பகவத் விஷயம் காலஷேபம் -10-கண்ணி நுண் சிறுத் தாம்பு – — -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-

முதல் -பாட்டில் -ஆழ்வார் உடைய நிரதிசய போக்யதையை -சொல்லுகிறது –
ஆழ்வாருடைய போக்யதையை இப்பாட்டாலே வெளியிடுகிறார்
சப்தாதி விஷயங்களின் உடைய போக்யதையும் ஆழ்வாருடைய போக்யதையும் பார்த்தவாறே விசத்ருசமாய் இருந்தது
இனி பகவத் போக்யதை இ றே கூட்டுதல் கழித்தல் செய்யலாவது -அந்த பகவத் போக்யதையிலும் விஞ்சி இருந்தது ஆழ்வாருடைய போக்யதை –
அதுக்குத் தானும் உட்பட -உருவமும் ஆர் உயிரும் உடனே யுண்டான் -9-6-5-என்னும்படி போக்ய பூதரானவர் இ றே இவர் -தட்டு மாறிய சீலம் –

இனி அந்தப் பகவத் விஷயத்துக்கு -வாஸூ தேவோ சி பூர்ண -என்கிறபடியே ஷாட் குண்ய பூர்நையாய் இருப்பதொரு பர அவஸ்தை யுண்டு –
அது ஒழிய சௌசீல்யாதி குண பூர்நையாய் இருப்பதொரு அவதார அவஸ்தை யுண்டு –
அந்த பரத்வம் பாற் கடலினுடைய ஸ்தானத்திலே யாய் அதில் அம்ருத கலசம் போலே யாய்த்து அந்த அவதார அவஸ்தை இருப்பது –
அவ்வதாரங்கள் தன்னிலும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் அந்த அவதாரங்கள் தன்னைப் பர அவஸ்தா நீயமாக்கும் படி அத்யந்த போக்யமாய் இருக்கும்
க்ருஷிர்ப் பூவாசகச் சப்தோ ணச்ச நிர்வ்ருத்தி வாசக -என்கிற வ்யுத்பத்தியாலே ஸூ கரமான வ்யக்தி இ றே
அதிலும் பக்வ கிருஷ்ணனிலும் காட்டில்
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன் சிந்தை போயிற்று -பெரிய திருமொழி -8-5-1-என்கிறபடி
முக்த கிருஷ்ண அபதானம் த்ருஷ்டி சித்த அபஹாரியாய் இருக்கும் -நவ நீத சௌர்யமும் நகர ஷோபமும் பண்ணின அபவதானம் இ றே
உறிகளில் வெண்ணெயோடு அறைகளில் பெண்களோடு வாசியற இரண்டையும் களவு கண்டு போந்த அபதானம் இ றே –
-இதுவாய்த்து அபதா நாந்தரங்களில் போக்யதமமாய் இருப்பது –

இவ்வபதானத்தின் போக்யதையை இவர் வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வார் தம்முடைய பாடே யாய்த்து
-முதல் திருவாய்மொழி யிலே சர்வ காரணத்வாதி லஷணமாக ஒரு வஸ்துவைச் சொல்லி
அப்படிப்பட்ட வஸ்து ஏது என்னும் அபேஷையிலே அநந்தரம் திருவாய் மொழி யிலே –
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-என்று நாராயண சப்த வாச்யமாகச் சொல்லி
இவ்வஸ்துவுக்கு அடையாளம் ஏது என்னும் அபேஷையிலே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-என்று
திரு மார்பில் பிராட்டியை அடையாளமாகச் சொல்லி இப்படி ஸ்ரீ யபதித்வத்தால் வந்த சர்வ உத்கர்ஷத்தை யுடைய வஸ்து
அநாஸ்ரிதர்க்கு அரியதாய் ஆஸ்ரிதர்க்கு எளியதாம் இடத்தில் -மத்துறு கடை வெண்ணெயை
-நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவள் ஆகையாலே துர்ப்பலையாய் இவன் தான் மருங்கில் இருந்து மருங்கு தேய்ப்புண்கையாலும்
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் –எடுத்துக் கொள்ளில் மருங்கு இறுத்திடும் -ஏரார் இடை நோவ -எத்தனையோ போதுமே
மத்தாரப் பற்றிக் கொண்டு என்னும்படி மதத்திலே உடலைச் சாய்த்து யாய்த்து கடைவது
இப்படி கடையா நிற்கச் செய்தே வெண்ணெய் படப் படக் களவு காண அவளும் இதுக்கு அடி என்
-தெய்வம் கொண்டு போகிறதா என்று விசாரித்து இவனுடைய வாயையும் கையையும் பார்க்கும் –

கண்ணன் என்னும் கரும் தெய்வம் இ றே களவு கண்டு கொண்டு போகிறது –
இவன் கள்ளன் என்று வாயது கையதாகப் பிடித்து கிடந்ததொரு கயிற்றாலே பண்டும் இவன் களவுக்கு பெரு நிலை நிற்கும்
உரலோடு அணைத்துக் கட்ட -இவனும் கட்டுண்டு இருந்து அழப் புக்கவாறே வாய் வாய் என்று
கையிலே கயிற்றைக் கொள்ள ஏறிட்ட குரலை இறக்க மாட்டாதே இருந்து அழுது ஏங்கும் யாய்த்து –
இப்பிரகாரம் ஏதாய் இருக்கிறது -இது பெருமையிலே முதலிடுமதோ-எளிமையிலே முதலிடுமதோ -என்று மோஹங்கதரானார் இறே
இத்தை அனுசந்தித்து போந்த இவரும் ஆழ்வார் ஈடுபட்டுப் போந்த அபதானம் இதுவாய் இருந்தது -என்று பார்த்து
இதிலும் காட்டில் முதலடியிலே இமையோர் தலைவா -என்று ப்ராப்யத்திலே கண் வைத்த இவரை அவா வற்று வீடு பெற்ற -என்னும் அளவும்
லோக உபகார அர்த்தமாக ஈஸ்வரன் இவர் அழுவது அலற்றுவது ஆண் பெண்ணாக மடல் எடுப்பது -தூது விடுவதாம் படி
தன் சங்கல்ப பாசத்திலே கட்ட இவரும் அதை அவிழ்க்க மாட்டாதே அறியா மா மாயத்து அடியேனை வைத்தையால் -2-3-3-என்னும் படி
கட்டுண்டு இருந்த இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடியை இப்பாட்டாலே அருளிச் செய்கிறார் -சங்கல்ப தாமத்தாலே கட்டுண்ணப் பண்ணினான் –
அவன் கட்டுண்ட இடத்தில் -பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று
பிறருக்கு ஏசுகைக்கு உறுப்பாய் விட்டது
இவர் கட்டுண்டது இறே நாட்டாருடைய கட்டை அவிழ்கைக்கு உறுப்பாய் பரம சாத்விக வர்க்கத்துக்கு போக்யமாய்த்து –
-இவர் கட்டுண்டது ஏற்றம் அன்றோ என்றவாறு -பொலிக பொலிக பொலிக என்னும் படி –

சரம அதிகாரி சேகரர் ஆகிறார் இவர் -ஆழ்வார் திருவடிகளே தாரகாதி -யாகக் கொண்டவர்
அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராமுதம் -இவர் -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -போக்யதா பிரகர்ஷம்
அவர் -மலக்கு நாவுடையேற்கு என்றார் -இவர் நாவினால் நவிற்று –
அவர் அடிக் கீழ் அமர்ந்து –இவர் மேவினேன் அவன் பொன்னடி
கண்ணன் அல்லல் தெய்வம் இல்லை -தேவு மற்று
பாடி இளைப்பிலம் என்றார் -பாடித் திரிவேனே -ஆனந்தப் பட்டார் வாசி உண்டே
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றேன் -திரி தந்தாகிலும்
உரிய தொண்டர் தொண்டர் —நம்பிக்கு ஆள் உரியனே
தாயாய் தந்தையாய் -அன்னையாய் அத்தனாய்
ஆள்கின்றான் ஆழியான் -என்னை ஆண்டிடும் தன்மையான் -வெப்பம் இல்லை குளிர்ந்து அன்றோ
கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் -தக்க சீர் சடகோபன்
யானே என் தனதே என்று இருந்தேன் -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
எமர் கீழ் மேல் ஏழ் ஏ ழ் பிறப்பும் நம்முடிய வாழ்வு வாய்கின்றவா -மா சதிர் -இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -நின்று தன புகழ் ஏத்த அருளினான்
ஒட்டுமே இனி என்னை நெகிழ்க -என்றும் என்னை இகல்விலன் காண்மின் -நீங்களே பாருமின் -சங்கையே இல்லை
மயர்வற மதிநலம் அருளினான் -ஒண் தமிழ் சடகோபன் அருளையே
அருள் உடையவன் -அருள் கண்டீர் இவ் உலகத்தில் மிக்கதே -உயர்ந்த அருள் என்கிறார் இவர்
பே ரே ன் என்று -நெஞ்சு நிறைய புகுந்தான் -நிர்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணன் அங்கெ திருவாய்மொழி இங்கே
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -ஆட்புக்க காதல் அடிமைப் பயன்
ஆராத காதல் -ஆட்புக்க காதல் -தாஸ்யம் ஸ்பஷ்டம் இங்கே தான்
பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி -அடிமை கொண்டான் -பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ -தென் குருகூர் நம்பிக்கு அன்பன் -திருஷ்டாந்தம் இல்லை இங்கு -போட்டி இல்லை இங்கு
உலகம் படைத்தான் கவி -மதுர கவி -இவர்
உரைக்கவல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம்மூர் எல்லாம் -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே பிரத்யஷம் -சங்கையே இல்லையே –

பிரத்யுபகாரம் செய்ய இயலாமல் குண அனுசந்தானம் செய்து -முனிவர்கள் யோகிகள் -குண நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்
போக்யதா பிரகர்ஷம் -முதல் பாட்டில்
தேக யாத்ரைக்கு தாரகம் -பாவின் இன்னிசை பாடத் திரிவனே
பகவத் விஷயம் உத்தேச்யம் ஆழ்வார் உகந்த விஷயம் -திரி தன்காகிலும்
விஷயீ கரித்து அருளி -அன்னையாய்
இதர விஷய பிராவண்யம் விட்டு தம் அளவு வரும் படி சாதுர்யம் -நம்பினேன்
ஆழ்வார் தம்மை விஷயீ கார உறுதி -ஆறாம் -இன்று தொட்டும் எழுமையும் -ஒன்பது குளிக்கு நிற்கும் -புகழ் ஏத்த அருளினான்
கிருபா பிரகாசம் -சடகோபன் அருளையே
ஆழ்வார் கிருபை விஞ்சி -அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
சகல வேத ரகசியம் -ஸூ பிரதிஷ்டியாக நெஞ்சில் நிறுத்தி -மிக்க -வேதத்தின் உட் பொருள் நிர்கப்பாடி
உபகாரம் பிரத்யுபகார நிரபேஷம் -முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே
பலன் சொல்லி தலைக் கட்டுகிறார் –

——————-

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் –
ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர் -ப்ரதம அவதியான பகவத் விஷயத்தில்
இழிவான் என் -என்னில் –
1–ஆழ்வார் உடைய போகய அதிசயம் தோற்றுகைக்காகவும் -என் அப்பனில்-
2–ஆழ்வார் உடைய முக முலர்த்திக்காகவும் –
3–அவர் உகக்கும் பகவத் விஷயம் -ஆகையாலும் —பெரு மாயன்–பேசுகிறார்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எழில் எத்திறம் -என்றும் –
பிறந்தவாறும் -வளர்ந்தவாறும் -என்றும் –
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள பையவே நிலையும் -என்றும்
ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையாலும் அத்தைப் பேசுகிறார் –

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் –
ஆழ்வார் பக்கலில் இவர்க்கு உண்டான உத்தேச்யதை இருந்தபடி –
அவருடைய உத்தேச்ய வஸ்துவைக் கட்டின ஒரு கயிற்றின் உடைய-யாரை கட்டுப் படுத்துமோ அதுவே காஷ்டா பூமி — உன்மானம் புறமானம்
ஆராயும்படி -ஆயிற்று இவர் பகவத் விஷயத்தில் கை ஒழிந்த படி –
எருமை சிறுவீடு -வந்து எங்கும் கோழி அழைத்தன கான் இடைத்தன்மை மெய்ப்பாடு போலே -தாம்புக் கயிற்றின் உள்மானம் புறமானம்
இவர் ஆழ்வார் பக்கலிலே ந்யஸ்த பரர் ஆனபடி –

கண்ணித் -தாம்பு
உடம்பிலே கட்டப் புக்கால் உறுத்தும்படி பல பிணைகளை உடைத்தாய் இருக்கை
கண்ணி -முடி
வேறு ஒருவரைக் கட்டுமதிட்டு இவனைக் கட்டப் போகாதே -பசு ப்ராயரைக் கட்டுமது ஒன்றுக்கு இவன் அகப்படானே –
பல கண்ணிகளையும் யுடைத்தாய் அனந்யமாய் இருப்பதொரு பாசத்துக்கு இ றே இவன் அகப்படுவது –
முடிச்சுக்கள் உடன் இவனுக்கே என்றே இருப்பதே பரபக்தி பர ஞானம் பரம பக்தி
சங்க காம அனுராகம் -தர்சன -ஞான பிராப்தி -அனந்யார்ஹ பக்தி என்றபடி
அசித் ப்ராயராய் தான் கால் வைக்கலாம் படி இருப்பாரோடு அணைதல் –
அசித் -தான் -கால் வைக்க லாம்படி -உரல் -சொல்ல எண்ணம் இல்லை –
உரலோடு இணைந்து இருந்து ஏங்கி இருந்த எளிவு -அச்சித்ப்ராயர் -பரதந்த்ரர் சொல்ல திரு உள்ளம்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
-அனந்யமான பாசத்துக்கு அகப்படுதல் செய்யுமவனாய்த்து -பாசம் -நேசம் கயிறு-
இவன் அகப்பட்டாய்த்து உரலோடு சேர்த்துக் கயிற்றை இட்டுக் கட்டிற்று
அது தான் பொத்த யுரலாய் ஸூ ஷிரமும் உண்டான பின்பாய்த்து அனந்யார்ஹம் ஆயிற்று
இப்படி அனந்யார்ஹர்க்கு இ றே அவன் உடம்பு கொடுப்பது
பொத்த யுரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி -என்கையாலே இது தான் இஷ்ட விநியோக அர்ஹமுமாயிற்றே-
பெருமாள் திருவடியை அணைத்தால் போலே -உரலை கண்ணன் அணைத்துக் கொண்டான் –

நுண் தாம்பு –
உடம்பிலே அழுந்தும்ப்படி நேரியதாய் இருக்கை
இன்றும் அழுந்திக் கிடக்கிறது இ றே இவனைக் கட்டுகிற பாசம் சௌஷ்ம்யவத்தாய் இருக்க வேணும் இ றே

சிறுத் தாம்பு –
இவனை கட்டின பின்பு உரலோடு சேர்த்த போராதாய் இருக்கை

கட்டுண்ணப் பண்ணிய
உரலை நேரிதாகச் செதுக்கப் போகாது
அப்போதாகக் கயிற்றை நெடுக விடப் போகாது
இனி இவன் தன்னை விட்டு நெடிய கயிறு தேடி எடுக்கப் புகில் பின்னை இவன் தான் எட்டான்
காற்றில் கடியனாய் ஓடும் -இனிச் செய்வது என் என்று அவள் தடுமாறிய படியைக் கண்டான் -அபலை அன்றோ –
கட்டினோம் ஆக வல்லமோ என்ற தாயார் முகத்தில் பயிர்ப்பு தீர ஒரு சுற்றுக்குப் போராத தாம்பு இரண்டு சுற்றுக்குப் போரும்படி
திருமேனியில் இடம் கொடுத்தபடி –
ஆஸ்ரிதர் கையாலே கட்டுண்ணா விடில் சீலத்துக்குப் போராது–அநாஸ்ரிதரைக் கட்டா விடில் ப்ரபாவத்துக்குப் போராது
ராஜாவானவன் எதிரிகளைக் கட்டி வைக்கவும் பும்ஸ்த்வம்–தன மகிஷியின் கையில் பூ மாலையாலே கட்டுண்டு கிடக்கையும் பும்ஸ்த்வம் –

கட்டுண்ணப் பண்ணிய –
சதைக ரூப ரூபாய என்கிற தன்னுடைய திருமேனியை நெருக்கி இடம் கொண்டு கட்டுண்ணும் படி பண்ணினான் –
கட்டுகைக்கு பரிகரம் இல்லை என்று நிவ்ருத்தை -யாமாகில்
பிறந்து படைக்க நினைத்த குணத்தை இழக்கும் இத்தனை இ றே-தாமோதரன் நவதீக கிருஷ்ணன் பெயர் வாங்க முடியாதே
ஆகையாலே திருமேனியிலே இடம் -கொடுத்தான்–சூட்டு நன் மாயை -தானே அவதார பிரயோஜனம் இங்கே -பவித்ராணாயா இல்லையே –
கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டு என்று -இருந்தான்-சம்மதித்து இருந்தான்- என்றும் –
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் -என்றும் –
எல்லாரும் ஈடுபடும் துறை இ றே இது -தான்
தாய் கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அல்லன் -என்று இருந்தான் இ றே-

ஸ்வ வ்யதிக்ர்த்தரை யடைய கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேதுவானவன் கிடீர் –
தாம்நா சைவயதி சக்நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித -என்று தாய் கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அல்லேன் என்று இருந்தான்இ றே
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது-ஸ்வ வியதிரிக்தரை அடைய கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேதுவானவன் கிடீர் இப்போது
ஒரு அபலை கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அன்றிக்கே -இருக்கிறான்
செருக்கனான சார்வ பௌமன் -அபிமத விஷயத்தின் கையிலே அகப்பட்ட ஒரு
கரு முகை யாலே கட்டுண்டு அகலுவதற்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருக்குமா போலே இ றே
இவள் கட்டின கட்டுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே யிருந்த யிருப்பும் –
பிறர் உடைய கர்ம நிபந்தனமாக வரும் கட்டை அவிழ்க்கும் அத்தனை அல்லது –
தன் அனுக்ரஹத்தால் வந்த கட்டு தன்னாலும் அவிழ்க்கப் -போகாது என்கை
ஆழ்வார் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே –
உயர்வற உயர்நலம் உடையவன் -என்று அவன் குணத்தை வர்ணித்தார் –
இவர் முதல் அடியிலே ஆழ்வார் தம்மை பற்றுகையாலே –
அவன் திருமேனியில் ஸ்பர்சித்த ஒரு தாம்பை வர்ணிக்கிறார் –
அவருடைய உத்தேச்ய வஸ்து இவர்க்கு வெளியதாய் கழிகிறது இ றே-

பிரேமத்தால் அன்றோ கட்டினாள் அதனால் கட்டுண்டான் -கயிற்றால் இல்லை
யதோ உபாசன ததோ பலம் -தார்க்கிக சிம்ஹம் -நியாய சாஸ்திரம் வெட்கி போனதாம் –
கட்டுண்டதை த்யானிக்க விடுதலை அடைகிறார்கள் சம்சார கட்டில் இருந்து -இதனால் வெட்கி ஒளிந்ததாம்
யசோதை கட்ட -ஆழ்வாராதிகளை அழ வைக்கிறாயே -இது நியாயமோ -வசப்பட்ட விஷயத்தில் வீர்யம் காட்டி -கூரத் ஆழ்வான் அதி மானுஷ ஸ்தவம்

கட்டுண்ணப் பண்ணிய –
அனந்யமாய் ஸூ ஷ்மமாய் இருந்ததே யாகிலும் திரு மார்பில் இருக்கிற அவளையும் அவனையும் சேர ஒரு உரலோடு சேர்த்துக் கட்ட
உரலுக்கும் தனக்கும் ஒரு வைஷம்யம் அற இருந்து பின்னையும் சைதன்யம் கிடக்கையாலே விம்மல் பொருமலாய் அழுது இருந்த
இந்த சௌசீல்யம் ஏதாய் இருக்கிறது என்று அவர் சோகித்தார் யாய்த்து
இவர் அத்தை அனுசந்தித்துப் போந்தவர் ஆகையாலே இவ்வாழ்வார் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்
அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று பிரகிருதி சம்பந்தத்தை அறுக்க வேணும் என்று
அபேஷியா நிற்கச் செய்தேயும் பகவத் சங்கல்ப பாசத்தாலே இவர் கட்டுண்டு இருந்த படியைக் கண்டு ஈடுபடுகிறார் –

அவன் இவளுடைய த்ரவ்யத்தைக் களவு காண்கையாலே கட்டுண்டான் —
இவர் பிறர் பணத்தை அவர்களுக்குக் கொடுத்து இருக்கச் செய்தேயும் கட்டுண்டவராய்த்து
அவன் தான் இவரைக் கட்டுகைக்கு அடி என் என்னில் இவரைக் கட்ட நாட்டில் உள்ளார் களவு -ஆத்மா அபகாரம் -போம் என்னும் நினைவாலே
ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலவும் அவ்வளவன்றிக்கே அறிவுக்கு அவகாசம் இல்லாத ஸ்தாவர ஜாதீயங்களையும்
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ வென்று கூவுமவராகையாலே இவரைக் கட்டி வைத்தான் –
இவருக்குத் தன் -கண்ணன் -களவு வெளிப்பட்டுப் பிறர் களவு -ஆத்மா அபகாரம்-போமாய்த்து –

கண்ணி நுண் சிறுத் தாம்பு
போக்யதா காஷ்டை யுள்ளது -இவ்வபதானம் ஆகையாலே அத்தை முற்படச் சொல்லி அதில் காட்டில்
ஆழ்வார் தமக்கு போக்யரான படியை இப்பாட்டாலே வெளியிடுகிறார்
அதில் அவன் கட்டுண்ட தாம்பை முற்படக் கொண்டாடுகிறார்
கண்ணித் தாம்பாயும் நுண் தாம்பாயும் சிறுத் தாம்புமாயும் இருக்கும்
ஜ்ஞான பக்தி வைராக்யங்களைக் கொண்டாடுமா போலே இங்கு மூன்று விசேஷணங்களைச் சொல்லுகிறார்
திரு மேனிக்கு உறுத்தும் படி பல கண்ணிகளை உடைத்தாய் இருக்கும்
பிரதமத்திலே ருசி சங்கம் பக்தி பர பக்தி பர ஜ்ஞானம் பரம பக்திகள் என்று அநேக பர்வையாய் இ றே அந்த பக்தி இருப்பது
பக்தி க்ராஹ்வோ ஹாய் கேசவ -என்றும் -அபங்குர பக்தி பவ்ய -என்று பக்தி பவ்யனாய் இ றே அவன் இருப்பது –

நுண் தாம்பு –
நுண்ணிதான தாம்பு -திருமேனியிலே அழுந்தும்படி நுண்ணியதாய் இருக்கும்
அந்த பக்தி தான் ஜ்ஞான சிரஸ்கம் ஆகையாலே அந்த ஜ்ஞானம் தான் நுண்ணறி வாய்த்து இருப்பது –
பகவத் ஸ்வரூப ரூபாதிகளை யதாவாக சாஷாத் கரிக்கிறது இ றே
பக்த்யா மாமபிஜா நாதி யாவான் யச்சாச்மி தத்வத -என்கிறபடியே -இன்னான் இணையான் ஸ்வரூபம் ஸ்வ பாவம் –

சிறுத் தாம்பு –
உள்ள கயிறுகள் கன்று கட்டுகைக்கும் பசு கட்டுகைக்கும் கடை கயிருமாய்ப் போயிற்றன
இனி வேறு ஓன்று கட்டுகைக்கு உருப்பல்லாத கயிற்றாலே யாய்த்து இவனைக் கட்டுவது
அனந்யார்ஹமாய் இருப்பது ஒன்றுக்கு இ றே இவன் கட்டுண்பது
பக்த்யா த்வ நன்யயா சக்ய -என்றும் பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா -என்று அனந்யையான பக்தியாக வேணுமே
அல்லாதவற்றுக்கு விநியோகம் கன்று காலிகளைக் கட்டுகை இ றே –

கட்டுண்ணப் பண்ணிய
தாம்பு சிறுத் தாம்பு ஆகையாலே அதை நீளப் பண்ணப் போகாது –
அடுத்து கட்டுகிற உரலை இளைக்கப் பண்ணப் போகாது
இனி இடம் காணலாவது இவன் பாடே யாகையாலே
வயிற்றை எக்கச் சொல்லி இடம் கண்டு கட்டினாள் யாய்த்து
தன்னுடைய சங்கல்ப்பத்தாலே இடம் கொடுக்கை அன்றிக்கே தாயாருடைய சீற்றத்துக்கு அஞ்சி மௌக்யப் பிரயுக்தமாய் கட்டுண்ணப் பண்ணினான் ஆய்த்து –

கட்டுண்ணப் பண்ணிய
பக்தி யுண்டே யாகிலும் அவன் தானே தன்னை அமைத்துத் தர வேண்டும் படியாய் இது பின்னையும் சிறிதாய் இருக்குமாய்த்து
நாயமாத்மா -இத்யாதி -அவனால் காட்டினால் உண்டு என்றதை அவனால் கட்டுண்ணப் பண்ணிக் கொண்டாள்-
இனி இந்த பக்தி இவன் நெஞ்சில் அந்ய பரதையை அறுக்கும் இத்தனை
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி -என்கிறபடியே எட்டும் இரண்டும் பத்தாய் பக்தியைச் சொன்னபடி
எட்டு என்று திரு அஷ்டாஷரமாய் அத்தாலே யாதல் -இரண்டு என்று வாக்ய த்வயமாய் அத்தாலே யாதல் வசீகரித்து என்னவுமாம்
அல்லது எட்டும் இரண்டும் அறியாதார்க்குக் கட்டப் போகாதே-

இவன் தன்னைக் -கட்டுவது
1–ஒரு பெண்ணைக் களவு கண்டான் –2–வெண்ணெயை களவு கண்டான் –3—ஊரை மூலை
யடியே -நடத்தினான் -என்று இ றே -இவன் சாமான்யன் என்று இடும் ஈடெல்லாம் இடும் கோள்
என்று இருந்தான் -அதாவது களவிலே தகண் ஏறின படி-
அழகர் திருமலையில் சாமான்யர் சோழியர் இரண்டு வகைகள் -அன்யோன்ய ஸ்பர்சை உண்டாம் -இருட்டில் சாமான்யர்களை
நையப் புடைக்க எண்ணி –தப்பாக அடிக்க -நான் சோழியன் -எதற்கு அடிக்கிறீர்கள் -சாமான்யன் நினைத்து அடித்தது திருப்தி –
திருட்டு பட்டம் காட்டத் தானே வந்தேன் -அதனால் சாமான்யன் என்றால் திருப்தன் என்றவாறு –

-இவை கட்டி வைத்து அடிக்கப் புக்க வாறே
தொழுகையும் -என்ற படி தொழுக தொடங்குமே
எல்லாரையும் தொழுவித்துக் கொள்ளுமவன் இறே தொழுகிறான்
போக்கடி அற்ற தசையில் அபிமத ஸித்திக்கு அஞ்சலியே சாதநம் -என்று அறிந்தவன் இறே-
அஞ்சலியே பிரதி அஸ்தரம் நாராயண அஸ்த்ரதுக்கு அர்ஜுனனுக்கு அருளிச் செய்தானே –

அதி சஞ்சல சேஷ்டித –
துரு துருக்கையனாக கொண்டு ஊர் பூசல் விளைத்தவன் இல்லையோ –
இத்யுக்த்வா
ஒரு சொல்லாலே விலங்கிட்டு வைத்து
அத நிஜம் கர்ம சாசகார
-அவள் தான் கறப்பது கடைவது ஆகத் தொடங்கினாள் –
குடும்பிநீ
இவனைப் போலே நியமிக்க வேண்டுவது அநேகம் உண்டு இ றே-

பெரு -மாயன்
நிரதிசய ஆச்சர்ய -உக்தன்
-இத்தால்
அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை உண்டாய் –
அது தன்னை ஷூ த்ரரைப் போலே களவாகிற வழி யல்லா வழியிலே இழிந்து
சர்வசக்தியானவன்
அது தன்னையும் தலைக் கட்ட மாட்டாதே
வாயது கையதாக அகப்பட்டு
கட்டுண்டு
அடியுண்டு
பையவே நிலையும்
என்று உடம்பு வெளுத்து நின்ற நிலை யளவும் செல்ல -நினைக்கிறார்—

பெரு -மாயன்
இவருடைய எத்திறம் இருக்கும் படி –
1–அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்குகையும்
2–அவனுக்கு ஷூத்து நலிகையும்–நெடு நோக்கு –
3–நவ நீதத்திலே ஸ்ரத்தை யுண்டாகையும்
4–அத்தை இடுவார் இல்லாத போது களவு காண்கையும்
5–அத்தைத் தலைக் கட்ட மாட்டாதே வாயது கியதாக அகப்படுகையும்
6–ஸ்ருஜ்யர் கையிலே கட்டுண்கையும்
7–சம்சார பந்தத்தை தவிர்க்க வல்லதான இத்தை விட்டுக் கொள்ள மாட்டாது ஒழிகையும்
இது என்ன ஆச்சர்யமோ என்கிறார்
இவனுடைய மேன்மை எல்லை காணலாம் -நீர்மை தரை காண ஒண்ணாது –

என் -அப்பனில்
ஆழ்வார் இவருக்கு உத்தேச்யராய் நிற்க -இங்கனம் சொல்லுவான் என் -என்னில்
பகவத் சம்பந்தம் அற வார்த்தை சொன்னார் ஆகில்
ஆழ்வாரோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்டார் ஆவர் இ றே -அத்தாலே சொல்லுகிறார்
அதவா –
பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம் -என்கிறபடியே
அவ்வருகே போவாரையும் துவக்க வல்ல விஷயம் ஆகையாலே துவக்குண்டு -சொல்லுகிறார் என்னவுமாம்-

என்னப்பனில் –
கீழ் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தம் ஆகையாலே ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தம் சொல்லிற்று
மேல் உத்தேச்யமான விஷயத்தைச் சொல்லாதே அவனை என்னப்பன் என்பான் என் என்னில்
ஆழ்வார் அங்கீ கரிக்கைக்காக அங்கே தமக்கொரு சம்பந்தம் சொல்கிறார்
ஒன்றைக் குறித்துப் போம்போது நீரும் நிழலும் நன்றாய் இருந்தது என்று ஒதுங்கினால் உத்தேச்யம் ஆகவேணுமோ –

என் அப்பனில் நண்ணி
பகவத் விஷயத்தில் நின்றும் ஆழ்வார் விஷயத்தில் கிட்டி
சப்தாதி விஷய ப்ராவண்யங்களை விட்டு பகவத் விஷயத்தில் கிட்டுகையில் உள்ள அருமை போல் அன்றி
ப்ரதம அவதியான பகவத் விஷயத்தை விட்டு சரம அவதியான ததீய சேஷத்வத்தை கிட்டுகை-
சப்தாதி விஷயங்களை விடலாம் அதின் தோஷ தர்சநத்தாலே
இங்கன் ஒரு தோஷம் காண விரகு இல்லை யாகையால் இது அதிலும் அரிது

தென் குருகூர் -நம்பி
நல்கி என்னை விடான் நம்பி நம்பி -என்று ஆழ்வார் தாம் உத்தேச்யமாக பற்றின
விஷயத்தில் பூர்த்தி அளவு அன்று இ றே இவர் பற்றின விஷயத்தில் பூர்த்தி –
எங்கனே என்னில் –
பகவத் விஷயத்தைப் பற்றினால் அதின் எல்லையான ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்
ஆழ்வாரைப் பற்றினால் -அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை இ றே-
ஆச்சார்யர்களை -நம்பி -என்னக் கற்ப்பித்தார் ஸ்ரீ மதுரகவிகள் இ றே என்று ஜீயர் அருளிச் செய்வர் –

என்றக்கால்-
மநோ வாக் காயங்கள் மூன்றும் வேண்டி இருக்கும் பகவத் விஷயத்துக்கு -வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால்
சததம் கீரத்த யந்தா –நித்ய யுக்தா
ஒரு உக்தி மாத்ரமே அமையும் இவ் விஷயத்துக்கு
பூர்தியால் வந்த ஏற்றமே அன்று -சௌலப்யத்தாலும் வந்த ஏற்றம் உண்டு என்கை-

தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்
குறுங்குடி நம்பியைக் காட்டில் குருகூர் நம்பியை வ்யாவர்த்திக்கிறது
அவனுக்குப் பூர்த்தி ஜ்ஞான சக்த்யாதிகளாலே
இவருக்குப் பூர்த்தி ஜ்ஞான பக்த்யாதிகளாலே
ஜகத்தை தனக்கு ஆக்கும் படியான குணங்கள் அவனது
அவன் தன்னைத் தனக்காக்கும் படியான குணங்கள் இவரது

நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
ஆழ்வார் பக்கலிலே நெஞ்சை வைத்து ஆழ்வார் திரு நாமத்தைச் சொன்னால்

அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே
நினைத்த நெஞ்சம் தித்தித்தது
சொன்ன நாக்கும் தித்தித்து வாரா நின்றது
சாரச்யம் சதா கால வர்த்தியாகா நின்றது
இனி பகவத் விஷயத்தை நினைக்கைக்கு நெஞ்சம் இல்லை –சொல்லுகைக்கு நாக்கும் இல்லை
இந்த சாரச்யம் எங்களுக்குப் பிறக்க காண்கிறிலோமீ என்னில்

அண்ணிக்கும்
தித்திக்கும்
பகவத் விஷயத்தை அனுபவித்தால் ஆழ்வாருக்கு பிறக்கும் ஆநந்தம் எல்லாம்
இவ்விஷயத்தில் ஒரு உக்தி மாத்ரத்திலே எனக்கு சித்தித்தது –

அமுதூரும்
அமுதூற்று மாறாதே நிற்கும்
அவ்விஷயம் ஆழ்வாருக்கு -நச புன ஆவர்த்ததே என்று -தத் ப்ரசாதத்தாலே நித்தியமாய் செல்லுமா போலே
எனக்கும் ஆழ்வார் ப்ரசாதத்தாலே நித்யமாக -அபூர்வமாய் -செல்லப் பெற்றேன்-
ஆழ்வாருக்கு நித்யம் -ஆழ்வார் அனுபவம் அபூர்வ நித்யம் என்றபடி –
மலர் கண் -மலர்ந்த மலர்ந்து கொண்டு இருக்கும் மலரும் -முக் காலத்துக்கும் -கொள்ளலாம் போலே -இங்கே அமுது ஊரும்

என் நாவுக்கே
இது பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையோ என்னில்
முதல் அடியான பகவத் விஷயமும் கூட ரசியாது இருக்கிற உங்களுக்கு
அதின் எல்லையில் நிற்கிற எனக்கு
ரசிக்குமா போலே ரசிக்குமோ

என் நாவுக்கே
அநாதி காலம் விஷயாந்தரங்களில் ரசித்துப் போந்த என் நாவுக்கே இவ் விஷயம்
ரசிக்கிறது –என்றுமாம்

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

One Response to “பகவத் விஷயம் காலஷேபம் -10-கண்ணி நுண் சிறுத் தாம்பு – — -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-”

  1. வ.சே.திருமலை Says:

    மிகவும் உபயோகமாயிருந்தது. கைங்கர்யம் தொடரட்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: