பகவத் விஷயம் காலஷேபம் -7-திருப்பல்லாண்டு -எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் -/தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி/நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும்—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் – -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி யாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
யந்தியம்போதில் யரி வுருவாகி யரியை யழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே -6-

————————————————————————————————–

எந்தை -நானும் என் அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தம் மூத்தப்பன் -அவனுக்கு அப்பனும் பாட்டனுமாகிய
ஏழ் படி கால் தொடங்கி -ஏழு தலைமுறை முதல் கொண்டு
வந்து -மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமான சமயங்களிலே வந்து
வழி வழி -முறை முறையாக
யாட் செய்கின்றோம் -தப்பாமே அடிமை செய்கின்றோம்
திருவோணத் திருவிழவில் -திருவோணம் என்கிற திரு நாளிலே
யந்தியம்போதில் -அசுரருக்கு பலம் வர்த்திக்கிற அந்திப் பொழுதில்
யரி வுருவாகி -ந்ர்சிம்ஹ ரூபியாய் கொண்டு
யரியை -ஆஸ்ரிதனனான ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு சத்ருவான ஹிரண்யனை
யழித்தவனை-உரு அழித்து பொகட்டவனுக்கு உண்டான
பந்தனை தீர-அணுக்கம் தீரும் படி-பிறந்த உடனே நிரசித்ததால் வந்த அணுக்கம்-ஆயாசம் – தீரும் படி –
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று-காலதத்வம் உள்ளதனைத்தும் –
பாடுதும்  -பாடுவோம்-

—————————————————————————————————-

அவதாரிகை

அநந்ய பிரயோஜனருக்கும் பிரயோஜநாந்த பரருக்கும் உண்டான நெடு வாசி அறிந்து
இருக்கச் செய்தேயும் அநந்ய பிரயோஜனரை அழைத்த சமனந்தரம் -இவர்களை
அழைக்கைக்கு அடி -உதாராஸ் சர்வ ஏவைத -என்னுமவன் சீலத்தாலும் –
அவனோடு இவர்களுக்கு உண்டான அவர்ஜநீய சம்பந்தத்தாலும் –
இவர்களுக்கும் அவற்றையே  நினைத்து தேங்காதே புகலாம் படியாய் இ றே இருப்பது –
ஆகையாலே -அநந்ய பிரயோஜனரை அழைத்தவோபாதி இவர்களையும் அழைத்தாராய்
நின்றார் கீழ் –
மங்களா சாசனத்தில் தமக்கு உண்டான அபரியாப்தை –
இவர்கள் இழந்து -கிருபையாலும்
திருத்தி ஆகிலும் மங்களா சாசனம் இவர்கள் உடன் பாட -தமக்குத் தாரகம் ஆகையாலும்
இவர்களும் அவன் கை எதிர் பார்த்து இருக்கும் யோக்யதா மாத்ரத்தாலும் –
சாந்தீபன் -காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் -கோதில் வாய்மையினான் -குற்றம் இல்லாதவர் -இவன் இடம் கை ஏந்தினார்-

இதில் வாழாளில் அழைத்த அநந்ய பிரயோஜனர் -தங்கள் ஸ்வரூபத்தையும்
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியையும் சொல்லிக் கொண்டு வந்து புகுர -அவர்களைக்
கூட்டிக் கொள்ளுகிறார் –
ஏழாட் காலும் பழிப்பிலோம் -என்று பிரயோஜனந்த பரரைக் குறித்து தாம் அருளிச் செய்த
தம்முடைய திரளுக்கு உண்டான ஏற்றத்தை புகுருகிறவர்கள் -தங்களுக்கு உண்டானதாக
சொல்லிக் கொண்டு வந்து புகுருகிறார்கள் -தம் தாம் ஏற்றம் சொல்லிக் கொண்டு வந்து
புகுருகை சாத்விகருக்கு யுக்தமோ என்னில் -ஆழ்வார் உடைய திரு உள்ளம் பயம்
கெடுகைக்காக சொல்லுகிறார்கள் ஆகையாலே யுக்தம்
யதார்த்தம் -உள்ளதை தான் சொல்லிக் கொள்கிறார்கள் -சாத்விக அஹங்காரம் கொள்ளலாமே –
பன்னகாச நமாகாசே பதந்தம் பஷி சேவிதே
வைநதேய மஹம் சக்த பரிகந்தும் சஹச்ரச -என்று திருவடி ஸ்வ சக்தியை சொன்னான் இ றே
முதலிகள் உடைய பயம் சமிக்கைகாக -விநய ஆஞ்சநேயரும் சொல்லிக் கொண்டாரே –

——————————————————————————————————–

வியாக்யானம் –

எந்தை -தானும் தகப்பனுமாக இருவர்
தந்தை தந்தை தந்தை -என்று ஒரு மூவர்
தம் -என்று முடிந்தவனை அனுபாஷிக்கிறது
மூத்தப்பன்
அப்பன் -என்று தமப்பனார் -மூத்தப்பன் -என்று பாட்டனார்
ஆகையாலே அங்கே இருவர் –
ஆக எழுவரையும் சொல்லுகிறது
ஆழ்வார் ஏழ் ஆட் காலும் பழிப்பிலோம் -என்று திரள அருளிச் செய்தார்
இவர்களும் ஏழ் படி கால் -என்று திரள சொல்லா நின்றார்கள்

பிரித்து சொல்லுகிற இதுக்கு பலம் என் என்னில் -ஸ்வ சந்தானத்தில் மங்களா சாசனம்
பண்ணிப் போந்தவர்கள் பக்கல் உண்டான ப்ரீதி அதிசயத்தாலே சொல்லுகிறார்கள்-
எல்லே –எல்லாரும் போந்தாரோ -போந்தார் போந்து எண்ணிக் கொள் மெய்க்காட்டுக் கொள் —
பாகவதர்களை தொட்டு சேவித்து தனித் தனியே எண்ணிக் கொள்வது உத்தேச்யம் –
சஹி வித்யா தஸ்தம் ஜனய திதச் ஸ்ரேஷ்டம் ஜன்ம கரியான் ப்ரம்ஹத பிதா -என்று
வித்யா சந்தானத்தை கொண்டாடுமா போலே -பிதரம் மாதரந்தாரான் -என்று த்யாஜ்யமான
யோநி சந்தானத்தை கொண்டாடுகை யுக்தமோ என்னில் யுக்தம் -கொண்டாடுகைக்கு
பிரயோஜனம் பகவத் சம்பந்தம் ஆகையாலே –
கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்பரோ -புத்ரர்கள் சிஷ்யர்கள் ஆகவுமாம் பகவத் சம்பந்தம் இருந்தால் உத்தேச்யர்
வித்யா சந்தானத்திலும் பகவத் விமுகன் த்யாஜ்யன் அல்லனோ –
பிரயோஜகம் பகவத் சம்பந்தமும் அசம்பந்தமும் -பிராமணியம் விலை செல்லுகிறது -உயர்வாக சொல்லிக் கொள்வது -வேத அத்யயனாதி முகத்தாலே –
அது தானும் இழவுக்கு உருப்பாகில் த்யாஜ்யமாம் இ றே-ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ ஸூ க்திகள்-

ஏழ் படி கால் தொடங்கி –
அர்த்த க்ரமத்தாலே ஏழையும் சொல்லச் செய்தேயும் திரளச் சொல்லுகிறது -ஸ்வ சந்தானத்தில்
உண்டான ஆதர அதிசயத்தாலே
ஸ்ரீ சைல-இத்யாதி பிரணமாமி நித்யம் -சுருங்க சொல்வது -பூர்வாச்சார்யர்கள் ஒவ்வாருவரையும் சோம்பாது சொல்லிக் கொள்ள வேண்டுமே

வந்து
மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமான தசைகளிலே வந்து

வழி வழி யாட் செய்கின்றோம் –
முறை முறையாக தப்பாமே அடிமை செய்கின்றோம்-நீதி வானவர் -சேஷி சேஷ பாவம் அறிந்தவர் –
இத்தால் -இஸ் சந்தானத்துக்கு மங்களா சாசன விச்சேதம் பிறந்தது இல்லை என்கை
யாஜ்ஞக  சந்தானத்துக்கு த்ரி புருஷ விச்சித்தியாலே அப்ராஹ்மண்யம் சொல்லுமா போலே
மங்களா சாசன விச்சித்தியால் வைஷ்ணத்வ ஹாநி சொல்லும் குறை எங்கள் சந்தானத்தில்
இல்லை என்கிறார்கள் -யஸ்ய வேதஸ் சவேதீச விச்சித்யே தேத்ரி பூருஷம்
சவை துர்ப்ராஹ்ம ணோஜெயஸ் சர்வகர்ம பஹிஷ்க்ர்த -என்னக் கடவது இ றே

வழி வழி -என்று
சாஸ்திர மார்க்கத்தாலும் சிஷ்ட ஆசாரத்தாலும் என்றுமாம்-மேலையார் செய்வனகள் -நம் சம்ப்ரதாயம் முக்கியம் –
சாந்திஸ் சாந்திஸ் சாந்தி -என்றும் -பச்யேம சரதஸ் சதம் -என்றும்
சர்வான் தேவான் நமஸ்யந்தி -என்றும் -மங்களா நிப்ர யுஞ்ஜானா -என்றும் சொல்லக் கடவது இ றே

ஆட் செய்கின்றோம் -ஆட் செய்கை யாவது திருப் பல்லாண்டு பாடுகை இ றே
மேலே பந்தனை தீரப் பல்லாண்டு -என்றதை வர்த்தியாக சொல்லுகையாலே
இதுக்கு கீழே தங்களுடைய சந்தானத்தில் ஏற்றம் சொன்னார்களாய் -மேலே –
தங்களுடைய வ்ர்த்தி விசேஷம் சொல்லுகிறார்கள்

திருவோணத் திருவிழவில் –
ஸ்வாதி-தானே ஸ்ரீ நரசிம்ஹன் -திரு வோணத்தான் உலகு அளந்தான் என்பார்களே –
விசேஷித்து திரு நஷத்ரம் சொல்லாத இடத்துக்கு எல்லாம் இதுவே திரு நஷத்ரமாக கடவது –
குப்ஜா —குள்ளமான அவதாரம் -ஆம்ரா மாமரம் -இவை நஷத்ரம் சொல்ல வில்லையே
திருவோணம் என்கிறது ஜன்ம நஷத்ரம் என்னில் -உகவாதார் அறிந்து அபிசரிப்பர்கள் என்று
அஞ்சி -திருவோணம் என்கிற திரு நாளிலே என்று மறைத்து சொல்லுகிறார்-
வாமனன் -திருவோணம் அறிந்து அவன் இடம் போனால் -வாமனன் -தன்னை காக்க அறிவான் –
திரு வோண திரு விழாவில் உத்சவம் நடக்கும் பல நாள்கள் -என்றைக்கு -என்று தெரியாதே -அத்தத்தின் பத்தா நாள் வந்து தோன்றினவன் போல்

அந்தியம் போதில் –
தேவர்களுக்கு பலம் ஷீணமாய் -அசுரருக்கு பலம் வர்த்திக்கும் சமயத்திலே
அரி உருவாகி –
அரியாகி -சொல்லாமல் -உரு சப்தம் -சொன்னது -ஒரு கால விசேஷம் வேண்டாதே சர்வ காலமும் மங்களா சாசனம்
பண்ண வேண்டும் படியான வடிவை உடையவனாய்
அரியாகி -பிரமன் வரம் முக்கியம்
உருவாகி பாலும் சக்கரையும் கலந்தது போலே அன்றோ -மிருகத்வம் நரத்வம் கலந்த உருவம் மனசில் பட -நாரசிம்ஹ் வபுஸ் ஸ்ரீமான் -என்றும்
அழகியான் தானே அரி உருவம் தானே -என்றும்-அழகிய சிங்கன் —
நரம் கலந்த சிங்கமாய் -என்றும் சொலக் கடவது இ றே-
முரண்பட்டு ஜுரம் இது சர்வம் சமஞ்சயம்-ஸ்ரீ பாஷ்யகாரர் -செராதவற்றை சேர்த்து அருளி -திருவாராதன பெருமாள் அனுக்ரகம்
பக்த பயம் போக்கும் அபேஷ அனுகுணம் பிரதிபன்ன யதா காமா பக்தர் வேண்டு கோளுக்கு இணங்க எடுத்துக் கொண்ட திருமேனி
ஒரு கல்லிலே ஐந்து மாங்காய் அடியான் வார்த்தை மெய்யாக்க பிரமன் வார்த்தை மெய்யாக்க ஆழ்வார் கூப்பிட்ட உடன் வருவான் வார்த்தை
சாஸ்திரம் சர்வ வியாபகன் மெய்யாக்க
திவ்ய பெரிய -விக்ருத ரூபா -கொண்டாலும் ஸ்ரீ மத்யம் லாவண்யம் சௌந்தர்யம் அதி மநோ ஹர திவ்ய ரூபம்
அரியை அழித்தவனை
அரி -என்று சத்ரு –
சஹஜ சத்ருவான ஹிரண்யனை குற்றுயிர் ஆக்கி விடாதே உரு அழித்தவனை
சுகிர்த்து எங்கும் சிந்தப் பிளந்த -என்னக் கடவது இ றே
அவனை அழியச் செய்தது பய ஸ்தானம் ஆகிறது பின்புள்ளார் பகை கொண்டாடுவார் என்னும் அத்தாலே

பந்தனை தீர
துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யன் உடலை கீண்டு பொகுடுகையால் வந்த அனுக்கம் தீர –
திரு வவதரித்த திவசத்தில் உண்டான அபதானம் ஆகையாலே அனுக்கம் என்றது இ றே-
பிறந்த குழந்தை உடனே செய்த வியாபாரம் அன்றோ –

பல்லாண்டு
அனுகூலர் வாயாலே ஒருக்கால் மங்களா சாசனம் பண்ண -அவ் வஸ்துவினுடைய
அனுக்கம் போய் நித்தியமாய் செல்லும் என்று இ றே இவர்கள் நினைவு-எங்கும் பரிவர் உளர் என பயம் தீர்ந்த மாறன் -மா முனிகள்
இவர்கள் -வந்து சேர்ந்த அநந்ய பிரயோஜன பகவத் லாபார்த்திகள் -ஆழ்வார்கள் கோஷ்டி என்றுமாம் –

பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே –
ஒருக்கால் பல்லாண்டு என்றத்தால் பர்யாப்தி பிறவாமையாலே கால தத்வம்
உள்ளதனையும் நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகையே
எங்களுக்கு வ்ருத்தி என்கிறார்கள்-
சம்சார பயம் -போக பற்றுகிறேன் நிகழ் காலம் -போக்யம் பிராப்யம் கைங்கர்யமாக நித்யமாக செல்லுமே –

—————————————————————————————————
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்று உண்டு நின்று குடி குடி ஆட் செய்கின்றோம்
மாயப் பொரு படை வாணனை யாயிரம் தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய வாழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –7-

—————————————————————————————————–
தீயில் -அக்னி -சந்திர ஆதித்தியர்களில் காட்டிலும்
பொலிகின்ற -மிக விளங்கா நின்ற
செஞ்சுடர் -சிவந்த தேஜஸை உடைத்தாய்
ஆழி -மண்டல ஆகாரமான-வட்ட வடிவமான –
திகழ் -ப்ரகாசியா நின்றுள்ள
திருச் சக்கரத்தின் கோயில் -திரு ஆழி ஆழ்வான் எழுந்து அருளி இருக்கிற கோயிலாய்-ஹேதி ராஜன் -ஜ்வாலா கேசம் -த்ரி நேத்ரம்
பொறியாலே -சிஹ்னத்தாலே
ஒற்று உண்டு நின்று -சிஹ்நிதராய் நின்று
குடி குடி -எங்கள் சந்தானம் எல்லாம்
ஆட் செய்கின்றோம் -அடிமை செய்வதாய் வந்தோம்
மாயப் -க்ரித்ரிமாக
பொரு -போர் செய்யா நின்றுள்ள
படை -சேனையை உடையவனாய்
வாணனை -பாணாசுரனுடைய
யாயிரம் தோளும் -ஆயிரம் தோள்களின் நின்றும்
பொழி குருதி பாயச் -ரக்தமானது மதகு திறந்தால்  போலே புறப்பட்டு ஓடும்படி
சுழற்றிய -சுழற்றின
வாழி -திரு ஆழி ஆழ்வானை நியமிப்பதில்
வல்லானுக்குப் -சமர்த்தன் ஆனவனுக்கு-தொட்ட படை எட்டும் தோலாத படையன் –
பல்லாண்டு கூறுதுமே-திருப்பல்லாண்டு பாடுவோம்

——————————————————————————————————

அவதாரிகை-

ஏடு நிலத்திலே இவராலே ஆஹூதரான கைவல்யார்த்திகள் தங்கள் ஸ்வபாவத்தை
சொல்லிக் கொண்டு வர -அவர்களோடே சங்கதர் ஆகிறார் –
இவர்களை அழைத்தபோது -வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ -என்று நீங்கள் பற்றின புருஷார்த்தத்தை விட்டு
வாரும் கோள் என்றும் –
நமோ நாராயணாய -என்று -அநந்ய ப்ரயோஜனராய் வாரும் கோள் என்றும் –
நாடும் நகரும் நன்கறிய -என்று விசேஷஜ்ஞர் பரிகிரஹிக்கும் படியாகவும்
-அவிசேஷஜ்ஞர் உபேஷிக்கும் படியாகவும் வாரும் கோள் என்று இ றே அவர்களை அழைத்தது –
நம-ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி
நாராயணாய-ஸூ சு பிரயோஜன நிவ்ருத்தி பிறக்குமே
அதில் -ஷூத்ர புருஷார்த்தத்தை விடுகையும் -அநந்ய பிரயோஜனர் ஆகையும் -நம்முடைய க்ர்த்யம்
அனுகூலர் பரிகிரஹிக்கையும் ப்ரதிகூலர் கை விடுகையும் செய்ய வடுப்பது என் என்று பார்த்து
வைஷ்ணவ சிஹ்னமான திரு விலச்சினையைத் தரிக்கவே -த்யாஜ்ய உபாதேயங்கள்
இரண்டும் ஸித்திக்கும் என்று பார்த்து -அத்தைத் தரித்துக் கொண்டு வந்தோம் என்றார்கள் –
திரு இலச்சினை தரித்து அடிமை செய்ய வாரீர் என்று அழைத்தாரோ -மறைத்து சொல்லி இருக்கிறார்
நாடும் நரகமும் நன்கு அறிய என்றதால்

——————————————————————————————————–

வியாக்யானம் –

தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி என்று –
வைஷ்ணவ கோஷ்டியிலே புகுரப் பண்ணின-உபகார ச்ம்ர்த்தியாலே ஆழ்வானைக்
கொண்டாடுகிறார்கள் –
வல்லானை மட்டுமே கண்ணனைப் பற்றி முழு பாசுரமும் திரு ஆழி ஆழ்வானை புகழ்ந்து அருளுகிறார்கள் –
தீயில் பொலிகின்ற -தீ என்கிற சப்தம் சந்திர ஆதித்யாதி தேஜோ பதார்த்தங்கள்
எல்லா வற்றுக்கும் உப லஷணம் -அதில் காட்டில் தேஜஸு வர்த்திகை யாகிறது –
அத்யர்க்கா நலதீப்தம் தத் ஸ்தானம் -என்கிற பரமபதத்தில் தேஜஸு மிக்கு இருக்கக் கடவது –
அதில் காட்டில் அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸு மிக்கு இருக்கக் கடவது –
அதுக்கு பிரகாசாமாய் இ றே திரு வாழி ஆழ்வானுடைய தேஜஸு இருப்பது –
வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழி -என்னக் கடவது இ றே–வடிவையும் ஆர்ந்து மூடும் சோதி என்றவாறு –
தஸ்ய பாஸா சர்வ மிதம் விபாதி -என்கிற படியே அவனுடைய தேஜசாலே சர்வமும்
விளங்கா நின்றது என்னா நிற்க
ரசம் மனம் தேஜஸ் அனைத்தும் இவன் திருமேனியில் வாங்கியவை -திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு இவன் பிரகாசகனாம்படி என் என்னில் –

செஞ்சுடர் –
காளமேக நிபாச்யாமமான வடிவுக்கு இருட்டு அறையிலே விளக்கு ஏற்றினால் போலே
பரபாக ரூபத்தால் வந்த ப்ரகாசத்வத்தை சொல்லுகிறது-செய்யாள் -தானே -காள மேக சியாமளன் -அவனுக்கும் ஒளி கூட்டுவாள் –

ஆழி திகழ் திருச் சக்கரம் –
இட்டளத்தில் -நெருங்கிய இடத்தில் -பெரு வெள்ளம் போலே புறம்பு போக்கற்று -தன்னிலே -மண்டல ஆகாரமாய்
கொண்டு விளங்கா நின்றுள்ள திருவாழி ஆழ்வான் -என்கை
ஸ்ரீ தேவ பெருமாள் உடைய சௌந்தர்ய அருவி நாபி வந்ததும் சுழலும் -ஸ்ரீ கூரத் ஆழ்வான் -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர்

சக்கரத்தின் கோயில் –
ஆழ்வான் எழுந்து அருளி இருக்கிற மண்டல ஆகாரமான வாஸஸ்தானம்
பொறியாலே ஒற்று உண்டு நின்று -அதாகிறது
சிஹ்னத்தால் சிஹ்நிதராய் நின்று -பஞ்ச சம்ஸ்காரத்துக்கும் உப லஷணம் –
திரு இலச்சினை தரித்த பின் இ றே -இவன் ஜன்மாந்தரத்தில் போகாதே -மோஷாந்தரத்தில் போகாதே -ஸூஸ் திரனாகப் பெற்றது –
பக்தி யோக நிஷ்டன் -ஸ்வா தந்திர அபிமானம் கொண்டதால் பஞ்ச சம்ஸ்காரம் செய்யாமல் –
பெருமாளே சாஸ்திரமும் கையுமாக ஆச்சார்யர் ஆக திருவவதரித்து உள்ளார் என்று அறியாமல்
ஜன்மாந்தரங்களில் உழலுவார்கள் –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -ராமானுஜர் -குரு பரம்பரை-ராமர் கோஷ்டி வேற ராமானுஜர் கோஷ்டி வேற –
அபய பிரதான சாரம் விளக்கம் பொழுது கலங்கி மீண்டார்-
ராமானுஜர் கண்டு பிடித்து புகுத்தியது இல்லை இந்த பஞ்ச சம்ஸ்காரம் -பெரியாழ்வார் -அருளிச் செய்து உள்ளார் –
பூ பிரதஷிணம் பண்ணி பிராயச்சித்தம் வேண்டாம் ராமானுஜர் பிரதஷிணம் பண்ணி போக்கலாம் -யாதவ பிரகாசர் திருத் தாயார் விளக்கம் –
ஆகம விளக்கம் ஸ்ரீ கூரத் ஆழ்வான் விளக்கி அருளினார் –
மோஷாந்தரம்-கைவல்யம் -என்றவாறு –
பகவத் அங்கீகாரமும் இது-பஞ்ச சம்ஸ்காரம்- உண்டானால் இ றே அதிசயிப்பது –
அநர்ஹமான வஸ்துவை அர்ஹமாக்குவது பஞ்ச சம்ஸ்காரம் -இதுவே திருப்பு முனை -நல்ல வாழ்வுக்கு
பிடித்தேன் -பிறவி கெடுத்தேன் -பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்கும் மாயையை –அனுசந்தேய ஐதிகம் –
நடுவே வந்து உய்யக் கொள்ளும் மாயன்
போதரே என்று சொல்லி தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் அன்றோ –
ஸ்ரீ மத் த்வாரகையில் நின்றும் ஆஸ்ரித விரோதி நிரசனமாக எழுந்து அருளுகிற போது
திருவாசல் காக்கின்ற முதலிகள் -மீள எழுந்து அருளும் அளவும் இங்குப் புகுரக் கடவார் யார்
அல்லாதார் யார் -என்று விண்ணப்பம் செய்ய
சக்ரா கிங்தாஸ் பிரவேஷ்டவ்யா யாவதா கமநம் மம
நா முத்ரிதாஸ் வேஷ்டவ்யா யாவதா கமநம் மம-என்று இந்த லஷணம் உடையார் யாவர் சிலர்
அவர்கள் நிச்சங்கமாக புகுரக் கடவர்கள் –
பிரசாத பலத்தாலே பெருமாள் கைக் கொண்ட பின்பு பாவ சுத்தியும் பிறக்குமே
அஜாமலன் -பாகவத சமாகம் -நல்ல எண்ணம் பிறந்து -வருந்தி பச்சா தாபம் பட்டன் –
நாராயண திரு நாமம் சங்கீர்த்தனம் இவை கூட்டி பேறு பெற்றான்
அல்லாதாரை -பாவ பரிஷை பண்ணி புகுர விடக் கடவது என்றான் இ றே கிருஷ்ணன் -இது தான் ஈஸ்வரன் அங்கீகாரத்துக்கும் உடலாய் –
தானும் -நாம் அவன் உடைமை -என்று நிர்ப்பரனாய் இருக்கைக்கும் உடலாய் –
தான் பண்ணின பாபத்தை அனுசந்தித்து க்ரூரமாக பார்க்கக் கடவ யமாதிகளும்
அஞ்சும்படியாய் இருப்பது ஓன்று இ றே –
சக்ராதி தாரணம் பும்ஸாம் பர சம்பந்த வேதனம்
பதி வ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் -என்று பகவத் சம்பந்தத்துக்கு ஜ்ஞாபகமாய் இ றே இருப்பது

குடி குடி ஆட் செய்கின்றோம் –
ஸ புத்ர பௌத்ரஸ் ஸ கண -என்கிறபடியே சந்தானமாக அடிமை செய்யக் கடவோமாய் வந்தோம்

இப்படி அநன்யார்ஹராய் இருப்பார் செய்யும் அடிமை யாவது -திருப்பல்லாண்டு பாடுகை இ றே
எந்த அபதாநத்துக்கு நீங்கள் மங்களா சாசனம் பண்ணுகிறது என்னில்
மாயப் பொரு படை இத்யாதி –
எங்களை புகுர நிறுத்தின ஆழ்வான் உடைய வீரப் ப்ரகாசமான துறையிலே திருப்பல்லாண்டு
பாடக் கடவோம் என்கிறார்கள்
மாயப் பொரு படை வாணனை –
ஆச்சர்யமாக பொரும் சேனையை உடைய வாணன் என்னுதல்
ஆச்சர்யமாக பொரும் ஆயுதத்தை உடைய வாணன் என்னுதல்
மாயம் -என்று க்ர்த்ரிமமாய் க்ர்த்ரிமமான யுத்தத்தை உடையவன் என்னவுமாம்

ஆயிரம் தோளும் பொழி குருதி பாய –
ஆயிரம் தோள்களாலும் மதகு திறந்தால்  போலே ரக்த வெள்ளம் குதி கொண்டு பூமிப்
பரப்படைய பரம்பும்படி -பொழிதல் -சொரிதல்
இதுக்கு இவன் பண்ணின வியாபாரத்து அளவு எது என்னில்

சுழற்றிய –
திரு வாழியை விட வேண்டி இற்றில்லை -சுழற்றின இத்தனை –
அவன் ஒருக்கால் திரு ஆழியைச் சுழற்ற வாணனுடைய தோள்கள் ஆயிரமும் ஒருக்காலே
மலைக் கொடுமுடிகள் போலே முறிந்து விழுந்தன –
வஜ்ராயுத்தத்தால் சிறகுகளை மலைகளை வெட்ட -மைனாக பர்வதம் -தெற்குக் கரையில் வைக்க -வாயு புத்திரன் -வர உதவிற்றே –

வாணனுடைய தலையை அறாது ஒழிந்தது குற்றம் போறாமை யன்று
உஷை பித்ர் ஹீநை யாகாமைக்காகவும் –
தேவதாந்தர பஜனம் பண்ணுவாருக்கு பலம் இது என்னும் இடத்துக்கு மச்சமாகவும் -மச்சம் -சிலை வெட்டு -அடையாளம் -என்றவாறு –
அதாவது –
பரிவின்றி வாணனைக் காத்தும் என்று பிரதிக்ஜை பண்ணி
யுத்தத்திலே இவனைக் காட்டிக் கொடுத்து -ஸ பரிகரனாய் கொண்டு முதுகு
காட்டிப் போனான் ரஷகன் -ரஷ்ய பூதன் தோள் துணி உண்டான் -உன்னை ரஷிக்கப்
புக்கு நான் பட்டதோ -என்றும் -உன்னை ஆஸ்ரயித்து நான் பட்டதோ -என்றும்
இருவரும் கூடக் கட்டிக் கொண்டு கதறுகை இ றே பலமாய் விட்டது –

ஆழி வல்லானுக்கு –
வில் வல்லான் -வாள் வல்லான் -தோள் வல்லான் -என்னுமா போலே
ஆழியான் சொல்லாமல் ஆழி வல்லான் -சீமாலிகன் -பௌண்டரீக வாசு தேவன் -விருத்தாந்தம் —
யஸ்ய ஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிராட்டியை எனக்கு என்ன இட்டுப் பிறத்தல்
திருவடி தோளிலே நல் தரிக்க விருத்தல்-கொற்றப் புள் — -கை பேராமல் திரு வாழியைப் பிடித்தல் –
செய்யுமது ஆய்த்து சர்வாதிகத்துவதுக்கு லஷணம்-

பல்லாண்டு கூறுதுமே –
அத்தலையில் அடிமை செய்த ஆழ்வான் உடைய வீர ஸ்ரீக்கும்
அடிமை கொண்ட கிருஷ்ணனுடைய வீர ஸ்ரீக்கும் –
மங்களா சாசனம் பண்ணுவார் பெற்றது இல்லை –
அவ் விழவு தீர இன்று இருந்து திருப் பல்லாண்டு பாடுகிறோம் என்கிறார்கள்-

——————————————————————————————-

நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –9-

——————————————————————————————

அவதாரிகை –

அண்டக் குலத்தில் அழைத்த ஐஸ்வர்யார்த்திகள் இசைந்து வர -அவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறார் –
வாழாளில் அழைத்த -அநந்ய பிரயோஜனர் தங்கள் ஏற்றத்தை சொல்லிக் கொண்டு புகுந்தார்கள் -எந்தை தந்தை தந்தை-யிலே
ஏடு நிலத்தில் -அழைத்த கைவல்யார்த்திகள் -தாங்கள் திருந்திப் புகுந்தமை சொன்னார்கள் -தீயில் பொலிகின்ற -விலே
இவர்கள் தாங்கள் ஷூத்ர புருஷார்த்தத்தை அபேஷிக்க -அநந்ய பிரயோஜனருக்கு முகம் கொடுத்தால் போலே
முகம் தந்து -அந்த ஐஸ்வர்யத்தை தந்த ஔதார்யத்துக்கு தோற்று -ஐஸ்வர்யத்தை விட்டு
சுத்த ஸ்வபவாராய் -இவ்வுதாரனை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று புகுருகிறார்கள்-
அண்டக் குலத்திலே அண்டாத்யஷத்வம் ஐஸ்வர்யத்துக்கு மேல் எல்லையாய் பேசிற்று –
அவ் ஐஸ்வர்யார்த்திகள் பேச்சான இந்த பாட்டிலே -சரீரத்துக்கு தாரக போஷக போக்யங்களை
இரந்தார்களாய் -அத்தை அவன் தந்தானாகப் பேசிற்று -இதுக்கு நிபந்தனம் இன்று
ஸ்வரூப ஞானம் பிறந்து புகுருகிறவர்கள் ஆகையாலே அதினுடைய ஷூத்ரதை
தோற்றப் பேசுகிறார்கள் –
அண்டாத்யஷனான ப்ரஹ்மாவுக்கும் -தாரக போஷக போக்யங்களே  இ றே பிரயோஜனம்
அதற்க்கு மேற்பட்ட பகவத்விபூதியை எனக்கு என்கிற அபிமானத்தால் வந்த ஸ்வரூப ஹாநியே இ றே பலம்
வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் -தாரகம் -போஷகம் -போக்யம் –

————————————————————————————————

வியாக்யானம் –

நெய்யிடை
இடை என்று நிறையாய் -நெய்யோடு ஒத்த சோறு என்னுதல்
இடை -என்று நடுவாய் -நெய்யின் இடையிலே சில சோறும் உண்டு என்னுதல்
இத்தால் போஷக ப்ரசுரமான தாரக த்ரவ்யத்தை தரும் என்கை
நல்லதோர் சோறும் –
சோற்றுக்கு நன்மையாவது –மடி தடவாத சோறு என்றவாறு –
இட்டவன் இட்டோம் என்று இருத்தல் -உண்டவன் இதுக்கு என் செய்வோம் என்று இருத்தல் -செய்யாத சோறு –
அதாவது
தாய் இட புத்ரன் உண்ணும் சோற்றுக்கு இவ்விரண்டும் இல்லை இ றே
ஓர் சோறு –
இப்பாவ சுத்தியே  அன்றிக்கே விலஷண ரசோபேதமாய் இருக்கை
அங்கன் இன்றிக்கே -சேஷ பூதன் சேஷிக்கு இடும் சோறு போலே இருக்கை
அதாகிறது –
அஹங்காரோபேதம் இன்றிக்கே பக்த்யு பர்ஹ்ர்த்யமாய் இருக்கை -கிடாம்பி ஆச்சான் -மடப்பள்ளி மணம் கமழும் ஸ்ரீ ஸூக்திகள்-
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –பக்த யுபஹ்ருத்யம் -உள்ளன்புடன் –
ஈஸ்வரனும் -பக்தாநாம் -என்கிற நினைவாலேயும் வத்சலனாயும் இ றே இடுவது -சகலமும் சம்ஸ்ரித்தார்த்தாம் ஜகர்த்த —
ந தே ரூபம் -உனக்காக இல்லை எல்லாம் உன் அடியார்களுக்காக –
அநந்ய பிரயோஜன் ஸ்வாமி விஷயத்தில் இடும் சோறு எங்கனே இருக்கும் என்னில் –
விதுராந நானி புபுஜே ஸூ சீ நி குண வந்திச -என்னும்படி பாவந முமாய் -போக்யமுமாய்
இருக்கை -சுசீநி -என்றது சுத்தங்களாய் இருக்கை -சோற்றுக்கு சுத்தி யாவது
துர்யோதனன் தன் ஐஸ்வர்யத்தைப் பற்ற அபிமாநித்தான் –
பீஷ்மன் ஞாநாதிகன் என்று அபிமாநித்தான்
த்ரோணன் வர்ணத்தாலிகன் என்று அபிமாநித்தான்
இவை ஒன்றும் இன்றிக்கே -பக்த் வுப ஹ்ர்தமாய் இருக்கை-ஸ்ரீ விதுர ஆழ்வான் /ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் /ஸ்ரீ விபீஷண ஆழ்வான் —
விதுரன் இட்ட சோறு தானே ருசியாகவும் சுசியாகவும் பாவனமாகவும் இருந்ததே –

நியதமும் –
அதாகிறது –
ஐஸ்வர்யம் ஈச்வரனே கொடுக்கிலும் அஸ்திரமாய் இருக்கக் கடவது –
அது அழிந்தவன்றும் அந்த ஐஸ்வர்யத்தை சமாதானம் பண்ணிக் கொடுக்குமவன் ஆகையாலே
நியதமும் -என்கிறது -போனத்தை ஒக்க பண்ணிக் கொடுக்கும் எங்கை –இத்தாலே இ றே -அர்த்தார்த்தி -என்றும் -ஆர்த்தன் -என்றும்
ஐஸ்வர்யத்துக்கு இரண்டு வகை சொல்லிற்று -இழந்த ஐஸ்வர்யம் மீட்டுக் கொடுக்கும் என்கை –
-அங்கன் அன்றிக்கேதேவதாந்தரங்களைப் பற்றி ஈஸ்வரனை இல்லை செய்யுமன்றும் தந் முகேன
சோறிடுமவன் என்கை -சர்வேஸ்வரன் இட்ட சோற்றை தின்று அவனை இல்லை செய்யும்
க்ர்தக்நர் இ றே சம்சாரிகள் -தன்னை இல்லை செய்யுமன்றும் ரஷிக்கும் உதாரன் இ றே சர்வேஸ்வரன்-
அவன் அபிப்ராயம் படி அனைவரும் அவன் சொத்து -தானே -மற்ற தெய்வம் அது செய்யாது -அவை பர -ப்ரஹ்மம் இல்லையே –

அத்தாணிச் சேவகமும் –
அத்தாணி -என்று பிரியாமை -சேவகம் -என்று சேவை
ஐஸ்வர்யார்த்திக்கும் அநவரத பாவநையும் -அந்திம ச்ம்ர்த்தியும் அநந்ய பிரயோஜநோர்-பாதி
கர்த்தவ்யம் இ றே
ஆனால் ஐஸ்வர்ய சாதனத்தையும் -தந்து -என்று பிரயோஜனத்தோடு ஒக்க சொல்வான்
என் என்னில்
வெள்ளுயிர் ஆன பின்பு சொல்லுகிறார்கள்
நமக்கு கைங்கர்யம் புருஷார்த்தம்
ஐஸ்வர் யபரர் கைங்கர்யர் சாதனம் ஆக்கி -நெய்யிடை சோறு இத்யாதி பெற்று போவார்களே –
இவற்றுடன் அத்தாணிச் சேவகம் சேர்த்து படித்தது -மற்ற புருஷார்த்தங்கள் உடன் –
ஒரே சாதனம் மற்ற புருஷார்த்தங்கள் உடன் சேர்த்து படித்தது -வெள்ளுயிர் ஆனபின்பு சொல்லுகிறார்கள்
ஆகையாலே அந்த சாதனமும்-அத்தாணிச் சேவகமும் – ஸ்வயம்பிரயோஜனமாய் இ றே இருப்பது
-அநந்ய பிரயோஜனனுக்கு ஸ்வயம் பிரயோஜனமான சேவை சாதனமாக்கி கிடீர் ஷூத்தரமான ஐஸ்வர்யத்தை தந்தது என்கை

கையடைக்காயும்
தாரக போஷகங்கள் கீழே சொல்லிற்றாய் -மேல் -போகய பதார்த்தங்களை தந்தபடி சொல்லுகிறது
திருக்கையாலே இட்ட வெற்றிலை பாக்கு என்று இவர்கள் பக்கல் கௌரவத்தாலே
இட்ட சீர்மையை சொல்லுகிறது -சேஷ பூதன் சேஷியை குறித்து இடும் பிரகாரத்தாலே இ றே
சேஷி யானவன் சேஷ பூதனுக்கு இடுவது
பெருமாள் திருக்கையிலே காட்டி அருளிய அடைக்காய் -தின்னும் வெற்றிலை -போகய பதார்த்தங்கள் –
அவன் கொடுத்து அனுபவிக்கும் போக்யம்

கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும் –
தேகத்தை உத்தேச்யம் என்று இருக்குமவன் ஆகையாலே -தன் உடம்பை அலங்கரித்து
அத்தை அனுபவித்து இருக்குமவன் இ றே ஐஸ்வர்யார்த்தி
பகவத் பரனாய் ஈஸ்வரனை அலங்கரித்து சதா தர்சனம் பண்ணி இருக்கிறான் அல்லனே
ஸ்வரூபத்தை உணர்ந்து -ஜ்ஞான வைராக்ய பக்திகளை ஸ்வரூபத்துக்கு ஆபரணமாக
நினைத்து இருக்கிறான் அல்லனே
பராவர குருக்கள் பூட்டும் ஆபரண பூஷணங்கள் ஞான பக்தி வைராக்யங்கள் –
கழுத்துக்கு பூணோடு காதுக்கு குண்டலமும் -என்று விசேஷிப்பான் என் என்னில் –
தன் கண்ணுக்கு அவிஷயமாய் -நாட்டார் கொண்டாடும் அதுவே தனக்கு பிரயோஜனமாய்
இருக்கையாலே
அவயவாந்தரந்களிலே -அங்குலீய காத்யாபரணங்கள் தன் கண்ணுக்கு விஷயமாய் இருக்கும் இ றே
பெருமாள் மீண்டு எழுந்து அருளின அளவிலே இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை-முத்தா ஹாரம் —
பிராட்டியும் தாமும் இருந்து திருவடிக்கு பூட்டினால் போலே -ஈஸ்வரன் பரிந்து
இது கழுத்துக்காம் -இது காதுக்காம் -என்று திருக்கையாலே பூட்டின ஆபரணமும்-
ப்ரதேஹி ஸூ ப கே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமிநீ -என்கிறபடியே இந்த்ரன்
வரக் காட்டின ஹாரத்தை பெருமாள் வாங்கி பார்த்தருளி -பிராட்டிக்கு கொடுக்கிற போது
அத்தை வாங்குகிறவள் -பெருமாளை ஒரு திருக் கண்ணாலும் திருவடியை ஒரு திருக் கண்ணாலும் பார்த்து வாங்கினாள்
ப்ரேஷி தஜ்ஞா ஸ் து கோசலா -என்று பார்வையில் கருத்து அறியுமவர் ஆகையாலே
அவனுக்கு கொடுக்கலாகாதோ -என்று அருளினார்
-ஸூ ப கே -அடியார் ஏற்றம் அறிந்து
கொண்டாடுகைக்கு ஈடான சௌபாக்கியம் உள்ளது உனக்கே யன்றோ என்ன –
சௌபாக்யம் உடையவரே -முத்து மாலை -நாடு புகழும் பரிசு என்று ஆக்கின சௌபாக்யம் –
உம்முடைய திரு உள்ளத்தால் அன்றோ நான் கொடுக்கிறது என்று பிராட்டி விண்ணப்பம்
செய்ய -நான் முற்பாடனாகப் பெறாமையாலே உன்னுடைய உகப்பின் கார்யத்தைக் கொடுக்கல் ஆகாதோ
என்றார் -இப்படி அநந்ய பிரயோஜனனுக்கு ஆதரித்து பூட்டினால் போலே ஆய்த்து
ஷூத்ரனான என்னை ஆதரித்து பூட்டிற்றும்-
அங்கே அநந்ய பிரயோஜனருக்கு அருளினது -ஐஸ்வர் யார்த்தியாக இருந்து வந்தவர்களையும் அப்படியே பரிந்து பூட்டும் பர ப்ரஹ்மம் அன்றோ –
பெருமாளுக்கு திரு ஆபரணங்கள் எங்கும் சாத்தலாமே – -அழகன் அலங்காரன் –
அந்த நினைவாலே கழுத்துக்கு பூணும் காதுக்குக் குண்டலமும் என்று அருளிச் செய்து அருளுகிறார்

மெய்யிட
திருவடிகளில் ருசி பிறந்த பின்பு ஆகையாலே -உடம்பு த்யாஜ்யம் என்கிற நினைவு
தோன்ற குத்சித்து சொல்லுகிறபடி-
இந்த சரீரத்துக்கு போய் சந்தானம் வேற அருளுகிறானே -ஆனந்தமாக இல்லை
இது வேறயா –உள்ளது வெளியதானால் காக்கை ஓட்ட ஆள் இல்லையே

நல்லதோர் சாந்தமும் –
சசாதான் இதுக்கு தரமாகப் பெற்றதோ -சர்வ கந்த -என்கிற வடிவுக்கு ஸ தர்சமாக குப்ஜை
ஆதரித்து சாத்தின சாந்து போலே இருக்கும் சாந்தை அன்றோ எனக்கு இட்டது –
ஸூ கந்த மேதத் -குப்ஜை கம்சனுக்கு பரணியோடே சாந்து கொண்டு போகா நிற்க –
வாரீர் பெண் பிள்ளாய் நமக்கும் நம் அண்ணர்க்கும் சாந்திட வல்லீரோ -என்ன
அவ்வடிவையும் இருப்பையும் கண்டு ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான சாபல்யத்தாலே மறுக்க மாட்டிற்று இலள் –
இவர்கள் இடைப்பிள்ளைகள் -சாந்தின் வாசி அறிய மாட்டார்கள் -என்று ஆக்கனாய் இருப்பதொன்றை இட்டாள்-செயற்கையில் வாசனை ஏற்றப் பட்ட –
அத்தை பார்த்து -நாற்றம் கொளுத்தின படி அழகியது தளம் அழகிதன்று -என்ன
அதுக்கு மேலே யொரு சாந்தை இட
-ராஜார்ஹம் -இது கம்சனுக்கு செருக்கிலே
பூசலாம் இத்தனை வாசி அறிந்து பூசுவருக்கு ஸ்தர்சம் அல்ல -அன்றியே
வழக்கனான சாந்து-செலவுச் சாந்து – என்னவுமாம்
சுகந்தம் -செயற்கை வாசனை உள்ள சந்தனம்
சுகந்தி -இயற்கை வாசனை உள்ள சந்தனம் –
ருசிரம் -சௌகந்த்யம் கிடக்க நிறம் அழகியதாய் இருந்தது என்ன
இவர்கள் இடைப் பிள்ளைகள் என்று இருந்தோம் -சாந்தின் வாசி அறிந்தபடி என்
என்று ஆதரித்து பார்க்க
-ருசிராந நே -உன் முகத்தில் ஆதரத்துக்கு சதர்சமாய் இருக்க
வேண்டாவோ நீ இடும் சாந்து -என்ன -அவளும் தலையான சாந்தை இட –
ஆவ யோர்க்காத்ர சத்ருசம் -எங்கள் உடம்புக்கு ஸதர்சமான மேதக வஸ்துவை இட்டு-கஸ்தூரி போன்றவற்றை கலந்து-
மர்த்தித்து தா என்றான் -அதாவது -பூசும் சாந்து -என்கிற படியே உன்னுடைய ஆதரத்தாலே
ச்மச்க்ர்த்தமாக்கி தா என்றபடி
-இப்படி இவள் ஆதரித்து சாத்தின மாளிகைச் சாந்தை கிடீர் தம் திருக் கையால் என் உடம்பில் பூசிற்று

தந்து
தந்த போதை திருமுகத்தில் கௌரவத்திலும் ஔதார்யத்திலும் தோற்று ஐஸ்வர்யத்தை
விட்டு அவன் தானே யமையும் யென்னும்படியாய் தந்தது
தந்த திரு முகம் கண்டு தோற்றோம் -திருவடிகளே ஐஸ்வர்யம் என்று அறிந்தோம் –

என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல –
சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே ஆத்ம அபஹாரம் பண்ணி -அதனாலே
ஷூத்ர பிரயோஜன காமனாய் -சம்சாரியாய் போந்த என்னை –
கள்வா-பிள்ளை பெருமாள் ஐயங்கார் —
வெள்ளுயிர் ஆக்க வல்ல –
முன்பு ஷூத்ரனாய் போந்தான் ஒருவன் சுத்த ஸ்வபாவன் ஆனான் என்று தெரியாதபடி
அச்ப்ருஷ்ட -தீண்டாத — சம்சார கந்தரிலே ஒருவன் -என்னலாம் படி யாய்த்து விஷயீ கரித்தது
வல்ல
தன்னதொரு ஸ்வபாவ விசேஷத்தாலே வஸ்துவை வஸ்வந்தரம் ஆக்க வல்ல சக்தன் என்கை-

பையுடை இத்யாதி
மங்களா சாசனத்துக்கு விஷயம் ஏது என்ன -அவ் விஷயத்தை சொல்லுகிறார்
தன்னோட்டை ஸ்பர்ச சுகத்தாலே விகஸித பணமான நாகத்தினுடைய பகை உண்டு
பெரிய திருவடி -அவனை கொடியாக உடையவனுக்கு
பொதுவாக பகைமை உள்ளவர்கள் கைங்கர்யம் செய்வதை கண்டு பொறாமை படுவார்களே -அதற்குப் பல்லாண்டு பாடுவோம் என்கிறார்கள் –
அநந்த சாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறேன் என்கை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திரு வநந்த வாழ்வானோட்டை சேர்த்தியால்
வரும் அழகு நித்ய ஸ்ரீ யாக வேணும் என்றும்
ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவர்களையும் எனக்காக்கிக் கொள்ள வல்லேன்
என்று கொடி கட்டி இருக்கிற சக்தி நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும் என்றும்
திருப்பல்லாண்டு பாடுகிறேன் என்கிறார்

அநந்ய  பிரயோஜனரும் -கைவல்யார்த்திகளும் -சங்கதராகிற  இடத்தில் சமூஹமாக பேசினார் -பாடுதும் -கூறுதும் -என்றும்
இதில் ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனத்தாலே பேசுவன் என் என்னில் -கூறுவன் -என்று
அவர்கள் திரள் பரிச்சின்னமாய் -ஐஸ்வர்த்யார்திகள் திரள் அபரிச்சின்னம் ஆகையாலே
ஒரூருக்கு ஒருத்தன் வார்த்தை சொல்லுமா போலே சொல்லுகிறார்

——————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: