பகவத் விஷயம் காலஷேபம் -31– திருவாய்மொழி – -1-1-5 . . . 1-1-8–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

ஸ்வரூபம் அவன் அதீநம் ஆனவோபாதி –ஸ்திதியும் அவன் அதீனை என்கிறார் –
ஒருவன் ஒரு கிருஹத்துக்கு கடவனாய் இருக்கும்
ஒருவன் ஒரு க்ராமத்துக்குக் கடவனாய் இருக்கும்
ஒருவன் ஒரு ஜன பதத்துக்குக் கடவனாய் இருக்கும்
ஒருவன் த்ரை லோக்யத்துக்கு கடவனாய் இருக்கும்
ஒருவன் சதுர்தச புவனத்துக்கும் கடவனாய் இருக்கும்
ஆக -சதுர தச புவனத்துக்கு கடவன் ஆனவனோடு -ஒரு கிருஹத்துக்கு கடவன் ஆனவனோடு வாசியற
அவர்கள் ரஷகர் ஆகிறதும் இவை ரஷ்யமாய் உபகாரம் கொண்டது ஆகிறதும் -சர்வேஸ்வரன் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே –
அவன் இப்படி நடத்திக் கொண்டு போராத வன்று இவர்கள் ரஷகர் ஆகமாட்டார்கள் என்கிறார்
ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தனே சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம்
நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம் -தைத்ரிய நாராயண வல்லி-
எல்லா நன்மைகளையும் பண்ணித் தர வல்லனாய் -விரோதிகளையும் போக்க வல்லவன் ஆனவனை ஒழிய
வேறு ஒருவர் பக்கலிலே இந்த ரஷகத்வம் கிடவாது –

அவரவர் -அவருக்கும் அவருக்கும் வாசி இல்லையே சர்வேஸ்வர சர்வேஸ்வரனைப் பார்த்தால்
சமுத்ரத்துக்கு உள்ளே மலை கூழாங்கல் உள்ளது போலே –
விஷ்வக் சேனர் -பிரம்பே செய்யும் கார்யம் அன்றோ -பக்தனுக்கு தானே நேராக வந்து ஆற்றாமை தீர்த்து அருளுவான்
வேண்டிய சம்பத்துக்களை கொடுக்கவும் ஆபத்துக்களை நிரசிக்கவும் வேறு ஒருவனை -புருஷோத்தமனை தவிர -இல்லையே –
பாலான சாமர்த்தியம் -ஹரி இடம் ஒருவன் இடம் தானே உள்ளது -காக்கும் இயல்பினான் கண்ணபிரான் –

யத் வேதா தௌ-ஸ்வர ப்ரோக்தோ வேதாந்தே ஸ ப்ரதிஷ்டித –செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு
பின்னையும் அவ் வாபரணத்தை வாங்கி செப்புக்குள்ளே இட்டு வைக்குமா போலே
ஆத்யந்த பீஜமாய் இருப்பது யாதொன்று -தஸ்ய பிரகிருதி லீ நஸய -அது தன்னுடைய பிரக்ருதியிலே லீனமாய் இருக்கிறதாகிறது-அகாரம்
அது ரஷகனைக் காட்டுவது ஓன்று இ றே–அவ ரஷணே -தாது
ய பரச்ச மகேஸ்வர-அதுக்கு வாச்யதயா பரனாய் இருக்கிறான் யாவன் ஒருவன் அவன் சர்வேஸ்வரன் என்றது இ றே

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

வையதிகரண்யத்தால் -ஏக அதிகரண த்தால்
பலம் சாதகம் ருசி குணம் அதிகாரி பேதங்கள் பலவகை –
வீப்சை -பலவற்றை குறிக்க –

அவரவர் தமதமது அறிவறி வகைவகை -ருசிக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள் -பலம் தரும் சேஷியாக நம்பி
அவரவர் இறையவர்-அந்த தேவதைகள் -பலம் கொடுக்க குறைவிலர் -கொண்டி மாட்டுக்கு தடி கட்டி விடுவாரைப் போலே –
இறையவர் –சர்வேஸ்வர சர்வேஸ்வரனாய் இருக்கும் -எல்லாப் பொருள்களிலும் தங்கி நிற்பவர் -அடைய நிற்கிறார்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே-விதித்த மார்க்கத்தில் பலம் பெற அந்தர்யாமியாக நின்று அருளி –
நின்றனர் -ஆஸ்ரயித்தவர்களுக்கும் ஆஸ்ரயப் பட்டவர்களுக்கும் அந்தர்யாமியாக நின்று என்றுமாம் –
மஹதி அநுபூதி -படிக்கட்டுகள் -கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை கொடுத்து –நாட்டினான் தெய்வம் எங்கும் –
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் -இறை என்னப் படுவான் -காத்தல் தொழிலை திருமாலுக்கே உரிமை செய்து-

அவரவர் –
தம்ம்முடைய அநாதரமும்-அவர்களுடைய வைவித்யமும் தோற்றுகிறது-
தமதமது –
குண பேதத்தால் வந்த பல பதத்தைச் சொல்லுகிறது
அறிவறி –
அதுக்கடியான ஞான பதத்தைச் சொல்லுகிறது
வகைவகை –
மார்க்க பேதங்களாலே –
தமதமது –அறிவறி –வகைவகை –
சேதன பேதத்தோபாதியும் போருமாயிற்று ருசி பேதங்களும்
தம்தாமுடைய குண அனுகுனமாகப் புறம்பே ஆஸ்ரயிப்பாரும்-ஆஸ்ரயணீயருமாய் இருப்பாருமாய் இருக்கும் இ றே-
ரஜோ குண பிரசுரராய் இருப்பாரும் –தமோ குண பிரசுரராய் இருப்பாரும் -மிஸ்ர சத்வம் -அளாவனான சத்வத்தை உடையாருமாய் இருப்பாரும் இ றே இருப்பது –
அப்படியே குண அனுகுணமாகப் பிறந்த ஜ்ஞானமும் –

அளாவனான சத்வத்தை -மிஸ்ர தத்வம்
பல பேதம் -அதுக்கு அடியான -ருசி பேதம் -சாதன பேதம் -குண பேதம்

இப்படி அறிந்த அறிந்த வகைகளாலே -அப்போதைக்கு அப்போதைக்கு அறிந்த அறிந்த வகைகள் –
அவரவர் இறையவர் என
அவ்வவர் ஆஸ்ரயணீயர் என்று
வடி யடைவார்கள்
அவ்வவ தேவதைகள் தான் துராராத தேவதைகளாய் -பிரஜையை அறுத்துத் தா -ஆட்டை அறுத்துத் தா -என்னா நிற்கச் செய்தேயும் –
ஆஸ்ரயணம் ஆவது –அவற்றின் காலிலே குனியுமதுக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கிறார் இவர் –ஸ்வ கோஷ்டீபிரசித்தியாலே
பரம வைதிக பிரபன்ன ஜன கோஷ்டி அன்றோ -ஓர் அஞ்சலி சாத்யவஸ்துவோடே இ றே தமக்கு வாசனை –
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதிநீ க்ருதா பரா தஸ்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேணாஞ்சலிம்
பத்த்வா லஷ்மணஸ்ய பிரசாத நாத் -ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை –
இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷத்தைக் -நாண் ஒலி -கேட்டு மகாராஜர் கழுத்திலே மாலையை அறுத்துப் போகட்டு காபேயமாக சில
வ்யாபாரங்களைப் பண்ணி அருகே நின்ற திருவடியைப் பார்த்து -இவ்வளவில் நமக்குச் செய்ய வடுப்பது என் என்ன
அபராத காலத்திலேயே அனுதாபம் பிறந்து மீண்டோமாய் எளியன சில செய்கிறோம் அல்லோம்
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு இனி ஓர் அஞ்சலி நேராமல் போகாது -என்றான் இ றே
இப்படி குணாதிகனாய்-பிராப்தனாய் -இருக்கிறவன் உடன் உண்டான வாசனையாலே -அடியடைவர்கள் -என்கிறார் –
மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு தொழுது எழுதும் -9-3-9-என்னுமிது மிகையாய் இ றே-இவர் பற்றின விஷயம் இருப்பது –

அவரவர் இறையவர் குறைவிலர்
ஆஸ்ரயிக்கிறவர்கள் உடைய இறையவர் -என்னுதல் –
அவ்வவ ஆஸ்ரயணீயர் ஆனவர்கள் என்னுதல் –
அவர்களுக்கு ஆஸ்ரயணீ யாரானவர்கள் அவர்களுக்கு பல பிரதான சக்தராகைக்கு குறை உடையர் அல்லர் –
அதுக்கடி என் என்னில்
இறையவர்-
பொதுவிலே — இறையவர் –இறையவர்- -என்கிறார்
அவர்களோடு -அவர்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு -தம்மோடு -ஆழ்வார் -வாசியற -எல்லார்க்கும் ஒக்க இறையவர் ஆகையாலே
-பதிம் விச்வச்ய -என்கிறபடியே -எல்லார்க்கும் ஒக்க ஸ்வாமி யானவர் –
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –
அவ்வவ ஆஸ்ரயணீயர் தந்தாமுடைய ஆகமாதிகளிலே விதித்து வைத்த பிரகாரங்களிலே அடையும்படியாக நம் இறையவர் அந்தராத்மாவாக நின்றார்
அன்றிக்கே
சர்வேஸ்வரன் காம நாதிகாரத்தில்–ஸ்ரீ கீதை 7 அதிகாரம்- அருளிச் செய்தபடியே -அவர்கள் அடையும்படியாக -என்னுதல் –

காமத்தால் இழுக்கப் பட்ட ஞானம் -சரீரமாக பல தேவதைகள் -அவர்கள் மேல் உறுதியான நம்பிக்கை நான் தான் பண்ணிக் கொடுக்கிறேன் என்கிறான்
திரிபுரா தேவியார் ராமானுஜர் காட்டிய –ஐதிகம் -உய்ய ஒரே வழி உடையவர் திருவடி

சர்வேஸ்வரன் இரா மடம் ஊட்டுவாரைப் போலே முகம் தோற்றாதே அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய்-இவர்களும் பல பிரதான சக்தர் ஆகிறார்கள் இத்தனை –
அவனை ஒழிந்த அன்று இவர்கள் ஆஸ்ரயிக்கவும் மாட்டார்கள் -அவர்கள் பல பிரதானம் பண்ணவும் மாட்டார்கள் -என்கிறார்
ஐயன் பாழியில் ஆனை போருக்கு உரித்ததாம் அன்று ஆயிற்று -அவ்வோ தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி உள்ளது –
சாஸ்தா ஸ்தானம் ஐயனார் கோயிலில் உள்ள யானை போலே –

————————————————————————–

அவதாரிகை –

லீலா விபூதியினுடைய ஸ்திதியும் பகவத் சங்கல்ப அதீனம் என்கிறார் கீழ் –
அதினுடைய பிரவ்ருத்தியும் நிவ்ருத்தியும் பகவத் சங்கல்ப அதீனம் என்கிறார் இதில்

ஆகிருதி வாசக சப்தம் வ்யக்தியிலே பர்யவசித்து நிற்குமா போலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான சப்தமும்
அபர்யவசா நவ்ருத்த்யா -அவன் அளவிலே சென்று அல்லது நில்லாது –

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

திடரே -திட பிரமாணத்தால் பிரதிபாதிக்கப் படும் -அவனே
பிரவ்ருத்தி நிவ்ருத்தி -இங்கே முன்பே ஸ்வரூபம் ஸ்திதி சொல்லி அருளினாரே
தர்மி யாகக் கொண்டே சாமா நாதி கரண்யம் -நின்றால் தர்மம் சொல்ல முடியாதே –
பிரவ்ருத்தி நிவ்ருத்திக்கு ஆஸ்ரயமான பதார்த்தங்கள் -சொல்லுக்கு பிரவ்ருத்தி நிவ்ருத்தி -தாத்பர்யம் -நிற்றல் –
ஒரு ஸ்வ பாவத்தை உடையவர் என நினைவு அரியவர் –
நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் -ஒரே சேதனர்க்கு -இவ்வளவும் உண்டே -அவர்களும் பலர் -சாமானாதி கரண்யம் –
இருந்தாலும்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர் என்றும் ஒரு ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே -இதுவே அவர் இயல்பு
லோகம் மாறுதலே நித்யம் சொல்வது போலே –எம் திடர் -நமக்காக -திருட பிரமாண சித்தன் —

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் -நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
அருணயா பிங்காஷ்யா ஸோமம் க்ரீணாதி -என்கிற இடத்தில் -சிறந்த நிறம் உள்ளதும் பொன் நிறம் போன்ற நிறம் உள்ள கண்கள் கொண்டதும்
ஆகிய பசுவைக் கொடுத்து ஸோமம் என்ற கொடியை வாங்குவான் -என்றது போலே
குண விசிஷ்ட வஸ்து தோற்றா நிற்கச் செய்தேயும்
ஆருண்யாம்சத்திலே தாத்பர்யம் ஆகிறாப் போலே -பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஆஸ்ரயமான வஸ்துக்களின் உடைய ஸ்வரூபமும்
அவன் அதீனம் என்று
முன்னே சொல்லுகையாலே பிரவ்ருத்தி நிவ்ருத்தி யம்சத்திலே நோக்கு என்று சொல்வாரும் உண்டு —
அப்போது சாமா நாதி கரண்யம் சித்தியாது –எம் திடர் என்ற பதத்துடன் சாமா நாதி கரண்யம் பொருந்தாது -என்றபடி –
ஆக -பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு தாத்பர்யத்தால் வாசகமான இச் சப்தம் -அவற்றுக்கு ஆஸ்ரயமான சேதனனைக் காட்டி
அவன் தனக்கு ஈஸ்வரனை ஒழிய -ப்ருதக் ஸ்திதி யாதல் -உபலம்பமாதல் -இல்லாமையாலே அவனளவும் காட்டுகிறது
பிரவ்ருத்தி அவன் அதீனை யாகிறது வேணுமாகில் -நிவ்ருத்திக்கு அவன் வேணுமோ -என்று எம்பாரைக் கேட்க
ஸ்வர்க்கத்தின் நின்றும் விழுகிற த்ரிசங்குவை சக்திமான் நிற்கச் சொல்ல நிற்க வேண்டிற்று கண்டாயே —
அப்படியே நிவ்ருத்திக்கு அவன் வேணும் காண்-என்று அருளிச் செய்தார்

ஆக்ருத்ய அதிகரணம் -கௌரச்வ-மனுஷ்ய -பசு குதிரை மனிதன் -பிரகார -ஆகிருதி-ஜாதி -அபர்யவசான வ்ருத்தி -அளவுபட்டு நில்லாமல்
பிண்டச்ய சேதனச்யாபி சரீரம் வரைக்கும் பர்யவசிக்கும் -பரமாத்மா பிரகாரத்வாபி -மேலே போகாதே -பொருளைக் கூறி முடிக்கும்
சர்வேஷா சப்த –பரமார்த்தா ஏவ வாசய -தத் த்வம் அஸி போலே
பிரவ்ருத்தி நிவ்ருத்தி வாசகமான சப்தங்களும் -அபர்யவசான வ்ருத்தியால் -அவன் அளவு சென்று அல்லாது நிற்காது –
நேராக நிற்றல் இத்யாதி சொன்னால் திடரே -உடன் சாமா நாதி கரண்யத்தில் சேராதே –
அருணயா பிங்காஷ்யா ஸோமம் க்ரீணாதி-சிறந்த நிறம் உள்ளதும் பொன் நிறம் போன்ற நிறம் உள்ள கண்கள் கொண்டதும் ஆகிய
பசுவைக் கொடுத்து ஸோமம் என்ற கொடியை வாங்குவான் சிகப்பு தாத்பர்யம் -அருணாதிகரணம் -தாத்பர்யம் சிகப்பு இங்கே –

என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
இப்படி அநேக பிரகாரராய் இருக்கையாலே -காலதத்வம் உள்ளதனையும் ஆராயா நின்றாலும் இன்னபடிப்பட்ட
ஸ்வ பாவத்தை உடையவர் என்று நினைக்கவும் கூட அரியவர் –

என்றும் ஓர் இயல்வொடு நின்ற –
வ்ருஷல விவாஹ மந்த்ரம் போலே ஓர் இயல்வொடு நின்றவராவது என் என்னில் ஸ்வ பாவத்தை உடையவர் என்று நினைக்க
அரிதான நிலை என்றும் ஒருபடிப்பட்டு இருக்கும் -என்கை-பொய்யே சொன்னது இல்லை -இந்த ஒரு பொய்யைத் தவிர போலே –

எம் திடரே –
அபௌருஷேயமான வேத பிரதிபாத்யன் ஆகையாலே வந்த தார்ட்யத்தைச் சொல்லுகிறது -இப்படி ஸூத்ருட பிரமாண
சித்தரான நிலை தம்முடைய லாபமாகத் தோற்றுகையாலே-எம் திடர் -என்கிறார் –

————————————————————————–

அவதாரிகை

கீழே -4/6-சாமா நாதி கரண்யம் சொன்ன இது பாவி பிரதி சந்தான நியாயத்தாலே யாய் –அத்தாலே பலித்த சம்பந்தம் சரீராத்ம பாவம் என்கிறார் ஆதல்
அன்றிக்கே
கீழே சாமா நாதி கரண்யத்தாலும்-வையதி கரண்யத்தாலும் சொன்னார் –அப்படி சொன்ன ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்கிறார் ஆதல்

அபேத சுருதி -சாமா நாதி கரண்யம் -தத் த்வம் அஸி -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –நாம் -நின்றவர் –ஆமவையாய் நின்ற அவரே
பேத சுருதி -வையதி கரண்யம் -போக்தா போக்யம் ப்ரேரிதா–ஷரம் அஷரம் -நித்யோ நித்யானம் -பதிம் விச்வச்ய –நினைவரியன் -வேறே வேறே
கடக சுருதி -சரீர ஆத்மா பாவம் என்பதால் ஓன்று –பேத ஏவச -ஆறு வார்த்தைகளில் ஓன்று -தத்வங்கள் மூன்று தான் –
ஒன்றே என்னில் ஒன்றேயாம் -பல வென்று உரைக்கில் பலவேயாம் –
அத்யாகாரம் -சொல்லைத் தவிர்த்து அப்படி –சாமா நாதி கரண்யத்தால் சொன்ன ஐக்யத்துக்கும்-வையதி கரண்யத்தால் சொன்ன பேதத்துக்கும் நிபந்தனம் சரீராத்மா பாவம்
ஆதௌ பேத சுருதினாம் -நடதூர் அம்மாள் -தத்வ சாரம் -இந்த கருத்தையே அருளிச் செய்கிறார் -லஷ்மணாசார்யார் இளையாழ்வார் -என்கிறார்

அநேன ஜீவே நாத்ம நா நு பிரவேச்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக்யம் -என்கிறபடியே
த்ரிவ்ருத்க்ருதமான அசித்திலே ஜீவத்வாரா அநு பிரவேசித்து வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் உண்டாம்படி
பண்ணி இவை-தான் -என்னலாம் படி இருந்தால் -ம்ருதாத்மகோ கட -என்னும்படி இருக்கை யன்றிக்கே
அந்தப் பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா நாம் -என்கிறபடி-சர்வேஷாமாத்மாவாய் -இவற்றை நியமிக்கும் இடத்தில்
இந்த சரீரத்துக்கு இந்த ஆத்மா தாரகனாய் நியாமகனாய் சேஷியாய் இருக்கிறாப் போலே
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் என்கிறபடியே –
தான் இரண்டுக்கும் தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய் -நின்று நடத்திக் கொண்டு போரும் என்று கீழ்ச் சொன்ன
சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்கிறார் –

பஹூச்யாம் -பலவாக ஆகப் போகிறேன் வ்யஷ்டி சிருஷ்டி சங்கல்ப்பம் -அத்வாரகம் -ப்ரஹ்மமே மாறி -சமஷ்டி சிருஷ்டி -பிரஜாயேய-ஒரு சிறு பகுதி பிரகிருதி -இத்யாதி
ஹந்த –அநேன ஜீவேன -ஆத்மாநா -அனுப்ரவேச்ய -நாம ரூப -வியாகரவாணி –
கரணே த்ரிருதீயா கத்தியால் திருத்தி –ஜீவனால் புகுகிறேன் -ஜீவன் கருவி இல்லை -ஜீவனை சரீரமாக கொண்டு நான் புகுகிறேன் கர்த்தரு த்ரிருதீயா -ஸ்ருஷ்டிக்கும் பொழுதே அந்தர்யாமி -தனியாக ஸ்திதி இல்லையே -கத்தியால் நிறுத்தினேன் கரணே மூன்றாம் வேற்றுமை -ஜீவனால் புகுகிறேன் -அசேதனத்துக்குள் -கருவி ஜீவன் இல்லை -கரணே  த்ருதியா இல்லை -ஜீவனை சத்வாராகக்  கொண்டு நான் புகுகிறேன் -சத்வாரக அனு பிரவேசம் -என்றவாறு –
புகுவதும் சத்வாரகம் -அத்வாரகம் இரண்டு வகை –
மகான் -அஹங்காரம் -நேரே புகுகிறார் -மற்றவற்றுள் ஜீவனே -ஜீவனை சரீரமாகக் கொண்டு புகுகிறேன் -என்றவாறு
24 தத்வங்கள் -பஞ்சீ கரணம் -செய்து – -தேஜோபன்னங்கள் -தேஜஸ் அப்பு பிரத்வி -த்ரிவிக்ரணம் –
அண்டகடாகம் இமையோர் வாழ் தனி முட்டை –மகிமையில் நின்று ஸ்ருஷ்டிகிறார் –
சத்வாரக -இங்கும் ப்ரஹ்மமே மாறி -பிரமனை இடையில் கொண்டு சிருஷ்டி -வியஷ்டி சிருஷ்டி -அந்தராத்மதயா நின்று சக்தி கொடுக்க வேண்டுமே –

வ்ருஷத்தில் தேவதத்தன் நின்றான் என்றால் அங்கே சரீராத்மா பாவம் இல்லை-விட்டு பிரிக்க முடியும் இங்கு –
ஜாதி குணங்கள் வ்யக்தியிலே கிடந்தது என்றால் அங்கு சரீராத்மா பாவம் இல்லை-
விசிஷ்டத்திலே இறே சரீராத்மா பாவம் கொள்ளலாவது
1-அப்ருதக் சித்த விசேஷணமாகவும் –2-தாரகமாயும் -3–நியந்தாவாயும் –4-சேஷியாகவும் இருந்தால் தான் சரீராத்மா பாவம் வரும் என்றவாறு –

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

வேதாந்தம் பிரமாணம் -சரீராத்மா பாவத்தால் சாம நாதி கரண்யத்தில் கீழே அருளிச் செய்தார் என்கிறது
சுரனே -தேவ சப்தம் -அலகிலா விளையாட்டுடையவன் -சிருஷ்டி -வியாப்தி -எல்லாம் சொல்லி அருளுகிறார் இதில் –
சொத்து -தாசன் -வெவ்வேற நிலை -புரிந்து அடிமை செய்வது –
சுரன் -அவன் வியாபகன் -வியாப்யம் நாம் –வியாப்தி -நிறைவு -பிரகாரம் -கரந்து-எங்கும் –
ஆத்மா கரந்து பரந்து உள்ளதா -சரீரத்துக்குள் -எங்கும் -ப்ரஹ்மத்துக்கு திருஷ்டாந்தம் சொல்ல முடியாதே –
கரத்தல் மட்டுக்கும் -எங்கும் அவனுக்கு ப்ராதேசம் ஆத்மாவுக்கு என்றவாறு
விலக்ஷணாதி அதிகரணம்
திட –முதலில் உண்டாகி இறுதியில் லயிப்பதால் –பிருத்வி இறுதியில் உண்டாகி முதலில் லயிக்கும் –
முழுவதுமாய் -இவற்றுக்கு உபாதானமாக ஆகி -என்றவாறு –எது எதுவாக மாறுதல் அடைகிறதோ அது அதுக்கு உபாதானம் -மண் -குடம் -பொன் சங்கிலி போலே
ப்ரஹ்மம் -விபு -ஸ்வரூபத்தால் வியாபிப்பார்
-ஆத்மா சூஷ்மம் -தர்மபூத ஞானமே புத்தி வியாபிக்கும் –ஸ்வ பாவத்தால் ஆத்மா வியாபிக்கும் -ப்ரஹ்மம் ஸ்வரூப வியாப்தி -எங்கும் பரந்து -ஆத்மா ஸ்வ பாவத்தால் தன் சரீரம் முழுவதும் வியாபித்து -இரண்டு வாசி உண்டே -அவன் விபு ஆத்மா அனு என்பதால் –
ஸூதகா பிரமாணம் -சுடர் -வேறு ஒன்றை எதிர்பார்க்காது
ஸ்ருதியின் ஆழ்ந்த கருத்து -இது என்றவாறு –
உண்ட -தன்னுள்ளே விழுங்கிய -ஜல பிரளயம் -நைமித்திக பிரளயம் –இரண்டாவது -பிராக்ருத பிரளயம் -சராசரா க்ராஹநாத்-அத்தா -அனைத்தையும் –
மிருத்யு யஸ்ய உபசேஷணம்—ஊறுகாய்-ஆகாசம் -மமகாரம் -அஹங்காரம் -தமஸ் -பர தேவே ஏகி பவதி –

திட விசும்பு -எரி வளி நீர் நிலம் —
1-இது எல்லாவற்றிலும் ஏறி-த்ருடமான எரி-த்ருடமான காற்று -என்று கிடக்கிறதாகவுமாம்
அன்றிகே
2-ஆத்மந ஆகாசஸ் சம்பூத -என்று சொல்லுகிறபடியே அல்லாத பூதங்களுக்கு முன்பே உண்டாய் அவை அழிந்தாலும்
சில நாள் நிற்கக் கடவதாகையாலே த்ருடமான விசும்பு என்னவுமாம் –
அன்றிக்கே
3-சத்வார்யேவ பூதானி -என்கிறவனை- சாருவாதகன்-நிராகரிக்கிறார் -நான்கு தத்வம் -அருக வாதம் ஆகவு மாம்
ஆக பூத பஞ்சகங்களையும் சொல்லுகிறது
லோகாயுதன் சாருவாகன் -நான்கு என்பான் -கூட்டரவில் பிறக்கும் சைதன்யம் நசித்தால் மோஷமாம்

இவை மிசை படர் பொருள் முழுவதும் யாய் –
இவற்றை அடியாகக் கொண்டு மேல் விஸ்த்ருதமாகா நின்றுள்ள பதார்த்தங்கள் எல்லாவற்றையும் உண்டாக்கி
ஆய -என்றது -ஆக்கி என்றபடி –
ஆய -என்பான் என் என்னில் பஹூச்யாம் என்கிற தன் விகாசமே யாகையாலே வைதிக நிர்த்தேசம் -இருக்கிறபடி –

யவை யவை தொறும்
அவ்வவோ பதார்த்தங்கள் தொறும்–அவற்றிலே வியாபிக்கும் இடத்தில் -பல தூணுக்காக ஒரு உத்தரம் கிடந்தாப் போலே அன்றிக்கே -ஜாதி வ்யக்தி தொறும்
பரி சமாப்ய வர்த்திக்குமா போலே எல்லாவற்றிலும் தனித்தனியாக குறைவற வியாபித்து நிற்கும் –

இப்படி வியாபித்து நிற்கும் இடத்தில்
உடன் மிசை யுயிர் எனக் –
இச் சரீரத்துக்கு ஆத்மா தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய் -இருக்குமா போலே இச் சரீராத்மாக்களுக்கு
தான்- தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய்- இருக்கும் –

கரந்து –
இப்படி இருக்கச் செய்தே யமாத்மா ந வேத -ப்ருஹத் உபநிஷத் -என்கிறபடியே அந்யை ரத்ருச்யனாய் இருக்கும்

எங்கும் பரந்து –
அந்தர் பஹிச்ச வியாபித்து

இதில் பிரமாணம் என் என்னில்
உளன் சுடர்மிகு சுருதியுள் –
அபௌருஷேயமாய் -நிர் தோஷமாய் இருக்கிற வேதத்தாலே பிரதிபதிக்கப் பட்டு இருக்கும் –
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரத்தால் கழிக்க ஒண்ணாத ஒளியை உடைத்தாய் இருக்கை –

திரி குறையுமே ஒரே நெருப்பு இல்லையே அனுமானத்தால் பிரத்யஷம் பாதிதம்
அக்னி குளிர்ந்து இருக்கும் பதார்த்தம் ஆனபடியால் தண்ணீர் போலே -அனுமானத்தை பிரத்யஷத்தால் பாதிக்குமே

சுருதி
பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்றி உத்தர உத்தர உச்சார்யமாணத்வத்தை பற்றச் சொல்லுகிறது
இத்தால் முதல் பாட்டுத் தொடங்கி சொன்ன அர்த்தங்களுக்கு எல்லாம் பிரமாணம் நிர்தோஷ சுருதி -என்கிறது –
உச்சாரண அணுச்சார க்ரமத்தாலே -அவிச்சின்னமான பரம்பரையில் வந்த சுருதி –என்றவாறு –

இவை யுண்ட சுரனே —
இவற்றை சம்ஹரித்த தேவன்
முன்பே சிருஷ்டி ஸ்திதிகள்-அவன் அதீநம் என்று சொல்லிற்று –
சம்சாரம் வேறு ஒரு சேதனன் அதீனமாகில் -இது தன்னது அல்லாமையால் வரும் ஐஸ்வர்யம் குறையும் இ றே
அதுக்காக சம்ஹாரம் அவன் இட்ட வழக்கு -என்கிறார் -அத்தா -நிர்த்தேசம் போலே உண்டான் என்கிறார் –
இத்தால் சிருஷ்டி சம்ஹாரங்களை ப்ரஹ்மாதிகளே நடத்துகிறார்கள் -என்கிற குத்ருஷ்டிகளை நிரசிக்கிறார்
திட விசும்புலோகாயாதிகர் நிரசனம்
உடல் மிசை ஸ்வரூபனே ஐக்யம் -தாதாம்யம் -சொல்லும் மாயாவாதிகள் நிரசனம் –நம் சம்ப்ரதாயம் சரீராத்மா பாவத்தால் தாதாம்யம் –
சுடர் மிகு சுருதியுள் -என்கையாலே நாராயண அனுவாகாதிகளில் சொல்லுகிற -பரத்வம் லஷ்மீ சம்பந்தம் -இவை
எல்லாவற்றையும் அங்கீகரித்தார் ஆகிறார் –

ஆகாசம் -வாயு -அக்னி -வரிசை யாக சொல்லாமல் எரி வளி –உபநிஷத் சாயை -தத் தேச ஐ க்க்ஷ்யாத -முதலில் சங்கல்பித்தது தேஜஸ் முதலில் சொல்லி உள்ளதே –
இரண்டையும் சேர்த்து ஆழ்வார் அருளிச் செய்கிறார்-
பிருதவி -அப்பு -தேஜஸ் -மூன்றுக்குள்ளும் ஜீவனை சரீரமாக கொண்டு உள்ளே புகுகிறேன் –
அநேன ஜீவனே ஆத்மனா அனுபிரவேச்ய –ஆத்மா சரீரமா –
சேஷ்ட இந்த்ரிய ஆச்ரயம் சரீரம் நையாயிகன் மூன்று லஷணம் -சேஷ்டைகள் -இந்த்ரியங்கள் -பொருள்கள் -பொருந்தாது-
2-1-4-விலஷணத்வாத் அதிகரணம் -யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா -ஸ்வார்த்தே -நியந்தும் –தாரயிதும்–சக்யம் –  சேஷைதக ஸ்வரூபஞ்ச-தத் தஸ்ய சரீரம் –சரீர லஷணம்

-யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் -சஷ்டி யந்தம் —முதல் சட்டம் -எவனுக்கு ஆறாவது வேற்றுமை – ந கடத்வாதி போலே இல்லாமல்-பிரத்யோகம் எதிர் பார்க்கும் மனைவி -கணவன் இரண்டும் பிரதியோகம் எதிர் பார்க்கும்-சைதன்யம் உள்ளவனுக்கு தானே சரீரமாக இருக்கலாம்-இரண்டாவது சட்டம்த்ரவ்யமாக இருக்க வேணும் -கிரியைகள் ஜாதி போலே இல்லை  கோத்சவம் -பச்சை -நடக்கிறான் -ஜாதி  குணம் கிரியை   போலே இல்லை-மூன்றாவது சர்வாத்மனா-எப்பொழுதும் ஸ்வார்த்தே— தன் பொருட்டே-நாலாவதுசர்வாத்மனா நியந்தும் –நியமிக்கத் தகுதி உள்ளதாக-ஐந்தாவது –சர்வாத்மனா தாரயிதும்-சக்யமோ -யோக்யதை கொண்டதாய்-ஆறாவது தச் சேஷைதக ஸ்வரூ பஞ்ச-தத் தஸ்ய சரீரம் –ஒருத்தனுக்காக இருப்பதே சரீரம் –

தர்ம பூத ஞானம் -சரீரம் சொல்ல முடியாது சேதனம் இல்லையே-
த்ரவ்யம் -கிரியை ஜாதி குணம் இருக்க முடியாதே -சேதனனை பிரியாதே
சர்வாத்மனா -எப்பொழுதும் -காதாசித்க – நியாமத்வா -தாயார் -கர்ப்பம் -போலே இல்லையே –
தாசன் -கொஞ்ச நாள்
வஸ்த்ரம் ஆபரணம் -இவற்றை தள்ளி
யாவத் த்ரவ்ய பாவி உள்ளவரை இருக்க வேண்டும்
பிசாசு பிடித்து ஆட்டினால் -ஆத்மாவை சரீரம் ஆக முடியாதே –
நாம் சரீரம் புகுந்து -பர காய பிரவேசம் -இரண்டும் முடியாதே
ஸ்வார்த்தே -தன் பொருட்டே -ஆகாய விமானம் ஆகாசத்தில் பறக்க -அதன் பொருட்டு இல்லையே –
ஸ்வ சப்த -அநியாம்ய-நியமனம் இல்லா விடில் ஆத்மாவுக்கு பரமாத்மா சரீரம் -நியமிக்கும் சக்தி இல்லையே
சக்யம் -யோக்யதை -கீழே விழுபவன் சரீரத்தை விழாதே நியமிக்க முடியாதே -புவி ஈர்ப்பு -அதனால் தான் யோக்யதை
நடைபெற வேறே ஏதோ தடுக்கலாம்
நோயாளி சரீரம் நியமிக்க முடியாதே -அவ்யாப்தி -சக்யம் சப்தம் –
சேஷதைகம்-

————————————————————————–

அவதாரிகை

சுருதி சித்தன் அவனே -என்றும்
சர்வ சரீரியாய் நிற்கிறான் அவனே என்றும் -சொல்லா நின்றீர்
அல்லாதாரும் ஒரோ கார்யங்களில் அதிகரித்து -அவையும் நடத்தி யன்றோ போருகிறது –ப்ரஹ்மா சிருஷ்டிக்கு கடவனாய் -ருத்ரன் சம்ஹாரத்துக்கு கடவனாய் அன்றோ போருகிறது –
இவற்றை ஒரு ஒரு வ்யக்தியிலே ஏறிட்டால்-நீர் பஷ பாதத்தால் சொன்னீர் ஆகீரோ என்ன –
ஒரு வ்யக்தியில் பஷ பாதத்தாலே சொல்லுகிறேன் அல்லேன் -பிரமாண கதிகளை ஆராய்ந்தால் –
அவை அவர்கள் பக்கலிலே கிடவாமையாலே சொல்லுகிறேன் -என்கிறார் –

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

சமஷ்டி சிருஷ்டிக்கு பின் வியஷ்டி சிருஷ்டி பண்ணும் பிரமனும் ருத்ரனும் இவன் அதீனம்
சுரர் அறி வரு நிலை- தேவர்களுக்கும் அறிய முடியாத முற்பட்ட நிலை –விண் -ஆகாசம் தொடக்கமான -மூல -பிரகிருதி -யைக் குறிக்கும் -அம்பராதாத் —ச ஜ -1-3-9/10 சூத்ரம்
முதல் -தொடக்கமான
முழுவதும் -சமஷ்டி ரூப வஸ்துக்கள் அனைத்துக்கும் -பிரகிருதி -மகான் -அஹங்காரம் -பஞ்ச பூதம் -தன்மாத்ரை -கர்ம ஞான இந்த்ரியங்கள்- மனஸ்-பஞ்சீகரணம்
வரன் முதல் -காரணம் பொருளில்–இங்கு முதல் –
முழுதுண்ட -நிச்சேஷமாக உபசம்ஹரிப்பதும்
செய்வதால் பரபரன் -பரர்களே அபரர்கள் ஆகும்படி சர்வேஸ்வர சர்வேஸ்வரன்
சக்தி பிரதத்வம் -உள்ளும் நின்றும்
அயன் அரன் பிரசித்தமாம் படி -ஒரு வேலை திருஷ்டாந்தம் –புரம் ஒரு மூன்று எரித்து
அமரர்க்கும் அறிவியந்து-அமரர்களுக்கு ஞானம் உபதேசித்து –
அண்டாந்தர வர்த்தி லோகங்களை -உட்பட்ட லோகங்கள்
வெளிப்பட்ட லோகங்கள் -தானே -அவை சிருஷ்டிக்கும் பொழுது பிரமனே இல்லையே
உளன் -அவர்களுக்கு உள்ளே உளன்

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
ப்ரஹ்மாதிகளால் அறிய வரிய ஸ்வ பாவத்தை உடைத்தாய் இருக்கிற விண் உண்டு -மூல பிரகிருதி
அது தொடக்கமான உண்டான எல்லாவற்றுக்கும் வரிஷ்டமான காரணமாய் –அஷரம் அம்பராந்த த்ருதே –
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -ஆகாயத்துக்கு காரணமான மூல பிரக்ருதியைத் தரிப்பதால் அஷரம் என்பதே ப்ரஹ்மம்–என்றது
அம்பராந்தம் -என்று சொல்லக் கடவது இ றே
ப்ருஹத் உபநிஷத்தில் கார்க்கி வித்யையிலே-கச்மின்நு கல்வாகாச ஒதச்ச ப்ரோதச்ச -என்று ஆகாச சப்தத்தாலே
மூல பிரக்ருதியைச் சொல்லுகையாலே இவரும் ஆகாச சப்தத்தாலே மூலப் பிரக்ருதியை அருளிச் செய்கிறார் –
பிரகிருதி கார்யமான ஆகாச வாசி சப்தத்தை இட்டு காரணமான மூல பிரக்ருதியை உபசரிக்கிறது

அம்பராந்த -ஆகாசத்துக்கும் காரணம்– த்ருத -தாங்கும் -மூலப் பிரகிருதி
ஓதம் ப்ரோதம் -உண்டை பாவும் போலே -குறுக்கும் நெடுக்கும் -வாசக்னவி-யாஜ்ஞ்ஞாவர்க்கர் -சம்வாதம் –அம்பர சப்தத்தால் -மூல பிரகிருதி
அம்பராந்தம் -காரணமான மூல பிரக்ருதியை குறிக்கும் -பூர்வ பஷி –ஆகாச சப்தம்
ப்ரஹ்மம் தரிப்பதால் -த்ருத -அஷரம் பர ப்ரஹ்மம் குறிக்கும்

வரன் முதலாய் –
காரண -பிரளய-தசையிலும் ஸூ ஷ்ம ரூபேணவியாபித்து தன மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கியும்
கார்யமாம் அளவிலே வந்தவாறே அவ்யகதம் -மஹான் -அஹங்காரம் -என்கிற இவற்றிலும் ஸூ ஷ்ம ரூபேண வியாபித்தும்
காரண பரம்பரையோடு கார்ய பரம்பரையோடு வாசியறத் தானே நின்று நடத்திக் கொண்டு போருகையாலே வரிஷ்டமான காரணம் என்கிறது –

அவை முழுதுண்ட
சம்ஹாரத்தில் வந்தால் முழுக்க சம்ஹர்த்தா ஆகிறவனும் அவனே
கட உபநிஷத் -யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதன ம்ருத்யுர் யஸ்ய உபசேசனம் -என்று -உபசேசனம்–ஊறுகாய்-தயிர் -என்றுமாம்-விழுங்கப் படுபவர்
யாவன் ஒருவனுக்கு ப்ரஹ்ம ஷத்ராத்மகராய் இருக்கிற இது எல்லாம் ஓதனமாய் இருக்கிறது –
யாவர் ஒருவனுக்கு ம்ருத்யு உபாசேசன கோடியிலே நிற்கிறான் –
க இத்தா வேத யத்ர ச – –
அப்படி இருக்கிறவன் பெருமை ஒருவர்க்கு அறிய நிலமோ என்னா நின்றது இறே -நின்னை யார் நினைக்க வல்லரே-

பரபரன்
ப்ரஹ்மாதிகள்-அதிகாரி புருஷர்களாய் இருக்கையாலே நம்மைக் குறித்து அவர்கள் பரராய் இருப்பது ஓன்று உண்டு இ றே
பர பராணாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடியே அவர்கள் தங்களுக்கும் பரனாய் இருக்குமவன் –
மனிசர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவா -8-1-5- என்னக் கடவது இறே –
பிராக்ருத ரூப வர்ணாத ரஹித -தேவர்களுக்கும் உத்தேச்ய ஆஸ்ரிதன்-ஸூவ மகிமையையே சார்ந்து

புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
ருத்ரன் திரிபுர தஹனம் பண்ணினான் என்றும்
அமரர்க்கும் அறிவை ஈந்து -அன்றிக்கே வியத்தல் -கடத்தல் -கொடுத்தாலும் ஆகையாலே -அறிவைக் கொடுத்து -என்னவுமாம் –
புரம் எரி செய்து சிவன் உறு துயர் களை தேவை –கபாலீஸ்வரர் -சாதகன் –திருவல்லிக் கேணி கண்டேனே -இடர் கெடுத்த திருவாளன்
ப்ரஹ்மா தேவர்களுக்கு ஜ்ஞான பிரதானம் பண்ணினான் என்றும் -ஒரு பிரசித்தி உண்டு இ றே நாட்டிலே அவர்களுக்கு
அங்கன் அன்றோ என்னில் -அவற்றை ஆராய்ந்தால்
விஷ்ணுராத்மா பகவதோ பவச்யாமித தேஜஸ -தஸ்மாத் தனுர்ஜ்யா சம்ஸ்பர்சம் ச விஷேஹே மகேஸ்வர -என்னா நின்றார்கள் இ றே
தஸ்மாத் -ஜயா சம்ஸ்பர்சம் தொட முடிந்தது -விஷ்ணு ஆத்மாவாக இருந்ததால்
பரிபாடல் -இமயம் -வில் நாணாகி-தொல் புகழ் தந்தாரும் தாம் -அம்பாகவும் தான் –
அத்தை அடி அறிவார் —நண்ணார் நகரம் விழ நனிமலை சிலை வளைவு செய்து அங்கழல் நிற அம்பது ஆனவனே -பெரிய திருமொழி -6-1-3-
என்னா நின்றார்கள் இ றே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள்
சர நாராயண பெருமாள் பண்ருட்டி அருகில் -அம்பாகவும் இருந்தானே-
தான் பூட்டின நாணி தன் கழுத்தை அறுத்துக் கொண்டு போகாது ஒழியும் பொழுது ஈஸ்வரன் அந்தராத்மாவாக இருக்க வேணும்
ப்ரஹ்மா தேவர்களுக்கு ஜ்ஞான பிரதானம் பண்ணினார் என்று பிரசித்தி உண்டு இ றே
அதுக்கடி ஆராய்ந்தால் -யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் என்கிறபடியே அவன் அடியாய் இருக்கும் –
வேத அபஹார -குரு பாதக –தேவும் எப்பொருளும் படைக்க –பூவில் நான் முகனைப் படைத்த தேவன்
ப்ரூபங்கா பிரமாணம் -பெரிய பிராட்டியார் திருப் புருவ நெருப்பே பிரமாணம் –

அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –
அரன் செய்தான் அயன் செய்தான் என உலகு அழித்து அமைத்து உளன் –
ஏதௌ த்வௌ விபுத ஸ்ரேஷ்டௌ பிரசாத க்ரோதஜௌ சம்ருதௌ ததா தர்சித்த பந்தா நௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-என்கிறபடியே
பிரமாண கதிகள் இருந்த படியாலே
இவர்கள் இருவர் ஸ்ரேஷ்டர் -அருளில் கோபத்தில் இருந்தும் பிறந்தவர்கள்
அவனால் காட்டப்பட்ட வழியை கொண்டு சிருஷ்டியும் சம்ஹாரமும் -செய்கிறவர்கள் -பிரமாணம்
ஏக தேச சிருஷ்டியும் ஏக தேச சம்ஹாரமுமே ப்ரஹ்மாதிகளுக்கு உள்ளது –
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே –இவர்களுக்கு பிரசித்தி கொடுத்து –
அது தானும் இவர்களுக்கு அந்தராத்மாவாய் நின்று சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகிறவன் சர்வேஸ்வரன் ஆகையாலே சொன்னேன்
அத்தனை –ஒரு வியக்தியிலே பஷ பாதத்தாலே சொன்னேன் அல்லேன் என்று குத்ருஷ்டிகளை நிரசிக்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ   பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ  நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ  நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: