பகவத் விஷயம் காலஷேபம் -35–பத்துடை யடியவர்க்கு எளியவன் பிரவேசம் / திருவாய்மொழி-1-3-1 . . . 1-3-5/-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பிரவேசம் –

சர்வ ஸ்மாத் பரன் என்றார் முதல் திருவாய் மொழியில் –
பரனாகையாலே பஜ நீயன் என்றார் இரண்டாம் திருவாய் மொழியில் –
பஜியுங்கோள் என்று பலகாலும் அருளிச் செய்யா நின்றீர் -இருகை முடவனை ஆனை ஏறு என்றால் அவனாலே ஏறப் போமோ –
அப்படியே சர்வேஸ்வரனாய்-அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிற அவனை இந்த ஷூத்ரனான சம்சாரி சேதனனாலே பற்றப் போமோ என்ன
அவ்வானை தானே அவ்விருகை முடவனுக்கும் ஏறலாம் படி படிந்து கொடுக்கும் அன்று ஏறத் தட்டிலையே
-அப்படியே இஸ் சம்சாரி சேதனனுக்கு பஜிக்கலாம் படி அவன் தன்னைக் கொடு வந்து தாழ விட்டு
ஸூலபனாகில் இவனுக்கு பஜிக்கத் தட்டில்லையே -என்கிறார் –

பஜ நீயத்வ -பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -ஈச்வரத்வம் கழற்ற ஒண்ணாதே -சௌலப்யம் முன்னமே அருளிச் செய்தாரே
அவாப்த சமஸ்த காமன் –நம் இடம் வருவாரோ -பற்றை இல்லமாகக் கொண்டவன் -கலப்பார் –அது அவன் கர்த்தவ்யம்
இங்கே ஈஸ்வரன் -நம்மால் பற்ற முடியுமா –இது நமது கர்த்தவ்யம்இந்த சௌலப்யம் வேறே

அவதாரம் தன்னில் வந்தால் பாக்ய ஹீனருக்கு சஜாதீய பிரதி புத்தி பண்ணி அனர்த்தப் பட்டு போகவுமாய் –
பாக்யாதிகர்க்கு -அரியன் எளியனாகப் பெற்றோமே என்று ஆஸ்ரயிக்கலாம் படி இரண்டுக்கும் பொதுவாய் இ றே இருப்பது –
சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை உபபாதித்திக் கொண்டு போந்தோம் –
அது தானே இவர்களுக்கு இத்தனை எளியானோ-என்று விடுகைக்கு உடலாயிற்று
அவ்வெளிமை தானே ஆதரிகைக்கு உடலாயிற்று உமக்கு ஒருவருக்குமே இ றே -என்று
எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச் செய்து அருளினாராம் –
என் திருமகள் சேர் மார்பனே என்னும் —இத்தை சொல்ல மேல் நாட்டில் வந்து சொல்லப் பெற்றோமே என்று பட்டர் நஞ்சீயரைக் கொண்டாடினாரே –

சில தார்மிகர் ஏரி கல்லினால் சேற்றிலே தலையை நொழுந்தி பட்டுப் போகா நிற்பார் சிலர் –விடாயர் அதிலே முழுகி விடாய் தீர்ந்து போகா நிற்பார்கள்
விளக்கை ஏற்றினால் அதிலே விட்டில் என்று சில பதார்த்தங்கள் விழுந்து முடிந்து போம் -சிலர் அதன் ஒளியாலே ஜீவியா நிற்பார்கள்
வேத நல் விளக்கு-பெரிய திருமொழி -4-3-8- இ றே
இவன் தான் ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -திருப்பாவை -5-இ றே
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு-பெருமாள் திருமொழி -10-1-இ றே
மரகத மணித்தடம் –வாசகத்தடம் போல் வருவானே –
அவன் தான் அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டதும் -பெரிய திருமொழி -4-3-8-இப்படி வந்து
அவதரித்து ஸூலபனான நிலை தன்னிலே இ றே –அன்றிய -பகைத்த –
அப்படியே சிசுபாலாதிகள் பூதனா சகட யமளார்ஜூன நாதிகளுக்கு எதிரிட்டு முடியவுமாய்
அனுகூலித்து உஜ்ஜீவிப்பார்க்கு உஜ்ஜீவிக்கவுமாய் யாயிற்று அவதாரம் தான் இருப்பது -புண்யாபுண்ய ஈஸ்வர ப்ரீதி கோபம் –அனுக்ரஹம் நிக்ரஹம் –பாஹ்ய ஹீனன்-பாக்யாதிகர் -விஹித அனுஷ்டான ஜன்ய -அனுக்ரகம்
-நிஷித்த அனுஷ்டான ஜன்மம் நிஹ்ரகம் அஜ்ஞ்ஞாத ஸூ க்ருதம்-ஏதோ புண்யம் -எனக்கும் சாஸ்திரமும் அறியாத இத்தை
ஸூ ஹ்ருதம் எனபது ஈஸ்வர அபிப்ராயத்தாலே மர்யாதா சித்த்யர்த்தம் -ஸூ ஹ்ருத இலவம் -யாத்ருச்சிகம் –
வ்யாஜீக்ருத்ய நொண்டிச் சாக்கு -அபார காருண்யத்தால் -நிர்ஹேதுகம் -இதுவே வெறும் க்ருதத்தை ஸூ ஹ்ருதம் என்ற
பெயர் வைத்து – உஜ்ஜீவிப்பிக்கிறான்-ஹரி தயை நிர்ஹேதுகம்

பலகாலும் அவனை பஜியுங்கோள் -என்னா நின்றீர் -கண்ணால் கண்டால் அல்லது பஜிக்க விரகு இல்லை
-ஆனபின்பு ஆஸ்ரயிக்கும் படி எங்கனே -என்ன –அந்யோந்ய ஆஸ்ரித தோஷம் –
இந்த்ரியங்கள் அடக்கி பக்தி யோகம் -பக்தி வந்தால் இந்த்ரியங்கள் அடங்கும் போலே
ஞானம் -தர்சனம் -பிராப்தி –அறிவு காண்கை அடைதல் -மூன்று நிலைகள் –
பர பக்தி முதலில் -மார்க்க மத்யத்தில் தான் தர்சன -சமானாகார சாஷாத்கார -பரஞான தசை
-பின்பே விரஜை தீர்த்தம் -பரம பக்தி -பஜனம் -தர்சனம் வேண்டுமே
ஆழ்வார் பேசுவது சாதன பக்தி இல்லையே –சாத்திய பக்தி -தானே இருந்து அருளுவான் -இந்த க்ரமம் இல்லையே –
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -முண்டக உபநிஷத் -என்றும் விசதே தத நந்தரம்–ஸ்ரீ கீதை -18-55-என்னும் சொல்லுகிறபடியே
சில வருத்ததோடு காட்சியாய்த் தலைக் கட்டும் சாதன பக்தியை அன்று இங்குச் சொல்லுகிறது
காண வேணும் என்னும் ஆசா லேசம் உடையாருக்கு அவன் எளியனாம் படி யாயிற்று
-சர்வாதிகன் தாழ நிற்கும் அன்று நிவாரகர் இல்லை

ஆசா லேசம் இருந்தால் போதுமே சாத்திய பக்திக்கு –லேசம் என்னது -அப்ரதிஷேதம் -தடுக்காமையே
-வைமுக்யம் இல்லாமல் ஆபிமுக்யம் காட்டுவதே-பஹூ நி மே வ்யாதீதா நீ -என்கையாலே அவதாரம் தன்னில் புரை இல்லை -இச்சை தானே யுண்டே –
இது தன்னை அவதார ரஹச்யத்திலே தானும் அருளிச் செய்தான் இ றே -ஜன்ம கர்ம ச மே திவ்யம் –என்று -என்னுடைய ஜன்மங்கள்
கர்மம் அடியாக அன்று –இச்சை வடியாக இருக்கும் -நாம் பிறவா நிற்கச் செய்தேயும் பிறவாமையும் கிடக்கும்-அப்ராக்ருத -அபிமத திவ்ய மங்கள விக்ரகம் கொண்டானே –
தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும் -அப்ராக்ருத சமஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்புதோம்-இவற்றிலே
ஒன்றை அறிந்தவர்களுக்கு பின்னை ஜன்மம் இல்லை

சர்வாதிகன் ஆசா லேசம் உடையாருக்கு -வருவானா -தாழ நிற்கும் அன்று நிவாரகர் இல்லை
அவதாரம் இந்திர ஜாலம் போலே பொய்-என்பார்களே -அவதாரம் தன்னில் புரை இல்லை –அவதார ரகஸ்யம் அருளிச் செய்தான் இறே-
சுத்த சத்வ மயத்துடன் அவதரித்து –அஜகது -இச்சையால் —போன்ற ஆறு ரகஸ்யங்கள் -வெளியிட்டு அருளினான் –
ஜன்ம கர்ம ஏக வசனம் -ஓர் அவதாரத்தில் ஒரு கர்மம் அறிந்தாலும் ஜன்மம் இல்லை -நமக்காக -என்று உண்மையாக
அறிந்தால் -தேகம் -துரந்து புனர் ஜனம் இல்லை–மறுபடியும் பிறப்பது இல்லை –-புனர் –நானும் பிறந்து-நீங்களும் பிறக்க வேண்டுமோ சொல்ல புனர் -நான் பிறந்த பின்பு என்றவாறு

நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேணுமோ -ஈரிறை யுண்டோ -என்று அவன் சதுர்த்யத்யாயத்தில் அருளிச் செய்த படிகளை உப ஜீவித்துக்
கொண்டு -ராம கிருஷ்ணாத் யவதாரங்களை பண்ணிக் கொண்டு ஸூலபனாம் -ஆனபின்பு ஆஸ்ரயணம் கூடும் ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –

அவதாரங்களை முன்னோட்டுக் கொண்டு
அவதாரங்களிலும் நீர்மைக்கு எல்லையான கிருஷ்ணாவதாரத்தில் இழிந்து
அது தன்னிலும் பரத்வத்தோடு ஒக்கச் சொல்லலான நிலைகளைக் கழித்து
நவநீத சௌர்ய நகர ஷோபத்திலே அகப்பட்டு -இள மணல் பாய்ந்து -நீர்மையில் அகப்பட்டு என்றபடி –நகர ஷோபத்தில் -கட்டுப்பட்டதில் -சொல்லப் பயந்து -ஏற்கனவே மயங்கினார் –பரத்வத்தை அனுசந்தித்தார் -தெளிந்து இருந்து பரோபதேசம் பண்ணினார் -எத்திறம் -என்று மோஹித்துக் கிடக்கிறார்

————————————————————

அவதாரிகை –

முதல்பாட்டில் எம்பெருமானுடைய சௌலப்யத்தை உபதேசிக்கப் புக்கு அவனுடைய நவநீத சௌர்ய சரித்ரத்திலே அகப்பட்டு அழுந்துகிறார்

அவள் கட்டி வைத்து அடித்தால் -ஆழ்வாரை மோகிக்கப் பண்ணி -தேவோ துர்பலன்- அஜா புத்ரம் -வெள்ளாட்டு யாகம்
-தாயாரை அழ வைக்காமல் –பழி ஓர் இடம் பாவம் ஓர் இடமா -கூரத் ஆழ்வான்
பிறந்த வாறும்-5-10- -இரண்டாவது மோகம் -அகர்மவச்யன் பிறக்க வேண்டுமோ –
கண்கள் சிவந்து -8-8- மூன்றாவது மோகம் தம்மைக் கண்டு ஆனந்தம் பட்டானே –
வாய் உலர்ந்து -கிடைக்காமல் -ஆழ்வாரைப் பெற்றதும் தன்னிறம் பெற்றானே –
தர்ம வீர்ய ஞானத்தால் தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப் போல் அன்றே அருளின பக்தியாலே உள் கலங்கிச் சோகித்து
மூவாறு மாசம் மோஹித்து வருந்தி ஏங்கித் தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர் —ஆசார்ய ஹிருதயம் -சூர்ணிகை -58-
வருந்தி -சோகம் மிக்க -தானான நிலை -பிரேமத்தால் தலை மகள் -மேலும் மிக்க -தாயார் -மேலும் சோகம் மிக்க -தோழி
பொருமா படை-1-10- -ஆனந்தத்துடன் அருளி –இங்கும் தந்நிலை மாறி பெண் நிலை எய்தி தூது -வாயும் -2-1—
ஆழ்வார் தசை உணர்ந்தால் அதுவே முக்தி அருளும் -பாவ சுத்தி கொண்டே அனுபவம் சிறக்கும் –

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

இவர் சிஷ்யர் மதுர கவி ஆழ்வாரையும் இந்த விருத்தாந்தம் கட்டுப் பட வைத்ததே –
பத்துடை -பக்தி உடைய –அத்வேஷ மாதரம் -ஆசா லேசம்
வித்தகன் -கிட்ட அரியவன் -கடைக்குறைத்தல்-பத்தி -தி குறைந்து
ஸ்ரீ தேவி -இரண்டுக்கும் நிதானம் -இரண்டாலும் உகந்து –பெறல் அரும் நம் அடிகள் –ஸ்வாமிகள்-தாதபாதர் -அப்பா திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர்
உறு -உற்று வருந்தி -கஷ்டப்பட்டு கடைந்து
உரவிடை -உரஸ் மார்பிடையே -மிடுக்கு உடைய ரிஷபம் போன்றவன் -உதரம் இடை -மூன்று அர்த்தங்கள் -இடுப்பு குறைந்ததை சப்தத்திலும் காட்டி
இணைந்து இருந்து ஏங்கிய -இதுவே உரலுக்கும் அவனுக்கும் வாசி –

பத்துடை
பத்து -பக்தி -பத்து என்று பக்தியைக் காட்டுமோ என்னில்
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் மனம் தன்னைக் கட்டி -திருச் சந்த விருத்தம் -83-என்னக் கடவது இ றே
ஆகையால் பத்து என்று பக்தியைச் சொல்லுகிறதாய்-அது தன்னிலும் பரபக்தியை அன்று இங்குச் சொல்லுகிறது -பக்தி உபக்ரமாத்ரத்தை –
உபக்கிரம மாத்ரம் என்று இத்தை நியமிப்பார் யார் -அதினுடைய சரம அவஸ்தையை காட்டினாலோ -என்னில் -அது ஒண்ணாது –
1–இப்போது இங்குச் சொல்லிக் கொண்டு போருகிற இது குண பிரகரணம் ஆகையாலும்
2–சர்வேஸ்வரனுக்கு ஒரு உத்கர்ஷம் சொல்லுகை இப்போது இவர்க்கு அபேஷிதம் அல்லாமையாலும்
3–தம்தாமை ஒழியச் செல்லாதார்க்கு ச்நேஹிக்குமது அல்லாதார்க்கும் உண்டாகையாலும்
4–மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன -என்னுமவன் ஆகையாலும் -உபக்கிரம மாதரத்தையே சொல்லிற்றாகக் கடவது
ஆசாலேசம் உடையார்க்கு தன்னைக் கொடுப்பதாக பகவத் உக்தி உண்டாய் இருந்தது இ றே –

சரம ஸ்லோகங்கள் மூன்றிலும் ஆசா லேசம் உள்ளவர்களை -சர்வ தரமான் பரித்யஜ்ய -அஹம் ஸ்மராமி -மோஷயிஷ்யாமி–மே வ்ரதம்-
உக்தி –மட்டும் இல்லை -அனுஷ்டானமும் உண்டே -கண்டேன் சீதா -தன்னையே கொடுத்து ஆலிங்கனம் செய்தாரே பெருமாள்

எதிர் சூழல் புக்கு -2-7-6–என்றும் -என்னில் முன்னம் பாரித்து -9-6-10–என்றும் விலக்காமை தேடித் திரிகிறவன் இ றே
பாணனார் திண்ணம் இருக்க -ஆச்சார்யர் சம்பந்தம் மூலம் -நாம் போக அவனுக்கு நிர்பந்தம் இல்லை முன்னம் பாரித்து-
உடை –
இந்த அப்ரதிஷேதாத்வேஷ மாத்ரத்தை கனத்த உடைமையாகச் சொல்லுகிறது –அப்ரதிஷேதம் வெறுக்காமை /அத்வேஷம் -விலக்காமை
விண்ணுளாரிலும் சீரியர் -என்று இங்கே பகவத் அனுபவம் பண்ணுவாரை நித்ய ஸூரிகளில் காட்டில் கனக்க நினைத்து இருக்கும்
பகவத் அபிப்ப்ராயத்தால் சொல்லுகிறது
இவர்கள் பக்கலில் இம்மாத்ரம் உண்டானால் பின்னை இவர்களுடைய பரத்துக்கு எல்லாம் நானே கடவன் என்று இருக்குமவன் யாயிற்று
ஐஸ்வர்யம் லோகத்தில் உடைமை -இங்கே ஆசாலேசமே உடைமை -அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -யோக ஷேமம் வஹாம் அஹம் –தானே பொறுப்பு –
இவன் ராவண பவனத்தை விட்டு ஆகாசத்திலே கிளம்பின போதே ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மீ குடி கொண்ட படி இறே அந்தரிஷத கத ஸ்ரீ மான் -என்றது
லஷ்மணா லஷ்மி சம்பன்ன -என்றது இறே இளைய பெருமாளை
இது இறே இவனுக்கு நிலை நின்ற ஐஸ்வர்யம் -இத்தைப் பற்ற –உடை -என்கிறது

பிராப்த பந்து நோக்கி காலை வைத்த ஷணமே ஸ்ரீ மான் –
சிலைக்கை வேடர் -சிங்க வேழ் குன்றமே -அகிஞ்சனன் சொல்ல வைக்க வேடர்களை வைத்து –யாத்ருச்சிக -ஸூஹ்ருதம்

யடியவர்க்கு –
இதுவும் பகவத் அபிப்ராயத்தாலே –த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம-என்று
இன்று கிட்டிற்று ஒரு குரங்கை நித்யாஸ்ரிதையான பிராட்டிக்கு அவ்வருகாக நினைத்தான் இ றே
ஒரு திருவடி திரு வநந்த ஆழ்வான் அல்ல -இவனுக்கு சேஷபூதராய் அதிசயத்தைப் பண்ணுகிறவர்கள் –
இவ்விலக்காமை உடையவர்கள் யாயிற்று
உள்ள குணத்தை அனுபவித்து இருக்குமவர் அத்தனை இறே அவர்கள் -குணம் நிறம் பெறுவது இவர்கள் பக்கலிலே இறே –
அன்று ஈன்ற கன்றை ஆதரிக்கும் ஆ போலே அன்றோ-முற்றவும் நின்றவன் அன்றோ –
பரகத அதிசய ஆதாயகத்வம் இங்கே தானே -இவர்களை அடியவர் என்னலாம் -அங்கே இல்லை
வையத்தில் வாழ்வீர்கள் அன்றோ –

எளியவன் –
அவர்கள் பாபத்தை போக்குதல் -புண்யத்தைக் கொடுத்தல் -தன்னைக் கிட்டலாம் படி இருத்தல் செய்கை யன்றிக்கே
தன்னை அவர்களுக்க் இஷ்ட விநியோஹ அர்ஹமாக்கி வைக்கும்
தன்னை ஒழிந்தவற்றைக் கொடுத்தல் –தன்னை அழித்துக் கொடுத்தல் செய்யான் –அழைத்து கொடுத்தல் செய்யான் –
சீதா பிராட்டி தானே நடந்து சென்று திருவடிக்கு முத்தாஹாரம் அளித்தாள் -சுவையன் திருவின் மணாளன் -கற்றுக் கொண்டது இவள் இடம் –
700 காதம் வந்தவனுக்கு தான் நடந்து காட்டி அருளிய நம்பெருமாள்
இமௌ ஸ்ம முநிசார்த்தூல கிங்கரௌ சமுபஸ்திதௌ-என்கிறபடியே
நான் உங்கள் அடியான் –என்னை வேண்டினபடி ஏவிக் கார்யம் கொள்ளுங்கோள் -என்று நிற்கும் —-

ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாபார்த்திகளுக்கு -போலே எளியவன் அல்லை -சாதன உபாசகர்கள் -அரியவனாகத் தானே அளிக்கிறான்
அவனை வியாவர்த்திக்கிறது –இஷ்ட விநியோகம் அத்யாபகர்களுக்கு தானே -அடியார்களுக்கு தன்னையே அழித்து தன்னையே கொடுப்பானே

பக்த்யா தவ நன்யா சக்ய அஹ்மேவம் விதோர்ஜூனா-பீஷ்மாதிகள் சொல்ல பரம் ப்ரஹ்ம பரம் தாம -என்று கனக்க கேட்டு இருந்தபடியாலே
நீ ஒருவன் பக்திக்கு எளியவன் எளியன் யாவது என் என்ன -எண்ணிலும்-சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் வரும் –
ஒருவன் கறுத்து- ஒருவன் சிவந்து இருக்கிற படி கண்டாயே -அப்படியே எனக்கு இது நிலை நின்ற ஸ்வ பாவம் என்றான் இ றே
தண்ணீர் குளிராக இருப்பதும் நெருப்பு சுடுவது போலே
பக்தி க்ரீதோ ஜனார்த்தன —-எம் தம்மை விற்கவும் பெறுவாரே –
சார்வ பௌமனான ராஜ புத்திரன் ஷாம காலத்திலே அல்ப த்ரவ்யத்துக்கு தன்னை எழுதிக் கொடுத்தால்
பின்னை தன செல்வக் கிடப்புக் காட்டி மீட்க ஒண்ணா தாப் போலே சர்வேஸ்வரனும் பக்தி நிஷ்டனுக்கு தன்னை அறவிலை செய்து கொடுத்தால்
பின்னை மேன்மை காட்டி அகல மாட்டான் -கழுத்திலே ஓலையைக் காட்டி தூது போ என்னலாம் படி தன்னைக் கையாளாக ஆக்கி வைக்கும் –
அறவிலை -சுத்த கிரய பத்ரம் எழுதிக் கொடுத்தல் –

இவ் வெளிமை உகவாதார்க்கும் பொதுவாகிறதோ என்னும் இத்தை பரிஹரிக்கிறது மேல்
பிறர்களுக்கு அரிய வித்தகன் –
பிறர்கள் ஆகிறார் -இவனைக் கொண்டு கார்யம் கொள்ளோம் என்று இருக்குமவர்கள்
ரஷணம் அவனுக்கு உணவு -உணவைப் பறித்தால் போலே -உன்னால் அல்லால் யாவராலும் -குறை வேண்டேன்

வித்தகன் –
விஸ்மய நீயன்
இங்கு விஸ்மய நீயம் என் என்னில் -யசோதாதிகளுக்கு பவ்யனான நிலை தன்னிலே பூதனா சகட யமளார்ஜூ நாதிகளுக்கு அநபிபவநீயனாய் இருக்கை –
இன்னமும் பள்ளி கொண்டு அருளா நிற்கச் செய்தே அர்ஜுனனும் துரியோதனனும் கூட வர அர்ஜுனனுக்குத் தன்னைக் கொடுத்து துரியோதனனுக்கு
பங்களத்தைக் -பதர் -உமி போலே -கொடுத்து விட்டான் இ றே -சாதனாந்தர நிஷ்டர் நிலை போலே துரியோதனன் என்கிறாரே –
நம்முடையவர்கள் எம்பெருமானையே உபாயமாக பற்றா நிற்க அல்லாதார் அசேதன க்ரியாக லாபங்களை பற்றுகிறார் போலே இறே துர்யோதனன் நிலை
ராமாவதாரத்திலும் ஹிமவான் மந்தரோ மேரு -இத்யாதி -ந சங்க்யா பரதாநுஜ -என்றானே -3
சத்ரூணாம பிரகம்யோபி லகுத்வமகமத் கபே -ராவணன் ச பரிகரனாய்க் கொண்டு எடுக்கப் புக்க விடத்தில் நெஞ்சிலே சாத்ரவத்தாலே எடுக்க மாட்டிற்று இலன்
திருவடி தனியனாய் இருக்கச் செய்தேயும் நெஞ்சில் செவ்வையாலே கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான்
இங்கன் அன்றாகில் ராவணனுக்கு கனக்க வேணும் -என்றும் திருவடிக்கு நொய்தாக வேணும் அன்று –வஸ்து ஸ்வபாவம் இருக்கும் படி யாயிற்று இது –

மலர்மகள் விரும்பும் –
இவ்விரண்டுக்கும் அடி –இவளுடைய சேர்த்தி இ றே -மகளுக்கு தாய் ஸ்வபாவம் -பரிமளம் -புஷ்பத்தில் பரிமளம் போலே -புஷ்பத்தை இருப்பிடமாக உடையளாய்-அதில் பரிமளம் தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருப்பாளாய்-
நாட்டார் பரிமளத்தை விரும்புவர்களாகில்-பரிமளம் தான் தண்ணீர் தண்ணீர் என்னப் பிறந்தவன் -அவனும் தண்ணீர் தண்ணீர் என்னப் பண்ணும் படி பரிமளம் மிக்கு பிறந்தவள் என்றுமாம் –

நம் –
உளன் சுடர் மிகு சுருதியுள் என்கிற பிரமான பிரசித்தியைப் பற்றச் சொல்லுகிறது -நாராயண அனுவாதிகளோடேசேர
ஹரீச்ச தி லஷ்மீச்ச பத்ன்யௌ-என்னக் கடவது இ றே
உளன் சுடர் மிகு சுருதியுள் என்று சுருதி வழியால் அங்கீ கரித்த லஷ்மீ சம்பந்தத்தை வெளியிடுகிறார்

அரும் பெறல் அடிகள் –
பெறுதற்கு அரிய சுவாமிகள் –

மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
பெரிய பிராட்டியார் விரும்பும் படி இருக்கை போலே காணும் சர்வாதிக வஸ்துவுக்கு லஷணம்-இதனால் அது அதனால் இது என்றுமாம் –
மகளுக்கு தாயின் ஸ்வ பாவம் இருக்குமே -பரிமளமே வடிவு கொண்ட மலர் மகள் என்றவாறு
அப்ரமேயம் ஹி தத்தேஜ -என்னக் கடவது இ றே

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு –இதுக்கு அவதாரிகை சாதிக்கிறார்
கீழ்ச் சொன்ன எளிமையை உபபாதிக்கிறார் மேல்
மந்தரத்தைப் பிடுங்கி -கடலிலே நடு நெஞ்சிலே நட்டு -நெருக்கிக் கடைந்து வெளி கொடு வெளியே தேவர்களுக்கு அமிர்தத்தை
கொடுத்து விட்ட மகா பாஹூ கிடீர் இப்போது
இடைச் சேரியிலே வந்து பிறந்து
வெண்ணெய் களவு காணப் புக்கு
கட்டுண்டு
அடியுண்டு
நின்றான் என்கிறார் –

மத்துறு கடை வெண்ணெய்-
தயிர்ச் செறிவாலே மத்தாலே நெருக்கிக் கடையப் பட்ட வெண்ணெய்
கடை வெண்ணெய் -என்றால் கால த்ரயத்தில் உள்ளதனையும் காட்டும்
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய் -என்னக் கடவது இ றே
இங்கே வர்த்தமானத்தாலே ஒரு சௌகர்யம் உண்டாகையாலே கடையா நிற்கச் செய்தே பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாது
வெந்தது கொத்தையாக வாயில் இடுமா போலே கடையப் பற்றாமல் நடுவே அள்ளி அமுது செய்யும் படியைச் சொல்லுகிறது -என்று பிள்ளான் பணிக்கும் படி
களவினில்
கடைகிற பராக்கில் நிழலிலே ஒதுங்கி சாபலத்தாலே அள்ளி அமுது செய்தான் போலே காணும்
களவினில்
களவிடையாட்டத்தில்-
உபக்ர சமயத்திலே கிடீர் அகப்பட்டது -விரலினோடு வாய் தோய்ந்த வெண்ணெய் –பிராமணர் சந்த்யாவந்தனதுக்கு ஆள்வைத்து பண்ணினால் இவளும் ஆள் வைத்து கடைவாள்
ஏரார் இடை நோவ-கண்ணன் கட்டிக் கொண்ட இடைக்கு சீர்மை உண்டே – எத்தனை யோர் போதுமாய்
சீரார் தயிர் கடைந்து -வெண்ணெய் திரண்டதனை –நாரார் உயிர் ஏற்றி நன்கு அதனை அமைய வைத்து
தஞ்சை பெரிய கோயில் சாரம் கட்டினது போலே இதுக்கும் பக்கத்து ஊரில் இருந்து சாரம் கட்டி ஏற்றினார்களாம்
ஒராதவன் போல் உறங்கி அறிவுற்று -பொய் தூக்கம் -மாயையால் சம்சாரி தூங்குவது போலே –தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
மாலையும் தானுமாக -விழும்பை பார்த்தால் சாந்து இருந்ததாம்
நெஞ்சும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய -போலே வெண்ணெய் மட்டும் போனதே –
ஹையங்க வீனம் -கடையும் பொழுது வரும் இளகிய வெண்ணெய்-கடைந்து கொண்டு இருக்கும் பொழுது வந்த வெண்ணைய் -மத்தின் சூட்டால் இளகிய
மலர் கண் -வினைத்தொகை –மலர்ந்த மலருகின்ற -மலரப் போகும் -என்றது போலே
பொத்த உரலை கவிழ்த்து -நல்ல உரல் நெல் குத்த -இது கண்ணன் ஏற -அனன்யார்ஹ சேஷத்வம் -பூதனை விஷப்பால் போலே
-கண்ணி நுண் சிறுத் தாம்பும் இவனுக்கே அதன் மேல் ஏறி -அவ்வளவு நேரம் ஆகும் இவன் ஏற -வெள்ளை -வள்ளத்தின் -பாம்பு அணை அதன் மேல் ஏறுவது எளியதே –
கதா புன -இவர்கள் பிரார்த்திக்க உரல் பெற்றதே –தித்தித்த பாலும் தடாவில் வெண்ணெயும் –-கன்னலங்கட்டி அவன் -பால் என்கோ –
அவளுக்கும் மெய்யன் இல்லை –வெண்ணெய் ஆழ்வார் இருவர் இடம் மட்டும் மெய்யன் -வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் –
-பொய் கலவாது என் மெய் கலந்தானே -இடக்கை வலக்கை -கை- பாத்ரம் கலந்து -களவுக்கு உதவியர் உடன் கலந்து –
தாமோதரா மெய் அறிவன் நானே -ஒல்லை நானும் கடையவன் -கள்ள விழியை விழித்துப் புக்கு –அசாஹய சூரன் அங்கே
–வண்டமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ –வாள் முகம் வியப்ப -செவ்வாய் துடிப்ப -ஆஸ்ரித கர ஸ்பர்சம் -வேண்டி –
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம்மில் மருவி -திருட வந்தான் -என்பர் -பேச்சு வராத குழந்தை -முறை முறை தம் குறங்கிடை இருத்தி —உந்தை யாவன் –
கடைக்கண்ணிலும் காட்ட -உரித்து வைத்து பிறந்ததே –நந்தனன் பெற்றனன் -நாங்கள் கோன் வாசுதேவன் இழந்தானே
கௌச்துப தீபம் -கொண்டு வெளிச்சம் –ஒளியா வெண்ணெய் உண்டான் —விம்மி அழுதான்
கச்வம் பால -பலாநுஜா-மண் மந்திரா சங்கயா-ஹஸ்தம் -பானைக்குள் -இல்லை -சொல்லிப் போக காத்து -காற்றில் கடியனாகி தம் அகம் புக்கான் –
உபக்ரமத்தில் பிடித்ததும் உண்டு உபசம்ஹாரத்திலும் உண்டே–திருட்டு பல நாள் -ஈட்டிய வெண்ணெய் உண்ணவே அவதார பிரயோஜனம்
சாளக்ராமம் உடைய நம்பி சாத்திப் பருகி -இவள் பார்த்துக் கொண்டே இருந்தாள் –வளையல்களையும் கொண்டு போனானே –
வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் -கண்கள் சிவந்து –வயிறு அடித்து -வெண்ணெய் பிள்ளைக்கு தாங்குமோ –

உரவிடை ஆப்புண்டு
1–உரம் -என்று மார்வு
மார்விடையிலே என்றபடி
பொன் பெயரோன் தனது உரம் பிளந்து -என்னக் கடவது இ றே
பெரிய பிராட்டியார் நெருக்க அணைக்கும் மார்வைக் கிடீர் கயிற்றாலே நெருக்கிக் கட்டக் கட்டுண்டது -மாட்டுப்பெண்ணைக் கட்டிய மாமியார்
இதற்கும் மகிழ்வானே -அவளை நெருக்கியதால் –
அன்றியே
2–மிடுக்கை உடைய ருஷபம் போலே இருக்கிறவன் கிடீர் கட்டுண்டான் –

உரலிடை ஆப்புண்டு
3–உதரவிடை ஆப்புண்டு -உதரம் -என்கிற இத்தை -உரம் என்று இடைக் குறைத்தலாய் கிடக்கிறது
தாமோதரன் என்று பிள்ளை பெற்று பேரிடும் படி இறே கட்டுண்டது
தாம் நா சைவோ தரே பத்த்வா பிரத்யபத்னாது லூகலே -என்றும்
யதி சக நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித இத்யுக்த்வாத நிஜம் கர்ம சா சகாரா குடும்பி நீ -என்றும் சொல்லுகிறபடி இறே எளியனாம் இருக்கும் படி –
அகாரத்தைம் ஆகாரத்தையும் சேர்த்து கட்டும் பகு குடும்பினி –

வரத வலித்ரயம் -உத்தம புருஷோத்தம லஷணம்-மத்தியதர பிரதம பூஷணம் -உத்தர பந்தனம் -சௌலப்ய ஸூ சகம்
நஞ்சீயர் திருத்திரை நீக்கும் பொழுது தழும்பை பார்க்க ஆசை கொண்டாரே-
பிரேமத்தாலே கட்டினாள்-தாமதத்தால் இல்லை –

தான் தாயான பரிவு தோற்ற இவனைக் களவிலே கண்டு பிடித்து தாம்பாலே ஓர் உரலோடு அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தி
துருதுக்கைத்தனம் அடித்தித் திரிந்த நீ வல்லையாகில் போய்க் காணாய் -என்று உருக்கி விட்டால் போக மாட்டாதாய் இருக்கும்
பராஸ்ய சக்திர் விவிதைவ சரூயதே –ஸ்வ பாவிக ஞான பல கிரியாச -என்று ஒதப்படுகிற வஸ்து இவளுக்கு எளியனனா படி இறே இங்கனே சொல்லலாகிறது
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேதுவான தானே –பிரதான ஷேத்ரஞ்ச பதி -இறே இப்படி கட்டுண்டு இருக்கிறான்
ப்ரஹ்மாதிகளை தன சங்கல்பத்தாலே கட்டுவது விடுவது ஆகிற இவனே இப்போது அபலை கையிலே கட்டுண்டு இருக்கிறான்
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி மாமேதி -என்கிறபடி நம்முடைய கட்டை அவிழ்க்க இறே தான் கட்டுண்டு இருக்கிறது –

ஜன்ம கர்ம மே திவ்யம்பிறந்த மாயா பாரதம் பொறுத்த மாயா -நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் –
எதோ உபாசனம் தது பலம் -மாறாடி -கட்டுண்ட கண்ணனை உபாசிக்க கட்டு விலக -நியாய சாஸ்திரம் வெட்கப் படும் படி
கருக்குழியில் புகா வண்ணம் காத்து அளிக்கும் கண்ணபிரான்

உரலோனோடு இணைந்து இருந்து
உரலுக்கு ஒரு வியாபார ஷமதை உண்டான வன்று தனக்கு ஒரு வியாபார ஷமதை உள்ளது -என்று தோற்ற இருந்தபடி
ஏங்கிய
உரலில் காட்டில் வ்யாவ்ருத்தி இத்தனையே காணும்
அழப் புக்கவாறே –வாய் வாய் -என்னுமே —தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான்
பின்னை அழ மாட்டாதே ஏங்கி இருக்கும் அத்தனை
எளிவுண்டு -எளிவந்தபடி —எழில் கொள் தாம்பு கொண்டு –எள்கிய நிலையும் –தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-
தொழுத கையும் -நன்றி -எல்லா கோபிமார்களையும் ஓன்று சேர பார்க்க முடிந்ததே -வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –சதங்கை அழகியார்
எத்திறம்
பிரானே
இது என்ன பிரகாசம் –
இன்னம் மேன்மை தரை காணலாம்
நீர்மை தரை காண ஒண்ணாதே இருந்ததீ-
உயர்வற உயர் நலம் உடையவன் என்கிற மேன்மையிலே போவேன் -என்கிறார்
ந்யாம்யனாய் இருக்கிற இருப்பிலே நியந்தாவாய் இருக்கிற இருப்பு பேசலாய் இருந்ததீ
பேசப் புக்க வேதங்களும் யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றதும் மேன்மையிலே இ றே
நிலம் அன்று என்கைக்கும் நிலம் அன்று இ றே நீர்மை
இத்தனை தாழ நில்லாமையாலே சம்சாரிகள் பக்கல் காண ஒண்ணாது
பரத்வத்தில் இந் நீர்மை இல்லை
இது என்ன பிரகாரம் -என்கிறார்
பெரியவன் தாழ்ச்சி யாகையாலே பொறுக்க மாட்டு கிறிலர்-

ப்ரஹ்ம ருத்ராதிகள் -அர்ஜுனன் வில்லால் அடிக்க அடி பட்டான் ருத்ரன் -ஜன்மத்தால் வந்த உத்கர்ஷம் அபகர்ஷம் அது
சம்சாரிகள் பிதா மாதா -விஷயத்தில் சுலபர் -இத்தனை தாழ இல்லையே -ஸூவ – பிரயோஜனம் –இவன் தாழ விடுவது நமக்காக –
நந்தன் -நாகப் பழம்-கொடுத்து மோஷம் பெற்றாள்-ஒரு கையில் சங்கு -இலச்சினை பட நடந்து -எதற்காக விம்மி அழுகிறேன் என்று தெரியாத குழந்தை –
குந்தி வசனம் அனுசந்தேயம் –
பரத்வத்தில் -திருப்பிரம்புடன் சேனை முதலியார் -நுழைய -அங்கும் சௌலப்யம் -சவிநேதயமாக -உதார வீஷணை-
லோகத்தில் தான் இந்நீர்மை -அங்கு கட்டுப்பட வில்லையே -இது என்ன பிரகாரம்
லோகத்தில் களவு காண்பாரும் கட்டுண்பாரும் உண்டே -இவன் போலே பரத்வம் -கொண்ட –இவன் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு –
கோ யாம் குண-எந்த குணவகையில் சேர்ப்பது -கூரத் தாழ்வான்

————————————————————————–

அவதாரிகை –

எத்திறம் என்று ஆறு மாசம் மோஹித்துக் கிடந்தார் என்று பிரசித்தம் இ றே -இவர் மோஹித்துக் கிடக்க -பெருமாளும் பிராட்டியும்
பள்ளி கொண்டு அருளும் இடத்தை ஸ்ரீ குஹப் பெருமாள் நோக்கிக் கொண்டு கிடந்தால் போலே -ராம சய்யா -சுருங்கி புரம் இன்றும் சேவிக்கலாம்
ஸ்ரீ மதுரகவி பிரகிருதி சஜ்ஜனங்கள் அடங்கலும் பலிதமான வ்ருஷத்தை பஷி ஜாதங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமா போலே
இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள்
மன்யே சா பரணா ஸூ ப்த சீதா அஸ்மின் சாயா நோத்தமே –பரதன் வாக்கியம் -மன்யே -நம்புகிறேன் -என்று
வழி நடந்த விடாயாலே ஆபரணங்கள் கழற்றாதே யாயிற்றுப் பள்ளி கொண்டது
தத்ர தத்ர ஹி த்ருச்யந்தி சக்தா க நக பிந்தவ –பசியருகுத் தந்தாம் ஜீவனத்தைப் பகுந்து இடுவாரைப் போலே அந்த பரத ஆழ்வானுக்கு
தான் நோக்கிக் கொண்டு கிடந்த இடத்தை காட்டுகிறான் இ றே
காடு வாழ் சாதி லஷ்மணன் பெருமையை அப்ரமேய பரதனுக்கு சொல்லுகிறான் -ராமன் பின் பிறந்தார் உண்டு என்பதற்காக
சாஷியாக போனானே லஷ்மணன் என்று பரதன் மகிழ்ந்து

அவ்விடத்தைக் கண்டவாறே –சத்ருக்நோ அனந்தர ஸ்திதி -என்னும் படி அவ்விடத்தைக் காணா மோஹித்து கிடந்தான் யாயிற்று ஸ்ரீ பரதாழ்வான்
அப்படியே மோஹித்துக் கிடந்த இவர் —சிரேண-சம்ஜ்ஞ்ஞாம் பிரதிலப்ய சைவ விசிந்த்யமாசா விசால நேத்ரா –சுந்தர ––என்கிறபடியே
அனுபவிதாக்கள் பாக்யத்தாலே காலம் உணர்த்த உணர்ந்தார் –
நல்லார் நவில் குருகூர் இ றே -சத்துக்கள் அடங்கலும் இவரைப் பற்றிப் படுகாடு கிடந்தது
உணர்ந்த அநந்தரம் -நான் இங்குச் சொல்லிற்று என் -என்று கேட்டார்
பத்துடை யடியவர்க்கு எளியவன் -என்று ப்ராசக்த அனுபிரசக்தமாக சிலவற்றைச் சொல்லா
எத்திறம் என்று மோஹித்துக் கிடந்தீர்
தப்பச் சொன்னோம் -அழித்து பிரதிஜ்ஞை பண்ண வேணும் -என்கிறார் இரண்டாம் பாட்டில்
ஆவது என் என்னில் –பரோபதேசம் பண்ணப் புக்கு தாம் அனுபவித்தார் முதல் பாட்டில்
இப்பாட்டுத் தொடங்கி பரோபதேசம் பண்ணுகிறார்
கீழே ப்ரஸ்துதமான சௌலப்யத்தை சப்ரகாரமாக -பல குணங்களையும் ஒரு சேர -அருளிச் செய்கிறார் இதில் –

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

எளிவரும் இயல்வினன்
நிலை வரம்பில பல பிறப்பாய் -நிலையும் இல்லை -ஏற்றத் தாழ்வு பாராமல் -வரம்பும் இல்லை –
முழு நலம் முதலில கேடில-முழு நலம் -முதலும் இல்லாமல் தொடக்கமும் இல்லாமல்
ஒளி வரும் முழு நலம்  – இல்லாமல் -ஆனந்தம் -மேலே மேலே ஒளிர்ந்து -ஐஸ்வர்யம் -ஔஜ்வல்யம் மிகுந்த திருவவதாரங்கள்
வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் -மோஷ ப்ரதன்
முழுவதும் இறையோன் –
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே-உபகார சீலம் -குளிர்ந்த கிருபையுடன் சமைந்து –
அடியார்க்கு மெய்யனாகும்-பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு
தப்பச் செய்தோம் தப்பச் சொன்னோம்

எளிவரும் இயல்வினன் –
எளிமையை இயல்வாக -ஸ்வ பாவமாக உடையவன் –வந்தேறி இல்லை –
ச்நேஹிகளுக்கு ச்நேஹியாய் இருக்கும் என்னுமிது குற்றம் அன்றோ
எல்லார்க்கும் காதாசித்கமாக எளிமை கூடும் –இவனுக்கு எளிமை ஸ்வரூபம் என்கிறார் -நிலை வரம்பில -நிலை இல -வரம்பில-
நிலை இல -இன்ன அவதாரம் —வரம்பில–இன்ன சேஷ்டிதம்-என்று இல்லை எனபது பூர்வாச்சார்யர்கள் நிர்வாஹம்
பட்டர் -ஈவிரண்டையும் நிலை இல்லாமையிலே கொண்டு -இனி வரம்பு இல்லாமை யாவது –
அவதரித்து எளியனாய் நின்று நிலை தன்னிலே பரத்வம் தோற்ற நிற்கிலும் நிற்கும் என்று
சாரத்திய வேஷத்தோடு தாழ நிற்கச் செய்தே விஸ்வ ரூபத்தைக் காட்டியும்
தான் புத்ராத்ரமாக போகா நிற்கச் செய்தே –பிண விருந்து இட்ட -கண்டா கர்ணனுக்கு மோஷத்தைக் கொடுத்தும்
ஏழு திரு நஷத்த்ரத்திலே கோவர்த்தன கிரியை தரித்துக் கொண்டு நின்றும் செய்தவை
இத்தால் சொல்லிற்று ஆயிற்று -ஒன்றிலும் ஒரு நியதி இல்லை –
ரஷணத்துக்கு உறுப்பாம் அத்தனையே வேண்டுவது -ஏதேனுமாக வமையும் இவனுக்கு என்கை –

பல பிறப்பாய் –
தெளிவுடைய தான் சொல்லும் போது –பஹூ நி –18-55-என்னும்
யதாபூதவாதியான வேதம் –பஹூதா விஜாயதே -என்னும்
அவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லுவார் –பல பிறப்பு -என்பார்கள் — வேத்ய -வேத-வைதிக உபதேசம் மூன்றும்
பிறப்பாய் –
பரார்த்தமாக தாழ நின்றோம் என்று தன் பக்கலிலே புரை இன்றிக்கே இருக்கை -குறை இல்லாமல் -பரத்வ கந்தம் இல்லாமல் என்றுமாம் –
ஆத்மானம் மானுஷம் மன்யே -தசரதாத்மாஜகம் ராமம் -என்றும்
ந அஹம் தேவ– ந கந்தர்வ –அஹம் வோ பாந்தவோ ஜாத -என்றும் –
பாசி தூர்த்த பாற்மகட்க்காக –மானம் இலா பன்றியாம் -ஈஸ்வர அபிமானம் இல்லாத –

ஒளி வரு முழு நலம் –
அபஹதபாப்மத்வாதிகள் ஜீவாத்மாவுக்கும் உண்டு இ றே
இங்கனே இருக்கச் செய்தே ஜன்ம நிபந்தனமான திரோதானம் பிறவா நின்றது இறே ஸ்வரூபத்துக்கு –
இவனுக்கோ என்றால் –பிறக்க பிறக்க ஒளி மிகும் படியாக –பல பிறப்பாய் ஒளி வரும் –
முழு நலம் -ஞானானந்த –கட்டடங்க ஞானம் கட்டடங்க ஆனந்தம் அவதாரத்தில் வரம்பு இல்லாமல் –

அவனுக்கு ஜன்மத்தால் வரும் விகாராதிகள் உண்டு
இவன் தன்னைத் தாழ விட்டு பிறக்கப் பிறக்க கல்யாண குணங்கள் புகர் பெற்று வாரா நிற்கும்
ச வு ஸ்ரேயான் பவதி ஜாயமான –கர்ம நிபந்தன ஜன்மமாகில் இ றே பிறக்கப் பிறக்க புகர் அழிவது
அனுக்ரஹம் அடியாக வருகிற ஜன்மம் ஆகையாலே புகர் பெற்று வாரா நிற்கும் –ச ஏவ ஸ்ரேயான் -என்றபடி –
ச உ ஸ்ரேயான் உகாரம் ஏவ காரம் -ஸ்தான பிரமாணம் உகாரம் ஏவ காரம் அங்கும் அர்த்தம் உண்டே -அவன் மட்டுமே உயர்கிறான் பிறக்க பிறக்க -என்றபடி –
ஆத்மாவுக்கு ஜன்மத்தால் வரும் விகாராதிகள் உண்டு -சரீரம் ஸ்வரூபேண விகாரம் ஆத்மாவுக்கு ஸ்வாபேண விகாரம் உண்டே

அக் குணங்கள் தான் இருக்கும் படி என் என்னில்
முதலில கேடில –
ஒரு நாள் வரையிலே தோன்றி ஒரு நாள் வரையிலே முடியுமவை யன்றே -சூர்யன் போல்வாருக்கு தான் இது
–ஸ்வரூப அந்தர்கதமாய் உள்ளன -ஸ்வரூப அனுபந்தி என்றபடி –

வீடாம் தெளிதரு -நிலைமையது ஒழிவிலன் -அது -மோஷ ப்ரதத்வம்
இக் குணம் ஒளி வரும் முழு நலம் -என்ற இதில் புகாதோ என்னில் -மோஷ பிரதத்வமும் தனியே சொல்ல வேண்டுவது
ஒரு குணம் ஆகையாலே சொல்லுகிறார் –அவதாரத்துக்கு பிரயோஜனம் இதுவே இ றே
தெளி தரும் பரமபதம் அது -இருள் தரும் மா ஞாலம் இது -ஜகத் உத்பவம் ஸ்திதி பிரணாச –சம்சார விமோசன -ஆளவந்தார்
அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே –ஆதி -சப்தம் –வினத விவத பூத ரஷைக தீஷே -ரஷிக்குக்கை தீஷை யாவது மோஷ ப்ரதத்வம் –
யதோ வா ஜாயந்தே –ஜீவந்தே – பிரயந்தே -சொல்லி –அபி சம்விதந்தி -மோஷ ப்ரதம் தனியாக உபநிஷத் –
அமலன் ஆதி பிரான் -முனி வாகன போகம் -குற்றம் அற்றவன் -தன்னை அண்டியவர்கள் குற்றம் போக்குபவன் –மோஷ ப்ரதன் -என்றவாறு –

வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் –
மோஷம் ஆகிற தெளிவு -பரமபதம் -அத்தைத் தரும் ஸ்வ பாவம் என்றும் ஒத்து இருக்குமவன்
அவன் இங்கே வந்து அவதரிக்க்கிலும் சோக மோஹங்களை பண்ணும் இவ்விடம்
இவன் அங்குச் செல்லிலும் தெளிவைப் பண்ணும் அவ்விடம் தெளி விசும்பு -என்னக் கடவது இ றே –

முழுவதும் ஒழிவிலன் –
கீழ்ச் சொன்ன இரண்டையும் கூட்டிச் சொல்கிறார் –
இரண்டையும் –முழு நலம் -/ வீடாம் தெளி தரு நிலைமை -சமஸ்த கல்யாண குணாத்மகன் –மோஷ ப்ரதத்வம்

இறையோன் –
மோஷ பரதத்வம் ஈஸ்வரனுக்கே உள்ளது ஓன்று இ றே
அவதரிக்கச் செய்தே ஈச்வரத்வத்தில் குறையாதே நிற்கை –அஜோபிசன்ஆமையான கேசனே -தன்மை மாறாதே –

அளிவரும் அருளினோடு –
குளிர்ந்த பக்வமான அருளோடு -நிர் ஹேதுகமான அருளோடு
அருளாலே ஏற்படும் அருள் –குளிர்ந்த கிருபை-கிருபையால் வரும் கிருபை -அர்த்தாந்தரம் – -இரண்டும் -நிர்ஹேதுகமாக அருள் என்றவாறு -சஹேதுகம் என்றால் வெப்பம்
முளைத்து எழுந்த திங்கள் தானாய் -ஞானத்துக்கு திருஷ்டாந்தம் -வேதம் போலே சூரியன் சொல்லாமல் –

அகத்தனன் புறத்தனன் அமைந்தே –
அகத்தனன் –
ஆஸ்ரிதற்கு கழுத்திலே ஓலை கட்டி தூது போ என்னலாம் படி இருக்கும் –
புறத்தனன்
அநாஸ்ரிதர்க்கு அந்நிலை தன்னிலே -பாண்டவ தூதனாக போன நிலையிலே கிட்ட ஒண்ணாத படியாய் இருக்கும்
தாமோதர நாராயண பெருமாள் -தாமோதரனாக சௌலப்யம் காட்டும் பொழுதே பரத்வம் -ஆசனம் இட -முடி ககனத்துற-பாண்டிய தூதன்
அமைந்தே
இப்படி சமைந்து —
இறையோன் -அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனனாம் அமைந்தே- முதலில கேடிலவாம் ஒளி வரு முழு நலம் வீடாம்
தெளிதரு நிலைமையது முழுவதும் ஒழிவிலனாய் நிலை வரம்பில பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -என்று அந்வயம்-

————————————————————————–

அவதாரிகை –

எளியன் என்றார்
எளிமையை சப்ரகாரமாக அருளிச் செய்தார்
இவனுடைய அவதார ரகஸ்யம் ஒருவர்க்கும் நிலம் அல்ல கிடீர் என்கிறார் இதில்

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

அமைவுடை யறநெறி-தர்ம மார்க்கம் –
முழுவதும் உயர்வற வுயர்ந்து -மிக உயர்ந்த தர்மங்களில் -மிகவும் உயர்ந்த
அமைவுடை முதல் கெடல் -அத்வாரக சிருஷ்டியும் சம்ஹாரமும் –ஓடிவிடை -இடையில் ஒடிவு -அவாந்தர பிரளயம் -பிராக்ருத -பிரளயம் -பிராக்ருத சிருஷ்டி –
யறநில மதுவாம் -அதுவே அவர்களுக்கு அற நிலம் தர்ம ஷேத்ரம் –அதுவாம்- அவர்களுக்கு வேலை என்றபடி
அமையுடைய யமரரும் -இப்படி அமைத்த தேவர்கள் –
யாவரும் யாவையும் தானாம் அமைவுடை நாரணன் -அனைத்தும் சரீரமாயும் பிரகாரமாயும் கொண்டவன்
மாயையை அறிபவர் யாரே-அவதார ஆச்சர்யம் ஒருவருக்கும் அறியலாகாது –

அமைவுடை -அமைந்து -பொருந்தி இருத்தல் -பலத்துடன் சேர்ந்து
யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து -மிக உயர்ந்த
அமைவுடை-பிரம்மா ருத்ரன்
முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம் -இடை ஒடிவு அவான்தார சம்ஹாரம்
அமையுடைய -சிருஷ்டி இத்யாதிகள் தொழில் கள் உடைய
யமரரும் யாவரும் யாவையும் தானாம் -தான் என்பதில் எல்லாம் என்றவாறு –
அமைவுடை -அவன் அஹம் என்றால் அனைவரும்
நாரணன் மாயையை அறிபவர் யாரே-அவதார ஆச்சார்யம் யார் அறிவார்

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
ஒரு தர்மத்தை அனுஷ்டியா நிற்கச் செய்தே -இப்போதே பலம் பெறாதே ஒழியிலும் ஒழியும் –
இடையிலே சில விக்னங்கள் வரிலும் வரும்
அங்கன் அன்றிக்கே -சக்ரவர்த்தி நாலு ஆஹூதி பண்ணி நாலு ரத்னத்தை எடுத்துக் கொண்டால் போலே பலத்தோடு சந்திப்பக் கடவ
தர்ம மார்க்கம் எல்லா வற்றாலும்
உயர்வற உயர் நலம் உடையவன் -என்று சர்வேஸ்வரன் குணங்களால் உயர்ந்து இருக்குமா போலே -இதுக்கு இவனுக்கு அவ்வருகு
ஒருவரும் இல்லை -என்றபடி சமைந்து இருக்கை –

அவிலம்பிய பல பரத்வம் –அமைவுடை -1-கர்ம-2- கர்த்ரு -3-சாதனா வைகல்யத்தால் பலம் கிட்டாமல் போகலாம் –1-ஜன்மாந்தரத்தால்/
/2-திரிபுர விச்சேதம்-மூன்று தலை முறை -தொடங்காமல் இருக்க வேண்டுமே
வேதம் -மூன்று தலை முறை அத்யயனம் செய்யா விடில் துர்ப்ராமணன் -சர்வ கர்மம் செய்ய யோக்யதை வராதே
3-சாஸ்திர கிரமத்தால் அனுஷ்டியாது ஒழிகை அடுத்து –
1-யஜ்ஞம்–2- தானம்–3- தபஸ் மூன்று –1-ஜ்யோதிஷ்தம் /2-பூ கோ தானம்/3-தபஸ் சந்தா-யுக கோடி சகஸ்ராணி விஷ்ணும் ஆராதனம் செய்து
மகா தேவன் தன தலையை அறுத்து ஆஹூதி கொடுத்து சம்ஹார கடவுள் -அமைவுடை இவ்வாறு

அமைவுடை முதல் கெடல் ஓடிவு -இடை
பிரம்மா ஜகத் சிருஷ்டி பண்ணினால் -சர்வேஸ்வரனோ என்று சங்கிக்கும் படி இருக்கை
இப்படி சமைவை உடைத்தான சிருஷ்டி என்ன -அப்படியே இருந்துள்ள சம்ஹாரம் என்ன -இடை ஒடிவு என்ன
இடை இடையிலே நடுவு -ஒடிவு -சம்ஹாரம் -அவாந்தர சம்ஹாரம் -என்றபடி –

யறநில மதுவாம் -அமையுடைய யமரரும்-
இவை தங்களுக்கு நிலையிட்டுக் கொடுத்த சர்வேஸ்வரனையும் மறுத்து -மறுபடியும் -கேள்வி கொள்ள வேண்டாத படி -ஏக சந்தாக்ராஹி –
மிகவும் விதேயாம் படி சமைந்த ப்ரஹ்மாதிகளும்-

யாவரும் யாவையும்
சேதனங்களும் அசேனங்களும்

தானாம் அமைவுடை நாரணன்
சேதன அசேதனங்கள் எல்லாம் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அன்வயிக்கும் படியான சமவை யுடையவனாகையாலே
நாராயணன் -என்னும் திரு நாமத்தை உடையவனுடைய –
தேவரும் யாவரும் யாவையும் -தானாம் உள்ளே சேருமே

மாயையை அறிபவர் யாரே
இவனுடைய அவதார ரகஸ்யம் ஒருவருக்கும் அறிய நிலம் அல்ல -என்கிறார்
பிரகாரியான தான் பிரகாரமான வச்துவிலே -வஸூ தேவர் -சக்கரவர்த்தி போல்வார் -ஓன்று – என் மகன்- என்று
இவற்றுக்கு அபிமானியாக நிர்வாக கத்வேன-அபிமாநிக்கும் படி வந்து பிறந்த இவ்வாச்சர்யம் –ஒருவருக்கும் நிலம் அல்ல -என்கிறார் –
நின்னையே மகனாக பிறப் பெறுவேன் ஏழ் பிறப்பும் -தயரதற்கு மகன் -சதுர்த்தி வியக்தம் – -அகாரத்தில் லுப்த சதுர்த்தி

தானாம் அமைவுடை நாரணன் –
ஒருவன் ஒருவனை உனக்கு ஜீவனம் என்ன வேணும் என்றால் தன் புத்ராதிகளையும் கூட்டிக் கொண்டு எனக்கு
கல நெல்லு வேணும் என்னா நின்றான் இ றே-
அப்படியே இவை அடங்கலும் தன் அஹம் சப்தத்துக்கு உள்ளே அடங்கி தான் இவற்றுக்கு அபிமானியாய்-நாரங்களுக்கு அயனம் – இருக்கும் படியைச் சொல்லுகிறது

அறிபவர் யாரே –
1-நித்ய ஸூ ரிகள் பரத்வ அனுபவம் பண்ணுகையால் அறியார்கள்
2-சம்சாரிகள் நாஸ்திகர்கள் ஆகையாலே அறியார்கள்
3-ப்ரஹ்மாதிகள் தாம்தாம் அறிவாலே அறிய இருக்கிறார்கள் ஆகையால் அறியார்கள்
4-மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் மோஹித்துக் கிடப்பார்கள்
5-ச்வதஸ் சர்வஜ்ஞனான தானும் –ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்னுமாகையாலே ஒருவருக்கும் நிலம் அல்ல என்கிறார்

————————————————————————–

அவதாரிகை –

அப்படி இருக்கிற அவதார சௌலப்யம் ஒருவருக்கும் அறிய நிலம் அன்றோ என்னில் –ஆஸ்ரிதற்கு அத்யந்த ஸூலபனாய்
அநாஸ்ரிதற்கு அத்யந்த துர்லபனாய் இருக்கும் -என்கிறார்
யவன் ராமனை பார்க்க வில்லையோ- எவனை ராமன் பார்க்க வில்லையோ —ஞானாதிகன் -ஞான ஹீனையும் இங்கே சொல்கிறது —

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான் -ப்ரஹ்மாதிகள்- கூட
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான் -வேடன் வேடுவச்சி யாரும் கூட
ததிபாண்டன் இங்கு கண்ணன் இல்லை சொல்லி பானைக்கும் சேர்ந்து மோஷம் பெற்றானே
சுவரத்துடன் சொல்லி -வாசி உணர
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான் -ஆஸ்திக கோஷ்டி சொல்வது
பேருமோர் உருவமும் இலது
உளதில்லை இலதில்லை–நாஸ்திக கோஷ்டி
பிணக்கே -தேற்று ஏகாரம் -பிரிநிலை ஏகாரம் -இரண்டு பொருள் களிலும்

அவதாரங்களில் அசங்க்யேயமான -நித்ய விவாதம்
விஹ்ரக -திருநாமங்கள் -நின்றது இருப்பது -தெற்கு -வடக்கு -சுத்தல் சாளக்ராமம் -பல பலவாக உண்டே -பிற -பல ஆயிரம்
எம்பெருமான் -மூன்று தடைவை -எனக்கு ஸ்வாமி- தெரிந்து கொள்ள முடியாதவன் –இதனாலே -எனக்கு ஸ்வாமி
எளியவரும் அறியும் படி -இதனாலும் எனக்கு ஸ்வாமி –
அநாஸ்ரிதர்கள்–ப்ரஹ்மாதிகள் ஆக இருந்தாலும் -இப்படிப் பட்டவன் என்று அறியும் படியும்
-ஆஸ்ரிதர்கள் -எளியவராக இருந்தாலும் அறியும் படியும் -துர்ஜ்ஞ்ஞேயன் என்று அறியும் படி -அறிவுக்கு அப்பால் பட்டவன் என்று அறியும் படி -என்றபடி
ஓர் நிலைமையன் ஓர் விவஸ்திதன் ஸ்வ பாவன் என்று
என்னை அடிமை கொண்ட நாதன் -இலது இல்லை இல்லையே இருப்பது இல்லை -உண்டு
உபகாரங்களால் உண்டான உகப்பாலே தனித் தனியே எம்பெருமான் என்கிறார் –

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் -எத்தனையேனும் அதிசய ஜ்ஞானராய் இருக்குமவர்களே யாகிலும் -ஸ்வ யத்னத்தாலே காணும் அன்று
இன்னபடிப்பட்டதொரு ஸ்வ பாவத்தை உடையவன் -என்று அறிய ஒண்ணாத என் ஸ்வாமி யானவன்

யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
யாரும் -இந்த யச் சப்தம் தாழ்ச்சிக்கு எல்லையில் நிற்கிறது -ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களால் ஒரு அளவில்லை யாகிலும்
தானே காட்டக் காணுமவர்களுக்கு தன் படிகள் எல்லாம் அறியலாய் இருக்கும்
எங்கே கண்டோம் என்னில் -ஒரு குரங்கு வேடச்சி இடைச்சி -யசோதா -சிந்தயந்தி –இவர்களுக்கு எளியவனாய் இருக்கக் கண்டோம் இ றே
மகன் ஒருவருக்கு அல்லாத மா மேனி மாயன் –வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே -அறிய முடியாது என்று அறிவித்தானே
எம்பெருமான் –
ஆஸ்ரிதர்க்கு எளியனாய் -அநாஸ்ரிதற்கு அரியனான என் நாயன் நிலை இருந்தபடி என் என்று எழுதிக் கொடுக்கிறார்
நமோ நமோ வாங்மநஸாதிபூமயே நமோ நமோ வாங்மநசைகபூமயே –ஸ்தோத்ர ரத்னம் -என்றால் போலே-

பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
அனுபவிதாக்களுக்கு இழிந்த இடம் எல்லாம் துறையாம்படி அநேகம் திரு நாமங்களை உடையனாய் இருக்கை –
குணத்துக்கு வாசகமாயும் ஸ்வரூபத்துக்கு வாசகமாயும் வருமவற்றுக்கு ஓர் எல்லை இல்லை இ றே
தேவோ நாம சஹஸ்ரவான் –-என்கிறபடியே –மா மாயன் -மாதவன் வைகுந்தன் தொடங்கி-பரத்வ-சௌலப்ய ஸ்ரீ யபதித்வ வெவ்வேற சகஸ்ர நாமங்கள்
பிறபலவுடைய-
அந்த நாமத்வாரா காணும் அநேகம் திருமேனிகளை உடையனாய் இருக்கை
பிற -என்ன திருமேனியைக் காட்டுமோ என்னில் -நாம ரூபஞ்ச பூதா நாம் -என்றும்
நாம ரூபஞ்சாநாம் பூதாநாம் –நாம ரூபே வ்யாக்ரவாணி -என்று நாமத்தோடு சேர ரூபத்தையும் சொல்லக் கடவது
அவ்வளவே யல்ல -இவர் தாமும் இத்தை அனுபாஷிக்கிற இடத்தில் –பேரும் ஓர் உருவமும் –என்று அருளிச் செய்து வைத்தார்

பேருமோர் உருவமும்
இவற்றில் ஒரு திரு நாமமும் ஒரு விக்ரஹமும்

உளதில்லை-
அநாஸ்ரிதற்கு ஸ்தூல பிரதிபத்தியும் -எங்கும் வியாபித்த அவனை -அரியதாய் இருக்கும்

இலதில்லை –
ஆஸ்ரிதற்கு எல்லாம் காண்கையாலே இலது இல்லையே

பிணக்கே —
ஆஸ்ரிதர் எல்லாம் காண்கையாலே மங்களா சாசனம் பண்ணி நிற்பார்கள்
அநாஸ்ரிதர் இதை இல்லை என்று இருக்கையாலே முதலிலே கிட்டார்கள்
இரண்டுக்கும் நடுவே வஸ்து நித்யமாகப் பெற்றோமே என்று தாம் இனியராகிறார்
அன்றியே
பேரும் ஒரு உருவமும் உளது
திருநாமமும் -திரு நாமத்துக்கு வாச்யமான திருமேனியும் நித்யம்
இலது இல்லை -இல்லை பிணக்கே –
இவ்விடையாட்டத்தில் விவாதம் வேண்டா என்கிறார் –

————————————————————————–

அவதாரிகை –

பலகாலும் பஜியுங்கோள் என்னா நின்றீர் -பஜன உபாயம்
இருக்கும் படியை அருளிச் செய்யீர் -என்ன
இனி நான் உபதேசிக்க வேணுமோ –
அவன் தான் ஸ்ரீ கீதையிலே அருளிச் செய்த பக்தி மார்க்கத்தாலே அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்றார் –

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

ஸ்ரீ கீதாச்சார்யன் அருளிச் செய்த படி
பிணக்கற வறுவகைச் சமயமும்-சாக்யாதி -ஆறு வகை -17-வகைகளை
லோகாயுதன் ஆருகத்தன் பௌத்யன் -நையாகிய வைசேஷியன் -சாணக்யன் பாசுபத – ஆறு மத அறுத்து
நெறியுள்ளி யுரைத்த -வேத மார்க்கத்தை ஆராய்ந்து அருளிச் செய்த ஸ்ரீ கீதோ உபநிஷத்
கணக்கற நலத்தனன் -ஔதார்யம் -ஆஸ்ரித வாத்சல்யாதி -அர்ஜுனனை வியாஜ்யமாகக் கொண்டு நமக்கு
அந்தமில் -முடிவில்லாத
ஆதியம் பகவன் -முதல்- அதனால் நித்ய -ஹேய பிரதி படனான -கல்யாண ரூபமான ஞான சக்த்யாதி குண விசிஷ்டன் பகாவன் சிதைந்து பகவன்
வணக்குடைத் தவ நெறி -பக்தி -பிரபத்தி என்றுமாம் -நமஸ்யாதிகளை உடைய -மன்மனா பவ –மாம் நமஸ் குரு-
வழி நின்று-
புறநெறி -அல்லாத வலிகள் -அல்வழக்கு -நான்யப்பந்தாநகா
களை கட்டு
வவனுடை உணர்வு கொண்டு -பக்தி ரூபாபன்ன ஞானத்தைக் கொண்டு
உணர்ந்தே -தர்சித்து -நினைவில் கொண்டு -பர பக்தி பர ஞானம் பரம பக்தி
உணக்குமின் பசையற -வாசனா ருசிகளை விட்டு -உலர்த்தி விட்டு -அவனையே பற்றுமின் –

பிணக்கற வறுவகைச் சமயமும் –
வைதிக சமயத்துக்கும் -பாஹ்ய ஷட் சமயங்களுக்கும் தன்னில் தான் உண்டான பிணக்கு அறும்படியாக

நெறியுள்ளி யுரைத்த
தான் சொல்லிற்று அடைய வேதார்த்தமாக இருக்கச் செய்தே தந்தாமுக்கு என்ன ஓர் அர்த்தம் போதியாதார் -போதம் இல்லாதாவர்
ஆராய்ந்து சொல்லுமா போலே விசாரித்து அருளிச் செய்தான் -விவஸ்வான் -பரம்பரா ப்ராப்தம் -தான் சொல்வதற்கு பிரமாணம் சொல்லி –
அதுக்கு நினைவு என் என்னில் அஹ்ருதயமாக சொல்லிலும் நன்று
சடக்கெனச் சொன்னால் -வாய் வந்த படி சொன்னான் நிரூபியாதே -என்பார்கள் என்று ஆராய்ந்து சொன்னானாக சொன்னபடி –

கணக்கற நலத்தனன் –
எல்லையில்லாத குணத்தை உடையவன் -என்னுதல் -எல்லையில்லாத ச்நேஹத்தை உடையவன் என்னுதல் –
உயர் நலம் -குணம் -உணர் முழு நலம் -மதி நலம் -அருளினான் -சிநேகம் -குணம் –பக்தி ரூபாபன்ன ஞானம் சிநேகம் -அன்பு –
ஆர் இரக்கச் செய்தான் –
தன் வாத்சல்யத்தால் அருளிச் செய்தான் அத்தனை இறே

வாத்சல்யத்தாலே சொல்லிற்று எல்லாம் அர்த்தமாம் அத்தனையோ என்னில்
அந்தமில் ஆதி –
ஆப்த தமன் -யதார்த்த தர்சனம் -காண்பரே -யதார்த்த கதனம் -உள்ளபடி உள்ளத்தை கண்டு உள்ளபடி சொல்வாரே –
எல்லாருக்கும் உத்பத்தி விநாசங்களால் இறே ஜ்ஞான சங்கோசம் பிறப்பது
புத்திர வாத்சல்யத்தால் கைகேயி திருதாத்ர்ஷ்டன் போலே இல்லையே –
இவனுக்கு அவை இல்லாமையாலே அகர்ம வச்யன் -என்கிறது –

யம் பகவன்
ஜ்ஞானாதிகளால் அல்பம் உத்கர்ஷம் உடையவன் பக்கலிலே பகவச் சப்தம் வர்த்தியா நின்றது இறே –
அந்யத்ர ஹ்யுபசாரத -பகவச் சப்தம் முக்கியமாக வசிப்பது -வாச்யத்தைச் சொல்வது -இவன் பக்கலிலே -அல்லாதார் பக்கலிலே ஔபசாரிகம்

அம் பகவன் வணக்குடைத் தவ நெறி வழி நின்று –
நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா –ஸ்ரீ கீதை -9-14-என்று பக்தி சரீரத்திலே நின்று அருளிச் செய்தான் இறே
அங்கனா பர்ஷ்வங்கம் போலே போக ரூபமாய் இறே இது இருப்பது –
அம் பகவன் வணக்குடைத் தவ நெறி -குணவத் விஷயம் ஆகையாலே -பகவான் இடம் செய்யப் படும் பக்தி பரம போக்யமாக இருக்குமே –

வணக்குடைத் தவ நெறி வழி நின்று –
வணக்கத்தை உடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நின்று
பக்தி சரீரத்திலே -சொல்லும் சமயத்தில் –மன் மநாபவ மத் பக்தி மத் யாஜி மாம் நமஸ்குரு-ஸ்ரீ கீதை -9-34- என்கையாலே –வணக்குடை -என்கிறது –
தபஸ் -சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று -பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே
யஸ் சர்வஜ்ஞய சர்வ வித் -யஸ்ய ஜ்ஞானமயம் தப -என்கிற நியாயத்தாலே என்னுதல்
இவனுடைய ப்ரேம மாதரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் பகவத் அபிப்ப்ராயத்தாலே யாதல் –
சாதன அவஸ்தை -அங்குராவச்த்தை -முளை விடும் பொழுதே பொழுதே
சாத்ய-அவஸ்தை -ச்வரசம் -தானே அர்த்தம் ஆசா லேசம் முன்பே பார்த்தோம்
நம-பிரபத்தி -சரணம் -த்ரௌபத்யா-சஹித -நமஸ்தம் குரு -சரணாகதியே நமஸ்காரம் -என்றவாறு

புறநெறி களை கட்டு –
புற நெறி யாகிற களையைக் கடிந்து -பறித்து
கட்டு -களைதல்
பக்தி விஷயமான போது -பலாந்தரத்திலே போய் விலக்கடிகளைத் தள்ளி -என்கிறதாகிறது
பிரபத்தி விஷயமான போது இதர சாதனங்களைத் தள்ளி -என்கிறது –

உணக்குமின் பசையற –
ரச வர்ஜம்-ஸ்ரீ கீதை- என்கிறபடியே -பாஹ்ய விஷய பிராவண்யத்தை ருசி வாசனைகளோடு விடுங்கோள் -பிரபத்தி -சாதனாந்தரங்களை விடுதல்
நிராகாராம் -பொருளில் நின்றும் விலகி -அனுபவம் கொடுக்காமல் இருக்க இருக்க -பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே -ஒட்டிக் கொண்டவை போகும் –

இது எல்லாம் என் கொண்டு தான் -என்னில்
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே-
1–தத் விஷய ஜ்ஞானத்தைக் கொண்டு -என்னுதல் -ததாமி புத்தி யோகம்-பக்தி பரமான –
2–தத் உக்த ஜ்ஞானத்தைக் கொண்டு என்னுதல் –பிரபத்தி பரமான-
பக்தி மார்க்கத்தைக் கொண்டு என்னுதல்
அவன் அருளிச் செய்த சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று என்னுதல் –

பக்தி பரம்
1–வணக்குடைத் தவ நெறி வழி நின்று -பக்தியின் வழியில் உபக்கிரம திசையில் -அத்யவசித்து
2-வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே -பக்தி ரூபா பன்ன ஞானமாக உணர்ந்து பிரபத்தி பரம்
1–உணர்வு கொண்டு உணர்ந்தே -அவனே உபாயம் என்ற உணர்வு
2–பக்தி -கால ஷேபத்துக்காக
கீதையில் சாதனபக்தி- உபாசனம் -சொல்லி இருக்க
ஸ்திரீகள் தரை வர்ணம் இல்லாதார் -கூடாதே –உணக்குமின் -சர்வ விஷயம் -இவரும் வேளாளார் -உபதேசிக்கக் கூடாதே –
விப்ர லம்பம் -ஓன்று உள்ளம் இருக்க வேறு ஓன்று உரைக்க -என்னில்
கீதையில் சாத்ய பக்தியும் உண்டு என்கிறார் -ஸ்தரீயோ -வைச்யோ பராம் கதிம் -என்னை அடைந்தால் பரம புருஷார்த்தம் அடையலாம் என்கிறானே
அப சூத்ரா அதிகரணம் விரோதம் வாராதோ
வணக்கொடு -அங்கம் விதிப்பதால் -சாதன பக்தி ஆகாதோ என்னில் -அங்கமாக இல்லை –
நிரதிசய பிரசாத ஹேது ஸ்வரூப அவிரோதச்ய–நமஸ் -ஸ்வரூப விருத்தம் இல்லையே -கைங்கர்ய ரூபமான நமஸ்காரம் -என்றவாறு –
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-என்று வணக்கம் கைங்கர்யம் என்கிறாரே மேலும்

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ  நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ  நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: