அவதாரிகை –
ஸூந்யவாதியை நிரசிக்கிறார் -நிரசிக்கிறபடி தான் என் என்னில் பாஷ்யத்தில் ஸூந்யவாதியை நிரசித்த க்ரமத்திலே –சர்வதா அனுபபத்தே ச –
இவ்வாழ்வார் தாம் அடியாக பாஷ்யகாரர்க்கு அவனை நிரசிக்கலாம் -இது கொண்டு சூத்திர வாக்கியம் ஒருங்க விடுவர் -ஸ்ரீ பாஷ்யகாரர் –
இவர் தாம் அவனை நிரசிக்கைக்கு அடி என் என்னில் அதுவும் இவ்வாழ்வார் பக்கலிலே உண்டு
புறம்பே சிலர் ப்ரஹ்மாதிகள் பக்கலிலே ஈச்வரத்வ பிரதிபத்தியைப் பண்ணி -பிரமாணங்களையும் அதுக்கு ஈடாக நியமித்துக் கொண்டு
வந்து தோற்ற தாம் அங்கீ கரித்தவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும்
ஜகத் அவனுக்கு சரீரதயா சேஷம் என்றும்
தத் பிரதிபாதிக பிரமாணம் வேதம் என்றும்
தம்முடைய மதத்தை உபன்யாசித்து நின்றார் கீழ் –
இவை இத்தனையும் இல்லை என்னும் போது-பூர்வ பஷமாக இவற்றை அங்கீ கரித்து-அநு பாஷித்து கழிக்க வேணும் இ றே
அதில் இவற்றை அங்கீ கரித்து அநு பாஷித்து அவனால் இல்லை என்னப் போகாது
முதலிலே ஸூந்யம் என்னில் சர்வ ஸூந்யவாதம் சித்தியாது -இனி உன்னைக் கேட்போம் –
நீ தான் ஈஸ்வரன் உளன் என்கிற சொல்லாலே அவன் இல்லாமையை சாதிக்கப் பார்க்கிறாயா
இல்லை என்கிற சொல்லாலே இல்லாமையை சாதிக்கப் பார்க்கிறாயா -என்ன –
இங்கன் விகல்பிக்கைக்கு கருத்து என் -என்ன -உளன் என்கிற சொல்லாலே சொன்னால் உனக்கு அபிமதமான அபாவம் சித்தியாதோபாதி
இல்லை என்கிற சொல்லாலே உனக்கு அநபிமாதார்த்தமே காண் சித்திப்பது –
இங்கே உள்ளது இப்போது உள்ளது இப்படியாக உள்ளது -பாவம்
இங்கே இல்லை இப்போது இல்லை இப்படியாக இல்லை -அபாவம் என்றபடி
ஆனபின்பு நீ இல்லை என்கிற சொல் கொண்டே அவன் உண்மையை சாதிப்பான்
லோகத்தில் பாவ அபாவ சப்தங்களுக்கு யாதொருபடி பொருள் கொள்ளுகிறோம்
அப்படி கொள்ளில் நீ நினைக்கிற அர்த்தம் உன்னால் சாதிக்கப் போகாது –
அங்கனே கொள்ளாயாகில் வாதம் தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை – முயல் கொம்பு இல்லை போலே நிருபாதிக நிஷேதம் செய்தாயாகில்
நிஷேதிக்கிற வசனமும் இல்லை என்றதாகுமே –தெள்ளியதாம் நம்பிள்ளை செப்பு நெறி -வாசித்தாலே புரிந்து கொள்ளலாம் –
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-
பாஹ்யரில் முதலான சர்வ சூன்ய வாதி நிரசனம் -இல்லை -எனபது இயற்கை -தேட பிரமாணம் வேண்டாம் என்பான் –
பிரமாணம் பிரமேயம் பிரமாதா அனைத்தும் சூன்யம் என்பான் –
மண்ணின் அபாவம் குடம் உருவாக -இல்லாததில் இருந்து உருவானது என்பான் –
காரண தன்மை கார்யத்தில் இருக்குமே -அபாவத்தில் இருந்து உருவானதும் அபாவமாக தானே இருக்கும் -என்பான்
சர்வம் சூன்யம் சொல்வதும் சூன்யமா -அப்படியானால் சத்தாகுமே
இந்த வாக்கியம் மட்டும் சூன்யம் இல்லை என்றால் சர்வம் சூன்யம் சித்திக்காதே –
சர்வதா அனுபபத்தேச்ச -பொருந்தாத படியால் –
அஸ்தித்வ நாஸ்தித்வ விசிஷ்டன் ப்ரஹ்மம் -இரு தகைமையோடு-
முயல் கொம்பு இல்லை -முயலும் இல்லை கொம்பு இல்லை என்றது இல்லை இரண்டும் சேர்ந்து இல்லை
-முயல் உண்டு கொம்பு உண்டு அஸ்தி அர்த்தம் வந்ததே -சர்வம் சூன்யம் இல்லையே
–உளன் எனில் உளன் அலன் -இலன் சொல்லாமல் -உளன் அலன் -என்கிறார் -எனிலும் -உம்மை தொகை சேர்த்துக் கொண்டு
உளன் வாங்கிக் கொண்டு தான் இலன் -சொல்ல வேண்டும் என்று காட்ட —
சத் பாவம் அஸ்தித்வ விசிஷ்டம் –அசத் பாவம் நாச்தித்வ விசிஷ்டம் –இரண்டும் இல்லாமல் -ஆஸ்ரய விதுர ஸ்திதி இல்லாமையாலே
ஜகத் சூன்யம் சொல்லும் பொழுதே –பிரதிஜ்ஞை வேளை- ஜகம் சத் பாவமா அசத் பாவமா –
அருவம் -சூஷ்ம ரூபத்துடன் -அபிரகாச ரூபம் -நாஸ்தித்வ விசிஷ்டம் / உருவம் -ஸ்தூல ரூபத்துடன் -பிரகாச ரூபம் -அஸ்தித்வ விசிஷ்டம்
நகத்தி வைக்க முடியும் லௌகிக வஸ்துவுக்கே இப்படி -என்றால் அபரிச்சேத்ய ப்ரஹ்மத்துக்கு சொல்ல வேண்டாவே –
சர்வ சூன்யம் -சத் -அசத் -அந்யதா மூன்றாவதா -எந்த வாதம் செய்தாலும் உனக்கு அபிமதமான -துச்சத்வம் சித்தியாது –
ப்ரதீதி சேத்-கிருஷ்ணம் ஜகத் நாஸ்தி சூன்யமேவ தத்வம் தோற்றுதல் -இஷ்டா ந ந நிகில -நிஷேது -ந —
சோபாதிக நிஷேதம் வஸ்து தேச கால வரையறைக்கு உட்பட்ட நிஷேதம் —
நிருபாதிக நிஷேதம் –முயல் கொம்பு -இங்கும் சம்பந்தம் இல்லை என்பதே -வஸ்து உண்டே
ஸ்ருதியும் அஸ்மின் மதே-விஜயதாம் -திருப்பாத துளசி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –
வஸ்து விசிஷ்டமாகவே இருக்கும் -இதுவே விசிஷ்டாத்வைதம் —
ரசபம் -கழுதை -மண் -குடத்துக்கு கழுதை காரணம் -நியத காரணம் இல்லை -நியத பூர்வ வர்த்தித்வம் -அபாவம் –
அனந்யதா சித்தமாக இருக்க வேண்டும் காரணம் ஆனால்
இல்லாமையில் இருந்து இல்லாமை உருவாகுமா -அசத்காரிய வாதம் –
பழம்-பழச்சாறு -அபாவம் ஆனதே பழம் -இத்தைக் கொண்டு குடம் ஆக்குவாயா
அவஸ்த்தான்தரம் தான் –குடம் மண்ணுக்கு -அபாவம்
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
ஈஸ்வர சத்பாவம் -முதலிலே இல்லை என்கிற நீ -அவன் உண்மைக்கு இசையாய் இ றே
நான் உளன் என்கிறாப் போலே சொல்லில் -lip service -தான் உளன்
ஈசிதவ்ய நிரபேஷமாக வன்று இ றே ஈஸ்வரன் உளனாவது–ப்ரத்யோகம் உண்டே –
அப்பா வந்தார் என்றதும் பிள்ளை இருக்கிறார் என்பதும் சித்தம் அன்றோ —
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் -என்கிறபடியே ஜகத்து அவனுக்கு சரீரதயா சேஷமாய் உண்டாம் –
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் அலன் என்பாயோ -அப்போது அபாவ தர்மியாய்த் தோற்றும்
அப்போது நாஸ்தி சப்த வாச்யமாய் அவஸ்தாந்திர பாக்காய்க் கொண்டு இவற்றின் உண்மை தோற்றும்
கடோ அஸ்தி என்றால் -வாயும் வயிருமான ஆகாரம் தோற்றும்
கடோ நாஸ்தி என்றால் -நாஸ்தித்வ தர்ம விசிஷ்டமாய்த் தோற்றும்
இங்கு இல்லை என்றால் -வேறு ஓர் இடத்தில் உண்டாம்
இப்போது இல்லை என்றாகில் வேறு ஒரு கால விசேஷத்திலே உண்டாம்
எங்கும் எப்போதும் ஒரு பிரகாரத்தாலும் கடம் இல்லை என்னக் கூடாமையாலே நிருபாதிக நிஷேதம் இல்லை இ றே –
சோபாதிக நிஷேதம் கால தேச வஸ்து -நிருபாதிக நிஷேதம் இரண்டாலும் உடையதாய் தானே தோற்றும்
இன்மை என்னும் தர்மத்தை உடையதாய் தோற்றும்
முன்பு உள்ளது என்னும் தர்மத்தை உடையதாய் தோற்றிற்று-வஸ்து விசிஷ்டமாகவே இருக்கும் -இதுவே விசிஷ்டாத்வைதம்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளனாகிற இத்தையும்
இலனாகிற இத்தையும்
இவை இரண்டையும் குணமாக உடையனாகையாலே -இவை இரண்டும் இரண்டு தர்மம் ஆயிற்று
இவ்வருவுகள் -அவன் அருவம் உள -நாஸ்தி சப்த -சூஷ்ம -அப்ரகாசமாக ரூபமாகக் கொண்டு கூடியே இருக்கும்
அவன் உருவம் இவ் உருவுகள் உள -சரீரதயா சேஷமாய் ஸ்தூல விசிஷ்டமாய் இருக்கும்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே —
உளன் என்கிற சொல்லாலும்
இலன் என்கிற சொல்லாலும்
சொன்ன இரண்டு ஸ்வ பாவத்தாலும் உளன் ஆனான் –
ஒழிவிலன் பரந்தே –
நான் உளன் என்கிற சொல்லாலே உண்மையை சாதித்தேன்
நீ இலன் என்கிற சொல்லாலே உண்மையை சாதித்தாய்
ஆக இருவருமே உண்மையை சாதித்தோம்
இனி அவன் உளனாகில் உளனாம் போலே ச விபூதிகனாகவே உளனாகவே அமையாதோ -என்கிறார்
பாவ தர்மம் -சத்பாவம் -அஸ்தித்வம் -ஸ்தூல –
அபாவ தர்மம் -அசத்பாவம் -நாச்தித்வம் -சூஷ்ம –
ச யதா பவதி -விபூதியும் அப்படியே -அஸ்தித்வ தர்ம விசிஷ்டமானாலும் -நாஸ்தித்வ தர்ம விசிஷ்டமானாலும் -விபூதியும் அப்படியே –
————————————————————————–
அவதாரிகை –
ஜலத்தை சரீரதயா சேஷமாக உடையனாய் -எங்கும் வியாபித்து -தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய் இருக்கும் என்று கீழே சொன்னார் –
இப்படி வியாபித்து நின்றால்-அசித் சம்வர்க்கத்தாலே சேதனனுக்கு ஒரு சங்கோசம் பிறவாது நின்றது இ றே
அப்படியே அவனுக்கும் இவற்றோட்டை சம்வர்க்கத்தாலே சங்கோசம் பிறக்குமோ என்னில் -அது செய்யாது
அசங்குசிதமாக வியாபித்து நிற்கும் என்று வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்கிறார் -ஆத்மாவுக்கு -ஸ்வாபவ அந்யதா பாவம் என்றபடி -ஜீவ பரமாத்மா சாம்யம் -சாதர்மம் -சங்கோச ரூப விவஷிதம்
தர்ம பூத ஞானம் தான் சங்கோசம் -அடையும் –
ஆத்மாவுக்கு ஸ்வரூப சங்கோசம் இல்லை
வியாப்தி -பூர்த்தி சுருங்காமல் வியாப்தி – -வியாப்தி சௌகர்யம் -மூன்றும் அருளிச் செய்கிறார் –
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-
சிறியதில் இருந்து பெரியது ஆகுமா -பெரியதில் இருந்து சிறியது உண்டாகுமா -ப்ரஹ்மம்-விபு -அன்றோ –
ஒளி உள்ளே வருவதை ஒளி தடுக்காதே -த்ரவ்யத்வ ஆகாரம் தான் தடுக்கும் -த்ரவ்யமாகவும் ஞானமாகவும் உள்ளதால் -சங்கோசம் இல்லாமல் உள்ளே செல்லும் –
கீழ் சொன்ன வியாப்தியை -விஸ்தரிக்கிறார்
கரனே -திடமாய் உள்ளவன்
பரவை -ஏகார்ணவம் -பெரிய நீர் படைத்து -ஆப – நீர் -ஜல பரமாணுக்கள் சேர்ந்து -காரண ரூபா நீர் -கார்ய ரூபா கடல் முந்நீர்
500 கோடி மைல் -கீழ் லோகம் முதல் மேல் லோகம் வரை -அண்டம் -போலே மகா அவகாசம் -போலே அசங்குசிதமாக குறையாமல் -உளன்
கரந்த -அதி சூஷ்மம் –சில் சூஷ்மம் —இடம் தோறும் -மீமிசை சொல் -அல்பமான ஸ்தலங்கள்
பேய்ச்சி -விட நஞ்ச முலை சுவைத்த-நிறைந்த நஞ்சு – -பிராணன் விட -என்றுமாம்
இடம் திகழ் பொருள்-ஸ்வயம் பிரகாசமான ஆத்மாக்கள்
உண்ட கரனே –உண்ட பதார்த்தங்களில் உள்ளானே -ஆலிலை துயின்றானே -ஆலிலையை சேர்த்து விழுங்கி பின் துயின்றானா
மார்கண்டேயர் தான் கண்ணனை பார்ப்பதையும் பார்த்தாரே -அர்ஜுனன் -பூத பவ்ய தான் வென்றதையும் விஸ்வரூபத்தில் கண்டானே
அகடிதகட நா சாமர்த்தியம் –
காரண தசை காரிய தசை வாசி அற அசங்கு சிதமாக வியாபித்து இருப்பானே
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்து குளிர்ந்து இருந்துள்ள கடலில் ஜல பரமாணுக்கள் தோறும வியாபித்து இருக்கும்
நீர் செறிவாலே திரண்டு தோற்றுகிற இத்தனை இ றே –பரமாணு சங்காதம் இ றே
ஜ்யாய அந்த்தரிஷாத்-சாந்தோக்யம் -ஆகாயத்திலும் உயர்ந்தவன் -என்கிற வஸ்து –
ஜல பரமாணுக்களிலே வியாபியா நின்றால் அல்ப அவகாசமே நெருக்குப் பட்டு இருக்குமோ எனில் –
பரந்த வண்டமிதென –
அந்த ஜல பரமாணுக்கள் தான் பரந்த அண்டமிது எனவாயிற்று வியாபித்து இருப்பது
ஓர் அண்டத்தை சமைத்து அதிலே ஓர் ஏகாகியை வைத்தால் போலே இருக்கும் –
அழகிய பாற்கடல் –அரவிந்தப் பாவையும் தானும் -அகம்பட புகுந்தான் -புள்ளைக் கடாவுகின்ற –
பண்டிதம் புண்டரீகம் -தாயப்பதியிலே -இது சாத்தியம் -அவை சாதனம் –
இப்படி ஜல பரமாணுக்களில் வியாபித்து விடும் அத்தனையோ என்னில்
நில விசும்பு ஒழிவறக்
பூமி அந்த்ரிஷங்களிலும் அப்படியே
இவை மூன்றும் அஞ்சுக்கும் உப லஷணமாய்-அஞ்சாலும் ஆரப்தமான அண்டத்தளவும் நினைத்து -மேல் கார்யமான பதார்த்தங்களில் வியாபித்து இருக்கும் படி சொல்கிறது
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்றில் முடியும்படியான ஸூ ஷ்மமான அல்ப சரீரங்கள் தோறும –
அவ்வவ சரீரங்க ளிலே-ஜ்ஞானானந்த லஷணமாகக் கொண்டு மிளிருகிற ஆத்மாக்கள் தோறும –
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே —
கரந்து –
வ்யாப்ய பதார்த்தங்களுக்கு தெரியாதபடி அன்யைர த்ரஷ்டனாய்
எங்கும் பரந்துளன் –
சேதனன் சரீரத்திலே வியாபிக்கும் போது அதில் ஏக தேசத்திலே நின்று ஜ்ஞானத்தாலே எங்கும் வ்யாபிக்கக் கடவனாய் இருக்கும்
அவன் அங்கன் அன்றிக்கே ஸ்வ ரூபத்தால் எங்கும் வியாபித்து இருக்கும்
விபுத்வத்தை அவனுக்குச் சொல்லி அணுத்வத்தை இவனுக்குச் சொல்லி -நித்யம் விபும் சர்வகதம் –
இதுக்குள்ளே அவன் குறைவற வியாபித்து இருக்கும் என்றால் அது கூடுமோ என்னில்
இவை யுண்ட கரனே
சிறிய வடிவைக் கொண்டு பெரியவற்றை எல்லாம் தன வயிற்றிலே வைத்தால் -ஓர் பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டானே-
-தயிருண்ட பொன் வயிறு இவ் வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் -பெரிய திரு -11-5-3–என்கிறபடி
பின்னையும் அவ்வயிறு இ றே இடம் உடைத்தாம் படி இருக்க வல்ல சர்வ சக்தி -சிறிய வற்றில் குறைவற இருக்க மாட்டானோ என்கிறார் –
சிறிது நெய்யூண் மருந்தோ மாயோனே-
கரனே –
இப்படி ஸூ த்ருட பிரமான சித்தன்
இவை யுண்ட கரன் -பரந்த தண் பரவையுள் -நீர் தொறும் பரந்த வண்டமிதென பரந்துளன் -நில விசும்பு ஒழிவற பரந்துளன்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் -கரந்து எங்கும் பரந்துளன் -என்று அந்வயம்
————————————————————————–
அவதாரிகை
நிகமத்திலே –ச்ரோத்ரு புத்தி சமானத்துக்காக –
முதல் பாட்டிலே –கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –விக்ரஹ வை லஷண்யத்தையும் சொல்லி
இரண்டாம் பாட்டில் -இவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சேதன அசேதன விலஷணம் என்று சொல்லி
மூன்றாம் பாட்டிலே -நித்ய விபூதியோபாதி -ததீயத்வாகாரத்தாலே அவனுக்கு அந்தரங்கமாகத் தோற்றுகிற லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
நாலாம் பாட்டில் -அந்த லீலா விபூதியினுடைய ஸ்வரூபம் அவன் அதீனம் -என்றார்
அஞ்சாம் பாட்டிலே -அதினுடைய ஸ்திதியும் அவன் அதீனம் என்றார்
ஆறாம் பாட்டிலே -அதினுடைய பிரவ்ருத்தி நிவ்ருத்தி யும் பகவத் அதீனம் என்றார் –
ஏழாம் பாட்டிலே -சரீர சரீரிகளுக்கு உண்டான லஷணம் ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டாகையாலே
இதுக்கும் அவனுக்கும் சொன்ன -ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்றார்
எட்டாம் பாட்டிலே குத்ருஷ்டிகளை நிரசித்தார்
ஒன்பதாம் பாட்டிலே ஸூ ந்யவாதியை நிரசித்தார்
பத்தாம் பாட்டில் வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்தார்
இப்படிகளாலே அவனுடைய பரத்வத்தை நிஷ்கரிஷித்தாராய் நின்றார் கீழ்
இத் திரு வாய் மொழி யில் அன்வயித்தவர்களுக்கு தாம் பெற்ற பேறே பேறு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –
கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-
வீடே -விட்டேன் -பரன் அடிகளில் -பரபரன் ஸ்தாபித்தேன் –அவன் திருவடிகளில் சமர்ப்பித்தேன் -நமக்கு வீட்டைக் கொடுத்து அல்லது நில்லாது –
இவை பத்தும் வீடே -காரணத்தில் கார்யத்தை ஏறிட்டு -வால்மீகி பகவான் போலே
ஏன கேனாபி -எப்படி இருந்தாலும் வீடே -இது உறுதி -த்வயம்
போலே இந்த த்வ்யார்த்தமும்
கர விசும்பு -சூஷ்மம் என்றபடி -கண்ணுக்கு புலப்படாமல்
மிசை -இவற்றை இடமாக கொண்டு -ஆஸ்ரயமாக
பூநிலாய ஐந்துமாய் –ஆகாசம் சப்தம் /வாயு -சப்தமும் ஸ்பர்சமும் -அக்னி -சப்த ரூப ஸ்பர்ச /–நீர் -சுவையும் சப்த ரூப ஸ்பர்சமும் பிருத்வி ஐந்தும் –மண் வாசனை
ஆய் நின்ற -தரமி தர்மங்கள் உடன் பிரகாரமாக நின்ற
தன் மாதரை -ஸ்பர்சாதிகள் -பூத சூஷ்மம் -இவை
நிரல் நிறை -நேர் நேர் -சொல்லும் பொருளும் இயலும் இசையும் தாளமும் அபிநயமும் – இசையத் தொடுத்து –
தன்னை புகழலாமா -ஆயிரம் -வால்மீகி பகவான் போலே குருகூர்ச் சடகோபன்
ஸ்ரீ ராமாயணமும் திருவாய்மொழியும் இருக்கும் வரை அழிக்க முடியாதே –பூர்த்தி -ஆப்தி -நம்பலாம்
நால் சீர் நான்கு அடி கலி விருத்த பாசுரம்
கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
கரமான விசும்பு -த்ருடமான விசும்பு -என்றபடி
அன்றியே
கரந்த விசும்பு –
மறைந்த –ஸ்படிகம் போலே என்றுமாம் – அச்சமான விசும்பு -என்னுதல்
-அத்ர க்ருத்ர பததி என்று நிரூபிக்க வேண்டும்படியாய் இருக்கும் இ றே –
எரி -தேஜஸ் தத்வம் –
வளி -காற்று
நீர் -ஜலம்
நிலம் -பூமி
இவை மிசை -இவற்றின் மேலே உண்டான
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற –
வரனான -ஸ்ரேஷ்டமான
நவில் -வரிஷ்டமான சப்தம்
அக்னியினுடைய -தாஹகத்வ சக்தி
காற்றினுடைய மிடுக்கு
ஜலத்தினுடைய தண்ணளி
பூமியினுடைய பொறை
இப்படி ஸ ஸ்வ பாவமான பூத பஞ்ச கங்களையும்-சொல்லி -இத்தாலே லீலா விபூதியைச் சொல்லிற்றாய்
ரஜஸ் தமஸ் ஸூ க்களைக் கழித்து நிஷ்க்ருஷ்ட சத்வமேயாய்-இருக்கும் இ றே நித்ய விபூதி
ஆக இது தானே உப லஷணமாய் -ஆக உபய விபூதி யுக்தனாய் இருக்கிற சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளிலே
இவை பத்தும் பரனடி மேல் வீடே —
அவன் திருவடிகளிலே விடப்பட்டன -சமர்ப்பிக்கப் பட்டன –
குருகூர்ச் சடகோபன் சொல் –
வால்மீகிர் பகவான் ருஷி -என்னுமா போலே ஆப்திக்கு உடலாய் அருளிச் செய்கிறார் –
-நிரனிறை யாயிரத்து
நிரல் நிறை -என்னுதல் -சப்தங்களும் நிறைந்து அர்த்தங்களும் புஷ்கலமாய் இருக்கை -நிரன் நிறை என்னுதல் -நேரே நிறுத்தப் படுக்கை -என்றபடி
ப்ரமாணைஸ் த்ரி பிரந்விதம் பாத பத்தோஷர சமஸ் தந்த்ரீ லய சமன்வித –ஸ்ரீ ராமாயணத்துக்கு சொல்கிறபடியே
லஷணங்களில் குறையாமே -எழுத்தும் -சொல்லும் -பொருளும் -அந்தாதியும் -க்ரமத்திலே நிறுத்தப் படுகை
சதுர்விம்ச சஹாஸ்ராணி 500 சர்க்கம் 6 காண்டங்கள் மேலே உத்தர காண்டம் சேர்த்து 24000-உத்தர காண்டம் சேர்த்தால் -19000 சேர்க்காமல்
630 சர்க்கம் -உத்தர காண்டம் சேர்த்தால்
மூன்று பிரமாணங்கள் சேர்ந்து இருக்கும் –த்ருத் விலம்பித் மத்யம் -ஆலாபனை -வேகம் இழுத்து நடுவாக பாட
ஷட்கம் தொடங்கி ரிஷபம் -சுர ஸ்தானம் -பேரி- தூரியம் வேணு வீணை -சமன்விதம் -அஷர சமம் -சோக வேக ஜனிதம் ஸ்ரீ ராமாயணம்
அவர் 24000 பிரதிஜ்ஞை போலே இங்கும் ஆயிரம்
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணையான் -அந்தாதி லஷனம் அருளிய -இது ஒன்றே துணைக் கேள்வி –
துணையான த்வயார்த்தம் அருளிய திருவாய்மொழி அன்றோ
ஆயிரம் –
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ் நமீத்ருசை கரவாண்யஹம்-என்னுமா போலே
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே -மேல் உள்ளத்து அடையத் தோற்றா நின்றது –
அர்ச்சிராதி மார்க்கமே தோற்றிற்றே ஆழ்வாருக்கு-
வாச க்ரமவர்த்தித்வாத் அடைவே சொல்லும் அத்தனை யாகையாலே -ஆயிரம் -என்கிறது –
அன்றிக்கே
ஆயிரமும் சொல்லி யல்லது நிற்க ஒண்ணாத விஷய ஸ்வ பாவத்தாலே சொல்லுகிறார் ஆதல்
இவை பத்தும் வீடே –
இவை பத்தும் பரனடி மேல் விடப் பட்டது -என்னுதல்
அன்றிக்கே
இச் செய்யடைய நெல் -என்னுமா போலே நெல்லை விளக்குமது என்று காட்டுமா போலே
இவை பத்தும் வீடு என்றது -வீட்டை விளைக்கும் என்றபடியே -மோஷப்ரதம்-என்கிறார் ஆதல்
பகவத் பிரசாதத்தாலே தமக்கு பரத்வ ஜ்ஞானம் பிறந்த படியையும்
அந்த ஜ்ஞானத்துக்கு பலம் மோஷம் என்னும் இடத்தையும் -முதல் பாட்டுடன் இத்தை சேர்த்து -அந்வயித்து அருளிச் செய்கிறார் –
இப்பிரபந்தத்தில் ஏதேனும் ஒரு படி அந்வயம் உடையார்க்கும் பலம் நம்முடைய பலம் என்னும் இடத்தையும் அருளிச் செய்கிறார் –
துயர் அறு சுடர் அடி தொழுது எழுவதே பலன்
தத் விஷ்ணோ பரமம் பதம் -நணுகினம் நாமே -கிட்டப் பெற்றோம் -ஞானத்துக்கு பலம் மோஷம் என்றவாறு –
————————————————————————–
திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்
தத்ராதி மே து சதகே தஸகே ததாத் யே சம்யக் குணா க்ருதி விபூதி சமேத மீசம்
அத்யக்ஷயந் பரமனுக்ரஹதஸ் ததீயாத தத்தாஸ்யா யோஜிதமநா சடஜித் பபூவ -1-உயர்வற
தத்ர ஆதி மே து சதகே –ஆயிரத்தில் முதல் பத்தில்
தஸகே ததாத் யே -முதல் தசகத்தில்
சம்யக் குண ஆக்ருதி விபூதி சமேதம் -குண ஐஸ்வர்ய விசிஷ்டன்
ஈசம்–பரத்வம்
சடஜித் பபூவ –சடத்தை ஜெயித்தவர் இப்படி ஆனார்
சம்யக்-சமேதம் ஈசம் -கூடி -விசிஷ்ட குண ஆகிருதி விபூதி சமேதன் -ஆகிருதி செல்வம்
ஈசம் -பரத்வம் -ஈசிதவ்ய மற்றவர்கள்
————————————–
திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்
சமாக்யா பந்தத்தி -1000 ஸ்லோகங்களும் ஆழ்வாருக்காக
நம் ஆழ்வார் ஸ்ரீ பாதுகை ஒரே கைங்கர்யம் –
32 பந்திகள் -32 அதிகாரங்கள்
ஆத்மா சித்தம் -தம் மனசுக்கு உபதேசித்து –
இப்படி பத்து ஸ்லோகத்தாலே திருவாய் மொழியின் தாத்பர்யத்தை
சம்பாவித சங்கா பரிகார பூர்வகமாக நிஷ்கர்ஷித்து அருளி –
அநந்தரம் -அடைவிலே தத் தத் தசகார்த்தத்தை அருளிச் செய்யக் கடவராய்
பிரதமம் பிரதம சதகத்தில் பிரதம தசககாதார்த்தத்தை ஸங்க்ரஹித்து அருளுகிறார் –
நிஸ் ஸீமோத் யத் குணத்வாத்
அமிதரசதயா
அனந்த லீலாஸ் பதத்வாத்
ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதாநபி தாவைபவாத்
வைஸ்வரூப்யாத்
த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத்
சத சத வகதே
சர்வ தத்வேஷூ பூர்த்தே
பஸ்யன் யோகீ பரம்
தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம் -2-உயர்வற
1-நிஸ் ஸீமோத் யத் குணத்வாத் -உயர்வற உயர் நலம் உடையவன் –
இதோபி உத்க்ருஷ்டம் இல்லாதபடி உத்க்ருஷ்ட கல்யாண குணங்களை உடைத்தாகையாலும் –
2-அமிதரசதயா-முழு நலம்-முழு உணர்வு- -நிரவதிக ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலும்-
3-அனந்த லீலாஸ் பதத்வாத் -நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்-பாதாளம் ஆரப்ய-பரமபத பர்யந்தமாக
உண்டான சேதன அசேதன விபூதிகன் ஆகையாலும்
4-5-6-ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதநபி தாவைபவாத் -இது நாம் அவன் இவன் யுவன் -என்றும்
அவரவர் தமதமது-என்றும் -நின்றனர் இருந்தனர் -என்றும் உள்ள மூன்று பாட்டுக்கள் அர்த்தம் –
விவித நிர்தேச நிரதிசயமான ஸமஸ்த வஸ்து ஸ்வரூபம் பகவத் அதீனம் என்றும்
எம்பெருமான் சகல தேவதாந்தர அந்தராத்மதயா ஆராத்யனாய் -சகல பல பிரதனாகையாலே ரக்ஷணமும் தத் அதீனம் என்றும்
சேதன அசேதன ஸமஸ்த வஸ்து ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் தத் சங்கல்ப அதீனம் என்றும் காதாத்ரயத்திலே சொல்லுகையாலே
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவிருத்தி பேதனாகையாலும்-
7-வைஸ்வரூப்யாத்–திட விசும்பு எரி வளி ஜகத்துக்கும் தனக்கும் ஐக்கியம் சொல்லுகிற குத்ருஷ்ட்டி பக்ஷம் அஸங்கதம் என்று
தோற்றும்படி தான் சரீரியாய் ஜகத்தை சரீரமாக யுடைத்தாகையாலும்
8-த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத் –அரன் அயன் என -இந்த ஜகத்துக்கு நிர்வாஹகத்வேந சங்கிதரான
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கையாலும்
9-சத சத வகதே -உளன் எனில் உளன் -ஏவம் பூதனான ஈஸ்வரனை இல்லை என்று ஸூந்ய வாதிகளாலே
சொல்லி முடிக்க ஒண்ணாத படி -அவஸ்தா பேதத்தாலே சத சச்சப்த வாச்யனாய் அறியப்படுகையாலும்
10-சர்வ தத்வேஷூ பூர்த்தே-பரந்த தண் பரவையுள்-செத்தான் சரீரைக தேசத்திலே நின்று ஞானத்தால் எங்கும் வியாபிக்கும் படி இன்றிக்கே –
சர்வ வஸ்துக்களிலேயும் ஸ்வரூபேண எங்கும் ஓக்க வியாபித்து நிற்கையாலும்
பஸ்யன் யோகீ பரம் -எம்பெருமானை சர்வ ஸ்மாத் பரன் என்று சாஷாத் கரியா நின்று கொண்டு
யோகீ ஸ்ரேஷ்டரான ஆழ்வார்
சாஷாத் கரித்து-பிணம் கிடக்க மணம் கொள்வார் இல்லை -யோகம் வேண்டாம் உய்யக் கொண்டார்
தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம் -தம்முய திரு உள்ளத்தைக் குறித்து
திருவடியில் கொக்குவாயும் படு கண்ணியமாக திரு உள்ளம் சேர்ந்தவர்-
அவனுடைய திருவடி மலர்களைத் தொழுது எழு என்று பிரதம சதகத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –
சொல் பணி—சொற்கள் ஆழ்வாருக்கு கிஞ்சித் கரிக்க போட்டி போட்டுக் கொண்டு வருமே –
திருவுடைய சொற்கள்–வாசிகமாக அங்கு அடிமை செய்தான்-
————————————————————————–
திருவாய் மொழி நூற்றந்தாதி -தனியன் /அவதாரிகை-/பாசுரம் 1–பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–
அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்
சொல்லும் பொருளும் தொகுத்து உரைத்தான் -நல்ல
மணவாள மா முனிவன் மாறன் மறைக்குத்
தணவா நூற்றந்தாதி தான் –
தணவா -மிகவும் பொருந்தின
————————————————————————–
மன்னு புகழ் சேர் மணவாள மா முனிவன்
தன்னருளால் உட்பொருள்கள் தம்முடனே -சொன்ன
திருவாய் மொழி நூற்றந்தாதி யாம் தேனை
ஒருவாது அருந்து நெஞ்சே உற்று-
————————————————————————–
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் –திருமாலால் அருளப் பெற்ற சடகோபன் -8-8-11–என்னும்படி
ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருள
இப்படி நிர்ஹேதுக கடாஷ பாத்ர பூதரான ஆழ்வாரும்
அருள் கொண்டுஆயிரம் இன் தமிழ் பாடினான் -என்னும்படி திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களை
பண்ணார் பாடலாம் -10-7-5-படி பாடி அருளி
அநந்தரம்
தம்முடைய நிரவதிக -அவதி -எல்லை -நிரவதிக -எல்லை யற்ற -கிருபையாலே மதுரகவி பிரப்ருதி ச ஜனங்களுக்கு
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -நான் முகன் திருவந்தாதி -என்னும்படி உபதேசித்து
அவ்வளவும் அன்றிக்கே
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போல் ஆம்படி செயல் நன்றாகத் திருத்தி பணி கொண்டு அருளி நடத்திப் போந்த
அநந்தரம்
நெடும் காலம் சென்றவாறே
இத் திவ்ய பிரபந்தங்கள் சங்குசிதமாய் போனபடியைத் திரு உள்ளம் பற்றி
இதுக்காவார் ஆர் -என்று பார்த்து நாதமுனிகளை –அருள் பெற்ற நாதமுனி -என்னும்படி
தம்முடைய கடாஷ விசேஷத்தாலே கடாஷித்து அருளி இவருக்கு
திவ்ய ஜ்ஞானத்தையும் யுண்டாக்கி அந்த திவ்ய சஷூர் மூலமாகவே
சரணாகதி புரசரமாக தீர்க்க சரணாகதியான திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களையும் பிரகாசிப்பித்தது அருளினார் –
இப்படி ஆழ்வார் உடைய திவ்ய கடாஷத்துக்கு விஷய பூதரான ஸ்ரீ மன் நாத முனிகளும்
அழித்தலுற்றவன்றிசைகள் ஆக்கினான் -என்னும்படி-அப்பிரகாசமான அன்று இசைகள் ஆக்கினான்-
இத்தமிழ் மறைகளை இயலிசை யாக்கி நடத்தியும்
மேலை அகத்து ஆழ்வார் -வரதாச்சார்யர் ஸ்ரீ தர யோகாப்தி -கிரந்தம் அருளி
இவர் குமாரர் நிர்மலா தாசர் -நாத முனி-யோக-சாஸ்திரத்துக்கு விருத்தி கிரந்தம்
இவர் குமாரர் ஞான வராகாச்சார்யர்- பதஞ்சலி நாத முனி யோக ஐக கண்ட்யம்-கிரந்தம் அருளி
அவர் குமாரர் குருகை காவல் அப்பன் -கங்கை கொண்ட சோழ புரம் -பெரிய கோயில்
கீழை அகத்து ஆழ்வார் -கிருஷ்ணமாச்சார்யர் -ஸ்ரீ தர யோக கல்ப தரு-கிரந்தம் அருளி
அதுக்கு மேலே குருகை காவல் அப்பன் உய்யக் கொண்டார் துடக்கமான ஆஸ்திகரைக் குறித்து
பிரபர்த்தி யாரத சஹிதமாக இத்தை பிரகாசிக்க
அவர்களும் அப்படியே அவர் திருப் பேரனார்க்கு மணக்கால் நம்பி முகேன் பிரசாதிப்பிக்க
பின்பு ஆளவந்தார் அவை வளர்த்தோன் -என்னும்படி அவரும் அத்தை வர்த்திப்பிக்க
அவர் கடாஷ லஷ்ய பூதராய்
மாறன் அடி பணிந்து உய்ந்த எம்பெருமானாரும் -வளர்த்த இதத்தாய் -என்னும்படி வர்த்திப்பித்து கொண்டு போன பின்பு
ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண் சாலிகளான
கோவிந்த கூராதி பட்டார்யா நிகமாந்த முனி -நஞ்சீயர் நஞ்சீயர் -பர்யந்தமாய்
உபதேச பரம்பரையா சங்குசித வ்யாக்யானமாக நடந்து சென்ற இது
திருமால் சீர்க்கடலை உள் பொதிந்து
இன்பத் திரு வெள்ளம் மூழ்கின
நம் ஆழ்வார் -அங்கி யான திருமங்கை ஆழ்வார் -அவதாரமாய் நம்பிள்ளை என்று பேர் பெற்ற லோகாச்சார்யாராலே
லோகம் எங்கும் வெள்ளம் இடும்படி தீர்த்தங்கள் ஆயிரமான திருவாய்மொழி
விசத வியாக்யான ரூபமாக பிரவகிக்க அது-வள்ளல் வடக்குத் திரு வீதிப்பிள்ளை ஏடு படுத்த
ஆங்கு அவர் பால் -என்று துடங்கி மேலோர் அளவும் விஸ்த்ருதம் ஆயிற்று-
இப்படி தீர்க்க சரணாகதியான திருவாய்மொழி நாத யாமுன யதி வராதிகளால் வர்த்திப்பித்துக் கொண்டு போந்தமை பற்ற
திருவருள் மால் -என்றும்
நாதம் பங்கஜ நேத்ரம் -என்றும்
இத் தனியன்களாலே வந்த இந்த சம்ப்ரதாய க்ரமம் தேவாதிபரளவும் தர்சிக்கப் பட்டது
இப்படி பரம்பரையா நடந்து வந்த திருவாய்மொழியின் ஈட்டின் சம்ப்ரதாய க்ரமம் தான்
அதுக்கு தேசிகரான தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் அடியாக இ றே
காந்தோ பயந்த்ருயமிக கருணைக சிந்தோ -என்னும் படியான ஜீயர் இடத்திலே மணவாள மா முனியான வேரி தேங்கி -என்னும்படி தங்கிற்று
அத்தைப் பற்றி இ றே
ஆர்யா ஸ்ரீ சைல நாதா ததிக தசட சித் ஸூ கதி பாஷயோ மஹிம் நாயோ கீந்த்ரச் யாவதாரோ சயமிதிஹிகதித்த -என்றும்
திருவாய் மொழிப் பிள்ளை திருத் தாள் சேர்ந்து அங்கு உரை கொள் தமிழ் மறைக்கும்
மறை வெள்ளத்துக்கும் ஓடமாய் ஆரியர்கள் இட்ட நூலை யுள்ளு உணர்ந்து என்றும்
தமிழ் வேதமாகிய வோத வெள்ளம் கரைகண்ட கோயில் மணவாள மா முனி -என்றும் சொன்னார்கள் –
இப்படி முப்பத்தாறாயிரப் பெருக்கர் ஆகையாலே –மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் -என்னும்படி
தம் விஷயமான திருவாய்மொழியின் அர்த்தத்தை இவர் இடத்தில் கேட்க வேணும் என்று
பெருமாள் தாமும் திரு உள்ளமாய் -ஸ்ருத்வாகூடம் சடரி புதிராத்தத்வம் த்வதுக்தம் -என்னும்படி
ஆழம் கால் பட்டு கேட்டு அருளினார் இ றே-
பரிதாபி -ஆவணி தொடங்கி அடுத்த ஆனி மூலம் வரை ஈடு சாதித்தார் கோயில் மணவாள முனிகள்-
அதன் பின்பு ஸ்ரீ பட்ட நாத முனி வான மகாத்ரியோகி துடக்கமான ஆச்சார்யர்கள் ஆகிற கால்களாலே புறப்பட்டுக்
காடும் கரம்பும் எங்கும் ஏறி பாய்ந்து பலித்தது
இப்படி ஈச- ஈசேசிதவ்ய விபாகமற
ஸ்வ ஸூ கத்தியாலே வசீகரிக்க வல்ல வைபவமானது –
மணவாள மா முனி தோன்றிய பின் அல்லவோ தமிழ் வேதம் துலங்கியது -என்றும்
மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே –என்றும்
அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் சொல்லப் பட்டது –
இவர் தாமும் –எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கம் -என்றும்
அத்தாலே மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்றும்
வகுள பூஷண வாக் அம்ருதாசனம் -என்றும்
தாமும் அருளிச் செய்தார் –
ஏவம் வித மாஹாத்ம்யம் இவர் தம்முடைய அனுபவத்துக்கு போக்கு வீடாகவும்
திருவாய்மொழி யினுடைய துர்க்ரஹமான அர்த்தங்களை எல்லாம் எல்லாரும் அறியும்படி
ஸூ கரஹமாகவும் ஸூ வ்யக்தமாகவும் –சொல்லும் பொருளும் தொகுத்து உரைத்தான் -என்னும்படி சங்கதியாக
இப்பிரபந்தத்திலே அருளிச் செய்கிறார்
ஈட்டில் சங்கதியேயாயிற்று இவர் தாம் இப்படி சங்க்ரஹித்து அருளிச் செய்கிறது –
இப் பிரபந்தங்களுக்கு அநேக நிர்பந்தங்கள் உண்டாய் இ றே இருப்பது –ஐந்து நிர்பந்தங்கள்
அது எங்கனே என்னில் -1–வெண்பா -என்கிற சந்தஸ் -ஆகையும்
இப்படியான இப்பாட்டில்2— முற்பகுதியில் ஓரோர் திருவாய்மொழியின் தாத்பரியமும்-தத் சங்கதிகள் அடைகையும்
3-பாட்டுக்கள் தோறும் ஆழ்வார் திருநாமங்கள் வருகையும்
4-அதில் தாத்பர்யங்களை தத் பரியந்தமாக பேசுகையும்
5-அந்தாதியாய் நடக்குகையும் ஆகிற
இவ் வைந்து நிர்பந்தம் உண்டாய் இருக்குமாயிற்று-
இது தான் பாலோடு அமுதம் அன்ன ஆயிரமான திருவாய் மொழியின் சாரம் ஆகையாலே
திருவாய் மொழி நூற்றந்தாதி யாம் தேனை -என்னும்படி
சரசமான நிரூபகமாய்
ஆயிரத்தின் சங்க்ரஹம் ஆகையாலே ஓரோர் திருவாய் மொழியின் அர்த்தத்தை
ஓரோர் பாட்டாலே அருளிச் செய்கையாலே நூறு பாட்டாய்
அல்லும் பகலும் அனுபவிப்பார்க்கு நிரதிசய போக்யமாய்
அவ்வளவும் அன்றிக்கே
உடையவர் நூற்றந்தாதியோபாதி ஆழ்வார் நூற்றந்தாதியும் உத்தேச்யம் ஆகையாலே
ஆழ்வார் திருவடிகளிலே பிரேமம் யுடையார்க்கு அனவரத அனுசந்தேயமுமாய் இருப்பதும் ஆயிற்று –
இதில் சரம பர்வமான ஆழ்வார் திருவடிகளை இ றே பிராப்ய பிராபகங்களாக நிஷ்கரிஷிக்கிறது –
அது தான் பராங்குச பாத பக்தராய் –
சடகோபர் தே மலர் தாட்கேய்ந்து இனிய பாதுகமாம் எந்தை ராமானுசன் -ஆர்த்தி பிரபந்தம் -10-அளவும் வந்து இருக்கும் இ றே
ஆழ்வார் தாம்
திவ்ய மகிஷிகள் யுடையவும்–பின்னை கொல் –
திவ்ய ஸூரிகள் யுடையவும்
முக்தருடையவும்
முமுஷூக்கள் யுடையவும்
படிகளை யுடையவராய் இருக்கையாலே
உடையவரும் இவர் விஷயத்திலே யாயிற்று ஈடு பட்டு இருப்பது-
————————————————————————–
உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—–1
————————————————————————–
அவதாரிகை –
இதில் சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் தொழுது எழப் பாராய் என்று பரத்வ பிரதிபாதகமாய் இருக்கிற
ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய் மொழி அடியாகவே
சேதனர்க்கு மோஷ லாபம் என்னும் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
ஸ்ரீ யபதியாய்
அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள
எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி
அவன் பிரசாதத்தாலே
சாஷாத் கரித்து
அனுபவித்து
அனுபவித்த படியே ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி
ஏவம் விதனானவன் திருவடிகளிலே
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று
தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த
முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து
உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-
————————————————————————–
வியாக்யானம் –
உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு –
பரத்வத்தில் பரத்வம் ஆயிற்று இத் திருவாய் மொழியில் பிரதி பாதிக்கப் படுகிறது
ஆமவை யாயவையாய் நின்றவர் -என்றும்
முழுதுண்ட பரபரன் -என்றும்-
அளி பொறை யாய் நின்ற பரனடி மேல்-என்றும்
பரத்வத்தை ஆயிற்று இதில் சொல்கிறது
உயர்வே பரன் படி ஆவது –
தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
பர பராணாம் பரம -என்றும்
சொல்லுகிற சர்வ ஸ்மாத் பரத்வத்தையாயிற்று
உயர்வற உயர் நலம் -என்று அருளிச் செய்த அத்தை அடி ஒற்றி ஆயிற்று இவர் இப்படி அருளிச் செய்கிறது –
உயர்வே –என்கிற அவதாரணத்தாலே
அல்லாதார் உயர்திகளைபோலே தாழ்கை அன்றிக்கே
மேல் மேல் என என்றும் உயர்தியாய் இருக்கை-
நேதி நேதி -என்றும்
நோத்யமதோ அதி சேரதே -என்றும்
நலத்தாலும் உயர்ந்து உயர்ந்து அப்பாலன் -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
தேவர்க்கும் தேவாவோ -என்றும் -சொல்லக் கடவது இ றே
அன்றிக்கே
உயர்வு -என்று உச்சாரமாய்
ஏ -என்று ஏய்கையாய் பொருந்துதலாய்
அது அல்லாருக்குப் போலே அநனுரூபமாய் இருக்கை அன்றிக்கே
ஏய்ப்பரன் என்று -அனுரூபமாய் பொருந்தி இருக்கிற பரன் என்றுமாம்
இப்படி உயர்தியாய் இருக்கிற பரன் படியாவது பரத்வைகாந்தமான ஸ்வ பாவம்
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் -என்னும்படி
மயர்வற மதி நலம் அருளி
அவன் பிரசாதத்தாலே காட்டக் கண்டு
இப்படி அவன் காட்டினவைகள் எல்லா வற்றையும்-
உள்ளது எல்லாம் தான் கண்டு –பாட்டு தோறும் காட்டியவற்றை தொகுத்து அருளி
உயர் வேத நேர் கொண்டு உரைத்து –
அபௌ ருஷேயமாய் -நித்தியமாய் -நிர்தோஷமாய்
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரன்களால் அழிக்க ஒண்ணாது ஆகையாலே
சர்வ பிரமாண உத்கர்ஷமான ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்தது –
அதாவது –
1–சோஸ்நுதே சர்வான் காமான் -என்று கல்யாண குண யோகத்தை நலமுடையவன் –என்றும்
2–தாது பிரசாதாம் மகிமானம் -என்கிற கிருபா வைபவத்தை -அருளினான் -என்றும்
3–தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ர்யயா-என்கிற விக்ரஹ விபூதி யோகத்தை
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனவன் துயர் அறு சுடரடி -என்றும்
4–சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்–ஆனந்தமய–ஆனந்தோ ப்ரஹ்ம –
என்கிற திவ்ய ஆத்மா ஸ்வரூப வை லஷண்யத்தை-உணர் முழு நலம் -என்றும்
5–பாதோச்ய விசவா பூதானி த்ரிபாத ச்யாம் ருதந்தி -என்று உபய விபூதியும் சொல்லி
பதிம் விச்வச்ய -என்றும் சொன்ன அந்த உபய விபூதி நாதத்வத்தாலே
லீலா விபூதியும் அவனது என்னுமத்தை -இலனது -தொடங்கி தர்சிப்பித்தும்
6–சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–நேஹானா நாஸ்தி கிஞ்சன —ச ஆத்மா அங்கான் யன்யாதே வதானி -என்கிற
சர்வ பிரகாரத்வத்தையும் சர்வ அந்தர்யாமித்வேன சர்வ ஸ்மாத் யர்த்தத்தையும்–நாமவன் —அவரிவர் ––என்கிற பாட்டுக்களிலே பிரகாசிப்பித்தும்
7-தேன வினாத்ருணா க்ரமபி நசலதி – யயா ஈச்வரஸ் சர்வ பூதாநாம் க்ருத்யேசேர்ஜூன திஷ்டதி
பிராமபன் சர்வ பூதா நியந்த்ராரூடா நிமாயயா -என்கிற பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் தத் ஆதீனம் என்னுமத்தை நின்றனர் இருந்தனர் -என்றும்
8–யச்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிற சர்வ சரீரத்வத்தையும்
9–அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்கிற சர்வ வ்யாப்தியையும்
10–ஹ்ரீச்சதே லஷ்மீஸ் ச பத்ன்யௌ-என்கிற ஸ்ரீ யபதித்வத்தையும்–திட விசும்பு –என்ற பாட்டாலே மூன்றையும் காட்டியும்
11–தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் தன தேவதானாம் பரமஞ்ச தைவதம் – நாராயணம் பரம் ப்ரஹ்ம தத்தவன் நாராயண பர
என்ற சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்து திரி மூர்த்தி சாம்யத்தையும் நிவர்த்தித்த படியை -சுரர் அறி வரு -நிலையாலே ஸூ வ்யக்தமாயும்
12-வேத பாஹ்யனான சூன்யவாதியை -உளன் எனில் -இத்யாதிகளால் நிரசித்தும்
13—அணோர் அணியாந-என்கிற வ்யாப்தி சௌகர்யத்தை பரந்த தண் பரவையிலே பேசியும்
இப்படி வேத மார்க்க அனுசாரியாய் ஆயிற்று முதல் பாட்டு துடங்கி அருளிச் செய்தது
அத்தை பற்றி இ றே உயர் வேத நெறி கொண்டு உரைத்து -என்று இவர் அருளிச் செய்தது –
சுடர்மிகு ஸ்ருதி என்று இ றே ஸ்ருதி பிரமாணத்தை அங்கீ கரித்து அருளிற்று
அஹந்தா ப்ரஹ்ணச் தஸ்ய -என்று ஸ்வரூப அந்தர்பாவம் உண்டாகையாலே
ஸ்வரூபம் புக்க இடத்தே
ஸ்வரூப நிரூபக பூதையான பிராட்டியும் உண்டாக குறை இல்லை –
மயர்வேதும் -ஞான அனுதயம் அந்யதா ஞானம் விபரீத ஞானம் ஒன்றுமே இல்லாமல்
மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் –
பரோபதேச கர்ப்ப ஸ்வ அனுபவ பிரகாசகமான ஸ்ரீ ஸூ க்தியாலே
மனுஷ்ய ஜன்மாக்களாய் உள்ளவர்களை வாழ்விக்கும் —
வாழ்விக்கை யாவது –
பகவத் அனுபவ ஏக பரராககி-சந்த மேநம் -என்னும் படி பண்ணுகை
தம்மைத் தொழுது எழப் பண்ணினாப் போலே –
மாறன் சொல் -வேராகவே விளையும் வீடு–
அதாவது
1–இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான வாழ்வார் திவ்ய ஸூக்தியடியாக பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி
–ஸூக்தி மூலமாக இ றே முக்தி பலிக்கும் இ றே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி
அன்றிக்கே
2–ஆழ்வார் திரு நாமம் அடியாகவே -மாறன் சொல்-மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்
தத் உக்தியாலே யாதல்
தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இ றே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இ றே –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply