ஸ்ரீ நவமணி மாலை – ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

ஒரு மதி அன்பர் உளம் கவர்ந்தன
உலகம் அடங்க வளர்ந்து அளந்தன
ஒரு சடை ஒன்றிய கங்கை தந்தன
உரக படங்கள் அரங்கு கொண்டன
தருமம் உயர்ந்தது இது என்ன நின்றன
தருமன் இரந்தது இசைந்து சென்றன
சகடம் உடைந்து கலங்க வென்றன
தமரர்கள் அருந்தும் மருந்து என்பன
திருமகள் செய்ய கரங்கள் ஒன்றின
திகழ் துளவு உந்தும் மணம் கமழ்ந்தன
செழு மணி கொண்ட சிலம்பு இலங்கின
சிலை தனில் அன்று ஓர் அணங்கு உமிழ்ந்தன
அருமறை அந்தம் அமர்ந்த பண்பின
அயன் முடி தனில் அமர்ந்து உயர்ந்தன
அருள் தர எண்ணி அயிந்தை வந்தன
வடியவர் மெய்யர் மலர்ப்பதங்களே–1–

—————————————————————————–

மகரம் வளரும் அளவில் பௌவம் அடைய உற்று அலைத்தனை
வடிவு கமடம் என அமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியும் அசுரம் உரம் இடந்து வசுதையைப் பெயர்த்தனை
வலி கொள் அவுணன் உடல் பிளந்து மதலை மெய்க்கு உதித்தனை
பகரும் உலகம் அடி அளந்து தமர்களுக்கு அளித்தனை
பரசு முனிவன் வடிவு கொண்டு பகைவரைத் துணித்தனை
பணிய இசைவு இல் தசமுகன் தன முடிகள் பத்து உதிர்த்தனை
படியும் உருவில் வரு பிளம்ப அசுரனை தகர்த்தனை
நகரி துவரை என உகந்து வரை கரத்து எடுத்தனை
நடமொடு இயலு பரியில் வந்து நலிவு அறுக்க உற்றனை
நலியும் வினைகள் சேரும் மருந்தின் நலம் உறைந்த வெற்பினை
நணுகு கருட நதி கிளர்ந்த புனல் உகப்பில் வைத்தனை
யகர முதல் உரை கொள் மங்கை கணவனுக்கு அளித்தனை
அடையும் வினதை சிறுவன் உய்ய அருள் கொடுத்து உயர்த்தனை
அடியும் அணையும் எனும் அனந்தன் அடி தொழக் களித்தனை
அவனி மருவு திரு விந்தை அடியவர்க்கு மெய்யனே –2–

நலியும் வினைகள் சேரும் மருந்தின் நலம் உறைந்த வெற்பினை -ஔஷத கிரியை இடமாகக் கொண்டனை
நணுகு கருட நதி கிளர்ந்த புனல் உகப்பில் வைத்தனை -கருட நதி தீர்த்தத்தை மகிழ்ச்சிக்கு உரியதாகக் கொண்டனை
யகர முதல் உரை கொள் மங்கை கணவனுக்கு அளித்தனை -சகல வேதங்களையும் வாக்கை வடிவமாகக் கொண்ட
சரஸ்வதி தேவியின் நாதாவான ப்ரஹ்மாவுக்கு அளித்தனை
ஸ்ரீ ஹயக்ரீவ திருவவதாரமும் இவனே –
அடையும் வினதை சிறுவன் உய்ய அருள் கொடுத்து உயர்த்தனை -பெரிய திருவடியை உய்யுமாறு த்வஜமாகக் கொண்டனை
அடியும் அணையும் எனும் அனந்தன் அடி தொழக் களித்தனை -ஸ்ரீ பாதுகையும் பாயலும் -படுக்கை – என்னப் படுகின்ற
திரு வநந்த ஆழ்வான் திருவடிகளைத் தொழ அதனால் மகிழ்ந்தனை
அவனி மருவு திரு விந்தை அடியவர்க்கு மெய்யனே-பூமி தேவியால் அடையப் பெற்ற திரு வயிந்திர புரத்தில்
எழுந்தி அருளி இருக்கும் அடியவர்க்கு மெய்யனே –
பூ பாரம் நீக்கி அருளினாய்
ப்ரஹ்ம தீர்த்தம் -தெய்வ நாயகன் உடைய சம்பந்தத்தால் விரஜா நதியைப் போலே பெருமை பெற்றது
கருட நதி -சேஷ தீர்த்தம் பூமி தீர்த்தம் -நான்கு தீர்த்தங்கள் –
இவற்றில் ஒருகால் நீராடுபவன் கங்கா ஸ்நானம் செய்த பலனைப் பெறுவான் -என்ற வரம் கொடுத்து அருளினான் –

——————————————————————————

புரம் உயர்த்த வசுரர் கட்கு ஓர் புறம் உரைத்த பொய்யினான்
வரை எடுத்து மழை தடுத்த மழையோடு ஒத்த மெய்யினான்
திரை நிரைத்த கடல் எரித்த சிலை வளைத்த கையினான்
அருள் கொடுத்து வினை தவிர்க்கும் அடியவர்க்கு மெய்யனே -3-

புரம் உயர்த்த வசுரர் கட்கு ஓர் புறம் உரைத்த பொய்யினான்-நகரங்களை பறக்கும் படி கொண்ட அசுரர்களுக்கு
வேத விபரீதமான ஒரு பிற மதக் கொள்கையை -புத்தராக – உபதேசித்த பொய்யினானும்-

—————————————————————————-

தேசு ஒத்தார் இல்லை எனும் தெய்வ நாயகனார்
வசக் குழல் மா மலராள் மணவாளர்
வாசித்து எழும் மன் மதன் ஆர் மணல் தோப்பில்
மாசிக் கடலாடி மகிழ்ந்து வருவாரே –4-

வாசித்து எழும் -மணம் மிகுந்து எழுகின்ற
மன் மதன் ஆர் -மிக்க வளம் நிறைந்த
மணல் தோப்பில் – மணல் நிறைந்த கடல் கரைச் சோலையில்
மாசிக் கடலாடி மகிழ்ந்து வருவாரே-மாசி மகத்தன்று கடலிலே நீராடி உலாவி மகிழ்ந்து எழுந்து அருள்வார்
மன்மதனார் வாசித் தொழும்-என்று அந்வயம் கொண்டு தெய்வ நாயகனார் அழகில் தனக்கு உள்ள
தாரதம்யத்தைக் கொண்டு தோற்றுத் தொழப் பெற்றவர் என்றுமாம்
மன்மதனுடைய குதிரைகள் ஆகிய கிளிகளின் உறைவிடம் ஆகிய மணம் வீசும் தோப்பில் என்றுமாம்
குதிரை நம்பிரானில் தொழத் தக்க மன்மத ஸ்வரூபனாக பக்தி உலாவின் பொழுது
குதிரை நம்பிரானில் எழுந்து அருளும் அழகைச் சொன்னதாகவுமாம் –

——————————————————————————————

உருளும் சகடம் ஓன்று உதைத்தாய்
யுலகம் ஏழும் உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பொருளும் அழலும் இறையாகப்
பூண்டேன் அடிமையினில் மீண்டேன்
இருளும் மருளும் தரும் அந்நாள்
எழிலார் ஆழி சங்கு ஏந்தி
யருளும் தெருளும் தர வென்பால்
அடியார் மெய்ய வந்தருளே –5-

பொருளும் அழலும் -செல்வத்தையும் அக்னி போல் மன்மதனை எரிக்க வல்ல காமத்தையும்
இறையாகப் பூண்டேன் -குற்றம் உள்ளனவாகக் கொண்டேன்
அடிமையினில் மீண்டேன் -உன் கைங்கர்யத்தில் திரும்பினேன் –
அந்நாள் -அந்த அந்திம சமயத்தில் –
நான் உன்னை நினையா விடினும் -இப்பொழுது நான் பிரார்த்திப்பதையே கொண்டு
அஜ்ஞ்ஞானம் ஆகிய எதிரியை அழிக்க வல்ல திரு வாழி ஆழ்வானையும்
ஜ்ஞானத்தத் தர வல்ல திருச் சங்கையும் ஏந்தி வந்து எனக்கு அருள் புரிய வேண்டும் -என்றவாறு –

————————————————————————————————

வஞ்சனை செய் பூதனையை மலியும் சாட்டை
மல்லரை யோர் மத களிற்றை வானோர் அஞ்சும்
காஞ்சனை முன் கடிந்து அவனி பாரம் தீர்த்த
காவலனே கோவலனாய் நின்ற கோவே
யஞ்சனமும் காயாவும் அனைய மேனி
யடியவர்க்கு மெய்யனே யயிந்தை வாழும்
மஞ்சு எனவே அருள் பொழியும் வள்ளலே நின்
வடிவு அழகு மறவாதார் பிறவாதாரே –6–

————————————————————————————–

மையும் மா கடலும் மயிலும் மா மழையும்
மணிகளும் குவளையும் கொண்ட
மெய்யனே யடியோர் மெய்யனே விண்ணோர்
ஈசனே நீசனேன் அடைந்தேன்
கையும் ஆழியுமாய்க் களிறு காத்தவனே
காலனார் தமர் எனைக் கவராது
ஐயனே வந்து அன்று அஞ்சல் என்று அருள் தென்
அயிந்தை மா நகர் அமர்ந்தானே –7-

———————————————————————

மஞ்சு உலாவு சோலை சூழ் அயிந்தை மன்னும் மன்னு சீர்
வரையெடுத்து நிரை யளித்த மாசில் வாசுதேவனே
செஞ்சொல் அன்பர் சிந்தை கொண்டு தீதிலாத தூதனாய்த்
தேருமூர்ந்து தேசுயர்ந்த செல்வா தெய்வ நாயக
வெஞ்சொ லாளர் கால தூதர் வீசு பாசம் வந்து என் மேல்
விழுந்து அழுந்தி யான் யயர்ந்து வீழ்வதற்கு முன்னம் நீ
அஞ்சல் அஞ்சல் அஞ்சல் என்று அழிக்க வேண்டும் அச்சுதா
வடிவர்க்கு மருள் இயக்கம் அடியவர்க்கு மெய்யனே –8–

———————————————————————

பொருத்தம் பொருந்தலும் போகும் தவற்றுடன் பொய்ம்மதி மேல்
விருத்தம் கலித்துறை மேவும் அழல் மதம் வேறு இனி என்
திருத்தம் மனத்தினில் சேரா வெமைத் தெய்வ நாயக நின்
வருத்தம் பொறா அருளால் மன் அடைக்கலம் கொண்டு அருள் –9-

பொருத்தம் பொருந்தலும் -உன் திரு உள்ளத்தோடு சேதனன் இடத்து உண்டான அளவில்
தவற்றுடன் பொய்ம்மதி -அபராதங்கள் உடன் அஜ்ஞ்ஞானமும்
மேல்-மேலும்
விருத்தம் -விபரீத ஜ்ஞானமும்
கலித்துறை மேவும் -கிளர்ந்து தங்குதளலைப் பொருந்திய
அழல் மதம் -அக்னி போன்ற காமமும் -செருக்கும் –
போகும் -விலகிப் போகும்
திருத்தம் மனத்தினில் சேரா வெமைத் -மனத்தில் திருத்தம் அடையாத எம்மை
தெய்வ நாயக நின் வருத்தம் பொறா அருளால் -பிறர் துக்கம் காணப் பொறாத உன் கருணையால்
மன் அடைக்கலம் கொண்டு அருள் -ஸ்திரமாய் ரசிக்கப் பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்டு அருள்வாயாக
இனி வேறு என் -இதினிலும் வேறாக யாம் வேண்டக் கிடப்பது என் –

——————————————————————————————————-

அந்தமில் சீர் அயிந்தை நகர் அமர்ந்த நாதன்
அடியிணை மேல் அடி உரையால் ஐம்பது ஏத்திச்
சிந்தை கவர் ப்ராக்ருதம் நூறு கூறிச்
செழும் தமிழ் மும் மணிக் கோவை செறியச் சேர்த்துப்
பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல்
பரவு நவ மணி மாலை இவையும் சொன்னேன்
முந்தை மறை மொழிய வழி மொழி நீ என்று
முகுந்தன் அருள் தந்த பயன் பெற்றேன் நானே –10-

அடி உரையால் ஐம்பது ஏத்திச் -எல்லா பாஷைகளுக்கும் மூலமாய் உள்ள
வட மொழியால் -தேவ நாயக பஞ்சாசத் -என்ற ஐம்பது ஸ்லோகங்களை இயற்றிப் புகழ்ந்து
சிந்தை கவர் ப்ராக்ருதம் நூறு கூறிச் -மனத்தைக் கவர்கின்ற ப்ராக்ருத பாஷையால் -அச்யுத சதகம் -என்னும் நூறு அச்லோகன்களைக் கூறி
செழும் தமிழ் மும் மணிக் கோவை செறியச் சேர்த்துப்
பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல் பரவு நவ மணி மாலை இவையும் சொன்னேன்
மும் மணிக் கோவையின் மீதி 20 பாசுரங்களும் பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல் ஆகிய பிரபந்தங்கள் ஐந்தும் அகப்பட வில்லை –

————————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: