பகவத் விஷயம் காலஷேபம் -28- திருவாய்மொழி – -1-1-2-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

யதோ வா இமானி -இத்யாதி ஸ்ருதி பிரக்ரியையாலே –தைத்ரியம் -கார்ய ஆகாரமான ஜகத்தை பிடித்து -ஜகத் காரண வஸ்து உபாஸ்யம் -என்னுதல் –
அன்றிக்கே –
ஸ்வரூபத்தை முற்படச் சொல்லி -பின்னை விபூதியில் போருதல் செய்யாதே முற்படக் குணங்களிலே இழிவான் என் என்னில்
சர்வேஸ்வரன் தம்மை வசீகரித்தது குணங்களைக் காட்டி ஆகையாலே தாம் அகப்பட்ட துறையிலே முற்பட இழிந்து பேசினார் —யோகி வியாவ்ருத்தி ஆழ்வாருக்கு –
அக்குணங்கள் தான் ஸ்வரூபத்தைப் பற்றி யல்லது இராமையாலே -அவற்றுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை –
அவன் –என்று பிரசங்கித்தார் -முதல் பாட்டில் —அங்கு பிரஸ்துதமான-திவ்யாத்ம ஸ்வரூபம் –
ஹேய பிரத்ய நீகதையாலும் -கல்யாணகுணகதா நதையாலும் சேதன அசேதன விலஷணமாய் இருக்கும் என்று
அந்த ஸ்வரூபத்தை அனுபவிக்கிறார் இப்பாட்டில் –

குணம் -ஸ்வரூபம் -விபூதி -இவர் அருளிச் செய்த வரிசை -அனுபவத்தின் படி –
வேதம் ஸ்வரூபம் சொல்லி -பாடம் படிக்கும் படி அது சொல்ல -காரண ரூபமான ப்ரஹ்மத்தை தெரிய வைக்க கார்யங்களை விளக்க வேதம்
புத்தி ஆரோஹன க்ரமம்–ஆத்மாவை விளக்கி ஸ்ரீ கீதை -போலே
ப்ரஹ்மவிதப் ஆப்யோனி -ஸ்வரூபம் –ஆகாசாத் வாயு –விபூதி -ஆனந்தமயன் -குணம் –

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

அநந்தரம் –யவன் -ஸ்வரூப- ஸ்வ இதர வை லஷண்யம்
மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் அகம் -மனத்தில் -ஏழாம் வேற்றுமை –
-மலம் அற -மலம் -காம க்ரோதாதிகள் -கழிய –அற அற கழியக் கழிய என்றவாறு –
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
மலர் -அத்தாலே மலர்ந்து
மிசை மேல் நோக்கி மேலே எழு தரும் மனம்-சுத்த அந்த கரணம்
யுணர்வு -மானஸ ஞானம்- யோக ஞானம் –ஆத்மா நோக்கி திருப்பி -அறிந்து -சுத்த மனத்தாலே உணரப்படும்
அளவுஆத்மா –
இலன் – அப்படிப்பட்ட ஆத்மா அல்லன் -அப்படி -மனசால் உணர முடியாதவன் -ஆத்மாவைக் காட்டிலும் வேறு பட்டவன் –சேதன விலஷணன் –
பொறி உணர்வு அவை இலன் -பாஹ்ய இந்த்ரிய ஞானங்கள் தன் மேல் தட்டாதே –
அசித் வைலஷண்யம் –
-ச்தைரே ஹிமவான் -நிகர் சொல்லிற்று அங்கே
இனன்-உயிரான சொல் –சேதன அசேதன வி லஷணன்
இவனே எனன் உயிர் -என்று முடிக்கிறார்-
கிரியா பதம் -தொழுது எழு -என்று முதல் பாசுரத்தில் கொண்டு முடிக்க வேண்டும் -10 பாசுரங்களுக்கும் -கூட்டி அந்வயம்
உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் -இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே
அவர் யார் -என்ன –முழு உணர் முழு நலம் -ஹார மத்திய மணி நியாயம்
கட்டடங்க ஞான ஆனந்த ஸ்வரூபன் -ஞானானந்த நிரூபணன்
எதிர் -பவிஷ்யத்
நிகழ்– வர்த்தமான
கழிவு -பூத காலத்திலும்
இனன் இலன் -இனத்து இருப்பாரை இல்லாதவன் சமமானவர் இல்லாதவன்
மிகுநர்-உயர்ந்தவர் -மிகுநரை இலன் -மிக்கார் இலன் –
என் உயிர் எனன் உயிர் -பாத பூர்த்திக்காக –
சோதக வாக்யங்கள் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
சத்யம்= நித்யம் -ஞானம் =முழு உணர்வு -அநந்தம் =த்ரிவித பரிச்சேத ரஹித்வம் -லஷணம் — -நந்தா -விளக்கே- அளத்தற்கு அரியாய் -திரு மணி மாடக் கூடல் -பாசுரம்
இனன் -என்று இங்கே அருளிச் செய்கிறார் -ஸ்வரூபம் ஸ்வ பாவம் இரண்டாலும் நித்யம் -சேதன அசேதன வியாவ்ருத்தன் -விலஷணன் –
அசங்குசிதமான ஞானானந்த -குறைவற்ற -உணர் முழு நலம் -சங்கோச ப்ரஸ்துதம் இல்லாமலே -முழு -உணர்வு முழு நலம்
எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன்— மிகு நரையிலனே -அநந்தம் –
பன்னீராயிரப்படியில் மட்டும் இப்படி விளக்கம் அருளி உள்ளார் –

மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணரளவிலன் –
ஜீவாத்மா ஸ்வரூபத்தில் பகவத் ஸ்வரூபம் விலஷணம்-என்கிறார் –
ஆனால் மனனகம் -என்று தொடங்கிச் சொல்லுகிற இதுக்கு கருத்து என் என்னில் –
ஸ்வரூப வைலஷண்யத்தை அனுபவிக்கிற இவருடைய பிரதிபத்தி க்ரமம்-இருக்கிறபடி –மனன் -என்றது -மனம் -என்றபடி –
அகம் -நிரவவயமாய் இருக்கிற மனஸ்ஸூ க்கு ஓர் உள்ளும் புறம்பும் இல்லாமையாலே –மனனகம் -என்றது -மனசிலே -என்றபடி –
அன்றியே –
பராகர்த்த விஷயமாயும் -பிரத்யகர்த்த விஷயமாயும் போருகையாலே -பராகர்த்தத்தைத் தவிர்ந்து –
பிரத்யகர்த்த விஷயமானத்தை அகம் -என்கிறது ஆகவுமாம்-உட் பொருளிலே செல்லும் மனம் என்றபடி –

கொண்டை —கோதை –தேன் உலாவு -கூனி -அலங்க்ருத சிறைச்சேதம் -அது போலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லி இலன் –
பர ஸ்வரூப வை லஷண்யம் -புத்தி ஆரோஹா க்ரமம் -பரி சுத்த மனஸ் -அதால் பற்றத் தகும் ஆத்மா -அதில் விலஷணன்
முன் பாசுரம் –என் மனனே -சேதன சமாதியால் –இங்கு மனம் அசேதனம் -காட்டி அருளுகிறார்
மனஸ் -சூஷ்மம் -உள்ளும் புறம்பும் இல்லையே மனத்துக்கு அகம் -மனத்தில் என்றவாறு
அக மனம் -அகம் -அஹம் –ஆத்ம லஷணம் -ஆத்மாவை உணர்த்தும் மனம் -பராக் அர்த்தம் வெளி விஷயம் -பிரத்யக் -ஆத்மா விஷயம் -229-5-
அஹம் அர்த்த க்ரஹணம் -ஈடு பட்டு இருக்கும் மனம் –

மலமற –
மனனகத்தில் உண்டான மலங்கள் -உண்டு –அவித்யாதிகள் -அவையாவன –
காம க்ரோதச்ச லோபச்ச ஹர்ஷ மாநமதா குணா விஷாதச் சாஷ்டம ப்ரோக்த இத்யேத மநஸோ மலா –என்று
ஆத்ம ஸ்வரூபமும் நித்யமாய் -ஜ்ஞானமும் நித்யம் ஆகையாலே -இத் தோஷம் ஸ்வரூப கதமுமல்ல =ஆத்மகதமும் இல்லை – -ஜ்ஞான கதமுமல்ல
மனத்தின் குற்றமே –
ஆத்மாவினுடைய தர்மபூத ஜ்ஞானதிற்கு உதய அச்த்மதய வ்யவஹாரம் பண்ணுகிறது -ஜ்ஞான ப்ரஸ்ருதி த்வாரத்தைப் பற்ற வாயிற்று –
ஆக –ஜ்ஞான ப்ரஸ்ருதி த்வாரமான மனசைப் பற்றிக் கிடக்கிற தோஷமானது
யோக சாஸ்த்ரத்திலே சொல்லுகிற கிரமத்திலே பாஹ்ய விஷய பிரவணமான நெஞ்சை பிரத்யக் விஷயமாக்கி
-யம நியமாதி -யமம் -நியமம் -ஆசனம் -ப்ராணாயாம் பிரத்யாகாராம் தாரணை தியானம் சமாதி –
அஷ்ட அங்கங்கள் – க்ரமத்தாலே அனுசந்திக்கப் புக்கவாறே கழியக் கடவது –

மலம் –அவித்யாதிகள் -காமம் குரோதம் லோபம் ஹர்ஷம் மதம் விஷாதம் -பதட்டம் -கர்மம் வாசனை ருசிகள் –
மனத்தில் இருக்கும் அழுக்கு-ஞானம் ஆத்மா நித்யம் -அழுக்கு இருக்கு கழியும் என்றால் -வைகல்யம் குறைபாடு வருமே
ஞான உதய வியவஹாரம் -அச்தம்ய வியவஹாரம் -பேச்சு வழக்கு -இதுவும் மனசால் -ப்ரஸ்ருதி த்வாரம் -பற்ற வாயிற்று –
ஓட்டை வழியே ஞானம் பரவுமோ -ஆத்ம ஞானம் -மனசின் வழியே புலன்களுக்கு போகுமே –
இந்த்ரியம் -மனம் -இவற்றாலே கர்மம் -வாசனை -ருசிகள்-
என்னமா மனசில் ஞானம் ஓடுகிறது -பாஹ்ய விஷயங்களில் -உள்ளேயே போக முயல வேண்டுமே –
பிரத்யக் ஆத்மா விஷயம் ஆக்கி –
அவித்யாதி -அஹங்கார மமகாரங்கள் -மதி விசேஷம் -புத்தி -வாசனை ருசி ஞான அவஸ்தா விசேஷம் -ஆத்மாகதம் ஞானகதம் ஆகுமே
சம்பந்தம் தொடர்பின் படி பார்த்தால் சரி -பாதிக்கப் பட்டது மனஸ் தானே – அதனால் தத்கதம் –
ஆத்மகுணங்களுக்கு தோஷமாக தட்டு என் -ஆத்ம ஸ்வரூபம் வைகல்யம் குறை -விகல -குறைபாடு
ஆத்மா ஞானம் இரண்டுமே நித்யம் –
மனஸ் மேலே ஏற்றலாமோ –போம் பழி எல்லாம் அமணன் தலையோடு போம் –கூனே சிதைய -உண்டை வில் –தெறித்தாய் கோவிந்தா –
அழுக்கு மனசில் -மனஸ் தான் தடுக்கும் -கரண தோஷத்வாத்- பிரதிபந்தகத்வம் -தடுப்பு -காரணம் –
தர்ம பூத ஞானம் உதய அஸ்தமனத்துக்கு காரணம் மனஸ் என்றவாறே –
யமம் –நியமம் -ஆசனம் -பிராணாயாமம் -வெளிப்படை –பிரத்தியாகாரம் தாரணம் உள் நோக்கி
யமம் 1–பிராமசர்யம் -2அஹிம்சை -3-சத்யா -4-அச்தேயே திருடாமல் -5-அபரிக்ரகான் வீட்டு விடுதல்
1-ஸ்வாத்யாய -2-சௌஜம் 3-சந்தோஷம் 4-தபஸ்-5- புலன் அடக்கம் நியமம்
ஆசனம் – ஸ்வஸ்திகம் -மயூரம் கூர்மாசனம் –கோமுகாசானம் பத்மாசனம் -த்யான யோகா சரீர ஸ்திதி
பிராணாயாமம் – த்ரிவித -1-ரேசகம் -2-பூரகம் -3-கும்பகம்
பிரத்யாகாரம் -ஓடும் மனசை இழுத்து ஆத்மாவில் செலுத்தி -சித்தம் அடக்கியே யோகம் -பித்தளை ஹாடகம் பித்தலாட்டம் –
தாரணம் -புருஷோத்தமன் இடம் -சலனம் இல்லா மனஸ் –சுபாஸ்ரைய
த்யானம் நிரந்தர தைலதாராவத் அவிச்சின்ன –-சமாதி தத் ஸ்வரூப க்ரஹணம் -அஷ்டாங்க யோகம்
த்யானம் பஞ்ச விதம் 1-அஸ்த்ர பூஷணம் /2 -இல்லாமல்/ 3-அங்க 4-பிரத்யங்க விதுர பிரதான /5-அவயவி தியானம் -ஸ்வரூபம் –
தச்யைவ-கல்பனா ஹீனம் -கல்பனை விட்டு ஸ்வரூபம் பிடி -நிர்குண -நிர்விக்ரஹ வாதிகள் இத்தைப் பிடிக்க-ஸ்வரூப குணத்தில் நெஞ்சை செலுத்த -இத்தைச் சொல்லுகிறது

அற-என்றது
அறவற -என்றபடி
அநந்தரம் –
மலர் -விகசிதமாய்–விஷய அவகாஹன உன்முகனாய்
மிசை -மேல் நோக்கி –ஆனந்த -ஞான -ஸூ ஷ்ம-பிரகாந்தார
எழுதரும் -கொழுந்து விட்டு மேல் மேல் எனக் கிளரா நின்றுள்ள

மனன் உணர்வுண்டு –மானஸ ஜ்ஞானம்
இப்படி விகசிதமாகக் கொழுந்து விட்டு மேல் மேல் எனக் கிளரா நின்றுள்ள மானஸ ஜ்ஞான கம்யமாய் இருக்கும் -ஆத்மா –
அளவிலன் –-அதின் அளவல்லன் ஈஸ்வரன்
மானஸ ஜ்ஞான கம்யமாய் இருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபம் -பகவத் ஸ்வரூபம் அங்கன் இராது என்றதுக்கு கருத்து என் என்னில்
ஏகேந்த்ரிய கிராஹ்யத்வமும் இல்லை -என்கை –ஒரு கருவியால் கிரஹிக்கப்படும் தன்மை இல்லை –
பொன்னுக்கும் கரிக்கும் அத்யந்தம் வைஷம்யம் உண்டாய் இருக்கச் செய்தே க்ரஹிக்கைக்கு சாமக்ரி ஒன்றாய் இருக்கும் இ றே
அப்படி ஏக பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை -என்கை –
ஆனால் மநஸா து விசுத்தேன-என்று பரிசுத்தமான அந்த கரணத்தாலே கிரஹிக்கலாம் என்னா நின்றது இ றே அத்தோடு விரோதியாதோ வென்னில்
நேதி நேதி -என்று கிரஹிக்கும் அத்தனை அல்லது ஈத்ருக்த்தயா இயத்தையா பரிச்சேதித்து க்ரஹிக்கப் போகாது என்கை
முதலிலே ஞான விஷயம் அன்று என்னில் துச்சத்வம் வரும் இ றே-
அணு த்ரவ்யத்தை கிரஹிக்குமா போலே விபுத்ரவ்யத்தைக் கிரஹிக்கப் போகாது என்கை-

மனசுக்கு சுத்தி -விவேகாதி சாதனா சப்தகம் -விவேகம் -விமோக- அப்யாசம்- கிரியா கல்யாண -லகு பூர்வகம் லகு சித்தாந்தம்
சுத்தமான மனசால் ப்ரஹ்மம் காணலாம் –என்ன வென்று பார்க்கலாம் -நேதி நேதி -என்று கிரஹிக்கும் -அத்தனை அளவே –
இப்படி -என்றும் இவ்வளவு மட்டும் இல்லை -இப்படி பட்டவன் இல்லை பரிச்சேதித்து க்ரஹிக்க முடியாதே
கிரஹிக்க முடியாது புத்திக்கு அப்பால் பட்டது -என்றே க்ரஹிக்கலாம் அப்ரமேயம் -அறிவனே ப்ரஹ்ம ஜ்ஞானம் -யஸ்ய மதம் -இத்யாதி –
-இதி ந –இதி ந -இரண்டு –ஆதேசம் -நியந்தா -ஈசான சமர்த்தன் ஆணை இட்டு நியமிக்கும் ப்ரஹ்மம் –
-சொல்லால் சொல்லப்படும் ப்ரஹ்ம -இல்லை என்று தெரிந்து கொள் எனபது இல்லை இப்படிப்பட்டவன் என்று சொல்ல முடியாது என்றவாறு
கால தேச வஸ்து பரிச்சேத்ய ராஹித்யன் -இவ்வளவு மட்டும் அல்லன் -இப்படிப்பட்ட பொருளைப் போலவும் அல்லன்

பொறி உணர்வு யவை இலன் –
பொறி -என்று சஷூராதி கரணங்கள்-அவற்றால் அறியப்படும் பதார்த்தங்களின் படி அல்லன் –
யமாத்ம ந வேத யம் பிருதிவி ந வேத -என்கிறபடியே –
இவ்வோபாதி ஜீவாத்ம ஸ்வரூபத்தில் விலஷணன் என்றதும் என்கை –
ஜாத்யந்தன் பதார்த்த தர்சனம் பண்ணிற்றிலன் என்பதுவும் -கண்ணில் வைசத்யமுடையவனும் கண்டிலன் என்பதும் -காணாமை இருவருக்கும் ஒக்கும் இ றே –
அப்படியே அசித் விலஷணன் என்றவோவாதி சித் விலஷணன் என்றதவும் என்கைக்காகச் சொல்கிறது –
எனக்கும் பல ஜன்மம் உனக்கு போலே -சீதை போலே நானும் மீன் போலே பிரியேன் -சொல்லிக் கொள்வது போலே –
அறிவுடைமை பொது ஜீவாத்மாவுக்கும் பரமாத்வுக்கும் –மின் மினி சூரியன் -தேஜஸ் பொது ஈ கருடன் -இறகு பொதுவானாலும் வாசி உண்டே
ஜீவனுக்கும் அசேதனுக்கும் வாசி இல்லை அவனைப் பார்த்தால் -அனைத்தும் சொத்து -தானே
பிறவிக் குருடன் கண் பார்வை இழந்தவனுக்கும் சமம் என்றவாறு –உபதேச பரமாக சங்கைகள் அனைத்தும் போக்கி அருளுகிறார்
திருஷ்டாந்தம் ஆக்குகிறார் அசித் விலஷணம் -பர உபதேச கர்ப்பமாய் இருக்கும் -பண்ணுவது ஸ்வ அனுபவம் தானே

இப்படி உபய விலஷணனாய் இருக்குமேயாகில் அவனைப் பிரதிபத்தி பண்ணும் படி என் என்னில்
இனன் –
ஏவம் விதன்-என்னும் இத்தனை – –உக்தத்தை சொல்லவுமாம் -வஹ்யமாணத்தைச் –சொல்லப் போவதை சொல்லவுமாம்
எப்படிப்பட்டவன் என்னில் –

உணர் முழு நலம் –
உணர்வு -என்று ஜ்ஞானம் —நலம் என்று ஆனந்தம் –முழு -என்று இரண்டு இடத்திலும்
கட்டடங்க ஞானமுமாய் கட்டடங்க ஆனந்தமுமாய் இருக்கும்
இத்தால் ஸ்வரூபத்தில் அப்ரகாசமாயாதல் –அனநுகூலமாயாதல்-இருக்கும் இடம் இல்லை -என்கை
அன்றிக்கே –
ஆனந்தம் ஆகிறதும் ஞான விசேஷம் ஆகையாலும் ஆனந்தத்தைச் சொன்ன போதே ஜ்ஞானத்தையும் சொல்லிற்றாய் வரும் இ றே
புனர் உகத தோஷம் வாராது
ஆகையால் –இனன் உணர் முழு நலம் –
நேர் கொடு நேர் தன்னை அறியப் போகாமையாலே -என்றும் ஒக்க -இனனாலே -உபமானத்தாலே -அறியப் படுமவனான முழு நலமாய் இருக்கும்
யதா சைவந்தவகன -என்கிறபடி நிரதிசய ஆனந்த மயமாய் இருக்கும்
ஆனந்தோ ப்ரஹ்ம -என்றும் ஆனந்த மய-என்றும் சொல்லக் கடவது இ றே –

இத்தால் ஆனந்தம் ஞானம் இல்லாமல் இருக்கலாம் -பற்று இல்லாதவன் அனுகூல ஞானம் வந்தாலும் ஆனந்தம் கொள்ளாமால் இருக்கலாம்
-அதவா-இனன் உணர் -இப்படி பட்டவன் என்று அறியும் முழு நலம் -ஆனந்தம் என்றபடி -உப்புக்கட்டி போலே உள்ளும் புறமும் ஆனந்தம் –
கடி சேர் நாற்றத் துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை சேர் ஓடியா இன்பப் பெருமையோன் உணர்வில் உம்பர் ஒருவனே –8-8-2-
கடி நாற்றம் -மணம் –பூவில் கந்தத்தையும் -ஆலை -மதுவில் ரசம் -சுவை -அல்ப அஸ்த்ரத்வாதி குறைகளை நீக்கி
துன்பம் கழிந்த இன்பம் — சேர்த்து பார்த்தால் சிறிது ஒக்கும்
கொள்கின்ற -கோள் இருளை —அன்று மாயன் -குழல் –அக்கார கனி -அபூத உவமை -சக்கரை விதை தேன் நீர் மரம் பழுத்து பலம்
உவமானத்தால் அறியலாம் என்பதை இனன் உணர் -என்கிறார் -தன்னையே இழிந்து அறியப் போகாதே -பூர்வ யோஜனையே சிறந்தது என்பர் –

எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் -பூத பவ்ய பவத் பிரபு -முக்காலத்தில் உள்ளாருக்கும் ஈசன்-
காலத்ரயத்தாலும் இனன் உண்டு -ஒப்பு -அது இல்லாதவன் –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயமே யாயிற்று நம் தர்சனத்துக்கு உள்ளவை –
அதில் சித் அசித் விலஷணம் முன்பே சொல்லிற்று
இங்கு சொல்லிற்றாகிறது என் என்னில்
திரள் ஒப்பு இல்லையாகில் ஒரு வகையாலே தான் ஒப்பு உண்டோ என்னில் -அதுவும் இல்லை என்கிறது -என்று நிர்வஹிப்பாரும் உண்டு
அங்கன் அன்றிக்கே
பட்டர் -சாதர்ம்ய திருஷ்டாந்தம் -ஒத்த தர்மங்கள் உடைய பொருள்கள் -இல்லை என்றது முன்பு –வைதர்ம்ய திருஷ்டாந்தம் -வேறு பட்ட தர்மங்களை உடைய பொருள்கள் -இல்லை என்கிறது இங்கு -என்று
வைதர்ம்ய திருஷ்டாந்தத்துக்கு உதாஹரணம்
ந பரேஷூ மஹௌ ஜசச் சலாதப குர்வந்தி மலிம்லுசா இவ -சிறந்த வீரர்கள் விரோதி விஷயத்தில் திருடர்கள் போன்று வஞ்சனை செய்ய மாட்டார்கள் –

ஈத்ருசன்-அப்படிப்பட்டவன் -உப்புக்கட்டி போலே -கீத்ருசன் -எப்படிப்பட்டவன் சொல்ல முடியாது -வெல்லக்கட்டி போலவும் உண்டே -சர்வ ரஸா சர்வ கந்த -சாதர்மம் உப்புக்கட்டி
தாத்ருசன் -அப்படி பட்டவன் -ஆகாசவத் சர்வகத நித்யா -எங்கும் நிறைந்து
ஸூ சதுர்தச ‘-நல்ல உபமானம் இருப்பவன் -வைதர்ம்ய திருஷ்டாந்த சூன்யன்
சிறந்த வீரர்கள் விரோதி விஷயத்தில் திருடர்கள் போன்று வஞ்சனை செய்ய மாட்டார்கள் –
வீரர்கள் -திருடர்கள் -வஞ்சனை அறிந்தால் சொல்லலாம்
-வி சதுர்சன் -உபமானம் இல்லா -மானம் இல்லா பன்றியாம் -உபமானம் அபிமானம் இல்லை
துஷ்ட கள்ளன் ஐஸ்வர்யம் பெற்றால் எப்படி பர ஹிம்சை பண்ணுவானோ மகா தேஜச்விகள் பலம் இருந்தால் நன்மை செய்வார்கள் என்றவாறு –

எனன் உயிர் -எனன் உயிர் -என் உயிர் என்றவாறு
இப்படி இருகிறவன் எனக்கு தாரகன் –யச்யாத்மா சரீரம் -என்கிறபடி -இத்தத் தனக்கு சரீரமாகக் கொண்டு –
தான் சரீரியாய் -தாரகனாய் இருக்கும் என்னும் அர்த்தமும் சொல்ல வேண்டுவது ஓன்று இ றே -யோகி ஹிருதயத் த்யான கம்யம் -அந்தர்யாமி -இரண்டு வகை -ஸ்ரீ லஷ்மி விசிஷ்டன் -விசேஷ வியாப்தி-அசேதனம் உள்ளும் இருக்கிறார் -ஆட்சி செய்வதை புரிந்து கொள்ள வேண்டும் –

மிகுநரையிலனே –
மிக்காரை உடையன் அல்லன் –
தான் ஜீவாத்மாவை சரீரமாகக் கொண்டு -தாரகனாய் நியமகனாய் இருக்குமா போலே –
தன்னையும் நியமிக்கக் கடவதொரு வஸ்த்வந்தரம் உண்டோ வென்னில் –
தனக்கு மேற்பட்டாரை உடையான் அல்லன் —
ந தத் சமச்ச அப்யதிகச்ச த்ருச்யதே -என்னுமா போலே –

திலே தைலம் எள்ளுக்குள் எண்ணெய்-பலம் அவனே -கரந்த பாலுக்குள் நெய் போலே –
ஒத்தார் மிக்காய இலையாய மா மாயன் –
கார்யம் -சரீரம் கரணம் -இந்த்ரியம் -இல்லை -அது கொண்டு வியாபரிப்பது இல்லை என்றவாறு
-இதுக்கு அதீனம் இல்லை சங்கல்பத்தாலே சிருஷ்டியே ந தஸ்ய கார்யம் –

மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணர்வு அளவிலன்-பொறி உணர்வு யவை இலன் –
-எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் -மிகுநிரையிலன் -உணர் முழு நலம் -இனன் எனன் உயிர் -என்று அந்வயம்
அன்றிக்கே
என் உயிரானவன் துயர் அடி தொழுது எழு என் மனனே -என்று கீழ்ப் பாட்டோடு அந்வயம் –

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: