ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-27-ரேகா பத்ததி -வேரிப்படலம் -ஸ்லோகங்கள் -811-820–

ஸூசயந்தீம் ஸ்வரேகாபி அநாலேக்ய சரஸ்வதீம்
அலேகநீய சௌந்தர்யாம் ஆஸ்ரயே சௌரி பாதுகாம் –811-

ஸ்ரீ பாதுகையில் உள்ள ரேகைகள் எழுதா மறை என்று சொல்லப்படும் எழுதப்படாத எழுத்து இல்லாத வேதத்தைக் குறிப்பதாகச் சொல்லலாம் –
அந்த ரேகைகளின் அழகை எழுத்தில் வடிக்க ஒண்ணாதே -அத்தகைய ஸ்ரீ பாதுகையைச் சரணம் அடைகிறேன் –

————————————————————

மணி மௌளி நிகர்ஷ்ணாத் ஸூ ராணாம்
வஹசே காஞ்சன பாதுகே விசித்ரம்
கமலாபதி பாதபத்ம யோகாத்
அபாரம லஷண மாதி ராஜ்ய சாரம் –812–

ஸ்ரீ பாதுகையே உன் தங்கத் திரு உடம்பில் வந்து வணங்கும் தேவர்களுடைய ரத்ன கிரீடங்கள் உறாய்வதால் ரேகைகள் ஏற்படுகின்றன –
இவை உனக்குப் பெருமாள் திருவடியின் தொடர்பினால் -திருவடி வைப்பினால் -ஏற்பட்ட ரேகைகள் இருக்கின்றனவே
அவை எடுத்துச் சொல்லும் சர்வ லோக சக்ரவர்த்தினி என்ற உன் பெருமையைக் காட்டிலும் விலஷணமான விசேஷமான
அடையாளமாய் இருந்து உன் பெருமையைப் பறை சாற்றுபவை –

————————————————————————-

அபிதோ மணி பாதுகே ஸ்புரந்த்யா
தவ ரேகாவிததே ததாவிதாயா
முரவைரி பாதார விந்தரூடை
அனுகல்பாயிதம் ஆதி ராஜ்ய சிஹ்னை –813–

ஸ்ரீ மணி பாதுகையே -கீழே சொல்லப்பட்ட விதமான ரேகைகளின் வரிசைகள் உன் மீது எல்லாப் புறங்களிலும் விளங்குகின்றன –
ஒரு ஒப்பீடு செய்தால் பெருமாளுடைய திருவடித் தாமரைகளோ தம் அடிப்பாகத்தில் மட்டுமே திடமான வஜ்ராங்குசாதி ரேகைகளைக் கொண்டு இருந்து
அவன் ஆதிராஜன் -உபய விபூதி நாதன் -என்று பறை சாற்ற வல்லவை –
ஆக திருப் பாதுகைக்குத் தெளிவாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ள ஆதி ராஜ்ய சின்னங்கள் திருவடியினுடையவற்றை
இரண்டாம் பஷமாக ஆக்கி விட்டன என்னலாம் –
திருப் பாதுகைக்கு மேம்பட்ட பெருமை எனபது பாகவத ஆச்சார்யர்களுக்கு கூடிய பெருமை என்று சொல்வதாகும் –

———————————————————-

ரேகா விநமதாம் திவௌகசாம் மௌளி ரத்ன மகரீ முகோத்தயா
பாதுகே வஹசி நூன மத்புதாம் சௌ ரிபாத பரி போக லஷணம் –814–

ஸ்ரீ பாதுகையே தேவர்கள் மிகப் பணிவுடன் உன்னை வணங்கும் போது அவர்கள் க்ரீடங்களில் உள்ள ரத்னங்களாலான
மீனுருவங்கள் உன் மீது அழுந்தி மகர ரேகைகள் படிகின்றன -இருப்பினும் எனக்கு வேறு ஓன்று தோன்றுகிறது
பெருமாள் திருவடிகளில் மகர ரேகைகள் உண்டே -அந்தத் திருவடியான நாதனுடன் நீ அனுபவித்த கலவியின் விளைவாக
இந்த மகர ரேகைகள் உன் மீது படிந்து இருக்கக் கூடுமே என்று –
பாகவதர்கள் தேவர்களுடைய வணக்கத்துக்கு உரியவர் –அப்படி இருப்பது பாகவதர்களுக்கு பெருமாள் உடன் விடாது நடக்கும் சம்ச்லேஷம் தானே –

———————————————————————–

த்ரிதச மகுட ரத்நோல் லேகரேகா பதேசாத்
பரிண மயசிபும்ஸாம் பாதுகே மூர்த்நி லக்நா
நரகமதந சேவா சம்பதம் சாதயித்ரீ
நியதிவிலிகிதாநாம் நிஷ்க்ருதிம் துர்லிபீ நாம் –815–

ஸ்ரீ பாதுகையே மனிதர்களின் தலையில் நீ வைக்கப்படுகிராய் -அப்போது என்ன நடக்கிறது -உன் மீதான ரகைகள்
-தேவர்கள் க்ரீடங்களின் உரசலால் விளைந்தவை என்று முன்பே அறிந்தவை -அவை கொண்டு அந்த மனிதர்களின்
தலையில் கோடுகள் என்று சொல்லப் படுவதாகிற பிரம்மன் லிபியை மாற்றி நல்ல விதியாக எழுதி விடுகிறாய் போலும்
அந்த மனிதர்கள் பகவானைச் சேர்ந்து கைங்கர்யம் செய்வதாகிற பரம புருஷார்த்தத்தை அவர்களுக்கு சாதித்துக் கொடுத்து அருளுகிறாயே
பாகவதரை ஆச்சார்யரை ஆஸ்ரயித்து பரம புருஷார்த்தம் பெறுவது எளிதாகிறதே என்றவாறு –

————————————————————————————–

பத கமல தலான் தஸ் சம்ஸ்ரிதான் யாத பத்ர
த்வஜ சரசிஜ முக்யாநி ஐஸ்வரீ லஷணா நி
அவகமயசி சௌரே பாதுகே மாத்ருசா நாம்
உபரி பரிணதை ஸ்வை தேவி ரேகா விசேஷை –816-

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடிகளில் உள்ளங்காலில் திருக்குடை திருக்கொடி திரு தாமரைப் பூ முதலிய ரேகைகள் இருப்பதாகவும்
அவை பெருமாளுடைய சர்வேச்வரத் தன்மைக்கு லஷணங்கள் என்றும் சொல்கிறோம்
ஆனால் அப்படி ரேகைகள் இருப்பது எங்களுக்குத் தெரிய வாய்ப்பு எப்படி ஏற்படும் -உன்னை சேவித்து தான் –
ஆகவே பெருமாளுடைய பெருமையை எங்களுக்கு அறிவித்து அருளுவது நீயே தான் –

———————————————————————————

ஸ்நாதா பதாவநி சிரம் பரிபுஜ்ய முக்தா
பாதேந ரங்க ந்ருபதே ஸூபல லஷணேந
ரேகாந்தரைர் நவ நவை உபசோபசே த்வம்
சம்ஸ்கார சந்தன விலேபந பங்கலக்நை–817–

ஸ்ரீ பாதுகையே திரு மஞ்சனம் ஆகிறது -பெருமாளுக்கும் திருப் பாதுகைக்கும் -பிறகு ஹிதமாகவும் அலங்காரமாகவும் சந்தனம் சாத்துகிறார்கள் –
அதன் பின்பு பெருமாளுக்கு பாதுகையாக சாத்துகிறார்கள் -அதன் பின்பு திருப் பாதுகையை சேவித்தால் பெருமாளுடைய
சந்தனப் பூச்சுகளில் இருந்து வேறு புதிய ரேகைகளும் தென்படும்
இப்போது நீ இன்னும் அதிக சோபையுடன் விளங்குகிறாய் –
இந்தப் புதிய சோபை பெருமாள் உடன் ஏற்பட்ட கல்வியால் வந்தது தெரிகிறது –
அந்தாமத்து அன்பு -8-9-10–ஆழ்வார் இடம் திருத் துளசி மணந்தால் போலே –

——————————————————————————————

பக்த்யா முஹூ ப்ரணமதாம் த்ரித சேசஸ் வராணாம்
கோடீர கோடி கஷநாத் உபஜாய மா நை
ஆபாதி சௌரி சரணாத் அதிகாநு பாவா
ரேகா சதைஸ்தவ பதாவ நி காபி ரேகா –818–

ஸ்ரீ பாதுகையே தேவர்கள் பக்தி மேலீட்டால் அடிக்கடி சேவிக்கின்றனர் -அதனால் க்ரீடங்களின் முனைகள் உறாய்ந்து உன் மீது
நூற்றுக் கணக்கான அதிகப்படி ரேகைகளை உண்டாக்குகின்றன -ஆகவே உனக்குப் பெருமை இன்னும் அதிகம் என்னலாம் –

———————————————————————-

பாதாவநி பரதிபதம் பரமச்ய பும்ஸ
பாதாரவிந்த பரியோக விசேஷ யோக்யா
ஸ்வாபாவிகான் ஸூபக பக்தி விசேஷ த்ருச்யான்
ரேகாத்மகான் வஹசி பத்ரலதா விசேஷான் –819–

ஸ்ரீ பாதுகையே நீ பரம புருஷனுடன் அடிக்கடி சிறந்த போகங்களை அனுபவிக்கிறாய் -அதற்குத் தகுந்தால் போலே
ஸ்வ பாவமாகவே உன் மீது இருக்கும் ரேகைகள் மூலம் அழகிய பாகுபாட்டின் சிறப்புத் தெரியும் படி -இலை கொடி போன்ற உருவங்களை
-காதலி போகத்திற்குப் போகும் முன்பு செயற்கையாக வரைந்து கொள்வது போலே உன் மீது கொண்டு இருக்கிறாய்
-ஸூ பக பக்தி விசேஷத்ருச்யான் -இன்பம் விளைவிக்கும் பரம பக்தியினால் பார்க்க அழகியதான என்றும் கொள்ளலாம்
பக்தியும் பக்தி சின்னங்களும் கொண்ட ஆழ்வார் ஆச்கார்யர்கள் பெருமாள் உடன் கலவிக்கு உரியர் ஆகிறார்கள் என்றவாறு –

———————————————————————–

ரேகாபதேசத ஸ்த்வம் ப்ரசமயிதும் பிரளய விப்லவா சங்காம்
வஹசி மதுஜித் பதாவநி மன்யே நிகமஸ்ய மாத்ருகா லேக்யம் –820-

பெருமாளுடைய ஸ்ரீ பாதுகையே பிரளயம் வந்தால் எல்லாம் அழிந்து போய் விடுகிறதே
வேதமும் அப்படி யாகி விடுமோ என்றதோர் பயத்தை நீக்குகிறாய் –
உன் மீது ரேகைகள் என்ற பெயரில் வேதங்களின் மூலத்தை அஷர ராசியை ஒரு சந்கேதத்தில் வைத்துப் பாது காக்குகிறாய் என்று எண்ணுகிறேன் –
திருப் பாதுகை உபாசனம் வேதங்கள் அனைத்தையும் விளங்க வைக்கும் -வேதம் எழுதாக் கிளவி எனபது நாம் எழுதிக் கற்பதை
விலக்குவதே யன்றி பெருமாளே சங்கேதமாக ரேகையாக எழுதிக் காப்பதை விலக்க மாட்டாது –
தமிழ் வேதத்துக்கும் இது பொருந்தும் -திருப்பாதுகையே நம்மாழ்வார் ஆயிற்றே –

—————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: