திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -1-4-

எம்பெருமான் தன்னை புஜிக்கைக்கு ஈடான பக்த்யாரோக்கியம் ஆழ்வாருக்குப் பிறப்பிக்கைக்காக-
வியாதி பட்டார்க்கு பிஷக்குகள் போஜன நிரோதனம் பண்ணுமா போலே அனுபவிக்க வேணும் என்று இவர் பண்ணின மநோ ரதத்தை அல்பம் தாழ்க்க
-அது பொறுக்க மாட்டாதே மிகவும் ஆர்த்தரான ஆழ்வார்
அனன்யார்ஹ சேஷத்வத்தாலும் -அந்த சேஷத்வ அனுபவத்தில் எம்பெருமானோடு கலந்தால் பிராட்டிமார்க்கு உண்டான ரசம் பிறக்கையாலும்
தத் ஏக போகவத்தாலும் -பிரியில் தரியாமையாலும் -தமக்கு பிராட்டிமாரோடு சாம்யம் உண்டாகையாலே
எம்பெருமானோடு கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தசையை ஆபன்னராய் –
அவள் பேச்சாலே தம்முடைய தசையை எம்பெருமானுக்கு அறிவிக்கிறார் –
தன்னுடைய லீலா உத்யோனத்திலே தோழி மாறும் தானுமாய் விளையாடா நிற்க
தைவ யோகத்தாலே தோழி மாறும் அந்ய பரைகளான தசையிலே எம்பெருமான் இயற்கையிலே சம்ச்லேஷித்து விச்லேஷிக்க
மிகவும் நோவு படுகிறாள் ஒரு பிராட்டி -அவன் தானே வரப் பற்றாமையாலே -நம் பக்கல் உண்டான -குற்றத்தை அனுசந்தித்து
வாராது ஒழிகிறான்-தம் அபராத சஹத்வத்தை அறிவிக்க வரும் -என்று பார்த்து -பேர் அளவுடையரான பெருமாளும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளும்
யுக்தாயுக்த நிரூபணம் ஷமர் அன்றிக்கே -அசோகசோகாபநுதே-என்றும் -ஹம்ஸ காரண்ட வா கீர்ணாம்-என்றும் அருளிச் செய்தால் போலே –
இவை நம் வார்த்தை அறியாது என்று பாராதே -அவ்வுத்யாநத்திலே வர்த்திக்கிறன சில பஷிகளை எம்பெருமானைக் குறித்து தூது விடுகிறாள் –

———————————————————–

முதல் பாட்டில்
இப்பிராட்டி -உத்யானத்திலே சம்ச்லேஷித்து வர்த்திக்கிறன சில நாரைகளைக் கண்டு -ஸ்த்ரீத்வத்தாலே அவற்றிலே
தன்னோடு சஜாதீயமான பேடையை நோக்கி எம்பெருமானுக்கு என் ஆர்த்தியை அறிவிக்க வேணும் என்கிறாள் –

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவா வென்று எனக்கு அருளி
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின் -அஞ்சிறைய சேவலுமாய் ஆவா வென்று எனக்கு அருளி
சேவலோட்டை சம்ச்லேஷத்தாலே -செந்தலித்து நினைத்த இடத்திலே போகைக்கு ஈடான சிறகை யுடையையாய் பவ்யமான நாராய்
இத்தசையிலே உதவும்படியான தகைமையுடைய நீயும் -நீ இட்ட வழக்காய் அழகிய கமன சாதனத்தை யுடைத்தான
சேவலும் கூடி ஆர்த்தையான எனக்கு ஐயோ என்று கிருபை பண்ணி –

வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு –
அங்கே போனால் அவனை அறியும் படி எங்கனே என்னில் –
பிரதிபஷத்துக்கு வெவ்விதான சிறகை யுடைத்தான பெரிய திருவடியைக் கொடியாக யுடையவன் என்று அடையாளம் சொல்லுகிறாள்
தன்னைப் பிரித்து சடக்கென கொடுபோகையாலே -அக்ரூர க்ரூர ஹ்ருதய -என்னுமா போலே
இவ்வெவ்விதான சிறகை யுடைய புள்ளாலே வஹிக்கப் பட்டவனுக்கு -என்றால் ஆகவுமாம் –

என் விடு தூதாய்ச் சென்றக்கால் –
அத்யார்த்தையான எனக்குத் தூதாகச் சென்றக்கால் –

வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ-
தான் அர்த்திக்கச் செய்தே அவை போகாது ஒழிந்த வாறே தன் பக்கல் நின்றும் சென்ற தங்கள் வார்த்தையை அவன்
அங்கீ கரியான் என்று பார்த்து அவை போகாது ஒழிந்தனவாக கொண்டு
அப்படி நீர்மையை யுடையவன் உங்களைக் கொண்டாடாமை ஆகிற வன்சிறையில் வைக்கில்
பரார்த்தமாகச் சிறை இருக்கை கிடைப்பது ஒன்றோ -என்று ஸ்வ கோஷ்டீ பிரசித்தியாலே சொல்லுகிறாள் –

——————————————————————————————————–

இரண்டாம் பாட்டில் சில குயில்களைக் குறித்து எம்பெருமான் பக்கலில் சென்றால் விண்ணப்பம் செய்யும் பாசுரத்தைச் சொல்கிறாள் –

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய் என் செய்யும் உரைத்தக்கால்
விஸ்லேஷ தசையில் -ஆத்மாத்மீயங்கள் எல்லாம் உள்ளது என்பாரைப் போலே சச்நேஹமாக நோக்கின நோக்கையும்
இத்தலையை தோற்ப்பிக்கையாலே மிகவும் மேணானிப்பையும் உடையவனாய் இருந்தவனுக்கு –
சம்ச்லேஷ தசையில் சச்நேஹமாக நோக்கின நோக்காலே என்னை அடிமை கொண்டவனுக்கு என்றுமாம்
அத்யார்த்தையான என்னுடைய தூதாய் எனக்காக ஒரு வார்த்தை அங்கே அறிவித்தால் உங்களுக்கு என்ன சேதம் உண்டு
சிலவருடைய ஆர்த்திக்கு உதவுகை கிடைப்பது ஒன்றோ -என்று கருத்து –

இனக் குயில்காள் நீரலிரே-
எங்களைப் போலே பிரியாதே கூட இருப்பது நீர்மைக்கு நீங்களாவது –

முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ –
அநாதிகாலம் சஞ்சிதமான மகா பாபத்தாலே திருவடிக் கீழ் அந்தரங்க வ்ருத்திகள் பண்ணுகைக்கு ஈடான பாக்யத்தை
பண்டு பண்ணாத நான் அகன்றே போம் இத்தனையோ
தந்தாமுக்கு என்ன ஓன்று இல்லாதார் தய நீயர் அன்றோ -என்று கருத்து

விதியினமே —
பாவியோம்
விதி இன்னம் என்றுமாம் –

——————————————————————————————–

மூன்றாம் பாட்டில்
தந்தாம் பண்ணின பாபம் தம்தாமே அவசியம் அனுபவிக்க வேண்டாவோ -என்று உபேஷித்து இருக்கிறானாகக் கொண்டு
எல்லைச் சதிரியான சிந்தயந்தி பாபம் அனுபவ விநாச்யம் ஆகலாம் -நான் பண்ணின பாபமேயோ அனுபவ விநாச்யம் ஆகாது என்று
எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய வேணும் என்று சில அண்ணன்களை அர்த்திக்கிறாள்

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய வன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-

நான் பண்ணின பாக்யத்தால் பேடையோடே சம்ச்லேஷித்து -அந்த சம்ச்லேஷ ரசத்தால் ஆகர்ஷகமான நடையை யுடைய அன்னங்காள்
புத்தி யோகத்தாலே வாமன வேஷனனாய் குண சேஷ்டிதாதிகளால் ஈடுபடுத்தும் ஸ்வ பாவன் ஆனவனுக்கு

நலம் உடையவன் -தர்மம் தரமி சப்தங்கள் -தரமி ஸ்வரூபம் இருக்க -மீண்டும் யவன் -சப்தம் -நலங்களும் ஸ்வரூபம் ஆஸ்ரயித்து நிறம் பெறுமே –
ஒருத்தி
ஒருத்தி என்னவே தானே -இன்னாள் என்று அறிகிறான் இ றே
பகவத் பிரசாதத்தால் மயர்வறும்படி பெற்ற ஜ்ஞானப் பரப்பு எல்லாம் நிச் சேஷமாகக் கலங்கி மயங்கா நின்றாள் என்று அறிவியுங்கோள்

———————————————————————

நாலாம் பாட்டில்
என் பிரக்ருதியை அறிந்து வைத்து விச்லேஷித்தவனுக்கு சொல்லலாவது உண்டோ -என்று விஷண்ணை யாய்
மீள ஓர் ஆசையாலே சில மகின்றில்களைக் குறித்து
என்னிடையாட்டம் அவனுக்கு அறிவிக்க வல்லிகேளோ மாட்டிகோளோ-என்கிறார்

என்நீர்மை கண்டிரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-

என்நீர்மை கண்டிரங்கி இது தகாது என்னாத என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
தன்னுடைய சௌந்தர்யாதிகளைக் காட்டி முன்பு என்னை ஈடுபடுத்தினவனுக்கு நான் இனிச் சொல்வது எத்தை

நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
ஈண்டு எனச் சென்று சம்ச்லேஷி யீராகில் அவள் கிடையாள் என்று ஒரு வார்த்தை சொல்லி என்னை உஜ்ஜீவிப்பியுங்கோள்

நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –
நிறம் அவனைப் போல் இருந்தது
அவனைப் போலே ஆகிறிகளோ -என் அபேஷிதம் செய்கிறிகளோ -என்று கருத்து –

—————————————————————————————————–

என்னை இப்படி உபேஷித்தால்-எல்லாரையும் ரஷிக்கையாலே பரிபூர்ணனான தன்னுடைய நாராயணத்வம் விகலாமாகாதோ -என்று
அவனுக்கு அறிவித்தால் அவன் அருளிச்செய்த பிரதி வசனத்தை எனக்கு வந்து சொல்ல வேணும் என்று சில குருகுகளை அபேஷிக்கிறாள்

நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படைப்பை இறை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

பொழில் பூமி எல்லா லோகங்களுக்கும் உப லஷணம்
பாப ப்ரசுர்ய ஹேதுவான எனக்கயோ இரங்கலாவது
பெருகா நின்ற நீரையுடைய நீர் நிலங்களில் இரையைத் தேடி உன் சஹசரத்துக்கு கொடுக்கும் ஸ்வ பாவனாய்
நினைத்த இடத்தில் போகலாம் படி நொய்தான சரீரத்தை யுடைய குருகே
அவற்றுக்கு தயை பிறக்கும் படி தன் தசையைச் சொல்லுகிறாள் –

————————————————————————————————

ஆறாம் பாட்டில்
இத்தனை சாபரதாரோடே சம்ச்லேஷித்தது -என்று வரும் அகீர்த்தியில் காட்டில் நாராயண த்வம் விகலம் ஆயிற்று ஆகிலும் ஆக அமையும் என்னில்
அதுவும் விகலம் ஆகாதே -நானும் பிழைப்பதொரு விரகு சொல்கிறேன் -அப்படிச் செய்யச் சொல் என்று ஒரு வண்டை அபேஷிக்கிறாள்

அருளாத நீர் அருளி அவராவி துவராமுன்
அருளாழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று
அருளாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே –1-4-6-

அருளாத நீர் அருளி அவராவி துவராமுன் அருளாழிப் புட்கடவீர்
சம்ச்லேஷிக்க நினையாத நீர் -தய நீய தசையை யுடையளான இவள் பக்கலிலே கிருபை பண்ணி அவள் உயிர் முடிவதற்கு முன்னே
ஆஸ்ரிதர் பக்கல் பரம தயாளுவான திருவடியை நடத்தீர்

அருளாத நீர்
பண்டு இப்படி நோவு பட்டவர் இல்லாமையாலே கிருபை பண்ணாது இருக்கிற நீர் என்றுமாம்

அவர் வீதி ஒருநாள் என்று
அவர் வீதியிலே ஒரு நாள் போனதுக்காக அவத்யமாய் பிறவாது என்று கருத்து

அருளாழி அம்மானைக்
அருள் கடலான சர்வேஸ்வரனை
தயா சீலமான திரு வாழியை யுடையவன் என்றுமாம்

கண்டக்கால் இது சொல்லி அருளாழி வரி வண்டே
அவர் வீதி ஒரு நாள் எழுந்து அருள வேணும் என்று சொன்ன வார்த்தையைச் சொல்லி அருள வேணும்
ஆர்த்தனுடைய ஆர்த்தியை தீர்க்கைக்கு ஈடான அளவையும் ஸ்ரமஹரமான வடிவையும் யுடைய வண்டே –

யாமும் என் பிழைத்தோமே —
அதுவும் செய்யாது ஒழியிலோ என்னில் -எங்கள் தெருவில் போகலாகாமைக்கு நாங்கள் செய்த குற்றம் உண்டோ –

—————————————————————————————-

இத்திருவாய் மொழிக்கு நிதானமான அபராத சஹத்வத்தை அனுசந்தித்து -தன்னுடைய இக்குணத்துக்கு நான் புறம்போ என்று
எம்பெருமானுக்கு அறிவி -என்று தன கிளியை நோக்கிச் சொல்கிறாள் –

என் பிழை கோப்பது போலப் பனிவாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே யான் வளர்த்த நீயலையே –1-4-7-

என் பிழை கோப்பது போலப் பனிவாடை ஈர்கின்ற
விரஹ வியசனத்துக்கு மேலே எலும்பை இழை கோத்தால் போலே பனிவாடை இரா நின்றது –

என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு –
நிரதிசய கிருபாவானான தனக்கு இங்கனே நோவு படக் கண்டிருக்கை போராது என்று பாராதே
பிராட்டியோடு கூடி என் குற்றங்களையே அனுசந்தித்து கிருபை பண்ணாது இருக்கிறவனுக்கு
என் அபராதம் எல்லாம் பொறுத்து அருளும்படி பிராட்டி சந்நிதியிலே அறிவி என்று கருத்து ஆகவுமாம்

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
ஸ்வாமியான உன்னுடைய அபராத சஹத்வத்துக்கு விஷயம் அன்றிக்கே நோவு படுகைக்கு ஈடான என்ன தப்புச் செய்தாள்-என்று ஒரு வார்த்தை சொல்லு –

என் பிழைக்கும் இளங்கிளியே –
ஸ்ரமஹரமான நிறத்தாலும் -வடிவு அழகாலும் -பவ்யதையாலும் -நல்ல பேச்சாலும் -வாயின் சிவப்பாலும் -பருவத்தாலும்
எம்பெருமானோடு அறவொத்து இருக்கிற உன்படியைக் காட்டி எலும்பை இழைத்து நோவு படுத்துகிற இளங்கிளியே

என் பிழைக்கும்
என்ன தப்புண்டாம் என்னவுமாம்

யான் வளர்த்த நீயலையே –
தாய்மாரைப் பிள்ளைகளும் நலிவாரோ –

—————————————————————————————————–

ஒரு பூவைக் குறித்து பகவத் விச்வத்லேஷத்தாலே தனக்கு வந்த மகாவசாதத்தைச் சொல்லுகிறாள் –

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோயெனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-7-7-

இன்று என் அவசாதத்தைக் கண்டு மிகவும் தளருகிற நீ யன்றோ
ஆஸ்ரிதருடைய நோவு பொறாதே அவர்கள் பக்கலிலே அதி வ்யாமுக்தனாய் இருக்கிற எம்பெருமானுக்கு
விரஹ வியசனத்தாலே மிகவும் நொந்து இருக்கிற என்னுடைய தூதாய் என்னுடைய மகா அவசாதத்தைச் சொல் என்ன
சொல்லாதே செல்வப் பிள்ளைத்தனம் அடித்தாய்
சாயலோடு கூட நல்ல நிறத்தை இழந்தேன் நான் -இனி உன் பிரகிருதி அறிந்து உன்னை வளர்ப்பாரை தேடு –
நான் முடிந்தேன் என்று கருத்து –

———————————————————————————–

தனக்கு சேஷமாய் இருக்கிற வஸ்து இங்கனே அவசன்னமாய் முடிந்து போகப் பெறலாமோ -என்று
எம்பெருமானுக்கு அறிவித்தால் அவன் உபேஷித்து அருளினான் ஆகில் அவசியம் என்னை முடிக்க வேணும்
என்று ஒரு வாடையை இரக்கிறாள் –

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்று இருத்தல் வினை யற்றது என் செய்வதோ –
ஊடாடு பனி வாடாய் உரைத்தீராய் எனதுடலே –1-4-9-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன் வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
இஜ் ஜகத்தில் ஒருவரால் தேட ஒண்ணாத செவ்விப் பூ எல்லாம் தேடி சர்வ சேஷியானவனுடைய
வாடாத மலரின் செவ்வியை யுடைத்தான திருவடிகளின் கீழே நித்யமும் அடிமை செய்ய இவ்வாத்மாவை உண்டாக்கிற்று

வீடாடி வீற்று இருத்தல் வினை யற்றது என் செய்வதோ –
விரஹ வியசனத்திலே மூர்த்தாபி ஷிக்தமான பொல்லாத இருப்பு என் செய்யக் கடவதோ
எம்பெருமானைப் பிரிந்து விரஹ வியசனத்திலே மூர்த்தா பிஷிக்தமாய் இருக்கைக்கு ஈடாக
பாஹ்ய ஹீனமான இவ்வாத்ம வஸ்து என் செய்யக் கடவது என்றுமாம்
உறவுமுறையாரோட்டை தொற்று அறுகைக்கும் உம்மைப் பிரிந்து இருக்கைக்கும் ஈடான இப்பொல்லாதான இருப்பு என் செய்வது –

ஊடாடு பனி வாடாய் உரைத்தீராய் எனதுடலே —
அங்கோடு இங்கோடு உலாவித் திரிகிற குளிர் காற்றே
எம்பெருமானுக்கு என்னை அறிவித்தால் -அவன் உபேஷித்தான் ஆகில் அவசியம் ஈர வேணும்
அவனோட்டை விரஹத்தாலும் நெஞ்சு இளையாது இருக்கிற என்னுடைய உடலே

———————————————————————————————————-

கீழில் பாட்டில் ப்ரஸ்துதமான சேஷத்வத்தை அனுசந்தித்துப் பற்றுகிற மானசத்தை -எம்பெருமானுக்கு நம்முடைய
கார்யத்தை விண்ணப்பம் செய்து நம் கருமம் அறுதி படுத்தனையும் செல்ல என்னை விடாதே கொள் -என்று பிரார்த்திக்கிறாள்

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே -1-4-10-

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
அசங்கக்யமான சரீரங்களினுடைய ஜென்மத்தையும்
சரீரஸ்தமான ஆத்மாவையும் -மற்றும் எல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக
ஆத்மாவை உண்டாக்குகையாவது -சரீரத்தோடு கூட்டுகை

கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
பெரிதான நீரை யுடைய ஏகார்ணத்வத்தை தோன்றுவித்து இப்பால் உள்ள ஸ்ருஷ்ட்யாதிகளுக்காக அதின் உள்ளே கண் வளர்ந்து அருளும் ஸ்வ பாவனாய்

அடலாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனான திருவாழியை யுடையனான எம்பெருமானைக் கண்டக்கால்
கீழ்ப் பாட்டில் சொன்ன வார்த்தை சொல்லி

விடலாழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே –
கழன்று வருகிற பேதை நெஞ்சே –
நம் கருமம் அறுதிபடும்தனையும் என்னை விடாதே கொள் –
அளவுடையாய் பவ்யமான நெஞ்சு என்றுமாம் –

——————————————————————————————–

நிகமத்தில்
இத்திருவாய் மொழி கற்றார் திரு நாட்டில் முக்த ப்ராப்யமான நிரதிசய சம்பத்தை பெறுவர்-என்கிறார்

அளவியன்ற வேழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் ஆய்ந்து உரைத்த
அளவியன்ற யந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-

அளவியன்ற வேழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
அபரிச்சேத்ய மஹிமனாய்-சர்வ லோக ஈச்வரனாய்-ஆஸ்ரித பவ்யனாய் இருந்துள்ள எம்பெருமானை
ஏழ் உலகத்தவர் பெருமான் என்று தம்மையும் அகப்பட ரஷிக்கையிலே உத்யுக்தன் ஆனான் என்று ப்ரீதராய்ச் சொல்லுகிறார்

வளவிதமான வயல் சூழ்ந்து நிரதிசய போக்யமான குருகூர்ச் சடகோபன் ச்நேஹித்து உரைத்த
அபரிச்சேத்யமாய் அந்தாதியான ஆயிரத்துள் இப்பத்தின் உடைய வளவிதான உரையாலே –

————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: