பகவத் விஷயம் காலஷேபம் -25–மஹா பிரவேசம்-இரண்டாவது -மூன்றாம் ஸ்ரீ யபதி படிகள் –ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த தனியன் –

பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம்
சர்வார்த்தம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சஹச்ர சாக உபநிஷத் சமாகமம்
நமாம் யஹம் திராவிட வேத சாகரம்

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்

திருவழுதி நாடென்றும் தென் குருகூர் என்றும்
மருவினிய வண் பொருநல் என்றும் அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து

ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை யல்லாது இறைஞ்சேன் –
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று –

ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த தனியன்

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத வுள்ளம் பெற

ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த தனியன் –

வான் திகழும் சோலை மதில் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத்தியல்

——-

ஸ்ரீ நம்பிள்ளை தனியன்

வேதாந்த வேத்யாம்ருத வாரிராசேர்
வேதார்த்த சாராம்ருத பூரமர்க்யம்
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவரி தாசம்-

ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ கிருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா சதா
யத் பிரசாத ப்ரபாவேன சர்வ சித்திர பூந்மம

———————————————————————-
ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனான சர்வேஸ்வரன்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிறபடியே -2-6-8–ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறித் திரிகிற இவரை
இவ்வர்த்த பஞ்சகத்தையும் விசத தமமாக அறிய வல்லராம் படி முதல் அடியிலே நிர்ஹேதுகமாக விசேஷ கடாஷம் பண்ணி அருளினான் –

ஸ்ரீ விஷ்ணு பிராண பிரகிரியை முதல் ஸ்ரீ யப்படி -அர்த்த பஞ்சகம் –
ஸ்ரீ ராமாயணம் பிரகிரியை -இரண்டாம் ஸ்ரீ யபதி படி -பிரபத்தி -சரணாகதி சாஸ்திரம் -த்வயம் –
ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் பிரகிரியை – -பக்தி விசததமமாக -மூன்றாம் ஸ்ரீ யபதி –
மத்யே மத்யே வந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆதல் -என்றுமாம் –

திரு விருத்தம் -திருவாசிரியம் –திரு மந்த்ரம்
பெரிய திரு வந்தாதி -சரம ஸ்லோகார்த்தம்
திருவாய் மொழி -த்வயார்த்தம் -என்றுமாம் –

பறை தருவான் -என்று ப்ராப்யம் சொல்லி ப்ராபகம் சொன்னாலே போலே -அனுஷ்டான வேளையில் -கறவைகளில் ப்ராபகம் சொல்லி சிற்றம் சிறு காலையில் ப்ராப்யம் சொல்லுவார்கள் இ றே

நம்மாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தாலே த்வய விவரணம் பண்ணுகிறார் –
இதில் முதலிட்டு மூன்று பத்தாலே-உத்தரார்த்தத்தை விவரிக்கிறார்-
மேலிட்டு மூன்று பத்தாலே பூர்வார்த்தத்தை விவரிக்கிறார் –
மேலிட்டு மூன்று பத்தாலே உபாய உபேய யோகியான குணங்களையும்
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியையும்
அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச் செய்தார்-
மேலில் பத்தாலே தாம் பிரார்த்தித்த படியே பெற்ற படியைச் சொல்லி தலைக் கட்டுகிறார்

இதில் முதல் பத்தாலே -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
–துயர் அறு சுடரடி தொழுது எழு என் மனனே -1-1-1- என்று
சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-ஸூரி போக்யனானவன் திருவடிகளிலே கைங்கர்யமே புருஷார்த்தம் என்று நிர்ணயித்து
உக்தமான அர்த்தத்துக்கும் -வஹ்யமாணமான அர்த்தத்துக்கு பிரமாணம் -உளன் சுடர் மிகு சுருதியுள் -1-1-7-என்று
நிர்தோஷமான சுருதியே பிரமாணம் என்றும்
ஏவம் விதனானவன் யார் என்ன —-வண் புகழ் நாரணன் –1-2-10-என்றும் –திருவுடையடிகள் –1-3-8-என்றும் –
செல்வ நாரணன் -1-10-8-என்றும் -விசேஷித்து –தொழுது எழு என் மனனே -1-1-1–என்று உபக்ரமித்து –
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே -1-3-10-என்று த்ரிவித காரணங்களாலும் அடிமை செய்து
தலைக் கட்டுகையாலே பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –உயர்த்தி -பொருந்தி விட -அடிக்கடி பேசி -புதிதாக -பலமாக -உபக்ரமம் உபஸம்ஹாரம் -அடையாளம் -லிங்கம் –
தொழுது எழு- சொற் பணி செய் ஆயிரம் -உடல் வாசா கைங்கர்யம்
அயர்ப்பிலன் -அப்பியாசம் –அபூர்வம் -பிரத்யக்ஷமாக கைங்கர்யம் புருஷார்த்தம் தெரியாதே
தொழுதால் எழு -பலன் –உயர்வற உயர்நலம் உடையவனை தொழுது எழு பொருந்த விட்டு -முதல் பத்துக்கு தாத்பர்யம் கைங்கர்யமே -புருஷார்த்தம் -என்றதாயிற்று –

இரண்டாம் பத்தால் -இந்த கைங்கர்யத்துக்கு விரோதியான பிரகிருதி சம்பந்தத்தையும் கழித்து –
ஒளிக் கொண்ட சோதி மயமாய் -2-3-10- இக் கைங்கர்யத்துக்கு தேசிகரான அடியார்கள் குழாங்களை
உடன் கூடுவது என்று கொலோ -என்று தாமும் பிரார்த்தித்து
நலமந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -2-8-4- என்று பிறருக்கும் உபதேசிக்கையாலே
இவருக்கு பரமபதத்திலே நோக்காய் இருந்தது என்று ஈஸ்வரன் பரமபதத்தைக் கொடுக்கப் புக –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் –2-9-1-என்று எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -2-9-4-என்று உனக்கேயாய் இருக்கும் இருப்பே
எனக்கு வேண்டுவது என்று இப் புருஷார்த்தத்தை ஓட வைத்தார் –

மூன்றாம் பத்தால் -இவருக்கு கைங்கர்யத்தில் உண்டான ருசியையும் த்வரையும் கண்ட ஈஸ்வரன்
கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான திருமலையிலே நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1- என்று பாரித்து
பாரித்த படியே பாகவத சேஷத்வ பர்யந்தமாக வாசிக அடிமை செய்து தலைக் கட்டுகிறார்

நான்காம் பத்தால் -இப் புருஷார்த்தத்துக்கு உபாயம் -திரு நாரணன் தாள் –4-1-1- என்றும் –
குடி மன்னு மின் ஸ்வர்க்கம் -4-1-10-என்றும்
எல்லாம் விட்ட இறுகல் இறப்பு -4-1-10-என்றும்
ஐம்கருவி கண்ட வின்பம் தெரிய அளவில்லா சிற்றின்பம் -4-9-10- என்று தாமும் அனுசந்தித்தார்

ஐஞ்சாம் பத்தால் இந்த இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10-என்று
தன் திருவடிகளையே உபாயமாகத் தந்தான் என்றார் –

அவன் தந்த உபாயத்தை கடகரை முன்னிட்டு 6-1/ 6-2–பெரிய பிராட்டியார் புருஷகாரமாக –அலர்மேல் மங்கை உறை மார்பா –உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று ச்வீகரித்தார் –ஆறாம் பத்தால் -தந்து ஒழிந்தார் -அவன் தந்த உபாயத்தை -நாம் பற்றுவதே -சரணாகதி –

ஏழாம் பத்தால் -இப்படி சித்த உபாய ச்வீகாரம் பண்ணியிருக்கச் செய்தேயும் சடக்கென பலியாமையாலே
விஷண்ணராய்-கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் –7-1-2-என்று தொடங்கி-உபாய உபேய யோகியான
குணங்களைச் சொல்லிக் கூப்பிட -கூராழி –வெண் சங்கு ஏந்தி —வாராய் -6-9-1-என்று இவர் ஆசைப் பட்ட படியே
வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி வந்து -7-3-1–இது மானஸ அனுபவ மாத்ரமாய் -சம்ச்லேஷம் கிடையாமையாலே
விச்லேஷித்த படியை -பாமரு -7-6—ஏழை -7-7–திருவாய்மொழிகளில் -அருளிச் செய்தார்

எட்டாம் பத்தால் -கீழ்ப் பிறந்த சம்ச்லேஷம் பாஹ்ய சம்ச்லேஷ யோக்யம் அல்லாமையாலே –
உமருகந்துகந்த உருவம் நின்றுருவமாகி உந்தனக்கு அன்பரானார் அவருந்தமர்ந்த செய்கை உன் மாயை -8-1-4- என்று
இப்படி ஆஸ்ரித அதீன ஸ்வரூப ஸ்தித்யாதிகளை உடையவன் நமக்கு தன்னைக் காட்டி மறைக்கைக்கு அடி
ஆத்மாத்மீயங்களில் ஏதேனும் நசை யுண்டாக வேணும் -என்று அதிசங்கை பண்ணி
அவற்றில் நசை அற்ற படியை -8-2–அருளிச் செய்தார்

ஒன்பதாம் பத்தில் -நீர் என்றிய அதிசங்கை பண்ணிப் படுகிறீர் -ஒராரியமாய் -பாசுரம் -இப்படி -என்று
தன்னுடைய நிருபாதிக பந்தத்தையும் காட்டி –
நான் நாராயணன் -சர்வ சக்தி யுக்தன் -உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்து தலைக் கட்டுகிறோம் -என்று
அருளிச் செய்ய –சீலம் எல்லையிலான் -9-3-11-என்று அவருடைய சீல குணங்களிலே ஆழம் கால் பட்டார் –

பத்தாம் பத்தில் ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டிக் கொடுத்து -10-9-
இவர் பிரார்த்தித்த படியே என் அவா அறச் சூழ்ந்தாய் -10-10-10–என்று
இவர் திருவாயாலே அருளிச் செய்யும்படி பேற்றைப் பண்ணிக் கொடுத்த படியை அருளிச் செய்கிறார்

————–

மூன்றாம் ஸ்ரீ யபதி -ஸ்ரீ பரத ஆழ்வான் நிலையுடன் ஒப்பு நான்கு பிரபந்தங்களும் –
பக்தி யோகத்தின் மேன்மையும் கூறும் பிரபந்தம் திருவாய் மொழி என்கிறார் –

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனான சர்வேஸ்வரன்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -2-6-8–என்கிறபடியே ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி -நித்ய சம்சாரியாய்ப் போந்த இவரை
அடிமை யடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன் -2-6-8–என்று தம் திரு வாயாலே
அருளிச் செய்யலாம் படி -முதல் அடியிலேயே விசேஷ கடாஷத்தைப் பண்ணி அருளினான் –
முதல் தன்னிலே சித் ஸ்வரூபம் ஆதல் -அசித் ஸ்வரூபம் ஆதல் -ஈஸ்வர ஸ்வரூபம் ஆதல் அறியாதே இருக்கிற இவருக்கு
அசித் அம்சம் த்யாஜ்யம் என்னும் இடத்தையும்
சேதனன் உபாதேயம் என்னும் இடத்தையும்
தான் உபாதேய தமன் என்னும் இடத்தையும்
அவன் தானே காட்டிக் கொடுக்கக் கண்டு -அவனோட்டை அனுபவத்துக்கு இத்தேஹ சம்பந்தம் விரோதியாய் இருக்கையாலே
த்வத் அனுபவ விரோதியான இத்தேக சம்பந்தத்தை அறுத்து தந்து அருள வேண்டும் -என்று அர்த்தித்தார் -திரு விருத்தத்தில்
சம்சார சம்பந்தம் அற்று ஒரு தேச விசேஷத்திலே போனால் அனுபவிக்கக் கடவ
ம்முடைய மேன்மையையும் -நீர்மையையும் -வடிவு அழகையும் பரப்பற ஏழு பாட்டாலே அனுபவிக்க லாம்படி
இங்கேயே இருக்கச் செய்தே ஒரு தசா வைசயத்தைப் பண்ணிக் காட்ட -அவ வழகை அனுபவித்தார் திரு வாசிரியத்தில் –
இப்படி அனுபவித்த விஷயத்தில் விஷய அநுரூபமான ஆசை கரை புரண்ட படியைச் சொன்னார் பெரிய திருவந்தாதியில்
ஆமத்தை அறுத்து -பசியை மிகுத்து -சோறிடுவாரைப் போல
தமக்கு ருசியைப் பிறப்பித்த படியையும்
அந்த ருசி தான் –பர பக்தி பர ஞான பரம பக்தி களாய்க் கொண்டு பக்வமான படியையும்
பின்பு பிரகிருதி சம்பந்தமும் அற்று பேற்றோடு தலைக் கட்டின படியையும் சொல்லுகிறது திருவாய் மொழியிலே –

கைங்கர்ய மநோரதம் பண்ணிக் கொண்டு வரக் கொள்ள –
கைகேயி -ராஜன் -என்ற சொல் கேட்டு ஸ்ரீ பரத ஆழ்வான் பட்ட பாடு போல இருக்கிறதாயிற்று-திரு விருத்தத்தில் நிலை
அவன் திருச் சித்திர கூடத்திலே பெருமாள் எழுந்து அருளி இருக்கிறார் என்று கேட்டு ஏபிச்ச சசிவைஸ் ஸார்த்தம் – என்கிறபடியே
என் ஒருவன் கண்ணில் கண்ணநீர் பொறுக்க மாட்டாதவர் இத்தனை பேர் ஆறாமை கண்டால் மீளாது ஒழிவரோ –
சிரஸா யாசிதோ மயா-என் அபிமதம் தன தலையாலே இரந்து செய்யக் கடவ அவர் நான் என் தலையாலே மறுப்பரோ
ப்ராதா -நான் தம் பின் பிறந்தவன் அல்லேனோ –
சிஷ்யச்ய -பின் பிறந்தவன் என்று கூறு கொள்ள இருக்கிறேனோ -வஸிஷ்டர் பெருமாளுக்கு மந்த்ர  உபதேசம் பண்ண இவர் தம்பிகளுக்கு செய்து அருளினார்-
மந்திர சம்பந்தமும் தம்மோடே அன்றோ –தாச்யச்ய -சிஷ்யனாய் க்ரய விக்ரய அர்ஹன் அன்றிக்கே இருக்கிறேனோ
பிரசாதம் கர்த்தும் அர்ஹதி ஆனபின்பு –என் பக்கல் பிரசாதத்தைப் பண்ணி அருளீரோ -என்று
மநோ ரதித்துக் கொண்டு போகிற போதை தரிப்பு போல திருவாசிரியத்தில் நிலை
ஸ்ரீ நந்தி கிராமத்தில் ராமா கமன காங்ஷயா -என்கிறபடியே பதினாலு ஆண்டும் ஆசை வளர்த்துக் கொண்டு
இருந்தார் போல இருக்கிறது பெரிய திருவந்தாதியில்
மீண்டு எழுந்து அருளி –திரு அபிஷேகம் பண்ணி யருளி அவனும் ஸ்வரூப அநு ரூபமான பேறு பெற்றால் போல இருக்கிறது
-இவருக்கு திருவாய் மொழியில் பேறு –

திருவாய் மொழிக்காக சங்க்ரஹம் முதல் திருவாய் மொழி –
முதல் திருவாய் மொழியினுடைய சங்க்ரஹம் முதல் மூன்று பாட்டுக்கள்
முதல் மூன்று பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் பாட்டு
முதல் பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் அடி –என் போல் என்னில்-விக்ரஹ விபூதிகள் –முதல் அடியில் –நலம் -ஆனந்தம் சொல்லி -ஆனந்தாவாஹம் விக்ரஹம் விபூதிகள் அர்த்தாத சித்தம் -முதல் வரியில் அர்த்த பஞ்சகமும் உண்டே -த்வயமும் உண்டே -உபயோகியான குணம் -நலம் உடையவன் என்பதால்- உயர் நலம் உடையவன் -என்பதே -அனைத்துக்கும் -என்றவாறே –
ரூசோ யஜூம்ஷி சாமாநி ததைவா தர்வணாநி ச சர்வம் அஷ்டாஷர அந்தஸ் ஸ்தம் யச்சான் யதபி வாங்மயம் -என்கிறபடியே –
சகல வேத சங்க்ரஹம் திரு மந்த்ரம்
அதினுடைய சங்க்ரஹம் பிரணவம்
அதினுடைய சங்க்ரஹம் அகாரம் ஆனால் போல –
மற்றும் பாரத ஸ்ரீ ராமாயணாதி களையும் சங்ஷேப விச்தரங்களாலே செய்தார்கள் இ றே

————————————————————————–
ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: