -பெருமாளை பிரிந்த அநந்தரம் முடிந்தது என்னும் வார்த்தை கேட்கப் பெற்றது இல்லையே -என்ன
மாதா -என்னும் பிதா -என்னும் பலர் பக்கலிலே பாலி பாயக் கடவதான ச்நேஹத்தை பெருமாள் என் ஒருத்தி பக்கலிலும் ஒரு மடை செய்து போந்தார்
அவர் இவ்வாற்றாமையாலே உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்துக் கொண்டு வரக் கொள்ள –அநித்ரம் சததா ராம —
விடாயன் தண்ணீர் பந்தலில் வரக் கொள்ள சால் உருண்டு கிடந்தால் போலே ஆக ஒண்ணாது என்று நோக்கி இட்டு வைத்தேன் அத்தனை
அவரைக் கண்ட பிற்றை நாள் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்வது என்றாள் இ றே –என் பாரதந்த்ரத்துக்கும் சேராதே
ஒரு வாய்ச் சொல்
ஒரு உக்தி நேர அமையும் -வாசா தர்ம மவாப்நுஹி
நன்னீலம் இத்யாதி
அவர் நீல முகில் வண்ணராய் இருந்தார்
நீங்களும் நீல மகன்றில் களாய் இருந்தீர்கள் -செயலும் அவரைப் போலே ஆகிறதோ -இத்தனையும் செய்கிறிகளோ-முதல் வார்த்தையிலே
பதின் கால் சொல் மறுத்தாரைச் சொல்லுமா போலே சொல்லுகிறாள் இறே ஆற்றாமையின் கனத்தாலே

—————————————————————————————–

அவதாரிகை –

எங்களை விடீர் -முடிவார்க்கு வேண்டாவிறே -ஜீவிக்க நினைத்து இருக்கிற தமக்கு தாம் வேண்டாவோ -என்கிறாள்
தம்முடைய நாராயணத்வம் ஒறுவாய்ப் போகாமே -விலகிப் போகாமல் -நோக்கிக் கொள்ளச் சொல்லும் -என்கிறாள் –
அஞ்சாம் பாட்டில் நினைத்தது கிட்டும் அளவும் சலியாத சுத்த ஸ்வபாவன் என்கிறார் –

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும்-தானே நல்கி காத்து அளிக்கும் –பிரார்த்திக்காமல் தன் பேறாக ரஷிக்கும்-அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் அளித்து
வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ -ஒருத்தி மட்டும் இதில் இல்லாமல் போனேனோ –
நாரணனைக் கண்டக்கால் -சர்வ ரஷகன் என்ற பெயரைக் கொண்டவனை -ஏகாந்த சம்பந்தம் உண்டே நாராயணனுக்கு -அந்தராத்மா -சமுத்திர சாயி -என்றுமாம் –
மல்கு நீர்ப் புனல் படப்பை-கொடித் தோட்டங்களில் – இரை தேர் தேடும் -வண் -ஆச்சார்யர் வசிக்கும் இடமும் உத்தேச்யம்
சிறு குருகே-சிறு மா மனிசர் -குறைத்துக் கொள்ள வேண்டாமே -கமனத்துக்கு சௌகர்யம் –
மல்கு நீர்க் கண்ணேற்கு -நீர் குளத்தில் பார்த்து இருப்பாய் -இந்த கண்ண நீர் அருவி பார்
ஓர் வாசகம் கொண்டு அருளாயே-சப்தம் தங்க வேண்டாமோ -பேர் நிற்க வேண்டாமோ -ஒரு வார்த்தை என்னிடம் கொண்டு அருளாய்
பொழில் எழும் காத்து அளிக்கும் -வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ -என்னும் வார்த்தை –

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கி -1-விபூதி ரஷணம் பண்ணும் போது-கர்த்தவ்ய புத்த்யா வன்றிக்கே-பேறு தன்னதாக கிடீர் ரஷிப்பது-
ரஷணம் பரம் பலம் அனைத்தும் அவனது
2–எனக்கு தன் பக்கல் உண்டான வ்யாமோஹம்-தனக்கு விபூதியில் உண்டாயிற்று ரஷிப்பது
தான் –அபேஷிப்பார் இன்றிக்கே இருக்க தானே ரஷிக்குமவன் –

பொழில் எழும் -கீழும் மேலும் ஒன்றாக நினைத்துச் சொல்லுகிறார் ஆதல் -சப்த த்வீபதியான பூமியைச் சொல்லுகிறதாதல்-
1–ஸ்வ சரீர ரஷணம் பண்ணுவது சிநேக புரஸ் சரமாக இ றே-ஜகத் சர்வம் சரீரம் -நல்கி ச்நேஹத்துடன் –
2–நாம ரூப விபாக நர்ஹமாக கிடந்த வன்று ஆர் இருந்து அபேஷிக்க இத்தை உண்டாக்கிற்று -கரண களேபர பிரதானம்
3–சக்த்யவச்தை ப்ரபை –பொடி மூடு தணல் -போலே தான் என்கிற சொல்லுக்கு உள்ளேயாய் தன்னையிட்டு வ்யவஹரிக்க வேண்டின வன்று தன் மேலே
ஏறிட்டுக் கொண்டு நோக்கினான் ஆயிற்று
காத்தளிக்கும் -காத்துக் கொடுக்கும் என்னுதல் –நோக்கி ரஷிக்கும் என்னுதல் –
சிநேக பஷத்தில் ரஷணம்-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி
சிருஷ்டி பஷத்தில் -தன் மேலே ஏறிட்டு -வயிற்றில் வைத்து காத்து சிருஷ்டிக்கும்

வினையேற்கு நல்கத்தான் ஆகாதோ
இல்லாத வன்று உண்டாக்கினாய்
உண்டாக்கினதுக்கு பலம் கர்மத்தை ஏறிட்டுக் கை விடுகைக்காகவோ
ஸ்வ ஜன ரஷணம் பண்ணலாகாதோ
நாட்டுக்கு இட்ட நினைப்பு அந்தபுரத்துக்கு அரிதாக வேணுமோ
உம்பர் கோமானே -ஊர் கார்யம் பார்ப்பவனே –ரஷிதா ஜீவ ரஷிதா ஸ்வ ஜன ரஷிதா -ராமன்
வினையேற்கே –
கடலிலே ஏற்றம் இட்டு தண்ணீர் அரிதாம் படியான பாபத்தைப் பண்ணுவேனே

நாரணனைக் கண்டக்கால்
ஜீவ சமூஹத்தின் உடைய ஸ்வரூப ஸ்திதயாதிகள் ஸ்வாதீனமாய் -இவை பிரகாரமாய் தான் பிரகாரியாய் –
இவற்றிலே ஓன்று குறையிலும் தம் இழவாம் படி இருக்கையாலே நாராயணன் என்று விருதூதிக் கொண்டு திரிகிறவரைக் கண்டக்கால்
இப்பேர் யோக ரூடியோ என்று இருந்தோம் மகா வ்ருஷத்தோபாதியோ–கள்ளிச் செடி-என்று கேளுங்கோள்-
பத சேர்க்கையோ பிரசித்தமான அர்த்தமோ -அனைத்துக்கும் ஆதாரம் -காக்கும் பெருமாள் என்று இருந்தோம் –
யோக ரூடி -அவயவார்த்தம் புஷ்க்கலமாய் -யோகம் -நாரங்கள் அனைத்துக்கும் –

மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
உன் செயல் பரார்த்தமாய் இருந்ததீ
பெருகா நின்றுள்ள நீரை உடைத்தான நீர் நிலம் உண்டு கொடித் தோட்டம் -அதிலே
பேடையின் வாய்க்கு அடங்குவது தேடா நின்றது -புள்ளுப் பிள்ளைக்கு இறை தேடும் –என்னக் கடவது இ றே
கயல் உகளா நிற்கச் செய்தே இ றே பிள்ளை வாய்க்கு அடங்குவது தேடுவது
வண் சிறு குருகே
குருகு – -கொய்யடி நாரை -வண்மை அழகும் ஔதார்யமும்
கைப்பட்ட இரை தன மிடற்றுக்கு கீழே இழிந்ததாயிற்று
நான் உபவாசக்ரிசையாய் இருக்க நினையாதே இருக்கும் அவனைப் போலே அன்றே உன் ஔதார்யம்
சிறு குறுகே-
கார்ய காலத்திலே ப்ருஷதம் சகமாத்ரமாக வேண்டா -தூது போகைக்கு ஸ்ரமம் செய்து இருப்பாரைப் போலே இருந்தது உன் வடிவில் லாகவம்
திருவடி குறைத்துக் கொண்டு போக வேண்டி இருந்ததே -இலங்கையில் நுழையும் பொழுதே -பபூத அத்புத தர்சனம் –

மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே
இதுவும் ஒரு நீர் நிலம் இருக்கிறபடி பாராய்
இரை தேடுகிற இத்தை விட்டு இத்தைப் பார்க்குமோ என்னில் -பார்க்கும் இறே -இங்கேயும் சேலும் கயலும் உண்டாகையாலே
கயல் விழி -சேலேய் கண்ணியர் -அவாந்தர பேதம் –
மல்கு நீர்க் கண்ணேற்கு
கரும் தடம் கண்ணி என்றோ இன்று மல்கு நீர் கண்ணி
தனக்கு நிரூபகம் கண்ண நீர் போலே காணும் -அதாவது கலவியில் ஆனந்த ச்ரூ-பிரிவிலே சோக ச்ரூ

ஒரு வாசகம் கொண்டு
தன் வாசகம் கொண்டு அங்கு -அவன் வாசகம் கொண்டு இங்கு என்றுமாம் –
நேரே உடம்பைத் தர வேணும் -என்று சொல்ல மாட்டாளே -மறுப்பாரோ -என்னும் பயத்தாலே
மறுக்கும் வார்த்தையும் அமையும் இத்தலைக்கு -அவர் பக்கல் உள்ளது ஒன்றாம் அத்தனையே வேண்டுவது
தாரான் தரும் என்ற இரண்டத்தில் ஒன்றத்தனை -என்று இறே மற்ற ஒரு பிராட்டிமார் வாசகம்
தந்தான் ஆகில் அத்தாலே தரிப்போம் -தரா விடில் முடிந்து பிழைப்போம்
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்று -என்றும்
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் –4-7-என்றும் இறே இருப்பது
அருளாயே –
அவை திர்யக்குகளாகவும்–தான் ஜனக குல ஸூந்தரியாகவுமாம் -உபகரிப்பது பகவத் விஷயமானால் இங்கன் அல்ல சொல்ல ஒண்ணாதே
நம்பி ஏறு திருவுடையான் தாசர் திரு நாட்டுக்கு நடந்தார் -என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய துணுக என்று எழுந்து இருந்து
அவர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் பரிமாறும் படிக்கு திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் என்ன வேணும் காண்-என்று அருளிச் செய்தார் –

——————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: