இரண்டாம் திருவாய்மொழியிலே –
இப்படி எம்பெருமானுடைய பரத்வத்தை அனுபவித்தவர் -அவ்வனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே போதயந்த பரஸ்பரம் என்னும்படியாலே
சிலரோடு உசாவி அல்லது தரிக்க மாட்டாத தசை வருகையாலும் –
ஏக ஸ்வாது ந புஞ்ஜீத -என்கிறபடியே தனியே அனுபவிக்கும் விஷயம் அல்லாமையாலும்
இவர் தாம் தனியே அனுபவிக்க ஷமர் அல்லாமையாலும்
துணை தேடி அதுக்கு ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே
எல்லாரையும் திருத்தி யாகிலும் அவர்களோடு எம்பெருமானை அனுபவிப்போம் என்று நினைத்து –
அவர்களைத் திருத்தும் விரகு எங்கனே என்று பார்த்து அருளி
சேதனர் ஆகிறார் -பொல்லாது கண்டால் கை விடவும் -நல்லது கண்டால் கைக் கொள்ளவும் கடவராய் இருப்பர்
ஆனபின்பு சம்சாரத்தின் தன்மையைக் காட்டியும் பகவத் விஷயத்தின் நன்மையைக் காட்டியும்
திருத்துவோம் என்று பார்த்து அருளி
இவர்களுக்கு சம்சாரத்தின் உடைய அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களையும்
சர்வராலும் ஸ்ப்ருஹணீயனான எம்பெருமான் படியையும்
உபதேசித்து அருளி அவனை பஜியுங்கோள்-என்று பக்தி யோகத்தை அருளிச் செய்கிறார் –
———————————————————————–
பகவத் வ்யதிரிக்தமான சர்வ விஷயங்களையும் விட்டு சர்வ சேஷியான எம்பெருமான் திருவடிகளிலே ஆத்மாவை சமர்ப்பியுங்கோள் -என்கிறார்
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே –1-2-1-
வீடுமின் –
விடுமின் -என்றபடி
இன்னத்தை விடுங்கோள் என்னாது ஒழிவான் என் என்னில் -சிறு பிரஜை சர்ப்பத்தைப் பிடித்துக் கொண்டு இருந்தால் விட்டுக் கொள் என்று பின்னை இ றே சர்ப்பம் எனபது –
அது போல் விடுகிறவனுடைய த்யாஜ்யாதிசயம் தோற்றுகைக்காக முதலிலே விடுங்கோள் என்கிறார்
உபதேசம் அஷட்கர்ணமாய் இருக்க பஹூர் வசனத்தாலே சொல்லிற்று -சிலர் தாந்தராய் அர்த்திக்கச் சொல்லுகிறார் அல்லாமையாலும்
-அனர்த்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் எல்லாரையும் குறித்துச் சொல்லுகிறார்
எத்தை விடுவது என்னும் அபேஷையிலே
முற்றவும் –
என்கிறார் –
அஹம் மமேதி சண்டால-சண்டாலர் குடியிருப்பை பிராமணனுக்கு ஆக்கும் போது சண்டால ஸ்பர்சம் உள்ள பதார்த்தம் அடைய
த்யாஜ்யம் ஆனால் போலே -அஹங்கார கர்ப்பமாக ஸ்வீகரித்த வற்றில் த்யாஜ்யம் அல்லாதன இல்லை -என்கை
இனி
உம்முயிர் வீடுடை யானிடை -என்று அமைந்து இருக்க
வீடு செய்து
என்று அனுபாஷிக்கிறது
விடுகை தானே பிரயோஜனம் போந்து இருக்கை
ராஜ புத்திரன் சிறையில் கிடந்தால் முடி சூடுவதிலும் சிறை விடுகை தானே பிரயோஜனமாய் இருக்கும் இ றே
உம்முயிர் வீடுடை யானிடை
உங்கள் ஆத்மாவையும் சரீரத்தையும் உடையவன் பக்கலிலே உங்கள் ஆத்மாவை தனக்கு சரீரமாக உடையவன் பக்கலிலே என்னுதல்
உங்கள் ஆத்மாவை விடும் இடத்தில் உடையவன் பக்கலிலே என்னுதல்
மோஷ ப்ரதன் பக்கலிலே என்னுதல்
வீடு
விடுகையை -சமர்ப்பிக்கையை
செய்ம்மினே
இசையுங்கோள்
அவன் நினைவு நித்தியமாய் இருக்க நீங்கள் இசையாமல் இ றே இழந்து போந்தது
யமோ வைவஸ்வதோ ராஜா யச்தவைஷ ஹ்ருதி ச்த்தித-தே நசேதவிவா தஸ்தே மா கங்காம் மா குரூன்கம –
————————————————————————————————
இரண்டாம் பாட்டில்
நெடும் காலம் பழகின விஷயங்களை விட ஒண்ணுமோ -என்னில்
அஸ்த்ரத்வாதி தோஷங்களை அனுசந்திக்கவே விடுகை எளிது என்கிறார்
மின்னின் நிலையில் மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –1-2-2-
மின்னின் நிலையில்
மின்னுக்கு உள்ள நிலையும் இல்லை
சம்பதஸ் ஸ்வப்ன சங்காசா யௌவனம் குஸூமோபமம் தடிச்சஞ்சலமாயுச்ச கஸ்ய ச்யாஜ்ஜா நதோ த்ருதி –
அது தோற்றி நசிக்கும்
இது கர்ப்பத்தில் நசிக்கும்
தோற்றின போதே மாயக் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு அதுக்கு
இது சில நாள் இருக்கிலும் இருக்கும் -அஸ்திரம் என்று ஹிதத்தில் ப்ரவர்த்திக்க ஒட்டாது -ஸ்திரம் என்று விச்வசிக்கப் பண்ணி நசிக்கும் –
மன்னுயிர் ஆக்கைகள்
உயிர் மன்னி விடேன் என்று பற்றிக் கிடக்கிற சரீரங்கள்
நித்யனான ஆத்மாவினுடைய சரீரங்கள் என்னவுமாம்
உயிர் என்கிற ஏக வசனத்துக்கும் ஆக்கைகள் என்கிற பஹூ வசனத்துக்கும் கருத்து -ஓர் ஆத்மாவே கர்ம அனுகுணமாக
அநேக தேஹங்களிலே நலிவுபடும் என்று தோற்றுகைக்காக-
மகிழல கொன்றே போல் –வாசாம்சி ஜீர்ணாநி –
அன்றிக்கே ஜாதிக வசனம் ஆகவுமாம் –
என்னும் இடத்து
என்னும் ஸ்தலத்தில்
என்னும் இவ்வர்த்தத்தில் என்னவுமாம் –
இறை யுன்னுமின்
இதினுடைய தோஷம் எல்லாம் அறிய வேண்டா
ஏக தேச அனுசந்தானத்தாலே விரக்தி பிறக்கும்
நீரே
தோஷ அனுசந்தானத்துக்கு சாஸ்திரம் வேண்டா
தோஷம் பிரத்யஷம் ஆகையாலே உங்களுக்கே தெரியும் –
————————————————————————————————————–
மூன்றாம் பாட்டில்
அநாதி காலம் பற்றிப் போந்த விஷயங்களை விடும் போது பற்றின காலம் எல்லாம் வேண்டாவோ தனித்தனியே விடுகைக்கு என்னில்
அது வேண்டா எளிதாக விடலாம் என்று த்யாஜ்யத்தை இரண்டு ஆகாரத்தாலே சுருங்க உபதேசிக்கிறார் –
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3-
நீர் நுமது -என்று
அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை
நான் என்னது -என்னும் அர்த்தத்தை பிறர்க்கு உபதேசிக்கப் புக்கால் -நீங்கள் என்றும் உங்களது என்றும் இ றே சொல்லுவது
அதாகிறது -அனாத்மயாத்மா புத்தியும் அஸ்வே ஸ்வ த்வய புத்தியும்
நான் என்னது — என்னில் நா வேம் இ றே
அனாத்மன்யாத்ம புத்திர்யா அச்வேஸ் வமிதி யாமினி அவித்யாதரு சம்பூதி பீஜமேதத் த்விதாஸ்திதம்-என்று சம்சார பீஜத்தையும்
அச்யுதாஹன் த்வாச்மீதி சைவ சம்சார பேஜஷம் என்று பரிகாரத்தையும் சொல்லிற்று இ றே –
இவை வேர் முதல் மாய்த்து-
இவற்றை சவாசனமாகப் போக்கி
இது அக்னி நா சிஞ்சேத்-போலே துஷ்கரம்
இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும்
அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது
ஆகையாலே இதரே தராஸ் ராயக்ரச்தம்
ஆனால் இதற்குப் பொருள் என் -என்னில் -ஆச்சார்ய சேவையாலும் சாஸ்திர அப்யாசத்தாலும் இவை அபுருஷார்த்தம் என்று அத்யவசிக்கை
இரண்டு வ்ருஷம் சேர நின்றால்-ஒன்றிலே குட்டமிட்டுப் பெருங்காயத்தை வைத்தால் மற்றையது நிற்க இது க்ரமத்தால்
உலர்ந்து போமா போலே -இந்த ஜ்ஞானம் பிறந்தால் இவை ஸ்வ கார்யம் செய்ய மாட்டாது
பீஜான் யக் ந்யுபதக்தானி -இத்யாதி
ரஷகன் அவசர ப்ரதீஷனாய் இருக்க இவன் பக்கலிலே விலக்காமை யுண்டானால் விரோதி போகிக்கு தட்டில்லை என்கை –
இறை சேர் மின்
சர்வேஸ்வரனை ஆஸ்ரயிங்கோள் –
கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போல் இ றே சம்சாரிக்கு பகவத் சமாஸ்ரயணம்
உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே-
ஆத்மாவுக்கு அத்தோடு ஒத்த சீரியது இல்லை
பிரதமத்தில் ஹிதமாய் உதர்க்கத்தில் பிரியமாய் இருக்கும்
நேர் –ஒப்பு நிறை -மிகுதி -ஒத்ததும் மிக்கதும் இல்லை என்னவுமாம்
சம்சார ஆர்ணவ மக்நாநாம் –
—————————————————————————————————
நாலாம் பாட்டில் பற்றப்படும் விஷயத்தின் நன்மை சொல்லுகிறார்
இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே –1-2-4-
நச்வரமான அசேதனத்தின் ஸ்வ பாவமும் –
ஏக ரூபனான சேதனன் படியும் இன்றிக்கே இருக்கும் அவன் ஸ்வ ரூபம்
இல்லது என்று துச்சத்வம் இத்யாத்வங்களை சொல்லுகிறது அன்று -நச்வரதையைச் சொல்லுகிறது
உள்ளது என்று அஸ்தித்வ மாத்ரத்தை சொல்லுகிறது அன்று -நித்யதையைச் சொல்லுகிறது
அவன் ஸ்வரூபம் தான் இருக்கும் படி என் என்னில்
அசங்க்யேய கல்யாண குணங்களை யுடைத்தாய் இருக்கும் –
எல்லையில்லா அந்நலத்தை யுடைத்து -என்னுதல்
எல்லையில்லா அந்நலம் -என்னுதல்
புல்கு -ஆஸ்ரயி
அபிமத விஷயத்தை அணைத்தால் போல் ஆஸ்ரயணம் தான் இனிதாய் இருக்கையாலே புல்கு என்கிறார்
பற்று அற்று
பிராக்ருத பிராக்ருதங்களில் சங்கத்தை விட்டு –
———————————————————————————————————-
பகவத் சமாஸ்ரயணத்துக்கு அந்தராய பரிஹாரத்தை அருளிச் செய்கிறார்
அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-
அற்றது பற்று எனில்
பற்று அற்றது என்னில்
இதர விஷயங்களில் பற்று அற்ற மாத்ரத்திலே ஆத்மா மோஷத்தை
உற்றது
கையுற்றது
வீடுயிர்
அநித்யமாய்-ஜடமான அசித் சம்சர்க்கம் அற்றவாறே -நித்யமாய்-ஜ்ஞானானந்த லஷணமாய் ஆத்மா தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும் –நிச்சதம்
செற்றது
அத்தை ஜெயித்து -அத்தை முகம் சிதறப் புடைத்து
மன்னுறில்
நிரதிசயமான பகவத் கைங்கர்யத்தைப் பெற்று நிலை நிற்க வேண்டி இருந்தாய் ஆகில்
அற்றிறை பற்றே —
இதர விஷயங்களிலே தொற்று அற்று -சர்வேஸ்வரனைப் பற்று என்னுதல்
ஆஸ்ரயிக்கும் போதே உன்னை பகவச் சேஷமாக அத்யவசித்து ஸ்வாமி யானவனை ஆஸ்ரயி என்னவுமாம் –
அன்றிக்கே
விபக்தியை மாறாடி இறையைப் பற்றி அத்தை அறுங்கோள் என்னவுமாம் –
——————————————————————————————————-
நாம் புறம்பு உள்ளவற்றை விட்டு அவனைப் பற்றினால் -அவன் சர்வேஸ்வரன் அன்றோ -நமக்கு முகம் தருமோ என்னில்
ஈஸ்வரத்வம் வந்தேறி என்னும் படி சங்க ஸ்வ பாவன் காண்-என்கிறார் –
பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-
பற்றிலன்
பற்று -உண்டு சங்கம் –
அத்தை வாசஸ் ஸ்தானமாக யுடையவன் –
பற்றிலன்
பற்று இலான்
பற்றிலே உள்ளான் -என்னவுமாம் -சங்க ஸ்வ பாவன் -என்றபடி –
யீசனும் –
ஈஸ்வரனும்
ஈஸ்வரத்வத்தை தவிர்க்க ஒண்ணாமை யாலே கிடக்கும் அத்தனை
இஸ் சங்கம் குணம் ஆகைக்காகக் கிடக்கிறது
பயப்படுகைக்கு உடல் அன்று
பிரசாத பரமௌ நாதௌ
முற்றவும் நின்றனன்
சமோஹம் சர்வ பூதேஷு -என்கிறபடியே ஆஸ்ரயணீத்வே சர்வ சமானாய் இருக்கை
பற்றிலையாய் –
நீயும் அவன் பக்கலிலே சங்க ஸ்வ பாவனாய்
அவன் முற்றில் அடங்கே —
அவனுடைய முற்றிலும் அடங்கு –
எல்லா சேஷ வ்ருத்தியிலும் அந்வயி
அதவா –
நித்ய சூரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவன் நித்ய சம்சாரிகளான நம்மை அங்கீ கரிக்குமோ என்னில்
இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் நித்ய ஆஸ்ரிதர் பக்கல் சங்கத்தை விட்டு நம்மையே தாரகாதிகளாக நினைத்து இருப்பான் ஒருவன் –
யீசனும் பற்றிலன்-
நித்ய ஆஸ்ரிதரை யுடையனாய் இருந்தானே யாகிலும் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால்
அவர்கள் பக்கல் சங்கத்தை யுடையவன் அல்லன்
த்வயி கிஞ்சித் சமா பன்னே -இத்யாதி
முற்றவும் நின்றனன்
நாமே தனக்கு தாரகாதிகளாக நினைத்து இருக்கும்
பற்றிலையாய் –
நீயும் புறம்புள்ள சங்கத்தைத் தவிர்த்து –
நாசகரமான நித்ய சம்சாரத்தில் சங்கத்தை விட்டு என்கிறது
அவன் தனக்கு நித்ய போக்யமான நித்ய விபூதியில் சங்கத்தை யன்றோ விடுகிறது
அவன் முற்றில் அடங்கே
அவனாகிற எல்லாவற்றிலும் அடங்கு –
அவனே தாரகாதிகளும் சர்வவித பந்துவும் எல்லாவுமாகப் பற்று
மாதா மிதா ப்ராதா —
வா ஸூ தேவஸ் சர்வம் –
உண்ணும் சோறு பருகும் நீர்
சேலேய் கண்ணியர்-
ஏகைக பல லாபாய –
இது பட்டர் நிர்வாஹம் –
————————————————————————————————-
சங்க ஸ்வ பாவனே யாகிலும் -அபரிச்சேத்ய உபய விபூதி மகா விபூதியை இருக்கையாலே நம்மால் முகம் கொள்ள ஒண்ணுமோ என்னில்
-எம்பெருமானோடு உள்ள சம்பந்தத்தை உணரவே கிட்டலாம் என்கிறது
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-7-
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு –
அடங்க எழிலான சம்பத்தை ஓன்று ஒழியாமே கண்டு
புறம்பு ஓர் ஆச்ரயித்தில் காணாத இஸ் சம்பத்தை ஓர் இடத்தே சேரக் கண்டு –
அவன் விபூதி யாகில் கட்டடங்க உபாதேயமாய் இ றே இருப்பது
முக்தனுக்கும் ததீயத்வ ஆகாரேணே லீலா விபூதி அனுபாவ்யமாய் இ றே இருப்பது
ஈசன் அடங்கு எழில் அஃது என்று –
என் நாயகன் உடைய ஐஸ்வர்யம் ஈது என்று அனுசந்தித்து
அடங்குக உள்ளே –
அந்த சம்பந்த ஜ்ஞானம் அடியாகத் தானும் அவன் விபூதியிலே ஒருவன் என்று அன்வயிக்கலாம்
சமுத்ரம் அபரிச்சின்னம் ஆனாலும் அதில் உள்ள சத்த்வங்களுக்கு வேண்டினபடி புகலாம் இ றே
அதே போலே சம்பபந்த ஜ்ஞானம் உண்டாகவே கிட்டலாம்
சம்பந்த ஜ்ஞானம் இல்லாத த்ருணத்தை இ றே கடல் கரையிலே ஏறித் தள்ளுவது
சம்பந்த ஜ்ஞானத்தை பிறப்பிக்கி இ றே கடக க்ருத்யம்
இங்கே பட்டர் பிதா புத்ரர்கள் இருவரும் படவோடின கதையை அருளிச் செய்வர்
—————————————————————————————————–
பஜன பிரகாரம் சொல்லுகிறது
உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8-
உள்ளம் உரை செயல்
மநோ வாக் காயங்கள்
உரை செயல் அன்று -தத் ஆஸ்ரயமான கரணங்களை நினைக்கிறது –
உள்ள
இன்று தேட வேண்டா -சம்பன்னமாய் இருக்கை
விம்மூன்றையும்
சந்நிஹதங்களும் விதேயங்களுமான இம்மூன்றையும்
இவற்றுக்கு அவ்வருகே ஓன்று தேட வேண்டா -இவையே அமையும்
ஈச்வராய நிவேதிதும் -என்று நிரூபித்தால் பகவத் விஷயத்தில் சமர்ப்பிக்கைக்காக வாய் இருக்கும்
கெடுத்து
அவற்றுக்கு உண்டான பாஹ்ய விஷய ப்ராவண்யத்தைத் தவிர்த்து
இறை உள்ளில் ஒடுங்கே –
வகுத்த விஷயத்தில் இவற்றையும் கொண்டு புக்கு அடிமை செய்யப் பார்
அன்றிக்கே
ஒடுக்கு என்று மெல் ஒற்றை வல் ஒற்றாக்கி அவன் திருவடிகளிலே சமர்ப்பி என்றுமாம்
இப்பாட்டில் பஜிக்கைக்கு புறம்பு ஒரு உபகரணம் சம்பாதிக்க வேண்டா
முன்னமே யுண்டானவற்றின் வியபிசாரத்தை தவிர்த்து வகுத்த விஷயத்திலே சமர்ப்பியுங்கோள்-என்கிறார்
——————————————————————————————–
பஜனம் எளிதானாலும் அநாதி கால சஞ்சிதமான அவித்யாதிகள் பஜன ப்ராப்திகளுக்கு விரோதி அன்றோ -என்னில்
பஜிப்போம் என்கைக்கு அடியான ஸூ க்ருதமே வேண்டுவது -அது அடியாக பஜனத்திலே இழியவே அவை அடங்க கழியும் என்கிறது –
ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-
ஒடுங்க அவன் கண்
ஈச்வரோஹம் என்று இருக்கை தவிர்ந்து -அவனுக்குப் பிரகாரமாக அவன் அபிமானத்துக்கு உள்ளே அந்தர்பவிக்கவே
ஓடுங்கலும் எல்லாம் விடும்
ஒடுங்கல் -ஒடுக்கத்தை பண்ணுமவை –
ஆத்மாவுக்கு சங்கோசகங்களான அவித்யாதிகள் எல்லாம் போம் –
ஒடுங்கல் -வந்தேறி யாய் -ஒடுங்கிக் கிடந்தவை என்னுமாம்
ஸ்வரூபாதி ரேகியாய் ஒடுங்கிக் கிடந்த அவித்யாதிகள் எல்லாம் போம்
எல்லாம் என்கையாலே -பஜன விரோதியோடு -பிராப்தி விரோதியோடு -வாசி அற சர்வமும் நசிக்கும் என்கிறது
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-
பின்பு சரீர அவசானமே விளம்பம்
காமிநி தன் உடம்பில் அழுக்கைக் கழற்றி போகத்திலே அந்வயிக்க அவசர ப்ரதீஷியையாய் இருக்குமா போலே சரீர அவசானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கை
உடையவர் குன்றத்து சீயரை -சிங்கப் பிரான் இன்று அயநம் கிடாய் என்ன – நிதானம் அறியாமையாலே திகைத்து நிற்க
ப்ராப்தி பிரதிபந்தகமான காலத்திலே ஆறு மாசம் போந்தது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ -என்று அருளிச் செய்தார்
க்ருதக்ருத்யா -இத்யாதி
எம்பார் -அஸ்திரமான சரீரம் தானே நசியா நிற்க இவனுக்குத் தான் மநோ ரதிக்க வேணுமோ -என்று அருளிச் செய்வர் –
————————————————————————————
ஆஸ்ரயணத்திலே இழிவார் -திருமந்த்ரத்தை சாரார்த்தமாக அனுசந்தித்துக் கொண்டு ஆஸ்ரயிங்கோள் என்கிறார்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-
எண் பெருக்கு
இத்தால் -ஜீவ அனந்யத்வத்தைச் சொல்கிறது
அந் நலத்து –
கல்யாணமான ஜ்ஞானாதி குணங்களை யுடைத்தாகை
ஒண் பொருள்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை
ஈறில
நித்தியமாய் இருக்கை –இப்படிப் பட்ட ஆத்மா வர்க்கத்தையும்
வண் புகழ் –
கல்யாண குணங்களையும் யுடையனாய் இருக்கை
ஈறில -என்று குணங்களுக்கு விசேஷணம் ஆகவுமாம்
நாரணன் –
நித்ய சித்த கல்யாண குணங்களோ பாதி ஜீவ சமூஹத்தையும் ஸ்வ அதீனமாக யுடையவன் ஆகையாலே -நாராயணன்
திண் கழல் சேரே —
இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி –
———————————————————————————————————————-
நிகமத்தில்
பகவத் குணங்களைத் தொடுத்த ஆயிரம் திருவாய் மொழியிலும் ஆராய்ந்து சொல்லப் பட்டன இவை என்கிறார் –
சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-
சேரத் தடம்
ஊரோடே சேர்ந்த தடம் -தன்னிலே சேர்ந்த தடம் என்னுதல்
சீர்த் தொடை யாயிரம்
சீர் என்று கவிக்கு உறுப்பான அலங்காரங்களைச் சொல்லுதல்
பகவத் குணங்களைச் சொல்லுதல்
ஒர்த்த விப்பத்து
ஓர்ந்து சொல்லப் பட்டன இவை
பிரஜைகள் துர்க்கதியைக் கண்டு இவற்றினுடைய உஜ்ஜீவ உபாயத்தை திரு உள்ளத்திலே ஆராய்ந்து அருளிச் செய்தது
இப்பத்தைச் சேர் -என்று க்ரியாபதமாக ஒருவன் சொன்னான்
இப்பத்தை நெஞ்சில் சேர்-அனுசந்தி
பர உபதேசம் பலரைக் குறித்து உபக்ரமிக்கையாலே ஏக வசனமான இடம் ஜாத்யபிப்ராயம் –
————————————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply