பகவத் விஷயம் காலஷேபம் -17-அருள் கொண்டாடும் அடியவர் இன்புற–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-

பொருள் மட்டுமே ஆழ்வார் அருளினார் -மறை பேச மாட்டாரே –
அருள் கொண்டு ஆடும் -ஆடும்படி ஆனந்திக்க –
அவ்வருமறை– அ அருமறையின் -அந்த உயர்ந்த அருமையான மறையின் –
உலகினில் மிக்கதே-லோகத்தில் பெரியது -லோகத்தை விட பெரியது

எட்டாம் பாட்டில் –
எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு ஹேது என் -என்னில் –
ஆழ்வாருடைய அருள் -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும்
கபளீ கரித்து இருக்கையாலே -என்கிறார் -சூழ்ந்து –அதனில் பெரிய என் அவா –அறச் சூழ்ந்தாயே –

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –
ஆழ்வாருடைய கிருபையை கீழில் பாட்டிலே -எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளை -என்று-
இவர் சொல்லக் கேட்டிருக்குமவர்கள் பகவத் கிருபை யன்றோ நாட்டார் அடையக் கொண்டாடுவது -நீர் ஆழ்வாருடைய கிருபையை
எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு அடி என் என்ன
பகவத் கிருபையையும் ஆழ்வார் கிருபையும் ஆனால் ப்ராப்தி சித்திக்கும் அன்று அன்றோ பகவத் கிருபை வேண்டுவது –
பிராப்திக்கு -ஆத்மா ஞானமும் அப்ரதிஷேதம் விலக்காமையும் வேண்டும் –
சேஷத்வ ஞானம் வந்து பாரதந்த்ர்ய ஞானமாக மலர்ந்து -இசைந்து விலக்காமை யும் வேண்டுமே –
அந்த ப்ராப்தி யுன்டாவது ஜ்ஞானத்தாலே அன்றோ -அந்த ஜ்ஞான சித்தி ஆழ்வாராலே யன்றோ -ஆகையாலே
ஆழ்வார் கிருபை யன்றோ லோகத்தில் விஞ்சி இருப்பது என்கிறார்
பிராப்தி ஜ்ஞான சாபேஷமாய் இருக்கும் -ஜ்ஞானம் ப்ராப்தி சாபேஷமாய் இராது
கீழே நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் -என்று தம்முடைய புன்மையைச் சொல்ல அந்தப் புன்மை ஏது என்ன
-அத்தை நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன் எலாம் -என்று இரண்டு வகையாகப் பேசி
அநந்தரம் -பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்று அத்தை போக்கின படியைச் சொல்லி போக்கின பிரகாரத்தை இப்பாட்டிலே சொல்லுகிறார் –

அநாத்மன் யாத்ம புத்தியையும் அபோக்யங்களில் போக்ய புத்தியையும் அத்யாத்ம ஜ்ஞானத்தாலே போக்க வேணும்
ஆச்சார்யன் ஜ்ஞான பிரதானம் பண்ணின வாறே -அந்த ஜ்ஞானம் மேல் உண்டான கர்மார்ஜனத்தை மாற்றும்
முன்பு உண்டான அவித்யையாலே ஆர்ஜித்து வைத்த கர்மங்களை ஈஸ்வரன் போக்கும்படி பண்ணுவதுமது-
சங்கல்பஜத்தை இவன் போக்கும் -கர்மஜத்தை அவன் போக்கும் -அவன் போக்குகைக்கு அடி இவன்
சங்கல்ப ஜ -சிஷ்யன் மனசால் நினைந்த மானஸ பாபங்களை போக்கும் -ஆச்சார்யர் போக்கும்
கர்மஜ -அவன் போக்கும் கர்மங்கள் செய்யும் பாபங்களை
ஜ்ஞான சித்தியைப் பண்ணிக் கொடுக்கையாலே இ றே
அத்தைப் பற்ற இ றே அம்ருதச்ய ஹி தாதானம் தமாசா பாரம் தர்சயதி சனத்குமார -என்றும் ஆச்சார்யனைச் சொல்லுகிறது –

எனக்கு அத்யாத்ம ஜ்ஞானத்தைப் பிறப்பிக்கக் கடவதாக வேதார்த்தங்களைத் திருவாய் மொழி முகத்தாலே வெளியிட்டு
அருளினார் என்னப் பார்த்து -அத் திருவாய்மொழி பாடினதற்கு வேறேயும் ஒரு பிரயோஜனம் சொல்லுகிறார் –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற–ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –
சேஷ பூதனுக்கு ஆனந்திக்கையே ஸ்வரூபம்
சேஷ பூதராகையும் ஹ்ருஷ்டராகையும் வேறு இல்லை காணும்
இவன் அருளை அனுசந்தித்து ஹ்ருஷ்டா என்கிறபடியே ஹ்ருஷ்டராம் இத்தனை –

வருளினான் அவ் வருமறையின் பொருள்
பரம ரஹஸ்யமான வேதார்த்தத்தை நிர்ஹேதுகமாகத் தன் பக்கல் ஆசாலேசம் உடையார் வாழும் படி
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யனாய் நின்று வெளியிட்டான்
வேதங்கள் மறைத்த அர்த்தத்தை தீரோத்தகன் ஆகையாலே பிரகாசிப்பித்தான்

உபநிஷத் -ஸ்ரீ கீதாசார்யர் -ஆழ்வார் அருளினார் என்றவாறு –
நடு முற்றத்தில் இட்டு பதன் பதன் என்றானே -திருவாய்மொழிக்கு உள்ளுறை குறிப்பு போலே ஸ்ரீ கீதை –

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
ஆழ்வாருக்குத் திருவாய் மொழிக்கு உள்ளுறை போலே காணும் அருளிச் செய்தது
இருவருக்கும் முழு நோக்காகப் பெற்றால் ஆழ்வாருக்கு செய்யப் போகாது இல்லை யாகாதே
வேத அதிகாரிகளுக்கு உஜ்ஜீவமாம் படி எம்பெருமான் செய்தது -அநாதிகாரிகளும் க்ருதார்த்தராம் படி ஆழ்வார் அருளிச் செய்தது

அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
எம்பெருமான் அருளினது ப்ராதேசிகம் –குருஷேத்ரத்தில் –ஆழ்வார் அருள் சார்வத்ரிகம்
பாலேய் தமிழ் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்றும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் -என்றும் இ றே சொல்லிற்று

அருள் கொண்டாடும் அடியவர் –
இவ் வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் –
அதுவும் அவனது இன்னருள் -என்றும் –
அருள் பெறுவார் அடியார் தம் அடியன் -என்று இருக்கும் இவர் தம்மைப் போலே –
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றும் –
நின்னோடும் ஒக்க வழி பட வருளினாய் -என்றும் –
அருள் புரிந்த சிந்தை -என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் -என்றும்
அருளாது ஒழியுமே -என்றும் –
சீறி அருளாதே -கொண்ட சீற்றம் ஓன்று உளது –என்றும்
இப்படிகளால் அவன் அருளைக் கொண்டாடும் அடியவர் –
இப்படியே பகவத் பிரசாதத்தையே கொண்டாடி போருமவர்கள் –
பகவத் பிரசாத ஹேதுவாக -ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக
ஆதரிக்கும் அவர்கள் அன்றிக்கே –
கேவல பகவத் ப்ரசாதமே உஜ்ஜீவன ஹேது -என்று இருக்கும் அவர்கள் –
தம் தாம் பக்கல் உள்ள ஆனுகூல்யங்களை பிரசாத பலமாக நினைத்து இருக்கும்
அது ஒழிய -பிரசாதமாக நினைத்து இராதவர்கள் –
கிருபையாலே பக்தி பெற்றோம் -பக்தியால் கிருபை பெற வில்லை -கிருபா ஜன்யம் -கிருபா ஜனகம் இல்லை
-பக்தி கிருபையின் பலம் என்றவாறு
பிரசாதத்தால் சரணம் என்கிறோம்
சரணம் அடையாதவர் பிரசாதம் பெற வில்லையா -அவன் அனைவருக்கும் பொழிபவன் அன்றோ
வரவாறு ஒன்றும் இல்லையே -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு உகந்து
நிர்ஹேதுக கிருபை -உபாயம் எதிர்பார்க்காமல் -அதிகாரி எதிர்பார்ப்பார் -ஆசை யுடையோர்க்கு எல்லாம் -தகுதி வேண்டும் –
இச்சை உபாயம் இல்லை அதிகாரி விசேஷம் –போஜனத்துக்கு ஷூத்து போலே -பல அனுபவ யோக்யதா —
ஆண்கள் பள்ளிக்கு ஆணை எதிர்பார்ப்பார்கள் -புருஷ சாபேஷமும் புருஷகார சாபேஷமுமாய் இருக்கும்
இவர் இப்படி நினைத்து இருப்பது மற்றைய ஆழ்வார்களை இ றே –
ஆழியான் அருளே -என்றும் –
நின் அருளே புரிந்திருந்தேன் -என்றும் இ றே அவர்கள் பாசுரங்கள் –

அடியவர்
சேஷவ்ருத்தி புருஷார்த்தம் என்னும்படி ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தவர்கள் -சேஷத்வ ஜ்ஞானம் சேஷவ்ருத்தி சேஷம் இ றே
அருள் கொண்டாடும் அடியவர்
அப்புருஷார்த்ததுக்கு சாதனமும் அவனுடைய கிருபை என்று இருக்கும் அவர்கள்
ஆகையாலே கைங்கர்யம் புருஷார்த்தம் -கருணை சாதனம் என்று இருக்குமவர்கள்

அருள் கொண்டாடும் –அருளையே கொண்டாடும் -என்று –
அல்லாத குணாந்தரங்களில் காட்டில் கிருபையைக் கொண்டாடுமவர்கள்
1–ஈஸ்வரனையும் கொண்டாடுகிறது தான் உண்டான போது ஜகத் உண்டாய் -இல்லாத போது இல்லையாம் என்று இட்டு இ றே
அப்படியே க்ருபா குணம் இல்லாத போது குணாந்தரங்களும் அகார்யகரமாய் -இது கூடினவாறே கார்யகரமாய் இருக்கையாலே
இத்தையே கொண்டாடா நிற்பவர்கள்
2–அப்படியே தேவ தாந்தரங்களில் காட்டில் ஈஸ்வரன் கொண்டாடத்துக்கு விஷயம் ஆனாப் போலே யாய்த்து
குணாந்தரங்களில் காட்டில் இது கொண்டாடத்துக்கு விஷயமான படி –
3–மனஸ் தத்வம் இந்த்ரிய அந்தர்பூதமாய் இருக்கச் செய்தேயும் இது சஹகாரி யாகாத போது இந்த்ரிய வியாபாரம் கூடக் காணாமை
லோகத்திலே கண்டு போகிறாப் போலே இந்த கிருபையும் குணாந்தரப்பூதம் ஆகிலும் இது சஹ கரியாத போது
சேதனர் அளவில் குணாந்தரங்கள் ஜீவிக்கை யாகாது
4–ஸ்வரூபமும் நித்யம் குணங்களும் நித்யங்களாய் இருக்கச் செய்தே இவனுடைய சம்சார சம்பந்தம் ஒழுக்கு அறாமல் நடக்கையாலே
அத்தை மாற்றி இவனை உத்தரிப்பித்தது க்ருபா குணம் ஆகையாலே அத்தை யாய்த்து முமுஷுக்கள் கொண்டாடுவது –
சக்தனுக்கும் கிருபை வேணும் -அசக்தனுக்கும் கிருபை வேணும் –

சக்தனுக்கு நம்மைப் பெறுகைக்கு இப்படி வருத்தப்பட்டு சாதன அனுஷ்டானம் பண்ணுவதே என்னுமவன் நெஞ்சில் ஈரப் படாய்த்து பல சேஷம் ஆவது
அந்த ஈரப் பாடாய்த்து அவனை ப்ரீதனாக்குவதும் –
அசக்தனுக்கு –நார்ச்ச நாதௌ ச்துதௌ ந ச -என்றால் க்ருபா மாத்திர மநோ வ்ருத்தி ப்ரசீத -என்னும்படி இருக்கும்
அங்கு அவனுடைய அனுஷ்டானம் கண்டு பிறக்கிற கிருபை
இங்கு ஆகிஞ்சன்யம் கண்டு பிறக்கிற கிருபை
ஸ்வ கதமான தொன்று சாதனம் ஆக வேண்டாவோ–அவன் கிருபை – -பரகதமான குணம் சாதனம் ஆம்படி என் என்ன பாதகமே யாகிலும்
அருள் பெறுவார் அடியார் என்கிறபடியே -ஆஸ்ரயம் அவனாய் விஷயம் இவனாய் இருக்கும்
-அருளுக்கு இருப்பிடம் அவன் இலக்கு அடியார் என்றவாறு –அருள் அவனது பெறுவார் அடியார் —
-பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு —உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –

அருள் கொண்டாடும்–அருள் கொண்டு ஆடும் — அடியவர்
அன்றிக்கே அருளைத் தங்களுக்கு அவஷ்டம்பமாகக் கொண்டு நடையாடுமவர்கள் –
இவனுக்கு ஊன்று கோலானதும் விரோதிகளைச் சேதித்துத் தருவதும் அருளே யாய்த்து
அருள் என்னும் தண்டு -என்றும் -அருள் என்னும் ஒள் வாள் என்றும் -சொல்லுகிறபடியே அவர் தம்முடைய
ப்ராஹ்மண்யம் தோற்றத் தண்டு என்கிறார் –பிராமணிய குணம் தோற்ற -உபசாந்தர் -பரம சாந்தர்
இவர் தம்முடைய ஷாத்ரம் தோற்ற ஒள் வாள் என்கிறார் –இவர் ஷத்ரியர் அல்லர் -கோபம் கொண்டவர் என்றவாறு —
ஆகையால் இவர்கள் பக்த்யாதிகள் அவஷ்டம்பமாக்குதல் -அசங்க சஸ்த்ரத்தைக்-விரக்தி யாகிற வாள் – கொண்டு திரிதல் செய்யுமவர்கள் அல்லர்
ஊன்று கோல்- வெட்டும் கருவி -இரண்டும் அருளே பிரபன்னருக்கு -பற்றற்ற சஸ்த்ரம் -வைராக்கியம் –
கோடரி -அசங்கம்-பற்ற அற்ற தன்மை கொண்டே சம்சாரம் போக்க வேண்டும் -அசங்க சஸ்த்ரம் த்ருடமான சித்வா -நிலை நின்ற வைராக்கியம் -ஸ்ரீ கீதை
அவனும் தனக்கு பலாதி-ஞானம் இத்யாதி- குணங்கள் உண்டே யாகிலும் உபகரண பூர்த்தி உண்டே யாகிலும் இக்கிருபை கொண்டாய்த்து பல ப்ரதன் ஆவது
ஆகையாலே யாய்த்து பாழியான் ஆழியான் அருளே நன்று என்ன வேண்டிற்று -சென்று நின்று ஆழி தொட்டானை -கிருபை கொண்டே -நின்று யோசித்து அருளினான் –

இன்புற
அவர்கள் பரிதியைப் பெற அவர்கள் பண்டே அருள் கொண்டாடும் அடியவரே யாகிலும் –1–இவ்வர்த்தம் ஆப்தரான
ஆழ்வார் அருளிச் செய்யப் பெற்றோமே என்று ப்ரீதர் ஆனவர்கள்–2– ராக சித்தம் விதி சித்தமாகப் பெற்றோமே என்று ப்ரீதர் ஆனவர்கள் –
திரு ஆபரணம் ஆகாரம் உண்டே திவ்யாயுதங்களுக்கு என்று காட்டி அருளினதும் இன்புறுவோம் அன்றோ –

இன்புற –
ஆநந்த நிர்பரராக –
எண்ணாதனகள் எண்ணு நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப -என்கிறபடியே –
சாதநத்தில் அந்வயம் இன்றிக்கே -பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கும்படியாக –
எண்ணாத-எண்ணி முடிக்க முடியாத -குணங்கள் -சிருஷ்டி அவதார முகத்தாலே செய்த கிருஷி பலன்
-காருணிகன்-உபாயமாக பண்ண ஒன்றும் இல்லையே விஸ்வாசம் வரும்
மார்பிலே கை வைத்து உறங்கலாம் -உபாயமாக இல்லை -கைங்கர்யமாக செய்ய வேண்டும் –

வருளினான் அவ் வருமறையின் பொருள் –
அவ்வரு மறை –
பிரசித்தமாய் -பெறுதற்கு அரிதாய் இருக்கிற மறை -அதாகிறது –
வேத ரஹஸ்யமான உபநிஷத் இ றே –
அவ்வரு மறையின் பொருளை அருளினான் –
நித்ய சத்வஸ்தர்க்கு அல்லது தோன்றாத உபநிஷத் அர்த்தத்தையும் அருளிச் செய்தார் –
பரம சாத்விகர்க்கு நித்தியமான ஐஸ்வர்யமும் -உபநிஷத் ரஹஸ்யமே   இ றே-
சாத்விகர்களுக்கு -வேதம் -அந்தணர் மாடு –இவர் சொல்லி சாத்விகர் ஆக்குவார் -மறைத்து வைத்தவற்றை அருளிச்செய்வார்
சா ஹி ஸ்ரீ ரம்ருதா சதாம் -என்னக் கடவது இ றே -அதாவது சர்வ ரச என்றும் ரசோ வை ச -என்றும்
சொல்லுகிற விஷயத்தை தத் ப்ரசாதத்தாலே லபிக்கை
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்றும் தத்தேது வ்யபதேசாச்ச -1-1-15- ப்ரஹ்ம ஸூ த்ரம்-ஆனந்தமயன் என்பதை அறிந்தோம்
ஆனந்தம் அவனால் வந்தது -ஜீவ பரமாத்மா தத்வம் வேற என்று காட்டி அருள –

வருளினான் அவ் வருமறையின் பொருள்
மறையின் அந்த அரும் பொருளை அருளினான்
அப்பொருளை
கருணை சாதனம் -கைங்கர்யம் புருஷார்த்தம் என்கிற அப்பொருளை
வழுவிலா வடிமை செய்ய வேண்டும் -எனபது -அடியை யடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்பதே இவற்றை உபதேசிக்ககை
பொருளை அருளினான்
தாம் வாக்ய உச்சாரணம் பண்ண மாட்டாமையாலே பொருளை அருளினார்
உபதேச ரத்ன மாலையில் தாம் ஓம் வியக்தம் -பரம பிரன்னர்களுக்கு தான் என்பதால் இங்கே –
அ -அரும் பொருளை -அருளினான் –
ப்ரவ்ருத்தி சீலர்க்கு -உட்பட அரிதான வர்த்தத்தை நிர்த்தோஷரான சத்துக்களுக்கு அருளினார்
உய்யக்கொண்டார் -சாதனாந்தரம் மட்டும் பற்றிய ராமானுஜர் சிஷ்யர் -சரணம் செய்ய இசைய -வித்வான் என்பதால் இசைந்தீர் பகவத் கிருபை இல்லாமல் இழந்தீர்
அது தான் ஸ்வார்த்தத்தை போதிப்பியா நிற்க இவர் வெளியிட வேண்டிற்று என் என்ன
மறை
ரஜஸ் தமஸ் பிரசுரர்க்கு ஸ்வார்த்தத்தை மறைத்து சத்வ பிரசுரர்க்கு போதிக்கும் படி
மறையாய நால் வேதம் ஆகையாலே அவ்வர்த்தத்தை வெளியிட்டார் –
விருப்பம் உள்ளாருக்கு வேதம் –திருவாய்மொழி சொல்லி விருப்பம் விளையும் -வாசி உண்டே

அருள் கொண்டு –
இவர் தாம் ஸுவ புத்தியாலே அருளிச் செய்தார் அன்று –
மயர்வற மதிநலம் அருளினான் -என்கிறபடியே -ப்ரசாத லப்த ஜ்ஞாநத்தை முதலாகக்
கொண்டு -தத் ப்ரேரிரதராய் கொண்டு ஆயிற்று அருளிச் செய்தது –
என்னாகியே தப்புதலின்றி தன் கவி தான் சொல்லி -என்கிறபடியே
பிறரோபாதி -கவி பாடுகிற் தாமும் -விஸ்மிதர் ஆம்படி நிரவத்யமாக இ றே
கவி பாடுவித்துக் கொண்டது –

ஆயிரம் இன் தமிழ் பாடினான் –
சதுர்விம்சாஸ் சஹஸ்ராணி ஸ்லோகா நாமுக்தவான் ருஷி -என்றாப் போலே-ஆயிரமாக ஆயிற்று பாடிற்று –
500 சர்க்கம் —600 சர்க்கம் உத்தர காண்டம் சேர்த்து -24000 ச்லோஹம் ஏழு காண்டங்கள் –
ஓர் ஆத்மாவுக்கு ஹித அம்சத்துக்கு ஒரோ பாட்டே அமையும் படி இ றே இருப்பது
-ஐ ஐந்தும் முடிப்பான் –24 அசேதனம் முடிக்க கைவல்யமும் சேர்ந்து 25 முடிப்பான்

இன் தமிழ் பாடினான் –
துர் அவகாஹமான வர்த்தத்தை -பாட்யே கேயே ச மதுரம் -என்கிறபடியே-ரசகநகமகவும் -சர்வாதிகாரமாம் படியும் பாடினார் –
பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொன்ன சொல்மாலை –

இவர் இவ்வர்த்தத்தை வெளியிடுகிற விடத்தில் என்ன சப்த முகத்தால் வெளியிட்டது என்ன
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அந்த சஹச்ர சாகா -சாம வேதம் -பிரதி பாதிதமான அர்த்தத்தை சஹச்ர காதா முகத்தாலே வெளியிட்டார்
தமிழ் பாடினான்
துர்ப்போதா வைதிகாச்சப்தா -என்று துர்ப்போதமான வேத சப்தம் போல் அன்றிக்கே திராவிட பாஷையாலே வெளியிட்டார்
ஆயிரம் இன் தமிழ் பாடினான்
பிரணவம் போல் அதி சங்க்ரஹம் ஆதல் மஹா பாரதம் போலே அதி விச்த்ருதமாதல் அன்றிக்கே ஆயிரம் இன் தமிழாகப் பாடினார்
இன் தமிழ் பாடினான்
அவன் சொன்னதும் அறியலாய் இருக்கச் செய்தே அது வரை முறுகலாய் இருக்கும் -ஸ்ரீ கீதா வ்யாவ்ருத்தி-
இது செவிக்கு இனிய செஞ்சொல்லாய் இருக்கும்

பாடினான்
வேட்கையால் சொன்ன பாடல் -என்கிறபடியே தம்முடைய அனுபவ ஆனந்த சாகரத்துக்கு பரிவாஹ சுப வசனங்களைப் பண்ணினார்
கிருஷ்ணா அனுபவ ஆனந்த சாகரம் -பராங்குச பயோதி -பரிவாஹா சுப வசனங்கள்
ஆனால் ஒரு புருஷ புத்தி மூலமாக வந்த இது பிரமாணமாம் படி என் என்ன -தாம் சொன்னாராகில் அன்றோ அது சொல்ல வேண்டுவது
அவனுடைய அருள் மூலமாகச் சொன்னவர் ஆகையாலே அது சொல்லப் போகாது
மோஹ சாஸ்த்ராணிகாரய -என்கிற அந்த நிக்ரஹம் அடியாக வந்தது அன்றே இது
தெரியச் சொன்ன ஆயிரம் ஆகையாலே அருள் அடியாக வந்தாயிற்று
ஆம் முதல்வன் இவன் என்று தற்றேற்றி என் நா முதல் வந்து புகுந்து நல்லின்கவி தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன
என் வாய் முதல் அப்பனை -என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இ றே
தன் புகழ் ஏத்த அருளினான் என்று ஆழ்வார் அருள் கொண்டு அவருடைய புகழை ஏத்தினாப் போலே யாயிற்று
ஆழ்வாரும் அவனுடைய அருள் கொண்டு ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்தைப் பாடிற்று –
இவர் தாம் நெடியான் அருள் சூடும் படியான் ஆகையாலே அருள் ஒழிய இவர்க்குக் கைம்முதல் இல்லையே –

அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
அவருடைய அருள் அன்றோ இந்த லோகத்தில் அதிசயம் ஆயிற்று
பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
பாட்டும் அன்று
பாடினவரும் அன்று
பாட்டுக்கு அடியான அருளும் அன்று
இவர் அருள் யாய்த்து
இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
வரை முறுவலான ஸ்ரீ கீதை சொன்னவனுடைய அருள் அன்று
அவன் நெறி எல்லாம் எடுத்துப் பாடின இடத்திலும் அகப்பட்டாரும் அகப்படாதாருமாயிற்று
இவர் அருள் அப்படி இன்றியிலே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றப் பண்ணிற்று ஆயிற்று
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்தொரு மூர்த்தி
நெறி யுள்ளி யுரைத்த அம் பகவன் என்று
தான் தோன்றியான தன்னுடைய ஜ்ஞானம் கொண்டு சொன்னது அன்றிக்கே அவனுடைய அருள் கொண்டு பாடின
தன்னேற்றமும் உண்டே இவர் அருளுக்கு

இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல் -என்று அந்த லோகத்தில் இவருடைய பாட்டு மிக்கப் போலே
இந்த லோகத்தில் இவருடைய அருள் மிக்கது
இங்கு அருள் மிக்கு அங்கு போகம் மிகும் படி இ றே லோக ஸ் பாவங்கள் இருப்பது
இவ்வுலகினில் மிக்கதே
அவனுடைய அருள் ஆழ்வார் அளவில் சுவரி விட்டது
இவருடைய அருள் சாம்ராஜ்யம் பண்ணா நின்றது
அவனுடைய அருளைக் கொண்டாடுமவர்கள் அடியவர்களாய்
இவர் அருள் லோகம் அடங்கக் கொண்டாடும் படி தேஜிஷ்டமாயிற்று
ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
ஸ்ரீ கீதை சொன்ன கிருஷ்ணன் என்றால் கை எடுப்பார் இல்லை
திருவாய்மொழி பாடின ஆழ்வார் உடைய பேரைக் கேட்க இருந்ததே குடியாகக் கை எடா நின்றது
திருவாய் மொழி கேட்டால் ஈஸ்வர அபிமானிகளைக் கை எடார்கள் இ றே

கண்டீர்
இவ்வம்சம் நான் சொல்ல வேண்டி இருந்ததோ
ப்ரத்யஷம் அன்றோ
கண்டீர்
அவனுடைய அருள் சாஸ்திர கம்யம் -இது ப்ரத்யஷ சித்தம்
இவ்வுலகினில் –கண்டீர் –ஆழ்வார் அருளை இவ்வுலகிலினிலே காணலாமே –
நானே -மதுரகவி ஆழ்வார் ஆனேனே -பார்த்து கொள்ளலாமே –
இப்போது இவ்வுலகத்தில் கண்டி கோளே
அந்த லோகத்தில் போனால் அங்குக் காண்கிறிகோள் -ஸ்ரீ வைகுந்தம் ஓர் அரசு -ஆழ்வார் -விண்ணோர் நாடு –
இவ்வுலகினில் மிக்கது
இந்த லோகத்தையும் ஆழ்வாருடைய அருளையும் சீர் தூக்கிப் பார்த்தால் அதிலும் விஞ்சி இருப்பது இவர் அருள் அன்றோ
கடல் மண் எல்லாம் விலையோ வென மிளிரும் படி இ றே இவருடைய கண்ணுடைமை இருப்பது -அருள் கடாஷம் மூலம் தானே

பாடினான் அருள் கண்டீர்-
மயர்வற மதிநலம் அருளினான் -என்னும்படியான அருள் அல்ல –
அது தன்னையும் விளாக் குலை கொண்டு இருக்கும் அருள் இ றே -ஆழ்வார் அருள் –
ஈஸ்வரன் கை விட்ட ஆத்மாக்களிலும் -அவர்களுடைய துர்கதியைக் கண்டு திருத்த
ஒருப்பட்ட படியாலே இவர் அருள் ப்ரத்யஷம் அன்றோ -என்கை

இவ் உலகினில் மிக்கதே –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயதையும் கபளீ கரித்திருக்கை –
அதனில் பெரிய என் அவா -என்று பகவத் விஷயத்தில் தமக்கு உண்டான
அபிநிவேசத்தளவும் போருமாயிற்று என்னளவில் -கிருபையும்

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: