கண்ணி நுண் சிறுத் தாம்பு –5-நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் – ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –

சத்துக்களும் கை விடும்படி உம்முடைய பக்கல் குற்றம் ஏது என்னில்
அநாதி காலம் பரதார பரிக்ரகாம் பரத்ரா வ்யபஹாரம் பண்ணிப் போந்து இளிம்பனானேன்-
இன்று ஆழ்வாருடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே சதுரனானேன் என்கிறார்
இதுக்கு முன்பு யுண்டான அநாத்ம குணங்களை அனுசந்தித்து ஆழ்வாருடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே க்ருதக்ருத்யன் ஆனேன் என்கிறார் –

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
பகவத் அதீயமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருந்தேன்
சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே சர்வேஸ்வரனதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்
பிறர் நன் பொருள் என்றது -ஐக்ய ஸ்ருதிகளும் சொல்லச் செய்தே பேதம் ஜீவிக்கைக்காக -(பிறர் நன் பொருள் -தத்வ த்ரயமும் -போக்தா போக்யம் ப்ரேரிதா -நஞ்சீயர் வேதாந்தி அன்றோ -ஸ்ரீ பாஷ்யகாரர் இது கொண்டே ஸூத்ரங்களை ஒருங்க விடுவார் -ஐக்கிய சுருதிகள் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -போல்வன உண்டே ) பொருள்- என்கிறது விரோதி வ்யாவ்ருத்தமான ஸ்வரூபம்

நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
ஆத்மாபஹாரத்தாலே பலித்த பலம் சொல்லுகிறார்
மஹா விசுவாச பூர்வகம் –என்று இருக்கும் இருப்பு எல்லாம் ஸ்திரீகள் பக்கலிலேயாய்- ஆகிறது
விரைகுழல் மடவார் கலவியை விடு -என்றும் சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது -என்றும் அபியுக்தரான என்னாச்சார்யர்கள்-(பிராப்த விஷய கொள்ளுவதை விட -இதர விஷயம் முந்துற விட வேண்டுமே  -என்பார்களே -)
சொன்ன விஷயத்தைக் கிடீர் நான் அநாதி காலம் விஸ்வசித்துப் போந்தது –
மடவார் என்கிற பஹூ வசனத்தாலே ஒன்றில் பர்யாப்தம் ஆகாமையாலே கண்டவிடம் எங்கும் நுழையும் படி சொல்லுகிறது

செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று
ஆழ்வார் திருவவதரிக்கையாலே அங்குள்ளது அடங்க இவருக்கு ஸ்லாக்கியமாய் இருக்கிறபடி
இவ்வூரில் ஐஸ் வர்யத்துக்கு அடியான பூர்த்தியை யுடைய ஆழ்வார் நிர்ஹேதுக கடாஷத்தாலே தம் பக்கலிலே பக்தியை யுண்டாக்கின படியை-
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்-என்கிறபடியே வந்த வழி அறிந்திலேன் -இங்கனே பலிக்கக் கண்ட அத்தனை
அபூர்ணமான பகவத் விஷயத்திலே அடியனாம் ஆகாதே பூரணரான ஆழ்வாருக்கு அடியேனே சதுரனானேன் என்கிறார்
ஸ்திரீகளை விஸ்வசித்து இளிம்பனான நான் ஆழ்வாரைப் பற்றி இன்று சதுரனானேன் என்றுமாம் –

————————————————————-

ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

உம்மைப் புன்மையாகவும் உமக்கு ஆழ்வார் சர்வ பிரகாரத்தாலும் உபகாரராகவும் சொன்னீர் -உம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும் அவர் உமக்கு உபகரித்த எல்லையையும் சொல்லிக் காணீர் என்னச் சொல்லுகிறார் –

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
இது என்னுடைய புன்மை இருந்தபடி-
பிறர் பொருளை நம்பினேன் -இப்போது பொருள் என்கிறது அர்த்தத்தை -அதாவது ஆத்மவஸ்து -எங்கனே என்னில்
த்ரவ்யம் குணஸ்ததா கர்ம ஜாதிச் சேதஸ்கதாச்ரய-என்று பதார்த்தம் சொல்லுகிற இடத்தே த்ரவ்யங்களில் பிரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தது இ றே
அத்தை இ றே இவர் முன்பு அபஹரித்தது என்கிறது-
கள்வன் ஆனேன் -என்றும் -வன் கள்வன் -என்றும் சொல்லுகிறபடிகளை இவரும் சொல்லுகிறார் –
பகவச் சேஷத்வத்தளவிலும் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான ஆத்மவஸ்துவைக் கிடீர் நான் அபஹரித்தது
-ஆழ்வார் அளவும் வந்த வன்று இ றே இது அனந்யார்ஹம் ஆய்த்தாவது
பிறர் -என்று
ஒரு விஷயத்தை விவஷிக்கிறது -த்ரவ்யத்தினுடைய ச்லாக்யதைக்கும் உடையவனுடைய ச்லாக்யதைக்கும் தக்க படி கனத்து இ றே பிராயச்சித்தம் இருப்பது
பிராமணனுடைய த்ரவ்யத்தை அபஹரித்தால் போல் அன்று இ றே சண்டாளனுடைய த்ரவ்யத்தை அபஹரித்தால் பிராயச்சித்தம் இருப்பது –
ஆத்மவஸ்து ஸ்ரீ கௌஸ்துப ஸ்தாநீயமாய் இத்தை உடையவன் சர்வேஸ்வரனாய் இ றே இருப்பது –

நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
ரத்ன அபஹாரம் பண்ண அஞ்சாதவன் விறகும் வைக்கோலும் களவு காண அஞ்சுமோ
ஈஸ்வரன் என்னது என்று அபிமானித்த வஸ்துவை அபஹரித்தவன் தேஹ பரிக்ரஹம் பண்ணினார் என்னது என்று
அபிமானித்த வஸ்துவை அபஹரிக்கச் சொல்ல வேணுமோ
முன் எலாம்
இப்படி ஆத்ம அபிமானம் பண்ணியும் விஷய ப்ரவணனாயும் போந்த காலம் சாவதியாகப் பெற்றதாகிலும் லாபம் உண்டு இ றே
ஈச்வரனோபாதி ஆத்மவஸ்துவும் நித்யம் -காலமும் அநாதி யாகையாலே முன்புள்ள காலம் எல்லாம் என்றபடி –

உம்முடைய தண்மை குறைவற்று இருந்தது -ஆழ்வார் உமக்கு நிர்ஹேதுகமாக உபகரித்தது ஏது என்னச் சொல்லுகிறார்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று
இப்படி அநாதி காலம் ஆத்ம அபஹாரம் பண்ணியதும் விஷய பிரவணனானதுவும் இழவுக்கு உடலாகி அன்றிக்கே
சரண்ய ப்ரபாவத்தாலே பேற்றுக்கு உடலாக கிருஷி பண்ணினாரைப் போலே பலித்துக் கொண்டு நிற்கக் கண்டேன்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு-
ஆத்ம அபஹாரம் பண்ணியும் அந்ய பரனாய் போந்தான் என்றும் என்னுடைய பூர்வ வருத்தத்தை ஆராய அத்தனைய பூர்ணரோ ஆழ்வார்
இன்று அன்பனாய்
என்னது என்று இருக்காய் தவிர்ந்து அவனுக்கு என்று இசைந்து இதர விஷயத்திலே ச்நேஹத்தை விட்டு
பகவச் சேஷத்வத்தளவிலும் நில்லாதே அதில் எல்லையான ததீய சேஷத்வத்தின் அளவிலே நின்றார் ஆழ்வார்
இந்த பிரதிபக்தி க்ரமம் வேண்டாதே எனக்கு முதல் அடியிலே இது எல்லாம் உண்டாய்த்து என்கிறார்
அடியேன் சதிர்த்தேன்
முன்பு தேஹாத்மா அபிமானம் பண்ணிப் போந்த நாள் இ றே நான் எனபது
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்த பின்பு அடியேன் என்று ஆய்த்து இவருடைய அஹம் அர்த்த பிரதிபத்தி இருப்பது
சதிர்த்தேன்
ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருக்கையும் இதர விஷய பிரவணன் ஆகைக்கும் மேற்பட சதிர்க்கேடு இல்லை இ றே
அவற்றை விட்டு பகவச் சேஷத் தளவிலும் நில்லாதே ஆழ்வார் அளவும் வருமவனாம் படியான சதிரை யுடையவன் ஆனேன்
ஆசார்யர்களை நம்பி என்கைக்கும் அவர்கள் அழைத்தால் அடியேன் என்கைக்கும் ஹேது ஸ்ரீ மதுர கவிகள் வாசனை யாய்த்து –

————————————————————————-

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

கீழ் நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் என்று சொல்லக் கேட்டவர்கள்
அந்தப் புன்மை யாகிறது ஏது என்றும் அவற்றிலே ஒன்றை இரண்டைச் சொல்லீர் என்றும்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியேன் என்றீர் -நீர் தாம் ஆழ்வாருக்கு அடிமையான பிரகாரம் என்
முன்பு என்ன நிலையிலே நின்று பின்பு ஆழ்வாரைக் கிட்டினீர்
நீர் ஆழ்வாரைக் கிட்டுகைக்கு ருசி ஜனகர் ஆர் என்றும் கேட்க
அநாதி காலம் அஹங்கார அர்த்த காம பரவசனாய் அதில் பிரதான புருஷார்த்தமான காமம் அர்த்த சாத்யம் ஆகையாலும்
அவ்விஷய சங்கம் ஓன்று இரண்டு என்ற அளவில் நில்லாமையாலே அவ்விஷயங்கள் பலவற்றையும் போய் அனுபவிக்கைக்கும்
-அதுக்கு அர்த்தார்ஜநார்த்தமாகவும் தேசாந்தர பர்யடனம் பண்ணா நிற்க திரு நகரியில் மாடங்கள் மேரு சிகரத்தைக் கொடு வந்து
வைத்தாப் போலே மின்னித் தோற்றிற்றுஇது ஒரு தேச விசேஷம் இருந்தபடி என்
இத்தேசத்தின் விசேஷங்களை ஆராய்ந்து விலஷண விஷயங்கள் உண்டாகில் அனுபவிக்கிறோம் என்று ஊரிலே புக்கேன்
அதுவே பற்றாசாக அத்தேச நிர்வாஹகரான ஆழ்வார் திருவடிகளிலே ஆதாரம் ஜனித்து அவர்க்கே ஆளாய் விஷயாதிகளை வென்றேன்
இது இ றே நான் நின்ற நிலை என்று அவர்களுக்கு உத்தரம் சொல்லுகிறார் –

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
கீழ் தாம் அருளிச் செய்த புன்மை எண்ணித் தலைக் கட்டப் போகாமையாலே அதில் பிரதானமாய் அவை எல்லாவற்றையும்
தனக்கு உள்ளே உடைத்தாய் இருப்பதொன்று இரண்டை உபாதானம் பண்ணுகிறார்

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்-நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
அதில் பிரதான தோஷமாய் அறுவன ஆத்ம அபஹாரமும் அந்ய விஷய சங்கமும் இ றே
ஆத்ம அபஹாரம் ஆவது பகவத் ஏக சேஷமான ஆத்மவஸ்துவை ஸ்வ தந்திர புத்தி பண்ணி ஆதரித்துப் போருகை
பொருள் -வஸ்து
சத்யஞ்ச என்றும் உள்ளது என்றும் சொல்லும்ன்படி உண்டாயே போருமது
அஹம் அர்த்தமாய் என்றும் பிரகாசித்தே போரும் வஸ்து-(தத்வ த்ரயமும் நித்யம் -அசேதனம் ஒரே மாதிரி இருக்காது என்ற மட்டுமே  )
நாபாவோ வித்யதே சத-என்கிறபடியே-(அசத்துக்கு  பாவம் இல்லை -சத்துக்கு அபாவம் இல்லை -என்பர் தத்வ தர்சிகள் )
நன் பொருள்
விலஷண த்ரவ்யம்
என் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் -என்றும் -நன்றாய் ஞானம் கடந்து -என்றும் ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே நன் பொருள் என்கிறார்
நன்மையாவது -பஞ்ச பூதாத்மகம் வஸ்து -என்றும் -மேம்பொருள் –மேவிய பொருள் -என்றும் சொல்லுகிறபடியே தேஹத்துக்கு வஸ்துதை உண்டே யாகிலும்
அது போலே அநித்யமாய் அநவரத விகாராஸ் பதமாய் அத்யந்த ஹேயமாய் அஜ்ஞ்ஞானமாய் அஸூகமாய் அபோக்யமாய் இருக்கை அன்றிக்கே
நித்தியமாய் நிர்விகாரமாய் அத்யந்த விலஷணமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஸூகமாய் ஸ்வபாவதோ போக்யமாய் இருக்கையாலே நன்பொருள் என்கிறார் –

பிறர் நன் பொருள்
இங்குப் பிறர் என்பது சர்வேஸ்வரனை
பிறர் என்பது அந்யரை இ றே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத் மேத்யுதாஹ்ருத -என்றும் -வித்யாவித்யே ஈசாதே யஸ்து சோன்ய- என்றும் சொல்லுகிறபடியே
சேதன அசேதன விசஜாதீயனான சர்வேஸ்வரன் ஆய்த்து அந்யன் ஆகிறான்
உயர்வற உயர்நலம் உடையவன் -எல்லை இல் அந்நலம் -எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் -என்றும்
பலபடியாலும் ஈச்வரனைச் சித் அசித் வ்யாவ்ருத்தனாக ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே அந்த வ்யாவ்ருத்தி தோற்ற பிறர் என்கிறார்
அந்யன் ஆகிறான்
கூடி இருக்கச் செய்தேயும் கார்யங்க ளிலே கூட்டுப் படாதவன் இ றே
அதில் சித் அச்சித்துக்களோடே கூடி இருக்கச் செய்தேயும் பரிணாம அஜ்ஞ்ஞாத்வ துக்கிதவங்கள் தன் பக்கலில்
ஏறிப் பாயாமல் இருக்கையாலே பிறர் என்கிறார்
சர்வ பூதங்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கச் செய்தேயும் அபஹத பாப்மாவாய் இருக்குமவன் இ றே அவன்
இவ்வர்த்தம் அவையே யவை யல்லன்னுமாய் கேசவன் -என்று ஆழ்வார் பாடே கேட்டு வைப்பார் இ றே

அவன் என்னது என்று போரும் பதார்த்தமாய்த்து இவ்வாத்மவஸ்து –
நன் பொருள் என்று அசித் வ்யாவ்ருத்தி சொல்லிற்று —பிறர் நன் பொருள் ஈஸ்வர வ்யாவ்ருத்தி சொல்லிற்று
ஸ்வ பிரகாசத்தாலே அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -ஸ்வ த்வத்தாலே ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்
சரீரியாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -சரீரமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும் –
போக்தாவாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -போக்யமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்
பிறர் நன் பொருள்
உடைமையும் விலஷணமாய் உடையவனும் விலஷணனாய் இருக்கும்
இது தேஹ இந்த்ரிய மன ப்ராணாதீப்ய அந்யமாய் இருக்கும்
அவன் பிரதான புருஷாவ்யக்தகாலாநாம் பரமனாய் இருக்கும்

நன் பொருள் தன்னையும்
இவ்வஸ்துவைக் கிடீர் நான் ஆசைப்பட்டுப் போந்தது -அவனுடைய விபூதி மாத்ரமாய் இருப்பதொரு வஸ்துவை அபஹரித்தேனோ
அவன் மார்பிலே வைத்து மனநம் பண்ணும்படியான ஸ்ரீ கௌச்துபத்தை அன்றோ நான் களவு கண்டது
ஆத்மான மஸ்ய ஜகதோ நிர்லேபம குணா மலம் -பிபர்த்தி கௌச்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி -என்கிறபடியே
அறவனை யாழிப் படையானை -என்று சொல்லும் படியான ப்ரஹ்ம ஸ்வத்தை யன்றோ நான் அபஹரித்தது
பரம தார்மிகனாய் பவித்ரா பாணியாய் இருப்பான் ஒரு சிஷ்டனுடைய த்ரவ்யத்தை யன்றோ நான் அபஹரித்தது
அகார்த்தாயைவ ஸ்வம் -என்று அபியுக்த பிரயோகம் உண்டாகையாலே -அ இதி ப்ரஹ்ம -என்று
அகார வாச்யன் பிரமம் ஆகையாலே ப்ரஹ்ம ஸ்வம் இ றே இது –

பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்
ஸ்வம்மும் -விலஷணமாய் -ஸ்வாமி யும் விலஷணமுமாய் இருக்க வன்றோ நான் இவ்வாத்மவஸ்துவை அபஹரித்தது
இவ்வாதம அபஹாரம் ஸ்வ தந்த்ரனுக்கும் தேஹாத்மா அபிமாநிக்கும் உண்டாமதாகையாலே இத்தால் தேஹாத்மா அபிமானம் சொல்லிற்று
அப்போது நம்பினான் பிறர் நன் பொருள் தன்னையும் என்று தேஹ ரஷண சேஷமாக-பர த்ரவ்யேஷ் வபித்யானம் -என்கிறபடியே
அந்ய த்ரவ்யங்களையும் ஆசைப்பட்டுப் போந்தேன் என்றுமாம்
அங்கு நன் பொருள் என்றது அவர்கள் நினைவாலே சொல்லுகிறது
பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்
அவ்விடம் தன்னிலும் மேல் எழுந் த்ரவ்யங்களை யாசைப்பட்ட வளவன்றிக்கே அவர்கள் சீர்க்கக் கனக்க நினைத்து இருக்கும்
மடிச்சரக்கை யாய்த்து ஆசைப்பட்டது

நம்பினேன் மடவாரையும்
தேஹமே ஆத்மா வென்று இருக்கையாலே ஆத்மஜ்ஞானம் பிறந்தால் பரமாத்மாவே புருஷார்த்தம் ஆமா போலே
உடம்புக்கு உடம்பே போக்யம் ஆகையாலே பர ஸ்திரீ சரீரங்களே போக்யங்கள் என்று ஆசைப்பட்டுப் போந்தேன்
மடவாரையும்
ஆத்மகுண பூர்ணைகளாய் பாதிவ்ரத்ய தர்ம நிரதைகளான சாத்விகளை யாய்த்து நான் ஆசைப்பட்டது
நம்பினேன் மடவாரையும்
அன்றிக்கே சாமான்யத்தில் ஸ்திரீகளையும் ஆசைப்பட்டுப் போந்தேன்
மடவார் –
அவர்கள் புருஷ வசீகாரம் பண்ணுவது தந்தாமுடை மடப்பத்தைக் காட்டி யாய்த்து
சதிரிள மடவார் என்று ஆழ்வார் பாடே கேட்டு வைக்கையாலே மடவார் என்கிறார்
மடவார்-
அதிலும் ஓன்று இரண்டை யாசைப்படுகை யன்றிக்கே பல விஷயங்களையும் ஆசைப்பட்டேன்
ஒன்றிலே துவக்கலாவது அதில் போக்யதை உண்டாகில் இ றே -அது இல்லாமையாலே பல விஷயங்களையும் ஆசைப்பட்டுப் போந்தார் யாய்த்து
அதுவும் அன்றிக்கே பூய ஏவாபி வர்த்ததே -என்று இக்காமம் தான் அபிவ்ருத்தம் ஆகையாலே தத் அனுரூபமான விஷய பஹூத்வமும் அபேஷிதம் இ றே
ஆகையாலே
அஸ்வதந்த்ரமான ஆத்மாவை ஸ்வதந்தரமாக நினைத்து இருந்தேன்
அநாத்மாவான தேஹத்திலே ஆத்மபுத்தி பண்ணினேன்
அபுருஷார்த்தங்களான அர்த்த காமங்களிலே புருஷார்த்த புத்தி பண்ணினேன் -என்றார் யாய்த்து
இவ்வபிப்ர யோகங்களாலே இவை ஒவ் ஒன்றே போரும் அநர்த்த ஜநகமாகைக்கு-ஆயிருக்க இவை எல்லாவற்றையும் அனுஷ்டித்துப் போந்தேன்
இவ்வனுஷ்டானம் உமக்கு எப்போது உண்டாய்த்து என்ன
முன் எலாம்
முற்காலம் அடைய
அநாதிர் பகவான் கால -என்று காலம் நித்யம் ஆகையாலும் அனுஷ்டாதாவான சேதனன் நித்யன் ஆகையாலும் தத் உபகரண
பூத கரண களேபரங்களும் பிரவாஹதயா நித்யங்கள் ஆகையாலும்
இவ்வநர்த்த புத்திக்கு அடியான அவித்யா கர்ம வாசனைகள் நித்யங்கள் ஆகையாலும் இதுவே எனக்கு யாத்ரையாய்ப் போந்தது
அக்ருத்யங்கள் ஓன்று இரண்டாகிலும் ஆஸ்வசிக்கலாம்-காலம் பரிமிதம் ஆகிலும் கண்டு தரிக்கலாம் –
அநாதி காலம் அபரிமிதமான அனர்த்தங்களை அனவரதம் அனுஷ்டித்துப் போந்தேன் என்று தாத்பர்யம் –

கீழ் தம்முடைய புன்மை சொன்னார் -மேல் தாம் ஆழ்வாராலே அங்கீ க்ருதரான பிரகாரம் சொல்கிறார்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று-
நான் அர்த்தாத்ஜ நேச்சுவாய் தேசாந்தர சஞ்சாரம் பண்ணா நிற்கச் செய்தே தைவாயத்தமாக திரு நகரியிலே
மாடங்கள் ஓங்கி இருந்து பொற்கென்று தோற்றிற்று
இங்கே போய் அர்த்த அபஹாரம் பண்ணலாம் -இது தான் நகரி யாகையாலே நாகரிகைகளான மடவாரையும்
இம்மாடங்களிலே காணலாம் என்று அறுதியிட்டு வழி விலங்கி உள் புக்கேன் –
அன்னகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தர் ஆகையாலே அவ்விடத்தில் தச்கர சஞ்சரணம் இல்லாமையாலே
ஒரு வைஷ்ணவ சகாசத்திலே ஷத்ர பந்துவுக்குப் பிறந்த அவஸ்தை போலே எனக்கும் ஆழ்வார் சகாசத்திலே
அபஹார புத்தி போய் உள்ளே ஆழ்வார் தம்மைக் காண வேணும் என்று புக்கு அவருடைய பூர்த்தியைக் கண்டு
நின்றாப் போலே இருக்க அவருக்கு அன்பனாய் விட்டேன்

செம் பொன் மாடம்
ஆழ்வாருக்கு -களை கண் மற்றிலேன் -என்றும் -ஆராவன்பின் அடியேன் -என்றும் சொல்லுகிற பகவத் விஷயத்தில் அத்யுன்னதமான
அத்யவசாய அனுராகங்கள் போலே யாய்த்து மாடங்களின் ஒக்கமும் திண்மையும் பொற்கு எனவும் -ஔஜ்ஜ்வல்யமாய் இருக்கிற படி

செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
ஆழ்வாருடைய மயர்வற மதி போலே யாய்த்து இத்தேசத்திலும்
இருள் அற்று ஒளியேயாய் இருக்கும் படி
அத்தேசிகரும் ஆழ்வாரோட்டை ஆசக்தியாலே பொலிந்து நிற்குமவர்கள் ஆய்த்து
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
மாற்று மினுங்கின பொன்னாலே சமைந்த மாடமாய் -அதுதான்
அத்யர்க்கா நலதீப்தம் தத்ச்தானம் விஷ்ணோர் மஹாத்மன-என்ற பரமபத தேஜஸ்ஸூ போலே பார்க்கவும் அணுகவும் ஒண்ணாத படி இருக்கை
அன்றிக்கே கண் படைத்தார்க்கு எல்லாம் காணலுமாய் கிட்டவுமாம் படி ஸ்ப்ருகணீயமான தேசம்
செம் பொன் மாடம்
துவளில் மா மணி மாடம் ஓங்கு துலை வில்லி மங்கலம் -என்று உகந்து அருளின நிலங்களில் மாடங்களும் ஆழ்வாருக்கு
உபாதேயம் ஆனாப் போலே இவருக்கும் ஆழ்வார் உடைய மதி நலங்களோ பாதி மாடங்களும் உபாதேயமாய் இருக்கிறது யாய்த்து –
ஆகையாலே அர்த்த காம ப்ரவணரையும் ஆளாக்கும் தேசமாய்த்து –

நம்பிக்கு அன்பனாய் –
அர்த்த காமாதிகளை நம்பிப் போந்த நான் ஆழ்வாருக்கு அன்பனாய் விட்டேன்
அர்த்த காமங்களின் போக்யதையும் ஆழ்வார் பாடே காங்கையாலே அவர்க்கே அன்பனாய் விட்டேன்
கீழ பாட்டிலே அன்னையாய் அத்தனையாய் எண்கையாலே மாதா பிதா என்னும் இடம் சொன்னார்
இதில் யுவதய விபூதி என்னும் இடம் சொல்லுகிறார் -(நன் பொருள் மடவார் என்பதால் )

அடியேன்
ஸ்வ தந்த்ரனாய்ப் போந்த நான் நம்பிக்கு சேஷம் ஆனானேன்
ஆழ்வாருக்குப் பிறந்த மதி நலன்கள் போலே கிராமத்திலே வருகை அன்றிக்கே அன்பு முற்பட்டு அடிமையில் பட்டது
நம்பிக்கு அன்பனாய் அடியேன்
ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தராகையாலே இவருடைய கடாஷ லஷ்யன் ஆகையாலே அம்மாத்ரத்திலே பதத்ரயார்த்தத்திலும் முன்னாய் விட்டேன்
இனி வாசி அங்கு ததீய சஹமான தத் விஷயமாய் இருக்கும்
இங்கு ஆழ்வாருக்கேயாய் இருக்கும் –
சதிர்த்தேன் –
சதிரன் ஆனேன் -மோஷயிஷ்யாமி என்றவன் முழங்கைத் தண்ணீர் பார்த்து இராதே ஆழ்வாருடைய ப்ரபாவத்தையிட்டு வென்றேன் –
நம்பிக்கு ஆள் உரியனாய் சதிர்த்தேன்
மாற்பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு என்கிறபடியே ஆழ்வாருக்கு அன்பனாய் அந்ய விஷயங்களை வென்றேன்
நம்பிக்கு அன்பனாய் அடியேனே
ஆத்மாத்மீயங்கள் இரண்டும் ஆழ்வாராய்த்து –
அவர் தாமே யானே நீ என்னுடைமையும் நீயே என்று தத் விஷயத்திலே சமர்ப்பித்தால் போலே
மடவாரையும் நம்பினேன் சதிர்த்தேன்
அவர்கள் சதிர் இள மடவார் ஆகையாலே இளிம்பு பட்ட நான் ஆழ்வாரை யண்டை கொண்டு சதிரனாய் விட்டேன் -(பத த்ரயம் அந்வயம் ஆனேன் -என்கிறார் –அடியேன் -சேஷத்வ ஞானம் பிரணவம் -அன்பனாய் -நாராயணாய / நம்பி மத்யம பத அர்த்தம் -எனக்கு நான் அல்லேன் -ரக்ஷணம் பூர்ணர் அறிந்து அநந்ய உபாயத்வம் )

இன்றே –
ஈஸ்வரனை அண்டை கொண்டு ஆரப்த சரீரபாத சமயம் பார்த்து இருந்து பின்னையும் வாஸனா ருசிகள் ஆகிற
மண் பற்று விடாமல் விரஜை அளவும் போக வேண்டும்படி இருக்கை யன்றிக்கே இன்றே சவாசனமாக விட்டேன்
இன்றே
அன்று அப்படி யானேன்
இன்று இப்படி யானேன்
நடுவில் இதுக்கு என் கையில் கிடப்பதொரு ஹேதுவைக் கண்டிலேன்
இதுக்கு வரவாறு ஓன்று இன்றிக்கே இருக்க வாழ்வு இனிதாம் படி விழுந்தது என்று விஸ்மிதர் ஆகிறார்
இன்றே
அன்று ஈஸ்வரனும் கூட நிற்கச் செய்தே சம்சரித்துப் போந்தேன்-
இன்று ஆழ்வார் சந்நிதி மகாம்யத்தாலே இவ்வளவும் பிறந்தது என்று ப்ரீதர் ஆகிறார் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: