பகவத் விஷயம் காலஷேபம் -9-கண்ணி நுண் சிறுத் தாம்பு – தனியன்/அவதாரிகை — -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அவதாரிகை-

ஆச்சார்யர் அபிமானம்
ஸூ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தை குலைத்துக் கொண்ட சம்சாரிக்கு ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் –
ஸ்வ தந்தரனை பற்றின அன்று சங்கை -பாபம் கண்ணில் பட்டு வீழ -கருணை கண்ணில் பட வாழ –
பட்டத்துக்கு உரிய யானையும் அரசும் செய்யுமது ஆராய முடியாதே -பாபத்தை பார்த்து தள்ளலாம் தம் கருணை பார்த்து கொள்ளலாம்
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று -உன்னை அன்றோ களைகணா கருதுமாறு -ஆஸ்ரித பஷபாதி அன்றோ –
முத்தரை மோதிரம் கொடுத்து -ஆச்சார்யர்களை நியமித்து -மோஷம் அளிக்கும் பரதந்த்ரர்கள் ஆக்கி –
வேதார்த்தம் அறுதி இடுவது சுருதி ஸ்ம்ருதி இதிகாச புராண்ங்களாலே –ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் –
கையைப் பிடித்து கார்யம் கொள்வது அவன் இடம் போவது -திருவடி பிடித்து கார்யம் கொள்வது ஆச்சார்களைக் கொண்டு கார்யம் கொள்ளுவது போலே –
இன்பத்தில் இறைஞ்சுதலில் –துன்பற்ற மதுர கவிகள் தோன்றக் காட்டும் தொல் வழியே நல் வலிகள் துணிவார்கட்கே -தேசிகன் –
சுக்கான் தரை போன்ற -உவர் நிலம் போல இரும்பு போல் வலிய நெஞ்சம் -பாட்டம் மழை பெய்து பான் படுத்தி -ஆசார்ய உபதேசமே -மலை போலே
செங்கமலம் –வெம்கதிரர்கு அல்லால் அலராதே -தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் –உலர்த்துவான் நீர் பசை இல்லாவிடில் –
ஒண் தாமரையாள் கேவன் ஒருவனையே நோக்கும் உணர்வு -ஆச்சார்யா சம்பந்தம் நீர்ப்பசை –
தன் குருவின் -தாளிணையில் அன்பு வைக்காமல் -அன்பு தன் பால், வைத்தால் –விண்ணாடு தான் அளிக்க வேண்டாதான் -அம்புயை கோன்-
உத்தாரக ஆச்சார்யர் -ராமானுஜர் -உபகாரக ஆச்சார்யர் நம் ஆச்சார்யர் -சம்சார நிவர்த்தகமான பெரிய திருமந்த்ரத்தை உபதேசிப்பவரே நேராக ஆச்சார்யர்-
ஆத்மா குணம் -ஆச்சார்யர் -மந்த்ரம் -பகவான் -வைகுந்த மா நகர் கை புகுரும் –
திருக் கோளூர் சித்தரை மாசம் சித்தரை நஷத்ரம் -நடு நஷ்த்ரம் -நடு பதம் நமஸ் சப்தார்த்தாம் -வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்யமாம் பதம் போல்
ஸ்வரூப யாதாம்யம் -தாதாய சேஷத்வ ததீய பாரதந்த்ர்யம் -அடியார்க்கு அடிமை -மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -மா முனிகள் –
அத்தைத் தின்று அங்கே கிடக்கும் -அகாரத்தில் தொடங்கி
செத்தது -சரீரம் -வயிற்றில் சிறியது ஆத்மா பிறந்தால் எத்தை தின்னும் சரீர சுகம் அனுபவித்து சரீரங்கள் பல மாறி மாறி பல பிறப்புகள் முதல் கருத்து
ஜீவாத்மா -செத்தது ஞானம் இல்லாமல் -சிறிய ஞானம் பிறந்தால் -அத்தை -திருவடிகளை பற்றி கைங்கர்யமே புருஷார்த்தம்
அத்தை தின்று –ஸ்ரீ மன் நாராயண சரனௌ சரணம் பிரபத்யே அங்கே கிடக்கும் -ஸ்ரீ மாதே நாராயணாய நாம
தீர்க்க சரணாகதி -சார சங்கரகஹம்-

——————————————

ஸ்ரீ செல்வமிகு சீர்- நாத முனிகள் அருளிய தனியன்கள்-

அவிதித விஷயாந்தரச் சடாரே ருபநிஷதன் முபகான மாத்ர போக
அபி ச குண வசரத்த தேக சேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மாமாவி ரஸ்து —

அவிதித விஷயாந்தரச்-நம்மாழ்வாரைத் தவிர வேறொரு விஷயத்தை அறியாதவரும்
சடாரே ருபநிஷததாம் -நம்மாழ்வாருடைய திவ்ய ஸூ க்திகள் ஆகிய திவ்ய பிரபந்தங்களை
முபகான மாத்ர போக -இசை பாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும்
அபி ச குண வசரத் -குண வசிரதபிர -குணம் அடியாகவும்
த தேக சேஷீ -அந்த நம்மாழ்வார் ஒருவரையே தமக்கு சேஷியாகக் கொண்டவருமான
மதுரகவிர் ஹ்ருதயே மாமாவி ரஸ்து -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் என் நெஞ்சில் ஆவிர்பவிக்கக் கடவர் –
பெருமாளை அன்றி அறியாத ஆழ்வாரை அன்றி மற்று ஓன்று அறியாத மதுரகவி ஆழ்வார் ஒருவரையே ஹ்ருதயத்தில் கொண்ட நாத முனிகள்

-தனியன் அவதாரிகை –

அவிதித விஷயாந்தர -இத்யாதி
-இதில் வேறு ஒன்றும் நான் -அறியேன் என்று -ஆழ்வாரை ஒழிந்த விஷயங்கள்
அவிவிதங்களாய் இருப்பாராய் –
சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையரான -ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய
அநுபவ பரிவாஹ ரூபமான -திருவாய்மொழியின் -காநமே -போகமாய் இருப்பாராய் –
அவ்வளவிலும் நில்லாதே -அதுக்கும் மேலே அவர் வாத்சல்யாதி குணத்தாலும் -தோற்று –
அவரையே தம்மை அடிமை கொள்ளும் சேஷி -என்று அறுதி இட்டு இருக்கும்
ஸ்ரீ -மதுரகவிகள் -தன் நிஷ்டை-நிலை – உண்டாகும்படி என் ஹ்ருதயத்தில்
ஸூ ப்ரதிஷ்டராய் ஆகக் கடவர் –என்கிறது

-தனியன் வியாக்யானம் –

அவிவித விஷயாந்தர –
ஆழ்வாரை ஒழிந்த விஷயங்களிலே வ்யத்புத்தி- பால பாடம் கூட பண்ணி – யறியார் -என்கிறது –
சிந்தைமற்று ஒன்றின் திறத்தல்லா –8-7-10–என்றும்
பாவோ நான்யத்ர கச்சதி –மற்று ஒன்றினைக் காணாவே -என்னக் கடவது இ றே –
இங்கு விஷயாந்தரங்கள் ஆகிறது –
பாட்டுக் கேட்கும் இடமான பர -விஷயமும்
கூப்பீடு கேட்கும் இடமான வ்யூஹ விஷயமும்
குதித்த இடமான விபவ விஷயமும் –
வளைத்த விதமான அந்தர்யாமி விஷயமும் –
ஊட்டும் இடமான அர்ச்சாவதாரவிஷயமும் —
எல்லாம் வகுத்த விஷயமான ஆழ்வாரே ஆகையாலே மற்று ஒரு விஷயங்களையும்
அறியாதே இருப்பர் –
வைகுந்த நாடும் –உந்தனக்கு எத்தனை இன்பம் தரும் -உன் இணை மலர்த் தாள் எனக்கு -அமுதனார் –

மாதா பிதா இத்யாதி
அன்னையாய் -அத்தனாய் -சர்வம் யதேவ –
சமஸ்த சாம்சாரிக விஷய சுகங்களும் சடகோபாச்சார்யர் என்று அறுதி இட்டு –
தத் அந்யங்களை அறியாதவர் –என்றுமாம்
ஆழ்வார் -எல்லாம் -கண்ணன் என்று இருக்குமா போலே-தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த நம்மாழ்வார்
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ -வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த வம்மான் கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சகம் -என்றும் –
மொய்த்தே திரை மோது தண் பாற்கடல் உளான் பைத்தேய் சுடர் பாம்பணை நம் பரனை வைத்தேன் மதியால் -என்கையாலே –என்றும்
-அவனும் கிடந்தது என் நெஞ்சு -அகலான் -என்றும் –
உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் -புணர்ந்தான் என்றும் –
எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப வுள்ளே இருக்கின்ற பிரான் -என்றும்
கண்கள் சிவந்திலே -அப்படியே -ஒருவன் அடியேன் உளான் -என்றும் –
திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் -புகுந்தான் என்றும் –
விண் மீது இருப்பாய் -என்கிற -ஐந்தும் எனதாவியுள் மீதாடி -என்றும் –
தேவர் கோலத்தோடுமானான் என்கிற தெய்வ உருவில் இவர்க்கு எல்லாம் உண்டாகையாலே
அவற்றை அறியத் தேவை இல்லை இ றே-
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியர் ஆகையாலே ஆயிற்று –
கரிய கோலத் திரு உருக் காண்பன் -என்றதும் –

அதவா –
அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்கையாலே –
சடாரியைக் காட்டிலும் அறியாமல் இருப்பதான -அந்ய விஷயங்களை உடையவர்
என்கிறது –
அதாவது -ஆழ்வார் கழிக்குமது -இளம் தெய்வத்தை யாயிற்று –
இவர் கழிக்குமது -கழி பெரும் தெய்வமாய் -கரும் தெய்வமான -கண்ணனான
பெரும் தேவனை யாயிற்று –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணி -என்றார் இ றே-
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் -என்றும் –
ஒரு மா தெய்வம் மற்று உடையமோயாமே -என்றும் –
தீர்ப்பாரை யாமினி –உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள்–சகி வெறி விலக்கு
மற்று ஒரு தெய்வம் –உற்றிலேன் -கருவறை நீல மேகப் பெருமாள் மூலவர் சௌரி ராஜ பெருமாள் மூலவர் –
தேவு மற்று அறியேன் -என்று ஆயிற்று இவர்கள் பேச்சு இருப்பது –
இப்படி ஆழ்வாரில் வ்யாவருத்தராய் இருக்கிற இவர்-திருக்குறுங்குடி நம்பி அறியோம் திருக்குருகூர் நம்பியையே அறிவோம்

சடாரே ருபநிஷதர முபகாநமாத்ரே போகர் -ஆகையாவது –
நாட்டியல் ஒழிந்து சடரை ஒட்டின சடகோபன் — மொழி பட்டோடும் கவி அமுதமான
யாழின் இசை வேதத்தின்– பண்ணார் பாடலின் அநுபவ ரச ஜ்ஞராய் –
பாவின் இன்னிசை பாடித் -திரிவேன் என்றும் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே -என்று இருக்கை -என்றபடி-யஜ்ஞம் தானம் தபசாதிகள் வேண்டாமே –
இத்தால் –
அவரோபாதி அவர் சம்பந்தம் உடையதும் உத்தேச்யம் -என்று ஆயிற்று இவர் விரும்புவது –
மாறனில் மிக்குமோர் தேவும் உளளோ -மால் தனில் மிக்கும் ஓர் தேவு உளதோ –

அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்று ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் -சொல்லிற்று
அபிச குணவ ஸாத்தா தேக தேஷீ -என்று குணாக்ருத தாஸ்யமு+ம் உண்டு என்கிறது
அபிச -கீழ் சொன்ன அளவு அன்றிக்கே பின்னையும் -குணத்துக்கும் தோற்று -அபிச –
குணவ ஸாத் -என்று த்ருதீயார்த்தே பஞ்சமியாய்க் கிடக்கிறது –
ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே -என்றும் –
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்றும்
அனுசந்தித்த வாத்சல்யாதி குண பூர்த்தியாலும் குணைர்த் தாஸ்யம் உபாகதராய்
தம்பி உலகத்தார் அபிப்ப்ராயத்தாலே -குணத்துக்கு தோற்ற அடிமை அடியேன் அபிப்ராயத்தால் –
அகல்யை சீதா பிராட்டி -சம்வாதம் -குணங்கள் பிரியாதே பெருமாள் இடம் —
தத் ஏக சேஷியாய் இருப்பார் ஆயிற்று –

ஏவம் பூதரான -மதுரகவி -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்னும்படியான
வாக் மாதுர்யத்தை உடையவர்
மம ஹ்ருதயே –
மதுரகவி நிஷ்டையை அபேஷிக்கிற என் மனச்சிலே -நின்று இருந்து
பட்டோலை கொண்ட நிலையோடே
ஆவிரஸ்து
ஆவிர்ப்பிக்கக் கடவர் –
சந்நிதானம் பண்ணக் கடவர்
இத்தால் -அனுகூலரான ஆசார்ய பரதந்த்ரர் ஆதரணீயர் என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆய்த்து –

—————————————————————————–

வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை
யாள்வார் யவரே யரண் –

வேறு ஒன்றும் நான் அறியேன் –
ஆழ்வாரை ஒழிய தேவு மற்று அறியாத மதுரகவிகள் நமக்கு ஸ்வாமியும் ரஷகரும் அவரே என்கிறது –
வேறு ஒன்றும் நான் அறியேன் -வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள் வாழ்வாம் –
என்னும் அளவும் மதுரகவி சொல்லை அனுகரித்து சொன்னபடி
மேல் ஏவம்வித ரானவர் நமக்கு சேஷியும் சரண்யரும் -என்கிறது –
தேவு மற்று அறியேன் –என்றத்தை -வேறு ஒன்றும் நான் அறியேன் -என்றது –
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சினுள் -நிறுத்தினான் –
என்றத்தை -வேதம் தமிழ் செய்த -என்றது –
காரி  மாறப் பிரான் -சடகோபன் என் நம்பி -என்றத்தை -மாறன் சடகோபன் -என்கிறது
பெரிய வ ண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே –
என்றத்தை -வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் -என்றது

எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்றத்தை –
ஏறு எங்கள் வாழ்வாம் என்று -ஏத்தும் என்றது
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி -என்றத்தை
வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் என்று ஏத்தும்
எம்மை யாள்வார் -என்றது –
அவரை ஆளுகிறவர் ஆழ்வார் -நம்மை ஆழ்கிறவர் இவர்
யவரே யரண் –
ரஷை
சரண் -என்ற பாடமான போதும் ரஷை என்றே அர்த்தம் –
மதுரகவிக்கு எல்லாம் ஆழ்வாரே ஆனால் போலே
நமக்கு எல்லாம் மதுரகவி -என்கிறது –

—————————————————————————–

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம்-

அவதாரிகை –

ஆத்மாவுக்கு உத்தமம் மத்யமம் அதமம் என்கிற புருஷார்த்தங்களான சித் அசித் ஈஸ்வர தத்வத்ரயங்கள் –
அவற்றில் அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களாலே பிரகிருதி தத்வம் அதம புருஷார்த்தம் –
ஜன்ம மரணாதி ஷட் பாவ விகார ரஹீதமாய் நிடதிசய ஸூ க ரூபமாய் இருந்ததே யாகிலும்
பகவத் ஏகாந்தமான கல்யாண குண வைதுர்யத்தாலே தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பமான ஆத்மானுபவம் மத்யம புருஷார்த்தம்
சர்வேஸ்வரன் புருஷார்த்தம் என்னும் இடத்தில் கரும்பு தின்பார் வேர்ப்பற்றையும் நுனுயையும் கழித்து நடுவைக் கொள்ளுமா போலே
ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒழிய ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே புருஷார்த்தமாகவும் -அதிலே கம்ச வதத்துக்குப் பின்பாகக் கழித்து
முன்பு வெண்ணெய் களவு கண்டு யசோதைப் பிராட்டியார் கையில் கட்டுண்டு அவளுக்கு அஞ்சி நின்ற
அவஸ்தையை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே உபாயமும் உபேயமும் விரோதி நிரசனம் பண்ணுவானும் மற்றும் எல்லாம் என்றும்
அவனுடைய சௌந்தர்ய சீலாதிகளிலே அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களே இவ்வாத்மாவுக்கு நாத பூதரும்
நிரதிசய புருஷார்த்த பூதரும் என்றும் ஆழ்வார் நிர்ணயித்தார்
ஸ்ரீ மதுர கவி யாழ்வார் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானைப் போலே அத்தைப் பூர்வ பஷம் ஆக்கி எம்பெருமான் பக்கலிலும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலும்
ஆழ்வார் பண்ணினது அடைய ஆழ்வார் திருவடிகளிலே யாக்கி அது ருசித்து அத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த-வியாக்யானம்-

பிரவேசம்-அவதாரிகை —

த்ரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே -ஐஸ்வர்யாதி சகல புருஷார்த்தங்களையும் யதாதிகாரம் விதிக்கிற
வேத மர்யாதையிலேநின்றார்கள் ருஷிகள் –
அதாகிறது வேத உப ப்ரும்ஹண முகத்தாலே சேதனருடைய குண அநுகூலமாக
ஐஸ்வர்யாதி ஷூத்ர புருஷார்த்தங்களையும் -பரம புருஷார்த்த  லஷணமான
மோஷத்தையும் உபதேசிக்கை –
கேவல சரீர  அனுஷ்டானங்களே ஐஸ்வர்ய விசேஷங்களுக்கு சாதனமாக உபதேசித்து –
கைவல்ய நிஷ்டருக்கு ஆத்ம ப்ராப்தியை உபதேசித்து –
நித்ய சத்வஸ்தருக்கு பகவத் ப்ராப்தியை உபதேசித்தான் இ றே ஸ்ரீ பராசர பகவான் –

தேகாத்மா அபிமானிகள் நமக்கும் ரிஷிகளுக்கும் பர்வத பரமாணு வாசி –இதே போலே ரிஷிகள் -ஆழ்வார்கள் /
ஆழ்வார் -பெரியாழ்வார் /பெரியாழ்வார் -ஆண்டாள் -ஜன்ம சித்த ச்த்ரீத்வம் –

இந்த ரிஷிகளைக் காட்டிலும் ஆழ்வார்களுக்கு நெடு வாசி உண்டு -எங்கனே என்னில் –
வேத தாத்பர்யமாய் -உத்த புருஷார்த்தமான பகவத் ப்ராப்தியில் நிஷ்டராய் –
பிறருக்கும் உபதேசிக்கும் இடத்திலும் சாஸ்திர சித்தமான ஐஸ்வர்யாதிகளையும்
த்யாஜ்யமாக உபதேசிக்குமவர்கள் இ றே
இவ் விலஷண புருஷார்தத்தின் காஷ்டையான ததீய சேஷத் வத்தளவிலே
வரப் புகுர நின்றார் ஸ்ரீ மதுர -கவிகள்

இவர்க்கு இவ் வேற்றம் வந்தபடி எங்கனே என்னில் –
ஆழ்வார் -பொய் நின்ற ஞானம் -தொடங்கி -அவா வற்று வீடு பெற்ற -என்னும் அளவும்
செல்ல அனுபவித்த இடத்தில் ஆழ்வார் தமக்கு புருஷார்த்த காஷ்டையாக அபிமதமான
ததீய சேஷத்வத்தைப் பற்றுகிறார் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதரான அர்த்தமே சாத்விகருக்கு
பரிக்ராஹ்யம் -என்னும் இடம் மகாபாரத சாரமான ஸ்ரீ சஹஸ்ரநாம அத்யாயத்திலே
சொல்லிற்று இ றே

ஸ்ரீ  பீஷ்மர் பக்கலிலே சகல அர்த்தங்களையும் குறைவறக் கேட்ட தர்ம -புத்திரன்
இவ்வர்த்தம் தமக்கு உத்தேச்யமாக ஸ்வீகரித்த தத்வ ஹிதங்களே நமக்கு உத்தேச்யம் என்று
நினைத்து –கேட்க தன்னுடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்தை உபதேசித்தான் இ றே –
த்ரிபுரா தேவியாரை -பிரமாண ப்ராபல்யத்தாலோ -எம்பிரானே ஆஸ்ரயணீயன் -என்று
நீங்கள் பற்றிற்று -என்ன -அது ஒன்றும் அன்று -எம்பெருமானார் காழிச்சால் மூலையில்
தேவதையை ஆஸ்ரயித்தார் ஆகில் அதுவும் எங்களுக்கும் ஆஸ்ரயணீய வஸ்துவாகக்–கடவது -என்றாள் –
அந்த ந்யாயத்தாலே -ஆழ்வார் தமக்கும் தஞ்சமாக நினைத்து இருக்கும் ததீய சேஷத்வத்தையே
இவரும் தமக்கு புருஷார்த்தமாக அத்யவசிக்கிறார்

இது தான் ராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பக்கலிலே அநுஷ்டாந
சேஷமாக -காணப்பட்டது -எங்கனே -என்னில்
வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருதமான ஸ்ரீ ராமாயணத்தில் ராமாயண புருஷர்
நால்வரும் -தர்ம சமஸ்தான அர்த்தமாக -அவதரிக்கையாலே நால்வரும் நாலு அர்த்தத்தை
அனுஷ்டிதித்து -காட்டினார்கள்
பித்ரு வசன பரிபாலநாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் –பெருமாள்
நிருபாதிக சேஷியைக் குறித்து சேஷபூதன் கிஞ்சித் கரித்து தானாகக் -கடவன்
என்கிற விசேஷ தர்மத்தை அனுஷ்டித்து காட்டினார் இளைய பெருமாள் –
பெருமாள் விசேஷ தர்மம் விட்டார் -ஸ்ரீ பரத ஆழ்வான் வேண்டிக் கொள்ள திரும்ப வில்லையே சாமான்ய தர்மம் பிடித்து கொண்டார் –

லுப்த சதுர்த்தி தாதர்த்யம் -ஆய -பிரார்த்தனா சதுர்த்தி -அஹம் வேலேய சாகரம் -கரையை கடல் தாண்ட முடியாதே
பிரதிஜானாமீ -நீர் என்னை தாண்ட முடியாது என்று பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறார் -தே வீர தலைக் கட்டும் ஆண்பிள்ளை நீர் அன்றோ –
வீர லோக பாக் -நிர்பந்தித்து அடிமை செய்த இளையபெருமாள்
பாரதந்த்ர்யம் அநுஷ்டித்தார் ஸ்ரீ பரத ஆழ்வான்
இஷ்ட விநியோக அர்ஹத்வம்–சேஷத்வம் -யோக்யதை -தகுதி –
இஷ்ட விநியுஜ்ய மாநத்வம் பாரதந்த்ர்யம் –இஷ்டப்படி விநியோகப் படுத்தப் பட்டார் –
ஓங்காரத்தில் சேஷத்வம்
நமஸ் பாரதந்த்ர்யம்
நாலுக்கு மேல் ஆறு -ஆய -லுப்த சதுர்த்தி தாதர்த்யம்
ஆறாவது வேற்றுமை பாரதந்த்ர்யம்
ஞானம் விட ஆனந்தம் ஏற்றம்
குருஷ்வமாம நுசரம் -என்றும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இ றே இவருடைய அனுஷ்டானம் –

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான்

நிர்பந்தித்து அடிமை செய்கை -அன்றிக்கே -சேஷி உகந்த அடிமையே சேஷ பூதனுக்கு
கர்த்தவ்யம் -என்பதை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ பரத ஆழ்வான் –
தன் செல்லாமையை பாராதே -சேஷி உடைய ஹ்ருதயதைப் பார்த்து ப்ரீதியோடே
மீண்டான் இ றே

அப்படி இருக்கிற இவனை யல்லது அறியாதே இருக்கையாலே பகவச் சேஷத்வ காஷ்டியான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்
கச்சதா மாதுல குலம் பரதேன ததா நக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரஸ்க்ருத
கச்சதா
கச்சதா டேன்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்
யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு
இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –
பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய்
இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
சகுந்தலை துஷ்யந்தை குமாரன் பிள்ளை பரதன் -இந்த பிரமாணம் அதில் இருந்து எடுத்தார் –
தத-
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க
அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
அஹங்கார மமகார நிவ்ருத்தி இரண்டும் சொல்லிற்று இத்தால் சேஷத்வ விரோதி இ றே இரண்டும்
அநக
அநம் இல்லாதது இவனுக்கு இ றே-அல்லாதார்க்கு ராமபக்தியும் கலாசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது
ராமபக்தியைப் பாப்பம் எண்ணப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -ஆகையாலே பாத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு
விரோதி யாகையாலே ராம பக்தியும் பாபமாம் இத்தனை –
சத்ருக்ன
பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை
அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்
இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி
இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –
இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான்
படை வீட்டில் இருந்தால் பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இ றே இருப்பது
பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர்
இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இ றே
அ நக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்
-இப்படி இவனைப் போல் இருப்பார் ஒருவர் ஸ்ரீ மதுர கவிகள்
இனி ததீயர் உத்தேச்யர் என்னும் இடத்தில் -முதல் அடியில் அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே பகவத் விஷயத்திலே மூட்டியும்
இவன் பகவத் விஷயத்திலே அவகாஹித்து குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத படியானால் போத யந்த பரஸ்பரம் என்கிறபடியே
போது போக்குகைக்கு உசாத் துணையாயும்
பிராப்தி தசையில் வந்தால் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்நிதேவா -என்கிறபடியே சாத்திய விருத்தி ரூபத்தாலும் புருஷகார பாவத்தாலும் உத்தேச்யராவார்கள்
இப்படி சர்வ அவஸ்தையிலும் ததீயரே உத்தேச்யர் என்று அத்யவசித்து தமக்கு உபகாரகரான ஆழ்வார் தம்மையே பற்றுகிறார் –

இப்படி இருக்கிற இவனை அல்லாது அறியாதே இருக்கையாலே பகவத் சேஷத்வ
காஷ்டையான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ சத்ருந ஆழ்வான் –
அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே உடன் -போனான் -அவன் போனதுவே முஹூர்தமாக போனானே –
அஹம் இல்லாதது இவனுக்கே -அஹம் ஆவது உத்தேச்ய விரோதி –
இவ் விஷயத்தில் ராம பக்தியும் விரோதி -இத்தை பாபம் எண்ணப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதியாகையாலே அதுவும் த்யாஜ்யம் இ றே
பரத அனுவ்ர்த்தி ஆகிய உத்தேச்யத்தில் ராம சௌந்தர்யத்தில் கால் தாழாமல் –
அதுவும் இடைச் சுவர் இவருக்கு -என்பதால்
பலி -கூட்டம் கலைக்கிற பெருமாள் விரோதி உத்தேச்யம் பிரமாண அனுபவம் பிரமேயம் விரோதி ஆயிற்றே அங்கு
ஆரார் எனச் சொல்லி ஆடும் அது கண்டு –வல்வினையால் -குடக்கூத்தாடு -ஸ்ரீ கிருஷ்ண பக்தி குற்றம் அங்கே –
மன்றம் அமர கூத்தாடி மகிழ்ந்தாய் -மன்றம் அமரும் படி பரகால நாயகி மயங்கி இருக்க –
அத்யயன உத்சவம் முடிந்த பின்பு இது நடந்ததே என்று நினைப்போம்

பிள்ளைகளுடைய சந்நிவேசம் பார்த்து திரு நாமம் சாத்தும் ஸ்ரீ வசிஷ்ட -பகவான்
-பெருமாளை அழகாலே கண்டாரை துவக்க வல்லவர் ஆக தோற்றுகையாலே -ராமர் –என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாக தோற்றுகையாலே –லஷ்மணன் என்றும் –
சத்ருக்குகள் மண் உண்ணும்படி இவர் சந்நிவேசம் இருக்கவே –சத்ருனன் -என்றும் -சாத்தினான்-

பாஹ்ய சத்ருக்கள் அன்றிக்கே -ஆந்தர சத்ருக்களான இந்திரியங்களை ஜெயித்து -இருப்பவன்
அவ் விந்திரிய ஜெயத்தின் -எல்லை என் என்னில் -ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு
ஒண்ணாது ஒழிகை –
அதாவது பெருமாளைப் பற்றும் -போதும்
தன உகப்பாலே -யாதல்
அவனுடைய வை லஷண்யத்தாலே யாதல் -அன்றிக்கே –
தனக்கு உத்தேச்யரான இவன் உகந்த விஷயம் -என்று பற்றுகை
ராஜாக்கள் போகும் போது உடை வாள் கொண்டு போவது போலே -அவன் கொண்டு போக போனான் –
ஜாதி குணங்களோபாதி போனான் –
சர்வ வித அடிமை செய்ய வாய்ப்பு என்று ப்ரீதி ப்ரேரிக்க போனான் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் -காண்பேனே-எதிர் விழி கொடுக்கும் அசித் போன்ற பாரதந்த்ர்யம் –
ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியில் சைதன்ய ப்ரயுக்தமான தர்மங்களோடு கூடி இருக்கை
உன் பவள வாய் -நீத ப்ரீதி புரஸ்தா -அஹம் அன்னம் அஹம் -அந்நாதாக –
இரண்டிலும் உன் -அவன் பவள வாய் -அவன் மகிழ அத்தைக் கண்டு நான் மகிழ்வேன் –
கைங்கர்யம் பண்ணி மகிழ்வேன் இல்லை -பெருமாள் மகிழும் திருமுகம் பார்த்து மகிழ்வோம் -தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெற்றோமே –

அ நக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்
-இப்படி இவனைப் போல் இருப்பார் ஒருவர் ஸ்ரீ மதுர கவிகள்
இனி ததீயர் உத்தேச்யர் என்னும் இடத்தில் -முதல் அடியில் அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே பகவத் விஷயத்திலே மூட்டியும்
இவன் பகவத் விஷயத்திலே அவகாஹித்து குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத படியானால் போத யந்த பரஸ்பரம் என்கிறபடியே
போது போக்குகைக்கு உசாத் துணையாயும்
பிராப்தி தசையில் வந்தால் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்நிதேவா -என்கிறபடியே சாத்திய விருத்தி ரூபத்தாலும் புருஷகார பாவத்தாலும் உத்தேச்யராவார்கள்
இப்படி சர்வ அவஸ்தையிலும் ததீயரே உத்தேச்யர் என்று அத்யவசித்து தமக்கு உபகாரகரான ஆழ்வார் தம்மையே பற்றுகிறார் –

பாவநத்வத்தாலும் போக்யத்தாலும் அவனையே பற்றி இருக்கை -நீத ப்ரீதி புரஸ்தன் -இரண்டும் பாவனத்வம் போக்யத்வம் காட்டும்
ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த – வார்த்தை ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு
நல்லனான படி -அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத -படியானான் என்று
ஆக ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -நிஷ்டை
இனி இவர்க்கு ததீயர் உத்தேச்யர் ஆம் இடத்தில்
பகவத் சம்பந்த மாதரத்தில் விஷயீ கரித்தும்
தத் விஷயத்தில் அவஹாகிப்பித்தும்-முமுஷுவாக்கி –
குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத தசையிலே
போது போக்குகைக்கு உசாத் துணையாகவும்
ப்ராப்தி  தசையில் -பகவத் அனுபவ சஹாகாரிகளாயும்
சர்வ அவஸ்தையிலும் ததீயரை என்று அத்யவசித்து
தமக்கு வைஷ்ணவ விஷயீகாரத்துக்கு முன்பே அஞ்ஞா தஜ்ஞாபந
முகத்தாலே பகவத் விஷயத்தில் மூட்டின மஹா உபாகாரகரான ஆழ்வார்
தம்மையே பற்றுகிறார்

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த அவதாரிகை

ஸ்ரீ சத்ருக்னன் ராம குணத்தில் கால் தாழ்ந்திலன் -இவர் கிருஷ்ண குணங்களில் கால் தாழ்ந்திலர் -இது வாசி
ஆழ்வார் பகவத் விஷயத்தைக் கவி பாடுகிற நாவாலே தம்முடைய வைபவம்
துவளில் மா மணி மாடம் போன்ற திருவாய் மொழிகள் வாயிலாக -சொன்னார் இத்தனை போக்கி அமுதூகிற இவருடைய
நாவாலே கேட்கப் பெறாத குறை தீர்க்கிறார் யாய்த்து இவர்
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே -6-5-7-என்று அவன் குணங்கள் அவ்வாழ்வார் வாயாலே
திருந்தினால் போல் யாய்த்து -ஆழ்வாருடைய குணங்களும் இவர் வாக்காலே திருந்தின படி –

அப்படியே இவர் அருளிச் செய்த பிரபந்தமும் –
த்ரை குண்ய விஷயா வேதா -என்று குணத்ரய வச்யருக்கு குண அனுகுணமான பலன்களைச் சொல்லுகிற வேதங்கள் போலேயும்
சீர்த்தொடை யாயிரம் -1-2-11- என்று பகவத் குனிக பிரத்க்ஹிபாதகமான திருவாய் மொழியும் போல் அன்றியே
ஆழ்வாருடைய திவ்ய குணங்களையே பிரதிபாதிக்கையாலும்
வேதம் போலே அனந்தமாய் இருத்தல் – திருவாய்மொழி போலே ஆயிரம் பாட்டாய் இருத்தல் செய்கை அன்றிக்கே
ஸூக்ரஹமாய் இருக்கையாலும் வாசி பட்டு இருக்கும்
திருவாய்மொழி வேத சாரமாய் -திருவாய் மொழியினுடைய சாரமாய்த்து இப்பிரபந்தம் இருப்பது –

ஒரு முமுஷுவுக்கு ஆதரணீயராய் இருப்பார் நாலு வ்யக்திகளாய் இருப்பார்கள் -சர்வேஸ்வரனும்- பிராட்டியும் -ஆசார்யனும் -ஸ்ரீ வைஷ்ணவர்களும் –
அதில் சர்வேஸ்வரன் –1– அடியிலே இழந்து கிடந்த கரண களேபரங்களைத் தன கருணையாலே கொடுத்து இவனைக் கரை மரம் சேர்க்கும்
தேவன் ஆகையாலும்–2– இவனுக்கு ஆதார பூதனாகையாலும்–33- -இவனுக்கு இஷ்டா நிஷ்ட ப்ராப்தி பரிகாரத்துக்கு உபாய பூதன் ஆகையாலும்–4- அசாதாராண
ஸூஹ்ருத்தாகையாலும் –5–ப்ராப்ய பூதன் ஆகையாலும் ஆதரணீயனாய் இருக்கும்
மாதா பிதா என்கையாலே பிரிய பரத்வ ஹித பரத்வங்களைச் சொல்லிற்று -ப்ராதா என்கையாலே அல்லாத பந்த்வந்தரங்களுக்கும் உப லஷணம்-
நிவாஸ -என்கையாலே ஆகாரத்வம் சொல்லிற்று சரணம் என்கையாலே -உபாய பாவம் சொல்லிற்று
-ஸூ ஹ்ருத் -என்கையாலே சோபனாசமசி -என்னும் இடம் சொல்லிற்று
கதி -கம்யாத இதி கதி யாய் ப்ராப்ய பாவம் சொல்லிற்று
நாராயண -என்று இவை எல்லாமாக வற்றான வஸ்து ஸ்வ பாவம் சொல்லிற்று

யேன யேன வியுஜ்யந்தே ப்ரஜாஸ் ஸ்நிக்தேன பந்து நா ச ச பாபத்ருதே தாசாம் துஷ்யந்த இதி குஷ்யதாம் -என்று
ஒரு சேதன விசேஷத்துக்கு இது உண்டாகச் சொல்லா நின்றாள் இவ்விஷயத்துக்கு சொல்ல வேண்டா வி றே
பாபாத்ருதே என்ன வேண்டாதபடி அவர்ஜ நீயமான சம்பந்தமும் இங்கே விநியோகம் கொள்ளும் படி யாய்த்து இவ்விஷயம் இருப்பது
கதிர்ப்பர்த்தா ப்ரபுஸ் சாஷி நிவாசாஸ் சரணம் ஸூ ஹ்ருத் என்று அவன் தானே சொன்னான் இ றே

பிராட்டி இவன் பக்கலிலே 1–மாத்ருத்வ பிரயுக்தமாக நிருபாதிக வத்சலை யாகையாலும் –2-இவன் பகவத் ஆச்ரயண சமயத்தில் தன்னுடைய பூர்வ
அபராத பீதனாய் அங்கு அணுகக் கூசினால் இவன் பூர்வ அபராதத்தை அவன் முகம் கொண்டு பொறுப்பித்துச் சேர்ப்பிக்குமவள் ஆகையாலும்
3–இவனுக்கு இவ்வுபாய விஷயமான வ்யவசாயத்தைக் கொடுக்குமவள் ஆகையாலும் –
4–அவனோபாதி ஸ்வாமிநி யாகையாலும் ஒரு தேச விசேஷத்து ஏறப் போனாலும் அவனுக்கே கைங்கர்ய வர்த்தகை யாகையாலும்
5–தன்னைக் கிட்டும் இடத்தில் ஒரு புருஷகார நிரபேஷை யாகையாலும் ஆதரணீயமாய் இருக்கும் –

ஆச்சார்யன் 1–இவனுக்கு பகவத் விஷயத்தையும் பிராட்டி வைபவத்தையும் கரும் தரையிலே உபதேசிக்கும் அவனாகையாலும்
2–தான் அனுஷ்டித்துக் காட்டி இவனை அனுஷ்டிப்பிக்கும் அவனாகையாலும்–3– இவன் குற்றம் பார்த்த அளவிலும் கைவிடாதவனாகையாலும்
4–இவனோடு சஜாதீயனாகையாலும் –5–ஸூ லபனாகையாலும் –6–இவனுடைய க்ருதஜ்ஞதை யடியாகப் பண்ணும் கிஞ்சித்காரங்களுக்கு சரீர சம்பந்த
முகத்தாலே இங்கே பிரதி சம்பந்தி யாகையாலும்–7– தன கார்யத்தை மறந்தாகிலும் இவனுடைய ஹிதமே பார்த்துப் போருமவனாகையாலும் ஆதரணீயனாய் இருக்கும் –

ஸ்ரீ வைஷ்ணவர்கள் 1– இவனுக்கு பிரதமத்திலே ருசி ஜனகர் ஆகையாலும் –2–ஆச்சார்யா உபதிஷ்டமான ஜ்ஞானத்துக்கு வர்த்தகராய் உசாத் துணை யாகையாலும்
3–ஆச்சார்யா பிரேமத்தை அபிவ்ருத்தம் ஆக்குமவர்கள் ஆகையாலும் –4–இவனுக்கு சேஷிகள் ஆகையாலும்–5– இவனுக்கு பிரகிருதி வச்யைதையாலே
சில ல்காலித்யங்கள் பிறந்தாலும் அத்தைத் தெளியப் பண்ணவும் வல்லர்களாய் இந்த முகத்தாலே ஆதரணீயராய்ப் போருவர்கள் –

இத்தை ஸ்ருதியும் மாத்ருதேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்யா தேவோ பவ அதிதி தேவோ பவ -என்று சொல்லி வைத்தது –
இங்கு அதிதி யாகிறான் -ஸ்ரீ வைஷ்ணவன் யாய்த்து -அதிதிகள் ஆகிறார் தாங்கள் முன்பு நின்ற நிலை குலைந்து
இவன் இருக்கிற வர்க்கத்திலே புகுமவர்கள் இ றே
இவர்களும் தந்தாமுடைய பிரகிருதி ப்ராக்ருதங்களை த்யஜித்து இவன் பற்றி நிற்கிற சரணத்திலே ஆகதரர் ஆனவர்கள் ஆய்த்து –
உபாயே க்ருஹ ரஷித்ரோ சப்த சரணம் இத்யாயம் -இத்யாதி -அப்படி வந்தவனை குல சரண கோத்ராதிகளை ஆராயாதே
சத்கரிக்க வேண்டுமோபாதிஸ்ரீ வைஷ்ணவனுடைய குலாதிகளை ஆராயாதே அதிதி சத்காரன்களைப் பண்ணக் கடவன் –
அதிதிர் யத்ர பக்நர்சேர க்ருஹாத் ப்ரதி நிவர்த்ததே ஸ தஸ்மை துஷ்க்ருதம் தத்வா புண்யமாதாய கச்சதி -என்கிறபடியே
அதிதிகளுடைய அசத்காரத்தில் பாபாகமனமும் புண்ய சாயமும் பிறக்கும் என்கையாலே இவனும் இவ்வைஷ்ணவனை ஆதரியானாகில்
பகவன் நிக்ரஹ ரூபமான பாபம் வரும் -தத் அனுக்ரஹ ரூபமான புண்யமும் இவனை விட்டுப் போகக் கடவது –

இனி இந்நால்வரில் அத்யந்த ஆதரணீயாராவார் யார் என்னில் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய வைபவ ஜ்ஞானமும்
-பிராட்டியுடைய வைபவ ஜ்ஞானமும் ஈஸ்வரனுடைய சர்வபிரகார வைபவ ஜ்ஞானமும்
இவ்வாச்சார்யா அங்கீகார அனந்தரம் ஆகையாலே
-யதா தேவே ததா குரௌ -என்கிற அளவன்றிக்கே விசேஷண ஆதரணீயன் ஆச்சார்யனே யாய்த்து

ஆகையாலே இவ்வாழ்வார் ஆகிறார் அவ்வாச்சார்யா வைபவம் அறிந்தவர் ஆகையாலும்
ஆழ்வார் திருவடிகளிலே நெடு நாள் பரிசர்யை பண்ணி அவருடைய பிரசாத பாத்ரராய்ப் போந்தவர் ஆகையாலும்
அவர் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் உண்டாக நினைத்திராதவர் ஆகையாலும்
அவரை வாயாராப் புகழ்ந்து அவருடைய உபகார அனுசந்தான ப்ரீதிக்குப்போக்கு விட வேண்டுகையாலும்
இப்பிரபந்த முகத்தாலே ஆழ்வார் வைபவத்தைப் பேசுகிறார்

ஈஸ்வரன் துராராதனாய் ஆச்சார்யன் ஸ்வாராதனாய் இருக்கும்
ஈஸ்வரனை ஆராதிக்கைக்கு திருவிருத்தம் தொடக்கமான நாலு பிரபந்தங்கள் வேண்டிற்று –
ஆழ்வாரை ஆராதிக்கைக்கு இப்பத்துப் பாட்டுக்களே அமைந்தது –

—————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: