Archive for April, 2016

பகவத் விஷயம் காலஷேபம் -34– திருவாய்மொழி – –1-2-6 . . . . 1-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

April 30, 2016

அவதாரிகை

பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரம் சொன்னார் கீழ் –
நீர் பரிஹாரம் சொல்லுகைக்கு அவாப்த சமஸ்த காமனாய் சேஷியாய் இருக்கிற அவன் தான் நமக்கு
கை புகுந்தானோ என்ன -அவன் பக்கல் திருத்த வேண்டுவது ஓன்று இல்லை –அவன் சங்க ஸ்வபாவன் -என்கிறார் –

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

கன்று குணிலா எறிந்து ஆநிரை காத்து -ஆனை கொன்று ஆனை காக்கும் -நம்பலாமா
பஜ நீயன் உடைய சர்வ சமஸ்வத்தை அருளிச் செய்கிறார்
பற்றிலன் ஈசனும்-ஈசனும் பற்று இல்லாதவன் -பற்றை இல்லமாக உடையவன்- இரண்டு பொருளில் -சரணாகத வத்சலன் -அன்று ஈன்ற கன்று உகக்கும் ஆ போன்றவன்
சமோஹம் சர்வ பூதேஷு -த்வேஷப்பிவனும் இல்லை பிரீதி வைப்பவனும் இல்லை நான் -பணக்காரன் என்பதால் ப்ரீதி இல்லாதவன் -ஏழை என்று த்வேஷிப்பது இல்லை -என்றவாறு
சுக்ரீவன்-அபூர்வ ஆஸ்ரிதன் பக்கல் -கிம் கார்யம் சீதயா மம-என்பவன் -முற்றவும் நின்றானே -சீதை பாரத லஷ்மணன் கை விட்டு இன்று வந்த –
தாரகத்வ போஷகத்வ போக்யத்வம் எல்லாமாக நம்மைக் கொள்கிறான் –
வாஸூ தேவ சர்வம் -எல்லாம் கண்ணன் -நான் சொல்ல வேண்டியதை -முற்றவும் நின்றனன் -அவன் சொல்லிக் கொண்டு
நீயும் பற்று இலையாய் -மற்ற பற்றுக்களை விட்டு -அவன் இடம் பற்று இல்லமாகக் கொண்டு
அவன் முற்றில் அடங்கே -போக ரசம் -அனுபவிக்க -லீலா ரசம் -விட்டு -திருவாய்மொழி கேட்ட பலன் —
-தாரதம்யம் இல்லாமல்-உயர்வு  தாழ்வு இல்லாமல் அவன் இருப்பது போலே
நீயும் ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் சமஸ்த அனுபவ சாகரத்துக்குள் அந்தர்பவி
நாம் அவன் இடம் ஆத்மாத்மீயம் சமர்ப்பித்தால் -தானும் நம்மிடம் ஆத்மாத்மீயம் பண்ணக் கடவன் -பக்தாநாம் –

பற்றிலன் –
பற்று உண்டு -சங்கம் -அன்பு -அத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவன்
பற்றிலான் என்னுமத்தை –பற்றிலன் -என்று குறைத்துக் கிடக்கிறது
இன்னான் இங்கு உண்டோ என்னில் இங்கு இல்லை யவன் அகத்திலான் -வீட்டில் உள்ளான் -என்னக் கடவது இ றே

ஈசனும் –
ஈச்வரத்வம் கழற்ற ஒண்ணாமையாலே கிடக்கும் அத்தனை -ஸ்வாபாவிகம் அன்றோ
இச் சங்கம் குணமாகைக்கு கிடக்கிறது
பயப்படுகைக்கு உடல் அன்று
பெரியவன் எளிமை இ றே குணமாவது

பயம் ப்ரீதி மாறி மாறி வருமே -ஈஸ்வரன் நியந்தா -ஸ்வாமி-
சங்கம் -பற்று -குணம் ஆக இந்த ஸ்வாமித்வம் –அவரை தேவர் என்று அஞ்சினோம்-

பிரசாத பரமௌ நாதௌ-—பற்றிலன் ஈசனும்–தண்ணளியே இவர்களுக்கு விஞ்சி இருப்பது
மேன்மை கழற்ற ஒண்ணாமை யாலே கிடந்த இத்தனை
இரண்டும் அவ்வாஸ்ரயகதமாய் இருக்க தண்ணளியே உள்ளது என்று உணர்ந்தபடி என் என்னில்
மம கேஹம் உபாகதௌ-சேஷிகளாய் இருப்பார்க்கு சேஷ பூதரை அழைத்துக் கார்யம் கொள்ளலாய் இருக்க
ஆகதௌ-—ஸ்ரீ வைகுண்டம் இருந்து வந்தது –உபாகதௌ -வடமதுரையில் இருந்து —ஏகம் உபாகதௌ -குடில் தேடி மம கேஹம் உபாகதௌ
நெடும் தெருவே போகிறவர்கள் நான் இருந்த முடுக்குத் தெரு தேடி வந்த போதே பிரசாதம் விஞ்சி இருக்கும் என்னும் இடம் தெரிந்தது இல்லையோ
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -புஷ்ப ஹஸ்தம் -புஷ்ப திரு முகம் கொண்டு புஷ்பம் யாஜித்தான்
தன்யோஹம் -என்றும் ஒக்க சஞ்சரிக்கிற வழியிலே நிதி எடுப்பாரைப் போலே
அர்ச்சயிஷ்யாமி -என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியிலே அன்வயித்து அழித்து கெடுத்து ஜீவிக்கப் பாரா நின்றேன்
அழித்து கெடுத்து -நான் புஷ்ப மாலையை செய்வது போலே அவன் என்னை இஷ்ட விநியோஹ அர்ஹம் ஆக்கிக் கொடுப்பேன் –
இத்யாஹ-சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி நிற்பார் சொல்லக் கடவ பாசுரத்தை இவன் சொல்லுவதே என்று ருஷி கொண்டாடுகிறான்
மால்ய உப ஜீவன -பூவில் கண் வைத்து தொடுக்கில் சாபலம் பிறக்கும் என்று கண்ணை மாற வைத்து தொடுத்து பூ விற்று ஜீவிக்கும்
அத்தனை புல்லியன் சொல்லும் வார்த்தையே ஈது -என்கிறார் –
அவனுக்கு சமர்பிக்கும் புஷ்பத்தில் கண் வைக்க மாட்டாத அநந்ய பிரயோஜனன்-அன்றோ –

முற்றவும் நின்றனன் –
சமோ ஹம் சர்வ பூதேஷு என்கிறபடி -ஆஸ்ரயணித்வே சமனாய் நின்றான்
இத்தலை இருந்தபடி இருக்க -தான் எல்லார்க்கும் ஒத்து இருக்கை

பற்றிலையாய் –
நீயும் பற்றிலையாய் –
நீயும் பற்றை உடயையாய்-சங்கத்தை உடையை யாய்

அவன் முற்றில் அடங்கே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிறபடியே அவனுடைய எல்லா கைங்கர்யத்திலும் அன்வயி –

அதவா
பட்டர் அருளிச் செய்யும் படி
பற்றிலன் ஈசனும்
வாஸூ தேவோஸி பூர்ண -என்கிறபடியே
சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -ஜ்ஞானானந்த அமல ஸ்வரூபனாய் திரை மாறின கடல் போலே
ஈசிதவ்யரான நித்ய சூரிகளை உடையனாய் -பரம பதத்தில் எழுந்து அருளி இருக்கிறவனும் அவர்கள் பக்கல் பற்று உடையவன் அல்லன்
அவர்கள் பக்கல் பற்று உடையவன் அன்றிக்கே இருந்தால் குறை பட்டு இரானோ என்னில்

முற்றவும் நின்றனன்
அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றம் இன்று ஆஸ்ரயிக்கிற இவனாலே யாம் படி நின்றான்
த்வயி கிஞ்சித் சமான்பன்னே கிம் கார்யம் சீதா மம -என்னுமா போலே
இன்று ஆச்ரயித்த தொரு திர்யக்குக்கு ஒரு வாட்டம் வரில் நித்ய ஆஸ்ரிதையான பிராட்டியாலும் கார்யம் இல்லை என்று
அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன்னணைக் கன்றினையும் கொம்பிலே கொள்ளுமா போலே
பிராட்டிக்காக கிஞ்சித் அவதி பட்டாய் இதற்கு நிமித்த பூதையான அவளிலும் பிரிய-பிரிய தர -பிரிய தம -இளைய பெருமாள் பரத -சத்ருக்னன்
-இவர்களுக்கு ஜீவனமான என் திரு மேனியும் வேண்டேன் -என்றாரே பெருமாள்
கிஞ்சித் கொஞ்சம் ஆபத்து வந்து இருந்தால் -வாயால் சொல்ல முடியாமல் -சீதை விடுவேன் சொல்லும் வாயால் –

பற்றிலையாய்
விட ஒண்ணாதாரை -நீ ஒரு தலையாக– விட்டான் அவன்
அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத் தட்டு என் உனக்கு

அவன் முற்றில் அடங்கே
அவனை எல்லாமாகப் பற்றப் பார்
மாதா பிதா பிராதா நிவாஸ சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –
வாஸூ தேவஸ் சர்வம் -தாரகம் போக்யம் போஷகமாய் -என்றுமாம் –

————————————————————————–

அவதாரிகை —

சங்க ஸ்வபாவன் -என்றார் கீழ் –
அவன் சங்க ஸ்வ பாவன் ஆனாலும் அபரிச்சின்ன உபய வித மகா விபூதி யை உடையனாய் இருந்தான் அவன்
இவன் அதி ஷூ த்ரனாய் ஷூத்ர உபகரணனாய் இருந்தான் -ஆனபின்பு அவனை இவனால் கிட்டலாய் இருந்ததோ
கடலிலே புக்க துரும்பானது இரண்டு தலையிலும் நினைவு இன்றிக்கே இருக்க திரை மேல் திரை யாக தள்ளுண்டு
போந்து கரையிலே சேருகிறது இல்லையோ –
அப்படியே இவனது ஐஸ்வர்ய தரங்கமாவது இவனைத் தள்ளாதோ என்னில்
இந்த ஐஸ்வர்யம் எல்லாம் நமக்கு வகுத்த சேஷியினுடைய ஐஸ்வர்யம் என்று அனுசந்திக்கவே -தானும் அதுவாய் அன்வயிகலாம் இ றே-
ஆனபின்பு சம்பந்த ஞானமே வேண்டுவது -என்கிறார் –

ஒரு வியாபாரி ஸ்திரீ கர்ப்பணியான சமயத்திலே அர்த்தார்ஜனம் பண்ண வேணும் என்று போவது -திரை கடல் ஓடியும் திரவியம் தேட –
அவளும் பிள்ளை பெற்று அவனும் பகவனே தனக்கு தமப்பனாருடைய வியாபாரமே யாத்ரையாய் அவனும் போய்
இவனும் சரக்கு பிடித்துக் கொண்டு வந்து ஒரு பந்தலிலே தங்குவது –அது இருவருக்கும் இடம் போராமையாலே அம்பறுத்து
எய்ய வேண்டும்படி விரோதம் பரஸ்துதமான சமயத்திலே இருவரையும் அறிவான் ஒருவன் வந்து
இவன் உன் பதா -நீ அவன் புத்தரன் -என்று அறிவித்தால்
கீழ் இழந்த நாளைக்கு சோகித்து இருவர் சரக்கும் ஒன்றாய் -அவன் ரஷகனாய் இவன் ரஷ்யமாய் அன்வயித்து விடும் இறே
இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே -அறிவிக்க -நாம் இசைய –அவனும் கர்மம் ஒன்றால் விலகி இருக்க
சுலபமான விஷயத்தை இழந்தோமே
அவர்ஜநயா சம்பந்தம் இருக்க கர்மம் என்பதைக் கொண்டு விலகி இருந்தோமே –அவ்வானவர் -உவ்வாவனர் காட்டித்தர

சமானம் வ்ருஷம் பரிஷச்வஜாதே -ஜீவாத்மாவும் பரமாத்மாவும் தேஹமாகிற வ்ருஷத்தைப் பற்றி இருந்தால் ஒருவன்
கர்ம பலங்களை புஜியா நிற்கும் -ஒருவன் புஜிப்பித்து விளங்கா நிற்கும் –
அவன் நியாமகன் -நாம் நியாம்யன் என்னும் ஞானம் முறை அறியவே பொருந்தலாம் இ றே
ராஜபுத்திரன் ஒரு உத்யானத்தைக் கண்டு புக அஞ்சினால் உன் தமப்பனது காண்-என்னவே நினைத்த படி புக்குப் பரிமாறலாம் இறே
ஆனபின்பு ததீயம் என்னும் பிரதிபத்தியே வேண்டுவது -தானும் அதுக்கு உள்ளே ஒருவனாய் அன்வயிக்கலாம் என்கிறார் –
அப்பாவுக்கு பிள்ளை என்ற சம்பந்த ஞானம் உணரவே -பேறு-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7-

விபூதி மகாத்ம்யத்தைக் கண்கொண்டு இறாயாதே-அவனோடு அத்தோடு உண்டான சம்பந்தத்தை அனுசந்தித்து
-நாமும் அதற்கு உள்ளேயே -என்ற நினைவால் -சொருகப் பார்
எழில் -அழகிய
அடங்கக் கண்ட -முழுவதுமாகப் பார் -லீலா விபூதி சம்பத்தா ஆபத்தா -அங்கு உள்ளாறும் அவன் விபூதி என்று விரும்பும் படி
ஈசன் அடங்கு எழில் அஃது –அதிசயகரமான சேஷமாக இருக்கும்
என்று உள்ளே அடங்குக -விபூதி ஏக சேஷமாக சொருகுக -அப்ருதக் சித்த விசேஷணம்-விட்டுப்போக முடியாதே –
கடலில் அலை போலே நீ உன்னை அனுசந்தித்து உள்ளே இருக்கலாமே -திமிங்கலம் உள்ளே இருக்கே -சம்பந்தம் இல்லை என்ற நினைவு இல்லாமல் –

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு
போக பூமியாய் இருக்கும் நித்ய விபூதி -கர்ம நிபந்தனமாக அவனாலே நியாம்யமாய் இருக்கும் இவ் விபூதி –
அதில் ததீயம் என்று அனுசந்திக்கப் புக்கவாறே கர்ம நிபந்தனமான ஆகாரம் தோற்றாதே-ததீயத்வ ஆகாரமே இறே தோற்றுவது –

ஈசன் அடங்கு எழில் அஃது கண்டு –
கட்டடங்க நன்றான சம்பத்தை எல்லாம் கண்டு நமக்கு வகுத்த ச்வாமியானவனுடைய சம்பத்து இது எல்லாம் என்று அனுசந்தித்து
அவ்விபூதிக்கு உள்ளே தானும் ஒருவனாய் அன்வயிக்கப் பார்ப்பது –
அப்போது சேஷிக்கு அதிசயத்தை விளைத்தான் ஆகலாம் இ றே -சர்வ சேஷத்வம் -பலிக்காதே-நாம் விலகி போனால் –
சேஷ பூதனுடைய ஸ்வரூப -சேஷத்வம் -சித்தி -சேஷி பக்கல் கிஞ்சித் காரத்தாலேயாய் இருக்கும்

பரார்த்த்வாத் -அர்த்த பிரயோஜனம் -சேஷ சேஷி பாவ லஷண பரம் ஜைமினி சூத்ரம் பரகத அதிசய ஆதாசய –
பர -வேறு பட்ட- உயர்ந்த –நமக்காக சிருஷ்டித்து சாஸ்திர -பிரதம் -இங்கும் பர –ஆனால் உயர்ந்த இல்லை
அதிசய -விசேஷ -உத்க்ருஷ்டமான மேன்மை -ஈஸ்வரனுக்கு பெருமை சேர்க்க –

அடங்குக உள்ளே –
ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்தம் ஜ்ஞானம் அடியாக தானும் அவன் விபூதியிலே ஒருவனாய் அன்வயிகலாம் இறே
சமுத்ரம் அபரிச்சின்னம் ஆனாலும் அதின் உள்ளில் சத்வங்களுக்கு -கடல் வாழ் ஜந்துக்களுக்கு -வேண்டும்படி புகலலாம் இறே
அது போலே சம்பந்தம் ஜ்ஞானம் அடியாகக் கிட்டலாம் -சம்பந்த ஜ்ஞானம் இல்லாத த்ருணத்தை இறே
கடல் கரையிலே ஏறத் தள்ளுவது -சம்பந்த ஜ்ஞானம் பிறக்கை இறே கடக க்ருத்யம் –

————————————————————————–

அவதாரிகை –

அவனுக்கு விபூதியாக அன்வயித்தால் பின்னை தானும் தனக்கு என்னச் சில கரணங்களும் என்று உண்டாய்
பஜித்தானாகை அரிதாய் இருந்ததே என்ன – பஜன பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8-

பஜன பிரகாரத்தை அருளிச் செய்கிறார்
உள்ளம் உரை செயல்-நினைக்க -ஸ்துதி -பிரணாம அதிகரனமான உடல் -நமக்கு என்று அடியிலேயே இருப்பதாய் -சந்நிஹிதமான இம்மூன்றையும்
உள்ளி -சிருஷ்டி பிரயோஜனத்தை நிரூபித்து
கெடுத்து –இதர விஷய அன்வயத்தை தவிர்ந்து
இறை -ஸ்வாமி பிராப்தன் -வகுத்த விஷயத்தில் பர தந்த்ரனாய் ஒதுங்குவாய்
வ்ருத்திகளைச் சொல்லி தத் தத் கரணங்களை நினைக்கிறது -உள்ளம் வாக் இந்த்ரியம் காயம் -என்றவாறு
உள்ளிக் கெடுத்து-பூர்வ வ்ருத்தாந்தத்தை நினைத்து-அந்ய பரதை தவிர்ந்து –

உள்ளம் உரை செயல் –
பாஹ்ய விஷயங்களிலே பிரவணம் ஆகிற மனசை பிரத்யக்காக்கின வாறே பகவத் அனுசந்தானத்துக்கு உடலாமே
அவ்வனுசந்தானம் வழிந்து- பொங்கேழ் புகழ்கள் வாயவாய்-8-10-4-என்கிறபடியே சொல்லாய் புறப்படுகைக்கு உடலாம் இறே வாக்கு
குணைர் தாஸ்யம் உபாகத -என்கிறபடியே திருவடிகளிலே விழுந்து சகல கைங்கர்யங்களும் பண்ணுகைக்கு உடலாய் இருக்கும் இறே உடம்பு

-உள்ள விம் மூன்றையும்
இவை தான் இன்றாக சம்பாதிக்க வேண்டாதே
சேஷியான தான் இவற்றை உண்டாக்கி வைத்தானே
இவையும் வேறு சிலவும் தேட வேண்டாவே –-தாம் -தம் உள்ளம் -தாமரையின் பூ –
இங்கே தாம் உளரே -இரண்டாம் திருவந்தாதி –22
நா வாயில் உண்டே -முதல் திருவந்தாதி –95
இத்யாதிகளை யோஜித்துக் கொள்வது –

ஆதி காலத்தில் கொடுத்த –உள்ள
எங்கே தேடாதே இம்மூன்றையும் காட்டிக் கொடுக்கிறார் –

உள்ளிக்
உள்ள இம்மூன்றையும் உள்ளுவது -இவை தான் எதுக்காகக் கண்டது -இவை தான் இப்போது இருக்கிறபடி என்-என்று
ஆராய்ந்து பார்த்தால் அப்ராப்த விஷயங்களிலே பிரவணமாய் இருக்கும்

கெடுத்து
கெடுப்பது -அவற்றின் நின்றும் மீட்பது –

இறை யுள்ளில் ஒடுங்கே
பாழிலே மேட்டிலே பாய்கிற நீரைப் பள்ளத்திலே பயிரிலே பாய்ச்சுவாரைப் போலே ப்ராப்த விஷயத்தில் ஆக்கப் பார்ப்பது
ஒடுங்க -என்னுதல்-அவனை அண்டுதல் –
ஒடுக்கு -என்னுதல் -அவன் விஷயத்தில் நிலை நிறுத்தல்
மெல்லினமான ஙகரத்தை வல் ஒற்றாக்கி ஒடுக்கு -என்று கிடக்கிறது ஆதல் –
ஆத்மா தானே ஒடுங்க வேண்டும் -உள்ளம் உரை செயல் ஒடுக்க வேண்டுமே -இவற்றை உள்ளிக் கெடுத்து நீர் ஒடுங்கு என்றபடி –

தாம் உளரே –
தந்தாமைத் தேட வேண்டாவே
தம் உள்ளம் உள் உளதே –
எனக்குச் சற்று போது பகவத் விஷயத்தை நினைக்கைக்கு நெஞ்சு தர வேணும் -என்று தனிசு-கடன் -இரவல் –வாங்க வேண்டாவே
தாம் உளரானால் உண்டான நெஞ்சும் உண்டே
தாமரையின் பூ உளதே —
கைக்கு எட்டும் பூ உண்டாக்கி வைத்தானே
கள்ளார் துழாய் –பெரிய திருமொழி -11-7-6-என்று அங்குத்தைக்கு அசாதாரணமான திருத் துழாயைச் சொல்லி
அதோடு ஒக்க -கணவலர்-என்று காக்காணத்தையும் ஆம்பலையும் சொல்லுகையாலே அங்குத்தைக்கு ஆகாதது இல்லை என்றபடி
ஆகையால் தாமரையின் பூ உளதே -என்றது -எல்லா புஷ்பங்களுக்கும் உப லஷணமான இத்தனை
ஏத்தும் பொழுதுண்டே
-காலத்தை உண்டாக்கி வைத்தானே -அது தனிசு வாங்க வேண்டாவே
வாமனன் –
இது எல்லாம் வேண்டுவது அவன் அவன் அல்லாகில் அன்றோ -தன் உடமை பெருகைக்கு தான் இரப்பாளன் ஆவான் ஒருவனாய் இருந்தானே
இரப்பையும் -அளப்பையும் சொல்லுகிறது -தன்னதாக்கிக் கொள்ளுபவன்
திருமருவு தாள்
அவனுடைய ஐஸ்வர்ய பிரகாசகமான திருவடிகள் என்னுதல்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10–என்னுதல்
மருவு சென்னியரே –
மருவுகை -சேருகை-இப்படிப் பட்ட திருவடிகளிலே சேருகைக்கு தலையை ஆக்கி வைத்தானே
வாமனன்
அமரர் சென்னிப் பூவான திருவடிகளை நித்ய சம்சாரிகள் தலையிலும் வைப்பான் ஒருவனாய் இருந்தானே
இப்படி இருக்கச் செய்தே
செவ்வே அரு நரகம் சேர்வது அரிது –இவர்கள் சம்சாரத்துக்கு விலக்கடி -பிராப்யாந்தரம் -பிராபகாந்தரம் -தேடிக் கொண்டு போகிற படி எங்கனேயோ
நா வாயில் உண்டே –இது முன்னம் புறம்பு தேடித் போக வேண்டாவே
நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –நாராயணா சொல்லாமல் அத்தையும் சுருக்கி நாரணா
சஹாஸ்ராஷரீ மாலா மந்த்ரம் போலே இருக்கை அன்றிக்கே எட்டு எழுத்தே நடுவே விச்சோதியாதே சொல்லலாம் திருநாமம் உண்டாக்கி வைத்தானே
மூவாத மாக்கதிக் கண் செல்லலும் வகை யுண்டே –புனராவ்ருத்தி இல்லாத ப்ராப்யத்தை உண்டாக்கி வைத்தானே
என்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம் -இங்கனம் இருந்த பின்பு இவர் தண்ணிய வழி தேடித் போகிற படி எங்கனேயோ

————————————————————————–

அவதாரிகை –

சம்பந்த ஜ்ஞானம் உண்டாகவே -தனது சிறுமை பார்த்து அகல வேண்டா வென்றும் -பஜனமாவது என் –
அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு உறுப்பாக்குகை என்றும் சொல்லி நின்றார் கீழ் இரண்டு பாட்டாலே –
இது தன்னரசு நாடாய் ப்ராப்த விஷயம் அவன் அல்லாமை பஜியாது இருக்கிறோமோ
பஜன விரோதிகள் கனக்க யுண்டாகை யன்றோ நாங்கள் பஜியாது ஒழிகிறது என்ன –
நீங்கள் அவனைக் கிட்டவே அவை யடைய விட்டுப் போம் என்கிறார் இதில் –

ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே--1-2-9-

பஜன பலமான -ஆஸ்ரயண பலமான -விரோதி நிவ்ருத்தி -அருளிச் செய்கிறார்
அவன் கண் ஒடுங்க-சேர்மின் தனிச் சிறப்பு விட்டு பிரிய மாட்டாத-அப்ருதக் சித்தம் அன்றோ நாம்
எண்ணே-தேற்று ஏகாரம் பிரிநிலை ஏகாரம்
ஒடுங்கலும் -ஞானாதி ஸ்வ பாவ சங்கோசமும் -ஸ்வரூபம் குறையாதே –
எல்லாம் -தத் ஹேதுவான அவித்யாதிகள் எல்லாம் –காரிய காரணங்கள் எல்லாம் –
விடும் -விட்டுக் கழியும்
அவன் கண் ஒடுங்க இந்த ஒடுங்கல் எல்லாம் விடும்
கிருதக்ருத்யா -செய்த வேள்வியர் ஆகும் -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
பின்னும்-யாக்கை விடும் பொழுது எண்ணே-
ப்ரத்யீஷ் யந்தே -சரீரம் விழும் -ஆக்கை -ஆரப்த சரீர சேஷம் -விடும் பொழுதை எதிர் பார்த்து இருக்க வேண்டும்
1-ஆக்கை விடும் பொழுது எண்ண -விதி இல்லை -எண்ணிக் கொண்டு இரும்
பிரபன்னனுக்கு அந்திம ஸ்ம்ருதி தேவை இல்லை
2–தேற்ற ஏகாரம் -எண்ணு-அந்திம ஸ்ம்ருதி விதி -பஜனத்துக்கு அங்கம் என்று நினைத்து –
3-பிரிநிலை ஏகாரம் -எண்ண வேண்டாம்
சுடர் சோதி மறையாதே -பிரிநிலை ஏகாரம் அங்கு

ஒடுங்க அவன் கண் –
பிரகார பூதரான நீங்கள் பிரகாரியான அவன் பக்கலிலே சென்று சேர –

அப்ருதக் சித்த விசேஷணம் இப்பொழுது ஒடுங்குகை யாவது -சென்று சேர -ஈச்வரோஹம் -என்பதை தவிர்ந்து இருக்கை-
வேண்டுவன கேட்டியேல் -ஆண்டாள் அழகில் மயங்கி இருப்பவனை தட்டி -கேட்கச் சொன்னாளே

ஒடுங்கலும் எல்லாம் விடும் –
ப்ராப்தத்தைச் செய்ய -அப்ராப்தமானவை எல்லாம் தன்னடையே விட்டுப் போம்
ஸ்வரூப அனுரூபமானதைச் செய்யவே ஸ்வரூப விரோதிகள் அடங்க விட்டுப் போம்
ஒடுங்கல் -என்றதாலே இது ஸ்வரூபத்தில் கிடப்பது ஓன்று அல்ல
ஸ்வரூப விரோதியாய்க் கொண்டு வந்தேறி என்னும் இடம் தோற்றுகிறது
அன்றிக்கே -ஒடுங்கல் என்கிற மெல் ஒற்றை ஒடுக்கல் என்று வல் ஒற்றாக்கி இவனுக்கு சங்கோசத்தை பிறப்பிக்குமவை என்னுதல் –
ஒடுங்கல் ஞான சங்கோசம் —ஒடுக்கல் -ஞான சங்கோசம் பிறப்பிக்கும் அவித்யாதிகள்
எல்லாம் விடும் –
அவித்யா கர்மா வாசனா ருசிகள் -சவாசனமாக விட்டுக் கழியும்
வானோ மறி கடலோ -இத்யாதி
மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார் -இத்யாதிகளை யோஜித்துக் கொள்வது
வானோ -பெரிய திருவந்தாதி -54—மாடே -59-அசுரர்கள் போலே -காடாதல் -காகாசுரன் போலே இருக்க இடம் தேட -வல்வினைகள் -அரண் தேடிக் கொள்ள முடியாமல் –

இவை போமாகில் பின்னை இவனுக்கு கர்த்தவ்யம் ஏது என்னில்
பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–
உபாசனத்தால் வந்த ராஜ குலம் கொண்டு பலன் தப்பாது -தன்னடையே வருகிறது என்று ஆறி இருக்கை இன்றிக்கே
ஹேதுவான அவத்யாதிகள் கழிந்தது ஆகில் அவற்றின் கார்யமான இச் சரீரமும் ஒருபடிப் போய் தண்ணீர் துரும்பற்று -இடையூறு இல்லாமல்
பிராப்தி கை புகுந்ததாவது எப்போதே – என்று அதுக்கு விரல் முடக்கி இருக்கும் அத்தனை
காமிநியானவள் தன்னுடம்பில் அழுக்கு கழற்றி போகத்தில் அன்வயிக்க அவசர ப்ரதீஷையாய் இருக்குமா போலே சரீர
அவசானத்தைப் பார்த்து கொண்டு இருக்கை
கொங்கை மேல் கும்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும் -என்று
அழுக்கு கழற்றி ஒப்பித்து பார்த்து இருந்தாள் இ றே

அப்படி அழுக்கு உடம்பு -என்கிற இவ் வழுக்கு கழன்று
பிராப்யம் கை புகுந்ததாவது எப்போதோ என்று பார்த்து இருக்கும் அத்தனை
ம்ருத்யும் ப்ரியம் இவாதிதம் –என்று இருக்கும் அத்தனை -க்ருதக்ருத்யா –க்ருதக்ருத்யர் ஆகிறார் சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணினவர்கள் இ றே
விது கிருஷ்ணம் ப்ராஹ்மணஸ் தத்வதோ யே தேஷாம் ராஜன் சர்வ யஜ்ஞாஸ் சமாப்தா -அவனை உள்ளபடி அறிந்தவர்கள் இ றே
எல்லாவற்றையும் அனுஷ்டித்து தலைக் கட்டினார்கள் ஆகிறார்
கிருஷ்ணனே அனைத்து தர்மம் என்று அறிந்தவர்களே -சர்வ யஜ்ஞாஸ் சமாப்தா-செய்த வேள்வியர் க்ருதக்ருத்யர் —

ஓர் அயனத்தின் அன்று குன்றத்து சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தில் புக -அவருடைய சிறு பேரைச் சொல்லி
-சிங்கப் பிரான் -இன்று அயனம் கிடாய் -என்று திரு உள்ளத்திலே ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாது இருக்க
இத்தேக சமன அந்தரத்திலே பிராப்தி கண் அழிவு அற்ற பின்பு நடுவு விரோதியாகச் செல்லுகிற நாளிலே ஓர் ஆண்டு கழியப் பெற்ற இது
உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ -என்று அருளிச் செய்தார்
அன்றியே எம்பார் ஓர் உருவிலே -பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே –என்று இங்கனே காரணம் ஆனபோது கழிந்த போதே
கார்யமும் தன்னடையே கழிந்ததே யன்றோ
பிராப்தியும் இனி கை புகுந்ததே யன்றோ -இனி சிந்தா விஷயம் உண்டோ -என்று அருளிச் செய்தார்
கர்மம் போன பின்னே சரீரமும் போனதாகாதோ -எண்ண விஷயம் உண்டோ – –பிரிநிலை ஏகாரார்த்தம் -எம்பார்
ஐந்து ஏகாரார்த்தம் -தேற்றம் – வினாவே -பிரிநிலை -சங்க்யம்-ஈற்று அசை பாத பூர்ணம்

————————————————————————–

அவதாரிகை-

அழகிது -அப்படியே ஆகிறது -பஜனத்துக்கு ஆலம்பமான மந்த்ரம் ஏது என்ன -அது என்னது என்றும்
–அதினுடைய அர்த்தம் அனுசந்தேயம் என்றும் சொல்லுகிறார்
இது தன்னைப் புறம்பு உள்ளார் –உபாசகர்கள் -ஜப ஹோமாதிகளாலே கார்யம் கொள்ளா நிற்பார்கள் -அர்த்தம் பக்கம் வராமல் –
நம் ஆசார்யர்கள் -ஸ்வரூப அனுசந்தானத்துக்கு ஈடாய் இருக்கிற இதினுடைய அர்த்த அனுசந்தானம் மோஷ சாதனம் -என்று
தாங்களும் அனுசந்தித்து -தங்களைக் கிட்டினார்க்கு உபதேசித்துக் கொண்டு போருவர்கள்-பிராப்ய பூர்த்தி -ஆறாயிரப்படி -பதினாறாயிரப்படி
திருமந்த்ரார்த்தம் -ஒன்பதினாயிரப்படி / இருபத்தினாராயிரப்படி / ஈடு
திரு மந்த்ரம் ப்ராப்ய பிரதானம் தானே –

திருமந்த்ரார்த்தம் அனுசந்திப்பதும் -சேஷத்வ பார தந்த்ர்யம் அனுசந்திப்பதும் ஒன்றே –
அனன்யார்க சேஷத்வ -அநந்ய சரணத்வ -அநந்ய போகத்வம் -தானே ஸ்வரூபம் –
அர்த்த அனுசந்தானம் மோஷ சாதனம் என்றது அர்த்தம் ஈஸ்வரன் என்றபடி –
பகவத் பிரசாதம் -திரு மந்த்ரத்துக்குள்ளே உள்ளான் -அவன் மந்த்ராதீனம் -மந்த்ரம் ஆச்சார்யாதீனம் -வைகுந்த மா நகர் மற்றது கை யதுவே –

வேதங்களுக்கும் இவ் வாழ்வாருக்கும் இம் மந்த்ரம் ப்ரஸ்துதம் ஆனவாறே –முன்பே சப்தத்தைச் சொல்லி -அநந்தரம் அர்த்தத்தைச் சொல்லுதல் –
அன்றியே முன்பே அர்த்தத்தைச் சொல்லி பின்பே சப்த பிரயோகம் பண்ணுதல் செய்யக் கடவதொரு நிர்பந்தம் உண்டாய் இருக்கும்
அதுக்கடி அர்த்தானுசந்தானம் உத்தேச்யம் ஆகையாலே
யாவையும் யாவரும் தானாமவை யுடைய நாராயணன் –-1-3-3-என்னுதல் –தன்னுள் அனைத்து உலகும் நிற்க -தத் புருஷ சமாசம் பரத்வம்
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் –2-7-2-என்னுதல் செய்வதொரு நிர்பந்தம் உண்டு
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்னுதல் –தானும் அவற்றின் உள்ளே
-பஹூவ்ரீஹி சமாசம் -நித்ய வஸ்துக்கள் உள்ளே உள்ளவன் சௌலப்யம் –
நாராயண பரோஜ்யோதி -என்னுதல் செய்யும் வேதம் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

உயிர் பாசுரம் -திருமந்த்ரப் பொருள் அருளிச் செய்கிறார் -பஜன நீய பிராப்யப்த பூர்ணம் அருளிச் செய்கிறார்
சார்த்தமாக திருமந்தரம் அருளிச் செய்கிறார் -ஆலம்பன மந்த்ரம் –
பிராப்யமான நாராயணன் -ஆறாயிரப்படி பன்னீராயிரப்படி
திரு மந்த்ரமே பிராப்ய பிரதானம்
ஆனந்த வல்லி
எண்-எண்ணுக்கு
பெருக்கு -அவ்வருகே பெருகி -இருப்பதாய் –
அந் நலத்து-ப்ரஹ்மாநந்தம்-உடன் சமமான ஆனந்தாதி குணங்களை யுடைய
ஒண் பொருள் -விலஷண ஆத்ம வர்க்கம் -ஸ்வரூபம் மலர்ந்த ஆத்மா வர்க்கம் எண்ண முடியாதே
ஈறில-அசங்க்யேமாய் அபரிச்சின்னமாய்
வண் புகழ் -கல்யாண குணங்களையும் எண்ண முடியாதே
நாரணன் திண் கழல் சேரே-தின்னியதாக இருக்குமே -ஆஸ்ரயிப்பாய்
விலஷண குண விபூதி உடன் கூடிய ஸ்ரீ யபதி திருவடிகள்
பிரபத்திக்கும் பக்திக்கும் கழல் சேர் பொதுவாகும்
பஜன பிரபதன சாதாரணம் -கீழிலும் உபய சாதாரணம் –

எண் பெருக்கு அந் நலத்து-
இப்பாட்டாலே திரு மந்த்ரத்தை சார்த்தமாக அருளிச் செய்கிறார் –
ஆழ்வான் இப்பாட்டு அளவும் வரப் பணித்து -இப்பாட்டு அளவில் வந்தவாறே -இத்தை உம்தம் ஆசார்யர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள் என்ன –
பட்டரும் சீராமப் பிள்ளையும் எழுந்து இருந்து போகப் புக்கவாறே -அவர்களை அழைத்து -இன்னபோது இன்னார் இருப்பார் -இன்னார் போவார் என்று தெரியாது -இருந்து கேளுங்கோள் -என்று திரு மந்த்ரத்தை உபதேசித்து
-இப்பாட்டை நிர்வஹித்து இப்பாட்டை இதுக்கு அர்த்தமாக நினைத்து இருங்கோள் –என்று பணித்தான்
கௌரவதையிலே நோக்கு முந்தின வார்த்தை -போக்யதையிலே நோக்கு பின் வார்த்தை
வந்தே கோவிந்த தாதபாதர் -ஆச்சார்யர் முன்னாக ஸ்ரீ பராசர பட்டர் –
எண் பெருக்கு –
என்கிற இத்தால் ஜீவ அனந்யத்தைச் சொல்லுகிறது
நலத்து –
அந்- நலம் -வேற ஒன்றால் சொல்ல முடியாதே
இவ்வஸ்துக்கள் தான் ஜ்ஞான குண ஆஸ்ரயமுமாக இருக்கக் கடவது இ றே
பிரணவத்தில் திருதிய பதமான மகாரத்தாலே ஜ்ஞான குண ஆஸ்ரயமுமாய்-ஜ்ஞாதாவாயுமாய் இருக்கும் என்று சொல்லிற்றே-

அந் நலத்து -அத்து சாரியை -நலம் -தர்ம பூத ஞானம் –ஸ்வ பாவ ஞானம் -என்னது தோன்றும் –
ஒண் பொருள் -தர்மி ஞான ஸ்வரூபம் உடைய ஆத்மா -நான் என்று தோற்றும்
ஞான ஸ்வரூபம் ஞான குணம் -இரண்டும் உண்டே –பொருளுக்கு ஒண்மை தனக்கு தோற்றம் அழிப்பது

ஒண் பொருள்-
அசைதந்யம் அசித்துக்கு ஸ்வ பாவமாக இருக்கச் செய்தே வஸ்து தான் ஜடமுமாய் இருக்கும் இறே -அசம்ஜ்ஞா வத்தாய் இருக்கும் இறே
சம்ஜ்ஞா-வத்தாய் –ஞானத்தை உடையதாய் இருக்கை
அ சம்ஜ்ஞா வத்தாய் –ஞானம் இல்லாமையை யுடைத்தாய் இருக்கும்
அங்கன் அன்றிக்கே -வஸ்து தான் -சம்ஜ்ஞா-வத்தாய் –ஞானத்தை உடையதாய் இருக்கை
அ சம்ஜ்ஞா வத்தாய் –ஞானம் இல்லாமையை யுடைத்தாய் இருக்கும் -ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசமாய் -தர்ம பூத ஜ்ஞானம் ஆனதுவும் –
விஷயங்களை க்ரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் -அத்தைப் பற்றச் சொல்கிறது –

ஈறில-
என்கிற இது கீழும் மேலும் அன்வயித்துக் கிடக்கிறது
ஈறிலவான ஒண் பொருளையும்
ஈறிலவான வண் புகழையும் -உடையவனாகை யாயிற்று நாராயணன் ஆகையாகிறது
பாவத்க மங்கள குணா ஹி நிதர்சனம் ந–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -35-தன்னுடைய
கல்யாண குணங்களோ பாதி நித்யமுமாய் பிரகாரமுமாய் இருக்கும் இவ்வஸ்து என்கைக்காக குணங்களை நிதர்சனமாகச் சொல்கிறது
நித்யரான த்ரிவித சேதனரையும் நித்தியமான கல்யாண குணங்களையும் யுடையனாய் இருக்கை யாயிற்று -நாராயணன் ஆகையாவது –
தவ இச்சையாலே -விஸ்வ பதார்த்தங்கள் சத்தை பெற்றன -நித்ய ஸூ ரிகள் உன்னுடைய நித்ய அனுக்ரகத்தாலே நித்யர்கள் ஆகிறார்கள்
-நித்ய -சத்ய -சங்கல்பம் அடியாகவே நித்யர்கள் -தவ ஏக பரதந்திர நிஜ ஸ்வரூபர்-என்றபடி-

அவனுடைய
திண் கழல் சேரே –
இப்படி சம்பந்தம் காதாசித்கமாகை தவிர்ந்து நித்யமாயிற்ற பின்பு -ஸ்வரூப ஜ்ஞானம் உடையாரை ஒரு ஒரு நாளும் விடான் இறே
ஆஸ்ரிதரை ஒரு காலும் விட்டுக் கொடாத திண்மையைப்பற்றி –திண் கழல் -என்கிறது –
சேர்
ஆஸ்ரயி
உன்னுடையதாய் உனக்கு வகுத்ததாய் இருந்த பின்பு நீ கடுக சுவீகரி –
நம -என்றபடி

————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் –
முதல் பாட்டில் –வ்யதிரிக்த விஷயங்களை விட்டு சர்வேஸ்வரன் பக்கலிலே ஆத்மாவை சமர்ப்பிக்க இசையுங்கோள் என்றார்
இரண்டாம் பாட்டில் -வ்யத்ரிக்த விஷயங்களின் உடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் -என்றார்
மூன்றாம் பாட்டில் –த்யாஜ்ய அம்சத்தை அருளிச் செய்கிறார்
நாலாம் பாட்டில் பற்றப்படுகிற விஷயத்தின் உடைய நன்மையை அருளிச் செய்கிறார்
அஞ்சாம் பாட்டில் பற்றும் இடத்து வரும் அந்தராய பரிஹாரத்தை அருளிச் செய்கிறார்
ஆறாம் பாட்டில் -அவன் சங்க ஸ்வ பாவன் என்றார்
ஏழாம் பாட்டில் –சம்பந்த ஜ்ஞானம் உண்டாகவே பொருந்தலாம் -என்கிறார்
எட்டாம் பாட்டில் –வேறு ஒரு உபகரணம் -தேட வேண்டா –அவன் தந்த கரணங்களை அவனுக்கு ஆக்க அமையும்
ஒன்பதாம் பாட்டில் -அப்படி செய்யவே பஜன விரோதிகள் தன்னடையே விட்டுப் போம் என்றார்
பத்தாம் பாட்டில் -பஜனத்துக்கு ஆலம்பமான மந்த்ரம் இன்னது என்றார் –

இது தான் வாய் வந்தபடி சொல்லிற்று ஓன்று அல்ல
சேதனருக்கு ஹிதத்தை ஆராய்ந்து சொல்லப்பட்டது -என்னுதல் –ஒர்த்த விப்பத்தே-
அன்றிக்கே இது தான் ஹிதமாய் இருப்பது ஓன்று ஆகையாலே எப்போதும் ஒக்க ஓரப்படுவது ஓன்று என்னுதல்-அனுசந்திக்கப்படுவது
சேர் -நீயே ஆராய்ந்து பார்

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-

செரிதலை யுடைத்தான-தடாகங்கள்
சீர் -சப்த லஷணங்கள் கதமான சீர்களின் உடைய
ஆஸ்ரிதன உபதேச பரமான இப்பத்தே உபாதேயம் -உபாதேய தமத்வத்தை பலமாக அருளிச் செய்கிறார் –
ஒர்த்த -நிரூபிக்கப் பட்டவை -அனுசந்தியுங்கோள் என்றுமாம்
இப்பத்தை சேர் -என்று வினையாக்கவுமாம்-

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சேர்த்தடம் என்கிற இத்தை சேர் தடமாக்கி -பொய்கைகள் உடன் பொய்கைகள் சேர்ந்து இருக்கும் படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
அன்றியே
தென் குருகூர் என்று ஊர் பிரஸ்துதம் ஆகையாலே தடாகங்கள் சேர்ந்து இருந்துள்ள தென் குருகூர் என்று ஊருக்கு விசேஷணம் ஆதல்
அன்றிக்கே
சேர் -என்கிற இது கிரியா பதமாகக் கிடத்தல்

தென் குருகூர்ச் சடகோபன் சொல்-
ஹிதம் என்று சொல்ல இழிந்து அஹிதத்தைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று
ஆப்த தமரானவர் சொன்ன வார்த்தை என்கை-

சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே
எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை பாவினம் -என்று கவிக்கு அவயவமாய் இருப்பன சில உண்டு -அவற்றைச் சொல்லுதல்
30 சீர் /7 பந்தங்கள் /5 அடிகள் /43 தொடைகள்
அன்றிக்கே
உபாசக அனுக்ரஹத்தாலே-நம்மாழ்வார் உடைய அனுக்ரகத்தாலே – உபாச்யனுடைய கல்யாண குணங்களை தொடுத்த ஆயிரம் -என்னுதல்
ஆயிரத்து ஒர்த்த இப்பத்தே
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு சேதனருக்கு ஹிதமாவது ஏது என்று நிரூபித்து சொல்லப் பட்டது என்னுதல்
அன்றிக்கே
சேதனருக்கு ஹிதமாய் இருப்பது ஓன்று ஆகையாலே எப்போதும் ஓரப்படுவது -அனுசந்திக்கப்படுவது -என்னுதல்
ஒர்த்த இப்பத்தை நெஞ்சிலே சேர்
அனுசந்தி –
பரோபதேசம் பலரைக் குறித்து உபக்ரமிக்கையாலே மேல் ஏக வசனமான இடம் ஜாத்யபிப்ராயம்
-நம்மாழ்வார் திருவடி சம்பந்தி -பராங்குச பரகால யதிவராதிகள் –

————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

ஸம்ஸாரிணோ அப்யநு ஜிக் ருஷூரசவ் தயாளு
அல்பாஸ்திரேதர புமர்த்த ருசிம் நிரஸ்யந்
தத் த்யாக பூர்வ ஹரி பக்தி ஸூதாம் புதாநாம்
உத்தீபி நீமுபதி தேச முநிர் த்விதீய-2-வீடுமின் – உபதேசித்தார்

———————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஸ்வாமித்வாத்
ஸூஸ்திரத்வாத்
நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத்
தாத்ருக் சர்வ அநு கூல்யாத்
ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத்
சர்வத்ர பஷ பாதாத்
ஸூப விபவ தயா
மாநசாத்யர்ச்ச பாவாத்
சங்கோச உன்மோசகத்வாத்
ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –2-வீடுமின்

1-ஸ்வாமித்வாத்–உம்முயிர் வீடுடையான் -எல்லாருக்கும் ஸ்வாமி யாகையாலும்

2-ஸூஸ்திரத்வாத்-மின்னின் நிலையில-ஸ்வ வியதிரிக்தர் எல்லாரும் அஸ்திரராய்-தான் ஒருவனே ஸூஸ்திரராகையாலும்

3-நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத் -நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து –
அஹங்கார மமகாரங்கள் ஆகிற விரோதிகளை விட்ட பேர்களாலே ஸூக்ரஹனாகையாலும்

4-தாத்ருக் சர்வ அநு கூல்யாத்-எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே -அப்படி எல்லாருக்கும் அனுகூலனாய் இருக்கையாலும்

5-ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத் -உற்றது வீடு உயிர் செற்றது மன்னுரில்-நஸ் வரமான
கைவல்யத்தில் காட்டிலும் விலக்ஷணமான ஸ்வ பிராப்தி ரூப மோக்ஷத்தை உடைத்தாகையாலும்

6-சர்வத்ர பஷ பாதாத்-பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -அநாதியாக ஆஸ்ரயித்த ஸூரிகளில் காட்டிலும்
இன்று ஆஸ்ரயித்த சேதனர் இடத்தில் மிகவும் வாத்சல்யத்தை உடைத்தாகையாலும் –

7-ஸூப விபவ தயா -அடங்கு எழில் சம்பத்து -கட்டடங்க நன்றான சம்பத்தை உடைத்தாகையாலும்

8-மாநசாத்யர்ச்ச பாவாத்-உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-மநோ வாக் காயங்களால் -பஜிக்கப் படுபவனாகையாலும்

9-சங்கோச உன்மோசகத்வாத்-ஒடுங்கலும் எல்லாம் விடும் -அவித்யாதிகளால் -உண்டான ஞான சங்கோசத்தை விடுவிக்கையாலும்-

10-ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –வண் புகழ் நாரணன்-லோகங்களுக்கு எல்லாம் ஆதாரமுமாய் -அந்தர்யாமியுமாய்-
உபாயமுமாய் -உபேயமுமாய் -நிற்கையாலும் எம்பெருமான் சர்வ ஆராதனாய் இருக்கும் –
அவனை பஜியுங்கோள்-என்று வீடுமின் முற்றவும் -என்கிற தசகத்திலே பரரைக் குறித்து
ஸ்ரீ ஆழ்வார் உபதேசித்து அருளினார் என்கிறார் –

————————————————————————–

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து-——-2-

————————————————————————–

அவதாரிகை –

இதில் தம்முடைய திரு உள்ளம் போலே
அனுபவத்துக்குத் துணையாய்
திருந்தும்படி சம்சாரிகளைக் குறித்து பரோபதேசம் பண்ணுகிற
பாசுரத்தை அனுபவித்து அருளிச் செய்கிறார் –அனுவதித்து -என்றுமாம் –
அது எங்கனே என்னில்
கீழ் எம்பெருமான் உடைய பரத்வத்தை அனுபவித்தவர்
அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே
போதயந்த பரஸ்பரம் -பண்ணி அல்லது தரிக்க மாட்டாதே துணைத் தேட்டமாய்த்து
ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே
அவர்களைத் திருத்தி யாகிலும் சேர்த்துக் கொள்வோம் என்று
பரோபதேச பிரவ்ருத்தராய்
பகவத் வ்யதிரிக்த விஷயங்களின் தோஷ பாஹூள்யத்தையும்
பகவத் குண வைலஷண்யத்தையும் உபதேசியா நின்று கொண்டு
அப்ராப்த விஷயங்களை விட்டு
பிராப்த விஷயமான எம்பெருமானை பஜியுங்கோள்-என்கிற
வீடுமின் முற்றத்தின் அர்த்தத்தை
வீடு செய்து இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை-

————————————————————————–

வியாக்யானம்-

வீடு செய்து மற்றெவையும் –
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச -என்னும்படி
பரிக்ரஹங்கள் அடைய பரித்யஜித்து –

வீடு செய்து –
விடுகையைச் செய்து –

மற்றெவையும்
பகவத் வ்யதிரிக்தமாய் இருந்துள்ளவை எல்லாவற்றையும் நினைக்கிறது
பஜன விரோதிகளாய்
அஹங்கார ஹேதுக்களாய்
உள்ளது அடங்கலும் முமுஷூவுக்கு த்யாஜ்யம் இ றே
வீடுமின் முற்றவும் வீடு செய்து –என்றத்தைப் பின் சென்ற படி –
மின்னின் நிலையில் மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்தை இறை யுன்னுமின் நீரே -என்றும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -என்றும்
அது செற்று -என்றும்
உள்ள இம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்றும்
இப்படி சதோஷமாய் இருக்குமது எல்லாம் த்யாஜ்யமாய்
அத்தால்
சகுணமாய் இருக்குமது உபாதேயமாய் இ றே இருப்பது
அத்தைச் சொல்லுகிறது –

மிக்க புகழ் நாரணன் தாள் –
ஈறில வண் புகழ் நாரணன் -என்றத்தைப் பின் சென்றபடி
சம்ருத்தமான கல்யாண குண சஹிதனாய்
சர்வ ஸ்மாத் பரனான
நாராயணன் யுடைய சரணங்களை –

நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் –
வீடு செய்மின்
இறை யுன்னுமின் நீரே
என்று நாடாகவே ஆஸ்ரயிக்கும் படி இ றே இவர் உபதேசிப்பது
அத்தை நினைத்து இறே நாடு –நலத்தால் அடைய –என்கிறது

நலத்தால் அடைகை ஆவது
எல்லையில் அந்நலம் புக்கு -என்றும்
அவன் முற்றில் அடங்கே -என்றும்
ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே -என்றும்
இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
ஒடுங்க அவன் கண் -என்றும்
அங்கனா பரிஷ்வங்கம் போலே அபி நிவேசத்தாலே ஆஸ்ரயிக்கும் படியை விதித்த படி -என்கை –
இப்படி லோகத்தில் உண்டான ஜனங்கள் பக்தியாலே பஜிக்கும் படி நன்றாக உபதேசித்து அருளும் –

உபதேசத்துக்கு நன்மையாவது –
நிர் ஹேதுகமாகவும்
உபதேச்ய அர்த்தங்களில் சங்கோசம் இன்றிக்கே உபதேசிக்கையும்
என்றபடி –

திருவாய் மொழி தோறும் திரு நாமப் பாட்டு உண்டாகையாலே
அத்தையும் தத் பலத்தோடே தலைக் கட்டாக அருளிச் செய்கிறார் –
நீடு புகழ் வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
அதாவது
சம்சாரிகள் வைமுக்கியம் பாராமல்
பரோபதேசம் பண்ணுகையாலே
நித்யமுமாய்
நெடுகிப் போருகிற யசஸை யுடையவராய்
தர்ச நீயமான
உதாரமான
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் -என்னுதல்
அன்றிக்கே
வண்மை-வண் தென் குருகூர் வண் சடகோபன் -என்னும்படி -ஆழ்வாருக்கு விசேஷணம் ஆதல்
இப்படியான தம் ஔதார்யத்தினாலே
இந்த மகா பிருத்வியில் உண்டானவர்கள் எல்லாரும்
பகவத் பஜனத்தாலே சத்தை பெற்று வாழு படி –
இடைக்காதர் வள்ளுவர் ஔவையார் -குரு முநிவர் -பாசுரங்களே பீஜம் -என்கிறார்கள்

பண்புடனே பாடி யருள் பத்து-
பண்பு -ஸ்வபாவம்
தம்முடைய கிருபா ஸ்வபாவத்திலே யாதல்
ஔதார்ய ஸ்வபாவத்திலே ஆதல்
பரப்பறப் பாடி அருளினது பத்துப் பாட்டாயிற்று
சேரத் தடத் தென் குருகூர் சடகோபன் சொல் சீர்த்தொடை
ஆயிரத்தோர்த்த இப்பத்து -என்றத்தை பின் சென்றது
பாட்டுக்கு கிரியையும் பத்துக்கு கருத்தும் -என்கையாலே
பத்துப் பாட்டுக்கும் உயிர்பாட்டு பிரதானமாய் இருக்கும்-
பாட்டுக்குக் கிரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேசப் பத்து –ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -216
கிரியை -வினைச் சொல்
அந்த நிதானப் பாட்டுக்கு சேஷமாய் இருக்கும் மற்றப் பாட்டு அடங்கலும்
இது இந்த திருவாய்மொழி திவ்ய பிரபந்தத்துக்கு எல்லாம் உள்ளது ஓன்று இ றே
வீடுமின்என்று- த்யாஜ்ய உபாதேய- தோஷ குண -பரித்யாக சமர்ப்பண- க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து -என்று ஆச்சார்ய ஹிருதயத்திலே -சூர்ணிகை -219–நாயனாரும் அருளிச் செய்தார் -த்யாஜ்யம் -வீடு மின் முற்றவும் -தோஷம்- மின்னின் நிலையில -பரித்யாகம் நீர் நுமது -என்று பிரித்து -மேலே –
உபாதேயம் வீடு உடையான் -குணம் எல்லையில் அந்நலம்-சமர்ப்பணம் -இறை சேர்மினே -என்று கொள்ள வேண்டும்
இத்தை பக்தி பரமாக யோஜித்து-பாஷ்யகாரர் பாஷ்யம் தலைக் கட்டி அருளின பின்பு
பத்தி பரமாகவே யோஜித்து க்ரமத்தைப் பற்ற வாயிற்று
ஆச்சார்யர்கள் எல்லாரும் அப்படியே யோஜிததார்கள்-இவரும் அப்படியே அருளிச் செய்தார்

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ  நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ  நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -33– திருவாய்மொழி -வீடுமின் பிரவேசம் -/1-2-1… 1-2-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

April 29, 2016

அவதாரிகை –
-தத்வ பரமாயும் உபாசன பரமாயும் இ றே மோஷ சாஸ்திரம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -தான் இருப்பது–அனுபவ பரம் முதலில் உபதேச பரம் இதில் –
-அதில் தத்வ பாரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய் மொழியில் –
ஹிதம்–உபாசன பாரமாகச் சொல்ல வேண்டும் அவற்றுக்கு எல்லாம் சங்க்ரஹமாய் இருக்கிறது இத் திருவாய் மொழி –
இத் திருவாய்மொழி தன்னை ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலையாண்டான் பிரபத்தி விஷயமாக நிர்வஹித்திக் கொண்டு போந்து
எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து -பாஷ்யம் தலைக் கட்டின பின்பு
பக்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போருவர் – பின்பு எம்பாரும் அப்படியே அருளிச் செய்தார்

பூர்வ த்விகம் -விஷயத்விகம் -சித்த த்விகம் –சமன்வய அவிரோத அத்யாயங்கள் -தத்வ பரம் -ஜகத் காரணத்வம் -அவனே –
உத்தர த்விகம் -விஷயித்விகம் -சாத்திய த்விகம் –சாதனா பல அத்யாயங்கள் -உபாசன பரம் –
தேசிகன் அருளிய முக்த ஸ்லோகம் –சுவ சேஷ அசேஷ அர்த்த -முதல் அத்யாயம் -சமன்வயா-சர்வேஷாம் வேதாந்தம் பிராமணி சம்யக் அந்வயம் இயைந்து
நிரவதிக நிர்பாத மஹிமா –குறை இல்லாத தடங்கல் இல்லாத விரோதம் இல்லாத -அவிரோதம்
பலானாம் தாதா -சாதனம் -மூன்றாவது -பக்திக்கும் பிரபதிக்கும் பலம் கொடுப்பவன் அவனே -பக்தி
அசேதனம் கொடுக்கும் தன்மை இல்லை சமீபத்தில் அழைத்துப் போகும் அவ்வளவே பலம் அபிச -பலமாகவும் தானே -நான்காவது
முதல் 7 பாசுரங்களால் -சமன்வயா-பிரமமே காரணம் -8/9 அவிரோத – குத்ருஷ்டிகள் /பாஹ்ய -நிரசனம்
-நான்கு அத்தியாயங்களையும்  தத்வ பரம் ஹிதம் பரம் இரண்டாக பிரித்து அருளி -பலம் -புருஷார்த்தம் -ஹித பரமாக சொல்லுவான் என் என்னில் -பலம் உபாய சாத்தியம் ஆவதால் –
பர வ்யூஹ விபவம் விஷ்ணு சகஸ்ர நாமம் -அந்தர்யாமித்வம் பரத்துக்குள் விபவம் வியூகத்துக்குள் சேர்ப்பது போலே
செய்வதவற்றையே சொல்லுவார் ஆழ்வார் -தாமான தன்மை ஞானத்தால்
-பிரேமம் தலை எடுக்க பெண் பேச்சு -சம்பந்த ஞானம் தாய் பேச்சு -த்வரை மிக்கு தலை மகள் பேச்சு
சாதன பக்தி இல்லை -பாஷ்யம் தலைக் கட்டின பின்பு பெருமாளால் அருளப்பெற்ற சாத்திய பக்தி என்றபடி –
வேதாந்த சித்த உபாயம் –த்விதம் -பிரபதனம் -பஜனம் -பக்தி -பஜநீயத்வம் இந்த திருவாய்மொழி காட்டும் குணம்
முதலில் பரத்வம் -அவன் பஜ நீயன் –பிரபத்தி குஹ்யம் ரகச்யார்த்தை முதலிலே போட்டு உடைப்பாரா
பிரபத்தி -பொருளிலே சாத்திய பக்தியைக் கூறலாம் -கொடுப்பவன் அவன் தானே –அருளினன் -அபார பர்யாயம்-இரண்டும் –
மறைத்து அருளிச் செய்து போந்தார் -ரோஹிணி -அத்தத்தின் பாத்தா நாள் போலே –சாத்ய பக்தி -அதாவது பிரபத்தி
அவன் உகப்புக்கு என்றே செய்வது -ஸ்வா தந்த்ர்யம் கலசாமல் –
பிரபன்னனுக்கு -ருசி கொடுப்பது போலே சாத்திய பக்தி யோக நிஷ்டனுக்கு பக்தி கொடுப்பார் என்றபடி
திண் கழல் சேர் -பிரபத்தி பரத்துக்கு ஸூசகம் -அவன் விட்டாலும் விடாமல் திண் கழல்
புல்கு பற்று அற்றே -பக்தி பரதைக்கு ஸூ சகம்
சர்வ தரமான் பரித்யஜ்ய -பற்று அற்ற -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -புல்கு –
விடுகை -அங்கம் -விட்டே பற்ற வேண்டும் பற்று அற்றே –அங்கத்துடன் விதிக்கிறார்
விவேகாதி -சாதன சப்தகங்கள் பாஷ்யம் -விமோக கல்யாண அப்யாச -போல்வன -அவசியம் அங்கங்கள்
பிரபதிக்கு அங்கங்கள் வேண்டாமே -ஒன்றும் எதிர்பார்க்காதே-இதனால் தான் பாஷ்யம் தலைக் கட்டின பின்பு ஸ்ரீ பாஷ்ய காரார் சாத்ய பக்தி பரமாக அருளினார் -அங்கத்துடன் சொல்வதால் –
மதி நலம் -பக்தி தானே -அங்கம் பகவத் கடாஷம் –கிருபை அருளால் வந்ததால் -சாத்திய பக்தி நிச்சயம்-இப்படி சமஞ்சயம்-
வீடுமுன் முற்றவும் வீடு செய்து -அங்கம் ஸ்பஷ்டமாக அருளி -ரொம்ப ஜாக்ரதையாக -ஸ்நாத்வா புஞ்சீதே குளித்தே உண்ண வேண்டும் –
நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தேன் -அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -பிரபத்தி
கர்ம ஞானங்கள் -அலங்கரிக்கப் பட்ட -சஹகரிக்கப் பட்ட -அங்கமாகக் கொண்ட பக்தி
விஷயாந்தர வித்ருஷ்ணா -பற்று அற்ற தன்மை -அதால் அலங்கரிக்கப் பட்ட -அங்கமாக -சஹகரிக்க பட்ட -பக்தி -சாத்திய பக்தி -ப்ராப்ய பக்தி என்றபடி -முந்தியது பிராபக பக்தி -ஆகையால் விகல்பிக்கலாம் படி இருக்குமே -வைராக்ய சஹசரிதை பிரபத்தியும்
பிராப்ய பக்தி –சாத்திய பக்தி -உபாயமாக சாதன -பிராபக பக்தி
பித்தம் போக்கி -நாக்கில் தீட்டி பித்தம் போக்கி -வீடுமுன் முற்றவும் -பால் குடிக்க -உம்முயிர் வீடு செய்மினே -ஷீரம் ரசிக்க
இவர் வைராக்கியம் விஷயாந்தர தோஷ தர்சனத்தால் –
ஆழ்வார் உடைய பிரபத்தி -பக்தி பாரவச்யத்தால் -ஞானாதிக்யத்தால் ஆச்சார்யர் -ஜ்ஞ்ஞானத்தால் நாம் -மூவகை உண்டே
இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் –கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் -காதல் -பக்தி -சாத்திய பக்தி -கொடுத்தது பகவான்-
துடிக்கும் தன்மை கொடுத்து மறைந்து நின்றானே என் நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார்-பக்திக்கு பரவசப்படுத்து -என் நான் செய்கேன் –களை கண்
உன்னால் அல்லால் -யாவராலும் ஒன்றும் குறை இலேன் இம்மூன்றுமே உள்ளது
பக்தி ரூபாபன்ன ஞானம் பெற்று அத்தை தானே உபதேசிக்க வேண்டும்

இவருடைய பக்தி பிரபத்திகள் தான் விகல்பிக்கலாய் இ றே இருப்பது –
மயர்வற மதி நலம் அருளினான் என்று -இவர் தாம் பெற்றது பக்தி ரூபா பன்ன ஜ்ஞானமாய் இருந்தது -தாம் பெற்றது ஓன்று
பிறருக்கு உபதேசிப்பது ஒன்றுமாக ஒண்ணாதே –அப்போது விப்ரலம்ப கோடியிலே ஆவாரே –
உபயபரிகர்மித ஸ்வாந்தஸ்ய -என்கிறபடியே –
அதாவது கர்மம் ஞானம் இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞானம் கொண்டவனுக்கு -ஆத்ம சித்தி -ஆளவந்தார் அருளிச் செய்த படி
கர்ம ஜ்ஞான சம்ஸ்க்ருத அந்த கரணனுக்கு பிறக்கும் அது இறே பர பக்தி –அந்த ஜ்ஞான கர்மங்களினுடைய ஸ்தானே-
பகவத் பிரசாதமாய் -அதடியாக அநந்தரம்-அதே ஷணத்தில்- விளைந்தது இ றே இவருடைய பக்தி தான் –
இது தான் வேதாந்த விஹிதையான பக்தி தானே யானாலோ வென்னில் –
சர்வேஸ்வரன் அருள இவர் பெற்றார் ஆகிற ஏற்றம் போம் –அபசூத்ராதிகரண நியாயமும் பிரசங்கிக்கும் –
ஆனபின்பு தாம் பெற்றதையே பிறருக்கு உபதேசிக்கிறாராக அமையும்-

திருமாலால் அருளப் பட்ட சடகோபன் அன்றோ -நான்காம் வருணத்தில் உள்ளவர் -சாதன பக்தி அருகதை இல்லை
விதுர ஆழ்வான்-த்ரை வர்ணிகர் அல்லர் -யம தர்ம ராஜன் மறு பிறப்பு பூர்வ கர்ம ஞானம் உண்டே பலன் இப்பொழுது கிடைத்தது
-ரைக்க்குவர் -சூத்திர -கூப்பிட்டு -ப்ரஹ்ம ஜ்ஞானம் உபதேசித்து –சூத்திர -சோகம் உடைமை தான் பொருள் — ஜாதி பரம் இல்லை –
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் -பக்தி இல்லை சொல்ல வில்லையே -வரவே வழி இல்லையே முன் முன் ஜன்மம் –வரவாறு ஒன்றும் இல்லை – என்கிறாரே
ஆளவந்தார் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -முன் ஜன்ம கர்ம பலனும் இல்லை –வரவாறு ஓன்று இல்லை என்று ஆழ்வார் இத்தை அருளிச் செய்து விட்டாரே
அருளிச் செயல்களிலே பிரணவம் ஸ்பஷ்டமாகவே இல்லையே
சுகச்ய தத் அநாதர சரவணாத் ஆத்ரவநாத் –பல்லன் பல்லாஷன் பறவைகள் –ரிஷிகள் -அனுக்ரஹம் செய்ய ப்ரஹ்ம ஞானம் போதிக்க
சாமான்ய தர்மம் கொண்டு கார்யம் இல்லை -பரந்து ஜான சுருதி மேலே நிழல் படாமல் -பஷி பாஷை அறிவான் -ரைக்குவனா -சோகம் பிறக்க –
ஐஸ்வர்யம் -சேர்த்து -ஆத்மஞானம் -அஹங்காரம் தொலைந்ததும் ப்ரஹ்ம ஞானம் யோக்யதை –
ப்ராப்ய ருசி பரம் -இதுவே பக்திபரம் -பிரபன்னனுக்கும் ருசி வேணும் -ருசி அதிகாரி விசேஷணம்-ருசியே பிராப்யம்

கீழில் திருவாய்மொழியில் அவனுடைய பரத்வத்தை அனுபவித்து ஒரு பெரிய திருநாள் போலே இ றே போந்தது –
இவர் இப்போது நெஞ்சு ஒழிந்து இருந்து பிறருக்கு உபதேசிக்கிறபடி எங்கனே தான் –
தான் அனுபவித்த விஷயத்தை எல்லை கண்டோ -அன்றிக்கே தாம் அவ்விஷயத்தில் விரக்தராயோ -என்னில்
விஷயமோ வென்றால் -தனக்கும் தன தன்மை அறிவறியான்–8-4-6-என்கிறபடி அபரிச்சின்ன விஷயம் -கொள்ள மாளா இன்ப வெள்ளம் -4-7-2-இ றே
இனி தம் அபி நிவேசமோ வென்றால் –காதல் கடலின் மிகப் பெரிதால் -7-3-2–என்றும் –மண் திணி ஜ்ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -7-3-8–என்றும்
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா -10-10-10–என்னும்படி பெருகி இருந்தது
ஆகிலும் ஒரு கால் அபி நிவேசம் பிறந்தால் அப்படிப்பட்ட விஷயம் தானே காலாந்தரத்தில் விரக்தி பிறக்கக் காணா நின்றோம் –
அப்படியே சில காலம் அனுபவித்து பின்பு விரக்தி பிறந்ததோ வென்னில் -அங்கனம் சொல்ல ஒண்ணாது
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொரும் அப் பொழுதைக்கு அப் பொழுது என் ஆராவமுதம் -2-5-4-என்னும்படி
நித்ய அபூர்வமாய் இருக்கும்
இனி ஆசார்ய பதம் நிர்வஹிக்கைக்காக அன்று -நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்பவர் இ றே
க்யாதி லாப பூஜைகளுக்காக அன்று -கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக -என்று உபதேசிப்பவர் இ றே –
ஓத வல்ல பிராக்கள் -என்று அவர்களையும் தமது யஜமானராக எண்ணுபவர் இ றே
ப்ரப்ரூயாத் -முண்டக -1-2-13-என்ற ஒரு விதி பரதந்த்ரராய் அன்று – குருகுல வாசம் செய்யாதவனுக்கு உபதேசிக்கக் கூடாது என்று இருப்பவரும் அன்றே
ஆனால் இது பின்னை எத்தாலே யாவது என்னில் -ஸ்வ அனுபவ பிரகர்ஷம் இருக்கிற படி -தான் அனுபவித்த விஷயம்
தனியே அனுபவிக்குமது அன்றிக்கே இருந்தது

இனி நமக்கு போதயந்த பரஸ்பரத்துக்கு ஆளாவார் ஆர் என்று சம்சாரிகள் பக்கலிலே கண் வைத்தார்
தாம் பகவத் விஷயத்திலே பிரவணராய் இருக்கிறார் போலே அவர்கள் சப்தாதி விஷயங்களிலே பிரவணராய் இருந்தார்கள்
இவர்கள் அநர்த்தம் பரிஹரித்து அல்லது நிற்க ஒண்ணாதாய் இருந்தது
ஒருவனுக்கு வைஷ்ணத்வம் உண்டு இல்லை என்னும் இடம் தனக்கே தெரியும் காண்-என்று நஞ்சீயர் பல காலும் அருளிச் செய்வர்
பிறர் அநர்த்தம் கண்டால் ஐயோ என்று இருந்தான் ஆகில் -நமக்கு பகவத் சம்பந்தம் உண்டு என்று இருக்க அடுக்கும் –
இத்தனையும் பட்டிடுவானுக்கு -என்று இருந்தான் ஆகில் நமக்கு பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்க அடுக்கும் என்று –

இவர்களை இவர் மீட்க்கப் பார்க்கிற வழி தான் என் என்னில்-இவர்கள் தான் சேதனராய் இருந்தார்கள் -சப்தாதி விஷயங்களில் வாசி அறிந்து –
தீயவை கழித்து நல்லவை பற்றி போருகிறது ஓன்று உண்டாய் இருந்தது –
அவற்றினுடைய ஹேயதையும்-சர்வேஸ்வரன் உடைய உபாதேயதையும் இவர்களுக்கு அறிவித்தால் அவற்றை விட்டு இவனைப் பற்ற அடுக்கும்
என்று பார்த்து –
1-சர்வேஸ்வரன் உடைய நன்மையையும் –2-இவர்கள் பற்றின விஷயங்கள் அல்ப அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
3-பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்-4–பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை-
-பழைய சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் –5-பற்றுவாருக்கு அனுசந்திக்கப் படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் -வண் புகழ் நாரணன்
6-அவனுடைய பஜ நீயதயையும் –இறை சேர்மின் -அருளிச் செய்யா நின்று கொண்டு -7-இதர விஷய வைராக்ய பூர்வகமாக
பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயிங்கோள் -புல்கு பற்று அற்றே -என்று பர உபதேச பிரவ்ருத்தர் ஆகிறார் –

———————————————

இதர விஷயங்களை விட்டு -உங்களுக்கு வகுத்த விஷயத்தை பற்றப் பாருங்கோள் -என்கிறார் முதல் பாட்டில் –

வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-

ஐதிகம் -பட்டர் -பெரிய பெருமாள் திருக் கண் அழகைக் காட்டி ஒருவரைத் திருத்தி -எம்பெருமானார் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் போலர் –
மாதரார் –தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் -கண் வலை படாமல் -கமலக் கண் நெடும் கயிற்றில் அகப்பட்டு உஜ்ஜீவிக்க உபதேசிக்கிறார் –
சகல இதர பரித்யாக பூர்வகமாக -ஆத்ம சமர்ப்பணம் விதிக்கிறார் –முற்றவும் -பஜன விரோதி -சாத்திய சாதனங்கள் அனைத்தையும் –
கர்ம ஞான பக்தி யோகங்கள் -உபாயாந்தரங்கள் -லௌகிக விஷய பற்றுக்கள் -அனைத்தையும் -வெட்கி -சவாசனமாக –
வீடுடையான் -மோஷம் நிர்வாஹகன் -மோஷ ப்ரதன்-இடம் ஆத்ம சமர்ப்பணம் -வீடு செய்மின் -விடு நீண்டு -செய்மினே -பாத பூர்ண ஏவகாரம்
வீடு இசைமினேவிடுவதற்கு மனசை தேற்றிக் கொண்டு -பெரியவாச்சான் பிள்ளை மட்டும் இப்படி -நிர்வாஹம்
சமர்ப்பிக்க இசைமின் -என்றுமாம் –

வீடு மின் –
வீடுமின் -என்று பன்மையாய் -ஒரு சொல்லாய்க் கிடக்கவுமாம் –
விடுமின் -என்றத்தை நீட்டி வீடுமின் –என்று கிடக்கிற தாகவுமாம் –நச்சாராவணை நச்சு அரவணை நீண்டால் போலே
முதலிலே வீடுமின் என்பான் என் என்னில் -சிறு பிரஜை கையிலே சர்ப்பத்தை பிடித்துக் கொண்டு கிடந்தால் பொகட்டுக் கொடு நிற்கச் சொல்லி
-பின்னை சர்ப்பம் -என்பாரைப் போலேயும்
ஒருவன் கிருஹத்துக்கு உள்ளே கிடந்தது உறங்கா நிற்க நெருப்புப் புறம்பே பற்றி எரியா நின்றால்-புறப்பட்டுக் கொள் கிடாய் -என்று
பின்பு நெருப்பு என்பாரைப் போலேயும் முந்துற விடுங்கோள் என்கிறார் -த்ருஷ்டா சீதா போலே
ஜன்ம மரணங்களுக்கு நடுவே- ஷட்பாவம் – இ றே-இவை தான் நோவு படுகிறது – கொடு உலகம் காட்டேல் என்பார் பின்பு –
-த்யக்த்வா புத்த்ராம்ச தாராம்ச்ச –யுத்த -17-4–சரணாகதிக்கு முன்பும்-என்றும் –
பரித்யக்தா மயா லங்கா –யுத்த -19-5-என்றும் -விடுகை முன்னாக இறே முன்பு பற்றினவர்களும் பற்றிற்று —
வீடுமின் -என்கிற பன்மையால் சொல்லுகிறது என் என்னில் ஒருவன் தந்தனாய் வந்து நிற்க -அவனுக்கு உபதேசிக்கிறார் அன்றே
சம்சார வெக்காயம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே-ஒருவர் அல்லா ஒருவர்க்காகிலும் ருசி பிறக்குமோ என்று எல்லாருக்கும் உபதேசிக்கிறார்
எத்தை விடுவது என்னில் –

முற்றவும்
சண்டாளர் இருப்பிடத்தை ப்ராஹ்மணர்க்கு ஆக்கும் போது சில கூட்டி சில கழித்து அன்றே கொள்ளுவது
அப்படியே அஹங்கார மமகாரங்களாலே தூஷிதமான வற்றிலே சில கூட்டிக் கொள்ள ஒண்ணாதே -ஆகையால் கட்டடங்க விடுங்கோள் என்கிறார்
அஹங்காரம் பிடித்தவன் -சண்டாளன் -ஜாதி பரம் இல்லை

வீடு செய்து -உறுதி செய்து -விடுவதே பிரயோஜனம் என்றவாறு –
வீடுமின் முற்றவும் -என்றார் ஆகில் திரிய வீடு செய்து -என்கிற இதுக்கு கருத்து என் என்னில்
மேல் ஒரு பேறு பெறுவதிலும் -இவற்றை விட்டு நிற்கும் நிலை தானே பேறாகப் போருகையாலே –விடுகையாகிற பேற்றைப் பெற்று என்கிறபடி –
ராஜ புத்திரன் அழுகு சிறையிலே கிடந்தால் முடி சூடி ராஜ்யம் பண்ணுவதிலும் சிறை விடுகை தானே பிரயோஜனமாய் இருக்கும் இ றே –

உம்முயிர் வீடுடை யானிடை-
இதுக்குப் பல படியாக அருளிச் செய்வர் -நஞ்சீயர்
1–யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிறபடியே உம் உயிரையும் அதினுடைய வீட்டையும் உடையவன் என்னுதல்-
2-உம் உயிரை வீடாக உடையவன் என்னுதல்
3-உம் உயிரை விடும் இடத்தில் -சமர்ப்பிக்கும் இடத்தில் –உடையான் பக்கலிலே என்னுதல் –
வீடுடையான் –
4–பரமபத நிலையன் பக்கலிலே -என்னுதல்
உம்முயிர் –
அநித்தியமான சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகிறேனோ
நித்தியமான ஆத்மா வஸ்துவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்கிறது -ஆத்மாவை நிழலிலே வைத்து சரீரம் வெய்யிலே வைக்க –
அது தானும் என் உயிர்க்கோ
உம் உயிர்க்கு அன்றோ –மூக்கு நுனியைப் பார்த்து த்யானம் -யார் மூக்கு -போலே

உடையானிடை – வீடு செய்ம்ம்மினே
பொதுவிலே உடையவன் -என்கிறார்
ருசி பிறந்து -அவன் ஆர் என்றால் -வண் புகழ் நாரணன் -என்பாராக –
அவன் உடையவனாய் உங்கள் சத்தையாய் நோக்கிக் கொண்டு போரா நிற்க
நீங்களும் -நான் என்னது -என்று அகலப் பாராதே
உங்களை அவன் பக்கலிலே சமர்ப்பிக்கப் பாருங்கோள்-
அவன் உடையவன் ஆனபின்பு அவனோடு அவிவாதமே உங்களுக்கு வேண்டுவது –
விவாதம் இல்லாமல் இசைவே வேண்டுவது

ஜனமேஜயன் -வைசம்பாயனர் -அவகாசம் -இல்லை -மூட துரியோதன தசானனௌ-சா காங்க சமாக -ஆசை வரும்படி சொல்ல
கோ க்ரஹணம் -வன பங்கனம் –அடியைப்பிடி பாரதப்பட்ட -தர்மாதி புருஷார்த்தங்கள் வேண்டாம் –
சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் -ருசி
மூன்று எழுத்து உடைய பேரால் –

யம ப்ராதேசிகமான நியமனத்தை உடையவனை யன்று சொல்லுகிறது -சூர்ய மண்டல மத்திய வர்த்தி நாராயணன் –சகல தேசத்துக்கும் நிர்வாஹன் –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் –என்று அவன் தன்னையும் நியமிக்குமவன் யாயிற்று இவன் —
வைவஸ்வத -விவஸ் வானுடைய குலத்திலே பிறந்தவன் -என்னுதல் -ஆதித்ய அந்தர வஸ்திதன் -என்னுதல்
ராஜா -அவனைப் போலே தஹ பாச என்கை யன்றிக்கே எல்லார்க்கும் இனியனாய் இருக்குமவன் யாயிற்று இவன்
ய-அந்தர்யாமி ப்ராஹ்மாணாதிகளிலே பிரசித்தி –
தவிஷா ஹ்ருதி ஸ்தித -அவன் எங்குற்றான் என்ன -கண்டில்லையோ -உன்னுடைய ஹிருதயத்திலே புகுந்து ஆட்சியிலே
தொடர்ச்சி நன்று என்று இருக்கிறான் -ஆனால் செய்ய வேண்டுவது என் என்னில் –தேன சேத விவாதஸ் தே-உடையவனாய்
இருக்கிறவனோடே உனக்கு அவிவாதம் உண்டாகில் இத்தால் பேறு -என்பாயோ
மா கங்காம் மா குரூன் கம -மனு ஸ்ம்ருதி–ஒரு தீர்த்தம் தேடித் போதல் புண்ய ஷேத்ரம் தேடித் போதல் செய்ய வேண்டா –
கங்கை தீர்த்தம் -ஸ்ரீ பாத தீர்த்தம் -ஒத்துக் கொண்டவனையும் ஒத்துக் கொல்லாதவனையும் தீர்த்தம் ஆட வேண்டாம் –
சேஷத்வ பூர்வ ஞானம் ஆகிய அடிமை கொள்ளுவது -ஆட்சி -தொடர்ச்சி -அந்தர்யாமியாக இருப்பது
அஹங்கார கர்ப்பமான தீர்த்த யாத்ரை கைங்கர்யங்கள் கூடாதே –

அஹங்கார மமகாரங்கள் கிடக்க பிராயச் சித்தம் பண்ணுகையாவது-நிஷித்த த்ரவ்யத்தை உள்ளே வைத்து மெழுக்கூட்டினவோபாதி இ றே-
உடையவனுக்கும் உடைமைக்கும் தக்க படி இ றே பிராயச் சித்தமும் -நம்பினேன் பிறர் நன் பொருள் –
உடையவன் -சர்வேஸ்வரன் -த்ரவ்யங்களில் பிரதானமான ஆத்மா த்ரவ்யத்தை இ றே அபஹரித்தது
அபஹரித்த த்ரவ்யத்தைப் பொகட்டு பிராயச் சித்தம் பண்ண வேணுமே
பொகடுகிற த்ரவ்யமும் தானாகையாலே -பிராயச் சித்தம் பண்ணுகைக்கு வேறு அதிகாரியும் இல்லையே
ஆகையால் நீங்களும் உடையவன் பக்கலிலே
வீடு செய்ம்மினே -வீடு -சமர்ப்பிக்கை-அதாகிறது -இசைகை

பொகடுகை -இசைகை ஒன்றே -சொத்து -அதிகாரி லஷணம்-அவனது என்று ஏற்ற பின்பு சொத்து தானாகவே ஒன்றும் செய்யாதே
ஸ்வ தந்த்ரன் அல்ல இசைவே பிராயச் சித்தம் -நம் சம்ப்ரதாயம் –

அப்ருதக் சித்த விசேஷணம்-பிரகாரம் – -சார்ந்தே விட்டுப் பிரியாமல் இருக்க எப்படி அபகரிப்பது -எப்படி சமர்ப்பிபது
-அபகாரமும் சமர்ப்பித்தும் -அபாவம்
ஸ்வ தந்திர நினைவே அபகாரம் -அந்ய சேஷத்வ நினைவும் அபகாரம் –
ஆசார்யர் -பாகவதர் -உபதேசிக்க –காருண்யத்தால் -அவர்கள் அருளிச் செய்ய -இசைவதே சமர்ப்பணம்

————————————————————————–

அவதாரிகை –

பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விட்டு சர்வேஸ்வரனான எம்பெருமான் பக்கலிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணப் பாருங்கோள்-என்றார் முதல் பாட்டில் –
பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விடச் சொல்லா நின்றீர் -அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த வற்றை இப்போதாக விடப் போமோ என்ன –
அவற்றினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்கிறார் இதில் –

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2-

மின்னின் நிலையில –
மின்னோபாதியும் நிலை யுடைத்தல்ல -ஐந்தாம் வேற்றுமை –எடுத்துக்காட்டு பொருள் -உபமார்த்தே பஞ்சமி
அல்பமாய் அஸ்திரமாய் இருக்கும் இ றே அது
இதுவும் அஸ்திரமாய் இருக்கச் செய்தேயும் ஸ்திர புத்தியைப் பிறப்பித்து அனர்த்தத்தோடே தலைக் கட்டு வித்துவிடும்
சந்தன ப்ராந்தியாலே -நாற்றம் குளிர்த்தி மென்மைகளைக் கொண்டு சர்ப்பத்தின் மேலே கையை வைத்துக் கொண்டு கிடந்தது உறங்கா நின்றால்
ஒரு தார்மிகன் -இது சர்ப்பம் கிடாய் என்று அறிவித்தால் பின்னை அதில் நின்றும் கை வாங்கி அல்லது நிற்க ஒண்ணாது இ றே
அப்படியே இதர விஷயங்களில் போகாதா புத்தி பண்ணிப் போருகிற இவனுக்கு -இது அல்பம் அஸ்தரம் -என்று இதனுடைய
தோஷ தர்சனத்தை பண்ணுவிக்கவே விடலாய் இருக்கும் இ றே

மன்னுயிர் ஆக்கைகள் –
1-உயிர் மன்னுகிற ஆக்கைகள் -என்னுதல்
2-நித்தியமான ஆத்ம வஸ்து பரிஹிக்கிற தேஹங்கள்-என்னுதல்
திறந்து கிடந்த வாசல்கள் தோறும் நுழைந்து திரியும் பதார்த்தம் போலே இ றே இவன் திரிவது –
மகிழல கொன்றே போலே மாறும் பல் யாக்கை -முதல் திருவந்தாதி -49–இ றே
வகுள பீஜம் -ஜ்யோதிஷர் -1/10/100 கணக்கு பண்ணுவார்கள் -ஸ்தானம் படி மதிப்பு மாறுமே –
ஓர் அலகு தானே காணி ஸ்தானத்திலே நிற்பது -கோடி ஸ்தானத்திலே நிற்பதாம் இ றே -அப்படியே ஓர் ஆத்மா தானே கர்ம பேதத்தாலே தேவாதி தேஹ பேதங்களைப் பரிஹரிக்கும் இ றே
அன்றியே
3-உயிர் என்கிற ஏக வசனம் -ஜீவ அனந்யத்துக்கு உப லஷணமாய்-ஆத்மாக்கள் பரிகிரஹிக்கிற சரீரங்கள் –என்னவுமாம் –

என்னும் இடத்து –
பகவத் குணங்களை பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாதாயிற்று தோஷ பரப்பு
இவ்விடை யாட்டத்து என்றபடி –

இறை உன்னுமின் நீரே —
இதில் அல்பத்தை ஆராயுங்கோள்-
நீரே –
இது தனக்கு ஒரு பிரமாண அபேஷையும் இலை
சதாசார்ய உபதேசமும் வேண்டா –
பூர்வ உத்தர பகவத் ஆஸ்ரயம் பிரகரணம் -அதனால் இது சேராது
இறைவனை மனனம் பண்ணுமின் -திருவடி ஆஸ்ரயிக்க அருளிச் செய்கிறார் –

————————————————————————–

அவதாரிகை –

தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்றீர்
காலம் அநாதி -மேல் அனந்தமாய் இரா நின்றது –
பற்றின காலம் எல்லாம் வேணும் இ றே விடுகைக்கும் -என்ன
த்யாஜ்ய அம்சத்தை சுருங்க அருளிச் செய்கிறார் –
-சம்சார பீஜம் இன்னது -நீர் நுமது-என்றும் அதுக்கு பேஷஜம் இன்னது-வேர் முதல் மாய்த்து- என்றும் அருளிச் செய்கிறார் –

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே –1-2-3–

நீர் நுமது -என்று –
அநர்த்த கரமான அஹங்கார மமகாரங்கள் –நான் எனது -என்னுமத்தை பிறருக்கு உபதேசிக்கும் போது-நீர் நுமது -என்று இ றே சொல்வது
நான் என்னது -என்று தம் வாக்காலே சொல்ல மாட்டாரே நாக்கு வேம் என்று -வேம் -தத்தமாம் -க்ரூரம் –
என் உடமை -என்னுமது வேணுமாகில் தவிருகிறன்-நான் என்னுமது தவிரும்படி என் என்னில்
அஹம் அன்னம் -நான் -அடியேன் –வாசி உண்டே தமிழில் -அஹம் தாஸ்யசேர்ந்து தானே சமஸ்க்ருதம் முரட்டு பாஷை –
இவன் அஹம் என்றால் ராவணாதிகள் நான் என்றால் போலே -ஸ்வாதந்த்ர்யம் அபிமானம் தவிர்க்க வேண்டும் –
அஹம் ஆத்ம ஸ்வரூபம் சொல்லாம் -ராவணன் போலே சொல்லக் கூடாதே -தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் –கோன் போலும் என்று எழுந்த –
பிறருடைய நானைத் தவிர்த்துக் கொண்டு இ றே இருப்பது —பிறர் -பரன் சொத்தை -அஹம் மே-பிறர் நன் பொருள் –
தேஹத்தில் அஹம் புத்தி பண்ணிப் போருமது தவிர வேணுமே –
தேஹாத்மா -தேகத்தை அஹம் என்னும் ஆத்மாவாக நினைப்பது இரண்டாவது குற்றம்
அஹம் அன்னம் சொல்லலாமே ஆத்மாவின் யதாவஸ்தித ஸ்வரூபம் சம்சாரம் தீண்டாதே
முக்த தசையில் -சொல்லலாம் -அஹம் -அங்கு அடியேன் என்ற பொருளில்
ஜீவத்வாரா -பரமாத்மா பர்யந்தம் -நான் -தேகத்துடன் சென்றாலும் ஆத்மா மட்டும் நின்றாலும் குற்றம் -அவன் அளவுக்கும் செல்ல வேண்டும்
தத்வத்ரய சம்ப்ரதாயம் -எவ்வளவு அழகாக இங்கே உதவுகிறது
அனன்யார்ஹ சேஷ பூதன் -என்பதை காட்டவே அஹம் அன்னம் -நீர் நுமது -கீழ் இரண்டு நிலைகள் –

இவை வேர் முதல் மாய்த்து –
இவை வேர் முதல் மாய்க்கையாவது என் என்னில் -இது அபுருஷார்த்தம் என்னும் பிரதிபத்தியைச் சொன்னபடி –
இரண்டு வ்ருஷம் தன்னிலே சேர நின்றால் ஒன்றிலே துளைத்து பெருங்காயத்தை வைக்க –விஷம் -என்றவாறு-சில நாள் ஓன்று போலே நின்று
பின்னைப் பட்டுப் போகா நின்றது இ றே
அப்படியே அஹங்கார மமகாரங்கள் த்யாஜ்யம் என்றும் பிரதிபத்தி உண்டாக தன்னடையே சம்சாரம் அடி அற்று நிற்கும்
அநாத்மன்யாத்மா புத்திர்வே அஸ்வே ஸ்வமிதியா மதி அவித்யாதரு சம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
-என்று சம்சார பீஜமும் சொல்லி
அச்யுதாஹம் தவாஸ்மீதி சைவ சம்சார பேஷஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்று -பரிகாரமும் சொல்லிற்று இ றே
ரஷகனாவன் அவசர ப்ரதீஷகனாய் இருக்க இவன் பக்கலிலே விலக்காமை உண்டானால் விரோதி போகைக்கு தட்டில்லை என்கை-
அவசர ப்ரதீஷன் -சந்தர்ப்பம் பார்த்து இருக்கிறான் என்றவாறு –
நான் அல்லாததில் நான் என்னும் புத்தி அஹங்காரம் -என்னுடைய இல்லாதவற்றில் என்னுடைய புத்தி மமகராம்
அச்சுயுத அஹம் தவ அஸ்மி -அஹம் உபயோகம் உண்டே இங்கே
பிராரப்த கர்மா தொலைய வேண்டாமோ -அவன் அவசர ப்ரதீஷனாய் இருக்க -நானும் இசைந்தாலும்
வேங்கடங்கள் –அது சுமந்தார்கட்கே -கடங்கள் -அநாதி கால கர்மா வேம் -எரிந்து போகும்
நம -விலக்காமை -சொல்ல அவன் பிரவர்த்தன் ஆக
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்தன வினை யாயின எல்லாம் தன்னைடையே போம்
நானும் வேண்டாம் நீயும் வேண்டா
கேசவா என்ன -கெடும் இடராயவன வெல்லாம் -தீது ஒன்னும் அடையா –மாதவன் என்னு என்னு ஓத வல்லீரேல்

இறை சேர்மின் –
அப்ராப்த விஷயங்களை விட்டு வகுத்த சேஷி யானவனை சேரப் பாருங்கோள்-
சேர்மின் –என்கிறார் காணும் -பற்றுமின் -சொல்லாமல் சேர்மின்-
கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இருக்கையாலே -சம்சாரிக்கு பகவத் சமாஸ்ரயணம் –
மரக்கலம் ஆலம்பனம் -காற்று அடிக்க கப்பல் நகர -கரைக்கு வருகிறோம் விஷ்ணு போதம் கிருபாவான் -கிருபை காற்று
-அதனால் சேர்மின் -வேலை நமக்கு இல்லையே

உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே
இத்தோடு ஒக்க சீரியது இல்லை -என்னுதல்-
நேர் -என்று ஒப்பாய் –
நிறை என்று மிகுதியாய்
உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை -என்றுமாம்
பிரதமத்தில் -ஔஷதம் போலே சம்சாரிகளுக்கு பகவத் சம்பந்தம் ஹிதமுமாய் -உதர்க்கத்தில் பிரியமுமாய் இருக்கும்
நித்தியமாய் ஜ்ஞானானந்த லஷணமான வஸ்துவுக்கு இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை
சம்சார ஆர்ணவ மக்நாநாம் -இத்யாதி
விஷ்ணு போதம் இக்கரையும் அக்கரையும் ஒன்றாய் நின்று அவ்வருகு நடத்தும் ஓடம் –

சம்சார அர்ணவம் மக்னானான் விஷயாக்ராந்த -விஷ்ணு போதம் -நகராத ஓடம் -நாம் தான் நகரணும் –
பிரமம் விபு -நகர முடியாதே -ஏஷ சேது -இக்கரையும் அக்கரையும் இங்கேயே

————————————————————————–

அவதாரிகை –

விடுகிறவை போலே அபோக்யமுமாய் சதோஷமுமாய் இராது என்று பற்றப் படுகிற விஷயத்தின் உடைய போக்யத்தை அருளச் செய்கிறார் –
புல்க வேண்டிய அவன் ஸ்வரூப வை லஷண்யம் அருளிச் செய்கிறார் -ஆத்மா -அபோக்யம் -கைவல்ய நிஷ்டரை நிரசிக்க –

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-1-4-

உரு -இங்கே ஸ்வரூபத்தை குறிக்கும்
அந்நலம் -உயர்வற உயர் நலம் –
புல்கு-சிநேக உக்தமாக செறிவாய்- புல்லு – என்றுமாம் -பாட பேதம் –அத்யந்த பிரியமாய்-
பன்மையாக கீழே மூன்று பாசுரங்களிலும் -இங்கு புல்கு ஒருமை -த்யாஜ்யங்கள் -பல உண்டே –
அதிகாரிகள் பலரும் -புத்தி பேதங்கள் குணா பேதங்கள் -இங்கே பற்ற வேண்டிய விஷயமும் ஓன்று
–புருஷார்த்த ஐக்கியம் –புத்தி ஐக்கியமும் உண்டே – அதிகாரி ஐக்கியம் -ஜாதி ஏக வசனம் -முமுஷு பிரபன்னன் ஒரு ஜாதி தானே

இல்லதும்-
பிரமாண யோக்கியம் அல்லாமையால் வரும் துச்சத்வத்தை பற்ற வாதல் –முயல் கொம்பு போன்றவை
ப்ரதீதி மாத்ரமாய்-தோற்றம் மட்டும் -பாத யோக்யமான மித்யாத்வத்தை -பொய் -பற்ற வாதல்
-முத்துச் சிப்பி வெள்ளி போலே தோன்றுமே -சூன்யவாதி மாயாவாதி படிகளின் படி சொல்ல வில்லை-
இல்லது -என்கிறது அன்று -விநாசித்வத்தைப் பற்றச் சொல்கிறது

உள்ளதும் –
இல்லாத வஸ்துவில் வ்யாவ்ருத்தியைப் பற்ற -உள்ளது -என்கிறது –
யதஸ்தி யன்நாஸ்தி -என்றும் -சத்யஞ்ச நருதஞ்ச -என்றும் சொல்லக் கடவது இ றே சித் அசித்துக்களை
அன்றியே ஆத்மாவுக்கு இருப்பிடமான சரீரத்தின் படியும் அத்தை -இல்ல வீடு என்று கொண்டு
இருப்பிடமாக உடைய ஆத்மாவின் படியும் அல்ல என்றுமாம் –

அல்லது அவனுரு –
நச்வரமாய் இருக்கிற அசித்தின் படியும் அன்று
அசித் சம்சர்க்கத்தாலே அஹம் ஸூகீ அஹம் துக்கி என்கிற சேதனன் படியும் அன்று அவன் ஸ்வரூபம்

ஆனால் எங்கனே இருக்கும் என்னில்
எல்லையில் அந்நலம் –
ஆனந்த மய -என்றும்
உணர் முழு நலம் -1-1-2-என்றும்
ஓடியாவின்பப் பெருமையொன் -8-8-2–என்றும்
சுடர் ஜ்ஞான இன்பம் -10-10-10-என்றும்
சமஸ்த கல்யாண குணாத் மகோசௌ-என்றும் சொல்லலாம் படி இருக்கும்
சமஸ்த கல்யாணத்வம் என்பதே குணமாக -தன்மையாக கொண்டவன் -என்றுமாம் –

புல்கு பற்றற்றே –புல்கு –பற்று -சேர் -அணைத்துக் கொள் மூன்றும்
அங்கனா பரிஷ்வங்கம் போலே போக ரூபமாய் இருக்கும் இறே குண ஜ்ஞானம் உடையவனுக்கு குணாதிக விஷய அனுபவம் –
அது செய்யும் இடத்தில் -ஏவ காரம் -அற்றே புல்குஇரு கரையன் ஆகை அன்றிக்கே புறம்பு உள்ள பற்று அற்றே புல்கு
மலரிட்டு நாம் முடியும் -அவன் சூட்ட சூடிக் கொள்வோம் -உடுத்துக் களைந்த பீதகவாடை உடுத்து கலத்தது உண்டு
உபாயாந்தரங்களை விட்டே பற்று என்றுமாம் -சமித்து பாதி சாவித்திரி பாதி இல்லாமல்
பற்றிலார் பற்ற நின்றான்-7-2-7- இறே அவன் -சாதனாந்தரங்களில் பற்று இல்லாத வர்கள் பற்றும் படி திருவரங்கன் –
ஆகையால் பற்று அற்றே புல்க வேணும்

————————————————————————–

அவதாரிகை –

பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிகாரத்தையும் -இடையூறு -ஆத்ம பிராப்தி –அருளிச் செய்கிறார் –
இந்திர பதத்தைக் கோலுமவன்-இவ்வருக்கு உண்டான ஐஸ்வர் யத்தையும் கோலான்
ப்ரஹ்ம பதத்தை ஆசைப்படுமவன் இவ்வருக்கு உண்டான இந்திர பதத்தில் கண் வையான்
ஆத்மா அனுபவத்தை ஆசைப் படுமவன் ஐஸ்வர் யாதிகளில் கண் வையான்
சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -நித்ய மங்கள விக்ரஹ யுக்தனாய் இருக்குமவனைப் பற்றுமவன் இவை இத்தனையிலும் கண் வையான் –
ஆக இங்கன் வரும் அந்தராய பரிஹாரத்தை அருளிச் செய்கிறார் –

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-

அற்றது பற்று எனில் -பற்று அற்றது எனில் -விஷயாந்தரங்களில் நசை அறுத்து
உற்றது வீடுயிர்-உயிர் வீடு உற்றது -கைவல்யம் மோஷம் அடைந்து விடும்
அது -அந்த ஆத்ம பிராப்தி -அல்பம் என்று உணர்ந்து
செற்று -செறுத்து- ஜெயித்து
மன்னுறில் நிலை நின்ற -நிரவதிக பகவத் அனுபவம் கிட்டப் பார்க்கில்
அற்று -ஐஸ்வர்ய கைவல்ய -ஆசைகளை விட்டு
இறை பற்றே

அற்றது பற்று எனில்
பிரகிருதி பிராக்ருதங்களில் உண்டான பற்று அற்றது என்னும் அளவிலே –

உற்றது வீடுயிர் –
ஆத்மா மோஷத்தை பிராபித்தது –
விலஷண ஜ்ஞானத்தையும் ஸ்வரூபத்தையும் உடைய வஸ்துவுக்கு திரோதானத்தை பண்ணுகிற அசித் சம்சர்க்கம் இ றே
யோக அப்யாசத்தாலே கழிந்த வாறே ஸ்வரூபம் பிரகாசிக்கும் -பிரகிருதி வியுக்த -கழிந்த நித்யாத்ம ஸ்வரூபத்தை நினைக்கை தானே யோகம் –
அது நித்தியமாய் ஜ்ஞானானந்த லஷணமாய் இருக்கையாலே -இது தன்னையே அனுபவிக்க அமையாதோ என்று என்று தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும் –
பிராபிக்க ஒருப்படும் பொழுதே ஜெயிக்க வேண்டும் –உற்றது -உறும் என்றபடி -கைவல்யம் அடைந்த பின்பு மீள முடியாதே -ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் –

செற்றது –
அத்தை செற்றது -அத்தை முகம் சிதறப் புடைத்து –

மன்னுறில் –
மன்ன வுறில்-தன்னைப் பற்றினால் -இன்னமும் அதுக்கு அவ்வருகு ஒரு அனுபவம் உண்டு -என்று இருக்க வேண்டாத படியான நிலைநின்ற
புருஷார்த்தத்தைப் பற்றப் பார்க்கில்

அற்றிறை பற்றே —
ஆச்ரயண காலத்தில் அவனுக்கு என்று அத்யவசித்து –சேஷியான அவனை பற்றப் பாருங்கோள்
அன்றிக்கே
விபக்தியை மாறாடி இறையைப் பற்றி இத்தை அறப் பார் என்னுதல்
இறையைப் பற்றி இத்தை அறப் பார் –அறுத்து இறையைப் பற்று -முதலி யாண்டான் கூரத் ஆழ்வான் சம்வாதம் –
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14–என்னுமா போலே –

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -1-4-

April 29, 2016

எம்பெருமான் தன்னை புஜிக்கைக்கு ஈடான பக்த்யாரோக்கியம் ஆழ்வாருக்குப் பிறப்பிக்கைக்காக-
வியாதி பட்டார்க்கு பிஷக்குகள் போஜன நிரோதனம் பண்ணுமா போலே அனுபவிக்க வேணும் என்று இவர் பண்ணின மநோ ரதத்தை அல்பம் தாழ்க்க
-அது பொறுக்க மாட்டாதே மிகவும் ஆர்த்தரான ஆழ்வார்
அனன்யார்ஹ சேஷத்வத்தாலும் -அந்த சேஷத்வ அனுபவத்தில் எம்பெருமானோடு கலந்தால் பிராட்டிமார்க்கு உண்டான ரசம் பிறக்கையாலும்
தத் ஏக போகவத்தாலும் -பிரியில் தரியாமையாலும் -தமக்கு பிராட்டிமாரோடு சாம்யம் உண்டாகையாலே
எம்பெருமானோடு கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தசையை ஆபன்னராய் –
அவள் பேச்சாலே தம்முடைய தசையை எம்பெருமானுக்கு அறிவிக்கிறார் –
தன்னுடைய லீலா உத்யோனத்திலே தோழி மாறும் தானுமாய் விளையாடா நிற்க
தைவ யோகத்தாலே தோழி மாறும் அந்ய பரைகளான தசையிலே எம்பெருமான் இயற்கையிலே சம்ச்லேஷித்து விச்லேஷிக்க
மிகவும் நோவு படுகிறாள் ஒரு பிராட்டி -அவன் தானே வரப் பற்றாமையாலே -நம் பக்கல் உண்டான -குற்றத்தை அனுசந்தித்து
வாராது ஒழிகிறான்-தம் அபராத சஹத்வத்தை அறிவிக்க வரும் -என்று பார்த்து -பேர் அளவுடையரான பெருமாளும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளும்
யுக்தாயுக்த நிரூபணம் ஷமர் அன்றிக்கே -அசோகசோகாபநுதே-என்றும் -ஹம்ஸ காரண்ட வா கீர்ணாம்-என்றும் அருளிச் செய்தால் போலே –
இவை நம் வார்த்தை அறியாது என்று பாராதே -அவ்வுத்யாநத்திலே வர்த்திக்கிறன சில பஷிகளை எம்பெருமானைக் குறித்து தூது விடுகிறாள் –

———————————————————–

முதல் பாட்டில்
இப்பிராட்டி -உத்யானத்திலே சம்ச்லேஷித்து வர்த்திக்கிறன சில நாரைகளைக் கண்டு -ஸ்த்ரீத்வத்தாலே அவற்றிலே
தன்னோடு சஜாதீயமான பேடையை நோக்கி எம்பெருமானுக்கு என் ஆர்த்தியை அறிவிக்க வேணும் என்கிறாள் –

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவா வென்று எனக்கு அருளி
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின் -அஞ்சிறைய சேவலுமாய் ஆவா வென்று எனக்கு அருளி
சேவலோட்டை சம்ச்லேஷத்தாலே -செந்தலித்து நினைத்த இடத்திலே போகைக்கு ஈடான சிறகை யுடையையாய் பவ்யமான நாராய்
இத்தசையிலே உதவும்படியான தகைமையுடைய நீயும் -நீ இட்ட வழக்காய் அழகிய கமன சாதனத்தை யுடைத்தான
சேவலும் கூடி ஆர்த்தையான எனக்கு ஐயோ என்று கிருபை பண்ணி –

வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு –
அங்கே போனால் அவனை அறியும் படி எங்கனே என்னில் –
பிரதிபஷத்துக்கு வெவ்விதான சிறகை யுடைத்தான பெரிய திருவடியைக் கொடியாக யுடையவன் என்று அடையாளம் சொல்லுகிறாள்
தன்னைப் பிரித்து சடக்கென கொடுபோகையாலே -அக்ரூர க்ரூர ஹ்ருதய -என்னுமா போலே
இவ்வெவ்விதான சிறகை யுடைய புள்ளாலே வஹிக்கப் பட்டவனுக்கு -என்றால் ஆகவுமாம் –

என் விடு தூதாய்ச் சென்றக்கால் –
அத்யார்த்தையான எனக்குத் தூதாகச் சென்றக்கால் –

வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ-
தான் அர்த்திக்கச் செய்தே அவை போகாது ஒழிந்த வாறே தன் பக்கல் நின்றும் சென்ற தங்கள் வார்த்தையை அவன்
அங்கீ கரியான் என்று பார்த்து அவை போகாது ஒழிந்தனவாக கொண்டு
அப்படி நீர்மையை யுடையவன் உங்களைக் கொண்டாடாமை ஆகிற வன்சிறையில் வைக்கில்
பரார்த்தமாகச் சிறை இருக்கை கிடைப்பது ஒன்றோ -என்று ஸ்வ கோஷ்டீ பிரசித்தியாலே சொல்லுகிறாள் –

——————————————————————————————————–

இரண்டாம் பாட்டில் சில குயில்களைக் குறித்து எம்பெருமான் பக்கலில் சென்றால் விண்ணப்பம் செய்யும் பாசுரத்தைச் சொல்கிறாள் –

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய் என் செய்யும் உரைத்தக்கால்
விஸ்லேஷ தசையில் -ஆத்மாத்மீயங்கள் எல்லாம் உள்ளது என்பாரைப் போலே சச்நேஹமாக நோக்கின நோக்கையும்
இத்தலையை தோற்ப்பிக்கையாலே மிகவும் மேணானிப்பையும் உடையவனாய் இருந்தவனுக்கு –
சம்ச்லேஷ தசையில் சச்நேஹமாக நோக்கின நோக்காலே என்னை அடிமை கொண்டவனுக்கு என்றுமாம்
அத்யார்த்தையான என்னுடைய தூதாய் எனக்காக ஒரு வார்த்தை அங்கே அறிவித்தால் உங்களுக்கு என்ன சேதம் உண்டு
சிலவருடைய ஆர்த்திக்கு உதவுகை கிடைப்பது ஒன்றோ -என்று கருத்து –

இனக் குயில்காள் நீரலிரே-
எங்களைப் போலே பிரியாதே கூட இருப்பது நீர்மைக்கு நீங்களாவது –

முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ –
அநாதிகாலம் சஞ்சிதமான மகா பாபத்தாலே திருவடிக் கீழ் அந்தரங்க வ்ருத்திகள் பண்ணுகைக்கு ஈடான பாக்யத்தை
பண்டு பண்ணாத நான் அகன்றே போம் இத்தனையோ
தந்தாமுக்கு என்ன ஓன்று இல்லாதார் தய நீயர் அன்றோ -என்று கருத்து

விதியினமே —
பாவியோம்
விதி இன்னம் என்றுமாம் –

——————————————————————————————–

மூன்றாம் பாட்டில்
தந்தாம் பண்ணின பாபம் தம்தாமே அவசியம் அனுபவிக்க வேண்டாவோ -என்று உபேஷித்து இருக்கிறானாகக் கொண்டு
எல்லைச் சதிரியான சிந்தயந்தி பாபம் அனுபவ விநாச்யம் ஆகலாம் -நான் பண்ணின பாபமேயோ அனுபவ விநாச்யம் ஆகாது என்று
எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய வேணும் என்று சில அண்ணன்களை அர்த்திக்கிறாள்

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய வன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-

நான் பண்ணின பாக்யத்தால் பேடையோடே சம்ச்லேஷித்து -அந்த சம்ச்லேஷ ரசத்தால் ஆகர்ஷகமான நடையை யுடைய அன்னங்காள்
புத்தி யோகத்தாலே வாமன வேஷனனாய் குண சேஷ்டிதாதிகளால் ஈடுபடுத்தும் ஸ்வ பாவன் ஆனவனுக்கு

நலம் உடையவன் -தர்மம் தரமி சப்தங்கள் -தரமி ஸ்வரூபம் இருக்க -மீண்டும் யவன் -சப்தம் -நலங்களும் ஸ்வரூபம் ஆஸ்ரயித்து நிறம் பெறுமே –
ஒருத்தி
ஒருத்தி என்னவே தானே -இன்னாள் என்று அறிகிறான் இ றே
பகவத் பிரசாதத்தால் மயர்வறும்படி பெற்ற ஜ்ஞானப் பரப்பு எல்லாம் நிச் சேஷமாகக் கலங்கி மயங்கா நின்றாள் என்று அறிவியுங்கோள்

———————————————————————

நாலாம் பாட்டில்
என் பிரக்ருதியை அறிந்து வைத்து விச்லேஷித்தவனுக்கு சொல்லலாவது உண்டோ -என்று விஷண்ணை யாய்
மீள ஓர் ஆசையாலே சில மகின்றில்களைக் குறித்து
என்னிடையாட்டம் அவனுக்கு அறிவிக்க வல்லிகேளோ மாட்டிகோளோ-என்கிறார்

என்நீர்மை கண்டிரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-

என்நீர்மை கண்டிரங்கி இது தகாது என்னாத என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
தன்னுடைய சௌந்தர்யாதிகளைக் காட்டி முன்பு என்னை ஈடுபடுத்தினவனுக்கு நான் இனிச் சொல்வது எத்தை

நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
ஈண்டு எனச் சென்று சம்ச்லேஷி யீராகில் அவள் கிடையாள் என்று ஒரு வார்த்தை சொல்லி என்னை உஜ்ஜீவிப்பியுங்கோள்

நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –
நிறம் அவனைப் போல் இருந்தது
அவனைப் போலே ஆகிறிகளோ -என் அபேஷிதம் செய்கிறிகளோ -என்று கருத்து –

—————————————————————————————————–

என்னை இப்படி உபேஷித்தால்-எல்லாரையும் ரஷிக்கையாலே பரிபூர்ணனான தன்னுடைய நாராயணத்வம் விகலாமாகாதோ -என்று
அவனுக்கு அறிவித்தால் அவன் அருளிச்செய்த பிரதி வசனத்தை எனக்கு வந்து சொல்ல வேணும் என்று சில குருகுகளை அபேஷிக்கிறாள்

நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படைப்பை இறை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

பொழில் பூமி எல்லா லோகங்களுக்கும் உப லஷணம்
பாப ப்ரசுர்ய ஹேதுவான எனக்கயோ இரங்கலாவது
பெருகா நின்ற நீரையுடைய நீர் நிலங்களில் இரையைத் தேடி உன் சஹசரத்துக்கு கொடுக்கும் ஸ்வ பாவனாய்
நினைத்த இடத்தில் போகலாம் படி நொய்தான சரீரத்தை யுடைய குருகே
அவற்றுக்கு தயை பிறக்கும் படி தன் தசையைச் சொல்லுகிறாள் –

————————————————————————————————

ஆறாம் பாட்டில்
இத்தனை சாபரதாரோடே சம்ச்லேஷித்தது -என்று வரும் அகீர்த்தியில் காட்டில் நாராயண த்வம் விகலம் ஆயிற்று ஆகிலும் ஆக அமையும் என்னில்
அதுவும் விகலம் ஆகாதே -நானும் பிழைப்பதொரு விரகு சொல்கிறேன் -அப்படிச் செய்யச் சொல் என்று ஒரு வண்டை அபேஷிக்கிறாள்

அருளாத நீர் அருளி அவராவி துவராமுன்
அருளாழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று
அருளாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே –1-4-6-

அருளாத நீர் அருளி அவராவி துவராமுன் அருளாழிப் புட்கடவீர்
சம்ச்லேஷிக்க நினையாத நீர் -தய நீய தசையை யுடையளான இவள் பக்கலிலே கிருபை பண்ணி அவள் உயிர் முடிவதற்கு முன்னே
ஆஸ்ரிதர் பக்கல் பரம தயாளுவான திருவடியை நடத்தீர்

அருளாத நீர்
பண்டு இப்படி நோவு பட்டவர் இல்லாமையாலே கிருபை பண்ணாது இருக்கிற நீர் என்றுமாம்

அவர் வீதி ஒருநாள் என்று
அவர் வீதியிலே ஒரு நாள் போனதுக்காக அவத்யமாய் பிறவாது என்று கருத்து

அருளாழி அம்மானைக்
அருள் கடலான சர்வேஸ்வரனை
தயா சீலமான திரு வாழியை யுடையவன் என்றுமாம்

கண்டக்கால் இது சொல்லி அருளாழி வரி வண்டே
அவர் வீதி ஒரு நாள் எழுந்து அருள வேணும் என்று சொன்ன வார்த்தையைச் சொல்லி அருள வேணும்
ஆர்த்தனுடைய ஆர்த்தியை தீர்க்கைக்கு ஈடான அளவையும் ஸ்ரமஹரமான வடிவையும் யுடைய வண்டே –

யாமும் என் பிழைத்தோமே —
அதுவும் செய்யாது ஒழியிலோ என்னில் -எங்கள் தெருவில் போகலாகாமைக்கு நாங்கள் செய்த குற்றம் உண்டோ –

—————————————————————————————-

இத்திருவாய் மொழிக்கு நிதானமான அபராத சஹத்வத்தை அனுசந்தித்து -தன்னுடைய இக்குணத்துக்கு நான் புறம்போ என்று
எம்பெருமானுக்கு அறிவி -என்று தன கிளியை நோக்கிச் சொல்கிறாள் –

என் பிழை கோப்பது போலப் பனிவாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே யான் வளர்த்த நீயலையே –1-4-7-

என் பிழை கோப்பது போலப் பனிவாடை ஈர்கின்ற
விரஹ வியசனத்துக்கு மேலே எலும்பை இழை கோத்தால் போலே பனிவாடை இரா நின்றது –

என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு –
நிரதிசய கிருபாவானான தனக்கு இங்கனே நோவு படக் கண்டிருக்கை போராது என்று பாராதே
பிராட்டியோடு கூடி என் குற்றங்களையே அனுசந்தித்து கிருபை பண்ணாது இருக்கிறவனுக்கு
என் அபராதம் எல்லாம் பொறுத்து அருளும்படி பிராட்டி சந்நிதியிலே அறிவி என்று கருத்து ஆகவுமாம்

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
ஸ்வாமியான உன்னுடைய அபராத சஹத்வத்துக்கு விஷயம் அன்றிக்கே நோவு படுகைக்கு ஈடான என்ன தப்புச் செய்தாள்-என்று ஒரு வார்த்தை சொல்லு –

என் பிழைக்கும் இளங்கிளியே –
ஸ்ரமஹரமான நிறத்தாலும் -வடிவு அழகாலும் -பவ்யதையாலும் -நல்ல பேச்சாலும் -வாயின் சிவப்பாலும் -பருவத்தாலும்
எம்பெருமானோடு அறவொத்து இருக்கிற உன்படியைக் காட்டி எலும்பை இழைத்து நோவு படுத்துகிற இளங்கிளியே

என் பிழைக்கும்
என்ன தப்புண்டாம் என்னவுமாம்

யான் வளர்த்த நீயலையே –
தாய்மாரைப் பிள்ளைகளும் நலிவாரோ –

—————————————————————————————————–

ஒரு பூவைக் குறித்து பகவத் விச்வத்லேஷத்தாலே தனக்கு வந்த மகாவசாதத்தைச் சொல்லுகிறாள் –

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோயெனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-7-7-

இன்று என் அவசாதத்தைக் கண்டு மிகவும் தளருகிற நீ யன்றோ
ஆஸ்ரிதருடைய நோவு பொறாதே அவர்கள் பக்கலிலே அதி வ்யாமுக்தனாய் இருக்கிற எம்பெருமானுக்கு
விரஹ வியசனத்தாலே மிகவும் நொந்து இருக்கிற என்னுடைய தூதாய் என்னுடைய மகா அவசாதத்தைச் சொல் என்ன
சொல்லாதே செல்வப் பிள்ளைத்தனம் அடித்தாய்
சாயலோடு கூட நல்ல நிறத்தை இழந்தேன் நான் -இனி உன் பிரகிருதி அறிந்து உன்னை வளர்ப்பாரை தேடு –
நான் முடிந்தேன் என்று கருத்து –

———————————————————————————–

தனக்கு சேஷமாய் இருக்கிற வஸ்து இங்கனே அவசன்னமாய் முடிந்து போகப் பெறலாமோ -என்று
எம்பெருமானுக்கு அறிவித்தால் அவன் உபேஷித்து அருளினான் ஆகில் அவசியம் என்னை முடிக்க வேணும்
என்று ஒரு வாடையை இரக்கிறாள் –

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்று இருத்தல் வினை யற்றது என் செய்வதோ –
ஊடாடு பனி வாடாய் உரைத்தீராய் எனதுடலே –1-4-9-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன் வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
இஜ் ஜகத்தில் ஒருவரால் தேட ஒண்ணாத செவ்விப் பூ எல்லாம் தேடி சர்வ சேஷியானவனுடைய
வாடாத மலரின் செவ்வியை யுடைத்தான திருவடிகளின் கீழே நித்யமும் அடிமை செய்ய இவ்வாத்மாவை உண்டாக்கிற்று

வீடாடி வீற்று இருத்தல் வினை யற்றது என் செய்வதோ –
விரஹ வியசனத்திலே மூர்த்தாபி ஷிக்தமான பொல்லாத இருப்பு என் செய்யக் கடவதோ
எம்பெருமானைப் பிரிந்து விரஹ வியசனத்திலே மூர்த்தா பிஷிக்தமாய் இருக்கைக்கு ஈடாக
பாஹ்ய ஹீனமான இவ்வாத்ம வஸ்து என் செய்யக் கடவது என்றுமாம்
உறவுமுறையாரோட்டை தொற்று அறுகைக்கும் உம்மைப் பிரிந்து இருக்கைக்கும் ஈடான இப்பொல்லாதான இருப்பு என் செய்வது –

ஊடாடு பனி வாடாய் உரைத்தீராய் எனதுடலே —
அங்கோடு இங்கோடு உலாவித் திரிகிற குளிர் காற்றே
எம்பெருமானுக்கு என்னை அறிவித்தால் -அவன் உபேஷித்தான் ஆகில் அவசியம் ஈர வேணும்
அவனோட்டை விரஹத்தாலும் நெஞ்சு இளையாது இருக்கிற என்னுடைய உடலே

———————————————————————————————————-

கீழில் பாட்டில் ப்ரஸ்துதமான சேஷத்வத்தை அனுசந்தித்துப் பற்றுகிற மானசத்தை -எம்பெருமானுக்கு நம்முடைய
கார்யத்தை விண்ணப்பம் செய்து நம் கருமம் அறுதி படுத்தனையும் செல்ல என்னை விடாதே கொள் -என்று பிரார்த்திக்கிறாள்

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே -1-4-10-

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
அசங்கக்யமான சரீரங்களினுடைய ஜென்மத்தையும்
சரீரஸ்தமான ஆத்மாவையும் -மற்றும் எல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக
ஆத்மாவை உண்டாக்குகையாவது -சரீரத்தோடு கூட்டுகை

கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
பெரிதான நீரை யுடைய ஏகார்ணத்வத்தை தோன்றுவித்து இப்பால் உள்ள ஸ்ருஷ்ட்யாதிகளுக்காக அதின் உள்ளே கண் வளர்ந்து அருளும் ஸ்வ பாவனாய்

அடலாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனான திருவாழியை யுடையனான எம்பெருமானைக் கண்டக்கால்
கீழ்ப் பாட்டில் சொன்ன வார்த்தை சொல்லி

விடலாழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே –
கழன்று வருகிற பேதை நெஞ்சே –
நம் கருமம் அறுதிபடும்தனையும் என்னை விடாதே கொள் –
அளவுடையாய் பவ்யமான நெஞ்சு என்றுமாம் –

——————————————————————————————–

நிகமத்தில்
இத்திருவாய் மொழி கற்றார் திரு நாட்டில் முக்த ப்ராப்யமான நிரதிசய சம்பத்தை பெறுவர்-என்கிறார்

அளவியன்ற வேழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் ஆய்ந்து உரைத்த
அளவியன்ற யந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-

அளவியன்ற வேழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
அபரிச்சேத்ய மஹிமனாய்-சர்வ லோக ஈச்வரனாய்-ஆஸ்ரித பவ்யனாய் இருந்துள்ள எம்பெருமானை
ஏழ் உலகத்தவர் பெருமான் என்று தம்மையும் அகப்பட ரஷிக்கையிலே உத்யுக்தன் ஆனான் என்று ப்ரீதராய்ச் சொல்லுகிறார்

வளவிதமான வயல் சூழ்ந்து நிரதிசய போக்யமான குருகூர்ச் சடகோபன் ச்நேஹித்து உரைத்த
அபரிச்சேத்யமாய் அந்தாதியான ஆயிரத்துள் இப்பத்தின் உடைய வளவிதான உரையாலே –

————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-3-

April 29, 2016

மூன்றாம் திருவாய்மொழியில்
சஷூர் விஷயத்தை யாதல் -அத்தோடு சத்ருசத்தை யாதல் யாயிற்று பஜிக்கலாவது –
அதீந்த்ரியனான சர்வேஸ்வரனை அதி ஷூத்ரரான எங்களுக்குப் பஜிக்கப் போமோ – என்னில்
சாஸ்த்ரங்களில் -சமஸ்த கல்யாண குணாத் மகன் –சர்வாதிகன் -பரம போக்யன் -பரம உதாரன் -என்று கேட்ட மாத்ரத்திலே
ருசி பிறந்தவர்களுக்கு கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி க்ருபாதி குணங்களை பிரேரிக்க
அஜகத் ஸ்வபாவனாய்க் கொண்டு சங்கல்ப்பத்தாலே அப்ராக்ருத திவ்ய தேஹத்தை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு
சாது பரித்ராண துஷ்க்ருத் விநாச அர்த்தமாக ராம கிருஷ்ணாதி ரூபத்தாலே அவதரித்து ஸூ லபனாம்
ஆகையாலே ஆஸ்ரயிக்கைக்கு ஒரு தட்டு இல்லை -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

———————————————————————————

முதல் பாட்டில்
சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக அவதாரங்களை அனுசந்தித்தவர் -தொடங்கின உபதேசத்தை மறந்து
கிருஷ்ண அவதாரத்தில் நவநீத சௌர்ய சாரித்ரத்திலே தாம் அகப்பட்டு அழுந்துகிறார் –

பத்துடை யடியவர்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

பத்துடை
பத்து -பக்தி -பத்து என்று பக்தியைக் காட்டுமோ -என்னில்
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி -என்னக் கடவது இ றே
பக்தி சப்தத்தால் இங்கு பர பக்த்யாதிகளைச் சொல்லுகிறது அன்று –
பக்த்யுபக்ரமான அத்வேஷ மாத்ரத்தைச் சொல்லுகிறது
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கும் என்கிற குண பிரகரணம் ஆகையாலே
உடை –
இம்மாத்ரத்தைக் கனக்க யுடைமையாகச் சொல்லுகிறது -விண்ணுளாரிலும் சீரியர் -என்று இங்கே பகவத் அனுபவம்
பண்ணுவாரை நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகாக நினைத்து இருக்கும் பகவத் அபிப்ராயத்தாலே –

யடியவர்கு
அடியவர் என்றதும் பகவத் அபிப்ராயத்தாலே
ஆநு கூல்ய லேசம் குவாலாய் இருக்கை –
த்வயி கிஞ்சித் சமா பன்னே என்று கிட்டிற்று ஒரு குரங்கை நித்ய ஆஸ்ரிதையான பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்து இருக்கையாலே

எளியவன்
பாபத்தைப் போக்குதல் -புண்யத்தைக் கொடுத்தல் -தத் பலமான ச்வர்க்காதிகளைக் கொடுத்தல் -தன்னைக் கொடுத்தல் செய்யுமவன் அல்லன் –
அவர்களுக்குத் தன்னைக் கையாளாக்கி வைக்கும்
பக்திக்ரீதோ ஜனார்த்தன -தூத்ய சாரத்யங்களைப் பண்ணுகையாலே ஆஸ்ரிதர்க்கி இஷ்ட விநியோக அர்ஹன் ஆனான் இ றே
இவ்வேளிமை உகவாதார்க்கும் பொதுவாகிறதோ என்னுமத்தைப் பரிஹரிக்கிறது

பிறர்களுக்கு அரிய
ராவணாதி களுக்கு இளைக்கப் போகாது இருக்கை –
ஹிமவான் மந்தரோ மேரு
வித்தகன்
விஸ்மய நீயன்
யசோதைக்கு பவ்யனாய் இருக்கிற இருப்பிலே யமலார்ஜுனருக்கு அனபிபவன்யனாய் இருக்கை –

இப்படி இருக்கிறவன் தான் யார் என்னில்
மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -என்கிற மேன்மையை யுடையளாய்-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற போக்யதையை யுடையளான பிராட்டி அகலகில்லேன் இறையும் என்று விரும்பும் தத்துவம்
பெறற்கு அரிய ஸ்வாமிகள்
ஸ்ரீ யபதி என்கை இ றே சர்வாதிகத்வத்துக்கு லஷணம்
நம் -என்று இந்த மேன்மையும் நீர்மையும் தமக்கு பிரகாசித்து இருக்கிற படி –

மத்துறு கடை வெண்ணெய் களவினில்-
இப்படி மேன்மையை உபபாதித்து -சௌலப்ய காஷ்டையை சொல்லப் புக்கு அதிலே தாம் ஈடுபடுகிறார் –
மத்தாலே யுற்றுக் கடையா நிற்கிற வெண்ணெய் களவு காண்கிற அளவிலே –
உற்றுக் கடைகை யாகிறது -ஆயாசித்துக் கடைகை
கடைகிற பராக்கிலே ஒதுங்கி சாபல அதிசயத்தாலே அள்ளி யமுது செய்யும் போலே காண் -என்று பிள்ளான்
அவாப்த சமஸ்த காமன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -அது நேர் கொடு நேர் கிடையாமையாலே -களவிலே இழிந்து
அது தலைக் கட்டப் பெறாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

உரவிடை யாப்புண்டு
உரஸ் ஸ்தலத்திலே கட்டுண்டு
மலர் மகள் விரும்பி அணைக்கும் மார்விலே கிடீர் கையிற்றை இட்டுக் கட்டிக் கட்டுண்டு இருந்தது –
தாமோதரன் -என்கிறபடி எங்கனே என்னில் -அப்ப்ரதேசத்தை எல்லாம் நினைக்கிறது ஆகலாம் இ றே –
அன்றிக்கே
உரத்த விடையான தான் கட்டுண்டு -பெரு மிடுக்கன் என்றபடி
உரலினோடு இணைந்து இருந்து –
உரல் மூச்சு விடிலும் தான் மூச்சு விடாதே அசிதவ்யாவ்ருத்தனாய் இருந்த படி –

ஏங்கிய எளிவே
இந்த சுத்தனைக் கள்ளன் என்று கட்டினால் பொறுக்க மாட்டாதே அழத் தொடங்குமே –
அவள் வாய் வாய் என்றால் ஏறிட்ட த்வனி இழிய விட மாட்டாதே பயப்பட்டு நிற்கும்
எளிவு -சௌலப்யம் –

எத்திறம்
இது என்னபடி
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதம் மீண்ட பரத்வத்தை எல்லை காணலாம்
இந்த சௌலப்யம் தரை காண ஒண்ணாது இருந்ததீ-என்கிறார்

—————————————————————————————–

இரண்டாம் பாட்டில்
இந்த சௌலப்யத்தை அனுசந்தித்து -ஆறு மாசம் மோஹாங்கதராய்
-சிரேண சம்ஜ்ஞாம் பிரதிலப்ய சைவ விசிந்தயா மாச விசால நேத்ரா -என்கிறபடியே
காலம் உணர்த்த ப்ரபுத்தரானவர் ப்ரஸ்துதமான சௌலப்யத்தை சப்ரகாரமாக உபதேசிக்கிறார் –

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

எளிவரும் இயல்வினன்-
பத்துடை அடியவர்க்கு -என்று -சோபாதிகம் அன்று இவன் எளிமை -ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தம் எளிமையை இயல்வாக யுடையவன்
நிலை வரம்பில –
நிலை இல்லாமை யாவது -ஜன்மத்தில் உத்கர்ஷ -அபகர்ஷம் இல்லாமை
வரம்பு இல்லாமையாவது -சேஷ்டிதங்களில் நியதி இல்லாமை
இவை இரண்டும் நிலை இல்லாமையாலே யாக்கி -வரம்பு இல்லாமைக்கு பொருள் அவதரித்த இடத்தில் பரத்வத்தை ஆவிஷ்கரிக்கிலும் ஆவிஷ்கரிக்கும் –
அதாகிறது -கண்டா கர்ண மோஷாதிகள் -ஒன்றிலும் ஒரு நியதி இல்லை –
ரஷணத்துக்கு உறுப்பானவை ஏதேனுமாக அமையும்

பல பிறப்பாய் –
வேதம் சொல்லிலும் -பஹூதா விஜாயதே -என்னும் அத்தனை –
தான் சொல்லிலும் -பஹூநிமே -என்னும் அத்தனை –
உட்புக்க தம் போல்வார் சொல்லிலும் -என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்னும் அத்தனை –
பிறப்பாய் –
பரார்த்தமாக தாழ நின்றோம் என்று தம் பக்கலிலும் புரை இன்றிக்கே இருக்கை –என்னக் கடவது இ றே

ஒளி வரு முழு நலம் –
பிறக்கப் பிறக்கக் கல்யாண குணங்கள் கட்டடங்க உஜ்ஜ்வலமாகா நிற்கும்
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
முதலில கேடில –
இக்குணங்களுக்கு உத்பத்தி விநாசங்கள் இல்லாமையாலே நித்யங்களாய் உள்ளன
வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன்-
மோஷம் ஆகிற தெளிவைத் தரும் ஸ்வ பாவத்தை விடாதே கூட வந்து அவதரிக்கும் –
இதுவும் கல்யாண குணங்களிலே ஒன்றாய் இருக்கப் பிரித்துச் சொல்லுகிறது -அவதாரத்துக்கு மோஷ பிரதானத்திலே நோக்கு ஆகையாலே

வீடாம் தெளிதரும்
அவனே இங்கே வந்து அவதரிக்கிலும் சோக மோஹங்களை பண்ணும் –
சம்சாரி அங்கே செல்லிலும் தெளிவைப் பண்ணும் தேசம் –
பரமம் சாம்யம் உபைதி –
முழுவதும்
ஒளி வரும் முழு நிலம் வீடாம் தெளி தரு நிலைமை யது முழுவதும் ஒழிவிலன் –
இறையோன்
அஜோபிசன் நவ்யயாத்மா பூதானாம் ஈச்வரோபிசன் -என்கிறபடியே -நியாம்யர் நடுவே நியாமகத்வம் குலையாமல் வந்து பிறக்கும் –
அளிவரும் அருளினோடு
பக்வமான அருளோடு -அதாகிறது -ஆஸ்ரித ரஷணம் தன் பேறாய் இருக்கை –

அகத்தனன் புறத்தனன் –
அகத்தனனாய் இருக்கும் ஆஸ்ரிதற்கு
புறத்தனாய் இருக்கும் அநாஸ்ரிதற்கு
அதாகிறது -அர்ஜுனாதிகளுக்கு கையாளாய் இருக்கையும்
துர்யோதனாதிகளுக்கு ஆளிட்டு விடுகையும்
அமைந்தே —
இங்கனே இருக்கை –

இறையோன் -முதலில கேடில-ஒளி வரு முழு நலம் – வீடாம் தெளிதரு நிலைமையது
முழுவதும்- ஒழிவிலனாய் -அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனனாய்க் கொண்டு
சமைந்து –நிலை வரம்பில-பல பிறப்பாய் -எளிவரும் இயல்வினன் -என்று அந்வயம் –

———————————————————————————————-

இவ்வவதார ரகஸ்யம் -அதிசயித ஜ்ஞானராய் இருப்பார்க்கும் அறிய ஒண்ணாது என்கிறது

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற உயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநிலமதுவாம்
அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே –1-3-3-

அமைவுடை யறநெறி-
பலத்தோடு நியதமாய் இருந்துள்ள தர்ம மார்க்கம்
முழுவதும் உயர்வற உயர்ந்து
எல்லாவற்றாலும் இவை அனுஷ்டித்தாரில் அவ்வருகு இல்லை என்னும் படி எல்லையிலே நிற்கை –
அமைவுடை முதல் கெடல்-
இதன் பலமான ஸ்ருஷட்யாதிகள் மிகவும் விதேயமாய் இருக்கை-
அமைவுடை முதல்-ப்ரஹ்மா ஜகத் சிருஷ்டி பண்ணினால் -சர்வேஸ்வரனோ-என்று சங்கிக்க வேண்டும் படி இருக்கை
கெடல் -சம்ஹாரம்
ஓடிவிடை –
அவாந்தர சம்ஹாரம்
யறநிலமதுவாம் அமைவுடை-
மிகவும் கை வந்து இருக்கும் சமைவையுடைய
யமரரும்
ப்ரஹ்மாதிகளும்
யாவையும்
அசேதனங்களும்
யாவரும்
சேதனரும்
தானாம் அமைவுடை நாரணன்
தான் என்கிற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அன்வயிக்கையாலே நாரணன் -என்னும் திரு நாமத்தை யுடையவன்
மாயையை அறிபவர் யாரே –
சகல சேதன அசேதனங்களையும் தனக்கு பிரகாரமாக யுடைய தான் தன்னுடைய விபூதியிலே ஒரு பிரகாரத்துக்கு
தான் பிரகாரமாய் -அவர்களுக்கு நியாம்யனாய் இருக்க ஆச்சர்யம் ஒருவர்க்கும் நிலமோ
பிதா புத்ரேண பித்ருமான் யோநியோ நௌ நாவேத வின்மநுதே தம் ப்ருஹந்தம் -இத்யாதி
நித்ய ஸூ ரிகள் அனுபவத்திலே அந்ய பரர் ஆகையாலே அறிய மாட்டார்கள்
ப்ரஹ்மாதிகள் துர்மா நத்தாலே அறிய மாட்டார்கள்
சம்சாரிகள் விஷய பிரவணராய் அறியார்கள்
இவர் போல்வார் -எத்திறம் -என்று மோஹித்து கிடப்பார்கள்-

————————————————————————————————————

இப்படி இருக்கிற அவதார சௌலப்யம் ஒருவருக்கும் நிலம் அன்றோ என்னில் -ஆஸ்ரிதர்க்கு அத்யந்த ஸூ லபமாய்
அநாஸ்ரிதர்க்கு அத்யந்த துர்லபமாய் இருக்கும் என்கிறார்-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய வெம்பெருமான்
பேரும் ஒரு உருவமும் உளதில்லை யிலதில்லை பிணக்கே–1-3-4-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய-
அநாஸ்ரிதர் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளே யாகிலும் ஒரு ஸ்தூல ஆகாரமும் அறிய அரியனாய் இருக்கும் –
தன்னை உட்புக்கு அறிய மாற்றிற்று இலர்களே யாகிலும் ஆபாதப்ரதீதி யாகவும் அறியப் போகாத படியாய் இருக்கும் –
நேரே கடிக்கமலத்து உள்ளிருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை யான் -என்னக் கடவது இ றே
எம்பெருமான்
உகவாதார் கண் படாதபடி இருக்கிற இடம் தன் பேறாக உகக்கிறார்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய
அறிவில் குறைந்த இடைச்சிகள் -குரங்குகள் -ஆகிலும் ஆஸ்ரிதர்க்கு இப்படிப் பட்டான் என்று பரிச்சேதிக்கலாம் படி இருக்கும்
எம்பெருமான்
ஆஸ்ரிதர்க்கு கை புகுந்து இருக்கிற இடமும் தம் பேறாக உகக்கிறார்
நமோ நமோ வாங்மனசாதி பூமயே -இத்யாதி
பேரும் ஓர் ஆயிரம்
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான அநேகம் திரு நாமங்களை யுடையவன்
பிற பல வுடைய –
இத் திரு நாமங்களைச் சொல்லி கூப்பிட்டாருக்குக் காட்டும் வடிவைச் சொல்லுகிறது
பிற -என்ன வடிவைக் காட்டுமோ என்னில் -நாமத்தைச் சொன்ன அநந்தரம்-பிற-என்றால் ரூபத்தைக் காட்டும் இ றே
நாம ரூபே வ்யாகரவாணி
வெம்பெருமான்
பேரும் ஒரு உருவமும் உளதில்லை
இவற்றில் ஒரு பேரும் ஒரு உருவமும் அநாஸ்ரிதர்க்கு பிரகாசியாமையாலே இல்லை என்று இருப்பார்கள்
யிலதில்லை
ஆஸ்ரிதற்கு இவை எல்லாம் பிரகாசித்து இருக்கையாலே உண்டு என்று இருப்பார்கள்
பிணக்கே
இப்படி நித்ய விப்ரதிபன்னமாய்ச் செல்லா நிற்கும் –

———————————————————————————————————

இப்படி ஆஸ்ரயணீயன் ஸூலபனான பின்பு ஆஸ்ரயிக்கும் வழி என் -என்ன அவன்
ஸ்ரீ கீதையில் அருளிச் செய்து வைத்த பக்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயிங்கோள் என்கிறார்

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறி யுள்ளி யுரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் யாதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு
உணக்கு மின்பசை யற அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

பிணக்கற வறுவகைச் சமயமும்
ஆறு வகைப்பட்ட பாஹ்ய சமயத்துக்கு வைதிக சமயத்தோடு உண்டான பிணக்கு அற
நெறி யுள்ளி யுரைத்த
வேத மார்க்கத்தை ஆராய்ந்து அருளிச் செய்த படி
வாக்விவ்ருதாச்சா வேதா -என்று தான் சொன்னது அடங்க வழியாய் இருக்க பிரஜைகள் பக்கல் பரிவாலே
ஒர்ரர்த்தம் போதியாதவன் நிரூபிக்குமா போலே ஆராய்ந்து அருளிச் செய்த படி –

கணக்கறு நலத்தனன்
எல்லையிறந்த ஔதார்ய குணங்களை யுடையவன்
அந்தமில் யாதியம் பகவன்
தனக்கு முடிவு இன்றிக்கே -எல்லார்க்கும் காரண பூதனாய் இருக்கும்
ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி குண பூர்ணனாய் இருக்கை
இத்தால் -உதாரனாய் -பிராப்தனாய் -ஆப்தனாய் இருந்தவன் வார்த்தை யாகையாலே விச்வாச நீயம் என்கை –

வணக்குடைத் தவ நெறி வழி நின்று –
வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே -வணக்குடை -என்கிறது
தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –
பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே -யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்
இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்
புற நெறிகளை கட்டு
இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து
இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இ றே –

உணக்கு மின்பசை யற
பறித்தாலும் கிடந்திடத்தே கிடக்குமாகில் பருவம் செய்யும் இ றே
அதுக்காக சவாசனமாக விடுங்கோள் -இது செய்வது என் கொண்டு என்னில்
அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே
தத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் –
அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -வி லஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்-
அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம்
தானி சர்வாணி சம்யம்ய -மாம் ஏவ ப்ரபத்யந்தே -சரம ஸ்லோகத்தின் படியே –

—————————————————————————————–

மத்யே விரிஞ்சகிரிசம் பிரதம அவதார –என்று பிரதம அவதாரம் ப்ரஹ்ம ருத்ராதி சஜாதீயமாய் இருக்கையாலே
பிரித்து பிரதிபத்தி பண்ண அரிதாகையாலே
பழைய துர்லபத்வமே சம்பவத்திருந்ததீ -என்ன த்ரிமூர்த்தி சாம்யத்தைப் பரிஹரிக்கிறார்

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த வின்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை யுணர்வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

உணர்ந்து உணர்ந்து
உணர்வு என்னாதே-உணர்ந்து -என்கையாலே -ஜ்ஞப்தி மாத்ரம் வஸ்து -என்கிறவனை நிரசிக்கிறது
வீப்சையாலே ஆகந்துக சைதன்யவாதியை நிரசிக்கிறது
ஜ்ஞாத்ருத்வம் நித்ய தர்மம் ஆகையாலே -ஜ்ஞானக்ரியா கர்த்ருத்வம் ஜ்ஞாத்ருத்வம் –அது தான் அநித்தியம் -என்கிற க்ரியாவாதியையும் நிரசிக்கிறது

இழிந்து அகன்று உயர்ந்து-
தான் அணு பரிமாணனாய் இருக்க -ஸ்வ ஜ்ஞானத்தாலே பத்துத் திக்கையும் வியாபித்து இருக்கும்
வாலாக்ர சதபா கஸ்ய -இத்யாதி –

உருவியந்த
ஆகையாலே ஜடமான அசித்தில் காட்டில் வியந்து -வேறுபட்டு இருக்கும்
உருவு -என்று பத பேதமான போது -இயத்தல் -கடத்தலாய்-கடந்து இருக்கும் என்னவுமாம்
வேறுபாடு தான் பிரகாரித்வ பிரமாத்ருத்வ நியந்த்ருத்வங்களாலே
வின்நிலைமை
சந்நிஹிதனான ஆத்மாவினுடைய ஸ்த்திதி
உணர்ந்து உணர்ந்து உணரிலும்
ஸ்ரவண மன நாதிகளாலே சாஷாத் கரித்தாலும்
இறை நிலை யுணர்வரிது
ஈஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்களோடு ஒக்க தன்னை சங்கோ சித்து நிற்கையாலே ஈஸ்வரன் இன்னான் என்று அறிகை அரிது
உயிர்காள்
சேதனராய் யுள்ளீர்காள் -ஜட வஸ்துவாய் அறியாது ஒழியப் பெற்றது இல்லை –
உங்கள் நிலை இருந்த படி என் –நீர் அறிவிக்க அறியப் பார்த்த எங்களுக்கு அவ்வருமை உண்டோ என்ன -ஆகில் கேளுங்கோள் என்கிறார்
உணர்ந்து உணர்ந்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து
இவர்களுடைய குண ரூப விபூதி நாமாதிகளையும் தத் பிரதிபாதகமான பிரமாணங்களையும் மிகவும் ஆராய்ந்து
மனப் பட்டதொன்றை -உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்
உங்களுக்கு ஏற ஈச்வரதயா நிர்ணீதமான வஸ்துவை மன நாதிகளாலே அனுசந்தித்தும்
தத் வாசகமான நாமங்களை உச்சரித்தும் ஆஸ்ரயிங்கோள் –
வ்யாஹரன் மாம் அனுச்மரன் –

—————————————————————————————

இப்படி அருளிச் செய்த இடத்திலும் அவர்கள் ஆறி இருந்தவாறே திரியட்டும் மந்த ஆயுஸ் ஸூ க்களான
நீங்கள் வஸ்து இன்னது என்று நிர்ணயித்து ஆச்ரயிக்கப் பாருங்கோள் என்கிறார்

ஓன்று எனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே –1-3-7-

ஓன்று எனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
மூர்த்தி த்ரயமும் ஏகாத்ம அதிஷ்டதமோ–அநேக ஆத்ம அதிஷ்டிதாமோ
அநேக ஆத்ம அதிஷ்டிதமானால் அவர்களில் பிரதானன் எவன் என்று அறிய ஒண்ணாத ஸ்வ பாவத்தை யுடையராய் நின்ற
நன்று எழில் நாரணன்
அநந்ய பரமான நாராயண அனுவாதிகளை நினைக்கிறார்
எழில் என்று -அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்கிற புகாரை நினைக்கிறது
நான்முகன் அரன் என்னும் இவரை
சிருஷ்டிக்கு உறுப்பான பல முகங்களை யுடைய சதுர்முகன் -அழிக்கும் தொழிலே கற்று இருக்கும் ருத்ரன்
இவர்களோடு மற்று உள்ள சேதன அசேதனங்களோடு வாசி அற சர்வமும் சரீரம் என்னும் இடத்துக்கு வாசகமான திரு நாமத்தை யுடையான் ஒருவான்

என்னும் இவரை
இப்படி விசத்ருச ஸ்வ பாவராய் உள்ளவர்களை
ஒன்ற நும் மனத்து வைத்து
இவனே நிர்வாஹகனாக வேணும் என்று பஷ பதியாதே பிரமாண கதிகளை ஆராய்ந்தால் கோல் விழுந்தவன் பரன் ஆகிறான் -என்று
மூவரையும் ஒக்க உங்கள் நெஞ்சிலே வைத்து
உள்ளி
சுருதி நியாயங்களாலே ஆராய்ந்து
நும் இரு பசை அறுத்து
நீங்கள் ஈச்வரதயா சங்கி த்த ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் நசை அறுத்து
நும் இரு பசை
புருஷகதமான ரஜஸ் தமஸ் ஸூ க்களால் வந்த சங்கை ஒழிய பிரமாண கதிகளால் அவர்கள் பக்கல் ஈச்வரத்வ சங்கையும் இல்லை என்கை
நன்று என நலம் செய்வது அவனிடை
அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜன பக்தியைப் பண்ணப் பாருங்கோள்
நம்முடை நாளே
க்ரமத்திலே செய்கிறோம் என்று இராதே
சரீரத்தின் உடைய நிலை இல்லாமையைப் புத்தி பண்ணி சடக்கென ஆஸ்ரயியுங்கோள்
நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யச்மிதே ரவௌ-ஆத்ம நோ நாவ புத்யந்தே மனுஷ்யா ஜீவித ஷயம்-

—————————————————————————————-

நன்று என நலம் செய்வது என்னும் காட்டில் ஆஸ்ரயிக்கலாய் இருக்குமோ
அநாதி காலம் ஆர்ஜிதமான கர்மம் ஆஸ்ரயணத்தை விலக்காதோ என்னில்
பஜன உபக்கிரம வேளையில் அவை அடங்க நசிக்கும் -நசிப்பாரும் உண்டு என்கிறது

நாளும் நின்றடு நம் பழமை அங்கொடு வினையுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனகமல மறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–1-3-8-

நாளும் நின்றடும்
நாள் தோறும் இடைவிடாதே நின்று ஹிம்சிக்கை -ஆத்மா நித்யன் -காலம் அநாதி -என்றும் ஒக்க நலிந்து போருகிற இதுவே
நம்
நாம் புத்தி பூர்வகமாக பண்ணிப் போந்த
பழமை
அநாதியாய் இருக்கை
அங்கொடு வினை
மிகவும் க்ரூரமாய் இருக்கை
உடனே மாளும்
ஆச்ரயிக்கத் தொடங்கினவாறே-நசிக்கும் –
ததைவ முஷ்ணாத்ய சுபான்ய சேஷ தா –
ஓர் குறைவில்லை
மேலும் ஓர் விரோதங்கள் வாராது என்னுதல்
சர்வ அபிமதங்களும் பூர்ணமாம் என்னுதல்
சுபானி புஷ்ணாதி
மனனகமல மறக் கழுவி
ஆச்ரயிணன் இவனோ -மற்றை யவனோ மனசில் உண்டான சம்சயத்தை சவாசனாமாகப் போக்கி
அஞ்ஜச்சாச்த்ரத்தா நச்ச சம்சயாத்மா வி நச்யதி

நாளும்
நாள் தோறும் வேணும் என்று ஒரு விதி அன்று –
அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னுமா போலே இதுக்கு நிஷித்தமாய் இருப்பதொரு காலம் இல்லை என்கை
நம் திருவுடையடிகள்
ஸ்ரீ மானான ச்வாமியானவனுடைய
நம் -என்று அஜாயமானோ பஹூ தா விஜாயதே -என்று அவதாரத்தை பிரஸ்தாபித்து –
ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்று பிரமாண பிரசித்தமான ஸ்ரீ யபதியை தமக்கு பிரகாசிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –
தம் நலம் கழல் வணங்கி
வாச பரம் ப்ரார்த்தயிதா ப்ரபத்யே நியத ச்ரியம் -என்று அவள் முன்னாக பற்றுவாருடைய குணாகுணம் நிரூபணம் பண்ணாத திருவடிகள்
வணங்கி -என்கிற இது வினை எச்சம் பெற்று வணங்க என்று அர்த்தமாகக் கிடக்கிறது
வணங்க நாளும் நின்றடும் -என்று அந்வயம்
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே-
காலமும் கரணபாடவமும் இன்றிக்கே சரம தசா பன்னரானவர்கள் இழந்தே போம் இத்தனையோ-என்னில்
அத்தசையிலே யாகிலும் ப்ரணமாதிகளில் ஒன்றிலே உபக்ரமித்து அவ்வளவிலே தான் முடியில் அதுவே பிரபலம்- அதுவே ஸ்ரேஷ்டம்
ஸ்தித்வாஸ் ச்யாமந்தகாலே அபி ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி -என்று ஆத்மா சாஷாத்காரத்துக்கு அகப்பட
இப்படி சொல்லா நின்றால் பகவத் விஷயத்துக்குச் சொல்ல வேணுமோ

——————————————————————————————

கீழ் ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய அபரத்வமும் சர்வேஸ்வரனுடைய பரத்வமும் சொன்னார் –
இப்பாட்டில் இவனைப் பற்றி அவர்கள் லப்த ஸ்வரூபராய் இருக்கிறபடியைச் சொல்லுகிறார் –

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெருத்துந்தித்
தலத்து எழுதிசை முகன் படைத்த நல்லுலகும் தானும்
புலப்பட பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே –1-3-9-

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் –
திரிபுரஹநாதி சமர்த்தனான ருத்ரன் எம்பெருமானுடைய தஷிண பார்ஸ்வத்தை ஆஸ்ரயித்து இருக்கும் –
பச்யை காதச மே ருத்ரான் தஷிணம் பார்ச்வம் ஆஸ்ரிதான்-என்றும்
தபஸா தோஷி தஸ்தேன விஷ்ணுநா ப்ரப விஷ்ணு நா -ஸ்வ பார்ச்வே தஷிணே சம்போர் நிவாஸ பரிகல்பித –

இடம் பெருத்துந்தித் தலத்து எழுதிசை முகன் படைத்த நல்லுலகும் தானும் புலப்பட
எழுச்சியை யுடைய திசைமுகன் படைத்த லோகமும் தானும் அசங்கு சிதமாக இருக்கிறது திரு நாபி கமலத்திலே
இவை இவர்களுடைய சர்வ பிரகார ரஷைக்கும் உப லஷணம்
எழுச்சியாவது -சதுர்தச புவனத்துக்கும் நிர்வாஹகனான வளவுடைமை –
ஈஸ்வரன் உகந்து வந்து திருவவதரிக்கைக்கு யோக்யமாய் இருக்கையாலே நல்லுலகம் என்கிறது
ஆபத்துக்களிலே திரு மேனியிலே இடம் கொடுக்குமத்தை மஹா குணம் ஆகையாலே எப்போதும் ஒக்க ஆழ்வார்கள் அருளிச் செய்து
போரா நிற்பார்கள் -இ றே-
சாமந்தர்க்கு புறம்பே நாடுகள் கனக்க உண்டானாலும் மாளிகைக்கு உள்ளே செம்பாலே நாழி அரிசியைத் தங்களுக்கு
வரிசைக்கு உடலாக ஆதரித்துப் போரா நிற்பார்கள் இ றே
அப்படியே இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள் –

பின்னும்
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு தன் திருமேனியிலே இடம் கொடுப்பதற்கு மேலே
தன்னுலகத்தில் அகத்தனன்
தான் உண்டான லோகங்களிலே வந்து திருவவதரிக்கும் –

தானே
ஒரு கர்மத்தால் அன்று -தன் இச்சையாலே –
நா காரணாத் காரணாத்வா-இத்யாதி –
இப்படி அவதரிக்கிறது எதுக்காக என்னில்-

புலப்பட
காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருப்பார்க்குக் காட்சி கொடுக்கைக்கு ஈடாக
புலம் என்று -இந்த்ரியம்
படுகை– விஷயமாகை-கண்ணுக்கு இலக்காகை-

சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள –
இவனுடைய குணங்களைப் பேசப் புக்கால் உள்ளே உள்ளேயாய்த் தோண்டத் தொலையாதே –
பாசுரம் இட்டுப் பேசி முடிக்க ஒண்ணாது என்கை
பிரளய ஆபத்துக்களில் திரு வயிற்றிலே வைத்து நோக்கும் என்னவுமாம் –

இவையவன் துயக்கே
துயக்கு என்று மனம் திரிவு
இப்படிகளை எல்லாரும் அறியாது ஒழிவான் என் -என்னில் தன் பக்கல் விமுகரானவர்களுக்கு சம்சய விபரயங்களை
அவன் தானே பண்ணி வைக்கையாலே
மம மாயா என்று பிரகிருதியை இட்டு மறைத்து அறிவு கெடுக்கும்
தன் மேன்மை தோற்ற நிற்கில் எட்டான் என்று கை வாங்கிப் போவார்கள் –
தாழ நிற்கில் நம்மிலே ஒருவன் என்று காற்கடைக் கொள்வர்கள் –

——————————————————————————————-

அவன் விமுகர்க்கு பண்ணுமவை கிடக்க கிடீர் -அவன் காட்டின வழியே காணப் புக்க நாம்
மநோ வாக் காயங்களாலே அவனை அனுபவிப்போம் என்று பாரிக்கிறார்

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியனவல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே –1-3-10-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும் மயக்குடை மாயைகள் வானிலும் பெரியனவல்லன்
துயக்கறு மதியுண்டு -சம்சய விபர்யய ரஹிதமான அந்தக்கரணம்
அத்தை யுடையார் ஆகையாலே யதா ஜ்ஞானத்தை யுடைய தேவர்களை மதி கெடுக்கும் படி தெரியாத குண சேஷ்டிதங்களை யுடைய
ஆச்சர்யமான அவதாரங்களுக்கு எல்லை இன்றிக்கே இருக்கை
முற்பட -தங்கள் விரோதிகளைப் போக்குகைக்காக வந்து அவதரிக்க வேணும் என்று சரணம் புகுவார்கள்
அவன் வந்து அவதரித்தவாறே -நம்மிலும் தாழ்ந்தான் ஒருவன் -என்று காற்கடைக் கொள்ளுவார்கள்
பாரிஜாத ஹரணத்திலே இந்த்ரன் வஜ்ராத்தைக் கொண்டு தொடர்ந்தான் இ றே
அமரர்கள் என்று நித்ய சூரிகள் ஆகவுமாம்
பெரிய திருவடியுடைய இதிகாசம் -அவன் மயக்குகிறவை கிடக்கிடீர்
அவன் காட்டக் கண்ட நாம் அனுபவிப்போம் என்று அதிலே பாரிக்கிறார்

புயல் கரு நிறத்தனன்-
வர்ஷூக கலாவஹம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவன்

பெரு நிலம் கடந்த
பூமிப் பரப்பு அடங்கலும் அநாயாசேன அளந்த

நல்லடிப் போது
குணாகுண நிரூபணம் பண்ணாத பரம போக்யமான திருவடிகள்

அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே
மோஹித்துக் கிடக்க கடவேன் அல்லேன்
பிரகர்ஷத்தாலே அக்ரமாக கூப்பிடக் கடவேன்
கண்டவாறே கட்டிக் கொள்ளக் கடவேன்
நிர்மமனாய் விளக் கடவேன்
பிரயோஜன நிரபேஷமாக செய்யக் கடவேன்
இப்படிச் செய்யப் பெற்றேன் என்றும் சொல்லுவர்

————————————————————————————————-

நிகமத்தில்
இப்பத்தை அப்யசித்தவர்கள் நித்ய ஸூரிகள் வரிசையைப் பெற்று பின்பு சம்சார நிகலத்தை அறப் பெறுவார் என்கிறார்-

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

அமரர்கள் தொழுது எழ –
கடைகிற போது அழகைக் கொண்டு -பிரயோஜனாந்தர பரரான தேவர்களும் -அநந்ய பிரயோஜனரைப் போலே அழகுக்குத் தோற்கும் படி யாயிற்று கடைந்தது
தத் ப்ராஞ்ஜ லயஸ் சர்வே பகவந்தம் ஸூ ரேச்வரா -துஷ்டுவு புண்டரீகாஷம் சரண்யம் சரணார்த்திந–
தொழுது ஏழு -என்கிற தம் பாசுரம் ஆயிற்று என்கிறார் –

அலை கடல் கடைந்தவன் தன்னை
ஒரு கடல் நின்று ஒரு கடலைக் கடையுமா போலே அதி ஷூபிதமாகக் கடலைக் கடைந்த படி –

அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
சேர்ந்த பொழில் அழகை யுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாருடைய அந்தரங்க வ்ருத்தி யாயிற்று இவை தான்
வாசிகமான அடிமை இ றே
பூர்ண விஷயத்தில் இதுக்கு மேல் செய்யலாவது இல்லையே –
தத் விப்ராசோ விபன்யவ –
நித்ய ஸூ ரிகளுக்கும் இதுவே இ றே வ்ருத்தி –

அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும்
இவ்வாசிகமான அடிமை -முறை என்று -கார்யாபுத்த்யா செய்ய வேண்டாதபடி -ரச கனமாயிற்று இவ்வாயிரமும் –

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–
சிறையில் இருந்த ராஜகுமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்னை சிறையை வெட்டி விடுவாரைப் போலே
நித்ய ஸூ ரிகள் வரிசையைக் கொடுத்து பின்னை சம்சார அஞ்சிறையை கழிக்கும் ஈஸ்வரன்
ஆதி வாஹிகரோடு விரஜையில் சென்று ஸூ ஷ்ம சரீர விதூ நனம் பெறுவார்-

————————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -1-3-

April 29, 2016

மூன்றாம் திருவாய் மொழியில்
லோகத்திலே கண்ணாலே கண்டு கையாலே யாயிற்று பஜிக்கலாவது –
இரண்டு படியும் அன்றிக்கே அதீந்த்ரியனான சர்வேஸ்வரனை அதி ஷூத்ரனான நாங்கள் பஜிக்கும் படி எங்கனே என்னில்
எம்பெருமான் நிரதிசய போக்யன் என்று கேட்ட மாத்ரத்திலே அவனைக் காண வேணும் என்று அபிநிவேசம் பிறந்தால் அவர்களுக்கு காணலாம் படி
தன்னுடைய சௌசீல்யாதி குண பலாத்க்ருதனாய்க் கொண்டும்
அப்ராக்ருத திவ்ய தேஹத்தோடும்-ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாகவும் -தத் விரோதி நிரசன அர்த்தமாகவும்
தன்னுடைய சங்கல்ப்பத்தாலே நிஹீனமான மனுஷ்யாதிகளோடு சஜாதீயனாய் ராம கிருஷ்ணாதி ரூபேண யுகம் தோறும் திரு வவதாரம் பண்ணி யருளா நிற்கும் –
பரத்வ தசைகளில் காட்டில் திரு வவதாரங்களிலே தன்னுடைய கல்யாண குணங்கள் நிறம் பெறும்-
இவ்வவதார ரகச்யத்தின் உடைய சீர்மை ஒருவர்க்கும் அறிய அரிது
சில தார்மிகர் ஏரியைக் கல்லினால் சிலருக்கு ஜீவன ஹேதுவாய் சிலருக்கு அநர்த்த ஹேதுவாமா போலே
இத்திரு வவதாரங்கள் அனுகூலர்க்கு உஜ்ஜீவன ஹேதுவாய் பிரதி கூலர்க்கு எதிரிட்டு அழிகைக்கு ஹேதுவாம் என்று தொடங்கி
ஸ்ரீ கீதையில் சதுர்த் தாத்யத்தில் அருளிச் செய்த படி சௌலப்யத்தைப் பேசி -இப்படி ஸூ லபன் ஆகையாலே ஆஸ்ரயணம் கூடும் -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

—————————————————————————

முதல் பாட்டில்
எம்பெருமானுடைய சௌலப்யத்துக்கு உதாஹரணத்தைப் பேசுகைக்காக-திரு வவதாரங்களை முன்னோட்டுக் கொண்டு
ஆழ்வார் பரோப தேசாத்ருதராய் கிருஷ்ணனுடைய நவநீத சௌர்ய சாரித்ரத்திலே அகப்பட்டு அழுந்துகிறார் –

பத்துடை யடியவர்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

பத்துடை யடியவர்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
பத்து -என்கிறது -பக்தியை
வித்தகன் –
ஆஸ்ரித பவ்யனாய் இருக்கிற இருப்பிலே சத்ருக்களுக்கு கணிசிக்க முடியாதே இருக்கும் விஸ்மய நீயன்

மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
பெரிய பிராட்டி யாராலும் ஆசைப் படப் படுவானே விலஷணமான -பிரசித்தனான -பெறுதற்கு அரிய ஸ்வாமி

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு -எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –
யசோதைப் பிராட்டி ஆயாசித்துக் கடையா நிற்க சாபல அதிசயத்தாலே அந்த வெண்ணெய் களவு காண்கிற தசையிலே
உரஸ் தலத்திலே -உரலோடு கட்டுண்டு -உரலோடு தன்னோடு வாசி இல்லாதபடி இருந்து ஏங்கின சௌலப்யம்
எத்திறம் -என்றது இது என்னபடி என்று தாம் ஈடுபடுகிறார்
உரத்தை யுடைய விடை என்னவுமாம் -பேறு மிடுக்கு என்றவாறு –

———————————————————————————————

இரண்டாம் பாட்டில்
எம்பெருமானுடைய சௌலப்யத்தை அனுசந்தித்து விவசரான ஆழ்வார் பிரக்ருதிஸ்த்தராய்
ப்ரஸ்துதமான சௌலப்யத்தை சப்ரகாரமாக உபதேசிக்கிறார் –

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

எளிவரும் இயல்வினன்
எல்லாருக்கும் ஒக்க எளியனாம் ஸ்வ பாவன்
நிலை வரம்பில பல பிறப்பாய்
உத்க்ருஷ்ட யோநி-அபக்ருஷ்ட யோநி என்று இன்றிக்கே -உத்க்ருஷ்ட சேஷ்டிதம்-அபக்ருஷ்ட சேஷ்டிதம் -என்று இன்றிக்கே இருந்துள்ள
பல ஜன்மங்களையும் யுடையனாய்
இவை இரண்டு பொருளையும் நிலை இல்லாமை யாக்கி வரம்பு இல்லாமைக்கு பொருளாக
திரு வவதாரங்களிலே பரத்வத்தை ஆவிஷ் கரிக்க வேண்டிலும் ஆவிஷ் கரிக்கும் என்றுமாம் –

ஒளி வரு முழு நலம் –
திரு வவதாரந்களிலே நிறம் பெறும்படியான பூர்ணமான கல்யாண குணங்கள்
முதலில கேடில
அக்குணங்கள் தான் இன்ன நாள் தொடங்கி உண்டாயிற்று என்றாதல் -இன்ன நாள் முடியும் என்றாதல் சொல்ல ஒண்ணாதே நித்தியமாய் உள்ளன
வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
மோஷம் ஆகிற தெளிவைத் தரும் ஸ்வ பாவம் தொடக்கமான எல்லா வற்றோடும் கூட
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன்
ஆஸ்ரித பரித்ராணம் தன் பேறாகக் கொண்டு அவர்கள் இட்ட வழக்காய்-அநாஸ்ரிதர்க்கு எட்டாதே இருக்கும்
அமைந்தே —
இங்கனே சமைந்து –

———————————————————————————————————–

சர்வேஸ்வரனான நாராயண னுடைய ஸ்லாக்யமான ஜன்ம ரகஸ்யம் அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அன்று என்கிறார்

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற உயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநிலமதுவாம்
அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே –1-3-3-

இன்னபடி அனுஷ்டிக்க இன்ன பலத்தைத் தரும் என்னும் வியவஸ்தை வுடைய தர்ம மார்க்கம் எல்லா வற்றாலும்
எல்லார்க்கும் மேல் படுவதும் செய்து
இன்னபடியாக வென்றால் அப்படியுண்டாம் சமைவை யுடைத்தான சிருஷ்டி சம்ஹாரம் அவாந்தர சம்ஹாரம் ஆகிற இவை
மிகவும் கை வந்து இருக்கும் சமைவை யுடைய ப்ரஹ்மாதிகளும் மற்றும் உண்டான அசேதனங்கள் எல்லாமும் சேதனர் எல்லாரும்
இவை எல்லாம் தனக்கு சேஷமாகையாலே இவை தான் என்னலாம் படியான சமைவை யுடைய நாராயணனுடைய –

—————————————————————————

இப்படி இருக்கிற திவ்ய அவதாரங்கள் ஒருவருக்கும் நிலம் அன்றோ என்னில்
இது எல்லாம் ஆஸ்ரிதர்க்கு அத்யந்த ஸூ லபனாய் -அநாஸ்ரிதற்கு அத்யந்த துர்லபமாய் இருக்கும் என்கிறார் –

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய வெம்பெருமான்
பேரும் ஒரு உருவமும் உளதில்லை யிலதில்லை பிணக்கே–1-3-4-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்
எத்தனையேனும் அறிவுடையாரே யாகிலும் அநாஸ்ரிதரால் ஒரு ஸ்தூல ஆகாரமும் அறிய அரியனாய்
ஒன்றும் அறிவிலர் ஆகிலும் ஆஸ்ரிதர்க்கு இப்படிப்பட்டான் என்று பரிச்சேதிக்கலாம் படி இருக்கும் ஸ்வ பாவனாய்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய வெம்பெருமான்
தன் குண சேஷ்டி தாதிகளுக்கு வாசகமான அநேகத் திரு நாமங்களையும் மற்றும் அநேக விக்ரஹங்களை யுமுடையவன்
பேரும் ஒரு உருவமும் உளதில்லை யிலதில்லை பிணக்கே –
இப்பேர்களில் ஒரு பேரும் ஒரு வடிவும் மாதரம் கூட அநாஸ்ரிதர் இல்லை என்று இருப்பர்-
ஆஸ்ரிதர் இவை எல்லாம் உண்டு என்று இருப்பர் –
இப்படி நித்ய விப்ரதிபன்னமாய் இருக்கும்
பலகாலும் -எம்பெருமான் -என்று -ஆஸ்ரிதற்கு எளியனாய் அநாஸ்ரிதர்க்கு அரியனான படியை அனுசந்தித்து இருக்கிற படி –

———————————————————————————–

இப்படி அவன் தூரச்தனே யாகிலும் -ஆஸ்ரயிப்பார்க்கு துர்லபன் என்னும் இடத்தை பரிஹரித்து
ஆழ்வார் -ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படியே பக்தி யோகத்தாலே எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறி யுள்ளி யுரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் யாதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு
உணக்கு மின்பசை யற அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன்
ஷட் சமயங்களுக்கும் -வைதிக சமயத்துக்கும் -அந்யோந்ய விரோதத்தால் உள்ள பிணக்கு அறும்படி
வேத மார்க்கத்தாலே ஆராய்ந்து அருளிச் செய்த பரம உதாரன் –

அந்தமில் யாதியம் பகவன்
தனக்கு அந்தம் இன்றி எல்லார்க்கும் தான் ஆதியாய் -ஸ்வ பாவிகமாய் -ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி கல்யாண பரி பூர்ணன்
இங்கனே சொல்லிற்று -இவன் சொல்லியதை விஸ்வசிக்கலாம் படி இவனுடைய ஆப்ததமத்வம் தோற்றுகைக்காக-

வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்கு மின்பசை யற
பக்தியோகத்தை நிரந்தரமாக அனுஷ்டித்து -பாஹ்ய விஷயங்கள் ஆகிற விரோதிகளைத் தவிர்த்து அவற்றின் ருசியையும் சவாசனமாக விடுங்கோள் –
ஆஸ்ரிதர்க்கு இனிதாய் இருந்ததே யாகிலும் இத்தைப் பெரு வருத்தமாகக் கொள்ளும் பகவத் அபிப்ராயத்தாலே -தவ நெறி -என்கிறது

அவனுடைய யுணர்வு கொண்டு யுணர்ந்தே —
பக்தி ரூப தத் விஷய ஜ்ஞானத்தாலே யாதல்
அவன் அருளிச் செய்த சரம ஸ்லோக உக்தமான உபாய ஜ்ஞானத்தாலே யாதல்

——————————————————————————–

சர்வேஸ்வரன் ஸூ லபன் ஆகைக்காக ப்ரஹ்ம ருத்ராதிகளோடு சஜாதீயனாக திருவவதாரம் பண்ணுகையாலே
சமாஸ்ரயணீயன் இன்னான் என்று நிர்ணயிக்க ஒண்ணாமே பழைய துர்லப்த்வ சங்கை மீளவும் பிரசங்கிக்க
மூர்த்தி த்ரய நிர்ணய உபாயத்தைச் சொல்லிக் கொண்டு அந்த தௌர்லப்யத்தை பரிஹரிக்கிறார்

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த வின்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை யுணர்வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

உணர்ந்து உணர்ந்து
வீப்சையாலே ஆத்மாவுக்கு ஜ்ஞாத்ருத்வம் ஆகந்துகம் அன்று
ஸ்வா பாவிக நித்ய தர்மம் -என்கிறது –

இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த வின்நிலைமை
ஸ்வ ஞான பிரபையாலே -பத்து திக்கும் வியாபித்து பிரகிருதி வியுக்தமாய்க் கொண்டு இப்படி இருக்கிற ஆத்மாவின் நிலைமையை –

உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை யுணர்வரிது உயிர்காள்-உணர்ந்து உணர்ந்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
ஸ்ரவண மன நாதி களாலே சாஷாத் கரிக்கக் கூடிலும் சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ராதிகளோடு ஒக்கத் தன்னை
சங்கோ சித்து கொண்டு நிற்கையாலே இவர்களில் ஈஸ்வரன் இன்னான் என்று அறிகை அரிது –

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே —
குண ரூப நாமாதிகளாலும் -தத் பிரதிபாதகமான பிரமாணங்களாலும் இவர்கள் மூவரிலும் எவன் ஈஸ்வரன் என்று மிகவும் ஆராய்ந்து
ஈச்வரதயா நிர்ணீதன் ஆனவனை மன நாதிகளாலே ஹிருதயத்திலே பிரதிஷ்டிதனாம் படி அனுசந்தித்து ஆஸ்ரயியுங்கோள் –

————————————————————————

மந்த ஆயுஸ் ஸூ க்களான நீங்கள் நிர்ணய உபாயங்களாலே மூவரிலும் இன்னான் பரன் என்று நிர்ணயித்து
ஈச்வரதயா நிர்ணீதனான இன்னானை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

ஓன்று எனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே –1-3-7-

ஓன்று எனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற -நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
மூர்த்தி த்ரயத்துக்கும் ஆத்மா ஒருவனோ -பலரோ –பலரானால் அவர்களில் பிரதானன் எவன் என்று
அறிய ஒண்ணாத படியை யுடையராய் நின்ற
நன்று எழில் நாரணன்
தன் வடிவைக் கண்டால் தானே ஈஸ்வரன் என்று தோற்றும்படி நல்ல எழிலை யுடைய நாராயணன்
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே —
சொன்ன மூன்று வகையாலும் விசத்ருசமாய் யுள்ள இவர்களைப் பஷபதியாதே

——————————————————————————————————-

எம்பெருமானுடைய பஜநீயன் ஆகைக்கு நிதானமான ஸ்ரீ யபதித்வத்தைச் சொல்லா நின்று கொண்டு
பஜன உபக்கிரம காலத்திலே பஜன விரோதி சர்வ கர்ம நிவ்ருத்தியும் உண்டாம் என்கிறார் –

நாளும் நின்றடு நம் பழமை அங்கொடு வினையுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனகமல மறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–1-3-8-

நாளும் நின்றடு நம் பழமை அங்கொடு வினையுடனே மாளும் ஓர் குறைவில்லை –
நாள் தோறும் இடைவிடாதே நலியா நின்றுள்ள பழையதாய் மிகவும் க்ரூரமான நம்முடைய கர்மங்கள் ஆரம்பிக்கத் தொடங்கின வாறே நிச் சேஷமாக நசிக்கும் –
சர்வ இஷ்டங்களும் பூரணமாம்
மனனகமல மறக் கழுவி நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
ஈஸ்வரன் இவனோ -மற்றையவர்களோ -என்று தொடக்கமான மனசில் உள்ள சம்சயங்களும் போக்கி
ஸ்ரீ மானாய் ஸ்வாமியான எம்பெருமானுடைய ஆஸ்ரிதம் அபராதம் பாராத திருவடிகளை நாடொறும் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–
நெடும் காலம் கூட சாதிக்க வேண்டும் பக்தி யோகத்தை சாதிக்க காலமும் கரணபாடவமும் இன்றிக்கே
சரம தசா பன்னரானவர்கள் இழந்தே போம் இத்தனையோ என்னில்
அத்தசையிலே யாகிலும் ப்ரணமாதிகளில் ஒன்றிலே உபக்ரமித்து அவ்வளவிலே தான் முடியில் அதுவே பரம பக்தியிலும் நன்று

——————————————————————————————-

சர்வேஸ்வரனான தான் ஸ்வ விபூதி பூத லோகங்களிலே வந்து திருவவதாரம் பண்ணுகிறது ஆஸ்ரிதர் கண்டு அனுபவிக்கைக்காக என்கிறார்

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெருத்துந்தித்
தலத்து எழுதிசை முகன் படைத்த நல்லுலகும் தானும்
புலப்பட பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே –1-3-9-

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெருத்துந்தித் தலத்து எழுதிசை முகன் படைத்த
திரிபுரஹநாதி சமர்த்தனான ருத்ரன் எம்பெருமானுடைய தஷிண பார்ஸ்வத்தை ஆஸ்ரயித்து இருக்கும்
எழுச்சியை யுடைய திசைமுகன் படைத்த லோகமும் தானும் அசங்கு சிதமாக இருக்கிறது திரு நாபி கமலத்திலே –
இவை இவர்களுடைய சர்வ பிரகார ரஷைக்கும் உப லஷணம்

நல்லுலகும் தானும்
புலப்பட பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
நல் உலகமாவது -எம்பெருமானுக்கு வந்து திருவவதாரம் பண்ணி ஆஸ்ரிதரோடு சம்ச்லேஷிக்கு ஈடான தேசம் –

சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள-
இவனுடைய குணங்களைப் பேசப் புக்கால் பேசி முடிக்க ஒண்ணாது –
ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கும் என்றுமாம் –

இவையவன் துயக்கே-
ஏவம்வித ஸ்வ பாவன் என்று எல்லாரும் அறியாது ஒழிவான் என் என்னில் -தன் பக்கல் விமுகரானவர்களுக்கு
அறிய ஒண்ணாத படி சந்தேக விபரீத ஜ்ஞானங்களை எம்பெருமான் பிறப்பிக்கையாலே –

————————————————————————-

ஜல ஸ்தல விபரீதங்கள் பாராதே எல்லார் தலையிலும் பொருந்துவதாய் -தனக்கும் அயத்ன லப்தமாய் -நிரதிசய போக்யமான
திரு வுலகு அளந்து அருளின எம்பெருமானுடைய திருவடிகளை மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பாரிக்கிறார் –

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியனவல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே –1-3-10-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும் மயக்குடை மாயைகள் வானிலும் பெரியனவல்லன்
நிர்தோஷ அந்த கரணர் ஆகையாலே சமயக் ஜ்ஞானவாங்களான தேவர்களை அறிவு கெடுக்கும் படி தெரியாத
குண சேஷ்டிதங்களோடு கூடின திவ்ய அவதாரங்கள் ஆகிற மஹா ஆச்சர்யங்களைப் பண்ண வல்லவன்

புயல் கரு நிறத்தனன்
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே கறுத்த நிறத்தை யுடையான்

பெரு நிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே
அநந்ய பிரயோஜனராய் –
மநோ வாக் காயங்களாலே அனுபவிக்கப் பெற்றேன் -என்றும் சொல்லுவர்

——————————————————————————————————-

நிகமத்தில் இப்பத்தும் அறிவார் -முந்துற அயர்வறும் அமரர்கள் வரிசையைப் பெற்று
-பின்னை சம்சார நிகில விச்சேதத்தை பெறுவார்கள் என்கிறார் –

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

தேவ ஜாதி அனுபவித்து வாழ அபிஷூ பிதமாம் படி கடலைக் கடந்தவனை
அமர்ந்து இருந்துள்ள பொழிலின் வளர்த்தியையுடைய திருக் குருகூர்ச் சடகோபனுடைய
அந்தரங்க வ்ருத்திகளாய் -ரச கனமான ஆயிரம் திருவாய் மொழியிலும் இவை பத்தும் அப்யசித்தவர்கள்

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-2-

April 29, 2016

இரண்டாம் திருவாய்மொழியிலே –
இப்படி எம்பெருமானுடைய பரத்வத்தை அனுபவித்தவர் -அவ்வனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே போதயந்த பரஸ்பரம் என்னும்படியாலே
சிலரோடு உசாவி அல்லது தரிக்க மாட்டாத தசை வருகையாலும் –
ஏக ஸ்வாது ந புஞ்ஜீத -என்கிறபடியே தனியே அனுபவிக்கும் விஷயம் அல்லாமையாலும்
இவர் தாம் தனியே அனுபவிக்க ஷமர் அல்லாமையாலும்
துணை தேடி அதுக்கு ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே
எல்லாரையும் திருத்தி யாகிலும் அவர்களோடு எம்பெருமானை அனுபவிப்போம் என்று நினைத்து –
அவர்களைத் திருத்தும் விரகு எங்கனே என்று பார்த்து அருளி
சேதனர் ஆகிறார் -பொல்லாது கண்டால் கை விடவும் -நல்லது கண்டால் கைக் கொள்ளவும் கடவராய் இருப்பர்
ஆனபின்பு சம்சாரத்தின் தன்மையைக் காட்டியும் பகவத் விஷயத்தின் நன்மையைக் காட்டியும்
திருத்துவோம் என்று பார்த்து அருளி
இவர்களுக்கு சம்சாரத்தின் உடைய அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களையும்
சர்வராலும் ஸ்ப்ருஹணீயனான எம்பெருமான் படியையும்
உபதேசித்து அருளி அவனை பஜியுங்கோள்-என்று பக்தி யோகத்தை அருளிச் செய்கிறார் –

———————————————————————–

பகவத் வ்யதிரிக்தமான சர்வ விஷயங்களையும் விட்டு சர்வ சேஷியான எம்பெருமான் திருவடிகளிலே ஆத்மாவை சமர்ப்பியுங்கோள் -என்கிறார்

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே –1-2-1-

வீடுமின் –
விடுமின் -என்றபடி
இன்னத்தை விடுங்கோள் என்னாது ஒழிவான் என் என்னில் -சிறு பிரஜை சர்ப்பத்தைப் பிடித்துக் கொண்டு இருந்தால் விட்டுக் கொள் என்று பின்னை இ றே சர்ப்பம் எனபது –
அது போல் விடுகிறவனுடைய த்யாஜ்யாதிசயம் தோற்றுகைக்காக முதலிலே விடுங்கோள் என்கிறார்
உபதேசம் அஷட்கர்ணமாய் இருக்க பஹூர் வசனத்தாலே சொல்லிற்று -சிலர் தாந்தராய் அர்த்திக்கச் சொல்லுகிறார் அல்லாமையாலும்
-அனர்த்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் எல்லாரையும் குறித்துச் சொல்லுகிறார்
எத்தை விடுவது என்னும் அபேஷையிலே
முற்றவும் –
என்கிறார் –
அஹம் மமேதி சண்டால-சண்டாலர் குடியிருப்பை பிராமணனுக்கு ஆக்கும் போது சண்டால ஸ்பர்சம் உள்ள பதார்த்தம் அடைய
த்யாஜ்யம் ஆனால் போலே -அஹங்கார கர்ப்பமாக ஸ்வீகரித்த வற்றில் த்யாஜ்யம் அல்லாதன இல்லை -என்கை
இனி
உம்முயிர் வீடுடை யானிடை -என்று அமைந்து இருக்க
வீடு செய்து
என்று அனுபாஷிக்கிறது
விடுகை தானே பிரயோஜனம் போந்து இருக்கை
ராஜ புத்திரன் சிறையில் கிடந்தால் முடி சூடுவதிலும் சிறை விடுகை தானே பிரயோஜனமாய் இருக்கும் இ றே
உம்முயிர் வீடுடை யானிடை
உங்கள் ஆத்மாவையும் சரீரத்தையும் உடையவன் பக்கலிலே உங்கள் ஆத்மாவை தனக்கு சரீரமாக உடையவன் பக்கலிலே என்னுதல்
உங்கள் ஆத்மாவை விடும் இடத்தில் உடையவன் பக்கலிலே என்னுதல்
மோஷ ப்ரதன் பக்கலிலே என்னுதல்
வீடு
விடுகையை -சமர்ப்பிக்கையை
செய்ம்மினே
இசையுங்கோள்
அவன் நினைவு நித்தியமாய் இருக்க நீங்கள் இசையாமல் இ றே இழந்து போந்தது
யமோ வைவஸ்வதோ ராஜா யச்தவைஷ ஹ்ருதி ச்த்தித-தே நசேதவிவா தஸ்தே மா கங்காம் மா குரூன்கம –

————————————————————————————————

இரண்டாம் பாட்டில்
நெடும் காலம் பழகின விஷயங்களை விட ஒண்ணுமோ -என்னில்
அஸ்த்ரத்வாதி தோஷங்களை அனுசந்திக்கவே விடுகை எளிது என்கிறார்

மின்னின் நிலையில் மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –1-2-2-

மின்னின் நிலையில்
மின்னுக்கு உள்ள நிலையும் இல்லை
சம்பதஸ் ஸ்வப்ன சங்காசா யௌவனம் குஸூமோபமம் தடிச்சஞ்சலமாயுச்ச கஸ்ய ச்யாஜ்ஜா நதோ த்ருதி –
அது தோற்றி நசிக்கும்
இது கர்ப்பத்தில் நசிக்கும்
தோற்றின போதே மாயக் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு அதுக்கு
இது சில நாள் இருக்கிலும் இருக்கும் -அஸ்திரம் என்று ஹிதத்தில் ப்ரவர்த்திக்க ஒட்டாது -ஸ்திரம் என்று விச்வசிக்கப் பண்ணி நசிக்கும் –

மன்னுயிர் ஆக்கைகள்
உயிர் மன்னி விடேன் என்று பற்றிக் கிடக்கிற சரீரங்கள்
நித்யனான ஆத்மாவினுடைய சரீரங்கள் என்னவுமாம்
உயிர் என்கிற ஏக வசனத்துக்கும் ஆக்கைகள் என்கிற பஹூ வசனத்துக்கும் கருத்து -ஓர் ஆத்மாவே கர்ம அனுகுணமாக
அநேக தேஹங்களிலே நலிவுபடும் என்று தோற்றுகைக்காக-
மகிழல கொன்றே போல் –வாசாம்சி ஜீர்ணாநி –
அன்றிக்கே ஜாதிக வசனம் ஆகவுமாம் –

என்னும் இடத்து
என்னும் ஸ்தலத்தில்
என்னும் இவ்வர்த்தத்தில் என்னவுமாம் –

இறை யுன்னுமின்
இதினுடைய தோஷம் எல்லாம் அறிய வேண்டா
ஏக தேச அனுசந்தானத்தாலே விரக்தி பிறக்கும்
நீரே
தோஷ அனுசந்தானத்துக்கு சாஸ்திரம் வேண்டா
தோஷம் பிரத்யஷம் ஆகையாலே உங்களுக்கே தெரியும் –

————————————————————————————————————–

மூன்றாம் பாட்டில்
அநாதி காலம் பற்றிப் போந்த விஷயங்களை விடும் போது பற்றின காலம் எல்லாம் வேண்டாவோ தனித்தனியே விடுகைக்கு என்னில்
அது வேண்டா எளிதாக விடலாம் என்று த்யாஜ்யத்தை இரண்டு ஆகாரத்தாலே சுருங்க உபதேசிக்கிறார் –

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3-

நீர் நுமது -என்று
அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை
நான் என்னது -என்னும் அர்த்தத்தை பிறர்க்கு உபதேசிக்கப் புக்கால் -நீங்கள் என்றும் உங்களது என்றும் இ றே சொல்லுவது
அதாகிறது -அனாத்மயாத்மா புத்தியும் அஸ்வே ஸ்வ த்வய புத்தியும்
நான் என்னது — என்னில் நா வேம் இ றே
அனாத்மன்யாத்ம புத்திர்யா அச்வேஸ் வமிதி யாமினி அவித்யாதரு சம்பூதி பீஜமேதத் த்விதாஸ்திதம்-என்று சம்சார பீஜத்தையும்
அச்யுதாஹன் த்வாச்மீதி சைவ சம்சார பேஜஷம் என்று பரிகாரத்தையும் சொல்லிற்று இ றே –

இவை வேர் முதல் மாய்த்து-
இவற்றை சவாசனமாகப் போக்கி
இது அக்னி நா சிஞ்சேத்-போலே துஷ்கரம்
இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும்
அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது
ஆகையாலே இதரே தராஸ் ராயக்ரச்தம்
ஆனால் இதற்குப் பொருள் என் -என்னில் -ஆச்சார்ய சேவையாலும் சாஸ்திர அப்யாசத்தாலும் இவை அபுருஷார்த்தம் என்று அத்யவசிக்கை
இரண்டு வ்ருஷம் சேர நின்றால்-ஒன்றிலே குட்டமிட்டுப் பெருங்காயத்தை வைத்தால் மற்றையது நிற்க இது க்ரமத்தால்
உலர்ந்து போமா போலே -இந்த ஜ்ஞானம் பிறந்தால் இவை ஸ்வ கார்யம் செய்ய மாட்டாது
பீஜான் யக் ந்யுபதக்தானி -இத்யாதி
ரஷகன் அவசர ப்ரதீஷனாய் இருக்க இவன் பக்கலிலே விலக்காமை யுண்டானால் விரோதி போகிக்கு தட்டில்லை என்கை –

இறை சேர் மின்
சர்வேஸ்வரனை ஆஸ்ரயிங்கோள் –
கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போல் இ றே சம்சாரிக்கு பகவத் சமாஸ்ரயணம்

உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே-
ஆத்மாவுக்கு அத்தோடு ஒத்த சீரியது இல்லை
பிரதமத்தில் ஹிதமாய் உதர்க்கத்தில் பிரியமாய் இருக்கும்
நேர் –ஒப்பு நிறை -மிகுதி -ஒத்ததும் மிக்கதும் இல்லை என்னவுமாம்
சம்சார ஆர்ணவ மக்நாநாம் –

—————————————————————————————————

நாலாம் பாட்டில் பற்றப்படும் விஷயத்தின் நன்மை சொல்லுகிறார்

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே –1-2-4-

நச்வரமான அசேதனத்தின் ஸ்வ பாவமும் –
ஏக ரூபனான சேதனன் படியும் இன்றிக்கே இருக்கும் அவன் ஸ்வ ரூபம்
இல்லது என்று துச்சத்வம் இத்யாத்வங்களை சொல்லுகிறது அன்று -நச்வரதையைச் சொல்லுகிறது
உள்ளது என்று அஸ்தித்வ மாத்ரத்தை சொல்லுகிறது அன்று -நித்யதையைச் சொல்லுகிறது
அவன் ஸ்வரூபம் தான் இருக்கும் படி என் என்னில்
அசங்க்யேய கல்யாண குணங்களை யுடைத்தாய் இருக்கும் –
எல்லையில்லா அந்நலத்தை யுடைத்து -என்னுதல்
எல்லையில்லா அந்நலம் -என்னுதல்
புல்கு -ஆஸ்ரயி
அபிமத விஷயத்தை அணைத்தால் போல் ஆஸ்ரயணம் தான் இனிதாய் இருக்கையாலே புல்கு என்கிறார்
பற்று அற்று
பிராக்ருத பிராக்ருதங்களில் சங்கத்தை விட்டு –

———————————————————————————————————-

பகவத் சமாஸ்ரயணத்துக்கு அந்தராய பரிஹாரத்தை அருளிச் செய்கிறார்

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-

அற்றது பற்று எனில்
பற்று அற்றது என்னில்
இதர விஷயங்களில் பற்று அற்ற மாத்ரத்திலே ஆத்மா மோஷத்தை
உற்றது
கையுற்றது
வீடுயிர்
அநித்யமாய்-ஜடமான அசித் சம்சர்க்கம் அற்றவாறே -நித்யமாய்-ஜ்ஞானானந்த லஷணமாய் ஆத்மா தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும் –நிச்சதம்
செற்றது
அத்தை ஜெயித்து -அத்தை முகம் சிதறப் புடைத்து
மன்னுறில்
நிரதிசயமான பகவத் கைங்கர்யத்தைப் பெற்று நிலை நிற்க வேண்டி இருந்தாய் ஆகில்
அற்றிறை பற்றே —
இதர விஷயங்களிலே தொற்று அற்று -சர்வேஸ்வரனைப் பற்று என்னுதல்
ஆஸ்ரயிக்கும் போதே உன்னை பகவச் சேஷமாக அத்யவசித்து ஸ்வாமி யானவனை ஆஸ்ரயி என்னவுமாம் –
அன்றிக்கே
விபக்தியை மாறாடி இறையைப் பற்றி அத்தை அறுங்கோள் என்னவுமாம் –

——————————————————————————————————-

நாம் புறம்பு உள்ளவற்றை விட்டு அவனைப் பற்றினால் -அவன் சர்வேஸ்வரன் அன்றோ -நமக்கு முகம் தருமோ என்னில்
ஈஸ்வரத்வம் வந்தேறி என்னும் படி சங்க ஸ்வ பாவன் காண்-என்கிறார் –

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

பற்றிலன்
பற்று -உண்டு சங்கம் –
அத்தை வாசஸ் ஸ்தானமாக யுடையவன் –
பற்றிலன்
பற்று இலான்
பற்றிலே உள்ளான் -என்னவுமாம் -சங்க ஸ்வ பாவன் -என்றபடி –
யீசனும் –
ஈஸ்வரனும்
ஈஸ்வரத்வத்தை தவிர்க்க ஒண்ணாமை யாலே கிடக்கும் அத்தனை
இஸ் சங்கம் குணம் ஆகைக்காகக் கிடக்கிறது
பயப்படுகைக்கு உடல் அன்று
பிரசாத பரமௌ நாதௌ
முற்றவும் நின்றனன்
சமோஹம் சர்வ பூதேஷு -என்கிறபடியே ஆஸ்ரயணீத்வே சர்வ சமானாய் இருக்கை
பற்றிலையாய் –
நீயும் அவன் பக்கலிலே சங்க ஸ்வ பாவனாய்
அவன் முற்றில் அடங்கே —
அவனுடைய முற்றிலும் அடங்கு –
எல்லா சேஷ வ்ருத்தியிலும் அந்வயி

அதவா –
நித்ய சூரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவன் நித்ய சம்சாரிகளான நம்மை அங்கீ கரிக்குமோ என்னில்
இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் நித்ய ஆஸ்ரிதர் பக்கல் சங்கத்தை விட்டு நம்மையே தாரகாதிகளாக நினைத்து இருப்பான் ஒருவன் –
யீசனும் பற்றிலன்-
நித்ய ஆஸ்ரிதரை யுடையனாய் இருந்தானே யாகிலும் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால்
அவர்கள் பக்கல் சங்கத்தை யுடையவன் அல்லன்
த்வயி கிஞ்சித் சமா பன்னே -இத்யாதி
முற்றவும் நின்றனன்
நாமே தனக்கு தாரகாதிகளாக நினைத்து இருக்கும்
பற்றிலையாய் –
நீயும் புறம்புள்ள சங்கத்தைத் தவிர்த்து –
நாசகரமான நித்ய சம்சாரத்தில் சங்கத்தை விட்டு என்கிறது
அவன் தனக்கு நித்ய போக்யமான நித்ய விபூதியில் சங்கத்தை யன்றோ விடுகிறது
அவன் முற்றில் அடங்கே
அவனாகிற எல்லாவற்றிலும் அடங்கு –
அவனே தாரகாதிகளும் சர்வவித பந்துவும் எல்லாவுமாகப் பற்று
மாதா மிதா ப்ராதா —
வா ஸூ தேவஸ் சர்வம் –
உண்ணும் சோறு பருகும் நீர்
சேலேய் கண்ணியர்-
ஏகைக பல லாபாய –
இது பட்டர் நிர்வாஹம் –

————————————————————————————————-

சங்க ஸ்வ பாவனே யாகிலும் -அபரிச்சேத்ய உபய விபூதி மகா விபூதியை இருக்கையாலே நம்மால் முகம் கொள்ள ஒண்ணுமோ என்னில்
-எம்பெருமானோடு உள்ள சம்பந்தத்தை உணரவே கிட்டலாம் என்கிறது

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-7-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு –
அடங்க எழிலான சம்பத்தை ஓன்று ஒழியாமே கண்டு
புறம்பு ஓர் ஆச்ரயித்தில் காணாத இஸ் சம்பத்தை ஓர் இடத்தே சேரக் கண்டு –
அவன் விபூதி யாகில் கட்டடங்க உபாதேயமாய் இ றே இருப்பது
முக்தனுக்கும் ததீயத்வ ஆகாரேணே லீலா விபூதி அனுபாவ்யமாய் இ றே இருப்பது

ஈசன் அடங்கு எழில் அஃது என்று –
என் நாயகன் உடைய ஐஸ்வர்யம் ஈது என்று அனுசந்தித்து

அடங்குக உள்ளே –
அந்த சம்பந்த ஜ்ஞானம் அடியாகத் தானும் அவன் விபூதியிலே ஒருவன் என்று அன்வயிக்கலாம்
சமுத்ரம் அபரிச்சின்னம் ஆனாலும் அதில் உள்ள சத்த்வங்களுக்கு வேண்டினபடி புகலாம் இ றே
அதே போலே சம்பபந்த ஜ்ஞானம் உண்டாகவே கிட்டலாம்
சம்பந்த ஜ்ஞானம் இல்லாத த்ருணத்தை இ றே கடல் கரையிலே ஏறித் தள்ளுவது
சம்பந்த ஜ்ஞானத்தை பிறப்பிக்கி இ றே கடக க்ருத்யம்
இங்கே பட்டர் பிதா புத்ரர்கள் இருவரும் படவோடின கதையை அருளிச் செய்வர்

—————————————————————————————————–

பஜன பிரகாரம் சொல்லுகிறது

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8-

உள்ளம் உரை செயல்
மநோ வாக் காயங்கள்
உரை செயல் அன்று -தத் ஆஸ்ரயமான கரணங்களை நினைக்கிறது –
உள்ள
இன்று தேட வேண்டா -சம்பன்னமாய் இருக்கை
விம்மூன்றையும்
சந்நிஹதங்களும் விதேயங்களுமான இம்மூன்றையும்
இவற்றுக்கு அவ்வருகே ஓன்று தேட வேண்டா -இவையே அமையும்
ஈச்வராய நிவேதிதும் -என்று நிரூபித்தால் பகவத் விஷயத்தில் சமர்ப்பிக்கைக்காக வாய் இருக்கும்
கெடுத்து
அவற்றுக்கு உண்டான பாஹ்ய விஷய ப்ராவண்யத்தைத் தவிர்த்து
இறை உள்ளில் ஒடுங்கே –
வகுத்த விஷயத்தில் இவற்றையும் கொண்டு புக்கு அடிமை செய்யப் பார்
அன்றிக்கே
ஒடுக்கு என்று மெல் ஒற்றை வல் ஒற்றாக்கி அவன் திருவடிகளிலே சமர்ப்பி என்றுமாம்
இப்பாட்டில் பஜிக்கைக்கு புறம்பு ஒரு உபகரணம் சம்பாதிக்க வேண்டா
முன்னமே யுண்டானவற்றின் வியபிசாரத்தை தவிர்த்து வகுத்த விஷயத்திலே சமர்ப்பியுங்கோள்-என்கிறார்

——————————————————————————————–

பஜனம் எளிதானாலும் அநாதி கால சஞ்சிதமான அவித்யாதிகள் பஜன ப்ராப்திகளுக்கு விரோதி அன்றோ -என்னில்
பஜிப்போம் என்கைக்கு அடியான ஸூ க்ருதமே வேண்டுவது -அது அடியாக பஜனத்திலே இழியவே அவை அடங்க கழியும் என்கிறது –

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

ஒடுங்க அவன் கண்
ஈச்வரோஹம் என்று இருக்கை தவிர்ந்து -அவனுக்குப் பிரகாரமாக அவன் அபிமானத்துக்கு உள்ளே அந்தர்பவிக்கவே
ஓடுங்கலும் எல்லாம் விடும்
ஒடுங்கல் -ஒடுக்கத்தை பண்ணுமவை –
ஆத்மாவுக்கு சங்கோசகங்களான அவித்யாதிகள் எல்லாம் போம் –
ஒடுங்கல் -வந்தேறி யாய் -ஒடுங்கிக் கிடந்தவை என்னுமாம்
ஸ்வரூபாதி ரேகியாய் ஒடுங்கிக் கிடந்த அவித்யாதிகள் எல்லாம் போம்
எல்லாம் என்கையாலே -பஜன விரோதியோடு -பிராப்தி விரோதியோடு -வாசி அற சர்வமும் நசிக்கும் என்கிறது
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-
பின்பு சரீர அவசானமே விளம்பம்
காமிநி தன் உடம்பில் அழுக்கைக் கழற்றி போகத்திலே அந்வயிக்க அவசர ப்ரதீஷியையாய் இருக்குமா போலே சரீர அவசானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கை
உடையவர் குன்றத்து சீயரை -சிங்கப் பிரான் இன்று அயநம் கிடாய் என்ன – நிதானம் அறியாமையாலே திகைத்து நிற்க
ப்ராப்தி பிரதிபந்தகமான காலத்திலே ஆறு மாசம் போந்தது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ -என்று அருளிச் செய்தார்
க்ருதக்ருத்யா -இத்யாதி
எம்பார் -அஸ்திரமான சரீரம் தானே நசியா நிற்க இவனுக்குத் தான் மநோ ரதிக்க வேணுமோ -என்று அருளிச் செய்வர் –

————————————————————————————

ஆஸ்ரயணத்திலே இழிவார் -திருமந்த்ரத்தை சாரார்த்தமாக அனுசந்தித்துக் கொண்டு ஆஸ்ரயிங்கோள் என்கிறார்

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

எண் பெருக்கு
இத்தால் -ஜீவ அனந்யத்வத்தைச் சொல்கிறது
அந் நலத்து –
கல்யாணமான ஜ்ஞானாதி குணங்களை யுடைத்தாகை
ஒண் பொருள்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை
ஈறில
நித்தியமாய் இருக்கை –இப்படிப் பட்ட ஆத்மா வர்க்கத்தையும்
வண் புகழ் –
கல்யாண குணங்களையும் யுடையனாய் இருக்கை
ஈறில -என்று குணங்களுக்கு விசேஷணம் ஆகவுமாம்
நாரணன் –
நித்ய சித்த கல்யாண குணங்களோ பாதி ஜீவ சமூஹத்தையும் ஸ்வ அதீனமாக யுடையவன் ஆகையாலே -நாராயணன்
திண் கழல் சேரே —
இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி –

———————————————————————————————————————-

நிகமத்தில்
பகவத் குணங்களைத் தொடுத்த ஆயிரம் திருவாய் மொழியிலும் ஆராய்ந்து சொல்லப் பட்டன இவை என்கிறார் –

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-

சேரத் தடம்
ஊரோடே சேர்ந்த தடம் -தன்னிலே சேர்ந்த தடம் என்னுதல்
சீர்த் தொடை யாயிரம்
சீர் என்று கவிக்கு உறுப்பான அலங்காரங்களைச் சொல்லுதல்
பகவத் குணங்களைச் சொல்லுதல்
ஒர்த்த விப்பத்து
ஓர்ந்து சொல்லப் பட்டன இவை
பிரஜைகள் துர்க்கதியைக் கண்டு இவற்றினுடைய உஜ்ஜீவ உபாயத்தை திரு உள்ளத்திலே ஆராய்ந்து அருளிச் செய்தது
இப்பத்தைச் சேர் -என்று க்ரியாபதமாக ஒருவன் சொன்னான்
இப்பத்தை நெஞ்சில் சேர்-அனுசந்தி
பர உபதேசம் பலரைக் குறித்து உபக்ரமிக்கையாலே ஏக வசனமான இடம் ஜாத்யபிப்ராயம் –

————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -1-2-

April 29, 2016

இரண்டாம் திருவாய்மொழியிலே –
இப்படி எம்பெருமானுடைய பரத்வத்தை அனுசந்தித்த ஆழ்வார் -அவ்வனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே போதயந்த பரஸ்பரம் என்னும்படியாலே
சிலரோடு உசாவி அல்லது தரிக்க மாட்டாத தசை வருகையாலும் -அதுக்கு ஈடானாரைக் காணாமை யாகையாலும்
எல்லாரையும் தமக்குப் பாங்காம் படி திருத்தி யாகிலும் அவர்களோடு எம்பெருமானை அனுபவிக்க நினைத்து –
அவர்களைத் திருத்தும் விரகு எங்கனே என்று பார்த்து அருளி
சேதனர் ஆகிறார் -பொல்லாது கண்டால் கை விடவும் -நல்லது கண்டால் கைக் கொள்ளவும் கடவராய் இருப்பர்
ஆனபின்பு அவர்கள் பற்றின நிலத்தில் பொல்லாங்குகளைக் காட்டிக் கொடுத்தும்-பகவத் குணங்கள் உடைய
நன்மையைக் காட்டிக் கொடுத்தும் இவர்களைத் திருத்துவோம் என்று
இவர்கள் பற்றின நிலங்களின் உடைய அஸ்த்ரத்வாதி தோஷங்களை உபதேசித்து
அகில ஹேய ப்ரத்ய நீகனாய் சமஸ்த கல்யாண குணாத் மகனாய் சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனான எம்பெருமான் படியையும்
இவனைப் பற்றும் இடத்தில் உள்ள அந்தராய பரிஹார பூர்வகமாக மற்றும் பஜனத்துக்கு வேண்டும் உறுப்புகள் எல்லாம் உபதேசித்து அருளி
இப்படி அவனை பஜியுங்கோள்-என்று பக்தி யோகத்தை அருளிச் செய்கிறார் –

—————————————————————-

முதல் பாட்டில் பகவத் வ்யதிரிக்தமான சர்வ விஷயங்களையும் அறவிட்டு
சர்வ சேஷியான எம்பெருமான் திருவடிகளிலே ஆத்மாவை சமர்ப்பியுங்கோள் -என்கிறார் –

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே –1-2-1-

வீடுமின்
பற்றி நின்ற நிலத்தின் யுடைய த்யாஜ்யததாசியம் தோற்றுகைக்காக முதலிலே விடுங்கோள் என்கிறார்
முற்றவும்
பண்டு பற்றின விஷயங்களில் சில ஹேயமும்-சில உபாதேயங்களுமாய் இருக்கிறன அல்ல -எல்லாம் த்யாஜ்யமே
வீடு செய்து
அனுபாஷிக்கிறது -பற்றினவற்றை விடுகையே பிரயோஜனம் போந்து இருக்கச் செய்தே அதுக்கே மேலே
ஒரு நன்மை உபதேசிக்கைக்காக என்னும் இடம் தெரிகைக்காக
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே —
உம் உயிரை விடும் இடத்தில் உறவில்லா நிலத்தில் அன்றிக்கே உடையவன் பக்கலிலே இட இசையுங்கோள் –

———————————————————————————————————–

இரண்டாம் பாட்டில்
நெடும் காலம் பழகின விஷயங்களை விட ஒண்ணுமோ -என்னில்
அஸ்த்ரத்வாதி தோஷங்களை அனுசந்திக்கவே விடுகை எளிது என்கிறார்

மின்னின் நிலையில் மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –1-2-2-

மின்னின் நிலையில்
மின்னுக்கு உள்ள நிலையம் இல்லை என்கிறது
அஸ்திரமாய் இருந்தே ஸ்திரங்கள் போலே சில நாள் செல்லுகிலும் செல்லும் என்றவாறு
மன்னுயிர் ஆக்கைகள்
ஆத்மா தான் தனக்கு உபாதேயமாகக் கொண்டு விடேன் என்று பற்றிக் கிடக்கிற தேஹங்கள்
உயிர் என்கிற ஏக வசனத்துக்கும் ஆக்கைகள் என்கிற பஹூ வசனத்துக்கும் கருத்து -ஓர் ஆத்மாவே கர்ம அனுகுணமாக
அநேக தேஹங்களிலே நலிவுபடும் என்று தோற்றுகைக்காக
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே —
என்னும் இஸ்தலத்தில்
தோஷப் பரப்பு எல்லாம் அனுசந்திக்க வேண்டுவது இல்லை –
தோஷத்தின் உடைய ஏக தேச அனுசந்தானத்தாலே விஷயங்களில் வைராக்கியம் பிறக்கும்
நீரே
தோஷ அனுசந்தானத்துக்கு பிரமாண அபேஷை இல்லை -உங்களுக்கே அனுசந்திக்கலாமே

———————————————————————————————————

மூன்றாம் பாட்டில்
த்யாஜ்யத்தை சுருங்க உபதேசிக்கிறார்

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3-

நீர் நுமது என்று
அனர்த்தகரமான அஹங்கார மாமாகாரங்களைச் சொல்லுகிறது
இவை வேர் முதல் மாய்த்து
அஹங்கார மமகாரங்கள் தான் செல்லா நின்றனவே யாகிலும்
ஆச்சர்ய சேவா பிரசுரித்தாலும் -சாஸ்திர அப்யாசத்தின் மிகுதியாலுமாக இவை அபுருஷார்த்தம் என்று அத்யவசிக்கை –
இவற்றினுடைய வேர் முதல் மாய்க்கையாவது -சவாசனமாக இவற்றை விட்டு எம்பெருமானை ஆச்ரயிக்கை துஷ்கரம் ஆகையாலே இதுவே பொருளாக உசிதம்
இறை சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே-
சர்வேஸ்வரனை ஆஸ்ரயிங்கோள் -ஆத்மாவுக்கு அத்தோடு ஒக்கும் சீரியது இல்லை
சீரியதாவது ஹிதமும் பிரியமும்

——————————————————————————————————————

நாலாம் பாட்டில் பற்றப்படும் விஷயத்தின் நன்மை சொல்லுகிறார்

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே –1-2-4-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
ஏகரூபம் அல்லாமையாலே இல்லை என்னலாம்படி இருக்கிற அசேதனத்தின் தன்மையும்
ஏக ரூபமாய் இருக்கையாலே உண்டு என்னலாம் படி இருக்கிற சேதனர் படியும் அன்றிக்கே இருக்கும் அவன் ஸ்வரூபம்
அவன் ஸ்வரூபம் தான் இருக்கும் படி எங்கனே என்னில்

எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே —
அசங்க்யேய கல்யாண குணங்களை யுடைத்தாய் இருக்கும்
புறம்புள்ள சங்கத்தை விட்டு அவனை ஆஸ்ரயி
புல்கு என்கையாலே ஆஸ்ரயணீயம் இனிது என்று கருத்து

————————————————————————————

பகவத் சமாஸ்ரயணத்துக்கு அந்தராய பரிஹாரத்தை அருளிச் செய்கிறார்

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-

பிராக்ருத விஷய சங்கம் அறும்காட்டில் ஆத்மா மோஷத்தை உற்றது – கையுற்றது
அந்தப் புருஷார்த்தத்தை தவிர்ந்து நிரதிசய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்தைப் பெற்று நிலை நிற்க வேண்டி இருந்தாய் ஆகில்
ஆஸ்ரயிக்கும் போது உன்னை எம்பெருமானுக்கே சேஷமாக அத்யவசித்து ஸ்வாமியானவனை ஆஸ்ரயிப்பது-

—————————————————————————-

விலஷணரான நித்ய ஆஸ்ரிதரை யுடைய ஈஸ்வரன் -அவிலஷணராய் -இன்று வந்த அபூர்விகர்களை அங்கீ கரிக்குமோ -என்னில்

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

நித்ய ஆஸ்ரிதர் பக்கல் அவன் சங்கத்தைத் தவிர்ந்து -இன்று ஆஸ்ரயித்தவர்களையே-தாரகாதிகளாக கொண்டு இருப்பான் ஒருவன்
ஆனபின்பு நீயும் அப்படியே புறம்புள்ள சங்கத்தை யற்று அவனையே தாரக போஷகாதிகளாக -எல்லாமுமாகக் கொண்டு பற்று
நிரபேஷனான ஈஸ்வரன் ஷூத்ரரான நம்மை அங்கீ கரிக்குமோ -என்னில்
அங்கனே இருந்தானே யாகிலும் ஒக்க சங்கித்து இருக்கும் –
நீயும் சங்க ஸ்வ பாவனாய் -அவனுடைய சர்வ சேஷ வ்ருத்தியிலும் அதிகரி -என்றுமாம் –

———————————————————————————————————

சங்க ஸ்வ பாவனே யாகிலும் -அபரிச்சேத்ய உபய விபூதி மகா விபூதியை இருக்கையாலே நம் போல்வாருக்குக் கொள்ள ஒண்ணாது
ஆனபின்பு ஆஸ்ரயிக்கக் கூடாது என்னில் –
எம்பெருமானோடு உள்ள சம்பந்தத்தை அனுசந்திக்கவே தன் சிறுமையால் வெருவாதே தரித்து ஆஸ்ரயிக்கலாம் என்கிறார்

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-7-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு
அடங்க எழிலான சம்பத்து எல்லாவற்றையும் கண்டு
ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே —
அந்த வி லஷணமான சம்பத்து எல்லாம் என் ஸ்வாமி யது என்று அனுசந்தித்து
தானும் அவன் விபூதி அந்தர்ப்பூதனாக அனுசந்திப்பது

—————————————————————————————————

பஜன பிரகாரத்தைச் சொல்லுகிறார் –

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8-

மநோ வாக் காயங்கள் தேட வேண்டாதே -சம்பந்தமாய் -விதேயமான மூன்றையும் என்ன பிரயோஜனம் கொள்ளுகைக்கு இவை யுண்டாக்கிற்று-என்று ஆராய்ந்து
அவற்றுக்கு உண்டான அப்ராப்தமான பாஹ்ய விஷய ப்ராவண்யத்தை தவிர்த்து அவன் பக்கலிலே நிவேசி என்கிறார்

——————————————————————

இப்படி ஆஸ்ரயிக்க-பகவத் பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் எல்லாம் நசிக்கும் -சரீர பர்யவசாநமாத்ரமே இவனுக்கு விளம்பம் என்கிறார்

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

அவனை ஆஸ்ரயிக்கும் காட்டில் அவித்யாதி சங்கோசங்கள் எல்லாம் போம் -ஆக்கை என்று சரீரத்துக்கு பேர்-

——————————————————————————————-

சாரார்த்தமாக திருமந்த்ரத்தை அருளிச் செய்து -இத்தாலே யாவச் சரீர பாதம் எம்பெருமானை ஆஸ்ரயுங்கோள் -என்கிறார் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

அசங்க்யேயராய் ஜ்ஞானாதி கல்யாண குணங்களை யுடையருமாய் -நித்தியமாய் -வி லஷண ஸ்வரூபத்தை யுடைய
சர்வாத்மாவையும் -நித்ய சித்த கல்யாண குணங்களையும் யுடைய நாராயணன் யுடைய ஆஸ்ரிதரை ஒருகாலும் விடாதே
ரஷிக்கும் ஸ்வ பாவனான திருவடிகளை ஆஸ்ரயி

———————————————————————————————

நிகமத்தில்
எம்பெருமானுடைய குணங்களைத் தொடுத்த ஆயிரம் திருவாய் மொழியும் ஆராய்ந்து சொல்லப் பட்டன இவை என்கிறார் –

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-

திரண்ட தடங்களை யுடைய திரு நகரியை யுடைய ஆழ்வார் -சேரத் தடங்களை யுடைத்து -என்றும் சொல்லுவர் –
இப்பத்தைச் சேர் -என்று க்ரியா பதமாகவும் சொல்வர்
பரோபதேசம் பலரைக் குறித்து உபக்ரமிக்கையாலே மேல் ஏக வசனமான இடங்கள் எல்லாம் ஜாத்யபிப்ராயம் –

———————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-1-

April 29, 2016

ஸ்ரீ யபதியாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -அக்குணங்களுக்கு பிரகாசகமான திவ்ய விக்ரஹத்தை யுடையனாய் –
அவற்றை அனுபவிக்கும் நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற இருப்பைத் தன்னுடைய நிர்ஹேதுக கிருபையினால்
அனுபவ யோக்யமாம் படி நமக்கு பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தந்து அருளினான்
அவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவிக்கப் பார் என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அனுசாசிக்கிறார்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1————-

உயர்வற
உயர்வு –
உயர்த்தி -அதாவது தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களிலும் எல்லாப் படியாலும் உண்டான எல்லா உயர்த்தியையும் சொல்லுகிறது –
அற-
ஆதித்ய சந்நிதியிலே நஷத்ராதிகளைப் போலே யுண்டாய் -அவற்றை இல்லை என்னலாம் படி இருக்கை
ஜ்யோதீம்ஷ்த்யாதித்யாவத் -இத்யாதி
உயர் –
உயரா நிற்கை
கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அவ்வருகாய்க் கொண்டு வாக் மனஸ் அங்கங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை
அனுபூத அம்சம் அல்பமாய் அனுபாவ்ய அம்சமே விஞ்சி இருக்கை
நலம்
குண விபூத்யாதிகளை அனுபவிக்கையால் வந்த ஆனந்த குணம் –
ஏக வசனம் ஜாத்யபிப்ராயமாய் -குண ஜாதி பரமாகவுமாம்-
ஆனந்த அவஹமான குண விபூத்யாதி பரமாகவுமாம்
நலம் என்கையாலே -கட்டடங்க நன்மையேயாய் இருக்கை
உடையவன்
ஆதந்துகம் அன்றிக்கே ஸ்வரூப அனுபந்தியாய் இருக்கை
இதுக்கு ஆளவந்தார் -ஸ்வா பாவிக அநவதிக அதிசய கல்யாண குண கண -என்று அருளிச் செய்வர்
குத்ருஷ்டிகளை மிடற்றை பிடித்தால் போலே நலமுடையவன் என்று ஆழ்வார் அருளிச் செய்த படி கண்டாயே -என்று
பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்தான் –

எவன்
இக் குணங்களுக்கு ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தின் உடைய சுருதி பிரசித்தியைச் சொல்லுகிறது
இந்த குணங்கள் தானும் நிறம் பெறும்படியான ஸ்வரூப வைலஷண்யத்தை சொல்லிற்று ஆகவுமாம்
அவன்
முன்பு சொன்ன நன்மைகளில் காட்டிலும் மேற்பட்ட தொரு நன்மை சொல்லுகைக்காக அவன் -என்று உத்தேசிக்கிறது –

மயர்வற
மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது
அற -சவாசனமாகப் போகும்படி
மதி நலம்
மதி என்று ஜ்ஞானம்
நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி
அருளினன்
இத்தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –
எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே
எவன்-
இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்
அவன்
அதுக்கு மேலே ஒரு நன்மை சொல்லுகைக்காக அவன் என்று உத்தேசிக்கிறது –

அயர்வறும்
பகவத் ஜ்ஞானத்துக்கு விச்ம்ருதி இல்லாமை ஸ்வ பாவமாய் இருக்கை
அமரர்கள்
மரணம் இன்றிக்கே இருப்பவர்கள்
அவர்களுக்கு மரணம் ஆவது பகவத் அனுபவ விச்சேதம் -அது இன்றிக்கே இருக்கை
அதிபதி
அதிகனான பதி
அசந்க்யாதரான நித்ய ஸூ ரிகள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத பெருமையை யுடையவன்
எவன்
நித்ய விபூதி யோகத்தாலே வந்த ஸ்ருதி பிரசித்தி
அவன்
அதுக்கு மேலே விக்ரஹத்தாலே வந்த வை லஷண்யம் சொல்லுகைக்காக உத்தேசிக்கிறது
துயரறு
துயர் அற்ற என்றபடி
இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி
சுடரடி
நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹம்
அடி -சேஷபூதர் அனுபவிக்க இழியும் துறை
தொழுது
சேஷியைக் கண்டால் பிறக்கும் வ்ருத்தி விசேஷம்
எழு
உஜ்ஜீவி
தொழப் பெறாதே போது-அசந்நேவ -என்னும்படி யாய் இ றே இருப்பது
என் மனனே
பகவத் பிரத்யாசத்தியாலே தமக்குத் திரு உள்ளத்தோடு ஒரு சம்பந்தத்தை ஆசைப் படுகிறார் –

தனித்தனியே -அவன் -என்கிறது -ஒரோ ஒன்றே ஈஸ்வரத்வ சாதகங்கள் என்று தோற்றுகைக்காக –
மூன்று பர்யாயத்தாலும் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று வாக்ய பேதம் பண்ணி யோஜிக்கவுமாம்
நமோ நமோ வாக் மனசாதி பூமயே-என்னுமா போலே தனித்தனியே ப்ரீதியாலே ஈடுபடுகையாலே –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன்– அவன் மயர்வற மதி நலம் அருளினன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன்- அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் -அவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே-என்று
வாக்யைகவாக்ய ந்யாயத்தாலே யோஜிக்க்கவுமாம்

——————————————————————————————————-

கீழ் யவன் என்று ப்ரஸ்துதமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை
அகில ஹேய ப்ரத்ய நீதையாலும்-கல்யாணைகதா நதையாலும்
சேதன அசேதன வி லஷணமாய்-ஜ்ஞான ஆனந்தமே ஸ்வரூபமாய் இருக்கும் என்று சோபன க்ரமத்தாலே அனுபவிக்கிறார்

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

மனனக
மனன் -மனம் என்ற படி –
மனனகம் -மனனில் என்றபடி -மனசில் என்றபடி -நிரவவயமாய் இருக்கிற இதுக்கு உள்வாய் புறவாய் இல்லாமையாலே –
அங்கன் இன்றிக்கே
இம் மனஸ் ஸூ பரகார்த்த விஷயமாகவும் பிரத்யகர்த்த விஷயமாகவும் போருகையாலே பிரத்யகர்த்த விஷயமானத்தை -அகம் -என்று சொல்லிற்று ஆகவுமாம் –
மலமற
யோக அப்யாசத்தாலே மனசில் உண்டான அவித்யாதி தோஷங்கள் கழியக் கழிய –

மலர் மிசை எழு தரும்
விகசிதமாய் கொண்டு மேன் மேல் எனக் கிளரா நின்றுள்ள
மனன் உணரளவிலன் –
மானஸ ஜ்ஞான கம்யனான ஆத்மாவின் படி அல்லாதான்
பொறியுணர் யவையிலன்
இந்த்ரியங்க ளால் அறியப்படும் ப்ராக்ருத பதார்த்தங்களின் படி அல்லாதவன்
சேதன வை லஷண்யம் சொன்ன போதே அசேதன வை லஷண்யம் கிம்பு நர்ந்யாய சித்தம் அன்றோ -என்னில்
அவனோடு ஒவ்வாமைக்கு இரண்டிலும் ஒரு வாசி இல்லை என்னும் இடம் தோற்றுகைக்காக த்ருஷ்டாந்தயா சொல்லிற்று
ஆனால் சேதன அசேதன விலஷணன் என்ன அமையாதோ
அவற்றைக் காணும் பிரமாணங்களால் காண முடியாது என்பான் என் என்னில்
ஏக பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை என்று கொண்டு அத்யந்த வை லஷண்யம் தோற்றுகைக்காக
மனசாது விசுத்தேன-என்று சுத்தமான மனசாலே ஈஸ்வரன் க்ராஹ்யன் என்கிற இடம் -ஜ்ஞான விஷயம் என்கைக்காக
இங்கு அளவிலன் என்கிறது பரிச்சேதிக்க ஒண்ணாது என்று

இனன் –
இப்படிப்பட்டான்
இது கீழுக்கும் மேலுக்கும் பொது

உணர் முழு நலம்
கட்டடங்க ஜ்ஞானமும் -ஆனந்தமுமாய் இருக்கும் -ஆனந்த ரூப ஜ்ஞானம் என்றபடி
எதிர் நிகழ கழிவினும் இனன் இலன்-
கால த்ரயத்திலும் ஒத்தார் இல்லாதவன்
இனன் -ஒப்பன் -இனம் என்றபடி –
சேதன அசேதன வை லஷண்யம் சொன்ன போதே இதுவும் உக்தம் அன்றோ என்னில்
அவனோடு இது ஒவ்வாது என்கைக்கு சத்ருசமாய் இருப்பதொரு பதார்த்தம் இல்லை என்று வைதர்ம்ய த்ருஷ்டாந்தத்தாலே சொல்லுகிறது
மிகு நரையிலனே
மிக்காரை இல்லாதான்
ஒத்தார் இல்லாத நிலத்திலே மிக்கார் இல்லை என்கிறது -மிக்கார் இல்லாதா போலே ஒத்தாரும் இல்லை என்று தோற்றுகைக்காக
எனன் உயிர்
எனக்குத் தாரகன்

மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணரளவிலன் –பொறியுணர் யவையிலன்
எதிர் நிகழ கழிவினும் இனன் இலன்-மிகு நரையிலனே
உணர் முழு நலம் இனன் எனன் உயிர் -என்று அந்வயம்

எனன் உயிர்-அவன் துயர் அடி தொழுது எழு என் மனனே என்று கொண்டு கீழோடு தலைக் கட்டவுமாம்

——————————————————————————————————

முதல் பாட்டில் சொன்ன -நித்ய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு லீலார்த்தமான ஜகத் விபூதி யோகம் சொல்லுகிறது –

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் நலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

இலனது –
அது இல்லாதான்
ஒன்றைத் தான் அனுபவித்து அத்தை ஸ்மரித்து அது இவனுக்கு இல்லை என்றால் -ஐஸ்வர் யத்தில் சிறிது குறைந்து தோன்றும்

உடையனிது
இத்தை யுடையவன் –
ஒன்றை பிரத்யஷித்து இது இவனுக்கு உண்டு என்றால் அல்லாது எல்லாம் இவனுக்கு இல்லாமையாலே அல்ப விபூதிகன் என்று தோற்றும்

என நினைவரியவன்
இரண்டு படியாலும் நினைக்க முடியாதவன்
பின்னை எங்கனே சொல்லுவது என் என்னில்

நிலனிடை
பூமி முதலான கீழ் உள்ள லோகங்களில்

விசும்பிடை
மேல் உள்ள லோகங்களில்

யுருவினன் அருவினன்
இரண்டு கோடியிலும் உண்டான சேதன அசேதனங்களை எல்லாம் யுடையவன்

நிலனும் விசும்பும் என்று கீழ் உள்ள லோகங்களுக்கும் மேல் உள்ள லோகங்களுக்கும் உப லஷணம்
உரு வென்று அசேதனம் -அரு வென்று ஆத்மா
உருவினன் என்று உருவை உடையவன் என்கிற அர்த்தத்துக்கு வாசகம் ஆமோ என்னில் காராயின காள நன் மேனியினன் -என்றால் போலே இதுவும் வாசகமாம்

புலனொடு
புலன் என்று புலப்படும் பதார்த்தங்களைச் சொல்லுகிறது
பிரமாண விஷயமான சகல பதார்த்தங்களோடு அந்தராத்மதயா கலந்து நின்று சத்தையை நோக்கும் –

புலன் நலன் –
அந்தப் பதார்த்த கதமான தோஷங்கள் தன் பக்கல் தட்டாத படி இருக்கும் –
தத் தர்மா வல்லன் -த்வா ஸூ பர்ணா சயுஜா சகாயா சமானம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதே தயோர் அந்ய பிப்பலம்
ஸ்வாத் வத்த்யனச்நன்நன்யோ அபிசாகசீதி –என்று ஓட்டை நீங்கி விளங்கா நிற்கும் என்று

ஒழிவிலன் பரந்த
பரந்தே ஒழிவிலன்
இப்படி சகலத்திலும் வியாபித்து நிற்கும் –

வந்நலனுடை ஒருவனை
முதல் பாட்டில் சொன்ன அத்யந்த வி லஷணமாய் அந்தரங்க தமமாய் இருந்துள்ள நித்ய விபூதியையும்
இரண்டாம் பாட்டில் சொன்ன அத்விதீயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தையும் யுடையவன் ஆனவனை

இந்த லீலா விபூதியோடு கூட
நணுகினம்
கிட்டப் பெற்றோம்

நாமே
அநாதி காலம் சம்சாரத்தில் மங்கி பகவத்கதா கந்த ரஹிதரான நாம் –
இப்படி உபய விபூதி யுக்தனாய் இருந்துள்ள சர்வேஸ்வரனை பூரணமாக அனுபவிக்கப் பெற்றோம் –
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்று அந்வயம்
மன்யே ப்ராப்தாஸ்ம தம்தேசம் பரத்வாஜோ யமப்ரவீத் -என்கிற ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே இப்படி பெறுவோமே என்று விஸ்மிதர் ஆகிறார்
வாநராணாம் நராணாம்ச கதம் ஆஸீத் சமாகம

நாமே
கின்னுஸ் ஸ்யாச் சித்தமோ ஹோஸ் யம்-இது ஏதேனும் பிரம ஸ்வப்நாதிகளோ என்றால் போலே

——————————————————————————————————–

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

நாம் அவன் இவன் உவன்
தம்தாமையையும் -தூரச்தனையும் -சந்நிஹிதனையும் -அதூர விப்ரக்ருஷ்டனையும்
அவள் இவள் உவள்-
தூரச்தையாயும் சந்நிஹிதையாயும் -அதூர விப்ரக்ருஷ்டையாயும் -வினவப் படுமவளுமான ஸ்திரீ லிங்க பதார்த்தங்கள்
தாம் அவர் இவர் உவர்
பூஜ்யராய் உள்ளாரில் தூரச்தராயும் சந்நிஹிதராயும் அதூர விப்ரக்ருஷ்டராயும் உள்ளார்
அது விது வுது வெது
தூரச்தமாயும் சந்நிஹிதமாயும் அதூர விப்ரக்ருஷ்டராயும் வினவப் படுவதுமான நபும்சக பதார்த்தங்களைச் சொல்லுகிறது
வீமவை யிவை வுவை
நச்வரமான பதார்த்தங்களில் சந்நிஹிதமாயும் அதூர விப்ரக்ருஷ்டமாயும் தூரச்தயுமாயும் உள்ள பதார்த்தங்களைச் சொல்லுகிறது
அவை நலம் தீங்கிவை
அவற்றில் நல்லனவும் தீயனவும் -நன்மையும் தீமையும் என்றுமாம்
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே —
ஆகக் கடவனவும் -பண்டே யானவையும் ஆய்நின்ற பதார்த்தங்களே அவரே
இவை எல்லாம் ஆகா நின்றார் பிரக்ருதர் ஆனவர்
சகல பதார்த்தங்களிலும் அந்தராத்மதயா சத்தா ஹேதுவாய் நிற்கையாலே சாமா நாதி கரண்யத்தால் சொல்லுகிறது
இப்பாட்டில் சொன்ன பிரயோஜகங்கள் ஓர் இடத்தில் உண்டாய் ஓர் இடத்திலே இன்றிக்கே ஒழிந்தவை இல்லாத இடத்தில் யோக்யமானவை கூட்டிக் கொள்ளக் கடவது

ஸ்திரீ புன்ன பும்சக பேதத்தாலும் -பூஜ்ய பதார்த்தங்கள் -நச்வர பதார்த்தங்கள் -என்கிற பேதத்தாலும்
வி லஷண அவி லஷண பேதத்தாலும் -பூத பவிஷ்ய வர்த்தமான கால பேதத்தாலும் வந்த விசேஷங்களாலே
சகல சேதன அசேதனங்களையும் சங்க்ரஹித்து -அவற்றின் உடைய ஸ்வரூபம் பகவத் அதீநம் என்றதாயிற்று

——————————————————————————————————————

ஸ்திதியும் பகவத் அதீனை என்று வையதி கரண்யத்தாலே சொல்லுகிறது –

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

அவரவர்
சத்வாதி குண பேதத்தால் வந்த பிரகிருதி பேதத்தைச் சொல்லுகிறது
தமதமது
குண பேதத்தால் வந்த பல பதத்தைச் சொல்லுகிறது
அறிவறி
அதுக்கு அடியான ஜ்ஞான பதத்தைச் சொல்லுகிறது
வகைவகை
மார்க்க பேதங்களாலே
அவரவர்
அவ்வோ பல பிரதானத்துக்கு சக்தராக ஸ்வீகரித்த தேவதைகளை
இறையவர் என
அவர் அவர்களே தம்தாமுக்கு ஸ்வாமிகள் என்று
வடி யடைவார்கள்
ஆச்ரயிப்பவர்கள்
அடி அடைவார்கள் -என்று ஸ்வ கோஷ்டி பிரசத்தியாலே அருளிச் செய்கிறார்
அவரவர் இறையவர்
அவ்வோ தேவதைகள்
குறைவிலர்
ஆஸ்ரயிக்கிற வர்களுடைய பலம் கொடுக்கைக்கு குறை யுடையவர் அல்லர்
இறையவர்
நிருபாதிக சர்வேஸ்வரன்
அவரவர் விதி வழி யடைய
ஆச்ரயிக்கிறவர்கள் வித்யுக்த பிரகாரத்தாலே ஆஸ்ரயிக்கவும்
ஆஸ்ரயணீயர் அவர்களுக்கு பல பிரதானத்துக்கு சக்தராகவும்
நின்றனரே
அந்தராத்மதயா நின்றார்

—————————————————————————————

ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் சங்கல்ப அதீனைகள் என்று சாமா நாதி கரண்யத்திலே சொல்லுகிறது –

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
சகல சேதன அசேதனங்களுடைய சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் விசேஷ்ய பர்யந்த அபிதானம் பண்ணா நிற்க இங்கனே சொல்லுமது என் என்னில்
நாமவன்-என்கிற பாட்டில் ஸ்வரூபம் சொல்லுகையாலே
இப்பாட்டில் பிரவ்ருத்தி நிவ்ருத்தி மாத்ரத்தையே நினைக்கிறது
அருணாதி கரணத்தில் ஆருண் யாதிகளே விதயம் ஆனால் போலே
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் தத் அதீநைகள்-நிவ்ருத்தி தத் அதீநை யாவது என்
ஏறிட்ட கட்டி விழும் போது ஒரு நியாமகர் வேணுமோ என்னில் -வேணும் –
ஸ்வர்க்கத்தின் நின்றும் விழுகிற த்ரிசங்குவுக்குத் தன்னால் முடிய விழ ஒண்ணாமை யாலே

என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
அநேக பிரகாரன் ஆகையாலே ஒரு பிரகாரத்தையே சொல்லி இது இப்படி என்று ஒரு நாளும் பரிச்சேதிக்க அரியவர்

என்றும் ஓர் இயல்வொடு நின்ற –
என்றும் ஒக்க இப்படி அபரிச்சேத்யதை ஸ்வ பாவராய் இருக்கை

எம் திடரே
இப்படி ஸூ த்ருட பிரமாண சித்தர்
எம் என்று தமக்கு இவ்வர்த்தம் பிரகாசிக்கையாலே ஸ்வ லாபத்தைச் சொல்கிறது –

——————————————————————————

கீழே மூன்று பாட்டிலே சேதன அசேதனங்கள் உடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருதிகள் பகவத் அதீநைகள் என்று
சாமா நாதி கரண்யத்தாலும் வையாதி கரண்யத்தாலும் சொல்லிற்று
அந்த சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் ஜகத் ஈஸ்வரர்கள் உடைய சரீராத்மா பாவ சம்பந்தம் என்கிறது –
ஜகத்தினுடைய ஸ்வரூபாதிகள் பகவத் அதீனங்கள் ஆகையாலே இந்த ஜகத்து அவனுக்கு சரீரம் என்று சொல் லிற்று ஆகவுமாம்

திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

திட விசும்பு எரி அளி நீர் நிலம்
த்ருடமான விசும்பு ஸ்வ கார்யமான பூத சதுஷ்ட்யங்கள் உண்டாவதற்கு முன்பே உண்டாய் -அவை நசித்தாலும் தான் சில நாள் நிற்குமதான ஆகாசம் என்கிறது
இது முதலான பூத பஞ்சகங்கள் என்ன
இவை மிசை படர் பொருள்
இவற்றின் கார்யமாய் விஸ்த்ருதமாகா நின்றுள்ள தேவாதி பதார்த்தங்கள் என்ன
முழுவதும்
இங்கு ஆகாசதுக்குச் சொன்ன தார்ட்ட்யம் லோகாயதாதி மத நிராசபரம்
வளியாவது -காற்று –

அவ்வவ பதார்த்தங்கள் தோறும்
உடன் மிசை யுயிர் எனக்
சரீரத்தில் ஆத்மாவைப் போலே தாரகனுமாய் -நியந்தாவுமாய் -சேஷியுமாய்
பூத இந்த்ரிய அந்தகரண புருஷாக்யம்ஹி யஜ்ஜகத் ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வ ரூபோ யதோஸ் அவ்யய-
கரந்து
வ்யாப்த பதார்த்தங்களுக்குத் தெரியாமே
எங்கும் பரந்து
உள்ளும் புறமும் வியாபித்து
இவை யுண்ட சுரனே
பிரளய தசையில் இவற்றை சம்ஹரித்த சர்வேஸ்வரன்
உளன் சுடர்மிகு சுருதியுள்
முதல் பாட்டுத் தொடங்கிச் சொன்ன அர்த்தங்கள் எல்லாவற்றுக்கும் பிரமாணம் நிர்த்தோஷ ஸ்ருதி என்கிறது
சுடர் மிகுகை யாவது -பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய் பிரமாணாந்தரங்களைக் கொண்டு பாஹ்ய குத்ருஷ்டிகளால்
அவிசால்யமாகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாகை

ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே என்றும் கேட்டே வருமதாகையாலே ஸ்ருதி என்கிறது –
உளன்
இப்படிப்பட்ட ஸ்ருதியாலே பிரதிபாத்யனாகக் கொண்டு தோற்றினவன்
தாம் அனுசந்தித்த அர்த்தங்களுக்கு ஸ்ருதியை சாஷியாக சொல்லுகையாலே அதில் சொல்லுகிற
ஸ்ரீ யபதித்வமும் நாராயண சப்த வாச்யமும் அனுசந்தித்தாராக வேணும்
இவருக்கு நிர்தோஷ ஸ்ருதியே பிரமாணம் ஆகையாலே பாஹ்யரும்
ஜகத் ஈஸ்வரர்களுக்கு அந்யதா சம்பந்தம் சொல்லும் குத்ருஷ்டிகளும் அர்த்தாத் பிரதி ஷிப்தர் ஆனார்கள் –

—————————————————————-

இப்பாட்டில் இப்படி ஸ்ருதி சித்தனான சர்வேஸ்வரன் ஆகிறான் சிருஷ்டி சம்ஹார கர்த்தாக்களாக பிரசித்தரான
ப்ரஹ்ம ருத்ராதிகளிலே ஒருவன் ஆனாலோ என்று சொல்லுகிற குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள் –

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

சுரர் அறி வரு நிலை விண்
பிரஹ்மாதிகளால் அறிய அரிதான ஸ்திதியை யுடைய முதல் பிரகிருதி –
கார்க்கி வித்யையில்-கஸ்மின்நு கல்வாகாச ஒதச்ச ப்ரோதச்ச -என்று ஆகாச சப்தத்தாலே முதல் பிரக்ருதியைச் சொல்லுகையாலே –
இங்கும் ஆகாச சப்தத்தாலே மூல பிரக்ருதியை அருளிச் செய்கிறார் –

விண் முதல் முழுவதும் வரன் முதலாயவை
மூலப் பிரகிருதி தொடக்கமான மேல் உள்ள பதார்த்தங்கள் எல்லா வற்றுக்கும் வரிஷ்டமான காரணமாய்
வரன் -வரம்

அவை முழுதுண்ட –
ஈஸ்வரனாலும் -அவன் அடியாக ப்ரஹ்மாவாலும் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ருத்ரனால் சம்ஹார்யம் ஆவது ஏகதேசம் –
சம்ஹர்த்தாவான ருத்ரனையும் -அவனுக்கு நிலம் அல்லாத மஹதாதிகளையும் அகப்பட சம்ஹரித்தவன்-

பரபரன்
ஈஸ்வரன் அடியாக ஏகதேச சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகிற ப்ரஹ்மாதிகள் அஸ்மாதிகளில் பரர்-
அந்த ப்ரஹ்மாதிகளுக்கும் பரனாகையாலே பராத்பரன் –

புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து –
ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் கொண்டு திரிபுர தஹனம் பண்ணி
பிரம்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று வைதிக ஜ்ஞானத்தை தேவர்களுக்கு உபதேசித்து
இயந்து -ஈந்து -அறிவையீந்து -என்றபடி

அரன் அயன் என –
திரிபுர தஹனம் பண்ணின ருத்ரன் என்றும் -வைதிக ஜ்ஞானம் ப்ரவர்த்தகன் ப்ரஹ்மா என்றும் அவர்களுக்கு பிரசித்தியை கொடுத்தால் போலே

வுலகு அழித்து அமைத்து உளனே-
ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாக அண்டாந்த வர்த்திகளை ஸ்ருஷ்டித்தும்
அவனுக்கு நிலம் அல்லாத ப்ராக்ருத சிருஷ்டியை ஸ்வேன ரூபேண பண்ணியும்
ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனாலே சம்ஹார்யமான அம்சத்தை சம்ஹரித்தும்
அவனுக்கு நிலம் அல்லாத ப்ராக்ருத சம்ஹாரத்தை ஸ்வேன ரூபேண பண்ணினான் சர்வேஸ்வரனே –
ஏதௌ த்வௌ விபுதஸ் ரேஷ்டௌ-
இப்படி சமஸ்த சிருஷ்டி சம்ஹாரங்களையும் தானே செய்கையாலே வேறேயும் சிலர் சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவர் உண்டு என்று சொல்ல முடியாது –
சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதுக்கும் வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
அரன் என புரம் ஒரு மூன்று எரித்து வுலகு அழித்து-அயன் எனஅமரர்க்கும் அறிவியந்து யுலகு அமைத்து உளனே-
விஷ்ணுராத்மா பகவத –

———————————————————————-

ஒரு படியாலே பிரமாண பிரமேயங்களைக் கொண்டு ஈஸ்வர ஸ்வரூபத்திலும் ஈஸ்வர விசேஷணத்திலும்
விப்ரதிபத்தி பண்ணினவர்களை நிராகரித்தது கீழ் –
இப்பாட்டில் பிரமாண பிரமேயங்கள் இரண்டும் இல்லை என்கிற சூன்யவாதியை நிராகரிக்கிறது
சூன்ய வாதியை ஹேது சொல்வதற்கு முன்பே பிரதிஜ்ஞா மாத்ரத்தில் சவிபூதிகனான சர்வேஸ்வரனுடைய உண்மையை சாதிக்கிறார் –

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

உளன் எனில் உளன்
உளன் என்று பிரதிஜ்ஞை யாகில் -அஸ்தித்வ விசிஷ்டனாய்க் கொண்டு உளனாம்
ஈஸ்வரன் உளனாம் போது ஐஸ்வர் யத்தை ஒழிய உளனாகக் கூடாமையாலே விபூதியான ஜகத்தும் உண்டாம்
அவன் உருவம் இவ்வுருவுகள்
உண்டாம் இடத்தில் பிரமாணம் காட்டுகிற படியே சரீரமாய்க் கொண்டு உளனாம்
இல்லாமையை சாதிக்கிற நான் அஸ்தி சப்தத்தால் பிரதிஜ்ஞை பண்ணுவேனோ-என்னில்
உளன் என்கிற சப்தம் இல்லாமையைக் காட்ட மாட்டாதோபாதி-இல்லை என்கிற சப்தமும் நீ நினைக்கிற அத்யந்தா பாவத்தை காட்ட மாட்டாது என்கை
உளன் அலன் எனில்
நாஸ்தி சப்தத்தாலே அவனுடைய இல்லாமையை பிரதிஜ்ஞை பண்ணில் லோகத்தில் நாஸ்தி சப்தார்த்தமே உனக்கும் அர்த்தம் ஆக வேணும்
கடோ நாஸ்தி என்றால் இங்கு இல்லை என்னுதல் இப்போது இல்லை என்னுதல் ம்ருத் பிண்டமாய் உத்பத்த்யபாவத்தாலே இல்லை என்னுதல் –
கபாலாவஸ்தமாய் இல்லை என்னுதல் -இவற்றில் ஓன்று நாஸ்தி சப்தமாகக் கண்டோம்
ஆகையாலே ஒரு படியாலே இல்லையானது பிரகாராந்தரத்தாலே உண்டாய் இருக்கையில் ஈஸ்வரனும் நாஸ்தித்வ விசிஷ்டனாய்க் கொண்டு உளனாம்
அவன் அருவம் இவ்வருவுகள்
அவனுடைய விபூதியும் ஒரு பிரகாரத்தாலே இல்லையானவை பிரகாராந்தரத்தாலே உண்டாகையாலே அபாவவிசிஷ்டமாய்க் கொண்டு உளவாம்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
அஸ்தித்வ நாஸ்தித்வங்கள் உள்ள வஸ்துவுக்கு இரண்டும் குணமாய் முடிகையாலே
உளன் இரு தகைமையோடு
ஈஸ்வரன் உளன் என்றாதல் -இலன் என்றாதல் -இரண்டு படியாலும் உளன் –
ஒழிவிலன் பரந்தே-
இவ் வழியாலே விபூதியையும் வியாபித்துக் கொண்டே ஒழிவிலன் –

——————————————————————-

கீழ்ச் சொன்ன பகவத் வ்யாப்தியினுடைய சௌகர்யத்தை சொல்லுகிறது

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென-
பரந்து குளிர்ந்த கடலில் ஜல பரமாணுக்கள் தோறும் -சதுர்தச புவநாத்மகமான அண்ட அவகாசத்திலே
ஒரு ஏகாகி வர்த்திக்குமா போலே அசங்குசிதமாக வியாபித்து இருக்கும்
இதர பூதங்களிலும் வியாப்தி இப்படியே என்கிறது –
நில விசும்பு ஒழிவறக்
முதலான பூமியையும் -முடிவான ஆகாசத்தையும் சொன்னபடி -இது அநுக்தமான பூதங்களுக்கும் உப லஷணம்-
ஓன்று ஒழியாமே வியாபித்து இருக்கும்
பூத கார்யங்களில் அதி ஷூத்ரமான சரீர சரீரிகளிலும் உண்டான வியாப்தி சொல்லுகிறது –
கரந்த சிலிடம் தொறும்-
அதி ஷூத்ர சரீரங்களிலும்
இடம் திகழ் பொருள் தொறும்
தத் அந்தர்வர்த்திகளாய் ஸ்வயம் பிரகாசமான ஆத்மாக்கள் தோறும்
கரந்து
அன்யைரத்ருஷ்டனாய் இருக்கை
எங்கும் பரந்துளன்
இப்படி சமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும்
இவையுண்ட
இவற்றை எல்லாவற்றையும் தன் திரு வயிற்றிலே வைத்து உபகரித்தவன்
கரனே
இப்படி த்ருட பிரமாண சித்தன்
இப்படி எல்லாவற்றையும் தன் திரு வயிற்றிலே வைத்து உபகரித்தவன் கிடீர் பரமாணுக்கள் தோறும் வியாபித்து இருக்கிறான் என்று கருத்து –

————————————————————-

நிகமத்தில்
இப்படி உபய விபூதி நாதத்வமான பரத்வத்தை பிரதிபாதித்த இப்பத்தும் எம்பெருமான் திருவடிகளிலே பரிசர்யா ரூபமாக பிறந்தன என்கிறது

கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

கர விசும்பு
த்ருடமான விசும்பு -ஸூ ஷ்மமான ஆகாசம்
எரி வளி நீர் நிலம்
இந்தப் பூதங்கள் ஐந்தும் நித்ய விபூதிக்கும் -ஸ்வ கார்யமான அண்டாதிகளுக்கும் உப லஷணம்
இவை மிசை வரனவில் திறல் வலி யளி பொறை
இந்த பூதங்களின் ஸ்வ பாவமான
வரனவில்-இவ்வாகாச குணமாய் வரிஷ்டமான சப்தம்
திறல் -அக்னி யினுடைய ஸ்வ பாவமான தாஹகத்வ சக்தி
வலி-வாயுவினுடைய ஸ்வ பாவமான பலம்
வலி -ஜலத்தினுடைய சைத்யத்தாலே வந்த தண்ணளி
பொறை-பூமியினுடைய ஸ்வ பாவமான ஷமை
ஆய் நின்ற பரன்
இந்த உபய விபூதியையும் சரீரத்வத் பிரகாரமாக யுடையவன் ஆகையாலே சர்வ ஸ்மாத் பரன்
அடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
திருவடிகளிலே பரிசர்யா ரூபமாக அருளிச் செய்தது
வால்மீகிர் பகவான் ருஷி என்னுமாபோலே -தம்முடைய ஆப்தியைத் தாமே அருளிச் செய்கிறார்
நிரனிறை
சப்த பௌஷ்கல்யமும் அர்த்த பௌஷ்கல்யமும்
சொல்லும் பொருளும் இசையும் தாளமும் அந்தாதியும் அடைவே நிற்கப் பாடுகை -என்னவுமாம்
யாயிரத்து இவை பத்தும் -பரன் அடி மேல் வீடே
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சமர்பிக்கப் பட்டவை
மோஷ ப்ரதம் என்னவுமாம்
இச்செய்யடைய நெல் என்னுமா போலே -மோஷம் என்றது -மோஷ ப்ரதம் என்றபடி

——————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -1-1-

April 29, 2016

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

முதல் பாட்டுக்கு கருத்து
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணாத் மகனாய்
அக்குணங்களுக்கும் நிறம் கொடுக்க வற்றான திவ்ய தேக யுக்தனாய்
ஸ்ரீ யபதியாய் -இந்த சௌந்த்ர்யாதிகளுக்கு போக்தாக்களான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் இருந்து வைத்து
தன்னுடைய நிரவதிக கிருபையாலே என்னுடைய தோஷாகரத்வத்தைப் பாராதே என்னுடைய அஜ்ஞ்ஞானம் எல்லாம் நீங்கும் படியாக
ஸ்வ விஷய பக்தி ரூபா பன்ன ஜ்ஞானத்தை நிர்ஹேதுகமாக சாதரனாய் கொண்டு தந்து அருளினான்
ஆனபின்பு அவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவிப்போம் என்று திரு உள்ளத்தோடு கூட எம்பெருமானுக்கு அடிமை செய்கையிலே பிரவ்ருத்தர் ஆகிறார்
இத்தால் பிரபந்த ஆரம்பத்திலே வஸ்து நிர்தேச நமஸ்காரங்களும் பண்ணப் பட்டனவாய் விழுந்தது –

உயர்வற உயர் நலம் உடையவன் –
ஆனந்த வல்லியில் சொல்லுகிறபடியே ஒரோ குணத்தின் சந்நிதியிலே வியதிரிக்த சகல அர்த்தகதமான எல்லாப் படியாலும் உள்ள எல்லா உயர்த்தியும்
ஆதித்ய சந்நிதியிலே நஷத்ராதிகளைப் போலே யுண்டாய் –அவற்றை இல்லை என்னலாம் படியாய் அவை தனக்கு
அவதி உண்டாய் இருக்கை அன்றிக்கே கால தத்வம் உள்ளதனையும் அனுசந்தியா நின்றாலும் மேல் மேல் என உயர்ந்து
காட்டா நிற்பனவான கல்யாண குணங்களை யுடையான்
நலம் என்ற இடத்தில் –ஏக வசனம் -குண ஜாதி பரம்
நலம் ஆவது குண விபூத்யாதிகளை அனுபவிக்கையாலே வந்த ஆனந்த குணம் ஆகவுமாம் –
ஆனந்தம் என்று ஆனந்த ஸ்ருதிகளில் பிரசித்தம்
குண நிரபேஷமாக தானே விலஷணமாய் -தன்னைப் பற்றி குணங்கள் நிறம் பெறும்படியான திவ்யாத்ம ஸ்வரூபத்தின் யுடைய
உபநிஷத் பிரசித்தியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

அவன் –
முன்பு சொன்ன நன்மைகளில் காட்டில் மேல் பட்டதொரு நன்மை சொல்லுகைக்காக –அவன் -என்று நிர்தேசிக்கிறது –
இப்படியே மேல் அவன் அவன்களுக்கும் பொருள்
அவன் -என்று பலகால் சொல்லுகிறதுக்கு கருத்து -இப்பாட்டில் பிரதி பாதிக்கிற குணங்கள் தனித்தனி ஈஸ்வரத்வ சாதகங்கள் என்று தோற்றுகைக்காக-
மயர்வற –
ஸ்வ விஷயத்தில் எனக்கு அநாதியாய் வருகிற அஜ்ஞ்ஞானம் எல்லாம் போம்படி
மதி நலம் –
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம்
அருளினன்-
இத்தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுகமாக தன்  கிருபையாலே தந்து அருளினான் –
எனக்குத் தந்து அருளினான் என்னாது ஒழிவான் என் என்னில்-அசந்நேவ ச பவதி -என்று சொல்லுகிற கணக்காலே பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே

அயர்வறும் அமரர்கள் அதிபதி
பகவத் ஜ்ஞானத்துக்கு விச்சேதம் இல்லாமை ஸ்வ பாவமாய் -அவ்வனுபவதுக்கு ஒரு நாளும் விச்சேதம் இன்றிக்கே இருக்கிற நித்ய ஸூரிகளுக்கு ஸ்வாமி-
அமரர்கள் என்கிற பஹூ வசனத்துக்கு முக்யார்த்தத்வம் ப்ராப்தம் ஆகையாலே அவர்கள் தங்களுக்கு எண்ணில்லை என்கிறது –

துயரறு சுடரடி –
துயர் அறும் ஸ்வ பாவமாய் -அப்ராக்ருத தேஜோ ரூபமான திருவடிகளை
திருவடிகளுக்கு துயர் உண்டோ என்னில் ஆஸ்ரிதர் உடைய துயர் திருவடிகளுக்குத் துயர்
அவனைத் தொழுது எழு என்னாதே திருவடிகளைத் தொழுது எழு என்பான் என் என்னில்
ஸ்தனந்த்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே அடியவனானவனுக்கு திருவடிகளிலே தலை மடுக்கை முறைமையாகையாலே –

தொழுது எழு
அடிமை யால் அல்லாது செல்லாத் தன்மையாய் இருக்கச் செய்தே -அநாதி காலம் அடிமை இழந்து உறாவி
இல்லாதார் கணக்காய் இருக்கிற நீயே எம்பெருமானுடைய திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவீ

என் மனனே
எம்பெருமானோடு ப்ரத்யா சன்னமான திரு உள்ளத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு என் மனனே என்கிறார் –

சன்மாத்ரமே வஸ்து என்கிற வாதமும்
ஜீவ பரர்களுடைய பேதம் ஔபாதிகம் -மோஷ தசையில் எல்லாம் ஓன்று -என்கிற வாதமும்
இவருக்கு சித்தாந்தம் அன்று என்னும் இடம் வியக்தம் இப்பாட்டில் -பரராமவர்களுக்கு விருத்தம் ஆகையால்

இப்பாட்டில் அவன் அவன் என்கிற மூன்று பர்யாயத்திலும் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று
வாக்ய பேதம் பண்ணி யோஜிப்பர்–நமோ நம-இத்யாதி ச்லோகவத் பிரதி விசேஷணம் ஈடுபடுகையாலே –

————————————————————————–

இரண்டாம் பாட்டில்
அகில ஹேய ப்ரத்ய நீகதையாலும் -கல்யாணை கதாநதையாலும் -சேதன அசேதனங்களில் காட்டில் அத்யந்த விலஷணமாய்
ஜ்ஞானாநந்தங்களே தனக்கு வடிவாய் -முதல் பாட்டில் அனுபவித்த குணங்களுக்கு ஆச்ரயமாய் இருந்துள்ள
நிஷ்க்ருஷ்டமான திவ்யாத்ம ஸ்வரூபத்தை சோபான க்ரமத்தாலே அனுபவிக்கிறார்

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணரளவிலன்
யோக அப்யாசத்தாலே மனசில் உண்டான அவித்யாதி தோஷங்கள் எல்லாம் போம் காட்டில்
விகசிதமாய் மேல் மேல் எனக் கிளரா நின்றுள்ள மானஸ ஜ்ஞான கம்யமான ஆத்மாவின் படி அல்லாதான்
பொறியுணர் யவையிலன்
இந்த்ரியங்க ளால் அறியப்படும் ப்ராக்ருத பதார்த்தங்களின் யல்லாதான்
சேதனரில் காட்டில் விலஷணன் என்ற போதே அசேதன வைலஷண்யம் சொல்லிற்று ஆகாதோ என்னில்
அவனோடு ஒவ்வாமைக்கு அசேதனனோடு சேதனனோடு ஒரு வாசி இல்லை என்னும் இடம் சொல்லுகைக்காக த்ருஷ்டாந்தயா சொல்லிற்று
சேதன அசேதனங்களில் காட்டில் விலஷணன் என்ன அமையாதோ
அவற்றைக் காணும் பிரமாணங்களால் காண முடியாது என்பான் என் என்னில்
ஏக பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை என்று கொண்டு அத்யந்த வைலஷண்யம் தோற்றுகைக்காக –

இனன்-
என்கிறது இப்படிப்பட்டான் என்கிற மேல் சொல்லக் கடவ படியைச் சொல்லுகிறது –

உணர் முழு நலம்
கட்டடங்க ஜ்ஞானமும் -ஆனந்தமுமாய் இருக்கும் –

எதிர் நிகழ கழிவினும் இனன் இலன்
பூத பவிஷ்யத் வர்த்தமான கால த்ரயத்திலும் ஒத்தார் இலன்
சேதன அசேதன வைலஷண்யம் முதலிலே சொல்லிற்று இ றே
மீளவும் தன்னோடு ஒத்தார் இல்லார் என்பான் என் என்னில்
திரள ஒப்பு இல்லையே யாகிலும் ஒருவகையாலும் ஒத்தாரை இல்லாதான் என்கிறது -என்றார்கள் சிலர்
அதுவும் சேதன அசேதன வைலஷண்யம் சொன்ன போதே சொல்லிற்றாம்
ஆனபின்பு அவனோடு ஒவ்வாது என்று சொல்லுகைக்கு சத்ருசமாய் இருப்பதொரு பதார்த்தத்தை யுடையான் அல்லன் என்கிறது –

மிகு நரையிலனே
மிகு நரை இல்லாதான்
ஒத்தாரை இல்லாத நிலத்திலே மிக்காரை இல்லான் என்கிறது -மிக்கார் சம்பவியாப் போலே ஒத்தாரும் சம்பவியாது என்று தோற்றுகைகாக

எனன் உயிர்
இங்கனே இருக்கிற இவன் எனக்குத் தாரகன் –

————————————————————————–

முதல் பாட்டில் சொன்ன -நித்ய விபூதி உக்தனான எம்பெருமானுக்கு லீலார்த்தமான ஜகத் விபூதி யோகத்தை சொல்லுகிறது

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் நலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

இலனது உடையனிது என நினைவரியவன் நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
ஒன்றைச் சுட்டி அத்தை யுடையன் அல்லன் என்னில் ஐஸ்வர்யத்தில் சிறிது குறைந்து தோற்றும் –
ஒன்றைச் சுட்டி இத்தை யுடையன் என்னில் இது ஒழிய அல்லாது எல்லாம் இவனது அல்லாமையாலே அத்யல்ப விபூதிகனாம்
இவ்விரண்டு படியாலும் கருத முடியாதவன் –
பின்னை எங்கனே சொல்லுவது என்னில் -கீழில் லோகங்களிலும் மேலில் லோகங்களிலும் உண்டான சேதன அசேதனங்களையும் எல்லாம் யுடையவன்
நிலமும் விசும்பும் என்று கீழும் மேலும் உண்டான லோகங்கள் எல்லா வற்றுக்கும் உப லஷணம்
உருவினன் அருவினன் என்றால் சேதன அசேதனங்கள் உடையவன் என்னும் பொருளுக்கு வாசகம் ஆமோ என்னில்
காராயின காள நன் மேனியினன்-என்றால் போலே இதுவும் வாசகமாம் –

புலனொடு புலன் நலன் ஒழிவிலன் பரந்த வந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே
பிரமாண கோசரமான பதார்த்தங்களோடு அந்தராத்மதயா கலந்து நின்றானே யாகிலும்
அவற்றின் தோஷங்கள் தன் பக்கல் தட்டாத படியாய் இப்படி எல்லா பதார்த்தங்களிலும் வியாபித்து இருப்பதும் செய்து
இந்த லீலா விபூதியோடு முதல் பாட்டில் சொன்ன அத்யந்த விலஷண தமமாய் அந்தரங்க தமமாய் இருந்துள்ள நித்ய விபூதியை யுடையனாய்
அத்விதீயன் ஆனவனை அநாதிகாலம் சம்சாரத்திலே மங்கி பகவத் பக்தி கந்த ரஹிதரான நாம் பரிபூர்ணமாக அனுபவிக்கப் பெற்றோம் என்று திரு உள்ளத்தோடு கூட
மன்யே ப்ராப்தாச்மா தம் தேசம் -என்ற ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே ப்ரீதராய் விஸ்மிதர் ஆகிறார்

————————————————————————–

இத் திருவாய் மொழியில் -சேஷித்த பாட்டுக்களால் இம் மூன்றாம் பாட்டில் பொருளே விஸ்தரிக்கப் படுகிறது –
நாலாம் பாட்டு -நாநா விதமான சொற்களாலே சொல்லப்படுகிற எல்லாப் பதார்த்தங்களின் உடைய
ஸ்வரூப ஸ்வ பாவம் பகவத் அதீநம் என்று சாமாநாதி கரண்யத்தாலே சொல்லுகிறது

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

நாம் அவன் இவன் உவன்
தம்தாமையையும் -தூரச்தனையும் -சந்நிஹிதனையும் -அதூர விப்ரக்ருஷ்டனையும் சொல்லுகிறது
அவள் இவள் உவள்-
தூரச்தையாயும் சந்நிஹிதையாயும் -அதூர விப்ரக்ருஷ்டையாயும் -வினவப் படுமவளுமான ஸ்திரீ லிங்க பதார்த்தங்களைச் சொல்லுகிறது
தாம் அவர் இவர் உவர்
பூஜ்யராய் உள்ளாரில் தூரச்தராயும் சந்நிஹிதராயும் அதூர விப்ரக்ருஷ்டராயும் உள்ளாரைச் சொல்லுகிறது
அது விது வுது வெது
தூரச்தமாயும் சந்நிஹிதமாயும் அதூர விப்ரக்ருஷ்டராயும் வினவப் படுவதுமான நபும்சக பதார்த்தங்களைச் சொல்லுகிறது
வீமவை யிவை வுவை
நச்வரமான பதார்த்தங்களில் சந்நிஹிதமாயும் அதூர விப்ரக்ருஷ்டமாயும் தூரச்தயுமாயும் உள்ள பதார்த்தங்களைச் சொல்லுகிறது
அவை நலம் தீங்கிவை
அவற்றில் நல்லனவும் தீயனவும்
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே
ஆகக் கடவனவும் -பண்டே யானவையும் ஆய்நின்ற பதார்த்தங்களே அவரே
இப்பாட்டில் சொன்ன பிரயோஜகங்கள் ஓர் இடத்தில் உண்டாய் ஓர் இடத்திலே இன்றிக்கே ஒழிந்தவை இல்லாத இடத்தில் யோக்யமானவை கூட்டிக் கொள்ளக் கடவது

————————————————————————–

அஞ்சாம் பாட்டில் சகல பதார்த்தங்கள் உடைய ஸ்திதியும் எம்பெருமானாலே என்கிறது –

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
தம்தம் ப்ரக்ருத் அனுகுணமாக விவித பல அபி சந்தியை யுடைய அதிகாரிகள் தந்தாம் அறிந்த மார்க்க பேதங்களாலே
தங்களுடைய அபேஷித பல பரதனா சக்தரான அவ்வவ தேவதைகளை
இவர்களே நமக்கு அசாதாராண ஸ்வாமிகள் என்று ஆச்ரயிப்பார்கள் –

அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதி வழி யடைய நின்றனரே –
ஆஸ்ரயணீயர் ஆஸ்ரயிக்கிற வர்களுடைய அபேஷிதம் செய்கைக்கு குறை யுடையார் அல்லர்
ஆச்ரயிக்கிறவர்கள் ஆச்ரயணீயரை வித்யுக்த்த பிரகாரமே ஆச்ரயிக்கவும்
அவர்கள் அவர்களுக்கு பல பிரதான சக்தராகவும் சர்வேஸ்வரன் அந்தராத்மதயா நின்றான் –

————————————————————————–

சேதன அசேதனாத்மக சமஸ்த வஸ்துக்களுடைய சமஸ்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் பகவத் சங்கல்ப அதீநம் -என்கிறது –

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

அநேக பிரகாரனாய் இருக்கையாலே -ஒரு பிரகாரத்தைச் சொல்லி இதுவே படி என்று ஒரு நாளும் பரிச்சேதிக்க அரியனாய்
அபரிச்சேத்யைக ஸ்வரூபனாய்-இப்படி ஸூ த்ருட பிரமாண சித்தனாய் யுள்ளவர்
எம் -என்று ஸ்வ லாபத்தைச் சொல்லுகிறது
நாலாம் பாட்டில் ஸ்வரூபதா ததீந்யம் சித்தம் ஆகையாலே இப்பாட்டில் பிரவ்ருத்தி நிவ்ருத்யம்ச தத் அதீன்யத்திலே தாத்பர்யம் ஆயிற்று
அருணயா பிங்காஷயா சோமாங்க்ரீணாதி-என்கிற இடத்தில் ஆருண் யாதிகளே விதயம் ஆனால் போலே –

————————————————————————–

கீழ் மூன்று பாட்டிலாக –
சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகள் பகவத் அதீனம் என்று சாமா நாதி கரண்யத்தாலும்–வையதி கரண்யத்தாலும் பேசி
அந்த சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனமான ஜகத் -ஈச்வரகளுக்கு உண்டான சரீர சரீரி பாவ சம்பந்தத்தைச் சொல்லுகிறது –
ஜகத்தின் உடைய ஸ்வரூப ஸ்திதி த்யாதிகள் பகவத் அதீனம் ஆகையால் இந்த ஜகத்து அவனுக்கு சரீரம் என்கிறது என்றும் சொல்வர்

திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதும் யாய்
ஸ்வ கார்யமான பூத சதுஷ்ட்யங்கள் உண்டாவதற்கு முன்பே உண்டாய் -அவை நசித்தாலும் தான் சில நாள் நிற்குமதான ஆகாசம்
முதலான பூத பஞ்சகங்களையும் உபாதானமாகக் கொண்டு கார்யமாய் விஸ்த்ருதமாகா நின்றுள்ள
தேவாதி பதார்த்தங்களை எல்லாம் உண்டாக்கி –
இங்கு ஆகாசதுக்குச் சொன்ன தார்ட்ட்யம் லோகாயதாதி மத நிராசபரம்
எரியாவது -தேஜஸ் ஸூ
வளியாவது -காற்று –

யவை யவை தொறும் உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே
அவ்வவ பதார்த்தங்கள் தோறும் சரீரத்தில் ஆத்மாவைப் போலே தாரகனுமாய் நியந்தாவுமாய் கொண்டு
வ்யாப்ய பதார்த்தங்களுக்கு தெரியாமே வியாபித்து -அவ்வளவு அன்றிக்கே அப்பதார்த்தங்கள் உடைய புறம்பும் வியாபித்து
காலத்திலே இவற்றை சம்ஹரிப்பதும் செய்த சர்வேஸ்வரன்
முதல் பாட்டு தொடங்கி சொன்ன படியே பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய்
அபாதித பிரமாணமும் ஆகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாய்
ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே -என்றும் கேட்டே வருகையாலே ஸ்ருதி என்று சொல்லப் படுகிற வேதத்திலே
பிரதிபாத்யனாய்க் கொண்டு உளன் –
தாம் அனுசந்தித்த அர்த்தத்துக்கு ஸ்ருதியை சாஷியாகச் சொல்லுகையாலே ஸ்ருதியில் சொல்லுகிற
ஸ்ரீ யபதித்வமும் நாராயண சப்த வாச்யத்வமும் அனுசந்தித்தாராக வேணும்
இவ்வர்த்தத்தில் நிர்தோஷ ஸ்ருதியே பிரமாணமாக பிடிக்கையாலே வேத விருத்தரான பாஹ்யரும்
ஜகத் ஈஸ்வரர்களுக்கு அந்யதா சம்பந்தம் சொல்லும் குத்ருஷ்டிகளும் அர்த்தாத் பிரதிஷிப்தர் ஆனார்கள்

——————————————————-

இப்பாட்டில் இப்படி ஸ்ருதி சித்தனான சர்வேஸ்வரன் ஆகிறான் சிருஷ்டி சம்ஹார கர்த்தாக்களாக பிரசித்தரான
ப்ரஹ்ம ருத்ராதிகளிலே ஒருவன் ஆனாலோ என்று சொல்லுகிற குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள்

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய-
ப்ரஹ்மாதிகள் அறிய ஒண்ணாத ஸ்திதியை யுடைத்தாய் இருந்த பிரகிருதி தொடக்கமாக மேல் உள்ள ப்ராக்ருத பதார்த்தங்கள்
எல்லா வற்றுக்கும் வரிஷ்டமான காரணமாய்
விண் -என்று ப்ராக்ருதி கார்யமான ஆகாச வாசி சப்தத்தை காரணமான பிரக்ருதியிலே பிரயோகிக்கிறார் –

அவை முழுதுண்ட –
ஈஸ்வரனாலும்-அவன் காட்டிய வழியை யுடைய ப்ரஹ்மாவாலும் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ருத்ரனால் சம்ஹார்யம் ஆவது ஏக தேசம் –
சம்ஹர்த்தாவான ருத்ரன் தன்னையும் -அவனுக்கு நிலம் அன்றிக்கே இருந்துள்ள மஹதாதிகளையும் அகப்பட சம்ஹரித்தவன்

பரபரன்
அவன் காட்டின வழியாலே ஏகதேச சிருஷ்டியையும் ஏக தேச சம்ஹாரத்தையும் பண்ணுகையாலே
அஸ்மத் தாதிகளைக் காட்டில் பரராய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நிலம் அல்லாத
சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகையாலே அவர்களுக்கும் பரன் என்றவாறு –

புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –
ருத்ரன் திரிபுர தஹனம் பண்ணினான் என்றும் -ப்ரஹ்மா வைதிக ஜ்ஞானத்தை தேவர்களுக்கு
உபதேசித்தான் என்றும் அவர்களுக்கு பிரசித்தியைக் கொடுத்து
அந்தராத்மாவாக நின்று தானே அவ்வுபகாரங்களை லோகத்துக்கு பண்ணினால் போலே
சமஸ்த சிருஷ்டி சம்ஹாரங்களையும் தானே செய்து அருளுகையாலே வேறேயும் சிலர்
சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுவார் உண்டு என்று சொல்ல முடியாது –

———————————————————————-

இப்படி பிரமாணமும் பிரமேயமும் ஒருபடி உளவாகக் கொண்டு ஈஸ்வர ஸ்வரூபத்திலும்-ஈஸ்வர விசேஷணத்திலும்
விபிரதிபத்தி பண்ணின வாதிகளை எல்லாம் நிராகரித்து
பிரமாணமும் இல்லை பிரமேயமும் இல்லை -சர்வமும் சூன்யம் -ஆதலால் வேதமும் இல்லை -வேத ப்ரமேயமாயும் யுள்ள ஈஸ்வரனும்
-அவனுடைய விபூதியையும் உள்ள ஜகத்தும் இல்லை -என்கிற சூன்யவாதியை நிராகரிக்கிறது

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

எங்கனே என்னில்
சூன்யவாதியான உன்னைக் கேட்போம் -ஈஸ்வரனை இல்லாமையை சாதிக்க நினைக்கிற நீ நினைத்த பொருளை
ஒரு வாக்யத்தாலே பிரதிஜ்ஞை பண்ணி -பின்னை ஹேதுவாலே அத்தை சாதிக்க வேணும் இ றே-
அவ்விடத்தில் நீ ஹேது சொல்லுவதற்கு முன்பே உன் பிரதிஜ்ஞையைக் கொண்டு ஈஸ்வரன் உளன் என்னும் இடமே சாதிப்பன் –
அதுக்காக ஈஸ்வரனுடைய இன்மையை பிரதிஜ்ஞை பண்ணுவது உளன் என்ற சொல்லாலேயோ -இலன் என்ற சொல்லாலேயோ -என்ன
இப்படிக் கேட்கைக்கு கருத்து என் என்னில் –உளன் என்ற சொல்லால் இன்மையைக் காட்ட ஒண்ணாதாப் போலே
இலன் என்ற சொல்லாலே நீ காட்ட நினைத்த இன்மை காட்ட ஒண்ணாது என்றவாறு –அது எங்கனே என்னில்
உண்டு என்ற சொல்லாலும் இல்லை என்ற சொல்லாலும் லோகத்தில் யாதொரு பொருள் விளையக் கண்டோம்
அப்பொருளே உன் சொற்களுக்கும் பொருளாக வேணும் இ றே
கண்டு அறியாததொரு பொருளை இச்சப்தங்கள் காட்ட மாட்டாது இ றே –
லோகத்தில் குடம் உண்டு என்றால் குடம் என்று சொல்லப் படுகிற பொருள் உண்மை எனபது ஒரு தர்மத்தை யுடைத்து என்று தோற்றா நின்றது
அவ்விடத்தில் குடமாவது -மண்ணாலே பண்ணிற்று ஓன்று -அதினுடைய உண்மையாவது மண்ணும் உருளையும் அன்றியே
இரண்டுக்கும் நடுவில் அவஸ்தையாய் வாயும் வயிறும் உடைத்தான மண்ணாய் இருக்கை
இப்படியால் ஈஸ்வரன் உளன் என்னில் உளனாய் வரும் -இச் சொல்லால் அவனுடைய இன்மையைக் காட்ட ஒண்ணாது –
இப்படி ஈஸ்வரன் உளன் என்னவே -ஐஸ்வர்யத்தை ஒழிய ஈஸ்வரன் உளனாகக் கூடாமையாலே அவனுடைய விபூதியான ஜகத்தும் உண்டாம்
-ஆமிடத்திலும் அவனுக்கு சரீரமாயே உளதாம் -இப்பொருள் அவன் உருவம் இவ்வுருவுகள் -என்ற இடத்தில் சொல்லப் பட்டது –

இனி ஈஸ்வரன் இலன் என்ற சொல்லாலே -அவனுடைய இன்மை காட்ட நினைத்தாய் ஆகில் -இல்லை என்ற பொருளிலும்
லோகத்தில் கண்டபடி பொருள் கொள்ள வேணும்
லோகத்தில் குடம் இல்லை என்றால் -இங்கு இல்லை என்னுதல் -இப்போது இல்லை என்னுதல்-மண் உருளையாய் இருந்து
குடமாய் பிறந்தது இல்லை என்னுதல் -தளர்ந்து ஓடுகளாய் கிடந்தது என்னுதல் -இவ்வளத்தில் ஓன்று பொருளாகக் கண்டோம்
இப்படி அன்றியே வெறுமனே குடம் இல்லை என்னில் எங்கும் எப்படியும் குடம் இல்லை என்று சொல்லிற்றாக வேணும் –
அப்படியாகில் எப்படியும் குடம் என்று ஓன்று அறிய உபாயம் இல்லை யாகையால் குடம் என்று சொல்லவும் கூடாது -நினைக்கவும் கூடாது –
ஆதலால் ஓன்று இல்லை என்பானுக்கு ஒருபடியாய் இன்றியே மற்றப்படியால் யுண்டாக இசைய வேணும்
ஆதலால் இங்கு இல்லை என்றது -அப்பாலே யுண்டு என்றவாறு -இப்போது இல்லை என்று மற்றப் போது யுண்டு என்றவாறு
குடம் இல்லை என்றது மண் உருளை யாதல் ஓடுகளாய் ஆதல் இருந்தது என்றவாறு
-இப்படியால் இன்மை யாவது மற்றொரு படியால் உண்மையாகத் தோற்றிற்று

இப்படியால் ஈஸ்வரன் இல்லை என்றானுக்கும் அவன் தன்னையும் அவன் ஐஸ்வர் யங்களையும் ஒருபடியால் உளவாகக் கொண்டு –
அப்படியால் உண்மை என்ற சொல்லாலே சொன்னானாக வேணும்
ஆதலால் உளன் என்ற சொல்லால் அவனும் அவன் ஐஸ்வர் யமும் சித்தித்தால் போலே இலன் என்ற சொல்லாலும்
அவன் தன்னுடைய உண்மையும்-அவன் ஐஸ்வர் யத்தின் உண்மையும் சித்தமாய் வந்தது
இப்பொருள் -உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் -என்றத்தால் சொல்லப் பட்டது
அவன் அருவம் என்றது -அபாவம் என்ற சொல்லாலே சொல்லப் பட்டதான உளதாய் இருந்த அது என்றவாறு

இப்படியால் உண்மையும் இன்மையும் ஆகிறன உள்ள வஸ்துவுக்கே இரண்டு குணமாய் முடிந்தன –
ஆதலால் ஈஸ்வரன் உளன் என்றாதல் -இலன் என்றாதல் -இரண்டு படியாலும் உளனாம்
இவ்வழி யாலே வேதம் உண்டாயிற்று -அதில் சொன்னபடியே அவன் தான் எங்கும் பரந்து உளன் ஆனான்
-இப்பொருள் இப்பாட்டில் மேல் இரண்டு அடியாலும் சொல்லுகிறது -இப்பாட்டு ஆழ்வான் யோஜித்த படி –

——————————————————————-

கீழ்ச் சொன்ன பகவத் வ்யாப்தியினுடைய சௌகர்யத்தை அருளிச் செய்கிறார் –

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென
பரந்த குளிர்ந்து இருந்த கடலில் ஜல பரமாணு தோறும் அசங்குசிதமான அண்ட அவகாசித்தில் போலே வியாபித்து இருக்கும்
நில விசும்பு ஒழிவறக் கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே-
இப்படி எல்லா பூதங்களிலும் -பௌதிகமான ஷூத்ர சரீரங்களிலும் -தத் அந்தர்வர்த்திகளாய்-ஸ்வயம் பிரகாசமாய் உள்ள
ஆத்மாக்கள் தோறும் அன்யைரத்ருஷ்டனாய்க் கொண்டு சமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும்
இவற்றை எல்லாம் தன் திரு வயிற்றிலே வைத்து சம்ஹரித்தவன் கிடீர் பரமாணுக்களிலும் வியாபித்து இருக்கிறான் என்று கருத்து

————————————————————-

நிகமத்தில்
சமஸ்த கல்யாண குணகரனாய்-நிரவதிக க்ருபாம்போதியாய் -தனக்கு சத்ருசமான திவ்ய தேஹத்தை யுடையனாய் –
ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணைகதா நத்வங்களாலே சேதன அசேதனங்களில் காட்டில் அத்யந்த விலஷண ஜ்ஞானானந்த ஸ்வரூபனுமாய்
ஸ்வ அதீனமான அசேஷ சித் அசித் ஸ்வரூப ஸ்திதி சேஷ்டைகளை யுடையனாய் சமஸ்த ஜகத்தையும் சரீரதயா சேஷமாக யுடையனாய்
அப்ரதிபஷமாம் படி வேத பிரதிபாத்யனாய் வேதங்களில் பரராகச் சொல்லுகிற ருத்ராதிகளுக்கும் பரனாய்
பிரமாணமும் இல்லை பிரமேயமும் இல்லை என்கிற சூன்ய வாதிகளால் அவிசால்யமான தன்மையை யுடையனாய் பரமாணுக்கள் தோறும் புக்கு
அணு தரனாய் வியாபிக்க வல்லனாய் ஸ்ரீ யபதியாய் நாராயணான சர்வேஸ்வரனை தத் பிரசாத லப்தையான ஜ்ஞான த்ருஷ்டியாலே சாஷாத் கரித்து
தத் அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே தனக்குத் தானே பிறந்து இவனுடைய ஏவம் வித பரத்வ பிரதிபதகமாய்
சப்தச் சேர்த்தியையும் அர்த்த பௌஷ்கல்யத்தையும் யுடைத்தாய் இருந்துள்ள இப்பத்தும் எம்பெருமான் திருவடிகளிலே பரிசர்யாரூபமாக பிறந்தன என்கிறார் –

கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

ஸ்வ பாவமான பூத பஞ்சகங்களையும் -தத் உபலஷிதமான கார்ய வர்க்க நித்ய விபூத்யாதிகளையும்
யுடையவன் ஆகையாலே –சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே
கரவிசும்பு -என்னும் இடத்துக்கு -அல்லாத பூதங்களில் காட்டில் அச்சதயா கரந்து இருக்கை என்றும் சொல்லுவர்
திண்மை சொல்லிற்று ஆகவுமாம்
நிரனிறை என்கிற இடத்துக்கு -அர்த்த பௌஷ்கல்யமும்-சப்த பௌஷ்கல்யமும்
பாதபத்தோ அஷர சமஸ்த அந்த்ரீலய சமன்வித -என்றால் போலே சொல்லும் பொருளும் இசையும் தாளமும் அந்தாதியும் அடைவே நிறுத்தப் படுகை என்றும் சொல்லுவர்
பரன் அடி மேல் சொன்ன இவ்வாயிரத்து இப்பத்தும் மோஷ ப்ரதம் என்றும் சொல்லுவார்கள் –

——————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-4-

April 29, 2016

நாலாம் திருவாய் மொழியில்
கீழ் மநோ வாக் காயங்களாலே அனுபவிக்கப் பாரித்த இவர்க்கு ஈஸ்வரன் அப்போதே வந்து முகம் காட்டாமையாலே
ஆற்றாமை மேலிட்டு ஆண் பெண்ணாய் ஒரு பிராட்டி தசையை ப்ராப்தராய் -அவள் பேச்சாலே தம்முடைய தசையை அவனுக்கு அறிவிக்கிறார்
ஆர்த்தோ வா யதிவா திருப்த -என்கிற விஷயம் முகம் காட்டாது ஒழிவான் என் என்னில்
தன்னை புஜிக்கைக்கு ஈடான விடாய் பிறக்கைக்காக-பிஷக்குகள் வியாதிக்ரசர்க்கு போஜன நிரோதம் பண்ணுமா போலே எழ நின்றான் –
ஆனால் பிராட்டிமார் தசை பிறந்தபடி எங்கனே என்னில் -அனன்யார்ஹ சேஷத்வத்தாலும் -அந்த சேஷத்வம் அடியாக
அவனோடு கலந்தால் பிராட்டிமார்க்கு உண்டான ரசம் பிறக்கையாலும்
தத் ஏக போகத்வத்தாலும் பிரியில் தரியாமை-நச சீதா த்வயாஹீ நா நாசம் அஹமபி ராகவ -என்று பிராட்டியோடு ஒத்து இருக்கையாலும்
பிராட்டிமாரோடு சாம்யம் யுண்டாகலாம்-
ஆனால் பிராட்டி தானாகப் பேசுவான் என் என்னில் –
தாமரை திருவடிகளுக்குப் போலியாய் இருக்க -ஸூ சத்ருசம் ஆகையாலே மண் விண் முழுது அளந்த ஒண் தாமரை -என்று
தாமரையாகப் பேசுகிறாப் போலே இங்கும் பிராட்டியாகப் பேசுகிறது
ராஜ ருஷி ப்ரஹ்ம ருஷியானபின்பு ஷத்ரியம் பின்னாட்டிற்று இல்லை இ றே -எதிர்த்தலையில் பும்ஸ்வத்தை அழித்து-பெண் உடை உடுத்தும் படி இ றே
அவனுடைய புருஷோத்தமத்வம் இருப்பது
ஆகையாலே இயற்கையிலே புணர்ந்து -அது தான் தெய்வப் புணர்ச்சி யாகையாலே தைவம் பிரிக்கப் பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிறாள் ஒரு பிராட்டி
அவன் தானே வரப் பற்றாமையாலே -அவன் வராமைக்கு அடி நம் பக்கல் உண்டான அபராதம் என்று பார்த்து -அவனுடைய
அபராத சஹத்வத்தை அறிவிக்கவே வரும் என்று -தன் உத்யானத்திலே பஷிகளைத் தூது விடுகிறாள் –
ஆனால் பஷிகளைத் தூது விடுவான் என் என்னில் -பேர் அளவுடையரான சக்கரவர்த்தி திருமகனும் பிராட்டியும்
யுக்தாயுக்த நிரூபணம் ஷமர் அன்றிக்கே
அசோகசோகாபநுதே-என்றும் -ஹம்ஸ காரண்ட வா கீர்ணாம்-என்றும் -சர்வாணி சரணம்யாமி ம்ருக பஷி கணா நபி என்றார்கள் இ றே
அப்படியே இவளும் -இவை நம் வார்த்தை அறியா -என்று பார்க்க மாட்டாதே -கமன சாதனமான சிறகு உண்டு -என்ற இவ்வளவைப் பார்த்து தூது விடுகிறாள்
பட்டர் -சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்து -வானர ஜாதி வீறு பெற்றால் போலே காண்-ஆழ்வார்கள் அவதரித்து பஷி ஜாதி வீறு பெற்றபடி –
தன்னுடைய சேஷத்வத்தை அனுசந்தித்தால் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று அவன் செய்தபடி கண்டு இருக்கலாம்
அத்தலையில் வைலஷண்யத்தை அனுசந்தித்தால் தூது விட்டு அல்லது இருக்க ஒண்ணாது
இவருக்கு யாத்ருச்சிக சம்ச்லேஷமாவது -அநாதி காலம் இவரைத் தன்னோடு சேர விடுகையிலே அவசர ப்ரதீஷனாய்ப் போந்த ஈஸ்வரன்
இவர் பக்கலிலே அப்ரதிஷேதம் உண்டாவதொரு அவகாசம் பெற்று அவன் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற இது –
இவருக்கு விச்லேஷமாவது -அந்த ஜ்ஞானம் பேற்றோடு தலைக் கட்டாமை –

——————————————————————————————-

முதல் பாட்டிலே
தன் கண் வட்டத்திலே சேவலோடு கலந்து இருக்கிற தொரு நாரையைப் பார்த்து
-நீ அவனுக்கு என் தசையை அறிவிக்க வேணும் -என்கிறாள்

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவா வென்று எனக்கு அருளி
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-

அஞ்சிறைய –
பிரஜைக்கு தாய் முலையிலே கண் ஓடுமா போலே தனக்கு உபகாரமான சிறகிலே யாயிற்று முற்படக் கண் வைத்தது –
ஆச்சார்யனுடைய ஞானத்தை அனுமித்து சிஷ்யன் உபசத்தி பண்ணுமா போலே கடகருடைய பரிகரவத்தையை அறிந்து பற்ற வேணும் இ றே
அம் -என்று அழகு –சிறை -என்று சிறகு -அழகிய சிறகை யுடைய தன்னைப் போலே உறாவி இராதே
-சேவலோட்டை சம்ச்லேஷத்தாலே செந்தலித்து இருக்கை
ச பங்காம நலங்காராம் விபத்மாமிவ பதமி நீம் -என்று இ றே தன் தசை –

மட நாராய் –
சம்ச்லேஷத்தாலே துவண்டு தூது போகைக்கு யோக்யமாய் இருக்கை
நாண் மடம் அச்சம் -என்று ஸ்த்ரீத்வமாய்-பிரியில் வியசனம் அறியும் தன் இனத்தைப் பார்த்து சொல்லுகிறாள் என்னவுமாம் –

அளியத்தாய் நீயும்

இத்தசையில் அறியும் அனுக்ரஹ சீலையான நீயும்
நின் அஞ்சிறைய சேவலுமாய்
நீ இட்ட வழக்காய் நல்ல கமனத்தை யுடைத்தான சேவலுமாய் –
சேவலைப் பற்றுவது -பேடை முன்னாக வென்றும் -ஆர்த்த ரஷணம் பண்ணுவதும் ஒரு மிதுனம் என்று இருக்கிறாள் –

ஆவா வென்று எனக்கு அருளி
என் தசையைப் பார்த்து ஐயோ ஐயோ என்று
ஏஹி பஸ்ய சரீராணி -என்று தன் வடிவைக் காட்டுகிறாள்
அருளி -கிருபை பண்ணி
இரப்புக்குச் செய்தாகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி –
விக்ராந்தஸ்த்வம் சமர்த்தச்வம் ப்ராஜ்ஞச்த்வம் வா நரோத்தம –
எங்களை ஸ்தோத்ரம் பண்ணுகிறது என் -அங்கே சென்றால் எல்லாரும் சாம்யாபன்னராய் இருக்கையாலே தெரிய ஒண்ணாது
அடையாளம் என் என்று இருக்கிறவனவாகக் கொண்டு சொல்லுகிறாள் –

வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு –
வெவ்விய சிறகை யுடைய பெரிய திருவடியை த்வஜமாக எடுத்தவருக்கு
வரும் போது பிரத்யஷத்தை நிரசித்துக் கொண்டு வரும்படியைச் சொல்லுகிறது
சா மத்வ நித்வஸ் தசமஸ்த பாதகம் –
உயர்க்கை யாகிறது -வஹிக்கையாய்
அக்ரூர க்ரூர ஹ்ருதய -என்னுமா போலே தன்னைப் பிரித்துச் சடக்கென கொண்டு போன கொடுமையைச் சொல்லிற்று ஆகவுமாம்

என் விடு தூதாய்ச்
பெரு மிடுக்கரான பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனை தூது விட்டால் போலேயோ
அபலையாய் அத்யார்த்தை யான நான் விட வன்றோ போகிறது
பரார்த்தமாக தூது போகை கிடப்பது ஒன்றோ –

சென்றக்கால்
அவன் பக்கலில் அன்றோ செல்லுகிறது
உங்கள் வழிப் போக்குத் தானே அடிக் கழஞ்சு பெறாதோ –

வன்சிறையில்
பிரணயிநி பாடு நின்றும் வந்தவர்களை சிறையிடுவான் ஒரு மூர்க்கனும் உண்டோ
இனி சிறை யாகிறது -இவர்கள் வார்த்தையை அநாதரிக்கை
இவர்களைக் கண்ட போதே துணுக் என்று -மதுரா மதுராலாபா கிமாஹ மமபாமி நீ -என்னாமை இ றே

அவன் வைக்கில்
நைவ தம்சான் நமசகான் -என்று ஆதரியாது ஒழியுமோ
வைக்கில்
அநாதரிக்க பிரசங்கம் இல்லை -சிரஸா வஹிக்கும் என்று கருத்து –

வைப்புண்டால் என் செய்யுமோ –
அங்கனே யாகில் அது உங்கள் பேறு அன்றோ –
பரார்த்தமாகச் சிறை இருக்கை கிடப்பது ஒன்றோ -என்று இருக்கிறாள்
தேவ ஸ்த்ரீகளுக்காக தான் சிறை இருந்தவள் இ றே –

——————————————————————————————————

இரண்டாம் பாட்டில்
சில குயில்களைக் குறித்து அவன் பக்கல் சென்றால் சொல்லும் பாசுரத்தைச் சொல்லுகிறாள் –
நாரைகளைத் தூது போக வேணும் என்று அர்த்தித்தாள்-அவை போனால் சொல்லு வார்த்தையை சில குயில்களைக் குறித்துச் சொல்லுகிறாள்
அந்ய துபக்ராந்தம் அந்யதா பதிதமாய் இருந்ததீ -என்னில் -இவ்வசங்கத பாஷணம் பண்ணிற்று இளலாகில்
விஷய வை லஷண்யத்துக்கு நமஸ்காரம் இ றே

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு –
விஸ்லேஷ தசையிலே தான் வரும் தனையும் இவள் தரித்து இருக்கைக்காக -ஆத்மாத்யீங்கள் எங்கேனும் கிடக்கிலும்
உன்னது அன்றோ என்கிற வார்த்தையாலே என்னுடையவர் என்கிறாள்
ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் கலவியாலும் சிவந்த திருக் கண்களை யுடையவர்
இவை எல்லாம் இவள் அனுபவித்தவை இ றே
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வர் யமும் -மூன்றாம் திருவாய் மொழியிலே வாத்சல்யமும் இத் திருவாய் மொழியிலே கலவியும் –

பெருமானார்க்கு –
ஸ்வ பாவிகமான பௌஷ்கல்யத்துக்கு மேலே தன்னைத் தோற் பித்தத்தால் வந்த மேணானிப்பைச் சொல்லுகிறாள் –
சம்ச்லேஷதசையிலே ச்நேஹகமாக நோக்கி -அந் நோக்காலே என்னை அடிமை கொண்டவனுக்கு என்றுமாம் –

என் தூதாய்
அந் நோக்குக்கு இலக்காய்-இன்று வெறும் தரையான என் தூதாய்

என் செய்யும் உரைத்தக்கால்
அவனோடு கூட்டச் சொல்லுகிறேனோ -ஒரு வார்த்தை சொன்னால் என்ன சேதமுண்டு -ஆர்த்த ரஷணம் சிலருக்கு கிடைப்பது ஒன்றோ

இனக் குயில்காள் –
இனமாய் இருப்பார்க்கு -தனியாய் இருப்பாரைக் கூட்ட வேண்டாவோ

நீரலிரே-
நானும் அவனும் சேர இருந்த போது -போது போக்கக் கடவர்கள் அல்லீர்களோ –
நீர்மைக்கு நீங்கள் என்னும் அத்தனை அன்றோ -என்னவுமாம்
போனால் சொல்லும் பாசுரம் அறியாமல் இருக்கிறவனவாகக் கொண்டு சொல்லுகிறாள் –

முன் செய்த முழு வினையால் –
அநாதி கால சஞ்சிதமான பாபத்தாலே -பாபம் சாவதியாதல் -பாபம் பண்ணின காலம் சாவதி யாதனால் அன்றோ என் கையில் என்னைக் காட்டித் தருவது
இதிகாசம் -பட்டர் திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே -தெற்கு ஆழ்வானும்-கோளரி ஆழ்வானும் என்று இருண்டு திருப்பதியார் உண்டு
கோளரி ஆழ்வான் சதாசார பரனாய் இருக்கும் -தெற்கு ஆழ்வான் மேல் எழத் திரியும்
ஒரு விசேஷ திவசத்திலே இருவரும் சேர்ந்த அளவிலே கோளரி ஆழ்வான் தெற்கு ஆழ்வானை
இன்று ஆகிலும் ஒரு முழுக்கு இட மாட்டாயோ -என்ன -என்னுடைய பாபம் தெற்கு ஆழ்வார் கையில்
திரு ஆழி யாலே போக்கப் போமது ஒழிய ஓர் இரண்டு முழுக்கால் போம் அதன்று காண் என்ன
அத்தைக் கேட்டு இவனை மேல் எழ விசாரித்தோமே-என்று வித்தராய் அருளினார் பட்டர் –

திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ-
திருவடியின் கீழ் அந்தரங்க வ்ருத்தி பண்ணுகைக்கு ஏற்கவே ப்ரவர்த்திக்க பெறாத நான் அகன்றே போம் அத்தனையோ –
முன் செய்ய முயலுகை யாவது -அதுக்கு ஈடான பாக்யத்தைப் பண்ணுகை
க்ரியதாமித மாம்வத -என்றும் – முகப்பே கூவிப் பணி கொள்ளாய் என்றும் சொல்லுகிறபடியே கண் வட்டத்தில் நின்று
பண்ணுகைக்கு ஈடாக முயலாத நான் அகன்றே போம் இத்தனையோ என்றுமாம்
தந்தாமுக்கு என்ன ஓன்று இல்லாதார் தய நீயர் அன்றோ என்று கருத்து
த்வத்க்ருபா சங்கு சந்தீ-என்னக் கடவது இ றே –

விதியினமே
விதி என்று பாபமாய் -விதியை யுடையோம் –பாவியோம் என்றபடி
கீழே முழு வினை என்று சொல்லிற்றே-என்னில் மகா பாபத்தைப் பண்ணின பாவியோம் என்றபடி
பாவமே செய்து பாவியானேன் -என்னக் கடவது இ றே
அன்றிக்கே
எங்கள் தலையில் குற்றத்தை இசைந்த பின்பும் அகலும் அத்தனையோ -என்றுமாம்
இனம் -இன்னம் -விதி -உன் கருத்து

——————————————————————————————————-

மூன்றாம் பாட்டில்
அத்தலையில் இரக்கத்தால் என் பாபம் போகை தவிர்ந்தால் அனுபவ வி நாச்யம் அன்றோ என்று
சொல்லுங்கோள் என்று சில அன்னங்களை அர்த்திக்கிறாள்

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய வன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-

விதியினால் பெடை மணக்கும் –
என் பாக்யத்தால் பேடையோடே சம்ச்லேஷிக்கும் –
பேடையின் கருத்து அறிந்து உகப்பிக்கும்
என் ஆற்றாமைக்கு மேலே -நீங்களும் பிரிந்து இருந்து -உங்களைக் கூட்டுகையிலே யத்னம் பண்ண வேண்டாது ஒழிந்தது என் பாக்யம் இ றே
உங்கள் பாக்யத்தால் இ றே சம்ச்லேஷமே யாத்ரையாக பெற்றது என்னவுமாம்

மென்னடைய வன்னங்காள்-
சம்போகத்தாலே வந்த துவட்சியால் ஆகர்ஷகமான நடையை யுடையவையாகை –
தாரை யுடைய புறப்பாடு போலே இருந்ததீ உங்கள் புறப்பாடும் –

மதியினால்
ஔதார்யம் என்பதொரு குணம் உண்டாகையாலே மகாபலியை அழிக்க ஒண்ணாது –
இந்த்ரன் ராஜ்யம் பெற வேணும் என்று புத்தி யோகத்தால் தன்னை அர்த்தி ஆக்கினான் –

குறள் –
பால் செல்லச் செல்ல ரசிக்குமா போலே சிறுகின வடிவு ஆகர்ஷகம் ஆனபடி
மாணாய்
உண்டு என்ற போதோடு இல்லை என்ற போதோடு வாசி அற முக மலர்ந்து போம்படி இரப்பிலே தகண் ஏறின படி

உலகிரந்த
தன்னதான பூமியை அவனதாக்கி அவன் பக்கலிலே பெற்றானாய் இருக்கை
கள்வர்க்கு
அப்படிப்பட்ட வஞ்சகருக்கு -என்பர் ஆளவந்தார்
அன்று அச்செயல் செய்ததும் -அக்குண சேஷ்டிதங்களாலே என் நெஞ்சை அபஹரித்து ஈடு படுத்துகைக்காக இ றே -என்பர் எம்பெருமானார்

மதியிலேன்
பிரிவை பிரசங்கித்த அளவிலே போகாதே கொள்ளும் என்று ஓர் உக்தியால் விலங்கிட்டு வைக்கலாய் இருக்க
அதுவும் கலவியில் ஒரு வகையோ என்று இருந்த மதி கேடியான என்னுடைய –
வல்வினையே மாளாதோ வென்று
பாக்யவதி யாகையாலே அனுபவ விநாச்யமான பாபத்தைப் பண்ணினாள் சிந்தயந்தி –
நான் பண்ணின பாபத்துக்கேயோ முடிவு காணாது ஒழிகிறது
தத் சித்த விமலாஹ்லத-இத்யாதி -இவர் தம்மை தீர்க்க சிந்தயந்தி என்று இ றே நம் முதலிகள் சொல்வது –

ஒருத்தி
ஒருத்தி என்னவே இன்னாள் என்று தானே அறிகிறான் இ றே
உபய விபூதியிலும் இப்பாடு பட்டாள் இவள் ஒருத்தியுமாயிற்று
நித்ய விபூதியில் உள்ளார் விச்லேஷம் அறியார்கள்
சம்சாரிகள் விஷய ப்ரவணராய் அறியார்கள் –

மதி எல்லாம் உள் கலங்கி-
நீர் கொடுத்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கிற்று என்று சொல்லுங்கோள் –

மயங்குமால் –
இப்போது அறிவு போயிற்று ஆகில் பின்பு அறிவு உண்டாகிறது என்று இராமே முடியும் தசை யாயிற்று என்னுங்கோள் –

என்னீரே –
உங்கள் அவயத்தை பரிஹரியுங்கோள் -அறிவித்தால் பின்பு அவத்யம் அவனது இ றே

—————————————————————————————————–

நாலாம் பாட்டில்
என் பிரகிருதி அறிந்து வைத்து இறங்காதே போகட்டுப் போனவர்க்குச் சொல்லலாவது உண்டோ -என்று
நைராச்ராயம் தோற்ற சொல்லி -பின்னையும் சாபல அதிசயத்தாலே சில மகன்றில்களைக் குறித்து என்னிடையாட்டம் அவனுக்கு
அறிவிக்கிறி களோ -அல்லி களோ -என்கிறாள்
மகன்றில்கள் என்று அன்றில்களிலே ஓர் அவந்திர பேதம்

என்நீர்மை கண்டிரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-

என்நீர்மை கண்டிரங்கி இது தகாது என்னாத
என் பிரகிருதி மார்த்வத்தைக் கண்டு வைத்து -ஐயோ என்று இது பிரிவு தகாது என்னாதவர் இவள் பிரகிருதி மார்த்வத்தைக் கண்டால்
நிர்க்குணர்க்கும் இரங்க வேண்டிக் காணும் இருப்பது– ஆனால் இப்போது இவள் பிரிவை அவன் கண்டானோ என்னில்
கலக்கிற போது அணைக்கைக்காக கை நெகிழ்ந்த போது அதுவும் பொறாத படி அறியும் இ றே
ஊருண் கேணி –புல்லிக் கிடந்தேன் –

என் நீல முகில் வண்ணர்க்கு-
அடியில் வடிவைக் காட்டியாயிற்று அனன்யார்கை ஆக்கிற்று
இவ்வடிவில் உள்ளது அகவாயிலும் உண்டாகப் பெற்றிலோம்
சில பதார்த்தங்கள் உருவு அழகியதாய் -அகவாய் நஞ்சாய் இருக்குமா போலே காணும் –

என் சொல்லி யான் சொல்லுகேனோ
என்ன பாசுரத்தைச் சொல்லி உங்களுக்கு நான் சொல்லி விடுவது
என் தசையைக் கண்டு இரங்காதவர்-உங்கள் பேச்சைக் கேட்டோ இரங்கப் புகுகிறார்
கண்டவர்க்கு சொல்லி விடுவது ஒரு பாசுரம் உண்டோ
அதவா கிந்த தலாபை அபராக்ரியதாம் கதா -என்று நிராசை ஆனவர்கள் -அப்யசௌ மாதரம் த்ரஷ்டும் சக்ருதப்யா கமிஷ்யதி -என்றால் போலே
பின்னையும் தன் ஆற்றாமையாலே நல்குதிரோ நல்கீரோ -என்கிறாள் –

நன்னீர்மை
நற்சீவன்
ஜீவந்தீம் மாம் யதா ராம

இனி
பாடு ஆற்றலாவது எல்லாம் ஆற்றினாள்-இனித் தாங்க மாட்டாது

யவர் கண் தங்காது
சேஷியான உம்முடைய பக்கலிலே தங்கில் தங்கும் இத்தனை
என்று ஒரு வாய்ச் சொல்
என்று ஒரு வார்த்தை சொல்லு

நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –
நன்றான நீல நிறத்தை யுடைய மகன்றில்காள் -உங்களுக்கு நிறம் அவனைப் போலே இரா நின்றது
-உள்வாயும் அவனைப் போலேயாய் அநாதரிக்கப் புகுகிறி களோ –
அன்றிக்கே இத்தலையில் முகம் காட்டின உங்கள் ஸ்வ பாவத்தாலே நல்குதிரோ என்கிறாள் –

——————————————————————————————————

என்னை உபேஷித்தால் -சர்வ ரஷகத்வத்தால் பூர்ணனான தன்னுடைய நாராயணத்வம் விகலம் ஆகாதோ
என்று அருவி என்று ஒரு குருகை அபேஷிக்கிறாள்

நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படைப்பை இறை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

நல்கித்தான்
விபூதி ரஷணம் பண்ணும் போது-கர்த்தவ்ய புத்தியால் அன்றிக்கே பேறு தன்னதாகக் கிடீர் ரஷிப்பது
எனக்குத் தன் பக்கல் உண்டான வ்யாமோஹம் தனக்கும் தன் விபூதியில் உண்டாயிற்று ரஷிப்பது
ச்நேஹமாக
தான் அபேஷிப்பார் இன்றிக்கே இருக்கத் தானே ரஷிக்குமவன் –

காத்து அளிக்கும்
காப்பதும் செய்து -கிருபை பண்ணுவதும் செய்யும் –

பொழில் ஏழும்
பூமியாய் நித்ய விபூதிக்கும் உப லஷணம் –

வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ
ரஷகன் அநாதரித்தாலும் விட மாட்டாத படியான பாபத்தை பண்ணின எனக்கயோ நாள்கள ஆகாதது
நாட்டுக்கு இட்ட நினைப்பும் அந்தப்புரத்துக்கு அரிதாக வேணுமோ –

நாரணனைக் கண்டக்கால்
குணங்களில் ஞானானந்த அமலத்வங்கள் நிரூபகம் ஆனால் போலே யன்றோ சப்தங்களில் இத்திருநாமம்
இத்தாலே நிரூபிதமான வஸ்து வுக்கு சில விசேஷங்களைச் சொல்லுகிறது அத்தனை அன்றோ மற்றைத் திரு நாமங்கள்
நாரங்களில் ஓன்று குறைந்தாலும் தன் கார்யம் ஒறுவாம் அன்றோ
என் சத்தையில் அபேஷை இல்லையாகிலும் தன் சத்தையில் அபேஷை இல்லையோ என்று சொன்னேன் என்று சொல்லுங்கோள் –

மல்கு நீர்ப் புனல் படைப்பை
மிக்க நீரை யுடைத்தான-நீர் நிலங்களிலே கொடித் தோட்டங்களிலே
திருவடியைப் போல் கடல் கண்டு தேங்க வேண்டாவே உனக்கு –

இறை தேர் வண் சிறு குருகே
உன்னுடைய சஹசரத்துக்கு கொடுக்கைக்காக இறை தேடும் ஸ்வ பாவம் இ றே உள்ளது
உபவாசக்ருசையாய் இருக்க நினையாதே இருக்கும் அவனைப் போல் அன்றே
கார்ய காலத்திலெ சிறுக வேண்டாவே உனக்கு –

மல்கு நீர்க் கண்ணேற்கு
தய நீய தசையை ப்ராப்தையாய் இருக்கிற எனக்கு
தனக்கு நிரூபகம் அது போலே காணும் –

ஓர் வாசகம் கொண்டு அருளாயே –
ஒரு மாற்றம் கேட்டுச் சொல்ல வேணும்
ஓர் வாசகம் -அவன் வேண்டா என்னும் வார்த்தையும் அமையும்
அருளாயே
சொல்ல வேணும் என்னும் ஸ்தானத்திலே அருள வேணும் என்கிறது
எதிர்தலை திர்யக் ஆக்கவுமாம் -தான் ஜனக குலத்தில் பிரக்க்கவுமாம் –
இவ்விஷயத்தில் உபகாரகரை இங்கன் அல்லது சொல்ல விரகில்லை –

————————————————————————————-

இத்தனை தண்ணியரோடு கலந்து வரும் நிறக் கேட்டில் நாராயணத்வம் விகலமாக அமையும் என்னில்
அதுவும் விகலமாகாதே-என் சத்தையும் கிடந்தாதாம் படி ஒரு விரகு சொல்கிறேன் –
அத்தைச் செய்யக் சொல் என்று ஒரு வண்டை அபேஷிக்கிறாள் –

அருளாத நீர் அருளி அவராவி துவராமுன்
அருளாழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று
அருளாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே –1-4-6-

அருளாத நீர் –
அவள் பக்கல் அருளக் கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்து இருக்கிற நீர் -மயர்வற மதிநலம் அருளினன்-என்று ஓரடி போகமாட்டாதே நெஞ்சு உருகின இவர்
அருளாத நீர் என்னும் போதைக்கு என்ன அபஸ்மார விசேஷம் அறிகிலோம் -என்று பிள்ளான் –
அருளாத நீர் என்று திரு நாமம் சாற்றுகிறாள் -என்று சீயர்

அருளி
அவள் தய நீய தசையைக் கண்டு அருள வேணும் –
இதுக்கு முன்பு இப்படி தய நீயர் இல்லாமையாலே கிருபை பண்ணாது இருக்கிற நீர் என்னவுமாம்

அவராவி துவராமுன்
அருளும் போது அவள் முடிவதற்கு அருள வேணும் –
ஜீவந்திம் மாம் யதா ராமஸ் சம்பாவயதி கீர்த்திமான் -தத்த்வயா ஹ நுமன் வாஸ்யோ வாசா தர்ம மவாப் நுஹி
அருளே நிரூபகமான ஸ்வரூபம் உம்மது -நிர்த்தயர்க்கும் ஐயையோ என்ன வேண்டும்படி அவளது தசை
அருளாது ஒழியும் படி எங்கனே –

அருளாழிப் புட்கடவீர்
என்னைப் பற்றி வந்தார் என்னும் நிறக்கேடு தமக்கு பிறவாதபடி
அழகு செண்டேற -என்னுதல்-
ஆனைக்கு அருள் செய்ய என்னுதல்
ஒரு வியாஜத்தாலே எங்கள் தெருவே வழி போக அமையும்
நாங்களும் ஜாலகரந்த்ரத்தாலே காண எங்களுக்கு அருளினீர் ஆகவுமாம்
அருள் கடலான புள்
வெஞ்சிறைப் புள் -என்றால் கொடு போகையாலே
இப்போது வரவுக்கு உடலாகையாலே -அருளாழிப் புள் என்கிறாள் –

ஒருநாள் என்று
பல நாள் ஒரு தெருவே போகா நின்றால் -இது வெறுமன் அன்று என்று இரார்களோ என்னில் -ஒரு நாள் அமையும்
அருளாழி அம்மானைக் கண்டக்கால்
பெரிய திருவடி யுடைய கிருபையும் மிகை என்னும் படி என்றோ அவன் நீர்மை இருப்பது
அருள் கடலான சர்வேஸ்வரன் -அவன் பக்கல் அருள் மறுத்தாலும் மறுக்காத திரு வாழி என்று திரு வாழிக்கு விசேஷணம் ஆகவும் –

இது சொல்லி அருள்
அருளாழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று வார்த்தையைச் சொல்லி அருள வேணும் –

அருளாழி வரி வண்டே
கம்பீர ஸ்வ பாவத்தையும் -சரீரத்தில் வரியையும் யுடைய வண்டு -என்னுதல்
வட்டமான வரியை யுடைய வண்டு என்னுதல்
ஸ்ரமஹரமாய் அழகிதான வண்டு என்னுதல்
வட்டமாகப் பறக்கிறது என்னுதல்
கடகருடைய ஆத்மகுணத்தோ பாதி ரூப குணமும் உத்தேச்யம் என்கை

யாமும் என் பிழைத்தோமே
இவ்வளவும் செய்யாமைக்கு -நாங்கள் என்ன பிழை செய்தோம்
தாமே யன்றிக்கே நாங்களும் செய்த குற்றம் உண்டோ
பிரணயி நிக்கு குற்றமாவது பிரிந்தாலும் ஆறி இருக்கி இ றே

————————————————————————————————-

தம்முடைய அபராத சஹத்வத்துக்கும் நிலம் அன்றோ -என் பிழை என்று அவர்க்கு அறிவி என்று தன் கிளியை நோக்கிச் சொல்லுகிறாள்
இத்திருவாய் மொழிக்கு நிதானமான பாட்டாயிற்று இது –

என் பிழை கோப்பது போலப் பனிவாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே யான் வளர்த்த நீயலையே –1-4-7-

என் பிழை கோப்பது போலப்
எலும்பிலே துளைத்து நூலைக் கோக்குமா போலே

பனிவாடை
பாவ கப்ரதிமோ வவௌ-என்கிறபடியே பண்டு குளிர்ந்து போரும் வாடை இப்போது பாதகம் ஆகிறபடி

ஈர்கின்ற
ஈரா நின்றது -விரஹ க்ருசையாய் இருக்கிறதின் மேலே பாதக வர்க்கம் நலிகிற படி
பத்மசௌ கந்திகவஹம்

என் பிழையே நினைந்து அருளி
வாடை நலிந்த படி போராது என்று கீழாண்டை சிகையை யாயிற்று கணக்கு இடுகிறது
அவிஜ்ஞ்ஞாதா வாகை தவிர்ந்து இப்போது சஹாஸ்ராம்சு -என்கிறபடியே தோஷத்தில் சர்வஜ்ஞ்ஞாராய் யாயிற்று இருக்கிறது

அருளாத திருமாலார்க்கு
என் பிழை பார்த்துக் கை விட்டு -ந கச்சின் ந அபராத்த்யாதி -என்னும் அவளோடு அணைய இருக்கிறாரோ
நம் அபராதங்களைப் பொறுப்பிக்கும் பிராட்டி சந்நிதியில் அறிவி என்னவுமாம்
அபராதங்களைக் கணக்கு இடுகைக்கு அவளும் கூட்டுப் போல காண் -என்றும் சொல்வர்

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு
ஸ்வாமியான உம்முடைய தகவினுக்கு என்ன தப்புச் செய்தாள்
அபராத சஹத்வம் ஆகிறது -ஷமை-அதுக்கு அடியான தயை -தகவாகிறது
என் பிழை அநாதி கால ஆர்ஜிதம் ஆனாலும் தம்முடைய ஷமைக்கு எவ்வளவு போரும்
கிம் கோப மூலம் மனுஜேந்திர கஸ்தேன சந்திஷ்ட்ட திவாங்நிதேச

திருவடியின் தகவினுக்கு
இழவு-பேறு தம்மதாம் படியான குடல் தொடக்கு உண்டாய் இருக்க குற்றத்தைக் கணக்கு இட்டது அமையாதோ
பிராப்திக்குப் போராது -ஷமைக்கும் போராது –

என்று ஒரு வாய்ச் சொல்
ஒரு வார்த்தை சொல்லு

என் பிழைக்கும் இளங்கிளியே
பருவத்தாலும் நிறத்தாலும் வாயின் பழுப்பாலும் பேச்சின் இனிமையாலும் சர்வதா சத்ருசம் ஆகையாலே
உன் வடிவைக் காட்டி எலும்பை இழைக்கிற நீ ஒரு வார்த்தை சொன்னால் என்ன தப்பு உண்டாம் என்னவுமாம்

யான் வளர்த்த நீயலையே
கலந்தார் செய்யுமவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ
நிவாகர் அல்லாத ஸ்வ தந்த்ரர் செயலை நீயும் செய்யவோ

———————————————————————————–

தன் தசையைக் கண்டு உறாவுகின்ற தன் பூவையைக் குறித்து தன்னுடைய அவசாதத்தைச் சொல்லுகிறாள்

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோயெனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-7-7-

நீயலையே
என் அவசாதத்தைச் சென்று சொல் என்ன -செருக்கு அடித்து இருந்தாய் நீ யன்றோ -இதுக்குச் சொன்னாளோ என்னில்
கீழில் அவற்றுக்குச் சொல்லிற்று எல்லாம் இதுக்கும் சொல்லிற்று என்று இருக்கிறாள் -கலக்கத்தின் மிகுதியால்
இன்று என் அவசாதத்தைக் கண்டு தளர்ந்து இருக்கிற நீ யன்றோ அன்று செருக்கு அடித்தாய் என்றுமாம் –

சிறு பூவாய் –
உன் பால்யம் நம் கார்யம் கெடுத்தது இல்லையோ-

நெடுமாலார்க்கு –
சர்வேஸ்வரன் என்னுதல்
ஆஸ்ரிதர் பக்கல் அதி வ்யாமுக்தன் என்னுதல்

என் தூதாய்
அன்று அவன் வ்யாமோஹத்துக்கு இலக்காய்-இன்று வெறும் தரையாக இருக்கிற என் தூதாய் –

நோயெனது நுவல் என்ன-
நோயைச் சொல் என்ன -இவள் நோய் என்றால் வியாவர்த்தமாய் யாயிற்று இருப்பது
ஸ்ரீ பரதாழ்வான் நோய் என்றால் சாதுர்த்திகமாய் இராதே
ஜடிலம் –
புத்ரவ்யாதிர் நதே கச்சித்
சம்சாரிகளுக்கு சப்தாதி விஷயங்களில் இழவு பேறாகையாலே பகவத் விச்லேஷம் அறியார்கள்

நுவலாதே இருந்து ஒழிந்தாய்-
நோய் அறியாமை சொல்லாது இருந்தாய் இல்லை
நான் ஏவாமை அன்று
செல்வப் பிள்ளைத்தனம் அடித்து இருந்தாய் அத்தனை இ றே
அத்தலையில் வ்யாமோஹம் அது
இத்தலையில் நோவு இது
இரண்டு தர்மியையும் ஓர் உக்தி மாத்ரத்தாலே நோக்கலாய் இருக்க வன்றோ நீ ஆறி இருந்தது

சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் –
அது போகிறேன் என்று உத்யோகித்தது –
இனி யாரை நோக்கப் போகிறாய் என்கிறாள்
சமுதாய சோபையோடு கூடின அழகிய நிறத்தை இழந்தேன்

இனியுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–
இனி உனக்கு செய்ய அடுப்பது -உன் பிரகிருதி அறிந்து வளர்ப்பாரைத் தேடுகை காண்
சரம தசையில் தம்முடைய திரு ஆராதனப் பிள்ளையைப் பார்த்து -வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே-
என்று அருளிச் செய்தார் பெரிய திருமலை நம்பி –

————————————————————————————————-

முன்புத்தை வாடை போல் இன்றிக்கே -தன்னை முடிக்க அவன் வரக் கடவ வந்ததாகத் தோற்றிற்று ஒரு வாடையைப் பார்த்து
தனக்கு சேஷமான வஸ்து இங்கனே முடிந்து போம் அத்தனையோ என்று அவனுக்கு அறிவித்தால்
அவன் உபேஷித்தான் ஆகில் பின்னையும் நான் இராமே முடிக்க வேணும் என்று இரக்கிறாள்

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்று இருத்தல் வினை யற்றது என் செய்வதோ –
ஊடாடு பனி வாடாய் உரைத்தீராய் எனதுடலே –1-4-9-

நாடாத மலர் நாடி –
அபி நிவேசத்துக்கு ஈடாகத் தேட வரிதான புஷ்பங்களைத் தேடி -எண்டிசையும் உள்ள பூக் கொண்டு -என்னுமா போலே

நாடோறும்
விச்சேதியாத படி
கிஞ்சித் கரித்து-ஸ்வரூபம் பெரும் வஸ்துவுக்கு விச்சேதம் ஸ்வரூப ஹானி இ றே

நாரணன் தன் வாடாத மலர் அடிக்கீழ்
சர்வ ஸ்வாமி யானவனுடைய ஏக ரூபமான செவ்விப் பூ போலே இருந்துள்ள திருவடியின் கீழே
அகிஞ்சித்கரமான வன்றும் விட ஒண்ணாத படி நிரதிசய போக்யமான திருவடிகள்

வைக்கவே வகுக்கின்று
ஸ்ருஷ்டச்த்வம் வன வாசாய -என்னுமா போலே இதுக்காக வாயிற்று இவனை உண்டாக்கிற்று
வைக்க
சேர்க்க
சேஷ பூதனுக்கு கிஞ்சித் காரத்தாலே ஸ்வரூப லாபம் ஆனால் போலே சேஷிக்கும் கிஞ்சித் கரிப்பித்து கொண்டு அத்தாலே இ றே ஸ்வரூப சித்தி

வீடாடி வீற்று இருத்தல் வினை யற்றது
வீடு என்று விச்லேஷம்
ஆடுகை -அதிலே அவஹாகிக்கை
வீற்று இருத்தல் -அதிலே மூர்த்தாபிஷிக்தனாகை
வினை -நல்வினை
அறுகை -ஷயிக்கை
விச்லேஷத்திலே அவஹாகித்து -அதிலே மூர்த்தாபிஷிக்த மாம்படி பாஹ்ய ஹீனனான இருப்பு
பாஹ்ய ஹீனனான இவ்வாத்மவஸ்து என்னவுமாம் –
வீறு என்று வேறுபாடே உறவுமுறையாரோடு தொற்றுகைக்கும் உம்மைப் பிரிந்து இருக்கைக்கும் ஈடான இப் போலா இருப்பு என்னவுமாம்
எமராலும் பழிப்பு உண்டு இங்கு என் தம்மால் இழிப்பு உண்டு -என்னும்படியே

என் செய்வதோ –
என் செய்யுமோ
எதுக்காக என்னவுமாம்
இது ஓர் இருப்பும் அல்ல -இதுக்கு ஓர் பிரயோஜனமும் இல்லை என்றபடி

ஊடாடு பனி வாடாய்
ஊடு என்று உள்ளு
ஆடுகை -சஞ்சரிக்கை
அந்தரங்கமாக சஞ்சரிக்கை
அங்கோடு இங்கோடு அந்தரங்கமாய்க் கொண்டு சஞ்சரிக்கிற குளிர்ந்த காற்றே
சம்ச்லேஷ தசையிலே எனக்குப் பாங்காக சஞ்சரித்த நீ யன்றோ -என்றும் சொல்லுவர்

உரைத்து
அவனும் என் ஸ்வரூபத்தை விச்மரிக்கையாலே உங்களை வரக் காட்டினாநித்தனை
வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று -என்கிற பாசுரத்தைச் சொல்லி

ஈராய் எனதுடலே –
அவனால் வரும் நித்ய கைங்கர்யமும் வேண்டா -என்று உபேஷித்தான் ஆகில் அவசியம் வந்து ஈர்ந்து போக வேணும்
எனதுடலே
அவனோட்டைப் பிரிவுக்கும் நெஞ்சு இளையாத இந்த சரீரத்தை முடிக்க வேணும்
இப்போது இருப்பு தேட்டம் ஆனால் போலே அப்போது முடிவு தேட்டமாம் இ றே –

—————————————————————————————————————————

கீழ் பிரஸ்துதமான சேஷத்வத்தை நினைத்து பற்றுகிற திரு உள்ளத்தை -நம் கார்யம் உறுதி படும் தனையும் என்னைக் கை விடாதே கொள் -என்கிறாள்.
கீழே தூத பிரகரணம் ஆகையாலே மனசைத் தூது விடுகிறாள் என்பாரும் உண்டு

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே -1-4-10-

உடல் ஆழிப் பிறப்பு-
சக்ர ரூபமான சரீரங்க ளிலே பிறப்பு

வீடு -மோஷம் –
இப்போது மோஷம் என் என்னில் -மோஷார்த்தம் இ றே சிருஷ்டி

உயிர் முதலா
நித்தியமான ஆத்மாவை உண்டாக்குகையாவது சரீரத்தோடு கூட்டுகை

முற்றுமாய்
இவை முதலான எல்லா வற்றையும் உண்டாக்குகைக்காக
முற்றுமாய் என்கிறது பஹூச்யாம் என்கிற சுருதி சாயையால்
அசங்க்யேயமான சரீரங்களையும் சரீரஸ்தமான யுடைய ஜென்மத்தையும் ஆத்மாவையும்
இவை முதலான எல்லாவற்றையும் உண்டாக்குக்கைக்காக என்றுமாம்
அப்போது ஆழி என்று காம்பீர்யமாய் அபரிச்சின்ன மான சரீர பேதங்கள் என்றபடி

கடலாழி நீர் தோற்றி
அகாதமான நீரை யுடைத்தான கடலைத் தோற்றுவித்து -அப ஏவ சசர்ஜா தௌ-என்கிறபடியே ஏகார்ணவத்தை சிருஷ்டித்து

அதனுள்ளே கண் வளரும்
இப்பால் உண்டான ஸ்ருஷ் ட்யாதிகளுக்காக அதிலே கண் வளரும்
இப்போது காரணத்வம் சொல்லுகிறது –
இத்தை உண்டாக்கினவன் அறிவித்தால் விடான் என்கைக்காக –

அடலாழி அம்மானைக்
ஆஸ்ரித விரோதி நிரசன சீலமான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரனை
கண் வளரும் அடலாழி அம்மானை என்று காரண அவஸ்தையிலும் நித்ய விபூதி விக்ரஹம் திவ்யாயுதம் இவற்றினுடைய சத்பாவம் சொல்லிற்று
கண்டக்கால் இது சொல்லி
கீழ் வைக்கவே வகுக்கின்று -என்ற வார்த்தையைச் சொல்லி

விடலாழி
விடாதே கொள் -கம்பீரமான -சுழன்று வருகிற
மட நெஞ்சே வினையோம்
பவ்யமான நெஞ்சே -பேதை நெஞ்சே –
அவன் தொடங்கின கார்யத்துக்கு இன்று நாம் வழி பார்த்து இருக்கும் படி பாபத்தைப் பண்ணின நாம்
ஒன்றாம் அளவே
நம் கார்யம் ஓர் அறுதி பிறக்கும் தனையும்
சாயுஜ்யம் ப்ரதிபன்னா யே-என்கிறபடியே அவனோடு சேர்ந்து விடும் அளவும் என்றுமாம் –

அடலாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி வினையோம் ஒன்றாம் அளவே-என்னை விடேல்
தூதான போது அவனைக் கண்டக்கால் இது சொல்லி நம் கார்யம் அறுதி படும் அளவும் அவனை விடாதே கொள் -என்று அந்வயம்

———————————————————————–

நிகமத்தில்
இத்திருவாய்மொழி கற்றோர் பரமபதத்தில் முக்ய பிராப்தமான மஹா சம்பத்தைப் பெறுவர்-என்கிறார் –

அளவியன்ற வேழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் ஆய்ந்து உரைத்த
அளவியன்ற யந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-

அளவியன்ற வேழ் உலகத்தவர் பெருமான் –
ததோ தத்ருசுராயந்தம் விகாசி முக பங்கஜம் -என்கிறபடியே தம் இழவுதீர வந்து தோற்றின படியை அருளிச் செய்கிறார் –

அளவியன்ற
அபரிச்சேத்ய மஹிமா யாகையாலே இவ்வளவிலே வந்து முகம் காட்டுகைக்கு ஈடான ஜ்ஞானாதி குண பூரணன் -என்கை

வேழ் உலகத்தவர் பெருமான்
நாராயணத்வம் விகலம் ஆகாதபடி சர்வேஸ்வரன் ஆனான்
ஏழு உலகத்தவர் என்று தம்மையும் கூட்டிக் கொள்ளுகிறார்

கண்ணனை
இவ்வளவில் முகம் காட்டிற்று இலன் -என்ற குறை தீருகையாலே ஆஸ்ரித ஸூ லபனானவன்
பத்துடை அடியவரில் கிருஷ்ணாவதாரத்தில் அனுபவிக்கப் பார்த்து அது கிடையாமையாலே தூது விட்டார் ஆகையாலே
இங்கு முகம் காட்டின கிருஷ்ணன் என்னவுமாம் –

வளவயல் சூழ் வண் குருகூர்ச்
வளவிதான வயல் சூழ்ந்து நிரதிசய போக்யமான ஊர்
இவர் உறாவின போது -அபிவ்ருஷா பரிம்லாநா -என்கிறபடியே உறாவின ஊர் இவர் தரித்த வாறே
அகால பலி நோ வ்ருஷா -என்கிறபடியே தளிரும் முறிவும் ஆனபடி

சடகோபன் ஆய்ந்து உரைத்த
கிட்டி உரைத்த –அதாகிறது மானசமான கிட்டுதலாய் -ப்ரேமார்த்ரசித்தராகை

அளவியன்ற யந்தாதி ஆயிரத்துள்
அபரிச்சேத்யனானவனையும் தனக்குள்ளே ஆக்கவற்றாய் அந்தாதியான ஆயிரம்
இப்பத்தின் வளவுரையால் பெறலாகும்

வளவுரை -நற்சொல்லு
பாலைக் குடிக்க நோய் போமா போலே
இத்திருவாய் மொழியின் இனிய சொல்லாலே பெறலாம்

வானோங்கு பெரு வளமே
வான் என்று -பரம பதமாய் -பரமபதத்தில் விஸ்த்ருமாய்-நிரதிசயமான சம்பத்தைப் பெறுவார்கள்
பிதா கிருஷி பண்ணி வைத்தால் புத்ரனுக்கு பலத்தில் அந்வயமாம் போலே
இப்பத்தையும் கற்றவர்களுக்கு இவர் தூது விட்டு பட்ட க்லேசம் பட வேண்டா
இவர் பேற்றைக் கொடுக்கும் இப்பத்து

—————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-