பகவத் விஷயம் காலஷேபம் -34– திருவாய்மொழி – –1-2-6 . . . . 1-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை

பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரம் சொன்னார் கீழ் –
நீர் பரிஹாரம் சொல்லுகைக்கு அவாப்த சமஸ்த காமனாய் சேஷியாய் இருக்கிற அவன் தான் நமக்கு
கை புகுந்தானோ என்ன -அவன் பக்கல் திருத்த வேண்டுவது ஓன்று இல்லை –அவன் சங்க ஸ்வபாவன் -என்கிறார் –

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

கன்று குணிலா எறிந்து ஆநிரை காத்து -ஆனை கொன்று ஆனை காக்கும் -நம்பலாமா
பஜ நீயன் உடைய சர்வ சமஸ்வத்தை அருளிச் செய்கிறார்
பற்றிலன் ஈசனும்-ஈசனும் பற்று இல்லாதவன் -பற்றை இல்லமாக உடையவன்- இரண்டு பொருளில் -சரணாகத வத்சலன் -அன்று ஈன்ற கன்று உகக்கும் ஆ போன்றவன்
சமோஹம் சர்வ பூதேஷு -த்வேஷப்பிவனும் இல்லை பிரீதி வைப்பவனும் இல்லை நான் -பணக்காரன் என்பதால் ப்ரீதி இல்லாதவன் -ஏழை என்று த்வேஷிப்பது இல்லை -என்றவாறு
சுக்ரீவன்-அபூர்வ ஆஸ்ரிதன் பக்கல் -கிம் கார்யம் சீதயா மம-என்பவன் -முற்றவும் நின்றானே -சீதை பாரத லஷ்மணன் கை விட்டு இன்று வந்த –
தாரகத்வ போஷகத்வ போக்யத்வம் எல்லாமாக நம்மைக் கொள்கிறான் –
வாஸூ தேவ சர்வம் -எல்லாம் கண்ணன் -நான் சொல்ல வேண்டியதை -முற்றவும் நின்றனன் -அவன் சொல்லிக் கொண்டு
நீயும் பற்று இலையாய் -மற்ற பற்றுக்களை விட்டு -அவன் இடம் பற்று இல்லமாகக் கொண்டு
அவன் முற்றில் அடங்கே -போக ரசம் -அனுபவிக்க -லீலா ரசம் -விட்டு -திருவாய்மொழி கேட்ட பலன் —
-தாரதம்யம் இல்லாமல்-உயர்வு  தாழ்வு இல்லாமல் அவன் இருப்பது போலே
நீயும் ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் சமஸ்த அனுபவ சாகரத்துக்குள் அந்தர்பவி
நாம் அவன் இடம் ஆத்மாத்மீயம் சமர்ப்பித்தால் -தானும் நம்மிடம் ஆத்மாத்மீயம் பண்ணக் கடவன் -பக்தாநாம் –

பற்றிலன் –
பற்று உண்டு -சங்கம் -அன்பு -அத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவன்
பற்றிலான் என்னுமத்தை –பற்றிலன் -என்று குறைத்துக் கிடக்கிறது
இன்னான் இங்கு உண்டோ என்னில் இங்கு இல்லை யவன் அகத்திலான் -வீட்டில் உள்ளான் -என்னக் கடவது இ றே

ஈசனும் –
ஈச்வரத்வம் கழற்ற ஒண்ணாமையாலே கிடக்கும் அத்தனை -ஸ்வாபாவிகம் அன்றோ
இச் சங்கம் குணமாகைக்கு கிடக்கிறது
பயப்படுகைக்கு உடல் அன்று
பெரியவன் எளிமை இ றே குணமாவது

பயம் ப்ரீதி மாறி மாறி வருமே -ஈஸ்வரன் நியந்தா -ஸ்வாமி-
சங்கம் -பற்று -குணம் ஆக இந்த ஸ்வாமித்வம் –அவரை தேவர் என்று அஞ்சினோம்-

பிரசாத பரமௌ நாதௌ-—பற்றிலன் ஈசனும்–தண்ணளியே இவர்களுக்கு விஞ்சி இருப்பது
மேன்மை கழற்ற ஒண்ணாமை யாலே கிடந்த இத்தனை
இரண்டும் அவ்வாஸ்ரயகதமாய் இருக்க தண்ணளியே உள்ளது என்று உணர்ந்தபடி என் என்னில்
மம கேஹம் உபாகதௌ-சேஷிகளாய் இருப்பார்க்கு சேஷ பூதரை அழைத்துக் கார்யம் கொள்ளலாய் இருக்க
ஆகதௌ-—ஸ்ரீ வைகுண்டம் இருந்து வந்தது –உபாகதௌ -வடமதுரையில் இருந்து —ஏகம் உபாகதௌ -குடில் தேடி மம கேஹம் உபாகதௌ
நெடும் தெருவே போகிறவர்கள் நான் இருந்த முடுக்குத் தெரு தேடி வந்த போதே பிரசாதம் விஞ்சி இருக்கும் என்னும் இடம் தெரிந்தது இல்லையோ
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -புஷ்ப ஹஸ்தம் -புஷ்ப திரு முகம் கொண்டு புஷ்பம் யாஜித்தான்
தன்யோஹம் -என்றும் ஒக்க சஞ்சரிக்கிற வழியிலே நிதி எடுப்பாரைப் போலே
அர்ச்சயிஷ்யாமி -என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியிலே அன்வயித்து அழித்து கெடுத்து ஜீவிக்கப் பாரா நின்றேன்
அழித்து கெடுத்து -நான் புஷ்ப மாலையை செய்வது போலே அவன் என்னை இஷ்ட விநியோஹ அர்ஹம் ஆக்கிக் கொடுப்பேன் –
இத்யாஹ-சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி நிற்பார் சொல்லக் கடவ பாசுரத்தை இவன் சொல்லுவதே என்று ருஷி கொண்டாடுகிறான்
மால்ய உப ஜீவன -பூவில் கண் வைத்து தொடுக்கில் சாபலம் பிறக்கும் என்று கண்ணை மாற வைத்து தொடுத்து பூ விற்று ஜீவிக்கும்
அத்தனை புல்லியன் சொல்லும் வார்த்தையே ஈது -என்கிறார் –
அவனுக்கு சமர்பிக்கும் புஷ்பத்தில் கண் வைக்க மாட்டாத அநந்ய பிரயோஜனன்-அன்றோ –

முற்றவும் நின்றனன் –
சமோ ஹம் சர்வ பூதேஷு என்கிறபடி -ஆஸ்ரயணித்வே சமனாய் நின்றான்
இத்தலை இருந்தபடி இருக்க -தான் எல்லார்க்கும் ஒத்து இருக்கை

பற்றிலையாய் –
நீயும் பற்றிலையாய் –
நீயும் பற்றை உடயையாய்-சங்கத்தை உடையை யாய்

அவன் முற்றில் அடங்கே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிறபடியே அவனுடைய எல்லா கைங்கர்யத்திலும் அன்வயி –

அதவா
பட்டர் அருளிச் செய்யும் படி
பற்றிலன் ஈசனும்
வாஸூ தேவோஸி பூர்ண -என்கிறபடியே
சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -ஜ்ஞானானந்த அமல ஸ்வரூபனாய் திரை மாறின கடல் போலே
ஈசிதவ்யரான நித்ய சூரிகளை உடையனாய் -பரம பதத்தில் எழுந்து அருளி இருக்கிறவனும் அவர்கள் பக்கல் பற்று உடையவன் அல்லன்
அவர்கள் பக்கல் பற்று உடையவன் அன்றிக்கே இருந்தால் குறை பட்டு இரானோ என்னில்

முற்றவும் நின்றனன்
அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றம் இன்று ஆஸ்ரயிக்கிற இவனாலே யாம் படி நின்றான்
த்வயி கிஞ்சித் சமான்பன்னே கிம் கார்யம் சீதா மம -என்னுமா போலே
இன்று ஆச்ரயித்த தொரு திர்யக்குக்கு ஒரு வாட்டம் வரில் நித்ய ஆஸ்ரிதையான பிராட்டியாலும் கார்யம் இல்லை என்று
அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன்னணைக் கன்றினையும் கொம்பிலே கொள்ளுமா போலே
பிராட்டிக்காக கிஞ்சித் அவதி பட்டாய் இதற்கு நிமித்த பூதையான அவளிலும் பிரிய-பிரிய தர -பிரிய தம -இளைய பெருமாள் பரத -சத்ருக்னன்
-இவர்களுக்கு ஜீவனமான என் திரு மேனியும் வேண்டேன் -என்றாரே பெருமாள்
கிஞ்சித் கொஞ்சம் ஆபத்து வந்து இருந்தால் -வாயால் சொல்ல முடியாமல் -சீதை விடுவேன் சொல்லும் வாயால் –

பற்றிலையாய்
விட ஒண்ணாதாரை -நீ ஒரு தலையாக– விட்டான் அவன்
அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத் தட்டு என் உனக்கு

அவன் முற்றில் அடங்கே
அவனை எல்லாமாகப் பற்றப் பார்
மாதா பிதா பிராதா நிவாஸ சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –
வாஸூ தேவஸ் சர்வம் -தாரகம் போக்யம் போஷகமாய் -என்றுமாம் –

————————————————————————–

அவதாரிகை —

சங்க ஸ்வபாவன் -என்றார் கீழ் –
அவன் சங்க ஸ்வ பாவன் ஆனாலும் அபரிச்சின்ன உபய வித மகா விபூதி யை உடையனாய் இருந்தான் அவன்
இவன் அதி ஷூ த்ரனாய் ஷூத்ர உபகரணனாய் இருந்தான் -ஆனபின்பு அவனை இவனால் கிட்டலாய் இருந்ததோ
கடலிலே புக்க துரும்பானது இரண்டு தலையிலும் நினைவு இன்றிக்கே இருக்க திரை மேல் திரை யாக தள்ளுண்டு
போந்து கரையிலே சேருகிறது இல்லையோ –
அப்படியே இவனது ஐஸ்வர்ய தரங்கமாவது இவனைத் தள்ளாதோ என்னில்
இந்த ஐஸ்வர்யம் எல்லாம் நமக்கு வகுத்த சேஷியினுடைய ஐஸ்வர்யம் என்று அனுசந்திக்கவே -தானும் அதுவாய் அன்வயிகலாம் இ றே-
ஆனபின்பு சம்பந்த ஞானமே வேண்டுவது -என்கிறார் –

ஒரு வியாபாரி ஸ்திரீ கர்ப்பணியான சமயத்திலே அர்த்தார்ஜனம் பண்ண வேணும் என்று போவது -திரை கடல் ஓடியும் திரவியம் தேட –
அவளும் பிள்ளை பெற்று அவனும் பகவனே தனக்கு தமப்பனாருடைய வியாபாரமே யாத்ரையாய் அவனும் போய்
இவனும் சரக்கு பிடித்துக் கொண்டு வந்து ஒரு பந்தலிலே தங்குவது –அது இருவருக்கும் இடம் போராமையாலே அம்பறுத்து
எய்ய வேண்டும்படி விரோதம் பரஸ்துதமான சமயத்திலே இருவரையும் அறிவான் ஒருவன் வந்து
இவன் உன் பதா -நீ அவன் புத்தரன் -என்று அறிவித்தால்
கீழ் இழந்த நாளைக்கு சோகித்து இருவர் சரக்கும் ஒன்றாய் -அவன் ரஷகனாய் இவன் ரஷ்யமாய் அன்வயித்து விடும் இறே
இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே -அறிவிக்க -நாம் இசைய –அவனும் கர்மம் ஒன்றால் விலகி இருக்க
சுலபமான விஷயத்தை இழந்தோமே
அவர்ஜநயா சம்பந்தம் இருக்க கர்மம் என்பதைக் கொண்டு விலகி இருந்தோமே –அவ்வானவர் -உவ்வாவனர் காட்டித்தர

சமானம் வ்ருஷம் பரிஷச்வஜாதே -ஜீவாத்மாவும் பரமாத்மாவும் தேஹமாகிற வ்ருஷத்தைப் பற்றி இருந்தால் ஒருவன்
கர்ம பலங்களை புஜியா நிற்கும் -ஒருவன் புஜிப்பித்து விளங்கா நிற்கும் –
அவன் நியாமகன் -நாம் நியாம்யன் என்னும் ஞானம் முறை அறியவே பொருந்தலாம் இ றே
ராஜபுத்திரன் ஒரு உத்யானத்தைக் கண்டு புக அஞ்சினால் உன் தமப்பனது காண்-என்னவே நினைத்த படி புக்குப் பரிமாறலாம் இறே
ஆனபின்பு ததீயம் என்னும் பிரதிபத்தியே வேண்டுவது -தானும் அதுக்கு உள்ளே ஒருவனாய் அன்வயிக்கலாம் என்கிறார் –
அப்பாவுக்கு பிள்ளை என்ற சம்பந்த ஞானம் உணரவே -பேறு-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7-

விபூதி மகாத்ம்யத்தைக் கண்கொண்டு இறாயாதே-அவனோடு அத்தோடு உண்டான சம்பந்தத்தை அனுசந்தித்து
-நாமும் அதற்கு உள்ளேயே -என்ற நினைவால் -சொருகப் பார்
எழில் -அழகிய
அடங்கக் கண்ட -முழுவதுமாகப் பார் -லீலா விபூதி சம்பத்தா ஆபத்தா -அங்கு உள்ளாறும் அவன் விபூதி என்று விரும்பும் படி
ஈசன் அடங்கு எழில் அஃது –அதிசயகரமான சேஷமாக இருக்கும்
என்று உள்ளே அடங்குக -விபூதி ஏக சேஷமாக சொருகுக -அப்ருதக் சித்த விசேஷணம்-விட்டுப்போக முடியாதே –
கடலில் அலை போலே நீ உன்னை அனுசந்தித்து உள்ளே இருக்கலாமே -திமிங்கலம் உள்ளே இருக்கே -சம்பந்தம் இல்லை என்ற நினைவு இல்லாமல் –

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு
போக பூமியாய் இருக்கும் நித்ய விபூதி -கர்ம நிபந்தனமாக அவனாலே நியாம்யமாய் இருக்கும் இவ் விபூதி –
அதில் ததீயம் என்று அனுசந்திக்கப் புக்கவாறே கர்ம நிபந்தனமான ஆகாரம் தோற்றாதே-ததீயத்வ ஆகாரமே இறே தோற்றுவது –

ஈசன் அடங்கு எழில் அஃது கண்டு –
கட்டடங்க நன்றான சம்பத்தை எல்லாம் கண்டு நமக்கு வகுத்த ச்வாமியானவனுடைய சம்பத்து இது எல்லாம் என்று அனுசந்தித்து
அவ்விபூதிக்கு உள்ளே தானும் ஒருவனாய் அன்வயிக்கப் பார்ப்பது –
அப்போது சேஷிக்கு அதிசயத்தை விளைத்தான் ஆகலாம் இ றே -சர்வ சேஷத்வம் -பலிக்காதே-நாம் விலகி போனால் –
சேஷ பூதனுடைய ஸ்வரூப -சேஷத்வம் -சித்தி -சேஷி பக்கல் கிஞ்சித் காரத்தாலேயாய் இருக்கும்

பரார்த்த்வாத் -அர்த்த பிரயோஜனம் -சேஷ சேஷி பாவ லஷண பரம் ஜைமினி சூத்ரம் பரகத அதிசய ஆதாசய –
பர -வேறு பட்ட- உயர்ந்த –நமக்காக சிருஷ்டித்து சாஸ்திர -பிரதம் -இங்கும் பர –ஆனால் உயர்ந்த இல்லை
அதிசய -விசேஷ -உத்க்ருஷ்டமான மேன்மை -ஈஸ்வரனுக்கு பெருமை சேர்க்க –

அடங்குக உள்ளே –
ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்தம் ஜ்ஞானம் அடியாக தானும் அவன் விபூதியிலே ஒருவனாய் அன்வயிகலாம் இறே
சமுத்ரம் அபரிச்சின்னம் ஆனாலும் அதின் உள்ளில் சத்வங்களுக்கு -கடல் வாழ் ஜந்துக்களுக்கு -வேண்டும்படி புகலலாம் இறே
அது போலே சம்பந்தம் ஜ்ஞானம் அடியாகக் கிட்டலாம் -சம்பந்த ஜ்ஞானம் இல்லாத த்ருணத்தை இறே
கடல் கரையிலே ஏறத் தள்ளுவது -சம்பந்த ஜ்ஞானம் பிறக்கை இறே கடக க்ருத்யம் –

————————————————————————–

அவதாரிகை –

அவனுக்கு விபூதியாக அன்வயித்தால் பின்னை தானும் தனக்கு என்னச் சில கரணங்களும் என்று உண்டாய்
பஜித்தானாகை அரிதாய் இருந்ததே என்ன – பஜன பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8-

பஜன பிரகாரத்தை அருளிச் செய்கிறார்
உள்ளம் உரை செயல்-நினைக்க -ஸ்துதி -பிரணாம அதிகரனமான உடல் -நமக்கு என்று அடியிலேயே இருப்பதாய் -சந்நிஹிதமான இம்மூன்றையும்
உள்ளி -சிருஷ்டி பிரயோஜனத்தை நிரூபித்து
கெடுத்து –இதர விஷய அன்வயத்தை தவிர்ந்து
இறை -ஸ்வாமி பிராப்தன் -வகுத்த விஷயத்தில் பர தந்த்ரனாய் ஒதுங்குவாய்
வ்ருத்திகளைச் சொல்லி தத் தத் கரணங்களை நினைக்கிறது -உள்ளம் வாக் இந்த்ரியம் காயம் -என்றவாறு
உள்ளிக் கெடுத்து-பூர்வ வ்ருத்தாந்தத்தை நினைத்து-அந்ய பரதை தவிர்ந்து –

உள்ளம் உரை செயல் –
பாஹ்ய விஷயங்களிலே பிரவணம் ஆகிற மனசை பிரத்யக்காக்கின வாறே பகவத் அனுசந்தானத்துக்கு உடலாமே
அவ்வனுசந்தானம் வழிந்து- பொங்கேழ் புகழ்கள் வாயவாய்-8-10-4-என்கிறபடியே சொல்லாய் புறப்படுகைக்கு உடலாம் இறே வாக்கு
குணைர் தாஸ்யம் உபாகத -என்கிறபடியே திருவடிகளிலே விழுந்து சகல கைங்கர்யங்களும் பண்ணுகைக்கு உடலாய் இருக்கும் இறே உடம்பு

-உள்ள விம் மூன்றையும்
இவை தான் இன்றாக சம்பாதிக்க வேண்டாதே
சேஷியான தான் இவற்றை உண்டாக்கி வைத்தானே
இவையும் வேறு சிலவும் தேட வேண்டாவே –-தாம் -தம் உள்ளம் -தாமரையின் பூ –
இங்கே தாம் உளரே -இரண்டாம் திருவந்தாதி –22
நா வாயில் உண்டே -முதல் திருவந்தாதி –95
இத்யாதிகளை யோஜித்துக் கொள்வது –

ஆதி காலத்தில் கொடுத்த –உள்ள
எங்கே தேடாதே இம்மூன்றையும் காட்டிக் கொடுக்கிறார் –

உள்ளிக்
உள்ள இம்மூன்றையும் உள்ளுவது -இவை தான் எதுக்காகக் கண்டது -இவை தான் இப்போது இருக்கிறபடி என்-என்று
ஆராய்ந்து பார்த்தால் அப்ராப்த விஷயங்களிலே பிரவணமாய் இருக்கும்

கெடுத்து
கெடுப்பது -அவற்றின் நின்றும் மீட்பது –

இறை யுள்ளில் ஒடுங்கே
பாழிலே மேட்டிலே பாய்கிற நீரைப் பள்ளத்திலே பயிரிலே பாய்ச்சுவாரைப் போலே ப்ராப்த விஷயத்தில் ஆக்கப் பார்ப்பது
ஒடுங்க -என்னுதல்-அவனை அண்டுதல் –
ஒடுக்கு -என்னுதல் -அவன் விஷயத்தில் நிலை நிறுத்தல்
மெல்லினமான ஙகரத்தை வல் ஒற்றாக்கி ஒடுக்கு -என்று கிடக்கிறது ஆதல் –
ஆத்மா தானே ஒடுங்க வேண்டும் -உள்ளம் உரை செயல் ஒடுக்க வேண்டுமே -இவற்றை உள்ளிக் கெடுத்து நீர் ஒடுங்கு என்றபடி –

தாம் உளரே –
தந்தாமைத் தேட வேண்டாவே
தம் உள்ளம் உள் உளதே –
எனக்குச் சற்று போது பகவத் விஷயத்தை நினைக்கைக்கு நெஞ்சு தர வேணும் -என்று தனிசு-கடன் -இரவல் –வாங்க வேண்டாவே
தாம் உளரானால் உண்டான நெஞ்சும் உண்டே
தாமரையின் பூ உளதே —
கைக்கு எட்டும் பூ உண்டாக்கி வைத்தானே
கள்ளார் துழாய் –பெரிய திருமொழி -11-7-6-என்று அங்குத்தைக்கு அசாதாரணமான திருத் துழாயைச் சொல்லி
அதோடு ஒக்க -கணவலர்-என்று காக்காணத்தையும் ஆம்பலையும் சொல்லுகையாலே அங்குத்தைக்கு ஆகாதது இல்லை என்றபடி
ஆகையால் தாமரையின் பூ உளதே -என்றது -எல்லா புஷ்பங்களுக்கும் உப லஷணமான இத்தனை
ஏத்தும் பொழுதுண்டே
-காலத்தை உண்டாக்கி வைத்தானே -அது தனிசு வாங்க வேண்டாவே
வாமனன் –
இது எல்லாம் வேண்டுவது அவன் அவன் அல்லாகில் அன்றோ -தன் உடமை பெருகைக்கு தான் இரப்பாளன் ஆவான் ஒருவனாய் இருந்தானே
இரப்பையும் -அளப்பையும் சொல்லுகிறது -தன்னதாக்கிக் கொள்ளுபவன்
திருமருவு தாள்
அவனுடைய ஐஸ்வர்ய பிரகாசகமான திருவடிகள் என்னுதல்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10–என்னுதல்
மருவு சென்னியரே –
மருவுகை -சேருகை-இப்படிப் பட்ட திருவடிகளிலே சேருகைக்கு தலையை ஆக்கி வைத்தானே
வாமனன்
அமரர் சென்னிப் பூவான திருவடிகளை நித்ய சம்சாரிகள் தலையிலும் வைப்பான் ஒருவனாய் இருந்தானே
இப்படி இருக்கச் செய்தே
செவ்வே அரு நரகம் சேர்வது அரிது –இவர்கள் சம்சாரத்துக்கு விலக்கடி -பிராப்யாந்தரம் -பிராபகாந்தரம் -தேடிக் கொண்டு போகிற படி எங்கனேயோ
நா வாயில் உண்டே –இது முன்னம் புறம்பு தேடித் போக வேண்டாவே
நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –நாராயணா சொல்லாமல் அத்தையும் சுருக்கி நாரணா
சஹாஸ்ராஷரீ மாலா மந்த்ரம் போலே இருக்கை அன்றிக்கே எட்டு எழுத்தே நடுவே விச்சோதியாதே சொல்லலாம் திருநாமம் உண்டாக்கி வைத்தானே
மூவாத மாக்கதிக் கண் செல்லலும் வகை யுண்டே –புனராவ்ருத்தி இல்லாத ப்ராப்யத்தை உண்டாக்கி வைத்தானே
என்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம் -இங்கனம் இருந்த பின்பு இவர் தண்ணிய வழி தேடித் போகிற படி எங்கனேயோ

————————————————————————–

அவதாரிகை –

சம்பந்த ஜ்ஞானம் உண்டாகவே -தனது சிறுமை பார்த்து அகல வேண்டா வென்றும் -பஜனமாவது என் –
அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு உறுப்பாக்குகை என்றும் சொல்லி நின்றார் கீழ் இரண்டு பாட்டாலே –
இது தன்னரசு நாடாய் ப்ராப்த விஷயம் அவன் அல்லாமை பஜியாது இருக்கிறோமோ
பஜன விரோதிகள் கனக்க யுண்டாகை யன்றோ நாங்கள் பஜியாது ஒழிகிறது என்ன –
நீங்கள் அவனைக் கிட்டவே அவை யடைய விட்டுப் போம் என்கிறார் இதில் –

ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே--1-2-9-

பஜன பலமான -ஆஸ்ரயண பலமான -விரோதி நிவ்ருத்தி -அருளிச் செய்கிறார்
அவன் கண் ஒடுங்க-சேர்மின் தனிச் சிறப்பு விட்டு பிரிய மாட்டாத-அப்ருதக் சித்தம் அன்றோ நாம்
எண்ணே-தேற்று ஏகாரம் பிரிநிலை ஏகாரம்
ஒடுங்கலும் -ஞானாதி ஸ்வ பாவ சங்கோசமும் -ஸ்வரூபம் குறையாதே –
எல்லாம் -தத் ஹேதுவான அவித்யாதிகள் எல்லாம் –காரிய காரணங்கள் எல்லாம் –
விடும் -விட்டுக் கழியும்
அவன் கண் ஒடுங்க இந்த ஒடுங்கல் எல்லாம் விடும்
கிருதக்ருத்யா -செய்த வேள்வியர் ஆகும் -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
பின்னும்-யாக்கை விடும் பொழுது எண்ணே-
ப்ரத்யீஷ் யந்தே -சரீரம் விழும் -ஆக்கை -ஆரப்த சரீர சேஷம் -விடும் பொழுதை எதிர் பார்த்து இருக்க வேண்டும்
1-ஆக்கை விடும் பொழுது எண்ண -விதி இல்லை -எண்ணிக் கொண்டு இரும்
பிரபன்னனுக்கு அந்திம ஸ்ம்ருதி தேவை இல்லை
2–தேற்ற ஏகாரம் -எண்ணு-அந்திம ஸ்ம்ருதி விதி -பஜனத்துக்கு அங்கம் என்று நினைத்து –
3-பிரிநிலை ஏகாரம் -எண்ண வேண்டாம்
சுடர் சோதி மறையாதே -பிரிநிலை ஏகாரம் அங்கு

ஒடுங்க அவன் கண் –
பிரகார பூதரான நீங்கள் பிரகாரியான அவன் பக்கலிலே சென்று சேர –

அப்ருதக் சித்த விசேஷணம் இப்பொழுது ஒடுங்குகை யாவது -சென்று சேர -ஈச்வரோஹம் -என்பதை தவிர்ந்து இருக்கை-
வேண்டுவன கேட்டியேல் -ஆண்டாள் அழகில் மயங்கி இருப்பவனை தட்டி -கேட்கச் சொன்னாளே

ஒடுங்கலும் எல்லாம் விடும் –
ப்ராப்தத்தைச் செய்ய -அப்ராப்தமானவை எல்லாம் தன்னடையே விட்டுப் போம்
ஸ்வரூப அனுரூபமானதைச் செய்யவே ஸ்வரூப விரோதிகள் அடங்க விட்டுப் போம்
ஒடுங்கல் -என்றதாலே இது ஸ்வரூபத்தில் கிடப்பது ஓன்று அல்ல
ஸ்வரூப விரோதியாய்க் கொண்டு வந்தேறி என்னும் இடம் தோற்றுகிறது
அன்றிக்கே -ஒடுங்கல் என்கிற மெல் ஒற்றை ஒடுக்கல் என்று வல் ஒற்றாக்கி இவனுக்கு சங்கோசத்தை பிறப்பிக்குமவை என்னுதல் –
ஒடுங்கல் ஞான சங்கோசம் —ஒடுக்கல் -ஞான சங்கோசம் பிறப்பிக்கும் அவித்யாதிகள்
எல்லாம் விடும் –
அவித்யா கர்மா வாசனா ருசிகள் -சவாசனமாக விட்டுக் கழியும்
வானோ மறி கடலோ -இத்யாதி
மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார் -இத்யாதிகளை யோஜித்துக் கொள்வது
வானோ -பெரிய திருவந்தாதி -54—மாடே -59-அசுரர்கள் போலே -காடாதல் -காகாசுரன் போலே இருக்க இடம் தேட -வல்வினைகள் -அரண் தேடிக் கொள்ள முடியாமல் –

இவை போமாகில் பின்னை இவனுக்கு கர்த்தவ்யம் ஏது என்னில்
பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–
உபாசனத்தால் வந்த ராஜ குலம் கொண்டு பலன் தப்பாது -தன்னடையே வருகிறது என்று ஆறி இருக்கை இன்றிக்கே
ஹேதுவான அவத்யாதிகள் கழிந்தது ஆகில் அவற்றின் கார்யமான இச் சரீரமும் ஒருபடிப் போய் தண்ணீர் துரும்பற்று -இடையூறு இல்லாமல்
பிராப்தி கை புகுந்ததாவது எப்போதே – என்று அதுக்கு விரல் முடக்கி இருக்கும் அத்தனை
காமிநியானவள் தன்னுடம்பில் அழுக்கு கழற்றி போகத்தில் அன்வயிக்க அவசர ப்ரதீஷையாய் இருக்குமா போலே சரீர
அவசானத்தைப் பார்த்து கொண்டு இருக்கை
கொங்கை மேல் கும்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும் -என்று
அழுக்கு கழற்றி ஒப்பித்து பார்த்து இருந்தாள் இ றே

அப்படி அழுக்கு உடம்பு -என்கிற இவ் வழுக்கு கழன்று
பிராப்யம் கை புகுந்ததாவது எப்போதோ என்று பார்த்து இருக்கும் அத்தனை
ம்ருத்யும் ப்ரியம் இவாதிதம் –என்று இருக்கும் அத்தனை -க்ருதக்ருத்யா –க்ருதக்ருத்யர் ஆகிறார் சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணினவர்கள் இ றே
விது கிருஷ்ணம் ப்ராஹ்மணஸ் தத்வதோ யே தேஷாம் ராஜன் சர்வ யஜ்ஞாஸ் சமாப்தா -அவனை உள்ளபடி அறிந்தவர்கள் இ றே
எல்லாவற்றையும் அனுஷ்டித்து தலைக் கட்டினார்கள் ஆகிறார்
கிருஷ்ணனே அனைத்து தர்மம் என்று அறிந்தவர்களே -சர்வ யஜ்ஞாஸ் சமாப்தா-செய்த வேள்வியர் க்ருதக்ருத்யர் —

ஓர் அயனத்தின் அன்று குன்றத்து சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தில் புக -அவருடைய சிறு பேரைச் சொல்லி
-சிங்கப் பிரான் -இன்று அயனம் கிடாய் -என்று திரு உள்ளத்திலே ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாது இருக்க
இத்தேக சமன அந்தரத்திலே பிராப்தி கண் அழிவு அற்ற பின்பு நடுவு விரோதியாகச் செல்லுகிற நாளிலே ஓர் ஆண்டு கழியப் பெற்ற இது
உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ -என்று அருளிச் செய்தார்
அன்றியே எம்பார் ஓர் உருவிலே -பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே –என்று இங்கனே காரணம் ஆனபோது கழிந்த போதே
கார்யமும் தன்னடையே கழிந்ததே யன்றோ
பிராப்தியும் இனி கை புகுந்ததே யன்றோ -இனி சிந்தா விஷயம் உண்டோ -என்று அருளிச் செய்தார்
கர்மம் போன பின்னே சரீரமும் போனதாகாதோ -எண்ண விஷயம் உண்டோ – –பிரிநிலை ஏகாரார்த்தம் -எம்பார்
ஐந்து ஏகாரார்த்தம் -தேற்றம் – வினாவே -பிரிநிலை -சங்க்யம்-ஈற்று அசை பாத பூர்ணம்

————————————————————————–

அவதாரிகை-

அழகிது -அப்படியே ஆகிறது -பஜனத்துக்கு ஆலம்பமான மந்த்ரம் ஏது என்ன -அது என்னது என்றும்
–அதினுடைய அர்த்தம் அனுசந்தேயம் என்றும் சொல்லுகிறார்
இது தன்னைப் புறம்பு உள்ளார் –உபாசகர்கள் -ஜப ஹோமாதிகளாலே கார்யம் கொள்ளா நிற்பார்கள் -அர்த்தம் பக்கம் வராமல் –
நம் ஆசார்யர்கள் -ஸ்வரூப அனுசந்தானத்துக்கு ஈடாய் இருக்கிற இதினுடைய அர்த்த அனுசந்தானம் மோஷ சாதனம் -என்று
தாங்களும் அனுசந்தித்து -தங்களைக் கிட்டினார்க்கு உபதேசித்துக் கொண்டு போருவர்கள்-பிராப்ய பூர்த்தி -ஆறாயிரப்படி -பதினாறாயிரப்படி
திருமந்த்ரார்த்தம் -ஒன்பதினாயிரப்படி / இருபத்தினாராயிரப்படி / ஈடு
திரு மந்த்ரம் ப்ராப்ய பிரதானம் தானே –

திருமந்த்ரார்த்தம் அனுசந்திப்பதும் -சேஷத்வ பார தந்த்ர்யம் அனுசந்திப்பதும் ஒன்றே –
அனன்யார்க சேஷத்வ -அநந்ய சரணத்வ -அநந்ய போகத்வம் -தானே ஸ்வரூபம் –
அர்த்த அனுசந்தானம் மோஷ சாதனம் என்றது அர்த்தம் ஈஸ்வரன் என்றபடி –
பகவத் பிரசாதம் -திரு மந்த்ரத்துக்குள்ளே உள்ளான் -அவன் மந்த்ராதீனம் -மந்த்ரம் ஆச்சார்யாதீனம் -வைகுந்த மா நகர் மற்றது கை யதுவே –

வேதங்களுக்கும் இவ் வாழ்வாருக்கும் இம் மந்த்ரம் ப்ரஸ்துதம் ஆனவாறே –முன்பே சப்தத்தைச் சொல்லி -அநந்தரம் அர்த்தத்தைச் சொல்லுதல் –
அன்றியே முன்பே அர்த்தத்தைச் சொல்லி பின்பே சப்த பிரயோகம் பண்ணுதல் செய்யக் கடவதொரு நிர்பந்தம் உண்டாய் இருக்கும்
அதுக்கடி அர்த்தானுசந்தானம் உத்தேச்யம் ஆகையாலே
யாவையும் யாவரும் தானாமவை யுடைய நாராயணன் –-1-3-3-என்னுதல் –தன்னுள் அனைத்து உலகும் நிற்க -தத் புருஷ சமாசம் பரத்வம்
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் –2-7-2-என்னுதல் செய்வதொரு நிர்பந்தம் உண்டு
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்னுதல் –தானும் அவற்றின் உள்ளே
-பஹூவ்ரீஹி சமாசம் -நித்ய வஸ்துக்கள் உள்ளே உள்ளவன் சௌலப்யம் –
நாராயண பரோஜ்யோதி -என்னுதல் செய்யும் வேதம் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

உயிர் பாசுரம் -திருமந்த்ரப் பொருள் அருளிச் செய்கிறார் -பஜன நீய பிராப்யப்த பூர்ணம் அருளிச் செய்கிறார்
சார்த்தமாக திருமந்தரம் அருளிச் செய்கிறார் -ஆலம்பன மந்த்ரம் –
பிராப்யமான நாராயணன் -ஆறாயிரப்படி பன்னீராயிரப்படி
திரு மந்த்ரமே பிராப்ய பிரதானம்
ஆனந்த வல்லி
எண்-எண்ணுக்கு
பெருக்கு -அவ்வருகே பெருகி -இருப்பதாய் –
அந் நலத்து-ப்ரஹ்மாநந்தம்-உடன் சமமான ஆனந்தாதி குணங்களை யுடைய
ஒண் பொருள் -விலஷண ஆத்ம வர்க்கம் -ஸ்வரூபம் மலர்ந்த ஆத்மா வர்க்கம் எண்ண முடியாதே
ஈறில-அசங்க்யேமாய் அபரிச்சின்னமாய்
வண் புகழ் -கல்யாண குணங்களையும் எண்ண முடியாதே
நாரணன் திண் கழல் சேரே-தின்னியதாக இருக்குமே -ஆஸ்ரயிப்பாய்
விலஷண குண விபூதி உடன் கூடிய ஸ்ரீ யபதி திருவடிகள்
பிரபத்திக்கும் பக்திக்கும் கழல் சேர் பொதுவாகும்
பஜன பிரபதன சாதாரணம் -கீழிலும் உபய சாதாரணம் –

எண் பெருக்கு அந் நலத்து-
இப்பாட்டாலே திரு மந்த்ரத்தை சார்த்தமாக அருளிச் செய்கிறார் –
ஆழ்வான் இப்பாட்டு அளவும் வரப் பணித்து -இப்பாட்டு அளவில் வந்தவாறே -இத்தை உம்தம் ஆசார்யர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள் என்ன –
பட்டரும் சீராமப் பிள்ளையும் எழுந்து இருந்து போகப் புக்கவாறே -அவர்களை அழைத்து -இன்னபோது இன்னார் இருப்பார் -இன்னார் போவார் என்று தெரியாது -இருந்து கேளுங்கோள் -என்று திரு மந்த்ரத்தை உபதேசித்து
-இப்பாட்டை நிர்வஹித்து இப்பாட்டை இதுக்கு அர்த்தமாக நினைத்து இருங்கோள் –என்று பணித்தான்
கௌரவதையிலே நோக்கு முந்தின வார்த்தை -போக்யதையிலே நோக்கு பின் வார்த்தை
வந்தே கோவிந்த தாதபாதர் -ஆச்சார்யர் முன்னாக ஸ்ரீ பராசர பட்டர் –
எண் பெருக்கு –
என்கிற இத்தால் ஜீவ அனந்யத்தைச் சொல்லுகிறது
நலத்து –
அந்- நலம் -வேற ஒன்றால் சொல்ல முடியாதே
இவ்வஸ்துக்கள் தான் ஜ்ஞான குண ஆஸ்ரயமுமாக இருக்கக் கடவது இ றே
பிரணவத்தில் திருதிய பதமான மகாரத்தாலே ஜ்ஞான குண ஆஸ்ரயமுமாய்-ஜ்ஞாதாவாயுமாய் இருக்கும் என்று சொல்லிற்றே-

அந் நலத்து -அத்து சாரியை -நலம் -தர்ம பூத ஞானம் –ஸ்வ பாவ ஞானம் -என்னது தோன்றும் –
ஒண் பொருள் -தர்மி ஞான ஸ்வரூபம் உடைய ஆத்மா -நான் என்று தோற்றும்
ஞான ஸ்வரூபம் ஞான குணம் -இரண்டும் உண்டே –பொருளுக்கு ஒண்மை தனக்கு தோற்றம் அழிப்பது

ஒண் பொருள்-
அசைதந்யம் அசித்துக்கு ஸ்வ பாவமாக இருக்கச் செய்தே வஸ்து தான் ஜடமுமாய் இருக்கும் இறே -அசம்ஜ்ஞா வத்தாய் இருக்கும் இறே
சம்ஜ்ஞா-வத்தாய் –ஞானத்தை உடையதாய் இருக்கை
அ சம்ஜ்ஞா வத்தாய் –ஞானம் இல்லாமையை யுடைத்தாய் இருக்கும்
அங்கன் அன்றிக்கே -வஸ்து தான் -சம்ஜ்ஞா-வத்தாய் –ஞானத்தை உடையதாய் இருக்கை
அ சம்ஜ்ஞா வத்தாய் –ஞானம் இல்லாமையை யுடைத்தாய் இருக்கும் -ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசமாய் -தர்ம பூத ஜ்ஞானம் ஆனதுவும் –
விஷயங்களை க்ரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் -அத்தைப் பற்றச் சொல்கிறது –

ஈறில-
என்கிற இது கீழும் மேலும் அன்வயித்துக் கிடக்கிறது
ஈறிலவான ஒண் பொருளையும்
ஈறிலவான வண் புகழையும் -உடையவனாகை யாயிற்று நாராயணன் ஆகையாகிறது
பாவத்க மங்கள குணா ஹி நிதர்சனம் ந–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -35-தன்னுடைய
கல்யாண குணங்களோ பாதி நித்யமுமாய் பிரகாரமுமாய் இருக்கும் இவ்வஸ்து என்கைக்காக குணங்களை நிதர்சனமாகச் சொல்கிறது
நித்யரான த்ரிவித சேதனரையும் நித்தியமான கல்யாண குணங்களையும் யுடையனாய் இருக்கை யாயிற்று -நாராயணன் ஆகையாவது –
தவ இச்சையாலே -விஸ்வ பதார்த்தங்கள் சத்தை பெற்றன -நித்ய ஸூ ரிகள் உன்னுடைய நித்ய அனுக்ரகத்தாலே நித்யர்கள் ஆகிறார்கள்
-நித்ய -சத்ய -சங்கல்பம் அடியாகவே நித்யர்கள் -தவ ஏக பரதந்திர நிஜ ஸ்வரூபர்-என்றபடி-

அவனுடைய
திண் கழல் சேரே –
இப்படி சம்பந்தம் காதாசித்கமாகை தவிர்ந்து நித்யமாயிற்ற பின்பு -ஸ்வரூப ஜ்ஞானம் உடையாரை ஒரு ஒரு நாளும் விடான் இறே
ஆஸ்ரிதரை ஒரு காலும் விட்டுக் கொடாத திண்மையைப்பற்றி –திண் கழல் -என்கிறது –
சேர்
ஆஸ்ரயி
உன்னுடையதாய் உனக்கு வகுத்ததாய் இருந்த பின்பு நீ கடுக சுவீகரி –
நம -என்றபடி

————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் –
முதல் பாட்டில் –வ்யதிரிக்த விஷயங்களை விட்டு சர்வேஸ்வரன் பக்கலிலே ஆத்மாவை சமர்ப்பிக்க இசையுங்கோள் என்றார்
இரண்டாம் பாட்டில் -வ்யத்ரிக்த விஷயங்களின் உடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் -என்றார்
மூன்றாம் பாட்டில் –த்யாஜ்ய அம்சத்தை அருளிச் செய்கிறார்
நாலாம் பாட்டில் பற்றப்படுகிற விஷயத்தின் உடைய நன்மையை அருளிச் செய்கிறார்
அஞ்சாம் பாட்டில் பற்றும் இடத்து வரும் அந்தராய பரிஹாரத்தை அருளிச் செய்கிறார்
ஆறாம் பாட்டில் -அவன் சங்க ஸ்வ பாவன் என்றார்
ஏழாம் பாட்டில் –சம்பந்த ஜ்ஞானம் உண்டாகவே பொருந்தலாம் -என்கிறார்
எட்டாம் பாட்டில் –வேறு ஒரு உபகரணம் -தேட வேண்டா –அவன் தந்த கரணங்களை அவனுக்கு ஆக்க அமையும்
ஒன்பதாம் பாட்டில் -அப்படி செய்யவே பஜன விரோதிகள் தன்னடையே விட்டுப் போம் என்றார்
பத்தாம் பாட்டில் -பஜனத்துக்கு ஆலம்பமான மந்த்ரம் இன்னது என்றார் –

இது தான் வாய் வந்தபடி சொல்லிற்று ஓன்று அல்ல
சேதனருக்கு ஹிதத்தை ஆராய்ந்து சொல்லப்பட்டது -என்னுதல் –ஒர்த்த விப்பத்தே-
அன்றிக்கே இது தான் ஹிதமாய் இருப்பது ஓன்று ஆகையாலே எப்போதும் ஒக்க ஓரப்படுவது ஓன்று என்னுதல்-அனுசந்திக்கப்படுவது
சேர் -நீயே ஆராய்ந்து பார்

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-

செரிதலை யுடைத்தான-தடாகங்கள்
சீர் -சப்த லஷணங்கள் கதமான சீர்களின் உடைய
ஆஸ்ரிதன உபதேச பரமான இப்பத்தே உபாதேயம் -உபாதேய தமத்வத்தை பலமாக அருளிச் செய்கிறார் –
ஒர்த்த -நிரூபிக்கப் பட்டவை -அனுசந்தியுங்கோள் என்றுமாம்
இப்பத்தை சேர் -என்று வினையாக்கவுமாம்-

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சேர்த்தடம் என்கிற இத்தை சேர் தடமாக்கி -பொய்கைகள் உடன் பொய்கைகள் சேர்ந்து இருக்கும் படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
அன்றியே
தென் குருகூர் என்று ஊர் பிரஸ்துதம் ஆகையாலே தடாகங்கள் சேர்ந்து இருந்துள்ள தென் குருகூர் என்று ஊருக்கு விசேஷணம் ஆதல்
அன்றிக்கே
சேர் -என்கிற இது கிரியா பதமாகக் கிடத்தல்

தென் குருகூர்ச் சடகோபன் சொல்-
ஹிதம் என்று சொல்ல இழிந்து அஹிதத்தைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று
ஆப்த தமரானவர் சொன்ன வார்த்தை என்கை-

சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே
எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை பாவினம் -என்று கவிக்கு அவயவமாய் இருப்பன சில உண்டு -அவற்றைச் சொல்லுதல்
30 சீர் /7 பந்தங்கள் /5 அடிகள் /43 தொடைகள்
அன்றிக்கே
உபாசக அனுக்ரஹத்தாலே-நம்மாழ்வார் உடைய அனுக்ரகத்தாலே – உபாச்யனுடைய கல்யாண குணங்களை தொடுத்த ஆயிரம் -என்னுதல்
ஆயிரத்து ஒர்த்த இப்பத்தே
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு சேதனருக்கு ஹிதமாவது ஏது என்று நிரூபித்து சொல்லப் பட்டது என்னுதல்
அன்றிக்கே
சேதனருக்கு ஹிதமாய் இருப்பது ஓன்று ஆகையாலே எப்போதும் ஓரப்படுவது -அனுசந்திக்கப்படுவது -என்னுதல்
ஒர்த்த இப்பத்தை நெஞ்சிலே சேர்
அனுசந்தி –
பரோபதேசம் பலரைக் குறித்து உபக்ரமிக்கையாலே மேல் ஏக வசனமான இடம் ஜாத்யபிப்ராயம்
-நம்மாழ்வார் திருவடி சம்பந்தி -பராங்குச பரகால யதிவராதிகள் –

————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

ஸம்ஸாரிணோ அப்யநு ஜிக் ருஷூரசவ் தயாளு
அல்பாஸ்திரேதர புமர்த்த ருசிம் நிரஸ்யந்
தத் த்யாக பூர்வ ஹரி பக்தி ஸூதாம் புதாநாம்
உத்தீபி நீமுபதி தேச முநிர் த்விதீய-2-வீடுமின் – உபதேசித்தார்

———————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஸ்வாமித்வாத்
ஸூஸ்திரத்வாத்
நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத்
தாத்ருக் சர்வ அநு கூல்யாத்
ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத்
சர்வத்ர பஷ பாதாத்
ஸூப விபவ தயா
மாநசாத்யர்ச்ச பாவாத்
சங்கோச உன்மோசகத்வாத்
ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –2-வீடுமின்

1-ஸ்வாமித்வாத்–உம்முயிர் வீடுடையான் -எல்லாருக்கும் ஸ்வாமி யாகையாலும்

2-ஸூஸ்திரத்வாத்-மின்னின் நிலையில-ஸ்வ வியதிரிக்தர் எல்லாரும் அஸ்திரராய்-தான் ஒருவனே ஸூஸ்திரராகையாலும்

3-நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத் -நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து –
அஹங்கார மமகாரங்கள் ஆகிற விரோதிகளை விட்ட பேர்களாலே ஸூக்ரஹனாகையாலும்

4-தாத்ருக் சர்வ அநு கூல்யாத்-எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே -அப்படி எல்லாருக்கும் அனுகூலனாய் இருக்கையாலும்

5-ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத் -உற்றது வீடு உயிர் செற்றது மன்னுரில்-நஸ் வரமான
கைவல்யத்தில் காட்டிலும் விலக்ஷணமான ஸ்வ பிராப்தி ரூப மோக்ஷத்தை உடைத்தாகையாலும்

6-சர்வத்ர பஷ பாதாத்-பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -அநாதியாக ஆஸ்ரயித்த ஸூரிகளில் காட்டிலும்
இன்று ஆஸ்ரயித்த சேதனர் இடத்தில் மிகவும் வாத்சல்யத்தை உடைத்தாகையாலும் –

7-ஸூப விபவ தயா -அடங்கு எழில் சம்பத்து -கட்டடங்க நன்றான சம்பத்தை உடைத்தாகையாலும்

8-மாநசாத்யர்ச்ச பாவாத்-உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-மநோ வாக் காயங்களால் -பஜிக்கப் படுபவனாகையாலும்

9-சங்கோச உன்மோசகத்வாத்-ஒடுங்கலும் எல்லாம் விடும் -அவித்யாதிகளால் -உண்டான ஞான சங்கோசத்தை விடுவிக்கையாலும்-

10-ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –வண் புகழ் நாரணன்-லோகங்களுக்கு எல்லாம் ஆதாரமுமாய் -அந்தர்யாமியுமாய்-
உபாயமுமாய் -உபேயமுமாய் -நிற்கையாலும் எம்பெருமான் சர்வ ஆராதனாய் இருக்கும் –
அவனை பஜியுங்கோள்-என்று வீடுமின் முற்றவும் -என்கிற தசகத்திலே பரரைக் குறித்து
ஸ்ரீ ஆழ்வார் உபதேசித்து அருளினார் என்கிறார் –

————————————————————————–

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து-——-2-

————————————————————————–

அவதாரிகை –

இதில் தம்முடைய திரு உள்ளம் போலே
அனுபவத்துக்குத் துணையாய்
திருந்தும்படி சம்சாரிகளைக் குறித்து பரோபதேசம் பண்ணுகிற
பாசுரத்தை அனுபவித்து அருளிச் செய்கிறார் –அனுவதித்து -என்றுமாம் –
அது எங்கனே என்னில்
கீழ் எம்பெருமான் உடைய பரத்வத்தை அனுபவித்தவர்
அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே
போதயந்த பரஸ்பரம் -பண்ணி அல்லது தரிக்க மாட்டாதே துணைத் தேட்டமாய்த்து
ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே
அவர்களைத் திருத்தி யாகிலும் சேர்த்துக் கொள்வோம் என்று
பரோபதேச பிரவ்ருத்தராய்
பகவத் வ்யதிரிக்த விஷயங்களின் தோஷ பாஹூள்யத்தையும்
பகவத் குண வைலஷண்யத்தையும் உபதேசியா நின்று கொண்டு
அப்ராப்த விஷயங்களை விட்டு
பிராப்த விஷயமான எம்பெருமானை பஜியுங்கோள்-என்கிற
வீடுமின் முற்றத்தின் அர்த்தத்தை
வீடு செய்து இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை-

————————————————————————–

வியாக்யானம்-

வீடு செய்து மற்றெவையும் –
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச -என்னும்படி
பரிக்ரஹங்கள் அடைய பரித்யஜித்து –

வீடு செய்து –
விடுகையைச் செய்து –

மற்றெவையும்
பகவத் வ்யதிரிக்தமாய் இருந்துள்ளவை எல்லாவற்றையும் நினைக்கிறது
பஜன விரோதிகளாய்
அஹங்கார ஹேதுக்களாய்
உள்ளது அடங்கலும் முமுஷூவுக்கு த்யாஜ்யம் இ றே
வீடுமின் முற்றவும் வீடு செய்து –என்றத்தைப் பின் சென்ற படி –
மின்னின் நிலையில் மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்தை இறை யுன்னுமின் நீரே -என்றும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -என்றும்
அது செற்று -என்றும்
உள்ள இம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்றும்
இப்படி சதோஷமாய் இருக்குமது எல்லாம் த்யாஜ்யமாய்
அத்தால்
சகுணமாய் இருக்குமது உபாதேயமாய் இ றே இருப்பது
அத்தைச் சொல்லுகிறது –

மிக்க புகழ் நாரணன் தாள் –
ஈறில வண் புகழ் நாரணன் -என்றத்தைப் பின் சென்றபடி
சம்ருத்தமான கல்யாண குண சஹிதனாய்
சர்வ ஸ்மாத் பரனான
நாராயணன் யுடைய சரணங்களை –

நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் –
வீடு செய்மின்
இறை யுன்னுமின் நீரே
என்று நாடாகவே ஆஸ்ரயிக்கும் படி இ றே இவர் உபதேசிப்பது
அத்தை நினைத்து இறே நாடு –நலத்தால் அடைய –என்கிறது

நலத்தால் அடைகை ஆவது
எல்லையில் அந்நலம் புக்கு -என்றும்
அவன் முற்றில் அடங்கே -என்றும்
ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே -என்றும்
இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
ஒடுங்க அவன் கண் -என்றும்
அங்கனா பரிஷ்வங்கம் போலே அபி நிவேசத்தாலே ஆஸ்ரயிக்கும் படியை விதித்த படி -என்கை –
இப்படி லோகத்தில் உண்டான ஜனங்கள் பக்தியாலே பஜிக்கும் படி நன்றாக உபதேசித்து அருளும் –

உபதேசத்துக்கு நன்மையாவது –
நிர் ஹேதுகமாகவும்
உபதேச்ய அர்த்தங்களில் சங்கோசம் இன்றிக்கே உபதேசிக்கையும்
என்றபடி –

திருவாய் மொழி தோறும் திரு நாமப் பாட்டு உண்டாகையாலே
அத்தையும் தத் பலத்தோடே தலைக் கட்டாக அருளிச் செய்கிறார் –
நீடு புகழ் வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
அதாவது
சம்சாரிகள் வைமுக்கியம் பாராமல்
பரோபதேசம் பண்ணுகையாலே
நித்யமுமாய்
நெடுகிப் போருகிற யசஸை யுடையவராய்
தர்ச நீயமான
உதாரமான
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் -என்னுதல்
அன்றிக்கே
வண்மை-வண் தென் குருகூர் வண் சடகோபன் -என்னும்படி -ஆழ்வாருக்கு விசேஷணம் ஆதல்
இப்படியான தம் ஔதார்யத்தினாலே
இந்த மகா பிருத்வியில் உண்டானவர்கள் எல்லாரும்
பகவத் பஜனத்தாலே சத்தை பெற்று வாழு படி –
இடைக்காதர் வள்ளுவர் ஔவையார் -குரு முநிவர் -பாசுரங்களே பீஜம் -என்கிறார்கள்

பண்புடனே பாடி யருள் பத்து-
பண்பு -ஸ்வபாவம்
தம்முடைய கிருபா ஸ்வபாவத்திலே யாதல்
ஔதார்ய ஸ்வபாவத்திலே ஆதல்
பரப்பறப் பாடி அருளினது பத்துப் பாட்டாயிற்று
சேரத் தடத் தென் குருகூர் சடகோபன் சொல் சீர்த்தொடை
ஆயிரத்தோர்த்த இப்பத்து -என்றத்தை பின் சென்றது
பாட்டுக்கு கிரியையும் பத்துக்கு கருத்தும் -என்கையாலே
பத்துப் பாட்டுக்கும் உயிர்பாட்டு பிரதானமாய் இருக்கும்-
பாட்டுக்குக் கிரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேசப் பத்து –ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -216
கிரியை -வினைச் சொல்
அந்த நிதானப் பாட்டுக்கு சேஷமாய் இருக்கும் மற்றப் பாட்டு அடங்கலும்
இது இந்த திருவாய்மொழி திவ்ய பிரபந்தத்துக்கு எல்லாம் உள்ளது ஓன்று இ றே
வீடுமின்என்று- த்யாஜ்ய உபாதேய- தோஷ குண -பரித்யாக சமர்ப்பண- க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து -என்று ஆச்சார்ய ஹிருதயத்திலே -சூர்ணிகை -219–நாயனாரும் அருளிச் செய்தார் -த்யாஜ்யம் -வீடு மின் முற்றவும் -தோஷம்- மின்னின் நிலையில -பரித்யாகம் நீர் நுமது -என்று பிரித்து -மேலே –
உபாதேயம் வீடு உடையான் -குணம் எல்லையில் அந்நலம்-சமர்ப்பணம் -இறை சேர்மினே -என்று கொள்ள வேண்டும்
இத்தை பக்தி பரமாக யோஜித்து-பாஷ்யகாரர் பாஷ்யம் தலைக் கட்டி அருளின பின்பு
பத்தி பரமாகவே யோஜித்து க்ரமத்தைப் பற்ற வாயிற்று
ஆச்சார்யர்கள் எல்லாரும் அப்படியே யோஜிததார்கள்-இவரும் அப்படியே அருளிச் செய்தார்

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ  நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ  நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: