ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-32-பல பத்ததி– பேற்றுப் படலம் -ஸ்லோகங்கள் -971-1008-

உபாக்யாதம் ததாத்வேந வசிஷ்டாத்யைர் மஹர்ஷிபி
உபாய பலயோ காஷ்ட்டாம் உபாசே ராம பாதுகாம் –971-

ஸ்ரீ பாதுகையே -உபாயம் -பலம் -இரண்டுமாம் என்றும் -பார்க்கப் போனால் உபாயம் பலம் இரண்டுக்கும் கடைசி எல்லை நிலம் என்றும்
வசிஷ்டர் வால்மீகி போன்றோரால் நிஷ்கர்ஷம் செய்யப்பட்டுள்ளது -அத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ ராம திருப் பாதுகையை உபாசிக்கிறேன் –
ஸ்ரீ பாதுகையே பல எல்லை நிலம் –

——————————————————————————-

நிவிசேய நிரந்தரம் ப்ரதீத
த்ரிதசானாம் விபவம் த்ருணாய மத்வா
சவிதே தவ தேவி ரங்க பர்த்து
பத லீலா கமலம் சமுத்வ ஹந்த்யா –972-

ஸ்ரீ பாதுகா தேவியே எனக்கு தேவர்களுடைய ஐஸ்வர்யம் வெறும் புல் போலே தான் -நான் மதிப்பது
ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடி ஆகிற விநோத விளையாட்டுத் தாமரைப் பூவை நன்கு ஏந்தி இருக்கிற
உன்னருகில் இருந்து கைங்கர்யம் செய்து ஸ்ரீ பாதுகா சேவகன் என்ற பிரசித்துக்கு ஈடாக செயல் பட வேண்டும் –

——————————————————————————-

கிமஹம் மணி பாதுகே த்வயா மே
ஸூலபே ரங்கநிதௌ ஸ்ரியா சநாதே
கர்ணாநி புன கதர்த்த யேயம்
க்ருபண த்வாரது ராசிகாதிதுக்கை –973–

ஸ்ரீ மணி பாதுகையே ஸ்ரீ பெரிய பிராட்டி யோடு கூடிய ஸ்ரீ ரங்க நாதனே ஸ்ரீ ரங்க நிதியாம்-
அது எளிதில் எனக்கு கிடக்கலாயிற்று -உன் மூலம் அதன் பின் மறுபடியும் முன் ஜன்மங்கள் போல்
லோபிகள் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டுக் காத்துத் துன்பப்பட்டுக் கரணங்களை தாழ்ந்த திசைகளில் செலுத்திக் கெடுவேனோ –

——————————————————————–

சக்ருதப்ய நுபூய ரங்க பர்த்து
தவது பச்லேஷ மநோ ஹரம் பதாப்ஜம்
அபுநர் ப்பவ கௌதுகம் ததைவ
ப்ரசமம் கச்சதி பாதுகே முனீ நாம் –974-

ஸ்ரீ பாதுகையே அழகான ஸ்ரீ ரங்க நாதனின் திருவடித் தாமரையை உன்னுடன் சேர்த்தியாக ஒரு தரம் சேவித்து அனுபவித்தால் போதும் –
முனிவர்கள் கூட மீண்டும் மீண்டும் சேவிக்கும் அனுபவம் பெற வென்று மறு பிறப்பில்லாமை என்ற தமது பழைய மநோ ரதத்தை
அழித்துக் கொண்டு மறு படி மனிதப் பிறவி வேண்டும் என்று கேட்பர் –

————————————————————————-

அபரஸ் பரபாதி நா மமீஷாம்
அநிதம் பூர்வ நிரூட சந்ததீ நாம்
பரதவ்யச நாத் அநூனசீம நாம்
துரிதா நாம் மம நிஷ்க்ருதிஸ் த்வ மாஸீ–975-

ஸ்ரீ பாதுகையே எவ்வளவு துயரங்கள் ஓயாமல் வருகின்றன -அநாதியாக தொடர்ந்து வேரூன்றி வருகின்றன –
என் துயரங்கள் ஸ்ரீ பரதாழ்வான் உடைய வற்றை விடக் குறந்தவை இல்லை -அவற்றுக்கு நீயே ப்ராயச் சித்தமானாய் –

———————————————————-

தவத்து பாசன சம்பிரதாய வித்பி
சமயே சாத்வத சேவிதே நியுக்தா
பரத வ்ரதிநோ பவாம் புராசிம்
கதிசித் காஞ்சன பாதுகே தரந்தி–976–

ஸ்ரீ பொற் பாதுகையே ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்திர கிரமத்திலே திருவாராதனம் செய்யும் சம்ப்ரதாயத்தை அறிந்தவர்களால் கைங்கர்யத்தில்
நியமிக்கப்பட்டு ஸ்ரீ பரதாழ்வான் வழியில் விரத நியமத்துடன் இருந்து உனக்கு சேவை செய்த சிலர் சம்சாரக் கடலை நீந்துகின்றனர்

——————————————————————–

அலமச்யுத பாதுகே யதாவத்
பவதீ யச்ச பதம் த்வதேக தார்யம்
இதரேதர பூஷிதம் ததேதத்
த்விதயம் சம்வநநாயா சேதசோ ந -977-

ஸ்ரீ அச்யுத திருப் பாதுகையே -நீயும் திருவடித் தாமரையும் அபூர்வமான சேர்த்தி -நீ மாத்திரமே திருவடியைத் தரிக்கக் கூடும்
நீங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அலங்காரமாய் விளங்குவது என் மனசை வசப்படுத்துவதற்குச் செவ்வனே அமைந்து இருப்பது –
வேறு பல திரு ஆபரணங்கள் திரு அவயவங்கள் இருக்கலாம் -ஒன்றுக்கு ஓன்று பூஷணமாகவும் இருக்கலாம் –
ஆனால் எந்த ஆபரணமும் உரிய அவயவத்தைத் தாங்குவது என்று கிடையாதே –

——————————————————————

அநந்ய சாமான்யதயா முராரே
அங்கேஷ் வவாப்தேஷு க்ரீடமுக்யை
பாதாவநி த்வம் நிஜமேவ பாகம்
சர்வாத்ம சாதாரணதாம் அநைஷீ–978–

ஸ்ரீ பாதுகையே மற்ற திருவாபரணங்கள் கிரீடம் முதலியவை அந்தந்த அவயவத்தை தம்தமக்கே முற்றூட்டாக வைக்கப்பட்டவை
என்ற ஈதியில் கொள்கின்றன -நீ உனக்கு உரிய திருவடி என்னும் திரு அவயவத்தை சகல ஆத்மாக்களுக்கும் பொது
ஆஸ்ரயணீயம் என்று அமைத்து இருக்கிறாயே -உனது பெரும் தன்மை அசாதாராணம் ஆனது தான் –

——————————————————————————–

சமாஸ்ரிதா நாம் மணி பாதுகே த்வாம்
விபஸ்சிதாம் விஷ்ணு பதே அப்ய நாஸ்தா
கதம் புநச்தே க்ருதிநோ பஜேரன்
வாஸாதரம் வாசவராஜ தான்யம் –979-

ஸ்ரீ மணி பாதுகையே உன்னை ஆஸ்ரயித்தவர் பகவான் திருவடியிலோ ஸ்ரீ வைகுண்டத்திலேயோ மனம் வையார்
அவர்களுக்கு உன்னிடம் மட்டுமே ஆசை -அத்தகைய பெரியோர் இந்த்ராதி பதவிகளில் எங்கனம் ஆசை கொள்வர்-

———————————————————-

விம்ருச்ய ரங்கேஸ்வர பாத ரஷே
வாரக்ரமம் நூநம வாரணீயம்
பதமாக்ரஹேபி ஸ்ப்ருசதீ ப்ரதீதா
ஸ்தூலேந ரூபேண வஸூந்தரா த்வாம் –980-

ஸ்ரீ ரங்க நாத பாதுகையே ஏற்பாடு உண்டாம் -ஸ்ரீ பாதுகையை பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது ஸ்ரீ தேவி –
அடுத்த தடவை ஸ்ரீ பூமி தேவி -அப்புறம் ஸ்ரீ நீளா பிராட்டி -அவரவர் தம் முறை வரும் பொது அத்தைச் செய்வார்கள்
இதைத் தடுக்கவோ மாற்றவோ முடியாது என்று -ஸ்ரீ லஷ்மி தேவி முறையிலும் ஸ்தூல உருவில் -தரை என்ற உருவில்-
ஸ்ரீ பூமா தேவி உன்னைத் தொட்டு மகிழ்கிறாள் போலும் –

——————————————————————-

அபிரஷசி த்வம் அநபாயநிதிம்
மணி பாதுகே மதுபிதஸ் சரணம்
அத ஏவ தேவி ததநன்யதநா
சிரஸா வஹந்தி பவதீம் க்ருதின –981–

ஸ்ரீ மணி பாதுகா தேவியே அடியார்களுக்கு பெரும் தநம் பகவானுடைய திருவடியே -அது அழிவு படாத பெரும் புதையல் –
அந்தப் புதையலை நீ காத்து வருகிறாய் -அதனால் உன்னிடம் கௌரவம் அதிகமாகி திருவடி தவிர வேறு தனம் ஏதும் கொள்ளாத
புண்ய ஆத்மாக்கள் உன்னைத் தம் தலையிலே தரித்து பூரிக்கின்றனர் –
ஸ்ரீ பாதுகை தன் உச்சியில் வைத்துக் கொண்டாடுவது போலேவே பாகவதரும் திருவடியைப் பூஜிப்பர் -அப்போது பாகவதர் ஸ்ரீ பாதுகை சம தசை ஏற்படுகிறதே
பின்பு ஸ்ரீ பாதுகையைத் தலை மேல் கொள்வாரோ என்ற ஐயம் கொள்ள வேண்டியது இல்லை
ப்ரஹ்ம சாம்யா பத்தி போகம் பெற்ற போதிலும் சேஷ பூதராகவே இருப்பார் -அதே போலே ஸ்ரீ பாதுகையுடன் சமான தசையிலும்
ஸ்ரீ பாதுகா சேஷத்வம் சித்திக்கும் -இதுவே சம்ப்ரதாய சாரம் –

—————————————————————————————————-

பதயுக மிவ பாதுகே முராரே
பவதி விபூதிரகண்டகா த்வயைவ
கதமிவ ஹ்ருதயாநி பாவுகா நாம்
த்வதநுபவாத் உபஜாத கண்ட காநி –982-

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடிக்கு -அவர் ஐஸ்வர்யம் ஆன இந்த உலகிற்கு -இரண்டுக்கும் கண்டகங்களை நீக்குகிறாய் -ஆனால் ஒரு ஆச்சர்யம் –
பெரியோர்களான ரசிகர்கள் தம் உள்ளங்களில் உன்னை அனுபவித்ததன் விளைவு தம் திரு மேனியின் கண்டக உற்பத்தி என்று காண்கிறார்களே
ஸ்ரீ பாதுகைக்கு கண்டகம் -முள் கல் முதலானவை -உலகிற்குக் கண்டகம் அசுரர் துர்ஜனம் போக்கிரி
ரசிகருக்கு கண்டகம் உடல் முழுவதும் மயிர்க் கூச்சு எறிப்பு –

———————————————————————————

ஜ்ஞான க்ரியா பஜன சீமா விதூர வ்ருத்தே
விதேசி கஸ்ய ததவாப்தி க்ருதாம் குணா நாம்
மௌமௌ மமாசி மது ஸூதந பாதுகே த்வம்
கங்கேவ ஹந்த பதிதா விதி நைவ பங்கோ –983-

ஸ்ரீ பெருமாளின் திருப்பாதுகையே நான் ஜ்ஞான கர்ம பக்தி யோகங்களின் தொடக்கமான முதல் எல்லைக்கே வெகு தூரத்தில் இருக்கிறவன் –
அவற்றைச் செய்ய அத்யாவச்யமான ஜ்ஞானம் சமம் தமம் போன்ற குணங்களுக்கு அந்த நாட்டிலேயே இராமல் வேறு ஒரு நாட்டில் இருப்பவன்
என் தலையின் மீது நீ அமர இசைந்தது எங்கனம் -முடவன் தலையில் தன்னிச்சையாக கங்கை தைவ வசமாக விழுந்தால் போலே இருக்கிறதே –

—————————————————————————————

ரங்கேஸ் வரச்ய யதிதம் மணி பாத ரஷே
பாதாரவிந்த யுகளம் பவதீ சமேதம்
பும்ஸாம் உபோஷித விலோசன பாரணார்ஹம்
ஷீரம் ததேததிஹ சர்க்கரயா சமேதம் –984-

ஸ்ரீ மணி பாதுகையே -உன்னோடு சேர்ந்து இந்த திருவடித் தாமரை இணை -அசாதாராண சேர்த்தியாய் இருக்கிறதே –
இது போக்கியம் மிக்கது -இது போன்ற அழகு இனிமை சேவிக்கக் கிடைக்காமல் மனிதர் கண்கள் உபவாசம் இருந்தன போலும்
இந்த சேர்த்தியை சேவித்தது பாரணைக்கு ஒப்பாம் -சர்க்கரை சேர்த்த பால் போல போக்யமானதே –

———————————————————————————-

காமாதி தோஷ ரஹிதம் த்வாதநன்ய காமா
கர்ம த்ரயோதச விதம் பரிசீல யந்த
பாதாவநி த்வதநுஷங்க விசேஷ த்ருச்யம்
ஏ காந்தி ந பரிசரந்தி பதம் முராரே –985-

ஸ்ரீ பாதுகையே உன்னிடமே அநந்ய பிரயோஜனராய் -உன்னையே தைவமாக கொண்ட பரமை காந்திகள்
தங்கள் அனுஷ்டானத்தில் பலன் இச்சை மமதை தான் கர்த்தா என்கிற அஹங்காரம் போன்ற தோஷங்கள் இல்லாதபடி
காயிக வாசிக மானச கர்மாக்கள் பாவ சுத்தியுடன் செய்து
உன் சேர்க்கையுடன் சிறப்பாக துலங்கிய திருவடி இணையை அண்டிக் கைங்கர்யம் செய்கின்றனர்
ஐந்து வித காயிக கர்மாக்கள் -தேவ குரு பண்டித போஜனம் சுசித்தன்மை நேர்மை அஹிம்சை பிரம்மச்சர்யம்
மூன்று வித வாசிக கர்மாக்கள் -நற்சொல் வாய்மை வேதம் ஓதுவது
ஐந்து வகை மானசிக கர்மாக்கள் -சந்தோஷம் பிரஹ்ம சிந்தனம் மனதை அடக்குவது பிறர் இடம் சாந்தனாய் இருப்பது அனைவரும் வாழ நினைப்பது

———————————————————————-

மௌ மௌ ஸ்திதா மகபுஜாம் அதவா ஸ்ருதி நாம்
தத் ரங்க ராஜ சரணாவநி வைபவம் தே
அச்மாத்ருசா ம்பி யதி பிரதிதம் ததஸ் ஸ்யாத்
சௌலப்யமம்ப ததிதம் தவ சார்வ பௌமாம் –986-

ஸ்ரீ ரங்க நாத திருப் பாதுகையே நீ யாக ஹவிஸ் உண்ணும் தேவர்கள் தலையில் -வேதாந்தங்களின் திருமுடியில் -வேதாந்த அர்த்தமாக -இருக்கிறாய்
அவ்வளவு பெருமை இருந்தும் எங்களைப் போன்ற நீசர்கள் தலைக்கும் வருகிறாயே -உனது சௌலப்யம் பிரசித்தம் அன்றோ –

——————————————————————————————

ஸ்வப்னே அபி சேத் த்வமஸி மூர்த்த நி சந்நிவிஷ்டா
நம் ரஸ்ய மே நரக மர்த்ந பாத ரஷே
ஸ்தாநே ததேததிஹ தேவி யதஸ் சமா தௌ
சந்தோ விதுஸ் தமபி தாத்ருச புத்தி கம்யம் –987–

ஸ்ரீ பகவானின் திருப் பாதுகா தேவியே என் ஸ்வப்னத்தில் கூட வணங்கி இருந்த என் தலையிலே அமர்ந்து அருளினாயே
அது மிகவும் பொருத்தம் -யோக நிலையில் பகவான சாஷாத் கரிப்பது ஸ்வப்ன புத்தியில் காண்பது போலே என்பர்
யோக சாத்தியமானது எனக்குக் கிடைத்து விட்டதன்றோ
ருக்மாபம் ச்வப்னதீகம்யம் வித்யாத்து புருஷம் பரம் -மனு ஸ்ம்ருதி -122-122 –
எல்லா இந்திரியங்களும் செயல் அற்று இருக்க மனம் ஒன்றே விளித்து நிற்பது ஸ்வப்னம் யோகம் இரண்டுக்கும் பொது தர்மம்
இந்த ஸ்லோக அனுபவம் ஸ்வாமி இந்த திருக் காவ்யம் அருளிச் செய்ய தொடங்கிய போது ஏற்பட்ட நிகழ்ச்சி என்பர் –

—————————————————————————–

பத்தாஞ்சலி பரிசரன் நியமேன ரங்கே
விஸ்ராணி தாச்யுத நிதிம் மணி பாதுகே த்வாம்
கஸ்யாபி கூணித த்ருசோ தநிந புரஸ்தாத்
உத்தாநயேய ந கதாபி கரம் விகோசம் –988–

ஸ்ரீ மணி பாதுகையே ஸ்ரீ ரங்க ஷேத்ரத்தில் நீ அச்யுதன் என்னும் பெரும் நிதியைத் தருகிறாய் –
அதனை ஒட்டி கிரமமாக எப்போதும் கை கூப்பி வணங்கி வருகிறவன் நான்
அப்படிப்பட்ட நான் பாதி மூடிய கண்களுடன் கையை விரித்துக் கொண்டு -சங்கோசப் பட்டாவது ஒருவன் முன்பும் நிற்கக் கடவேன் அல்லேன்

————————————————————–

த்வய்யர்ப்பிதே ந சரணேந சதத்வபாஜ
பாதாவநி ப்ரதித சாத்விக பாவத்ருச்யா
ரங்கே சவத் விதததே முஹூ ரங்க ஹாரான்
ரங்கே மகீயசி நாடா இவ பாவு காஸ்தே –989–

ஸ்ரீ பாதுகையே நடனன் ஒருவனுடைய நாடைத்தை ரசிக்கிறவர் அவன் போலே உணர்ச்சி வசப்பட்டு அவனோடு சாம்யம் அடைவது உலகியல் –
ஸ்ரீ ரங்க நாத திருப் பாதுகையை அனுபவித்து கைங்கர்ய ரசம் அறிந்த பெரியோரும் இத்தகைய பகவத் சாம்யத்தை எய்துகின்றனர்
கஹ கதி சிம்ஹ கதி போன்றவற்றை காட்டி அருளுகிறார் உன்னிடம் திருவடியை வைத்து -காண்டற்கு இனிய நாட்யம் இவை
அதை ரசிப்பவர் ஆனந்த பாஷ்யம் மயிர்க் கூச்செறிப்பு அடைந்து -சாத்விக தன்மையால் –
உன் சேவையில் ஈடுபட்டு புளகாங்கிதம் அடைகிற ரசிக மகான்கள்
பெருமாளுடன் சாம்யம் தோன்றும்படி ஸ்ரீ ரங்கம் ஆகிய அரங்கில் அங்கங்களை ஆட்டி ஒப்புமை காட்டுகின்றனர்

———————————————————————————————————

யேந ஸ்திதா சிரஸி மே விதி நாது நா த்வம்
தேநைவ தேவி நியதம் மம சாம்பரையே
லஷீகரிஷ்யசி பதாவநி ரங்க நாதம்
லஷ்மீ பதாம் புருஹ யாவக பங்க லஷ்யம் –990-

ஸ்ரீ பாதுகா தாயே இப்பொழுது நீ என் தலையில் இருப்பது பெரும் புண்ணியத்தினால் -அப்படி யாகில் அதே
புண்ணியத்தினால் என் அந்திம காலத்தில் ஸ்ரீ ரங்க நாதனை –பிராட்டியின் செம்பஞ்சுக் குழம்பு பட்ட திரு மார்புடன் –
எழுந்து அருளப் பண்ணி என் கண்களுக்கு பிரத்யஷமாக சேவை தருவாய் எனபது நிச்சயம் –

—————————————————————————–

ஹரி சரண சரோஜா பக்தி பாஜாம் ஜநா நாம்
அநு கரண விசேஷை ஆத்மநைவோப ஹாஸ்யம்
பரிணமய தயார்த்தா பாதுகே தாத்ருசம் மாம்
பரத பரிஷ தந்தர் வர்த்திபி ப்ரேஷணீயம் –991-

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடித் தாமரைகளின் பக்தர்கள் உளரே அவர்களைப் பார்த்து ஏதோ வஞ்சகமாகப் பல சொல்லி
நைச்யமும் அனுசந்தித்திப் போகிறேன் -நீ கிருபையால் என்னை உண்மையிலேயே அவர்கள் போலாக்கி -அனுஷ்டானம் -பக்தி –
தாழ்ந்தோன் என்று அடக்கப் பேச்சு முதலியவற்றில் என்னை ஸ்ரீ பரதாழ்வான் போன்றவர்களால் கடாஷிக்கப் பட தகுந்தவனாக்கி அருள வேணும் –

——————————————————————————–

துரிதமப நயந்தீ தூரத பாதுகே த்வம்
தநுஜ மதந லீலாம் தேவதா மாநயந்தீ
அனிதர சரணாநாம் அக்ரிமஸ் யாச்ய ஜந்தோ
அவஸ கரணவ்ருத்தே அக்ரதஸ் சந்நி தேயா –992–

ஸ்ரீ பாதுகையே நீ என் பாபத்தை ஒதுக்கி வெகு தூரத்துக்கு அனுப்ப வேணும் -அசூரமர்த்தனத்தை ஒரு லீலை போல் செய்ய வல்ல
பகவானை எழுந்து அருளப் பண்ணி வர வேண்டும் -அகதிகளுக்குள் முதலாம் எண் நான் –
எண் ஐம் பொறிகளும் எனக்கு சுவாதீனம் இல்லாமல் என்னை அலைக்கழிக்கின்றன –
இப்படி ஸ்ரமப்படும் இந்த ஜந்து முன்னிலையில்-அந்திம தசையில் – பெருமாள் சேவை கிடைக்கச் செய்து அருள்வாய் –

—————————————————————————

சரம நிகம கீதே சப்த தந்தௌ சமாப்தே
நிஜ சதந சமீபே ப்ராபயிஷ்யன் விஹாரம்
ஜ்வல நமிவ பவத்யோ சம்யக் ஆரோபயேன் மாம்
ப்ரதம வரண வஸ்ய பாதுகே ரங்க நாத –993-

யாகத்திற்கு வேண்டிய அக்னியை அரணிக் கட்டைகளைக் கடைந்து உண்டாக்கி யாக சாலையில் வேள்வி செய்து பின் அக்னி ஸ்தானத்தில் –
அரணிக் கட்டையில் வைத்து இருப்பர்-பெருமாள் அத்வர்யு – ஜீவன் அக்னி -பெருமாள் செய்யும் யாகம் ஜீவனைப் பிரபத்தியில் மூட்டுவித்து கைங்கர்யம் கொள்வது –
பிரபதிக்கு பின்பான உத்தர் காலம் ஒரு தீர்க்க யாகம் – நாம் மரணம் என்று நினைப்பது யாக பூர்த்தியில் நடக்கும் அவப்ருத ஸ்நானம்
உபநிஷத் சொல்கிறது -இந்த அக்னியை ஜீவனை இப்போது அக்னி ஸ்தானத்தில் வைக்க வேணும் -அதைச் செய்க என்கிறார் இந்த ஸ்லோகத்தில்
ஸ்ரீ பாதுகைகளே -நீ என்னை ரஷிக்க வேணும் என்று நான் முதன் முதலிலே ப்ரார்த்த போதே ஸ்ரீ ரங்க நாதன் என் வசமானார்
என் மரணம் சம்பவிக்கும் சமயம் உபநிஷத் சொல்வது போல் அத்வர்யுவான அவர் என் ஜீவனாகிற அக்னியைத் தன் ஸ்தானத்திற்கு -அது தான் அக்னி ஸ்தானம் –
எடுத்துப் போக என்னை உங்கள் இருவர் மீதும் வைத்து -நீவிர் அரணிக் கட்டைகள் போலே -ஏற்றிக் கொண்டு போக வேணும் -என்று ஆசைப்படுகிறேன் –

—————————————————————————-

புநருதர நிவாசச் சேதனம் சஹ்ய சிந்தோ
புளினம் அதிவசேயம் புண்யம் ஆப்ரஹ்மலாபாத்
பரிணமதி சரீரே பாதுகே யத்ர பும்ஸாம்
த்வமஸி நிகமகீதா சாஸ்வதம் மௌளி ரத்னம் –994-

ஸ்ரீ பாதுகையே அழகான காவிரி மணலில் நான் வாசம் செய்வேனாக -பரப்ரஹ்ம ப்ராப்தி கிடைக்கும் வரை இங்கனம்
ஏன் என்றால் இந்த மணலில் சரீரம் விலகும் போது வேத பிரசித்தி யுடைய நீ நிரந்தரம்
தலைக்கு அணியாக இருப்பாய் அல்லவா -இது என் மறு பிறவியை அழிக்குமே-

———————————————————————————————

பஹூவித புருஷார்த்த க்ராம சீமாந்த ரேகாம்
ஹரி சரண சரோஜா நியாச தந்யாம் அநந்ய
பரதசமய சித்தாம் பாதுகே பாவயம்ஸ்த்வாம்
சதமிஹ சர தஸ்தே ஸ்ராவயேயம் சம்ருத்திம் –995-

ஸ்ரீ பாதுகையே நீயே புருஷார்த்தங்களின் எல்லைக் கோடாக இருக்கிறாய் -ஸ்ரீ பகவான் உடைய திருப்பாதம் எப்போதும் படுவதாலே இச்சிறப்பு
ஸ்ரீ பரதாழ்வான் அனுஷ்டானத்தால் உன் மகிமை தெளிவாக தெரிய நான் உன்னையே த்யானித்துக் கொண்டு
வெகுகாலம் உன் புகழைப் பாடிக் கொண்டே இந்த ஸ்ரீ ரங்கத்திலே வாழுமாறு அருள வேண்டும் –

——————————————————————

திலக யஸி சிரோமே சௌரி பாதாவநி த்வம்
பஜசி மனசி நித்யம் பூமிகாம் பாவ நாக்யாம்
வசசி ச விபவை ஸ்வை வ்யக்தி மித்யம் ப்ரயாதா
ததிஹ பரிணதம் மே தாத்ருசம் பாகதேயம் –996-

ஸ்ரீ பருமாளின் திருப் பாதுகையே நீ என் தலையில் அமர்கிறாய் -அதை ஒரு அலங்காரமாகக் கருதுவேன் –
மனத்தில் எப்போதும் த்யானம் செய்து கொண்டு இருப்பதனால் மானச சாஷாத்காரத்தில் உன்னை எப்போதும் சேவித்துக் கொண்டு இருக்கிறேன்
வாக்கில் இந்த ஸ்துதி ரூபமாக ஒரு உருவை ஏற்று விட்டாய் –
ஆகவே உன்னுடன் ஆழ்ந்த தொடர்பு -காயிக மானச வாசிகமான மூன்றிலும் ஏற்பட்டுப் பெரும் புண்யம் ஆயிற்று –

———————————————————————

அஜநிஷி சிரமா தௌ ஹந்த தே ஹேந்த்ரியாதி
ததநு தத்தி கஸ் சந் ஈச்வரோஹம் பபூவ
அத பகவத ஏவா பூவம் அர்த்தாதி தா நீம்
தவ புனரஹமாசம் பாதுகே தன்ய ஜன்மா –997-

ஸ்ரீ பாதுகையே நான் முதலில் வெகுகாலம் ஆத்மாவை இல்லை என்று கருதி உடலே நான் என்று நினைத்து இருந்து கெட்டேன்
அதன் பின்பு உடலில் இருந்து வேற்பட்ட ஆத்மா இருக்கிறது என்று உணர்ந்தும் ஒரு சுதந்திர புருஷனாக என்னை
நினைத்துக் கொண்டு ஈஸ்வரனை இல்லை யாக்கினேன்
அதன் பிறகு ஒரு நிகழ்ச்சியால் பகவான் உடையதாகவே என் ஆத்மாவை உணர்ந்து அது முதல் சிறந்த பயன் பெற்ற
ஜன்மா எனக்குக் கிடைத்தது -நான் உன்னுடையவன் ஆகி விட்டேன் –

——————————————————————-

த்வய் யாயத்தௌ பகவதி சிலா பச்மநோ ப்ராணதாநாத்
ஆஸ்த்ரீபாலம் ப்ரதித விபவௌ பாத பத்மௌ முராரே
தாமேவாஹம் சிரஸி நிஹிதாம் அத்ய பச்யாமி தைவாத்
ஆத்மாதாராம் ஜனனி பவதீம் ஆத்மலாப ப்ரஸூதீம் –998-

ஸ்ரீ பாதுகைத் தெய்வமே தாயே கல்லுக்கும் கரிக் கட்டைக்கும் உயிர் கொடுத்த தெய்வமே -உன் பெருமை பாலர் பெண்டிர் வரை மக்கள் அனைவர் இடத்திலும் பிரசித்தம் –
பகவான் திருவடிகள் அன்றோ இதை சாதித்தது என்றால் அதனால் என்ன -திருவடிகள் ஸ்ரீ பாதுகைக்கு ஆதீனம் என்றே சொல்ல வேண்டும்
-உனக்கு ஆதாரம் நீயே தான் -வேறு ஆதாரம் தேடுவதில்லை -ஆனால் திருவடிகளுக்கு நீ யல்லவோ ஆதாரம் ஆகிறாய் -மேலும் நீ அன்றோ
நாங்கள் எம் ஸ்வரூபத்தை உணரக் காரணம் -அத்தகைய நீ இப்பொழுது சிரஸ்ஸில் வைக்கப் பட்டு இருக்கிறது -நீ எனக்குத் திருவருள் செய்வதற்கு அடையாளம் –

———————————————————————————–

கதம் காரம் லஷ்மீ கரகமல யோக்யம் நிஜபதம்
நிதத்யாத் ரங்கேச குலிசகடி நே அஸ்மின் மனஸி ந
ந சேதேவம் மத்யே விசதி தயயா தேவி பவதீ
நிஜாக்ராந்தி ஷூண்ண ஸ்மரசரசிகா கண்டக ததி–999–

ஸ்ரீ பாதுகா தேவியே எங்கள் ஹ்ருதயம் மன்மத பாணங்களுக்கு விஷயம் ஆகின்றன -அதை தைத்து முட்களாகக் கிடக்கும் –
நீ உன் ஆக்கிரமிப்பால் இவற்றை எல்லாம் பொடி செய்து ஹ்ருதய பிரதேசத்தைப் பெருமாள் காலடி வைக்கத் தகுதி யுள்ளதாக ஆக்கி இருக்கிறாய்
அப்படிச் செய்யாது இருந்தால் இந்த ஹ்ருதயம் கடினமாய் இருக்குமே -பரம ஸூ குமாரமான பிராட்டியின் தாமரைக் கைகளுக்குத் தக்க
மென்மை கொண்ட திருவடியைப் பெருமாள் எப்படி இந்த எம் மனத்தில் வைக்கத் தகும் –

——————————————————————————————

க்ரீடா லௌல்யம் கிமபி பாதுகே வர்ஜயந்தீ
நிர்வேசம் ஸ்வம் திசஸி பவதீ நாதயோ ஸ்ரீதரண்யோ
மாமப் யேவம் ஜநய மது ஜித்பாதயோ அந்தரங்கம்
ரங்கம் யாசௌ ஜனயஸி குணை பாரதீ ந்ருத்தரங்கம் –1000–

ஸ்ரீ பாதுகையே -உனக்குக் கைங்கர்ய அனுபவம் கிடைத்தால் -அதாவது -சஞ்சாரம் நடந்தால் பிராட்டிகளுக்கு அந்தரங்க பரிசயத்தால்
அனுபவம் ஏற்பட வாய்ப்பு இராமல் போய் விடும்-
அதற்காக நீ சஞ்சார ஆசையை விட்டு உன்னையே தலைவியாக உடைய ஸ்ரீ பூமி பிராட்டிகளுக்கு விட்டுக் கொடுக்கிறாய் –
நானும் உனக்கு சேஷ பூதன் -பகவான் திருவடிகளுக்கு அந்தரங்க சேவகனாக நான் இருக்கும் படி செய்து அருள் செய்வது நிச்சயம் -ஏன்-
உன் கல்யாண குண பிரபாவம் அப்படி எனக்கு அனுக்ரஹித்து இந்த காவ்யம் நிறைவுறுமாறு அருளி இதைக் கேட்டு ஆனந்திக்க
சரஸ்வதி வந்து அனபவப் போக்கு வீடாக ஆடிக் களிக்கிறாளே -இத ரங்கம் அவளுக்கும் நாட்ய அரங்கம் ஆயிற்று அல்லவா –

————————————————————————————————–

இதி ரங்க துரீண பாதுகே த்வம்
ஸ்துதில ஷேண சஹச்ரஸோ விம்ருஷ்டா
சபலம் மம ஜன்ம தாவதேதத்
யதி ஹாசாஸ்யம் அத பரம் கிமேதத் –1001–

ஸ்ரீ ரங்க நாத பாதுகையே இந்த ஸ்தோத்ரம் என்கிற வாசத்தில் உன்னை பல ஆயிரம் தரம் சிந்தித்து இருக்கிறேனே
அதிலே கூட என் பிறப்பு கடைத்தேறி விட்டதாகக் கருதுவேன் -இதற்கு மேலும் இங்கு நான் பெற வேண்டியது என்ன தான் இருக்கக் கூடும் –

———————————————————————————-

மாத ஸ்வரூபமிவ ரங்க பதேர் நிவிஷ்டம்
வாசாமசீமநி பதாவநி வைபவம் தே
மோஹாத பிஷ்டு தவதோ மம மந்த புத்தே
பாலஸ்ய சாஹசமிதம் தயயா சஹேதா –1002–

ஸ்ரீ பாதுகை தாயே பெருமாளின் ஸ்வ ரூபத்தை அளவிட்டுச் சொல்ல ஒண்ணாது -வாக்குக்கு எட்டாதது -என்று
சொல்லுமா போலே தான் உன் பெருமையும் -அப்படி இருந்தும் துணிந்து இந்தக் காரியத்தில் இறங்கியது இந்த சிறு பிள்ளையின்
அறியாமையால் தான் அடியேனுடைய இந்த சஹாசச் செயலைக் கருணை கூர்ந்து பொறுத்து அருள்வாயாக –

———————————————————————-

யே நாம பக்தி நியதா கவயோ மதன்யே
மாத ஸ்துவந்தி மது ஸூதன பாதுகே த்வாம்
லப்ச்யே குணாம்ச விநிவேசித மானஸாநாம்
தேஷாமஹம் சபஹூமாநவிலோகி தாநி –1003-

ஸ்ரீ பெருமாளின் திருப் பாதுகையே -பக்தியினால் உந்தப்பட்ட வேறு சிலரும் இத்தகைய உன் ஸ்துதியில் இழிவரோ
-அவர்கள் ஸ்ரமம் உணர்ந்ததனால் குணங்களில் மட்டும் மனம் செலுத்தி புகழ் வார்த்தைகளையே சொல்லுவார்கள் –
இந்த திவ்ய பாதுகா சாஸ்திரம் பற்றி –

———————————————————————–

சங்கர்ஷயந்தி ஹ்ருதயாநி அசதாம் குணாம் சே
சந்தஸ்து சந்தமபி ந ப்ரதயந்தி தோஷம்
தத் ரங்க நாத சரணாவ நி தே ஸ்துதீ நாம்
ஏகா பரம் சதசதோ இஹ சாஷிணீ த்வம் –1004-

ஸ்ரீ ரங்க நாத திருப் பாதுகையே தீயோர் இந்த ஸ்தோத்ரத்தின் குணங்கள் பற்றிப் பொறாமைப் படுவார்கள்
நல்லவர்களோ வென்னில் தோஷம் பற்றிப் பேசவே மாட்டார்கள் -அது அவர்கள் இயல்பு
ஆக இந்த ஸ்துதியில் குணம் இருக்கிறதோ தோஷம் தான் உள்ளதோ அதற்கு நீ ஒருத்தி தான் சாஷி –

————————————————————————–

இத்தம் த்வமேவ நிஜ கேளிவசாத் அகார்ஷீ ‘
இஷ்வாகு நாதபத பங்கஜயோ ரநன்யா
ஸ்வீயம் பதாவநி மயா ஸூமஹச்சரித்ரம்
ஸீதேவ தேவி சஹஜேந கவீஸ்வரேண –1005–

ஸ்ரீ பாதுகா தேவியே இஷ்வாகு வம்சத்தரசனான ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனின் திருவடித் தாமரைகளை அன்றி வேறே எதையும்
முக்கியமாகக் கொள்ளாத நீயே என்னைக் கொண்டு தன்னுடைய மிகப் பெரியதான இந்த காவ்யத்தைச் செய்வித்துக் கொண்டாய்-
ஸ்ரீ சீதா பிராட்டி கவி ஸ்ரேஷ்டரான வால்மீகியைக் கொண்டு ஸ்ரீ ராமாயணத்தைச் செய்வித்தது போலே -எல்லாம் விளையாட்டாகவே –

———————————————————————————

ப்ருதுக வதந சங்கஸ்பர்ச நீதா கதாசித்
சிரஸி விநிஹிதாயா ஸ்வேத பூம்நா தவைவ
ஸ்துதிரிய முபஜாதா மன்முகே நேத்ய தீயு
பரிசரண பராச்தே பாதுகேஸ் பாஸ்த தோஷா –1006–

ஸ்ரீ பாதுகையே உன் தொண்டர்கள் ராகத்வேஷாதிகள் அற்றவர் -நான் சொல்லும் இவ்விளக்கத்தை அவர்கள் ஒப்புவர் –
சிறு பையனான துருவன் கன்னத்தில் பெருமாள் திருச் சங்கு ஆழ்வானைக் கொண்டு தொட்டார் என்ற வியாஜ்யம் போருமாயிற்று
அவன் ஸ்தோத்ரம் ஒன்றை ஆக்கி அருள -அது போல் ஸ்ரீ பாதுகை என் தலை மீது வைக்கப் பட்டதே
-அந்த உன் சுய மகிமையால் அன்றோ இந்த உன் ஸ்தோத்ரம் உருவாயிற்று –

————————————————————————-

யதி ஸ்பீதா பக்தி ப்ரணயமுக வாணீ பரிபணம்
பதத் ராண ஸ்தோத்ரம் ஹ்ருதி பிப்ருத ரங்க ஷிதிப்ருத
நிருத்மாதோ யத்வா நிரவதி ஸூதா நிர்ஜ்ஜரமுசோ
வசோ பங்கீ ரேதா ண் கதம நுருந்தே சஹ்ருதய –1007–

மக்களே உங்களுக்கு பக்தி மிக்கதாக இருந்தால் இந்த ஸ்ரீ ரங்கநாத திருப் பாதுகா ஸ்தோத்ரத்தை உள்ளத்தில் தரிக்கப் பாடம் செய்ம்மின்
அது ரசம் மிக்க வாணிக்கு மூல தனம் என்னலாம் -ரசிகர்களாய் இருப்பவர் -பைத்தியம் மட்டும் பிடிக்காதவராய் இருந்தால்
எல்லை இல்லாத அம்ருத வெள்ளத்தைப் பெருக்கும் இந்த காவ்யச் சொல் தொடர்களை எப்படி ஆதரிக்காமல் இருக்கக் கூடும் –

———————————————————————————-

ஜயதி யதிராஜ ஸூக்தி ஜயதி முகுந்தச்ய பாதுகா யுகளீ
ததுபயாத நாஸ் த்ரிவேதீம் அவந்த்ய யந்தோ ஜயந்தி புவி சந்த –10008–

ஸ்ரீ யதி ராஜர் என்கிற ஸ்ரீ ராமானுஜர் உடைய திவ்ய ஸூக்திகள் -ஸ்ரீ பாஷ்யம் முதலானவை -சிறப்பாக விளங்குகின்றன –
மோஷ தாதா வாகிற ஸ்ரீ ரங்க நாதனுடைய திருப் பாதுகையினை இவ்வுலகில் விளங்குகிறது –
ஸ்ரீ பாஷ்யகார ஸ்ரீ ஸூக்திகளையும் ஸ்ரீ பாதுகா மூர்த்தியான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளையும் மட்டுமே தம் தனம் என்று கொண்டு இருக்கும்
சாதுக்கள் த்ரயீ என்ற வேதத்தை வீணாக்காமல் அதை முழு பிரமாணம் ஆக்குகிறவர்கள் -அவர்கள் இப்புவியில் சிறந்து விளங்குகிறார்கள் –

——————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: