பகவத் விஷயம் காலஷேபம் -3-ஈட்டு தனியன்கள் / பூர்வாச்சார்யர்கள் தனியன்கள் -வியாக்யானம் -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

ஈடு படுத்தும் நம்மை திருவாய் மொழியில்
ஈடு இணை இல்லாத வியாக்யானம் –

நாதம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ் தவ்ய மாலாதரான்
யோகீந்த்ரம் குருகேசசந்திரஜலதிம் கோவிந்த கூராதியௌ
பட்டார்யம் நிகமாந்தயோகி ஜகதார்சார்யௌ சக்ருஷ்ண த்வயௌ
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான் —திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது

திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே –மா முனிகள் அருளியது

திருவருள் மால் சேனைமுதலி சடகோபன் –சீர் –சென்றாம் ஆளவந்தார் -மணக்கால் நம்பி சென்று -ஆளவந்தார் ஆக்கியதால் –
குரு மாலாதாரர் -குருகைப் பிரான் பிள்ளானுக்கு அன்பாம் –
கோவிந்தர் கூரேசர் பட்டர் வேதாந்த முனி – இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை –
இரு கண்ணர் -பெரிய வாச்சான் பிள்ளையும் வடக்குத் திரு வீதி பிள்ளையும் –
நம்பிள்ளை -இவர் ஈடு அளித்ததற்கு ஏய்ந்த மாதவர் -பற்ப நாதம் -திருக் குமாரர்
இவர் அருளார் திருவடி ஊன்றிய -கோலப் பெருமாள் நாலூர் பிள்ளை இவரே -மூன்றாவது அதிகாரி – –அதுவே நிரூபகம்-
நான்காவது அதிகாரி-தேவாதிபன் -அவர் திருக் குமார் தேவேசர் -நாலூர் ஆச்சான் பிள்ளை
-இவர் திருவாய் மொழி ஆச்சான் /ஆய் /திருவாய் மொழி பிள்ளைக்கு கொடுக்க -மேலோர்க்கு ஈந்தார்
–திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனனே -மா முனிகள் அருளியது –

ஸ்ரீ நாத முனிகள் திருவவதாரம்–823- 917-
நீண்ட நாதம் இத்யாதி -திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது
திருவருள் நாதன் –மா முனிகள் அருளியது
ஈடு திருவவதார தனியன்கள்
அருளாளர் திருவடி ஊன்றியவர் -நாலூர் பிள்ளை -கோலேசர்-

திரு வாய் மொழியின் ஈட்டின் சம்ப்ரதாயத்தை –
நாதம் பங்கஜ நேத்ர-என்கிற தனியனிலும்-
திருவருள் மால் -என்கிற திரு நாமத்திலும் –
ஈட்டின் சம்ப்ரதாயம் அடியே தொடங்கி திருவாய்மொழிப் பிள்ளை அளவும் தர்சிப்பித்தபடி சொல்லுகிறது –
நமோ அஸ்மத் ஆச்சார்ய பரம்பராப்யா –
வந்தே குரு பரம்பராம் -என்கிறபடியே -நாதாதியாக தேவாதி பரன் -தேவாதிபர் நாலூராச்சான் பிள்ளை -அளவும் உண்டானவர்களை
வந்தே -என்று குரு பங்க்தி நமஸ்காரத்தை சொல்லுகிறது-

நாதர் ஆகிறார் -ஸ்ரீ ரெங்க நாதர் -என்னும் நாமதேயத்தை யுடையராய்
ஆத்யாய குலநாதாயா -என்னும்படியான ஆழ்வாரை நாதராக யுடையவராய்
வ்யோம்ன பரஸ்மாத் சவிதம் சமேத்ய லஷ்ம்யா நியோகாத் குருகாதி ராஜ
சமந்தரராஜ த்வயமாஹ யஸ்மை நாதாய தஸ்மை முனயே நமோஸ்து -என்று
திருமாலால் அருளப் பட்ட சடகோபன்
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் -என்கிறபடியே அந்த ஆழ்வாருடைய அருள் பெற்ற நாத முனி என்கை-
ஆழ்வாரை திருப் புளி யடியிலே மயர்வற மதி நலம் அருளி விசேஷ கடாஷம் பண்ணினாப் போலே
அவ்விடம் தன்னிலே ஆழ்வாரும் விசேஷ கடாஷம் -செய்து அருளினார் –
தாம் மயர்வற மதிநலம் பண்ணி யருளி பஜனத்தில் சேர்க்கிறார்–ஆச்சார்ய ஹிருதயம் சூர்ணிகை 213- -என்னக் கடவது இ றே
ஆழ்வார் உடைய பக்தியோடு விகல்பிக்கலாம் படியான -அகாத பகவத் பக்தி – இ றே இவரது

இத்தால் -முனிவரை இடுக்கியும் -என்னும்படி சத்வார பகவத் பிரசாதம் அடியாக நடந்து வந்த சாஸ்த்ரங்களில் காட்டிலும்
முந்நீர் வண்ணனாய் ஸ்ரீ கீதா சாஸ்திரம் தானே அருளியது போலே
அத்வாரக பகவத் பிரசாதம் அடியாக ஆழ்வாராலே அவதரித்த ஏற்றத்தை யுடைய திருவாய் மொழியை
அவர் பிரசாதம் அடியாக பெற்ற ஏற்றத்தை சொல்லுகிறது
சாஸ்திர ப்ரவர்த்தனத்துக்கு அடி -வியாச பிரசாதம் ஆகையாலே ஆர்ஷமூலமாய் இருக்கும் -அது -ரிஷி மூலம்
நாதேன யாமுனம் வ்யாசம்-என்றது இ றே
ப்ரஹ்ம ருத்ராஜூன வியாச -என்று அனுபாச்யராக எடுக்கப் பட்டது இ றே அவர்களை
அதின் தாத்பர்யமான இதுக்கு -திருவருள் மால் சேனை முதலி சடகோபன் -என்கையாலே சர்வேஸ்வர பிரசாத சாஷாத்க்ருத
ஜ்ஞானரான ஆழ்வார் அடியாக இருக்கும் ஆகையால் இ றே லஷ்மி நாத சமாரம்பாம் -திருவருள் மால் -என்று அடியிலே எடுத்து அருளிற்று
நாதமுனிகள் தாம் தண் தமிழ் கண்ணி நுண் சிறுத் தாம்பை பண்டை யுருவால் பன்னீராயிரம் உரு உரை செய்ய-தண் தெரியல் போலே இங்கும் தண்
ஒண் தமிழ் மாறன் திரு உள்ளம் உகந்து திவ்ய ஜ்ஞானம் நாதமுனிக்கு நயந்து அருள் புரிந்தார் இ றே –

பங்கஜ நேத்ரர் ஆகிறார் -சீர் உய்யக் கொண்டார் -என்னும்படியான சீர்மையை யுடையவர் –886-975-
அவர்தாம் புண்டரீகாஷர் இ றே
புண்டரீகத்ருசே நம -என்று யாயிற்று அருளிச் செய்தது -அவருக்கு சீராவது -சரணாகதிக்கும் –
தீர்க்க சரணாகதிக்கும் ப்ரவர்த்தகராம் படியான பெருமை -தீர்க்க சரணா கதி -திருவாய்மொழி என்றவாறு
பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ -யோக சாஸ்திரம் வேண்டாம் –
ஸாஹி ஸ்ரீ ரம்ருதா சதாம் -என்னக் கடவது இ றே
பரம யோகிகளான ஸ்ரீ மன் நாத முனிகள் குருகைக் காவல் அப்பனை யோக ரஹஸ்யத்தில் ஊன்று வித்து
இவரை பிரவர்த்தி பிரவர்த்தநததிலே நியோகித்து அருளினார் இ றே-

ராமர் ஆகிறார் -ஸ்ரீ ராம மிஸ்ரர் -அவர்தாம்-926-1006-
சமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசனே -என்னும்படி பன்னிரண்டு ஆண்டு ஆச்சார்யர் திரு மாளிகையில் சேவை பண்ணி
படியாய் கிடந்தது -மணக்கால் நம்பி -என்னும் -திரு நாமத்தை உடையவர் -என்கை -லால்குடி -மணக்கால்-

யமுனாவஸ்தவ்யர் ஆகிறார் –
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் திரு நாமத்தை -இங்கே நம்முடைய பேரனை -யமுனைத் துறைவனை -என்று
உம்முடைய அருளாலே உகந்து சாத்தும் என்று நாத முநிகளால் நாம நிர்த்தேசம் பண்ணப் பெற்று அவரை –
ஜன்மநா வித்யயாச -பிதா மஹராக யுடையவர் -என்கை
அவரும் பிதாமஹம் நாத முநிம் விலோக்ய -என்றார் –
இப்படி அவராலே சாத்தப்பட்ட திரு நாமம்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் -என்று பின்பும் பேர் பெற்றது –
அடியார்க்கு இன்ப மாரியும்-
நாதமுனி நாம ஜீமூதிமமும் வர்ஷித்தால்-ஜீமீதும் –மேகம்
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் என்னும்படியான யாமுனா தீர்த்தம் எல்லார்க்கும் அவஹாக்கிலாம் இ றே
யாமு நார்யா ஸூ தாம் போதி மவகாஹ்ய –
ஜ்ஞானத் துறை படிந்தாடி -திருவிருத்தம் -93–என்னக் கடவது இ றே
இவரும்-நாதாய நாத முனயே அத்ரபரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம் -என்றும்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளா பிராமம் ஸ்ரீ மத ததங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா -என்றும்
உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே திருவடி தொழுகையால் அடி யுடையார் இ றே இருப்பது-
யமுனாவாஸ்தவ்யர்-என்றத்தை -மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார் -என்கிறது
ராணி நாட்டை ஆளவந்தார் என்ன மணக்கால் நம்பி சம்ப்ரதாயம் ஆளவந்தார் என்று ஆக்கி அருளினாரே –
மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்-ஆவது வாதத்திலே
ஆக்கி யாழ்வான் வாயை அடக்குகையாலே -ஆளவந்தார் -என்ற திரு நாமத்தை யுடையராய்
தர்சனத்தை ஆளவந்தாராய் இருக்கையாலே –
இத்தை மணக்கால் நம்பி கேட்டு இவர் பாடு பலகால் நடந்து பச்சை இட்டு இ றே இவரை
பச்சை மா மலை போல் மேனியிலே மூட்டிற்று
ஆகையால் அவர் யதன விசேஷத்தாலே ஆனவர் -என்றபடி -பூர்வதனமிது -புகுந்து அனுபவியும் -என்று -ஆறு புடை சூழ் அரங்கனைக் காட்டினார் இ றே
அவரும் -மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்னும்படி
திருவாய்மொழி முதலானவற்றையும் திருமாலை யாண்டான் -முதலானார்க்கு பிரசாதித்து அருளினார்
நடமினோ நமர்கள் உள்ளீர் -என்று அபிநயிக்கும் படி இ றே அக்காலத்தில் நடந்து போந்தது-
திருவாய்மொழியில் மெய்ப்பாடு ஆளவந்தாருக்கு –

மாலாதரர் ஆகிறார் -குரு மாலாதரர் -என்னும்படி யான திருமாலை யாண்டான்-988-1088
குருமாலாதரர் -என்கிற விசேஷணம்-திருவாய் மொழி பிரவர்த்தனத்தால் யுண்டான குருத்வத்தை சொல்கிறது –
உடையவருக்கு திருவாய் மொழி யின் அர்த்தத்தை உபதேசித்தார் இ றே இவர் தாம் –
இது அறியா காலத்திலே அறியலாம் -அறியா காலத்து -பாசுர வியாக்யானம் -2-3-3–மூலம் அறியலாம் என்றவாறு –
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாய் வருத்தம் உடன் பாடவதாக சொல்ல –இதுவும் ஆனந்தம் –
அறியா மா மாயத்து அடியேனை -அறியா காலத்தில் அடிமைக் கண் அன்பு செய்வித்து -உபகார ஸ்ம்ருதி -ஹர்ஷம் தானே
மாலாதரர் என்று -நாடகமழ் மகிழ் மாலை மார்வரான ஆழ்வார் திரு நாமம் ஆயிற்று –
செந்தொடைக்கு அதிபர் -என்று இ றே பர்யாய நாமம் இருப்பது -சொல் மாலைகள் சொல்லும்படி மாலை இட்ட படி –

யோகீந்த்ரம் குருகேச சந்திர ஜலதிம் -அதாவது -குருகைப் பிராற்கு அன்பாம் எதிராசர் -என்றபடி– 1066-அவதாரம்
சந்த்ரனை பார்த்து கடல் ஆர்பரிக்கும் -குருகேச சந்த்ரனை பார்த்து ஆர்பரிக்கும் ராமானுஜர்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –1066–ஆளவந்தார் விருப்பம் படி –
திருக் குருகைப் பிரான் பிள்ளானை ஆழ்வார் திரு நாமம் சாத்துகையாலும்
புத்ரீ க்ருதோ பாஷ்யக்ருதா ஸ்வயம் வ -என்கிறபடியே குமாரராக அபிமானித்து அருளுகையாலும் –
யதிராஜாப்தி சந்த்ரமா – என்று அவரைக் கண்டபோது எல்லாம் சந்திர உதயத்தில் மஹோததி போலே
ப்ரீதி பிரகர்ஷத்தை யுடையராய் இ றே உடையவர் தாம் இருப்பது –
பெயரைச் சொல்லும் பொழுதும் நம்மாழ்வார் நினைவு வருமே –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -உறு பெரும் செல்வமும் இத்யாதி –அறிதர நின்ற இராமானுசன் இ றே
வளர்த்த இதத்தாய் இராமானுசன் ஆகையால்
ஆழ்வார் திருவடிகளில் தமக்கு யுண்டான சம்பந்தம் பிள்ளான் அளவும் வெள்ளம் இட்டது –
இப்படி திருவாய் மொழியின் அர்த்தத்தை இவர் இடத்திலே நோக்கின படியையும்
அது அப்பால் புற வெள்ளம் இட்ட படியையும்
தெள்ளாரு ஞானத் திருக் குருகைப் பிரான் பிள்ளான் எதிராசன் பேரருளால் -என்று தொடங்கி
அன்று யுரைத்த இன்பமிகும் ஆறாயிரம் -என்று அருளிச் செய்தார் இ றே
ஆறாயிரம் விஷ்ணு புராணம் பிரக்ரியை 6000 ஸ்லோகங்கள்
சமஸ்க்ருத திராவிட வேதங்களான உபய வேதாந்தத்துக்கும் ப்ரவர்த்தகர் ஆயிற்று இவர் தாம்
ஆகையால் இ றே -குருகேச்வர பாஷ்ய க்ருதௌ–என்றது –

கோவிந்த கூராதிபராகிறார் –கோவிந்தர்-1021-1140 -கூரேசர் -1009-1127–என்னும்படி தர்சனத்துக்கு திருஷ்டி பூதர் ஆனவர்களாய்
உடையவருக்கும் அத்தாலே அத்யந்த அபிமத விஷயம் ஆனவர்கள் –
இவர்களை யாயிற்று பிரபத்தி சாஸ்திர ப்ரவர்த்தகராக கற்பித்து அருளிற்று –
ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்துக்கு நடாதூர் ஆழ்வானை இ றே அதிஷ்டாதாவாய் ஆக்கி அருளிற்று –
ஆழ்வான் திவ்ய ஸூ க்திகள் எல்லாம் பிரபத்தி யார்த்த ப்ரகாசகமான ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தங்களை அடி ஒற்றியாயிற்று இருப்பது –
சேஷத்வமே பிரதான குணம் -ஜீவாத்மாவுக்கு -அடிமை என்று தெரிந்து கொள்வதே அறிவு -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –
இங்கு இவ்விருவரையும் இடுக்கிச் சொன்னது -இருவரும் பட்டருக்கு ஆச்சார்யர்கள் ஆகையாலே-
வந்தே கோவிந்த தாதௌ-என்னக் கடவது இ றே -அத்தாலே அது முற்பட்டது -ஞானம் கொடுத்தவர் பிரதானம் –

பட்டருக்கு திருவாய் மொழியில் ஆழ்வானோடு உண்டான சம்பந்தம் -எண் பெருக்கு அன்னலத்து-ஈட்டிலே கண்டு கொள்வது
எம்பார் பட்டருக்கு பகவச் சரண வரண அனுஷ்டான ப்ரகாசகமான த்வய உபதேச முகேன
ஆச்சார்யர் என்னுமது -மத் விஸ்ர மஸ்தலீ-என்கிற அவர் ஸ்ரீ ஸூ க்தியிலே காணலாம்
பட்டர் ஆழ்வான் திருவடி களிலே ஆஸ்ரயித்து எம்பார் பக்கலிலே ஜ்ஞான உபஜீவனம் பண்ணினார் -என்றும்
பிரமேய ரத்னத்தில் பேசிற்று
பட்டர் தாம் எம்பார் பாடு ரஹச்யம் கேட்டாராய் இ றே இருப்பது -என்று தனித் த்வயத்தில் அருளிச் செய்தார்
இவருக்கு அவர் பக்கல் திருவாய்மொழி அந்வயம் உண்டு என்னுமதுக்கு
பூவியல் பொழிலும் தடமுமவன் கோயிலும் கண்டு ஆவியுட்குளிர -6-7-5–என்கிற விடத்துக்கு
வியாக்யானம் செய்து அருளுகையில் சீராமப் பிள்ளை அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-
அது தோன்ற -ஸ்ரீ வசன சிஹ்ன மிஸ்ரேப்ய
ராமானுஜ பதாச்சாயா
என்ற இரண்டு ஸ்லோகத்தையும் சஹபடித்து அருளிற்று
பட்டார்யாய பிரபத்திம் ஹ்யதி சததவரம் திராவிடம் நாய மௌளே ரர்த்தம்
ஸ்ரீ பாஷ்யம் அந்யா நபி ச யதிவராதேஸ தோர்த்தான் ரஹச்யான்
யச்சோக்தோ தேசிகேந்த்ரோ யதிவர சரணச்சாய நாமார்யா வர்யச்தம் கோவிந்தார்யா
மச்மத் குலகுரு மமிதஜ்ஞான வைராக்யமீடே -என்னக் கடவது இ றே-

பட்டார்யம் -அவர் ஆகிறார் -பட்டர் -என்னும்படியான ஸ்ரீ பராசர பட்டர் -என்னும் அபிதானத்தை யுடையவராய்-1122-1174
ஸ்ரீ ரெங்க ராஜ கமலாபத லாலிதத்வம் -என்னும்படி
பெரிய பெருமாளுக்கும் ஸ்ரீ ரெங்க நாயகியார்க்கும் குமாரராய்
அதுக்கு மேலே யுடையவரும் -இவனை நம் யுடையார் எல்லாரும் நம்மைக் கண்டால் போலே கண்டு வாருங்கோள்-என்று
பெருமாள் சந்நிதியில் விசேஷ அபிமானம் பண்ணும்படியான பெருமையை யுடையவர் -என்கை –
சிறு புத்தூர் -அனந்தாழ்வான் எங்கள் குடிக்கு அரசே கொண்டாடினாராம்
இவர் தாம் -அஜஸ்ரம் சஹச்ர கீத அனுசந்தான தத்பரராய் பகவத் திருக் குணங்களை அனுபவித்துக் கொண்டு
திரு நெடும் தாண்டகத்திலும் மண்டி இ றே இருப்பது
இவருடைய திவ்ய ஸூ க்திகளும் அருளிச் செயலை அடி ஒற்றி இ றே இருப்பது
அருளிச் செயல் நாலாயிரத்துக்கும் பட்டர் நிர்வாஹமே இ றே அதிசயித்து இருப்பது-

நிகமாந்த யோகி யாகிறார் -வேதாந்த முனியான -வேதாந்தி நஞ்சீயர் என்கை –1013-1208–
நமோ வேதாந்த வேத்யாய -என்னக் கடவது இ றே
பட்டர் நெடும் தூரம் சென்று தேடித் திருத்தி எடுத்த விஷயமாயிற்று இவர் தாம்
ஏவம் விதமான இவர் பட்டர் நல்லருளாலே யாயிற்று ஒன்பதினாயிரமாக திருவாய்மொழிக்கு வியாக்யானம் செய்தருளி
நூறுரு திருவாய் மொழியை நிர்வஹித்து அத்தாலே சதாபிஷேகமும் செய்து அருளினார் -எனபது ஜகத் பிரசித்தம்-இ றே-

ஜகதாச்சார்யர் ஆகிறார் -துன்னு புகழ் கந்தாடைத் தோழப்பர் –இத்யாதிப்படியே உண்டான திருநாம ஏற்றத்தை யுடையரான
இரு கண்ணர்க்கு அன்புடைய நம்பிள்ளை என்கை-1147-1252-வடக்குத் திரு வீதிப்பிள்ளை-பெரியவாச்சான் பிள்ளை -இருவரும் கிருஷ்ணர் திரு நாமம்
நம்முடைய பிள்ளை திருக் கலி கன்றி தாசர் -என்று இ றே நஞ்சீயரால் இவர் நாம நிர்த்தேசம் பண்ணப் பட்டது –
பெரும் புறக் கடல் -உன்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் –
காருண்ய பூர்ணம் கலிவைரிதாசம் -என்னக் கடவது இ றே
இவர் தோற்றி இ றே திருவாய் மொழி முதலான திவ்ய பிரபந்தங்களுக்கு எல்லாம் வியாக்யானம் உண்டாயிற்று –
இவர் தாம் ஆழ்வார் அவதாரம் என்னுமது தோற்ற கார்த்திகையில் கார்த்திகை திரு நஷத்திரம் நாள்
கலியன் திருமங்கை ஆழ்வார் திரு வீதி எழுந்து அருளும் போது
திருக் கலிகன்றி தாசரான இவர் திரு மாளிகை வாசலிலே திருக் காவணம் இட்டு அலங்கரிக்க
அங்கே எழுந்து அருளி திருப் பணியாரம் வகைகளும் அமுது செய்து அருளி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரசாதித்து
அவரை அத்யாபி உபலாலித்து-அவ்வருகே எழுந்து அருளுவர் என்று பெரியோர்கள் அருளிச் செய்து அருள்வார்
ஆகையால் இ றே நம் ஆழ்வார் என்னுமோபாதி நம்பிள்ளை என்று போருகிறது
அவரை பிரதம ஆச்சார்யர் -என்னுமோபாதி
இவரை லோகாச்சார்யர் -என்ற்றும்
அவரை -திரு நா வீறுடைய பிரான் -என்னுமோபாதி
இவரை வீறுடையார்-என்றும் போருகிறது
ஆழ்வார் தம்முடைய அவதாரம் போலே ஓர் அவதார விசேஷமாய் பெருமாளுக்கு பிராணபூதரான
நம்பிள்ளையை -என்று இ றே ஜ்ஞானாதிகையான தோழப்பர் தேவிகளும் அருளிச் செய்தது
வார்த்தோஞ்ச வ்ருத்யாபி –என்று தொடங்கி
தஸ்மை நமஸ் ஸூக்தி மஹார்ணாய-என்று இ றே நம்பிள்ளை வைபவம் இருப்பது-

நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் 125000 படி -மகா பாரதம் பிரக்ரியை -அனுமதி இல்லாமல் எழுதி ரகச்யார்த்தங்கள் கூடாது
-கரையானுக்கு ஆக்கி விட்டார் நம்பிள்ளை என்பர்

சக்ருஷ்ண த்வயௌ–அவர்கள் ஆகிறார் -இரு கண்ணர்-என்னும்படி சௌ ப்ராத்ரத்தை யுடையராய்
நம்பிள்ளைக்கு நயன த்வயம் -என்னலாம் படி -ஸூஷ்ம தர்சிகளாய் இருக்கிற
பெரியவாச்சான் பிள்ளை–1167-1262-வடக்குத் திரு வீதிப் பிள்ளை –1167-1264–என்கை
இரு கண்ணர்க்கு அன்புடைய நம்பிள்ளை -என்கையாலே -ச்நேஹேன க்ருபயா வாபி -என்கிறபடியே -சிநேக பூர்வகமான
கிருபையாலே யாயிற்று சகல அர்த்தங்களையும் பிரசாதித்து அருளிற்று
இவர்களும் அப்படியே -மாறன் மறைப் பொருளைச் சொன்னது இருபத்து நாலாயிரம் –
நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் –
என்னும்படி இ றே திருவாய் மொழிக்கு வியாக்யானமும் ஈடும் அருளிச் செய்தது –
அத்தைப் பற்ற -ஸ்ரீ கிருஷ்ண த்வய பாதாப்ஜே பஜே யதநுகம்பயா -விபாதி விசதம் லோகே திராவிட ப்ரஹ்ம சம்ஹிதா -என்று அனுசந்தித்தார்கள்
முதலில் திருவாய்மொழி வியாக்யானம் அருளி அதில் ருசியால் மற்றவற்றுக்கும் அருளினார் –
பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ள வைக்கும் -என்னும்படி மற்ற மூவாயிரத்துக்கும் வியாக்யானம் செய்து அருளினார் இ றே
திருவாய்மொழிக்கு வடக்குத் திரு வீதிப் பிள்ளையிலும் பிரதம ப்ரவர்தகர் ஆச்சான் பிள்ளை யாகையாலே
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய
ஸ்ரீ கிருஷ்ண பாத பதாப்ஜே
என்ற இரண்டு தனியனும் அடைவே இவருக்கு உண்டாயிற்று
அது தோன்ற முந்தின தனியன் ஆச்சான் பிள்ளையது என்று அருளிச் செய்வர்கள்-
பெரியவாச்சான்பிள்ளை தெள்ளார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை -என்று இ றே எடுத்து அருளிற்று
ஆச்சான் பிள்ளை சந்நிதியிலே தாம் சில அர்த்த விசேஷங்கள் கேட்டதாகவும் அருளிச்
செய்தார் இ றே வடக்குத் திரு வீதிப் பிள்ளை -ஆசார்யசம்மதி -என்கிற ரஹஸ்யத்திலே-

அங்கன் இன்றிக்கே–பின்பு சேர்ந்தவையாக இருக்கலாம் -சம்ப்ரதாயம் இல்லை என்பர்
-முந்தின தனியன் வடக்குத் திரு வீதிப் பிள்ளையதாகவும்
மற்றைத் தனியன் -ஆச்சான் பிள்ளையதாகவும் -அருளிச் செய்வார்கள் –
திருவாய் மொழியில் ஈட்டின் பிரதான்யத்தாலும்
வடக்குத் திரு வீதிப் பிள்ளை செய்து அருளின ஆச்சார்ய சம்மதியினடியிலும்
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய -என்று எழுதி இருக்கையாலும் இத்தை வடக்கு திரு வீதிப் பிள்ளை தனியனாகவும்
ஸ்ரீ கிருஷ்ண பாத பாதாப்ஜே -என்கிறது ஆச்சான் பிள்ளை யதாகவுமே சித்தாந்தம்
அப்போது -சர்வ சித்திர பூந்மம-என்கிறது சரசமமாய் இருக்கும் –
அவர் ரஹஸ்ய பிரபந்தங்களின் அடியில் எழுதி இருக்குமத்தும் அப்படியே-

ஓலைச்சுவடியை நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை திருமாளிகையில் கண்டு -பெரியவாச்சான் பிள்ளையும் மாதவாச்சார்யரும் கூட வர
அத்தை ஈ யுண்ணி மாதவாச்சார்யர் மூலம் பிரவர்த்தனம் செய்ய நம்பிள்ளை அருளிச் செய்ய –
நம்பிள்ளை கால ஷேப கோஷ்டியா நம்பெருமாள் கோஷ்டியா என்று வியக்கும் படி –

மாதவ பத்ம நாபர்கள் ஆகிறார் -இவர்-நம்பிள்ளை- ஈடு அளித்ததற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர்-என்கை
இவர்களில் ஸ்ரீ மாதவர் -ஆகிறார் -சி மாதவன் அடிக்கு அன்பு செய்யும் தஞ்சத் தொருவன் -என்றும்
மாதவ சிஷ்யா பாதௌ-என்றும் சொல்லும்படியான நம் பிள்ளை-மாதவாச்சார்யர் -நஞ்சீயர் -அன்றோ அவர் சிஷ்யர் நம்பிள்ளை
தம்முடைய ஆச்சார்யரான நஞ்சீயர் திரு நாமம் சாத்தும்படியான பெருமையை யுடையவராய்
அவருக்கு அத்யந்தம் ப்ரீதி விஷயமாய் இருக்கிற
ஈ யுண்ணிச் சிறியாழ்வான் அப்பிள்ளை -என்ற நிரூபகத்தை யுடையரான ஸ்ரீ மாதவர் என்கை-
யத் வசஸ் சகலம் சாஸ்திரம் யத்க்ரியா வைதிகோ விதி
யத் கடாஷோ ஜகத் ரஷா தம் வந்தே மாதவம் முநிம் -என்றும்
ஸ்ரீபராசர பட்டார்யா சம்ச்ரய தநாய ஸ்ரீ மாதவ மீஸ்ராய நம -என்றும் சொல்லக் கடவது இ றே
ஏவம் விதரான இவருக்கு ஈடு வந்த வரலாற்றை -சீரார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை -என்று தொடங்கி -அருளிச் செய்தார் இ றே
வரதார்யா தயா பாத்ரம் ஸ்ரீ மாதவ குரும் ஸ்ரயே
குருகாதீச வேதாந்த சேவோன் மீலித வேதனம் -என்கிற தனியனும் உண்டாயிற்று – நம்மூர் வரதாச்சார்யர் -நம்பிள்ளை –

பற்பநாபர் ஆகிறார் –
ஆங்கு அவர் பால் பெற்ற சிறியாழ்வான் பிள்ளை தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -என்றும்
மாதவாத் மஜஸ்ய -என்றும் பேசும்படி ஸ்ரீ மாதவ பெருமாள் குமாரரான ஸ்ரீ பற்பநாபப் பெருமாள் -என்கை-
பெரியவாச்சான் பிள்ளை ஈ யுண்ணி மாதவாச்சார்யர் –இருவரையும் கூட்டி நம்பிள்ளை -சென்று ஈடு பெற்று
இவருக்கு கொடுக்க –இவரே சிறி யாழ்வான்-என்பாரும்
அவர் -கொடுத்தது -நாலூர் பிள்ளை -ராமானுஜ தாசன் – -அவர் பிள்ளை நாலூர் ஆச்சான் பிள்ளை
-இவர் திருவாய் மொழி ஆச்சான் /ஆய் /திருவாய் மொழி பிள்ளைக்கு கொடுக்க -மேலோர்க்கு ஈந்தார் -இப்பொழுது தான் பன்மை –
ஓராண் வழியாகவே நம்பிள்ளை நியமனம் – படி முன்பு அருள
இப்படி நம்பிள்ளை யாலே மகா ஐஸ்வர்யமான திருவாய் மொழியின் ஈட்டை ப்ராப்தரான ஸ்ரீ மாதவர்
தம் குமாரரான பத்ம நாபர்க்கு ஈட்டை பிரசாதித்து
நம்பிள்ளை நியமனத்தின் படியே ஓராண் வழியாக உபதேசித்து போரும்படி உபதேசிக்க
அவரும் அப்படியே அனுசந்தித்து ஸ்ரீ கோசத்தை கோயில் ஆழ்வாரிலே திருவாராதனமாக எழுந்து அருளப் பண்ணி
நிதியை நோக்குமா போலே நோக்கிக் கொண்டு போந்தார் இ றே
திருக்காஞ்சி புரம் –பெருமாள் கோயிலிலே பட்டர்கள் திரு வீதியிலே திரு மாளிகையிலே
யேநாவகாஹ்ய விமலோஸ்மி சடாரி ஸூ ரேர் வாணீ கணார்த்த பரிபோத ஸூ தாபகாயாம்
ஸ்ரீ மன் முகுந்த சரணாப்ஜ மது வ்ரதாய ஸ்ரீ பற்பநாப குரவே நம ஆஸ்ரய -என்று இ றே கோலாலாபம் இருப்பது –
கோல வராகப் பெருமாள்– நாலூர் பிள்ளை சமர்ப்பித்த தனியன்

ஸூ மனே கோலேச தேவாதி பான்-
கோலேசர் ஆகிறார் -கோல வராஹப் பெருமாள் என்ற திரு நாமத்தை உடையரான நாலூர் பிள்ளை -என்கை
இவர் அருளாளர் திருவடி ஊன்றியவர் என்று இ றே இவருக்கு நிரூபகம் –
சதுர் கிராம வாசி -அருளார் திருவடி ஊன்றியவர் என்பதே நிரூபகம் இவருக்கு –கோல வராக பெருமாள் -என்ற திருநாமம் முன்பே உண்டே
இவரே நாலூர் பிள்ளை -அருளாத நீர் -நம்மாழ்வார் சாத்திய திருநாமம்
அதாவது பத்ம நாபப் பெருமாள் திருவடிகளை ஆஸ்ரயித்து
அவரை ப்ரணிபாத நமஸ்கார பிரிய வாக்குகளாலே
குருக்களுக்கு அநு கூலராய் மிகவும் உகக்கப் பண்ணி
இப்படி பலசாதன சிஸ்ருஷையை -ஆச்சார்ய கைங்கர்யம் –யுடையராய் இருக்கிற நாலூர் பிள்ளைக்கு
ப்ரணிபாத பிரசன்னராய் இருக்குமவர் ஈட்டை இவர் ஒருவருக்குமே ஓராண் வழியாக முன்பு நடந்து போந்த படியே பிரசாதிப்பதாக
இவரை பேரருளாளப் பெருமாள் திரு முன்பே கொண்டு புக்கு
பிரமாண புரஸ் சரமாக சூழறவு கொண்டு சொல்ல வேணும் -என்று ஸ்ரீ சடகோபனை அர்ச்சக முகேன இவர் திரு முடியிலே ஊன்றுவிக்க
அத்தை இவர் வெளியிடாமைக்கு ஊன்று விக்கிற ஆகாரத்தை பாவஞ்ஞாரான இவர் அறிந்து
பெருமாள் திரு முக மண்டலத்தைப் பார்த்து
தம் திரு முடியிலே வைத்த ஸ்ரீ சடகோபனை -அருளாளர் திருவடி ஊன்றினவர் -என்னும்படி
தம் திருக்கையாலே ஊன்றி சம்ஞ்ஞை பண்ண
அது சர்வஞ்ஞரான திரு உள்ளத்திலே உற்று
இத்தை நீர் எல்லாருக்கும் பிரகாசிப்பியும் -என்று அர்ச்சக முகேன திவ்ய ஆஞ்ஞையை இட்டு அருள
அத்தைக் கேட்ட பத்மநாபரும் எண்ணின வாறாகாமையாலே-திரு உள்ளமான படி -என்று பின்பு உகப்புடனே பிரசாதித்து அருளினார் -என்கை
நம்பூர் வரதர் ஆஜ்ஞ்ஞை மாற்றி இந்த காஞ்சி வரதர் ஆஜ்ஞ்ஞை இருக்க திரு உள்ளம் படி பின்பு உகப்புடனே பிரசாதித்து அருளினார் -என்கை
பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் -என்னக் கடவது இ றே-

இவர் இத்தை எல்லாம் வெளியிட வேணும் -என்கிற தம்முடைய பர சம்ருத்ய ஏக பிரயோஜனதா ரூபமான திரு உள்ளக் கருத்தாலே
பேரருளாள பெருமாளைக் குறித்து பிரதஷிண நமஸ்காராதிகளைப் பண்ணியும்
அநதிக்ரமண ஹேதுவான சரண க்ரஹணத்தை பண்ணியும் யாயிற்று இவர் அர்த்தித்தது –
அவரும் -அர்த்திதார்த்த பரிதான தீஷிதராம் படி செய்து அருளினார்
இப்படி வகுள பூஷண வாக் அமிர்தம் மாத்ரம் அன்றிக்கே
ஸ்ரீ வசன பூஷணத்துக்கும் பிரவர்த்தகர் பேரருளாளப் பெருமாள் இ றே -மணப்பாக்கத்து நம்பி மூலம் வெளியிடச் சொல்லி அருளினார் –
நாலூர் பிள்ளை தான் இப்படி ஈட்டை அர்த்தித்துப் பெற்ற படியாலே -ஸூ மன கோலேசா -என்று விசேஷணமாக அருளிச் செய்தது
சதுர்க்ராமோத்பவம் ஸ்ரீ மத் ராமாவரஜ கிங்கரம்
சர்வதா த்வய சந்நிஷ்டம் கோலாஹ்வயமஹம் பஜே -என்றும்
ஸ்ரீ மத் ராமானுஜ தாஸ பாதயுக்ம முபாஸ்மஹே
சடகோபார்யா வாணீ நாமர்த்த தாத்பர்ய சித்தயே-என்று இ றே இவர் விஷயத்தில் தனியன்கள் இருப்பது
ராமானுஜ தாசர் நாலூர் பிள்ளைக்கு இன்னும் ஒரு திரு நாமம் –
இப்படி திருவாய் மொழிக்கு பிரவர்த்தகர் மாத்ரம் அன்றிக்கே
பெரியாழ்வார் திருமொழி பெரிய திருமொழி முதலிய வற்றுக்கும் சப்தார்த்த வியாக்யானமும் செய்து அருளினார்
அதில் ஸ்ரீ வசன பூஷண வாக்யத்தையும் சம்மதியாக எடுத்து அருளினார்
யா பத்ம நாப குருதஸ் சடஜிந் முநீந்திர ஸ்ரீ ஸூ க்தி பாஷ்ய மதிகம்ய சம்ருத்த போத
தத் தேவராஜ குரவே ஹ்யதி சச்சதுஷ் பூர்வாசேத்த கோலவர தேசிகம் ஆஸ்ரயே தம் –
என்று இ றே இவர் சம்ப்ரதாய க்ரமம் இருப்பது-

நாலூர்ச்சான் பிள்ளை -தேவாதிபராகிறார் -தேவப் பெருமாள் –அவர் தாம் ராமானுஜ தாஸ ஸூ தரான தேவராஜர் –
நாலூர் பிள்ளை தாம் தம்முடைய திரு உள்ளக் கருத்தின் படியே பெருமாள் தலைக் கட்டி அருளுகையாலே பெற்றுப் பேரிடும்படியான அந்த உபகாரத்துக்கு
தமக்கு திருக் குமாரர் திரு வவதரித்த உடனே -தேவப் பெருமாள் -என்று திரு நாமம் சாத்த
இப்படி பேர் பெற்று -சகல கலா பூரணராய் வளர்ந்து போருகிற குணசாலியாய்
நல்ல மகனாரான நாலூர் ஆச்சான் பிள்ளைக்கு -இத்தை வர்த்தித்துக் கொண்டு போரும் என்று ஈட்டை பிரசாதித்து அருளினார்
இன்னும் ஓராண் வழியாகவே -தேவ பெருமாள் பலருக்கும் வழங்க ஆஜ்ஞ்ஞை பெற்றாலும் –
ஸூ தம் கோல வராஹச்ய குருகாதீச பூர்வஜம்
சாந்தம் சத்வ்ருத்த நிரதம் தேவராஜ மஹம் பஜே -என்றும்
நமோஸ்து தேவராஜாய – என்னும்படி இ றே நாலூர் ஆச்சான் பிள்ளை வைபவம் இருப்பது –
அன்றிக்கே
இவர் அருளாளர் திருவடி ஊன்றினவர் -என்கிறதுக்கு
இவர் என்று கீழ் ப்ரஸ்துதமான பத்ம நாபரைச் சொல்லி
அருளாளர் -என்று அவருடைய அருளை உடையவர் என்று நாலூர் பிள்ளையைச் சொல்லி
திருவடி ஊன்றின தேவப்பெருமாள் என்று ஈட்டை பிரகாசிக்கும்படி
பேர் அருளாளப் பெருமாளாலே திருவடி ஊன்ற பெற்ற நாலூர் ஆச்சான் பிள்ளையை சொல்லி
அப்படி திருவடி ஊன்றின தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் என்று திருவாய் மொழிப் பிள்ளையை சொல்லுகிறது
என்றும் அருளிச் செய்து போருவர்கள் –
இந்த யோஜனையே -மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு -என்கிறதுக்கு மிகவும் சேர்த்தியாய் இருக்கும்
நாலூர் ஆச்சான் பிள்ளை
மூன்று பேருக்கு கால ஷேபம் -மேலோர்க்கு ஈந்தார் -ஈந்தார் திருவாய்மொழிப் பிள்ளை-1290–1406 /ஆய் சுவாமிக்கு /ஆச்சான் சுவாமிக்கு —
தேவாதிபான் -என்கிற பஹூ வசனத்தாலே -கீழ் உக்தமானவர்கள் எல்லாரையும் சொல்லுகிறது
திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே -என்னக் கடவது இ றே-

நாதம் பங்கஜ நேத்ர -என்கிற தனியனும்
திருவருள்மாலை என்கிற தமிழ் திரு நாமத் தனியனும்
ஈட்டுக்கும் மற்ற அருளிச் செயல் வ்யாக்யானங்களுக்கும் தனியனாக
முப்பத்தாறாயிரப் பெருக்கரான பெரிய ஜீயர் அனுசந்தித்துப் போருமதாய் இருக்கும் –
நாதம் -என்று தொடங்கி
திருவருள் மால் –திருமலை ஆழ்வாரிலே சாற்றும் படியாய் இருக்கும்
ரஹஸ்யங்களின் உடைய வரலாற்றையும்
லோக குரும் குருபி -என்று தொடங்கி
தீப்ர சயான குரும் ஸ பஜேஹம்-என்று தலைக் கட்டின தனியனாலே அனுசந்தித்து அருளினார் –
லோக குரு -பிள்ளை லோகாச்சார்யர் -கூர குலோத்தம தாசர் -நகபதி திருவாய்மொழிப் பிள்ளை -திகழக் கிடந்தான் -திரு நாவீறு படைத்த தமது தந்தை

திருக்கண்ணங்குடி ஜீயர் ஸ்வாமி திருப்புட்குழி ஜீயர் கூர குலோத்தம தாசர் திருவாய்மொழி பிள்ளை தாயார் ஆகியோர் பிள்ளை லோகாச்சார்யர் உடன் கூட
ராஜ்ய கார்யம் -குந்தீ நகரம் -திருவாய் மொழிப் பிள்ளை
திருத்திப் பணி கொள்ள கூர குலோத்தம தாசர்
பல்லக்கில் -இருந்து திருவாய்மொழி கேட்டு -கிலேசம் -திருமலை ஆழ்வார் ஸ்ரீ சைலேசர் -நல்ல வார்த்தை கேட்டு -திருத்தப்பட்டார்
சின்ன வயசில் பிள்ளை லோகாச்சார்யர் இடம் சமாஸ்ரயணம்

1290 திருவாய்மொழிப் பிள்ளை திருவவதாரம் 1406வரை
1323 நம்பெருமாள் வெளியே போக
1325 -கள் அழகர் கோயில்
கோழிக்கோடு -நம் பெருமாள் நம்மாழ்வார் சேர்ந்து
த்ரினனாம்பி கடாம்பி
தமிழகம் கர்நாடகம் கேரளம் மூன்றும் சேர்ந்து உள்ள இடம் என்பதால் இந்த பெயர் த்ரிகனாம்பி
1327 1328 -மேலக்கோட்டை 15 வருஷம்
1344-1370 திருமலை -26 வருஷம் நம்பெருமாள் ரங்க மண்டபம்
1371-செஞ்சி -பரிதாதி வருஷம் வைகாசி 17 திரும்பி -48 வருஷங்கள்
திருவிதாங்கூர் மன்னர் உதவி உடன் ஆழ்வார்
தோழப்பர் வம்சம் -இன்றும்
1326 -காலஷேபம் கேட்டு -திருநகரி -செப்பன் இட்டு -ராமானுஜ சதுர்மங்கலம் -பவிஷ்யாகார ராமானுஜர் விக்ரஹம் -ஸ்தாபனம்
மா முனிகள் -1370–1443-
தேசிகன் 1269-1369

தேவாதிபான் -என்று சொல்லுகிற இடத்தில் ஈட்டில் அர்த்தத்துக்கு உபயுக்தமாக
வகுள பூஷண சாஸ்திர சாரமான ஸ்ரீ வசன பூஷணம்
த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி என்றது சார சங்க்ரஹத்திலே-என்னும்படியான சார சங்க்ரஹம் முதலானவற்றை அருளிச் செய்த
லோகாச்சார்ய குருவும்
திருவாய்மொழி வியாக்யானம் இருபத்து நாலாயிரத்துக்கு ப்ரவர்த்தகரான அபய பரதராஜ புத்ரரும்
அவர் சிஷ்யராய் திருவாய் மொழிக்கு உரை பன்னீராயிரமாக அருளிச் செய்த ஸூ ந்தரராஜ மாத்ரு முனியும்
திராவிடம் நாயக ஹ்ருதய தர்சியான ஸூ ந்தர ஜாமாத்ரு தேவரும் ஸூசிதர்
ஆகையால் இ றே இவர்கள் தனியங்களை அனுசந்திக்கிறது-
இவர்களுக்கு மேலாக வாயிற்று
நமோஸ்து தேவ ராஜாய
நமஸ் ஸ்ரீ சைல நாத –
என்று நடத்திப் போருவது
தேவாதிபரான நாலூர் ஆச்சான் பிள்ளை மேலோர்க்கு ஈகையாவது
கீழில் அவர்களைப் போலே ஓராண் வழியாக ஆழ்வாரை திருப் புட்குழியிலே கைக் கொண்டு அருளி
அங்கு நின்றும் திரு நாராயண புரத்தில் எழுந்து அருளி
அவர் தொடக்கமாக ஆயி -பிள்ளை -உள்ளிட்டாருக்கும்
பிரசாதித்து அருளின படி என்கை –

கோலாதிபாத் பிதுரவாப்ய சஹச்ர கீதேர் பாஷ்யம் ஹி பூர்வதர தேசிக வர்ய குப்தம்
த்ரேதா ப்ரவர்த்ய புவி ய ப்ரத யாஞ்சகர தம் தேவராஜ குருவர்ய மஹம் ப்ரபத்யே -என்றும்
ஸ்ரீ சைல நாத குரு மாத்குரு ரூத்த மாப்யாம் ஸ்ரீ ஸூக்தி தேசிக வரேண ஸ யஸ் த்ரி தைவம்
வ்யக்தஸ் சடாரிகிருத் பாஷ்ய ஸூ சம்ப்ரதாயோ விஸ்தாரமேதி சஹி வைஷ்ணவே புங்க வேஷூ –என்றும்
தேவாதிபாத் சமதிகம்ய சஹச்ர கீதே பாஷ்யம் நிகூடமதய ப்ரத யாஞ்சகார
குந்தீ புரோத்பவமும் சரணம் பஜே தம் ஸ்ரீ சைல முரு பக்தி பருத்தும் சடாரௌ-என்றும்
தேவாதி பாதாதி கதம் பாஷ்யம் பராங்குச ஸ்ருதே
ப்ராவர்த்தயத் யச்சேவ தம் சடஜித் ஸூக்தி தேசிகம் -என்றும்
ஸ்ரீ தேவ ராஜ குருதோ த்ரவிடாக மாந்த பாஷ்யம் ஹ்வவாப்ய புவி ய ப்ரத யாஞ்சகார
தம் யாதவாத்ரிபதி மாலய சமர்ப்பணைக நிஷ்டம் பஜேய ஜநநீ குரு மஸ்மாதார்யம்-என்றும்
சொல்லக் கடவது இ றே-

இப்படி நடந்து போருகிற ஈட்டின் வரலாற்றை
சீரார்
ஆங்கு அவர்பால்
என்கிற இரண்டு பாட்டாலும் விசதமாக அருளிச் செய்து அருளினார் இ றே பெரிய ஜீயர் –
அவ்வளவும் அன்றிக்கே
திருவாய் மொழிக்கும் மூவாயிரத்துக்கும் திருவாய் மொழிப் பிள்ளைக்கு நாலூர் ஆச்சான் பிள்ளை அர்த்தம் பிரசாதித்து அருளினதுக்கு த்யோதகமாக
மாற்றுத் தாய் -என்கிற பாட்டின் வ்யாக்யனத்திலே பெரிய ஜீயர் தாமே ஸூ சிப்பித்து அருளினார்
இரண்டு நிர்வாஹங்கள்-ஈற்றுத் தாய் -ஸ்ரீ கௌசல்யை
மாற்றுத்தாய் –கூற்றுத்தாய் -இரண்டுக்கும் சுமத்ரை கைகேயி -மற்ற தாய் யமன் போல என்றவாறு
மொழியை மாற்றிச் சொன்ன -கைகேயி
கூற்று -கூறு கொண்ட தாய் -பாயாசம் கூறு கொண்ட தாய் சுமத்ரை –
பிள்ளை செய்து அருளின பெரியாழ்வார் திரு மொழி வ்யாக்யானத்தில் பல இடங்களிலும் நாலூர்ப் பிள்ளை பிரசாதித்ததாக
நாலூர் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர் என்று இ றே அருளிச் செய்தது
பிதா புத்ரார்களுக்கு திருவாய் மொழி முகேன உண்டான சிஷ்யார்ச்சார்யா சம்பந்தம்
கூராதி பட்டார்யர்கள் இடங்களிலும்
அபய பரதராஜ தத் புத்ரர்கள் இடத்திலும்
கிருஷ்ண பாத லோகாச்சார்யர் இடங்களிலும்
மாதவ பத்ம நாபர் இடங்களிலும்
கோலேச தேவாதிபர் இடங்களிலும் தர்சிக்கலாய் இருக்கும் –

இப்படி தேவாதிபராலே அதிகத பரமார்த்தரான ஸ்ரீ சைலாதீச தேசிகரும்
ஸ்ரீ சைல நாத முரு பக்திப் ப்ருதம் சடாரௌ -என்னும்படி ஆழ்வார் திருவடிகளில் அதி பிரவணராய்
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலினே-என்று சொல்லுகிறபடியே ஆழ்வார் திருவடிகளிலே அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அன்வயித்து
அவருடைய அமுத மென்மொழியான திருவாய் மொழியே தமக்கு தாரகாதிகள எல்லாமுமாக அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து போரா நிற்க

அப்படி அனுபோக்தாவான அந்த திருவாய் மொழிப் பிள்ளை மாதகவால் வாழும் மணவாள மா முனிவன் -என்றும்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் -என்றும் பேசும்படி
பெரிய ஜீயரும் அவர் திருவடிகளை ஆஸ்ரயித்து
அஸி ச்ரயதயம் பூய ஸ்ரீ சைலாதீச தேசிகம்
அசேஷ நஸ்ருணோத் திவ்யான் பிரபந்தான் பந்த நச்சித -என்கிறபடியே
திருவாய்மொழி முதலான அசேஷ திவ்ய பிரபந்த தாத்பர்யத்தையும் அவர் உபதேச முகத்தாலே லபித்து அருளினார் இ றே-

பின்பு சர்வ லோக பிரசாரம் உண்டாம்படி இ றே இவர் ஈட்டை நடத்தி அருளிற்று –
அதுக்கு மேலே இவருக்கு பெருமாள் அருள் பாடிட்டு அருளி தம் திருவடி ஊன்றுவித்து இ றே
திருவாய் மொழியின் ஈட்டை பிரவர்த்திப்பித்ததும் –
சரணாப் ஜ சமர்பணாத் தர்சயன் துர்க்ரஹா நர்த்தான் த்ரமிட உபநிஷத் கிராம் -என்னக் கடவது இ றே
அதனால் முப்பத்தாறாயிரப் பெருக்கர் என்றாயிற்று இவர் பேர் பெற்றது –
ஆர்யாச்ச் ஸ்ரீ சைல நாதா திகத சட ஜித் ஸூ க்தி பாஷா மஹிம் நா யோகீந்தரஸ் யாவதாரோ அயமிதி ஸ கதிதோ யோ ரஹச்ய பிரபந்தான்
வ்யாக்யாத் வா நாதரி யோகி பரவர வராத நாராயணாத் யைஸ் ஸ்வ சிஷ்யைஸ் சாதா நீத்
சம்ப்ரதாயம் வரவர முநிபம் நௌமிதம் துங்க போதம் -என்னும்படி இ றே பெரிய ஜீயர் பிரபாவம் இருப்பது
பின்பும் –
யோ அவாப்ய சௌ ம்ய வர யோகி வராச் சடாரி ஸ்ரீ ஸூ க்தி பாஷ்ய மத தத் பிரதிதம் விதேநு
தான் –பட்ட நாத முனி வான மஹாத்ரியோகி வாதூல வமச்ய வரதார்யா முகன் பஜாமா -என்னும்படி
சௌ ம்ய ஜாமாத்ரு முனி வர்யர் சம்ப்ரதாயம் நடந்து போரும்படி இதுவாயிற்று-

அஷ்ட திக் கஜங்கள் -பொன்னடிக்கால் ஜீயர் –பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் –திருவேங்கட ஜீயர்–
கோயில் அண்ணன் -எறும்பி அப்பா -பிரதிவாதி பயங்கர அண்ணன் -அப்பிள்ளார் –அப்பிள்ளை –
முதல் திருவந்தாதி இரண்டாம் மூன்றாம் திருவந்தாதி விபுல வியாக்யானம் அருளி உள்ளார்கள்
அப்புள்ளார் -வேற -நடதூர் அம்மாள் தேசிகன் -ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனம் –

தான் பட்ட நாத முனி என்று இவர்களில் பிரத பாத்ரரான பட்டர் பிரான் ஜீயரும்
( மோர் முன்னர் ஐயன் -பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -பேரன் திருக்குமார் -பிள்ளை லோகம் ஜீயர் )
சகல திவ்ய பிரபந்த வ்யாக்யானங்களையும் ஸ்வாச்சார்யா முகேன லபித்து அதுக்கு த்யோதகமாக
அத்தை ஸ்வ பிரபந்தமான அந்திம உபாய நிஷ்டையில்
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட மணி மாயன் –4-8-2-என்கிற இடத்தில் கிடாம்பி ஆச்சான் கதையையும்
பொன்னுலகு ஆளீரோ -6-8-1–என்கிற பாட்டின் ஈட்டில் அருளாள பெருமாள் எம்பெருமானார் கதையையும்
தன்னை பரமபதம் அனுப்பாமல் கூரத் ஆழ்வான் படுத்துவதை ஆளவந்தார் திருவடி சேர்ந்து நெஞ்சாறல் தீருவேன்
நாவ காரியம் –4-4-1-நா அக்காரியம் -நாவுக்கு செய்யக் கூடாத கார்யம் ஓம் நமோ நாராயண என்கிற பாட்டின் வ்யாக்யானத்தில்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் -வடுக நம்பி இவர்கள் அருளிச் செய்த வார்த்தைகளையும்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்த திருப் பாவை வ்யாக்யானத்தில்
நஞ்சீயர் ஸ்ரீ பாதத்தை அகன்று போவான் ஒருவன் வைஷ்ணவன் விஷயமாக தத் சம்பந்தம் உடையாராய் இருப்பார்
ஜ்ஞானாதிகரைக் குறித்து ஜ்ஞானாதிகையான அம்மையார் அருளிச் செய்த வார்த்தையும்
நம் ஆழ்வாரை பகவத் அவதாரமாக ஆளவந்தார் அருளிச் செய்து போருவர் -என்னுமது திரு விருத்த வ்யாக்யானத்தில் ஸூ ஸ்பஷ்டம் -என்றும்
நம்புவார் பதி வைகுந்தம் -என்கிற இடத்தில்
கூரத் ஆழ்வான் திரு மகனார் அவதரித்த பின்பு சம்சாரத்துக்கும் பரமபததுக்கும் இடைச் சுவர் தள்ளி ஒரு விபூதி யாயிற்று -என்றும்
கண்ணி நுண் சிறுத் தாம்பு வ்யாக்யானத்தில் திரு வழுதி வளநாடு தாசர் அருளிச் செய்த வார்த்தையும்
அவர் பாசுரம் கொண்டு அறுதி இடக் கடவோம் என்று பிள்ளை லோகாச்சார்யார் தாம் அவதார விசேஷம் என்னுமத்தை
ஸ்வ ஆச்சார்யர் ஸ்ரீ வசன பூஷண வியாக்யான பிரவேசத்திலே பிரதிபாதித்த படியையும்
வர்ண தர்மிகள் தாஸ வ்ருத்திகள் -என்கிற இடத்துக்கு திரு நாராயணபுரத்தில்
ஆயி அருளிச் செய்த ஸ்ரீ வில்லி புத்தூர் பகவர் துறை வேறிட்ட கதையையும்
நீங்கள் வரண தர்மிகள் நீங்கள் நாங்கள் தாச வ்ருத்திகள் கைங்கர்யம் விசேஷ தர்மம்
சரீரம் பார்க்காமல் ஆத்மாவைப் பார்த்து –
மற்றும் தாம் ஐதிஹ்யமாக அருளிச் செய்யும் அசேஷ ரஹச்ய வாக்யங்களையும்
அஸ்மத் ஆச்சார்யா உக்தம் என்று பிரகாசிப்பித்தது அருளினார் இ றே-

ஏவம் விதமான அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் தம் திருவடிகளை ஆஸ்ரயித்து திருவடிகள் அல்லது ஒரு தெய்வம் அறியாத
மதுரகவி தாசர் அண்ணன் முதலானோர்க்கு பிரசாதித்து அருளினார்
அவரும் -பூயோ தீர்ணமிவ சௌம்யவரம் முநீந்த்ரம் -என்னும்படி வரவரமுனிவர் யாபராவதாரமாய் -தன்நாமபாஜனராய் தமக்கு
சப்ரஹ்ம சாரிகளான அழகிய மணவாளச் சீயருக்கு திருவாய் மொழி ஒழிந்த அனைத்து ஆழ்வார்கள் அருளிச் செயல் மூவாயிரத்துக்கு வியாக்யானமும்
ஆச்சார்யர்கள் திவ்ய ஸூ க்திகளான அசேஷ ரகஸ்ய வியாக்யானமும் தாமே பிரசாதித்து அருளினார்
பெரிய திரு மொழிக்கு அண்ணன் மேல் நாட்டிலே எழுந்து அருளி இருந்த காலத்திலே அவர் சந்நிதியிலே அர்த்தம்
அனுசந்தித்து அருளினார் -என்று அஸ்மத் ஆச்சார்யர் உக்தம் –

அநந்தரம் -வான மஹாத்ரி யோகி -என்று ப்ரஸ்துதரான வானமா மலை ஜீயரும் தம்முடைய ஸ்ரீ பாதத்தை
ஆஸ்ரயித்த ராமானுஜன் பிள்ளைக்கும்
கோயில் பெரிய கந்தாடை அண்ணன் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த ஸூத்த சத்வம் அண்ணனுக்கு
ஈடு முதலான திவ்ய பிரபந்த வ்யாக்யானங்களை பிரசாதித்து அருள
அவர்களும் அப்படியே தாம்தாம் சிஷ்ய புத்ரர்களுக்கு ப்ரவர்த்தகராம் படி பிரசாதிக்க
அத்தாலே அத்யாபி நடந்து செல்கிறது
இனி ருசிர ஜாமாத்ரு யோகீந்திர பாதாஸ்ரயராய்
வாதூல வம்ச வரதார்யரான பெரிய அண்ணனும்
ஆச்சார்யா நியமனத்தின் படியே ஆச்சார்யா பௌத்ரரான நாயனாரை அனுவர்த்தித்து திருவாய் மொழியின் ஈடு பிரசாதித்து அருளினார்

வேதாந்தசார்யராய் -பின்பு ஸ்ரீ வைஷ்ணவ தாசர் -என்று பெரிய ஜீயரால் நிரூபகத்தை யுடையரான பிரதி வாத பயங்கர அண்ணாவும்
பட்டர் பிரான் ஜீயர் ஸ்ரீ பாதத்திலவராய் -அழகிய மணவாள பெருமாள் நாயனார் -என்ற திரு நாமத்தை யுடையவரான
ஒன்றும் தேவும் -வியாக்யானம் பொழுது வந்தார் -பிரமாணங்கள் பல காட்டி அருள
-ஸ்ரீ வைஷ்ணவ தாசன் -பரர்கள் கோஷ்டிக்கு பயங்கரம் என்று பிரசித்தி
அடியேன் ஸ்ரீ வைஷ்ணவ தாசன் -இவர் சிஷ்யர்கள்
அடியேன் மதுரகவி தாசன் -அனந்தாழ்வான் சிஷ்யர்
அடியேன் ஸ்ரீனிவாச தாசன் -சோளிங்க புரம் சிஷ்யர்கள் -மாசி உத்தராடம் திரு நஷத்ரம் —
திருப்பதி அழகிய மணவாள சீயர் முதலானோர்க்கு ஈட்டையும் ஸ்ரீ பாஷ்யத்தையும் பிரசாதித்து அருளி
திருவாய் மொழி நாயனார் என்னுமதுவே நிரூபகமாம் படி ஜீயரை விசேஷ அபிமானம் பண்ணி அருளினார்

முன்பு திருவாய் மொழியின் ஈடு ஏகமுகமாய்
அநந்தரம் த்ரேதாயாவாய்
பெரிய ஜீயரால் ப்ராக் சதுர்த்தாவாய்
அநந்தரம் சஹச்ர முகமாய் ப்ரவஹிக்கும் படியாயிற்று
மற்றும் உண்டான ஆச்சார்யர்கள் சம்ப்ரதாயமும் அவ்வவ சம்ரதாயஸ்தர் உபதேச மூலமாகவும் கண்டு கொள்வது –

திரிவிக்ரமன் ஸ்ரீ பாத தீர்த்தம் –ஆகாச கங்கை -மூன்றாக -ஏழாக -பகீரதன் -மூலம் பரவினது போலே
பஞ்ச ஸ்தவம் -ப்ராக் சதுர்த்-முதலில் நான்காக -சூரா தேவ கங்கை -நான்காக பிரிந்து அங்கே சப்தம் –
இதுவும் பாவனம் -தீர்த்தங்கள் ஆயிரம் அன்றோ –

இப்படி உபதேச மாலையாய்
துறையுண்டு வருகிற இத் தனியன்கள் இரண்டையும்
திருவாய் மொழி முதலான திவ்ய பிரபந்த வியாக்யானம்
ஆரம்ப வேளையிலும் அவை சாற்றும் சமயத்திலும்
அனுசந்தித்துக் கொண்டு போரும்படி அருளிச் செய்தார் ஆயிற்று –

இந்தத் தனியனில்
நிகமாந்த யோகி ஜகதாச்சார்யௌ சகிருஷ்ண த்வயௌ -என்று
நஞ்சீயரையும்
நம் பிள்ளையையும்
பெரிய வாச்சான் பிள்ளையையும்
வடக்குத் திரு வீதிப் பிள்ளையையும்
எடுத்து இருக்கச் செய்தேயும்
இனிமேல் பிரத்யேகமாகவும் இவர்கள் தனியங்களை அனுசந்திக்கிறதுக்கு கருத்து-
நஞ்சீயர் ஒன்பதினாயிரப்படி அருளிச் செய்கையாலும் நம்பிள்ளை ஈடு முப்பத்தாறாயிரத்துக்கு ப்ரவர்த்தகர் ஆகையாலும்
பெரிய வாச்சான் பிள்ளை இருபத்து நாலாயிரப்படி வியாக்யானம் அருளிச் செய்கையாலும்
வடக்குத் திரு வீதிப் பிள்ளை இந்த நாடு அறிய மாறன் மறைப் பொருளை நன்கு உரைத்த ஈடு முப்பத்தாறாயிரப் படி யாலும் –

——————————————————————–

பூர்வாச்சார்யர்கள் தனியன்கள் -வியாக்யானம்-

திருக் குருகைப் பிரான் பிள்ளான் -தனியன்
திராவிட கம சாரஜ்ஞம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
ருசிரம் சர்வஞ்ஞம் குருகேசார்யம் நமாமி சிரஸான் வஹம் –

திராவிட ஆகம சாரஜ்ஞ -உணர்ந்தவர் -ராமானுஜ்ச்ய பதாஸ்ரிதன்
ருசிஜம்-சர்வஜ்ஞம் -அழகிய -எல்லாம் அறிந்த – இரண்டு பாட பேதம் –
-குருகேசார்யம் நமாமி சிராசாம் வஹம் -தினம் தலையால் வணங்குவோம்
ஐப்பசி பூராடம் திருவவதாரம் -அபிமான புத்திரன் -மாமன் திருக்குமாரர் –

நஞ்சீயர்
நமோ வேதாந்த வேத்யாய ஜகன் மங்கள ஹேதவே
யஸ்ய வாக் அம்ருதாசார பூரிதம் புவன த்ரயம்
பங்குனி உத்தரம் -திருவவதாரம்

நம்பிள்ளை –
நம்பூர் வரதர்
வேதாந்த வேத்யாம்ருத வாரி ராசேர்
வேதார்த்த சாராம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்த மஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரி தாசம்
வர்ஷியா நிற்கும் -வர்ஷித்தார் -லோகம் உஜ்ஜீவிக்க –
கருணையால் பூர்ணர்
கலி வைரி தாசர் -கலி கன்றி தாசர் -கார்த்திகை கார்த்திகை திருவவதாரம்

பெரியவாச்சான் பிள்ளை -ஆவணி ரோஹினி
அருளிச் செயல்கள் -ஸ்தோத்ரங்கள் -ஸ்ரீ ராமாயணம் -ரகஸ்யங்கள் -நான்கு சிம்ஹாசனங்கள் பரம காருணிகர்
ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷை கலஷ்யாணாம் ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா
கடாஷன லஷ்யாணாம்-பாட பேதம் –
யாமுனாச்சார்யர் திருக்குமாரர்
ஸ்ரீ கிருஷ்ணர் திரு நாமம்

வடக்குத் திருவீதிப்பிள்ளை -ஆனி சுவாதி
இரு கண்ணர்-இவரும் பெரியவாச்சான் பிள்ளையும்
நம சர்வ சித்தி -சமஸ்த புருஷார்த்த சித்தி இவர் பிரசாதத்தால் -ஸ்ரீ கிருஷ்ண பாதர் பாதாப்ஜம்-சிரஸா சதா நமாமி
யத் பிரசாத பிரபாவத்தால்

பிள்ளை லோகாச்சார்யர் -1205 ஐப்பசி திரு வோனம் /1207 நாயனார் மார்கழி அவிட்டம்
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம
போகி பாம்பு -தன்னைக் கண்டால் பாம்பைக் கண்டால் போலே -என்பர்
ஜீவாது -ரஷிக்கும் அமுது -அஷ்டாதச ரகச்யன்களே அரு மருந்து

நாயனார் ஆச்சான் பிள்ளை -ஆவணி ரோஹிணி
ஸ்ருத்யர்த்த சார ஜனகம் ஸ்ம்ருதி பாலமத்ரம்
பத் மோல்ல சத் பகவதன்க்ரி புராண பந்தும்
ஜ்ஞா நாதி ராஜமபயப்ரத ராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச சாரார்த்த பிரகாசப்படுத்துமவர் –
பகவான் திருவடித் தாமரைகள் -பழைய அடியன் விகசித்து இருக்கும் தாமரைகள்
ஜ்ஞானம் அதிராஜம் பட்டம் சூட்டிக் கொண்டவர்
அபயப்ரத ராஜர் -புத்ரம் –பெரிய வாச்சான் பிள்ளை திருக்குமாரர் –

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -மார்கழி அவிட்டம் -நைஷ்டிக பிரமச்சாரி –
திராவிடம் நாயா ஹ்ருதயம் குரு பர்வ க்ரமாகதம்
ரம்யா ஜாமாத்ருதேவேந தர்சிதம் கிருஷ்ண ஸூ நு நா –
தர்சிதம் -கண்டு காண்பித்தார்
குரு பரம்பரைகளையும் -அதன் மூலம் வந்த தமிழ் வேத சாரம் ஹ்ருதயம் –
வர்ணம் ஆஸ்ரமம் -பிராமண்யம் செருக்கு ஒட்டிக் கொண்டு -பய ஜனகம் -மோஷ விரோதி –
வீதி தோறும் புறப்பாடு -ஆச்சார்ய ஹிருதயம் சாதித்து -சங்கை தீர்த்து அருளினார் –

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் –ஆனி ஸ்வாதி
30 வயசு வரை -ஞானம் இல்லாமல் -கேலியாக உலக்கை கொழுந்து -முசலை கிலசம் -நீராட்டுவித்து பண்டிதர் ஆக்கி
பன்னீராயிரப்படி -பத உரை யுடன் விளக்கி அருளி
அழுந்தி உள்ள சேதனரை -சம்சார ஆர்ணவ சம் மக்ன ஜந்து சம்சார போதகம் அக்கரைப் படுத்துவர்
ஸூந்தர ஜாமாத முனி சரணாம் புஜம் பிரபத்யே

பிள்ளை லோகாச்சார்யர் ஸ்ரீ வசன பூஷணம் சாதித்து –
நாயனார் ஆச்சான் பிள்ளை -24000 படி பிரவர்த்தகர்
நாயனார் -ஆசார்ய ஹ்ருதயம் அருளிச் செய்ததாலும்
இவர்கள் தனியன்கள் சத்விருத்தர்கள் அனுசந்தானம் செய்வார்கள் -சிஷ்டாசாரம் முக்கியம் நம் சம்ப்ரதாயம் –

நாலூராச்சான் பிள்ளை -மார்கழி பரணி
மேலூருக்கு ஈந்தவர் -என்பதால் இவரது
சமம் தமம் நிறைந்த நமோஸ்து தேவராஜாய -நாலூர் பிள்ளை என்கிற -ராமாநுஜார்ய தாசர் திருக்குமாரர்

திருமலை ஆழ்வார் -வைகாசி விசாகம்
திருவாய்மொழி
நம ஸ்ரீ சைல நாதாயா
குந்தி நகர ஜன்மமே
பிரசாத லப்த பரம பிராப்ய கைங்கர்ய சாலினே
தொண்டர்க்கு அமுது உண்ண -திருவாய் மொழி ஆழ்ந்து – சப்த அர்த்த பாவ ரசம் -அனைத்தையும் அறிந்து
தத் ஏக நிஷ்டராய் -தத் வியதிரிக்த சாஸ்த்ரங்களை புல்லுக்கு சமமாக கொண்டு திருவாய்மொழிப் பிள்ளை திருநாமம்

மா முனிகள் -ஐப்பசி மூலம்
ஸ்ரீ சைல —
அனைத்தும் அறிந்து -உபதேச முகத்தாலே லப்தராய்
அனைவரையும் திருமகள் கேள்வனுக்கு ஆக்க
தானே தன் சரித்ரம் கேட்டது போலே ஈடு கேட்டு அருளி
பெருமாள் தனிக்கேள்வி ஸ்ரீ ராமாயணத்தில்
இங்கே மிதுனமாக – பெரிய திரு மண்டபத்தில் தொடங்கி நடத்த திரு அடியை ஊன்றி அருள்பாடிட
ஆவணி ஸ்வாதி தொடங்கி ஆனமூலம் வரை
பெரிய பெருமாள் தொடக்கம் சாற்று அன்று அரங்க நாயகம் பிள்ளையாக வந்து
முப்பத்தாராயிரப் பெருக்கர் திரு நாமம் சாத்தி தனியனும் அருளி
நாம் யார் -பெரிய திருமண்டபம் யார் தாமாக தன்னைத் தனித்து அழைத்து நீ மாறன் செந்தமிழ் –நாளும் வந்து உரை –
தனியனுக்கு அர்த்தம் பார்த்தோம் -முன்பு -விரிவாக
கோயில் அழகிய மணவாள ஜீயர் -வரை தனியன்கள் பார்த்தோம் –

———————————————————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: