திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-3-

மூன்றாம் திருவாய்மொழியில்
சஷூர் விஷயத்தை யாதல் -அத்தோடு சத்ருசத்தை யாதல் யாயிற்று பஜிக்கலாவது –
அதீந்த்ரியனான சர்வேஸ்வரனை அதி ஷூத்ரரான எங்களுக்குப் பஜிக்கப் போமோ – என்னில்
சாஸ்த்ரங்களில் -சமஸ்த கல்யாண குணாத் மகன் –சர்வாதிகன் -பரம போக்யன் -பரம உதாரன் -என்று கேட்ட மாத்ரத்திலே
ருசி பிறந்தவர்களுக்கு கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி க்ருபாதி குணங்களை பிரேரிக்க
அஜகத் ஸ்வபாவனாய்க் கொண்டு சங்கல்ப்பத்தாலே அப்ராக்ருத திவ்ய தேஹத்தை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு
சாது பரித்ராண துஷ்க்ருத் விநாச அர்த்தமாக ராம கிருஷ்ணாதி ரூபத்தாலே அவதரித்து ஸூ லபனாம்
ஆகையாலே ஆஸ்ரயிக்கைக்கு ஒரு தட்டு இல்லை -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

———————————————————————————

முதல் பாட்டில்
சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக அவதாரங்களை அனுசந்தித்தவர் -தொடங்கின உபதேசத்தை மறந்து
கிருஷ்ண அவதாரத்தில் நவநீத சௌர்ய சாரித்ரத்திலே தாம் அகப்பட்டு அழுந்துகிறார் –

பத்துடை யடியவர்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

பத்துடை
பத்து -பக்தி -பத்து என்று பக்தியைக் காட்டுமோ -என்னில்
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி -என்னக் கடவது இ றே
பக்தி சப்தத்தால் இங்கு பர பக்த்யாதிகளைச் சொல்லுகிறது அன்று –
பக்த்யுபக்ரமான அத்வேஷ மாத்ரத்தைச் சொல்லுகிறது
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கும் என்கிற குண பிரகரணம் ஆகையாலே
உடை –
இம்மாத்ரத்தைக் கனக்க யுடைமையாகச் சொல்லுகிறது -விண்ணுளாரிலும் சீரியர் -என்று இங்கே பகவத் அனுபவம்
பண்ணுவாரை நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகாக நினைத்து இருக்கும் பகவத் அபிப்ராயத்தாலே –

யடியவர்கு
அடியவர் என்றதும் பகவத் அபிப்ராயத்தாலே
ஆநு கூல்ய லேசம் குவாலாய் இருக்கை –
த்வயி கிஞ்சித் சமா பன்னே என்று கிட்டிற்று ஒரு குரங்கை நித்ய ஆஸ்ரிதையான பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்து இருக்கையாலே

எளியவன்
பாபத்தைப் போக்குதல் -புண்யத்தைக் கொடுத்தல் -தத் பலமான ச்வர்க்காதிகளைக் கொடுத்தல் -தன்னைக் கொடுத்தல் செய்யுமவன் அல்லன் –
அவர்களுக்குத் தன்னைக் கையாளாக்கி வைக்கும்
பக்திக்ரீதோ ஜனார்த்தன -தூத்ய சாரத்யங்களைப் பண்ணுகையாலே ஆஸ்ரிதர்க்கி இஷ்ட விநியோக அர்ஹன் ஆனான் இ றே
இவ்வேளிமை உகவாதார்க்கும் பொதுவாகிறதோ என்னுமத்தைப் பரிஹரிக்கிறது

பிறர்களுக்கு அரிய
ராவணாதி களுக்கு இளைக்கப் போகாது இருக்கை –
ஹிமவான் மந்தரோ மேரு
வித்தகன்
விஸ்மய நீயன்
யசோதைக்கு பவ்யனாய் இருக்கிற இருப்பிலே யமலார்ஜுனருக்கு அனபிபவன்யனாய் இருக்கை –

இப்படி இருக்கிறவன் தான் யார் என்னில்
மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -என்கிற மேன்மையை யுடையளாய்-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற போக்யதையை யுடையளான பிராட்டி அகலகில்லேன் இறையும் என்று விரும்பும் தத்துவம்
பெறற்கு அரிய ஸ்வாமிகள்
ஸ்ரீ யபதி என்கை இ றே சர்வாதிகத்வத்துக்கு லஷணம்
நம் -என்று இந்த மேன்மையும் நீர்மையும் தமக்கு பிரகாசித்து இருக்கிற படி –

மத்துறு கடை வெண்ணெய் களவினில்-
இப்படி மேன்மையை உபபாதித்து -சௌலப்ய காஷ்டையை சொல்லப் புக்கு அதிலே தாம் ஈடுபடுகிறார் –
மத்தாலே யுற்றுக் கடையா நிற்கிற வெண்ணெய் களவு காண்கிற அளவிலே –
உற்றுக் கடைகை யாகிறது -ஆயாசித்துக் கடைகை
கடைகிற பராக்கிலே ஒதுங்கி சாபல அதிசயத்தாலே அள்ளி யமுது செய்யும் போலே காண் -என்று பிள்ளான்
அவாப்த சமஸ்த காமன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -அது நேர் கொடு நேர் கிடையாமையாலே -களவிலே இழிந்து
அது தலைக் கட்டப் பெறாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

உரவிடை யாப்புண்டு
உரஸ் ஸ்தலத்திலே கட்டுண்டு
மலர் மகள் விரும்பி அணைக்கும் மார்விலே கிடீர் கையிற்றை இட்டுக் கட்டிக் கட்டுண்டு இருந்தது –
தாமோதரன் -என்கிறபடி எங்கனே என்னில் -அப்ப்ரதேசத்தை எல்லாம் நினைக்கிறது ஆகலாம் இ றே –
அன்றிக்கே
உரத்த விடையான தான் கட்டுண்டு -பெரு மிடுக்கன் என்றபடி
உரலினோடு இணைந்து இருந்து –
உரல் மூச்சு விடிலும் தான் மூச்சு விடாதே அசிதவ்யாவ்ருத்தனாய் இருந்த படி –

ஏங்கிய எளிவே
இந்த சுத்தனைக் கள்ளன் என்று கட்டினால் பொறுக்க மாட்டாதே அழத் தொடங்குமே –
அவள் வாய் வாய் என்றால் ஏறிட்ட த்வனி இழிய விட மாட்டாதே பயப்பட்டு நிற்கும்
எளிவு -சௌலப்யம் –

எத்திறம்
இது என்னபடி
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதம் மீண்ட பரத்வத்தை எல்லை காணலாம்
இந்த சௌலப்யம் தரை காண ஒண்ணாது இருந்ததீ-என்கிறார்

—————————————————————————————–

இரண்டாம் பாட்டில்
இந்த சௌலப்யத்தை அனுசந்தித்து -ஆறு மாசம் மோஹாங்கதராய்
-சிரேண சம்ஜ்ஞாம் பிரதிலப்ய சைவ விசிந்தயா மாச விசால நேத்ரா -என்கிறபடியே
காலம் உணர்த்த ப்ரபுத்தரானவர் ப்ரஸ்துதமான சௌலப்யத்தை சப்ரகாரமாக உபதேசிக்கிறார் –

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

எளிவரும் இயல்வினன்-
பத்துடை அடியவர்க்கு -என்று -சோபாதிகம் அன்று இவன் எளிமை -ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தம் எளிமையை இயல்வாக யுடையவன்
நிலை வரம்பில –
நிலை இல்லாமை யாவது -ஜன்மத்தில் உத்கர்ஷ -அபகர்ஷம் இல்லாமை
வரம்பு இல்லாமையாவது -சேஷ்டிதங்களில் நியதி இல்லாமை
இவை இரண்டும் நிலை இல்லாமையாலே யாக்கி -வரம்பு இல்லாமைக்கு பொருள் அவதரித்த இடத்தில் பரத்வத்தை ஆவிஷ்கரிக்கிலும் ஆவிஷ்கரிக்கும் –
அதாகிறது -கண்டா கர்ண மோஷாதிகள் -ஒன்றிலும் ஒரு நியதி இல்லை –
ரஷணத்துக்கு உறுப்பானவை ஏதேனுமாக அமையும்

பல பிறப்பாய் –
வேதம் சொல்லிலும் -பஹூதா விஜாயதே -என்னும் அத்தனை –
தான் சொல்லிலும் -பஹூநிமே -என்னும் அத்தனை –
உட்புக்க தம் போல்வார் சொல்லிலும் -என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்னும் அத்தனை –
பிறப்பாய் –
பரார்த்தமாக தாழ நின்றோம் என்று தம் பக்கலிலும் புரை இன்றிக்கே இருக்கை –என்னக் கடவது இ றே

ஒளி வரு முழு நலம் –
பிறக்கப் பிறக்கக் கல்யாண குணங்கள் கட்டடங்க உஜ்ஜ்வலமாகா நிற்கும்
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
முதலில கேடில –
இக்குணங்களுக்கு உத்பத்தி விநாசங்கள் இல்லாமையாலே நித்யங்களாய் உள்ளன
வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன்-
மோஷம் ஆகிற தெளிவைத் தரும் ஸ்வ பாவத்தை விடாதே கூட வந்து அவதரிக்கும் –
இதுவும் கல்யாண குணங்களிலே ஒன்றாய் இருக்கப் பிரித்துச் சொல்லுகிறது -அவதாரத்துக்கு மோஷ பிரதானத்திலே நோக்கு ஆகையாலே

வீடாம் தெளிதரும்
அவனே இங்கே வந்து அவதரிக்கிலும் சோக மோஹங்களை பண்ணும் –
சம்சாரி அங்கே செல்லிலும் தெளிவைப் பண்ணும் தேசம் –
பரமம் சாம்யம் உபைதி –
முழுவதும்
ஒளி வரும் முழு நிலம் வீடாம் தெளி தரு நிலைமை யது முழுவதும் ஒழிவிலன் –
இறையோன்
அஜோபிசன் நவ்யயாத்மா பூதானாம் ஈச்வரோபிசன் -என்கிறபடியே -நியாம்யர் நடுவே நியாமகத்வம் குலையாமல் வந்து பிறக்கும் –
அளிவரும் அருளினோடு
பக்வமான அருளோடு -அதாகிறது -ஆஸ்ரித ரஷணம் தன் பேறாய் இருக்கை –

அகத்தனன் புறத்தனன் –
அகத்தனனாய் இருக்கும் ஆஸ்ரிதற்கு
புறத்தனாய் இருக்கும் அநாஸ்ரிதற்கு
அதாகிறது -அர்ஜுனாதிகளுக்கு கையாளாய் இருக்கையும்
துர்யோதனாதிகளுக்கு ஆளிட்டு விடுகையும்
அமைந்தே —
இங்கனே இருக்கை –

இறையோன் -முதலில கேடில-ஒளி வரு முழு நலம் – வீடாம் தெளிதரு நிலைமையது
முழுவதும்- ஒழிவிலனாய் -அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனனாய்க் கொண்டு
சமைந்து –நிலை வரம்பில-பல பிறப்பாய் -எளிவரும் இயல்வினன் -என்று அந்வயம் –

———————————————————————————————-

இவ்வவதார ரகஸ்யம் -அதிசயித ஜ்ஞானராய் இருப்பார்க்கும் அறிய ஒண்ணாது என்கிறது

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற உயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநிலமதுவாம்
அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே –1-3-3-

அமைவுடை யறநெறி-
பலத்தோடு நியதமாய் இருந்துள்ள தர்ம மார்க்கம்
முழுவதும் உயர்வற உயர்ந்து
எல்லாவற்றாலும் இவை அனுஷ்டித்தாரில் அவ்வருகு இல்லை என்னும் படி எல்லையிலே நிற்கை –
அமைவுடை முதல் கெடல்-
இதன் பலமான ஸ்ருஷட்யாதிகள் மிகவும் விதேயமாய் இருக்கை-
அமைவுடை முதல்-ப்ரஹ்மா ஜகத் சிருஷ்டி பண்ணினால் -சர்வேஸ்வரனோ-என்று சங்கிக்க வேண்டும் படி இருக்கை
கெடல் -சம்ஹாரம்
ஓடிவிடை –
அவாந்தர சம்ஹாரம்
யறநிலமதுவாம் அமைவுடை-
மிகவும் கை வந்து இருக்கும் சமைவையுடைய
யமரரும்
ப்ரஹ்மாதிகளும்
யாவையும்
அசேதனங்களும்
யாவரும்
சேதனரும்
தானாம் அமைவுடை நாரணன்
தான் என்கிற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அன்வயிக்கையாலே நாரணன் -என்னும் திரு நாமத்தை யுடையவன்
மாயையை அறிபவர் யாரே –
சகல சேதன அசேதனங்களையும் தனக்கு பிரகாரமாக யுடைய தான் தன்னுடைய விபூதியிலே ஒரு பிரகாரத்துக்கு
தான் பிரகாரமாய் -அவர்களுக்கு நியாம்யனாய் இருக்க ஆச்சர்யம் ஒருவர்க்கும் நிலமோ
பிதா புத்ரேண பித்ருமான் யோநியோ நௌ நாவேத வின்மநுதே தம் ப்ருஹந்தம் -இத்யாதி
நித்ய ஸூ ரிகள் அனுபவத்திலே அந்ய பரர் ஆகையாலே அறிய மாட்டார்கள்
ப்ரஹ்மாதிகள் துர்மா நத்தாலே அறிய மாட்டார்கள்
சம்சாரிகள் விஷய பிரவணராய் அறியார்கள்
இவர் போல்வார் -எத்திறம் -என்று மோஹித்து கிடப்பார்கள்-

————————————————————————————————————

இப்படி இருக்கிற அவதார சௌலப்யம் ஒருவருக்கும் நிலம் அன்றோ என்னில் -ஆஸ்ரிதர்க்கு அத்யந்த ஸூ லபமாய்
அநாஸ்ரிதர்க்கு அத்யந்த துர்லபமாய் இருக்கும் என்கிறார்-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய வெம்பெருமான்
பேரும் ஒரு உருவமும் உளதில்லை யிலதில்லை பிணக்கே–1-3-4-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய-
அநாஸ்ரிதர் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளே யாகிலும் ஒரு ஸ்தூல ஆகாரமும் அறிய அரியனாய் இருக்கும் –
தன்னை உட்புக்கு அறிய மாற்றிற்று இலர்களே யாகிலும் ஆபாதப்ரதீதி யாகவும் அறியப் போகாத படியாய் இருக்கும் –
நேரே கடிக்கமலத்து உள்ளிருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை யான் -என்னக் கடவது இ றே
எம்பெருமான்
உகவாதார் கண் படாதபடி இருக்கிற இடம் தன் பேறாக உகக்கிறார்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய
அறிவில் குறைந்த இடைச்சிகள் -குரங்குகள் -ஆகிலும் ஆஸ்ரிதர்க்கு இப்படிப் பட்டான் என்று பரிச்சேதிக்கலாம் படி இருக்கும்
எம்பெருமான்
ஆஸ்ரிதர்க்கு கை புகுந்து இருக்கிற இடமும் தம் பேறாக உகக்கிறார்
நமோ நமோ வாங்மனசாதி பூமயே -இத்யாதி
பேரும் ஓர் ஆயிரம்
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான அநேகம் திரு நாமங்களை யுடையவன்
பிற பல வுடைய –
இத் திரு நாமங்களைச் சொல்லி கூப்பிட்டாருக்குக் காட்டும் வடிவைச் சொல்லுகிறது
பிற -என்ன வடிவைக் காட்டுமோ என்னில் -நாமத்தைச் சொன்ன அநந்தரம்-பிற-என்றால் ரூபத்தைக் காட்டும் இ றே
நாம ரூபே வ்யாகரவாணி
வெம்பெருமான்
பேரும் ஒரு உருவமும் உளதில்லை
இவற்றில் ஒரு பேரும் ஒரு உருவமும் அநாஸ்ரிதர்க்கு பிரகாசியாமையாலே இல்லை என்று இருப்பார்கள்
யிலதில்லை
ஆஸ்ரிதற்கு இவை எல்லாம் பிரகாசித்து இருக்கையாலே உண்டு என்று இருப்பார்கள்
பிணக்கே
இப்படி நித்ய விப்ரதிபன்னமாய்ச் செல்லா நிற்கும் –

———————————————————————————————————

இப்படி ஆஸ்ரயணீயன் ஸூலபனான பின்பு ஆஸ்ரயிக்கும் வழி என் -என்ன அவன்
ஸ்ரீ கீதையில் அருளிச் செய்து வைத்த பக்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயிங்கோள் என்கிறார்

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறி யுள்ளி யுரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் யாதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு
உணக்கு மின்பசை யற அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

பிணக்கற வறுவகைச் சமயமும்
ஆறு வகைப்பட்ட பாஹ்ய சமயத்துக்கு வைதிக சமயத்தோடு உண்டான பிணக்கு அற
நெறி யுள்ளி யுரைத்த
வேத மார்க்கத்தை ஆராய்ந்து அருளிச் செய்த படி
வாக்விவ்ருதாச்சா வேதா -என்று தான் சொன்னது அடங்க வழியாய் இருக்க பிரஜைகள் பக்கல் பரிவாலே
ஒர்ரர்த்தம் போதியாதவன் நிரூபிக்குமா போலே ஆராய்ந்து அருளிச் செய்த படி –

கணக்கறு நலத்தனன்
எல்லையிறந்த ஔதார்ய குணங்களை யுடையவன்
அந்தமில் யாதியம் பகவன்
தனக்கு முடிவு இன்றிக்கே -எல்லார்க்கும் காரண பூதனாய் இருக்கும்
ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி குண பூர்ணனாய் இருக்கை
இத்தால் -உதாரனாய் -பிராப்தனாய் -ஆப்தனாய் இருந்தவன் வார்த்தை யாகையாலே விச்வாச நீயம் என்கை –

வணக்குடைத் தவ நெறி வழி நின்று –
வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே -வணக்குடை -என்கிறது
தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –
பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே -யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்
இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்
புற நெறிகளை கட்டு
இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து
இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இ றே –

உணக்கு மின்பசை யற
பறித்தாலும் கிடந்திடத்தே கிடக்குமாகில் பருவம் செய்யும் இ றே
அதுக்காக சவாசனமாக விடுங்கோள் -இது செய்வது என் கொண்டு என்னில்
அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே
தத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் –
அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -வி லஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்-
அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம்
தானி சர்வாணி சம்யம்ய -மாம் ஏவ ப்ரபத்யந்தே -சரம ஸ்லோகத்தின் படியே –

—————————————————————————————–

மத்யே விரிஞ்சகிரிசம் பிரதம அவதார –என்று பிரதம அவதாரம் ப்ரஹ்ம ருத்ராதி சஜாதீயமாய் இருக்கையாலே
பிரித்து பிரதிபத்தி பண்ண அரிதாகையாலே
பழைய துர்லபத்வமே சம்பவத்திருந்ததீ -என்ன த்ரிமூர்த்தி சாம்யத்தைப் பரிஹரிக்கிறார்

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த வின்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை யுணர்வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

உணர்ந்து உணர்ந்து
உணர்வு என்னாதே-உணர்ந்து -என்கையாலே -ஜ்ஞப்தி மாத்ரம் வஸ்து -என்கிறவனை நிரசிக்கிறது
வீப்சையாலே ஆகந்துக சைதன்யவாதியை நிரசிக்கிறது
ஜ்ஞாத்ருத்வம் நித்ய தர்மம் ஆகையாலே -ஜ்ஞானக்ரியா கர்த்ருத்வம் ஜ்ஞாத்ருத்வம் –அது தான் அநித்தியம் -என்கிற க்ரியாவாதியையும் நிரசிக்கிறது

இழிந்து அகன்று உயர்ந்து-
தான் அணு பரிமாணனாய் இருக்க -ஸ்வ ஜ்ஞானத்தாலே பத்துத் திக்கையும் வியாபித்து இருக்கும்
வாலாக்ர சதபா கஸ்ய -இத்யாதி –

உருவியந்த
ஆகையாலே ஜடமான அசித்தில் காட்டில் வியந்து -வேறுபட்டு இருக்கும்
உருவு -என்று பத பேதமான போது -இயத்தல் -கடத்தலாய்-கடந்து இருக்கும் என்னவுமாம்
வேறுபாடு தான் பிரகாரித்வ பிரமாத்ருத்வ நியந்த்ருத்வங்களாலே
வின்நிலைமை
சந்நிஹிதனான ஆத்மாவினுடைய ஸ்த்திதி
உணர்ந்து உணர்ந்து உணரிலும்
ஸ்ரவண மன நாதிகளாலே சாஷாத் கரித்தாலும்
இறை நிலை யுணர்வரிது
ஈஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்களோடு ஒக்க தன்னை சங்கோ சித்து நிற்கையாலே ஈஸ்வரன் இன்னான் என்று அறிகை அரிது
உயிர்காள்
சேதனராய் யுள்ளீர்காள் -ஜட வஸ்துவாய் அறியாது ஒழியப் பெற்றது இல்லை –
உங்கள் நிலை இருந்த படி என் –நீர் அறிவிக்க அறியப் பார்த்த எங்களுக்கு அவ்வருமை உண்டோ என்ன -ஆகில் கேளுங்கோள் என்கிறார்
உணர்ந்து உணர்ந்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து
இவர்களுடைய குண ரூப விபூதி நாமாதிகளையும் தத் பிரதிபாதகமான பிரமாணங்களையும் மிகவும் ஆராய்ந்து
மனப் பட்டதொன்றை -உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்
உங்களுக்கு ஏற ஈச்வரதயா நிர்ணீதமான வஸ்துவை மன நாதிகளாலே அனுசந்தித்தும்
தத் வாசகமான நாமங்களை உச்சரித்தும் ஆஸ்ரயிங்கோள் –
வ்யாஹரன் மாம் அனுச்மரன் –

—————————————————————————————

இப்படி அருளிச் செய்த இடத்திலும் அவர்கள் ஆறி இருந்தவாறே திரியட்டும் மந்த ஆயுஸ் ஸூ க்களான
நீங்கள் வஸ்து இன்னது என்று நிர்ணயித்து ஆச்ரயிக்கப் பாருங்கோள் என்கிறார்

ஓன்று எனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே –1-3-7-

ஓன்று எனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
மூர்த்தி த்ரயமும் ஏகாத்ம அதிஷ்டதமோ–அநேக ஆத்ம அதிஷ்டிதாமோ
அநேக ஆத்ம அதிஷ்டிதமானால் அவர்களில் பிரதானன் எவன் என்று அறிய ஒண்ணாத ஸ்வ பாவத்தை யுடையராய் நின்ற
நன்று எழில் நாரணன்
அநந்ய பரமான நாராயண அனுவாதிகளை நினைக்கிறார்
எழில் என்று -அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்கிற புகாரை நினைக்கிறது
நான்முகன் அரன் என்னும் இவரை
சிருஷ்டிக்கு உறுப்பான பல முகங்களை யுடைய சதுர்முகன் -அழிக்கும் தொழிலே கற்று இருக்கும் ருத்ரன்
இவர்களோடு மற்று உள்ள சேதன அசேதனங்களோடு வாசி அற சர்வமும் சரீரம் என்னும் இடத்துக்கு வாசகமான திரு நாமத்தை யுடையான் ஒருவான்

என்னும் இவரை
இப்படி விசத்ருச ஸ்வ பாவராய் உள்ளவர்களை
ஒன்ற நும் மனத்து வைத்து
இவனே நிர்வாஹகனாக வேணும் என்று பஷ பதியாதே பிரமாண கதிகளை ஆராய்ந்தால் கோல் விழுந்தவன் பரன் ஆகிறான் -என்று
மூவரையும் ஒக்க உங்கள் நெஞ்சிலே வைத்து
உள்ளி
சுருதி நியாயங்களாலே ஆராய்ந்து
நும் இரு பசை அறுத்து
நீங்கள் ஈச்வரதயா சங்கி த்த ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் நசை அறுத்து
நும் இரு பசை
புருஷகதமான ரஜஸ் தமஸ் ஸூ க்களால் வந்த சங்கை ஒழிய பிரமாண கதிகளால் அவர்கள் பக்கல் ஈச்வரத்வ சங்கையும் இல்லை என்கை
நன்று என நலம் செய்வது அவனிடை
அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜன பக்தியைப் பண்ணப் பாருங்கோள்
நம்முடை நாளே
க்ரமத்திலே செய்கிறோம் என்று இராதே
சரீரத்தின் உடைய நிலை இல்லாமையைப் புத்தி பண்ணி சடக்கென ஆஸ்ரயியுங்கோள்
நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யச்மிதே ரவௌ-ஆத்ம நோ நாவ புத்யந்தே மனுஷ்யா ஜீவித ஷயம்-

—————————————————————————————-

நன்று என நலம் செய்வது என்னும் காட்டில் ஆஸ்ரயிக்கலாய் இருக்குமோ
அநாதி காலம் ஆர்ஜிதமான கர்மம் ஆஸ்ரயணத்தை விலக்காதோ என்னில்
பஜன உபக்கிரம வேளையில் அவை அடங்க நசிக்கும் -நசிப்பாரும் உண்டு என்கிறது

நாளும் நின்றடு நம் பழமை அங்கொடு வினையுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனகமல மறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–1-3-8-

நாளும் நின்றடும்
நாள் தோறும் இடைவிடாதே நின்று ஹிம்சிக்கை -ஆத்மா நித்யன் -காலம் அநாதி -என்றும் ஒக்க நலிந்து போருகிற இதுவே
நம்
நாம் புத்தி பூர்வகமாக பண்ணிப் போந்த
பழமை
அநாதியாய் இருக்கை
அங்கொடு வினை
மிகவும் க்ரூரமாய் இருக்கை
உடனே மாளும்
ஆச்ரயிக்கத் தொடங்கினவாறே-நசிக்கும் –
ததைவ முஷ்ணாத்ய சுபான்ய சேஷ தா –
ஓர் குறைவில்லை
மேலும் ஓர் விரோதங்கள் வாராது என்னுதல்
சர்வ அபிமதங்களும் பூர்ணமாம் என்னுதல்
சுபானி புஷ்ணாதி
மனனகமல மறக் கழுவி
ஆச்ரயிணன் இவனோ -மற்றை யவனோ மனசில் உண்டான சம்சயத்தை சவாசனாமாகப் போக்கி
அஞ்ஜச்சாச்த்ரத்தா நச்ச சம்சயாத்மா வி நச்யதி

நாளும்
நாள் தோறும் வேணும் என்று ஒரு விதி அன்று –
அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னுமா போலே இதுக்கு நிஷித்தமாய் இருப்பதொரு காலம் இல்லை என்கை
நம் திருவுடையடிகள்
ஸ்ரீ மானான ச்வாமியானவனுடைய
நம் -என்று அஜாயமானோ பஹூ தா விஜாயதே -என்று அவதாரத்தை பிரஸ்தாபித்து –
ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்று பிரமாண பிரசித்தமான ஸ்ரீ யபதியை தமக்கு பிரகாசிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –
தம் நலம் கழல் வணங்கி
வாச பரம் ப்ரார்த்தயிதா ப்ரபத்யே நியத ச்ரியம் -என்று அவள் முன்னாக பற்றுவாருடைய குணாகுணம் நிரூபணம் பண்ணாத திருவடிகள்
வணங்கி -என்கிற இது வினை எச்சம் பெற்று வணங்க என்று அர்த்தமாகக் கிடக்கிறது
வணங்க நாளும் நின்றடும் -என்று அந்வயம்
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே-
காலமும் கரணபாடவமும் இன்றிக்கே சரம தசா பன்னரானவர்கள் இழந்தே போம் இத்தனையோ-என்னில்
அத்தசையிலே யாகிலும் ப்ரணமாதிகளில் ஒன்றிலே உபக்ரமித்து அவ்வளவிலே தான் முடியில் அதுவே பிரபலம்- அதுவே ஸ்ரேஷ்டம்
ஸ்தித்வாஸ் ச்யாமந்தகாலே அபி ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி -என்று ஆத்மா சாஷாத்காரத்துக்கு அகப்பட
இப்படி சொல்லா நின்றால் பகவத் விஷயத்துக்குச் சொல்ல வேணுமோ

——————————————————————————————

கீழ் ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய அபரத்வமும் சர்வேஸ்வரனுடைய பரத்வமும் சொன்னார் –
இப்பாட்டில் இவனைப் பற்றி அவர்கள் லப்த ஸ்வரூபராய் இருக்கிறபடியைச் சொல்லுகிறார் –

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெருத்துந்தித்
தலத்து எழுதிசை முகன் படைத்த நல்லுலகும் தானும்
புலப்பட பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே –1-3-9-

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் –
திரிபுரஹநாதி சமர்த்தனான ருத்ரன் எம்பெருமானுடைய தஷிண பார்ஸ்வத்தை ஆஸ்ரயித்து இருக்கும் –
பச்யை காதச மே ருத்ரான் தஷிணம் பார்ச்வம் ஆஸ்ரிதான்-என்றும்
தபஸா தோஷி தஸ்தேன விஷ்ணுநா ப்ரப விஷ்ணு நா -ஸ்வ பார்ச்வே தஷிணே சம்போர் நிவாஸ பரிகல்பித –

இடம் பெருத்துந்தித் தலத்து எழுதிசை முகன் படைத்த நல்லுலகும் தானும் புலப்பட
எழுச்சியை யுடைய திசைமுகன் படைத்த லோகமும் தானும் அசங்கு சிதமாக இருக்கிறது திரு நாபி கமலத்திலே
இவை இவர்களுடைய சர்வ பிரகார ரஷைக்கும் உப லஷணம்
எழுச்சியாவது -சதுர்தச புவனத்துக்கும் நிர்வாஹகனான வளவுடைமை –
ஈஸ்வரன் உகந்து வந்து திருவவதரிக்கைக்கு யோக்யமாய் இருக்கையாலே நல்லுலகம் என்கிறது
ஆபத்துக்களிலே திரு மேனியிலே இடம் கொடுக்குமத்தை மஹா குணம் ஆகையாலே எப்போதும் ஒக்க ஆழ்வார்கள் அருளிச் செய்து
போரா நிற்பார்கள் -இ றே-
சாமந்தர்க்கு புறம்பே நாடுகள் கனக்க உண்டானாலும் மாளிகைக்கு உள்ளே செம்பாலே நாழி அரிசியைத் தங்களுக்கு
வரிசைக்கு உடலாக ஆதரித்துப் போரா நிற்பார்கள் இ றே
அப்படியே இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள் –

பின்னும்
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு தன் திருமேனியிலே இடம் கொடுப்பதற்கு மேலே
தன்னுலகத்தில் அகத்தனன்
தான் உண்டான லோகங்களிலே வந்து திருவவதரிக்கும் –

தானே
ஒரு கர்மத்தால் அன்று -தன் இச்சையாலே –
நா காரணாத் காரணாத்வா-இத்யாதி –
இப்படி அவதரிக்கிறது எதுக்காக என்னில்-

புலப்பட
காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருப்பார்க்குக் காட்சி கொடுக்கைக்கு ஈடாக
புலம் என்று -இந்த்ரியம்
படுகை– விஷயமாகை-கண்ணுக்கு இலக்காகை-

சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள –
இவனுடைய குணங்களைப் பேசப் புக்கால் உள்ளே உள்ளேயாய்த் தோண்டத் தொலையாதே –
பாசுரம் இட்டுப் பேசி முடிக்க ஒண்ணாது என்கை
பிரளய ஆபத்துக்களில் திரு வயிற்றிலே வைத்து நோக்கும் என்னவுமாம் –

இவையவன் துயக்கே
துயக்கு என்று மனம் திரிவு
இப்படிகளை எல்லாரும் அறியாது ஒழிவான் என் -என்னில் தன் பக்கல் விமுகரானவர்களுக்கு சம்சய விபரயங்களை
அவன் தானே பண்ணி வைக்கையாலே
மம மாயா என்று பிரகிருதியை இட்டு மறைத்து அறிவு கெடுக்கும்
தன் மேன்மை தோற்ற நிற்கில் எட்டான் என்று கை வாங்கிப் போவார்கள் –
தாழ நிற்கில் நம்மிலே ஒருவன் என்று காற்கடைக் கொள்வர்கள் –

——————————————————————————————-

அவன் விமுகர்க்கு பண்ணுமவை கிடக்க கிடீர் -அவன் காட்டின வழியே காணப் புக்க நாம்
மநோ வாக் காயங்களாலே அவனை அனுபவிப்போம் என்று பாரிக்கிறார்

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியனவல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே –1-3-10-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும் மயக்குடை மாயைகள் வானிலும் பெரியனவல்லன்
துயக்கறு மதியுண்டு -சம்சய விபர்யய ரஹிதமான அந்தக்கரணம்
அத்தை யுடையார் ஆகையாலே யதா ஜ்ஞானத்தை யுடைய தேவர்களை மதி கெடுக்கும் படி தெரியாத குண சேஷ்டிதங்களை யுடைய
ஆச்சர்யமான அவதாரங்களுக்கு எல்லை இன்றிக்கே இருக்கை
முற்பட -தங்கள் விரோதிகளைப் போக்குகைக்காக வந்து அவதரிக்க வேணும் என்று சரணம் புகுவார்கள்
அவன் வந்து அவதரித்தவாறே -நம்மிலும் தாழ்ந்தான் ஒருவன் -என்று காற்கடைக் கொள்ளுவார்கள்
பாரிஜாத ஹரணத்திலே இந்த்ரன் வஜ்ராத்தைக் கொண்டு தொடர்ந்தான் இ றே
அமரர்கள் என்று நித்ய சூரிகள் ஆகவுமாம்
பெரிய திருவடியுடைய இதிகாசம் -அவன் மயக்குகிறவை கிடக்கிடீர்
அவன் காட்டக் கண்ட நாம் அனுபவிப்போம் என்று அதிலே பாரிக்கிறார்

புயல் கரு நிறத்தனன்-
வர்ஷூக கலாவஹம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவன்

பெரு நிலம் கடந்த
பூமிப் பரப்பு அடங்கலும் அநாயாசேன அளந்த

நல்லடிப் போது
குணாகுண நிரூபணம் பண்ணாத பரம போக்யமான திருவடிகள்

அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே
மோஹித்துக் கிடக்க கடவேன் அல்லேன்
பிரகர்ஷத்தாலே அக்ரமாக கூப்பிடக் கடவேன்
கண்டவாறே கட்டிக் கொள்ளக் கடவேன்
நிர்மமனாய் விளக் கடவேன்
பிரயோஜன நிரபேஷமாக செய்யக் கடவேன்
இப்படிச் செய்யப் பெற்றேன் என்றும் சொல்லுவர்

————————————————————————————————-

நிகமத்தில்
இப்பத்தை அப்யசித்தவர்கள் நித்ய ஸூரிகள் வரிசையைப் பெற்று பின்பு சம்சார நிகலத்தை அறப் பெறுவார் என்கிறார்-

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

அமரர்கள் தொழுது எழ –
கடைகிற போது அழகைக் கொண்டு -பிரயோஜனாந்தர பரரான தேவர்களும் -அநந்ய பிரயோஜனரைப் போலே அழகுக்குத் தோற்கும் படி யாயிற்று கடைந்தது
தத் ப்ராஞ்ஜ லயஸ் சர்வே பகவந்தம் ஸூ ரேச்வரா -துஷ்டுவு புண்டரீகாஷம் சரண்யம் சரணார்த்திந–
தொழுது ஏழு -என்கிற தம் பாசுரம் ஆயிற்று என்கிறார் –

அலை கடல் கடைந்தவன் தன்னை
ஒரு கடல் நின்று ஒரு கடலைக் கடையுமா போலே அதி ஷூபிதமாகக் கடலைக் கடைந்த படி –

அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
சேர்ந்த பொழில் அழகை யுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாருடைய அந்தரங்க வ்ருத்தி யாயிற்று இவை தான்
வாசிகமான அடிமை இ றே
பூர்ண விஷயத்தில் இதுக்கு மேல் செய்யலாவது இல்லையே –
தத் விப்ராசோ விபன்யவ –
நித்ய ஸூ ரிகளுக்கும் இதுவே இ றே வ்ருத்தி –

அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும்
இவ்வாசிகமான அடிமை -முறை என்று -கார்யாபுத்த்யா செய்ய வேண்டாதபடி -ரச கனமாயிற்று இவ்வாயிரமும் –

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–
சிறையில் இருந்த ராஜகுமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்னை சிறையை வெட்டி விடுவாரைப் போலே
நித்ய ஸூ ரிகள் வரிசையைக் கொடுத்து பின்னை சம்சார அஞ்சிறையை கழிக்கும் ஈஸ்வரன்
ஆதி வாஹிகரோடு விரஜையில் சென்று ஸூ ஷ்ம சரீர விதூ நனம் பெறுவார்-

————————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: