ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-26-யந்த்ரிகா பத்ததி -குமிழ்கள் அமைப்பும் அனுபவமும் –குடை போன்றவை -மேலும் பல -படலம் -ஸ்லோகங்கள் -801-810-

உதக்ரயந்த்ரிகாம் வந்தே பாதுகாம் யந்தி வேசநாத்
உபர்யபி பதம் விஷ்ணோ ப்ரத்யாதிஷ்ட பிரசாதநம் –801-

மேல் முகமாக நுனியைக் கொண்டுள்ள குமிழ் கொண்ட ஸ்ரீ பாதுகையை வணங்குகிறேன் -பெருமாள் திருவடியை ஸ்ரீ பாதுகையில் வைக்கிறார்
குமிழ் மேலே இருக்கிறது -ஸ்ரீ பாதத்திற்கு மேலே ஆபரணமாக –
எப்படி ஸ்ரீ பாதுகை ஸ்ரீ பாதத்திற்குக் கீழ்ப்புறம் அலங்காரமாக இருக்கிறதோ அதே போலே –
ஆகவே திருவடிக்கு மேலே வேறு ஒரு திரு ஆபரணம் வேண்டுவது இல்லை –

———————————————————–

ப்ரசபம் பிரதிருத்ய கண்ட காதின் பவதீ சௌரிபதாம் புஜாத தஸ்தாத்
சரணாவநி தாரயத்ய முஷ்மின் உசிதச்சாயம் உபர்யபி பிரதீகம் –802-

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடிக்குக் கீழ்ப் புறம் இருந்து கொண்டு பாதையில் கிடக்கும் முள் முதலியவற்றைப் பலாத்காரத்துடன்
வலிந்து நசுக்கிப் பெருமாளுக்கு உதவுகிறாய் -மேல் பாகத்திலேயோ குமிழ் என்கிற நிழல் தரும் குமிழைக் கொண்டு
அழகே தருகிறாய் -சாயா -நிழல் -அழகு -இரண்டு பொருள்கள் –

——————————————————————–

முரபின் மணி பாதுகே த்வதீயம்
அநகா மங்குளி யந்த்ரிகா மவைமி
ஸ்வயமுன்னமிதாம் ப்ரதேசி நீம் தே
பரமம் தைவதம் ஏகமித்ய்ருசந்தீம் –803–

ஸ்ரீ பகவானின் பாதுகையே உன் அழகிய குமிழ் பெருமாள் திருவடி விரல்களுக்கு இடையில் அவற்றின் பிடிப்புக்காக இருப்பதை அறிவேன் –
ஆயினும் அது அறுதியிட்டு அழுத்தமாகச் சொல்ல அடையாளமாகக் காடும் ஆள்காட்டி விரலாகத் தோன்றுகிறது –
பல தெய்வங்கள் அவை சமம் என்று எல்லாம் கலக்குகிறவர்களுக்கு மறுப்பாக -எல்லாத் தெய்வங்களுக்கும் மேற்பட்ட பர தெய்வம்
நாராயணன் ஒருவனே என்று பகவத் ஸ்துதியாக அறுதியிடுகிறதோ-குற்றம் அற்ற குமிழ் -அப்படித்தான் எண்ணுகிறேன் –

————————————————————————-

ஸ்வததே மணி பாதுகே த்வதீயா
பத சாகாயுக யந்த்ரிகா விசித்ரா
பரமம் புருஷம் பிரகாச யந்தீ
ப்ரணவஸ் யேவ ப்ரேயமர்த்த மாத்ரா –804-

ஸ்ரீ மணி பாதுகையே விரல்களுக்கு இடையில் இருக்கும் இந்த ஆச்சர்யமான பிடிப்பு பிரணவ உச்சாரணத்தின் போது
அந்த நாதத்தின் மேல் கேட்கும் பிரசித்தமான அர்த்த மாத்ரை என்னலாம் -பிரணவம் -அகார உகார மகார அஷாரங்களின்
சேர்க்கையாகப் பெருமாளைச் சொல்லும் -பரம புருஷ வாசகம் -இப்படி உன் குமிழைப் பெருமாளின் நிர்தேசகமான
பிரணவ நாத அர்த்த மாத்ரையாகச் சொல்லுவது எனக்கு மிகவும் ரசமாய் இருக்கிறது –

———————————————————————————-

அநுயாத மநோராதா முராரே
பவதீ கேளிரத ஸ்ரியம் ததாதி
சரணாவ நி யந்த்ரிகா தவைஷா
தநுதே கூபர சம்பதம் புரஸ்தாத் –805-

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாளின் மநோ ரதத்தை அனுசரித்து அதே வேகத்தில் நடக்கும் ஒரு விளையாட்டு ரதம் போலே சொபிக்கிறாய்
உன்னுடைய குமிழ் தேருக்கு முன்னாள் ஏர்க்கால் கட்டி அதை நிறுத்தி வைக்கும் முளை போல் தோற்றும் –

———————————————————————–

சங்கே பவத்யஸ் ஸூபகம் பிரதீகம்
ரங்கே ச பாதாங்குளி சங்க்ரஹார்த்தம்
த்ராணாய பாதாவநி விஷ்டபா நாம்
ஆஜ்ஞாக ரீ மங்குளி முத்ரிகாம் தே –806-

ஸ்ரீ பாதுகையே திருவடி திருவிரல்கள் பிடிப்புக்கு உதவும் -குமிழ் உலக ரஷணத்தைக் கருதி உபத்ரவம் செய்யும் துஷ்டர்களை நோக்கி
இப்படித் தப்பு செய்யாதீர்கள் -செய்தால் விட மாட்டேன் -தண்டிப்பேன் -என்று பயமுறுத்தி உத்தரவு பிறப்பிக்கும்
நிலையில் உள்ள ஆள்காட்டி விரல் தான் என்று பூஜிக்கிறேன் –

——————————————————————

அலங்க்ருதம் கர்ணிகயோ பரிஷ்டாத்
உதக்ர நாளம் தவ யந்த்ரிகாம்சம்
பத்மாபதே பாதசரோஜ லஷ்ம்யா
ப்ரத்யேமி பாதாவநி கேளி பத்மம் –807–

ஸ்ரீ பாதுகையே உனது பகுதியான குமிழ் மேலே தாமரைக் காய் போன்று நுனி யுறுப்பும் மேல் நோக்கிப் போகும் காம்பும் கொண்டது –
இது எனக்கு எப்படித் தோற்றுகிறது என்றால் பெருமாள் திருவடித் தாமரையில் லஷ்மி இருக்கிறாள்
-அவள் திருக்கையில் வைத்து இருக்கும் விளையாட்டுத் தாமரைப் பூ தான் இது-என்று –

————————————————————————-

உபரி விநி ஹிதஸ்ய கேசவாங்க்ரே
உபரி பதாவ நி யந்த்ரிகாத்மிகா த்வம்
இதி தவ மகிமா லகூகரோதி
ப்ரணத ஸூரேச்வர செகராதி ரோஹாம் –808–

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாளின் திருவடிக்கு கீழ் இருந்து கொண்டு உன் உறுப்பான குமிழ் திருவடிக்கு மேலும் போவதை சேவிக்கும்
நான் சொல்கிறேன் இப்படி உன் பெருமை இருக்க நீ தேவர் ஸ்ரேஷ்டர்களின் தலை மீது ஏறுகிறாய் எனபது ரொம்ப அல்ப விஷயமாகும் –

——————————————————————–

நித்யம் பதாவநி நிபத்தகிரீட சோபம்
பத்மாலயா பரிசிதம் பதமுத்வஹந்த்யா
அங்கீ கரோதி ருசி மங்குளி யந்த்ரிகா தே
சாம்ராஜ்ய சம்பத நுரூப மிவாத பத்ரம் –809-

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடியாகிற கிரீடம் ஏற்று இருக்கிறாய் -அது எப்படிப்பட்டது –
மஹா லஷ்மியின் பிடித்தல் பெற்றதாய் நீ ஏக சக்ராதிபதியாக மஹா ராணியாக இருக்க
உன் குமிழ் அப்பதவிக்கு ஏற்ப ஒரு திருக் குடை போல் தோற்றம் அளிக்கிறது –

——————————————————————

ப்ரதமா கலேவ பவதீ சரணாவநி பாதி ரங்க சந்திர மாச
ஸ்ருங்கோ ந்னதிரிவ யத்ர ஸ்ரியம் விபாவயதி யந்த்ரிகா யோக –810-

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க சந்த்ரனுடைய முதல் கலை போலே நீ விளங்குகிறாய் -உன் உருவம் அங்கனம் முதல் கலையை ஒத்தது
-அதில் குமிழ் பிறையின் ஒரு நுனி உயர்ந்து இருப்பதான அழகை -அது குறிப்பிடும் சம்பந்தத்தைக் காட்டுகிறது –
-பிறை நுனி ஒரு பக்கத்தில் உயர்ந்து இருந்தால் -மூன்றாம் பிறை போலே -அது நல்ல தானிய வளம் கொடுக்குமாம் –

————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: