பகவத் விஷயம் காலஷேபம் -27- திருவாய்மொழி – -1-1-1-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

ஸ்ரீ காஞ்சி தேவ பெருமாள் – பிரதம சதகே வீஷித தேவராஜன்
ச குணம் -விபூதி மான் -விக்ரஹ விசிஷ்டன் -குண விசிஷ்டன் —
நால் சீர் நாலடி கலி விருத்தம் பாசுரங்கள்

ஆறாயிரப்படி அவதாரிகை

அப்ராக்ருத ஸுவ அசாதாரண திவ்ய ரூப பூஷண ஆயுத மகிஷிகள் பரிஜனம் ஸ்தான விசிஷ்டன் –
நிகில ஜகத் உதயம் விபவம் லயம் லீலனாய் -பரம் புருஷனை -உள்ளபடியே தம் திரு உள்ளத்திலே அனுபவித்து –
அவன் காட்டக் கண்டு -அவ்வனுபவ ஜனித நிரவதிக ப்ரீதியாலே பேசுகிறார்

ஒன்பதினாயிரப்படி அவதாரிகை

முதல் பாட்டுக்கு கருத்து
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணாத் மகனாய்
அக்குணங்களுக்கும் நிறம் கொடுக்க வற்றான திவ்ய தேக யுக்தனாய்
ஸ்ரீ யபதியாய் -இந்த சௌந்த்ர்யாதிகளுக்கு போக்தாக்களான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் இருந்து வைத்து
தன்னுடைய நிரவதிக கிருபையாலே என்னுடைய தோஷாகரத்வத்தைப் பாராதே என்னுடைய அஜ்ஞ்ஞானம் எல்லாம் நீங்கும் படியாக
ஸ்வ விஷய பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை நிர்ஹேதுகமாக சாதரனாய் கொண்டு தந்து அருளினான்
ஆனபின்பு அவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவிப்போம் என்று திரு உள்ளத்தோடு கூட எம்பெருமானுக்கு அடிமை செய்கையிலே பிரவ்ருத்தர் ஆகிறார்
இத்தால் பிரபந்த ஆரம்பத்திலே வஸ்து நிர்தேச நமஸ்காரங்களும் பண்ணப் பட்டனவாய் விழுந்தது

பன்னீராயிரப்படி அவதாரிகை
இத் திருவாய் மொழிக்கு சங்கக்ரஹமான இப்பாசுரத்தில்
பரத்வ-பிரதான உபபாதகமான நிரவதிக கல்யாண குண யோகத்தையும் -நிர்ஹேதுக உபகாரத்வத்தையும் -நித்ய ஸூ ரி நிர்வாஹகத்வத்தையும்
நித்ய மங்கள விக்ரஹ -யோகத்தையும் உடைய சர்வேஸ்வரன் திருவடிகளில் நிரந்தர சேஷ விருத்தியைப் பண்ணு என்று தன் நெஞ்சை நியோகிக்கிறார் –

இருபத்து நாலாயிரப்படி அவதாரிகை

ஸ்ரீ யபதியாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -அக்குணங்களுக்கு பிரகாசகமான திவ்ய விக்ரஹத்தை யுடையனாய் –
அவற்றை அனுபவிக்கும் நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற இருப்பைத் தன்னுடைய நிர்ஹேதுக கிருபையினால்
அனுபவ யோக்யமாம் படி நமக்கு பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தந்து அருளினான்
அவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவிக்கப் பார் என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அனுசாசிக்கிறார்-ஆணையிடுகிறார் –

ஈட்டு அவதாரிகை –

1-ஸ்ரீ யபதி தான் சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான் —
2-அக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாய் இருக்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைக் காட்டி உபகரித்தான் –
இப் பேற்றுக்கு என் பக்கல் சொல்லலாவது ஒன்றும் இன்றிக்கே இருக்க –நிர்ஹேதுகமாக தானே உபகாரகன் ஆனான் –
3-ஸ்வ ஸ்வரூபாபன்னராய் -அபஹத பாப்மாதி குணங்களில் சாம்யம் கொண்டு –இருக்கிறவர்களுக்கும் அவ்வருகாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான் —
4-தன்னுடைய திவ்ய விக்ரஹ வைலஷண்யத்தைக் காட்டி உபகரித்தான் -என்று -அவன் பண்ணி அருளிய உபகாரங்களை அடையச் சொல்லி-அருளினான் என்பதை கூட்டிப் பொருள் சொல்லி அருளி-ப்ரீதி க்கு ஹேதுவான – உபகார -பரம்பரைகளை அருளிச் செய்கிறார் -அனுபவ பரிவாஹமே பிரபந்தம் –
இப்படி உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கப் பாராய் -என்று தம் திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –

அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -என்னுமா போலே இளைய பெருமாளை -நீர் இவர்க்கு என்னாவீர் என்ன
பெருமாளும் ஒரு படி நினைத்து இருப்பர் -நானும் ஒரு படி நினைத்து இருப்பேன் -என்றார் –
அவர் நினைத்து இருக்கும் படி என் -நீர் நினைத்து இருக்கும் படி என் -என்ன
அவர் தம் பின் பிறந்தவன் என்று இருப்பர் -நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனே இருப்பன் -என்றார் இறே
அப்படியே இவரும்-உயர்வற உயர்நலம் உடையவன் துயரறு சுடர் அடி தொழுது எழப் பாராய் நெஞ்சே -என்கிறார்

இவர் தாம் முற்பட குணங்களிலே இழிவான் என் என்னில் -தாம் அகப்பட்ட துறை அதுவாகையாலே
இவரை குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது –

உபகார பரம்பரைகளை அனுசந்தித்தும் -அருளினன் -எல்லா வற்றிலும் சேர்த்து -குணங்களுக்குத் தோற்றும் -நெஞ்சே தொழுது எழு-
வாக் ஏக யோஜனை -வாக்ய பேத யோஜனை -இரண்டும் கொள்ளலாம் –
உஜ்ஜீவனம் -நான் அடைய நெஞ்சே நீ துணை வேண்டுமே -முன்புற்ற நெஞ்சே -நல்லை நல்லை நெஞ்சே –
தொழுது எழு -கைங்கர்யம் ப்ரீதி உந்த -குணானுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
ப்ரீதிக்கு ஹேதுவான -உபகார பரம்பரைகள் அனுசந்திக்க வேண்டுமே –
பிரபந்தமே அனுபவ பரிவாஹம் -அந்த அனுபவமே ப்ரீதி -அதற்கு அருளினான் –
கருணை -குணம் -இவற்றால் நமக்கு ஏற்றம் -பகவத் விஷயத்தில் அவனால் குணங்களுக்கு வைபவம் -விபர்யச்தம்-மாறி இருக்குமே
-ஸூபீ பூதம் ஸூ பத்வம்-உன்னுடன் சேர்ந்து குணங்கள் சுபம் அடையுமே –
ஹேமாரவிந்த பரிமளம் -பொற்றாமரை மணம்-மணம் பொற்றாமாரையால் சிறப்பு பெறுமே-உபகாரத்துக்கு தோற்றால் –
பூயோ நம-ஆளவந்தார் – -தாம் தொழாமல் நெஞ்சை கூப்பிடுவது பரீத் யதிசயத்தால் -உசாவ ஆள் தேட
–இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே யாரும் கிடைக்காமல் திரு உள்ளத்தை கூப்பிடுகிறார்-நிற்க முடியாது -விழுந்திடு என்கிறார் -ஸூ ஷ்மம்-அலை வரும் பொழுது குனிந்து நீர் வஞ்சிக் கொடி-குனிந்து பிழைத்ததை கண்டார் –

ஆறு கிண்ணகம் எடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறியுண்டு போய் கடலிலே புகும் -நீர் வஞ்சி தொடக்கமானவை வளைந்து பிழைக்கும் –
அது போலே பகவத் குணங்களினுடைய எடுப்பு இருந்தபடி கண்டோமுக்கு எதிரே நான் என்று பிழைக்க விரகு இல்லை –
அவன் திருவடிகளிலே தலை சாய்த்து பிழைக்க வாராய் -நெஞ்சே -என்கிறார் –
உயர்வற உயர்நலம் உடையவன் துயரறு சுடரடி தொழுது எழப் பாராய் நெஞ்சே -என்கிறார் –

தொழுதால் எல்லாம் – தொழா விடில் விழுவோம் -குண வெள்ளம் -ஸ்வா தந்திர வெள்ளம் –
வாக்ய பேத நிர்வாஹம் -உயர்வற உயர்நலம் உடையவன் யாரோ அவன் -துயரறு சுடரடி தொழுது எழப் பாராய் நெஞ்சே -என்கிறார் –
வாக்மே ஸ்ரீ மன் -சொல்லின் செல்வன் -திருவடி பேச்சைக் கேட்டதும் இளைய பெருமாளை பேசச் சொல்லி -தன்னை திருவடியிடம் சொன்ன வார்த்தை
அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத-அஹம் -அஸ்ய அவரோ ப்ராதா –குணைர் தாஸ்யம் உபாகத
-லோக பார்வை -தம் பார்வை –
ராஜ்யாது ப்ரஷ்டா மா சார்த்தம் -பார்யை உடன் -வந்தார் -தந்தை சொல்லால் அவர் –
பார்யையால் அவள் -நீர் எதற்கு வந்தீர் -தம்பி -என்றால் பரத சத்ருக்னன் வந்து இருக்க வேண்டுமே –
குணத்துக்கு தோற்ற அடிமை வந்தேன் என்கிறார்
குணங்கள் ஸ்வரூபம் சார்ந்து இருக்கும் குணவான் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -ஸ்வரூபம் -யவன் சொல்லி ஆரம்பிக்க வேண்டாமோ –
இவர் அகப்பட்ட துறை குணங்கள் -இது வன்றோ
———————

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

உயர்வற -ஆனந்த வல்லி சொல்லும் கணக்கில் அல்லாத உயர்வுகள் அசத் கல்பமாம் படி வாங்மனஸ் கோசரம் இல்லாத
உயர் நலம் உடையவன்-உயர்ந்த ஆனந்தம்
எவன் அவன் -பிரமாண பிரசித்தமானவன் ஒருவன் -யாவன் அவன் -மருவி யவன் அவன்
மயர்வற -சம்சயம் விபர்யயம் -ஐயம் திரிபு-தப்பாக – இல்லாமல் -சரியான முடிவு ஞானம்
மதி நலம் -ஸ்வா பாவிக ஞான பிரேமங்கள்
அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் -மறதியே இல்லாமல் நிரந்தர அனுபவ உக்தர்கள் சேஷி
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –ஸமாச்ரய  துக்க நிரசனமாய் -நிரந்தர ஔஜ்வல்ய –
தொழுது-பக்தாஞ்சலி சேஷத்வ அநுரூப வ்ருத்தியை பண்ணி –மனசே எழு -மனமே -மகரத்துக்கு நகரம் போலி-
அரும் கலமே -அரும் கலன் -இங்கும் போலி
எழு-நித்ய உச்சராயம் உஜ்ஜீவனம் -அனுசாசித்து அருளினார் –

—————-
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் –
பகவத் ஆனந்தத்தைப் பேசப்புக்க வேதங்கள்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி-ப்ரஹ்ம ஆனந்தத் அளவும் சென்று
பின்னையும் அவ்வருகே உத்ப்ரேஷித்துக் கொண்டு சென்று -பின்னையும் -பரிச்சேதிக்க மாட்டாதே
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்டவன இறே –
இது ஆனந்த குணம் ஒன்றிலுமே இறே –
குணங்கள் எல்லாம் இப்படியே இறே இருப்பது -இக் குணங்கள் எல்லாம் தமக்கு நிலமாய் பேசுகிறாரே இவர் –

உயர்வுவருத்தம் -உச்சராயம் இரண்டு அர்த்தங்கள் உண்டே
யுவா ஸ்யாத்–பஞ்ச விம்சதி -மாறாமல் -மம பார்த்தா பஞ்ச விம்சதி -ராவணன் இடம் சீதை சொல்லிக் கொள்கிறாள் -எப்பொழுதும் –
யுவா குமார -அரும்பினை அலரை -காளை புகுதக் கனாக் கண்டேன் -கறுப்பையும் காளை பருவத்தையும் மறக்க முடியாதே
12 வருஷம் சாதுவாக அத்யயனம் பண்ணி -சாத்விகன் -ஸூர அத்யயனம் -ஆசிஷ்ட -ஆசீர்வசன பாத்ர பூதன் -அசனசீலத்வம்
-நன்கு உண்டு ஜரித்து -ஆசு தர க்ரியத்வம் -எல்லாம் செய்பவன் -பலிஷ்ட-சரீர மன பலம் உள்ளவன் –
தங்கம் இரு கஜம் ஜகம் நிரம்பி கொடுத்தாலும் -இவ்வளவுதானா சொல்லி சிரிப்பானாம் -நூறு -மடங்கி ஏற்றி மேலே –
கல்பித்து கல்பித்து மேலும் மேலும் –எண் பெருக்கு அந் நலத்து ஈறில வண் புகழ்

உயர்வு -வருத்தம் –
எல்லாருக்கும் உயர்த்தி உண்டாம் போது வருத்தம் உண்டு -அப்படி வருந்த வேணுமோ -என்றால் உயர்வற உயரா நிற்கும்-
யுவ கோடி சகஸ்ராணி விஷ்ணும் ஆராத்யாம் பத்ம பூ –
இத்தைப் பற்ற விறே ஆளவந்தார் –ஸ்வா பாவிக –வருத்தம் கலசாத –என்று அருளிச் செய்த சந்தை –
பகவத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகதமான சர்வ பிரகாரத்தாலும் உண்டான உச்சராயத்தை –உயர்வு -என்கிறது –

அற –
இன்றியிலே ஒழிய -இத்தால் அத்யந்தா பாவத்தைச் -இல்லாமை நிலை -சொல்லுகிறது அன்று -பின்னை என் சொல்லுகிறது என்னில் –
தன்னுடைய உச்சாரத்தையும் இவற்றையும் பார்த்தால் -ஆதித்ய சந்நிதியில் நஷத்ராதிகளைப் போலேயும் –
மேரு சிகரத்தில் நின்றவனுக்கு கீழ் உள்ள சர்ஷ பாதிகள் இருக்குமா போலேயும்
உண்டாய் இருக்கச் செய்தே இல்லை என்னலாம் படி இருக்கை -அல்பி பாவம் –
ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே போலே –
இப்படி அல்லாதவற்றை இல்லை என்னலாம் படி பண்ணினால் தனக்கு ஓர் எல்லை உண்டாய் இருக்குமோ என்னில்

உயர் –
கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும் அவ்வருகாய்க் கொண்டு வாங் மனஸ்ஸூக்களால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி உயரா நிற்கும் —
ஆனால் சர்வேஷா யாந்தா நிசயா பத நாந்தாஸ் சமுச்சரயா சம்யோகா விப்ரயோ காந்தா மரணாந்தஞ்ச ஜீவிதம் -என்கிறபடியே
இருக்கிறதோ என்னில் -அன்று -இயத்தாரா ஹித்யத்தைச் சொன்னபடி –( அளவிட்டுக் கூற இயலாத படி உயர்ந்தே இருக்கும் -)
முடிந்தே ஆகணும் உயர்ந்தால் -செல்வம் -பிறவி -பெருமாள் பரதன் இடம் சொல்லுவது போலே
அது த்ரவ்ய விஷயம் –இது குண விஷயத்தில் -த்ரவ்ய கத உச்சாராயம் -போலே அன்று
இப்படி கரை கட்டாக் காவேரி போலே பரந்து இருந்தால் இப்பரப்பு எல்லாம் -பிரயோஜனமாய் இராதே காடு பட்டு கிடக்குமோ என்னில் –

நலம் –
கண்ட இடம் எங்கும் பயிர் பட்டு இருக்கும் நிலம் போலே எங்கும் ஒக்க உபாதேயமாய் இருக்கும்
நலம் -என்று 1–ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லுதல் -என்னுதல்
2–குண சமூஹத்தை சொல்லுகிறது -என்னுதல்
3–ஆனந்தாவஹமான விபூதியைச் பற்றிச் சொல்லுகிறது -என்னுதல் –உயர்வற உயர் விபூதி உடையவன் இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்-

உயர் குணம் என்னாமல் உயர் நலம் -அது நல்ல குணம் துர்குணம் இரண்டு வகை –அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை ஏக தானன் –
கல்யாண குணங்களுக்கு மட்டுமே இருப்பிடம் -இவனே இருப்புடன் -நலம் என்பதை கல்யாண குணத்தால் –
பிரகாச பிராசுர்யம் ஸூ ர்யன்-இருளே இல்லை -ஸ்ரீ வைஷ்ண பிராசுர்ய கிராமம் நிறைய -அர்த்தம்
-பிரகாச மயம்-துக்க சோக ரஹிதமாய் இருப்பதால் -ஆனந்தாவஹமான விபூதி
உயர்வற உயர் விபூதி உடையவன் இன்புறும் இவ்விளையாட்டு உடையவன் -ருசி வளர்க்க -நமக்கு ஸ்வா தந்த்ர்யம் கொடுத்து –
இது தான் உதாசீனம் –ஈர நெல் விளைவித்து உபகார பரம்பரைகள் பல
சர்வஜ்ஞ்ஞன் சர்வவித் -அன்றோ -ஜீவா ஸ்வா தந்த்ரம் கர்மம் காரணமாக உதாசீனன்
உயர் நலம் -கண்ட இடம் எங்கும் –நலம் -ஜாத் ஏக வசனம் -குண சமூஹங்கள்-முன்பு ஆனந்தம் -ஆனந்தவல்லி பிரக்ரியை –
நல்ல குணங்களே என்பதால் ஜாத் ஏக வசனம் -ஸ்வரூப ரூபா ஆஸ்ரித சௌகர்ய -ஆஸ்ரித கார்ய உபாதேய -பரதவ சௌலப்ய
அர்ச்சா -சௌந்தர்ய போன்ற -ஏறிட்டுக் கொண்ட பாரதந்த்ர்யம் -போல்வன –
கார்யம் -சப்தத்தால் காரணம் -சொல்லலாமே –ஆனந்தத்துக்கு காரணம் விபூதி என்று கொண்டு மூன்றாவது –

உடையவன் –
இக் குணங்கள் தன்னை அஸ்தி -என்று விடும் அளவன்றிக்கே இவற்றையிட்டு நிரூபிக்க வேண்டும்படியாய் இருக்கும் –
அதாவது ஆகந்துகம் -அன்றிக்கே ஸ்வரூப அநு பந்தியாய் -இருக்கும் -என்றபடி
ஆழ்வான்-பிள்ளை பிள்ளையைப் பார்த்து நிர்க்குணம் என்பார் மிடற்றை பிடித்தாற் போலே –
ஆழ்வார் நலம் உடையவன் -என்றபடி கண்டாயே -என்று பணித்தான்

உள்ளது -சொல்லாமல் –உடையவன் -ஸ்வா பாவிக அநவதிக அதிசய -நித்ய யோகத்தில் மதுப் பிரத்யக அர்த்தம் தமிழில்
-ஸ்ரீ அவனும் பிரிக்க முடியாதது போலே இக்குணங்கள் அஸ்தி- இருக்கும் என்று விடாமல் இவற்றை விட்டு நிரூபிக்க –அப்ருதக் சித்த விசேஷணம்-
இவற்றை இட்டே அவனை நிரூபிக்க -ஆகந்துகம் வந்தேறி இல்லை ஸ்வரூப அனுபந்திகள்
நிர்குணம் -ந-மிடற்றை பிடித்தாரே -ந சப்தத்தால் -பச்சை மா -விக்ரகம் இல்லை என்பாரை மிடற்றை பிடிப்பது போலே -அங்கே
பிள்ளை பிள்ளை ஆள்வான் தான் த்ரிவித கரணங்களாலும் பாகவத அபசாரம் -கூரத் ஆள்வான் இடம் தானாம் கொடுத்தார் –
மானசால் போக வில்லை கூரத் தாழ்வான் வர வெட்கினார் -காயிகம் -தண்டனைக்கு பயந்து -ராமானுஜர் திருவடிகளே சரணம் பிரதிஜ்ஞ்ஞை வாங்கிக் கொண்டாராம்
1-சமஸ்த கல்யாண குணத் மகோசௌ-யாருக்கு ஸ்வ பாவமோ -அவன் குணாத்மகன்-ஆத்ம சப்தம் ஸ்வ பாவ வாசி
கல்யாண -பாவ பிரதானம் -கல்யாணத்வத்தை குணமாக உடையவன் -நல்ல என்ற படி -கல்யாணத்வத்தை
ஸ்வ பாவமாக கொண்டவன் யாரோ -ஆத்ம சப்தம் ஸ்வரூபம் -குணம் ஸ்வ பாவம் -கட்டடடங்க அனுகூலம்
உடையவன் -பஹூ வ்ரீஹி சமாசம் ஔபசாரிகம் பேச்சுக்கு சொன்னது -கல்யாண குணங்களை யுடையவன்
-இந்த ஸ்வ பாவங்களை யுடைய ஸ்வரூபம் –ஸ்வரூபம் உடைய ஸ்வரூபன் சொல்ல முடியாதே -இத்தால் சமஸ்த கல்யாண குணாத் மகோசௌ–இச்சா க்ருஹீத அபிமத உரு –சம்சார அசேஷ ஹிதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –என்றபடி

2-பீஷ்ம பர்வம் -கர்ணன் -பத்தாயிரம் வருஷம் போனாலும் வர்ஷாயுதம் -சங்கு சக்கரம் –விஷ்ணு -ஜிஷ்ணு -குண சமூஹம் பேச முடியாதே-வர்ஷாயுதை -இத்யாதி -என்றும் -கர்ணன் -த்ரௌபதி இடம் சொன்னது -யஸ்ய குணங்களை பேச முடியாதோ –
3-தாரை -நாமி பலத்தால் சுக்ரீவன் -எத்தேவர் வாலாட்டும் -குணாநாம்-ஆகாரம் -இருப்பிடம் -விரோதி குரங்கு வார்த்தை –
கிமர்த்தம் –புண்டரீகாஷன் -யதார்த்தம் அன்றோ -சாதூனாம் -அநந்ய பிரயோஜனர் இளைப்பாறும் நிழல் -நிவாச வ்ருஷ-
ஆபன்னாம் பராம் கதி ஆத்மகாமர்க்கு -இறுதியான கதி -உபாயம் -இறுதியான அடையும் கதி புரிந்து கொள்ளாமல்
-ஆர்த்தாம் சம்ஸ்ரஷ்ட -ஆஸ்ரயம்-ஏக பாஜனம் நூதன ஐஸ்வர் யா காமன் -நால்வரும் பெருமாளைப் பற்ற-நான்கு வாக்கியங்கள் இந்த ஸ்லோகத்தில் –
-அனைவருடைய யசஸ் இவன் இட்ட வழக்காய் இருக்கும் -வாலி பேச தாரை பதில்களை சொல்வதாகவும்-தாதூநாமிவ சைலேந்த்ரோ குணா நாமா கரோ மஹான்-என்றும் -தாரை வாலியிடம் தாதுக்களுக்கு ஹிமவான் இருப்பிடம் போலே குணங்களுக்கு பெருமாள் இருப்பிடம்-
4-அயோத்யா பிரஜைகள் சக்கரவர்த்தி இடம் சொல்லும் ஸ்லோகம் -கிழவனே ஓடிப்போ -குணக்கடல் புத்ரனை பெற்றதே குற்றம் -பஹவோ ந்ருப கல்யாண குண கணா புத்ரச்ய சந்தி தே-என்றும்-

5-ஸ்வா பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண –-ஸ்தோத்ர ரத்னம் -11-இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் சந்தை –ஸ்வா பாவிக -உயர்வற -வந்தேறி இல்லை -அநவதிக -எல்லை அற்ற -உயர் நலம் –
இப்படி குணங்கள் கரை புரண்டு இருந்தால் இக் குணங்களாலே தனக்கு நிறமாம் படி இருக்குமோ திவ்யாத்ம ஸ்வரூபம் என்னில் –அங்கன் இராது –
அஸ் ஸ்வரூபத்தை பற்றி குணங்களுக்கு நிறம் பெற வேண்டும்படி இருக்கும் என்று ஸ்வரூப வைலஷண்யத்தைச் சொல்லுகிறது –

யவன் -என்று –
யதா சைந்தவகந- (உப்புக் கட்டி உள்ளும் வெளியிலும் உப்பாகவே இருப்பது போலே -ஞான மயமாகவே உள்ளவன்) பிரமாண பிரசித்தியைப் பற்ற -யவன்-என்கிறார் –
இத்தால் 1–குண நிரபேஷமான ஸ்வரூப பிரசித்தியைச் சொல்லுதல் -எவன் உயர்வற உயர் நலம் உடையவன் –
2–குண விசிஷ்டமான ஸ்வரூப வைலஷண்யத்தைச் சொல்லுதல் -குண சாபேஷ பஷத்தில்-உயர் நலம் உடையவன் உடையவன் எவன் -அடைவே அந்வயம் –

பரம சேதனனுக்கு உப்புக்கட்டி எடுத்துக்காட்டா -வேத வாக்கியம் -மைத்ரேய பிரச்னம் யாஜ்ஞர்வர்க்கர் சந்நியாசி -உபதேசம் –
அனந்தர-தர்மம் -அந்தரம் அல்ல வெளி -அபாஹ்யா -வெளிக்கு எதிரான உள் -உள்ளும் புறமும் ஆனந்தமயம் –
ஏக ரூபமான ஆத்மவஸ்துக்கு உள்ளும்புறமும் -உள் என்று ஸ்வரூபம் –தர்மிக் ஞானம் -நான் நான் என்று ஒளிவிடும் -ஸ்வயம் பிரகாசம்
புறம் என்று ஸ்வ பாவம் -தர்ம பூத ஞானம் -ஏக ரசம் ஞானமாகவே இருக்கும் -பிற வஸ்துக்களை அறிதல் -ஸ்வச்மை பிரகாசம்
ஏக ரூபத்வம் சொல்ல வந்ததே திருஷ்டாந்தம் –
ஜீவ பர பிரமாணம் பிரகாரி பிரகாரம் -என்பதால் பிரகாரிக்கும் சொன்னதாயிற்று

அவன் –
இதுக்கு அவ்வருகே ஒரு உபகாரத்தைச் சொல்ல நினைத்து -கீழ் நின்ற நிலையை அமைத்து மேலே தோள் படி கொள்ளுகிறார்-ராஜா -கஜாரோஹனம் -சாமந்தரம் தோள்-படிக்கட்டு போலே -உயர்நலம் -இவற்றைச் சொல்லி
-கல்யாண குண யோகம் -ஸ்வரூப வைலஷண்யம் இரண்டையும் சொல்லி-

அந்த உபகாரம் தான் ஏது என்னில்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன் –
மயர்வற –
ஜ்ஞான அநு தயம் -அந்யதா ஜ்ஞானம் -விபரீத ஜ்ஞானம் –என்கிற இவை ச வாசனையோடு போம்படியாக –
ஜ்ஞான அநு தயமாவது –தேஹாத்ம அபிமானம் –
அந்யதா ஜ்ஞானம் ஆவது -தேவதாந்திர சேஷம் என்று இருக்கை –
விபரீத ஜ்ஞானமாவது -ஸ்வ தந்த்ரமாகவும் ஸ்வ போக்யமாகவும் நினைத்து இருக்கிற கேவலனுடைய ஜ்ஞானம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
தம் வாயாலே -மயர்வற -என்று சொல்லலாம் படி கானும் அவன் தான் இவர்க்கு அஜ்ஞ்ஞானத்தை வாசனையோடு போக்கின படி -அர்த்தாத் சித்தம்

என் ஆனந்ததுக்காக நான் கைங்கர்யம் பண்ணி அனுபவிக்கிறேன் -இரண்டு குற்றங்கள் –
பரதந்த்ரனாய் பர போக்யமாகக் கொள்ள வேண்டும்

மதி நலம் –
ஜ்ஞான பக்திகள் இரண்டையும் தந்தான் -என்று நிர்வஹிப்பாரும் உண்டு
அன்றிக்கே —நலமான மதியைத் தந்தான் -என்றாய் -முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பதார்த்தம் போலே -( கருங்காலி மரம் போலே )
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தைத் தந்தான் என்கிறார் -என்று பட்டர் அருளிச் செய்யும் படி -கர்ம ஜ்ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்திலே பகவத் பிரசாதமாய்
அநந்தரம்-கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான பக்தியாயிற்று இவரது —
ஆழ்வார் பிரபன்னரோ -பக்தி நிஷ்டரோ -என்று எம்பாரை சிலர் கேட்க –
ஆழ்வார் பிரபன்னர் -பக்தி இவருக்கு தேக யாத்ரா சேஷம் –என்று அருளிச் செய்தார் -என் போலே என்னில்
நாமும் எல்லாம் பிரபன்னராய் இருக்கச் செய்தே ஆண்டாறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம் கண்ணன் -6-7-1-இ றே இவர்க்கு –

மதியையும் நலத்தையும் -சகாரம் -தருவித்து கொள்ள வேண்டுமே -நலம் -ஏக வசனம் –
சேமுஷீ பக்தி ரூபா -பக்தி வடிவம் அடைந்த ஞானம் -என்பதைக் கொண்டு பக்திரூபாபன்ன –
ஞானம் வந்து தானே பக்தி -இல்லை -கருங்காலி உத்பத்தி -வயிரம் பற்றியே முளைக்கும் –
பிராப்திக்கு முன்னே சித்திக்கும் இவருக்கு —ருசி வளர்க்க -பக்தி வேண்டுமே –தேக யாத்ரா சேஷமாக பக்தி ரூபாபன்ன ஞானம்
தேக யாத்ரை தேக ஜீவனம் -ஆழ்வாருக்கு -அனுபவ கைங்கர்யம் -இதற்கு பக்தி
ஆண்டுக்கும் ஆறு மாசத்துக்கும் பிள்ளை அருளிச் செய்வர் -வடக்குத் திருவீதிப்பிள்ளை ஏடு படுத்துவதால் –இங்கே நம்பிள்ளை யையே குறிக்கும்
தேவ மாத்ருகம் ஒரு பூ விளையும் -ஒரு போகம் -நதி மாத்ருகம் இரண்டு போகம் -ஆறு மாசத்துக்கு -சேமித்து வைப்பார் –
இவரும் பெருமாளைத் தேடுகிறார் -ஆண்டாறு -ஜீவனம் -அனுபவ கைங்கர்யம் -இதுவே பக்தி -பகவத் அனுபவ கைங்கர்யத்துக்கு
இது வேண்டுமே -உண்ணும் சோறு இத்யாதி -இதுவே சங்கதி

அருளினன் –
1–நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
2–எனக்கு அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு நம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே
அருளினன் –
3–இத்தால் அர்த்திக்க வன்றிக்கே-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
தாதுபிரசாதான் மஹிமா நமீசம் -தைத்ரியம் -என்கிறபடியே நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
4–இத்தலையில் நினைவு இன்றிக்கே இருக்க வந்து அருளினவன் –

ஹேது சொல்லப் பட வில்லையே -எனக்கு சொல்லாமல் பொதுவாக -நிர்ஹேதுத்வம் தோன்ற
-அங்கீ கார சாதனம் தம் பக்கலில் இல்லை –உபாசகம் வ்யாவ்ருத்தி
பிரார்திக்காமலே அருளினான் -பிரபத்தியும் தம்மிடம் இல்லை -ரஷ்யம் அபேஷையும் இல்லை –பிரபன்னர் வியாவ்ருத்தி
-பிரபன்ன ஜட கூடஸ்தர் சொல்கிறோமே -இத்தை ஒழியிலும் ஈஸ்வரன் கார்யம் செய்வானே -வஸ்து ஸ்திதி உண்மை – –
-ராக பிராப்தம் அடியாக சரணாகதி செய்கிறோம்
உபாய பிரபத்தி -இத்தை செய்தேன் -அதனால் பெற்றேன் -சாத்யோ உபாயம் நம்மால் சாதிப்பது -சித்தோ உபாயம் -அவன் அனுக்ரகம் –
ஸ்வா தந்த்ரம் -பிறக்குமே நம்மால் பற்றியதால் பெற்றோம் –
பிராப்ய பிரபத்தி -அடுத்த வகை -சிருஷ்டி முகத்தாலே செய்து அருளும் கிருஷி பலன் -தான் அறிந்த சம்பந்தம் ஒன்றே காரணமாக
சித்தோ உபாய ச்வீகாரம்
நம் பக்தியால் பேறு -நம் பிரபத்தியால் பேறு -பெருமாள் திருவடிகள் உபாயம் ஆகும் –மூன்று நிலைகள் –
நான் பிரபத்தி செய்தேன் -நம் முயற்சியும் பிரபத்யே சாத்யோ உபாயம் –
இத்தை ஒழியிலும் -அவன் கார்யம் செய்யும் என்று அருளிச் செய்தாரே –
ஜ்யோதிஷ்ட ஹோமம் செய்து ஸ்வர்க்கம் -சுருதி விதி வாக்கியம் -நம்பி -செய்து அனுஷ்டித்து –பலம் அடைந்து நான்கு நிலைகள் –
பக்தி செய்தால் மோஷம் விதி -விஸ்வாசம் -செய்து -அடைந்தேன் -நான்கு நிலைகளும் வியக்தம்
பிரபத்தி -நாராயணனே ஏவ கதி அவனே உபாயம் -விதி –விஸ்வாசம் அடுத்த நிலை – -த்வய பூர்வார்த்தம் -இதுவே
மூன்றாவது நிலை -என்னது மானஸ வியாபாரம் —பிரார்த்தனா மதி சரணாகதி -நான்காவது பலம் பேறு -அனைத்துக்கும் பொது –
கத்யர்த்தா புத்யர்த்தா -பிரகர்ஷேன பக்தி நம்பிக்கையே பிரபத்தி
விதி -உறுதி -பேறு -மூன்றும் அறிந்தோம் -நடுவில் நிலை என்னது -பெருமாள் கிருபையை பொழிந்தான் -இதுவே –பகவத் கிருபையே உபாயம் இங்கே
-மற்றவற்றில் நாம் செய்தது பலம் கொடுத்தது -சாத்திய சித்த உபாயம் வாசி தெளிவு இங்கே –
அதனால் எனக்கு அருளினன் இல்லாமல் அருளினன் -என்று அருளிச் செய்கிறார் -அசத்சமம் -அருளுக்கு முன்பு
அருள் பெற்ற ஆழ்வார் -தொழுது எழு என் மனனே என்கிறார் -அவஸ்து வஸ்து ஆனேன் -ஆளவந்தார் கிருபையால் -என்றால் போலே –
உபாய பிரபத்தி -பல பிரபத்தி -வாசி உணர வேண்டும் -கிருபை பொழியும் பொழுது அத்தை பெற தகுதி பெற வேண்டுமே
தனக்கு அடிமை -அறியா விடிலும் மாலை மனத்தில் வைத்து காத்து இருக்க வேண்டும் -மழை -ஏரி-திருஷ்டாந்தம்
நாம் செய்வது வியாஜ உபாயம் பிரதான உபாயம் எம்பெருமான் கிருபை தேசிகன் -வியாஜமாகவும் உபாயம் ஆகாது-
அதிகாரி விசேஷணம் போஜனத்துக்கு ஷூத்து போலே தென்னாச்சார்ய சம்ப்ரதாயம் -யோஜனா பேதம் தான் –
காரண விஷயம் இன்னது என்று அறிய மாட்டாத காரணத்தால் -தேசிகன் அருளிச் செய்கிறார் -முனி வாகன போகம் –
நிற்ஹேதுகம் உபாயம் எதிர்பார்க்க வில்லை –ருசியை எதிர்பார்க்கிறார் -இந்த சிறு செயல் -நம்மது -இதுக்கும் சாமக்கிரி அவனது
அத்வேஷம் மாத்ரம் -கிருபையால் சரணாகதி -சரணாகதியால் கிருபை இல்லை -அருளினன் -பின்பே தொழுது எழு –
அருளுக்கு பிரயோஜனம் மட்டுமே சொல்லி அருளுகிறார் அருளினன் –பத சாமர்த்தியம் –பக்த வியாவர்த்தியும்
உபாய பிரபன்ன வியாவர்த்தியும் -அந்ய யோக வியவச்சேதம்-அயோக விவேச்சேதம் நான்கும் உண்டே –
அந்ய யோக -வியவச்சேதம் –இந்த அருள் இவன் ஒருவன் இடமே சேரும் –அயோக வியவச்சேதம் –-பக்தி பெற்றார் அதனால் -தரிக்க மாட்டாமல் அருளினார் -முலைக்கடுப்பால் பீச்சுமா போலே
அகரத்து -சங்கல்பம் இல்லாமல் -அவாப்த சமஸ்த காமன் -தாது பிரசாசாத் -யதா பஸ்யதி-அப்போது அனைத்து
சோகமும் தீருமே –இங்கும் பிரசாதம் முதலில் –

-தன்னருள் கொள்வார் இல்லாதான் ஒருவனோ என்னில் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி –
தான் அருளாத வன்று சத்தை இன்றிக்கே இருப்பாரை ஒரு நாடாக யுடையவன் –
அயர்வாகிறது –விச்ம்ருதி-அது இன்றிக்கே இருப்பவர்கள் –-ப்ராகபாவத்தைப் பற்றச் சொல்கிறது -பிரத்வம்சா பாவம் உண்டு இ றே முக்தர்க்கு –
அமரர்கள் –
பகவத் அனுபவ விச்சேதத்தில் தாங்கள் உளர் அன்றிக்கே இருக்குமவர்கள் –
ந ச சீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ -என்கிறபடியே -பிரியில்-அக்குளத்தில் மீன் இ றே -நாயனார் -ஸ்ரீ ராமாயணத்தில் இந்த ஸ்லோகம் என்றவாறு
அயர்வு அறும் -இருந்தால் தானே அரும் -அபஹத பாப்மா-அழிக்கப் பட்ட பாபத்தை யுடையவன் -போலே -அயர்வே எப்பொழுதுமே இல்லை –
சாம்யாபன்னம் முக்தர்கள் அடைவார்கள் -நித்யர்கள் சாம்யா பன்னர் -அருளால் நித்யர் -அருள் சங்கல்பம் நித்யம் -நாம் தடுத்ததால் தானே
இந்நினைவு எப்போது உண்டு அது கார்யகரம் ஆவது இவன் நினைவு மாறினால்

அமரர்கள் –
த்ரிபாத் விபூதி யோகத்தைப் பற்றச் சொல்கிறது
பரம சாம்யா பன்னராய் இருக்கையாலே ஓலக்கம் இருந்தால் யாயிற்று அவர்களுக்கும் அவனுக்கும் வாசி அறியலாவது –
பிராட்டிமாராலே யாதல் -ஸ்ரீ கௌஸ்து பாதிகளாலே யாதல் -சேஷி என்று அறியும் இத்தனை —
ஆனால் இப்படி இருக்கிற அவர்கள் பலராய் தான் ஒருவன் ஆனால் இவர்களை அனுவர்த்தித்துக் கொண்டு தன்னுடைய சேஷித்வமாம் படி இருக்குமோ -என்னில்
அதிபதி –
அவர்களுக்கும் தொட்டுக் கொள் தொட்டுக் கொள் என்ன வேண்டும்படி ஆனைக்கு குதிரை வைத்து அவ்வருகாய் இருக்கும் என்னுதல்-
ஸ்வாமி வாசகம் -என்னுதல்
இதுக்கு அவ்வருகே விக்ரஹ வைலஷண்யம் சொல்ல ஒருப்பட்டு கீழே நின்ற நிலையைக் குலுக்கி -அவன் என்று அவ்வருகே போகிறார்
திவ்ய மங்கள விக்ரஹமே உயர்ந்தது என்றவாறு –

துயர் அறு-
துயர் அறுக்கும் என்று முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும் படி
சமஸ்த துக்காப நோதன ஸ்வ பாவமான திருவடிகள் சகல ஆத்மாக்களுடையவும் துக்கத்தைப் போக்குகையே ஸ்வ பாவமான திருவடிகள்
துயர் அறு சுடர் அடி -என்று எம்பெருமானார் அருளிச் செய்யும் படி வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்றால்
துக்க நிவ்ருத்தியும் அவனதாய் இருக்கும் இ றே –-நம் காவல் சோர்வால் வந்தது அன்றோ இவனில் அவன் துக்கம் மிக்கு இருக்கும் –
இவர் துயர் அற-தான் துயர் தீர்ந்தானாய் இருக்கை-பர துக்க அசஹிஷ்ணுத்வம் திருக் கல்யாண குணமே
இத்தால் இவன் மயர்வற -அவன் துயர் அற்றபடி – க்ருத்க்ருத்ரராய் -விஜூர பிரமோதாக

சுடரடி –
நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹத்தைச்
சொல்கிறது –
சுடர் –
பஞ்ச சக்திமயமான புகரைச் சொல்லுகிறது -பரமேஷ்டி –இத்யாதி திவ்ய மங்கள விக்ரகம் -சுடர்
அடி –
சேஷபூதன் பக்கல் சேஷி கணிசிப்பது திருவடிகளை இ றே-
ஸ்தனன்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே இவரும் உன் தேனே மலரும் திருப் பாதம் –1-5-5-என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறார்

தொழுது –
நித்ய சம்சாரியாய்ப் போந்த இழவு எல்லாம் தீரும்படி ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அந்வயித்து
எழு-
அசநேவ ச பவதீ -என்னும் நிலை கழிந்து -சந்தமேனம் ததோ விது-என்கிறவர்கள் கோடியிலே என்னலாம் படி உஜ்ஜீவிக்கப் பார் –
அடியிலே தொழாமையாலே வந்த சங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது உஜ்ஜீவிக்கப் பார் –

என் மனனே –
இப்போது ஆயிற்று தம்மைக் கண்டது
அருளினான் என்று நின்ற இத்தனை இ றே முன்பு
இருவர் கூடப் பள்ளியோதி இருந்தால் -அவர்களில் ஒருவனுக்கு உத்கர்ஷம் உண்டானால் மாற்றையவன் தனக்கு
அவனோடு ஒரு சம்பந்தத்தைச் சொல்லிக் கிட்டுமா போலே
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா-என்கிறபடியே நெடுநாள் பந்த ஹேதுவாய் போந்தது
இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே-அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப் பட்டு -என் மனனே -என்கிறார்
பாட்டை முடியச் சொல்லி –அவன் -என்ன அமையாதோ -அடி தோறும் சொல்லுகிற இதுக்கு கருத்து என் என்னில்
இவர் தம் இத் திருவாய்மொழி தன்னில் ஈச்வரத்வம் ஆயிற்று பிரதிபாதிக்கிறது
அந்த ஈச்வரத்வதுக்கு ஒரோ குணங்களே நிரபேஷமாக போந்து இருக்கையாலே சொல்லுகிறது –
அப்ரமேயச்ச –இத்யாதி சகாரம் ஒவ் ஒன்றிலும் சொன்னது போலே

உயர்வற யுயர்நலம் யுடையவன் -எவன் -அவன் மயர்வற மதி நலம் அருளினன்-என்றும்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் -அவன் -அமரர்கள் அதிபதி -என்றும்
அமரர்கள் அதிபதி எவன் -அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே என்றும் இங்கனே வாக்யைக வாக்ய பாவத்தாலே யோஜிக்கவுமாம் –
அன்றிக்கே
உயர்வற யுயர்நலம் யுடையவன் -எவன்-அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே -என்றும்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் -அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே என்றும்
அமரர்கள் அதிபதி எவன் -அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே என்றும்–வாக்ய பேதம் பண்ணி யோஜிக்கவுமாம்
நம புரஸ்தாதத புருஷ்ட தஸ்தே-ஸ்ரீ கீதை -11-30 கண்ணா உனக்கு முன் பக்கமும் பின் பக்கமும் நமஸ்காரம் என்றால் போலே –

ஆனால் -உயர்வற உயர்நலம் உடையவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி –மயர்வற மதி நலம் அருளினன்-என்ன வேண்டி இருக்க —
உயர்வற உயர் நலம் உடையவன் -என்ற அனந்தரம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்று அவ்வளவும் போக மாட்டாமை -உபகார ச்ம்ருதியாலே
– மயர்வற மதி நலம் அருளினன் -என்கிறார்
குணம் இல்லை விக்ரஹம் இல்லை விபூதி இல்லை -என்று சொல்லுகின்றவர்கள் எல்லாரும் நிரஸ்தர் இப்பாட்டாலே —
அவர்களை எதிரிகள் ஆக்கிச் சொல்ல வேண்டா விறே- ஸ்வ பஷத்தை ஸ்தாபிக்கவே பர பாஷம் நிரஸ்தமாம் இறே –
நெல் செய்யப் புல் தேயுமா போலே தன்னடையே நிரஸ்தர் ஆவார்கள் இ றே அவர்கள் –

உயர்வற உயர்நலம் உடையவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்கையாலே பிராப்ய வேஷம் சொல்லிற்று –
மயர்வற -என்கையாலே -விரோதி போனபடி சொல்லிற்று –
அருளினன் -என்கையாலே -அவனே சாதனம் என்கிறது –
தொழுது எழு -என்கையாலே பிராப்தி பலமான கைங்கர்யத்தைச் சொல்லிற்று –
என் மனனே -என்கையாலே பரி ஸூ த்த அந்த கர்ணனே அதிகாரி -என்னும் இடம் சொல்லுகிறது -திருமந்த்ரார்த்த விவரணம் என்றதும் ஆயிற்று –

————————————————————————–

ஸ்ரீ கோவில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: