ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-4-சமர்ப்பண பத்ததி -பணயப் பத்ததி -பெருமாள் ஸ்ரீ பாரத ஆழ்வான் இடம் பணயமாக விட்டு அருளியது -ஸ்லோகங்கள் -101-120-

பஜாம பாதுகே யாப்யாம் பரதஸ் யாக்ர ஜஸ்ததா
ப்ராய ப்ரதி ப்ரயாணாய ப்ராச்தானி கமகல்பயத் –101-

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் தாம் வரும் வரை உன்னை அன்றோ பரஸ்தானமாக அருளினார்
-உன்னை நாம் பூஜிக்கிறோம் –
ஜீவாத்மாக்களுக்கு எம்பெருமான் திருவடி அடையும் வரை இவ்வுலகில் தனது பிரதிநிதியாக ஆசார்யரை நியமித்து அருளுகிறான் –

பஜாம பாதுகே யாப்யாம் பரதஸ் யாக்ர ஜஸ்ததா –
ததா -பிராரத்த பொழுது -லோக ரக்ஷணம் தனது என்று -ததா -என்பதற்கே இந்த பந்ததி ஸ்லோகங்கள் எல்லாம்
ப்ராய ப்ரதி ப்ரயாணாய ப்ராச்தானி கமகல்பயத்–திரும்பி வரும் வரை விஸ்வஸித்து அனைவரும் இருக்க
-பர ஸ்தானம் போகிறோம் -பெருமாள் பட்டாபிஷேகம் பண்ண இங்கே பரஸ்தானம் –
சமர்ப்பணம் ஆகிக்கொண்டு -அலங்காரம் -திருமலையில் பரிபாஷை -திரு ஆபரணங்கள் அவனை அடைந்து பெருமை -பரதனுக்கு கொடுக்கிறார் இங்கு-
பாதுகையே பெருமாள் -தன்னை விட ஸ்ரேஷ்டமாக பெருமாள் எண்ணிக் கொள்கிறார் -மகுட ஸ்தானத்தில் இந்த பாதுகை -ஸீரோ பூஷணம் இது -சமர்ப்பணம்

———————————————————-

ராஜ்யம் விஹாய ரகுவம்ச மஹீ பதீநாம்
பௌராமச்ச பாதரசிகான் ப்ருதிவீம் ச ரக்தாம்
த்வாமேவ ஹந்த சரணாவநி சம்ப்ரயாஸ் யன்
ஆலம்பத ப்ரதம முத்தர கோச லேந்திர -102-

ஸ்ரீ பாதுகையே பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது எல்லாவற்றையும் துறந்து புறப்பட்டார் –
உன்னை மட்டும் சாற்றிக் கொண்டு அல்லவா புறப்பட்டார் –
பெருமாள் தன் பக்தர்களை விடமாட்டார் -ஆசார்யனை அடையாதவர்களை தன்னிடம் அடையவும் விட மாட்டார் -என்றவாறு –

ராஜ்யம் விஹாய ரகுவம்ச மஹீ பதீநாம்
தனது ராஜ்ஜியம் விட்டார் -எப்படிப் பட்ட ராஜ்ஜியம் —ரகு வம்ச மஹீ பாதி நாம் -அதற்கு இட்டு பிறந்த –
கைங்கர்ய சாம்ராஜ்யம் விட்டு நாம் உண்டியே உடையே போகிறோமே
பௌராமச்ச பாதரசிகான் ப்ருதிவீம் ச ரக்தாம்
ராமோ ராமோ பிரஜா நாம் -சொல்கிறவர்களையும் விட்டு -திருவடியே பரம உபாதேயம் என்று இருக்கும் அயோத்யா மக்களையும் விட்டு
கல்லை ரிஷி பத்னியாக்கி -கரிக்கட்டையை ராஜ குமாரன் ஆக்கும் -பிராட்டிமார் -கூசிப் பிடிக்கும் திருவடி
ப்ருதிவீ -அசேதனங்களும் பிரிவால் வாடுமே -மேலே மேலே உத்க்ருஷ்டமான வற்றை அருளிச் செய்கிறார்
அநுராகம் பொழியும் பிருத்வீயும் விட்டு –
இவர்களை தேற்றி -ஜல் ஜல் சப்தம் உடன் -பெருமாளை கூட்டிக் கொண்டு வருவேன் என்கிறாள் ஸ்ரீ பாதுகா தேவி –
த்வாமேவ ஹந்த சரணாவநி சம்ப்ரயாஸ் யன் -ஆலம்பத ப்ரதம முத்தர கோச லேந்திர
ஹேம பாதுகை -மர உரி சாத்தி கொண்டாலும் இத்தை விடாமல் –

——————————————————

ப்ராப்தே பிரயாண சமயே மணி பாத ரஷே
பௌராந வேஷ்ய பவதீ கருணப்ரலாபான்
மஞ்ஜூ ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம்
ராமம் பதக்ரஹண பூர்வமயா சதேவ –103-

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுது அருளிய பொழுது உன் குமிழியில் உள்ள ரத்னங்கள் சப்தித்தது –
அது அயோத்யா நகரத்து ஜனங்களுக்காக நீ வருந்தி பெருமாள் இடம்
என்னை யாவது இங்கே விட்டு செல்லுங்கள் என்று முறையிட்டது போலே இருந்தது –

மஞ்ஜூ ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம் -சமாதானம் சொல்கிறாள் -ஆசுவாசம் படுத்துகிறாள்
ராமம் பதக்ரஹண பூர்வமயா சதேவ-காலைப் பிடித்து பிரார்த்தனை பண்ணுவேன் என்கிறாள் ஸ்ரீ பாதுகா தேவி

——————————————————–

மத்வா த்ருணாய பரதோ மணி பாத ரஷே
ராமேண தாம் விரஹிதாம் ரகுராஜதா நீம்
த்வாமேவ சப்ரணய முஜ்ஜயி நீ மவந்தீம்
மேனே மஹோதய மயீம் மதுராம யோத்யாம் –104-

ஸ்ரீ ரத்ன பாதுகையே ஸ்ரீ பரதாழ்வான் பெருமாள் பிரிவால் மாசுற்ற ராஜ பட்டத்தை வேண்டாம் என்று உதறி விட்டு
உன்னையே பரம புருஷார்த்தமாக மதித்து மேலான அன்புடனே உன்னை எல்லாமாக அடைந்தான் –
அனைத்தையும் புல்லாக தள்ளி ஆசார்யன் இடத்திலே பக்தி செலுத்தி வாழ்வதே உஜ்ஜீவன உபாயம் என்றதாயிற்று –

த்வாமேவ சப்ரணய முஜ்ஜயி நீ மவந்தீம்
உஜ்ஜயினி -இத்தை விட உத்கர்ஷம் இல்லை –
அவந்தீம் -தேசம் -ரக்ஷணம் சாமர்த்தியம்
மேனே மஹோதய மயீம் மதுராம யோத்யாம்
மஹோதயம் -ராம ராஜ்யத்துக்கும் மேலான ராஜ்ய பரிபாலனம் –
மதுராம் -இனிமை சப்தம் ஸ்வ பாவம் –
அயோத்யாம்-அபாரிஜாதாம் –
பரதன் உள்ள இடம் எல்லாம் கொண்டு ஸ்ரீ பாதுகா தேவி ஐந்தையும் கொடுத்தாள்-

———————————————————————

ராமாத்மன ப்ரதிபதம் மணி பாத ரஷே
விஸ்வம் பரஸ்ய வஹ நேன பரீஷிதாம் த்வாம்
விச்வச்ய தேவி வஹனே விநிவேசயிஷ்யன்
விஸ்ரப்த ஏவ பரதோ பவதீம் யயாசே –105-

ஸ்ரீ மணி பாதுகையே இவ்வுலகம் அனைத்தையும் தாங்குகின்ற எம்பெருமானையே தரிக்கும் சாமர்த்தியம்
உள்ள படியால் தான் உன்னை உலகாளும் பததிற்காக முழு நம்பிக்கையுடன் ஸ்ரீ பரதாழ்வான் யாசித்தான் –

————————————————————–

பக்த்யா பரம் பவது தத் பரதச்ய சாதோ
த்வத் ப்ரார்த்தனம் ரகு பதௌ மணி பாத ரஷே
கே நா சேன ச முநி பரமார்த்த தர்சீ
பத்ராய தேவி ஜகதாம் பவதீ மவாதீத் –106-

ஸ்ரீ பாதுகையே -தன்னுடைய பக்தியினால் ஸ்ரீ பரதாழ்வான் உன்னை பிரார்த்தித்தாரோ என்று
சங்கை கொள்வதால் உனக்கு குறை வர நியாயம் இல்லை -ஏன் எனில் உண்மையை உள்ளபடி
கூறும் சக்தி படைத்த வசிஷ்ட மகர்ஷி யல்லவா உலகத்தை காப்பாற்றும் சக்தி உனக்கு இருப்பதாக கூறினார் –

————————————————————-

ராமே வனம் வ்ரஜதி பங்க்திரதே ப்ர ஸூ ப்தே
ராஜா பவா தசகிதே பரதே ததா நீம்
ஆஸ்வாச யேத்க இவ கோசலவாசி நஸ்தான்
சீதேவ சேத் த்வமாபி சாஹசவ்ருத்தி ராசி –107-

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்டகாரணயம் செல்ல -சக்ரவர்த்தியும் வான் ஏறிச் செல்ல -ஸ்ரீ பாரதாழ்வானும் பட்டாபிஷேகம் மறுக்க
சீதா பிராட்டியைப் போலே பெருமாளை பிரிந்து வர மறுத்து இருந்தால் கோசல தேச மக்களை யார் சமாதானம் பண்ணுவர்-

—————————————————————————–

பாதாவனி ப்ரபவதோ ஜகதாம் த்ரயாணாம்
ராமாதபி த்வமதிகா நியதம் ப்ரபாவாத்
நோ சேத் கதந்து பரதச்ய தமேவ லிப்சோ
ப்ரத்யாயநம் பரிபணம் பவதீ பவித்ரீ –108-

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் உன்னை அடகு வைத்து தன்னை மீட்டுக் கொண்டார் -உன் மதிப்பு பெருமாளை விடவும் மூ உலகங்களிலும்
உயர்ந்ததாக இருந்ததால் தானே உன்னை அடகுப் பொருளாக ஏற்றுக் கொண்டார்

——————————————————-

மன்யே நியுஜ்ய பவதீம் மணி பாத ரஷே
பார்ஷ்ணி க்ரஹச்ய பரதச்ய நிவாரணார்த்தம்
ரத் நாகரம் சபதி கொஷ்பதயன் விஜிக்யே
ராம ஷணேன ரஜநீ சரராஜதா நீம் –109-

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் சமுத்ரத்தை பசுவின் குளம்படி யாகப் பண்ணி
அசுரர் ராஜ்யத்தை நொடியில் ஜெயித்து தனது திருவடியை பிடித்துக் கொண்டு
மீளாத ஸ்ரீ பரதாழ்வானுக்கு உன்னைத் தந்து அருளிய பின்னரே தனது திருவவதார கார்யத்தை முடிக்க முடிந்தது –

—————————————————————–

பாதாவநி ப்ரபுதரா நபராத வர்க்கான்
சோடும் ஷமா த்வமஸி மூர்த்தி மதீ ஷமைவ
யத் த்வாம் விஹாய நிஹதா பரிபந்தி நஸ்தே
தேவேன தாசரதி நா தச கண்ட முக்யா–110-

ஸ்ரீ பாதுகையே அனைத்து குற்றங்களையும் பொறுக்கும் பொறுமையின் வடிவம் நீ -ஆகையால் தான் உன்னை ஸ்ரீ பரதாழ்வான் இடம்
கொடுத்து விட்டு குற்றம் நிறைந்த இராவணன் முதலான அரக்கக் கூட்டத்தை பெருமாள் நிரசிக்க முடிந்தது –

——————————————————————–

வாக்யே கரீயசி பிதுர்விஹி தேப்யத்ருப்த்யா
மாதர் மனோரதம சேஷமவந்த்யயிஷ்யன்
மன்யே ததா ரகுபதி பரதச்ய தேனே
மாதஸ்த்வ்யைவ மணி மௌளி நிவேச லஷ்மீம் –111-

ஸ்ரீ பாதுகையே தாய் தந்தை சொற்படி ஸ்ரீ தண்டகாரண்யம் சென்றும்
ஸ்ரீ பரதாழ்வானுக்கு பட்டம் சிறப்பாக பூர்த்தி செய்து தாயின் மநோ ரதம்
முழுவதையும் நிறைவேற்றி வைக்கவுமே பெருமாள் ரத்னங்கள் இழைத்த உன்னை
ஸ்ரீ பரதாழ்வான் சிரசில் கிரீடம் போலே வைத்து அருளினார் –

————————————————————————-

பாதாம் புஜாத் விகளிதாம் பரமச்ய பும்ஸ
த்வாமாதரேண விநி வேச்ய ஜடாகலாபே
அங்கீசகார பரதோ மணி பாத ரஷே
கங்கா தி ரூட சிரசோ கிரி சஸ்ய காந்திம் –112-

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் திருவடியில் இருந்து நழுவிய உன்னைத் தனது சிரசில் பரிவுடன் தரித்த
ஸ்ரீ பரதாழ்வான் கங்கையைத் தன் சடை முடியில் தரித்த பரமசிவனுடைய தேஜசை அடைந்தார் –

————————————————————————

அவிகலமதி கர்த்தும் ரஷணே சப்த லோகா
ரகுபதி சரணேந ந்யச்த திவ்யாநுபாவாம்
அபஜத பரதஸ் த்வா மஞ்ஜஸா பாத ரஷே
மணி மகுட நிவேசத்யாக தன்யேன மூர்த்நா –113-

ஸ்ரீ பாதுகையே ஏழு உலகங்களையும் காப்பாற்றும் சக்தி பூரணமாக ஏற்பட
பெருமாள் தன் திருவடிகளில் சாற்றிக் கொண்டு தந்த உன்னை அரச பட்டத்திற்கு உரிய சாதாரண
கிரீடத்தைத் துறந்ததால் பாக்கியம் செய்த தனது தலையில் ஸ்ரீ பரதாழ்வான் வகித்தான் –

———————————————————–

இயமவிகல யோக ஷேம சித்யை ப்ரஜா நாம்
அலமிதி பரதேன ப்ரார்த்தி தாமாதரேண
ரகுபதி ரதிரோ ஹந்தப் யஷிஞ்சத் ஸ்வயம் த்வாம்
சரண நகமணீநாம் சந்த்ரிகா நிர்ஜ்ஜரேண –114-

ஸ்ரீ பரதாழ்வான் உடைய விண்ணப்பத்திற்கு இணங்க பெருமாள் ஸ்ரீ பாதுகையே உன் மீது ஏறி ரஷணம் பண்ணக் கூடிய சக்தி
உனக்கு உண்டு என்று சாதித்தார் -அப்போது தம்முடைய திரு நக தேஜஸ் என்கிற ஒளியில் தாமே ஒருமுறை உனக்கு
திரு அபிஷேகம் செய்து வைத்தார் பெருமாள் -பிறகே ஸ்ரீ பரதாழ்வான் நந்தி கிராமத்தில் உனக்கு திரு அபிஷேகம் செய்து வைத்தார்
சகல லோகங்களின் யோக ஷேமங்கள் குறைவின்றி நிறைவேற நீயே போதும் என்று ஸ்ரீ பரதாழ்வான் உன்னை பிரார்த்திக்க இது நடந்ததே –

——————————————————————————–

பிரணயிநி பத பதமே காடமாஸ் லிஷ்யதி த்வாம்
விதி ஸூத கதிதம் தத் வைபவம் தே விதந்த
அநுதி நம்ருஷயஸ் த்வாமர்ச்சயந்த்யக்ன்ய காரே
ரகுபதி பத ரஷே ராமகிர்யாச்ர மஸ்தா –115-

ஸ்ரீ பாதுகையே தன்னை விட்டுப் பிரியும் பத்னியை ஆரத் தழுவும் கணவனைப் போல் பெருமாள் திருவடிகள் உன்னைக் கெட்டியாகப் பிடித்தன –
ப்ரஹ்ம புத்ரரான ஸ்ரீ வசிஷ்ட மஹர்ஷி உன் பெருமைகளை எடுத்துக் கூறியதையும் கேட்டு
சித்ர கூடத்தில் இருந்து மகரிஷிகள் ஆஸ்ரமத்தில் -அக்னிஹோத்ர சாலையில் -தினமும் உன்னை பூஜித்தனர் –

——————————————————————————-

நியதமதி ருரோஹ த்வாம நாதேய சக்திம்
நிஜ சரண சரோஜே சக்தி மாதாதுகாம
ச கதமிதரதா த்வாம் ந்யச்த ராமோ விஜஹ்ரே
த்ருஷது பசித பூ மௌ தண்ட காரண்ய பாகே –116–

ஸ்ரீ பாதுகையே பொறுமையின் பிறப்பிடமான உன் மீது ஏறி பெருமாளும் தானும் எதையும் தாங்க வல்ல
உனது குணத்தை சம்பாதித்துக் கொண்டார் -இல்லாவிடில் மிருதுவான பாதங்களைக் கொண்டு
கற்கள் முட்கள் நிறைந்த ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எவ்வாறு சஞ்சரிப்பார்

———————————————————————–

ரகுபதி பத பத்மாத் ரத்னா பீடி நிவேஷ்டும்
பரத சிரஸி லக்நாம் ப்ரேஷ்ய பாதாவநி த்வாம்
பரிணத புருஷார்த்த பௌரவர்க்க ஸ்வயம் தே
விதிம பஜத சர்வோ வந்திவை தாளிகா நாம் –117–

ஸ்ரீ பாதுகையே உனக்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக ஸ்ரீ பரதாழ்வான் உன்னைத் தனது தலையிலே ஏற்ற பொழுது
கோசல நாட்டு மக்கள் சதுர்வித புருஷார்த்தங்களும் கைக்கு வந்தது போலே உன்னை ஸ்துதித்தார்கள் –

———————————————————————–

அநந்ய ராஜன்ய நிதேச நிஷ்ட்டாம் சகார ப்ருத்வீம் சதுரர்ண வந்தாம்
ப்ராதுர்யியாசோ பரதஸ்ததா த்வாம் மூர்த்நா வஹன் மூர்த்தி மதீமி வாஜ்ஞாம் –118-

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளும் பொழுது அவரது ஆஜ்ஞையின் ஸ்வரூபமாக
உன்னை மதித்து கடல் சூழ்ந்த உலகை ஸ்ரீ பரதாழ்வான் வேறு யாருக்கும் ஆட்படாமல் உன்னைக் கொண்டு ஆண்டார் –
நல்ல ஆசார்யருக்கு உட்பட்டவனுக்கு இந்த உலகமே ஸ்வ அதீனமாகுமே –

—————————————————————————–

யத் ப்ராத்ரே பரதாய ரங்க பதி நா ராமத்வ மாதஸ் துஷா
நித்யோபாச்ய நிஜாங்க்ரி நிஷ்க்ரயதயா நிச்சித்ய விஸ்ராணிதம்
யோக ஷேம மவஹம் சமஸ்த ஜகதாம் யத் கீயதே யோகிபி
பாதத்ராணமிதம் மிதம் பசகதாமஹ்நாய மே நிஹ் நுதாம் –119-

பெருமாள் -தானே ஸ்ரீ ரங்க நாதன் -அனைத்து உலகங்களுக்கும் அனைத்து ஷேமங்களையும் அளிப்பார் என்று வசிஷ்டாதிகள்
நன்றாக அடையாளம் காணப் பட்ட ஸ்ரீ பாதுகைகளைத் ஸ்ரீ பரதாழ்வானுக்கு தந்து அருளினார் –
அவற்றின் பிரபாவத்தை முழுமையாக விவரித்து சொல்ல சொல்வன்மை அடியேன் இடம் இல்லை
இந்த குறையை நீயே போக்கி அருள வேணும் –

—————————————————————–

பரதஸ் ஏவ மமாபி பிரசமித விஸ்வாபவா துர்ஜாதா
சேஷேவ சிரஸி நித்யம் விஹரது ரகுவீர பாதுகே பவதீ –120-

ஸ்ரீ பாதுகையே உன்னை ஆஸ்ரயித்து ஸ்ரீ பரதாழ்வான் எல்லா லோக அபவாதங்களில் நின்றும் தப்பி நற்பெயர் பெற்றான் –
அது போலே என் தலையிலும் திருப்பரிவட்டம் போல் இருந்து என் அபவாதங்களைப் போக்கி அருள வேண்டும் –

———————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: