ஸ்ரீ மும் மணிக் கோவை -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

ஸ்ரீ மும் மணிக் கோவை -தமிழ் பிரபந்த லஷணம் படி 30 பாசுரங்கள் அடங்கி இருக்க வேண்டும்
-இப்பொழுது 10 பாசுரங்களே அனுசந்தானத்தில் வருகின்றன
மேலும் திரு வயிந்திர புரம் தெய்வ நாயகன் மீது இவர் அருளிச் செய்த -பந்து -கழல் -அம்மானை -ஊசல் -ஏசல் –
இந்த ஐந்து பிரபந்தங்களும் நம் தீ வினைப்பயனை அனுசந்தான பரம்பரையில் வராமல் மறைந்து விட்டன

இதில் ஆழ்வார்களைப் போலே அளவில்லா காதல் கொண்டு
நாயகி தோழி செவிலி இவர்கள் பேய்ச்சாய்ப் பாடிய பாசுரங்கள் நம் மனத்தை கவரும் –

————————————————————————————

அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத்
தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்
அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
மணி வரை யன்ன நின் திரு வுருவில்
அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க
வன்புடன் நின்னோடு வதரித்து அருளி
வேண்டுரை கேட்டு மிண்டவை கேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே –1-

ஸ்ரீ தேசிகன் தெய்வ நாயகனைச் சரணம் அடையத் திரு உள்ளம் கொண்டு முதலில் செங்கமல வல்லித்தாயார் இடம்
செய்யும் புருஷகார ப்ரபத்தியை முதல் பாசுரத்தால் வெளியிடுகிறார் -ஸ்ரீ சப்தார்த்தம் அருளுகிறார் –

அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத்
தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்
1-அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
2-இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
ஓர்–ஒப்பற்ற விலக்ஷணமான -நந்தா விளக்கு -தானே தனக்கு விளங்கும் நமக்கும் காட்டும் –
/இன்–மங்களம் -மாசு படியாத- குளிர்ந்த- அனுகூலமான விளக்கு /- ஒளி விளக்கு -அதிக தேஜஸ்
-உண்மை காட்டும் -நாலா பக்கமும் / தன்னையும் காட்டும் விளக்கு
ஆபீ முக்கியம் மாத்திரத்தாலே –அவனை காட்டுபவள்–தீபம் பின் பக்கம் இருளாக காட்டும் -அது போலே இல்லையே
-அவனுக்கே விளக்காக இருந்து விளங்குபவள் –விளக்கின் ஒளி -இவள் -தீர்க்க சமஸ்
-கார் இருள் -போக்கும் -தீப பிரகாசர் -மிதுனம் –மஹத்தியா பிரபை /
3-மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
குன்றில் இட்ட விளக்கு -குடத்தில் வைத்த விளக்கு இல்லை -/ மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனனே —
வரை -மலை என்றும் –பர்யந்தம் அதுவரை இதுவரை
-கடலின் அடி வரை மந்தரம் வரை சென்றது -அது தாங்குமவரை கூர்ம மூர்த்தியை நாம் வணங்குவோம் –
பகவான் திரு உருவம் ரத்ன பர்வதம் –பத்து ஒற்றுமைகள் உண்டே –தோஷம் இல்லா-அகில ஹேய ப்ரத்ய நீக /
-பெருமை நிலைப்பாடு -கௌரவம் கொடுக்கும் -தன்னை தொழுவார்க்கு நின் வடிவு அழகு மறவாதார் பிறவாதார் /
ஸ்திரம் -நிலை நிற்குமே -/ போக்யம்-மனத்துக்கு இனியான்-அஸ்ப்ருஷ்ட சிந்தா பதம் /
பிரகாசகம் -இயல்பாகவே -அணையா -ரத்ன தீப பிரகாசம் –அறிவு மலர வைக்கும் -/ மஹார்க்கம் விலையனான –/
மங்களம் -/ பாராட்டுக்கு உரியவை / ஸூ ரக்ஷம்–எளிதில் ரஷிக்கலாமே /
ஸூ க்ரம்-முந்தானையில் முடிந்து ஆளலாம்-மனசில் கிரகிக்க எளியவன் /இந்த பத்து சாம்யம்
-மணி வரை –அன்ன நின் திரு உருவம் –பச்சை மா மலை போல் மேனி /
திகழ் பசும் சோதி –மரகத்தைக் குன்றம் –கண் வளருவது போல் -திருவாசிரியம் /
மணி வரையும் மா முகிலும் –போல் இருந்த மெய்யானை மெய்ய மலையானை –கை தூக்கி தொழா கை அல்ல கண்டோமே /
என்னுள் திகழும் மணிக் குன்றம் ஓத்தே நின்று -திருவாய் மொழி -/ அவனே திரு மலை -ஸ்வரூபமும் ரூபமும் –
-ரத்ன பர்வத –யதா ரத்னம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் —கிருஷ்ணன் இடம் மனோ ரதங்கள் சக்திக்கு ஏற்க கொள்கிறான்
-ரத்ன பர்வத்தில் ஏறி சக்திக்கு தக்க கொள்வது போலே -இங்கே ஸ்வரூபம் உவமை –
-பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை -திரு நறையூர் நம்பி –நின் -மணி வரை -நீ மணி வரை -உன்னிடம் திரு –
மணியும் வரையும் போல -மணிவரை என்றுமாம்-
மணியும் வரையும் அன்ன என்றுமாம் –நீள் வரை போல் மெய்யனார் -நம் பாணனார் –
விட்டிலங்கு –மலையே திரு உடம்பு -திரு வாய் மொழியிலும் —
கருவரை போல் நின்றானை கண்ணபுரத்தம்மானை -பெரிய திருமொழி
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்கும் -தனித் தனியாகவும்
நீல மரதகம் மழை முகில் / வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே தெய்வ நாயகனை
இமயம் மேய எழில் மணித் திரளை – -குடந்தை மேய குரு மணித் திரளை -முத்துஒளி மரகதமே –
கலியன் உரை தேசிகன் கருத்தில் குடி கொண்டு இருக்குமே -பை விரியும் –திருச்சேறை
கூற்றினை குரு மா மணிக் குன்றினை -படு கடலுள் மணி வரை போல் மாயவன் -மை விரியும் -திரு மேனி -கருமை மிக்கு
படுக்கையில் பை விரியும் -பணங்கள்- பள்ளி கொண்ட பரமன் –

மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
திரு மார்பில் -மலை போன்ற மார்பில் –ஸ்வரூபம் -விக்ரகம் -மார்பு -மூன்றுக்கும் –
மணி வரை யன்ன -நின் / மணி வரை யன்ன -நின் திரு உருவில் / மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து -என்றபடி –
பண்புகள் பொது -மூன்றுக்கும் –மலைக்கு –
1-ஓங்கி நிற்கும் / 2-சிலா மாயம் -/ 3-திண்மை உறுதி /4- செல்ல அறியாது துர்லபம் /5-தபஸ்விகள் ரிஷிகள் நாடுவார்கள் /
6-ஷமா ப்ருத் -மலை-பூமியை தாங்கிக் கொண்டு இருக்கும்-பொறுமை – / 7- எல்லா உலகும் தாங்கு/
8-கயவர் கவர்ந்து போக முடியாதே -/9-இயற்க்கை எழில் /10-நதிகள் -குரு பரம்பரை ஆரம்பம் -பத்தும் உண்டே
உயரம் -உன்னதி உத்துங்கதி -நித்ய உன்னதர்கள் –வான மா மலையே அடியேன் தொழ வந்து அருளே –ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் –
ப்ராம்சூ-நெடிய உயர்ந்தவன் -வான் அளாவியவன் –பெற்றி-ஸ்வபாவம் –நெடியானே வேங்கடவா –நின் கோயிலின் வாசல் –

https://www.youtube.com/watch?v=DCN3A-DjzBc–11

4-நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க -வன்புடன் நின்னோடு வதரித்து அருளி
5-வேண்டுரை கேட்டு மிண்டவை கேட்பித்து -ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
-தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக -நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே

———————————————————————————————-

திருமால் அடியவர்க்கு மெய்யனார் செய்ய
திரு மா மகள் என்றும் சேரும் திரு மார்பில்
இம்மணிக் கோவையுடன் ஏற்கின்றார் என் தன்
மும்மணிக் கோவை மொழி –2-

இம்மணிக் கோவையுடன்-இந்த ஸ்ரீ கௌஸ்துபம் முதலிய ரத்னஆகாரத்துடன்
எம்பெருமானும் அன்புடன் ஏற்கும் இப்பிரபந்தம் பாகவதர்களுக்கு பரம போக்யமாம் -என்றவாறு –

———————————————————————————–

மொழிவார் மொழிவன மும்மறை யாகும் அயிந்தையில் வந்து
இழிவார் இழிக வென்று இன்னமுதக் கடலாகி நின்ற
விழி வார் அருள் மெய்யர் மெல்லடி வேண்டிய மெல்லியல் மேல்
பொழிவார் அனங்கர் தம் பூம் கரும்பு உந்திய பூ மழையே -3-

தோழியின் பேச்சாக பேசி அனுபவிக்கிறார்
பெண்டிர் சிறுவர் கிளி குயில் சகல ஜீவ ராசிகளும் பேசுகின்ற வாக்யங்கள்
எல்லாம் சகல வேத சரமாம் -திரு வயிந்திர புரம் -திவ்ய தேச பெருமையால் –
தெய்வ நாயகனை அணைய விரும்பி அது பெறாது வருந்தும் தலைவின் மீது மன்மதனும்
கரும்பு வில்லின் நின்று பூ மாரியைப் பெய்து இன்னும் வாட்டுகின்றானே
பிரகிருதி சம்பந்தம் வாட்டுக்கிறது -என்று ஸ்வாபதேசப் பொருள்-

——————————————————————–

ஸ்ரீ தெய்வ நாயகன் தனது ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைக் காட்டி அருள
அவனை அனுபவித்த படியை மேல் இரண்டு பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –

மலையில் எழுந்த மொக்குள் போல் வையம்
அழிய ஓன்று அழியா வடியவர் மெய்ய
வருமறையின் பொருள் ஆய்ந்து எடுக்கும் கால்
திருவுடன் அமர்ந்த தெய்வ நாயக
நின் திருத் தனக்கும் நீ திருவாகி
இந்து தன் நிலவுடன் இலங்கு தன்மையினை
நந்துதல் இல்லா நல் விளக்காகி
யந்தமில் யமுத வாழியாய் நிற்றி
பாற்கடல் தன்னில் பன் மணி யன்ன
சீர்க் கணம் சேர்ந்த சீலம் எல்லையிலை
யடியவர் பிழைகள் நின் கருத்து அடையாது
அடைய ஆண்டு அருளும் அரசனும் நீயே
யுயர்ந்த நீ யுன்னை எம்முடன் கலந்தனை
யயிந்தை மா நகரில் அமர்ந்தனை எமக்காய்ச்
சித்திர மணி எனத் திகழு மன்னுருவில்
அத்திரம் அணி என வனைத்தும் நீ யணிதி
விண்ணுள் அமர்ந்த வியன் உரு வதனால்
எண்ணிய ஈரிரண்டு உருக்களும் அடைதி
பன்னிரு நாமம் பல பல வுருவா
இன்னுரு வெங்கும் எய்தி நீ நிற்றி
மூனோடு ஆமை கேழல் கோளரியாய்
வானோர் குறளாய் மழுப்படை முனியாய்
பின்னும் இராமர் இருவராய்ப் பாரில்
துன்னிய பரம் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்து அருளும் கற்கியாய் மற்று
மலிவதற்கு எண்ணும் வல்வினை மாற்ற
நானா வுருவமும் கொண்டு நல்லடியோர்
வானார் இன்பம் இங்குற வருதி
ஓர் உயிர் உலகுக்கு என்னும் நீ திருவொடு
உயிர் எல்லாம் ஏந்தி இன்புறுதி
யாவரும் அறியாது எங்கும் நீ கரந்து
மேவுறச் சூழ்ந்து வியப்பினால் மிகுதி
கொண்டிட வெம்மை யடைக்கலம் உலகில்
கண்டிலம் கதி யுனை யன்றி மற்று ஒன்றும்
பல்வகை நின்ற நின்படி யனைத்தினும்
தொல்வகை காட்டும் துணிந்து தூ மறையே -4-

சித்திர மணி எனத் திகழு மன்னுருவில் -விசித்ரிரமான நீல ரத்னம் என்னலாம் படி பிரகாசிக்கும் நித்தியமான திரு மேனியில்
அத்திரம் அணி என வனைத்தும் நீ யணிதி -அஸ்தரம் திருவாபரணம் என்னும்படியான சகல தத்துவங்களையும் நீ அணிந்திருக்கிறாய்
இன்னுரு வெங்கும் எய்தி நீ நிற்றி -போக்யமான பாகவதர்களின் சரீரத்தின் எல்லா பாகங்களிலும் நீ அடைந்து நிற்கின்றாய்
வானோர் குறளாய்-பின் திரிவிக்ரமனாய் வானத்தை அளாவிய வானனனாய்
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஐந்தையும் –
நந்துதல் இல்லா -சத்யத்வம் –நல் என்று அமலத்வமும் -விளக்கு என்று ஜ்ஞானத்வமும் –
அந்தமில் என்று அனந்தத்வமும்-அமுத வாழி-என்று ஆனந்தத்வமும் -அருளிச் செய்கிறார்
நின் திருத்தனக்கு –ஸ்ரீ மத சப்தார்த்தம்
சீர்க் கணம் சேர்ந்த -நாராயண சப்தார்த்தம்
மன்னுருவில் -திருமேனியை ஸூ சிப்பிக்கும் -சரனௌ சப்தார்த்தம் –
அடைக்கலம் -சரண சப்தார்தம் -த்வயத்தின் முற்பகுதியின் பொருளை அருளிச் செய்கிறார்
ஸ்ரீ தேசிகன் பெருமாள் கோயிலில் இருந்து திரு விந்திர புறத்திற்கு எழுந்து அருளிய பின் பேர் அருளாளனும் சுவாமிக்காக அங்கு எழுந்து
அருளியதாகவும் -இத்தைக்கருதியே -அயிந்தை மா நகரில் அமர்ந்தனை எமக்காய் -என்று அருளிச் செய்ததாக பெரியோர் பணிப்பார்

————————————————————————————————————————

தூ மறையின் உள்ளம் துளங்காத் துணிவு தரும்
ஆம் அரிவாள் ஆர்ந்து அடிமை ஆகின்றோம் பூ மறையோன்
பாராயணத்தில் பணியும் அயிந்தை நகர்
நாராயணனார்க்கே நாம் –5-

நாராயணனார்க்கே நாம்–அடிமை ஆகின்றோம்-என்று த்வயத்தில் ஸ்ரீ மதே நாராயணாய-சப்தார்த்தமும்
துளங்காத் துணிவு-நாம சப்தார்த்தமும் அருளிச் செய்கிறார் –

—————————————————————————————————

ஆர்க்கும் கருணை பொழிவான் அயிந்தையில் வந்து அமர்ந்த
கார்க் கொண்டலைக் கண்ட காதல் புன்மையில் கண் பனியா
வேர்க்கும் முகிழ்க்கும் விதிர்விதிர்க்கும் வெள்கி வெவ்வுயிர்க்கும்
பார்க்கின்றவர்க்கு இது நாம் என் கொல் என்று பயிலுவமே –6-

தலைவின் நிலைமை கண்டு தோழி இரங்கிப் பேசுதல்
ஸ்வாபதேசப் பொருளில் -ஸ்வாமி உடைய பகவத் அனுபவ ஆர்வ மிகுதியையும்
அது கிடைக்கப் பெறாத நிலைமையில் படும் பாட்டையும் கண்டு பாகவதர்கள் வியந்து கூறியதாய்க் கொள்ளலாம்

————————————————————————————————

பயின மதி நீயே பயின மதி தருதலின்
வெளியும் நீயே வெளியுற நிற்றலின் –தேஜஸ் ஸூ ம் நீயே சகல வஸ்துக்களும் உன்னால் பிரகாசம் அடைவதால்
தாயும் நீயே சாயை தந்து உகத்தலின் –சாயை -திருவடி நிழலை
தந்தையும் நீயே முந்தி நின்று அளித்தலின்
உறவும் நீயே துறவாது ஒழிதலின்
உற்றது நீயே சிற்றின்பம் இன்மையினால்
ஆறும் நீயே யாற்றுக்கு அருள்தலின்
அறமும் நீயே மற நிலை மாய்த்தலின் –மற நிலை -பாபங்களின் நிலையை
துணைவனும் நீயே இணையிலை யாதலின்
துய்யனும் நீயே செய்யாள் உறைதலின் –துய்யன் -பரிசுத்தன்
காரணம் நீயே நாரணன் ஆதலின்
கற்பகம் நீயே நற்பதம் தருதலின்
இறைவனும் நீயே குறையொன்று இலாமையின்
இன்பமும் நீயே துன்பம் துடைத்தலின்
யானும் நீயே என்னுள் உறைதலின்
எனது நீயே யுனதன்றி இன்மையின்
நல்லாய் நீயே பொல்லாங்கு இலாமையின்
வல்லாய் நீயே வையம் உண்டு உமிழ்தலால்
எங்கனம் ஆகும் மெய்ய நின்னியல்பே
யங்கனே ஒக்க வறிவது ஆரணமே –7-

தெய்வ நாயகன் எதிரே வந்து உம்மோடு அணையாது வாழ இருப்பது அர்ச்சாவதாரம் என்பதால் என்று
சமாதானம் செய்து மேலும் சில குணங்களைக் காட்டி அருள அவற்றை அனுபவித்து பேசுகிறார் –

——————————————————————————————-

ஆரணங்கள் தேட அயிந்தை நகர் வந்து உதித்த
காரணராய் நின்ற கடல் வண்ணர் -நாரணனார்
இப்படிக்கு மிக்கு அன்று எடுத்த பாதம் கழுவ
மெய்ப்படிக்கம் ஆனது பொன் வெற்பு –8-

ஸ்ரீ பாத தீர்த்தம் ஏந்தும் படிக்கமானதே மஹா மேரு பர்வதம் -வியப்பின் மேல் வியப்பு -திரிவிக்கிரம அவதாரம் அன்றோ –

———————————————————————–

வெற்புடன் ஒன்றி யயிந்தையில் வெவ்வினை தீர் மருந்து ஓன்று
அற்புதமாக வமர்ந்தமை கேட்டருள வேண்டி நிற்கப்
பற்பில் அமர்ந்த செய்யாள் படி காட்டிய பண்புடை எம்
வில் புருவக் கொடிக்கு ஓர் விலங்கா மயல் பெற்றனமே –9-

வெற்புடன் ஒன்றி யயிந்தையில் வெவ்வினை தீர் மருந்து ஓன்று -தெய்வ நாயகன் என்னும் மருந்து
ஔஷதாத்ரி திருமளையோடு ஓன்று பட்டு
அற்புதமாக வமர்ந்தமை கேட்டு –
அருள் வேண்டி நிற்கப் -அதன் கடாஷத்தை வேண்டி நிற்க
பற்பில் அமர்ந்த செய்யாள் படி காட்டிய-தாமரை ஸ்தானத்தில் எழுந்து அருளி யுள்ள பெரிய பிராட்டியுடைய பிரகாரங்களை நினைவு ஊட்டிய
பண்புடை -ஸ்வ பாவத்தை உடைய
எம் வில் புருவக் கொடிக்கு ஓர் விலங்கா மயல் பெற்றனமே -நீங்காத மயக்கம் வரப் பெற்றோம்

செவிலித் தாய் நல் தாய்க்குக் கூறுதல் -செவிலித் தாய் அறத்தொடு நிற்றல் -துறை -அயலாருக்கு மணம் பசுவதை தடுத்து பேசுவது
பரிபூர்ண அனுபவம் பெறத் துடிக்கும் ஸ்வாமி உடைய பேராவல் கொண்ட பித்தரான நிலையை பாகவதர் வியந்து பேசுவது –

—————————————————————————————-

பெற்றனை நீயே மற்றுள வெல்லாம் — அனைத்தையும் நீயே சிருஷ்டித்து அருளினாய்
பெறுவது நின்னை யுறுவது கொள்வார் -உன்னையே தக்க உபாயமாகவும் பலனாகவும் கொள்வார்
நின்னலால் அன்றி மன்னார் இன்ப
நீ நின் பொருட்டு நீ என் பொருட்டு இலை
நின்னுரு நின்றும் மின்னுருத் தோன்றும் –உன் திரு மேனியில் இருந்தே மின் போல் நிலையற்ற அனைத்தும் பிறக்கின்றன
நின் தனக்கு நிகர் நின்னடி யடைவார்
ந பால் அன்றி யன்பால் உய்யார்
வாரணம் அழைக்க வந்த காரணனே –10-

————————————————————————————————

மேலே உள்ள 20 பாசுரங்களும் கிடைக்கப் பெற்றிலோம் –

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: