பகவத் விஷயம் காலஷேபம் -8-திருப்பல்லாண்டு -உடுத்துக் களைந்த நின் பீதகவாடை/எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம்/அல் வழக்கு ஒன்றும் இல்லா/பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை/—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் – -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் முடி சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திரு விழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே –9

அவதாரிகை

வாழாளிலே அழைத்து –எந்தை தந்தை யிலே -கூடின -அநந்ய பிரயோஜனர்
பாசுரத்தாலே -அவர்களோடே கூடி -திருப்பல்லாண்டு பாடுகிறார் -இதில் –

கைங்கர்யம் என்றாலே ஆதி சேஷன் நினைவு வருமே அதனால் மீண்டும் மீண்டும் பைந்நாகப் பணையான் என்று அருளிச் செய்கிறார்

வியாக்யானம் –

உடுத்து
திருவரையில் ஸூ சங்கதமாக சாத்துகையாலும் -திருவரையிலே முசுகையாலும் –
தத் சம்பந்தம் தோற்றும்படி ஒற்று மஞ்சளாலும் மாளிகை சாந்தாலும் சிஹ்நிததாம்படி உடுத்து –
இவை இத்தனையும் ப்ரார்த்தநீயமாம்படி இருப்பார் சிலர் நாங்கள் –
சேஷிக்கு மங்களாவஹம ஆகையும் -தத் சம்பந்தங்கள் தோற்றின சிஹ்னங்களை
உடைத்தாகையும் -சேஷ பூதனுக்கு ஸ்ம்ர்தி விஷயமாக கொண்டு சர்வ காலமும்
ப்ரிய கரமாய் இ றே இருப்பது
களைந்த
ஆசன பேதத்திலே கழித்தால் பொகடும் ஸ்தலம் தங்கள் தலையாம்படி இருக்கை –
இதுவும் சேஷ பூதனுக்கு ப்ரார்தநீயம் இ றே-

உடுத்த நின் பீதக வாடை
களைந்த நின் பீதகவாடை
எண்ணாமல் உடுத்துக் களைந்த நின் பீதகவாடை –
மஞ்சளும் செங்கழுநீரும் கலந்த –

இங்கன் ப்ரார்த்த நீயமாக வேண்டுகிறதுக்கு ஹேது சொல்லுகிறது மேல்
நின் பீதக வாடை –
வகுத்த சேஷியது யாகையாலே -சாத்தும் திருப் பரிவட்டம் அடைய திரு பீதாம்பரத்தின் உடைய
ஆவேச அவதாரம் ஆகை -நின் பீதக வாடை –
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கரக் கையன் -துரும்பு திருச் சக்கர ஆவேசம் போலே –
ஸ்ரக் வஸ்த்ராபரணைர் யுக்தம் ஸ்வ அநுரூபைரநூபமை -என்று சேதன கோடியிலே இ றே
திருப் பீதாம்பரத்தை சொல்லுகிறது-பீதாம்பரம் சந்தனம் வஸ்த்ரம் எல்லாம் சேதன கோடி –
பார்த்தாலே அஜ்ஞ்ஞானம் தொலைந்து ஞானம் பிறக்குமே -அப்ராக்ருதம் திவ்யம் இவை –
உடுத்து
இது இ றே அநந்ய பிரயோஜனருக்கு ஆபரணம்
அங்கன் அன்றியே -பக்தாநாம்-என்று இருக்குமவன் ஆகையாலே இது தான் சேஷி
அளவிலே வந்தவாறே பிரதிபத்தி வேறு பட்டு இருக்கும் -ராஜாக்களுக்கு இரட்டை பிடித்து-த்விபட்டி -மடித்து கொடுப்பது துப்பட்டி –
கொடுக்குமவர்கள் -வாக்காக பிடித்து -தங்கள் அரையிலே உடுத்திருந்து யோக்யமாம்படி
பண்ணிக் கொடுப்பார்கள் -அதுவாய்த்து இவனுக்கு நினைவு-
அநந்ய பிரயோஜனர் அவன் நினைவால் தனக்கு ராஜா என்றவாறு

கலத்ததுண்டு –
அமுது செய்து கை வாங்கின தளிகை மாற்றினால் பிரசாதம் போஜ்யம்-
கை வாங்கின -காலத்தால் பேதம்
தளிகை மாற்றினால் -தேச பேதம் –
ஆச்சார்யா புருஷர்களுக்கு தளிகை மாற்றுவார்கள்
கலைத்தது உண்டு
களைந்த சப்தம் போலே இல்லை -கலத்தது உண்டு -இங்கே -சப்தம் தருவித்து உண்ட கலத்ததில் உண்டு –
த்வதீய –சேஷ போஷன -சேஷாசனர் -அசனார் உண்பவர் -மிச்சம் உண்டு ஆனந்தம் கொள்பவர் விஷ்வக் சேனர்
த்வதீயபுக் தோஜ்ஜித சேஷ போஜிநா -என்னக் கடவது இ றே -ப்ரசாதமே தாரகமாய் இருப்பார் சிலர் நாங்கள் –
குரோர் உச்சிஷ்டம் புஞ்ஜீத -என்று விதி ப்ரேரிரதராய் கொண்டு பிரதிபத்தி பண்ணுவர்கள்–ஸ்வரூப ஜ்ஞானம் இல்லாதவர் –
மோர் முன்னர் ஐயன் போலே -விதி படி என்றால் ஒரு தடவை தான் -பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இவர் –
ஸ்வரூப ஜ்ஞானம் உடையார் தத்  ஸித்தி யர்தமாக பிரதிபத்தி பண்ணுவர்கள் -பகவத் ப்ரேம யுகதர் ஸ்வயம் பிரயோஜனம் என்று இருப்பர்கள் –
இச் சேஷத்வ காஷ்டையான ததீயர் உடைய பிரசாதம் -தருவரேல் புனிதம் அன்றே -என்கிறபடியே
அதி க்ர்தாதிகாரமாய் இருக்கும் -சர்வ சாதாரணனது ஆகையாலே பிரயோஜனாந்த பரனுக்கும்
போக்யமாய் இ றே பகவத் பிரசாதம் இருப்பது-
உச்சிஷ்டம் -தாமசம் -விதி விலைக்கு-தேசிகன் சாதித்து அருளுகிறார் –

தொடுத்த இத்யாதி –
திருத் துழாய் பறிக்கும் போதும் -தொடுக்கும் போதும் -அவன் சாத்தி அருளப் புகுகிறான் –
கேசவப்ரியே-நான்கு தளங்கள் -கொண்ட திருத் துழாய் பரித்து-ஆதரவே சம்ஸ்காரம் –
என்னும் ஆதரத்தாலே சம்ச்க்ர்தமாய் சாத்திக் கழித்தால் சூடுமது எங்களுக்கு உத்தேச்யம் –
சுவடர் பூ சூடும் போது புழுகிலே -புனுகு தைலம் –தோய்த்து சூடுமா போலே -தத் ஸ்பர்சத்தாலே விலஷணமாய்
இருக்கும் என்கை -அவன் தானும் சிலர் -சூடிக் கொடுத்த மாலையின் சுவடு அறியுமவன்
ஆகையாலே சூடிக் கொடுக்கிறான் இ றே-சூடிக் கொடுத்த தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் –

இத் தொண்டர்களோம்
இப்படிப்பட்ட அடியார்கள் இ றே நாங்கள் –
எமக்கு என்று உடுத்தல் ஜீவித்தல் சூடுதல் செய்யுமவர்கள் அன்றிக்கே -அவன் கழித்தவை
கொண்டு தேக யாத்ரையாம் படி யிருக்குமவர்கள் இ றே  நாங்கள் -அநந்ய பிரயோஜனர் பாசுரம் தானே இது –

ஸ்வரூப சித்யர்த்தமாக அத்தலையில் உச்சிஷ்டங்களை ஆகாங்ஷித்து புகையில்
உண்பன் என்று இருக்கும் அத்தனையோ -என்னில் -கைங்கர்யம் பண்ண வேண்டுமே –
கைங்கர்யம் செய்து சம்பாவானை இல்லை -பர்த்ரு போகத்துக்கு விலை பேசக் கூடாதே அதனால் தான்
உடுத்து இத்யாதி-சம்பாவானை சொல்லி பின்பு கைங்கர்யம் பற்றி அருளிச் செய்கிறார் –

விடுத்த இத்யாதி –
ஸ்வாமி சந்தேச காரிகளாய் கொண்டு -இப்படி தேக யாத்ரை நடத்துமவர்கள் இ றே நாங்கள்-செய்தி ஏந்தி தூது போன திருவடி போலே –
விடுத்த திசைக் கருமம் திருத்தி –
வேறு ஒருவரை ஏவ வேண்டாத படி செய்து தலைக் கட்ட வேண்டும் –
குண அனுபவமும் கைங்கர்யமும் பொழுது போக்க கொள்ள வேண்டும் -புத்தி வேற திசையில் மேயாமல் இருக்க -இது வேண்டுமே
க்ரியதாம் -என்கிற சந்தேசமே தாரகமாக ஏவின கார்யத்தை செய்து தலைக் கட்டுகை –
ஸ்வாமி ஏவின கார்யத்தை குறையச் செய்யுமவன் அதமன் –
அத்தை குறையாமல் செய்து தலைக் கட்டுமவன் மத்யமன் –
அதுக்கு மேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்து செய்து தலைக் கட்டுமவன் உத்தமன் –
கார்யே கர்மணி நிர்த்ஷ்டேயோப ஹூந்ய பிசாதயேத்
பூர்வ கார்யா விரோதே ந ஸ கார்யம் கர்த்துமர்ஹதி -என்கிற திருவடி இ றே அவன் ஆகிறான்
பிராட்டி இருந்த இடம் அறிந்து வா -என்று விட –
இருந்த இடமும் அறிந்து -அவன் பலம் இருந்தபடி என் -என்று பெருமாள் கேட்டருளினால்
அறிந்திலேன் என்ன ஒண்ணாது -என்று அத்தலையிலே பல பரிஷையும் பண்ணி
ஊரில் அரணையும்-மாருதியால் சுடுவித்தான் -பிராட்டி உடைய சோக அக்னியால் — தலை அழித்து -மூலையடியே போம் படி பண்ணி வந்தான் இ றே

திருவோணத் திரு விழவில் –
ஏவின கார்யத்தை குறை யறச் செய்த அளவிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திருவவதரித்து அருளின திருவோணம் ஆகிற மங்கள திவசத்திலே என்ன தீங்கு
வருகிறதோ என்று மங்களா சாசனம் பண்ணி வர்த்திக்குமவர்கள்

படுத்த இத்யாதி –
அதிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திரு வநந்தாழ்வான் மேலே சாய்ந்த போதை அழகுக்கு கண் எச்சில் வாராமைக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
படுக்கப்பட்டு ஸ்வ சம்ச்லேஷத்தாலே விகசிதமாக நின்றுள்ள -விகசித்துக் கொண்டு இருக்கும் -பணைத்தை உடையனாய்
-மென்மை -குளிர்த்தி -நாற்றம் -விசாலம் -வெண்மை -என்கிறவற்றை பிரக்ர்தியாக உடைய திரு வநந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே
கண் வளர்ந்து அருளுகிறஅழகுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்
-ஸ்வதஸ் சர்வஞ்ஞனையும் மயங்கப்பண்ணும் படுக்கை -அவன் ஸ்வ ஸ்பர்சத்தாலே விக்ர்தனாகப் பண்ணும்
இவனுடைய வடிவும் -அவனுடைய வடிவும் -கிடந்ததோர் கிடக்கை -என்கிறபடியே
பரிச்சேதிக்க ஒண்ணாத அழகு இ றே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகு –
ஒரு வெள்ளி மலையிலே காள மேகம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிற போதை
பரபாக ரசத்தை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழியச் செல்லுமோ என்கிறார்கள்-

———————————————————————————————–

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்து பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்தது காண்
செந்நாள்த்  தோற்றி திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே வுன்னைப் பல்லாண்டு கூறுவனே –10-

எம்பெருமான் -சம்போதம்
அடியோங்கள் அடிக்குடில் -வீடு பெற்று -தாஸ பூதரான நாங்களும் –
எங்கள் க்ரஹங்களில் உள்ள புத்ர பௌத்ராதிகளும் -அஹங்காரமான ஐஸ்வர்ய
கைவல்யங்களையும் -விடப் பெற்று-
குடில் —மஞ்சா குரோசி போலே குடிலில் உள்ளோர்
அடி –அடிமை பெற்று -வீடு பெற்று -விடுதலை பெற்று -கைவல்ய மோஷத்தில் இருந்து உஜ்ஜீவித்தது
திருமதுரையுள் சிலை குனித்து-கம்சன் அரண்மனையில் வில்லை முறித்து –
ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே -காளியன்- முன்னாள் நடந்த விருத்தாந்தம்
தோற்றி -பாய்ந்து -சிலை குனித்து -க்ரம படி -ஆழ்வாருக்கு காட்டி அருளிய படி அருளிச் செய்கிறார்
விற் பெரு விழவும்–அங்கும் அப்படியே – கண் சிமிட்டும் நேரத்தில் நடந்தவை அனைத்தும் —
இங்கு மங்களா சாசன பாசுரம் -சின்ன வயசிலா இப்படி பண்ணினான் -கண் எச்சில் படுமே -அதனால் –
பத்து வயசில் கம்சனை முடித்ததை சொல்லி
ஆச்வாசப்படுத்தி அப்புறம் இவற்றை அருளிச் செய்கிறார்

———————————————————————————————–
அவதாரிகை –

கீழில் பாட்டில் புகுந்த அநந்ய பிரயோஜனர் தேக யாத்ரையிலும் தங்கள் பாரதந்த்ர்யமே-உம்மை -ஆத்மயாத்ரையில் பாரதந்த்ரம் உண்டே –
ஸ்வரூபமாய் இருக்கிற ஏற்றத்தை சொல் லிக் கொண்டு புகுந்தார்கள் –
இதில் -பிரயோஜநாந்த பரர் -கைவல்யர் -புகுருகிரார்கள் ஆகையாலே -தங்கள் பக்கல் அங்கன்
இருப்பதோர் ஏற்றம் காண விரகு இல்லாமையாலே -பகவத் பிரபாவத்தால்
தங்களுக்கு பிறந்த -தாற்காலிக -அப்போது சடக்கு என்று -ஏற்றத்தை சொல்லிக் கொண்டு வந்து புகுருகிரார்கள் –
ஐஸ்வர்யார்த்தியும் சங்கதனாகிற போது -சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர்
ஆக்க வல்ல -என்று பகவத்ப்ரபாவத்தை சொல்லிக் கொண்டு வந்து இ றே புகுந்தது –
அவன்-ஐஸ்வர்யார்த்தி- தான் நான் அபேஷித்த சூத்திர புருஷார்த்தத்தை தந்து வைத்து -என்னை சுத்த
ஸ்வபாவன் ஆக்கினான் -என்று ஆச்சர்யப் பட்டான் –
தீயில் பொலிகின்ற -அதில் பகவத் பிரபாவத்தை சொல்லாமல் இங்கு சொல்லிக் கொள்கிறார்கள்
இரண்டாம் படிக் கட்டில் ஐஸ்வர் யார்த்திகள் சொல்லிக் கொள்கிறார்கள் வெள்ளுயிர் ஆக்கி -என்றார்கள்
கைவல்யார்திகள் தங்கள் ஷூ த்ர புருஷார்த்த சம்பந்தம் யாவதாத்மபாவி விநாசகரம்
ஆகையாலே ஆஸ்ரயண வேளையில் மீட்ட ஆச்சர்யத்தைக் கொண்டாடுகிறார்கள் –
உபாசனம் பண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது -வெளுத்த ஸ்வ பாவம் ஐஸ்வர்யார்த்தி-
இவன் பெரியாழ்வார் கொண்டு திருத்தப் படுகிறான் –
உபாஸனா தசையில் தர்சனம் ஐஸ்வர்யார்த்தி -அதனாலே முன்பே வெள்ளுயிர் ஆக்க வல்ல என்றார்கள்
கைவல்யார்த்திக்கு மூன்றாம் நிலை -ஆஸ்ரயண வேளையில் தான் –

————————————————————————————————-

வியாக்யானம் –

எந்நாள்
அந்நாள் -என்ன அமைந்து இருக்க -எந்நாள் -என்கிறது வகுத்த சேஷி பக்கலிலே ஷூத்ர
புருஷார்த்தத்தை அபேஷித்த காலமாய் இருக்கச் செய்தேயும் -ஸூப்ரபாதாச மேநிஸா -ஜன்ம சாபல்யமே இன்று தான் -அக்ரூரர் –
என்கிறபடி மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமாம் படி புகுற நிறுத்தின
திவசம் -என்று அந்நாளைக் கொண்டாடுகிறார்கள் –
பகவத் பிரபாவம் தான் விஷயீ கரித்த திவசத்தையும் கொண்டாடும்படியாய் இருக்கும் இ றே
அவதாரத்தில் ஏற்றம் சொல்லுகிற அளவில் தஜ் ஜன்ம திவசம் என்று அந்நாளும்
கொண்டாடப் பட்டது இ றே-
பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து வந்தவன் -அது ஒழிந்து -அநந்ய பிரயோஜனன்
ஆகைக்கு அடி என் என்னில்-

எம்பெருமான் –
ஷூத்ர பிரயோஜநத்தை அபேஷித்து நிருபாதிக சேஷியான உன் பக்கலிலே
வருகையாலே ஸ்வரூப பராப்தமாய் வந்த சேஷத்வமே பலித்து விட்டது –
எத்தையும் கேட்டு வந்தாலும் எம்பெருமான்
நீ எம் பெருமான் நிருபாதிக சேஷி -ஸ்வரூப பிராப்தம் -கைவல்யம் கேட்க உன்னிடம் வந்து -நீ சேஷி என்று அறிந்து –
வகுத்த சேஷி யானாலும் -அபேஷிதங்களை ஒழிய புருஷார்த்தார்த்தங்களைக்
கொடுக்கும் போது -அர்த்தி பக்கலிலே ஒரு கைம்முதல் வேண்டாவோ என்னில் –
அநந்ய பிரயோஜனாந்தர் ஒன்றும் கொடுக்க வேண்டாம் –
பிரயோஜநாந்த பரர்கள் ஏதாவது கொடுக்க வேண்டுமே

உன் தனக்கு அடியோம் என்று எழுத்து பட்ட –
அடியோம் என்கிற அர்த்தத்துக்கு வாசகமான சப்தத்தில் எங்களுக்கு அந்வயம் உண்டு
நெஞ்சில் இன்றிக்கே இருக்கிலும் வாயில் உண்டான மாத்ரம் கொண்டு தர வல்ல சக்தி
உண்டு இ றே உனக்கு
ஸ்வ தந்த்ரன் அடியோம் என்று சொல்லிக் கொள்ண்டு வர மாட்டான்
அடியோம் என்று பொருள் கொண்ட பிரணவம் சொல்லிக் கொண்டு வந்தான்
அடியோம் என்று எழுத்துப் பட்ட -அந்நாள் -அடியோம் சொல்லாமல் அடியோம் பொருள் படும் ஓம் நம -சொல்லி
அடியோம் பொருள் நெஞ்சில் படாமல் எழுத்துப் பட்ட -இருந்தாலும் இதுவே வியாஜ்யமாக ஏமாந்து கொடுத்தான் -என்றவாறு
புத்தியில் பட்டு அடிமை ஆகவில்லை -வாயில் இருந்ததையே கொண்டு
திருமால் இரும் சோலை என்றேன் என்ன –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் –
சரணாகத சப்தம் -வந்ததுமே ஏற்றுக் கொண்டானே கூரத் தாழ்வான்
ஒமித்யே காஷரம் ப்ரஹ்ம வ்ராஹரன் மாம் அநுஸ்மரன் -என்னக் கடவது இ றே
அதவா
யாரேனும் பக்கலிலே ஏதேனும் ஒன்றை சொல்ல வேண்டி செல்லிலும் -நமஸ்
சப்த ப்ரயோகம் பண்ணக் கடவதாய் இ றே இருப்பது -அதுவும் ஆத்ம யாதாம்ய வாசகம் இ றே -அதுவே எங்கள் பக்கல் கைம்முதல் என்கிறார்கள் –
ஆழ் நிலை உண்மை -ஆய்ந்து தெரிந்து கொண்ட பொருள் -பாகவத சேஷத்வமே-யாதாத்மா ஞானம்
ஓம் நம என்பதே கைம்முதல் என்றவாறு -வாய் வார்த்தையால் சொன்னதால் மாத்ரமே பலித்ததே –

எம்பெருமான் -என்கிற ப்ராப்தி யாலும் –
உன் தனக்கு -என்கிற சக்தியாலும் –
எழுத்துப் பட்ட -என்கிற சப்த மாத்ரத்தாலும்
பலிக்கக் கண்டோம் என்கிறார்கள் –
பட்ட -என்கிற இது -முத்துப்பட்ட -என்கிறாப் போலே-வாழாட் பட்ட போலே -கூழாட் பட்டது போலே இல்லை –
வாழாட் பட்டு -என்கிற -இடத்தில் அர்த்தத்தின் -பொருள் -அனுஷ்டானம் –உடைய துர்லப்த்வம் சொல்லிற்று—
வாசக சப்தத்தின் உடைய துர்லப்த்வம் சொல்லுகிறது இங்கு-ஓம் நம அடியோம் சொல்வது துர்லபம் தானே-
அஹங்கார க்ரச்தமான சம்சாரத்துக்கு உள்ளே தாஸ்ய பிரகாசம் அலாப்யலாபம் ஆனால் போலே
பஹூ ஜல்பம் பண்ணிப் போகிற வாயிலே நமஸ் சப்தம் உண்டாக அல்பய லாபம் இ றே-

வாக்ய த்வயம் சப்தம் மறைத்துப் போவார்கள் -ரகஸ்ய த்வயத்திலும் -திருமந்தரம் -சரம ஸ்லோகம் -அர்த்தம் மறைத்து போவார்கள் –

அந்நாள் –
எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்துப் பட்ட நாள் -எந்நாள் -அந்நாள் என்று அந்வயம்
-அந்நாளே -என்கிற அவதாரணத்தாலே -அது ஒழிய எங்கள் பக்கல் ஆநுகூல்ய லேசமும் இல்லை என்று கருத்து-
இருந்ததே இந்த வாய் வார்த்தை தான் -அடியோம் என்னும் எழுத்து நல் கன்று இல்லை தோல் கன்றுக்கும் இரங்கும் போலே
யசோதை பாவனை இல்லாமல் -தேனே இன்னமுதே என்று என்றே சில கூத்து சொல்ல –மெய்யே பட்டு ஒழிந்தேன் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் போலே
அடியோம் ஓம் நம பர்யாயம்
பிரணவம் –
அடியோம் சொல் பிரதியோகி சாபேஷம் ஆகையால் -யாருக்கு அடியான் -ஆண்டான் இருந்தால் தான் அடியான் -அகாரம் சொல்லுமே
சர்வம் வாக்கியம் சாவதாரணம் -அவதாரணம் உடன் கூடி இருக்கும் -வேறு ஒருவருக்கு அடியேன் இல்லை -சொல்ல வில்லை
அகார வாச்யனுக்கே அடியேன் என்பதால் உகாரம் கிடைத்தது
இதுக்கு பிரவ்ருத்தி அடிமைத்தனம் -ஆய சதுர்த்தி கிட்டுமே -தாஸ்யம்
அஸ்மத் சப்த பர்யாயதயா-அஹம் -அடியேன் -மகாரம் -பிரத்யகர்த்தமான -போதகம் ஆனபடியால் தனக்கே தோற்றும் -ஆத்மாவைக் குறிக்கும்-
சைதன்யம் வாங்கி மகாரம் –
இதில் பஹூ வசனம் -அடியோம் -ஜாதி அபிப்ராயம் -மகாரம் ஜீவர்கள் பலர் -ஜாதி ஏக வசனம் -அனைவரும் அடிமை –
அத்தால் பெற்றது என் என்ன – தாங்கள் பெற்ற பிரயோஜன பரம்பரைகளை சொல்லுகிறார்கள் –

அடியோங்கள் இத்யாதி –
1-அடியோங்களாக பெற்றோம் –
2-குடிலும் அடிக்குடிலாக பெற்றது –
3-வீட்டை லபிக்கப் பெற்றோம் –
4-உஜ்ஜீவிகப் பெற்றோம் –
அடியோங்கள் -என்கிறார்கள்
அஹங்கார க்ரச்தராய் -தத் அநுகூலமான ஷூத்ர புருஷார்த்தத்தை அபேஷித்து உன்
திருவடிகளில் வந்து ஒதுங்கின நாங்கள் -அது போய் -தாஸ்ய ஏக ரசராகப் பெற்றோம் –
நேற்று வரை நாங்கள் இன்று தாசர்கள்
ராம தூதன் தாசோஹம் -சீதை பார்க்கப் பட்டால் பார்த்ததுக்கு அடையாளம்
அடிக்குடில் –
குடில் -என்று க்ரஹம் -அத்தாலே க்ரஹச்தரான புத்ர பௌத்ராதிகளும் அடியாராகப் பெற்றோம்-குடில் அடி பெற்றது என்றவாறு
நல்ல பதத்தால் மனை வாழ்வர் -என்னக் கடவது இ றே
கொடுத்துக் கொண்ட பெண்டிர் -இருந்தோம் -முன்பு -நல்ல பதத்தால் மனை வாழ்வார் ஆனோம் –

எழுத்துப் பட்டது தங்கள் அளவில் ஆகில் புத்ர பௌத்ராதிகள் அளவில் ஸ்வரூப ஞானம் பிறந்தபடி
என் என்னில் -முத்துப்பட்ட துறையை காவலிடுமவன் -அசல் துறையையும் காவல் இடுமா போலே
சம்பந்தி சம்பந்திகள் அளவும் அஹங்கார மமகாரங்கள் புகுராத படி விஷயீ கரித்தான் -என்கை
இவர்கள் சங்கதர் ஆகிற பாட்டிலும் -குடி குடி ஆட் செய்கின்றோம் -என்றார்கள் இ றே
சேஷி சந்நிதியிலே சேஷ பூதர் க்ரஹத்தை -குடில் வளைக்க -என்று சொல்லக் கடவது இ றே

வீடு பெற்று –
வீட்டை லபித்து -அதாகிறது
அஹங்கார மமகார கார்யமான ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற த்யாஜ்யங்களை
விடப் பெற்று -ஐஸ்வர்யம் த்யாஜ்யம் என்று அறிந்தால் தானே அங்கே அவன் இடம் போவான் –
-ப்ராப்ய சித்தியோபாதி த்யாக சித்தியும் ப்ராப்ய அந்தர்கதம் இ றே

உய்ந்தது காண்
தாஸ்யம் என்றும் – உஜ்ஜீவனம் -என்று பர்யாயம் போலே காணும்
உய்ந்தது காண் -என்று அறியாதரை அறிவிப்பாரைப்  போலே சொல்லுகிற இதுக்கு கருத்து என் என்னில் –
உபகரித்து விஸ்மரித்து போவது நீ -அவனுக்கும் அறிவிக்கிறார்கள் -உன்னாலே ஏற்பட்டுது –
நீ பண்ணின உபகாரம் நாங்கள் உபதேசிக்க கேளாய் என்கிறார்கள்-

செந்நாள் -இத்யாதி
பிரயோஜனாந்தரங்களைக் கை விட்டு அநந்ய பிரயோஜனர் ஆனிகோள் ஆகில் இனி க்ர்த்த்யம் என் என்னில் –
உனக்கு மங்களா சாசனம் பண்ணுகையே க்ர்த்த்யம் என்கிறார்கள் -விஷயம் ஏது -என்ன –
செம் நாள் –
அவதாரத்துக்கு ஏகாந்தமான நாள் ஆகையாலே அழகிய நாள் என்கிறார்கள்
தம் அத்புதம் பாலகம் -வேண்டித் தேவர் இரக்க -ஆவணி திருவோணம்
தோற்றி –
அதீந்த்ரியமான விக்ரஹத்தை சகல மனுஜ நயன விஷய தாங்கத-என்கிறபடியே
உகவாதார் கண்ணுக்கும் விஷயமாம் படி தோற்றுவித்து-துரியோதனமும் துச்சாதனனும் கூட பார்க்கும்படி
திரு மதுரையுள் –
அது தானும் நிர்ப்பயமான அயோத்யையில் இன்றிக்கே சத்ருவான கம்சன் வர்த்திக்கிற ஊரிலே –
ராமோ ராமோ -அங்கு -எழும் புல் பூண்டு எல்லாம் அசுரர் இங்கே
சிலை குனித்து
அவ் ஊரில் தங்க ஒண்ணாமையாலே திருவாய்ப்பாடியிலே போய் மறைய வளருகிற நீ
மறித்தும் அவ் ஊரிலே புகுந்து கம்சனுடைய ஆயுத சாலையிலே புக்கு -வில்லை முறித்து
பூசலை விளைத்தாய் -அநுகூலர் அடைய -என் வருகிறதோ -என்று வயிறு பிடிக்கவேண்டும் படியான
தசையிலே கம்சனுக்கு மறம் பிறக்கும்படி சிலுகு படுத்துவதே

ஐந்தலை இத்யாதி –
அது கிடக்க -நிர்ப்பயமாய் வர்த்திக்கிற காலத்திலே பிறந்த ப்ரமாதமே போராதோ வயிறு
எரிகைக்கு என்கிறார்கள் –
ஐந்தலைய பைந்நாகத் தலை பாய்ந்தவனே –
கடிக்கைக்கு ஐஞ்சு வாயை உடைத்தாய் -க்ரோதத்தாலே விஸ்த்ர்தமான பணத்தை உடைத்தான
சர்ப்பாச்யத்திலே யன்றோ புக்கது -ஏக தாது விநா ராமம் க்ருஷ்ணோ ப்ருந்தாவனம் ய யௌ
என்று தலையன் ஒரு நாள் பேர நிற்க -பாம்பின் வாயிலே புகும் படி இ றே தீம்பு –
கிருஷ்ண அவதாரம் என்றால் ஆழ்வார்கள் எல்லாரும் ஒக்க பரிவராய் இருப்பர்கள்
இதுக்கு அடி என் -என்று ஜீயர் பட்டரை கேட்க –
ராமாவதாரத்தில் பிள்ளைகள் -தாங்கள் மிடுக்கராய் -குணாதிகருமாய் –
பிதா சம்ப ராந்தகனுமாய்
மந்த்ரிகள் வசிஷ்டாதிக்களுமாய்
ஊர் அயோதயையுமாய்
காலம் நல்ல காலமுமாய்
இருக்கையாலே அங்குத்தைக்கு ஒரு பயமும் இல்லை –
இங்கு
பிறந்தவிடம் சத்ரு க்ர்ஹமாய்
கம்சன் இடம் பார்த்து நலியும் துஷ்ப்ரக்ர்திகளை வரக் காட்டும் கரூரனுமாய்
தமப்பன் இடையனுமாய்
ஊர் இடைச்சேரியுமாய்
பிள்ளைகள் தாங்கள் தீம்பருமாய்
காலம் கலி காலத்தோடு தோள் தீண்டியாய்
இருக்கையாலே என் வருகிறதோ என்று பரிகைக்கு ஆழ்வார்கள் அல்லது இல்லை காணும்
என்று அருளிச் செய்தார் –

உன்னைப் பல்லாண்டு கூறுதுமே –
உன்னை கூறுதுமே -என்கிற ஸ்வரத்துக்கு கிருஷ்ண அவதாரம் பரிகை என்று காட்டி அருளுகிறார்
இப்படிப்பட்ட உன்னை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழிய தரிக்க விரகு உண்டோ என்கிறார்கள்-

—————————————————————————————————–

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-

——————————————————————————————————————

அவதாரிகை –

அண்டக்குலத்தில் ஆஹூதராய் -நெய்யிடை -என்கிற பாட்டில் சங்கதரான
ஐஸ்வர்யார்த்திகள் பாசுரத்தாலே -திருப்பல்லாண்டு பாடுகிறார் –

கூறுவனே -இதிலும் ஏக வசனம்-
அணி புதுவை -போலே அணி கோட்டியூர் –
திவ்ய தேசம் -வாழும் மக்கள் இருவருக்கும் குற்றம் இல்லை -என்றுமாம்
துங்க -உயர்ந்த –
பெரியாழ்வார் மதிக்கும் செல்வ நம்பி வம்சம் தான் திருக் கோஷ்டியூர் நம்பி திருவவதாரம் என்பர் –
நானும் -அடைமொழி இல்லாமல் தம்மைச் சொல்லிக் கொள்கிறார் -ஏதும் இருப்பதாக நினைப்பவர் அல்லர் –
பாசுரம் ஐஸ்வர் யார்த்திகள் -என்பதால் –
ஜீவனும் நித்யம் பரனும் நித்யம் -தாஸ்யம் சேஷத்வம் மிக பழமை என்கிறார் –
பலவகையால் -ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி எல்லா வற்றாலும் பவித்ரன் -தூய்மையான அனைத்துக்கும் தூய்மை தருபவன் அவன் –
பரவி -க்ரமம் இல்லாமல் பல நாமங்களை சொல்லி மந்த்ரம் -சாதனம் என்றால் தான் க்ரமம் வேண்டும்
பல அடியேன் -அநந்ய பிரயோஜனர் பாசுரம் போலே -இன்று திருந்தின ஐஸ்வர் யார்த்தி –

——————————————————————————————————————————

வியாக்யானம்-

அல் வழக்கு ஒன்றும் இல்லா
வழக்கு அல்லாதவை அநேகம் இ றே
1–தேகத்தில் ஆத்மபுத்தி பண்ணுகை வழக்கு அல்ல–மகாரம் நினைவு வந்து -ஞானம் உடையவன் -தேகம் அஜடம்
2–ப்ரக்ருதே பரமான ஆத்மவஸ்துவை ஸ்வ தந்த்ரன் என்று அனுசந்திகை வழக்கு அல்ல -ஓகோ எனக்கு ஞானம்– இருக்கு ஸ்வ தந்த்ரன்
-புத்தி வரும் -வைத்த இடத்தில் இருக்கும் பாரதந்த்ர்யம் பொருள் களுக்கு தானே -அகாரம் ஆய மகாரம் -அவனுக்கு என்ற நினைவு வேண்டும் –
3–தேவதாந்த்ரங்களில் பரத்வ புத்தி பண்ணுகை வழக்கு அல்ல -உகாரம் -அனன்யார்ஹம் -சம்பந்தம் நியமதித்து கொடுக்கும்
4–பகவத் பஜனத்துக்கு பலம் பிரயோஜனான்தரம் என்று இருக்கை வழக்கு அல்ல -நாராயணாய-பகவத் பிரயோஜனம்
5–அநந்ய பிரயோஜனம் ஆனாலும் உபாயாந்தர சாதனம் என்று இருக்கை வழக்கு அல்ல –
6–பகவத் அனுபவத்தை -மமேதம் -என்று இருக்ககை வழக்கு அல்ல -ஆய பிரார்த்தனாய சதுர்த்தி -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –

இனி -வழக்கு -ஆவது –
சேஷிக்கு மங்களா சாசனம் பண்ணுகை என்று இ றே இவர் இருப்பது
அணி கோட்டியூர் கோன்
இவை -ஒன்றும் இன்றிக்கே -அத்தலைக்கு மங்களா சாசனம் பண்ணும் அது ஒன்றே வழக்கு -என்று ஆய்த்து அவ் ஊரில் உள்ளார் இருப்பது –
இதுக்கடி இவர் என்று தங்களுக்கு நிர்வாஹராக வாய்த்து நினைத்து இருப்பது
அணி -என்று ஆபரணமாய் -சம்சாரத்துக்கு ஆபரணமான ஊர் என்கை

அபிமான துங்கன் –
அபிமானம் சேஷத்வ விரோதியாய் இருக்க அத்தால் மிக்கு இருப்பார் என் என்னில் –
கர்மத்தால் வந்த துர்மானம் ஆய்த்து த்யாஜ்யம் -தாசோஹம் -என்கிற வைஷ்ணவ அபிமானம் உபாதேயம்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே -கர்மாதீனம் இல்லை பகவத் பாகவத் ஆச்சார்யா சம்பந்தாதீனம் –
ஆகையாலே அத்தாலே பூரணராய் இருப்பர் என்கிறது -அதாவது
உகந்து அருளின நிலங்களில் உண்டான குறைவு நிறைவுகளும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய தேக யாத்ரையில் குறைவு நிறைவுகளும்
தம்மதமாய இருக்கை-ஆத்மயாத்ரையில் இல்லை -சீர் வடிவை நோக்குபவன் –
குணானுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காக கொள்ளுகை-என்னக் கடவது இ றே-
ஏகாந்த திவ்ய தேசங்களில் சென்று கைங்கர்யம் செய்து – பொழுது போக்காக கொள்ளுகை-
திருக் கோஷ்ட்டியூர் நம்பி செல்வ நம்பி வம்சத்தவர் என்பர் –

செல்வன் -என்று
ஸ்வரூப ப்ராப்தமான ஐஸ்வர்யத்தாலே குறைவற்றவர் என்கை -அதாவது
ஞான பக்தி வைராக்யங்களால் குறைவற்றவர் யென்கையும்
லஷ்மணோ லஷ்மி சம்பன்ந -என்கிறபடி அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கையும்-சுற்றம் எல்லாம் பின் தொடர -தொல் கானம் அடைந்தவனே –
உபமான சேஷாணாம் ஸாதூநாம் -என்கிறபடியே சாத்விகருக்கு உபமான பூமியாய் இருக்குமவர்-பிரகலாதன் -அனைத்து சாதுக்களுக்கும் உபமானம் —
போலே -அவர் எங்கே நாம் எங்கே என்ற நினைவால் –
இவரை திருஷ்டாந்தம் ஆக்கிக் கொண்டு -பழ வடியேன் -என்று முன்பு ஐஸ்வர்யார்த்தியாய்
இன்று ஸ்வரூப ஞானம் பிறந்தவன் சொல்லுகை அநுப பன்னம் அன்றோ  என்னில்
கர்மத்தால் வந்த அஹங்காரம் போனால் தாஸ்யம் சர்வ ஆத்மாக்களுக்கும் சத்தா ப்ரயுக்தம் ஆகையாலே சொல்லுகிறார்கள்
அதவா –
நை சர்க்கிகமான ஞானம் உடையாருக்கும் இன்று ஆஸ்ரயிக்கும் இவனுக்கும் வாசி வையாதே
விஷயீ கரிக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே சொல்லவுமாம்-

திருமாலே –
இவ்வாதம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்
இத்தால்
மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை
மாத்ரு தேவோ பவ -ஸ்ரீ ரெங்க நாச்சியாரை மாதாவாகக் கொள்ள வேண்டும் -பிரபன்னர் —
அதவா
தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம்
நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம்-
மாலே திரு தேவரீருக்கு அடையாளம் -தாஸ்யம் எங்களுக்கு அடையாளம்

நானும் –
பிரயோஜனாந்தர பரதையாலே அநாதி காலம் அன்யார்ஹனாய் போந்த நானும் –
உம்மைத் தொகை -அப்படி இருந்த நான் கூட -அநாதி காலம் அன்யார்ஹனாய் போந்த நானும்
சேஷி பக்கல் பிரயோஜனாந்தரத்தை அபேஷிக்கை யாவது -பதிவ்ரதை பர்த்தாவின் பக்கலிலே
வ்யபிசாரத்தை அபேஷித்தவோபாதி இ றே-

உனக்குப் பழ வடியேன் –
உனக்கு சேஷித்வம் அநாதி யானவோபாதி எனக்கும் சேஷத்வம் அநாதி என்கை-இதிலும் சாத்விக அஹங்காரம்
உனக்கு –
பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து திருவடிகளில் கிட்டினதுவே ஹேதுவாக அநந்ய
பிரயோஜநன் ஆக்க வல்ல உனக்கு-எதையோ பிரார்த்தி வந்த என்னை இப்படி மாற்றி அருளிய உனக்கு –
ஸ்வரூப பிரத்யுக்த தாஸ்யம் -குணக்ருத தாஸ்யம் -இரண்டு வகைகள் உண்டே —
இங்கே ஸ்வரூப பிரத்யுக்த தாஸ்யம் -தன்னை மாற்றிய குணத்துக்கு தோற்று சொல்ல வில்லை
கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட –மாயத்தான் -ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –

இந்த ஸ்வரூப ஞானம் எவ் வழியாலே பிறந்தது என்னில்
சகல வேதாந்த தாத்பர்யமான மந்திர ரஹச்யத்தாலே பிறந்தது என்கிறார் மேல்
நல் வகையால் நமோ நாராயணா -என்று
நாராயணனுக்கே உரியேன் -எனக்கு உரியேன் அல்லேன் -என்கை
நல் வகையால்
முன்பு அர்த்த விதுரமாக -பொருள் தெரியாமல் –ஜப ஹோமாதி முகத்தாலே பிறந்த அந்வயம் அடையத்–தீ வகை என்று இருக்கிறார்கள்
-இது தான் சர்வார்த்த சாதகம் இ றே –
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் சர்வார்த்த சாதகா -என்னக் கடவது இ றே-

நாமம் பல பரவி –
இவர் இவர்களை அழைக்கிற போது -அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி -என்றார் இ றே –
அத்தை இ றே இவர்களும் சொல்லுகிறது
பரவி –
அக்ரமமாகச் சொல்லி –
சாதனமான போது இ றே க்ரம அபேஷை உள்ளது –
முன்பு -மமேதம் -என்று இருந்தவர்களுக்கு -மங்களா சாசன யோக்யராம் படி
புகுர நிற்கைக்கு இசைவே வேண்டுவது -இச்சை நாம் தானே வளர்த்துக் கொள்ள வேண்டும் –
சர்வ முக்தி பிரசங்கம் -வருமே -இசைவித்து என்னை தன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –

பல் வகையாலும் பவித்ரனே –
பிரயோஜனாந்தர பரரான அசுத்தியைப் போக்கி –
பல அழுக்குகளை போக்கி –
ஸ்வரூபம் ரூப குணம் விபூதிகளைக் கொண்டு பாபங்களை போக்கி
அதுக்கடியான அஹங்கார மமகாரங்கள் ஆகிற அசுத்தியைப் போக்கி –
சேஷத்வம் தன்னிலும் -மாதா பித்ர் சேஷத்வம் என்ன இவ்வோ அசுத்தியைப் போக்கிப்
புகுர நிறுத்தினவனே –

உன்னைப் பல்லாண்டு கூறுவனே –
சௌந்தர்யாதி குண யுக்தனான உன்னை மங்களா சாசனம் பண்ணுகிறேன்
ஏக வசனத்தாலே
கீழ் சொன்ன புருஷார்த்திகள் மூவர் முகத்தாலும் தாமே திருப்பல்லாண்டு பாடுகிறார்
என்னும் இடம் தோற்றுகிறது
ஐஸ்வர்யார்த்தி சங்கதன் ஆகிற அளவிலும் ஏக வசனம் ஆகையாலே இங்கும்
அதுவே யாகிறது என்னவுமாம் –

————————————————————————————————-
பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12

நம் கோஷ்டி -ஐஸ்வர் யார்த்தி அதுக்காக அவன் இடம் போவார்கள் -நாமோ எங்கேயோ போவோமே –
மூன்று கோஷ்டியில் சேராதவர்களுக்கும் திருப்பல்லாண்டு பாடுகையே மாற்றி அருளும் –
அந்திம கால தஞ்சம் -ஆம் ஆகில் சொல்லிப் பார்க்கிறேன் -சொல்லி திருமந்தரம் சொல்லாமல் இழந்த ஐதிகம் –

பரமேட்டியை -பரம பதத்தை கலவி இருக்கையாக உடையனாய்
நல்லாண்டு -சொல்லுகைக்கு ஏகாந்த காலம் என்று நினைத்து
பரமத்மானை -சேதன அசேதனங்களை சரீரமாக உடையவனை

——————————————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் –
இப்பிரபந்தத்தை அதிகரித்தாருக்கு பலம் சொல்லுகிறதாய் –
பிரேம பரவசராய்க் கொண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார் –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்பதால் ஆழ்வார் மங்களா சாசனம் செய்து அருளுகிறார் -ஏத்தக் கடவர் –
நித்ய யுக்த உபாசக -எப்போதும் கூடி இருப்பவர் -கூடி இருக்க விருப்பம் கொண்டவர் தாத்பர்ய சந்த்ரிகை
அது போலே ஏத்துவர் -ஏத்த வேண்டும் என்று விருப்பம் கொள்வார்
ஏத்தக் கடவார்கள் -சொல்வதே மங்களா சாசனம் பண்ணுவதே –
அநந்ய பிரயோஜனருக்கும் தம்மோ பாதி பகவத் ப்ரத்யாசத்தி உண்டாகையாலே அவர்களை அழைத்தார் –
ஐஸ்வர்ய கைவல்யங்களைப் பற்றி ஆச்ரயித்தவர்களும் -பகவத் பிரபவத்தாலே மங்களா சாசனத்துக்கு ஆளாவார்கள் என்று அவர்களையும் அழைத்தார் –
அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் -நாலாவது கோஷ்டி –தம்முடைய பாசுரத்தில் இழியவே-யாவதாத்மபாவி மங்களா சாசன அர்ஹர் ஆவார்கள்
என்று இப்பிரபந்தத்தின் வைபவத்தை அருளிச் செய்கிறார் –

——————————————————————————————————————————————

வியாக்யானம்

பவித்ரனை –
ஒரு உபாதியால் அன்றிக்கே -ஸ்வ ஸூத்தனானவனை –
சாஸ்வதம் ஸிவம் -என்னக் கடவது இ றே -இத்தால் அசுத்தி பதார்த்த சம்யோகத்தாலே தத்கத தோஷ ரசம் ஸ்பர்ஷ்டனாகையும் –
வ்யாப்தகத தோஷ ரஹிதன் –ஸ்வ சம்பந்தத்தாலே அசுத்தன் சுத்தன் ஆகையும் ஆகிற -பரம பாவநத்வம் சொல்லுகிறது
அதாகிறது
சேதன அசேதனங்களில் வ்யாபித்தாலும் தத்கத தோஷம் ஸ்பர்சியாது ஒழிகையும்-
ஸ்வ பாவ விகாரம் -சேதன -ஸ்வரூப விகாரம் அசேதன –
நிர்ஹேதுகமாக நித்ய சம்சாரியை நித்ய சூரிகளோடே ஒரு கோவை ஆக்குகையும்-

பரமேட்டியை –
பரமே ஸ்தானேஸ்தனன் ஆனவனை –
தேகாத்ம அபிமானி -ஸ்வ தந்திர -தேவதாந்திர -மூவரும் நிர்க்ரஹத்துக்கு இலக்கு
உபாயாந்தர சம்பந்திகள் -ஸூ பிரயோஜன கைங்கர்ய பரர்கள் அனுக்ரஹத்துக்கு இலக்கு –

சார்ங்கம் என்னும் இத்யாதி –
இது மகிஷீ பூஷண ஆயுத பரி ஜனங்களுக்கும் உப லஷணம் –
அங்குள்ளாரை இட்டு தன்னை நிரூபிக்க வேண்டும்படி இ றே அவர்களுக்கு தன்னோடு உண்டான ப்ரத்யாசக்தி
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –
சார்ங்கம் என்னும் வில் ஒன்றே ஆய்த்து அதுக்கு ப்ரசித்தி –
மத்த கஜத்தை யாளுமவன் என்னுமா போலே அத்தை ஆளுமவன் என்றது ஆய்த்து –
ஆலிகந்தமிவா காண மவஷ்டப்ய மஹத்தநு -என்னக் கடவது இ றே
இத்தால் -மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்கிற இடத்தில் பவித்ரதையை நினைத்து
பரமேட்டியை இத்யாதியாலே இரண்டாம் பாட்டில் சொன்ன நித்ய விபூதி யோகத்தை சொல்லுகிறது
பவித்ரதையை மணி வண்ணா -ஸ்வ பாவம் வர்ணம் -நீரோட்டம் -தூய்மை ஆரம்பித்து
அத்தை சொல்லி முடிக்கிறார் பவித்ரனே
பரமேட்டி -நித்ய விபூதி —அடியோமோடும் -அங்கே உபய விபூதி -சதே பஞ்சாசன் நியாயத்தால் -100க்குல் ஐம்பது உண்டே

வில்லிபுத்தூர் விட்டு சித்தன் – பல்லாண்டு -என்று விரும்பிய சொல் –
இப்போது -யானை மேல் உள்ள பொழுது -பகவத் ப்ராப்தி காமர் -பிரயோஜனாந்த பரர் -என்று அடைவடைவே வந்து
நின்றார் இல்லை இ றே -அவ்வவருடைய பாசுரங்களாலே தாமே அருளிச் செய்தார் என்னும் இடம் தோற்றுகிறது இ றே
தம்முடைய வார்த்தையாக தாமே தலைக் கட்டுகையாலே –
ஆண்டாள் 29 பாசுரம் இடைச்சி பாசுரம் அருளிச் செய்தது போலே -இறுதியில் தமது வார்த்தையாக அருளி தலைக் கட்டினது போலே
அவர்கள் பாசுரமாக அங்குச் சொல்லிற்று –
பிரயோஜனாந்த பரர்க்கும் பகவத் ப்ரசாதத்தாலே மங்களா சாசனம் பண்ணுகைக்கு
யோக்யதை உண்டு என்னும் இவ் வர்த்தத்தின் உடைய ஸ்தைர்யத்துக்காகவும்
மங்களா சாசனத்தில் தமக்கு உண்டான ஆதர அதிசயம் தோற்றுகைகாகவும்-

வில்லிபுத்தூர் விட்டு சித்தன் –
அவ் ஊரில் பிறப்பாலே  ஆய்த்து பகவத் ப்ரயாசத்தி –
பகவத் ப்ரயாசத்தியிலே ஆய்த்து மங்களா சாசன யோக்யமான பிரேம அதிசயம் –
விட்டு சித்தன் -என்கிற திருநாமம் உண்டாய்த்து
ஆழ்வார் விடிலும் தாம் விட மாட்டாத தன் பேறாக இவர் திரு உள்ளத்தே
நித்யவாசம் பண்ணின படியாலே
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்னக் கடவது இ றே

நல்லாண்டு என்று
இப்பாசுரம் சொல்லுகைக்கு ஏகாந்தமான காலத்தை கொண்டாடி –
அத்யமே சபலம் ஜன்ம -என்னக் கடவது இ றே
மாரகழி திங்கள் மதி நிறைந்த நல் நாளால் முதலிலே கொண்டாடுகிறாள்
கண்டதடைய மமேதம் என்று போந்த அநாதி காலம் போல் அன்றிக்கே
பகவத் ச்ம்ர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணக் கடதாம் படி வந்ததொரு காலம்
சேதனனுக்கு ஸூ துர்லபம் இ றே-

நவின்று உரைப்பார்
நவிலுகை -பயிலுகை -இடைவிடாதே உரைக்கை
நமோ நாராயணா என்று –
அநாதி காலம் மமேதம் என்றதை தவிருகையும்
ததேவம் -யென்கையும்
இத்தால் மங்களா சாசனத்துக்கு யோக்யதை சொல்லுகிறது

பல்லாண்டும் –
காலம் எல்லாம்
யாவதாத்மபாவி -என்கிறது –
கால க்ர்த பரிணாமம் இல்லாத தேசத்திலே ஆண்டை இட்டுச் சொல்லுகிறது –
அந்த பரிணாமம் உள்ள தேசத்திலே வர்த்திகிறவர் ஆகையாலே-

பரமாத்மனை –
தனக்கு மேல் இன்றிக்கே –
தன்னை ஒழிந்தார் அடங்க ஸ்வ ஆதீநமாம் படி இருக்கிறவனை
இத்தால்
அமங்களங்களுக்கு -அவகாசம் இன்றிக்கே இருக்கையாலே ஒருவனுடைய மங்களா சாசனத்தால்
ஓர் ஏற்றம் உண்டாக வேண்டாதே இருக்குமவனை –

சூழ்ந்து இருந்து ஏத்துவர்
நம புரஸ்தாத தப்ருஷ்ட தஸ்தேத மோஸ் தூதே -என்கிற படியே முன்பே நில்லா
முறுவலை அனுபவித்து அதிலே ஈடுபடும் -பின்பே நில்லா பின்பும்
பிறகு வாளி யாவது -தண்டிகை கொம்பு போலே வளைந்து திரு பிடரியிலே
தொங்குகிற அசாதாராண ஆபரண விசேஷம் –
பிறகு வாளி யுமான அழகை அனுபவித்து அதிலே ஈடுபடும் -இப்படி சுழி யாறு படா நிற்கச் செய்தே
கால்வாங்க ஒண்ணாத வடிவு அழகு -அதி சங்கையை விளைத்து மங்களா சாசனத்தில் மூட்டும் என்கை

பவித்ரனை -பரமேட்டியை -சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –
வில்லிபுத்தூர் விட்டு சித்தன் -பல்லாண்டு என்று விரும்பிய சொல் -நல்லாண்டு என்று
நவின்று உரைப்பார் -நமோ நாராயணா என்று பரமாத்மனைச் சூழ்ந்து
இருந்து பல்லாண்டும் பல்லாண்டு -ஏத்துவர் –என்று அந்வயம்

——————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: