திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -1-2-

இரண்டாம் திருவாய்மொழியிலே –
இப்படி எம்பெருமானுடைய பரத்வத்தை அனுசந்தித்த ஆழ்வார் -அவ்வனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே போதயந்த பரஸ்பரம் என்னும்படியாலே
சிலரோடு உசாவி அல்லது தரிக்க மாட்டாத தசை வருகையாலும் -அதுக்கு ஈடானாரைக் காணாமை யாகையாலும்
எல்லாரையும் தமக்குப் பாங்காம் படி திருத்தி யாகிலும் அவர்களோடு எம்பெருமானை அனுபவிக்க நினைத்து –
அவர்களைத் திருத்தும் விரகு எங்கனே என்று பார்த்து அருளி
சேதனர் ஆகிறார் -பொல்லாது கண்டால் கை விடவும் -நல்லது கண்டால் கைக் கொள்ளவும் கடவராய் இருப்பர்
ஆனபின்பு அவர்கள் பற்றின நிலத்தில் பொல்லாங்குகளைக் காட்டிக் கொடுத்தும்-பகவத் குணங்கள் உடைய
நன்மையைக் காட்டிக் கொடுத்தும் இவர்களைத் திருத்துவோம் என்று
இவர்கள் பற்றின நிலங்களின் உடைய அஸ்த்ரத்வாதி தோஷங்களை உபதேசித்து
அகில ஹேய ப்ரத்ய நீகனாய் சமஸ்த கல்யாண குணாத் மகனாய் சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனான எம்பெருமான் படியையும்
இவனைப் பற்றும் இடத்தில் உள்ள அந்தராய பரிஹார பூர்வகமாக மற்றும் பஜனத்துக்கு வேண்டும் உறுப்புகள் எல்லாம் உபதேசித்து அருளி
இப்படி அவனை பஜியுங்கோள்-என்று பக்தி யோகத்தை அருளிச் செய்கிறார் –

—————————————————————-

முதல் பாட்டில் பகவத் வ்யதிரிக்தமான சர்வ விஷயங்களையும் அறவிட்டு
சர்வ சேஷியான எம்பெருமான் திருவடிகளிலே ஆத்மாவை சமர்ப்பியுங்கோள் -என்கிறார் –

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே –1-2-1-

வீடுமின்
பற்றி நின்ற நிலத்தின் யுடைய த்யாஜ்யததாசியம் தோற்றுகைக்காக முதலிலே விடுங்கோள் என்கிறார்
முற்றவும்
பண்டு பற்றின விஷயங்களில் சில ஹேயமும்-சில உபாதேயங்களுமாய் இருக்கிறன அல்ல -எல்லாம் த்யாஜ்யமே
வீடு செய்து
அனுபாஷிக்கிறது -பற்றினவற்றை விடுகையே பிரயோஜனம் போந்து இருக்கச் செய்தே அதுக்கே மேலே
ஒரு நன்மை உபதேசிக்கைக்காக என்னும் இடம் தெரிகைக்காக
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே —
உம் உயிரை விடும் இடத்தில் உறவில்லா நிலத்தில் அன்றிக்கே உடையவன் பக்கலிலே இட இசையுங்கோள் –

———————————————————————————————————–

இரண்டாம் பாட்டில்
நெடும் காலம் பழகின விஷயங்களை விட ஒண்ணுமோ -என்னில்
அஸ்த்ரத்வாதி தோஷங்களை அனுசந்திக்கவே விடுகை எளிது என்கிறார்

மின்னின் நிலையில் மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –1-2-2-

மின்னின் நிலையில்
மின்னுக்கு உள்ள நிலையம் இல்லை என்கிறது
அஸ்திரமாய் இருந்தே ஸ்திரங்கள் போலே சில நாள் செல்லுகிலும் செல்லும் என்றவாறு
மன்னுயிர் ஆக்கைகள்
ஆத்மா தான் தனக்கு உபாதேயமாகக் கொண்டு விடேன் என்று பற்றிக் கிடக்கிற தேஹங்கள்
உயிர் என்கிற ஏக வசனத்துக்கும் ஆக்கைகள் என்கிற பஹூ வசனத்துக்கும் கருத்து -ஓர் ஆத்மாவே கர்ம அனுகுணமாக
அநேக தேஹங்களிலே நலிவுபடும் என்று தோற்றுகைக்காக
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே —
என்னும் இஸ்தலத்தில்
தோஷப் பரப்பு எல்லாம் அனுசந்திக்க வேண்டுவது இல்லை –
தோஷத்தின் உடைய ஏக தேச அனுசந்தானத்தாலே விஷயங்களில் வைராக்கியம் பிறக்கும்
நீரே
தோஷ அனுசந்தானத்துக்கு பிரமாண அபேஷை இல்லை -உங்களுக்கே அனுசந்திக்கலாமே

———————————————————————————————————

மூன்றாம் பாட்டில்
த்யாஜ்யத்தை சுருங்க உபதேசிக்கிறார்

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3-

நீர் நுமது என்று
அனர்த்தகரமான அஹங்கார மாமாகாரங்களைச் சொல்லுகிறது
இவை வேர் முதல் மாய்த்து
அஹங்கார மமகாரங்கள் தான் செல்லா நின்றனவே யாகிலும்
ஆச்சர்ய சேவா பிரசுரித்தாலும் -சாஸ்திர அப்யாசத்தின் மிகுதியாலுமாக இவை அபுருஷார்த்தம் என்று அத்யவசிக்கை –
இவற்றினுடைய வேர் முதல் மாய்க்கையாவது -சவாசனமாக இவற்றை விட்டு எம்பெருமானை ஆச்ரயிக்கை துஷ்கரம் ஆகையாலே இதுவே பொருளாக உசிதம்
இறை சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே-
சர்வேஸ்வரனை ஆஸ்ரயிங்கோள் -ஆத்மாவுக்கு அத்தோடு ஒக்கும் சீரியது இல்லை
சீரியதாவது ஹிதமும் பிரியமும்

——————————————————————————————————————

நாலாம் பாட்டில் பற்றப்படும் விஷயத்தின் நன்மை சொல்லுகிறார்

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே –1-2-4-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
ஏகரூபம் அல்லாமையாலே இல்லை என்னலாம்படி இருக்கிற அசேதனத்தின் தன்மையும்
ஏக ரூபமாய் இருக்கையாலே உண்டு என்னலாம் படி இருக்கிற சேதனர் படியும் அன்றிக்கே இருக்கும் அவன் ஸ்வரூபம்
அவன் ஸ்வரூபம் தான் இருக்கும் படி எங்கனே என்னில்

எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே —
அசங்க்யேய கல்யாண குணங்களை யுடைத்தாய் இருக்கும்
புறம்புள்ள சங்கத்தை விட்டு அவனை ஆஸ்ரயி
புல்கு என்கையாலே ஆஸ்ரயணீயம் இனிது என்று கருத்து

————————————————————————————

பகவத் சமாஸ்ரயணத்துக்கு அந்தராய பரிஹாரத்தை அருளிச் செய்கிறார்

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-

பிராக்ருத விஷய சங்கம் அறும்காட்டில் ஆத்மா மோஷத்தை உற்றது – கையுற்றது
அந்தப் புருஷார்த்தத்தை தவிர்ந்து நிரதிசய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்தைப் பெற்று நிலை நிற்க வேண்டி இருந்தாய் ஆகில்
ஆஸ்ரயிக்கும் போது உன்னை எம்பெருமானுக்கே சேஷமாக அத்யவசித்து ஸ்வாமியானவனை ஆஸ்ரயிப்பது-

—————————————————————————-

விலஷணரான நித்ய ஆஸ்ரிதரை யுடைய ஈஸ்வரன் -அவிலஷணராய் -இன்று வந்த அபூர்விகர்களை அங்கீ கரிக்குமோ -என்னில்

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

நித்ய ஆஸ்ரிதர் பக்கல் அவன் சங்கத்தைத் தவிர்ந்து -இன்று ஆஸ்ரயித்தவர்களையே-தாரகாதிகளாக கொண்டு இருப்பான் ஒருவன்
ஆனபின்பு நீயும் அப்படியே புறம்புள்ள சங்கத்தை யற்று அவனையே தாரக போஷகாதிகளாக -எல்லாமுமாகக் கொண்டு பற்று
நிரபேஷனான ஈஸ்வரன் ஷூத்ரரான நம்மை அங்கீ கரிக்குமோ -என்னில்
அங்கனே இருந்தானே யாகிலும் ஒக்க சங்கித்து இருக்கும் –
நீயும் சங்க ஸ்வ பாவனாய் -அவனுடைய சர்வ சேஷ வ்ருத்தியிலும் அதிகரி -என்றுமாம் –

———————————————————————————————————

சங்க ஸ்வ பாவனே யாகிலும் -அபரிச்சேத்ய உபய விபூதி மகா விபூதியை இருக்கையாலே நம் போல்வாருக்குக் கொள்ள ஒண்ணாது
ஆனபின்பு ஆஸ்ரயிக்கக் கூடாது என்னில் –
எம்பெருமானோடு உள்ள சம்பந்தத்தை அனுசந்திக்கவே தன் சிறுமையால் வெருவாதே தரித்து ஆஸ்ரயிக்கலாம் என்கிறார்

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-7-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு
அடங்க எழிலான சம்பத்து எல்லாவற்றையும் கண்டு
ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே —
அந்த வி லஷணமான சம்பத்து எல்லாம் என் ஸ்வாமி யது என்று அனுசந்தித்து
தானும் அவன் விபூதி அந்தர்ப்பூதனாக அனுசந்திப்பது

—————————————————————————————————

பஜன பிரகாரத்தைச் சொல்லுகிறார் –

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8-

மநோ வாக் காயங்கள் தேட வேண்டாதே -சம்பந்தமாய் -விதேயமான மூன்றையும் என்ன பிரயோஜனம் கொள்ளுகைக்கு இவை யுண்டாக்கிற்று-என்று ஆராய்ந்து
அவற்றுக்கு உண்டான அப்ராப்தமான பாஹ்ய விஷய ப்ராவண்யத்தை தவிர்த்து அவன் பக்கலிலே நிவேசி என்கிறார்

——————————————————————

இப்படி ஆஸ்ரயிக்க-பகவத் பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் எல்லாம் நசிக்கும் -சரீர பர்யவசாநமாத்ரமே இவனுக்கு விளம்பம் என்கிறார்

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

அவனை ஆஸ்ரயிக்கும் காட்டில் அவித்யாதி சங்கோசங்கள் எல்லாம் போம் -ஆக்கை என்று சரீரத்துக்கு பேர்-

——————————————————————————————-

சாரார்த்தமாக திருமந்த்ரத்தை அருளிச் செய்து -இத்தாலே யாவச் சரீர பாதம் எம்பெருமானை ஆஸ்ரயுங்கோள் -என்கிறார் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

அசங்க்யேயராய் ஜ்ஞானாதி கல்யாண குணங்களை யுடையருமாய் -நித்தியமாய் -வி லஷண ஸ்வரூபத்தை யுடைய
சர்வாத்மாவையும் -நித்ய சித்த கல்யாண குணங்களையும் யுடைய நாராயணன் யுடைய ஆஸ்ரிதரை ஒருகாலும் விடாதே
ரஷிக்கும் ஸ்வ பாவனான திருவடிகளை ஆஸ்ரயி

———————————————————————————————

நிகமத்தில்
எம்பெருமானுடைய குணங்களைத் தொடுத்த ஆயிரம் திருவாய் மொழியும் ஆராய்ந்து சொல்லப் பட்டன இவை என்கிறார் –

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-

திரண்ட தடங்களை யுடைய திரு நகரியை யுடைய ஆழ்வார் -சேரத் தடங்களை யுடைத்து -என்றும் சொல்லுவர் –
இப்பத்தைச் சேர் -என்று க்ரியா பதமாகவும் சொல்வர்
பரோபதேசம் பலரைக் குறித்து உபக்ரமிக்கையாலே மேல் ஏக வசனமான இடங்கள் எல்லாம் ஜாத்யபிப்ராயம் –

———————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: