திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-1-

ஸ்ரீ யபதியாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -அக்குணங்களுக்கு பிரகாசகமான திவ்ய விக்ரஹத்தை யுடையனாய் –
அவற்றை அனுபவிக்கும் நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற இருப்பைத் தன்னுடைய நிர்ஹேதுக கிருபையினால்
அனுபவ யோக்யமாம் படி நமக்கு பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தந்து அருளினான்
அவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவிக்கப் பார் என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அனுசாசிக்கிறார்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1————-

உயர்வற
உயர்வு –
உயர்த்தி -அதாவது தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களிலும் எல்லாப் படியாலும் உண்டான எல்லா உயர்த்தியையும் சொல்லுகிறது –
அற-
ஆதித்ய சந்நிதியிலே நஷத்ராதிகளைப் போலே யுண்டாய் -அவற்றை இல்லை என்னலாம் படி இருக்கை
ஜ்யோதீம்ஷ்த்யாதித்யாவத் -இத்யாதி
உயர் –
உயரா நிற்கை
கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அவ்வருகாய்க் கொண்டு வாக் மனஸ் அங்கங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை
அனுபூத அம்சம் அல்பமாய் அனுபாவ்ய அம்சமே விஞ்சி இருக்கை
நலம்
குண விபூத்யாதிகளை அனுபவிக்கையால் வந்த ஆனந்த குணம் –
ஏக வசனம் ஜாத்யபிப்ராயமாய் -குண ஜாதி பரமாகவுமாம்-
ஆனந்த அவஹமான குண விபூத்யாதி பரமாகவுமாம்
நலம் என்கையாலே -கட்டடங்க நன்மையேயாய் இருக்கை
உடையவன்
ஆதந்துகம் அன்றிக்கே ஸ்வரூப அனுபந்தியாய் இருக்கை
இதுக்கு ஆளவந்தார் -ஸ்வா பாவிக அநவதிக அதிசய கல்யாண குண கண -என்று அருளிச் செய்வர்
குத்ருஷ்டிகளை மிடற்றை பிடித்தால் போலே நலமுடையவன் என்று ஆழ்வார் அருளிச் செய்த படி கண்டாயே -என்று
பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்தான் –

எவன்
இக் குணங்களுக்கு ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தின் உடைய சுருதி பிரசித்தியைச் சொல்லுகிறது
இந்த குணங்கள் தானும் நிறம் பெறும்படியான ஸ்வரூப வைலஷண்யத்தை சொல்லிற்று ஆகவுமாம்
அவன்
முன்பு சொன்ன நன்மைகளில் காட்டிலும் மேற்பட்ட தொரு நன்மை சொல்லுகைக்காக அவன் -என்று உத்தேசிக்கிறது –

மயர்வற
மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது
அற -சவாசனமாகப் போகும்படி
மதி நலம்
மதி என்று ஜ்ஞானம்
நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி
அருளினன்
இத்தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –
எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே
எவன்-
இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்
அவன்
அதுக்கு மேலே ஒரு நன்மை சொல்லுகைக்காக அவன் என்று உத்தேசிக்கிறது –

அயர்வறும்
பகவத் ஜ்ஞானத்துக்கு விச்ம்ருதி இல்லாமை ஸ்வ பாவமாய் இருக்கை
அமரர்கள்
மரணம் இன்றிக்கே இருப்பவர்கள்
அவர்களுக்கு மரணம் ஆவது பகவத் அனுபவ விச்சேதம் -அது இன்றிக்கே இருக்கை
அதிபதி
அதிகனான பதி
அசந்க்யாதரான நித்ய ஸூ ரிகள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத பெருமையை யுடையவன்
எவன்
நித்ய விபூதி யோகத்தாலே வந்த ஸ்ருதி பிரசித்தி
அவன்
அதுக்கு மேலே விக்ரஹத்தாலே வந்த வை லஷண்யம் சொல்லுகைக்காக உத்தேசிக்கிறது
துயரறு
துயர் அற்ற என்றபடி
இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி
சுடரடி
நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹம்
அடி -சேஷபூதர் அனுபவிக்க இழியும் துறை
தொழுது
சேஷியைக் கண்டால் பிறக்கும் வ்ருத்தி விசேஷம்
எழு
உஜ்ஜீவி
தொழப் பெறாதே போது-அசந்நேவ -என்னும்படி யாய் இ றே இருப்பது
என் மனனே
பகவத் பிரத்யாசத்தியாலே தமக்குத் திரு உள்ளத்தோடு ஒரு சம்பந்தத்தை ஆசைப் படுகிறார் –

தனித்தனியே -அவன் -என்கிறது -ஒரோ ஒன்றே ஈஸ்வரத்வ சாதகங்கள் என்று தோற்றுகைக்காக –
மூன்று பர்யாயத்தாலும் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று வாக்ய பேதம் பண்ணி யோஜிக்கவுமாம்
நமோ நமோ வாக் மனசாதி பூமயே-என்னுமா போலே தனித்தனியே ப்ரீதியாலே ஈடுபடுகையாலே –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன்– அவன் மயர்வற மதி நலம் அருளினன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன்- அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் -அவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே-என்று
வாக்யைகவாக்ய ந்யாயத்தாலே யோஜிக்க்கவுமாம்

——————————————————————————————————-

கீழ் யவன் என்று ப்ரஸ்துதமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை
அகில ஹேய ப்ரத்ய நீதையாலும்-கல்யாணைகதா நதையாலும்
சேதன அசேதன வி லஷணமாய்-ஜ்ஞான ஆனந்தமே ஸ்வரூபமாய் இருக்கும் என்று சோபன க்ரமத்தாலே அனுபவிக்கிறார்

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

மனனக
மனன் -மனம் என்ற படி –
மனனகம் -மனனில் என்றபடி -மனசில் என்றபடி -நிரவவயமாய் இருக்கிற இதுக்கு உள்வாய் புறவாய் இல்லாமையாலே –
அங்கன் இன்றிக்கே
இம் மனஸ் ஸூ பரகார்த்த விஷயமாகவும் பிரத்யகர்த்த விஷயமாகவும் போருகையாலே பிரத்யகர்த்த விஷயமானத்தை -அகம் -என்று சொல்லிற்று ஆகவுமாம் –
மலமற
யோக அப்யாசத்தாலே மனசில் உண்டான அவித்யாதி தோஷங்கள் கழியக் கழிய –

மலர் மிசை எழு தரும்
விகசிதமாய் கொண்டு மேன் மேல் எனக் கிளரா நின்றுள்ள
மனன் உணரளவிலன் –
மானஸ ஜ்ஞான கம்யனான ஆத்மாவின் படி அல்லாதான்
பொறியுணர் யவையிலன்
இந்த்ரியங்க ளால் அறியப்படும் ப்ராக்ருத பதார்த்தங்களின் படி அல்லாதவன்
சேதன வை லஷண்யம் சொன்ன போதே அசேதன வை லஷண்யம் கிம்பு நர்ந்யாய சித்தம் அன்றோ -என்னில்
அவனோடு ஒவ்வாமைக்கு இரண்டிலும் ஒரு வாசி இல்லை என்னும் இடம் தோற்றுகைக்காக த்ருஷ்டாந்தயா சொல்லிற்று
ஆனால் சேதன அசேதன விலஷணன் என்ன அமையாதோ
அவற்றைக் காணும் பிரமாணங்களால் காண முடியாது என்பான் என் என்னில்
ஏக பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை என்று கொண்டு அத்யந்த வை லஷண்யம் தோற்றுகைக்காக
மனசாது விசுத்தேன-என்று சுத்தமான மனசாலே ஈஸ்வரன் க்ராஹ்யன் என்கிற இடம் -ஜ்ஞான விஷயம் என்கைக்காக
இங்கு அளவிலன் என்கிறது பரிச்சேதிக்க ஒண்ணாது என்று

இனன் –
இப்படிப்பட்டான்
இது கீழுக்கும் மேலுக்கும் பொது

உணர் முழு நலம்
கட்டடங்க ஜ்ஞானமும் -ஆனந்தமுமாய் இருக்கும் -ஆனந்த ரூப ஜ்ஞானம் என்றபடி
எதிர் நிகழ கழிவினும் இனன் இலன்-
கால த்ரயத்திலும் ஒத்தார் இல்லாதவன்
இனன் -ஒப்பன் -இனம் என்றபடி –
சேதன அசேதன வை லஷண்யம் சொன்ன போதே இதுவும் உக்தம் அன்றோ என்னில்
அவனோடு இது ஒவ்வாது என்கைக்கு சத்ருசமாய் இருப்பதொரு பதார்த்தம் இல்லை என்று வைதர்ம்ய த்ருஷ்டாந்தத்தாலே சொல்லுகிறது
மிகு நரையிலனே
மிக்காரை இல்லாதான்
ஒத்தார் இல்லாத நிலத்திலே மிக்கார் இல்லை என்கிறது -மிக்கார் இல்லாதா போலே ஒத்தாரும் இல்லை என்று தோற்றுகைக்காக
எனன் உயிர்
எனக்குத் தாரகன்

மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணரளவிலன் –பொறியுணர் யவையிலன்
எதிர் நிகழ கழிவினும் இனன் இலன்-மிகு நரையிலனே
உணர் முழு நலம் இனன் எனன் உயிர் -என்று அந்வயம்

எனன் உயிர்-அவன் துயர் அடி தொழுது எழு என் மனனே என்று கொண்டு கீழோடு தலைக் கட்டவுமாம்

——————————————————————————————————

முதல் பாட்டில் சொன்ன -நித்ய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு லீலார்த்தமான ஜகத் விபூதி யோகம் சொல்லுகிறது –

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் நலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

இலனது –
அது இல்லாதான்
ஒன்றைத் தான் அனுபவித்து அத்தை ஸ்மரித்து அது இவனுக்கு இல்லை என்றால் -ஐஸ்வர் யத்தில் சிறிது குறைந்து தோன்றும்

உடையனிது
இத்தை யுடையவன் –
ஒன்றை பிரத்யஷித்து இது இவனுக்கு உண்டு என்றால் அல்லாது எல்லாம் இவனுக்கு இல்லாமையாலே அல்ப விபூதிகன் என்று தோற்றும்

என நினைவரியவன்
இரண்டு படியாலும் நினைக்க முடியாதவன்
பின்னை எங்கனே சொல்லுவது என் என்னில்

நிலனிடை
பூமி முதலான கீழ் உள்ள லோகங்களில்

விசும்பிடை
மேல் உள்ள லோகங்களில்

யுருவினன் அருவினன்
இரண்டு கோடியிலும் உண்டான சேதன அசேதனங்களை எல்லாம் யுடையவன்

நிலனும் விசும்பும் என்று கீழ் உள்ள லோகங்களுக்கும் மேல் உள்ள லோகங்களுக்கும் உப லஷணம்
உரு வென்று அசேதனம் -அரு வென்று ஆத்மா
உருவினன் என்று உருவை உடையவன் என்கிற அர்த்தத்துக்கு வாசகம் ஆமோ என்னில் காராயின காள நன் மேனியினன் -என்றால் போலே இதுவும் வாசகமாம்

புலனொடு
புலன் என்று புலப்படும் பதார்த்தங்களைச் சொல்லுகிறது
பிரமாண விஷயமான சகல பதார்த்தங்களோடு அந்தராத்மதயா கலந்து நின்று சத்தையை நோக்கும் –

புலன் நலன் –
அந்தப் பதார்த்த கதமான தோஷங்கள் தன் பக்கல் தட்டாத படி இருக்கும் –
தத் தர்மா வல்லன் -த்வா ஸூ பர்ணா சயுஜா சகாயா சமானம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதே தயோர் அந்ய பிப்பலம்
ஸ்வாத் வத்த்யனச்நன்நன்யோ அபிசாகசீதி –என்று ஓட்டை நீங்கி விளங்கா நிற்கும் என்று

ஒழிவிலன் பரந்த
பரந்தே ஒழிவிலன்
இப்படி சகலத்திலும் வியாபித்து நிற்கும் –

வந்நலனுடை ஒருவனை
முதல் பாட்டில் சொன்ன அத்யந்த வி லஷணமாய் அந்தரங்க தமமாய் இருந்துள்ள நித்ய விபூதியையும்
இரண்டாம் பாட்டில் சொன்ன அத்விதீயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தையும் யுடையவன் ஆனவனை

இந்த லீலா விபூதியோடு கூட
நணுகினம்
கிட்டப் பெற்றோம்

நாமே
அநாதி காலம் சம்சாரத்தில் மங்கி பகவத்கதா கந்த ரஹிதரான நாம் –
இப்படி உபய விபூதி யுக்தனாய் இருந்துள்ள சர்வேஸ்வரனை பூரணமாக அனுபவிக்கப் பெற்றோம் –
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்று அந்வயம்
மன்யே ப்ராப்தாஸ்ம தம்தேசம் பரத்வாஜோ யமப்ரவீத் -என்கிற ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே இப்படி பெறுவோமே என்று விஸ்மிதர் ஆகிறார்
வாநராணாம் நராணாம்ச கதம் ஆஸீத் சமாகம

நாமே
கின்னுஸ் ஸ்யாச் சித்தமோ ஹோஸ் யம்-இது ஏதேனும் பிரம ஸ்வப்நாதிகளோ என்றால் போலே

——————————————————————————————————–

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

நாம் அவன் இவன் உவன்
தம்தாமையையும் -தூரச்தனையும் -சந்நிஹிதனையும் -அதூர விப்ரக்ருஷ்டனையும்
அவள் இவள் உவள்-
தூரச்தையாயும் சந்நிஹிதையாயும் -அதூர விப்ரக்ருஷ்டையாயும் -வினவப் படுமவளுமான ஸ்திரீ லிங்க பதார்த்தங்கள்
தாம் அவர் இவர் உவர்
பூஜ்யராய் உள்ளாரில் தூரச்தராயும் சந்நிஹிதராயும் அதூர விப்ரக்ருஷ்டராயும் உள்ளார்
அது விது வுது வெது
தூரச்தமாயும் சந்நிஹிதமாயும் அதூர விப்ரக்ருஷ்டராயும் வினவப் படுவதுமான நபும்சக பதார்த்தங்களைச் சொல்லுகிறது
வீமவை யிவை வுவை
நச்வரமான பதார்த்தங்களில் சந்நிஹிதமாயும் அதூர விப்ரக்ருஷ்டமாயும் தூரச்தயுமாயும் உள்ள பதார்த்தங்களைச் சொல்லுகிறது
அவை நலம் தீங்கிவை
அவற்றில் நல்லனவும் தீயனவும் -நன்மையும் தீமையும் என்றுமாம்
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே —
ஆகக் கடவனவும் -பண்டே யானவையும் ஆய்நின்ற பதார்த்தங்களே அவரே
இவை எல்லாம் ஆகா நின்றார் பிரக்ருதர் ஆனவர்
சகல பதார்த்தங்களிலும் அந்தராத்மதயா சத்தா ஹேதுவாய் நிற்கையாலே சாமா நாதி கரண்யத்தால் சொல்லுகிறது
இப்பாட்டில் சொன்ன பிரயோஜகங்கள் ஓர் இடத்தில் உண்டாய் ஓர் இடத்திலே இன்றிக்கே ஒழிந்தவை இல்லாத இடத்தில் யோக்யமானவை கூட்டிக் கொள்ளக் கடவது

ஸ்திரீ புன்ன பும்சக பேதத்தாலும் -பூஜ்ய பதார்த்தங்கள் -நச்வர பதார்த்தங்கள் -என்கிற பேதத்தாலும்
வி லஷண அவி லஷண பேதத்தாலும் -பூத பவிஷ்ய வர்த்தமான கால பேதத்தாலும் வந்த விசேஷங்களாலே
சகல சேதன அசேதனங்களையும் சங்க்ரஹித்து -அவற்றின் உடைய ஸ்வரூபம் பகவத் அதீநம் என்றதாயிற்று

——————————————————————————————————————

ஸ்திதியும் பகவத் அதீனை என்று வையதி கரண்யத்தாலே சொல்லுகிறது –

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

அவரவர்
சத்வாதி குண பேதத்தால் வந்த பிரகிருதி பேதத்தைச் சொல்லுகிறது
தமதமது
குண பேதத்தால் வந்த பல பதத்தைச் சொல்லுகிறது
அறிவறி
அதுக்கு அடியான ஜ்ஞான பதத்தைச் சொல்லுகிறது
வகைவகை
மார்க்க பேதங்களாலே
அவரவர்
அவ்வோ பல பிரதானத்துக்கு சக்தராக ஸ்வீகரித்த தேவதைகளை
இறையவர் என
அவர் அவர்களே தம்தாமுக்கு ஸ்வாமிகள் என்று
வடி யடைவார்கள்
ஆச்ரயிப்பவர்கள்
அடி அடைவார்கள் -என்று ஸ்வ கோஷ்டி பிரசத்தியாலே அருளிச் செய்கிறார்
அவரவர் இறையவர்
அவ்வோ தேவதைகள்
குறைவிலர்
ஆஸ்ரயிக்கிற வர்களுடைய பலம் கொடுக்கைக்கு குறை யுடையவர் அல்லர்
இறையவர்
நிருபாதிக சர்வேஸ்வரன்
அவரவர் விதி வழி யடைய
ஆச்ரயிக்கிறவர்கள் வித்யுக்த பிரகாரத்தாலே ஆஸ்ரயிக்கவும்
ஆஸ்ரயணீயர் அவர்களுக்கு பல பிரதானத்துக்கு சக்தராகவும்
நின்றனரே
அந்தராத்மதயா நின்றார்

—————————————————————————————

ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் சங்கல்ப அதீனைகள் என்று சாமா நாதி கரண்யத்திலே சொல்லுகிறது –

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
சகல சேதன அசேதனங்களுடைய சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் விசேஷ்ய பர்யந்த அபிதானம் பண்ணா நிற்க இங்கனே சொல்லுமது என் என்னில்
நாமவன்-என்கிற பாட்டில் ஸ்வரூபம் சொல்லுகையாலே
இப்பாட்டில் பிரவ்ருத்தி நிவ்ருத்தி மாத்ரத்தையே நினைக்கிறது
அருணாதி கரணத்தில் ஆருண் யாதிகளே விதயம் ஆனால் போலே
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் தத் அதீநைகள்-நிவ்ருத்தி தத் அதீநை யாவது என்
ஏறிட்ட கட்டி விழும் போது ஒரு நியாமகர் வேணுமோ என்னில் -வேணும் –
ஸ்வர்க்கத்தின் நின்றும் விழுகிற த்ரிசங்குவுக்குத் தன்னால் முடிய விழ ஒண்ணாமை யாலே

என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
அநேக பிரகாரன் ஆகையாலே ஒரு பிரகாரத்தையே சொல்லி இது இப்படி என்று ஒரு நாளும் பரிச்சேதிக்க அரியவர்

என்றும் ஓர் இயல்வொடு நின்ற –
என்றும் ஒக்க இப்படி அபரிச்சேத்யதை ஸ்வ பாவராய் இருக்கை

எம் திடரே
இப்படி ஸூ த்ருட பிரமாண சித்தர்
எம் என்று தமக்கு இவ்வர்த்தம் பிரகாசிக்கையாலே ஸ்வ லாபத்தைச் சொல்கிறது –

——————————————————————————

கீழே மூன்று பாட்டிலே சேதன அசேதனங்கள் உடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருதிகள் பகவத் அதீநைகள் என்று
சாமா நாதி கரண்யத்தாலும் வையாதி கரண்யத்தாலும் சொல்லிற்று
அந்த சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் ஜகத் ஈஸ்வரர்கள் உடைய சரீராத்மா பாவ சம்பந்தம் என்கிறது –
ஜகத்தினுடைய ஸ்வரூபாதிகள் பகவத் அதீனங்கள் ஆகையாலே இந்த ஜகத்து அவனுக்கு சரீரம் என்று சொல் லிற்று ஆகவுமாம்

திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

திட விசும்பு எரி அளி நீர் நிலம்
த்ருடமான விசும்பு ஸ்வ கார்யமான பூத சதுஷ்ட்யங்கள் உண்டாவதற்கு முன்பே உண்டாய் -அவை நசித்தாலும் தான் சில நாள் நிற்குமதான ஆகாசம் என்கிறது
இது முதலான பூத பஞ்சகங்கள் என்ன
இவை மிசை படர் பொருள்
இவற்றின் கார்யமாய் விஸ்த்ருதமாகா நின்றுள்ள தேவாதி பதார்த்தங்கள் என்ன
முழுவதும்
இங்கு ஆகாசதுக்குச் சொன்ன தார்ட்ட்யம் லோகாயதாதி மத நிராசபரம்
வளியாவது -காற்று –

அவ்வவ பதார்த்தங்கள் தோறும்
உடன் மிசை யுயிர் எனக்
சரீரத்தில் ஆத்மாவைப் போலே தாரகனுமாய் -நியந்தாவுமாய் -சேஷியுமாய்
பூத இந்த்ரிய அந்தகரண புருஷாக்யம்ஹி யஜ்ஜகத் ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வ ரூபோ யதோஸ் அவ்யய-
கரந்து
வ்யாப்த பதார்த்தங்களுக்குத் தெரியாமே
எங்கும் பரந்து
உள்ளும் புறமும் வியாபித்து
இவை யுண்ட சுரனே
பிரளய தசையில் இவற்றை சம்ஹரித்த சர்வேஸ்வரன்
உளன் சுடர்மிகு சுருதியுள்
முதல் பாட்டுத் தொடங்கிச் சொன்ன அர்த்தங்கள் எல்லாவற்றுக்கும் பிரமாணம் நிர்த்தோஷ ஸ்ருதி என்கிறது
சுடர் மிகுகை யாவது -பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய் பிரமாணாந்தரங்களைக் கொண்டு பாஹ்ய குத்ருஷ்டிகளால்
அவிசால்யமாகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாகை

ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே என்றும் கேட்டே வருமதாகையாலே ஸ்ருதி என்கிறது –
உளன்
இப்படிப்பட்ட ஸ்ருதியாலே பிரதிபாத்யனாகக் கொண்டு தோற்றினவன்
தாம் அனுசந்தித்த அர்த்தங்களுக்கு ஸ்ருதியை சாஷியாக சொல்லுகையாலே அதில் சொல்லுகிற
ஸ்ரீ யபதித்வமும் நாராயண சப்த வாச்யமும் அனுசந்தித்தாராக வேணும்
இவருக்கு நிர்தோஷ ஸ்ருதியே பிரமாணம் ஆகையாலே பாஹ்யரும்
ஜகத் ஈஸ்வரர்களுக்கு அந்யதா சம்பந்தம் சொல்லும் குத்ருஷ்டிகளும் அர்த்தாத் பிரதி ஷிப்தர் ஆனார்கள் –

—————————————————————-

இப்பாட்டில் இப்படி ஸ்ருதி சித்தனான சர்வேஸ்வரன் ஆகிறான் சிருஷ்டி சம்ஹார கர்த்தாக்களாக பிரசித்தரான
ப்ரஹ்ம ருத்ராதிகளிலே ஒருவன் ஆனாலோ என்று சொல்லுகிற குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள் –

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

சுரர் அறி வரு நிலை விண்
பிரஹ்மாதிகளால் அறிய அரிதான ஸ்திதியை யுடைய முதல் பிரகிருதி –
கார்க்கி வித்யையில்-கஸ்மின்நு கல்வாகாச ஒதச்ச ப்ரோதச்ச -என்று ஆகாச சப்தத்தாலே முதல் பிரக்ருதியைச் சொல்லுகையாலே –
இங்கும் ஆகாச சப்தத்தாலே மூல பிரக்ருதியை அருளிச் செய்கிறார் –

விண் முதல் முழுவதும் வரன் முதலாயவை
மூலப் பிரகிருதி தொடக்கமான மேல் உள்ள பதார்த்தங்கள் எல்லா வற்றுக்கும் வரிஷ்டமான காரணமாய்
வரன் -வரம்

அவை முழுதுண்ட –
ஈஸ்வரனாலும் -அவன் அடியாக ப்ரஹ்மாவாலும் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ருத்ரனால் சம்ஹார்யம் ஆவது ஏகதேசம் –
சம்ஹர்த்தாவான ருத்ரனையும் -அவனுக்கு நிலம் அல்லாத மஹதாதிகளையும் அகப்பட சம்ஹரித்தவன்-

பரபரன்
ஈஸ்வரன் அடியாக ஏகதேச சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகிற ப்ரஹ்மாதிகள் அஸ்மாதிகளில் பரர்-
அந்த ப்ரஹ்மாதிகளுக்கும் பரனாகையாலே பராத்பரன் –

புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து –
ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் கொண்டு திரிபுர தஹனம் பண்ணி
பிரம்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று வைதிக ஜ்ஞானத்தை தேவர்களுக்கு உபதேசித்து
இயந்து -ஈந்து -அறிவையீந்து -என்றபடி

அரன் அயன் என –
திரிபுர தஹனம் பண்ணின ருத்ரன் என்றும் -வைதிக ஜ்ஞானம் ப்ரவர்த்தகன் ப்ரஹ்மா என்றும் அவர்களுக்கு பிரசித்தியை கொடுத்தால் போலே

வுலகு அழித்து அமைத்து உளனே-
ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாக அண்டாந்த வர்த்திகளை ஸ்ருஷ்டித்தும்
அவனுக்கு நிலம் அல்லாத ப்ராக்ருத சிருஷ்டியை ஸ்வேன ரூபேண பண்ணியும்
ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனாலே சம்ஹார்யமான அம்சத்தை சம்ஹரித்தும்
அவனுக்கு நிலம் அல்லாத ப்ராக்ருத சம்ஹாரத்தை ஸ்வேன ரூபேண பண்ணினான் சர்வேஸ்வரனே –
ஏதௌ த்வௌ விபுதஸ் ரேஷ்டௌ-
இப்படி சமஸ்த சிருஷ்டி சம்ஹாரங்களையும் தானே செய்கையாலே வேறேயும் சிலர் சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவர் உண்டு என்று சொல்ல முடியாது –
சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதுக்கும் வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
அரன் என புரம் ஒரு மூன்று எரித்து வுலகு அழித்து-அயன் எனஅமரர்க்கும் அறிவியந்து யுலகு அமைத்து உளனே-
விஷ்ணுராத்மா பகவத –

———————————————————————-

ஒரு படியாலே பிரமாண பிரமேயங்களைக் கொண்டு ஈஸ்வர ஸ்வரூபத்திலும் ஈஸ்வர விசேஷணத்திலும்
விப்ரதிபத்தி பண்ணினவர்களை நிராகரித்தது கீழ் –
இப்பாட்டில் பிரமாண பிரமேயங்கள் இரண்டும் இல்லை என்கிற சூன்யவாதியை நிராகரிக்கிறது
சூன்ய வாதியை ஹேது சொல்வதற்கு முன்பே பிரதிஜ்ஞா மாத்ரத்தில் சவிபூதிகனான சர்வேஸ்வரனுடைய உண்மையை சாதிக்கிறார் –

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

உளன் எனில் உளன்
உளன் என்று பிரதிஜ்ஞை யாகில் -அஸ்தித்வ விசிஷ்டனாய்க் கொண்டு உளனாம்
ஈஸ்வரன் உளனாம் போது ஐஸ்வர் யத்தை ஒழிய உளனாகக் கூடாமையாலே விபூதியான ஜகத்தும் உண்டாம்
அவன் உருவம் இவ்வுருவுகள்
உண்டாம் இடத்தில் பிரமாணம் காட்டுகிற படியே சரீரமாய்க் கொண்டு உளனாம்
இல்லாமையை சாதிக்கிற நான் அஸ்தி சப்தத்தால் பிரதிஜ்ஞை பண்ணுவேனோ-என்னில்
உளன் என்கிற சப்தம் இல்லாமையைக் காட்ட மாட்டாதோபாதி-இல்லை என்கிற சப்தமும் நீ நினைக்கிற அத்யந்தா பாவத்தை காட்ட மாட்டாது என்கை
உளன் அலன் எனில்
நாஸ்தி சப்தத்தாலே அவனுடைய இல்லாமையை பிரதிஜ்ஞை பண்ணில் லோகத்தில் நாஸ்தி சப்தார்த்தமே உனக்கும் அர்த்தம் ஆக வேணும்
கடோ நாஸ்தி என்றால் இங்கு இல்லை என்னுதல் இப்போது இல்லை என்னுதல் ம்ருத் பிண்டமாய் உத்பத்த்யபாவத்தாலே இல்லை என்னுதல் –
கபாலாவஸ்தமாய் இல்லை என்னுதல் -இவற்றில் ஓன்று நாஸ்தி சப்தமாகக் கண்டோம்
ஆகையாலே ஒரு படியாலே இல்லையானது பிரகாராந்தரத்தாலே உண்டாய் இருக்கையில் ஈஸ்வரனும் நாஸ்தித்வ விசிஷ்டனாய்க் கொண்டு உளனாம்
அவன் அருவம் இவ்வருவுகள்
அவனுடைய விபூதியும் ஒரு பிரகாரத்தாலே இல்லையானவை பிரகாராந்தரத்தாலே உண்டாகையாலே அபாவவிசிஷ்டமாய்க் கொண்டு உளவாம்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
அஸ்தித்வ நாஸ்தித்வங்கள் உள்ள வஸ்துவுக்கு இரண்டும் குணமாய் முடிகையாலே
உளன் இரு தகைமையோடு
ஈஸ்வரன் உளன் என்றாதல் -இலன் என்றாதல் -இரண்டு படியாலும் உளன் –
ஒழிவிலன் பரந்தே-
இவ் வழியாலே விபூதியையும் வியாபித்துக் கொண்டே ஒழிவிலன் –

——————————————————————-

கீழ்ச் சொன்ன பகவத் வ்யாப்தியினுடைய சௌகர்யத்தை சொல்லுகிறது

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென-
பரந்து குளிர்ந்த கடலில் ஜல பரமாணுக்கள் தோறும் -சதுர்தச புவநாத்மகமான அண்ட அவகாசத்திலே
ஒரு ஏகாகி வர்த்திக்குமா போலே அசங்குசிதமாக வியாபித்து இருக்கும்
இதர பூதங்களிலும் வியாப்தி இப்படியே என்கிறது –
நில விசும்பு ஒழிவறக்
முதலான பூமியையும் -முடிவான ஆகாசத்தையும் சொன்னபடி -இது அநுக்தமான பூதங்களுக்கும் உப லஷணம்-
ஓன்று ஒழியாமே வியாபித்து இருக்கும்
பூத கார்யங்களில் அதி ஷூத்ரமான சரீர சரீரிகளிலும் உண்டான வியாப்தி சொல்லுகிறது –
கரந்த சிலிடம் தொறும்-
அதி ஷூத்ர சரீரங்களிலும்
இடம் திகழ் பொருள் தொறும்
தத் அந்தர்வர்த்திகளாய் ஸ்வயம் பிரகாசமான ஆத்மாக்கள் தோறும்
கரந்து
அன்யைரத்ருஷ்டனாய் இருக்கை
எங்கும் பரந்துளன்
இப்படி சமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும்
இவையுண்ட
இவற்றை எல்லாவற்றையும் தன் திரு வயிற்றிலே வைத்து உபகரித்தவன்
கரனே
இப்படி த்ருட பிரமாண சித்தன்
இப்படி எல்லாவற்றையும் தன் திரு வயிற்றிலே வைத்து உபகரித்தவன் கிடீர் பரமாணுக்கள் தோறும் வியாபித்து இருக்கிறான் என்று கருத்து –

————————————————————-

நிகமத்தில்
இப்படி உபய விபூதி நாதத்வமான பரத்வத்தை பிரதிபாதித்த இப்பத்தும் எம்பெருமான் திருவடிகளிலே பரிசர்யா ரூபமாக பிறந்தன என்கிறது

கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

கர விசும்பு
த்ருடமான விசும்பு -ஸூ ஷ்மமான ஆகாசம்
எரி வளி நீர் நிலம்
இந்தப் பூதங்கள் ஐந்தும் நித்ய விபூதிக்கும் -ஸ்வ கார்யமான அண்டாதிகளுக்கும் உப லஷணம்
இவை மிசை வரனவில் திறல் வலி யளி பொறை
இந்த பூதங்களின் ஸ்வ பாவமான
வரனவில்-இவ்வாகாச குணமாய் வரிஷ்டமான சப்தம்
திறல் -அக்னி யினுடைய ஸ்வ பாவமான தாஹகத்வ சக்தி
வலி-வாயுவினுடைய ஸ்வ பாவமான பலம்
வலி -ஜலத்தினுடைய சைத்யத்தாலே வந்த தண்ணளி
பொறை-பூமியினுடைய ஸ்வ பாவமான ஷமை
ஆய் நின்ற பரன்
இந்த உபய விபூதியையும் சரீரத்வத் பிரகாரமாக யுடையவன் ஆகையாலே சர்வ ஸ்மாத் பரன்
அடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
திருவடிகளிலே பரிசர்யா ரூபமாக அருளிச் செய்தது
வால்மீகிர் பகவான் ருஷி என்னுமாபோலே -தம்முடைய ஆப்தியைத் தாமே அருளிச் செய்கிறார்
நிரனிறை
சப்த பௌஷ்கல்யமும் அர்த்த பௌஷ்கல்யமும்
சொல்லும் பொருளும் இசையும் தாளமும் அந்தாதியும் அடைவே நிற்கப் பாடுகை -என்னவுமாம்
யாயிரத்து இவை பத்தும் -பரன் அடி மேல் வீடே
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சமர்பிக்கப் பட்டவை
மோஷ ப்ரதம் என்னவுமாம்
இச்செய்யடைய நெல் என்னுமா போலே -மோஷம் என்றது -மோஷ ப்ரதம் என்றபடி

——————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: