ஸ்ரீ அமிருத ரஞ்சனி –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

சம்ப்ரதாய பரிசுத்தியைப் பற்றிய முதல் இரண்டு பாசுரங்கள் –

தம்பரம் என்று இரங்கி தளரா மனம் தந்து அருளால்
உம்பர் தொழும் திருமால் உகந்து ஏற்கும் உபாயம் ஒன்றால்
நம் பிறவித் துயர் மாற்றிய ஞானப் பெரும் தகவோர்
சம்பிரதாயம் ஒன்றிச் சதிர்க்கும் நிலை சார்ந்தனமே –1–

உபாயம் ஒன்றால் -பிரபத்தி மார்க்கத்தால் –
ஞானப் பெரும் தகவோர் -அருளால் –பெரும் -ஞானத்துக்கும் அருளுக்கும் -அபரிச்சின்னமான ஞானம் தயை நிரூபணம் கொண்ட நம் ஆச்சார்யர்கள் –
தகவு -ஸ்வரூப நிரூபணம் / அருளால் -கார்யம் கொண்ட தயை
தம்பரம் என்று இரங்கி -நம்மை தம்முடைய பரம் என்று இரங்கி-பொறுப்பில் கொண்டு -அருளால் இரங்கி
எல்லா பிர்விருத்திகளும் அருளால் -பிடிக்கி பிடிக்கு ராஜ குமாரர் நெய் சேர்ப்பது போலே
தளரா மனம் தந்து -தத்வ ஹத புருஷார்த்தங்களில் -மஹா விச்வாஸம் -உபாயாந்தர பிரயோஜனாந்தர ஸ்பர்சம் இல்லாமல்
உம்பர் தொழும் திருமால் -நித்ய ஸூரிகள் -உபாய அபேக்ஷை இல்லாமல் –மிதுனம் -ஸ்ரீ யபதி
உகந்து ஏற்கும் உபாயம் ஒன்றால்–ஏற்கும் உபாயம் பக்தி /பிரபத்தி -இவற்றுள் உகந்து ஏற்பது பிரபத்தி என்றவாறு –
நம் பிறவித் துயர் மாற்றிய –ஜென்மாதி ஷட் பாவ விகாரங்கள் –அழித்து-
சம்பிரதாயம் ஒன்றிச் சதிர்க்கும் நிலை சார்ந்தனமே-ஆச்சார்ய சிஷ்ய க்ரமத்தில் வரும் சாஸ்த்ரார்த்த ஞானம்
நிரூபிதம்-ஒன்றி -முழுமையாக அவகாஹித்து -சதிர் -புருஷார்த்தம் -சர்வ வித கைங்கர்யம் -மா சதிர் இது பெற்று -அடியேன் சதிர்த்தேன் இன்றே –

—————————————————————————

கடல் அமுதத்தைக் கடைந்து சேர்த்த
திருமால் அடி காட்டிய நம்
தேசிகர் தம் நிலை பற்றிச் சேர்ந்தோமே –2-

நமக்கு திருமால் திருவடியே உபாயமாகக் காட்டி அருளின நம் ஆச்சார்யர்கள் அனுஷ்டானத்தை சிறந்ததாகப் பற்றி ஈடுபட்டோமே –

கடல் அமுதத்தைக் கடைந்து சேர்த்த திருமால் -ஏக தேச அந்வயம் – நம் -தேசிகர் தம் நிலை பூர்ண அந்வயம்
கடலைக் கடைந்து அமுதம் சேர்த்த திருமால் –
திருமால் அடி தானே நம் தேசிகர் -பூர்வாச்சார்யர்கள் -ப்ராப்யம் ப்ராபகம் இவரே –
சாஸ்திரம் கடலை கடைந்து தத்வ ஹித புருஷார்த்தங்கள் அமிருதம் சேர்த்த தேசிகர் –
பாராசாராய வக்ஷஸ் ஸூ தாம் –சடஜித் -உபநிஷத் -சிந்தும் -இத்யாதி –
திருமால் அடி காட்டிய நம் -தேசிகர் தம் நிலை பற்றிச் சேர்ந்தோமே -நிலை -நிஷ்டை -ஞான நிஷ்டை –
சதாச்சார்யர் திருவடிகளில் கேட்டு சிந்தித்து தரித்து -நிர்பயராக நிர்பரராக-
தத்வம் /உபாயம் /புருஷார்த்தம் முக்கிய மந்த்ரம் காட்டிய மூன்றின் நிலை

—————————————————————————–

முத்திக்கு அருள் சூட மூன்றைத் தெளிமுன்னம்
இத்திக்கால் ஏற்கும் இதம் –3-

தத்வ ஞானம் அறிந்து அதன் மூலம் உபாயத்தை அனுஷ்டிக்க வேண்டும் -என்றவாறு –

முத்திக்கு அருள் சூட-முன்னம் -மூன்றைத் தெளி –
சாம்சாரா நிவ்ருத்திக்கு —மோக்ஷம் விடுபடுவது மட்டும் இல்லையே -பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் —
முக்திக்கு அருள் –சாஷாத் காரணம் -அவனே -ஸ்வா போகமான தயை -உண்டே -அநாதி கால அபராதங்கள்
நிக்ரஹ ரூபமாக பிரதிபந்தகங்கள் -பக்தி பிரபத்தி இவற்றை நீக்கும் –
நீங்கிய வாறே சூடலாமே -அத்யந்த அபி நிவேசத்தால் சிரஸால் சூடிக் கொள்ளலாமே –
மூன்றும் -தத்வ த்ரயங்களை அறிதல் / தேஹாத்ம பிரமம் / ஸ்வ ஸ்வாதந்த்ர பிரமம் போக்கி —
ரகசிய த்ரயங்கள் / தத்வ ஹித புருஷார்த்தங்கள் /
இத் திக்கால் ஏற்கும் இதம்–திக்கு -மார்க்கம் -என்றவாறு /இதம் -ஹிதம் -ஆரிய சிதைவு /
ஏற்கும் -பெறப்படுவது ஆகும் -பொருந்தும் என்றவாறு –

————————————————————————–

மூன்றில் ஒரு மூன்றும் மூவிரண்டும் முன் நான்கும்
தோன்றத் தொலையும் துயர் –4-

மூன்றில் -மூன்று ரகஸ்யங்களில் -சர்வ வேத சாஸ்திர சாரம் –
ஒரு மூன்றும் -மூன்று பதங்கள் உள்ள திரு மந்த்ரமும்
மூவிரண்டும் –ஆறு பதங்கள் உள்ள த்வயமும்
முன் நான்கும் -பன்னிரண்டு பதங்கள் உள்ள சரம ஸ்லோகமும் –
தோன்றத் தொலையும் துயர் -அவற்றின் அர்த்தத்துடன் மனத்தில் விளங்க -சம்சார துக்கம் ஒளிந்து போம் –

————————————————————————————————–https://www.youtube.com/watch?v=EEqQ9bnCsso–3-40

உயிரும் உடலும் உடலாக ஓங்கித்
தயிர் வெண்ணெய் தாரணியோடு உண்டான் -பயிரில்
களை போல் அசுரரைக் காய்ந்தான் தன் கையில்
வளை போல் எம்மாசிரியர் வாக்கு –5–

பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே பிரகாசிக்கின்றன –
பிற மத நிரசன வெற்றிச் சின்னம் போன்றவை -ஜ்ஞானத்தை வளர்ப்பவை -இவை இரண்டும் –

உயிரும் உடலும் உடலாக ஓங்கித் -தயிர் வெண்ணெய் தாரணியோடு உண்டான் –
ஸமஸ்த சேதன அசேதனங்கள் சரீரம் -தாரணி உண்டது
பரத்வம் ஸுலப்யம் /ப்ராப்யம் பிராபகத்வம் பரி பூர்ணன் -என்றவாறு
பயிரில் களை போல் அசுரரைக் காய்ந்தான்-விரோதி நிரசன சீலன் -பயிர்களை களைவது போலே -சாது பரித்ராணாம் பிரதான பலன் –
விநாசாய துஷ்க்ருதாம் ச -சாது பரித்ராணாம் பொருட்டு –
தன் கையில் -வளை போல் எம்மாசிரியர் வாக்கு-சங்கம் -வளை –மடுத்தூதிய சங்கு ஒலி–தரிக்கப் பண்ணும் அனுகூலர்களுக்கு
ச கோஷா த்ருஷ்ட்ரர்களை உழுக்கப் பண்ணும் –பற்றலர் வீய பாஞ்ச ஜன்யத்தை உன் வாய் வைத்த போர் ஏறே –
அதே போலே நம் ஆசிரியர் வாக்கு -நம்மை வாழ்விக்கும் -புற மத நிரசனம் பண்ணும் –

——————————————————————————————–

அலையற்ற ஆரமுதக் கடல் அக்கடல் உண்ட முகில்
விலையற்ற நன் மணி வெற்பு வெயில் நிலவு ஓங்கு பகல்
துலையுற்றன வென்பர் தூ மறை சூடும் துழாய் முடியாற்கு
இல்லை ஒத்தன வவன் பாதம் பணிந்தவர்க்கு எண்ணுதற்கே –6-

பாகவதர்களுக்கு உபமான பொருள்கள் மனத்தால் நினைப்பதற்கும் இல்லை –

அலையற்ற ஆரமுதக் கடல்-அபூத உவமை இல் பொருள் உவமை – சொல்லியே -ஓத்தார் மிக்கார் இலையாய மாமாயனுக்கு
சுட்டுரைத்த நன் பொன் உன் ஒளி ஒவ்வாது -கல்பித்து சொன்னாலும்
அக்கடல் உண்ட முகில் –அதுக்கே மேலே -அந்த அலை அற்ற கடலை உண்ட முகில் –
விலையற்ற நன் மணி வெற்பு –நல்ல –மாணிக்க பர்வதம் -கரு மாணிக்க மலை -மரகத குன்றம் வருவது ஒப்ப
வெயில் நிலவு ஓங்கு பகல் -சூரியன் சந்திரன் சேர்ந்து காணப் பெரும் பகல் -என்றவாறு -இரண்டும் ஓக்கத்துடன்-
துலையுற்றன வென்பர் தூ மறை சூடும் துழாய் முடியாற்கு–அஞ்ஞானம் அசத்தி இல்லாமல் அப்வருஷேயம் -தூ மறை –
ஸ்ருதி சிரஸே விதீப்தே ஸ்ரீநிவாஸே -வேத முதல்வனுக்கு
இல்லை ஒத்தன வவன் பாதம் பணிந்தவர்க்கு எண்ணுதற்கே-எண்ண கூட ஒத்தன ஆகாதே –

—————————————————————————–

உத்தி திகழும் உரை மூன்றின் மும் மூன்றும்
சித்தம் உணரத் தெளிவித்தார் முத்தி தரும்
மூல மறையின் முடி சேர் முகில் வண்ணன்
சீலம் அறிவார் சிலர் –7-

ரகஸ்ய நவ நீதம் –
திரு மந்த்ரத்தில் மூன்று அர்த்தங்கள்
1-எம்பெருமான் இடம் நம் ஸ்வரூபத்தை சமர்ப்பித்தல் –
2-நம்மை ரஷிக்க வேண்டிய கடைமையை சமர்ப்பித்தல் –
3-ரஷித்தலின் பலனை சமர்ப்பித்தல் –
முக்கிய மந்த்ரம் காட்டிய மூன்றும் -அநந்யார்ஹ -நிருபாதிக -சேஷத்வம் /அநந்ய சரண்யத்வம் /அநந்ய பிரயோஜனத்வம் -போக்யத்வம் –
த்வயத்தில் மூன்று அர்த்தங்கள்
1-உபாயம் -திருமகள் உடன் சேர்ந்த திருமாலின் திண் கழலே உபாயம்-
2-பலன் -ஸ்ரீ யபதி – பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
3-அவித்யாதி விரோதிகள் ஒழிகை
சரம ஸ்லோகத்தில் மூன்று அர்த்தங்கள்
1-சரணம் அடைபவன் செய்யும் கிருத்யங்கள்
2-சரணம் அடைந்தவனுக்கு எம்பெருமான் செய்யும் கிருத்யங்கள்
3-சரணம் அடைந்த சேதனன் இருக்க வேண்டிய முறைகள் -நிரபரத்வம்– நிர்பயத்வம் -க்ருதக்ருத்யன் –

———————————————————————

எனக்கு உரியன் எனது பரம் என் பேறு என்னாது
இவை யனைத்தும் இறையில்லா இறைக்கு அடைத்தோம்
தனக்கு இணை ஒன்றில்லாத திருமால் பாதம்
சாதனமும் பயனும் எனச் சலங்கள் தீர்ந்தோம்
உனக்கு இதம் என்று ஒரு பாகன் உரைத்தது உற்றோம்
உத்தவனாம் அவன் உதவி எல்லாம் கண்டோம்
இனிக்க வருமவை கவர விகந்தோம் சோகம்
இமையவரோடு ஓன்று இனி நாம் இருக்கும் நாளே –8-

இனிக்க-நாம் மனம் மகிழும் படி
வருமவை கவர -வரப்போகும் அர்ச்சிராதி மார்க்கம் -பகவத் அனுபவம் முதலிய விஷயங்கள் நம் மனத்தைக் கவர –
விகந்தோம் சோகம் -துன்பத்தை விட்டு ஒழிந்தோம்
இமையவரோடு ஓன்று இனி நாம் இருக்கும் நாளே-இனி நாம் இவ்வுலகில் இருக்கும் நாள் நித்ய ஸூரிகளின் காலத்திற்கு சமமானது –
இறையில்லா இறை-பரமேஸ்வரன் -தனக்கு இறை இல்லாத இறையவன்
தனக்கு இணை ஒன்றில்லாத திருமால் பாதம் –பாதத்துடன் அந்வயம் –
முன்பே ஓத்தார் மிக்கார் இல்லாதவன் என்று சொன்னதால் இங்கு திருவடிகளுக்கே அந்வயம்
சலங்கள்-சம்சய விபர்யயங்கள்-யதீந்த்ர சரணங்களை ஒரே மருந்து
பாகன் -மன்னவர்க்கு தேர் பாகு -சித்திரத் தேர் வலவா
உதவி எல்லாம் -உபகார பரம்பரைகள்
களிப்பும் கவர்வும் அற்று –2-3-10—கர்மபலன் -அல்ப அஸ்திர -விஷய லாபத்தால் வந்த களிப்பு -ஹர்ஷம்
அலாபத்தில் கிலேசம் கவர்வு
இனி கவருமவை கவர-கிலேசம் பட வைக்கும் அவற்றை கவர -சோகம் விட்டு ஒழிந்தோம் –
இகந்தோம்-சம்பந்தம் அறுப்பது இகந்து -என்ற வாறு –

—————————————————————————————

தத்துவங்கள் எல்லாம் தகவால் அறிவித்து
முத்தி வழி தந்தார் மொய் கழலே -யத்திவத்தில்
ஆராமுதமாம் இரு நிலத்தில் என்று உரைத்தார்
தாரமுதல் ஓதுவித்தார் தாம் –9-

தாரமுதல் ஓதுவித்தார் தாம் -பிரணவத்தை முதல் அஷரமாகக் கொண்ட திரு மந்த்ரம் முதலிய
ரகஸ்யங்களை உபதேசித்து அருளிய ஆச்சார்யர்கள்
தத்துவங்கள் எல்லாம் தகவால் அறிவித்து -தத்த்வங்களின் ஸ்வரூபத்தை முழுவதும் பரம காருண்யத்தால் உபதேசித்து அருளி
முத்தி வழி தந்தார் -மோஷத்தின் உபாயத்தை உபதேசித்து அருளிய ஆச்சார்யர்கள் உடைய –
மொய் கழலே -வலிய திருவடிகளே –அத்ர பரத்ர சாயி –
யத்திவத்தில் -அந்த பரம பதத்தில் -ஆராமுதமாம் -உபேயம் -புருஷார்த்தமும் ஆச்சார்யர் திருவடிகளே அங்கும்
இரு நிலத்தில் ஆறு ஆம் என்று உரைத்தார் -அகன்ற இப்பூமியில் உபாயமும் ஆகும் என்று உபதேசித்து அருளினார் –

———————————————————————————-

திரு நாரணன் எனும் தெய்வமும் சித்தும் அசித்தும் என்று
பெரு நான்மறை முடி பேசிய தத்துவம் மூன்று இவை கேட்டு
ஒரு நாள் உணர்ந்தவர் உய்யும் வகையன்றி ஓன்று உகவார்
இரு நால் எழுத்தின் இதயங்கள் ஓதிய எண் குன்றே –10-

ஆச்சார்யர்கள் இடம் தம் பாக்கியம் பரிபக்வமான நாளிலே கேட்டு அறிந்து
திரு அஷ்டாஷரத்தின் உட்பொருளையும் நன்கு உணர்ந்த விவேகிகள்
அநந்ய பிரயோஜனராய் பகவத் கைங்கர்யம் ஆகிய புருஷார்த்தத்திலே ஊற்றம் கொள்வர் –
எண் குன்றே–எட்டு பிரகார ஞானங்கள் -கொண்டவர் –அஷ்ட விஞ்ஞானம் -ஸ்ரவணம் / தாரணம் /ஸ்மரணம் /
ப்ரதிபாதகம் -சொல்ல தெரிய வேண்டும் / அர்த்தங்கள் கொண்டு பொருத்தப் பார்த்து–த்யாஜ்ய உபதேயங்கள் உணர்ந்து
–ஊகம் ஊகம் -/அர்த்த விஞ்ஞானம் / தத்வ நிர்ணயம்

————————————————————————–

காரணமாய் யுயிராகி யனைத்தும் காக்கும்
கருணை முகில் கமலையுடன் இலங்குமாறும்
நாரணனார் வடிவான யுயிர்கள் எல்லாம்
நாம் என்று நல்லடிமைக்கு ஏற்குமாறும்
தாரணி நீர் முதலான மாயை காலம்
தனிவான் என்று இவை யுருவாம் தன்மை தானும்
கூரணி சீர் மதுயுடைய குருக்கள் காட்டக்
குறிப்புடனாம் கண்ட வகை கூறினோமே –11-

காரணமாய்– யுயிராகி-அந்தர்யாமியுமாகி
யனைத்தும் காக்கும் கருணை முகில் கமலையுடன் இலங்குமாறும் -ஸ்ரீ யபதி -விசிஷ்ட அத்விதீயம் –
நாரணனார் வடிவான யுயிர்கள் எல்லாம் -அவன் சரீரமான ஜீவாத்மாக்கள் எல்லாம் –
வடிவு -ரூபம் -சரீர பூதம் -யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம்
காரணம் -தாயாய் தந்தையாய் -உயிராய் தானாய் -இப்படி சர்வ பிரகாரத்தாலும் ரஷிப்பவன்-
நாம் என்று நல்லடிமைக்கு ஏற்குமாறும் -நாம் முன் நாம் முன் என்று போட்டியிட்டு சிறந்த கைங்கர்யம் செய்ய
தகுந்தவர்களாய் இருக்கும் பிரகாரத்தையும்
தாரணி நீர் முதலான மாயை -மூல பிரகிருதி
காலம்
தனிவான் -சுத்த சத்வம் –
என்று இவை யுருவாம் தன்மை தானும் -இந்த அசேதனங்கள் எல்லாம் ஸ்தூலமான உருவம் உள்ளனவாய் இருக்கும் ஸ்வ பாவத்தையும்
கூரணி சீர் மதுயுடைய குருக்கள் காட்டக் குறிப்புடனாம் கண்ட வகை கூறினோமே-ஆச்சார்யர்கள் அருளுடன் உபதேசித்து அருள
கவனத்துடன் நாம் அறிந்த படியே இங்கே வெளிட்டோம் –

——————————————————————————————————–

அப்படி நின்ற விமலன் படி எல்லாம்
இப்படி எம்முள்ளத்து எழுதினார் எப்படியும்
ஏரார் சுருதி ஒளியால் இருள் நீக்கும்
தாரா பதி யனையார் தாம் –12-

தாரா பதி யனையார் தாம்-நஷத்ரங்களுக்கு அரசனான சந்தரனைப் போன்ற ஆச்சார்யர்கள் –

——————————————————————-

செம் பொன் கழல் இணைச் செய்யாள் அமரும் திருவரங்கர்
அன்பர்க்கு அடியவராய் அடி சூடிய நாம் உரைத்தோம்
இன்பத் தொகை என எண்ணிய மூன்றில் எழுத்து அடைவே
ஐம்பத்து ஒரு பொருள் உயிர் காக்கும் அமுது எனவே –13-

————————————————————————–

யான் அறியும் சுடராகி நின்றேன் மற்றும் யாதும் அல்லேன்
வான் அமரும் திருமால் அடியேன் மற்றோர் பற்றும் இலேன்
தான் அமுதாம் அவன் தான் சரணே சரண் என்று அடைந்தேன்
மானமிலா வடிமைப் பணி பூண்ட மனத்தினனே –14-

யான் அறியும் சுடராகி நின்றேன்-ஜீவாத்மாவான நான் மற்றைப் பொருள்களை அறிபவனாகவும் ஜ்ஞான ச்வரூபனாகவும் நிற்கின்றேன்
மற்றும் யாதும் அல்லேன் -அசேதனங்களை காட்டிலும் வேறு பட்டுள்ளேன் -வான் அமரும் திருமால் அடியேன் மற்றோர் பற்றும் இலேன்
மானமிலா வடிமைப் பணி பூண்ட மனத்தினனே –அளவில்லாத கைங்கர்யம் ஆகிய சாம்ராஜ்யத்தை இறுகப் பற்றிய மனத்தை யுடைய நான்
தான் அமுதாம் அவன்தான் சரணே சரண் என்று அடைந்தேன் -ஆராவமுதன் திருவடிகளே உபாயம் என்று அடைந்தேன் –

———————————————————————————————–

சீலம் கவர்ந்திடும் தேசிகர் தேசின் பெருமையினால்
தூலங்கள் அன்ன துரிதங்கள் மாய்ந்தன துஞ்சல் தரும்
கோலம் கழிந்திடக் கூறிய காலம் குறித்து நின்றோம்
மேல் இங்கு நாம் பிறவோம் வேலை வண்ணனை மேவுதுமே –15–

சீலம் கவர்ந்திடும் -நல்ல குணத்தையும் நல்ல ஒழுக்கைத்தையும் கைக் கொண்ட
தேசிகர் தேசின் பெருமையினால் -ஆசார்யர்கள் செய்த பிரபத்தி யாகிய தேஜசின் பிரபாவத்தால்
தூலங்கள் அன்ன துரிதங்கள் மாய்ந்தன-பஞ்சுகள் போல பாபங்கள் ஒழிந்தன
துஞ்சல் தரும் -அஜ்ஞ்ஞானத்தை தரும்
கோலம் கழிந்திடக் -சரீரம் அழிவதற்கு
கூறிய காலம் குறித்து நின்றோம் -பகவான் சங்கல்பித்த காலத்தை எதிர்பார்த்து நிற்கின்றோம்
மேல் இங்கு நாம் பிறவோம் வேலை வண்ணனை மேவுதுமே –

——————————————————————————

வண்மை யுகந்த வருளால் வரம் தரும் மாதவனார்
உண்மை யுணர்ந்தவர் ஒதுவிக்கின்ற வுரை வழியே
திண்மை தரும் தெளிவு ஒன்றால் திணி இருள் நீங்கிய நாம்
தன்மை கழிந்தனம் தத்துவம் காணும் தரத்தினமே –16-

——————————————————————–

நாராயணன் பரனாம் நாம் அவனுக்கு நிலையடியோம்
சோராது அனைத்தும் அவன் உடம்பு என்னும் என்னும் சுருதிகளால்
சீரார் பெரும் தகைத் தேசிகர் எம்மைத் திருத்துதலால்
தீரா மயல் அகற்றும் திறம்பாத் தெளிவு உற்றனமே –17-

——————————————————————–

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே யடைக்கலம் கொண்டனம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையின் இணை யடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருது எல்லாம் நமக்கு பரம் ஒன்றிலதே –18-

உணர்ந்தவர்-அர்த்த பஞ்சக ஞானம் -சரீராத்மா பாவம் -இவற்றை அறிந்த ஆசார்யர்கள்
ஒன்றே புகல் என்று காட்டத் -ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே உபாயம் -என்று அறிந்து உபதேசிக்க
திருவருளால் -பிரத்யுபகாரம் எதிர்பாராத பிராட்டியின் கிருபையாலே
அன்றே யடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால் இன்றே இசையின் இணை யடி சேர்ப்பர்
இனிப் பிறவோம்
நன்றே வருது எல்லாம் -இனி வரும் -இச் சரீரம் அழியும் வரை -மேலே வரும் இன்ப துன்பங்கள் எல்லாம் அனுகூலங்களே
நமக்கு பரம் ஒன்றிலதே

———————————————————————————-

சிறு பயனில் படியாத தகவோர் எம்மைச்
சேர்க்க வடைக்கலம் கொண்ட திருமால் தானே
மறு பிறவி யறுத்து அழியா வானில் வைக்கும்
மனமே நீ மகிழாது இருப்பது என் கொல்
உறுவது உனக்கு உரைக்கேன் இனி இருக்கும் காலம்
ஒரு பிழையும் புகுத்தாத வுணர்த்தி வேண்டிப்
பெறுவது எல்லாம் இங்கே நாம் பெற்று வாழப்
பேர் அடிமையால் ஏது இன்று இகழேல் நீயே –19–

வுணர்த்தி வேண்டிப் -தத்வ ஜ்ஞானத்தை அபேஷித்து
பெறுவது எல்லாம்- பரமபதத்தில் பெறக் கூடிய கைங்கர்யங்களை எல்லாம்
ஏது இன்று இகழேல் நீயே-பயன் என்ன என்று நீ உபேஷியாமல் இருக்க வேண்டும் –

————————————————————————-

சாக்கியர் சைனர்கள் சார்வாகர் சாங்கியர் சைவர் மற்றும்
தாக்கியர் நூல்கள் சிதையத் தனி மறையின் கருத்தை
வாக்கியம் முப்பதினால் வகை செய்து வியாகரித்தோம்
தேக்கி மனத்துள் இதனைத் திணி இருள் நீங்குமினே–20-

———————————————————————–

தள்ளத் துணியினும் தாய் போல் இரங்கும் தனித் தகவால்
உள்ளத்து உறைகின்ற யுத்தமன் தன்மை யுணர்ந்து யுரைத்தோம்
முள் ஒத்த வாதியார் முன்னே வரின் எங்கள் முக்கியர் பால்
வெள்ளத்திடையில் நரி போல் விழிக்கின்ற வீணர்களே –21-

———————————————————————-

செய்யேல் மறம் என்ற தேசிகன் தேசிகன் தாதை யவன் உரைத்த
மெய்யே யரும் பொருள் சூடிய எண் மதி காதலியாம்
பொய்யே பகை புலன் ஐ இரண்டு ஓன்று பொரும் கருவி
கையேறு சக்கரக் காவலன் காவல் அடைந்தவர்க்கே –22–

———————————————————————-

அந்தமிலாதி தேவன் அழி செய்து அடைத்த
அலை வேலை ஓதம் அடையச்
செந்தமிழ் நூல் வகுத்த சிறு மனிச்சர்
சிருகைச் சிறாங்கை யது போல்
சந்தம் எலாம் யுரைத்த விவை என்று தங்கள்
இதயத்து அடக்கி யடியோம்
பந்தம் எலாம் அறுக்க அருள் தந்து உகந்து
பரவும் பொருள்கள் இவையே –23-

———————————————-

முக்கண் மாயையின் மூ வெட்டின் கீழ் வரும் மூ வகையும்
இக்குணம் இன்றி இலங்கிய காலச் சுழியினமும்
நற்குணம் ஒன்றுடை நாகமும் நாராயணன் உடம்பாய்ச்
சிற்குணம் அற்றவை என்று உரைத்தார் எங்கள் தேசிகரே –24-

முக்கண் மாயையின் மூ வெட்டின் கீழ் வரும் -சத்வம் ரஜஸ் தமஸ் -முக்குணங்கள் -யுடைய மூல பிரக்ருதியின் 24 தத்வங்களின் கீழே பிரியும்
மூ வகையும் -பிரகிருதி -விக்ருதி -பிரகிருதி-விக்ருதி என்ற மூன்று வகையும்
இக்குணம் இன்றி இலங்கிய காலச் சுழியினமும்-இந்த மூ வகைக் குணம் இல்லாத காலத்தின் வகுப்பும்
நற்குணம் ஒன்றுடை நாகமும்-சத்வ குணம் ஒற்றே உடைய பரம பதமாய் மாறும் சுத்த சத்வமும்
ஆக இந்த மூன்று வகை அசேதனங்களும்
நாராயணன் உடம்பாய்ச் -எம்பெருமானுக்கு சரீரமாய்
சிற்குணம் அற்றவை -அறிவு என்னும் குணம் இல்லாதவை
என்று உரைத்தார் எங்கள் தேசிகரே –

—————————————————————————————————–

எனது என்பதும் யான் என்பதும் இன்றித்
தனது என்று தன்னையும் காணாது உனது என்று
மாதவத்தால் மாதவற்கே வன் பரமாய் மாய்ப்பதனில்
கைதவத்தான் கை வளரான் காண் –25-

எனது என்பதும் யான் என்பதும் இன்றித் -அஹங்காரம் மமகாரங்கள் இல்லாமல்
தனது என்று தன்னையும் காணாது -ஸ்வ தந்திர பிரமமும் இல்லாமல்
உனது என்று மாதவத்தால் -சரணா கதி யாகிய உயர்ந்த தவத்தால் எல்லாம் உன்னுடையதே என்று
மாதவற்கே வன் பரமாய் மாய்ப்பதனில் -எம்பெருமானுக்கே திடமான பொறுப்பாக தன்னுடைய சம்பந்தத்தை அறுத்து அவன் இடம் சமர்ப்பித்ததில்
கைதவத்தான் கை வளரான் காண் -மனம் சுத்தம் இல்லாத வஞ்சனை யுடையவன் மேம்பாடு அடைய மாட்டான் -உஜ்ஜீவிக்க மாட்டான் -என்றவாறு –

———————————————————————————————–

பல்வினை வன் கயிற்றால் பந்தம் உற்று உழல்கின்றனரும்
நல்வினை மூட்டிய நாரணனார் பதம் பெற்றவரும்
தொல்வினை ஒன்றும் இல்லாச் சோதி வானவரும் சுருதி
செல்வினை யோர்ந்தவர் சீவர் என்று ஓதச் சிறந்தனமே –26-

பத்தர் முக்தர் நித்யர் மூன்று வகை ஜீவரையும் வேத நெறிகளை நன்கு அறிந்த –
சுருதி செல்வினை ஒர்ந்தவர் -நம் ஆச்சார்யர்கள் விளக்கிக் காட்டி அருளினார்கள் –

——————————————————————————————

ஆரணங்கள் எல்லாம் அடி சூட மேல் நின்ற
காரணமாய் ஒன்றால் கலங்காதான் நாரணனே
நம்மேல் வினை கடியும் நல் வழியில் தான் நின்று
தன் மேனி தந்து அருளும் தான் –27-

——————————————————————–

குடன்மிசை ஒன்றியும் கூடியும் நின்ற கொடும் துயரும்
உடல் மிசைத் தோன்றும் உயிரும் உயிர்க்கு உயிராம் இறையும்
கடன் மிசைக் கண்டதரளத் திரளவை கோத்த பொன் நூல்
மடல் மிசை வார்த்தை யதன் பொருள் அன்ன வகுத்தனம் –28–

குடன்மிசை ஒன்றியும் கூடியும் நின்ற -சரீரத்தில் ஒன்றுபட்டும் சேர்ந்தும் இருப்பதும்
கொடும் துயரும் -கொடிய துன்பத்தை தரும் பிரகிருதி என்னும் அசேதனமும்
உடல் மிசைத் தோன்றும் உயிரும் -சரீரத்தில் இருந்து நடத்தும் ஜீவாத்மா என்னும் சேதனமும்
உயிர்க்கு உயிராம் இறையும்-ஜீவாத்மாவுக்கும் அந்தர்யாமியாய் உள்ள சர்வேஸ்வரனும்
முறையே
கடன் மிசைக் கண்டதரளத் திரளவை கோத்த பொன் நூல்
கடலாகவும் -கடலில் உள்ள முத்துக்களின் குவியலாகவும் -அந்த முத்துக்களைக் கோத்த தங்க நூலாகவும்
இருக்கின்றன வென்னும் விஷயம்
மடல் மிசை -காதுகளில் ரகஸ்யமாய் ஆச்சார்யர்கள் உபதேசித்து அருளிய
வார்த்தை யதன் பொருள் அன்ன வகுத்தனம் –வாக்யங்களின் அர்த்தம் என்று இந்த ரகச்யத்தில் நாம் பிரித்துக் காட்டினோம் –

————————————————————————————————

தத்துவம் தன்னில் விரித்திடத் தோன்றும் இரண்டுதனில்
பத்தி விலக்கிய பாசண்டர் வீசுறும் பாசமுறார்
எத்திசையும் தொழுது ஏத்திய கீர்த்தியர் எண்டிசையார்
சுத்தர் உரைத்த சுளகம் அருந்திய தூயவர் -29–

எத்திசையும் தொழுது ஏத்திய கீர்த்தியர் -எத்திசையில் உள்ளோரும் வணங்கிப் புகழ்கின்ற கீர்த்தி யுடையரும்
எண்டிசையார் சுத்தர்-எல்லா பிரகாரத்தாலும் நிறைந்த பரிசுத்தி யுடையவருமான நம் ஆச்சார்யர்கள்
உரைத்த சுளகம் -உபதேசித்து அருளிய விஷயங்கள் அடங்கிய இந்தத் தத்துவத் த்ரய சுளகம் என்னும் ரஹஸ்யத்தை
அருந்திய தூயவர் -உட்கொண்டு அனுபவித்த பரிசுத்தர்கள்
தத்துவம் தன்னில் விரித்திடத் தோன்றும் இரண்டுதனில் -தத்வ த்ரயங்களில் முக்கியமாகத் தோன்றும்
சேதனன் ஈஸ்வரன் என்னும் இரண்டு தத்துவங்களில்
பத்தி விலக்கிய-அவற்றின் ஸ்வரூபத்தையும் ஸ்வ பாவத்தையும் உள்ளபடி அறியாது வெறுப்பவர்களான
பாசண்டர் வீசுறும் பாசமுறார் -நாஸ்திகர்கள் வீசுகின்ற பாசத்தில் அகப்பட மாட்டார்கள் –

——————————————————————————————

வினைத் திரள் மாற்றிய வேதியர் தந்த நல் வாசகத்தால்
அனைத்தும் அறிந்த பின் ஆறும் பயனும் என வடித்தோம்
மனத்தில் இருந்து மருத்தமும் அமுதாகிய மாதவனார்
நினைத்தல் மறத்தல் அரிதாய நல் நிழல் நீள் கழலே –30-

———————————————————————————

ஒது மறை நான்கு அதனில் ஓங்கும் ஒரு மூன்றின் உள்ளே
நீதி நெறி வழுவா நிற்கின்றோம் -போதமரும்
பேராயிரமும் திருவும் பிரியாத
நாராயணன் அருளானாம் –31–

போதமரும் -அர்த்தம் அறிவதற்கு அரிதான -அல்லது போது அமரும் -நாவாகிய புஷ்பத்தில் பொருந்திய
பேராயிரமும் -சகஸ்ர நாமமும் -போதமரும் சகஸ்ர நாமம் -புகழையே வெளியிடும்
போது அமரும் திருவும் -தாமரைப் பூவில் அமர்ந்துள்ள பிராட்டியும்
பிரியாத நாராயணன் அருளானாம் -எப்பொழுதும் சேர்ந்து இருக்கின்ற நாராயணனுடைய பரம கிருபையால்
ஒது மறை நான்கு அதனில் ஓங்கும் ஒரு மூன்றின் உள்ளே -ரகஸ்ய த்ரயங்களுக்குள்ளே
நீதி நெறி வழுவா நிற்கின்றோம் -சன்மார்க்கத்து நிஷ்டையிலே நாம் தவறாமல் நிலை பெற்று இருக்கின்றோம் –

———————————————————————–

ஊன் தந்து நிலை நின்ற உயிரும் தந்து ஓர்
உயிராகி யுள் ஒளியோடு உறைந்த நாதன்
தான் தந்த இன்னுயிரை எனது என்னாமல்
நல்லறிவும் தந்து அகலா நலமும் தந்து
தான் தந்த நல் வழியால் தாழ்ந்த வென்னைத்
தன் தனக்கே பரமாத் தானே எண்ணி
வான் தந்த மலர் அடியும் தந்து வானோர்
வாழ்ச்சி தர மன்னருளால் வரித்திட்டானே –32

உபகார பரம்பரைகளை அருளுகிறார் –

————————————————————————-

திருமால் அடியிணையே திண் சரணாக் கொண்டு
திருமால் அடியிணையே சேர்வார் ஒரு மால்
அருளால் அருளாத வானோர்கள் வாழ்ச்சி
யருளா நமக்கு அளித்தார் ஆய்ந்து –33–

முதல் இரண்டு அடிகள் த்வயார்த்தம் -ஆசார்யர்களே சர்வேஸ்வரன் தந்து அருளாத அவனது
திருவடி இணைகளை நமக்கு தந்து அருளி நித்ய ஸூ ரிகளின் வாழ்வை நமக்கு அருளினார்கள் –

————————————————————————-

சேர்க்கும் திருமகள் சேர்த்தியில் மன்னுதல் சீர்ப் பெரியோர்க்கு
ஏற்கும் குணங்கள் இலக்காம் வடிவில் இணை யடிகள்
பார்க்கும் சரண் அதில் பற்றுதல் நன் நிலை நாம் பெரும் பேறு
ஏற்கின்ற எல்லைகள் எல்லாக் களையற எண்ணினமே–34-

த்வயார்த்தங்கள் பத்தையும் ஒரு சேர அருளிச் செய்கிறார் –

———————————————————————

திருமால் அடியினை சேர்ந்து திகழ்ந்த வடிமை பெறத்
திரு நாரணன் சரண் திண் சரணாகத் துணிந்து அடைவோர்
ஒரு நாள் உரைக்க உயிர் தரும் மந்திரம் ஓதிய நாம்
வரு நாள் பழுது அற்று வாழும் வகையத்தில் மன்னுவமே –35–

—————————————————————

மற்று ஒரு பற்று இன்றி வந்து அடைந்தார்க்கு எல்லாம்
குற்றம் அறியாத கோவலனார் முற்றும்
வினை விடுத்து விண்ணவரோடு ஒன்ற விரைகின்றார்
நினைவுடைத்தாய் நீ மனமே நில்லு –36-

————————————————————–

எல்லாத் தருமமும் என்னை இகழ்ந்திடத் தான் இகழாது
எல்லாம் தனது என எல்லாம் உகந்து அருள் தந்த பிரான்
மல்லார் மதக் களிறு ஒத்த வினைத் திரள் மாய்ப்பன் என்ற
சொல்லால் இனி ஒருகால் சோகியாத் துணிவு உற்றனமே –37–

——————————————————————–

வினைத் திரள் மாற்றிய வேதியர் தந்த நல் வாசகத்தால்
அனைத்தும் அறிந்த பின் ஆறும் பயனும் என வடித்தோம்
மனத்தில் இருந்து மருத்தமும் அமுதாகிய மாதவனார்
நினைத்தல் மறத்தல் அரிதாய நல் நிழல் நீள் கழலே –38-

————————————————————-

எட்டில் ஆறு இரண்டில் ஒன்றில் எங்கும் ஆறு இயம்புவார்
விட்ட வாறு பற்று மாறு வீடு கண்டு மேவுவார்
சிட்டரான தேசு உயர்ந்த தேசிகர்க்கு உயர்ந்து மேல்
எட்டு மூன்றும் ஊடறுத்தது எந்தை மால் இரக்கமே –39–

எந்தை மால் இரக்கமே
எட்டில் -திரு மந்த்ரத்திலும்
ஆறு இரண்டில் -ஆறு பதங்களாய் இரண்டு பகுதியாய் உள்ள த்வயத்திலும்
ஒன்றில் -ஒரு சுலோகமாய் அமைந்த சரம ஸ்லோகத்திலும்
எங்கும் ஆறு இயம்புவார் -இவற்றில் எங்கும் உபாயமே சொல்லப் பட்டு இருப்பதாய் உபதேசிப்பவர்களும்
விட்ட வாறு -நம்மால் முடியாதது என்று விடப்பட்ட பக்தி யோகம் முதலிய உபாயத்தையும்
பற்று மாறு -கைக்கொள்ளும் உபாயமான பிரபத்தியையும்
வீடு கண்டு மேவுவார் -அதின் பலமான மோஷத்தையும் நன்கு அறிந்து அதில் ஊற்றம் உடையவர்களும்
சிட்டரான -ஞானம் வைராக்கியம் அனுஷ்டானம் இவை பொருந்தியவர்களும்
தேசு உயர்ந்த தேசிகர்க்கு -தேஜஸ் நிறைந்த ஆச்சார்யகளுக்காக
உயர்ந்து -ஓங்கி உயர்ந்து
மேல் எட்டு மூன்றும் ஊடறுத்தது -மேல் உள்ள 24 வஸ்துக்களாய் மாறுகிற பிரகிருதி சம்பந்தத்தையும் ஒழித்து விட்டது –

———————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: