பகவத் விஷயம் காலஷேபம் -16-கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான் -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7-

ஏழாம் பாட்டில் –
ஆழ்வார் தம் பக்கலில் பண்ணின நிர்ஹேதுக விஷயீ காரத்தை கண்டு –
இவ் விஷயீ காரத்துக்கு யோக்யதை உண்டாய் இருக்க நாட்டார் இழக்கைக்கு அடி என் –
என்று அனுசந்தித்து –
இவருடைய பெருமையை அறியாமையாலே இருக்கிறார்கள் -என்று
எல்லாரும் அறியும்படி சொல்லக் -கடவேன் என்கிறார் –

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –
இதில் ஆழ்வார் என்னை அங்கீ கரிக்கிற போதே என்னுடைய துர்க்கதி கண்டு இவன் பக்கல் இவை கிட்டக் கடவது அல்ல
என்று பழையதாய் வலியதான பாபங்களைப் பாறிப் போம்படி பண்ணி யன்றோ கிருபை பண்ணிற்று –
இனி இவற்றுக்கு உயிர் உண்டோ என்று கீழ் உக்த்தத்தைப் பரிஹரித்துக் கொண்டு தன் புகழ் ஏத்த அருளினான் என்று
ஆழ்வாருடைய கிருபை கீழே ப்ரஸ்துதம் ஆகையாலே அவருடைய க்ருபா பிரபாவத்தை திகந்தரங்கள் தோறும் வெளியிடக் கடவேன் என்கிறார் –

குரும் பிரகாசயேந்நித்யம்-என்கிற வித்தய நுஷ்டானம் பண்ணக் கடவேன் என்கிறார்
இனி ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலே –1-பரத்வ புத்தி –2–தேவ தாந்தரங்களிலே பரத்வ புத்தி நிவ்ருத்தி -3-அப்பர வஸ்துவின் பக்கல்
ததீய சேஷத்வ பர்யந்தை யான சேஷத்வ புத்தி —4-விஷயாந்தர விரக்தி- 5-பகவத் விஷயத்தை விச்லேஷிக்கில் தரைப் படும்படியான ப்ராவண்யாதிசயம் –
6–அவன் கை விடில் தமக்குப் புறம்பு போக்கில்லை என்னும் படியான விஸ்வாச அதிசயம் –7—சம்சார பீதி- 8–புருஷார்த்த லாபத்தில் அதிசயித்தவரை
அர்ச்சாவதாரங்களில் உண்டான ப்ராவண்யம் -என்றாப் போலே சொல்லுகிற ஆத்ம குணங்களில் காட்டில்
வீடு மின் முற்றவும் என்று தொடங்கி கண்ணன் கழலிணை ஈறாக பல இடங்களிலும்
சம்சாரி சேதனர் உடைய துர்க்கதி கண்டு பொறுக்க மாட்டாமே உபதேசிக்கைக்கு அடி கிருபை யாகையாலே –
ஞானம் பக்தி வைராக்கியம் ஆழ்வாருக்கு -இவை நமக்கு வளரப் கிருபை வேண்டுமே –
அந்த க்ருபா பிரபாவத்தை அனுசந்தித்து அத்தை எல்லாரும் அறியும் படி வெளியிடக் கடவேன் என்கிறார்
ஈஸ்வரன் நிரதிசய க்ருபாவானாய் இருந்தானே யாகிலும் ஸ்வா தந்த்ர்யா விசிஷ்டன் ஆகையாலே தோஷ தர்சனத்தாலே
உபேஷிப்பதும் ஒரு புடை யுண்டு ஆழ்வார் அப்படி அன்றிக்கே பற்றினாரை இகழாதவர் ஆயிற்று –

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்று இவர் சொல்லக் கேட்டவர்கள் நீர் ஏத்துகிற படி தான் என்ன -ஆழ்வாருடைய கிருபை யன்றோ -என்கிறார் –
ஆழ்வாருக்கு ஞானம் பக்தி விரக்தி கிருபை என்று சில குணங்கள் உண்டு
அதில் ஞானம் -சித் அசித் ஈஸ்வர ரூபமான தத்வ த்ரய விஷயமாய் இருக்கும்
பக்தி -ஈஸ்வர ஏக விஷயமாய் இருக்கும்
விரக்தி தத்வத்ய விஷயமாய் இருக்கும்
ஞானம் த்யாஜ்ய உபாதேய விவேக விஷயமாய் இருக்கும்
பக்தி உபாதேயைக விஷயம்
விரக்தி த்யாஜ்யைக விஷயம்
கிருபை துர்க்கதி விஷயமாய் இருக்கும்
அதில் ஞானம் தத்வ ஞானம் -சாஸ்திர ஜன்ய ஞானம்
-சாஷாத்கார ஞானம் -பிரத்யஷ சமானாகார சாஷத்காரம் இரண்டு வகை ஞானங்கள் -முத்த தசையில் -நேராக -சாஷாத்காரம் ஞானம்
இதில் சாஸ்திர ஜன்ய ஞானம் –உள்வகைகள் உண்டே – பகவத் ஸ்வரூப விஷயம் -குண விஷயம் -விபூத் விஷயம் -விக்ரஹ விஷயம்
என்றாப் போலே பல கப்புகளை உடைத்தாய் இருக்கும்
பக்தியும் -காதல் கடல் புரைய விளைவித்த -காதல் கடலின் மிகப் பெரிதால் -மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்
-அதனில் பெரிய என்னவா -என்னும்படி அநேக பர்வையாய் இருக்கும்
விரக்தியும் -பிரக்ருத ப்ராக்ருத விரக்தி -தேவதாந்திர விரக்தி -தேவதாந்தர பரர் பக்கல் விரக்தி -சப்தாதி விஷய விரக்தி -ஆத்மானுபவ விரக்தி
-பகவத் அனுபவத்தில் எனக்கு என்னுமத்தில் விரக்தி இப்படி பஹூ விதையாய் இருக்கும் –
இவை எல்லாவற்றிலும் விஞ்சியாய்த்து க்ருபா குணம் இருப்பது -ஈஸ்வரனுடைய ஜ்ஞான சக்த்யாதிகளும் சம்சாரிகளுடைய
ரஷண சேஷம் ஆகாமல் பாதன சேஷமாக அவற்றை ரஷணத்திலே புரிப்பித்துத் தருவது கிருபை யாய்த்து –
அந்த ஈஸ்வர கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபையினுடைய தன்னேற்றத்தை இப்பாட்டாலே அருளிச் செய்கிறார் –

என்னுடைய சகல பிரதிபந்தகங்களையும் போக்கின ஆழ்வாருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்தை
ஸூபிரசித்தம் ஆக்குவேன் என்கிறார் -ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –
கண்டு கொண்டு என்னை 
இருந்தான் கண்டு கொண்டு -என்று எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டு இருந்தாப் போலே ஆழ்வாருக்கு அலாப்ய லாபம் ஆகிறபடி
காட்சி இத்தலைக்காக வன்றிக்கே தம் பேறாக இருக்கிறபடி -அந்யோந்யம் அபீவீஷ யந்தே -மகாராஜர் பெருமாள் –

கண்டு கொண்டு-
காணாததை கண்டு கொண்டு -தேடினதை கண்டு கொண்டு –
நான் கிட்டின அளவிலே ஆழ்வாருக்கு உண்டான திரு உள்ளம் நிதி எடுத்தாற் போலே
இருந்தது -என்கிறார் –
தம்மைப் பெறுகைக்கு எதிர் சூழல் புக்குத் திரிந்தார் இவர் -என்று தோற்றும்படி இருந்தது -என்கிறார் –
அவருடைய கிருபைக்கு அனுத்தமமான பாத்ரம் இ றே நான் –
என்னை –
நாட்டாரில் காட்டில் ஆழ்வாருக்கு உண்டான வாசி யறியாத என்னை -என்னை -எடுத்து சொல்லுவதால் வந்த அர்த்தம் –
தம்முடைய நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு ப்ரதிபத்தி பண்ணவும் கூட மாட்டாத என்னை –என்றுமாம்-

கண்டு கொண்டு என்னை
தம்முடைய துர்க்கதியைச் சொல்லுகிறார்
என்னைக் கண்டு
சத்துக்களாலே அசமீஷ்யனான என்னைக் கூசாதே கடாஷித்து
என்னைக் கண்டு
இவருடைய யம் பச்யேத்-என்கிற பிரதம கடாஷம் இருக்கிற படி
கொண்டு
தோஷம் பட்டவாறே காற்கடைக் கொள்ளாதே கைக்கொண்டார்
என்னைக்கண்டு -என்னைக் கொண்டு
பார்க்க ஒண்ணாத என்னைப் பார்த்தார்
எல்லாரும் கை விட்ட வென்னைக் கைக்கொண்டார்
இவர் ச்வீகரித்தால் அவனாலும் விடப் போகாதே -இவர் கண்டார் அவர் கொண்டார் இல்லை இங்கே –
தோள் மாற மாட்டாரே -இவரே கண்டார் இவரே கொண்டார் -ஆழ்வார் பிரான் இல்லை காரி மாறன் பிரான் அன்றோ
காரி மாறப் பிரான்
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழு பிறப்பும் மேவும் தன்மையமாக்கின ஆழ்வார் உடைய பிரான் அன்று
அபிஜாதரான ஆழ்வார் –தான் தோன்றி இல்லையே அவனைப் போலே
காரி மாறப் பிரான் –
அக்குடியிலே பிறந்து எனக்கு உபகரித்தவர்
காரி மாறப் பிரான்
தான் பிறந்து என் பிறவியை அறுத்தவர்-
மூத்த பெண் -ஜனக குலத்தில்
நடுவில் பிள்ளை ஆக்கமும் ஆக்கி முறை அறிவித்து
கடைக்குட்டி -வாசுதேவ குளத்தில் அம சிறையை அறுத்து
ஆழ்வார் -பிரபன்ன ஜனம் புகழை ஆக்கி -பாரதந்த்ரம் காட்டி -ஒருவருக்கு கம்பிச் சிறை இல்லை பிறவிச் சிறை அனைவருக்கும்

காரி மாறப் பிரான் –
ஆழ்வார் தம் பக்கல் பண்ணின உபகாரத்தை நினைத்துப் பிரான் என்கிறார் –
காரி மாறப் பிரான் -என்கிற விசேஷணத்தாலே -ஆழ்வாருக்கு உபகாரகரான
ஈஸ்வரன் பக்கலில் போகாமைக்காக விசேஷிக்கிறார்
ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் என்கிறபடியே அவனுடைய உபகாரகம் சர்வ சாதாரணமாய் ஆயிற்று இருப்பது –
அந்த சாமான்யத்தில் புகாமைக்கு தம்முடைய ஸூ ஹ்ருதத்தை விசேஷிக்கிறார்-
மாறன் -கொடுத்து அருளிய பிரான் காரி மாறிப் பிரான் என்றுமாம்

பண்டை பல்வினை –
1–அநாதி காலம் சஞ்சிதமாய் -விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபம்
2–சூர்ப்பணகையை போலே -வகுத்த விஷயத்தை பற்றுகைக்கு வழி யல்லா வழியே
இழிகைக்கு ஈடான பாபம் –
3–பிரதம அவதியான பகவத் விஷயமே புருஷார்த்தம் -என்கிற புத்திக்கு அடியான பாபம்
இவை யாயிற்று பண்டை பல் வினை யாவது –
வல் வினை
பிராய சித்த சாத்தியமும் அன்றிக்கே
அனுபவ விநாச்யமே அன்றிக்கே -இருக்கை-

பாற்றி யருளினான் –
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடி-சும்மனாதே கைவிட்டோடி தூறுகள் சாய்ந்தனவே -என்று சொல்லும் பிரகாரங்கள் அன்றிக்கே
உரு மாய்ந்து போம் படி பண்ணினான் –

பண்டை வல்வினை பாற்றி யருளினான்—ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –
ப்ரவாஹ அநாதி யாகையாலே அடி காண வல்லார் இல்லை
அந்தவத்தாகையாலே அடி யுண்டு என்று அனுபவிக்கும் இத்தனை இ றே
பிராயச்சித்த விநாச்யம் அன்று கர்மம் -அனுபவ விநாச்யம் என்கிற பிரமாணத்துக்கும் அவ்வருகாய்க் காணும் இருப்பது
கரிய கோலத் திருவுருக் காண்பன் என்னும் அத்தையும் தவிர்த்தாப் போலே காணும் ஆழ்வார்
உத்தேச்ய விரோதி பாபமாம் இத்தனை இ றே
மதி நலம் அருளினான் என்று தலை சீய்த்தார் ஆழ்வார்
இவரும் நமக்கு உபகரித்த இடத்தை அருளினான் என்கிறார் –

தன் புகழ் ஏத்த அருளினான் என்றபடி தம்மையே வாய் புலத்தும்படி பண்ணினார் –
எண் திசையும் அறிய இயம்புகேன் –
விசேஷஞ்ஞர் உடன் அவிசேஷஞ்ஞர் உடன் வாசியற
ருசி உடையார் எல்லாரும் அறியும் படி சொல்லுகிறேன் –
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசநை யாலே சொல்லுகிறார்
அவர் -பகவத் விஷயத்தில் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்
இவரும் ஆழ்வார் பக்கல் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்
ஆழ்வார் பக்கல் பாவ பந்தத்தாலே-

ஒண் தமிழ் சடகோபன் அருளையே
மயர்வற மதிநலம் அருளினவனுடைய அருள் போலே அல்ல ஆழ்வார் உடைய அருள் –
அவ்வருளுக்கும் அயலான அளவிலே பண்ணி யருளின அருள் இ றே
ஒண் தமிழ் -ஒள்ளிய தமிழ் -அழகிய தமிழ் -என்றபடி –
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி திருவாய்மொழி பாடின
அருளுக்கு மேலே இ றே என்னை விஷயீ கரித்த அருள் –

ஒண் தமிழ் –ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –
ஒள்ளிய தமிழ்
பெரிய ஆழத்தில் உள்ளுக் கிடந்த பதார்த்தங்கள் எல்லாம் தரையிலே காணுமா போலே அதிக்ருதாதிகாரமாய் அவகாஹிக்க ஒண்ணாதே
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை சர்வாதிகாரம் ஆக்குகையாலே ஒண் தமிழ் என்கிறது –
தமிழ் ஆழ்வாருக்கு தொண்டு புரிந்தது என்பதே முறை

சடகோபன் அருளையே–
மயர்வற மதிநலம் அருளினதுக்கும் அகப்படாத என்னையும் ஆழ்வார் அங்கீ கரித்த அருளைக் கிடீர் சொல்லுகிறது –

பண்டை வல்வினை பாற்றி யருளினான்
ஸ்வரூப அனுபந்தியோ என்னும் படி இவ்வாத்மாவோடே பழகிப் போந்த பாபம் –கர்ண குண்டலம் பிரித்தாலும் இத்தை பிரிக்க முடியாதே –
அநாதி சித்தமுமாய் அனுபவ விநாச்யமும் இல்லாத பாபம்
வல்வினை
சர்வ பூத ஸூ ஹ்ருத்தான ஈஸ்வரன் சௌஹார்த்தைப் பொகட்டு -ஷிபாமி என்னும் படியான பாபம்
வல்வினை
ஆழ்வார் ஒரு கடாஷம் நேர வேண்டும்படியான பாபம்
பாற்றி
அத்தைப் பாறப் பண்ணி -ஈஸ்வரனைப் போலே மோஷயிஷ்யாமி பண்ணி விடுகை அன்றிக்கே பாறு பாறாம் படி பண்ணினார்
எந்தத் தூற்றிலே புக்கது என்று தேடும்படி பாற்றினார் -முன்பு அவன் பாபம் தேட இப்பொழுது போன பாபம் எங்கே என்று தேட வேண்டிற்று
என்னைக் கொண்டு பண்டை வல் வினை பாற்றி அருளினான்
ஈஸ்வரனைப் போலே மாமேகம் சரணம் வ்ரஜ மோஷயிஷ்யாமி என்கை அன்றிக்கே தாமே என்னை சுவீகரித்து என் பாப பந்தத்தையும் பாற்றி அருளினார்
என்னைக் கண்டு கொண்டு –தானே கடாஷித்து எதையும் என்னிடம் எதிர்பார்க்காமல் செய்து அருளினார் -தேவை இடாதவர் அன்றோ –
நான் விடேன் -பெருமாள் -நீ பற்று -கண்ணன் –
அருளினான்
தம்முடைய புகழை ஏத்தும் படி அருளினார்
விரோதி நிவ்ருத்தியையும் பண்ணி அபிமத பிரதானமும் பண்ணினார்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
அநாதி சித்தமான பாபத்தைப் போக்கி தம்முடைய குண ஸ்துதியே எனக்கு யாத்ரையாம் படி பண்ணினார் –

எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே-
எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே
ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று
ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன்
எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம்
மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார்
ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார்

அறிய இயம்புகேன்
நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்
ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும்
தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது
ஒண் தமிழ் சடகோபன்
என்னளவில் பண்ணும் உபகாரத்தையோ நான் இயம்புவது
லோகத்தாருக்கு அவர் பண்ணின உபகாரத்தையும் சொல்லி யன்றோ
கருணையாலே என்னைத் திருத்தின படியையும் கவி பாடி லோகத்தைத் திருத்தின படியையும் இயம்புகேன்
சடகோபன் அருளையே
தெரியச் சொன்ன வாயிரம் -என்கிறபடியே திருவாய் மொழியைப் பாடி சம்சாரிகளுடைய சாட்யத்தைப் போக்கினவருடைய கிருபையை –

எண் திசையும் அறிய இயம்புகேன்
தேவாஸ் ஸ்வஸ்தா நமாயந்தி தைத்யாஸ் சர்வே ஹதா கதா -ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பாகவதா ஜகத் -என்று
ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் தரை விக்கிரம பிரசம்சையை சாற்றிக் கொண்டு திரிந்தால் போலே
அங்கு ஈஸ்வரனுடைய சக்தி பிரபாவம்
இங்கு ஆழ்வாருடைய கிருபா பிரபாவம்
அங்கு பிரயோஜனாந்த பரர் வாழ்ந்த படி -இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்த படி
அங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்
இனி பதக்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு அத்தனை –
இது ஒன்றே ஒற்றுமை இரண்டுக்கும் —துறைப் பால் படுத்தி -ஆழ்வார் -அவன் மூவடியால்
———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: