பகவத் விஷயம் காலஷேபம் -36– திருவாய்மொழி – -1-3-6 ….1-3-11 –ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

அவதாரத்திலே ஆஸ்ரயிங்கோள் -என்று நின்றீர் -மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதமாவதார -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்-என்கிறபடியே
-ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே அவதீர்ணனாய் நிற்கிற நிலையாய் இருந்தது பிரதம அவதாரம்
அதில் மூவரும் ஒத்த கார்யத்திலே அதிகரித்து நின்றார்கள் -இப்படி நிற்கையாலே மூவரும் பிரதானாரோ- மூவரில் ஒருவன் பிரதானனோ
மூவருக்கும் அவ்வருகே ஒருவன் பிரதானனோ -என்று எங்களால் விவேகிக்கப் போகாமையாலே ஆஸ்ரயணத்தில் அருமை கூடும்படியாய் இருந்தது –
ஆஸ்ரயணீய வஸ்துவை நிரூபித்து தரலாகாதோ நாங்கள் ஆஸ்ரயிக்கும் படி என்ன —
காண்கிற தேஹமே ஆத்மா வென்று இருக்கும் நிலை தவிர்ந்து –தேக அதிரிக்தமாய் இருப்பதொரு ஆத்மா வஸ்து உண்டு என்று அறிகை தான் அரிது
வருந்தி அத்தை அறிந்தானே யாகிலும் -ப்ரஹ்மா ருத்ராதிகளை சரீரமாகக் கொண்டு தான் சரீரியாக நிற்கிற சர்வேஸ்வரன் படி தானே அறியப் போகாது
ஆனபின்பு இவ்வழியே இழிந்து ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் -என்று
ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும்
ஆஸ்ரயிக்கும் பிரகாரம் இன்னது என்றும் அருளிச் செய்கிறார் –

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

-உணர்ந்து உணர்ந்து-ஞாத்ருத்வ ஸ்வ பாவன் -என்றும் ஒக்க உணருகையே ஸ்வ பாவம் -முதல் பெருமை
இழிந்து அகன்று உயர்ந்த -பத்து திக்கிலும் வியாபித்து -நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் -சரீரம் இல்லாமல் -அபரிச்சின்னம் –
உருவியந்த–உரு வியந்த -உருவு இயந்த -அசித்தை காட்டில் வேறு பட்ட -வியந்த -இயத்தல் -வேறுபட்டு
சரீரம் தாண்டிய -இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் -ஸ்ரவண-மனன நிதித்யாசன மூலம் கண்டாலும்
ஆத்மா சாஷாத்காரம் அடைந்தாலும்
இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்-விவேகித்து அறியும் சேதனர்கள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை -சஜாதீய புத்தி வருமே -பிரதம அவதாரம் விஷ்ணு –
குணம் விபூதாதிகளை ஆராய்ந்து -பிரமாணங்களை உரைத்து பார்த்து
உரைத்து உரைத்து -நடுநிலைமையில் பேசினால்
இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே -ஒன்றை உணர்ந்து –
அந்த திருமாலைப் பற்றி உணர்ந்து உணர்ந்து -உரைத்து உரைத்து சொல்லி நினைத்து -மந்திர நாமாதிகளை -வியாகரன் அனுச்மரன்

உணர்ந்து உணர்ந்து
உணர்வு -என்னாதே-உணர்ந்து -என்கையாலே -ஜ்ஞப்தி மாத்ரமே உள்ளது ஜ்ஞாத்ராம்சம் -ஞாதா-இல்லை -என்கிற பஷத்தை தவிர்க்கிறது -யோகாசாரன் நிரசனம் -உணர்ந்து உணர்ந்து -என்ற வீப்சைக்கு கருத்து -சைதன்யம் -ஆகந்துகம்-வந்தேறி- முக்த்ய அவஸ்தையிலும் பாஷண கல்பமாய் இருக்கும் என்கிற-நையாய பஷத்தை தவிர்த்து
சைதன்யம் நித்தியமாய் இருக்கும் என்னும் இடத்தைச் சொல்கிறது -நையாயிக வைசேஷிகர்கள் வாதம் நிரசனம்
ஜ்ஞாத்ருத்வம் நித்தியமாய் இருக்கையாலே -ஜ்ஞானக்ரியா கர்த்ருத்வம் ஜ்ஞாத்ருத்வம் அது தான் அநித்தியம் -என்கிற க்ரியா-மாயா வாதியையும் நிரசிக்கிறது
ஞானம் ஆகிய கிரியைக்கு கர்த்தா -கிரியைக்கு உத்பத்தி விநாசம் வரும் -அநித்தியம் வரும் –

இழிந்து அகன்று உயர்ந்து –
இச் சேதனன் தான் அணு பரிமாணனாய் இருக்கச் செய்தேயும் -ஈஸ்வர ஸ்வரூபத்தாலே எங்கும் வியாபித்து இருக்குமா போலே-
ஜ்ஞானத்தாலே எங்கும் வியாபித்து இருக்கும் என்கிறது -நிஷ்க்ருஷ்ட ஆத்மா ஸ்வரூபம் -பத்து திக்கிலும் ஞான வியாப்தி இருக்கும் –
பாதே மே வேதநா சிரஸி மே வேதநா – என்று இருக்கும் படியைச் சொல்கிறது –

உருவியந்த இந்நிலைமை –
உருவில் காட்டில் வியந்து -வேறு பட்டு இருக்கிற இந்நிலைமை உண்டு –இந்த ஆத்மாவினுடைய ஸ்வரூபம்
அன்றியே
உருவு இயந்த –என்ற பதபேத மான போது -யத்தால்  -கடத்தலாய்-உருவில் காட்டிலும் கடந்து இருக்கும் -வேறுபட்டு இருக்கும் -என்றுமாம்

உணர்ந்து உணர்ந்து உணரிலும்
ஆக இரண்டாலும் ஜடமான சரீரத்தில் காட்டில் வேறு பட்டு இருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தை
கேவல பகவத் விஷயம்  இல்லாத ஜீவ விஷயம் –சரவண மனநாதிகளாலே சாஷாத் கரிக்கக் கூடிலும்
இரண்டாலும்-த்யான ரஹித கேவல–பகவத் விஷயம்  இல்லாத  ஜீவ விஷயமான -மட்டும் – ஸ்ரவண மனநாதிகளாலும் அன்றிக்கே அஷ்டாங்க யோகம் மூலம் என்றுமாம் –
தேக அதிரிக்தமாய் இருக்கிற ஆத்மாவினுடைய ஸ்வரூபத்தை
யோக சாஸ்த்ரத்திலே சொல்லுகிற க்ரமத்தாலே இழிந்து வருந்தி ஒருபடி அறிந்தானாகிலும்

இறை நிலை உணர்வு வரிது –
சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தராத்மாவாய் -அவர்களை சரீரமாகக் கொண்டு தான் சரீரியாய் நிற்கிற நிலை அறியப் போகாது –

உயிர்காள்-
சைதன்ய யோக்கியம் அன்றிக்கே இருப்பது ஒன்றாய் தான் இழக்கப் பெற்றதோ
சேதனரான பின்பு அதன் கார்யம் பிறக்கப் பெற்றது இல்லையே -அறிவுகேடராய் நீங்கள் பட்டது என் –

எங்கள் அறிவும் அறியாமையும் கிடக்க கிடீர் -அறிந்த நீர் அருளிச் செய்யீர் -நாங்கள் அப்படி ஆஸ்ரயிக்க என்ன -அருளிச் செய்கிறார் மேல் –
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து -இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே
ஒரு உணர்த்தி –ஸ்வரூப பரம்
ஒரு உணர்த்தி ஸ்வபாவ பரம்
உரைத்து உரைத்து –
ஸ்வரூப பரமான பிரமாணங்களையும் ஸ்வ பாவ பரமான பிரமாணங்களையும் -அவரவர் பிரமாணங்கள் உண்டே அவற்றை –
விரோதி நிரசன சீலனாய் -ரஷகனாய் இருக்கும் ஒருவன்
ஒருவன் திரு நாபீ கமலத்திலே அவயவதாநேந பிறந்தவனாய் இருக்கும் -அஜன்
ஒருவன் சம்ஹாரம் ஒன்றுக்கே கடவனாய் இருக்கும்
இவர்களை பிரதிபாதிக்கிற பிரமாணங்களை ஆராய்ந்து பார்த்து
அவை தன்னை பலகாலும் சொல்லிப் பார்த்து
லிங்கத்துக்கே உத்கர்ஷம் தோற்றும்படியாய் இருப்பது ஒரு பிரபந்தம் பண்ணித் தர வேணும் -என்பாரைப் போலே ஒரு வ்யக்தியிலே பஷபதிக்கப் பாராதே
இவர்கள் ஸ்வரூப ஸ்வபாவங்களை பலகாலும் ஆராய்ந்து பார்த்து கோல் விழுக்காட்டாலே உத்கர்ஷம் கிடந்த வ்யக்தியைப் பற்றப் பார்ப்பது
இப்படி ஆராய்ந்தவாறே ஒரு வஸ்துவே பிரதானம் என்று உங்கள் நெஞ்சிலே தோற்றும்
அவ் வஸ்துவை சரவண மன நாதிகளால் கைபுகுந்தது-என்று விஸ்வசிக்கலாம் அளவும் ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் –
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று பேசும் அறிவிலிகள் –கம்பர்-
உலகு அளந்த -திருவடி ஒருவன் நீட்ட ஒருவன் கழுவ ஒருவன் தலையில் வாங்கி பவித்ரம் கொண்ட –

————————————————————————————

அவதாரிகை –

அப்படியே செய்கிறோம் -என்று ஆறி இருந்தார்கள்
ஐயோ நீங்கள் உங்களுடைய ஆயுஸ் சினுடைய ஸ்திதியும் –இழக்கிற விஷயத்தின் நன்மையையும்- அறியாமை இறே ஆறி இருக்கிறது –
நீங்கள் முடிந்து போவதற்கு முன்பே நிர்ணய உபாயங்களால் வஸ்து இன்னது என்று நிர்ணயித்து -நிர்ணீதனானவன் பக்கலிலே
கடுக பக்தியைப் பண்ணப் பாருங்கோள் -என்று கீழ்ப் பாட்டுக்கு சேஷமாய் இருக்கிறது இப்பாட்டும் –
நீங்கள் மந்தாயுஸ்ஸூக்களாகையாலே-கடுகச் செய்து கொடு நின்று -செய்கிறோம் -என்ன வேணும்
செய்கிறோம் என்று செய்ய ஒண்ணாது என்கிற இதுவே விசேஷம் கீழில் பாட்டில் காட்டில் –

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-

விவேக பிரகாரம் விசதமாக உபதேசித்து சடக்கென ஆஸ்ரயிக்க அருளிச் செய்கிறார்
ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
ஏகாத்மா பிரகாரம் -அநேகாத்மா அதிஷ்டானம் -நின்ற வர்த்திக்கிற
நன்ற எழில் நாரணன்-அபஹதபாப்மாதி ஔஜ்வல்யம் கொண்டவன் அன்றோ -சமஸ்த சிதசித அந்தராத்மா நாராயணன்
நான்முகன் -சதுர்முக பாராயாணம் -பஹூ முக சிருஷ்டிக்கு உபயோகமான நான்கு முகங்கள்
அரன்-சம்ஹாரத்துக்கே -ஸ்வ பாவமாக கொண்ட
என்னும் இவரை -என்று புராணங்களால் பேசப்படும் இவர்களை –
ஒன்ற -ஒருவர் பக்கல் பஷ பாதம் இல்லாமல் நடுநிலையாளராக
நும் மனத்து வைத்து உள்ளி-ஆராய்ந்து
நும் இரு பசை அறுத்து -ரஜோ தமோ குணம் அறுத்து என்றுமாம் -மற்ற இருவர் பக்கல் உண்டானஎஈஸ்வர சங்கத்தை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே -மின்னின் நிலையில் உள்ள ஆயுஸ் உள்ள காலத்தில் -ஏக பக்தி என்ற நன்மை
இதனாலே முன் பாசுர சேஷம் -சடக்கென ஆஸ்ரயிக்க அருளிச் செய்கிறார் –

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
மூவர் பிரதானராய் -மூவர்க்கும் மூன்று சரீரம் உண்டாய்த் தோற்றுகையாலே-மூன்று சரீரத்திலும் ஒருவனே
அதிஷ்டித்துக் கொண்டு நிற்கிறானோ
அன்றியே
மூன்றிலும் மூன்று சேதனர் அதிஷ்டித்துக் கொண்டு நிற்கிறார்களோ என்று அறிய அரிய வடிவுகளை உடையராய் நிற்கிற –
ஏக ஆத்ம அதிஷ்டிதமோ -அநேக ஆத்ம அதிஷ்டிதமோ -என்று அறிய அரிதான வடிவை உடையராய் நின்ற
வடிவினுள் நின்ற -பல வடிவங்களுள் -சொல்லி -வெவ்வேறே வடிவம் -பார்த்து -மூன்றா என்கிற சங்கை அதிகரிக்குமே –

நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
அநந்ய பரமான நாராயண அனுவாதிகளை நினைக்கிறார் -ஸூபால உபநிஷத் -ஏஷ சர்வ பூத அந்தராத்மா -திவ்ய தேவ ஏக அத்விதீயன் –
எழில் என்று அபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்கிற புகரை நினைக்கிறது -பிரபாவம்
நன்று எழில்
ரூப ஸ்ரீயைப் பார்த்தவாறே -கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் -4-5-10-என்கிறபடியே சர்வ ரஷகன் இவனே என்னலாம்
காண் தகு தோள் அண்ணல் -ஆதி ராஜ்ய -தேவாதிராஜன் —
ரூப ஸ்ரீ -வைகுண்ட ஸ்தவம் ஸ்லோகம் —வியாப்தகதமான தோஷம் தன பக்கல் தட்டாமல் -நன்ற எழில்
நாரணன் –
திரு நாமத்தைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தது அடைய பிரகாரமாக கொண்டு தான் பிரகாரியாக இருப்பான் ஒருவன் என்று தோற்றி இருக்கும்
நான் முகன்
ஒருவன் சிருஷ்டி காலத்தில் வந்தால் நாலு வேதங்களையும் உச்சரிக்கைக்கு நாலு முகத்தை உடையனாய் சிருஷ்டி கார்யம் ஒன்றிலும் அந்விதன்-என்று தோற்றி இருக்கும்
அரன்
ஒருவன் சம்ஹர்த்ருத்வம் ஒன்றிலும் அந்விதன் என்று தோற்றி இருக்கும் -அபஹரிப்பவன் -அரன்
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை -பெயரைப் பார்த்தாலே அறிந்து கொள்ளலாம்
சிருஷ்டி ஸ்திதி அந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ச சம்ஜ்ஞாம் யாதி பகவா நேக ஏவ ஜனார்த்தன –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-என்கிறபடியே
சம்ஜ்ஞைகளில் வந்தால் ஒக்க ஒடுக்கலாய் விஷ்ணு சப்தத்தோடு பர்யாயமான ஜனார்த்தன சப்தத்தை இட்டுத் தலைக் கட்டுகையாலே
தானே பிரதானன் என்று தோற்றும்படியாய் இருக்கும் –

இப்படி வி சத்ருச-மாறுபட்ட – ஸ்வபாவராய் இருக்கிற இவர்களை
ஒன்ற நும் மனத்து வைத்து –
அவனை ஒழிந்த இருவரில் ஒருவனுக்கு உத்கர்ஷம் வேணும் என்றாதல்
நிர்ணயிப்பதற்கு முன்னே இவனுக்கு உத்கர்ஷம் வேணும் என்றாதல் பாராதே ஒருபடிப்பட உங்கள் நெஞ்சிலே வைப்பது
உள்ளி –
உள்ளுவது -சுருதி நியாயங்களாலே ஆராய்வது -இரண்டாலும் -வேத வாக்யங்கள் -உக்திகளைக் கொண்டு –
அவர்கள் ஸ்வரூப ஸ்வ பாவங்களை-இன்னான் இனையான் — இப்படி ஆராய்ந்த வாறே ஒரு வஸ்து பிரதானமாய் இரண்டு அப்ரதானமாய் தோற்றும்

தோற்றினவாறே –
நும் இரு பசை அறுத்து –
அவ்விரண்டிலும் நீங்கள் பண்ணுகிற நசையைத் தவிருவது -பேச நின்ற சிவனுக்கும் —
வஸ்துகதமாய் வருவது உத்கர்ஷம் இல்லை -நீங்கள் ஏறிடுகிற இவற்றைத் தவிருவது –

நன்றென நலம் செய்வது அவனிடை –
இப்படி நிர்ணீதனவான பக்கலிலே -இவன் நமக்கு கை புகுந்தான் -என்று உங்களுக்கு ஏறத் தேற்றம் பிறக்கும் படி
அநந்ய பிரயோஜனமான பக்தியைப் பண்ணப் பாருங்கோள்-

க்ரமத்திலே செய்கிறோம் என்று இருந்தார்கள்
நம்முடைய நாளே —
கெடுவிகாள் நம்முடைய ஆயுஸின் நிலை அருவி கோளே-கடுக ஆஸ்ரயிகப் பாருங்கோள்
நம்முடை நாள் -என்னும் காட்டில் -ஆயுஸின் நிலையை அறிந்தபடி என் என்னில்
முன்பே மின்னின் நிலையில என்று அருளிச் செய்தார் இறே
ஒருவன் இரண்டு கதவையும் அடைத்துக் கொண்டு கிடந்து உறங்கா நின்றால்-நெருப்பு பற்றி எரியா நின்றால் -அவிக்கிறோம் -என்று ஆறி இருக்கலாமோ –
நந்த்தன்யுதிதே ஆதித்யே நந்தத்யச்தமித ரவௌ ஆத்மநோ நாவபுத்யந்தே மனுஷ்யா ஜீவிதஷயம் -ஆதித்ய உதயத்திலே வந்தவாறே
-த்ரவ்ய அர்ஜன காலம் வந்தது -என்று உகப்பார்கள் –அவன் அச்தமித்தவாறே-அபிமத விஷயங்களோடு ரமிக்கைக்கு காலம் வந்தது -என்று உகப்பார்கள் –
சாலில் எடுத்த நீர் போலே தங்கள் ஆயுஸ்ஸூ குறைகிறது என்று அறியாது இரா நின்றார்கள்-காவேரி நீர் போலே இல்லையே –
என்பதை உணர வேண்டுமே என்னா நின்றது இறே –
-ஆயுஸ் அந்தத்துடன் இருக்கும் ஷயம் ஆகும் என்று உணர வேண்டும் -பிறந்த உடன் 80 கொண்டாடி அப்புறம் 79 -எண்ணி-count down –

—————————————————————————————–

அவதாரிகை –

ஒரு நாளாகிலும் முற்பட்டது உடலாக ஆஸ்ரயிக்கச் சொல்லா நின்றீர் -உடல் நீங்க ஒரு நாளாகிலும் முற்பட்டது –
அநாதி காலம் நாங்கள் பண்ணின பாபங்கள் விலக்கவோ-இனி காலம் தான் உண்டோ -என்ன –
நீங்கள் ஆஸ்ரயணத்திலே ஒருப்படவே விரோதிகள் அடங்கலும் நசிக்கும்
ஸ்ரீ யபதி சமாஸ்ரயணம் ஆகையாலே காலம் கழிந்தது என்று இருக்கவும் வேண்டா
நீங்கள் தண்டு காலா-பெரிய திருமொழி -1-3-5- ஊன்றி ஊன்றி தள்ளி நடக்கும் போது அக்கோலோடே சாயவும் அமையும் -என்கிறார்
தண்டவத் பிரமாணம் இதுவோ –

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-

7 பாசுரங்களில் ஆஸ்ரயிக்கப் பண்ணினார் ஆழ்வார் -700 ஸ்லோகங்கள் கண்ணன் சொன்னதும் தானே கரிஷ்வ வசனம் தவ என்றான் அர்ஜுனன்
மனனக மலமறக் கழுவி -த்ரி மூர்த்தி சாம்ய சந்கையால் வந்த மலம் போன படி -விவேகத்தால் பிரித்து பரி சுத்தம் ஆக்கி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி –
வணங்கில் –
வணங்க இது நடக்கும் -என்றும் பாட பேதம்
நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
வினைக்கு விசேஷணங்கள்
நாளும் நின்று அடும்
நமது -அறிந்து செய்த
பழைமை -அநாதி சித்தம்
அம்
கொடு வினை
உடனே -ஆஸ்ரயிக்கும் சமயத்திலே
மாளும் ஓர் இடத்திலும் -சரீர விஸ்லேஷ தசையிலும்
வணக்கொடு மாள்வது வலமே – -அப்பொழுதாவது ஆஸ்ரயிக்க -முடிந்தால் வலம் –

நாளும் நின்று அடும் –
நாள்தோறும் இடைவிடாதே நின்று ஹிம்சிக்கக் கடவதான
பரமாணு கதமான பாரிமாண்டல்யாதிகள் நித்தியமாய் இருக்கச் செய்தே நித்ய பரதந்த்ரமாய் இருக்குமா போலேயும்
பகவத் ஸ்வரூபத்தோ பாதி குணங்கள் நித்தியமாய் இருக்கச் செய்தே நித்ய பரதந்த்ரமாய் இருக்குமா போலேயும் நித்ய வஸ்துவாய்
நித்ய பரதந்த்ரமாய் போரா நிற்கச் செய்தே
நித்யர்களும் நித்தியமாய் பரதந்த்ரராய் இருப்பார் போலேயும்- அசித் சம்பந்தமும் நித்தியமாய் போருகிறது இறே

நம் பழமை அம் கொடு வினை
நம்
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடி பிறரதாய்-அசல் பிளந்து ஏறிட வந்தது அல்ல –நெஞ்சு உணர நாமே பண்ணி வைத்தவை
அபூத பூர்வம் மம பாவி கிம் வா -ஸ்தோத்ர ரத்னம் -25-என்று
எனக்கு முன்பு அனுபவியாததாய் மேல் அனுபாவ்யமாய் இருப்பது ஓன்று உண்டோ –
சர்வம் சஹே -எல்லாம் பொறுக்க வல்லேன்
என்னைப் பார்த்தால் இன்னும் நரகம் சிருஷ்டிக்க வேணும் -உன்னுடைய பிரபாவத்தைப் பார்த்தால் இன்னும் வேறே ஒரு நித்ய விபூதி வேண்டுமே
ஆழ்வாருக்கு சஹஜ பக்தி போலே நமக்கு சஹஜ வினை துக்கம் –
மே சஹஜம் ஹி துக்கம் – தன காய் பொறாத கொம்பு உண்டோ -என்று சொல்லலாம் படி இறே நாம் பண்ணி வைக்குமவை யாய்- இருப்பது
பழமை
அது தான் இன்று நேற்று அன்றியே பழையதாய் இருக்கை
அம் –
என்று க்ரைர்யத்தைப் பற்றச் சொல்கிறது
கொடு வினை
அனுபவ விநாசயமாய் இருக்கை –

உடனே மாளும்
ஆச்ரயண காலத்திலே நசிக்கும்
யதேஷீ கதூல மக்னௌ ப்ரோதும் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாபமான ப்ரதூயந்தே -சாந்தோக்யம் -5-25-
மேரு மந்திர மாத்ரோபி –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்று சொல்லுகிறபடியே விரோதி போம் அளவேயோ -சக்ருத் -ஒரு தடவை -கோவிந்த நினைத்தால் –

ஒரு குறைவில்லை –
மேலும் ஒரு விரோதங்கள் வாராது -என்னுதல்
சர்வ அபிமதங்களும் பூர்ணமாம் -என்னுதல்
கௌந்தேய பிரதிஜா நீஹி ந மே பக்த ப்ரணச்யதி அர்ஜூன -இவ் வர்த்தத்தில் நம்மை விச்வசித்து பிரதிஜ்ஞ்ஞை பண்ணு
-நம்மைப் பற்றினவர்களுக்கு அநர்த்தம் வாராது காண்
பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகைக்கும் வினை -கிடக்கைக்கும் -அக்னி நா சிஞ்சேத் போலே -என்ன சேர்த்தி உண்டு -அசங்கதம்
நெருப்பால் நனைவது போலே ஒவ்வாதே —
துராசாரோபி –செய்யக் கடவது அல்லாதவற்றைச் செய்து போருவது
சு துராச்சார்யனாக இருந்தாலும் -சாதி கோஷ்டியுள் கொள்ளப் படுவான் என்னை ஆஸ்ரயித்தால்-
சர்வாசீ -அபோஜ்ய போஜனங்களைப் பண்ணுவது -க்ருதக்ன -உபகரித்த விஷயத்தில் அபகாரத்தைப் பண்ணுவது
நாஸ்திக -வைதிக மரியாதையை இல்லை என்று போருவது -புரா -இது தான் பழையதாய் போருவது –நிர்தோஷம் வித்தி
சமாஸ்ர யேதித்யாதி-இவன் அனுகூலிப்பது எப்போதோ என்று ஏற்கவே அவசரம் பார்த்து இருக்கிறவனை பற்றி அனுகூலிக்குமாகில்
பின்பு அவன் நிர்தோஷனாக பிரதிபத்தி பண்ணுவது என் தான் -என்னில் -ப்ரபாவாத் பரமாத்மன -இவனைக் குறைய நினைக்கையாவது
பகவத் பிரபாவத்தை குறைய நினைக்கை இறே -அக்னி பிரபாவத்தால் காடு அழிவது போலே
ந வாஸூ தேவ பக்தா நாம் அஸூபம் வித்யதே க்வசித் -என்னுமா போலே –

இனி செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –
மனனக மலமறக் கழுவி –
சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே கலசி நின்றால் -இவனோ கடவான் -மற்றையவர்களோ -என்று சம்சயிக்குமது தவிர்ந்து
சர்வேஸ்வரனே கடவான் என்கிற அந்த கரண ஸூத்தி உண்டாக வேணும்
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழாது ஒழியும் இத்தனையே வேண்டுவது

நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
நாளும்
அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னுமா போலே ஒரு நியதி இல்லை
அச்வதம்-அரச மரத்தையும் -சிந்து ராஜன் கடல் -நித்யம் சேவி -ந ஸ்பர்சேத் தொடாதே–கடல் போன்றவன் அன்றோ அவனும்
நம் திருவுடையடிகள் தம்-காலம் பார்க்காமல் சரண் அடைய புருஷகாரத்துக்கு நித்யமாக அவள் உண்டே
ஸ்ரீ மானான ஸ்வாமி யானவனுடைய
இத்தால் நித்ய யோகத்தைச் சொல்லுகிறது
சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்தான் ஆகில் அவன் பல ப்ரதனாகிறான் –
பிராட்டியை புருஷகாரமாக பற்ற வேண்டுகிறது என் -என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்று அவள் முன்னாக ஆஸ்ரயிக்க வேணும் என்னா நின்றது கண்டீரே
என்று அருளிச் செய்து -அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து அவன் பக்கல்
முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்ற வேணும்
நலம் கழல் –
அவள் முன்னாகப் பற்றினாருடைய குற்றங்களைப் பாராதே கைக் கொள்ளும் திருவடிகள்
வணங்கி -என்றது வணங்க என்றபடி
வணங்கி என்கிற இது வினை எச்சமாய் -வணங்க என்னும்
அர்த்தமாய் இருக்கும்

வணங்க நாளும் நின்றாடும் நம் பழமை யாம் கொடு வினை உடனே மாளும் -ஒரு குறை இல்லை
ஆனாலும் ஆஸ்ரயணத்துக்கு காலம் தப்பி நின்றதே என்ன –
மாளும் ஓர் இடத்திலும் –
முடிகிற ஒரு ஷணத்திலும்
வணக்கொடு மாள்வது வலமே
த்விதா பஜ்யேயமப் யேவம் ந நமேயம் -என்னாதே கிடக்கிற சீரைப் பாயைக் கவ்விக் கவிழ்ந்து கிடந்து சாவவும் அமையும் –
குப்புறப் படுத்தி சாவவும்  அமையும் -வணக்கமே முக்கியம் –
ஸ்வபாவோ துரதிக்கிரம -இயற்கை ஸ்வபாவம் மாற்ற முடியாதே என்கிறான் ராவணன் -வணங்கலில் அரக்கன் –
வலமே
வரமே -என்னுதல் -ஸ்ரேஷ்டம் என்னுதல் -பலவத்தரம் என்னுதல்
அவனையும் ஆஸ்ரயித்து வேறு சிலர் பக்கலிலும் தலை சாய்க்க இராதே
முடிகிற சமயத்திலே ஆஸ்ரயிக்கவே-பின்னைப் பேற்றோடு தலைக் கட்டும் –
நம -மத் பக்தம் ஸ்ரத்தையே-நமஸ் -சொன்னால் வைகுந்தம் குறைவில்லாமல் கிட்டும் -நாய் மாமிசத்தை அடித்து உண்பவன் ஆனாலும் –
100 அஸ்வமேத யாகத்துக்கு ஒக்கும் -திரும்ப பிறக்க மாட்டான்
இத்தால் -ஜன்ம ப்ரப்ருத்தி ஆஸ்ரயத்தாலும் பலமில்லை பகவத் வ்யதிரிக்தர் பக்கலில்
ஆஸ்ரயணத்தில் உபக்ரமித்து முடிந்தாலும்-உடனே இறந்தாலும் – பலம் தப்பாது பகவத் விஷயத்திலே என்கை-

———————————————————————————————–

அவதாரிகை –

கீழ் -ப்ரஹ்மாதிகளுடைய அபரத்வமும் -சர்வேஸ்வரனுடைய பரத்வமும் சொன்னார் –
இப்பாட்டில் அவர்கள் தாங்கள் இவனைப் பற்றிய லப்த ஸ்வரூபராய் இருக்கிறபடியே அருளிச் செய்கிறார்
ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனாய் அவர்களுக்கு ரஷகனான சர்வேஸ்வரன் -அவர்கள் தாங்களும் காலிடமாட்டாத பூமியிலே வந்து
அவதரிக்கைக்கு ஹேது என் என்னில் -அவன் தானே அருளிச் செய்ததுவே ஹேது -பரித்ராணாம் சாதுநாம் -என்றான் இ றே
ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு இதிலே த்வரை பிறக்கைக்காகவும்-ருசி ஜனகனாகைக்கும் வந்து பிறப்பான்
அதிலே பலமாய் வருமது இறே துஷ்க்ருதுக்களுடைய விநாசம் -என்று அருளிச் செய்ததுவே ஹேது -என்கிறார் –

வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே--1-3-9-

இவனாலே லப்த ஸ்வபாவர் இவன் விபூதி அந்தர்பூதர் -சஜாதீயன் -நெஞ்சு கலங்கப் பண்ணும்
வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும் -உந்தித் தாமரையில் இடம் பெற
பின்னும்-புலப்படப -காண வாராய் என்பார்க்கு கருணையால் தானே தன்னுலகத்தில் அகத்தனன் தானே -அவதரித்து
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள-இவை பிரபாவங்கள் சொல்ல முடியாத ஆழம் –
இவை பிரளயத்தில் திரு வயிற்ருக்குள் என்றுமாம் – விவையவன் துவக்கே-

வலத்தனன் திரிபுரம் எரித்தனன்
கீழில் பாட்டுக்கு கீழ் இரண்டு பாட்டாலும் -6/7 பாட்டுக்களிலும் சொன்ன அர்த்தத்தை அனுபாஷிக்கிறார்
திரிபுர தஹனத்தாலே சஞ்ஜாத அபிமானியான ருத்ரன் திருமேனியிலே வலவருகை பற்றி லப்த ஸ்வரூபனாய் இருக்கும் –
பச்யைகாதச மே ருத்ரான் தஷிணம் பார்ச்வ மாஸ்ரிதான் -என்கிறபடியே –

இடம் பெறத்துந்தித் தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும் –
எழுச்சியை உடைய திசைமுகன் படைத்த லோகமும் தானும் அசங்கு சிதமாக திரு நாபி கமலத்திலே இருக்கும்
ப்ரஹ்மாணமீசம் கமலாசநச்தம்-என்கிறபடியே இவை இவர்களுடைய சர்வ பிரகார ரஷணத்துக்கும் உப லஷணம்
எழுச்சியாவதி-சதுர்தச புவனத்துக்கும் நிர்வாஹகனான அளவுடைமை -ஈஸ்வரன் விரும்பி வந்து அவதரிக்கையாலே –நல்லுலகம் -என்கிறது
ஏறாளும் இறையோனும் திசைமகனும் திரு மகளும் கூறாளும் தனி யுடம்பன் -4-8-1- என்கிறபடியே
பிராட்டிக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும் ஒக்கத் திருமேனியில் இடம் கொடுத்து வைத்தால் அந்தப்புரத்தில் உள்ளவர்கள் என்று
அவர்கள் இருப்பிடத்தில் இவர்களுக்கு நலிய ஒண்ணாத படி கூறாகக் கொடுத்து வைக்கும்
சர்வ அபாஸ்ரயமாய் இறே திருமேனி தான் இருப்பது

இடம் பெற
சவிகாசமாய் இருக்கும்
ருத்ரனுக்கும் இவ்வருக்கு உள்ளாருக்கும் நிர்வாஹகனாய் -சதுர்தச புவன ஸ்ரஷ்டாவான சதுர்முகன் -தான் உண்டாக்கின நன்றான லோகமும்
தானும் திருநாபி கமலத்தைப் பற்ற லப்த ஸ்வரூபனாய் இருக்கும்
உந்தி என்றும் துந்தி என்றும் திரு நாபிக்கு பெயர்

இடம்பெறத் துந்தி
இடம் பெற அத்து உந்தித்தலம்-என்றாய் பதம் -அதில் அத்து என்கிற பதம் -சாரியைச் சொல்லாய் பொருள் இன்றியே போய்
இடம் பெற உந்தித் தலம் -என்கிறது -பூதலம் -என்னுமா போலே
திசைமகன் படைத்த நல்லுலகம் தானும் உந்தித் தலத்தனன்
ஸ்த நந்தய பிரஜை தாய் முலையை அகலில் நாக்கு ஒட்டுமா போலே திரு நாபீ கமலத்தை விடில் தன் சத்தை இல்லையாம் படி இருக்கை
இப்படிப் பின்னை சர்வ காலமும் இவர்கள் இருப்பார்களோ என்னில் ஆபத்துக்களிலே திரு மேனியிலே இடம் கொடுக்கும்
அது மகா குணம் ஆகையாலே ஆழ்வார்கள் எப்போதும் ஒக்க அருளிச் செய்து கொண்டு போருவார்கள்
சாமந்தர்க்கு புறம்பே நாடுகள் கனக்க உண்டாகிலும் மாளிகைக்கு உள்ளே செம்பாலே நாழி யரிசியை தங்களுக்கு வரிசையாக நினைத்து இருப்பார்கள் இ றே
அப்படியே இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள் இ றே
ஒரு கலகங்களில் அடைய வளைந்தானுக்கு உள்ளே குடி வாங்கி இருந்து காலம் தெளிந்தவாறே புறம்பே புறப்பட்டாலும் இவ்விடம் இன்னார் பற்று
இவ்விடம் இன்னார் பற்று என்று பின்னும் பிராப்தி சொல்லி வைக்குமா போலே

புலப்படப் பின்னும்
ப்ரஹ்மாதிகளுக்கு தன திருமேனியிலே இடம் கொடுத்ததுக்கு மேலே
தன்னுலகத்தில் அகத்தனன் –
தான் உண்டாக்கின ப்ரஹ்மாவால் உண்டான லோகங்களிலே வந்து அவதரிக்கும்
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் தன திரு மேனியிலே ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபராம் படி இருக்கிறவன்
அவர்களுக்கும் கூட காலிட அருவருக்கிற சம்சாரத்திலே வந்து அவதரிக்கைக்கு ஹேது என் என்னில்
புலப்பட
காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருக்குமவர்களுக்கு தன சங்கல்பித்தினாலே சம்விதானம் பண்ண ஒண்ணாதே
அவர்கள் சஷூராதி கரணங்களுக்கு விஷயமாக வேணும் என்று -ஏன் சங்கல்ப்பித்தினால் சம்விதானம் பண்ணினால் என் செய்யும் என்னில்
மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையும் -என்பார்கள்

இது தனக்குத் தான் அடி என் என்னில்
தானே
ஆத்மமாயயா
ஆத்மேச்சாயா
ஒரு கர்மம் பிரேரிக்க அன்று -இச்சையாலே

சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–
அவன் இப்படி அவதரித்துப் பண்ணும் ரஷணங்களில் ஏக தேசம் சொல்லில் சொல்லும் அத்தனை
எல்லாம் சொல்லில் தலைக் கட்டப் போகாது
சொலப்புகில் உள்ளே உள்ளே யாம் இத்தனை -இவை -ரஷிக்கும் பிரகாரம் வாசா மகோசரம்/லோகம் என்றுமாம்
அன்றியே
தன்னாலே ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாதிகளால் ஸ்ருஷ்டரானவர்களுக்கு -என் மகன் -என்று அபிமாநிக்கலாம் படி வந்து பிறந்து
உனக்கு ராஜ்யத்தைத் தந்தேன் -அது தன்னை வாங்கினேன் போ –சக்கரவர்த்தி-என்றும்
கையிலே கோலைக் கொடுத்து பசுக்கள் பின்னே போ என்று சொல்லலாம் படி எளியனாய் இருக்கிற தான்
இவர்களுக்கு ஒரு ஆபத்து வந்தால் இவர்களை வயிற்றிலே வைத்து நோக்கும் படியைச் சொல்லிற்று ஆகவு மாம்

இப்படி இதுவே அர்த்தம் என்னும் இடம் நீர் அருளிச் செய்த போது தெரிந்து அல்லாத போது எங்களுக்கு தெரியாத படி இரா நின்றதீ என்ன
இவை அவன் துவக்கே
மம மாயா துரத்தயா-என்றபடி அவன் தானே பிரக்ருதியாகிற விலங்கை இட்ட பாக்ய ஹீனர்கள் தன் பக்கல் அணுகாதபடி பண்ணி
அகலப்புக்கால் அனுமதி விதானம் பண்ணுவான் – உங்கள் பக்கல் அவன் உதாசீனனாய் இருக்கையாலே தெரியாது ஒழிகிறது என்கிறார்
துயக்கம் -சம்சயம்

——————————————————————————–

அவதாரிகை –

அவன் விமுகர் பக்கல் பண்ணுமவை கிடக்கிடீர் -அவன் காட்டின வழியே காணப்புக்க நாம் மநோ வாக் காயங்களாலே நம் விடாய் கெடத்
திரு உலகு அளந்து அருளின திருவடிகளை அனுபவிப்போம் என்று பார்க்கிறார் –பாரிக்கிறார்-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-

பரத்வம் கிடக்க -அவன் திரு மேனி அழகை அனுபவிப்போம்
துயக்கறு -சம்சயம் விபர்யாயம் -ஐயம் திரிபு இ-தெளிந்த ஞானம் உள்ள தேவர்களையும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன் -அதிசயிக்க பண்ண வலவன்-கீழ் சொன்ன பாசுரங்களின் சுருக்கம் சொல்லி
புயற்கரு நிறத்தனன்-காள மேக -சியாமளன்
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது-பூமிப்பரப்பை அநாயாசேன அளந்த -திருவடித் தாமரைகளை
அமர்ந்து -அனன்ய பிரயோஜனராய்
அயர்ப்பிலன் மறுப்பு இல்லாமல்
அலற்றுவன்-அக்ரமாக பேசி
தழுவுவன் பிராவண்யத்துடன் சம்ச்லேஷித்து
வணங்கி
முக்கரணங்கள்
வணங்குவன் அமர்ந்தே-பரோபதேசம் செய்து –
-அவன் பண்ணி அருளிய மாயையால் -அவர்கள் திருந்தாமையாலே -தாமே அனுபவத்தில் இழிகிறார்
அவதரித்து திருமேனி அழகை குணங்களை காட்ட அந்த வழியாலே -தாம் தானே மயர்வற மதி நலம் அருளப் பெற்றார்

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் –
துயக்கற்ற மதியை உடைய -சம்சய விபர்யய மதியையுடையராகையாலே
உள் -மனமும் இடமும் மேலும் -இங்கே மேலான அமரர் என்றபடி -நன்றான ஞானத்தை உடைய அமரரையும் கூட

துயக்கும் மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
துயக்கு –மனம் திரிவு -அறிவு கெடும்படி தெரியாமையைப் பண்ணக் கடவதான குண சேஷ்டிதங்களை கூடின அவதாரங்கள் -மாயைகள் –
ஆகாசத்தைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாது
அமரர் -என்கிறது இந்த்ராதிகளை –நித்ய சூரிகளை அல்ல
ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மிக்கு இருக்கச் செய்தே சத்யம் தலை எடுத்தாலும் அப்படியே
கனத்து இருக்கும் இறே அவர்கள் தங்களுக்கு -அதனாலே நல் ஞானத்து அமரர்கள்
அப்போது நம் கார்யம் நம்மால் செய்யப் போகாது -அவனே நம் கார்யத்துக் கடவன் என்று இரா- அந்தர ஷணத்திலே எதிரிடா நிற்பார்கள்
தங்கள் இருப்பிடமும் இழந்து -ஸ்திரீகளும் பிடியுண்டு எளிமைப் பட்ட அளவிலே அத்தைப் பரிஹரித்து தர வேணும் என்று இரந்து-
பின்னை இவனும் போய் நரக வதம் பண்ணி –முராசுரனையும் நரகாசுரனையும் அழித்து முராரி நரகாந்தகன் -என்ற பெயர் வாங்கி
சிறை கிடந்த ஸ்திரீகளையும் மீட்டுக் கொடுத்து போரா நிற்கச் செய்தே புழக்கடைக்கே
நின்றதொரு பூண்டைப் பிடுங்கிக் கொண்டு போர-வஜ்ரத்தைக் கொண்டு தொடந்தான் இறே
அன்றிக்கே
நல் ஞானத்து உள் அமரர் -என்கிறது நித்ய ஸூரிகளையாய்-ஜ்ஞானாதிகனான பெரிய திருவடியும் -தேவரீரையும் நாய்ச்சிமாரையும்
வஹித்தேன் நான் அன்றோ என்றால் போலே சிவியார் சொல்லும் வார்த்தையைச் சொன்னான் இறே
விண்ணுளார் பெருமான் அடிமை செய்வாரையும் -அறும்-அவனுடைய ஆச்சர்யங்கள் நம்மால் பரிச்சேதிக்கப் போமோ -அது கிடக்கிடீர் –
அவன் அனுக்ரஹத்தாலே காட்டின வடிவழகை அனுபவிப்போம் நாம் என்கிறார்
நன்கு அனுபவித்து உள்ளம் கலங்கி போகும் ஆனந்த மயக்கம் இது –
புயற்கரு நிறத்தனன் –
வர்ஷூக வளாஹகம் போலே இருக்கிற திருமேனியை உடையவன் –
மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் -என்று பிள்ளான் பணிக்கும் படி-
இவற்றாலே அனுபவிக்கப் பாரிக்கிறார் -என்று நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –

பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
பரப்பை உடைத்தான பூமியை அளக்கிற இடத்தில் -வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்தான்
இவர்கள் நன்மை தீமை பாராதே தன்னுடைய சுத்தியே இவர்களுக்காம் படி பண்ணினான்
நமக்கு சஹவாசம் சம்பாஷணம் சம்போஜனம் -யார் உடன் -மூலம் தோஷம் வரும்  -பிள்ளை லோகாச்சார்யர் அருளுவார் -அவன் சுத்தி இவர்களுக்கு வருமே –

நல்லடிப் போது -படிக்களவாக நிமிர்ந்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2–என்று ஆசைப்பட வேண்டும் படி இ றே இருப்பது
கதா புன -என்று பிரார்த்தித்து கிடக்குமது இ றே -செவ்விப்பூ சூட ஆசைப்படுவாரைப் போலே -நின் செம்மா பாத பற்பு தலை சேர்த்து ஒல்லை –

அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே
மறக்கக் கடவேன் அல்லேன் –
அக்ரமமாக பேசக் கடவேன் –
அக்ரூரர் -த்வஜம் இத்யாதி உள்ள ரேகை கொண்ட திருக்கையாலே ஸூகாடம் பரிஷச்வஜே -என்னுமா போலே கட்டிக் கொள்ளக் கடவேன்
நிர்மமனாய் திருவடிகளிலே விழக் கடவேன்
அநந்ய பிரயோஜனனாய் இப்படி செய்யக் கடவேன்

————————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் -இத்திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் முற்பட நித்ய ஸூரிகள் வரிசையைப் பெற்று -பின்னை-சம்சாரம் ஆகிற அறவைச் சிறை வெட்டி விடப் பெறுவார்கள் –என்கிறார் –
எது முன் எது பின் -பகவத் அபிப்ராயத்தால் வைகுந்தம் பெற்றவர் ஆவார் —

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
சாவாமைக்கு மருந்துக்கு ஆசைப்பட்ட -அமிர்தம் கொண்டு கடையச் சொல்லி –
தம்மைப் போலே கையும் அஞ்சலியுமாக -நினைக்கிறார்
தொழுது விழுகிறார்கள் அவர்கள் -பிரயோஜனாந்தரர்கள்
உப்புச் சாறுக்கு ஆசைப்பட்டு –
அஷோப்யன் கடலை கலக்கினார் -அடியார்களை நழுவ விடாமல் –
அமர் -பொருந்தின பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் -வாசிக கைங்கர்யம்
அமர்சுவை -சப்த அர்த்த சாரஸ்ர்யங்கள் —யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார் –திருப் பாற் கடலுள் அமிர்தம் போலே
ஆழ்வார் கவிதைக் கடலுள் அமிர்தம் போல இந்த திருவாய்மொழி
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
அழகிய சிறையா-விபரீத லஷணை-சிக்கென போகும்

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
கவிழ்ந்து -உப்புச் சாறு கிளறுவது எப்போதோ -என்று கிடக்கிற தேவ ஜாதியானது -எழுத்து வாங்கும் படியாக வாயிற்று
தாஸ்யம் -ஸ்வாமி பேரை மார்பில் எழுதிக் கொள்வது –
தோளும் தோள் மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமா போலே கடைந்த படி -குணக்கடல் உப்புக் கடலை கடைய
குணங்களுக்குத் தோற்று –தொழுது எழு -என்கிற தம் பாசுரமேயாய் விட்டது -அழகுக்குத் தோற்ற அவர்களுக்கும் என்கிறார் –

அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
சேர்ந்த பொழில்
வளப்பத்தை உடைத்தாய் சம்பத்தை உடைத்தான திரு நகரி -நல்லார் நவில் குருகூர்
-இத் திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் வாசிகமான அடிமை செய்த படியாயிற்று இது தான்
பூர்ண விஷயத்தில் வாசிகமான வ்ருத்திக்கு மேற்பட செய்யலாவது இல்லையே
தத் விப்ராசோ விபன்யவ -என்று நித்ய ஸூரிகளுக்கும் இதுவே இ றே வருத்தி
ரிக் வேதே -விப்ராசோ விபன்யவ -இருவரும் பெருமாளை -பகவத் அனுபவத்தில் இழிந்து -விப்ராசா -பேசி ஸ்தோத்ரம் பண்ணுவார் -விபன்யவ

அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
ரசகனமாய் யாயிற்று ஆயிரம் தான் இருப்பது
இத்தால் வாசிகமான அடிமை முறை என்று கார்ய புத்த்யா செய்ய வேண்டா -என்றபடி -ராக பிராப்தம்
மேலை தொண்டு உகளித்து அந்தி தொழும்-ஆசை காதல் அன்பு அவா –
அவற்றினுள் இவை பத்தும் –
விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட -என்னுமா போல அவை தன்னிலே ரசகனமாய் இருக்குமாயிற்று
இத் திருவாய் மொழி –இவற்றை அப்யசிக்க வல்லார்

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–
நித்ய ஸூ ரிகளோடு ஒத்த உச்ச்ராயத்தை உடையராய் தங்களுடைய ஜன்மம் ஆகிற விலங்கு அறப் பெறுவார்கள்
இப்பத்தை கற்ற போதே இவனை நித்ய ஸூரிகளிலே ஒருவனாக நினைப்பிடும்
சரீர விச்லேஷம் பிறந்தால் போய்ப் புகும் இத்தனை
ராஜா ஒருவனுக்கு நாடிட்டால் க்ரமத்தில் போய்ப் புகும் அத்தனை இ றே
ராஜபுத்திரன் தலையிலே முடியை வைத்து பின்னை விலங்கு வெட்டி விடுமா போலே
நித்ய ஸூரிகளில் ஒருவராம் படியான தரத்தைப் பெற்று பின்னை சம்சார நிகள விச்சேதத்தை பெறுவார்கள்
அன்றியே
அமரரோடு உயர்வில் சென்று
ஆதி வாஹிகரோடு விரஜையிலே சென்று -அதிக்ரமித்து வஹனம் பண்ணி போவார்
அறுவர் தம் பிறவி யஞ்சிறையே –ஸூஷ்ம சரீரம் விதூநனம் பெறுவார் -இப்பொழுது க்ரமம் படி -ஸ்தூல சரீரம் கீழேயே போனதே–ஜென்ம கர்மம் மே திவ்யம் -ஏவம் வோ வேத்தி தத்வதகா -த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மா மேதி–ஸ்ரீ கீதை -4-9-என்று அருளிச் செய்த அதுவே பலமாகக் கடவது
ஜன்ம கர்ம மே திவ்யம் -பத்துடை அடியவர்க்கு எளியவன் -த்யக்த்வா தேஹம் புனர் ஜன்மம் –அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–
அவதார சௌலப்ய பிரதிபாதிதமான இத் திருவாய்மொழி -ஸ்ரீ கீதாசார்யன் உடைய அருள் கொண்டு-பாடின சடகோபன் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

———————————

முதல் பாட்டில் சுலபன் என்கிறார் –
இரண்டாம் பாட்டில் கீழ் பிரஸ்துதமான சௌலப்யத்தை சபிரகாரமாக அருளிச் செய்தார்
மூன்றாம் பாட்டில் -அவனுடைய அவதார ரகஸ்யம் ஒருவருக்கும் அறிய நிலம் அல்ல என்றார்
நாலாம் பாட்டில் -அப்படிகள் ஆஸ்ரிதற்கு அறியலாம் அநாஸ்ரிதற்கு அறியப் போகாது என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படிப்பட்டவனை அவன் அருளிச் செய்த பக்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயிங்கோள் என்கிறார்
ஆறாம் பாட்டில் –ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும் ஆஸ்ரயிக்கும் பிரகாரம் இன்னது என்றும் அருளிச் செய்தார்
ஏழாம் பாட்டில் -நீங்கள் மந்த ஆயுஸ் ஸூக்களாகையாலே விளம்பிக்க ஒண்ணாது -கடுக ஆஸ்ரயிங்கோள் என்கிறார்
எட்டாம் பாட்டில் –ஆஸ்ரயிக்கவே விரோதிகள் அடங்கலும் நசிக்கும் என்கிறார்
ஒன்பதாம் பாட்டில் ப்ரஹ்ம ஈசா நாதிகளுக்கும் காரண பூதனானவான் வந்து அவதரிக்கைக்கு ஹேது அருளிச் செய்தார்
பத்தாம் பாட்டில் -இப்படி ஸூலபனானவனை த்ரிவித கரணங்களாலும் அனுபவிக்கப் பாரித்தார்
இத்தை அப்யசித்தார்க்கு பலம் சொன்னார் நிகமத்தில்

———————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

தூரஸ்தம்
சமுத்பவ சதையி–சுலபி பவந்தம் -ஐச்ச்சையி
கமலா சஹாயன் –
ஸூ லபன்
ஆஹ்யாத பக்தி
தஸ்ய சேவாம் -ச-காங்ஷய
காரண தரத்தாலும் -சடகோப முனி

————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

அநந்த சௌலப்யம்
பந்தார அர்ஹத்வாத்
அதிக தர குணம்
திவ்ய அநந்த அவதாராத்
சர்வேஷூ ஆசக்தி மத்வாத்
நத சுகமன்
ஸூ பிரபோதம் ப்ரதத்வாத்
க்யாத அபிக்யாதி  ஸூ விஷயத்தில் ருசி விதரணாத்
சர்வ கால ஆஸ்ருயத்வாத்
சர்வ சீ அங்கதாநாத்
பிரகித பததயா அநந்த சௌலப்யம்

—————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -3-

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும்
என்று உரைத்த மாறன் தன் இன் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை——–3-

——————————————————————————————

அவதாரிகை

இதில் சௌலப்யத்தை யுபதேசித்த திவ்ய ஸூகதியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
சர்வ ஸ்மாத் பரனாய் அதீந்த்ரியன் ஆனவனை ஷூத்ரரான நாங்கள் கண்டு
பஜிக்கும் படி எங்கனே என்று வெருவுகிற சம்சாரிகளைக் குறித்து
பரனானவன் தானே அதீந்த்ரியமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கிக் கொண்டு
இதர சஜாதீயனாய் சம்சாரிகளுக்கும் பஜீக்கலாம் படி
தன் கிருபையாலே ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஸூலபனான பின்பு
பஜிககத் தட்டில்லை என்கிற
பத்துடை அடியவரில் -அர்த்தத்தை
பத்துடையோர்க்கு -என்று அருளிச் செய்கிறார் என்கை –

———————————————————————————————————–

வியாக்யானம் –

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால் –

பத்துடையோர்க்கு -பக்திமான்களுக்கு
பத்துடையோர் -நிதி யுடையோர் என்னுமா போலே
ஆசா லேசா மாதரத்தையே போரப் பொலிய எண்ணி இருக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே அருளிச் செய்கிறார்
பத்துடை அடியவர் -என்றார் இ றே –
ஏவம் வித பக்தி உக்தருக்கு

என்றும் –
சர்வ காலத்திலும் –

பரன் –
யாவையும் யாவரும் தானாம் அமையுடை நாரணன் –
மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்-
என்றும் சொல்லப் படுகிற சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன்

எளியனாம் –
வாயு ஸூநோ -என்றும்
இமௌஸ்ம -இத்யாதிப் படியே -எளியனாம்
பத்துடை அடியவர்க்கு எளியவன் மத்துறு கடை வெண்ணெய் களவினில்

உரவிடை ஆப்புண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -எத்திறம்
என்னும்படி கட்டவும் அடிக்கவும் படி எளியனாம் -ஸூலபனாம் –

அது எத்தாலே என்னில் –
பிறப்பால் –
அவதாரத்தாலே
பல பிறப்பாய் ஒளி வரும் என்றத்தை நினைக்கிறது –

முத்தி தரும் –
அவதரித்த இடத்தே
பஷிக்கும்
ரஷஸ் ஸூக்கும்
மோஷத்தைக் கொடுக்கும் –
வீடாம் தெளிவரும் நிலைமையது ஒழிவிலன் -என்றத்தைப் பின் சென்ற படி –

மா நிலத்தீர் –
அவன் அவதரிக்கைக்கு ஈடான இந்த மகா பிருதிவியில்
உள்ளவர்களே –

மூண்டவன் பால் -பத்தி செய்யும்-
விதி ப்ரேரிதராய் அன்றிக்கே அத்யந்த
அபி நிவேச யுக்தராய்
பரத்வ சௌலப்யத்வாதி குண விசிஷ்டனானவன் திருவடிகளிலே
பக்தியைப் பண்ணுங்கோள்-

என்று உரைத்த-
என்று அருளிச் செய்த –
இத்தால் -நன்று என நலம் செய்து அவனிடை -என்றத்தை
அனுபாஷித்த படி –

பத்தி செய்யும்-என்று உரைத்த-மாறன் தன் இன் சொல்லால் போம் –
அவதார சௌலப்யத்தை முன்னிட்டு
ஆஸ்ரயிங்கோள் -என்று ஆழ்வார்
ஸ்ராவ்யமாக அருளிச் செய்த
இத் திருவாய் மொழியின் அனுசந்த்தாநத்தாலே
நிவ்ருத்தமாம் –

நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை-
அநாதி காலம் தீர்க்கமாய்ப் போந்த
ஜன்மம் ஆகிற குரூரமான சிறை –
அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றத்தை அனுவிதாயானம்
பண்ணின படி –
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மா மேதி சோர்ஜூந-என்னக் கடவது இ றே-

———————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: