பகவத் விஷயம் காலஷேபம் -29- திருவாய்மொழி – -1-1-3-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை –

முதல் பாட்டிலே –
பிரதான்யேன –கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –விக்ரஹ வைலஷண்யத்தையும் அனுபவித்து -மயர்வற மதி நலம் அருளினான் -தொழுது ஏழு -இரண்டையும் சொன்னாரே -இவை தம்மைப் பற்றி -அதனாலே அவை பிரதான்யம் என்கிறார் –அவனைப் பேச பெற்ற நாக்கு என்று ஆழ்வார் அபிப்ராயத்தால் இவற்றை பிரதானம் என்கிறார் –
அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சித் அசித் விலஷணமுமாய்-உபமான ரஹிதமுமாய் இருக்கும் என்று
இரண்டாம் பாட்டாலே அருளிச் செய்து நின்றார் –
அவற்றோடு சேர் ஓர் கோவையாய்த் தோற்றும் இ றே –ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் இவர்க்கு –
நோ பஜநம் ஸ்மரன் நிதம் சரீரம் என்னா நிற்கச் செய்தே -ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் உத்தேச்யம் ஆகா நின்றது இ றே முக்தனுக்கு-சர்வம் க பஸ்யதி-என்றும் சுருதி சொல்லுமே –
இவருக்கும் கர்ம நிபந்தனமான ஆகாரம் கிடக்கச் செய்தே -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையால் ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார் –
ராஜாக்களுக்கு நாடு எங்கும் செல்லா நிற்கச் செய்தே மகிஷிகளும் தாங்களுமாக சில பூம் தோட்டங்களுக்கு குடிநீர் வார்த்து
-ஆக்குவது அழிப்பதுமாய் -லீலா ரசம் அனுபவிக்குமா போலே
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் பெரும்தேவுடை மூவுலகு -6-3-5- என்கிறபடியே
சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாருமாய் கடாஷித்த போது வுண்டாய்-இல்லையாகில் இல்லையாய்-
அவர்களுக்கு லீலா ரச விஷயமாய் இருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார்

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

இலனது -அது இலன்
என நினைவரியவன் –சொன்னால் அளவுக்கு உட்படுவான் –
உடையனிது-அது உடையன்
என நினைவரியவன் –இது இருக்கு என்றால் பல இல்லை குறை வருமே –வைத்தியர் என்றால் வக்கீல் இல்லை
கப்பலில் அரைப்பாக்கு கதை -பாதி -கட்டை விரலும் விடாமல் தருவேன் -புத்த விக்ரகம் வைதிக சம்பந்தம் ஆக்கி அருளினார் –
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
பூமி மேல் லோகம் -உருவுடைய அசேதனம் / அருவினன் ரூப ரஹிதமான சித் இரண்டும் பிரகாரம் -சித்தும் த்ரவ்யமே –
புலனொடு புலன் அலன் -புலப்படும் பதார்த்தங்கள்-அசேதனங்கள் – உடன் கலந்து
-புலன் அலன் –-அவற்றின் ஸ்வ பாவம் பண்பு தனக்கு இல்லாதவன் -வியாப்த கத தோஷம் தட்டாதவன்
ஒழிவிலன் பரந்த வந்நலனுடை ஒருவனை நணுகினம் நாமே
பரந்து வியாபித்து கால தசம் வஸ்து -அனைத்திலும்
அந்த நலம் -உடைய அத்விதீயனை நாம் கிட்டப் பெற்றோம் –நாமோ நணுகினம் -நாமும் நணுகப் பெற்றோமே -ஆச்சார்யம்
நலனுடை -முதல் பாட்டின் சங்க்ரஹம்
ஒருவனை –இரண்டாம் பாட்டின் சங்க்ரஹம்
லீலா விபூதி யோகம் சொல்லிற்று –
ஐஸ்வர் யத்தையும் விபூதியையும் -ஸ்ரீ கீதை -10 அத்யாயம் -நியமன சாமர்த்தியம் ஐஸ்வர்யம் -அனைத்தும் இவன் அதீனம் —

இலனது உடையனிது என நினைவரியவன்
அது இலன் -இது உடையவன் -என நினைவு அரியவன் –
அநு பூதமாய் இருப்பதொன்ற்றைச் சொல்லி –அது இலன் என்றவாறே -அது ஒழிந்தத்தை உடையவன் என்று தோற்றும் –
ஒன்றைக் காட்டி இத்தை உடையவன் என்றவாறே இது ஒழிந்தது இல்லையாய் தோற்றும் –
இலனது –என்றால் பரிச்சின்ன விபூதிகனாம் –
உடையன் இது என்றால்-இது ஒழிந்தது இல்லாமையாலே அல்ப விபூதிகனாம் –
இரண்டு வழி யாலுமாக ஐஸ்வர்யம் குறைந்து தோற்றும்
என
இப்படி இருக்கும் என –
நினைவரியவன் –
அனுப பந்தங்களைச் சேர்த்து நினைக்கலாம் இ றே
ஓர் ஊசி நிற்கிறதாகவும் -அதின் மேல் கலசம் இருக்கிறதாகவும் -அதின் மேல் சால் -நெல் –இருக்கிறதாகவும் –
அதின் மேலே மகா மேரு இருக்கிறதாகவும் -இப்படி அனுப பந்தகங்களைச் சேர்த்து நினைக்கலாம் இ றே
இப்படியேதான் மநோ ரதத்துக்கு விஷயமாய் இருக்குமோ என்னில் மநோ ரத சமயத்திலும் பரிச்சேதிக்க அரியனாய் இருக்கும் –

ஆனால் இவனது ஐஸ்வர்யம் பேசும்படி தான் என் என்னில் –
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன் –
பதிம் விஸ்மஸ்ய -என்னும் இத்தனை -பதி -சேஷி –ரஷக வாசி –ரூடத்வாத்-
நிலனிடை -என்கிற இது பாதாளத்து அளவும் நினைக்கிறது
விசும்பிடை -என்கிற இது பரம பதத்துக்கு இவ்வருகு உள்ளதை எல்லாம் நினைக்கிறது
உருவினன் -உருக்களை உடையவன் -சரீரங்களை உடைய சேதனர்கள் உடையவன் –
-அருவினன் -அருக்களை உடையவன் –
இனன் -என்ன -உடையவன் என்று காட்டுமோ என்னில்
காராயின காள நன் மேனியினன்-9-3-1-என்றால் -மேனியை உடையவன் என்று காட்டுமா போலே
ஆக கீழ் மேல் உண்டான சேதன அசேதனங்களை உடையான் என்றபடி –
இத்தால் ப்ராதேசிகமான ஐஸ்வர்யம் உடையவர்களது அன்று லீலா விபூதி -சர்வாதிகனது -என்கை

இந்த்ரன் சொத்து–பிரமன் சொத்து -ப்ராதேசிகம் -இல்லை சர்வாதிகனது
சமஸ்த கல்யாண குனாத்மகன் நித்ய சூரிகளுக்கு சேவ்யனான அவனே -என்றபடி

இப்படி சர்வத்தையும் உடையவனாய் -தான் போகத்தில் அந்ய பரனாய் கோயில் சாந்து பூசி நித்ய விபூதியிலே இருக்குமோ என்னில்
புலனொடு புலன் நலன் ஒழிவிலன் –
புலனொடு –
இவை பட்டத்தை தானும் பட்டு -உடன்கேடாய் நின்று நோக்கும் என்கிறது –
புலன் -என்கிறது புலப்படும் பதார்த்தங்களை
த்ருச்யதே ச்ரூயதேபி வா -என்கிறபடியே பிரமாண் கோசரங்களான பதார்த்தங்களை

போகோ உபகரணம் கோயில் சாந்து -போகங்களுக்கு உப லஷணம்
நாட்டில் பிறந்து மனிசர்க்கா படாதன பட்டு –சீதா நஷ்டா -இத்யாதி -சம துக்கி சுகிவா -வியசநேஷூ மனுஷ்யானம் –
த்ருச்யதே -பிரத்யஷ கம்ய அசித் –ஸ்ருயதே -சாஸ்திர கம்ய சேதனம் -சாஸ்திரம் தெரியாத உண்மை சொல்லுமே -இரண்டையும்
-அந்தர்பஹிஷ்ய தத்சர்வம் வியாப்ய -பிரமாண கோசரம் -பிரத்யஷ கோசரம் அசேதனம் -சாஸ்திர பிரமாண கோசரம் அசேதனம் -நியமனம் ஸ்திதி இரண்டுக்கும் அநு பிரவேசம் –

ஓடு –
தத் த்ருஷ்ட்வா என்கிறபடியே -இவற்றை உண்டாக்கி ஜீவத்வாரா அனுப்ரவேசித்து பின்னை இவற்றுக்கு வஸ்த்துத்வ நாம பாக்த்வங்கள்
உண்டாம் படி பண்ணி -அந்த பிரவிஷ்டாச் சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்கிறபடியே சர்வாத்ராந்தராமாவாய் நிற்கும்படியைச் சொல்கிறது

அனுபிரேவச -நாம ரூபங்களைக் கொடுத்து -ஜீவ மூலமாக அசித்துக்குள் புகுந்து
-தத்வ த்ரயம் அனைத்திலும் பார்க்கலாமே –அப்ரஹ்மாத்வம் ஒன்றுமே இல்லை
பர்யவசானம் -விளக்கு -உள்ளும் ஆத்மா -சொல்லும் பரமாத்வை குறிக்கும் –
நியமனதுக்காகவும் -ஸ்திதிக்காகவும்-அனுபிரவேசம் -வஸ்துத்வம்-அந்தபிரவிஷ்டா -சாஸ்தா -ஜனானாம் -சர்வாத்மா
-சஸ்தா ஜீவன் சாஸ்தா பரமாத்மா –அந்தராத்மா -சரீரி சரீர பாவம் –அந்தர்யாமி நியந்த்ரு -நியாமய பாவம்-ஆனால் பின்னை தான் சர்வாத்மாவாய் நின்றால் அசித்தினுடைய பரிணாமாதிகளாதால்-சேதனருடைய ஸூகித்வ துக்கிதங்களாதல் தனக்கு-ஸ்பர்சிக்கும் படி இருக்குமோ என்னில் –

புலனலன் –
தத் தர்மா வல்லன் –
த்வா ஸூ பர்ணா சயுஜா சகாயா வ்ருஷம் பரிஷஸ் வஜாதே தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத் வத்த்ய நச் நன் நன்யோ அபிசாக தீதி -என்று
முண்டக உபநிஷத் –மரம் -உடல் –ஜீவாத்மா பரமாத்மா இரண்டு பறவைகள் –பலத்தை ஜீவன் மட்டுமே அனுபவிக்கிறான் -என்கிறது தான்
ஓட்டற்று நின்று விளங்கா நிற்கும்

த்வௌ-சொல்லாமல் —த்வா– வேதம் வி லஷண சமஸ்க்ருதம்
ஜீவேஸ்வரௌ-ஞானம் சிறகு -சமான அபஹத பாப்மாதவம் -இத்யாதி
சஹாய-சேஷ சேஷித்வ ரூப பந்தவ்ய உக்தௌ -சமான அதிகரணம் -ஏகம் சரீரம் –

ஒழிவிலன் பரந்த
ஒரு வஸ்துக்கள் ஒழியாமே இப்படி வியாபித்து இருக்கும் -என்னவுமாம்
அன்றிக்கே
கால பாரமாக்கி எக்காலத்திலும் எல்லா வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும் என்னவுமாம் –

அந் நலனுடை ஒருவனை
கீழ் இரண்டு பாட்டாலும் சொன்ன குண விசிஷ்ட ஸ்வரூபத்தை நினைத்து அந் நலனுடை ஒருவனை -என்கிறார் -நலன் -குணம் உடை ஸ்வரூபம்
நணுகினம் –
மயர்வற மதி நலம் அருளினன்-என்கிற ஞான மாத்ரம் அன்றிக்கே கிட்டப் பெற்றோம்

ஞானம் கொடுத்து -ஆஸ்ரயக்கவும் செய்து -அடையவும் செய்து அருளினானே –
அறிகை –காண்கை -பிராப்தி -ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் –

நாமோ
இது பொய்யோ -கிந்து ஸ்யாத் சித்த மோஹோயம்-இது ஏதேனும் பிரம ஸ்வப்நாதிகளோ என்றால் போலே
இவர் ஈச்வரோஹம் என்றால் போலே அவனுக்கும் குடி வாங்க வேண்டும்படியாய் இ றே இருப்பது
அஹம் என்றால் அவன் அளவிலே பர்யவசிக்க வேண்டும்படியாய் இருக்க -தேஹத்து அளவிலே யாம் படியாய் இ றே முன்பு போந்தது –

ஹரி ஹரி -சீதா பிராட்டி -திருவடி கண்டு பட்டால் போலே -உன்மாதமா- ஸ்வப்னமோ-பிரமமோ – சித்த மோஹம்-
வாத கதி -காற்று வீசி வந்த சப்தமா மயக்கம் திரிபு -கானல் நீர் போலே பொய்யோ
குரக்கனே ஆகுக -அரக்கனே ஆகுக -ராம நாமம் சொல்பவன் நன்றாக இருக்கட்டும் ஆசீர்வாதம் செய்து அருளினாள்-
இவர் ஈச்வரோஹம் என்றால் ராக்ஷஸ  தேசத்தில் -அங்கே -இங்கே அந்ய சேஷத்வ –ஸ்வ ஸ்வாதந்திர அபிமானம்
நெற்றி கொத்தி பார்த்தாலும் -என்று பேராமல் இருப்பானே

மன்யே ப்ராப்தாஸ் ஸ்ம தம் தேசம் பரத்வாஜோ யமப்ரவீத் -கைகேயி ராஜன் என்று சம்போதிக்கும்படி பிறந்து
ஸ்ரீ பரத்வாஜ பகவான் -அவள் மகனாய் கீழ் வயிற்றுக் கழலை அறுக்க வருகிறானோ –என்று கச்சினன துஷ்டோ வ்ரஜசி என்னும்படியான நான்
அவன் சொன்ன ஆஸ்ரமத்திலே புகுந்தேனோ என்று சங்கியா நின்றான் என்றான் இ றே -தம் தேசம் –அந் நலனுடை போலே –தவ வேடம் தலைக் கொண்டு -ஆயிரம் ராமன் -நம்பியை ஒக்கின்றான் -நகையில் முகம் -மாசடைந்த மெய்யான் –
பரத்வாஜர் -அவள் மகன் -கைகேயி உள்ளம் -அடி வயிற்றில் பட்ட கட்டி போலே -இவரும் சங்கிக்க
கச்சினன துஷ்டோ வ்ரஜசி -குக வசனமே ஆகிலும் பரத்வாஜர் வாக்ய துல்யம் -கொள்ளுவதில் குற்றம் இல்லை-
கொல்லப் பட்டேன் என்று விழுந்தான் பரதன் -முனிவரே நீரே-உன் பெருமை உலகம் அறிய சொன்னேன் என்றார் பின்பு –

வா நராணாம் நாரணாஞ்ச கதம் ஆஸீத் சமாகம -காட்டிலே வர்த்திக்கக் கடவ குரங்குகளும் நாகரீகரான சக்கரவர்த்தி பிள்ளைகளுக்கும்
ஒரு சேர்த்தி உண்டான படி எங்கனே -என்ன –
ராம ஸூ க்ரீவயோர் ஐக்யம் தேவ்யேவம் சம்ஜாயாத -பெருமாளும் மகா ராஜரும் சேர்த்த சேர்த்தி -பின்னே பிறந்த இளைய பெருமாள் நிற்க –
அடியேன் அந்தப்புர கார்யத்துக்கு வரும்படியாய் இ றே -நாமும் இங்கனே கூடிக் கொண்டு நிற்கக் கண்டேன் இத்தனை –

கதம் -நணுகினம் நாமே -அதே மோஹம் -நாரணாஞ்ச-பஹூ வசனம்-பெருமாள் கையைப் பிடித்தால் கோசல மக்கள் அனுவருக்கும் தோழமை
கதம் -எங்கனே -எப்படி -எவ்வளவு நெருக்கம் -காரணம் என்ன –
ஏவம் ஐக்யம்– சமஜாயதே –நல்லது ஒன்றும் இல்லாமலே –வரவாறு இல்லை வாழ்வு இனிது -நிர்ஹேதுக பெருமாள் கிருபை –
கூடப் பிறந்த தம்பியை அங்கே நிறுத்தி என்னை உம்மைக் காண அனுப்பிய -அளவு தோழமை
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே -என்று கிரியா பதம் சேர்த்து அனுசந்திக்க வேண்டும்

நாமே
இவ்வனுபவத்துக்கு புறம்பான –
பகவத் கந்த ரஹிதரான நாம் –

நாமே
இது பொய்யோ

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: