பகவத் விஷயம் காலஷேபம் -6-திருப்பல்லாண்டு —வாழாட் பட்டு உள்ளீரேல்/ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்/-அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி/–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் – -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே -3-

வாழ் ஆள்-கைங்கர்ய ரூபமான போகத்துக்கு-வாழ்ச்சி -என்பதே ப்ரீதி காரித கைங்கர்யம் செய்வதே
பட்டு -பொருந்தி
உள்ளீரேல்  -இருப்பீர்கள் ஆனால்–வாசுதேவாஸ் சர்வமிதி ச மகாத்மா துர்லப –
வந்து -விரைவாக வந்து
மண்ணும் -திரு முளைத் திரு நாளுக்குப் புழுதி மண் சுமக்கையும்
மணமும்  -அந்தக் கல்யாணத்துக்கு அபிமாநியாய் -மண்ணை எடுத்து வரப் பெற்றோமே என்று அபிமானித்து மகிழ்ந்து -இருக்கையும்
கொண்மின் -நீங்கள் ச்வீகரியும் கோள்
கூழ் -சோற்றுக்காக
ஆள் பட்டு -அடிமை ஓலை எழுதிக் கொடுத்து
நின்றீர்களை -கண்ட இடம் எங்கும் நிற்கிற உங்களை-எங்கும் பரந்து இருக்கிறீர்களே –
எங்கள் குழுவினில் -அநந்ய ப்ரயோஜனரான எங்கள் திரளிலே
புகுதல் ஓட்டோம் -சேர ஓட்டோம்
உங்கள் திரளுக்கு வாசி என் என்ன –
ஏழாட் காலும்-முன் ஏழ் பின் ஏழ் நடு ஏழ் ஆகிய இருப்பதொரு தலைமுறையிலும்
பழிப்பிலோம் -ப்ரயோஜன பரர் என்றும் -சாதனாந்த பரர் என்றும் -பழிக்கப் படாதவர்கள் என்ன
நாங்கள்
அது உங்கள் தொழில் கண்டு அறிய வேணும் என்ன
இராக்கதர் வாழ் -இராட்ஷசர் வர்த்திக்கிற
இலங்கை -இலங்கையானது
பாழாளாகப் -ஆள் பாழாம் படியாக-பாழடைந்த ஆள் உள்ளவாக –
படை -யுத்தத்திலே
பொருதானுக்கு-அன்று எதிரிகள் அம்பு மார்விலே தைக்கும்படி பொருதவனுக்கு
பல்லாண்டு கூறுதுமே -இன்று இருந்து மங்களா சாசனம் பண்ணிப் போருவோம்
சிலர் நாங்கள் என்கிறார் –

————————————————————————————————
அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலே தாம் திருப்பல்லாண்டு பாடினார்
இனிமேல் தம்முடைய மங்களா சாசனத்தாலே தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே
சதுர்விதா பஜந்தே மாம் -என்கிறபடியே -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்திகள்
மூவரையும் கூட்டிக் கொள்வாராக நினைத்து –
சதுர்விதா -என்றது ஐஸ்வர் யாதிகள் இரண்டு வகை -என்பதால் -ஆர்த்த -அர்த்தார்த்த -ப்ரஷ்ட ஐஸ்வர்யகாமன் /அபூர்வ ஐஸ்வர்யகாமன்
மூடர் –தாழ்ந்தவர் –மாயப் பேச்சால் புத்தி கலந்கினவர் -அசுரர் நால்வர் -வர மாட்டார்கள் -ஸ்ரீ கீதை
அசித் பிரதான்யம் -ஐஸ்வர் யார்த்தி / சித் பிரதான்யம் -கைவல்யார்த்தி /ஈஸ்வரன் பிரதான்யம் -பகவத் லாபார்த்தி
மூவரில் முதல்வரான பகவத் லாபார்த்திகளை அழைக்கிறார்
-அதில் மங்களா சாசனத்துக்கு பகவத் ப்ராப்தி காமர் ப்ரத்யாசன்னர் -அருகில் –ஆகையாலே அவர்களை அழைக்கிறார்
-ஏகஸ் சாது ந புஞ்ஜீத -என்கிற ந்யாயத்தாலே -இம் மங்களா சாசன ரசம் எல்லாரும் புஜிக்க வேணும் என்கிற நினைவாலே அழைக்கிறார் என்றுமாம்
இனியது தனி அருந்தேல்-எல்லோரும் -சரியான வார்த்தை இல்லை எல்லாரும் -என்பதே சரி –
அவர்களோடே கூட மங்களா சாசனம் பண்ணுகை தமக்கு தாரகம் ஆகையாலும் என்றுமாம் –
அடியார்கள் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -என்றும் –
அடியார்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
கண்ணாலே காண்கையும் -அத் திரளிலே புகுருகையும் -இவை எல்லாம் உத்தேச்யமாய் இ றே இருப்பது
இத்தால்
அவன் வைலஷ்ண்யம் உந்த -அபரியாப்தல் ஆதல்
இவர்கள் இழவு-இனியது அருந்தாமல்
தன் செல்லாமை
மூன்றாலும் அழைக்கிறார்

————————————————————————————————
வியாக்யானம்-

வாழ் ஆள் -என்று
நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது
வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –
அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இ றே இருப்பது
சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி -நாய் தொழில் –என்னக் கடவது இ றே
சேஷத்வம் துக்க ரூபம் உலகில் -அபிமத விஷயத்தில் சேஷத்வம் சுக ரூபம் தானே —
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -உபாசக நிஷ்டர் –அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும்
துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –
இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க
சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் –
என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த பரிதியே புருஷார்த்தமாய் இ றே இருப்பது –

பட்டு -எனபது
உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற
சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்

நின்றீர்
வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு-ஓடினேன் ஓடி –
பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இ றே ஸ்திதி உண்டாவது –
கிருபாவசப் பட்டு -கர்மவசம் தவிர்ந்து -வாழாள் பட்டால் நின்றீர் கூழாள் பட்டு திரிந்து என்றவாறு

உள்ளீரேல்
ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட
சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இ றே இருப்பது-
வாசுதேவாஸ் சர்வம் இதி மகாத்மா -ஸ்ரீ கிருஷ்ண சித்தாந்தம் -ஸூ துர்லப –
பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -நம்மாழ்வார் -திருவவதாரம் -திருக் குருகைப் பிள்ளான் சாதிப்பாராம்
நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்
தேட்டமாய் இ றே இருப்பது –
இந்த யதி–ஆல் -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து-

அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்களும் -நம்மை விரும்புவார் சிலர் உண்டாவதே -என்று
சந்நிஹிதராக வந்து அவர்களுடைய ஸ்வரூப ஸ்வாபவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடு
கலந்துகொடு நிற்க வேண்டும்படியான த்வரை சொல்கிறது-குன்றம் எடுத்த பிரான் அடியார் உடன் ஒன்றி நிற்க ஆசைப் படுவாரே ஆழ்வார்-
மண்ணும் மணமும் கொண்மின் -என்கிறார் –
மண்ணுக்கும் மணத்துக்கும் உரியார் அந்தரங்கரான அடியார் இ றே
அடிமை விலையோலை எழுதும் பொழுதும் -மண்ணுக்கும் மணத்துக்கும் உரியனாக வேணும்
என்று இ றே எழுதுவது –
மண்ணாவது -ஸ்வாமிக்கு ஒரு மங்களம் உண்டானால் அங்குரார்ப் பணத்துக்கு புழுதி மண் சுமக்கை
அந்த ந்யாயத்தாலே இ றே நம் ஆழ்வார்களுக்கு –சேனை முதலியார் -திரு ஆழி ஆழ்வான் –அது க்ர்த்யம் ஆகிறது
அனந்தாழ்வான் மண் சுமந்த ஐதிகம் -திருவேங்கடமுடையான் -கைங்கர்ய ஆசை கொண்டு –பேக் சவாரி உத்சவம் –
மணமாவது -அந்த கல்யாணத்துக்கு தான் அபிமாநியாய் இருக்கை
இவ்விரண்டும் சர்வ கைங்கர்யத்துக்கும் உப லஷணம்
கொண்மின் -என்ற இடத்தால் -வாங்குமின் என்னாது கொள்மின் என்றது –
அடிமை செய்யுமிடத்தில் கிடந்தானை கண்டேறுகை-ஸ்வ தந்த்ரனாகை -யன்றிக்கே  சிலர் தரக் கொள்ள
வேணும் யென்கையும் -தருமவர்களும் -உங்களதான அடிமையை நீங்கள் ச்வீகரியும் கோள்
என்று சீரிதாகக் கொடுக்கக் கடவர்கள் யென்கையும் ஆகிற சாஸ்த்ரார்த்தையும் வெளியிடுகிறது-
குருஷ்மமாம் -கிரியதாம் மாம் வாத -முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -பொறு சிறைப் புள் உவந்து ஏறும் -இருவருக்கும் ஆனந்தம் –
தாத்ருத்வம் பிரதிக்ருஹீத்வம் -தானம் கொடுப்பதிலும் வாங்குவதிலும் மமகாரம் கூடாது –

கூழ் ஆள் இத்யாதி
இவர் அழைத்த வாசி அறியாதே பிரயோஜனாந்தபரர் அடையப் புகுர தொடங்கிற்று –
அவர்களை நிஷேதிக்கிறார் -கூழ் ஆள் -என்று சோற்றுக்காக யாரேனுக்கும் தன்னை
எழுதிக் கொடுக்கை -இது பிரயோஜனாந்த பரருக்கும் உப லஷணம் -தன்னை பகவத் தாஸ்ய
ஏக போகன் -என்னுமிடம் அறியாதே பிரயோஜனாந்தரங்களைக் குறித்து அவன் தன்னையே
ஆஸ்ரயிக்கிறார்கள் இ றே –
கூழ் ஆள் -என்று அநந்ய பிரயோஜனராய் இழிந்து பிரயோஜநாந்தரங்களை வேண்டிக் கொள்ளும்
இரு கரையரைச் சொல்லுகிறது -என்றுமாம் –

பட்டு -என்றது
அகப்பட்டேன்  -என்றபடி –
அதாவது பந்தகம் ஆகையாலே -ஸ்வரூப விரோதியாய் அனர்த்தததை பண்ணும் என்னுமத்தாலே சொல்லுகிறது –

நின்றீர்களை -பஹூ வசனத்தாலே -உள்ளீரேல் -என்று தேட வேண்டாதே பார்த்த பார்த்த
இடம் எங்கும் பிரயோஜனாந்த பரராய் இருக்கை

எங்கள் குழு -என்று
இத் திரளுக்கு உண்டான வ்யாவ்ர்த்தி தோற்ற அருளிச் செய்கிறார் –
தேகாத்ம அபிமாநிகள் -தேவதாந்திர ப்ரவணர் -இவ்விஷயம் தன்னிலே புகுந்து
பிரயோஜநாந்தரங்களை அபேஷிப்பார் -அநந்ய ப்ரயோஜனராய் சாதனாந்தரங்களிலே
அநந்ய பரராய் இருப்பார் ஆகிற திரள்கள் எல்லாவற்றிலும் வ்யாவர்த்தமாய் அன்றோ
எங்கள் திரள் இருப்பது என்கிறார் –

புகுதல் ஓட்டோம் –
ஆரே புகுவார் -என்று ப்ரார்த்திக்கிற இவர் -நிர்த்தயரைப் போலே புகுதல் ஒட்டோம்
என்பான் என் என்னில் -வசிஷ்டன் பரம தயாளன் ஆனாலும் சண்டாளனை அக்நி
கார்யத்திலே கூட்டிக் கொள்ளான் இ றே
இத்தால் அநந்ய பிரயோஜனருக்கு பிரயோஜன பரரோட்டை சஹ வாஸம் அசஹ்யமாய்
இருக்கும் என்றது ஆய்த்து-
அதிகாரி பேதம் ஏற்படும் என்று ஆளவந்தார் பெருமாள் சேவிக்க போகாத ஐதிகம் -அவள் சென்ற பின்னே உள்ளே புகுந்தார் –

எங்கள் திரளில் காட்டிலும் உங்கள் திரளுக்கு வாசி என் என்னில் –
ஏழ் ஆள் காலும் பழிப்பிலோம் -என்கிறார்
ஏழ் ஆள் -என்று தமக்கு கீழே ஒரு மூன்றும் -மேலே ஒரு மூன்றும் -தாமுமாக ஏழு படியைச் சொல்லுகிறது-
இஸ் சமுதாயத்தை பற்றி சாஸ்திரங்கள் சப்த சப்த ச சப்த -என்று இந்த ஏழையும்
இதுக்கு கீழே ஓர் ஏழையும் -இதுக்கு மேலே ஓர் ஏழையும் -ஆக இருப்பதொரு படி காலைச் சொல்லுகிறது
தசபூர்வாந் தசாபரா நாத்மா நஞ்சைக விம்சதிம் பங்க்திஞ்ச புநாதி -என்று முக பேதேன
சாஸ்திரம் சொல்லிற்று –
ஏழாட் காலும் -என்கிற சப்தம் இவ்வளவை நினைக்கிறது -இத்தால் ஒரு சந்தாநத்திலே
ஒருவன் அநந்ய பிரயோஜனன் ஆனால் அவனைப் பற்ற பகவத் பிரபாவம் சம்பந்தி
சம்பந்திகள் அளவும் செல்ல கீழும் மேலும் வெள்ளம் இடுகிறது-

பழிப்பிலோம் –
விஷயாந்தர ப்ராவண்யம் என்ன -தேவதாந்தர பஜனம் என்ன -இவை தூரதோ நிரச்தம்
ஆகையாலே பதர் கூட்டித் தூற்ற வேண்டா
இனி அநந்ய ப்ரயோஜனராய் அநந்ய சாதநராய் இருப்பாருக்கு பழிப்பு ஆவது
பிரயோஜனாந்தர பரதையும் சாதநாந்தர பரதையும் இ றே
அவற்றை உடையோம் அல்லோம் என்கிறார்-
நாமே பற்றினோம் நம் ஆனந்தத்துக்கு என்ற குறைகள் இல்லை என்றவாறு –

நாங்கள்
எங்கள் குழுவு -என்ற போதை செருக்குப் போலே பகவத் விஷயீ காரத்தால் வந்த செருக்கு
தோற்ற சொல்லுகிறார் –
உங்கள் ஸ்வரூபம் நீங்கள் சொன்ன அளவில் விஸ்வசித்து இருக்குமத்தனை யளவு
யடியோம் அல்லோம் -உங்கள் வ்ர்த்தி விசேஷத்தைக் கொண்டு உங்களை அறிய வேணும் என்ன –
அது நீங்கள் அறியும் புடை யல்ல -எங்கனே என்னில் -ஒரு கார்யப்பாடாக உள்ள அமங்களங்கள்
போக மங்களா சாசனம் பண்ணும்படி யாதல் -இல்லாத மங்களங்கள் உண்டாக வேணும் என்று
மங்களா சாசனம் பண்ணுதல் செய்யும் அளவு இ றே நீங்கள் அறிவது -முன்பு வ்ய்ர்த்தமாய்
கழிந்த செயலுக்கு இன்று இருந்து வயிறு பிடிக்கும் திரள் காண் எங்களது-

இராக்கதர் வாழ் இலங்கை –
துர்வர்க்கம் களித்து வர்த்திக்கும் தேசம்-இவர்கள் அபிப்ராயத்தால் வாழும் –
புறம்பே போய் பர ஹிம்சை பண்ணி -குளவிக் கூடு போலே திரண்டு -கடலையும்
மதிளையும் அரணாக்கி அமணக் கூத்தடிக்கும் தேசம் என்கை
இலங்கை தான் விபீஷண விதேயம்  இ றே -இலங்கை பாழ் ஆக என்னாதே -இலங்கை ஆள் பாழ் ஆக என்றது –
இனி ந நமேயம் என்ற ராவணனையும் அவனுடைய அதிக்ரமத்துக்கு துணையான ராஷசரையும்
அழியச் செய்து -ஸ்மஸாந சத்ரு ஸீ பவேத் -என்று பிராட்டி அருளிச் செய்த படியே
அவ் ஊரை மூலையடியே போம் படி பண்ணினான்-

படை பொருதானுக்கு –
இப்படி செய்தது ஈஸ்வரத் பெடாரான சங்கல்ப்பத்தால் அன்றிக்கே எதிரிகள் அம்பு மார்விலே
தைக்கும்படி பொருதவனுக்கு-

பல்லாண்டு கூறுதுமே
அப்போதை கையும் வில்லுமாய் சீறிச் சிவந்து எதிரிகள் மேலே வியாபாரிக்கும் போதை-கோபச்ய வசம்-
உருக்கெட வாளி பொருந்தவன் –திருக்கடித்தானம் -தாயப்பதியே –கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -ஏற்றுக் கொண்ட கோபம் –
ஆகர்ஷகமான வடவு அழகுக்கு மங்களா சாசனம் பண்ணிப் போருவோம் சிலர் காண் நாங்கள் -என்கிறார்
ராகவார்த்தே பராக்ராந்தாந ப்ரானே குருதே தயாம் -என்கிறபடியே அக்காலத்தில்
முதலிகளுக்கு அம்புக்கு இறாய்க்கப் பணி போருகையாலே அக்காலத்திலே
மங்களா சாசனம் பண்ணுவாரைப் பெற்றது இல்லை அவகாசம் இல்லாமையாலே வானர முதலிகள் பல்லாண்டு பாட வில்லை
-பிராட்டி பிரிந்த போதே நம்குடி இருப்பு பெற்றோம் என்ற ப்ரீதியாலே பிரமாதிகள் அந்ய பரர் ஆனார்கள் –
அக்காலத்தில் –15 லஷம் வருடங்கள் முன்பே -மங்களா சாசானம் பண்ணப் பெறாத குறை தீர இன்று இருந்து
மங்களா சாசனம் பண்ணுவோம் சிலர் காண்  நாங்கள் -என்கிறார் –

—————————————————————————–

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடு நரகமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -4-

ஏடு -பொல்லாங்கான-பாலில் ஏடு போலே தாழ்ந்த தோஷம் உடைய மசானத்தில் –
நிலத்தில் -மூல பிரக்ருதியிலே
இடுவதன் முன்னம் -சேர்ப்பதருக்கு முன்னே
வந்து
எங்கள் குழாம் -அநந்ய பிரயோஜனரான எங்கள் திரளிலே
புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் -கூட வேண்டும் என்ற நினைவு உடையவர்களாய் இருப்பீர் ஆயின்
வரம்பு ஒழி -வரம்பு ஒழிய
வந்து ஒல்லைக் கூடுமினோ -விரைவாக வந்து சேரும் கோள்
நாடு -நாட்டில் உள்ள அவிசேஷஜ்ஞரும்
நரகமும் -நகரத்தில் உள்ள விசேஷஜ்ஞரும்
நன்கு அறிய -நன்றாக அறியும் படி
நமோ நாராயணா என்று
பாடும் -பாடத்தக்க
மனமுடை-மனஸ் உண்டாம்படியான
பத்தர் உள்ளீர் -பிரேமத்தை உடையீர் ஆகில்
வந்து பல்லாண்டு கூறுமினே -வந்து பல்லாண்டு பாடும் கோள் என்கிறார்

———————————————————————————————————
அவதாரிகை –

ஏடு இத்யாதி –
கீழே அநந்ய பிரயோஜனரை அழைத்தார் -அவர்கள் மங்களா சாசனத்துக்கு பிரத்யாசன்னர்
ஆகையாலே நீரிலே நீர் சேர்ந்தால் போலே சேர்ந்து இருக்கும் இ றே -அவ்வளவிலும்
பர்யாப்தி பிறவாமையாலே -ஈஸ்வரன் கை பார்த்து இருக்குமவர்கள் -என்னும் இவ்வளவைக்
கொண்டு ஆப்த ப்ராப்தி காமரையும் ஐஸ்வர்ய காமரையும் அழைக்க கோலி -அதில்
முந்துற ஆத்ம ப்ராப்தி காமரை அழைக்கிறார் -ஐஸ்வர்யத்தில் காட்டில் ஆத்ம ப்ராப்தி
உத்க்ர்ஷ்டம் என்றும் நினைவாலே அழைக்கிறார் அல்லர் -அந்த மோஷத்தை இவர் அநர்த்தம்
என்று இருக்கையாலே -இனி எத்தாலே முற்பட அழைகிறது என்னில் –
பகவத் சம்பந்தத்துக்கு உபகரணமான சரீர மோஷம் அணித்தாகையாலும் -அம் மோஷத்தை
ப்ராபித்தால் மீள ஒண்ணாமை யாலும் -ஐஸ்வர்ய காமனுக்கு காலாந்தரத்திலே யாகிலும்
பகவத் சம்பந்தம் பண்ண யோக்யதை உண்டாகையாலும் -இவனுக்கு அந்த யோக்யதையும்
அழிகை யாகலும் துர்கதியைக் கண்டு முற்பட அழைக்கிறார்
பிரயோஜனாந்தர பரர் -மங்களா சாசனம் பண்ண வாரும் கோள் -என்றால் வருவார்களோ வென்னில்
பகவத் ப்ராப்தியில் உத்க்ர்ஷத்தையும் -அத்தைப் பற்ற கைவல்யத்தினுடைய நிகர்ஷத்தையும்
அறிவித்தால் -விட்டுப் பற்ற வேணும் -என்னும் ஆத்ம குணோ பேதரை இ றே இவர் அழைக்கிறது -மனம் உடையீர் என்பதால் –

—————————————————————————————————
வியாக்யானம் –

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்
ஏடு– பொல்லாங்கு –சூஷ்ம சரீரம் –சரீரம் மூன்று அர்த்தங்கள்
நிலம் -சமாசனம் பிரகிருதி -இரண்டு அர்த்தங்கள் –
ஏடு எனபது பொல்லாங்கு -உங்களைப் பொல்லாங்கு நிலத்தில் இடுவதன் முன்னம் -என்று பிள்ளை அமுதனார் –
ஏடு -என்கிற சூஷ்ம சரீரத்தை –
ஸ்தூல சரீரத்தை காட்டில் பிரதானமாய் -அதனுடைய பிரயோஜனமாய் நிற்கையாலே -பாலில் ஏடு -என்னுமா போலே -சொல்லுகிறது
நிலத்தில் இடுவதன் முன்னம் –
ஸ்வ காரணமான மூல பிரக்ருதியிலே லயிப்பதற்கு முன்னே –
பலரூபமாய் –பூர்வ பூர்வ சரீரம் –கர்ம த்வாரா ஹேதுவாக உத்தர உத்தர சூஷ்ம சரீரம் –ஆத்மா கர்ம வாசனை இந்த்ரிய சூஷ்மம் கூட போகுமே –
பிரளயம் பொழுது -சூஷ்மம் போகும் –
சிருஷ்டி பொழுது ஸ்தூலம் கிட்டி -மீண்டும் சூஷ்மம் ஆத்மா கர்மா வாசனை அழியாது –
மோஷம் பொழுது தான் கர்மா வாசனை போகும் -ஆத்மா மட்டுமே இருக்கும் –
நிலத்தில் இடுவது பிரக்ருதியில் சேருவது –
இது நிர்வஹித்து போரும்படி
ஏடு -என்று உடம்புக்கு பேராய் -ஸ்தூல சூஷ்ம ரூபமான சரீரம் ஸ்வ காரணமான
மூல பிரக்ருதியிலே லயிப்பதருக்கு முன் என்னவுமாம் –
இவ்வாக்யத்தால் அவர்கள் அநர்த்தத்தை கண்டு அழைக்கிறார் என்னும் இடம் தோற்ற இருக்கிறது இ றே

வந்து
ஸ்வதந்த்ரராய் இருப்பாருக்கு தம்மளவிலே வரும் இடத்தில் உண்டான தூரத்தை சொல்லுகிறது
மனஸ் உடையீர் என்றாலும் -உயர்ந்த கதி வேண்டும் -என்ற நினைவு இருந்தாலும் -ஸ்வ தந்த்ரனாய் இருப்பவன்
ஆழ்வார் அளவும் வர வேண்டிய தூரம்
வந்து -நீண்ட தூரம் -பிரபல விரோதி கழியும் அளவும் உண்டே

எங்கள் குழாம் புகுந்து –
கேவலரும் ஒரு சமஷ்டியாய் இறே இருப்பது -அது ஸ்வதந்த்ரம் ஆகையாலே அந்யோன்யம்
சேர்த்தி அற்று இருக்கும் -ஒருத்தருடைய ச்ம்ர்த்தி ஒருத்தரதாய்  இ றே இத் திரள் இருப்பது –
பரஸ்பர நீஸ பாவை -என்னக் கடவது இ றே

இத்திரளில் புகுவாருக்கு எவ்வதிகாரம் வேணும் என்னில்
கூடும் மனம் உடையீர்கள் –
புகுருவோம் என்ற நினைவே வேண்டுவது
அவி லஷணமான புருஷார்தங்களுக்கு புரச் சரணங்கள்-உபாசன அங்கமான தீர்த்த யாத்ரைகள் போல்வன -கனக்க வேண்டி இருக்க
அதில் விலஷணமான இத் திரளிலே புகுருகைக்கு புரச் சரணம் வேண்டாது இருப்பது என்
என்னில் -அவை அப்ராப்த புருஷார்த்தங்கள் ஆகையாலே புரச் சரணங்கள் அபேஷிதங்களாய் இருக்கிறன
இது ஸ்வரூப ப்ராப்தம் ஆகையாலே வேண்டா –
மாதா பிதாக்களை அனுவர்த்திக்கைக்கு இச்சை ஒன்றே வேண்டும் –
மற்று ஒன்றும் வேண்டா மனமே
ஆசை உடையார்க்கு –வரம்பு அறுத்தார் -இச்சை ஒன்றே தேவை -பாவனை அதனில் கூடல் அவனையும் கூடலாமே –
உடையீர்கள்
இந்த இச்சையால் வந்த பிரயோஜன அதிசயத்தாலே -வைஸ்ரவணன் -என்னுமா போலே
அருளிச் செய்கிறார் –
உடையீர்கள் என்னும் மதுப்பில் பூமாவில் ஆக்கி -இதை விட பெரியது இல்லை என்றவாறு -மதுப் ப்ரத்யயம் –
கூட நினைப்பார்களுக்கு செய்ய வேண்டுவது முன்பு நின்ற சிறுமையை குலைத்து வர வேணும்

வரம்பு ஒழி வந்து
வரம்பு ஒழிய என்கிற இது வரம்பு ஒழி -என்று கிடக்கிறது-கடைக் குறைச்சல்
சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதனாய் -அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
அனுபவிக்க இட்டுப் பிறந்தவன் -ஜரா மரண மோஷாயா -என்று ஸ்வ அனுபவத்தளவிலே
ஒரு வரம்பை இட்டுக் கொண்டான் இ றே -அத்தை ஒழிந்து வாரும் கோள் -என்கிறார் –

ஒல்லைக் கூடுமினோ –
பற்றுகிற புருஷார்தத்தின் உடைய –பல்லாண்டு பாடும் சீர்மையை –வை லஷண்யத்தை அனுசந்தித்தால் பதறிக் கொண்டு
வந்து விழ வேண்டாவோ –
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -என்றது சரீரத்தில் அஸ்தைர்யத்தை பற்ற –
இங்கு ஒல்லை -என்கிறது -பற்றுகிற விஷயத்தினுடைய வை லஷண்யத்தைப் பற்ற –
கூடும் மனம் உடையீர்கள்  -என்றும் -கூடுமினோ -என்றும் -அருளிச் செய்கிறார் இ றே
யோக்யதையைப் பற்ற –
வாருங்கோள் என்னால் கூடுமின் -என்றது கூடி இருந்து பிரிந்து போனவர்களை சொல்லுமாறு அருளிச் செய்கிறார்
சேஷ பூதர்கள் தானே –
பகவத் சேஷ பூதர் -மறந்து ஞான ஆனந்த மயம் என்று உணர்ந்து தேக விலஷணம் ஆத்மா என்று உணர்ந்தவர்கள் –
அத்திரளில் நின்றும் -பிறிகதிர் பட்டார் சிலர் இவர்கள் என்றும் தோற்றும் இ றே
ஸ்வரூபம் வெளிச் செறித்தக்கால் -விளங்க நிற்றல் –

நாடு நகரமும் நன்கறிய –
இத்திரளிலே புகுருகைக்கு வேண்டுவன அருளிச் செய்தார் –
மனம் உடையீர் என்கிற இதற்கு ஸ்ரத்தையே அமையும் –
மர்ம ஸ்பர்சி -இது அன்றோ -நண்ணும் மனம் உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே
இதுக்கு மேல் மங்களா சாசனத்துக்குவேண்டுவன அருளிச் செய்கிறார் –
நாடு -என்று அவிசேஷஜ்ஞரை சொல்லுகிறது -நாட்டுப்புரன் பகவத் விஷயம் அறியாதவர் –
நகரம் -என்று விசேஷஜ்ஞரை சொல்லுகிறது –
ராஜாவுக்கு ப்ரத்யா சந்னர் இ றே நகரஸ்தர் -நாட்டார் தூரஸ்தர் இ றே -ஆகையாலே அருளிச் செய்கிறார்-

நன்கறிய –
நன்றாக அறிய –
பகவத் ப்ரத்யா சத்தியாலே அவிசேஷஜ்ஞர் விடும்படியாகவும் -அது தானே ஹேதுவாக
விசேஷஜ்ஞர் பரிக்கிரஹிக்கும் படியாகவும் –
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாக கருதுவர் -அதுவே ஹேதுவாக -ஆதலால் -ஆழ்வார் கைக்கொண்டார் -போலே
நாட்டார் கை விட நகரத்தார் கை கொண்டார்
நன்கறிய –
இந் நன்மையை அறிய என்றுமாம்

நாமோ நாராயணா என்று –
இவ்வளவும் போராது -தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தை பெற வேணும் -என்று வைஷ்ணவனாய் வர வேண்டும் என்று –
எனக்கு உரியன் என்ற நிலை விட்டு அவனுக்காக கைங்கர்யம் பிரார்த்தித்து பெற வேண்டுமே-
அஹமபிநமம -பகவத ஏவாஹமஸ்மி -என்று இ றே  நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் இருப்பது
ஸ்வாமி பக்கல் பண்ணும் அநுகூல வ்ர்த்தி இ றே புருஷார்த்தம் ஆவது –

பாடு மனமுடைப் பத்தருள்ளீர்
நினைத்து இருக்கும் அவ்வளவு போராது-அடுத்த படி ஏத்துக்கிறார்-கூடும் மனம் மட்டும் போராதே
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடுவோம் என்னும் நெஞ்சு உண்டாம் படியான பிரேமத்தை
உடையீர் ஆகில்

வந்து பல்லாண்டு கூருமினோ
வந்து திருப்பல்லாண்டு பாடும் கோள்
இத்திரளிலே புக வேணும் என்று இருப்பீர் -அத்தை செய்யும் கோள்
அவ்வளவு போராது -உங்களுடைய வ்ருத்தி விசேஷமும் பெற வேணும் என்று இருப்பீர்
திருப்பல்லாண்டு பாடும் கோள் -என்று க்ரியையை இரண்டாக்கி நிர்வஹிக்கவுமாம்–கூடுதல் பாடுதல் இரண்டு வினைச் சொல் என்றபடி –

———————————————————————————————————-

அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி அசுரர் ராக்கதரை
யிண்டைக் குலத்தை யெடுத்துக் களைந்த விருடிகேசன் தனக்குத்
தொண்டைக் குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே -5-

அண்டக் குலத்துக்கு -அண்ட சமூஹத்துக்கு-50 கோடி யோஜனை தூரம் -14 லோகங்கள் -ஒரு அண்டம் –
அதிபதி யாகி -தலைவனாய்
அசுரர் ராக்கதரை -அஸூர ராஷசர்கள் உடைய-ரஜஸ் தமஸ் குணங்கள் கொண்டவர்கள் –
யிண்டைக் குலத்தை -நெருங்கின திரளை
யெடுத்து-சேரத் திரட்டி
களைந்த -நிர்மூலமாகப் போக்கின
விருடிகேசன் தனக்கு-இந்திரியங்களை தன் வசமாக நடத்துமவனுக்கு
தொண்டைக் குலத்தில் -அடிமை செய்யும் குலத்தில்
உள்ளீர் -உளரான நீங்கள்
வந்து
அடி -சர்வேஸ்வரன் திருவடிகளை
தொழுது
ஆயிரம் நாமம் -அவன் திருநாமங்கள் எல்லாம்
சொல்லி-வாயாரச் சொல்லி
பண்டைக் குலத்தை -பகவத் விமுகராய் இருந்த பழைய ஜாதியை
தவிர்ந்து-நான் எனது என்ற நினைவோடு விட்டு
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே -அநேகம் ஆயிரம்  சம்வஸ்தரங்கள்
நித்தியமாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்

———————————————————————————————–

அவதாரிகை –

முற்பட அநந்ய பிரயோஜனரை அழைத்தார்
கேவலரும் ஐஸ்வர்யார்த்திகளும் பிரயோஜனாந்த பரராய் இருக்கச் செய்தேயும்
கேவலருடைய துர்கதியைக் கண்டு முந்துற அழைத்தார் -இப்பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளை
அழைக்கிறார்-

————————————————————————————————

வியாக்யானம் –

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி –
தேவதைகள் உடைய ஐஸ்வர்யத்துக்கு எல்லாம் மேலான அண்டாதிபத்யம் இ றே
ஐஸ்வர்யத்துக்கு மேல் எல்லை
அந்த ப்ரஹ்மா ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கும் ப்ரகாரம் சொல்லுகிறது
அண்டாதி பதயே நம -என்று இ றே இப்பத ப்ராப்திக்கு சாதன மந்த்ரம் -அந்த அண்ட
ஐஸ்வர்ய விசிஷ்டனாய் இ றே சர்வேஸ்வரனை அனுசந்திப்பது -வ்யாஹ்ர நமநுஸ்மரன் –
என்கிறபடியே இம் மந்த்ரத்தை சொல்லவும் -நெஞ்சாலே ஐஸ்வர்ய விசிஷ்டனாக
அனுசந்திகவும் மாய் இ றே ஆஸ்ரயண பிரகாரம் இருப்பது
அறவனை ஆழிப்படை அந்தணனை என்று ஸுத்தி குண யோகத்தை சொல்லுவாரைப் போலே

அண்டக் குலத்துக்கு அதிபதியான ஆகாரமே யன்றோ இச் சப்தத்தில் உள்ளது -ஆஸ்ரயண பிரகாரம் தோற்ற இருந்தது
இல்லையே என்னில் -உதாரனாய் இருப்பான் ஒருவன் கையிலே எலுமிச்சம் பழம்
இருந்தால் -இது இருந்த அழகு என் -என்று சொன்ன அளவிலே –
பாவஜ்ஞ்ஞனாய் இருக்குமவன் -கொள்ளலாகாதோ -என்று கருத்து அறிந்து கொடுக்கும் இ றே -அப்படியே
அண்டாதிபத்யத்தில் அபேஷை உண்டு என்று தங்கள் அபேஷையை ஆவிஷ்கரிக்கிறார்கள் –
வாசகம் இல்லாவிடிலும் சூ சகம் உண்டே –
இத்தால் பிரயோஜனாந்த பரரைக் குறித்து -உதாரா -என்னுமவனுடைய ஔதார்யம் பிரகாசிக்கிறது-
சதுர்வித மக்களையும் –உதாரா என்கிறான் ஸ்ரீ கீதையில் –

அண்டக் குலத்துக்கு –
அண்டா நாந்து சஹாஸ்ராணாம் -என்று தொடங்கி -கோடி கோடி சதா நிஸ -என்று
அசங்க்யாதமான அண்டங்களுக்கு நிர்வாஹன் ஆகையாலே அபேஷிக்தார் அபேஷித்த
அண்டங்களை கொடுக்கைக்கு உடைமையை சொல்லுகிறது
அதிபதியாகி –
உபய விபூதிக்கும் நிர்வாஹன் ஆகை
ஆகி –
ஆஸ்ரிதர் தன்னை அனுசந்தத்தித்த அளவிலே யாயிருக்கை –
ஐஸ்வர்யார்த்தி ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்தித்தால் அவ்வளவாய்–அவ்வளவே யாய் – இருக்கும்
கைவல்யார்த்தி அஸ்ப்ர்ஷ்ட சம்சார கந்தனாக அனுசந்தித்தால் அவ்வளவாய் இருக்கும்

அசுரர் இராக்கதரை
இப்பதத்துக்கு அசுரர்களாலே வேத அபஹார ஆபத்துக்களில் களை யறுத்துக் கொடுக்கையும்
ரஷகனுக்கு பரம் இ றே -ஆர்த்தன் -என்றும் அர்த்தார்த்தி -என்றும் -ஐஸ்வர்ய புருஷார்த்தம்
இரண்டு முகமாய் இ றே இருப்பது -அதில் அர்த்தார்தியை கீழே சொல்லி -இவ் வம்சத்தினாலே
ஆர்த்தனை -இழந்த ஐஸ்வர்யகாமர் -சொல்லுகிறது -ஜன்ம ப்ரப்ர்த்தி பரா நர்த்தமே பண்ணிப் போருவது இரண்டு வர்க்கம் இ றே –
சம்பந்தம் ஒத்து இருக்க நிரசநத்திலே இழிகிறது ஆஸ்ரித விரோதிகள் என்று இ றே

இன்டைக் குலத்தை
மிகவும் நெருங்கின திரளை -இண்டர் -என்று சண்டாளர் –
இவர்களை சண்டாளர் என்று சொல்லுகிறது -நிஹீனர் என்னும் நினைவாலே
உத்க்ர்ஷத்துக்கு எல்லை -பர ச்ம்ர்த்தி ஏக பிரயோஜனாய் இருக்கை
நிகர்ஷத்துக்கு எல்லை -பர அனர்த்தமே யாத்ரையாய் இருக்கை
இவ் வாபத்துக்களிலே அஸூர சத்ரவே நம -என்று இ றே இவர்களுடைய
ஆசஸ்ரயண பிரகாரம் இருப்பது

எடுத்துக் களைந்த
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -என்னுமா போலே ஆஸ்ரிதர் பக்கல் அழல்
தட்டாதபடி நிரசிக்கை -களைந்த என்றால் போதாதோ எடுத்துக் களைந்த என்றது பொல்லா அரக்கன் போலே –
இலங்கை பாழாளாக -என்றதும் -விபீஷண பரிக்ரஹத்துக்கு ஒரு நோவு வராதபடி இ றே
விபீஷண க்ரஹத்துக்கு அழல் தட்டாதபடி இ றே லங்கா தஹனம் பண்ணிற்று திருவடியும்

இருடிகேசன் –
பிரயோஜனாந்த பரருக்கு ஐஸ்வர்யாதிகளில் கர்ம அனுகூலமாக ருசியைப் பிறப்பிக்கும் –
தன் பக்கலிலே ந்யச்த பரராய் இருப்பவருக்கு ஸ்வரூப அநுரூபமாக ருசியைப் பிறப்பிக்கும் –
ஐஸ்வர்யார்த்தமாக அவன் பக்கலிலே கண் வைக்கும் போதே அவன் வடிவு அழகிலே உறைக்க வையும் கோள்
அவன் -மமேதம் -என்கிற அபிசந்தியைக் குலைத்து தன் பக்கலிலே ருசியைப் பிறப்பிக்கும்
அத்தாலே அபேஷித்த ஐஸ்வர்யத்தை விஸ்மரித்து அவன் தன்னையே பற்றலாம்-எங்கள் மேல் சாபம் இழிந்து -என்போம் –
ஆதாரம் பெருக வைக்கும் அழகன் அன்றோ –

தனக்குத் தொண்டைக் குலத்தில் உள்ளீர் –
தனக்கு -என்று இவ்வளவு நாளும் தனக்கு என்று இருந்தவன் இப்பொழுது இருடீகேசன் தனக்கு என்று ஆனான் –
இப்படி ஐஸ்வர்யத்தில் ப்ரேமம் போய் பகவத் பிரேம யுக்தர் உடைய திரளிலே உளரான நீங்கள்
தொண்டக்குலம் என்று தனியே ஒரு சந்தானம் போலே காணும்
தேஹமே ஸ்வரூபம் என்று இருப்பாருக்கும் -சேஷத்வமே ஸ்வரூபம் -என்று இருப்பாருக்கும்
இத்தனை வாசி உண்டு இ றே –

இனி அநந்ய ப்ரயோஜனராய் இருப்பாருக்கு க்ர்த்த்யம் இன்னது என்கிறார் மேல்
வந்தடி தொழுது –
திருவடிகளே பிரயோஜனமாக வந்து -அநுகூல வ்ர்த்திகளைப் பண்ணி -ஐஸ்வர்யமே பிரயோஜனமாய்
விஷய அனுபவமே யாத்ரையாய் இருக்கும்படி பாரும் கோள்
ஆயிர நாமம் சொல்லி –
இரண்டு திருநாமத்தையே நிர்பந்திக்க வேண்டுவது -மமேதம் -என்று இருக்கும் அன்று இ றே-அண்டாதிபதையே நம அசுர சத்வே நம –
ததேவம் -என்கிற புத்தி பிறந்தால் பகவத் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திருநாமங்கள்
எல்லாம் போக்யமாய் இ றே இருப்பது -அவற்றை வாயாராச் சொல்லி –

பண்டைக் குலத்தை தவிர்ந்து
தொண்டைக் குலத்தை வந்து அன்வயித்தவாறே -மமேதம் -என்று இருந்த காலம் ஜன்மாந்தரமாய்
தோற்றும் இ றே -ஒரு ஜன்மத்தில் த்விஜன்மன் ஆகிறான் இ றே ராஜர்ஷியான விஸ்வாமித்திரன் அந்த ஜன்மத்திலே ப்ரஹ்மர்ஷியானான் இ றே
அங்கு தபஸாலே வர்ண பேதம் பிறந்தது–இங்கு பகவத் ப்ரசாதத்தாலே ஸ்வரூப பேதம் பிறந்தது
உனக்கு நான் -என்ற அநந்தரம் -நான் எனக்கு -என்ற விது வ்யதிரேகமாய் தோன்றும் இ றே

பல்லாண்டு –
இப்படி அநந்ய  பிரயோஜனரான நீங்கள் மங்களா சாசனம் பண்ணும் கோள்
பிரயோஜனாந்த பரனாய் போந்தவன் நமக்கு சம்ருத்தியை ஆஸாசிக்கும் இத்தனை பரிவனாகப் பெற்றோமே
என்று அவன் குளிர நோக்கும் -கடாஷத்தால் பண்டைக் குலம் தவிர்ந்து தொண்டைக் குலம் ஆக்குவான்

பல்லாயிரத்தாண்டு என்மினே
பின்னை பல்லாயிரத்தாண்டு என்னும் கோள் –
அந்நோக்கு அழகு நித்திய ஸ்ரீ யாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்
உங்களுக்கு இம் மாத்ரத்தாலே –உக்தி மாத்ரத்தாலே —ஸ்வரூபமும் -அத்தாலே ஈஸ்வரனுக்கு ச்ம்ர்த்தியும்
உண்டாகப் பெற்றால் ஆறி இருக்கிறது என் -சடக்கென மங்களா சாசனம் பண்ணும் கோள் என்கிறார் –

————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: