திருவாய்மொழி – -3-1— –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

முடிச் சோதி -பிரவேசம் –

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன் –2-10-1-என்று அவன் கல்யாண குண விஷயமாக
அஜ்ஞ்ஞானம் இல்லை என்றார் கீழில் திருவாய்மொழியில் –அந்த குணாதிக விஷயம் தன்னில் ஒரு அஜ்ஞ்ஞானம் அனுவர்த்திக்கிறபடி
சொல்லுகிறார் இதில் -கீழ்ச் சொன்ன அஜ்ஞானத்துக்கு அடி கர்மமாய் இருக்கும் -இங்குத்தை அஜ்ஞானத்துக்கு அடி
விஷய வைலஷண்யமாய் இருக்கும் -நித்ய ஸூரிகளுக்கும் உள்ளதொரு சம்சயம் ஆயிற்று இது –
ஸ்வரூப அனுபந்தியாய் இருப்பதொரு சம்சயம் ஆகையாலே ஸ்வரூபம் உள்ளதனையும் நிற்பது ஓன்று இறே இது

திருமலையை அனுபவித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே -வடமா மாலை உச்சியை -என்னுமா போலே திருமலையில் ஏக தேசம்
என்னலாம் படியாய் கல்பக தரு பஹூ சாகமாய்ப் பணைத்துப் பூத்தால் போலே நிற்கிற அழகருடைய சௌந்தர்யத்தை அனுபவித்தார்
-வேதங்களோடு வைதிக புருஷர்களோடு ப்ரஹ்ம ருத்ராதிகளோடு வாசியற ஸ்வ யத்னத்தால் காணும் அன்று காண ஒண்ணாதபடி
இருக்கிற இருப்பரையும் தானே கொடு வந்து காட்டும் அன்று ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றார்க்கும் காணலாய் இருக்கிற இருப்பையும்
அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார்

—————————————-

அவதாரிகை
முதல் பாட்டில் அழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திவ்ய அணிகலன்களுக்கும் உண்டான ஸூகடிதத்வத்தைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார்

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
உன்னுடைய திருமுகத்தில் உண்டான தேஜஸ்ஸானது திரு அபிஷேகத்தின் தேஜஸ்ஸாய்க் கொண்டு விகஸித மாயிற்றோ-
உன்னுடைய திரு அபிஷேகத்தின் தேஜஸ்ஸானது திருமுகத்தின் தேஜஸ்ஸாய்க் கொண்டு விகஸித மாயிற்றோ என்றும் வரக் கடவது
சேஷ பூதனுக்கு முற்படத் தோற்றுவது தன்னுடைய சேஷத்வ பிரதிசம்பந்தியான அவனுடைய சேஷித்வம் இறே
அவனுடைய சேஷித்வ ப்ரகாசகமான திரு அபிஷேகத்தின் அழகு திருவடிகளிலே போர வீசிற்று

அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
திருவடிகளின் தேஜஸ் ஸா னது தேவர் நின்ற ஆசன பத்மமாய்க் கொண்டு விகஸித மாயிற்றோ –
நீ நின்ற தாமரை அடிச் சோதியாய் கொண்டு விகஸித மாயிற்றோ

நீ நின்ற
ஏக ரூபம் ஆனவனும் நீரிலே நின்றால் போலே ஆதரித்து நிற்கும்படி இது பிராப்தியினுடைய சரமாவதி யாகையாலே
அவ்வருகு போக்கில்லையே -திருவடிகளின் தேஜஸ்ஸானது ஏறக் கொழித்தது
கடலுக்குள் பட்டதொரு த்ருணம் ஒரு திரை ஒரு திரையிலே தள்ளக் கடந்து அலையுமா போலே -ஓர் அழகு ஓர்
அழகிலே தள்ளக் கிடந்து அவற்றை அனுபவிக்கிறார்

படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
திருமேனி அழகு பல் கலனாய்க் கலந்ததுவோ -பல் கலன் படிச் சோதியாய்க் கலந்ததுவோ
சோதியாடை கடிச் சோதியாய்க் கலந்ததுவோ -கடிச்சோதி சோதி யாடையாய்க் கலந்ததுவோ –
நின் பைம்பொன் கடிச்சோதி படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் கலந்ததுவோ
உன்னுடைய அழகியதாய் ஸ்ப்ருஹணீயமான திவ்ய கடி பிரதேசத்தில் உண்டான தேஜஸ்ஸானது ஸ்வாபாவிகமான தேஜஸ்சை உடைத்தான
திருப் பீதாம்பரம் தொடக்கமான பல திரு ஆபரணங்களாய் கொண்டு சேர்ந்ததுவோ
நீரிலே நீர் கலந்தால் போலே பேத க்ரஹணத்துக்கு அனுபபத்தியேயாய் இருக்கை
அன்றியே படிச் சோதி -படியாணியான ஒளி என்னவுமாம்
படி -இயல்பாகவே -திருமேனி தங்கம் மூன்று பொருளில்

திருமாலே கட்டுரையே —
இதுவும் ஒரு சேர்த்தி அழகு இருக்கிறபடி
அகலகில்லேன் இறையும்-என்று பிரியமாட்டாமல் இருக்கிற பிராட்டியும் ஸ்வ தஸ் சர்வஜ்ஞனான நீயும்
கூட விசாரித்து இதுக்கு ஒரு போக்கடி அருளிச் செய்ய வேணும்
இன்று அனுபவிக்கப் புக்க இவர் -என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் -என்பர்
நித்ய அனுபவம் பண்ணுமவர்கள் -பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயிலா நிற்பார்கள்
ஸ்வதஸ் சர்வஜ்ஞனான தனக்கும் தன் தன்மை அறியவரியனாய் இருக்கும்
ஆக இப்படி இன்று அனுபவிக்கப் புக்க இவரோடும் நித்ய அனுபவம் பண்ணுபவர்களோடு அவன் தன்னோடு வாசியில்லை இச்சம்சயம் அனுவர்த்திக்கைக்கு
தமக்கு இந்த சம்சயம் அறுதியிட ஒண்ணாதாப் போலே அவர்களுக்கும் என்று இருக்கிறார்
கட்டுரையே -சொல்ல வேண்டும் என்றபடி

—————————————————————-

அவதாரிகை –
அழகருடைய சௌந்தர்யத்துக்கு சத்ருசம் அல்லாமையாலே
லோகத்தார் பண்ணும் ஸ்தோத்ரம் அங்குத்தைக்கு அவத்யமாம் அத்தனை என்கிறார் –

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
அனுபவித்து குமிழ் நீருண்டு
போமித்தனை போக்கிச் சொல்லப் போகாது
கட்டுரை என்று முழுச் சொல்லாய் -சொல்லில் -என்றபடி –
சொல்லில் தாமரை ஜாதியாக உன்னுடைய திருக் கண்களுக்கும் திருக்கைகளுக்கும் ஒப்பாகாது –
ஒரோ வியக்திகளுக்கும் தாமரை ஜாதியாக ஒப்பாகாது –
குளிர நோக்கின கண் –தோற்று விழும் திருவடிகள் -எடுத்து அணைக்கும் திருக்கைகள் -இவை இருக்கிற படி –
ந சாஸ்திரம் நைவ ந கர்ம –என்கிற இடத்தில் அடைவு சொல்லுகிறது அன்றே –
இவரும் அனுபவத்துக்கு பாசுரம் இட்டுச் சொல்லுகிறார் அத்தனை இ றே –
நின் கண் -என்கையாலே -உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது
பாதம் என்று -அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது –
கை என்று தாம் நடு வனுபவித்த அழகுக்கு உப லஷணம் –

சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது –
பொன்னை உபமானம் ஆக்கக் போராது என்கைக்கு சிஷிக்கிறார் –
சுட்டுரைத்த -காய்ச்சி ஓட வைத்து உரைத்த நன்றான பொன் உன்னுடைய ஸ்வா பாவிகமான திவ்ய விக்ரஹத்தின் ஒளிக்கு ஒப்பாகாது –
இத்தனை சிஷித்தல் யாயிற்று -சுட்டு -உரைத்தல் -நல் -மூன்று விசேஷணங்கள் –ஒப்பாகச் சொல்லப் பாத்தம் போராதது –
ஷ அந்தராதித்யே ஹிரண்மய-என்றும் –திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றும் – ருக்மாபம் -என்னக் கடவது இ றே –
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
ஒட்டுரைத்து -ஓட்டாவது கூடுகை –அதாவது -சேருகை-சத்ருசமாய் இருக்கை -உனக்குச் சத்ருசமாகச் சொன்னார்களாய்-
இவ்வுலகு –
மஞ்சா க்ரோசந்தி -என்கிறபடியே காண்கிற இதுக்கு மேற்பட அறியாத இந்த லௌகிகர்-
ப்ராக்ருத பதார்த்த வைலஷண்யமும் அறியாதவர்கள்
உன்னை –
சாஸ்த்ரைக சமதி கம்யனாய் -அவை தானும் புகழப் புக்கால் யதோ வாசோ நிவர்த்தந்தே -எண்ணும்படியான உன்னை –
புகழ்வெல்லாம் –
உள்ளதும் சொல்லி -இல்லாததும் எல்லாம் இட்டுக் கொண்டு சொன்னார்களாய் இருக்கிறதும் எல்லாம் –
பெரும்பாலும்
மிகவும் ப்ராயேண

பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –
பட்டுரையாய் -பட்டது உரைக்கை –நெஞ்சில் பட்டதை சொல்லுகை -விஷயத்தைப் பாராதே ப்ரதிபந்த நந்த்தைச் சொல்லுகை –
புற்கென்றே காட்டுமால்-
புன்மையையே காட்டா நின்றது
இவன் பிரதி பந்நத்தைச் சொன்னானாய் விஷயத்தில் ஸ்பர்சியாதே இருக்குமாகில் அன்குத்தைக்குப் புன்மையே கட்டும் படி என் என்னில்
-ரத்னம் அறியாதான் ஒருவன் குருவிந்தக் கல்லோடு ஒக்கும் இது -என்றால் -அவ்வளவாக இ றே இவனுக்கு இதில் பிரதிபத்தி –
அவ்வழியாலே அதுக்கு அவத்யமாம் இ றே -அப்படியே இவன் பண்ணும் ஸ்தோத்ரம் இங்குத்தைக்கு அவத்யமாகவே தலைக் கட்டும் –
இங்குத்தைக்கு புன்மையைக் காட்டுகைக்கு நிபந்தனம் என் -என்னில்
பரஞ்சோதி –
நாராயண பரோ ஜ்யோதி -என்கிறபடியே நீ சர்வ வஸ்து விசஜாதீயன் ஆகையாலே –

—————————————————————-

அவதாரிகை –
நம் பக்கல் முதலடியிடாத லௌகிகரை விடும் -வ்யாவ்ருத்தரே
நீர் பேசினாலோ என்ன -என்னாலே தான் பேசப் போமோ என்கிறார் –

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-

பரஞ்சோதி நீ பரமாய் –
பரமாய் பரஞ்சோதி நீ -வடிவழகிலே யாதல் -ஐஸ்வர் யத்திலே யாதல் –அல்பம் எற்றமுடையான் ஒருவனைக் கண்டால் –
உன் தன்னை தேஜஸ் ஸூ டையான் ஒருவன் இல்லை -உன் தனை ஐஸ்வர்யம் உடையான் ஒருவன் இல்லை -என்பர்கள் இ றே –
அங்கன் இன்றிக்கே -இனியொரு வியக்தியில் அவையில்லை -என்னும்படி பூரணமாக உள்ளது உன் பக்கலிலே யாகையாலே பாரமாய்க் கொண்டு பரஞ்சோதிஸாய் இருக்கிறாய் நீ –
தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி -என்கிறபடியே –இவன் தேஜஸ் சாலே யன்றோ அனைத்து தேஜஸ் பதார்த்தங்களும் பிரகாசிக்கின்றன –
ஆதலால் -பரமாய் -விசேஷணம் இட்டு பரஞ்சோதி -என்கிறார்

நின்னிகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற -பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி
லோகத்தில் தன்னோடு ஒத்தாரும் தனக்கு மேற்பட்டாரும் அநேகரை இருக்கச் செய்தே
உனக்கு சமராதல் -அதிகராதல் உண்டோ -என்னக் கடவது இ றே –
உலகம் படைத்த என்னாமல் நின்னுள்ளே படர் -என்பதால்
அங்கன் அன்றிக்கே உன்னை ஒழிய வேறொரு பரஞ்சோதிஸ் ஸூ இல்லாமையாலே உபமான ரஹிதனாய்க் கொண்டு வர்த்தியா நின்றுள்ள பரஞ்சோதிஸ் ஸூ நீ —
தனக்கும் கூட கடவன் அல்லாதான் ஒருவனை நீயே இ றே நாட்டுக்கு எல்லாம் கடவாய் -என்னக் கடவது -அங்கன் அன்றிக்கே உன்னுடைய சங்கல்ப லவ லேசத்தாலே
கார்யகரமாய்க் கொண்டு விஸ்த்ருதமாக நின்றுள்ள லோகங்களை எல்லாம் உண்டாக்கின எம் பரஞ்சோதி –

நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி
புத்ரஸ்தே ஜாத -என்னுமா போலே அவற்றை உண்டாக்கின பின்பு திருமேனியிலே பிறந்த புகர் இது –
ஸ்வா பாவிகமான மேன்மை அது –காரணத்வ பிரயுக்தமான புகர் இது –

இப்படி இருக்கிற மேன்மையை எல்லை காணிலும்
கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –
நீர்மை தரை காண ஒண்ணா தாய் இருக்கிறதே
பண்பு -உன்னுடைய பிரகாரம் -அது என்னால் சொல்லப் போகாது -அனுபவித்துப் போம் இத்தனை –
கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய்யூண் என்னும் ஈனச் சொல் -திரு விருத்தம் -98-என்று நெஞ்சால் நினைக்க ஒண்ணாதது சொல்லத்தானே போகாதது இ றே

————————————————-

அவதாரிகை –
தாம் உரைக்க மாட்டேன் என்றார் –
இவனுடைய போக்யாதிசயம் இருந்த படியாலே சிலராலே கிட்டலாய் இருந்ததில்லை –
இனி சம்சாரிகள் இழந்து நோவுபட்டுப் போமித்தனை யாகாதே என்று அழகருடைய அழகின் மிகுதியை பேசுவிக்கப் பேசுகிறார்

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின் -மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
நின் மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க இம்மலர்தலை மாஞாலம் மாட்டாதே யாகிலும்
நின் மாட்டாய -மாட்டு -இடம் -தேன் -நிதி மூன்று பொருள்கள் உண்டே –
உன்னிடத்திலே யான -உன் பக்கலிலேயான –
மட்டை -மாட்டு என்று நீட்டிக் கிடக்கிறதாய்-மத்வ உத்ச -என்கிறபடியே மதுஸ் யந்தியாகையாலே நிரதிசய போக்யமான திருமேனியை என்னுதல் –
இம்மலர்தலை மா ஞாலம் என்கிறது -மாட்டாமைக்கு நிபந்தனம் -ஸ்ருஜ்யத்வ கர்ம வச்த்யங்கள் என்கை-
மாட்டை -மாடாய் -நிதியாய் -உன்னுடைய நிதி போலே ச்லாக்கியமாய் புஷ்பஹாச ஸூகுமாரமாய் இருந்துள்ள திருமேனியிலே நெஞ்சை வைக்க
-திரு நாபி கமலத்தை அடியாக உடைத்தான இம்மஹா பிருத்வியானது மாட்டாதே யாகிலும்
ஆகிலும் -என்றது மாட்டாது இருக்கச் செய்தே என்றபடி –
இதுதானே போரும் இறே அநர்த்தம்
கர்ம சம்ஸ்ருஷ்டரான சேதனர்க்கு கர்மசம்பந்தம் அற்றால் அனுபவிக்கும் உன் திருமேனியிலே நெஞ்சை வைக்கப் போகாது இறே –
அவ்வனர்த்தத்துக்கு மேலே

நின் திருவுருவம் மனம் வைக்க மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய்-
உன் திருமேனியிலே நெஞ்சை வைக்க மாட்டாதவையாய் -அவை தான் பலவாய் இருக்கிற சமயம் உண்டு–17 மதாந்தரங்கள்
-அவற்றின் பக்கலிலே நெஞ்சை வைக்கப் பண்ணினாய் –
திருவுருவம் மனம் வைக்க என்கிற இடம் கீழ் மேல் இரண்டு இடத்திலும் அன்வயிக்கிறது –
உன் திருமேனியிலே நெஞ்சை வைக்க ஒண்ணாத படி பாஹ்யமான பல சமய மதி பேதங்களையும் பண்ண வைத்தாய் –
பண்டே உன்னை அறிய மாட்டாத சம்சாரிகளுக்கு மதி பேதங்களை உண்டாக்கினாய்
இவை இத்தனையும் அசத்சமமாம் இறே நீ தான் இவற்றுக்கு வந்து கிட்டலாம்படி இருந்தாயாகில்
மலர்த்துழாய் மாட்டே நீ மனம் வைத்தாய்-
உன் திரு உள்ளத்தையும் கால் தாழப் பண்ண வல்ல திருத் துழாய் தொடக்கமான போகய ஜாதத்திலே திரு உள்ளத்தை வைத்தாய் –
இத்தால் உன்னுடைய போக்யதை சிலரால் கிட்டலாய் இருந்ததோ -என்றபடி
மாடு -என்கிற இத்தை -மாட்டு என்று கிடக்கிறதாய் -மாடு இடம் -அதன் பக்கலிலே என்றபடி –
மாஞாலம் -இத்யாதி
இம்மஹா பிருத்வியானது இங்கனே நோவு பட்டே போமித்தனை ஆகாதே
கர்ம வச்யர் ஆகையாலே தானே உன் பக்கலிலே நெஞ்சை வைக்க மாட்டிற்றிலர்-அதுக்கு மேலே நீ பல விலக்கடிகளையும் உண்டாக்கி வைத்தாய் –
நீயோ நிரதிசய போகய ஜாதத்திலே பிரவணனானாய்-உன்னை விட்டால் பின்னை புத்தி நாசாத் ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -2-63–
என்னும் விஷயங்களிலே இவர்கள் பிரவணராய் இங்கனே நோவு பட்டே போம் இத்தனை யாகாதே –

————————————————————–

அவதாரிகை –
மூன்றாம் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் நேரே சங்கதி -நாட்டார் இழவு நடுவு பிரசங்காத் ப்ரஸ்துதம் இத்தனை –
கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே -என்று சொல்லுவான் என்-நாட்டார் பேர் இழவு கிடக்கிடீர் -மயர்வற மதிநலம் அருளப் பெருகையாலே நீர் வ்யாவ்ருத்தரே –
நாட்டாரில் வ்யாவ்ருத்தரான அளவேயோ -விண்ணுளாரிலும் வ்யாவ்ருத்தரே -நீர் நம்மைப் பேச மாட்டீரோ என்ன
என்னை வ்யாவ்ருத்தன் ஆக்கினாய் இத்தனை அல்லது உன்னை சாவதி ஆகிற்றிலையே -என்கிறார் –

வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5-

இவ்வடிவழகை என்னாலே தான் பேசலாய் இருந்ததோ -வருந்தாதே வருந்தவத்த –
ஸ்வா பாவிகமாய் வருவதாய் மிகவும் விகசித கிரண தேஜோ ரூபமாய்
தவ -மிகுதி -திரு மேனியைக் கண்டவாறே -அரிய தப பலமோ -என்று தோற்றி இருக்கும் –
சிறிது அவஹாகித்தவாறே -ஒரு தப பலம் அல்ல -சஹஜ பாக்ய பலம் -என்று தோற்றி இருக்கும்
விகஸ்வர கிரண தேஜோ ரூபமாய் -அது தன்னில் மண் பற்றைக் கழித்து ரஜஸ் தமோ மிஸ்ரமாய் இருக்கை இன்றிக்கே சுத்த சத்வ மயமாய் நிரவதிக தேஜோ ரூபமாய்
-ஆத்ம குணங்களுக்கும் ப்ரகாசகமான திவ்ய விக்ரஹத்தை உடையனாய் இருக்கும் இருப்பு –
கர்ம நிபந்தனமான தேஹங்கள் போல் அன்றிக்கே இச்சாக்ருஹீதமானது இருப்பது -அஸ்மாதாதிகள் உடைய சரீரங்கள் பாபத்திலேயாய் இருப்பன சிலவும்
புண்யத்தாலேயாய் இருப்பன சிலவும் உபயத்திலேயாய் இருப்பன சிலவுமாய் இருக்கும் இறே
நகாரணாத் காரணாத் வா காரண காரணாந்த ச –
அகாரணம் என்கிறது கார்யத்தை -காரணம் என்கிறது மூலப் பிரக்ருதியை -காரணகாரணம் என்கிறது மகாதாதிகளை-
அன்றியே ஸூக சரீரமோ துக்க சரீரமோ உபயத்தாலும் ஆன சரீரமோ
கம் -ஸூ கம் -அகம் -துக்கம் -துக்கம் காரணமோ ஸூ கம் காரணமோ ஸூ க துக்கங்கள் இரண்டும் காரணமோ என்னில் இவை இத்தனையும் அன்று –
சரீர க்ரஹணம் வ்யாபின் -சர்வகதனாய் ஜகச் சரீரனாய் இருக்கிற நீ சரீர க்ரஹணம் பண்ணுகிறது –
தர்மத்ராணாய கேவலம் -காண வாராய் -என்று விடாய்த்து இருப்பார் கண்டு அனுபவிக்கைக்கு தண்ணீர்ப் பந்தல் வைக்கிறபடி இ றே
ந சகாரா -பக்தாநாம் -என்கிறபடியே –

வருந்தாத ஞானமாய்
ஒரு சாதனா அனுஷ்டானத்தாலே யாதல் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றாதால் வந்தது அன்றிக்கே ச்வதஸ் சர்வஜ்ஞனாய்
வரம்பின்றி முழுதியன்றாய்
வரம்பில்லாத எல்லாவற்றையும் நிர்வஹித்தாய்
உடையவன் இறே உடைமையை நிர்வஹிப்பான்
இயன்றாய்
இயலுகை யாவது நிர்வஹிக்கை -உடையவனாய் கடக்க நிற்கை யன்றிக்கே நோக்கும்படி சொல்லுகிறது
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே
காலத்ரயத்துக்கும் நிர்வாஹகனாய் போருகிற உன்னுடைய கல்யாண குணங்களை என்னாலே முடியச் சொல்லி தலைக் கட்டலாய் இருந்ததோ
உன்னுடைய விக்ரஹ வைலஷண்யம் அது சர்வத்தையும் யுகபத் சாஷாத்கார சமர்த்தனாய் இருக்கிற இருப்பு அது
ரஷகத்வம் அது -எது என்று பேசித் தலைக் கட்டுவன் –

————————————-

அவதாரிகை –
எங்குலக்க ஓதுவன் -என்றார் -வேதங்கள் நம்மைப் பேசா நின்றனவே -உமக்குப் பேசத் தட்டு என் -என்ன அவையும் இவ்வளவு அன்றோ செய்தது -என்கிறார் –

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
ஓதுவார் என்கையாலே அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது –
ஒத்து எல்லாம் -ருகாதி சதுர் வேதங்களும்
ஆக அத்யேத்ரு பேதத்தால் சாகா பேதங்களாய்க் கொண்டு பிரி யுண்ட வேதங்கள் எல்லாம்

எவ்வுலகத்து எவ்வெவையும்
எல்லா லோகங்களிலும் உண்டான எல்லாம்
ஸ்வர்க்க லோகத்திலும் ப்ரஹ்ம லோகத்திலும் அங்குள்ள புருஷர்களுடைய ஜ்ஞானாதிக்யங்களுக்குத் தக்க படி அவையும் பரந்து இருக்கும் இறே –
ஸ்ரீ ராமாயணம் என்றால் ப்ரஹ்ம லோகத்தில் அநேகம் க்ரந்தமாய் இருக்கச் செய்தே இங்கு இருபத்து நாலாயிரமாய் இரா நின்றது
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
சாதுவாய் -சப்தத்துக்கு சாதுத்வம் ஆவது அர்த்தத்துக்கு போதகமாய் இருக்கை –
அன்றியே சாதுவான புகழ் என்று குண விசேஷணம் ஆகவுமாம்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
குண விஷயமான இத்தனை போக்கிப் புறம்பு போயிற்று இல்லை –
விஷயம் தன்னை எங்கும் ஒக்க விளாக்குலை கொண்டதும் இல்லை -வர்ஷ பிந்தோ-இவ அப்தௌ சம்பந்தாத் ஸ்வாத்ம லாப -என்னுமா போலே
கடலிலே ஒரு வர்ஷபிந்து விழுந்தால் கடலை எங்கும் வியாபிக்க மாட்டாதே -தன் சத்பாவத்துக்கும் அழிவில்லை இறே

போது வாழ் புனந்துழாய் முடியினாய்
வேதங்களும் கூட ஏங்குவது இளைப்பதாகா நிற்க நான் இச் சேர்த்திக்கு பாசுரமிட்டு ஏத்தவோ –
பூவை உடைத்தாய் தன் நிலத்திலே நின்றால் போலே செவ்வி பெற்று வாழா நின்றுள்ள திருத் துழாயை திரு அபிஷேகத்திலே உடையவனே
திருத் துழாய்ப் பூ முடி சூடி வாழா நிற்கிறது -இவ்வொப்பனை என்னால் பேசலாய் இருந்ததோ –

பூவின் மேல் மாது வாழ் மார்பினா-
பிராட்டி பிரிந்து இருக்கில் இறே வைத்த வளையம் சருகாவது
இவ்வொப்பனையை ஒப்பனை யாக்கும் அவளோட்டை சேர்த்தி தான் என்னாலே பேசலாய் இருந்ததோ –
தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார் பூ அடி கொதித்துப் போந்து வர்த்திக்கும் மார்வை உடையவனே –
பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீ மிதிலையை நினைக்கும் அன்றாயிற்று இவளும் இம்மார்வை விட்டு பிறந்தகமான தாமரையை நினைப்பது –
என் சொல்லி யான் வாழ்த்துவனே
இவ்வொப்பனைக்கும் இச்சேர்த்திக்கும் என்னாலே பாசுரம் இட்டு சொல்லலாய் இருந்ததோ –

————————————————————-

அவதாரிகை –
வேதங்கள் கிடக்கட்டும் -வைதிக புருஷர்கள் என்று சிலர் உண்டே -அவர்கள் நம்மை ஏத்தக் குறை என் என்ன
-அதுவும் உனக்கு நிறக்கேடு என்கிறார் –

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிழார் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-

வாழ்த்துவார் பலராக –
ஆனால் வந்தது என் -வேதங்களில் அவர்கள் செய்த ஏற்றம் என் -என்றாம் பட்டர் அருளிச் செய்வது –
அன்றிக்கே
வாழ்த்துவார் பலர் உண்டாகைக்காக என்னுதல் –
நின்னுள்ளே நான்முகனை –
உன்னுடைய சங்கல்ப சஹச்ர ஏகதேசத்திலே சதுர் முகனை கடல் சூழ்ந்த பூமியை எல்லாம் உண்டாக்கு -என்று முதல் படைத்தாய் –
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
ஏகார்ணவத்திலே -லோகங்களை உண்டாக்கு என்று சதுர்முகனை உண்டாக்கினாய் என்னவுமாம் –
உன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டரானவர்கள் உன்னை ஏத்த என்ற ஒரு பொருள் உண்டோ –
ஆனால் இவர்களை ஒழிய ஜ்ஞானாதிகரான ருத்ராதிகளையும் கூட்டிக் கொண்டாலோ என்ன -அவர்களுக்கும் நலம் -நிலம் -அன்று என்கிறது மேல் –

கேழ்த்த சீரரன் முதலாக் கிழார் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே-
இப்பங்களத்தை விட்டு கால்கடியரானவர்கள் ஏத்தப் புக்கால் எல்லை காணப் போமோ –
கிளர்ந்த சீர் உண்டு -ஜ்ஞானாதி குணங்கள் -அவற்றை உடையனான ருத்ரன் தொடக்கமாக ஈச்வரனோடு மசக்குப் பரலிடமாம் படி
கிளர்ந்த தேவதைகள் முசுகு வால் எடுத்தால் போலே கிளர்ந்து –
ஒருவர் சொன்னவிடம் ஒருவர் சொல்லாதே ஒரோ பிரயோஜகங்களிலே மிகைத்த ஆயுஸ் ஸூ க்களை யுடையராய் இருக்கிறவர்கள் ஸ்தோத்ரம் பண்ணினால்
உன்னுடைய ஸ்வாபாவிகமான கல்யாண குணங்கள் மாசூணாதோ
இவர்கள் ஏத்தும் அளவோ இவன் குணங்கள் என்ன அவ்வழியாலே அவத்யமாய்த் தலைக்கட்டாதோ –

————————————————-

அவதாரிகை –
கீழ்ப்பாட்டில் -ருத்ரன் தொடக்கமானார் ஏத்த மாட்டார்கள் என்றதாய் -இப்பாட்டில் -அவன் தனக்கும் கூட ஜனகனான ப்ரஹ்மா ஸ்தோத்ரம் பண்ணினால்
அது உனக்கு அவத்யமாம் என்பாரும் உண்டு -அவனையும் கீழ்ப் பாட்டில் சொல்லிற்றாய்-இதில் உபய பாவனையையும் உடைய இவனைப் போல் அன்றியே
கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மாவை உத்ப்ரேஷித்து-அவன் ஏத்தினாலும் தேவர்க்கு அவத்யமாம் அத்தனை அன்றோ –
என்று பட்டர் அருளிச் செய்யும் படி

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
ஹேய ப்ரத்ய நீகமாய்
நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹத்தை உடையையே
அரும்பினை அலரை -என்னும்படியாய் இருக்கும்
யுவ குமார -என்கிறபடியே -ஏக காலத்திலேயே இரண்டு அவஸ்தையும் சொல்லலாய் இருக்கை-யுவ அகுமார-என்றபடி
சதைக ரூப ரூபாய -என்கிறபடியே ஷய வ்ருத்திகள் இன்றிக்கே இருக்கும் -என்றுமாம்
அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே சதைக ரூப ரூபாய விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே-என்றபடி –
மாசூணா ஞானமாய் –
ஒரு ஹேது வாலே மாசேறக் கடவ அல்லாத ஞானத்தை யுடையையாக
மலராது குவியாது -என்கிறது கீழும் மேலும் அந்வயிக்கக் கடவது
சம்சாரிகள் கர்ம நிபந்தமாக பரிக்ரஹித்த தேஹத்துக்கு வரக் கடவதான ஸ்வரூப அந்யதா பாவமும் இல்லை இவன் திருமேனிக்கு –
அவர்கள் ஞானத்துக்கு வரக் கடவதான ஸ்வபாவ அந்யதா பாவமும் இல்லை இவனுடைய ஞானத்துக்கு -என்கை
முழுதுமாய் முழுதியன்றாய்
அனுக்தமான குணங்களை யுடையையாய் –
ஜகச் சரீரனாய் நிற்கும் நிலை
வரம்பின்றி முழுதியன்றாய் -என்றதன் அனுவாதமாய் எல்லாவற்றையும் நிர்வஹித்தாய் என்றபடி –
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால் மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே—
சதுர்முகாயுர் யதி கோடி வக்த்ரோ பவேன் நர -க்வாபி விசுத்த சேதா -ச தே குணா நாம யுத ஏகதேசம் –
வதந்தே வா தேவவர ப்ரசீத -ஸ்ரீ வராஹ புராணம்
அப்படிப்பட்ட அமரர் கோன் உன்னை ஸ்தோத்ரம் பண்ணினால் –
அவனும் அடிக்கழிவு செய்தானாய் விடுமத்தனை –
ஆழ்வார்களே இறே அவன் அடி அறிந்து மங்களா சாசனம் பண்ணுவர் -உன் சேவடி செவ்வி திருக்காப்பு -போலே
திரோதான ஹேது இல்லாத ஜ்ஞானாதி பூஷணங்களை யுடையான் ஒரு அமரர் கோனை யுண்டாக்குவது-
உத்ப்ரேஷிதனான ப்ரஹ்மா -என்கைக்கு நிதானம் இது
இவ்வருகில் ப்ரஹ்மாவுக்கு தன் அதிகார அவசானத்திலே ஞானத்துக்கு திரோதானம் உண்டு இறே
இவனுக்கு அது இன்றிக்கே இருப்பது
வழி படுக்கைக்கு உறுப்பாக சொல்லுகிற கோலம் ஆகையாலே –
அப்படி இருக்கிற அமரர் கோன் தான் உன்னை ஸ்தோத்ரம் பண்ணினால்
ஒரு சம்சர்க்கத்தால் மாசூணாக் கடவது அன்றிக்கே இருக்கிற உன் திருவடிகளின் தேஜஸ்ஸூ ஆனது
இவன் ஏத்தும் அளவே இத்திருவடிகள் -என்று மழுங்காதோ-
தம்முடைய சேஷத்வ அனுரூபமாக உன் திருமேனி என்னாதே உனபாதம் என்கிறார்

—————————————————————

அவதாரிகை
மேன்மை தான் பேச ஒண்ணாது என்கைக்கு நீர்மை தானே பேச்சுக்கு நிலமாய் இருக்கிறது -என்கிறார் –

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
சத்ரு சரீரங்க ளிலே படப்பட சாணையில் இட்டால் போலே புகர் பெற்று வாரா நிற்குமாயிற்று திரு வாழி
மழுங்கக் கடவது அன்றியே கூரிய முனையை யுடைய திரு வாழியை –
வடிவார் சோதி வலத்துறையும் -என்னும்படி வலவருகே யுடையையாய் –
நல் வலத்தையாய் தோன்றினையே
கையில் திரு வாழி இருந்தது அறிந்திலன்
அறிந்தான் ஆகில் இருந்த விடத்தே இருந்து அத்தை ஏவிக் கார்யம் கொள்ளலாம் இறே
ஆர்த்த நாதம் செவிப் பட்டவாறே -தன்னை மறந்தான்
நினைத்தாலும் இருந்த இடத்திலே இருந்து துக்க நிவ்ருத்தி பண்ண ஒண்ணாது
தொழும் காதல் களிறு ஆயிற்று
கையும் திரு வாழியுமான அழகு காண ஆசைப்பட்டு இருக்கிறவன் ஆயிற்று –

தொழும் காதல் களிறு அளிப்பான்
சதுர் தந்தி என்னுமா போலே காதலே இதுக்கு நிரூபகமாய் இருக்கை
அளிப்பான் -இதன் கையிலே பூ செவ்வி அழியாமே திருவடிகளிலே இடுவித்துக் கொள்ளுகைகாக
புள்ளூர்ந்து தோன்றினையே
சங்கல்பத்துக்கு முற்பட்டாயிற்று திருவடி வேகம் இருப்பது
அவன் வேகம் போராமல் அவனையும் இடுக்கிக் கொண்டு இறே வந்து விழுந்தது
தோன்றினையே -இடர் பட்டார் தாமாய்-தமக்குத் தோற்றினால் போலே காணும் இருக்கிறது –
மழுங்காத ஞானமே படையாக –
திரு வாழியை மறந்தான் என்கைக்கு அதிலும் அண்ணியதான சங்கல்ப ரூப ஞானத்தையோ நினைக்கிறது
அநேக கார்யங்களில் ஏவா நின்றாலும் மழுங்கக் கடவது அன்றியே புகார் பெற்று வாரா நின்றுள்ள சங்கல்ப ரூப ஞானமே கருவியாக
மலருலகில்
திரு நாபீ கமலத்தை அடியாக யுடைததான சம்சாரத்தில்
தொழும் பாயர்க்கு
சேஷர் ஆனவருக்கு
மலருலகில் -தொழும் பாயர்க்கு -மழுங்காத ஞானமே படையாக -அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே —
இருந்த விடத்தே இருந்து சங்கல்ப ரூப ஞானத்தாலே ரஷித்தாய் ஆகில்
ஆனை இடர்பட்ட மடுவின் கரையிலே அரைகுலைய தலை குலைய உணர்த்தி யற்று வந்து விழுந்தான் என்கிற
நிரவதிக தேஜஸ்ஸூ இழந்தே யன்றோ
மறையாதே என்ற இதுக்கு மறையும் மறையும் -என்று சிற்றாட் கொண்டான் வார்த்தை —

——————————————————————————

அவதாரிகை –

வேதைக சமத்தி கம்யனாய் -சர்வேஸ்வரனாய்-இருக்கிற உனக்கு -த்வத் ஸ்ருஷ்டராய் உன்னாலே லப்த ஜ்ஞானரான
ப்ரஹ்மாதிகள்-ஈஸ்வரன் -என்று அறிந்து -ஏத்த இருக்குமது விஸ்மயமோ என்கிறார் –

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-

மறையாய் -நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே –
ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உபகுருதே ச இதிஹாசை புராணை நயாயை சார்த்தம் த்வத் அர்ச்சா விதிம் உபரி பரிஷீயதே பூர்வ பாக
ஊர்த்வ பாக த்வத் ஈஹா குணவிபவ பரிஜ் ஞாபநை த்வத் பத ஆப்தௌ வேத்ய
வேதை ச சர்வை அஹம் இதி பகவன் ஸ்வேன ச வ்யாசகர்த்த -ஸ்ரீ ரங்க ராஜ ஸ்தவம் -2-19-
மறை என்றும்-வேதம் என்றும் இரண்டு படியாகச் சொல்கிறது –
பாஹ்யராய் நாஸ்திகராய் இருப்பாருக்கு தன் படிகளை மறைக்கையாலும்
ஆஸ்திகராய் இருப்பார்க்கு தன் அர்த்தத்தை வெளியிட்டுக் காட்டுகையாலும்
பூர்வ பாகம் -ஆராதனா ரூபத்தைச் சொல்லுகிறதாய்-உபரிதன பாகம் -ஆராத்ய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறதாய்
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே சகல வேதங்களும் தன்னையே பிரதிபாதிக்கும் படியாக இருக்கையாலே வந்த புகரைச் சொல்கிறது
வேதங்களிலே சர்வாதிகனாகவும் நிரதிசய போக்யனாகவும் பிரகாசிக்கிறவனே-
பதிம் விச்வச்ய பதிம் பதீநாம் தம் ஈச்வராணாம் பரமம் மகேஸ்வரம் தம் தேவதாம் பரமஞ்ச தைவதம் –அனைத்தையும் நியமிப்பவன் என்பதற்கு பிரமாணம்
சர்வ கந்த சரவ ரச ஆனந்த ப்ரஹ்ம ரசோ வை ரசம் ஹ்யேவாயம் லப்த்வானந்தீ பவதி -எல்லையற்ற போக்யன் என்பதற்கு பிரமாணம் –

முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
வேதங்கள் தான் பிரதிபாதிப்பது இவனுடைய ரஷகத்வத்தை ஆயிற்று
முறையால்
ஸ்வாமித்வ பிராப்தியாலே என்னுதல்
பர்யாயேண- என்னுதல் –
இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
கரண களேபர விதுரமாய் போக மோஷ ஸூநயமாய் கிடந்தவற்று இவற்றை உண்டாக்கி
ஸ்ருஷ்டமான ஜகத்தை பிரளயம் கொள்ள மஹா வராஹமாய் இடந்து
திரிய பிரளயம் வர வயிற்றினுள்ளே வைத்து நோக்கி பின்னை வெளிநாடு காண உமிழ்ந்து
மகாபலி போல்வார் பருந்து இறாஞ்சினால் போலே அபஹரிக்க எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
இப்படி சர்வவித ரஷணங்களையும் பண்ணிணவனே
விஷம சிருஷ்டிக்கு அடியான கர்ம விசேஷம் இறே சேதனர் பண்ணி வைப்பது
யௌ கபத்யம் அனுக்ரஹ கார்யம் -என்கை –

பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே
ஜடை கழற்றாதே சாதக வேஷத்தோடு இருக்கச் செய்தே கலா மாத்ரமான சந்த்ரனைத் தரித்துக் கொண்டு சுப பிரதானனாய் இருக்கிற ருத்ரனும்
அவனுக்கும் கூட ஜனகனான சதுர்முகனும்
இவர்களோடு ஒக்க எண்ணலாம் படி இருக்கிற இந்த்ரனும்
நீ ஸ்வாமியான முறை அறிந்து ஏத்த -அத்தாலே என்னுடைய வ்யாவ்ருத்தி தோற்ற இருந்தாய் என்றால் இது உனக்கு விஸ்மயமோ –
ஒருவன் ஒரு குழமணனைப் -மரப்பாச்சி பொம்மை -பண்ணி -அதன் கழுத்திலே காக்கைப் பொன்னித் தொற்றி -அதன் தலையிலே காலை வைத்து
இது என்னை வணங்கிற்று என்று இறுமாந்து இருக்குமா போலே நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -திருவாய்மொழி -7-5-4-என்கிறபடியே
உன்னாலே மனையப் பட்ட பிரம்மாவும் அவனாலே ஸ்ருஷ்டரான இவர்களும் உன்னை ஏத்த
அத்தாலே இறுமாந்து இருந்தால் என்றால் இது உனக்கு ஏற்றமோ -ஹாச்யமாய்த் தலைக்கட்டும் அத்தனை அன்றோ-

—————————————————————————————

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய்மொழி தானே இது கற்றாரை உஜ்ஜீவிப்பித்து பின்னை சாம்சாரிகமான சகல துரிதத்தையும் போக்கும் என்கிறார் –

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-

வியப்பாய வியப்பில்லா
வேறு சில வ்யக்திகளில் கண்டால் விஸ்மய ஹேதுவாய் இருக்குமவை அடைய -இவன் பக்கத்தில் கண்டால் ப்ராப்தமாய் இருக்கும் –
ஒருவன் ஒருவனுக்கு நாலு பசு கொடுத்தால் அது விஸ்மய ஹேதுவாய் இருக்கும் -பெருமாள் செய்தார் என்றவாறே ப்ராப்தமாய் இருந்தது இறே
சர்வ ஸ்வதானம் பண்ணி கை ஒழிந்த ளவில் த்ரிஜடன் என்பான் ஒரு பிராமணன் வர அப்போது ஒன்றும் தோற்றாமையாலே
உனக்கு வேண்டும் பசுக்களை அடித்துக் கொண்டு போ என்ன
தண்டைச் சுழற்றி எறிந்து அதுக்கு உட்பட்ட பசுக்கைளை அடைய அடித்திக் கொண்டு போனான் இறே
அயோத்யா காண்டம்-32- 29-40-ஸ்லோகங்கள் இத்தை விவரிக்கும்-

மெய்ஜ்ஞான வேதியனை
யதா பூத வாதியான வேதத்தாலே பிரதிபாதிக்கப்பட்ட உத்கர்ஷத்தை உடையவனை

சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று இவர் தம்மைப் போலே சம்சாரத்தை ஜெயிக்கையாலே வந்த புகழையுடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பலரும் ஆழ்வாரை அனுபவித்து வர்த்திக்கைக்கு ஈடான பரப்பை யுடைத்தான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் –

துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
துயக்காவது -மனம் திரிவு சம்சார விபர்யய ரஹிதமாக சாஷாத்கரித்து அருளிச் செய்த ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இப்பத்தும்

உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே
ஒலியை உடைத்தான முந்நீரை உடைய பூமியிலே அசந்நேவ என்று அசத் கல்பமானவர்களை
சந்தமேனம் ததோ விது-என்று உஜ்ஜீவிப்பித்து விரோதிகளைப் போக்கும் –
அராஜகமான தேசத்தில் ராஜ புத்திரன் தலையில் முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே
அழகர் திருவடிகளிலே கைங்கர்யத்தை அன்வயித்து
பின்னை தத்விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்

————————————-

முதல் பாட்டில் அழகருடைய திரு அணி கலன்களுக்கும் திருமேனிக்கும் உண்டான ஸூ கடிதத்வத்தை அனுசந்தித்தார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு நாட்டார் திருஷ்டாந்தம் இட்டுச் சொல்லுமவை எல்லாம் உனக்கு அவத்யத்தை விளைக்கும் என்றார்
மூன்றாம் பாட்டில் -நாட்டாரை விடும் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நீர் சொல்லீர் என்ன என்னால் சொல்லி முடியாது என்றார்
நாலாம் பாட்டில் -இப்படி விலஷணனாய் நிரதிசய போக்யனாய் இருக்கிற உன்னை நாட்டார் இழந்து போம்படி
அவர்களை மதி விப்ரமங்களைப் பண்ணினாய் என்றார்
அஞ்சாம் பாட்டில் நாட்டாரில் வ்யாவ்ருத்தர் அல்லீரோ உம்மால் பேச ஒண்ணாமைக்கு குறை என் என்ன
-என்னை வ்யாவ்ருத்தன் ஆக்கினவோபாதி உன்னை சாவதி ஆக்கிற்று இல்லையே என்றார்
ஆறாம் பாட்டில் வேதங்களும் நீரும் கூடப் பேசினாலோ என்ன அவையும் உன்னைப் பரிச்சேதிக்க மாட்டாது என்றார்
ஏழாம் பாட்டில் வேதங்கள் கிடக்கட்டும் -வைதிக புருஷர்கள் என்று சிலர் உண்டே அவர்கள்
ஏத்தக் குறை என் என்ன அதுவும் உனக்கு நிறக்கேடு என்றார்
எட்டாம் பாட்டில் கர்ம பாவனை இன்றிக்கே ப்ரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மாவை உத்ப்ரேஷித்து
அவனும் ஏத்தினாலும் தேவர்க்கு அவத்யம் என்றார்
ஒன்பதாம் பாட்டில் மேன்மை பேச ஒண்ணாது என்கைக்கு நீர்மையோ தான் பேசலாய் இருக்கிறதோ என்றார்
பத்தாம் பாட்டில் உன்னாலே ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாவாலே ஸ்ருஜ்யரான இவர்கள் உன்னை ஏத்துகையாவது
உனக்கு அவத்யம் அன்றோ என்றார்
நிகமத்தில் இத்திருவாய் மொழி தானே ப்ராப்யத்தைத் தரும் என்கிறார்

—————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: