பகவத் விஷயம் காலஷேபம் -2—பொது தனியங்கள் வியாக்யானம் -/-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

ஸ்வாத யன்நிஹா சர்வேஷாம்
த்ரய்யந்தார்த்தம் ஸூ துர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ்வயம்

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –
அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத

————————————–

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த தனியன்

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –

மத் அன்வயானாம் -ஆளவந்தார் உடன் அன்வயம் -சம்பந்தம் உடைய அனைவருக்கும்
நித்யம் நியமேன-
அப்படிப்பட்ட திருவடிகளை தலையால் வணங்குகிறேன்
இந்த ஞானம் -சர்வாதிகாரம்
திராவிட ப்ரஹ்ம சம்ஹிதை -மயர்வற மதிநலம் அருளப் பெற்றதால் –பக்தி ரூபாபன்ன ஞானத்தால் -ஞானம் கனிந்த
நலம் பக்தியால் -வாசிகம் ஆக்கி -புதியதாக அருளிச் செய்யாமல் -இருந்ததை பிரகாசப்படுத்தி
மரங்களும் இரங்கும் படி ஈரச் சொல்லாலே மணி வண்ணாவோ -தொண்டர்க்கு அமுது உண்ண சொன்ன சொல் –
பெரிய முதலியாருக்கு இந்த ஞானத்துக்கு உபாதானம் -காரணம் -ஆழ்வார் ஆகையாலும் அவர் திருவடிகளில் விழுகிறார்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -எத்திறம்
-ஸ்ரீ பராசரர் நாதமுனி ஆழ்வார் மூவரும் -கண்ணன் மேலே –ஈடுபட்ட -மூவரையும் அருளுகிறார் ஸ்தோத்ர ரத்னம்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன்-
நம் கண் அல்லது இல்லை கண்ணே -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –

மாதா –
உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது–பெருகைக்கு வருந்தி–பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ வேதனையை அனுபவித்து–அஸூ த்திகளையும் மதியாதே பால்ய தசையிலே ஆதரித்து
பக்வன் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப்-எதிர் பேச்சு பேசினாலும் – பொறுத்து அகல இசையாதே
அவன் பிரியத்தையே வேண்டும் -மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை –
நாய் போல் –நோய் போம் மருந்து -அருளியவர் -கம்பர்
இடைக்காதர் ஔவையார் -வள்ளுவர் -குரு முனிவர் -அகஸ்தியருக்கும் நங்கை சிறு முனிவர் தான் ஆதாரம் என்பர்
தென்னா தென்னா என்று அவனும் சொல்லும் படி

பிதா –
அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி உத்பாதகனாய் என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும்

யுவதயஸ் –
இருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை

தனயா –
அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய்— பால்யத்தில் ஸூ ககரனாய்–
பக்வ தசையில் ரஷகனாய் –ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான-புத் -என்னும் நரகத்தை -தாண்டுவிப்பவன் -புத்ரனைப் போல் இருக்கை –

விபூதி –
விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கை –

சர்வம் –
அனுக்தமான சர்வ போகங்க ளுமாய் இருக்கை -இஹ லோக போகம் -மோஷ உபாயம் -முக்த பிராப்யமும்-

யதேவ –
எந்த ஆழ்வார் திருவடிகள் மட்டுமேயோ -ஒன்றேயோ -எப்போதுமே –
அவதாரண்த்தாலே -சேலேய் கண்ணியர்-திருவாய் மொழி -5-1-8-
என்று இருக்கும் ஆழ்வார் நினைவு இன்றி இருக்கை –

நியமேன –
என்றும் ஒக்க அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய ப்ராமாதிகமாகவும் புறம்பு போவது அன்றிக்கே இருக்கை –
ஆதிப் பிரான் -திருவடிகளையும் -அவருக்கு பிரியம் என்றதாலே -கரிய கோலத் திரு உரு காண்பன் –

மதநவ்யாநாம் –
வித்யயா ஜந்ம நா வா -என்று சூர்யன் வாயு இருவருக்கும் வித்யை ஜந்ம புத்திரன் தன்மை அடைந்த
உபய சந்தான ஜாதருக்கும்

ஆத்யஸ்ய –
வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆசார்யராய் இருக்கை -வைஷ்ணவ சந்தானத்துக்கு பிரதம ஆச்சார்யர்

ந குலபதேர் –
ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே கோத்ர ரிஷிகளும் அவரே என்கை –
பிரபன்ன குலத்தவருக்கு -பராங்குச பரகால யதிவராதிகள் -கோத்ர சூத்ர சரணம்

வகுளாபி ராமம் –
திரு மகிழ மாலையாலே அலங்க்ருதமாய் உள்ளத்தை -மகிழ் அலங்காரமான திருவடிகள்
இத்தாலே திருவடிகளில் பரிமளத்தாலே வந்த போக்யதையைச் சொல்லுகிறது –
நல்லடி மேல் அணி நாறு துளையை -திருவாய் மொழி -4-2-2-வ்யாவர்த்திக்கிறது –

ஸ்ரீ மத –
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே நித்ய சம்யுக்தமாய் இருக்கை –
அப்ர வீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதா விபீஷண அந்தரி ஷகதஸ் ஸ்ரீமான் ப்ராதரம் ராஷஸாதிபம் -யுத்த -16-17-
பரமாபதமா பன்னோ மனஸா சிந்தயத் ஹரிம் ஸ து நாக வர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47-
சர்வ பரியகரஸ் தஸ்ய ராம ஸ்யாபி சரீரத லஷ்மனோ லஷ்மி சம்பன்னோ பஹி ப்ராண இவாபர -பால -18-28-என்று
பகவத் பிரத்யாசத்தியை ஐஸ்வர்யமாக சொல்லக் கடவது இ ரே –
என்னுடைய சம்பத்துக்கு அடியான ஐஸ்வர்யத்தை உடையார் -என்றுமாம்

ததங்க்ரி யுகளம் –
அது -என்னும் அத்தனை ஒழிய பேசி முடிக்க ஒண்ணாது -என்கை –
யுகளம் –
சேர்த்தியால் வந்த அழகை உடைத்தாய் இருக்கை –
ப்ரணமாமி மூர்த்நா –
ஆழ்வார் உடைய திருவடிகளை நினைத்த வாறே-நம -என்று நிற்க மாட்டாதே-அவர் திருவடிகளிலே தலை சேர்க்கிறார் –
நம-பராசர் நாத முனி –முன் ஸ்லோகங்களில் -இங்கு மூர்த்நா -வாசி உண்டே –

கீழ் உபகாரகரை ஆஸ்ரயித்த இத்தால் செய்தது–குரு பரம்பரை பாஷ்யகாரர் -முன்னால் இந்த பொது தனியங்களில் –
முமுஷூவுக்கு உபகாரகரே சேஷித்வ பிரதிபத்திக்கு விஷய பூதரும் ஸ்துத்யரும் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று
ஒருவருக்கு சேஷிகள் இருவராம் படி இருக்கை எங்கனே -என்னில்
கருதி சேஷித்வம் யாகத்துக்கும் புரோடாசத்துக்கும் உண்டானால் போலே
ஈஸ்வரன் பிரதான சேஷியாய் ததீயர் த்வார சேஷிகளாம் இடத்தில் விரோதம் இல்லை

அதவா
நிருபாதி சேஷி அவன் தத் சம்பந்தம் அடியாக வந்தது ஆகையாலே பாகவத சேஷித்வம் சோபாதிகம் என்றுமாம் –
தமக்கு ஸ்தோத்ர ஆரம்ப ஹேதுவான ஜ்ஞான பக்த்யாதிகள் பிதா மஹோபாத்ததனம் -என்கைக்காக-
த்வார சேஷிகள் -ஆச்சார்யர்கள்
நேச நிலைக்கதவு -நீ திறவாய் -நீ நீக்கு -காலஷேபம் சொல்லி கேட்போம் -கதவுகள் மிக்க நேசம் கொண்டவை –
பாகவத சேஷத்வம் -ஈஸ்வரன் நிருபாதிக சேஷி -நித்ய நிருபாதிக சம்பந்தம்
ஈஸ்வரன் அருள் காரணத்தால் வந்தது பாகவத ஆச்சார்யா சேஷத்வம் சௌபாதிகம்-

முதல் மூன்று ஸ்லோகத்தாலே
பெரிய முதலியார் உடைய ஜ்ஞான பகத் யாதிக்யம் -சொன்னார்
நாலாம் ஸ்லோகத்தாலே -இவ்வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தானுமதம் -அதாவது -வைதிகரும் பெரியோருமான பராசரால் அனுமதிக்கப் பட்டது -என்கிறார் –
ஐஞ்சாம் ஸ்லோகத்தாலே இவருக்கு இந்த ஜ்ஞானம் ஆழ்வாராலே வந்தது -என்கிறார் –

மத் அன்வயாநாம் யதேவ நியமேன–மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம்–ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபி ராமம்
ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம் மூர்த்நா ப்ரணமாமி -என்று–அந்வயம் –

————————————————————————————

அக்ரியம் யதீந்திர சிஷ்யர் -வேதாந்தம் அறிந்தவர்களில் முதலில் எண்ணப் பட்ட ஸ்ரீ கூரத் ஆழ்வான் –
அஸ்மத் குரு -என்றார் -உடையவர் -ஒரு மகள் தன்னை உடையேன் என்கிறார் -விநியோகம் கொள்ள –
விசேஷித்து ஆதாரம் -ஸ்வ ஆச்சார்யர் விஷய பாரதந்த்ர்யம் -சிஷ்ய ஆச்சார்ய லஷணம் பூர்த்தியில் சீமா பூமி கூரத் ஆழ்வான் –
யத் சம்பந்தாத் -என்று கூத்தாடினார் ஸ்ரீ பாஷ்யகாரர் -சம்பந்தம் சிஷ்யர்களுக்கும் ஆச்சார்யர்களுக்கும் பொருந்தும் –
அர்வாஞ்சோ –சோயம் ராமானுஜ முனிம் அபி –கதம் வர்ணதாம் -மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் –அடியாக விரும்பி –
இவ்வருகில் உள்ளாறும் அல்லா வழியைக் கடப்பது இவர்கள் சம்பந்தத்தால்
அச்சுதன் -ஆழ்வார் -உடையவர் -ஆழ்வான் -பரம்பரையாக வந்த பெருமை உண்டே நமக்கு -அடி உடையோம் ஆக இருப்போம்
மாறன் அடி பணிந்து -மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் –
74 சிம்ஹாசானபதிகள் -முத்ரா மோதிரம் சாதித்து ராமானுஜர் சம்பந்தம் பெறுவோம்
ஆரியர்காள் கூறும் -என்று பேசி வரம்பு அறுத்தார் -பட்டர் -மூலம் அஷ்ட ச்லோகீ முகேன ரகஸ்ய த்ரய சம்பந்தம்
பிள்ளான் உடையவர் ஏவி -முதல் வியாக்யானம் -தீபா உத்பன்னம் போலே பல வியாக்யானங்கள் -சாதித்து அருளாய் தொடங்கி வைத்து அருளினார்
பட்டர் நிர்வாஹம் -பலவும் உண்டு
ஜாக்ர வாக்ம்சஸ் -எனபது எப்போதும் விழிப்பு உணர்ச்சியோடு இருப்பது எம்பெருமானை அன்றி வேறு ஒன்றும் பாராது
அவனை அன்றி மற்று ஒன்றும் உணராது நினையாது அவனையே அனுபவித்து இருக்கும் ஆழ்வாரே இச் சொல் தொடருக்கும் இழக்கும்
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றாருக்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே
நம்பிள்ளை குமாரார் ராமானுஜர்
ஸ்ரீ வசன பூஷணம் -ஆச்சார்ய ஹிருதயம் -ஜீவ ஜீவாது -வகுள பூஷண சாரம் கூர குலோத்தம தாசர் -இயற் பெயர் –

——————————————————————-

பூதம் –இத்யாதி தனியன் -ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்
பராங்குச முனிவரை வணங்குகிறேன்
அங்கி -ஆழ்வார்
பூதம் சரச்ய –பரகால யதீந்திர மிஸ்ரா மதுர கவி -நித்யம் பிரண தோஸ்மி
திருக் கோஷ்டியூர் எழுந்து அருளி இருக்கும் பொழுது சாதித்த தனியன் –
நஞ்சீயர் வேண்டிக் கொண்ட படி
ஆண்டாளை நீளா என்று சரண் அடைந்த அந்த ஸ்லோகமும் இங்கேயே அருளிச் செய்தது
இங்கே ஸ்ரீ சுருக்கி -ஆழ்வார் தம் செயலை விஞ்சி இருப்பவள் என்பதால் தனி ஸ்லோகம் -அருளி –
நிரவதிக பகவத் பிரேம யுகதர் ஆழ்வார் பதின்மர்
சேஷ பூதர் மதுர கவி யதிராஜர் நித்ய சேவை
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே என்றதால் ஆழ்வாரை சொன்ன போதே அவரும் அந்தர்பூதர்
பூதம் -மாதவன் பூதம் –அசஹாயமான செயல்கள் செய்பவர் -என்று நிரூபிக்கும் படி மகத்தை -மாதவி குசும்பத்தில் கடல் மலை பூதத்தார்
சரச்ய -பொய்கை ஆழ்வார் -மல்லையாய் மதிள் கச்சி ஊராய் -திரு வெக்காவில் திருவவதாரம்
பூவில் நான் முகனைப் படைத்த -பொற்றாமரையில்
வதரி வடமதுரை -திரு மந்த்ரம் சரம ஸ்லோகம் –
மஹதாஹ்வய மாடங்கள் சூழ்ந்த அழகாய கச்சி -மாட மா மயிலை -கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பேய்-பெருமை -யானும் ஓர் பேயன் -பிறர் பேசும் படி
பித்தர் என்று பிறர் கூற-
பர பக்தி பர ஞானம் பரம பக்தி -ஞான தர்சன பிராப்தி
அறிந்து கண்டு அடைந்து -மூன்று நிலை கள்
பிரதானம் ஆதரவு -ஊற்றம் பற்றி
பட்ட நாத -வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனன் -பட்டர் பிரான்
வித்வான் களுக்கு உபகாரகர்
பெருமாளே பட்டர் -ஆண்டாள் கொடுத்த உபகாரகர்
பல்லாண்டு என்றும் காப்பிடும் -சோராத காதல் பெரும் சுழிப்பால் -15- தொல்லை மாலை ஒன்றும் பாராதே –
நிரவதிக பக்தி பிரேமா யுக்தராய்
ஸ்ரீ -பின்ன பதம் -ஸ்ரீ யை ஒத்த பெருமை கொண்ட ஆண்டாள் -விஷ்ணு சித்த குல –
பட்டநாத ஸ்ரீ -பெரியாழ்வார் பெற்ற செல்வம் -என்றுமாம் திருமகள் போல் வளர்த்தேன் என்றார் இ றே –
பக்தி சாரர் பக்தியாலே பூர்ணர் -பக்தியைப் பிரார்த்தித்து பெற்றவர்-பரமசிவன் கொடுத்த திருநாமம் – விஷ்ணு பக்தி சாரர்
இவருக்கு முடிந்த அவா -119- பொன்னி சூழ் அரங்க மேய பூவை வண்ணா –
குலசேகர் -தனி பெரும் பித்தன் -அரங்கன் திருவடியில் -நிரவதிக ப்ரேமம் கொண்ட ஸ்ரீ குலசேகர பெருமாள்
மால் அடி முடி மேல் கோலமாய் தாங்குபவர்
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் பெருமாள் விஷயத்தில் பிரேமம்
யோகி வாஹனர் பாண் பெருமாள் -இலங்கைக்கு இறைவன் தலை பத்து –ஓத வண்ணன் அரங்கத்து அம்மான் மற்று ஓன்று
காணாத முடிந்த -அஸ்தமித்த அந்ய பாவம் கொண்டவர் –
பக்தான்க்ரி ரேணு -மேவும் மனத்தான் -அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் –
ஓர் உயிர் பத்து சிந்தை பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள் ஒரே கருத்து
இவர் பிரார்த்தனை அவர் இடம் நிறை வேற்றி
எல்லையான ததீய சேஷத்வம் -அறிந்து அறிந்து தேறி தேறி யாதாம்ய ஞானம்
நிரூபகமான தொண்டர் அடிப் பொடி-துளவத் தொண்டாய தொல் சீர் -தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் -சேவித்து முடிச்சு விலகி புத்தி தெளியும்
பரகாலர் -வாள் வீசும் -மறுவலர் உடல் துணிய -பாஹ்யர்களை -குத்ருஷ்டிகள் -கானல் நீர் -தேடி போன மான் சிங்கம் உண்ட மான்
-தோள் வலியால் நிரசித்து -உக்தியாலும் நிரசித்து –
சூர்ய கிரணங்கள் அஜ்ஞ்ஞானம் போக்கும்
சாஸ்த்ரிய மார்க்கம் –புத்த விக்ரஹம் -அவைதிகம் -வைதிகம் ஆக்க மதிள் கைங்கர்யம் -காயிக கைங்கர்யங்கள் –
சொற்கள் என்னும் தூய மாலை -சாத்தி -சூட்டினேன் சொல் மாலை வாசிக்க கைங்கர்யம்
நின் காதலை எனக்கு அருள் -பிரார்த்தித்து
பத்திமைக்கு அன்புடையாய் -காதலை வளர்த்து
அரங்கம் எனபது இவள் தனக்கு ஆசை -தெள்ளியார் பலர் –
5 பதிகங்கள் நாயகி பாவம் 5 பதிகங்கள் தானான தன்மை திருக் கண்ணபுரம்
ததீய சேஷத்வம் -நின் திரு வெட்டு எழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை —
அல்லிக் கமலக் கண்ணன் -தனது அடியார் பெருமை கேட்டு பேர் ஆனந்தம் அடைவானே –
யதீந்திர மிஸ்ரான்
சப்த சதம் -700 சன்யாசிகளால் வணங்கப் பட்ட நாதர் -எதி தலை நாதன்
மிஸ்ர சப்தம் -பூஜ்ய வாசி -மிஸ்ரான் பஹூ வசனம்
ராமானுஜாச்சார்யர் என்னுமா போலே
அனுஷ்டரான மதுரகவியையும் சேர்த்து -இது வரை அருளிச் செய்யாத -பஹூ வசனம்
மதுரகவி எதிராசர் சேர்த்து உபதேச ரத்ன மாலை சேர்த்து அருளி –
மிஸ்ர பெரியோர் -சடகோபனை சிந்தை உள்ளே பெய்தற்கு இசையும் பெரியோர்
பொன் அரங்கம் என்னில் மயலே பெருகும் ராமானுசன் -அச்யுத பதாம் புஜ – வ்யாமோஹம் உண்டே
ஸ்ரீ மத் -செல்வம் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
அவயவ பூதர் -ஒழிவில் காலம் -பிரார்த்தித்த கைங்கர்ய ஸ்ரீயை உடையவர்
பராங்குசர் -பரர்களை வேத பாஹ்ய குத்ருஷ்டிகளை அங்குசம் இட்டவர்
ஓதி உணர்ந்தவர் முன்னால் என் செய்விப்பார் மனிசர் வித்யாமத ராஹித்யம் முழுது உணர் நீர்மையினால்
கொள் என்று -கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருபாக -தனம் -சேலே ய் கண்ணியரும் பெரும் செல்வமும் அவரே -தன்மதம்
குலம் தாங்கும் -சண்டாளர் ஆகிலும் –நும் அடியார்கள் ஆகிலும் கொடுமின் கொள்மின் -பரமனைப் பயிலும் திரு உடையார் –
-பயிலும் பிறப்பினை தோறும் எனை ஆளும் பரமரே
அடியார் அடியார் -ஸுவ ஸூ க்தி அங்குசன் -அருள் என்னும் தண்டால் அடித்து -ஒள் வாள் உருவி -மும்மதங்களை ஒட்டி
பரனான அவனுக்கே அங்குசம் -வசீகரிக்க வல்லவர்
வலக்கை ஆழி –இவை உடை மால் வண்ணனை மலைக்கு நா வுடையேன் -பாதத்தில் முன் செல்லான் –
வேதத்தின் முன் செல்வான் -விரிஞ்சின் முதலா ஞானத்தின் போதத்தின் முன் செல்வான் -ஒரு பாட்டு கால் வரி பாதம் தாண்ட மாட்டான் -கம்பர்
எண்ணாத என்னும் முனி
பர ரஷணமே இவர் சிந்தனம்
சம்ரஷணத்தில்-பரன்-அவன் ரஷணத்திலும்-ஆளும் ஆளார் –பின் செல்வார் -மற்று ஓன்று இல்லை-இளைய பெருமாள் ஒருவர் போதாதே
தனிமையும் பெரிது உனக்கு -நான் சேரவில்லை அவத்தங்கள் விளையும் -என் சொல் கேள் -அசுரர்கள் தலைப் பெய்யும் –
ஒ ஒ உலகின் இயல்வே ஈன்றவள் இருக்க மணை நீர் ஆட்டி —மாலுக்கும் இருப்பு அரிதாம் படி கூப்பாடு -கொடு உலகம் காட்டாய் –
மற்று ஓன்று இல்லை –மா நிலத்து எவ்வுயிர்க்கும் சுருங்கச் சொன்னோம் -சித்ரா வேண்டா சிந்திப்பே அமையும் –பாகவத ரஷணம் –
இவரே மாதா பிதா -முனி -மனன சீலர் -நம்மையும் மனனம்
இவரும் மதிநலம் அருளப் பெற்ற ஆராத காதல்
கலியும் கெடும் கண்டு கொண்மின் -இருவர் அவதாரம் ஸூ சகம் -கலயாமி கலி த்வம்சம் -கொசித் கொசித் –
பிரபன்ன ஜன கூடஸ்தர்
பராங்குச பரகால யதிவராதிகள் ஆதி சப்தத்தால் மா முனிகள்
எந்நாளே நாம் மண் அளந்த -உன் அடிக் கீழ் -உலகம் அளந்த உன் பொன்னடியே அடைந்து -லோக விக்ராந்த சரனௌ –விபோ –
வியாபித்து -திரிவிக்ரமன் அடிகளை பற்றுவதையே க்ரமமாக
பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும் -மனம் உடையீர் மாதவன் என்னும் ஓதுமின் த்வய அனுசந்தானம் கேட்டும் உபதேசித்தும்
ஆசை உடையார்க்கு வரம்பு அறுத்து -பேசியும்
த்வயத்தை ஞானாதிகருக்கு புன புன பிரசாதிக்கையும்
அஜ்ஞருக்கு காருண்யத்தால் உபதேசித்து -அனர்த்த தர்சனத்தாலே அருள் விஞ்சி -ஆகார த்வயம் உண்டு ஆழ்வாருக்கும் எம்பெருமானாருக்கும்
எட்டும் இரண்டும் அறிவித்த -திரு மந்த்ரம் த்வயத்தை -இரண்டு வர்க்கங்களுக்கும் உபதேசித்த என்றுமாம்
ஆழ்வார் கோஷ்டிக்குள் எம்பெருமானாரை -சேர்த்து
திருவாய் மொழி வியாக்யானம் ஸ்ரீ பாஷ்யாதி முகமாக தர்சனம் நடத்தி
பாதுகை பொன்னடி -அத்யந்த அந்தரங்கர் அண்மையாக அருளிச் செய்து –
ஆழ்வான் -யோ நித்ய -அடுத்த -வகுளா பரணான்க்ரி யுக்மம் –
அதே போலே பட்டரும் -யதீந்த்ராயா-சடகோபாயா-சகபடித்தது -கூடச் சேர்ந்து பிரதான்யம் தோற்ற –
யோ நித்ய -மாதா -சேர்த்தி நாம் அனுசந்தேயம் –
லஷ்மி நாத -பூதம் -நடுவில் இரண்டையும்
குரு பரம்பரையிலும் த்வயத்திலும் எம்பெருமானை சேர்ப்பது போலே பிரதான்யம் தோற்ற
மூடி மேலும் கீழும் போலே -உள்ளே நாம் சௌக்யமாக இருக்க -பாக்யத்தால் அடைந்து –
யோ நித்ய முற்பட -உடையவர் பிரதான்யம்
எதிவர சரணமாய்– அவரோடு தசமராய் ஆழ்வார்கள்
தேசிக குல கூடஸ்தர் சடரிபு சரணங்களை நித்ய சேவை
ராமானுஜர் நம் ஆழ்வார் சேர்த்து பிரிக்காமல் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -ஆழ்வார்கள் இடமும் பிரிக்காமல் ராமானுஜர் -நடுவாக -வைத்து -அருளி
உபகாரம் -நம -சொல்லி விலகாமல் பிரண தோஸ்மி -அனுபவம்
தஸ்மை நம -முனிவராயா பராசராய –
இது பிராப்ய புத்த்யா-அதர பரத்ரா சாபி -யதீய சரனௌ
உபகாரத்துக்கு ஆகில் -தஸ்மை நம–பராசார்யருக்கு இது பிராணதோஸ்மி நித்யம்-
-ப்ராப்ய புத்தியையாக -ஆதரபத்ர சாபி -இங்கும் அங்கும் -ஆச்சார்யர் திருவடிகளே அனுவர்த்திக்கும்
-த்ரிவித கரண- ப்ரண தோஸ்மி -பக்தி பாரச்வய ஆழ்வார் -அவர்களோடு விகல்பிக்கலாம் படி ஸ்ரீ பாஷ்ய காரரும்
சர்வதா பஜ நீயர்கள் –
சடரிபு கலிஜித் சரசஸ்–ஆழ்வார்களை தொடங்கி சேவிக்கும் முறை –

————————————————————————

ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் தாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: