பகவத் விஷயம் காலஷேபம் -5-திருப்பல்லாண்டு —-பல்லாண்டு பல்லாண்டு/-அடியோமோடும் நின்னோடும்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் – -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பல கோடி நூறு ஆயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா!  உன் சேவடி செவ்வி திரு காப்பு –

மல் -ஒருவராலும் அடங்காத சாணூர முஷ்டிகர் என்கிற மல்ல வர்க்கத்தை
ஆண்ட -நிரசித்த
திண் -திண்ணிய
தோள் -திருத் தோள்களை உடையனாய்
மணி -நீல ரத்னம் போன்ற
வண்ணா -வடிவு அழகை உடையவனே-ஸ்வபாவம் -வர்ணம் -இரண்டையும் குறிக்கும் –
பல்லாண்டு பல்லாண்டு –மனுஷ்ய தேவ -பல வர்ஷங்களிலும்
பல்லாயிரத் தண்டு -அநேக பிரம கல்பங்களிலும்
பல் கோடி நூறாயிரம் -இப்படி உண்டான காலம் எல்லாம்-காலதத்வம் உள்ளவரை என்றபடி –
உன் -உன்னுடைய
செவ் -சிவந்த
வடி -திருவடிகளின்
செவ்வி -அழகுக்கு
திருக்காப்பு -குறைவற்ற ரஷை உண்டாக வேண்டும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்-

பர்வத பரம அணு வாசிகள் -இளைய பெருமாள் -ஸ்ரீ பரத ஆழ்வான் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வான் போலே
ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள்

அவதாரிகை
சௌந்த்ர்யாதி கல்யாண குணோபேதமான விக்ரஹத்தோடே வகுத்த சேஷி யானவனை
கால அதீநமான தேசத்திலே காண்கையாலே -இத்தால் இவனுக்கு என்ன தீங்கு வருகிறதோ
என்று அதி சங்கை பண்ணி
அநாதிர் பகவான் காலோ ந அந்தோஸ் யத்விஜ வித்யதே –ஸ்ரீ விஷ்ணு புராணம்-என்கிறபடியே
கால தத்வம் உள்ளதனையும் இச் செவ்வி மாறாதே நித்யமாய்ச் செல்ல வேணும்
என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் –

வியாக்யானம்
பல்லாண்டு –
அல்லாத அவச்சேதகங்களை ஒழிய -ஆயுஸ் ஸு க்கு பர்யாயமான ஆண்டைக் கொண்டு
காலத்தை பெருக்குகிறார் -ஆயுஸை பிரார்திக்கிறவர் ஆகையாலே -யாமோஷதி மிசாயுஷ்மன் –
என்று ஆயுஸை பிரார்த்தித்தார் இ றே பெரிய வுடையார்
வேத நூற் ப்ராயம் நூறு -என்று ஆயுஸ் பர்யாயமாக சொல்லிற்று இ றே வத்ஸரத்தை
இந்த பஹூ வசனத்துக்கு அசங்க்யாதத்வமே -எண்ணில் அடங்காத -முக்யார்த்தம் ஆகையாலே அசங்க்யாதமான
வர்ஷங்கள் இவ்வழகோடே நித்தியமாய் செல்ல வேணும் என்கிறார் –
பல்லாண்டு -என்கிற சப்தம் ஸ்வரூப வாசியுமாய் இருக்கிறது -சேஷ பூதன் -சேஷத்வம் பிரகாசிக்குமே –
உத்க்ருஷ்டனாய் இருப்பான் ஒருவனை அபக்ருஷ்டனாய் இருப்பான் ஒருவன் கண்டால்
அவனுடைய உத்கர்ஷ அநுரூபமாய் சொல்லும் பாசுரம் ஆகையாலே
சர்வேஸ்வரனுடைய உத்கர்ஷத்துக்கு அவதி இல்லாமையாலும்
அவனைக் குறித்து தம்முடைய நிகர்ஷத்துக்கு அவதி இல்லாமையாலும் –
இந்த உத்கர்ஷ அபகர்ஷ ரூப வைஷம்யம் ஸ்வரூப ப்ரயுக்தம் ஆகையாலே-அவன் மேன்மையும் தாழ்ச்சியும் -எல்லை இல்லாமையாலும் –
பல்லாண்டு என்கிற சப்தம் ஸ்வரூப வாசி யாகிறது -மேல் பண்ணுகிற மங்களா சாசனம்
ஸ்வரூப ப்ரயுக்தம் என்கைக்காக சொல்லிற்று –
ஜிதம் -என்றும் -நம -என்றும் -தோற்றோம் -என்றும் -போற்றி என்றும் -பல்லாண்டு -என்றும் –
இவை பர்யாயம்
இச் சப்தங்களுக்கு அர்த்த பேதம் இல்லையோ என்னில் -ப்ரவர்த்தி நிமித்த பேதத்தால் வரும்
விசேஷம் உண்டானாலும் -விழுக்காட்டில் ஆத்ம ஸ்பர்சியாய் தலைகட்டுகையாலே
பர்யாயம் ஆகிறது -ஆந்தர அர்த்தம் -உள்ளுறைப் பொருள் –
ஜிதம் -என்று அவனாலே  தன் அபிமானம் போனபடியை இசைந்து அத்தலையில்  வெற்றிக்கு மேல்
எழுத்து இடுபவன் வ்யவஹாரம் –ஜிதந்தே புண்டரீகாஷம் -நான் அடிமை புரிந்து ஜெயிக்கப்பட்டேன் –
இத்தால் ஸ்வரூப பிரகாசதத்தால் அல்லாது அபிமானம்
போகாமையாலே இச் சப்தமும் விழுக்காட்டால் ஸ்வரூப வாசி யாகிறது
நம -என்று எனக்கு உரியன் அல்லேன் என்கிறபடி -இது நிவர்த்த ஸ்வ தந்த்ரனுடைய வியவஹாரம்
இதுவும் ஸ்வரூப பிரகாசத்தால் அல்லது கூடாமையாலே ஸ்வரூப ஸ்பர்சியாகிறது
தொலை வில்லி மங்கலம் தொழும் -ஸ்வரூபம் சொல்லிற்று -நம -ஸ்வரூப வாசகம்
தோற்றோம் -என்கிறது அத தலையில் வெற்றியே தனக்கு பிரயோஜனம் என்று இருக்குமவனுடைய வ்யவஹாரம்
அதுவும் அஹங்கார நிவ்ருத்தியிலே அல்லது சம்பவியாமையாலே ஸ்வரூபஸ்பர்சி  யாகிறது
தோற்றோம் மட நெஞ்சம் -இருளுக்கு தான் யார் என்கிறார் ஆழ்வார் -இங்கும் ஸ்வரூபம் சொன்னார்
போற்றி -என்று தன்னை பேணாதே அத தலையில் சம்ர்த்தியே பேணுமவன்  வ்யவஹாரம்
போற்றி -கைகளால் ஆரத் தொழுது -சொல் மாலைகள் சொன்னேன் -இது ஸ்வரூப அனுரூபம் இ றே
பல்லாண்டு -என்று தன்னைப் பாராதே அத தலையில் ச்ம்ரத்தியே நித்யமாக செல்ல வேணும்
என்று இருக்குமவன் வ்யவஹாரம்
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலன் ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி பாரதந்த்ர்ய பலன் –
ஆக இச் சப்தங்கள் ஸ்வரூபத்தையும் -ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியையும்
பிரகாசிப்பிக்கையாலே ஸ்வரூப அனுபந்தி யாகிறது

பல்லாண்டு –
மறித்து -பல்லாண்டு என்கிறது என் என்னில் -அகவாய்  அறியாதவனுக்கு தெரியாமையாலே
பல கால் சொல்ல வேண்டி இருக்கும் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் -எதிர் சூழல் புக்கு திரிகிறவனுக்கு
இரு கால் சொல்ல வேண்டா -இப் புநர் உக்திக்கு பொருள் என் என்னில் -அவனுடைய
சர்வஞ்ஞத்வத்தில் குறையால் அல்ல -ஒரு கால் சொன்னோம் -என்று ஆறி இருக்க மாட்டாத
தம்முடைய ஆதார அதிசயத்தாலும் -பலகால் சொல்லும் அத்தாலும் பர்யாப்தி பிறவாத
விஷய வைலஷண்யத்தாலும் அருளிச் செய்கிறார்
த்ர்ஷார்த்தனானவன் தண்ணீர் பெருமளவும் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே தம்முடைய
பயம் ஷமிக்கும் அளவும் பல்லாண்டு பல்லாண்டு -என்ன ப்ராப்தம் இ றே

பல்லாயிரத்தாண்டு
கீழில் பஹூ வசனத்தாலே வர்ஷங்களினுடைய அசங்க்யாத்வம் சொல்லி இருக்க இதுக்கு உதயம் இல்லையே என்னில் –
அவச் சேதகங்களுக்கு சங்க்யை இல்லாமையாலே காலாவச் சேதத்துக்கு தொகை இல்லை
ஆகையாலே அருளிச் செய்கிறார் -அவச் சேதகங்கள் ஆவன -சூர்யா பரிஸ் பந்தாதிகள்
அவச் சேத்யங்கள் ஆவன -ஷண  லவாதிகள் -வர்ஷத்துக்கு அவச் சேதகர் -தேவர்கள்
அத்தைப் பற்றிச் சொன்னார் கீழ்
தேவ ஆண்டு -360 மனுஷ்ய ஆண்டு –4320000-மனுஷ்ய வருஷம் -12000 தேவ வருஷம் சதுர் யுகம் -ஒரு பகல் பிரம்மாவுக்கு –
-பல வர்ஷத்துக்கு அவச்சேதகன் -ப்ரஹ்மா -அத்தை பற்ற
அருளிச் செய்கிறார் பல்லாயிரத்தாண்டு என்று-
யஸ் சர்வஞ சர்வவித் -அனைத்தையும் அறிந்தவர் -சர்வ விசேஷ ஞான சர்வ பிரகார ஞான ரூபமான -போலே
-பொன் மணி முத்து மாணிக்கம் -விசேஷணங்கள் -கடிகாரத் தன்மை -விசேஷ்யங்கள்

பல கோடி நூறாயிரம் என்று -ப்ரஹ்மாக்களுக்கு தொகை இல்லாமையாலே அருளிச் செய்கிறார் –
கால க்ர்த பரிணாமம் இல்லாத தேசத்தில் உள்ளாருக்கும் ஸ்வ சத்தை உள்ளளவும்
விஷய வைஷண்யத்தை பற்ற -அதி சங்கையும் மங்களா சாசனமும் நித்யமாக செல்லா நின்றது –
காலம் எல்லாம் -எப்போதும் -நித்ய ஸூ ரிகள் சொல்வது இல்லையே -லீலா விபூதியில் தான் ஆண்டு பஷம்-கால வித்யாசம் உள்ள இடம் என்று காட்ட –
அங்கே உள்ளாரே அதிசங்கை பண்ண நான் பண்ண வேண்டாமோ -பெருமாள் வைபவம் இங்கும் அங்கும் ஒன்றே -ஆங்கு ஆராவாரம் அது கேட்டு அழல் உமிழும்
அவன் பெருமையை பார்த்து பல்லாண்டு பாடுவதில் வாசி இல்லையே –
கால க்ர்த பரிணாமம் உள்ள தேசத்தில் இருக்கிறவருக்கு அதி சங்கையும் -அத்தாலே வந்த பயமும்
பய நிவர்த்திக்காக காலத்தை பெருக்கி இக்காலம் உள்ளதனையும் இப்படி மங்களா சாசனம்
பண்ணச் சொல்ல வேணுமோ –
இப்படி மாறி மாறி பயத்தை விளைத்து -காலத்தை பெருக்கி -இதுவே தமக்கு யாத்ரையாக
செல்லப் புக்கவாறே -அவன் -இவருடைய பயத்தை பரிஹரிக்க வேணும் -என்று பார்த்து –

புலி கிடந்த தூற்றுக்கு அஞ்சிக் காவல் தேடுவாரைப் போலே நீர் நமக்கு அஞ்சக் கடவீரோ –
மல்ல வர்க்கத்தை நிரசித்த தோள் இருக்கிறபடி பாரீர் -என்று தோள் வலியைக் காட்டினான்
மகாத்மாக்கள் பயம் கெட்டு இருக்க சௌர்யாதிகள் -திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறில் –காட்டி அருளுகிறான் –
ராவணா நுஜனைக் குறித்து மஹாராஜருக்கு பிறந்த பயத்தை போக்குகைகாக தன் மிடுக்கைக் காட்ட
அவர் பயம் சமிக்கக் காண்கையாலே -இவ் விஷயத்திலும் பலிக்கும் -என்று மிடுக்கைக் காட்ட
இவர்க்கு இது தானே பய ஹேது வாய்த்து -மஹாராஜர் பயத்தை தீர்த்த படி என் என்னில் –
பிசாஸான் தாநவான் யஷான் -கள்ளர் பள்ளிகள் வலையர் -என்னுமா போலே
ஹிம்சிகருடைய அவாந்தாபிதை இருக்கிறபடி -ப்ருதிவ் யாஞ சைவ ராஷசான் -இலங்கையில்
உள்ள ராஷசர் அளவு அன்றிக்கே பஞ்சாசத்கோடி விச்தீர்னையான பூமியில் உள்ள
ராஷசர் எல்லாம் எதிரிகள் ஆனாலும் -அங்குல்ய கரேண தாந ஹன்யாம் -ஆக
சத்ரு வர்க்கங்கள் எல்லாம் ஒரு கலத்திலே உண்டு எதிரிட்டாலும் இவற்றின் உடைய
நிரசனத்துக்கு அஸ்த்ர சஸ்த்ரங்கள் வேணுமோ -ஷூத்ர கிருமிகளை நிரசிக்குமோ பாதி
அங்குல்யக்ரத்தாலே நிரசிக்க வல்லோம் காணும் என்கிறார்-கிள்ளிக் களைந்தானே-
ஆனால் நம்மை நலிந்த பிரதிபஷம் நசியாதே கிடக்கிறது என் என்னில் -அழிப்போம் -என்னும்
இச்சை இல்லாமை -இச்சை உண்டானால் அழிக்கையில் அருமை இல்லை -அது தனக்கு அடி என் என்னில்
உயிரோடே தலை சாய்க்குமாகில் அழிக்கிறது என் -என்னும் இரக்கத்தாலே -கரி கணேஸ்வர -இச்சித்து வாலியை அளித்த இடம் உண்டே என்கிறார் –
இவ்வார்த்தை ராம பாக்யத்தாலே -விபீஷண ரஷண ஹேது என்பதால் ராம பாக்கியம் என்கிறார் -மஹாராஜர் நெஞ்சிலே பட்டு பய நிவ்ருத்திக்கு உடலாய்த்து –
இவர்க்கு இது தானே பய ஹேதுவாய்த்தது

மல்லாண்ட திண் தோள் –
மல்ல வர்க்கத்தை ஸ்வாதீனமாக பண்ணின திண்ணிய தோள் -பிற்பாடரான
கம்சாதிகளை அனாயாசேன கொல்லுகையாலே திண்ணிய தோள் என்கிறது –
மல் -என்று மிடுக்காய் -அத்தை அடிமை கொண்ட திண்ணிய தோள் என்கிறது ஆகவுமாம்
இம்மிடுக்கு இவர்க்கு பய ஹேது வாவான் என் என்னில் –
சூரனான புத்ரனைக் கண்டால் பெற்ற தாய் -இவன் மதியாதே யுத்தத்தில் புகும் –
என் வருகிறதோ என்று பயப்படுமா போலே பயப்படுவது யுக்தம்
மல்லரை அழியச் செய்த தோள் -என்று இவர் அறிந்தபடி என் என்னில் -காதில் தோடு வாங்கினாலும் –
தோடிட்ட காது -என்று அறியுமா போலே
ஒ மண் அளந்த தாளாளா–வரை எடுத்த தோளாளா–திருவடி திருத் தோள்களைக் கட்டு என்கிறார் அங்கே -பார்த்தாலே தெரியுமே

மணி வண்ணா
நீல மணி போலே இருக்கிற திரு நிறத்தை உடையவனே
அதி ரமணீயமாய் -அத்யுஜ்வலமாய் -அதி ஸூகுமாரமாய் -அதி ஸூலபமாய்
இருந்துள்ள வடிவைக் கொண்டு முரட்டு அசுரர்கள் உடைய சகாசத்திலே செல்லுவதே –
க்வ யௌவ நோன் முகீ பூத ஸூகுமார தநுர் ஹரி
க்வ வஜ்ர கடி நா போக சரீரோ யம்ம ஹாஸூர -என்று -வெண்ணெய் அமுது செய்து வளர்த்த
சிறு பிள்ளையை முரட்டு வடிவை உடைய மல்லரோடே ஒக்கப் போர விடுவதே –
ந ஸமம் யுத்தம் இத்யாஹூ -என்று கூப்பிட்டார்கள் இ றே ஸ்ரீ மதுரையில் பெண்கள்
சௌகுமார்யம் பய ஹேதுவாகிறது -சௌலப்யம் பய ஹேதுவோ -என்னில் –
அஸூர நிரசன அர்த்தமாக தேவதைகள் சரணாகதி பண்ணின மாதரத்தில்
ஸூலபனாய் அஸுரர்கள் அஸ்யத்திலே புகும் -என்று அத்தாலே பயப்படுகிறார்
ஆஸ்ரிதருக்கு தஞ்சமான சௌலப்யத்தையும் மிடுக்கையும் கண்டால் நீர் இங்கனே  அஞ்சக்
கடவரோ என்ன –

உன் செவ்வடி –
அது என்னால் வருகிறது அன்று -உன் வடிவின் வை லஷ்ண்யத்தாலே வருகிறது
நீ தான் உன்னைக் கண்ணாடிப் புறத்திலே கண்டால் ஸ்வதஸ் சர்வஞ்ஞானான நீயும்
கலங்கிப் பரிய வேண்டும்படி யன்றோ உன் வடிவு இருப்பது
செவ்வடி
செவ்விய அடி என்னுதல்-நேர்மை மிக்க அடி –
சிவந்த அடி என்னுதல்
குடில ஹ்ருதர்யர்க்கும் செவ்விதாகையும் -திருமேனிக்கு பரபாகமாகையும் இரண்டும்
இவர்க்கு பய ஸ்தானம் ஆகிறது இ றே -சேஷ பூதன் சேஷி வடிவைக் கண்டால்
திருவடிகள் -என்று இ றே வ்யவஹரிப்பது-திருவடி தன் நாமம்-
ஆஸ்ரயண வேளையோடு-போக வேளையோடு -மங்களா சாசன வேளையோடு –
வாசி யற ஆஸ்ரியர் இழியும் துறை திருவடிகள் இ றே

செவ்வி
அரும்பினை அலரை -என்னுமா போலே நித்ய யௌவனமாய்-புதுமை மாறாமல் – இருக்கை

திருக்காப்பு
குறைவற்ற ரஷை
உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும்
பண்ணின ரஷை என்கை
ஒரு கிரியை இன்றிக்கே குறைந்து இருப்பான் என் என்னில் –
தாழ்ந்தாரைக் குறித்து ரஷை உண்டாயிடுக என்றும்
சமரைக் குறித்தும் பரிச் சின்னமான உத்கர்ஷம் உடையாரைக் குறித்தும்
ரஷை உண்டாக வேணும் என்று சொல்லக் கடவது
தமக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டான நிரவதிகமான உத்க்ர்ஷ அபக்ர்ஷத்தாலே
பாசுரம் இல்லாமையாலே குறைந்து கிடக்கிறது –
வேதாந்தத்தாலே நாட்டை அடைய வென்று இருக்கிற இவர் லஷணத்தில் விழ
கவி பாட மாட்டாமை யன்று இ றே
இன்னமும் இவ் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணினோம் என்று கை வாங்க ஒண்ணாத
அபர்யாப்திக்கு ஸூசகமாய் இருக்கிறது
ஸ்ரீமதே நாராயண நம அஸ்தி சொல்லாமல் போல் இங்கும்
எல்லாப் பாட்டுக்கும் இது தான் முக உரை போல் இருக்கிறது
வேத ஆதி அந்தந்களில் பிரணவம் போலே முக உரை முடி உரை இதுவே
முக வரை பாட -நாயகக் கல் போல் -மேல் உள்ள பாசுரங்களில் உள்ள வினைச் சொல்லை அன்வயத்து கொள்ளலாம் என்றுமாம் –

மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம் -உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று அந்வயம்

தொலை வில்லி மங்கலம் தொழும் -தோற்றோம் மட நெஞ்சமே -போற்றி என்றே
கைகள் ஆரத் தொழுது சொன் மாலைகள் -இத்யாதியால் ஸ்வரூபம் சொல்லிற்று
அந்தி தொழும் சொல் -என்று பலம் சொல்லிற்று –
அடிக்கீழ் -பாத பற்பு தலை சேர்த்து -அடி போற்றி -அடி விடாத சம்ப்ரதாயம்
ஸ்ரீ
ஸ்ரீ ராமானுஜாய நம
போன்று மங்களாரத்தமாக அருளிய பாசுரம் -கிரியை இன்றி –
பாட்டுக்கள் எல்லாவற்றுக்கும் பிரகாசமாய் நாயக பாசுரம் போலே இது என்னவுமாம்-

——————————————————————————————–

அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் உன் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு –2–

அடியோமோடும்-சேஷ பூதரான எங்களோடும்
நின்னோடும் -சேஷியான உன்னோடும்
பிரிவு இன்றி -பிரிவு இல்லாமல்
ஆயிரம் பல்லாண்டு-இந்த சம்பந்தம் நித்யமாக செல்ல வேணும்
வடிவாய் -அழகே உருவாய் -ஆபரண பூஷிதையாய்
நின்-சர்வ சேஷியான உன்னுடைய
வல மார்பினில் – வல திரு மார்பிலே
வாழும் -பொருந்தி வர்த்திக்கிற-உறைகின்ற இல்லை -இருக்கும் முறை படி மகிழ்ந்து வாழும்
மங்கையும் -நித்ய யௌவன ஸ்வபாவையான பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களும்-
குண பூர்த்தி –உம்மைத்தொகையால் -பூமி நீளா தேவிகளும் -சாயா இவ -இவர்கள் -எடுத்துக் கை நீட்டுபவர்கள் –
பல்லாண்டு-நித்யமாக செல்ல வேணும்
வடிவார்-வடிவை உடையவனாய்
சோதி -தேஜோ ராசியாய் இருக்கிற
வலத்து -உனது வலத் திருக்கையிலே
உறையும் -நித்ய வாஸம் பண்ணுபவனாய்
ஆழியும் -திரு வாழி ஆழ்வானும்–உம்மைத் தொகை -திவ்யாயுதம் திவ்யாபரணம் -இரண்டு ஆகாரம் உண்டே
பல்லாண்டு-நித்தியமாய் செல்ல வேணும்-
கருதும் இடம் பொருது -பிரியமே -எனவே பிரியாமல் இல்ல திருச் சங்கு ஆழ்வானைக் காட்ட -சங்கரய்யா உன் செல்வம் சால அழகியதே
படை -ஆயுதமாய்
போர் -யுத்தத்திலே
புக்கு -புகுந்து
முழங்கும் -கோஷியா நின்றுள்ள
அப் பாஞ்ச சந்யமும் -அந்த பாஞ்ச ஜன்ய ஆழ்வானும்
பல்லாண்டு –நித்தியமாய் செல்ல வேணும்
என்கிறார்-
சங்க தொனி இங்கே உள்ளான் என்று காட்டிக் கொடுக்குமே -அது கண்டு அதிசங்கை பண்ணி அஸ்தானே பய சங்கை பண்ணுகிறார் –

————————————————————————————————————–

அவதாரிகை-

கீழ் விக்ரஹ யோகத்தையும் குண யோகத்தையும் குறித்து மங்களா சாசனம் பண்ணினார்
இதில் உபய விபூதி யோகத்தை குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார்-

கீழ்-7-1—6-10-7-2- நேராக தொடர்பு
4-10-5-2- சங்கதி -5-1- கையார் சக்கரம் -அசங்கரேவ சங்கதி -மகா உபாகாரம் சொல்லிக் கொள்கிறார் -விதி வாய்க்கிறது காப்பார் யார் -5-1-

———————————————————–
வியாக்யானம்
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு

அடியோமோடும்
தம்மைப் பேணாதே மங்களா சாசனம் பண்ணுகிற இவர் தம்முடைய நித்யததையை பிரார்த்திப்பான்
என் என்னில் -ஒரு சாத்தியத்தைக் குறித்து சாதன அனுஷ்டானம் பண்ணுமவர்கள்
ஆயுராசாச்தே -என்று ஆயுஸை தத் அங்கமாக ப்ரார்த்தியா நின்றார்கள் இ றே -அவாந்தர பலன் –
அது போலே மங்களா சாசனத்துக்கு தாம் வேணும் -என்று தம்மையும் கூட்டிக் கொள்கிறார்
அத்தலைக்கு பரிகைக்கு  தாம் அல்லது இல்லாமையாலே -தாம் இல்லாத போது
அத்தலைக்கு அபாயம் சித்தம் என்று இருக்கிறார் இ றே
ஆனால் என்னோடும் என்னாதே
அடியோமோடும் -என்பான் என் என்னில் –
தேக ஆத்மா அபிமானி -தேகத்திலே ஆத்ம புத்தி பண்ணும் –
மாயாவாதி அஹங்காரத்தில் ஆத்மபுத்தி பண்ணும் அந்தக் கரணத்தில் ஆத்மபுத்தி பண்ணும்
சாங்க்யன் -அஹமர்த்தம் ப்ரக்ருதேஸ் பரம் ஸ்வயம் ப்ரகாசம் ஸ்வ தந்த்ரம் -என்று இருக்கும்
கபிலர் -பிரகிருதி புருஷ விவேக ஞானம் ஏற்பட்டால் மோஷம் என்பர் -நிரீஸ்வர வாதம்
அங்கன் கலங்கினவர் அன்று இறே  இவர்
முறை அறியுமவர் ஆகையாலே -அடியோம் -என்றார்
கர்மோபாதிகமாக வந்த வவஸ்தைகள்  எல்லாம் மறைந்தாலும் மறையாத ஸ்வாபம் தாஸ்யம்
என்று இருக்குமவர் இ றே இவர் -கர்மம் காரணமாக ஒட்டி இருப்பவை சரீரம் சம்சாரம் அஹங்காரம் மமகாரம் –
-தாஸ்யம் இயற்க்கை -தொலையாதது

ஆனால் அடியோமோடும் -என்கிற பஹூ வசனத்துக்கு கருத்து என் என்னில் –
தான் தனியராய் நின்று மங்களா சாசனம் பண்ணுமத்தால் பர்யாப்தி பிறவாமையாலும்
அனைத்து ஆத்மாக்களுக்கும் சேஷத்வம் அவிசிஷ்டம் ஆகையாலும்
இப்பிரபத்தி அவர்களுக்கு இன்றிக்கே இருக்கச் செய்தேயும் ஸ்வ அபிப்ராயத்தாலே
அருளிச் செய்கிறார்

நின்னோடும்
வ்யாவ்ர்த்தமான சேஷித்வம் மங்களாவஹம் ஆகையாலே -சர்வரும் கூடிப் பரிந்தாலும்
போராத படியாய் இ றே இருபது
இத்தால் திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி மங்களா சாசனம் பண்ணுகிறார்-சேஷத்வ பிரதிசம்பந்தி -சேஷித்வம் –
சேவடிக்கு செவ்வி திருக்காப்பு -திருமேனிக்கு -ரூபத்துக்கு பல்லாண்டு
இங்கே திருவடி பிரஸ்தாபம் இல்லை திவ்ய ஆத்மா ஸ்வரூபத்துக்கு பல்லாண்டு –

பிரிவு இன்றி
இரண்டு தலையும் நித்யமானவோபாதி -சம்பந்தமும் நித்தியமாய் இ றே இருப்பது
அதுவும் தம்முடைய மங்களா சாசனத்தாலே உண்டாவதாக நினைத்து இருக்கிறார்
சாஸ்திர சித்தம் இருந்தாலும் தம்மால் என்று -திருப்பாலாண்டு பலத்தால் என்று நினைத்து இருக்கிறார்

ஆயிரம் பல்லாண்டு
கால தத்வம் உள்ள தனையும் இஸ் சம்பந்தம் நித்யமாய்ச் செல்ல வேணும் என்கிறார்
ஆக்கையுள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் -பிரியாமல் இருப்பவன்
-அஸ்தானே பய சங்கை பண்ணி மங்களா சாசனம் பண்ணுகிறார்
புத்தி பேதலிக்கும் நமக்கு -அது கூடாதே –
ஒத்துக்காமல் ராவணன் -ஒத்துக் கொண்டு விபீஷணன் -இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்

வடிவாய் இத்யாதி
உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும்
தன் கடாஷமே அமைந்து இருக்கும் இவள் -அகலகில்லேன் இறையும் -என்று நம்மை
பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு வருவதொரு அமங்களங்கள் உண்டோ -என் பயப் படுகிறீர் என்ன –
தேவரீரும் பிராட்டியுமான சேர்த்தி நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்-

வடிவாய் -மங்கை மார்பு இரண்டுக்கும் விசேஷணம்

வடிவாய்-
வடிவு -என்று நிறமாய் -இவளோடே சேர்த்தியாலே திரு மேனிக்கு உண்டான புகரைச் சொல்கிறது
மையார் கரும் கண்ணி -செய்யாள் -திரு இருந்த திருமார்பன் -பரபாகம் வர்ணச் சேர்க்கை -திருமார்புக்கு வடிவு –
அப்ரமேயம் ஹிதத்தேஜோ ய்ஸ்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளை
எனக்கு என்று இட்டுப் பிறந்த தத்வத்தோடு எதிரிட்டு வெல்ல நினைக்கிறாயோ என்றான் இ றே மாரீசன்
ஸ்ரத்தயாதே வோதேவத் வமஸ் நுதே -என்னக் கடவது இ றே–ஸ்ரத்தையா அதேவா -பிராட்டி உடன் சேராமல் தெய்வமாக இல்லையே -திருவில்லா தேவர் –
ஆனால் இவளாலே இவனுக்கு உத்கர்ஷம் ஆகில் அவனுடைய சேஷித்வம் குலையாதோ
என்னில் -மாணிக்கம் ஒளியாலே பெரு விலையனாம் காட்டில் மாணிகத்தின் உடைய ப்ரதான்யம்
அழியுமோ -பூ மணத்தால் பெரு விலையனாம் காட்டில் பூவுக்கு ப்ரதான்யம் அழியுமோ
விசேஷணம் -பிராட்டி அவனுக்கு சொத்து -மாணிக்கத்துக்கு ஒளி போலே பூவுக்கு மணம் போலே –

வடிவாய்
வடிவாய் -மங்கை -ஸ்ரீ கௌஸ்து பாதிகள் போலே ஆபரண பூதையாய் -அத்தால் வந்த அழகைச் சொல்லவுமாம்

நின் வல மார்பினில்
சர்வாதிகனான உன்னுடைய வல மார்பினில் -சர்வ யஞ்ஞமயமாய் -யோகீ சிந்த்யமாய் இ றே
வடிவு இருப்பது
வேத வேதாந்தம் இரண்டாலும் ஏற்றம் திரு மார்புக்கு உண்டே
யஜ்ஞ வராஹ பெருமாள் -அவனே சர்வ யஜ்ஞம் –பூர்வ பாகம் -சர்வ யஜ்ஞமயம்
உத்தர பாகம் ப்ரஹ்மம் -யோகி ஹ்ருதய த்யானம் கம்யம் –
கர்மத்துக்கும் உபாசனத்துக்கும் விஷயம் லஷ்யம் என்பதால் வந்த ஏற்றம் –

வல மார்பினில்
அணைக்கைக்கு அணித்தாய் இருக்கை

வாழ்கின்ற
மார்பில் இருப்பு தான் நித்தியமாய் போக ரூபமாய் இருக்கை
அம் மார்விலே இருக்கச் செய்தேயும் -இறையும் அகலகில்லேன்-என்று அதி சங்கை பண்ணும்படி
இ றே போக்யதை இருப்பது

மங்கையும்
யுவதிஸ்ஸ குமாரிணி -என்கிற பருவத்தை சொல்கிறது
யுவா குமாரா -என்று இவ் விரண்டு அவஸ்தையும் உண்டு அவனுக்கு
இவளுக்கு கௌமார அவஸ்தையால் வந்த மௌக்த்யமே உள்ளது –
யுவதியும் ஆகக் கடவள் -எங்கனே என்னில் -போக ஸ்ரோதச்சில் வந்தால் இவள்
தளர்த்திக்கு அவன் கை கொடுக்க வேண்டும்படி யான மௌக்த்யத்தை சொல்லுகிறது

மங்கையும் –
ச சப்தத்தாலே மகிஷ்யந்தரத்தை சொல்லுதல்
மங்கள ஆவஹையான இவளும் ஆசார்ஸ்யை என்னுதல்-உனக்கும் மட்டும் இல்லை இவளுக்கும் பல்லாண்டு என்றுமாம்-

பல்லாண்டு
கால தத்வம் உள்ள தனையும் இச் சேர்த்தி நித்யமாய்ச் செல்ல வேணும்

வடிவார் சோதி இத்யாதி –
இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி கல் மதிள் இட்டால் போலே இருக்கிற ஆழ்வார்களைப்
பாரீர் என்ன -அவர்களோட்டை சேர்த்திக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று மங்களா சாசனம்
பண்ணுகிறார் –

வடிவார் சோதி –
காளமேக நிபச்யாமமான திருமேனி ஸ்வ தேஜஸ் ஸாலே வ்யாப்தமாம் படியாய் இருக்கை –
புருஷம் க்ருஷ்ண பிங்களம் -என்னும் படியாய் இ றே இருப்பது
தேஜோ ராசியாய் இருக்கும் வடிவை உடையவன் என்னவுமாம்
சோதி ஆர் வடிவு -என்றும்
வடிவு ஆர் சோதி -திருமேனியை மூழ்கும் படியான தேஜஸ் என்றுமாம்

வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –
வலம் அருகே நித்யவாசம் பண்ணுமவனாய் -பிறருக்கு அநபி பவநீயனாய் இருக்கிற
ஆழ்வானோட்டை சேர்த்தி நித்தியமாய் செல்ல வேணும் என்கிறார் –
ஆழியும் -என்கிற சப்தத்தாலே -ஆயுதாகாரத்தாலே ரஷகமாகக் காட்ட -ஆபரண
புத்தியாலே அவனையும் குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார் என்கை –

படை போர் இத்யாதி –
நம் கையை விடாதே- த்வநியாலே எதிரிகளை யழிக்கும் இவனைப் பாரீர் என்ன –
படை -சேனை -ஆயுதம் இரண்டு அர்த்தம் –
படை போர் முழங்கும் –
சேனையை உடைய யுத்தத்திலே புக்கு முழங்கும் என்னுதல்
யுத்தத்திலே ஆயுதமாக புக்கு முழங்கும் என்னுதல்

முழங்கும் –
சகோஷொ தார்த்தராஷ்டாராணாம் ஹ்ருதயா நிவ்யதாரயத் -என்றும் –
யஸ்ய நாதேன தைத்யானாம் பலஹா நிரஜாயத-என்றும் பிரதிகூலர் மண் உண்ணும்படியும்
அனுகூலர் வாழும்படியாய் இ றே த்வனி இருப்பது -இத் த்வனி இவருக்கு பய ஸ்தானமான படி
என் என்னில் -த்வனி வழியே நின்று இடம் காட்டிக்  என்று பயப்படுகிறார்
ஆலிலை அன்னவசம் செய்யும் பெருமான் -ஆழ்வார் பயப்பட -திருக் கோளூர் -கண் வளரும் படியை காட்டிக் கொடுக்க -கொடியார் மாடம் –
த்வஜ ஸ்தம்பம் நீ உள்ளே இருப்பதைக் காட்டிக் கொடுக்குமே -அதனாலே பய ஸ்தானம் –

அப் பாஞ்ச சன்னியமும் –
முன்னிலையாய்  இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் –
புத்ரனை அலங்கரித்த தாய் -தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே
மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து
சொல்கிறார் –
காட்டேன்முன் உன் உரு என் உயிர்க்கு அது காலனே முதல் திருப்பி –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –
அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார்–என்றுமாம்
——————————————————————————

இவ்விரண்டு பாட்டும் -திருமந்த்ரார்தமாய் இருக்கிறது
அடியோமோடும் -என்கிற இடத்தில் ப்ரணவார்த்தத்தை சொல்லிற்று
முதல் பாட்டில் பல்லாண்டு -என்ற பிரதம பதத்தால் நமஸ் சப்தார்தம் சொல்லிற்று
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்று அப்பாட்டில் விக்ரஹ யோகத்தையும் –
சௌர்ய வீர்யாதி குண யோகத்தையும் -இரண்டாம் பாட்டில் விபூதி யோகத்தையும்
சொல்லுகையால் நாராயண பதார்த்தம் சொல்லிற்று –
உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்கையாலே சதுர்த்தியில் பிரார்த்திகிற அர்த்தத்தை
சொல்லிற்று ஆய்த்து-

———————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: