பகவத் விஷயம் காலஷேபம் -4-திருப்பல்லாண்டு தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் /அவதாரிகை -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த -முதல் தனியன்

குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான்
நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம
ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி –

——————————————————————————————————–
குருமுகம் -ஆசார்ய முகத்தாலே
அநதீத்ய-அப்யசிக்காமலே
ப்ராஹ -உபன்யசித்தாரோ
வேதான் -வேதங்களை
அசேஷான் -சமஸ்தமாகிய
நர பதி -ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால்
பரிக்லிப்தம் -ஏற்படுத்தப்பட்ட
சுல்கம்-வித்யா சுல்கத்தை
ஆதாதுகாம -க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய்
ஸ்வசுரம் -மாமனாரும்
அமர -தேவதைகளால்
வந்த்யம் -ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும்
ரங்க நாதஸ்ய -ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு
ஸாஷாத் -பிரத்யஷமாய்
த்விஜகுல -ப்ராஹ்மண வம்சத்துக்கு
திலகம் -அலங்கார பூதருமாகிய
தம் விஷ்ணு சித்தம் -அந்த பெரியாழ்வாரை
நமாமி -சேவிக்கிறேன்-

——————————————————————————————————————————

அவதாரிகை –
இந்த தனியன் திருப்பல்லாண்டு பாடுகைக்கு அடியான பெரியாழ்வார் வைபவத்தை
பெருக்க பேசி அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது –

——————————————————————————————————————————
வியாக்யானம் –
குருமுகம் அநதீத்ய –

ஸ்வதஸ் சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனும் -சாந்தீபனேஸ் சக்ருத்
ப்ரோக்தம் ப்ரஹ்ம வித்யா சவிஸ்தரம் -என்னும்படி -சாந்தீபநிடத்திலே ஆய்த்து-அவந்திகா உஜ்ஜைன்-
சகல வேதங்களையும் அதிகரித்தது –
இவர் அங்கன் குருகுல வாஸம் பண்ணி -தந் முகேன -நலங்களாய நற் கலைகள் நாலையும் –
அதிகரியாதே -புண்டரீகரைப் போலே துளபத் தொண்டிலே மண்டி –
ஸ்ரீ மாலா காரரைப் போலே சூட்டு நன் மாலைகள் தொடுத்து -தூயன ஏந்தி பிரத்யுபகாரம் எதிர்பார்க்காத தூய்மை
வட பெரும் கோயில் உடையானுக்கு சூட்டி அடிமை செய்து போந்தார் –
ஏவம் வித தாஸ்ய ரஸஞ்ஞரான இவர்-

———————————————————————————–

நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம-

என்று ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவாலே பரதத்வ நிர்ணய பூர்வகமாக
புருஷார்த்த லாபத்தை லபிக்கைக்காக அநேகமான அர்த்தத்தை வித்யா சுல்கத்தை -பொற் கிளியாக -கல்பித்து கல் தோரணத்திலே கட்டிவைக்க
மழைக்காலத்துக்கு வெய்யில் காலம் உழைத்து -வயசான காலத்தில் –இளமையில் –அங்கே செல்ல என்ன செய்கிறோம்
தத்வம் அறிந்து தானே புருஷார்த்தம் நிர்ணயம் -செல்வ நம்பி ஏற்பாடு செய்து
இப்படி நிர்மிதமான அந்த தநத்தை வட பெரும் கோயில் உடையானுடைய ஆக்ஜையாலே
ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்கிற அபேஷை உடையராய் -வித்வித் கோஷ்டியிலே சென்று –

——————————————————————————————–
அசேஷான் -வேதான் -ப்ராஹ –
வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி யறுத்தான் என்றதைச் சொல்லுகிறது –
இவருக்கு அப்போது -வேதப் பிரானாரான -பீதகவாடைப் பிரானார் தாமே -பிரம குருவாய் –
போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து -நாவினுளானாய் -நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளை
இவர் முகேன பேசுவித்தான் இ றே

எயிற்றிடை மண் கொண்ட எந்தையான -ஞானப் பிரான் ஆய்த்து இவரை ஞானக் கலைகளை
ஒதுவித்தது -ஆகையாலே நாட்டாருக்கு ஓதின இடம் ஒழிந்து ஓதாத விடம் தெரியாததாய்
இருக்கும் -இவருக்கு மயர்வற மதி நலம் அருளுகையாலே அசேஷ வேதங்களையும்
அருளிச் செய்யும்படி விசதமாய்த்து -அத்தாலே -வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த
விளக்கை விட்டு சித்தன் விரித்தன் -என்னும்படி -பரதத்வ ஸ்தாபனம் பண்ணி அந்த
வேத தாத்பர்யமான திருப்பல்லாண்டை -அங்கு ஆனை மேல் மங்கல வீதி வருகையாலே –
மங்களா சாசனமாக அருளிச் செய்தார் -வேதான் அசேஷான் -என்கிறதுக்கு உள்ளே இதுவும் அந்தர்ப்பூதம்
வேதைஸ் ச ஸர்வை ரஹ மேவ வேதய -15-15–என்னக் கடவது இ றே-

———————————————————————————————————————-
ஸ்வ ஸூரம் –
அநந்தரம் வித்வான்களை வென்று கிழி யறுத்து -அந்த தநத்தை ஸ்வாமி சன்னதியிலே
சமர்ப்பித்து -மீளவும் தம் துறையான துளவத் தொண்டிலே மூண்டு நடத்திக் கொண்டு போர –
அக்காலத்திலே ஆண்டாள் இவர்க்கு திருமகளாய் திருத்துழாய் அடியிலே அவதரிக்க இவரும்
திருமகள் போலே வளர்த்துப் போர

அஞ்சு பிராயத்திலே திருவாய்ப்பாடியில் பஞ்ச லஷம் குடியில் பெண்களை அநுகரித்து
திருப்பாவை பாடி -அதுக்கு மேலே அவர் தொடுத்த துழாய் மலரை –
வியன் துழாய் கற்பென்று சூடும் கரும் குழல் மேல் -என்கிறபடியே
சூடிக் கொடுத்தவராய் -பின்பு ப்ராப்த யௌவனையாய் –
மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய் –
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் -என்றும் –
பண வாள் அரவணை பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் -என்றும் -சொல்லப்படுகிற
அழகிய மணவாள பெருமாளை பிரார்த்தித்து திருமணம் புணருகையாலே அவர்
அவர் மணவாள பிள்ளை யானார் –
மறை நான்கு முன்னோதிய பட்டனுக்கு இ றே -பட்டர் பிரான் கோதையைக் கொடுத்தது –
ஆகையால் ஔபசாரிகமாக-பேச்சுக்கு இல்லாமல் — அன்றிக்கே -சாஷாத் -யதாவாக ரெங்கநாதனுக்கு பட்டநாதர் மாமனார் ஆனார்
-பெரியாழ்வாரை தேவர்கள் வாழ்த்த என்றுமாம் -அத்தாலே அமர வந்த்யம் என்கிறது

——————————————————————————————————————————————
அத்தாலே அமர வந்த்யம் என்கிறது –

அதாவது –
வடிவுடை வானோர் தலைவனான தம்மை அவர்கள் அடி வணங்கி ஏத்துமா போலே –
இவர் தம்மையும் அமரர் வந்திக்கும்படியான வரிசை கொடுத்தபடி –
தம்மையே ஒக்க அருள் செய்வர் இ றே-வாரணம் ஆயிரம் -போலே
பட்டநாதரான மாதரம் அன்றிக்கே தேவர்களாலும் ஸ்துதித்யராய் இருக்குமவர் என்கிறது
விரும்புவர் அமரர் மொய்த்து -என்னக் கடவது இ றே
அஸ்தானே பய சங்கிகள் ஆனவர்களையும் இவர் மங்களா சாசனம் பண்ணுமவர் ஆகையாலே
அவர்களும் இவர்க்கு ஸ்துதிய அபிவாதனந்களை -ஸ்தோத்ரம் நமஸ்காரங்கள் -பண்ணுவர்கள் –
பரஸ்பர நீச பாவை -என்னக் கடவது இ றே

—————————————————————————————————————————————-
இனி ரெங்கநாதனோடே சம்பந்திகைக்கு ஈடான பட்ட நாத குலத்தை சொல்லுகிறது-
த்விஜ குல திலகம் என்று –

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தர் ஆகையாலே –
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென்னரங்கத்தே -என்னும்படி கண்டு கொடுத்தார் –
த்விஜ குல திலகர் ஆகையாவது –
ப்ராஹ்மண குலத்துக்கு எல்லாம் முக்யராய் -சிரஸா வாஹ்யராய் -ஸ்ரேஷ்டராய் இருக்கை என்றபடி –

———————————————————————————————————————–
தம் விஷ்ணு சித்தம் –
அப்படி ஸ்ரேஷ்டராய் -விஷ்ணுவை எப்போதும் சித்தத்திலே உடையவர் ஆனவரை என்கிறது –
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல் -என்று
அடியிலே தமக்கு நிரூபகமாக ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இ றே –
விட்டு சித்தர் -என்கையாலே –
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த -என்று பெரியாழ்வார் திருமொழி அடியிலும்
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனை -என்று முடிவிலும் அருளிச் செய்கையாலே
இந்த திரு நாமத்தாலே அந்த பிரபந்த ப்ரவக்தா என்னுமதுவும் ஸூசிதம் –
அதுக்கும் தனியன் இதுவே இ றே –
அநந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -ஓர் அளவு ஆசை வைத்து -என் மனம் தன்னுள்ளே வந்து
வைகி வாழச் செய்தாய் எம்பிரான் -என்னும்படி
இவர் திரு உள்ளத்திலே அத்ய அபிநிவிஷ்டனாய் இருக்கும் ஆய்த்து –
விஷ்ணு சித்தம் -விஷ்ணு நாவ்ய பதேஷ்டவ்யராய் -இருக்கிற படி -ஏகாங்கி -எல்லாம் விஷ்ணுவை வைத்தே க்ராமம் குலம் எல்லாம் –
நின் கோயிலில் வாழும் வைட்டணவன் -என்றார் இ றே
அவனும் வைஷ்ணவ சம்பந்தத்தை அபேஷித்து கைப் பற்றினான் –

————————————————————————————————————————–
தம் விஷ்ணு சித்தம் நமாமி –
அந்த விஷ்ணு சித்தரை -கிழி யறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று -என்னும்படி
சேவிக்கிறேன் என்கிறது -நமஸ்காரமும் சேவையும் பர்யாயம் –
ஓம் நமோ விஷ்ணவே -என்னுமது விஷ்ணு சித்த விஷயத்திலே யாய்த்து –
விசேஷஞ்ஞர்க்கு பகவத் விஷயத்திலே அரை வயிறாய் -இங்கே இ றே எல்லாம்
பூரணமாவது -நம்பி விட்டு சித்தர் இ றே-ததீய விஷயத்திலே தான் பூர்ணம்

——————————————————————————————————————————–
இத்தால்
பிரதம பிரபந்த அனுசந்தான தசையில்
தத் வக்தாவான ஆழ்வாரை -தம் பூர்வம் அபிவாதயேத் -என்று பிரதமம் திருவடி
தொழும் படியை சொல்லிற்று ஆய்த்து

————————————————————————————–

இரண்டாம் தனியன் -மின்னார் தட மதிள் இத்யாதி –
அவதாரிகை –
இதில் ஸ்ரீ வில்லி புத்தூர் பட்டர்பிரானான பெரியாழ்வார் அவதரண ஸ்தலத்தை அனுசந்திப்பார்
திருவடிகளைத் தொழுகையால் உண்டான ப்ரீதியையும்
அவர் செயலைச் சொல்லுகையால் உண்டான விரோதி நிவர்த்தியாதிகளில் த்ருப்தியையும்
மனசோடே சொல்லி உலாவுகிறதாய் இருக்கிறது –
——————————————————————————————————-
ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்

மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள்
கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து-

மின் -மின்னுதல் -மணிகளால் ஒளி விடுதல்
ஆர் -நிறைந்த அதிகமான
தடம் -அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள
மதிள் -திரு மதிளாலே
சூழ் -வளைக்கப்பட்ட
வில்லி புத்தூர் என்று -ஸ்ரீ வில்லி புத்தூர் என்று
ஒரு கால் சொன்னார் -ஒரு தரம் உச்சரிதவருடைய
கழல் கமலம் -திருவடித் தாமரைகளை
சூடினோம் -விசேஷ புஷ்பமாக முடித்தோம்
முன்னாள் -புருஷார்த்தம் வெளியாக காலத்தில்
கிழி -பொருள் முடிப்பை
அறுத்தான் என்று -அறுத்து வெளி இட்டவர் என்று
உரைத்தோம் -சொல்லப் பெற்றோம்
ஆகையால்
கீழ்மை -நரகத்தில்
இனி -இனிமேல்
சேரும் -முன் போல் செல்லுகிற
வழி -மார்க்கத்தை
அறுத்தோம் -அறப் பண்ணினோம்
நெஞ்சே -மனசே
வந்து -சம்ஸார ரஹீதராய் வந்து
——————————————————————————————————-
வியாக்யானம்

மின்னார் தட மதிள் சூழ் –
தேஜ ப்ரசுரமான பெரிய மதிள்களால் சூழப் பட்ட வில்லி புத்தூர் -இத்தால்
செம்பொன் ஏய்ந்த மதிளாய் இருக்கை –
பிரதி கூலருக்கு கிட்ட ஒண்ணாத படியாய் -அனுகூலருக்கு கண்டு வாழும் படியாய் இருக்கை
கல் மதிள் போல் அத்தலைக்கு அரணாய் -மங்களா சாசன பரரான பெரியாழ்வார் இருக்குமூரில் மதிள் இ றே –
ஏவம்விதமான மதிளாலே சூழப்பட்ட-காவலிட்ட பாசுரங்கள் அருளிய இவர் வாழும் தேசம் அன்றோ
—————————————————————————————————–
வில்லிபுத்தூர் என்று ஒருகால் சொன்னார் கழல் கமலம் சூடினோம் –
ஒருகால் ஆகிலும் ஸ்ரீ வில்லிபுத்தூரை உச்சரித்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய ஸ்ரீ பாத கமலங்களை
பைம் கமலத் தண் தெரியலாக -தலையிலே சூடினோம் –
வார்த்தா மாலை -சம்சாரிகள் குற்றம் பார்க்கக் கூடாது -நம்மால் மாற்ற முடியாதே
முமுஷுக்கள் குற்றம் பார்க்கக் கூடாது -செல்வாக்கு உள்ளவர் –
அருளிச் செயல்களை சொல்வதே கடமை –
வேஷத்தில் ஸ்ரீ வைஷ்ணவர் ஆக இருந்தாலும் -மதிக்க வேண்டும் -நாளாக நாளாக நல்ல பாகவதனாக மாறலாம்
-அபசாரம் பண்ணக் கூடாது -தோஷம் பார்க்கக் கூடாது -என்றவாறு
கோவிந்தன் தன் அடியார்களாகி எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை யடி என் தலை மேலவே –
என்று இ றே ஆழ்வாரும் அருளிச் செய்தது –
ஸ்ரீ வில்லிபுத்தூர் தான் வட பெரும் கோயில் உடையானுக்கும் ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் நிரூபகமான தேசமாய்த்து –
வில்லிபுத்தூர் உறைவான் –
வில்லிபுத்தூர் பட்டர் பிரான் –
அன்ன வயல் புதுவை ஆண்டாள் –
கோதை பிறந்தவூர் -வில்லிபுத்தூர் -என்னக் கடவது இ றே
பிரணவம் போலே மூவரும் கூடலாய் இருக்கை
பெருமாள் ஆண்டாள் பெரிய திருவடி -அணி புதுவை பிரணவமே சேவை அங்கு –
இப்படி உத்தேச்யமான ஊரை ஒருகால் அனுசந்திப்பார் எப்போதும் உத்தேச்யர் ஆகையாலே
அவர்கள் ஸ்ரீ பாதங்கள் சிரோ பூஷணமாக தார்யம் என்கிறது –
ஊரைச் சொன்னாய் -அவன் கொண்டாடுவான் பிடித்தாரை நாமும் பிடிக்க வேண்டுமே –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு -என்னுமா போலே –
————————————————————————————————-

புருஷார்த்தம் சொல்லி மேலே தடங்கல் விரோதிகள் போனவற்றை அருளுகிறார் -கிடைத்த ஆசையை முதலில் சொல்லி மகிழ்வோமே –
பின்னை விரோதிகள் செய்தது என் என்னில் –
முன்னாள் கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் –
முன்னாள் கிழி யறுக்கை யாவது –
முற்காலத்திலே பாண்டியன் வித்யா சுல்கமாக கட்டின த்ரவ்ய கிழியை அங்கே  சென்று
வேதாந்தார்த்த முகேன -விஷ்ணுவே பரதத்வம் என்று விஷ்ணு சித்தரான தாம் வித்வஜ்
ஜனங்களை வென்று த்ரவ்யக் கிழியை யறுத்த ஆழ்வார் உடைய இந்த அத்யத்புத கர்மத்தை அனுசந்தித்தோம்
அத்தாலே
கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் -சிறந்த சேஷ்டிதங்களை அனுசந்திக்க நமது வினைகள் போம் –

ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி -த்யக்த்வா தேஹம் -புநர்ஜன்ம நேதி
மாமேதி சோர்ஜுந -என்று-
நம்முடன் பரிமாற நம்மைப் போலே இருக்க -பெரியவன் கருணையால் வந்தவன் என்று நினைக்காமல் –
யோ வேத்தி தத்வதாக -உண்மையாக -அறிந்து -அவதார ரகசியம் வந்தால் அதுவே கடைசி ஜன்மம் என்றவாறு –
புருஷோத்தமன் வித்யையாலும் -அவன் புருஷோத்தமன் என்கிற ஞானம் -இது போலே -கிட்டும்-
இது இது உது –உன் செய்கை நைவிக்கும் –
பக்தி பிரபத்தி -சக்தி இருந்தாலும் விளம்பம் பொறுக்காமல் பிரபத்தி என்றால் –
அவதார ரகசியம் புருஷோத்தமன் ஞானம் அங்கமாக கொண்டு பக்தி பண்ணினால் மோஷம் அந்த ஜன்மம் –
பக்தியில் பிராப்தி இல்லையே -ஸ்வா தந்த்ர்யம் வரும்
ஸ்வரூப விரோதம் அபிராப்தம் என்பதால் பக்தியை விட்டார்கள் பூர்வர்கள் –
கிருஷ்ண விஷயத்தில் ஜன்ம கர்மங்கள் ஜன்ம சம்சார பந்தத்தை அறுக்குமா போலே
யாய்த்து விஷ்ணு சித்தர் ஜன்ம கர்மங்களும் –
இங்கும் ஸ்ரீ வில்லி புத்தூர் ஜன்மமும் கிழி யறுக்கை கர்மமுமாய் இருக்கும் –
கீழ்மையினில் சேரும் வழி யறுக்கை யாவது -பகாசுரன் வாயைக் கிளித்த சேஷ்டிதம் அவனது

நிஹீன க்ர்த்யத்தாலே ப்ராபிக்கும் ப்ரதிபந்தகமான மார்க்கத்தை சேதித்தோம் –
புற நெறி களை கட்டு -அவைதிக மார்க்கத்தை அடைகை பாப பலம் இ றே –
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -என்று இவர் தாம் சந் மார்க்க வர்த்திகள் இ றே
சமரச சன்மார்க்க வாதி -வேத மார்க்கம் -சத் மார்க்கம் -பரம வைதிகர்
அன்றிக்கே
கீழ்மையினில் சேரும் வழி -என்று
அத பதநத்திலே ப்ராப்தமான மார்க்கம் என்று அர்ச்சிராதி மார்க்கத்துக்கு கீழாய்
புநராவர்த்தி லஷண ஹேதுவான தூமாதி மார்க்க த்ரயத்தையும் நிரோதித்தோம் -தூமாதி மார்க்கம் -சந்திர கதி -நரக பித்ரு லோக மார்க்க்கம் வேற –
——————————————————————————
நெஞ்சமே வந்து
நெறி நின்ற நெஞ்சாய் -நீ அநுகூலிக்கை யாலே இந்த லாபத்தை லபித்தோம்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழலாமல் மனஸ் ஆத்மாவழி போக வேண்டுமே —
வந்து –
இவ்வளவும் வந்து –
ஆழ்வார் அளவும் வந்து -வில்லி புத்தூர் என்று ஒரு கால் சொன்னார் கழல் கமலம் சூடினோம்
வெகுதூரம் பாகவத பிரபாவம் சொல்லிய நெஞ்சு என்றவாறு –

———————————————————————————————–

கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம்

இதுவன்றோ நீ அநுகூலித்ததால் பெற்ற  பேறு -நீ என் வழி வருகையாலே
இவை எல்லாம் பெற்றோம் -இஷ்ட ப்ராப்தியோபாதி அநிஷ்ட நிவாரணமும் பலம் இறே
நெஞ்சமே வந்து
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் –
என்றால் போலே பெற்ற பேற்றைப் பேசி நெஞ்சோடு ஹர்ஷிக்கும் படியைச் சொல்கிறது
வில்லி புத்தூர் என்று ஒரு கால் சொன்னார் என்றது –
வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர் -என்றும் –
மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -என்றும் –
பகவத் விஷயத்திலே தகப்பனாரும் மகளாரும் ஒரு கால் சொன்னால் போலே
பாகவத விஷயமாக ஒரு கால் சொன்னார் -என்றபடி-பாகவத பிரபாவம் பகவத் பிரபாவம் விட பெரிதானதே –
சம்பந்த அநுசந்தானம் ஸக்ர்த் என்றபடி –
முதல் தடவை -சொல்வது சம்பந்தம் வெளிப்படுத்த
மீண்டும் சொல்வது ஆனந்தத்துக்கு போக்குவீடாக –

————————————

ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்

பாண்டியன் கொண்டாட -அவதாரிகை –
இதில் பிரபந்த வக்தவான பெரியாழ்வார் திருவடிகளில் உபாய ச்வீகாரத்தை சொல்கிறது

பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று –

பாண்டியன் -ஸ்ரீ வல்லப தேவன் என்கிற பாண்டிய ராஜன்
கொண்டாட -மேன்மேல் ஏத்த
பட்டர்பிரான் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன்
வந்தான் என்று -எழுந்து அருளினான் என்று
ஈண்டிய -கூடின அநேகமான
சங்கம் எடுத்து -சங்குகளைக் கொண்டு
ஊத -அநேகர் சப்திக்க
வேண்டிய -அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய
வேதங்கள் -வேதார்தங்களை
ஓதி -தெரியச் சொல்லி
விரைந்து-தாமசியாமல்
கிழி -வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை
யறுத்தான் -அறுத்தவனுடைய
பாதங்கள் -திருவடிகளே
யாமுடைய -நாங்கள் ஆஸ்ரயமாக உடைய
பற்று -ஆதாரம் –
————————————————————-
வியாக்யானம் –
பாண்டியன் கொண்டாட –
தென்னன் கொண்டாடும் போலே -நமக்கு பரதத்வ நிர்ணயம் பண்ணித் தரும்படி
பட்டர்பிரான் வந்தான் என்று பாண்டியனான ஸ்ரீ வல்லப தேவன் சொல்லிக் கொண்டாட -அத்தசையிலே –
—————————————————————–
ஈண்டிய சங்கம் எடுத்து ஓத –
திரண்டு இருக்கிற வித்வத் சங்கமானது ஓரோர் பிரதேசங்களிலே ஓதிக் கிடக்கிற
ப்ரசம்சா பர வாக்யங்களை எடுத்து -புகழ்ச்சி தோன்ற மேல் எழுந்த வாறு –ப்ரஹ்ம ருத்ராதிகளை போரப் பொலிய சொல்லி
உபன்யசிக்க என்னுதல்
அன்றிக்கே
ஈண்டிய சங்க மடுத்து ஓத என்று-
ஜய சங்கங்கள் பலவற்றையும் வாயிலே மடுத்தூத என்னுதல் –
பூம் கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலி -என்னக் கடவது இ றே
எடுத்தூத -என்ற போது
சங்கத்தை எடுத்து வாயிலே ஊதி என்றபடி –
அடுத்தூத -என்ற போது
கிட்டி ஊத என்றபடி –
அதிஷேபித்த வித்வான்கள் வாய் அடைக்கும்படி –
———————————————————-
வேண்டிய வேதங்கள் ஓதி –
சர்வே வேதா யத் பதமாம நந்தி –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய -என்கிறபடி-அந்தர்யாமி -அனைவரும் சரீரம் தானே –
சாஸ்திரம் தானே பிரமாணம் -பர ப்ரஹ்மம் ஒன்றே பெயர் -என்ன -சரீர ஆத்ம பாவத்தாலே ஓன்று
அங்கி அங்கம் -பிரகாரி பிரகார பாவம் –
வேதங்கள் எல்லாவற்றாலும் ஆராதன பிரகாரத்தையும் ஆராய்த வஸ்துவையும்
சொல்லுகிறது என்று அறுதி இட்டு -பகவத் பரத்வத்தை சாதித்து -இனி தாழுகைக்கு
ஹேது என்று திருவடிகளில் தாழ்ந்த கிழியை
தானே தாழ்ந்ததே
விரைந்து -கைங்கர்யம் செய்ய ஆர்த்தி மிக்கு
த்வரித்து அறுத்தவருடைய –
த்ரவ்ய க்ரந்தியை யறுத்தவருடைய
—————————————————————
பாதங்கள்
கிழி யறுத்த பட்டர்பிரான் பாதங்கள்
—————————————————————
யாமுடைய பற்று –
பட்டர்பிரான் அடியேன் -என்னும்படி அவருக்கு சேஷ பூதராய் இருக்கிற நம்முடைய ரஷை
தகையான் சரணம் தமர்கட்கோர் பற்று -என்கிற பொதுவானவன் உடைய திருவடிகள் அன்று
அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்யாமுடைய பற்று
நம்முடைய அரண் -புகல் -உபாயம் -சரண்யம் -என்றபடி
யாமுடைய பற்று –
பற்றற்ற நம்முடைய பற்று -மற்றவற்றில் பற்றை விட்டு பெரியாழ்வாரை பற்ற என்றபடி –
பற்றிலார் பற்ற நின்றான் -என்னக் கடவது இ றே

—————————————————————————-

அவதாரிகை –

நம்பிள்ளை நியமனப்படி முதலில் 24000 வியாக்யானம் செய்து அருளி –
வேதத்துக்கு ஓம் -போலே திருப்பல்லாண்டுக்கு செய்து அருளினார் —

வக்த்ரு வைலஷண்யம் /பிரபந்தவைலஷண்யம் /பிரதிபாத்ய வைலஷண்யம்
பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் -என்றும்– -சர்வ பதி–என்னாமல் சர்வ ஸ்வாமி -பதிம் விச்வச்ய -பதித்வம் வேற ஸ்வாமித்வம் வேற –
தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
சர்வ ஸ்வாமியாகவும் -சர்வ நியந்தாவாகவும் -சர்வேஸ்வரன் ஸ்வரூபத்தை நிர்ணயித்து
-சேதன ஸ்வரூபத்தை
யஸ்ய அஸ்மி ந தம் அந்தரேமி-தாண்டி போக மாட்டேன்
பரனுக்கே உரியவனாய் -பாரார்த்த்யம்
பரவா நஸ்மி என்றும் –
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே -என்றும் நிரூபித்து
இந்த ஸ்வரூப அநுரூபமான ஜ்ஞானமும்
ஜ்ஞான அநுரூபமான வ்ருத்தியும் -ப்ராப்தமாய் இருக்க-
கற்க கசடற -நிற்க அதற்குத் தக -ஞானம் வந்து அதற்குத் தக்க கைங்கர்யம் பிரார்த்தித்து செய்ய வேண்டுமே

அய பிண்டதுக்கு -பழுக்க காய்ச்சின இரும்புக்கு -அக்நி சம்சர்க்கத்தால் வந்த தாதாம்யம் போலே சேதனர்
அசித் ப்ரத்யா சத்தியாலே -தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று அஹங்கரித்து
புத்ர மித்ராதிகள் பக்கலிலே மமதா புத்தியைப் பண்ணி`
இப்படி ப்ரவாஹ ரூபேண அஹங்கார மமகாரங்களாலே சர்வேஸ்வர கதமான
ச்வாமித்வ நியந்த்ருத்வங்களை தங்கள் பக்கலிலே அத்யவசித்து
ச்வத ப்ராப்தமான பாரதந்த்ர்யத்தில் விமுகராய் -அத ஏவ சப்தாதி விஷயங்களில் ப்ரவணராய்
அத்தாலே வந்த ராக த்வேஷாதிகளாலே அபிபூதராய் படுகிற துக்க பரம்பரைகளை அனுசந்தித்து
எல்லா ஜன்மங்களுக்கும் பொது சேஷத்வம் ஞாத்ருத்வம் -என்பதை மறந்து -யானும் தானாய் ஒழிந்தான் -அன்றோ
கர்மாதீனமாய் கிடைத்த சரீரம் நான் என்று நினைத்து இயற்கையான பாரதந்த்ர்யம் மறந்து –
ஆத்மாவுக்கு பிடித்தது செய்யப் போனால் விருப்பு வெறுப்பு வாராதே -சரீரத்துக்கு தானே ராக த்வேஷங்கள் வருமே –
நம்மை திருத்துவதற்காக நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் சாசநாஸ் சாஸ்திரம் -என்கிறபடியே
தத்வ ஹிதங்களை அறிந்து நல்வழி போகைக்கு உடலாக சாஸ்த்ரத்தை
ப்ரகாசிப்பித்து அருளினான்-

ஹர்த்துந்தமஸ் சதஸதீச விவேக்தும் ஈசோ மானம் ப்ரதீப மிவ காருணி கோ ததாதி –
என்னக் கடவது இ றே–நீர்மையினால் அருளிச் செய்தான்-
இந்த சாஸ்திர ப்ரதானமும் வாஸனா தூஷிதம் ஆகையாலே அகிஞ்சித்கரமாக
ஓலைப் புறத்தில் செல்ல– தேசத்திலே எடுத்து விடும்-கப்பம் வசூலிக்க – ராஜாக்களைப் போலே
ஜன்மாந்தரம் -யா புத்தி -தாமேவ பஜதே ஜந்து -உபதேசம் பண்ணுவது வீண் -இயற்க்கை மாறாதவன் –
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்தான் -மானிடர் காண வில்லை
ராம கிருஷ்ண ரூபேண வந்து அவதரித்து -சாசநாச பிதுர் வசன நிர்தேசாத் பரத்வாஜசஸ்ய சாசநாத் என்று
பித்ரு வசன பரிபாலனாதிகளை ஆசரித்து அருளியும்
இளையபெருமாளை யிடுவித்து -வகுத்த விஷயத்தில் சேஷத்வ வ்ருத்தியே இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம்
என்னும் இடத்தை பிரகாசிபித்து அருளியும்
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று கொண்டு இவ்வ்ருத்திக்கு அடியான-பெருமான் பிரதானம் —
பாரதந்த்ர்யத்தை ஸ்ரீ பரத ஆழ்வானை இட்டு பிரகாசிப்பித்தது அருளியும்
இப்பாரதந்த்ர்ய காஷ்டையை -கச்சதா மாதுல  குலம் -பரதேன —நீதா -என்று கொண்டு
ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைக் கொண்டு பிரகாசிபித்து அருளியும்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அருளி தூத்ய சாரத்யங்களை ஆசரித்து அருளியும்
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட -என்று ஸ்ரேஷ்ட சமாசாரம் கர்த்தவ்யம் என்று உபதேசித்து அருளியும்
இப்படி பஹூ பிரகாரத்தாலே ஆத்மாக்களுடைய பாரதந்த்ர்யத்தை பிரகாசிப்பித்தது
அருளின இடத்திலும் –
பெரியவன் தாழ நின்று ஆசரித்த இம் மஹா குணத்திலே அவஜா நந்தி மாம் மூடா –
என்கிறபடியே அநீச்வரத்வம் ஆகிற தோஷத்தை ஆவிஷ்கரித்து கால் கடை கொள்ளுகையாலே
அவையும் கார்யகரம் ஆய்த்து இல்லை –

இனி நாம் பார்வை வைத்து ம்ர்கம் பிடிப்பாரைப் போலே சஜாதீய முகத்தாலே சேதனரை
வசீகரிக்க வேண்டும்
என்று பார்த்தருளி பெரியாழ்வாரை அவதரிப்பித்து அருளினான்
இவ்வாழ்வார் சஹஜ தாஸ்யத்தை உடையவர் ஆகையாலே-ஏழாட்காலும் பழிப்பிலோம் – பகவத் விஷயத்திலே
கிஞ்சித் கரித்து
கால ஷேபம் பண்ண வேண்டும் என்று பார்த்தருளி -அதுசெய்யும் இடத்தில்
அவன் உகந்தவை யே கர்த்தவ்யம் -என்று அனுசந்தித்து அவதாரங்களை ஆராய்ந்த இடத்தில்
கம்சனுக்கு பணி செய்து போந்த மாலாகாரர் க்ரஹத்திலே எழுந்தருளி பூவை இரந்து
அவன் தான்
ப்ரசாத பரமௌநாதௌ மம கேஹ முபாகதௌ
தன்யோஹம் அரச்ச யிஷ்யாம் ஈத்யாஹ மால்யோப ஜீவன -என்று
உகந்து சூட்டச் சூடின படியை அனுசந்திகையாலே -இவ்விஷயத்துக்கு பூ இடுகை ஒழிய
வேறு கர்த்தவ்யம் இல்லை நமக்கு என்று திருநந்தவனம் செய்கையிலே உத்யோகித்தார் ஒருவர் இ றே
ராமாவதாரம் -சுக்ரீவாதிகள் கிஞ்சித்கரித்து ஸ்வார்த்தம்
இளைய பெருமாள் வராதே தடுக்கும் பொழுது தாமே பின் தொடருகையாலும்
வாமன -இரந்த பொழுது கொடுத்தான் -ஔதார்யம் பெற்று போகையாலும் அங்கும் ச்வார்த்ததா
இங்கு அவன் இரக்க தான் உகந்து பூ இட்டான் பரார்த்த கைங்கர்யம் ஏற்றம் இது இ றே

இன்னமும் மற்றைய ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு நெடு வாசி உண்டு
அவர்கள் தம் தாமுடைய சமர்த்திகளை எம்பெருமானாலே பெற நினைத்து இருப்பார்கள்
இவர் தம்மை அழிய மாறி வரும் பகவத் ச்மர்த்தியையே தமக்கு புருஷார்த்தமாக
நினைத்து இருப்பர் –
போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கரை புரளும் -ஸ்வரூபம் அழிந்தாலும் அவன் திரு உள்ளப்படி –
அவர்கள் ஈஸ்வரனை கடகாக பற்றி தம் தாமுடைய பய நிவ்ர்த்தியை பண்ணா நிற்பர்கள்
இவர் தாம் கடகராய்  நின்று -அவனுக்கு என் வருகிறதோ -என்று பயப்பட்டு அந்த
பய நிவ்ர்த்தியில் யத்னம் பண்ணா நிற்பர்-
பல்லாண்டு பாடுதல் காதா சித்தம் மற்றவர்களுக்கு மங்களா சாசன உத்சவங்கள் சில நாள் உண்டு
இவருக்கு இது நித்யம் -அரையர் திருக்கைத்தல சேவை யில் எழுந்து அருளி திருப்பல்லாண்டு அருளுவார் –
மற்ற ஆழ்வார்கள் -கலக்கம் ஆழம் இவருக்கு மேடு போலே -அதுக்கும் கீழே பொங்கும் பரிவு இவருக்கு –

இப்படி மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு உண்டான நெடு வாசி போலே
மற்றப் பிரபந்தங்களில் காட்டில் திருப் பல்லாண்டுக்கு நெடு வாசி உண்டு –
வேதம் என்ன -தத் உப ப்ரஹ்மணம் என்ன -இதிஹாச புராணங்கள் என்ன –
இவை போலே அதிக்ர்த அதிகாரமாய் இராது-இது பொது மறை –
சர்வ அதிகாரமான திருவாய்மொழியில் உண்டான அருமையும் இதுக்கு இல்லை–குழப்பம் இல்லை என்றவாறு –
அரி அயன் அரன் என்னும் இவரை ஒன்ற நும் மனத்து வைத்து -என்றும்
முனியே நான்முகனே முக்கண் அப்பா -என்றும் உபக்ரமம் -1-3-7-தொடங்கி உப சம்ஹாரத் தளவும்-10-10-1-
செல்ல த்ரிமூர்த்தி சாம்யத்தை அருளிச் செய்கையாலே-உள் அர்த்தம் அறிய அருமை உண்டே இதில் –
ஜகதாதிஜா –அணைவது அரவணை மேல் — இணைவனாம் —
மத்யே விரிஞ்சி கிரீசம் ப்ரதம அவதாரம் -என்று ரகு குல சஜாதீயனாகவும் யது குல
சஜாதீயனாகவும் அவதரித்தாப் போலே ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவில் வந்து அவதரிக்கையாலே
வந்த சாம்யம் என்று நிர்வஹிக்க வேண்டும் என்ற அருமை யாதல் –
ஐ ஆல் க்கு -பெருமானை –பெருமானால் -பெருமானுக்கு -சொல்லி பெருமானாய்-நீராய் பிரதம விபக்தி
சரீராத்மா பாவம் உண்டே -பிரிந்து ஸ்திதி இல்லை –ப்ருதக் ஸ்திதி உபலப்தி இல்லையே –
மட்குடம் -தங்கச் சங்கிலி போலே -காரண கார்ய பாவம் முதல் வேற்றுமையில் படிக்கலாம் -அதுவாகவே நிரந்தி இருப்பதால் –
வஸ்து வேற தானே -ஒரே வேற்றுமையிலே படித்தாலும் –
வேத நான்காய் –பிரதிபாத்ய பிரதிபாதிக சம்பந்தம் -வேத நான்கால் சொல்லப் பட்டவன் -என்றபடி –
வேத நான்கையும் கொடுத்த படியாலும் –
சமான அதிகரணம் -ஆஸ்ரயம் -இரண்டும் ஒன்றில் இருப்பதால்
பின்ன பிரவ்ருத்தி நிவ்ருத்தி -ஒரே பொருளில் –
ப்ரஹ்மத்துக்கும் அடியேனுக்கும் ஆஸ்ரயம் ப்ரஹ்மமே -சமான அதிகரணம் –
ஒரே பவனத்தில் உள்ளவர் போலே -தத்வங்கள் வேற –
வையதிகரண்யம் -இதற்கு எதிர்
நீராய் –அயனாய் -அனைத்துக்கும் ஆதாரமாய் ப்ரஹ்மம் என்றவாறு -சமான அதிகரணம் -இவை ஒரே தத்வம் இல்லையே –
நீராய் நிலனாய் -என்று தொடங்கி -சிவனாய் அயனாய் -என்று சேதன அசேதன வாசி
சப்தங்களோடு சமாநாதி கரிக்கையாலே சாமாநாதி கரண்யத்துக்கு நிபந்தனம் ஈச்வரனோடு
சேதன அசேதனங்களுக்கு உண்டான -விட்டுப் பிரிந்து ஸ்வ தந்தரமாக தனித்து இருப்பு இல்லையே –
ப்ரதக் ஸ்திதி யுபலப்த்தி இல்லாத சம்பந்தம் என்றே
நிர்வஹிக்க வேண்டும் என்னும் அருமை யாதல் இல்லை -இப்பிரபந்தத்துக்கு

இன்னமும் மகாபாரதம் போலே பெரும் பரப்பாய் -இன்னது சொல்லிற்று -என்று நிர்ணயிக்க
ஒண்ணாது இருக்கும் குறையும் இன்றிக்கே-கங்கா காங்கேயன் அசத் கீர்த்தனம் செய்த எச்சில் வாய்-போல் இல்லாமல்
அரையர் -வாயில் சாளக்ராமம் ஐதிகம் –ஈரச் சொல்லில் அவனுக்கு ஊற்றம் –
பிரணவம் போலே சப்தம் அத்யல்பமாய் -சகல வேதார்தமும் அதுக்கு உள்ளே காண வேண்டி
அது தெரியாதே தேட வேண்டி வரும் -அநதிவிச்தரம்-அத்யல்பம் -என்றவாறு -அந்த குறையும் இன்றிக்கே
பன்னிரண்டு பாட்டாய் -ஐஸ்வர்ய கைவல்யங்களை நீக்கி உத்தம புருஷார்த்தமான
பகவத் கைங்கர்யத்தை ஸூக்ரஹமாக பிரதிபாதிக்கையாலே இதுக்கு நெடு வாசி உண்டு –
இன்னமும் இப்பிரபந்தம் தன்னை அதிகரித்தவன் கையில் பரத்வத்தை கைப்படுத்த
வல்ல சக்தியை உடைத்தாகையாலே வந்த ஏற்றமும் உண்டு-நிரதிசய பலபிரதான சாமர்த்தியம் உண்டே –
பரமாத்மனை சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்று இ றே இதுக்கு பலம்
இப்பிரபந்தம் அவதரித்தபடி என் என்னில் –

ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜா தார்மிகன் ஆகையாலே -தர்மோ ரஷத ரஷகம் -வைதிக சிந்தை கொண்டவன் –புரோகிதரான
செல்வநம்பியை -புருஷார்த்த நிர்ணய பூர்வகமாக அத்ர்ஷ்ட ஸித்திக்கு விரகு என் -என்ன
தரமஜ்ஞ்சமய பிரமாணம் என்கிறபடியே -சொல்லும் அவிடு சுருதியும் -சாஸ்திரம் வைதிகர் பின் செல்லுமே –
-வித்வான்களை திரட்டி வேதார்த்த நிர்ணயத்தை பண்ணி
அவ்வழியாலே புருஷார்த்தத்தை பெற வேணும் -என்று சொல்ல -அவனும் அப்படியே
பஹூ த்ரவ்யத்தை வித்யா சுல்கமாக கட்டி வித்வாக்களை ஆஹ்வானம் பண்ணி செல்லுகிற அளவிலே
வட பெரும் கோயில் உடையான் ஆழ்வாரை விடுவித்து லோகத்திலே வேத தாத்பர்யத்தை
பிரகாசிப்பிக்கைகாக -நீர் போய் கிழியை அறுத்து கொண்டு வாரும் -என்று அருளிச் செய்ய –
அது வித்யா சுல்கமாக நிர்மித்தது ஓன்று அன்றோ
கையிலே கொட்டுத் தழும்பைக் காட்டி கிழியை அறுக்கலாமோ -என்ன
அது உமக்கு பரமோ -நாம் அன்றோ வேதார்த்த பிரதிபாதனத்துக்கு கடவோம் -என்று ஆழ்வாரை
நிர்பந்தித்து அருள -ஆழ்வரும் பாண்டிய வித்வத்  கோஷ்டியிலே எழுந்து அருளின அளவிலே

செல்வ நம்பியும் ராஜாவும் அப்யுத்தாந  ப்ரணாம பூர்வகமாக பஹூமானம் பண்ண –
அத்தைக் கண்ட வித்வான்கள் ராஜாவை அதிஷேபிக்க -அவ்வளவிலே செல்வ நம்பி
ஆழ்வாரை தெண்டன் இட்டு
வேதாதந்த தாத்பர்யமான புருஷார்த்தத்தை அருளிச் செய்யலாகாதோ என்ன -ஆழ்வாரும்
தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம்ப்ரபச்யதி -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் சர்வ அர்த்தங்களையும்
சாஷாத் கரித்தால் போலேயும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஸ்பர்ச்தத்தாலே த்ருவன்
சர்வஞ்ஞனாப் போலேயும் -பகவத் ப்ரசாதத்தாலே சகல வேதார்த்த அர்த்தங்களையும்
சாஷாத் கரித்து வேதாந்த தாத்பர்யமான அர்த்தத்தை பிரதிபாதித்து அருள
சமஸ்த சப்த மூலமான அகாரத்துக்கு சர்வ ஸ்மாத் பரன் சர்வ காரணன் சர்வாதிகன் மோஷ ப்ரதன்-என்பதே வேதாந்த்தார்த்த தாத்பர்யம்
மாதவன் பேர் சொல்வதே ஒத்தின் சுருக்கு -தேறிய பொருள் –
அதிஷேபித்தவித்வான்களோடு அனுவர்த்தித்த ராஜாவோடு வாசி யற சர்வரும் விஸ்மிதராய் -அநந்தரம்
இவரை யானையிலே ஏற்றி -ராஜா சபரிகரனாய் சேவித்துக் கொண்டு -நகரி வலம் வருகிற மகா
உத்சவத்தை காண்கைக்காக -புத்ரர்களை ப்ரஹ்மரதம் -தோளுக்கு இனியானில் -பண்ணும் சமயத்தில் மாதா பிதாக்கள்
காண ஆதரித்து வருமா போலே -பிராட்டியோடே கூட சபரிகரனாய் கொண்டு -ஈஸ்வரன்
சந்நிஹிதனாக -தத்பரிகர பூதரான ப்ரஹ்மாதி தேவதைகளும் ஆகாசத்திலே
நெருங்கி நிற்கிற வித்தை சாஷாத் கரித்த ஆழ்வார் ஸ்வ ஸ்மர்த்தியைக் கண்டு
இறுமாவாதே -பகவத் ப்ரசாதத்தாலே நிரவதிக பக்தியை பெற்று -அவனுடைய
சர்வஞ்ஞத்வ -சர்வ சக்தித்வ -சர்வ ரஷகத்வாதிகளை -அனுசந்திப்பதற்கு முன்னே
முகப்பில் உண்டான -சௌந்தர்ய சௌகுமார்யங்களைக் கண்டு

கால அதீதமான தேசத்திலே இருக்கிற வஸ்து காலம் சாம்ராஜ்யம் பண்ணுகிற
தேசத்திலே சஷூர் விஷயமாவதே -இவ் வஸ்துவுக்கு என்ன தீங்கு வருகிறதோ
என்னும் அதி சங்கையாலே -ஆனை மேல் கிடந்த மணிகளைத் தாளமாகக் கொண்டு
இந்த சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு தீங்கு வாராதே நித்யமாக செல்ல வேணும்
என்று திருப்பல்லாண்டு பாடுகிறார் –
சதுர் மாசம் சங்கல்பம் -8 மாசம் உழைத்து மழைக் காலம்
இரவுக்கு பகலில் உழைத்து –
வயசான காலத்துக்கு இளமையில் உழைத்து
அந்த லோகத்துக்கு இங்கே உழைக்க வேண்டாமோ -அத்தை தேடு ராஜன் -ஆரம்பித்து வைத்து -திருப் பல்லாண்டு பிறந்தது
அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே ஒன்றால் ஒரு குறை இன்றிக்கே சர்வ நியந்தாவுமான
ஈஸ்வரனைக் கண்டால் தம்முடைய மங்களங்களை ஆஸாசிக்கை அசந்கதம் அன்றோ என்னில் –
முகப்பிலே சஷூர் விஷயமான சௌந்தர்யாதிகளிலே -பகவத் பிரசாத லப்தமான
பக்தி பரவசராய் கொண்டு அழுந்தி -அவனுடைய சர்வ ரஷகத்வ சர்வ சக்தித்வத்தையும் –
ஸ்வ ஸ்ம்ர்தியையும் மறைக்கையாலே -பகவத் ஸ்ம்ர்தியே தமக்கு ஸ்ம்ர்தியாகக் கொண்டு
மங்களா சாசனம் பண்ணுகை ஸங்கதம் –
பகவத் ப்ரேமம் தான் தத் ப்ராப்திக்கு ஹேதுவாதல் தத் அனுபவத்துக்கு பரிகரம் ஆதல்
ஆகை  ஒழிய அறிவுகேட்டை பண்ணும் என்னும் இடத்தில் ப்ரமாணம் என் என்னில் –

அது சிஷ்டாசார சித்தம் –
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருண்யஸ் ச ஸாயம் ப்ராதஸ் சமாஹிதா
சர்வான் தேவான் நமஸ்யந்தி ராமச்யார்த்தே யசச்விந -என்று
திவாராத்ரி விபாகம் அற -தேவதைகளை ரஷித்து புகழ் படைத்தது போந்த சக்கரவர்த்தி திருமகனுடைய
சௌந்தர்யாதி குணங்களுக்கு ரஷகமாக அயோத்யாவாசி ஜனங்கள் பெருமாளால்
தங்களுக்கு வரும் ச்ம்ர்தியை மறந்து தேவதைகளின் காலில் விழுந்தார்கள் இ றே
பிராட்டியை திருமணம் புரிந்து மீண்டு எழுந்து அருளா நிற்க ஸ்ரீ பரசுராம ஆழ்வான்
வந்து தோன்றின அளவிலே -தாடக தாடகேயருடைய நிரசனங்களைக் கேட்டு இருக்கச்
செய்தேயும் அஞ்சி -ஷத்ர ரோஷாத் ப்ரசாந்தஸ் தம் ப்ராஹ்மணஸ் ச மஹா யசா –
பாலானாம் மம புத்ராணாம் அபயம் தாது மர்ஹசி -என்று சரணம் புக்கு -அவன் தோற்று மீண்டு போனான்
என்று கேட்ட பின்பு -புநர் ஜாதம் ததாமேந ஸூ தாநாத்மா நமேவச -என்கிறபடியே
தானும் பிள்ளைகளும் மறு பிறவி பிறந்ததாக நினைத்து இருந்தான் இ றே சக்கரவர்த்தியும் –

ஸ்ரீ கௌசல்யை யாரும் -யன் மங்களம் ஸூபர்ணச்ய விநதா கல்பயத் புரா –
அம்ர்த்தம் ப்ரார்த்தயா நஸ்ய தத்தே பவது மங்களம் -என்று
விஸ்வாமித்ர த்வத்ராணா திகளால் வந்த ஆண் பிள்ளைத் தனத்தை விஸ்மரித்து
மங்களா சாசனம் பண்ணினாள் இ றே
ஸ்ரீ தண்ட காரண்ய வாஸி ஜனங்களும் -தேதம் ஸோமமி வோத்யந்தம த்ருஷ்ட்வா வைதர்ம சாரிணா
மங்களா நிப்ர யுஜ்ஞ்ஞானா ப்ரத்யக் ருஹ்ணந த்ருட வ்ரதா -என்று தங்கள் ஆபன நிவ்ருத்திக்கும்
அபிமத ஸித்திக்கும் இவரை ரஷகர் என்றே சாதன அனுஷ்டானம் பண்ணுகிறவர்கள்
இவர் சந்நிஹிதர் ஆனவாறே அவற்றை மறந்து -இவர் வடிவு அழகிலே துவக்குண்டு
மங்களா சாசனம் பண்ணினார்கள் இ றே
கர்ம ஸ்பர்சம் இன்றிக்கே தலை நீர்ப்பாட்டிலே இவர் ஏற்றம் எல்லாம் அறியும் பிராட்டி
இவர் அழகிலே தோற்று –
பதி சம மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வாரம் அனுவராஜ மங்களா நய பிதத் யுஷி
என்று தொடங்கி -பூர்வாம் திசம் வஜ்ரதர -என்று திக்பாலர்களை இவருக்கு ரஷகராக அபேஷித்தாள் இ றே
இன்னமும் -ஜாதோசி தேவதே வேச சங்கு சக்ர கதாதர -திவ்யம் ரூபமிதம் தேவப்ரசாதே
நோப சம்ஹர -என்று -அயர்வறும் அமரர்கள் அதிபதி அவ்வடிவோடே வந்து -அவதரித்தான்
என்று இவனுடைய பெருமையை அறிந்து இருந்த தசையிலும் -கம்ஸ பயத்தாலே –
இவ்வடிவை உப சம்ஹரிக்க வேண்டும் -என்றார் இ றே ஸ்ரீ வசுதேவர்
உப சம்ஹர சர்வாத்மான் ரூபமே தச் சதுர்புஜம்
ஜாநாதுமா வதாரனதே கம்சோயம் திதி ஜந்ம -என்று சர்வாத்மா -என்று சர்வ அந்தர்யாமி -என்றும்
ஏதச் சதுர்புஜம் -என்று அவனுடைய அசாதார விக்ரஹம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
கம்ஸ பயத்தாலே -இவ்வடிவை உப சம்ஹரிக்க  வேணும் -என்றாள் இ றே தேவகிப் பிராட்டியும்

இவ்வர்த்தம் லோக பிரசித்தமும் -அநேக காலம் தபஸ் பண்ணி பெற்று ப்ரதமஜனாய்
அதி சுந்தரனான புத்திரன் அளவிலே ஒரு விரோதம் இன்றிகே இருக்கச் செய்தேயும்
செல்ல நின்றதும் வர நின்றதும் ப்ரேம அந்த்யத்தாலே பய ஹேதுவாக கடவது இ றே
மாதாவுக்கு –
தன கைக்கு அடங்காத விற்பிடி மாணிக்கத்தை பெற்றவன் அது ஷூர ஷிதமாய்
இருக்கச் செய்தேயும் -அதுக்கு என்ன விரோதம் வருகிறதோ என்று காற்று அசங்கிலும்
பயப்படா நிற்கும் இ றே
-அல்ப தேஜஸ் ஸு க்களான சந்திர ஆதித்யர்கள் உடைய சன்னதியிலே
அச்சித்தான பாஷாணங்கள் உருகா நின்றன
பரஞ்யோதி ரூபசம்பத்ய -என்றும் பரம் ஜோதி நீ பரமாய் -என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய சௌந்தர்ய யுக்தனாய் நிரவதிக தேஜோ ரூபமான எம்பெருமானைக் கண்டால்
பரம சேதனரான ஆழ்வார் கலங்க சொல்ல வேணுமோ -ஆகையாலே
ராவணாதி ராஷச துர் வர்க்க மயமாய் -காலம் சாம்ராஜ்யம் பண்ணுகிற தேசத்திலே –
இவ் விலஷண விஷயத்தை கண்டு அருளி -இவ் விஷயத்துக்கு எவ் வழியில்
தீங்கு வருகிறதோ -என்று பயப்பட்டு தத் பரிஹார அர்த்தமாக திருப் பல்லாண்டு பாடுகிறார்

ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை உள்ளபடி அறிந்து இருக்கிற இவர் -ரஷ்ய ரஷக
பாவத்தை மாறாடி பிரதிபத்தி பண்ணுகை விபரீத ஞானம் அன்றோ என்னில்
கர்ம நிபந்தனமான விபரீத ஞானம் ஆய்த்து த்யாஜ்யம் -விஷய வை லஷண்யம் அடியாக
வந்தது ஆகையாலே அவ வைலஷண்யம் உள்ள அளவும் அனுவர்த்திகையாலே
ஸ்வரூப ப்ராப்தமாக கடவது –
உற்ற நல் நோய் இது தெரினோம் என்பரே -இந்த கலக்கம் விரும்புவது தானே -ஏற்றுக் கொள்ளும் அஜ்ஞ்ஞானம் அபிமானம் இவை –
இன்னமும் சேஷ சேஷி பாவ ஜ்ஞான சமனந்தரம் சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை
சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் ஆகையாலே தத் விஷயமாக மங்களா சாசனம் பண்ணுகை
சைதன்ய க்ர்த்யம் –
மங்களா சாசனம் பண்ணுவதே ஸ்வரூபம் சேஷ பூதனுக்கு -பரகத அதிசய -அவன் மேன்மைக்கு என்றே ஆனந்தம் கொடுக்கவே
-சேஷ பூதனுக்கு கர்த்தவ்யம் அந்த சேஷத்வ காஷ்டை யாவது தன்னை அழிய மாறியே யாகிலும்-ஸ்வரூபம் அழித்துக் கொண்டாலும் –
ஸ்வாமிக்கு ச்ம்ர்த்தியை ஆசாசிக்கை இ றே
வேதாந்த தாத்பர்யம் இ றே இத் திருப் பல்லாண்டில் பிரதிபாதிகப் படுகிறது-நீளா– ஸ்ருதி சத சிரஸ் சித்தம் -சம் பாரார்த்தம் –

———————————————-

பேட்டிகா விவரணம் –

இப்பிரபந்தத்திலே முன்னிரண்டு பாட்டாலே -தாம் மங்களா சாசனம் பண்ணுகிறார் –
அத்தாலே தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே –
கதி த்ரயம் -ஐஸ்வர் யாதிகள் /கைவல்யர் /பகவல் லாபார்த்திகள் -மூன்றுக்கும் இவனே
-நப்பாசை யுடன் ஓன்று பெற்று மேலே மேலே தம்மிடம் வருவானே
மேல் மூன்று பாட்டாலே -3/4/5-மங்களா சாசனம் பண்ணுகைக்கு
பகவத் சரணார்த்தி களையும் -3
கேவலரையும் -4
ஐஸ்வர்யார்த்திகளையும் -அழைக்கிறார்-5-
அதுக்கு மேலே மூன்று பாட்டாலே –6/7/8-ஆஹூதர் ஆனவர்கள் -அழைக்கப் பட்டவர்கள் -இவரோடே சங்கதர் ஆகிறார்கள்
அதுக்கு மேலே மூன்று பாட்டாலே-9/10/11–அவர்களோடே திருப் பல்லாண்டு பாடி அருளுகிறார்
மேலிற் பாட்டு-12-பல ச்ருதி

—————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: