பகவத் விஷயம் காலஷேபம் -30– திருவாய்மொழி – -1-1-4-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

கீழில் பாட்டிலே -ததீயத்வ ஆகாரத்தாலே அவன் குணங்களோபாதி உத்தேச்யமாகத் தோற்றுகையாலே-லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
இனி மேலில் பாட்டுக்கள் எல்லாம் லீலா விபூதி விஷயமாய் இருக்கிறது
நித்ய விபூதியில் வந்தால் -அவ்விபூதி பாவஜ்ஞமாய் -அவனுடைய சந்தத்தைப் பின் செல்லுமதாய் இருக்கும் –
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப -4-9-10–என்னும்படி யாய் இ றே இருப்பது
கர்ம நிபந்தனமான அசித் சம்சர்க்கத்தோடே கூடி -ஈஸ்வர சங்கல்பத்தை பின் செல்லுமதாய் இருக்கும் இந்த விபூதி –
அந்த விபூதியில் வந்தால் அவ்விருப்பு கண்டு உகக்கும் அதுக்கு அவ்வருகு ஒன்றும் இல்லை –
அந்ய சேஷத்வ -ஸ்வ ஸ்வா தந்த்ர்யங்கள் நடையாடுகிறது இவ்விபூதியில் ஆகையாலே -இரண்டையும் தவிர்த்து -பகவத் அதீநம் என்று சொல்ல வேண்டுவது இங்கேயாய் இருந்தது –

நீதி வானவர் -சேஷி சேஷ பாவம் அறிந்தவர் –
கீழ் பர உபதேச கர்ப்ப ஸ்வ அனுபவம் -எனன் உயிர் –
இது ஸ்வ அனுபவ கர்ப்ப பர உபதேசம் -விலகாமல் சரீரதையா சேஷங்கள் என்று உபதேசம் பிரதானம் –
இங்கு தாததீன்யம் புரியாமல் இருக்க -இங்கே –முதலில் உதாசீனன் அவன் -அனுமதி அப்புறம் -தூண்டியும் விடுவார் -நல்ல வழியில் -தீயதாக இருந்தால் உதாசீனர்
த்வம் மே -என்றால் அஹம் தே ஒத்துக் கொள்வார் அங்கே -அஹம் மே இங்கே

இனி ஒரு மூன்று பாட்டாலே -4/5/6-
இதினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் அதீனமாய் இருக்கும் என்று
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் சரீராத்மா பாவம் என்று -7-
குத்ருஷ்டிகளை நிரசித்து -8-
சூன்ய வாதியை நிரசித்து -9-
வ்யாப்தி சௌகர்யத்தைச் சொல்லி -10-
பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் -11-
அதில் ஸ்வரூபம் அவன் அதீநம் என்றார் -இப்பாட்டில் -அது ஆகிறபடி -எங்கனே என்னில் –

சிருஷ்டி காலத்தில் வந்தவாறே இவற்றை உண்டாக்கி –ஜீவத்வாரா அனுப்ரவேசித்து -வஸ்துத்வ நாம பாக்த்வங்களும் உண்டாம் படி பண்ணியும்
இது அடங்கலும் அழிந்த வன்று சத்யவச்த பிரபை–நீர் பூத்த நெருப்பு- போலே தன பக்கலிலே ஸூஷ்ம ரூபேண கிடக்கும் படி ஏறிட்டுக் கொண்டு தரித்தும்
காரண தசையோடு கார்ய தசையோடு வாசி அற தன்னைப் பற்றி ஸ்வரூப ஸ்தித்யாதிகளாம் படி
இருக்கையாலே ஸ்வரூபம் அவன் அதீநம் என்கிறது –

சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ஆகாரம் ப்ரஹ்மம் -பிரளயம் -ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ஆகாரம் ப்ரஹ்மம் -சிருஷ்டிக்கு பின்பு -நாமம் ரூபம் கொண்டவை
சிறிது அளவு திருமேனி மாறி -விஸ்வரூபம் -விச்வமே ரூபம் யாருக்கோ -பல பரிமாணங்கள் -முன்னால் நின்று வளர வில்லை –
காரண தசை பிரளயம் -ஆகாசாத் வாயு -ஆகாச சாரீரக ப்ரஹ்மம் -வாயுவை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் ஆகும்-

அதில் -லோகத்தில் சகல பதார்த்தங்களையும் தனித் தனியே சொல்லி
-இதனுடைய ஸ்வரூபம் அவனாலே -இதனுடைய ஸ்வரூபம் அதனாலே -என்னில் பணிப்படும் -பிரயாசை படும் -இறே ஜீவா அனந்த்யத்தாலே-
இனி பிரயோஜகத்தில் சொல்லிவிடும் அன்று பிரதிபத்திக்கு விஷயம் ஆகாது –
ஆகையாலே –தேவாதி பதார்த்தங்களை நாலு மூன்று வகையாலே சேர்த்து அவற்றினுடைய ஸ்வரூபம் அவன் அதீநம் -என்கிறார் –
பெண்பால் -3-ஆண்பால் -3-பலவின்பால் -3-ஒன்றன்பால் –
பூஜ்ய வாசி –1-

அழியக் கூடியவை -1-நன்மை தீமை -1-கால பேதம் -1- ஆக 7-என்பதால் நான்கு மூன்று வகையாகச் சேர்த்து என்கிறார்

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

விபூத் அந்தர்கத -ஸ்வரூபம் -ஸ்திதி -பிரவ்ருத்திகள் -மூன்றும் அவன் அதீனம்-மேல் இட்ட மூன்று பாட்டுக்களில்– 4/5/6 பாசுரங்களில்
சாமா நாதி கரண்யத்தால் -ஆமவை யாயவை ஆய நின்ற அவரே
-என்று அவர் சொல்லால் -அனைத்தையும் அருளிச் செய்கிறார் -எதிலும் வேற்றுமை உறுப்பு -இல்லை பிரதம வேற்றுமை
புத்தகம் அடியேன் போலே -சரீரம் அடியேன் -என்னுடைய சரீரம் -நான் கர்மாதீனமாக இப்பிறவியில் கிருஷ்ணன் என்னும் பெயரை கொண்ட சரீரம் ஏற்றுக் கொண்டு உள்ளேன் –
மண் குடம் -சொல்லலாம் கார்ய காரண பாவம் -சரீர ஆத்மா பாவம் சொல்லலாம்
நாம் – -எங்கு இருந்து -மேலே சொல்லும் தூரத்வாத் உபாதிகளுக்கு
தாம் -பூஜ்யவாசி சொல் -உயர்ந்தோர்
வீமவை-வீயுமவை நஸ்ரமாய் -அழியக் கூடிய ஸ்வ பாவம் உடையவை
நலம் தீங்கிவை-தர்ம தரமி வாசகம் இரண்டாகவும்
ஆமவை யாயவை -ஆகாமி அதிதிகள் -இரண்டும்
ஆய நின்ற அவரே-தாமே யாக நின்ற அவர் -பிரகாரங்கள் -சரீரங்கள் -அவன் அதீனமாக தானே இருக்கும் –
எவன் எவர் என்று -சந்தஸ் இடம் இல்லாததால் விடப்பட்டன -அவற்றையும் கொள்வது உப லஷணத்தால்-

நாம் அவன் இவன் உவன் எவன் –
நான் என்றும் நாம் என்றும் -யான் என்றும் யாம் என்றும் தந்தாமைச் சொல்லக் கடவது
சந்நிஹிதம் என்ன –தூரஸ்தம் என்ன –அதூரவிப்ரக்ருஷ்டம் என்ன –வினவப் படுகிறது –என்ன –

அவள் இவள் உவள் எவள் –
ஸ்திரீ லிங்க நிர்திஷ்ட வஸ்துக்களைச் சொல்லுகிறது –

தாம் அவர் இவர் உவர்
பாஹூ மந்தவ்யரை –

அது விது வுது வெது –
நபும்சக லிங்க நிர்திஷ்ட வஸ்துக்களைச் சொல்லுகிறது

வீமவை யிவை வுவை அவை –
நச்வர பதார்த்தங்கள் –

நலம் தீங்கிவை-
நன்மை தீமை -என்னுதல்-தர்மம்
நன்றானவை தீதானவை -என்னுதல் – தர்மி

ஆமவை யாயவை –
கழிந்த வற்றிலும் -வருமவற்றிலும் அடைப்புன்னும் இ றே வர்த்தமானம் –

ஆய நின்ற
ஆய நின்ற பதார்த்தங்கள்
இவற்றைப் பதார்த்தளவிலே கொண்ட போது மேல் ஐக்யம் சொல்லப் போகாது –
அசித்தும்-அசித் அபிமானியான ஜீவனும் -ஜீவா அந்தர்யாமியான பரமாத்மாவுமான இஸ் சங்காதம் இத்தனைக்கும் வாசகமாய் இருக்கிறது இச் சப்தம் –

அவரே –
இவையே நிற்கிறார் அவர்
இதம் சர்வம் ப்ரஹ்மம் கலு -என்னுமா போலே
தத் தவம் அஸி-என்றால் போலே
இருக்கிறது –

சர்வே -ப்ரஹ்மத்தை சொல்லும் -சொல்லுக்கு உண்டான பொருள் ப்ரஹ்மத்துக்கு சரீரம் -ஹே கிருஷ்ணா சரீரத்துக்கு இருந்தாலும் ஆத்மா புரிந்து வருவது போலே –
யஸ்ய ஆத்மா சரீரம் -கடக சுருதி –பிரதான அர்த்தம் ப்ரஹ்மம் தூண் –தூண் மூலம் நாம் பார்க்கிறோம்
இதுவே அவர் இல்லை -உடமை சரீரம் –
இதம் சர்வம் கலு ப்ரஹ்ம-தஜ் ஜலான் இதி சாந்த உபாசீதே
தஜ்ஜா –தது ஜ -படைத்து
தல்ல -அவன் இடம் லயித்து
தத்தனு –அவனால் ரக்ஷிக்கப்பட்டு
கலு -அதுவோ என்னில் –சர்வ -கார்ய ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -கார்யா அவஸ்தை
தயோகோ -இருவருக்கும் உள்ளே ஜகம் ப்ரஹ்மம் -சாமா நாதி கரணியத்தால் -வந்த ஐக்யம்
தத்வமசி –தத் த்வம் அஸி-சேதனமும் ப்ரஹ்மமும் ஓன்று
தேவதத்தன் -சியாமா -யுவ -லோகிதாஷ -சம பரிமாண -தண்டி -குண்டலி- திஷ்டதி நிற்கிறார் -பலன் வேறே
-தண்டக குண்டலக சொல்லாமல் -தண்டு குண்டலம் பிரியுமே –மதுப் அர்த்த பிரத்யயம்-காட்ட -இத்தை உடையவன்
நிறம் -யுவா -சிவந்த கண்கள் -சம பரிமாணங்கள் பிரியாதவை -அப்ருதக் சித்த விசே ஷணங்கள்
நீலோ குடம் -மட்குடம் -வேலைப்பாடு குடம் –
பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம் – ஏகஸ்மின் அர்த்தே வ்ருத்தி சாமான்ய கரண்யா ஸ்வரூபம் –
மின்னுருவாய் –வேத நான்காய் –நீராய் நிலனாய்–அயன் ஆனாய் -முனியே நான்முகனே முக் கண் அப்பா –
நளிர்மதிச் சடையன் என்கோ –பால் என்கோ —-அனைத்தும் சரீரம் –ஏறாளும் –கூறாளும் தனி உடம்பன் என்ன சௌலப்யம்-ஸுசீல்யம் –
வேத வேதாங்க நீயே வேதம் -நீயே வேதாங்கம் -கொடுத்தவன் அவனே -ப்ரதிபாத்ய பிரதிபாதக -சம்பந்தம் -பிரதாரூ பிரதான காரண -வேதம் வேதங்கள் நீயே –
சொல்லப்படுபவன் பிரதிபாத்ய சம்பந்தம் உண்டே-சரீராத்மா பாவம் -காரண கார்யம் -இவற்றால் சாமாநாதி காரண்யம் –

முதல் பாட்டிலே –கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் -விக்ரஹ வை லஷண்யத்தையும் சொல்லி
இரண்டாம் பாட்டிலே ஸ்வரூப வைலஷண்யத்தையும் சொல்லிற்று
தச் சப்தம் -பிரக்ருத பராமர்சியாகையாலே –-சுட்டு -ஆகையாலே
அவர் -என்று கல்யாண குண விசிஷ்ட வேஷத்தைச் சொல்லி
ஆய நின்ற -என்று அசிஜ்ஜீவ விசிஷ்ட பரமாத்மாவைச் சொல்லி
சாமா நாதி கரண்யத்தாலே ஐக்யம் சொல்லுகிறது –

ஆதிப்பரனோடு ஒன்றாம் அல்லல் தீர்த்தான் எம் இராமானுசன் -ஸ்வரூபத்தால் ஐக்யம் இல்லை -சாமா நாதி கரண்யத்தால்

ஆக
ஸ்திரீ புன்ன பும்சக பேதத்தாலும்
பூஜ்ய பதார்த்தங்கள் நச்வர பதார்த்தங்கள் என்கிற பேதத்தாலும்
விலஷண அவிலஷண பேதத்தாலும்
பூத பவிஷ்யத் வர்த்தமான கால பேதத்தால் வந்த விசேஷங்களாலும்
சகல சேதன அசேதனங்களையும் சங்க்ரஹித்து -அவற்றினுடைய ஸ்வரூபம் பகவத் அதீநம் என்றதாய் விட்டது

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: