கண்ணி நுண் சிறுத் தாம்பு – ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானங்கள் –அவதாரிகை —

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம்-

அவதாரிகை –

ஆத்மாவுக்கு உத்தமம் மத்யமம் அதமம் என்கிற புருஷார்த்தங்களான சித் அசித் ஈஸ்வர தத்வத்ரயங்கள் –
அவற்றில் அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களாலே பிரகிருதி தத்வம் அதம புருஷார்த்தம் –
ஜன்ம மரணாதி ஷட் பாவ விகார ரஹீதமாய் நிடதிசய ஸூ க ரூபமாய் இருந்ததே யாகிலும்
பகவத் ஏகாந்தமான கல்யாண குண வைதுர்யத்தாலே தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பமான ஆத்மானுபவம் மத்யம புருஷார்த்தம்
சர்வேஸ்வரன் புருஷார்த்தம் என்னும் இடத்தில் கரும்பு தின்பார் வேர்ப்பற்றையும் நுனுயையும் கழித்து நடுவைக் கொள்ளுமா போலே
ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒழிய ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே புருஷார்த்தமாகவும் -அதிலே கம்ச வதத்துக்குப் பின்பாகக் கழித்து
முன்பு வெண்ணெய் களவு கண்டு யசோதைப் பிராட்டியார் கையில் கட்டுண்டு அவளுக்கு அஞ்சி நின்ற
அவஸ்தையை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே உபாயமும் உபேயமும் விரோதி நிரசனம் பண்ணுவானும் மற்றும் எல்லாம் என்றும்
அவனுடைய சௌந்தர்ய சீலாதிகளிலே அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களே இவ்வாத்மாவுக்கு நாத பூதரும்
நிரதிசய புருஷார்த்த பூதரும் என்றும் ஆழ்வார் நிர்ணயித்தார்
ஸ்ரீ மதுர கவி யாழ்வார் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானைப் போலே அத்தைப் பூர்வ பஷம் ஆக்கி எம்பெருமான் பக்கலிலும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலும்
ஆழ்வார் பண்ணினது அடைய ஆழ்வார் திருவடிகளிலே யாக்கி அது ருசித்து அத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

———————————————

ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம்-

அவதாரிகை –

ஐஸ்வர்யம் முதலாக சகல புருஷார்த்தங்களையும் விதிக்கிற சாஸ்திர மர்யாதையிலே நின்றார்கள் ருசிகள் –
சாஸ்திர தாத்பர்யமாய் உத்தம புருஷார்த்த லஷணமான பகவத் பிராப்தியில் நின்றார்க்ளால் ஆழ்வார்கள் –
இப்புருஷார்த்தத்தின் எல்லை நிலமான ததீய சேஷத்வத்திலே நின்றார் ஸ்ரீ மதுர கவிகள் –
இது தான் இவருக்கு வந்த வழி என் என்னில்
ஆழ்வாரை பொய்ந்நின்ற ஞானம் துடங்கி அவாவற்று வீடு பெற்ற அளவும் செல்ல அனுவர்த்தித்த இடத்தில்
அவர் தமக்கு உத்தேச்யமாகத் திருவாய் மொழியிலே பயிலும் சர்தார் ஒலி நெடுமாற்கு அடிமையிலே புருஷார்த்த காஷ்டையாக
ததீய சேஷத்வத்தையே அறுதியிடுகையாலே அவருடைய ருசி பர்க்ருஹீதமான அர்த்தத்தையே பற்றுகிறார் இவர் –

இது தான் ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் பக்கலிலே காணலாம்
வேதோப ப்ரும்ஹணார்த்தாய தவாக்ராஹ்யத பிரபு -என்கிறபடியே வேத உபப்ரும்ஹணார்த்தமாகப் பிறந்த
ஸ்ரீ ராமாயணத்தில் தர்ம சம்ஸ்தாபநார்த்தமாக அவதரிக்கையாலே ஸ்ரீ இராமாயண புருஷர்கள் நால்வரும் நாலு தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டினார்கள் –
ஒருவன் சொல்லிற்று ஒருவன் செய்யக் கடவன் -என்கிற தர்மம் நேராகா அழிந்து கிடக்கையாலே
பித்ரு வசன பரிபால நாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் பெருமாள்
பிதுர் வசன நிர்த்தேசாதீ -என்றும் -அகஸ்த்யவசநாத் -என்றும் ஸூ க்ரீவ வசநாத் என்றும் சமுத்திர வசநாத்-என்று இ றே இவருடைய அனுஷ்டானங்கள்
சேஷ பூதன் சேஷியைக் குறித்து கிஞ்சித்கரிக்கக் கடவன் -என்கிற விசேஷ தர்மத்தை அநுஷ்டித்தார் இளைய பெருமாள்
குருஷ்வமாம நுசரம் -என்றும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இ றே இவருடைய அனுஷ்டானம் –

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –

அப்படி இருக்கிற இவனை யல்லது அறியாதே இருக்கையாலே பகவச் சேஷத்வ காஷ்டியான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்
கச்சதா மாதுல குலம் பரதேன ததா நக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரஸ்க்ருத
கச்சதா
கச்சதா டேன்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்
யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு
இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –
பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய்
இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
தத-
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க
அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
அநக
அநம் இல்லாதது இவனுக்கு இ றே-அல்லாதார்க்கு ராமபக்தியும் கலாசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது
ராமபக்தியைப் பாப்பம் எண்ணப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -ஆகையாலே பாத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு
விரோதி யாகையாலே ராம பக்தியும் பாபமாம் இத்தனை –
சத்ருக்ன
பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை
அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்
இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி
இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –
இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான்
படை வீட்டில் இருந்தால் பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இ றே இருப்பது
பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர்
இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இ றே
அ நக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்
-இப்படி இவனைப் போல் இருப்பார் ஒருவர் ஸ்ரீ மதுர கவிகள்
இனி ததீயர் உத்தேச்யர் என்னும் இடத்தில் -முதல் அடியில் அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே பகவத் விஷயத்திலே மூட்டியும்
இவன் பகவத் விஷயத்திலே அவகாஹித்து குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத படியானால் போத யந்த பரஸ்பரம் என்கிறபடியே
போது போக்குகைக்கு உசாத் துணையாயும்
பிராப்தி தசையில் வந்தால் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்நிதேவா -என்கிறபடியே சாத்திய விருத்தி ரூபத்தாலும் புருஷகார பாவத்தாலும் உத்தேச்யராவார்கள்
இப்படி சர்வ அவஸ்தையிலும் ததீயரே உத்தேச்யர் என்று அத்யவசித்து தமக்கு உபகாரகரான ஆழ்வார் தம்மையே பற்றுகிறார் –

—————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானங்கள் –

-அவதாரிகை —

சம்சாரி சேதனரில் காட்டில் பகவத் பரராய் -அந்த பகவத் வைபவத்தை அஜ்ஞாரான சம்சாரிகளும் அறியும் படி
அவ்வவ புராண முகங்களாலே உபதேசித்த பராசராதி பரம ரிஷிகளுக்கு வாசி யுண்டு –
இப்படி உபதேசியா நிற்கச் செய்தேயும் -நிரச்தாதிசய இத்யாதியாலே பரம புருஷார்த்த ரூபையான பகவத் பிராப்தியைச் சொல்லி
தத் ப்ராப்தி ஹே துர் ஜ்ஞாநஞ்ச கர்மசோக்தம்-என்று தொடங்கி ப்ராப்தி சாதனமான உபாசனத்தையும் உபதேசியா நிற்கச் செய்தேயும்
காமாதி புருஷார்த்தங்களையும் கலந்த கட்டியாக உபதேசித்த அந்த ரிஷிகளில் காட்டில் பகவத் பிரசாத ஹேதுகமான மயர்வற மதி நலங்களை யுடையருமாய்
பர உபதேச சமயத்திலும் வீடாம் தெளி தரு நிலைமை -1-3-2-என்று தொடங்கி வீடே பெறலாமே -10-5-5-என்று
பரம புருஷார்த்தையே முதல் நடு இறுதி யாகவும் உபதேசித்து
அதுக்கு சாதனமும் -வண் புகழ் நாரணன் திண் கழல் சேர -1-2-10-என்றும்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ -4-1-1-என்று அவன் திருவடிகளே என்றும் உபதேசித்து
அவ்வளவன்றிக்கே -வழுவிலா வடிமை செய்ய வண்டும் நாம் -3-3-1- என்றும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10-என்று
அவற்றைத் தாம் அனுஷ்டித்துப் போந்த நம்மாழ்வாருக்கு நெடு வாடி யுண்டு
இப்படி பகவத் விஷயமே புருஷார்த்த சாதனங்கள் என்று பூர்ண உபதேசம் பண்ணின ஆழ்வாரைக் காட்டில்
-ஆழ்வாரே புருஷார்த்த பூதராய் அவரைப் பெறுகைக்கு சாதனமும் அவர் திருவடிகளே என்று இருக்கும் ஸ்ரீ மதுர கவிகளுக்கு நெடு வாசி யுண்டு –

என்னப்பனில் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என்நாவுக்கே-என்றும்
மேவினேன் அவன் பொன்னடி என்றும் -அனுசந்தித்தவர் இ றே இவர்
ஆழ்வார் பிரதம பர்வதத்திலே நின்றவர் -இவர் சரம பதத்திலே நின்றவர்
அவர் சங்க்ரஹத்தில் அவதாரனத்திலே நிஷ்டர் -பிரணவத்தில் உகார நிஷ்டர் என்றபடி -இவர் அதினுடைய விவரண நிஷ்டர்
அவ்வாழ்வாருக்கு அநந்ய போகத்துக்கு -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -4-5-8-என்று நாய்ச்சிமாரில் பிராட்டி நிதர்சநமாம் போலேயும்
கைங்கர்ய த்வரைக்கும் பார தந்த்ர்யத்துக்கும் இளைய பெருமாள் நிதர்சநமாம் போலேயும்
முமுஷுக்களின் துர்க்கதி கண்டு பரோபதேசம் பண்ணுகைக்கு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் நிதர்சநமாம போலேயும்
இவருக்கு ததீய பாரதந்த்ர்யத்துக்கு வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -என்ற
பெரியாழ்வார் திருமகளார் நிதர்சமநமாதல்
நித்யராய்ப் போந்தாரில் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் நிதர்சனமாதல்
முமுஷுக்களில் சர்வம் யதேவ நியமென மதன்வையா நாம் –என்று பெரிய முதலியார்-ஸ்ரீ ஆளவந்தார் – நிதர்சனமாதலாம் இத்தனை –

ஸ்ரீ சத்ருக்னன் ராம குணத்தில் கால் தாழ்ந்திலன் -இவர் கிருஷ்ண குணங்களில் கால் தாழ்ந்திலர் -இது வாசி
ஆழ்வார் பகவத் விஷயத்தைக் கவி பாடுகிற நாவாலே தம்முடைய வைபவம்
துவளில் மா மணி மாடம் போன்ற திருவாய் மொழிகள் வாயிலாக -சொன்னார் இத்தனை போக்கி அமுதூகிற இவருடைய
நாவாலே கேட்கப் பெறாத குறை தீர்க்கிறார் யாய்த்து இவர்
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே -6-5-7-என்று அவன் குணங்கள் அவ்வாழ்வார் வாயாலே
திருந்தினால் போல் யாய்த்து -ஆழ்வாருடைய குணங்களும் இவர் வாக்காலே திருந்தின படி –

அப்படியே இவர் அருளிச் செய்த பிரபந்தமும் –
த்ரை குண்ய விஷயா வேதா -என்று குணத்ரய வச்யருக்கு குண அனுகுணமான பலன்களைச் சொல்லுகிற வேதங்கள் போலேயும்
சீர்த்தொடை யாயிரம் -1-2-11- என்று பகவத் குனிக பிரத்க்ஹிபாதகமான திருவாய் மொழியும் போல் அன்றியே
ஆழ்வாருடைய திவ்ய குணங்களையே பிரதிபாதிக்கையாலும்
வேதம் போலே அனந்தமாய் இருத்தல் – திருவாய்மொழி போலே ஆயிரம் பாட்டாய் இருத்தல் செய்கை அன்றிக்கே
ஸூக்ரஹமாய் இருக்கையாலும் வாசி பட்டு இருக்கும்
திருவாய்மொழி வேத சாரமாய் -திருவாய் மொழியினுடைய சாரமாய்த்து இப்பிரபந்தம் இருப்பது –

ஒரு முமுஷுவுக்கு ஆதரணீயராய் இருப்பார் நாலு வ்யக்திகளாய் இருப்பார்கள் -சர்வேஸ்வரனும்- பிராட்டியும் -ஆசார்யனும் 0-ஸ்ரீ வைஷ்ணவர்களும் –
அதில் சர்வேஸ்வரன் அடியிலே இழந்து கிடந்த கரண களேபரங்கலைத் தன கருணையாலே கொடுத்து இவனைக் கரை மரம் சேர்க்கும்
தேவன் ஆகையாலும் இவனுக்கு ஆதார பூதனாகையாலும் -இவனுக்கு இஷ்டா நிஷ்ட ப்ராப்தி பரிகாரத்துக்கு உபாய பூதன் ஆகையாலும் அசாதாராண
ஸூஹ்ருத்தாகையாலும் ப்ராப்ய பூதன் ஆகையாலும் ஆதரணீயனாய் இருக்கும்
மாதா பிதா என்கையாலே பிரிய பரத்வ ஹித பரத்வங்களைச் சொல்லிற்று -ப்ராதா என்கையாலே அல்லாத பந்த்வந்தரங்களுக்கும் உப லஷணம்-
நிவாஸ -என்கையாலே ஆகாரத்வம் சொல்லிற்று சரணம் என்கையாலே -உபாய பாவம் சொல்லிற்று
-ஸூ ஹ்ருத் -என்கையாலே சோபனாசமசி -என்னும் இடம் சொல்லிற்று
கதி -கம்யாத இதி கதி யாய் ப்ராப்ய பாவம் சொல்லிற்று
நாராயண -என்று இவை எல்லாமாக வற்றான வஸ்து ஸ்வ பாவம் சொல்லிற்று

யேன யேன வியுஜ்யந்தே ப்ரஜாஸ் ஸ்நிக்தேன பந்து நா ச ச பாபத்ருதே தாசாம் துஷ்யந்த இதி குஷ்யதாம் -என்று
ஒரு சேதன விசேஷத்துக்கு இது உண்டாகச் சொல்லா நின்றாள் இவ்விஷயத்துக்கு சொல்ல வேண்டா வி றே
பாபாத்ருதே என்ன வேண்டாதபடி அவர்ஜ நீயமான சம்பந்தமும் இங்கே விநியோகம் கொள்ளும் படி யாய்த்து இவ்விஷயம் இருப்பது
கதிர்ப்பர்த்தா ப்ரபுஸ் சாஷி நிவாசாஸ் சரணம் ஸூ ஹ்ருத் என்று அவன் தானே சொன்னான் இ றே

பிராட்டி இவன் பக்கலிலே மாத்ருத்வ பிரயுக்தமாக நிருபாதிக வத்சலை யாகையாலும் இவன் பகவத் ஆச்ரயண சமயத்தில் தன்னுடைய பூர்வ
அபராத பீதனாய் அங்கு அணுகக் கூசினால் இவன் பூர்வ அபராதத்தை அவன் முகம் கொண்டு பொறுப்பித்துச் சேர்ப்பிக்குமவள் ஆகையாலும்
இவனுக்கு இவ்வுபாய விஷயமான வ்யவசாயத்தைக் கொடுக்குமவள் ஆகையாலும்
அவனோபாதி ஸ்வாமிநி யாகையாலும் ஒரு தேச விசேஷத்து ஏறப் போனாலும் அவனுக்கே கைங்கர்ய வர்த்தகை யாகையாலும்
தன்னைக் கிட்டும் இடத்தில் ஒரு புருஷகார நிரபேஷை யாகையாலும் ஆதரணீயமாய் இருக்கும் –

ஆச்சார்யன் இவனுக்கு பகவத் விஷயத்தையும் பிராட்டி வைபவத்தையும் கரும் தரையிலே உபதேசிக்கும் அவனாகையாலும்
தான் அனுஷ்டித்துக் காட்டி இவனை அனுஷ்டிப்பிக்கும் அவனாகையாலும் இவன் குற்றம் பார்த்த அளவிலும் கைவிடாதவனாகையாலும்
இவனோடு சஜாதீயனாகையாலும் ஸூ லபனாகையாலும் இவனுடைய க்ருதஜ்ஞதை யடியாகப் பண்ணும் கிஞ்சித்காரங்களுக்கு சரீர சம்பந்த
முகத்தாலே இங்கே பிரதி சம்பந்தி யாகையாலும் தன கார்யத்தை மறந்தாகிலும் இவனுடைய ஹிதமே பார்த்துப் போருமவனாகையாலும் ஆதரணீயனாய் இருக்கும் –

ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவனுக்கு பிரதமத்திலே ருசி ஜனகர் ஆகையாலும் ஆச்சார்யா உபதிஷ்டமான ஜ்ஞானத்துக்கு வர்த்தகராய் உசாத் துணை யாகையாலும்
ஆச்சார்யா பிரேமத்தை அபிவ்ருத்தம் ஆக்குமவர்கள் ஆகையாலும் இவனுக்கு சேஷிகள் ஆகையாலும் இவனுக்கு பிரகிருதி வச்யைதையாலே
சில ல்காலித்யங்கள் பிறந்தாலும் அத்தைத் தெளியப் பண்ணவும் வல்லர்களாய் இந்த முகத்தாலே ஆதரணீயராய்ப் போருவர்கள் –

இத்தை ஸ்ருதியும் மாத்ருதேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்யா தேவோ பவ அதிதி தேவோ பவ -என்று சொல்லி வைத்தது –
இங்கு அதிதி யாகிறான் -ஸ்ரீ வைஷ்ணவன் யாய்த்து -அதிதிகள் ஆகிறார் தாங்கள் முன்பு நின்ற நிலை குலைந்து
இவன் இருக்கிற வர்க்கத்திலே புகுமவர்கள் இ றே
இவர்களும் தந்தாமுடைய பிரகிருதி ப்ராக்ருதங்களை த்யஜித்து இவன் பற்றி நிற்கிற சரணத்திலே ஆகதரர் ஆனவர்கள் ஆய்த்து –
உபாயே க்ருஹ ரஷித்ரோ சப்த சரணம் இத்யாயம் -இத்யாதி -அப்படி வந்தவனை குல சரண கோத்ராதிகளை ஆராயாதே
சத்கரிக்க வேண்டுமோபாதிஸ்ரீ வைஷ்ணவனுடைய குலாதிகளை ஆராயாதே அதிதி சத்காரன்களைப் பண்ணக் கடவன் –
அதிதிர் யத்ர பக்நர்சேர க்ருஹாத் ப்ரதி நிவர்த்ததே ஸ தஸ்மை துஷ்க்ருதம் தத்வா புண்யமாதாய கச்சதி -என்கிறபடியே
அதிதிகளுடைய அசத்காரத்தில் பாபாகமனமும் புண்ய சாயமும் பிறக்கும் என்கையாலே இவனும் இவ்வைஷ்ணவனை ஆதரியானாகில்
பகவன் நிக்ரஹ ரூபமான பாபம் வரும் -தத் அனுக்ரஹ ரூபமான புண்யமும் இவனை விட்டுப் போகக் கடவது –

இனி இந்நால்வரில் அத்யந்த ஆதரணீயாராவார் யார் என்னில் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய வைபவ ஜ்ஞானமும்
-பிராட்டியுடைய வைபவ ஜ்ஞானமும் ஈஸ்வரனுடைய சர்வபிரகார வைபவ ஜ்ஞானமும்
இவ்வாச்சார்யா அங்கீகார அனந்தரம் ஆகையாலே
-யதா தேவே ததா குரௌ -என்கிற அளவன்றிக்கே விசேஷண ஆதரணீயன் ஆச்சார்யனே யாய்த்து

ஆகையாலே இவ்வாழ்வார் ஆகிறார் அவ்வாச்சார்யா வைபவம் அறிந்தவர் ஆகையாலும்
ஆழ்வார் திருவடிகளிலே நெடு நாள் பரிசர்யை பண்ணி அவருடைய பிரசாத பாத்ரராய்ப் போந்தவர் ஆகையாலும்
அவர் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் உண்டாக நினைத்திராதவர் ஆகையாலும்
அவரை வாயாராப் புகழ்ந்து அவருடைய உபகார அனுசந்தான ப்ரீதிக்குப்போக்கு விட வேண்டுகையாலும்
இப்பிரபந்த முகத்தாலே ஆழ்வார் வைபவத்தைப் பேசுகிறார்

ஈஸ்வரன் துராராதனாய் ஆச்சார்யன் ஸ்வாராதனாய் இருக்கும்
ஈஸ்வரனை ஆராதிக்கைக்கு திருவிருத்தம் தொடக்கமான நாலு பிரபந்தங்கள் வேண்டிற்று
ஆழ்வாரை ஆராதிக்கைக்கு இப்பத்துப் பாட்டுக்களே அமைந்தது –

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: