பகவத் விஷயம் காலஷேபம் -23–மஹா பிரவேசம்-முதல் ஸ்ரீ யபதிப்படி -இரண்டாம் பகுதி –ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த தனியன் –

பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம்
சர்வார்த்தம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சஹச்ர சாக உபநிஷத் சமாகமம்
நமாம் யஹம் திராவிட வேத சாகரம் –

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்

திருவழுதி நாடென்றும் தென் குருகூர் என்றும்
மருவினிய வண் பொருநல் என்றும் அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து

ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை யல்லாது இறைஞ்சேன் –
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று –

ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த தனியன்

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத வுள்ளம் பெற

ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த தனியன் –

வான் திகழும் சோலை மதில் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத்தியல்

——-

ஸ்ரீ நம்பிள்ளை தனியன்

வேதாந்த வேத்யாம்ருத வாரிராசேர்
வேதார்த்த சாராம்ருத பூரமர்க்யம்
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவரி தாசம்-

ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ கிருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா சதா
யத் பிரசாத ப்ரபாவேன சர்வ சித்திர பூந்மம-

———————————————————————-

நம் தர்சனத்துக்கு தத்வங்கள் மூன்று -அவையாவன -சித்தும் அசித்தும் ஈச்வரனுமாய் –பிரகார பிரகாரி ஐக்யத்தாலே ஓன்று என்னலாய்-
ஸ்வரூப பேதத்தாலே பல என்னலாய் இருக்கும் –
அசித் ஆகிறது –குண த்ரயாத்மகமாய் -நித்யமாய் -விபுவாய் -சத்த பரிணாமியாய் -ஹேயதயா ஜ்ஞாதவ்யமாய் இருக்கும் –
இப்படி இருக்கிற அசித்திலே போக்யதா புத்தி பண்ணி -சம்சாரத்தை த்ருடமாக்கிக் கொள்ள வேணும் என்று
இருக்கிறவனுக்கும் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்க வேணும் –
இது த்யாஜ்யம் என்னும் பிரபத்தி யுண்டாய் இத்தைக் கழித்துக் கொள்ள வேணும் என்று இருக்கும் அவனுக்கும் சர்வேஸ்வரனை
ஆஸ்ரயிக்க வேணும் –-சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது –என்றும்
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே–ஸ்ரீ கீதை -7-14-என்றும் சொல்லுகிறபடியே
நான் பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகாது -என்னையே கால் கட்டி அவிழ்த்துக் கொள்ள வேணும் -என்றான் இ றே
அது தன்னையே இவரும்-பொல்லா வாக்கையின் புணர் வினை அறுக்கலறா சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சி –3-2-3-என்றார் இ றே
ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகிறது இல்லை -சர்வ சக்தி கர்ம அநு குணமாக பிணைத்த பிணையை
அவனையே கால் கட்டி அவிழ்த்துக் கொள்ளும் இத்தனை காண்-என்று திரு நறையூர் அரையர் வார்த்தை -வைஷம்யம் நிர்க்கருணன் இல்லையே —
சேதனன் நித்யமாய் -அணுவாய் -ஜ்ஞானானந்த லஷணனாய்-ஜ்ஞான குணகனாய்-ஏக ரூபனாய் -பகவத் சேஷ பூதனாய் இருக்கும் –
இப்படி இருக்கிற ஆத்மாவினுடைய வை லஷண்யத்தை அனுசந்தித்து -ஜரா மரண மோஷாயா -ஸ்ரீ கீதை 7-29-என்கிறபடியே
ஆத்ம அனுபவம் அமையும் என்று இருக்குமவனுக்கும் -சர்வேஸ்வரனை உபாசிக்கையும் -அந்திம ஸ்ம்ருதியும் வேணும் –
ஆத்ம அனுபவத்தை நெகிழ்ந்து சர்வேஸ்வரனுடைய குணாநுபவம்பண்ண வேணும் என்று இருக்குமவனுக்கும் அவன் தன்னையே உபாயமாகப் பற்ற வேணும் —

நம் தர்சனத்துக்கு தத்வங்கள் மூன்று -அவையாவன -சித்தும் அசித்தும் ஈச்வரனுமாய் –
பரம வைதிகமான -நம் தர்சனம் -ஏகமேவ அத்விதீயம் -சத்வித்யா பிரகரணம் -சதேமவ இதம் அக்ரே ஆஸீத் -சத்தாக ஒன்றாக -மூன்று தடவை ஏக சப்தங்கள் –
பிரகார பிரகாரி ஐக்யத்தாலே ஓன்று என்னலாய்–ஸ்வரூப பேதத்தாலே பல என்னலாய் இருக்கும் –
-ஐக்யத்தாலே முதல் தடவை நம் தர்சனம் –
ஸ்வரூப ஐக்கியம் அத்வைதிகள் -வஸ்துவே ஓன்று -நாம் பிரகார பிரகாரி பாவத்தாலே ஓன்று
பரன் திறம் அன்றி பல்லுலகீர் உலகில் தெய்வம் மற்று இல்லை —
அப்ருதக் சித்த விசேஷணம் பிரகாரம் -கூடியும் சார்ந்தும் இருக்கும் – –
பிரகாரம் -சரீரம் வாசி
யஸ்ய சேதனச்ய-யது த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே -தாரயிதும் -நியந்துஞ்ச -சக்யம் தத் சேஷதைக ச்வரூபஞ்ச சரீரம் –
மணம்-புஷ்பம் குணம் -த்ரவ்யம் இல்லையே -குணம் ஜாதி பிரகாரமாக இருக்கலாம் –
சரீரமாக இருப்பவை பிரகாரமாகவே தானும் இருக்கும் -யஸ்ய ஆத்மா சரீரம் -ஷேத்திர ஷேத்ரஜ்ஞ்க்ன –சாபி மாம் வித்தி -ஷேத்ரமாகவும்--ஷேதரஜ்ஞ்ஞானாகவும் என்னைத் தெரிந்து கொள் –இதம் சரீரம் கௌந்தேயே சுட்டிக் காட்டி -ஸ்ரீ கீதை – நியத பிரகார சரீரம் -என்றவாறு-

அசித் ஆகிறது –குண த்ரயாத்மகமாய் –குண த்ரய ஸ்வரூபமாய் இல்லை ஸ்வ பாவம் -தன்மை –
ஸ்வரூபம் இயற்க்கை -கட ஸ்வரூபம் கடம் வஸ்துவே -ஸ்வ பாவம் தன்மை -அசித் த்ரவ்யம் -இது வேற குணம் வேறே –
த்ரவ்யமே குணம் -என்றார் சாங்க்யன் -நாம் ஸ்வ பாவம் -என்கிறோம் -இதுவே வாசி –
கடம் ம்ருத்தாத்மகம் -மண்ணால் ஆக்கப் பட்டது –
சத்வம் ரஜஸ் தமஸ் –பிரகிருதி சம்பவா -கீதை -மிஸ்ரா தத்வம் முக்குண கலவை –
நித்யமாய் -சத்த பரிணாமத்தாலே -ஒருபடிப் பட இல்லையே -சத்த விக்ரியா
விபுவாய் -பிரகிருதி மகான் –சூழ்ந்து இத்யாதி –முடிவில் பெரும் பாழ்-கார்யங்கள் அனைத்தும் -ஸ்வ கார்ய பூத மகதாதி –
சத்த பரிணாமியாய் -சத்த விக்ரியாய் -ஹேயதயா ஜ்ஞாதவ்யமாய் இருக்கும் -தோஷம் உடையது —
கெட்டது தொலைய வேண்டும் -விட்டே பற்ற வேண்டும் -ஹேயதயா ஜ்ஞாதவ்யம் -இதனால் முதலில் அசித்தை சொல்லி –
இப்படி இருக்கிற அசித்திலே போக்யதா புத்தி பண்ணி -சம்சாரத்தை த்ருடமாக்கிக் கொள்ள வேணும் என்று
இருக்கிறவனுக்கும் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்க வேணும்
ஈஸ்வர ஸ்வரூபம் தனியாக சொல்ல வேண்டாமே
ப்ரஹ்மத்துக்கு சரீர பிரகாரமாக இருக்கும் இப்படி இருக்கும்
முந்நீர் –அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -ஐஸ்வர்ய அனுபவம் –
தத் அதீன்யத்தை -ப்ரஹ்மத்துக்கு அதீனப்பட்டது -ததாதீன்யம்
விசிஷ்ட வேஷம்-ஆத்மா சரீரம் கூட -ஔபாதிகம் கர்மாதீனம் – /நிஷ்க்ருஷ்ட வேஷம் ஆத்மாவுக்கு இயற்க்கை
இது த்யாஜ்யம் என்னும் பிரபத்தி யுண்டாய் இத்தைக் கழித்துக் கொள்ள வேணும் என்று இருக்கும் அவனுக்கும் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்க வேணும் —
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது –என்றும் -மூன்றுக்கும்
ஸ்திதி பூண் கட்டிக் கொள்ளுகை
ச விச்வக்ருத் -சமஷ்டி சிருஷ்டி -விச்வக்ருத் பிரம்மாவுக்கும் ஆத்மயோனி -அறிவாளி -சர்வவித் -ஸ்வரூப ஸ்வ பாவ ஞானம் இரண்டும் –
நமக்கும் பரமாத்மாவுக்கும் இரண்டும்
தர்மிக் ஞானம் ஸ்வரூப ஞானம் -ஞானம் உடையவன் ஸ்வ பாவம் தன்மை -தர்ம ஞானம் –
ஆத்மா ஞானத்தால் செய்யப் பட்டு -த்ரவ்யம் தானே ஆத்மா -குணத்தால் த்ரவ்யம் பண்ணப் படுமா கேள்வி –
ஞானமும் த்ரவ்யமும் குணமுமாகவும் இருக்கும் கமன க்ரியை போக்கு வரத்து உண்டே –
கால சக்கரத்தாய்-நியமிப்பவன் -பிரதான ஷேத்ரஜ்ஞ்ஞன் பத்தி குணேசன்-சம்சார பந்த -ஸ்திதி மோஷ -ஹேது அவனே
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே–ஸ்ரீ கீதை -7-14-என்றும் சொல்லுகிறபடியே
க்ரீடா பிரவ்ருத்தேன மயா -லீலா கார்யம்
அதி தாண்டுதல் – துரத்தயயா தாண்ட முடியாது –அறுக்கலறா–சர்வராலும் துஸ்த்தரா
ஏதாம் மாயம் தரந்திதே -அவனையே பிரபத்தி பண்ணி –
நான் பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகாது -என்னையே கால் கட்டி -யே பிரபத்யந்தே -அவிழ்த்துக் கொள்ள வேணும் -என்றான் இ றே
அது தன்னையே இவரும்-பொல்லா வாக்கையின் புணர் வினை அறுக்கலறா சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சி –3-2-3-என்றார் இ றே
பற்ற வைப்பதும் உன் பொறுப்பு –
ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகிறது இல்லை -சர்வ சக்தி கர்ம அநு குணமாக பிணைத்த பிணையை
அவனையே கால் கட்டி அவிழ்த்துக் கொள்ளும் இத்தனை காண்-என்று திரு நறையூர் அரையர் வார்த்தை –
கர்மாதீனமான பிணைத்த பிணை -கர்மத்துக்கு அனுகுணம் -வைஷம்யம் -நிர்க்க்ருபா சாபேஷ்த்யத்வாத்- –

சேதனன் நித்யமாய் -அணுவாய் -ஜ்ஞானானந்த லஷணனாய்–லஷணம் -அடையாளம் -ஸ்வரூப ஞானம் –உயரம் குள்ளம் சரீர லஷணம் அனுகூல ஞானம் ஆனந்தம்-ஸ்வரூப நிரூபக தர்மம் –இதுவே
நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் -ஜ்ஞான குணகனாய்–ஸ்வ பாவ ஞானம் –தர்ம பூத ஞானம் இது சரீரம் முழுவதும் வியாபிக்கும் -புத்தி என்பதே இது –
உறுதியான முடிவுக்கு -மனஸ் அலை பாயும்-
ஏக ரூபனாய் –விகாரம் இல்லாமல் -பகவத் சேஷ பூதனாய் இருக்கும் – அசித் சேஷமாக இருந்தாலும் புரிந்து கொள்ளாதே
அஹம் அபி தாஸ -தாஸ பூத இயற்கையாகவே -க்ரியதாம் இவ -மாம் குருஷ்வ
நித்யோநித்யானாம் -எகோ பஹூ நாம் யோ விததாதி காமான் –
இப்படி இருக்கிற-தாதாதீன்யம்-சரீர பிரகார -ஆத்மாவினுடைய வை லஷண்யத்தை அனுசந்தித்து -ஜரா மரண மோஷாயா -ஸ்ரீ கீதை 7-29-என்கிறபடியே
ஆத்ம அனுபவம் அமையும் என்று இருக்குமவனுக்கும் -சர்வேஸ்வரனை உபாசிக்கையும் -அந்திம ஸ்ம்ருதியும் வேணும் –
பூத சூஷ்மங்கள் வாசனை கர்மம் அகிலம் அத்யாத்மகம் அறிந்து –
ஆத்ம அனுபவத்தை நெகிழ்ந்து சர்வேஸ்வரனுடைய குணாநுபவம்பண்ண வேணும் என்று இருக்குமவனுக்கும் அவன் தன்னையே உபாயமாகப் பற்ற வேணும் –
பகவத் ஏக நிர்வாஹகத்வம் சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் -உக்கும் தட்டொளியும் தந்து உன் மணாளனையும் தந்து
-அதே தட்டில் -தத் ஏக நிர்வாஹகத்வம் நப்பின்னை நங்கையே திரு –

இவற்றில் ஒன்றை அறியிலும் –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்கிறபடியே
சர்வேஸ்வரன் அளவிலே பர்யவசித்து அன்று நில்லாது –
ஜ்ஞானமாகில் ஸ்ரீ யபதியைப் பற்றி அல்லது நில்லாது -பகவத் வ்யதிரிக்த விஷயங்களைப் பற்றிப் பிறக்கும் ஜ்ஞானம் எல்லாம் அஜ்ஞ்ஞான கல்பம்
தத்வ ஜ்ஞான மஜ்ஞானம நோன்யதுக்தம்-தத கர்ம யன்ன பந்தாய ச வித்யா யா விமுக்த்யே ஆயாசாயாபரம் கர்ம
வித்யான்யா சில்ப நை புணம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-
என்கிறபடியே -பகவத் விஷயத்தை ஒழியக் கற்றவை எல்லாம் செருப்புக் குத்த கற்றவோபாதி –
இப்படி இருக்கிற சித் அசித் ஈச்வரர்கள் ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறியக் கடவார் ஒருவரும் இல்லை
-இவற்றை உள்ளபடி அறிவாரில் தலைவர் யாயிற்று இவ்வாழ்வார் -ஆழ்வார் உடைய ஞானாதிக்யத்தை நியமிக்கிறார் –

பிரகாரி -ஒருவனையே நோக்கும் அதுவே உணர்வு -உணர்வு அவனை நோக்கி அல்லது நில்லாது -ஞானம் தர்சனம் பிராப்தி –
கைங்கர்யம் -பந்தப்படுத்தாது -சம்சார முக்திக்கு -மற்றவை ஆயாசம் கொடுக்கும் –
முதல் ஆழ்வார்கள் உண்டே என்ன –இவர் தலைவர் -அவன் பிரியமுடன் திருமேனி தர்சனம் கொடுப்பவர்களில் தலைவர் –

இவருக்கு ஒப்புச் சொல்வார் -சம்சாரிகளிலும் இல்லை -நித்ய ஸூரிகளிலும் இல்லை -தம்படி தாமும் அறியார் –
சம்சாரிகளும் அறியார்கள் -சர்வேஸ்வரனும் அறியான் –
ஒரு சாதனத்தை அனுஷ்டித்து இந்த நன்மை நமக்கு வரும் என்று இருக்கிற வந்தது அல்லாமையாலே தாமும் அறியார்
இவரைப் போலே இருப்பாரை சம்சாரத்தில் காணாமையாலே சம்சாரிகளும் அறியார்கள்
தன குணங்கள் புறம்பு ஒரு வியக்தியிலே இப்படி பலிக்கக் காணாமையாலே சர்வேஸ்வரனும் அறியான் –
சம்சாரிகளில் வ்யாவர்த்தனோபாதி நித்ய ஸூ ரிகளிலும் வ்யாவ்ருத்தர் –
கடலுக்குள்ளே அமிழ்ந்த  மலையும் மடுவும் -நித்யர் சம்சாரிகள் -ஆளவந்தார் –

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம் -திரு விருத்தம் -75–என்று உபய விபூதியிலும் அடங்காது இருப்பார்
விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -79-என்னும்படி யாயிற்று இவர் நிலை –
கல்வியும் பிரிவும் மாறி மாறி வருகையாலும் -மேட்டு நிலத்திலே பகவத் அனுபவம் பண்ணுகையாலும் –-தேசம் மோசம்
பகவத் அனுபவத்துக்கு பாங்கான தேசத்திலே இருந்து அனுபவிக்கிறவர்களைப் போல் அன்றே
அவ்வனுபவத்துக்கு மேட்டு நிலமான சம்சாரத்திலே இருந்து அனுபவிக்கிறவர்கள் –
கலௌ ஜகத் பதிம் விஷ்ணும் சர்வஸ்ரஷ்டாரமீச்வரம் நார்ச்ச யிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பக்தா ஜனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
என்கிறபடியே கலி காலத்திலே பகவத் ருசி ஒருவருக்கும் பிறக்கிறது இல்லை –காலம் மோசம்-
அர்ச்சைனை ஹேது ஜகத் பதி விஷ்ணு படைத்தவன் அடக்கி ஆள்பவன் -நான்கையும் சொல்லி
அப்ராப்தன் இல்லை -ஜகத் பத்தி -தேச கால அதீத்வம் -விஷ்ணு -எங்கும் நீக்கமற வியாபித்து
உபகரண சம்பவத் -சர்வ ஸ்ரஷ்டா -கை வாய் மனஸ் -விசித்ர தேக சம்பத் -கொடுத்து
ஈஸ்வரன் காரணங்களை நியமிக்கும் சக்தன் -நான்கையும் சொல்லி -இதே போலே நான்கும்
நம்பியை –குண பூரணன் –தென் குறுங்குடி நம்பி -சந்நிஹிதன் –அச் செம் பொன்னே திகழும் –அழகன்
உம்பர் வானவர் அம் சோதி —எம்பிரானை -என் சொல்லி மறப்பனோ –
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிதாம் ஷண பங்குர தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்ட ப்ரிய தர்சனம் -ஸ்ரீ மத பாகவதம் 11-2-
வைகுண்ட பிரிய தர்சனம் பகவத் பாகவதர்களுக்கு பிரீதி உந்த கைங்கர்யம் -தர்சனம்- உசி ரூப ஜ்ஞானம்
என்கிறபடியே முதல் தன்னிலே மனுஷ்ய சரீரம் கிடையாது -பெற்றாலும் சர்வேஸ்வரனே பிராப்யன் என்று
அவனைப் பெறுகைக்கு அநு ரூபமாய் இருப்பதொரு உபாயத்தை பரிஹரிக்க வேணும் என்னும் ருசி ஒருவருக்கும் பிறவாது
இது உண்டாகிலும் உண்டாம் பாகவத சேஷத்வம் உண்டாகாது என்னும் இடம் சொல்ல வேண்டா வி றே
மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ கச்சித்யததி சித்தயே-யததாமபி சித்தா நாம் கச்சின்மாம் வேத்தி தத்வத -ஸ்ரீ கீதை -7-3-
என்று சர்வேஸ்வரன் தானும் அருளிச் செய்தான் இ றே
ஆயிரத்தில் ஒருவன் சாஸ்திர யோக்யதை –அவர்களுள் ஆயிரத்தில் ஒருவர் முயல்வர் –ஆயிரத்துள் ஒருவர் -பிராப்ய புத்தி -ஆயிரத்தில் பிராப்ய புத்தி

இப்படி இருக்கிற சம்சாரத்தில் ஆழ்வார் வந்து அவதீர்ணரான இது சேதனர் பண்ணின ஸூ க்ருத பலமாயிற்று –
பரம சேதனன் -கோர மா தவம் பண்ணினான் கொலோ போலே
ததோகில ஜகத் பத்ம போதா யாச்யுதபாநுநா–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2-என்கிறபடியே சர்வேஸ்வரன் வந்து
அவதரித்தால் போலே யாயிற்று -ஆழ்வார் வந்து அவதரித்தபடி –அகில ஜகத் பத்ம போதயா -அச்யுத பானு
-நித்ய சூ ரிகள் தாமரை -பல்லாண்டு பாட மலரும் -நித்ய சூரிகள் மங்களா சாசனம் பண்ண -ஸ்ரீ கீதை இங்கே அருளி-சேதனர்கள் ஞானம் மலர –
வகுள பூஷண பாஸ்கரர் -அவனுக்கும் அந்தகாரம் போக்கி -கிருஷி பலிக்க -பதன் பதன் துடிக்க -பகவான் தாமரை மலர்ந்தது– ஆழ்வார் இவனுக்கும் நல்லது செய்தார் –
ஆதித்யன் பாஹ்யமான அந்தகாரத்தைப் போக்கும் -இவன் ஆந்தரமான அந்தகாரத்தை போக்கிக் கொண்டாயிற்று இருப்பது
அப்படியே இவரும் -ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -6-7-2–என்றும்
மரங்களும் இரங்கும் வகை -6-5-9–என்றும்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் படியாகவும் -1-5-11-
கேட்டாரார் வானவர்கள் -10-6-11–என்றும்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தானைத் தான் பாடி தென்னா தென்னா என்னும் என் அம்மான் -1
நகர ஜனாபத லௌகிக ஞான ப்ரேமம் கொடுத்து -நித்ய முக்த ஈஸ்வர நிரதிசய ஆனந்தம் -பக்தர் -ஞான ஆனந்தம்-திராவிட தமிழர்களுக்கு ஞான ப்ரேமம் ஆனந்தம் அருளினார்-
ஹஸிதம் பாஷிதம் சைவ கதிர்யா யாச்ச சேஷ்டிதம் தத் சர்வம்  தர்ம வீர்யேண யதாவத் சம்ப்ர பஸ்யதி-என்கிறபடியே
பிரம்மாவின் பிரசாதத்தாலே ஸ்ரீ வால்மீகி பகவான் சர்வத்தையும் சாஷாத் கரித்தால் போலே இவரும்
பகவத் பிரசாதத்தாலே சாஷாத் க்ருதமான பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையராய் இருப்பர் –
ஸ்ரீ யபதியாய் -ஆழ்வார் வரை —தத்வ ஞானம் -க்யாதி லாப பூஜா இன்றிக்கே -சர்வர்க்கும் உபஜீவ்யதையை-
-ஞானிகளுக்கு அக்ரேசர் –
ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18-ஐஸ்வர்யம் -ஆத்மலாபம் -ஏதேனும் ஒரு புருஷார்த்தம் ஆகவுமாம்
-நம் பக்கலிலே கொள்ளுமவர்கள் உதாரர்கள் -என்னதுன்ன வாவியிலே அறிவார் ஆத்மா என்று அவன் மதம் தோற்றும் –
ஜ்ஞாநியானவன் எனக்கு தாரகன் –உள்ளத்தாலே தாரகம் -என்றபடி-என்று சர்வேஸ்வரன் அருளிச் செய்த ஜ்ஞாநிகளுக்கு அக்ரேசராய் இருப்பவர் –

1-பக்திக்கும் -2–தத் ஏக தாரகத்வத்துக்கும் -3-வைராக்யத்துக்கும் -4-தத் ஏக சர்வ வித பந்துத்வத்துக்கும்-5-கைங்கர்ய மநோ ரதத்துக்கும் இளைய பெருமாள் உடன் சாம்யம் -பஹிர் பிராணன் போல் இளைய பெருமாள் –

பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -என்று பால்யம் தொடங்கி பெருமாள் திருத் தொட்டிலோடு அணைய
திருத் தொட்டில் இடாத போது பள்ளி கொள்ளாத இளைய பெருமாளைப் போலே இவரும் பருவம் நிரம்புவதற்கு முன்பே-பகவத் குணைக தாரகராய் இருப்பர் -அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -2-3-3-என்றும்
முலையோ முழு முற்றும் போந்தில பெருமான் மலையோ திரு வேங்கடம் என்று கற்கின்ற வாசகம் –திரு விருத்தம் -60-என்றும்
சொல்லுகிறபடியே–முள்ளை இருந்தில கூழை முடிகொளா –கை தொழும் கை தொழும் பிள்ளையை -பரகால நாயகி –
பக்திக்கும் -சஹஜ பக்தி -கருவிலே திருவுடையார் –இரட்டை குழைந்தை ஆழ்வாரும் ஆழ்வார் பக்தியும் ஒக்க பிறக்க –195

ந ச சீதா த்வயா ஹீ நா ந சாஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்ருதௌ -என்று
உம்மை ஒழிந்த வன்று பிராட்டியும் இல்லை -அடியேனும் இல்லை -ஜீவித்தோமோ முஹூர்த்தம் -என் போலே என்றால்
ஜலாதுத்ருதமான மத்ஸ்யம் நீர் நசை யாரும் அளவும் ஜீவிக்குமா போலே நீர் நிறுத்திப் போகிறோம் என்கிற வார்த்தை-உம்முடைய திரு உள்ளத்திலே உண்டு என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவிப்பது –என்றார் இ றே –
அத்தலையிலே நினைவாலே இ றே இத்தலை ஜீவிப்பது -வில்லால் விரோதியை நலிவாய்-விரகத்தால் ஆஸ்ரிதரை நலியச் செய்வாய்
சத்தா ஸ்திதி -அதன் அதீனமாக இது அன்புக்கு மேலே இது -மாயா சிரஸ் -இருந்தால் அவர் இருப்பார் -ப்ரஹ்மமே சத்தயா தாரகம் –
-எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் -நான் முகன் -திரு -38-என்கிறபடியே அவன் நினைவு இல்லாத வன்று இவையும் இல்லை இ றே -அப்படியே இவரும் நின்னலால் இலேன் காண் -2-3-7– என்று இருப்பார் ஒருவர்
உண்ணும் தண்ணீர் -தாரகம் -தரிப்பது -சாஸ்திரம் -சங்கல்ப சக்தியாலே தாங்குகிறான் அவனே –

ந தேவ லோகாக்ரமணம் நா மரத்வ மஹம் வ்ருணே ஐஸ்வர்யம் வாபி லோகா நாம் காமயே ந த்வயாவி நா -என்று
வானவர்நாடு என்கிற பரமபதம் ஆத்மலாபம் லோகாநாம் ஐஸ்வர்யம் -இவை இத்தனையும்
உமக்குப் புறம்பாய் வரும் அன்று வேண்டேன் என்ற இளைய பெருமாளைப் போலே -இவரும்
திருவோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல வீடு பெறினும் கொள்வது என்னுமோ –திருவாசிரியம் -2-என்றும்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -2-9-1-என்றும்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ –6-9-9–புருஷார்த்தாங்களைக் காட்டி படுப்பாயோ-என்றும்
இதர புருஷார்த்த பரஸ்தாவத்திலே வெருவும் ஸ்வ பாவருமாய் இருப்பர் —வைராக்யத்துக்கும்-சாம்யம்

அஹம் தவான் மகா ராஜே பித்ருத்வம் நோபா லஷயே ப்ராதா பர்த்தா ச பந்துச்ச பிதா ச மம ராகவ -என்று
பெருமாளையே எல்லா உறவுமாகப் பற்றின இளைய பெருமாளைப் போலே இவரும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையரும் அவரே -5-1-8-என்று பகவத் ஐகாந்த்ய சீமையாய் இருப்பர்
ஏக அந்தம் -ஏவ ஏவ பிராப்யம் தத் ஏக சர்வ வித பந்துத்வத்துக்கும் சாம்யம்-

அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதச்ச தே பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரி சாநுஷூ ரம்ச்யதே-என்று
இளைய பெருமாள் சர்வ வித கைங்கர்யங்களையும் செய்து அல்லது தரியாதாப் போலே இவரும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1-என்று –
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி -சர்வ கால சர்வ தேச சர்வ பிரகாரங்களிலும்
எல்லா அடிமைகளையும் செய்து அல்லது தரியாத தன்மையராய் இருப்பர் –கைங்கர்ய மநோ ரதத்துக்கும் சாம்யம்
அழும் தொழும் -சிநேக பாஷ்பாஞ்சலி யோடு ருசிர சானுக்களிலே –கூவிக் கொள்ளும் பிரியா அடிமைக்கு -சரணே சரண் என்று-
வாளும் வில்லும் கொண்டு -பந்துவும் பிதாவும் அவரே யென்கையும்–காணலாம்

விஸ்தரணோதமநோ யோகம் விபூதிஞ்ச ஜனார்த்தன ந ததர்ப்ப சமாயாந்தம் பச்யமாநோ நராதிப –ஸ்ரீ கீதை-10-18–என்றும்
சொல்லுகிற அர்ஜுன தசராதிகளைப் போலே
கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதம் -2-5-4–என்கிறபடி மேன்மேல்
எனப் பெருகி வருகிற ஆராத காதலை யுடையராய் இருப்பர்
தர்மாத்மா சத்ய சௌசாதி குணா நாமா க்ரஸ் ததா உபமாநம சேஷாணாம் சாது நாம் யஸ் சதா அபவத் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்று
ஸ்ரீ பிரகலாத ஆழ்வானை சாதுக்களுக்கு எல்லாம் உபமானமா பூமியாகச் சொல்லுகிறாப் போலே
எல்லாருக்கும் தம்முடைய ஒரோ வகைகளாலே உபமான பூமியாய் இருப்பர்
அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -என்று குணங்களுக்குத் தோற்று அடிமை புக்க இளைய பெருமாளைப் போலே
இவரும் பகவத் குணங்களிலே தோற்று உயர்வற உயர்நலம் உடையவன் –துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே-என்றார்

இப்படி பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -விசத -விசத தர -விசத தமமாக -அனுபவித்து
அது உள்ளடங்காமை வழிந்து புறப்பட்ட சொல்லாயிற்று இப்பிரபந்தங்கள்-
விசதம் -பரபக்தி –விசத தரம் -பர ஜ்ஞானம் –விசத தமம் –பரம பக்தி –
இங்கனே யாகில் -இப்பிரபந்தங்களுக்கு பாட்டும் -சங்க்யையும் -பாட்டுக்கு நாலடி யாகையும்-அஷரங்கள் சமமாகையும் –
எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை பாவினம் -என்றால் போலே சொல்லுகிற பிரபந்த லஷணங்கள் சேர விழுந்தபடி எங்கனே என்னில் —
சோக வேகத்தாலே பிறந்த மா நிஷாத -இத்யாதி ஸ்லோகமானது-மச்சந்தா தேவ -என்கிற ஸ்லோகத்தின் படியே
அத்திக்காயில் அறுமான் -கொசு -போலே -பகவத் விபூதியில் ஏக தேச ஸ்தானனான பிரம்மாவின் பிரசாதத்தாலே
சர்வ லஷணோபேதம் ஆனால் போலே
பகவத் பிரசாதம் அடியாகப் பிறந்த இப்பிரபந்தங்களுக்கு இவற்றில் கூடாதது இல்லை

ப்ரச்னம் உத்தரம் -கேள்வி பதில் மூலம் பிரபந்த ஏற்றம் அருளிச் செய்கிறார் –
இவை என்ன கோடியிலே அடைக்கப் பட்ட பிரபந்தங்கள் –
இவை பிறந்தபடி எங்கனே –
இவற்றுக்கு மூலம் என் –
ஒன்றை மூலமாகச் சொன்னால் அது மூலம் என்று அறியும் படி எங்கனே
இவை பிரமாணம் என்று அறிவது எத்தாலே
இவற்றுக்கு பிரதிபாத்யர் யார்
இப்பிரபந்தங்கள் கற்கைக்கு அதிகாரிகள் யார்
இவற்றுக்கு போக்தாக்கள்–அனுபவிப்பவர்கள் – யார்
சப்த அர்த்த ரசிகர் -ஸ்வயம் பிரயோஜனமாக –கேட்டு ஆரார வானவர்
அதிகாரிகள் -என்றது சாதனமாக -திருவடியை அடைவிக்கும் -மோஷ சாதனம்
இவை எதுக்காகப் பண்ணப் பட்டன
என்று சில அவ்யுத்பன்னர் கேட்க –
இவை–என்ன கோடியிலே — புருஷார்த்த ப்ரகாசகமான பிரபந்தங்களில் பிரதான பிரபந்தங்கள் –
பிறந்தபடி–பகவத் குண அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷ பலாத்காரம் சொல்லுவிக்கப் பிறந்தன –
பகவத் பிரசாத லப்தமான திவ்ய சஷூர் மூலமாகப் பிறந்தன வென்னும் இடம் ஸ்வர வசன வ்யக்திகளாலே அறியலாம் –
ஸ்வர -வசனங்கள் -அருளினான் -தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் -திருமாலால் அருளப்பட்ட சடகோபன்
ஸ்வரம் —ஸ்வ வசனங்கள் -ரேபம்- பிரதம புஸ்தக லேக்கர் தப்பாக -கந்தாடை நாயன் நிர்வஹித்தார்-
ஸ்வர -விசாரம் -ஆராய்ந்து பார்த்தால் –யதா ஸ்ருத பாட -கேட்டதையே -ஸ்வரத்தில் இருந்தும் இவ்வர்த்தம் கிட்டும் -பகவத் பிரசாதத்தால் வந்தது என்னுமத்தை –
சேவா கால ஸ்வரம் அரையர் சேவை -ஸ்வரம் அறிவோம்
வேதாந்த வித்துக்களான சர்வ சிஷ்டர்களும் பரிக்ரஹிக்கையாலும் -சம்சாரத்தில் உத்வேகம் பிறந்தாருக்கும் ஜ்ஞாதவ்யமான
பிரமாணம் –வேதார்த்தங்களை-அர்த்த பஞ்சகத்தை – இப்பிரபந்தங்களிலே காண்கையாலும்-இவை உத்க்ருஷ்ட தமமான பிரபந்தம் என்று அறியலாம்
எல்லாருக்கும் பரம பிராப்ய பூதனான ஸ்ரீ யபதி இப்பிரபந்தங்களுக்கு பிரதி பாத்யன்-திருமாலவன் கவி –
சம்சாரத்தில் ருசி யற்று -எம்பெருமான் திருவடிகளிலே எப்பேர் பட்ட அடிமைகளும் செய்ய வேணும் என்று இருக்குமவன் இவை கற்கைக்கு அதிகாரி
முமுஷூக்களும் -முக்தரும் -நித்தியரும் -எம்பெருமான் தானும் இவற்றுக்கு போக்தாக்கள் -முக்தர் -தொண்டர் அமுது உண்ண –நித்யர் -கேட்டு ஆரார தென்னா –அவன் அனுபவம்
பகவத் கைங்கர்யம் ஆகிற நிரதிசய புருஷார்த்தம் இன்னபடிப் பட்டு இருக்கும் என்று அறிவிக்கைக்காகப் பிறந்த பிரபந்தங்கள் இவை –
என்று சிரோ பாசித சத் வ்ருத்தராய் இருப்பார்கள் பரிஹரித்தார்கள் -சிர உபாசித்த சத் வ்ருத்தர் -மோர் முன்னர் ஐயர் போல்வார்-

1–நிஷித்த பாஷை யாகையாலும் –2–இப்பிரபந்தங்களை வேதத்தில் அநதிகாரிகள் -பெண்கள் சதுர் வர்ணத்தார் -அப்யசிக்கக் காண்கையாலும்-
3–கலி காலத்தில் ஜ்ஞானத்துக்கு அடைவில்லாத சதுரத்த வர்ணத்திலே பிறந்தார் ஒருவராலே நிர்மிதங்கள் ஆகையாலும் –
4–தேசாந்தரங்களில் இன்றிக்கே ப்ராதேசிகங்கள் ஆகையாலும்
5–அவைதிகர் பரிக்ரஹிக்கையாலும்
6–ஸ்ருதி ஸ்ம்ருதி விருத்தமான காம புருஷார்த்தத்தை பல இடங்களிலே பேசுகையாலும்
7–ஸ்ருதி ஸ்ம்ருதி களிலே புருஷார்த்ததயா சொல்லப் படுகிற ஐஸ்வர்ய கைவல்யங்களைக் காற்கடைக் கொள்ளுகையாலும்
இப் பிரபந்தங்கள் பிரமாணம் ஆக மாட்டா என்று வைதிக கோஷ்டியில் பழக்கம் இல்லாதார் சில அறிவு கேடர் வந்து பிரத்யவஸ்தானம் பண்ண –

மாத்ச்ய புராணத்திலே பாஷாந்தரத்தாலே பாடா நின்றுள்ள கைசிகாதிகளை தன நாட்டின் நின்றும் போக விட்ட ராஜாவைக் குறித்து
ஹரி கீர்த்திதம் வினைவாந்யத் ப்ராஹ்மணேந நரோத்தம பாஷாகா நம் காதவ்யம் தஸ்மாத் பாவம் த்வயா கருத்தும் -என்ற
யம வசனத்தின் படியே பாஷா நிஷேதம் பகவத் வ்யதிரிக்த விஷயங்களிலே யாகையாலும்
-அங்கன் அன்றியே பாஷா மாத்ர அவதியாகவிதி நிஷதங்களை அங்கீகரிக்கில் சமஸ்க்ருத பாஷையான பாஹ்ய சாஸ்த்ராதிகளை அப்யசிக்க வேண்டுகையாலும்
பேச்சுப் பார்க்கில் கள்ளப் பொய் நூல்கள் பிறவி பார்க்கில் -ஐஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழிப்புண்ணுமே –
ஆழ்வார் தம்முடைய கிருபாதிசயத்தாலே வேதத்தில் அநாதிகாரிகளான ஸ்திரீ சூத்ராதிகளும் இழவாத படி
வேதார்த்தை திராவிட பாஷையாக அருளிச் செய்கையாலும்
எதிர் சூழல் புக்கு அநேக ஜன்மங்கள் எம்பெருமான் தானே தொடர்ந்து விஷயீ கரிக்கைக்கு அடியான பாக்யத்தை யுடையராய்
நிரந்தர பகவத் கடாஷ பாத்ர பூதருமாய் -தத்வ ஹிதங்களிலே நிபுணராய்-அவற்றினுடைய உபதேசத்திலும் பிரவ்ருத்தராய்
விதுர சபர்யாதிகளிலே -ஆதி சூத பௌரானிகர் தர்ம வியாதன் போல்வார் -விலஷணரான ஆழ்வார் பக்கலிலே இப்பிரபந்தங்கள் பிறக்கை யாலும்
-இப்பாஷை நடையாடி சிஷ்ட பிரசுரமான தேசங்கள் எங்கும் உண்டாய் பாஷாந்தரங்களிலே பிறந்து விலஷணராய் உள்ளாறும்
இவற்றின் வைலஷண்யத்தைக் கேட்டு இவற்றை அப்யசிக்கைக்கு ஈடான இப்பாஷை நடையாடும் தேசத்திலே பிறக்கப் பெற்றிலோமே என்று இருக்கையாலும்
-இவற்றின் நன்மையைக் கண்டு வேதார்த்த ஜ்ஞானத்துக்கு அடைவில்லாத அவைதிகரும் கூட பரிக்ரஹிக்கை ச்லாக்யாத ஹேது வாகையாலும் –
வேதனம் என்றும் -உபாசனம் என்றும் உபநிஷத்துக்களில் சொல்லுகிற பக்தியை இவற்றில் காமமாகச் சொல்லுகையாலும்
வெல்லக்கட்டி -தடவி கொடுப்பாரை போலே ருசி பிறக்க -கண்ணனுக்கே ஆமது காமம் –-ஐஸ்வர்ய கைவல்யங்களை தூஷித்தது அல்ப அச்த்ரத்வாதி தோஷத்தாலே யாகையாலும் –என்று தோஷங்களுக்கு
காரணம் இல்லை என்று அருளிச் செய்கிறார் — மேலே இதற்க்கு உண்டான ஏற்றங்களை அருளிச் செய்கிறார்
1–ப்ரதிபாத்யனான எம்பெருமானுடைய மகாத்ம்யத்தாலும் –
2–எம்பெருமானை ஸூ ஸ் பஷ்டமாக பிரதிபாதிக்கையாலும் –
3-பக்திக்கு உத்பாதகங்கள் ஆகையாலும்
4– உத்பன்னையான பக்திக்கு வர்த்தகங்கள் ஆகையாலும்
5—ஸ்ரவணாதிகளிலே அப்போதே நிரதிசய ப்ரீதி ஜனகங்கள் ஆகையாலும்
6– இவற்றில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு வேதத்தில் பல இடங்களில் சாஷியாகச் சொல்லுகையாலும்
7–ப்ரஹ்ம காரண வாதத்தாலும்
8 ப்ரஹ்ம ஜ்ஞானான் மோஷத்தைச் சொல்லுகையாலும்
புருஷார்த்த விஷயமான பிரபந்தங்கள் எல்லா வற்றிலும் இப் பிரபந்தங்களை த்ருடதர பிரமாணங்களாக உப பாதித்து வைதிக கோஷ்டியில்
அபியுக்தர் ஆனவர்கள் பரிஹரித்தார்கள் –

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ  நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ  நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: