கண்ணி நுண் சிறுத் தாம்பு –4- நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம்

உமக்கு இந்த நன்மைக்கு அடி என் என்னில் -சத்துக்களாலும் கர்ஹிதனான வென்னை பித்ராதிகள் செய்வதும் செய்து உபகரித்தான் என்கிறார்
இப்படி ஆழ்வார் உம்மை விஷயீ கரிக்கைக்கு நீர் இட்ட பச்சை என் என்னில் -சத்துக்களும் கைவிடும்படி தண்ணியன் ஆனேன் என்கிறார் –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4-

 

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
பரத்துக்க அசஹிஷ்ணுக்களாய் -பர சம்ருத்த ஏக ப்ரயோஜனராய்
பூர்வ பாஷி பிரசன்னாத்மா -என்றும் விமலமதி என்றும் இத்யாதிகளில் சொல்லுகிற படிகளையும் உடைய கூரத் ஆழ்வான் ஆண்டாள் பிராட்டியும் போல்வார்
வேதங்கள் கோஷித்ததையும் கைப்படுத்திக் கொண்டு இருக்குமவர்கள்
அந்தணர் மாடு -என்கிறபடியே வேதைக தனராய் இ றே இருப்பது
த்ரவந்தி தைத்யா- என்கிறபடியே வேதங்களும் ஏவிற்றுச் செய்யும் படி போலே காணும் இவர்கள் வேண்டப்பாடு –

புன்மையாகக் கருதுவர் ஆதாலில்-
புன்மையும் புன்மைக்கு ஆஸ்ரயம் ஆகையும் அன்றியே புன்மையே தானாகவே கருதுவார்கள்
ஆதலில் -அதுவே ஹேதுவாக –

அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்-தன்மையான்
நம்மை ஒழியப் புறம்பு இவனுக்கு எங்கும் புகலில்லை என்று சர்வ வித பந்துவுமானார்
ப்ரியத்துக்குக் கடவ மாதாவும் -ஹிதத்துக்குக் கடவ பிதாவும் ஹிதைஷியான ஆச்சார்யனும் ஆகையை ஸ்வ பாவகமாக யுடைய ஆழ்வார்
மாத்ருதேவோ பவ -இத்யாதிகளில் படியை யுடைய ஆழ்வார் –

சடகோபன் என் நம்பியே-
தன் குற்றத்தைப் போக்கும் அளவன்றியே என் குற்றத்தைப் போக்கும் படி நிரபேஷர் –

————————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

நான் என்றது தான் முன்பு உம்மை எவ்வளவாக நினைத்து என்ன இது இ றே முன்பு என்னுடைய ஸ்திதி என்கிறார் –

நன்மையால் மிக்க –
ஆத்ம குண உபேதராய்-அறிவுடையாரில் ஆழ்வாரை ஒழிந்தார் அடையக் கை விடும் படி யன்றோ என்னுடைய ஸ்திதி இருக்கும் படி
நன்மை என்கிறது குண தோஷ ஆஸ்ரயமாய் இருந்தால் தோஷ அம்சத்தைக் கை விட்டு குண அம்சத்தைக் கைக் கொள்ளுகை-
அதில் மிகுகை யாவது குணம் என்று பேரிடலாவது ஒன்றும் இன்றிக்கே தோஷமேயாய் இருந்தால் அது தான் பற்றாசாகக் கைக் கொள்ளுகை –

நான்மறையாளர்கள்
அதுக்கு அடியாக ஹித அனுசந்தானம் பண்ணிப் போந்த வேதங்களிலே வாசனை பண்ணி இருக்குமவர்கள்
நாலு வகைப்பட்ட வேதத்துக்கு வியாச பதம் செலுத்த வல்லவர்கள்
அவர்கள் ஆகிறார் ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளாராதல் -கூரத் ஆழ்வான் ஆதல்

புன்மையாகக் கருதுவர்
புன்மை என்று ஒரு குணமாய் அதுக்கு ஆச்ரயமான தர்மியுமாய் இருக்கையும் அன்றிக்கே புன்மை தான் ஒரு வடிவு கொண்டது என்று இருப்பர்கள்

ஆதாலில்
அதுவே ஹேதுவாக

அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்
நாம் அல்லது இவ்வளவில் ரஷகர் இல்லை என்று எனக்கு சர்வ விதமான பந்துவானவர்
ச பித்ரா ச பரித்யக்தாஸ் ஸூரைச்ச ச மகார்ஷிபி –தரீன் லோகன் சம்பரிக்ரம்யா தமேவ சரணங்கத-என்று
புறம்பு எங்கும் புகழ் காணாதே மீண்டு வந்த காகத்தோ பாதி புறம்பு இவனுக்குப் பற்றாசில்லை என்று சர்வவித ரஷகரானவர்
பிரியமே செய்யக் கடவ தாய் செய்வதும் -ஹிதமே செய்யக் கடவ பிதா செய்வதும் –
ஸ்வரூப அனுரூபமாக அடிமை கொள்ளும் நாயகன் செய்வதும் செய்யுமவர்
தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த வத்தா -என்று பகவத் விஷயத்தில் அவர் சொல்லுமத்தை ஆழ்வார் விஷயத்திலே இவர் சொல்லுகிறார் –

தன்மையான்
அக்னிக்கு ஔ ஷண்யம் போலேயும்
ஜலத்துக்கு சைத்யம் போலேயும்
இஸ் ஸ்வ பாவத்தை நிரூபகமாக யுடையவர்

சடகோபன் என் நம்பியே-
தாய் செய்வது தமப்பன் செய்ய மாட்டான் -தமப்பன் செய்வது தாய் செய்ய மாட்டான் -புறம்பு உள்ளார் செய்வது இருவரும் செய்ய மாட்டார்கள்
எல்லார் செய்யுமதும் செய்ய வல்ல பூர்த்தியை யுடையவர்
ஆராய்ந்தால் அடி இன்றிக்கே போத்கனாய் இருக்கிற அபூர்ண விஷயங்களை ஆழ்வாருக்கு திருஷ்டாந்தமாகச் சொன்னவிடம் தப்பச் செய்தேன்
இனிச் சொல்லலாவது ஓன்று உண்டு -என்னுடைய தண்மை யாகிற பாழ்ந்தாறு நிறம்பும் படியான பூர்த்தியை உடையவர் என்னும் அத்தனை –

————————————————————

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம்-

தேவு மற்று அறியேன் -பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மை -என்று இவர் சொல்லக் கேட்டவர்கள்
சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -என்றும்
பிதாஹா மாஸய ஜகதோ மாதா -என்றும் -உலக்குக்கோர் முந்தைத் தாய் தந்தையே என்கிறபடியே
ரிஷிகளும் ஆழ்வார்களும் அவன் தானும் ஏக கண்டமாக சர்வ லோகங்களுக்கும் மாதா பிதாவாக சர்வேஸ்வரனை சொல்லா நிற்க
நீரும் அந்த லோகத்திலே ஒருவராய் இருக்க இப்படி பந்துவானவனை ஆஸ்ரயித்தல்-அதுவும் அன்றிக்கே
வாஸூ தேவஸ் சர்வமிதி ச மகாத்மா -என்றும் -பெரு மக்கள் -என்றும் -சிறு மா மனிசர் -என்றும் –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனும் ஆழ்வார் தாமும் கொண்டாடும் படியான விலஷண வர்க்கத்திலே
சிலரை ஆஸ்ரயித்தல் செய்யாதே ஆழ்வாரையே நீர் ஆஸ்ரயிக்கைக்கு ஆழ்வார் உமக்குச் செய்த உபகாரம் எது என்ன –
என் தோஷ அதிசயத்தாலே அந்தப் பரம சாத்விகரும் என்னை நெகிழ அதுவே பற்றாசாக எனக்கு முகம் தந்து மாதா பிதாவும் தாமேயாய்
என்னை அடிமை கொண்டு போந்த ஸ்வ பாவம் ஆழ்வார்க்கு உள்ளது ஒன்றாகையாலே அவரே அன்றோ
எனக்குப் பூரணரான உபகாரகர் என்று இப்பாட்டிலே அவர்களுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்-ஆழ்வாருடைய பூர்த்தியை உபபாதித்த படி –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்-
ததீயரை நலத்தால் மிக்கார் என்று ஆழ்வார் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாலே தாமும் -நன்மையால் மிக்க என்கிறார்
தீமை போன அளவாதல் -நன்மை யுண்டான அளவாதல் அன்றிக்கே நன்மையால் அதிசயித்தவர்கள் –
இதுக்கு அவ்வருகான நன்மை இல்லாதபடியான நன்மையிலே நிலை நின்றவர்கள் –
ஒருவனுக்கு ஸூ துராசார என்கிறபடியே நன்மை கலசாத பொல்லாங்கு ஆவது -மநஸா நிஷ்ட சிந்தனம் -என்றும் -கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து என்றும் –
சினத்தினால் செற்றம் நோக்கி வாளா தீ விளி விளிவன் -என்றும் சொல்லுகிறபடியே நிர் நிபந்தனமாக பகவத் விபூதி பூதரோடே சிறு பாறு என்று போருகை
நன்மை யாவது -அவர்கள் பக்கல் அபகார விபரீதனாய் இருக்கையும் தன் பக்கலிலே நிர் நிபந்தனமாக அபகார பரர் அளவில் உபேஷித்து இருக்கையும்
நன்மையால் மிகுகை யாவது -அபகாரிஷ்வபி சதா சாதுஸ் சாத்வேவ வர்த்ததே -என்கிறபடியே அந்த அபகாரபரர் அளவிலும் உபகாரகனாய்ப் போருகை –
அதாகிறது அவர்கள் அளவில் குறை காணாது ஒழிகை இ றே
இப்படி இருக்கிறவர்கள் ஆகிறார் –பிராட்டி கூரத் தாழ்வான் போவார்கள் இ றே
ஏகாஷி ஏக கரணி தொடக்கமான ராஷசி வர்க்கம் ஓவாமல் இருந்து தர்சன பர்த்சநாதிகளைப் பண்ணி இருக்கச் செய்தேயும்
இவர்களை நலிய வேணும் என்ற திருவடியோடே மறுதலைத்து
கார்யம் கருணா மார்யேண-என்றால் போலே ஐந்தர வியாகரண பண்டிதனான நீ பின்னையும் உன் ஜன்மம் விடாமல் வார்த்தை சொன்னாயீ-
இவர்களுடைய கண்ண நீர் கண்டால் கற்றவனால் கருணை பண்ண வன்றோ வடுப்பது -நாட்டில் குற்றம் செய்யாமல் இருக்கிறார் ஆரேனும் உண்டோ
இவர்கள் தாம் குற்றம் செய்யில் அன்றோ இவ்விகாரம் வேண்டுவது -அவர்கள் ஏதேனும் வித்யதிக்ரமம் பண்ணினார்களோ
நீ கற்ற பரப்பில் நாயன் சொன்னது அடியான் செய்கை குற்றம் என்று ஒரு வசனம் கிடந்ததோ
இவர்கள் ராவண பரிகரமாய்-அவனுக்கு கை வழி மண்ணான -அடியாருமாய் -அவனுடைய ஆஜ்ஞா பரிபாலமுசீலைகளுமாகா நின்றால்-அவன் சொன்னதை மறுக்கலாமோ
பெருமாள் உன்னை என்னைக் கண்டு வா வென்று விட்டாரோ ஸ்திரீ வதம் பண்ணி வா வென்று விட்டாரோ
அப்படிச் சொன்னாராகில் அவர் குற்றம் ஆகிறது -நீ சொன்னாயாகில் அந்த வித்யதிக்ரமம் உன்னதாகிறது என்று
குண கர்ஹணம் பண்ணி ராஷசிகளை ரஷிப்பித்தாள் இ றே பிராட்டி
ஆகையால் இ றே இவள் கோஷ்டியைப் பற்ற ராம கோஷ்டி லகுதரை யாயிற்று
அவயவங்களிலே ஹானி பிறக்கும் படி அபசாரம் பண்ணின நாலூரானும் நான் புக்க லோகம் புக வேணும் என்று இ றே ஆழ்வான் அபேஷித்தது
இப்படிக்கு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானும் க்ருத்யோத்பாதனம் பண்ணித் தன்னை நலிய விட்ட புரோஹித வர்க்கத்தை மறித்தும் அந்த க்ருதியை போய் நலிய
சர்வேஸ்வரனை அபேஷித்து அவர்களை நோக்கியும்
மத் பிதுஸ் த்வத் க்ருதம் பாபம் தேவ தஸ்ய பிரணச்யது-என்று ஹிரண்ய அபராதத்தை ஷமிப்பித்தும்
இப்படி அபகாரிகள் பக்கல் உபகாரகராய்ப் போந்தார்கள் –

நான் மறையாளர்கள்
நாலு வகைப்பட்ட வேதங்களை ஆண்டு போருமவர்கள் –
இப்பிரமான வாக்யங்களை தத்வ ஹித புருஷார்த்த பிரதிபாதகமான வாக்யங்கலோடே சேர்த்து அனுசந்திக்கும் படி வேத நிர்வாஹகர் ஆனவர்கள் –
நன்மையால் மிக்க நான்மரையாளர்கள்
இவர்களுக்கு இவ்வாத்மகுணம் உண்டாகைக்கு ஊற்று வாய் வேத சம்பந்தம் யாயிற்று
மாதா பித்ரு சஹாஸ்ரேப்யோ வத்சவதரம் சாஸ்திரம் -என்றும் -நலங்களாய நற் கலைகள் -என்றும் குற்றம் செய்தாரை எவ்வளவிலும்
கைவிட மாட்டாத இத்தோட்டை சம்பந்தம் ஆயிற்று –
இதுக்கடி இக்கலைகளைக் கல்லாதவர்கள் இ றே இந்நன்மை பெறாதவர்கள் –
கற்றிலேன் கலைகள் பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை -என்கிறபடியே இதடியாக விறே பெரு நிலத்தார் உயிர்க்கு எல்லாம் செற்றமே வேண்டித் திரி தந்தது –
இது கல்லாதவர்கள் ஆகையாலே லங்கா வாசிகளான ராஷசர் ரிபூணாமபிவத்சலரான பெருமாளோடு வெறுப்புக் கொண்டது
கல்லாதவர் இலங்கை இ றே
இது கற்றவர்களுக்கு பலம் அபகாரிகள் பக்கலிலே உபகாரம் பண்ணுகை
இது கல்லாதவர்களுக்கு பலம் உபகாரிகள் பக்கலிலே அபகாரம் பண்ணுகை
இது தான் மறையாகையாலே துஷ்பிரக்ருதிகளுக்கு ஸ்வ அர்த்தத்தை போதிப்பியாது இ றே -(அக்னி ஹோத்ரம் இருந்ததே வேதம் இருந்ததே -கல்லாதவர் சொல்வது எங்கனம் என்னில் -மறை என்பதால் விசுவாசம் இல்லாதார்க்கு உட் கருத்து காட்டாதே என்றபடி )

நன்மையால்மிக்க நான் மறையாளர்கள் –என்கிற இரண்டாலும்
ச்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்கிற இரண்டையும் சொல்லுகிறதாயிற்று
அன்றிக்கே -(சம தர்சனம் பண்டிதர் அறிவான் -ப்ரஹ்ம நிஷ்டம் –
ஸ்ரோத்ரியம் -வேதார்த்தம் அறிந்தவன் -)

நன்மையால் மிக்க நான்மறை -(நன்மையால் மிக்க -வேதத்துக்கு )
நித்யதையாலும் நிர் தோஷதையாலும் அஜ்ஞ்ஞாரானவர்களுக்கு ஜ்ஞாதவ்யார்த்தங்களை அடைய பிரமாணாந்தர நிரபேஷமாக அறிவிக்குமதாகையாலும்
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே சர்வாதிக வஸ்துவையே பிரதி பாதிக்கிற தாகையாலும் பிரமாணாந்த்ரங்களில் காட்டில்
பிரமாண ஸ்ரீ யால் அதிசயிதமான வேதார்த்த ஜ்ஞானம் உடைய மஹாத்மாக்கள் என்னவுமாம் –
புன்மையாகக் கருதுவர்
அப்படி பிறருடைய குறை காண மாட்டாதவர்கள் உட்பட என்னுடைய தோஷ அதிசயத்தாலே என்னை அநாதரிக்கும் படி யாயிற்று –
புன்மையாகக் கருதுவர்
நன்மையால் மிக்கவர்கள் என்னுடைய புன்மையின் மிகுதியாலே புறக்கணித்து இருப்பர்கள்
நான்மறை யாளர்கள் புன்மையாகக் கருதுவர்
அந்த வேதார்த்தங்களைத் திருத்தி அனுசந்திக்கிறவர்களுக்கு என்னுடைய குற்றத்தின் மிகுதியாலே ஒரு குணம் கண்டு திருத்தப் போச்சதில்லை –
நான்மறையாளர்கள்-இத்யாதி
அவர்களிலே ஒருவர்க்கு ஆளாகப் பெற்றிலேன் –

புன்மையாகக் கருதுவர்
புன்மை என்றும் நான் என்றும் வேறு இன்றிக்கே
என்னதாவி என்னும் வல்வினை -என்கிறபடியே புன்மை தானாகவே நினைப்பர்கள்
தர்ம ப்ராசுர்யத்தாலே தர்மியை தர்ம வ்யபதேசம் பண்ணக் கடவது இ றே
கருதுவர்
தம்முடைய புன்மை அன்றிக்கே அவர்களுடைய அநாதரம் காணும் இவரை வருத்துகிறது
ஹாதோஸ்மி யதி மாமேவம் பகவா நபி மந்யதே
ஆதாலில்-என்ற ஸ்ரீ பரதாழ்வானைப் போலேயும்
தி கஸ்து தஜ்ஜன்ம யத் சாது பஹிஷ்க்ருதம் ஸ்யாத் -என்ற அக்ரூரனைப் போலேயும்
மஹாத்மபிர்மாமவ லோக்யதாம் நய -என்கிறபடியே மஹத்துக்கள் உடைய அங்கீகாரம் புருஷார்த்தமாய் -அத்தால் அநாதரமும் அப்படியே இ றே
கருதுவர்
அவர்களுக்கு வாசி வாய் விட்டுச் சொல்லாமை -(நன்மையால் மிக்காமல் இருந்தாள்  வாய் விட்டு பேசி இருப்பார்கள்  )
நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர்
அவர்கள் சர்வஜ்ஞ்ஞர் ஆகையாலே வஸ்து கதியை யதாவாக அறிந்து இருப்பவர்கள் இ றே

ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே
கீழ் சாத்விக வர்க்கம் கை விட்டபடி சொல்லிற்று -மேல் ஆழ்வார் கைக் கொண்டபடி சொல்லுகிறது
இப்படி எல்லாரும் கை விட்ட இவனை நம்மை ஒழியக் கைக் கொள்ளுவார் இல்லை என்று என் பக்கலிலே மாத்ருத்வ வத்சலரானார்
யத்வா சரண்யம் சரண்ய ஜநஸ்ய புண்யம் -என்று இ றே ஆழ்வாரைச் சொல்லிற்று
அன்னையாய் அத்தனாய்
அத்தனாகி என்னை யாகி என்று பகவத் விஷயம் போலே முற்பட ஹித பரனாய் பின்பு ப்ரியபரனாகை அன்றிக்கே-முற்பட ப்ரியபரராய் பின்பு ஹித பரரானார் (கிருத்யத்தை பின் சொல்லி பிரியமான பகவத் விஷயம் முதலில் சொல்லி என்றபடி )
அப்படியே ஆளவந்தாரும் உட்பட மாதா பிதா என்று மாத்ருத்வத்தை யாய்த்து முந்துற அனுசந்தித்தது
அன்னையாய் அத்தனாய்
முற்பட பகவத் பிரபாவத்தை உபதேசித்து ஆனந்தரம் அதிகாரி வேஷத்தை உபதேசித்தார்-
உம்முயிர் வீடுடையான் –பத்துடை யடியவர்க்கு எளியவன் –பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவலுறுவீர்–நந்நீர் தூயப் புரிவதுவும் புகை பூவே -என்று உபதேசித்தது இ றே-கழிமின் தொண்டீர் கள் கழித்துத் தொழுமின் -என்றது
அன்னையாய் அத்தனாய்
குருர் பிதா குருர் மாதா -என்று லாஷணிகமாய் வருவது அன்றிக்கே- (பேச்சுக்காக சொல்லாமல் )-என்னுடைய புன்மையில் புரை இல்லாதாப் போலே-அவருடைய மாதா பித்ருத்வத்திலும் புரை இல்லை –

என்னை யாண்டிடும் தன்மையான்
ஸ்வாமி க்ருத்யமும் அநுஷ்டித்தார் -பகவத் விஷயத்தை அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் -என்று அனுசந்தித்தாப் போலே
இவரும் ஆழ்வார் விஷயத்திலே அவற்றை அனுசந்திக்கிறார்
என்னை யாண்டிடும் தன்மையான்
தாம் திருவாய் மொழி அருளிச் செய்கிற போது என்னைப் பட்டோலை எழுதச் சொல்லி அருளிச் செய்தார் -உசிதமான கைங்கர்யத்தைக் கொண்டார்
என்னை யாண்டிடும்
பொலிந்து நின்ற பிரான் பக்கலிலும் ஒரு கால் போய் வாரீர் என்று உபதேசித்தார் என்று வடக்குத் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர்
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில் நண்ணி என்று நான் விட்டுப் போந்த விஷயத்தை-நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவது என்று பொலிந்து நின்ற பிரானுக்கும் ஓர் அஞ்சலி நேரும்படி பண்ணினார்
தன்மையான்
இது சஹஜ ஸ்வ பாவம் ஆய்த்து ஆழ்வாருக்கு-ஆழ்வார் அடியாக அடிமை கொள்ளுகையாலே பகவத் விஷயத்துக்கு ஔ பாதிகம்
சடகோபன் –
என்னுடைய சாட்யத்தைப் போக்கி என்னை ரஷித்தவர்
என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன்
அவன் அடியார் சிறுமா மனிசராய் என்னை யாண்டார் -என்று ஆழ்வார் தம்மை ஆண்டு போருமவர்கள் ததீயராம் படி யானால்-என்னை ஆழ்வார் ஆண்டு போரச் சொல்ல வேண்டா வி றே
என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன்
என்னை ரஷித்து சடகோபன் என்கிற பட்டப் பேர் சூடியவர்-
என் நம்பியே
அவரே அன்றோ என் குறைவை நிறைக்கும் படியான நிறைவை யுடையவர்
என் குறை யாகிற பாழ்ந்தாறு நிறையும் போது அவருடைய பூர்த்தியே வேண்டாவோ
சத்வ நிஷ்டர்க்கு பஹிஷ்டனான வென்னைத் தாம் அங்கீ கரித்தும் அப்ரியங்களிலும் அஹிதங்களிலும் கை வளர்ந்து போந்த வென்னைக்
கைங்கர்யம் கொண்டும் போந்த பூர்த்தியை யுடையவர் ஆழ்வாரே யன்றோ என்று ஸ்வ சித்தாந்தத்தை த்ருடீ கரிக்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: