ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-1-ப்ரஸ்தாவ பத்ததி –விஷயம் அறிமுகம் –ஸ்லோகங்கள் 1-20-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நி தத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————————————————————————

பாதுகா பாதுகா பாதுகா’ என்று சொல்லிப் பாருங்கள், பாதுகாப்பா என்று வரும்.
ஆம்! இறைவனின் பாதுகைகளை நம் சிந்தையில் இருத்துவோம், அவை நம்மை நிச்சயம் காப்பாற்றும்

———–

1-ப்ரஸ்தாவ பத்ததி –விஷயம் அறிமுகம் –ஸ்லோகங்கள் 1-20-
2-சமாக்யா பத்ததி —திரு நாம பத்ததி –ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சடகோபம் -ஸ்லோகங்கள் -21-30-
3-பிரபாவ பத்ததி -பெருமைப் பத்ததி -பாதுகையின் பெருமை -ஸ்லோகங்கள் -31-100-
4-சமர்ப்பண பத்ததி -பணயப் பத்ததி -பெருமாள் ஸ்ரீ பரத ஆழ்வான் இடம் பணயமாக விட்டு அருளியது -ஸ்லோகங்கள் -101-120-
5-பிரதி பிரஸ்தான பத்ததி -பதில் பயணப் பத்ததி -பெருமாளை விட்டு ஸ்ரீ பாதுகை ஸ்ரீ பரத ஆழ்வான் உடன் சென்றது -ஸ்லோகங்கள் -121-140-
6-அதிகார பரிக்ரஹ பத்ததி -உரிமைக் கோட் பத்ததி-ராஜ்ய அதிகாரம் -ஸ்லோகங்கள் -141-180-
7-அபிஷேக பத்ததி -முடி சூட்டுப் படலம் -ஸ்லோகங்கள் -181-210-
8-நிர்யாதநா பத்ததி -மீட்சிப் பத்ததி -ஸ்லோகங்கள் -211-240-
9-வைதாளிக பத்ததி -வந்திவை தாளிக பத்ததி -அரசர்கள் புகழ்வது -ஸ்லோகங்கள் -241-250-
10-ஸ்ருங்கார பத்ததி -பெருமாள் உடன் ஸ்ரீ பாதுகை சேர்ந்து மகிழ்வது -ஸ்லோகங்கள் -251-260-
11-சஞ்சார பத்ததி -ஸ்லோகங்கள் -261-320-
12-புஷ்ப பத்ததி -ஸ்லோகங்கள் -321-350-பூக்களால் அர்ச்சனை –
13-பராக பத்ததி -ஸ்ரீ பாதுகா தூள் படலம் -ஸ்லோகங்கள் -351-380-
14-நாத பத்ததி -இனிய நாத பத்ததி -ஸ்லோகங்கள் -381-480-
15-ரத்ன சாமான்ய பத்ததி -மணிப் போது படலம் -ஸ்லோகங்கள் -481-520-birds eye view
16-பஹூ ரத்ன பத்ததி -ஸ்லோகங்கள் -531-580-
17-பத்மராக பத்ததி -செம்மணிப் படலம் -ஸ்லோகங்கள் -581-610-
18-முக்தா பத்ததி -முத்துப் படலம் -ஸ்லோகங்கள் -611-660-
19-மரகத பத்ததி -ஸ்லோகங்கள் -661-680-
20-இந்திர நீல பத்ததி -நீல மணி படலம் -ஸ்லோகங்கள் -681-710-
21-பிம்ப பிரதிபிம்ப பத்ததி -ஸ்லோகங்கள் -711-730-
22-காஞ்சனா பத்ததி -பொற் படலம் -ஸ்லோகங்கள் -731-750-
23-சேஷ பத்ததி -சேஷ பூதமாய் -ஆதி சேஷ அவதாரமாய் -ஸ்லோகங்கள் -751-760-
24-த்வந்த்வ பத்ததி -இரட்டைப் படலம் -ஸ்லோகங்கள் -761-780-
25-சந்நிவேச பத்ததி -ஸ்லோகங்கள் -781-800-
26-யந்த்ரிகா பத்ததி -குமிழ்கள் அமைப்பும் அனுபவம்- குடை போன்றவை -மேலும் பல -படலம் -ஸ்லோகங்கள் -801-810-
27-ரேகா பத்ததி -வேரிப்படலம் -ஸ்லோகங்கள் -811-820-
28-ஸூபாஷித பத்ததி -நன் மொழிப் படலம் -ஸ்லோகங்கள் -821-830-
29-பிரகீர்ண பத்ததி -கலம்பக படலம் -ஸ்லோகங்கள் -831-910-
30-சித்ர பத்ததி -ஸ்லோகங்கள் -911-950-
31-நிர்வேத பத்ததி -உருக்கப் படலம் -வைராக்கியம் வெறுப்பு ஆற்றாமை வெளிப்படுத்தும் உருக்கப் படலம் -ஸ்லோகங்கள் -951-970-நைச்ய அனுசந்தானம் –
32-பல பத்ததி– பேற்றுப் படலம் -ஸ்லோகங்கள் -971-1008-

——–

அஷ்டாக்ஷரம் +த்வயம் -32
சரம ஸ்லோகம் -32
காயத்ரி -24-+அஷ்டாக்ஷரம் சேர்த்து -32
ப்ரஹ்ம வித்யை -32-

———-

நிழலும் அடி தாறும் ஆனோம் -பெரிய திருவந்தாதி -31-
ஓரே யாமத்தில் அருளிச் செய்யப்பட பிரபந்தம் –
ஒவ் ஒரு பத்ததியும் -அனுஷ்டுப் தொடங்கும் ஆர்யா சந்தஸ்ஸூ முடியும்

ப்ரஹ்ம வித்யை 32-ந்யாஸ வித்யை சரணாகதி பற்றியே அனைத்தும்

பொலிக பொலிக சந்த ஜெயந்தி தொடங்கி ஜெயந்தி என்றே நிகமிக்கிறார்

———————————————————–

1–ப்ரஸ்தாவ பத்ததி —விஷயம் அறிமுகம் –ஸ்லோகங்கள் 1-20–

சந்த ஸ்ரீ ரங்க ப்ருத்வீச சரண த்ராண சேகரா
ஜயந்தி புவந த்ராண பத பங்கஜ ரேணவ –1-

தலைக்கு மேல் பாதுகை வைத்த அடியார்களின் திருவடி ரேணவ-மண் துகள்கள் -இதுவே இதன் கவி நயம்
புவந த்ராண-புவனங்களை காக்க வல்லது –
அடியார்க்கு அடியார் –அடியோங்களே -சரம -நிஷ்டை –

ஸ்ரீ ரங்க நாதனுடைய ஸ்ரீ பாதுகைகளை ஸ்ரத்தை யுடன் சிரஸ்ஸில் தரித்துக் கொள்ளும் பெரியோர்கள் உடைய
திருவடித் தூள்கள் உலகம் அனைத்தையும் உஜ்ஜீவிக்கச் செய்கின்றன –
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி தொழும் பரமை காந்திகள் உலகையே உஜ்ஜீவிக்கச் செய்யும் சக்தி பெற்றவர்கள் ஆகிறார்கள் –

ஸ்ரீரங்கநாதன் பாதுகைகளை பரம ஸந்தோஷத்துடன் சிரஸில் வைத்துக் கொள்ளுகிற பெரியோர்களுடைய
திருவடி தூள்கள் எல்லா லோகத்தையும் காப்பாற்றுகிறது.
அப் பேர்ப்பட்ட பெரியோர்கள் மிகவும் உயர்ந்தவர்களாயிருக்கிறார்கள்.

(உட்கருத்து) நம்மாழ்வாரைக் கொண்டாடுகிறவர்கள் தாங்களும் நல்ல கதி யடைந்து
எல்லாருக்கும் ஸகல புருஷார்த்தங்களையும் கொடுப்பார்கள் என்பது.

காரி ஸூதன் கழல் சூடிய முடியும் ககன சிகை முடியும் கொண்ட ஜெகதாசார்யர் –
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் ராமானுஜர் அடியார்களே உலகைக் காத்து அருளுகிறார் –
மதுரகவி ஆழ்வார் நாதமுனிகள் -ராமானுஜர் போல்வார் அடியார்களே உலகைக் காத்து அருளுகிறார் –
பொலிக பொலிக பொலிக என்று பாகவத மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –

அந்தாதி முதல் ஸ்லோகமும் -கடைசி ஸ்லோகமும்
சத்துக்களின் பன்மையே – சந்த -சார அசார விவேகிகள் –

ஜயதி யதிராஜ ஸூக்தி ஜயதி முகுந்தஸ்ய பாதுகா யுகளீ
ததுபயாத நாஸ் த்ரிவேதீம் அவந்த்ய யந்தோ ஜயந்தி புவி சந்த –1008–

ஸ்ரீ யதி ராஜர் என்கிற ஸ்ரீ ராமானுஜர் உடைய திவ்ய ஸூக்திகள் -ஸ்ரீ பாஷ்யம் முதலானவை -சிறப்பாக விளங்குகின்றன –
மோஷ தாதா வாகிற ஸ்ரீ ரங்க நாதனுடைய திருப் பாதுகையினை இவ்வுலகில் விளங்குகிறது –
ஸ்ரீ பாஷ்யகார ஸ்ரீ ஸூக்திகளையும் ஸ்ரீ பாதுகா மூர்த்தியான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளையும் மட்டுமே தம் தனம் என்று கொண்டு இருக்கும்
சாதுக்கள் த்ரயீ என்ற வேதத்தை வீணாக்காமல் அதை முழு பிரமாணம் ஆக்குகிறவர்கள் -அவர்கள் இப்புவியில் சிறந்து விளங்குகிறார்கள் –

உபய வேதாந்தம் -நமக்கே அசாதாரணம் அன்றோ –

——————————————–

பரதாய பரம் நமோஸ்து தஸ்மை
ப்ரதமோதாஹரணாய பக்தி பாஜாம்
யத் உபஞ்ஞம் அசேஷத: ப்ருதிவ்யாம்
ப்ரதிதோ ராகவ பாதுகா ப்ரபாவ:–2-

பரதாய பரம் நமோ அஸ்து -அந்த பரதாழ்வான் பொருட்டு நமஸ்காரங்கள் –
ஜடா பரதர் துஷ்யந்த மகனும் பரதன் -நாட்டிய சாஸ்திரம் அருளிய பரதன் -போன்ற பலர் உண்டே
தஸ்மை பிரதமோதாஹரணாய பக்தி பாஜாம் -பக்தர்களுக்கு முதல் உதாரணம் -மற்றவர்களை வியாவர்த்தித்து –
ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ -கோடி ராமரும் அண்ணல் உனக்கு ஒப்போ கௌசல்யை –
யத் உபஞ்ஞம் அசேஷத ப்ருதிவ்யாம் பிரதிதோ ராகவ பாதுகா பிரபாவ-பாதுகையின் பெருமையை உலகோர் அறியும்படி

ஸ்ரீ ராமனுடைய ஸ்ரீ பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தி உள்ளதை உலகுக்கு எடுத்துக் காட்டிய
பரம பாகவதனாகிய பரதனை சேவிக்கின்றேன்

பரதன் -என்றது ஸ்ரீ நாத முனிகளையும் குறிக்கும் -பாவ ராக தாள கொண்டு அருளிச் செயலை அளித்தார் அன்றோ –
தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல் ஸ்ரீ நாத முனி-
பாதுகையான நம்மாழ்வார் பெருமை உலோகர் இவரால் தானே பரவப் பெற்றது
ஸ்ரீ நம்மாழ்வாரையும் திருவாய் மொழியும் தானே உலகை உஜ்ஜீவிக்கும் பரம சக்திகள்

ஸ்ரீபரதாழ்வானால் தான் ஸ்ரீராமானுடைய பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தியிருக்கிற தென்பது எல்லா வுலகத்திற்கும் தெரிந்தது.
ஆகையால் ஸ்ரீபரதாழ்வாரைத் தான் ஸேவிக்கிறேன்.

ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் முதல் அங்கத்தில் இருபத்தைந்தாவது ஸ்லோகத்தில்
“பரத” என்பது நாதமுனிகளைச் சொல்லுகிறது.
அதனால், ஸ்ரீநம்மாழ்வாருடைய பெருமை ஸ்ரீநாதமுனிகளால் தான் உலகத்திற்கு தெரிந்தது
“பரத” என்பதால் தெரியப்படுத்தபட்டதில் பாவ, ராக, தாள் என்கிற மூன்று ஸங்கதிகளிலேயும்
மஹா பண்டிதராகிய நாதமுனிகளை ஸேவிக்கிறேன்

—————————————————————

வர்ணஸ்தோமை: வகுள ஸுமந: வாஸநாம் உத்வஹந்தீம்
ஆம்நாயாநாம் ப்ரக்ருதிம் அபராம் ஸம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம்
பாதே நித்ய ப்ரணிஹித தியம் பாதுகே ரங்கபர்த்து:
த்வந் நாமாநம் முநிம் இஹ பஜே த்வாம் அஹம் ஸ்தோதுகாம:—3-

வர்ணாஸ் தோமைர் -எழுத்துக்கு கூட்டங்கள்
வகுள ஸூமநோ வாசநா முத்வ ஹந்தீம் -மகிழம் பூ வாசனையை -தாங்கிக் கொண்டு உள்ளது -திருவாய் மொழியிலும் இருக்குமே
ஆம் நாயா நாம் ப்ரக்ருதிம் அ பராம் -வேதங்களின் மற்ற ஒரு வடிவமே திருவாய் மொழி
சம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம் -கண்டு பிடித்துக் கொடுத்து அருளியவர் -த்ருஷ்ட்டி பார்த்து –
நால் வேதம் கண்ட புராண ரிஷி மந்த்ர தர்சிகளைப் போல் இவரையும் ரிஷி முனி கவி என்னும் –ஆச்சார்ய ஹ்ருதயம் -47-
பாதே நித்ய ப்ரணிஹித தியம் பாதுகே ரங்க பர்த்து -ஸ்ரீ ரெங்க நாதனின் திருவடிகளில் நித்யம் வைக்கப்பட்ட
புத்தி உடைய நம்மாழ்வார்-நேரே கூப்பிட்டு அருளிச் செய்கிறார் –
த்வன் நாமா நம் முநி மிஹ பஜே த்வாமஹம் ஸ்தோதுகாம-உம்முடைய பெயரே -சடாரி -சடகோபன் -முனிவர் –
தமிழ் வேதம் வழங்கி மனன சீலர் -16 வருஷம் இடைவிடாமல் தியானித்து
இஹ இப்பொழுது -நான் ஸ்துதி தொடங்கும் முன் உம்மை வணங்கி தொடங்குகிறேன் –

வேதம் தமிழ் செய்த மாறன் -ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய் மொழி அருளிச் செய்து
எக்காலமும் ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடிகளையே நினைத்து கொண்டு இருந்தவர் ஆகிறார்
ஸ்ரீ பாதுகை – ஸ்ரீ சடாரி- நம்மாழ்வார் என்று அருளிச் செய்கிறார் –

திருவாய்மொழி என்பது தமிழ் வேதம்.எப்பொழுதும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியையே நினைத்துக் கொண்டிருந்த
நம்மாழ்வார் அந்த வேதத்தைக் கண்டு பிடித்தார்.
ஸ்ரீரங்கநாதன் பாதுகையென்று சொல்லப்பப்டுகிற அவரை
இந்த ஸ்தோத்ரம் விக்னமில்லாமல் முடிவதற்காக முதலில் த்யானிக்கிறேன்.

—————————————————————–

திவ்ய ஸ்தாநாத் த்வம் இவ ஜகதீம் பாதுகே காஹமாநா
பாத ந்யாஸம் ப்ரதமம் மநகா பாரதீ யத்ர சக்ரே
யோக க்ஷேமம் ஸகல ஜகதாம் த்வயி அதீநம் ஸ ஜாநந்
வாசம் திவ்யாம் திசது வஸுதாஸ்ரோத்ர ஜன்மா முநிர் மே—4-

திவ்ய ஸ்தாநாத் த்வமிவ ஜகதீம் பாதுகே காஹ மாநா -சத்ய லோகத்தில் இருந்து வந்து அடைந்தாயே -விட்டுப் பிரியாமல் பாதுகா தேவி
பாத ந்யாசம் ப்ரதம மநகா பாரதீ யத்ர சக்ரே -முதல் காலடி வைத்து -தூய்மையான சரஸ்வதி தேவி -எங்கே வைத்தாள் என்றால்
வால்மீகி பகவான் நாக்கில் தானே -ஆதி கவி ஆனார் –
யோக ஷேமம் சகல ஜகதாம் த்வய் யதீநம் ச ஜாநன் -உலகோரின் யோகமும் சேமமும் உனது அதீனம்
இல்லாதது கிட்டவும் கிட்டியது நிலைக்கவும் -பாதுகா தேவியே -வால்மீகி ஸ்லோகம் உண்டே
வாசம் திவ்யம் திசது வஸூதா ஸ்ரோத்ர ஜன்மா முநிர் மே –பூமி தேவியின் காதாக புற்று -ant hill -அதில் இருந்து தோன்றியதால் -வால்மீகி
அடியேனுக்கு திவ்யமான வார்த்தைகளைக் கொடுத்து அருளட்டும் -அத்தைக்கு கொண்டு ஸ்தோத்ரம் பண்ணுவேன்
நம்மாழ்வார் பற்றி எழுத -பாதுகையே ஆழ்வார் –

இராமாயணத்திற்கு முன்பு வேதங்கள், புராணங்கள் என்று பல இருந்தபோதிலும், ஸம்ஸார விஷயங்கள் அடக்கிய
உயர்ந்த நூல்கள் ஏதும் இருந்தது கிடையாது. ஆக முதலில் தோன்றிய இனிமையான காவியம் இராமாயணமே ஆகும்.
இதே போன்று முதல் அர்ச்சாவதாரமாக இந்த மண்ணில் இறங்கியவன் பெரியபெருமாள் என்றும், நம்பெருமாள் என்றும்,
அழகிய மணவாளன் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கநாதன் என ஒப்பு நோக்குகிறார்.
சரஸ்வதிக்கும் பாதுகைக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
சரஸ்வதி முதன் முதலாக பாரத கண்டத்தில் தோன்றியதால் பாரதி எனப்பட்டாள்;
பாதுகை முதலில் பரதனால் ஆராதிக்கப்பட்டதால் பாரதி எனப்படுகிறது. முதலில் பாதுகை இங்கு வந்திருக்கவேண்டும் .
அதனை ஒரு கணமும் பிரியாதவனான நம்பெருமாள், பாதுகைகளைத் தொடர்ந்தபடி இங்கு வந்தான் என்று கருத்து.

ஒ பாதுகையே -நீ தானே ஸ்ரீ ரங்க நாதனை ஸ்ரீ ரங்க விமானத்துடன் இஷ்வாகு குலத்துக்கு பிரசாதமாக
அயோத்யைக்கு எழுந்து அருளப் பண்ணினாய் –
ஸ்ரீ சரஸ்வதி தேவியும் ஸ்ரீ வால்மீகி மகரிஷிக்கு வாக்காய் இருந்து உன்னைப் பற்றி காவ்யம் இயற்றினாள்
அந்த வால்மீகி மஹரிஷி எனக்கு நல் வார்த்தையைக் கொடுக்க வேண்டும் -ஸ்லோகம் -900-மேலே காண்க –

மாதர் மஞ்ஜூஸ்வ ந பரிணத ப்ரார்த்தனா வாக்ய பூர்வம்
நிஷிப்தாயாம் த்வயி சரணயோ பாதுகே ரங்க பர்த்து
த்வயாயத்தம் கிமபி குசலம் ஜா ந தீநாம் ப்ரஜா நாம்
பர்யாப்தம் தந்னகலுந பவத்யாத்மா நிஷேப க்ருத்யம் –900-

————————————————————

நீசே அபி ஹந்த மம மூர்த்தநி நிர்விசேஷம்
துங்கே அபி யத் நிவிசதே நிகம உத்தமாங்கே
ப்ராசேதஸ ப்ரப்ருதிபி: ப்ரதம உபகீதம்
ஸ்தோஷ்யாமி ரங்கபதி பாதுகயோர் யுகம் தத்—5-

நீசே அபி ஹந்த -தாழ்ந்தவனாக இருந்தாலும்
மம மூர்த்தநி நிர்விசேஷம்-ஏற்றத் தாழ்வு பாராமல் அடியேனுடைய சென்னியிலும் அமர்ந்து –
சடாரி தலையில் வைத்தாலும் அலம்ப வேண்டா பாவனத்வம் உண்டே
துங்கே அபி யன் நிவிசதே நிகம உத்தமாங்கே -வேதாங்கம் -உபநிஷத் -மலைக்கும் மடுவுக்கும் போல் அன்றோ –
ப்ராசேதஸ ப்ரப்ருதிபி ப்ரதம உபகீதம் -வால்மீகி தொடக்கமான ரிஷிகளால் ஸ்துதிக்கப் பட்ட
ஸ்தோஷ்யாமி ரங்க பதி பாதுக யோர் யுகம் தத் -அந்த பாதுகை இணை -ஸ்துதிக்கப் புகுந்தேனே –

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் எப்படிப்பட்டவை என்றால் –
மிகவும் உயர்ந்த பொருளான வேதங்களின் தலைகளிலும் உள்ளன;
மிகவும் தாழ்ந்தவனான என் போன்றோர் தலைகளிலும் உள்ளன. இது வியப்பல்லவா?
வால்மீகி போன்ற உயர்ந்தவர்களால் துதிக்கப்பட்ட அந்தப் பாதுகைகளை நானும் ஸ்தோத்திரம் செய்யப் போகிறேன்.

இங்கு வேதத்தின் தலை என்பது உபநிஷத்துக்கள் ஆகும். அவை பாதுகைகளைக் கூறுகின்றன என்று கருத்து.
மேலும் வால்மீகி போன்றவர்கள், இராமனின் பாதுகையைத் தங்கள் மனக்கண்களால் மட்டுமே கண்டனர்.
ஆனால் இங்கு இவரோ அன்றாடம் திருவரங்கனின் பாதுகையை மெய்யான கண்களால் காண்பதால்,
வால்மீகி போன்றவர்களை விடத் தான் தாழ்ந்தவன் ஆனாலும், துதி செய்ய ஏற்றவன் என்றார்.

வேதங்களின் சிரஸ் பாகத்தில் அமரும் பாதுகைகள், தாழ்ந்தவர்களான நம் போன்றோர் தலைகளிலும் சடாரியாக அமர்வது,
இத்தனை தாழ்ந்து வருவது அவற்றின் ஸௌலப்யத்தைக் குறிக்கும். வால்மீகியை ஏன் கூற வேண்டும்?
இவருக்கு பாதுகையைப் பற்றிய ஸ்லோகம் எழுத வழிகாட்டியாக, பாதுகைகளைப் பற்றி முன்பே கூறியவரான வால்மீகியைக் கூறினார்.

சடாரி வடிவில் நம்மாழ்வார் -தமிழ் வேதாந்தம் -நிகமன பாசுரங்கள் தோறும் –
குருகூர் சடகோபன் -தலையில் அமர்ந்து இருந்தாலும் -நம் தலையிலும் –
மதுரகவி ப்ரக்ருதிகள் ஸ்துதிக்கப் பட்ட ஆழ்வாரை அடியேனும் ஸ்துதிக்கப் புகுகிறேனே

ஸ்ரீ பாதுகை வேதாந்தம் -நீசனான -என் தலை மேலும் -உயர்ந்தவர் தாழ்ந்தவர் வாசி இல்லாமல் ஸ்ரீ சடாரி அருளுமே –
நீசன் உடைய ஸ்தோத்ரமும் -வால்மிகி போன்றார்களால் அருளப் பெற்ற ஸ்ரீ ராமாயணம் போலே
ஸ்ரீ ரங்க நாதனுக்கு சந்தோஷம் கொடுக்குமே –

ஸ்ரீ வால்மீகி பகவானும் ஸ்ரீ பாதுகா ப்ரபாபமே அருளிச் செய்துள்ளார்
நீசனும் அருளிச் செய்வதா –

——————————————————————

தத் தே முகுந்த மணி பாதுகயோ: நிவேசாத்
வல்மீக ஸம்பவகிரா ஸமதாம் மம உக்தி:
கங்கா ப்ரவாஹ பதி தஸ்ய கியாநிவ ஸ்யாத்
ரத்யோத கஸ்ய யமுநா ஸலிலாத் விசேஷ:—6-

தத்தே –என்னுடைய பாடல் அடைந்தது
முகுந்த மணி பாதுக யோர் நிவேசாத் -நிலை பெற்றதால்
வல்மீக சம்பவகிரா சமதாம் மமோக்தி -அடியேன் வாக்கும் வால்மீகி பேசியதுடன் சாம்யம் –
விஷய வை லக்ஷண்யம் -இருவரும் பேசியதால்
கங்கா ப்ரவாஹ பதி தஸ்ய கியா நிவ ஸ்யாத்-கங்கை வெள்ளத்தில் போய் இணையும் நதிகளுக்குள் என்ன வேறுபாடு
ரத்யோத கஸ்ய யமுநா சலிலாத் விசேஷ -வீதியில் ஜலம் -தூய யமுனா நீரும் கலந்தாலும் -என்ன வேறுபாடு உண்டு –
சேர்ந்த பின்பு அனைத்தும் கங்கா நீர் என்ற பெருமை கொள்ளுமே
பாதுகா பிரபாவம் என்ற கங்கையின் மஹாத்ம்யம் –
அவர் ராம பிரான் பாதுகை
இங்கு அரங்கன் பாதுகை -நம்மாழ்வார் -பெருமை –
பெருமாள் பாதுகை -பெரிய பெருமாள் பாதுகை –

என்னுடைய இந்த ஸ்லோகங்களை (சொற்களை) நான், உயர்ந்த இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட
முகுந்தனான க்ருஷ்ணனின் பாதுகைகள் மீது வைக்கிறேன் . இதனால் நிகழ்வது என்ன?
இந்தச் ஸ்லோகங்கள், வால்மீகியின் இராமாயணத்திற்கு நிகராக மாறிவிடுகின்றன.
மழைபெய்து வீதியில் ஓடும் நீர் மற்றும் யமுனை நதியின் நீர் ஆகிய இரண்டும் கங்கை நதியில் விழும்போது
இரண்டிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை அல்லவா?

இங்கு ஒரு கேள்வி எழக்கூடும் . ஸ்லோகம் ஐந்தில், தன்னைத் தாழ்ந்தவன் என்று கூறுகிறார்.
தாழ்ந்தவனின் சொற்களில் பலன் ஏதும் எற்படுமா என்பதே அந்தக் கேள்வியாகும். இதற்கு விடை தருகிறார் .
தான் தாழ்ந்தவனாக இருந்தாலும் தனது சொற்கள் ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் பற்றி உள்ளதால்,
தாமாகவே பலன் பெற்றுவிடும் என்று கூறுகிறார்.
இங்கு தெருவில் ஓடும் நீர் என்பதை இவரது சொற்களாகவும், யமுனையின் புனிதமான நீர் வால்மீகியின் சொற்களாகவும்,
கங்கை நீர் என்பது இரண்டையும் புனிதமாக்கும் பாதுகைகள் என்றும் கொள்ளலாம்.
மேலும் இதனை பாராயணம் செய்தால் இராமாயணம் போன்று பலன் அளிக்கும் என்றும் கருதலாம்.

மழை நீரும் யமுனா நீரும் கங்கையிலே கலந்து புனிதம் ஆகின்றன –
அடியேன் உக்திகளும் முகுந்தன் ஸ்ரீ பாதுகைகளைப் பற்றியதாகையாலே
ஸ்ரீ ராமாயணம் போலே பெருமை பெற்றதாகும்
ஸ்ரீ ராமாயணம் போலவே இந்த பாதுகா சஹஸ்ரத்தையும் பாராயணம் செய்து
வேண்டும் வரம் பெறலாம் –

கங்கையிலே மழைபெய்து வீதி ஜலமும் விழுகிறது, யமுனா ஜலமும் விழுகிறது.
இரண்டையும் ஒரே மாதிரியாகவே கங்கா ஜலமெண்று கொண்டாடுகின்றார்கள்.
அதே மாதிரி நான் தாழ்ந்தவனாயிருந்தாலும், என் வார்த்தையானது பாதுகா ஸ்தோத்ரமாயிருப்பதால்
வால்மீகி செய்த ஸ்ரீமத் ராமாயணத்தைப் போல பெருமை யடையும்.
அதாவது,எல்லாரும் த்ருஷ்டாதிருஷ்ட
ஸகல புருஷார்த்தத்துக்காக ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாராயணம் பண்ணுகிறார்கள்.
அதுபோல இந்த க்ரந்தமும் பாராயணம் பண்ணினால் சகலமான நல்ல பலன்களையும் கொடுக்கும்.

இந்த உதாரணம் பல இடங்களில் தேசிகன் காட்டி அருளுகிறார் –
ஸூ பாஷித நீதியிலும் -அச்யுத சதகம் போன்றவற்றிலும் உண்டே
ஸ்ரீ பாதுகா தேவியின் கிருபையாலேயே நீசனான அடியேன் ஸ்துதியும் வால்மீகி ஸ்துதி போலே பெருமை பெருமே –

பல பந்ததியில் இத்தை கீழ் ஸ்லோகத்தால் வெளியிட்டு அருளுகிறார் –
துருவன் போல் -தனக்கும் ஏற்பட்டதே –
அப்புள்ளார் கிளியைப் போல் தம்மை ஆக்கி வைத்து அருளினார் என்பர் பல இடங்களில்

ப்ருதுக வதந சங்கஸ்பர்ச நீதா கதாசித்
சிரஸி விநிஹிதாயா ஸ்வேத பூம்நா தவைவ
ஸ்துதிரிய முபஜாதா மன்முகே நேத்ய தீயு
பரிசரண பராச்தே பாதுகேஸ் பாஸ்த தோஷா –1006–

ப்ருதுக=பாலகனுடைய (துருவனுடைய) – வதந=முகத்திலே –
சங்கஸ்ப்ர்ஸ நீத்யா=ஸ்ரீபகவானுடைய பாஞ்சஜன்யம் என்னும் சங்கத்தின் ஸ்பர்ஸத்தினால் ஏற்பட்டதை (ஏற்பட்ட மாறுதலைப்) போன்று –
கதாசித்=ஒரு சமயத்தில் (ஸ்ரீரங்கநாதன் இந்த ப்ரபந்த்த்தை பண்ணும்படி அனுமதி கொடுக்கும் சமயத்தில்) –
சிரஸி=என்னுடைய சிரஸ்ஸில் – விநிஹிதாயா=(அர்ச்சகரால்)நன்றாக சாதிக்கப்பெற்ற – தவ=உன்னுடைய –
ஸ்வேன=ஸ்வாபிகமான – பூம்நா ஏவ=மஹிமையினாலே – மந்முகே=என்முகமாக (அதாவது என்னை ஒரு கருவியாக்க் கொண்டு) –
ஈயம் ஸ்துதி= இப்படி உயர்ந்த்தான ஸ்தோத்திரமானது – உபஜாதா = உண்டானது ––
அபாஸ்த தோஷா:=த்வேஷங்கள் அற்றவர்களான – பரிசரணபரா=உன்னுடைய கைங்கர்யங்களில் ஈடுபாடுள்ள பெரியோர்கள் –
இதி அதீயு:= எண்ணக்கடவர்கள் (அதாவது வேத்த்தினை அத்ய்யனம் செய்வது போல்
சிரத்தையுடன் இதை நித்யமாக பாராயணம் செய்யக்கடவர்கள்.

ஹே! பாதுகே! இந்த ஸஹஸ்ரத்தை நான் பண்ணுவதற்கு முன் நியமனம் கேட்பதற்காக உன் ஸந்நிதியில் நின்றபோது,
துருவனை பாஞ்சஜன்யத்தினால் பகவான் வருடியதை போன்று, அர்ச்சகாள் மூலமாய், என் தலையில் நீ சாதிக்கப்பெற்று
வெகுநேரம் எழுந்தருளி அனுமதியளித்தாய்! உன் மூலமாக உன்னை ஸ்தோத்திரம் பண்ணும்படியான
ஞானத்தினையும் வாக்கினையும் அளித்தாய்!. உன்னுடைய ப்ரபாவத்தினாலேயே உன்னை ஸ்தோத்திரம்
பண்ணும்படியான ஞானம் எனக்கு ஏற்பட்டது!. உன்னுடைய அனுக்ரஹ ரூபமாக தானாக வெளிப்பட்டது!.
பெரியோர்கள் இந்த உண்மையை உள்ளபடி அறிந்து, வேத்த்திற்கு சமமாக பாவித்து சிரத்தா பக்தியுடன்
தங்களுடைய நித்ய பாராயணத்திற்கும் வைத்துக் கொண்டு விடுவார்கள்.
இந்த ப்ரபந்தம் உன்னால் ஏற்பட்டது. எல்லோராலும் கொண்டாடத்தக்கது.

ஸ்ரீ பாதுகையே உன் தொண்டர்கள் ராக த்வேஷாதிகள் அற்றவர் -நான் சொல்லும் இவ்விளக்கத்தை அவர்கள் ஒப்புவர் –
சிறு பையனான துருவன் கன்னத்தில் பெருமாள் திருச் சங்கு ஆழ்வானைக் கொண்டு தொட்டார் என்ற வியாஜ்யம் போருமாயிற்று
அவன் ஸ்தோத்ரம் ஒன்றை ஆக்கி அருள -அது போல் ஸ்ரீ பாதுகை என் தலை மீது வைக்கப் பட்டதே
அந்த உன் சுய மகிமையால் அன்றோ இந்த உன் ஸ்தோத்ரம் உருவாயிற்று –

———————————————————————

விஜ்ஞாபயாமி கிம் அபி ப்ரதிபந்ந பீதி:
ப்ராகேவ ரங்கபதி விப்ரமபாதுகே த்வாம்
வ்யங்க்தும் க்ஷமாஸ் ஸதஸதீ விகத அப்யஸூயா:
ஸந்த: ஸ்ப்ருசந்து ஸதயை: ஹ்ருதயை: ஸ்துதிம் தே—7-

விஜ்ஞாபயாமி -விண்ணப்பிக்கிறேன்
கிமபி -ஓன்று மட்டும்
பிரதிபன்ன பீதி -அடைந்த பயத்தை சொல்லப் போகிறேன்
ப்ராகேவ -முன்னமேயே
ரங்க பதி விப்ரம பாதுகே த்வாம் -அரங்கனின் லீலை களுக்காகவே இருக்கும் உன்னிடம்
வ்யங்க்தும் ஷமாஸ் சதசதீ -நல்லது கேட்டது பிரிந்து அறிய வல்லவர்கள் -பகுத்து அறிவு -விவேக ஞானம் -உள்ளவர்கள் –
விகதாப்யஸூ யா -பொறாமை இல்லாத அஸூயை இல்லாதவர்கள்
சந்த -பெரியோர்கள்
ஸ்ப்ருசந்து சதயை ஹ்ருதயை ஸ்துதிம் தே –மானஸ ஸ்பர்சம் -உன்னைப் பற்றிய இந்த ஸ்து தியை
கேட்டு மகிழ்ந்து அங்கீ கரித்து அருள வேண்டும் –

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைத் துதிக்க நான் இந்த ஸ்லோகங்களை எழுதத் தொடங்கும் முன்னர்
(நான் இதனை எழுதத் தகுதி உள்ளவனா என்னும்) ஒரு விதமான பயம் ஏற்படுகிறது.
இதனை நான் இங்கு ஒரு விண்ணப்பமாகச் செய்கிறேன் . அது என்னவெனில் –
இந்த உலகில் உள்ள நல்லவை, தீயவை ஆகியவற்றை அறியும் திறன் உடைய பெரியோர்கள், மிகுந்த தயை செய்து,
நான் இயற்றிய இந்த ஸ்லோகங்களை, பொறாமை நீங்கிய கருணை கொண்ட மனதுடன் கேட்க வேண்டும்.

இங்கு பொறாமை அற்ற பெரியவர்கள் என்றார். ஏன்? பொறாமை அற்றவர்கள், குறைகளை நம்மிடம் மட்டுமே கூறுவார்கள்.
ஆனால் பொறாமை உள்ளவர்கள் அந்தக் குறைகளை ஊர் முழுவதும் கூறி, நம்மை அவமானப்படுத்த எண்ணுவார்கள்.
எனவே தனது ஸ்லோகத்தில் குறை இருப்பின் தன் மீது பொறாமை அற்ற பெரியோர்கள்
தன்னிடம் மட்டுமே தெரிவித்தல் நலம் என்பதால் இவ்விதம் கூறினார்.

மேலும், இந்த ஸ்லோகத்தில் குறை உள்ளது என்று பொறாமை காரணமாகக் கூறிவிட்டால்,
பாதுகையைப் பற்றிய ஸ்லோகத்தை அபசாரம் செய்தது போன்றதாகி விடும்.
அதனால் அவர்களுக்கு ஏற்படும் அபசாரத்திற்குத் தான் காரணமாகி விடக்கூடாது என்று அஞ்சுகிறார்.

ஸ்ரீ பாதுகையே -உன்னை ஸ்துதிக்க புகும் முன்பே எனக்கு பயம் உண்டாகிறதே
நல்லது தீயது பிரித்து அறியும் சக்தி படைத்த பொறாமை அற்ற பெரியோர் என்னிடத்தில் தயை பண்ணி
இத்தை கேட்டருள வேண்டும் –

ஏ பாதுகையே! முன்னதாகவே விஜ்ஞாபனம் பண்ணுகிறேன். பயமாயிருக்கிறது.
இது நல்லது இது பொல்லாதது என்று கண்டு பிடிக்கும் படியான ஸாமர்த்திய முள்ளவர்களும்
பொறாமை யில்லாதவர்களுமான பெரியோர்கள் என்னிடத்தில் தயை பண்ணி
நான் செய்கிற உன்னுடைய ஸ்தோத்ரத்தை கேட்க வேண்டும்.

நம்மாழ்வார் பரமாகவும்
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் -ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையாய் சடகோபன் என் நம்பியே -போல் இங்கும் –

———————————————————-

அஸ்ரத்ததான நமபி நந்வதுநா ஸ்வகீயே
ஸ்தோத்ரே நியோஜயஸி மாம் மணி பாதுகே த்வம்
தேவ: ப்ரமாணம் இஹ ரங்கபதி: ததாத்வே
தஸ்ய ஏவ தேவி பத பங்கஜயோ: யதா த்வம்–8-

நியோ ஜயசி மாம்-நீயே என்னைத் தெரிந்து எடுத்து ஈடுபடுத்துகிறாய்
ததாத்வே -இப்படியாலே
தேவ ரெங்க பதி -லீலையாக அரங்கத்தில் -இதுவும் ஒரு லீலை
தேவி பத பங்கஜ யோர் யதா த்வம்-அவனுக்குத் தக்க தேவி உம் பெருமைகளை -அவனே அறிவிக்க வேணும் –

எனக்கு அஸ்ரத்தையே-நீயே நியமித்து ஸ்துதிக்க வைக்கிறாய் –
உன்னைத் தன் திருவடிகளில் சாற்றிக் கொண்டு இருக்கும் ஸ்ரீ ரங்க நாதன் தான்
இந்த உண்மையினையும் உன் தன்மைகளையும் உணரத் தகுந்தவர் –
அவர் தான் எனக்கு அதைப் பற்றிச் சொல்ல வேண்டும் –

உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நான் எந்தவிதமான ஸ்ரத்தையும் இல்லாதவன் ஆவேன் .
ஆயினும் உன்னைக் குறித்து ஸ்லோகங்கள் இயற்றும்படி நீ என்னைப் பணிக்கிறாய்.
ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளுக்கு நீ எவ்விதம் உள்ளாய் என்று நான் அறியவில்லை.
அதனை ஸ்ரீரங்கநாதனே எனக்குக் கூறுவானாக!

ஒரு பொருளின் தன்மை என்ன, உயர்வு என்ன என்பதை அந்தப் பொருளின் உரிமையாளர் கூறினால் அல்லவா மற்றவர்களுக்குப் புரியும்?
இது போன்று, இங்கு பாதுகையின் தன்மை என்ன என்பதை, அதனை அன்றாடம் தனது திருவடிகளில்
அணிந்துள்ள ஸ்ரீரங்கநாதனே கூறவேண்டும் என்று வேண்டுகிறார்.

ஏ பாதுகையே உன்னை ஸ்தோத்ரம் பண்ண வேண்டுமென்று எனக்கு ஆவலில்லை.
நீ வலுவிலே பண்ணச் சொல்லுகிறாய்.
நீ பெருமாள் திருவடிக்கு எவ்விதமாயிருக்கிறாயோ அதை அந்த ரங்கநாதன் எனக்குச் சொல்ல வேண்டும்.
பாதுகையினுடைய குணம், போட்டுக் கொண்டவர்கள் சொன்னால் தானே பிறருக்குத் தெரியும்.
பிராட்டி பெருமாள் ஸ்ரீபாஷ்யகாரர் முதலானவர்களை ஸ்தோத்ரம் பண்ணினேன்.
அந்த மாதிரி ஆழ்வார் ஸ்தோத்ரம் என்று ஒன்றும் நான் பண்ணவில்லை.
எனக்கும் இன்னும் எல்லோருக்கும் க்ஷேமத்திற்காக ஆழ்வார் பெருமாள் விஷயத்தில் இருக்கிற இருப்பை
எனக்கு எவ்விதமாகச் சொல்லத் தெரியும். ஸ்ரீரங்கநாதன் தான் தோன்றப் பண்ண வேண்டும்.

நம்மாழ்வார் பரமாயும்
நித்ய ஸூரிகள் -கருட -ஸூ தரிசன -தாயார் -பெருமாளைப் பற்றி நிறைய -பல எழுதினாலும் –
உம்மை ஸ்துதிக்க தகுதி இல்லாமல் ஒதுங்கினேன்
ஆனால் -நீரே என்னை ஏவிப் பணி கொள்கிறீர்
அரங்கன் உணர்த்தி கவி பாடுவிக்க வேண்டும்
வள வேழ் உலகின் வானோர் இறை –அறு வினையேன் -கள்வா என்பன் –அபசாரமாகுமே விலகிப் போக –
வாஸூ தேவ சர்வம் ஸூ துர்லப
தளர்வுற்று நீங்க நினை மாறனை -மால் நீள் இலங்கு சீலத்தால் பாங்குடனே சேர்த்தான் பரிந்து –
சேர்த்துக் கொண்டு பாடுவித்து அருளினால் போல் – செய்து அருள வேண்டும் என்றபடி –

——————————————————

யதாதாரம் விஸ்வம் கதிரபி ச யஸ்தஸ்ய பரமா
தமப்யேகா தத்ஸே திசஸி ச கதிம் தஸ்ய ருசிராம்
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹர துர்போத மஹிமா
கவீநாம் க்ஷுத்ராணாம் த்வம் அஸி மணி பாது ஸ்துதிபதம்—9-

யத் ஆதாரம் விச்வம் -யாரை உலகம் ஆதாரமாகக் கொண்டதோ -நாரங்களுக்கு ஆதாரம் தானே நாராயணன்
கதிரபி ச யஸ் தஸ்ய பரமா -உலகுக்கு பரம கதி -சரணாக -உயர்ந்த புகலிடமாக -அவனே உள்ளான்
தம் அபி ஏகா தத்சே -அவனையும் கூட தாங்கி
திசசி ச கதிம் தஸ்ய ருசிராம் -அழகான இடமாகவும் நீயே இருக்கிறாயே –
கதம் சா -எப்படி
கம்சாரேர் -கம்சனை வதைத்த ஸ்ரீ கிருஷ்ணனாக
த்ருஹிணஹ ரதுர் போத -பிரம்மா சிவாதிகளும் அறிய முடியாத
மஹிமா -பெருமைகளைக் கொண்ட உம்மை
கவீ நாம் ஷூத் ராணாம் -என்னைப் போன்ற தாழ்ந்த கவிகளின்
த்வமஸி மணி பாது ஸ்துதிபதம்-ஸ்துதிக்கு விஷயம் ஆக முடியும்

சமஸ்த ஜீவ ராசிகளையும் அவன் தாங்க -அவனை நீ தாங்கி எழுந்து அருளப் பண்ணுகிறாயே
உனது சக்தியை பிரமனோ சிவனோ கூட கரை காண முடியாதே
ஆழ்வார் -பரமாச்சார்யார் கிருபையாலே -ஆத்மா மே மதம் -என்பானே –
நம் போல்வார் இடம் சடாரி மூலம் எம்பெருமான் வந்து சேர்ந்து அருளுகிறான் –
அப்படி இருக்க என்னைப் போன்ற அல்ப கவிகள் உன்னை எவ்வாறு ஸ்துதிப்பது-

பாதுகையே எல்லா லோகத்தையும் பெருமாள் தூக்குகிறார். அவரை நீயொருவளாயே தூக்குகின்றாய்.
எல்லா ஜீவர்களும் பெருமாளைத் தான் போய் சேர வேண்டும்.
அந்தப் பெருமாள் ஓரு இடத்துக்குப் போக வேண்டுமானால் உன்னைச் சாற்றிக் கொண்டு தான் போக வேண்டியிருக்கிறது.
ப்ரமன், சிவன் முதலானவர்களாலுங்கூட உன்னுடைய பெருமையை யறிய முடியாது.
அப்படியிருக்க, என்னைப் போன்ற அற்பக் கவிகள் உன்னை எவ்விதமாய் ஸ்தோத்ரம் பண்ண முடியும்.

கம்ஸனின் சத்ருவாகிய க்ருஷ்ணனின் அழகான திருவடிகளில் உயர்ந்த கற்களுடன் உள்ள பாதுகையே!
இந்த உலகம் முழுவதையும் தாங்குபவனாக நம்பெருமாள் உள்ளான். அனைத்தும் வந்து சேரும் இடமாகவும் அவனே உள்ளான்.
அப்படிப்பட்ட நம்பெருமாளையே நீ ஒருவளாகத் தாங்குகிறாயே! மேலும் அவனுக்கு ஏற்ற அழகான நடையையும் நீயே அளிக்கிறாய்.
உனது பெருமைகளை ப்ரம்மன்,சிவன் போன்றவர்களால் கூட அறிய இயலாது.
அப்படி உள்ளபோது, அற்ப கவியான என் போன்றவர்கள் துதிக்கும் விஷயமாக நீ எப்படி உள்ளாய்?

இங்கு தாங்கி நிற்பது என்பதன் மூலம் உயர்த்தியைக் கூறுகிறார். தன்னை அண்டியவர்களை, நிலையாக
அதே இடத்தில் உயர்த்தி நிறுத்தும் வல்லமை கொண்டது பாதுகையாகும் என்று கருத்து.

ஆழ்வார் பரத்தில்
தூங்குகிற வஸ்து ஆத்மா. தூக்கப்படுகிறது சரீரம். ஸகல லோகத்துக்கும் பெருமாள் ஆத்மா.
அந்தப் பெருமாள் ஞானியான ஆழ்வார் ஆத்மா. ஆழ்வார் அநுக்ரஹத்தினால் தான் ஒருவனிடத்தில் பெருமாள் வருகிறார்.
ப்ரம்மா, சிவன் முதலானவர்கள் ஐச்வர்யத்தை ஆசைப்படுகிறார்கள்.
ஆழ்வாருக்குப் பெருமாளைத் தவிர வேறொரு பதார்த்தமும் வேண்டாம்.
அந்த ஆழ்வாரை மூடனான நான் எப்படி ஸ்தோத்ரம் செய்வேன். பெருமாள் சொல்லிக் கொடுத்தால் கூட என்னால் முடியாது..

புவியும் இரு விசும்பும் நின் அகத்தே –என் செவியின் வழி புகுந்து -அவி இன்றி நான் பெரியன்
பெருமாள் நம்மாழ்வார் இடம் பாட்டு வாங்கிப் போனார்கள் -இவரே பரம கதி –
உங்கள் மஹிமையை அடியேன் எவ்வாறு ஸ்துதிப்பேன்
கவி -ரிஷிகளிலும் உயர்ந்தவர் -உண்ணும் சோறு -பரம அணு பர்வத வாசி அன்றோ –
அதுவும் அவனது இன்னருளே -மதி நலம் அருளப்பெற்றவர் –

—————————————————————————-

ஸ்ருத ப்ரஜ்ஞா ஸம்பந் மஹித மஹிமாந: கதிகதி
ஸ்துவந்தி த்வாம் ஸந்த: ச்ருதி குஹர கண்டூ ஹர கிர:
அஹம் து அல்ப: தத்வத் யதிஹ பஹு ஜல்பாமி ததபி
த்வதா யத்தம் ரங்க க்ஷிதி ரமண பாதாவநி! விது:—10-

ஸ்ருத ப்ரஜ்ஞா-மிக்க வேதியர்

ஸ்ருத -ஸாஸ்த்ர ஞானம்
ப்ரஜ்ஞா -பெருமாள் அருளாலே ஸூயம் புத்தி
சம்பன் மகித மகிமான -இரண்டையும் செல்வமாகக் கொண்ட
கதி கதி -பல பெரியோர்கள்
ஸ்து வந்தி த்வாம் -உன்னை ஸ்துதிக்கிறார்கள்
சந்த -பெரியோர்கள்
சுருதி குஹர -காது துவாரம்
கண்டூ -அரிப்பு
ஹர கிர -போக்க வல்ல -செவிக்கு இனிய செஞ்சொல்லால்
அஹம் த்வல்பஸ் -சிற்று அறிவு அல்ப ஞானம் கொண்ட
தத்வத் யதிஹ பஹூ ஜல்பாமி ததபி -பிதற்றுகிறேன் -அது கூட
த்வதா யத்தம் ரங்க ஷிதி ரமண பாதா வநி விது -ஸ்ரீ ரெங்க ஷேத்ரத்தில் விளையாடும் பாதுகையைக் காக்கும்
உனது அருளாலே தான் இந்த பிதற்றலும் –
இளைய புன் கவிதை யேலும் எம்பிராற்கு இனியவாறே –

சாஸ்திர ஞானமும் கூரிய அறிவும் செவிக்கு இனிதான வாழ் சக்தியும் உள்ள பெரியோர்கள் உன்னை ஸ்துதிக்க
ஒன்றும் அறியாது அடியேன் பிதற்றுவதும்-(ஜல்பாமி-) உனது அதீனமாக இருப்பதால் பெரியோர் இதை நிச்சயம் ஏற்பர் –

ஏ பாதுகையே! சாஸ்திரங்களை யறிந்து இயற்கையாகவே புத்திசாலிகளாயும் கேட்கிறவர்களுக்கு ,
இகவும் இன்பமாகப் பேசக் கூடியவர்களாயுமிருக்கிற எவ்வளவோ பெரியோர்கள் உன்னை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்.
ஒன்றும் தெரியாத நான் அவர்களைப் போலவே தாறுமாறாகவே பிதற்றுகிறேன்.
அப்படி பிதற்றுகிறதும் உன் அதீனம் தானென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் பாதுகாத்து வரும் பாதுகையே!
சாஸ்திர ஞானம் மூலமும், தங்களுக்கே உரிய ஞானம் மூலமும் பல பெரியவர்கள் உன்னை எவ்வளவோ ஸ்துதி செய்துள்ளனர்.
அவர்கள் ஸ்துதியானது காதுகளின் துளைகளுக்கு இன்பம் அளிக்கவல்லதாக உள்ளன.
ஆனால் இது போன்ற ஞானம் ஏதும் இல்லாத நான், உன்னைக் குறித்துப் பிதற்றுகின்றேன்.
இதனையும் உனது செயல் என்றே பெரியவர்கள் கூறுகின்றனர்.

பெரியவர்கள் இவ்வாறு புகழ்ந்து கவிதைகள் இயற்றுவது பகவானின் செயல் என்று அவர்கள் கொள்கிறார்கள்.
ஆனால் அவை அனைத்தும் உனது (பாதுகை) செயல் என்று அவர்கள் அறியவில்லை.
ஆயினும் நான் அறிவேன். எனது சொற்கள் முழுவதும் உனது செயலே ஆகும்.
எனது தலையில் நீ நின்று இவ்வாறு செய்கிறாய் அல்லவா?
ஆயினும் அவர்களைக் காட்டிலும் எனக்கு நீ அதிகமாகவே அருளினாய் என்றே கூற வேண்டும்.
இல்லையெனில் நன்கு கற்ற அவர்கள் ஸ்துதிக்கு முன்பாக எனது ஸ்துதிகள் எவ்வாறு நிற்க இயல்கிறது?

ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -நித்யர்களும் மதுரகவி ப்ரப்ருதிகளும்
அடியேனும் பிதற்றவதும் உம் அனுக்ரஹத்தாலேயே
அதுவும் அவனது இன்னருள் ஆழ்வார் அவன் அருளே ஹேது என்றால் போல்
அடியேனும் உமது இன்னருளாலே பிதற்றுகிறேன் –

——————————————————————–

யத் ஏஷ: ஸ்தௌமி த்வாம் த்ரியுக சரண த்ராயிணி தத:
மஹிம்ந: கா ஹாநிஸ் தவ மம து ஸம்பந் நிரவதி:
ஸூநா லீடா காமம் பவது ஸுர ஸிந்துர் பகவதீ
தத் ஏஷ: கிம் பூதா ஸது ஸபதி ஸந்தாப ரஹித:–11–

த்ரியுக சரண த்ராயினி -மூன்று ஜோடி -ஆறு குணங்கள் -ஞானாதி -திருவடிகளைக் காப்பவளே
யதேஷ ஸ்தௌமி த்வாம் – இப்படி உள்ள உன்னை ஸ்துதித்தால்
ததோ -அதனாலே
மஹிம்ந கா ஹாநிஸ் -உன்னுடைய மஹிமைக்கு என்ன குறை உண்டாகும்
தவ மம து சம்பந் நிரவதி -எனக்கு சம்பத்து கிட்டுமே
காமம் பவது ஸூநா லீடா –வேண்டியபடி நாயால் நக்கப்பட்ட
ஸூர சிந்துர் பகவதீ -கங்கா நீருக்கு
ததேஷா கிம் பூதா -என்ன குறை உண்டாகும்
ஸது ஸபதி சந்தாப ரஹித-ஆனால் அந்த நாயுக்கு உடல் தாபமும் தீர்ந்து ஆத்மாவும் உஜ்ஜீவிக்குமே –

திருமங்கை ஆழ்வார் -நாயேன் வந்து அடைந்தேன் –அடி நாயேன் நினைந்திட்டேனே –

ஞானம், பலம், சக்தி, தேஜஸ், ஐச்வர்யம், வீர்யம் என்ற ஆறு குணங்களுடன் கூடிய நம்பெருமாளின்
திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! அற்பனான நான் உன்னைத் துதித்து ஸ்தோத்திரம் இயற்றினால்
உனது மேன்மைக்கு குறைவு ஏதும் உண்டாகப் போவதில்லை.
ஆனால் அதன் மூலம் எனக்கு எல்லையற்ற நன்மைகள் உண்டாகின்றன.
நாய் ஒன்று கங்கை நீரைக் குடித்தால் கங்கைக்கு குறைவு ஏதும் ஏற்படாது; மாறாக நாய்க்கு நன்மை ஏற்படுகிறது அல்லவா?

உயர்ந்தவர்களைத் தாழ்ந்தவர்கள் புகழ்ந்தால் உயர்ந்தவர்களுக்கு என்ன குறை உண்டாகப் போகிறது?
ஆனால் இவ்விதம் தாழ்ந்தவர்கள் அவர்களைப் புகழும்போது, இந்த உலகமானது உயர்ந்தவர்களைக் கண்டு,
“தாழ்ந்தவர்களுடன் இவன் தொடர்பு வைத்துள்ளானே? இவனும் அப்ப்டியெனில் அவர்கள் போன்றுதானோ?”,
என்று எண்ண வாய்ப்புண்டு அல்லவோ? இதற்கு விடை அளிக்கிறார் –
பாதுகை விஷயத்தில் இது பொருந்தாது, காரணம் பாதுகைகள் எந்தவிதமான தாழ்வும் அற்றவனும்,
ஆறு உயர்ந்த குணங்களின் இருப்பிடமாக உள்ளவனும் ஆகிய நம்பெருமாளின் திருவடித் தொடர்பு பெற்றவை என்பதால் ஆகும்.
ஆகவே, தாழ்வாக உள்ள, தான் புகழ்ந்ததால் இந்த உலகம் பாதுகையைப் பற்றித் தவறாகக் கூறாது என்கிறார்.
இங்கு கங்கையின் உதாரணம் பொருத்தமே – காரணம், த்ரிவிக்ரமனாக வாமனன் உயர்ந்தபோது,
அவனது திருவடிகளின் தொடர்பு, பாதுகைகளைப் போன்று கங்கைக்கும் கிட்டியது அல்லவா?

கங்கை நீரை நாய் பருகுவதால் கங்கைக்கு எந்தக் குறையும் வாராது -நாயோ தாஹம் தீரப் பெறுகிறது –
அதே போலே
நீசன் ஸ்துதிப்பதால் உனது மகிமைக்கு எந்த குறைவும் வாராது -எனக்கு சத்தை வருமே

ஏ பாதுகையே நாய் கங்கையில் தண்ணீர் குடித்தால் அதற்கு இக பர ஸெளக்யமுண்டாகிறது.
கங்கைக்கு கொஞ்சமேனும் குறைவில்லை.
அது போல நான் உன்னை ஸ்தோத்ரம் பண்ணினால்
உனக்கு ஒன்றும் குறைவில்லை. எனக்கு ஸகல ஸெளக்யங்களும் வருகிறது.

நம்மாழ்வார் -திருவடியைக் காப்பவர் –
த்ரியுக–மூன்று மூன்று மூன்று-27 குணங்கள் -காட்டிக் கொடுக்கப் பெற்றவர் –
1-திருவரங்கம் ஸுஹார்த்தம்
2-திருமலை -வாத்சல்யம்
3-திரு ஆழ்வார் திரு நகரி -பரத்வம்
4-திருக்குறுங்குடி தென் திருப் பேரை -சவுந்தர்யம் அழகு லாவண்யம் சமுதாய -அவயவ சோபைகள்
5-திரு வான மா மலை -ஒவ்தார்யம்
6-திருக் குடந்தை -மாதுர்யம்
7-திரு வல்ல வாழ் -காருண்யம்
8-திரு வண் வண்டூர் -ஸ்தைர்யம்
9-திரு விண்ணகர் -அகடி கடநா சாமர்த்தியம்
10-திருத் தொலை வில்லி மங்கலம்-பாந்தவ்யம்
11-திருக் கோளூர் -ஆபத் சகத்வம்
12-திரு வாறன் விளை -ஆனந்த விருத்தி -bliss
13-திருக் குளந்தை -அத்யாச்சர்யத்வம்
14-திரு வண் பரிசாரம் -ஸுகுமார்யம்
15-திருச் செங்குன்றூர் திருச்சிற்றாறு -ஸுர்யம்
16-திருக் கடித்தானம் -க்ருதஜ்ஜதா
17-திருக் குட்ட நாட்டுத் திருப்புலியூர் -நாயக லக்ஷணம்
18-திருப் புளிங்குடி -திரு வர குண மங்கை திரு வைகுண்டம் -போக பாக த்வரை
19-திருக் காட்கரை -சீலம்
20-திரு மூழிக் களம் -மார்த்வம்
21-திரு நாவாய் -ஆந்ரு சம்சயம்
22-திருக் கண்ண புரம் -சரண்ய முகுந்தத்வம்
23-திரு மோகூர் -மார்க்க பந்துத்வம்
24-திரு வனந்த புரம் -சாம்யம்
25-திரு வட்டாறு -ஆஸ்ரித பாரதந்தர்யம்
26-திரு மாலிருஞ்சோலை -த்யாஜ்ய தேக வ்யாமோஹம்
27-திருப் பேர் -ஸ்வாமித்வம்

நீசனான அடியேன் -உம்மை ஸ்துதித்தால் -உங்கள் மகிமைக்கு இழுக்கு வாராது
அடியேன் ஸ்வரூபம் பெறுவேன்

——————————————————————

மித ப்ரேக்ஷா லாபக்ஷண பரிணமத் பஞ்சஷபதா
மத் உக்திஸ் த்வயி ஏஷா மஹித கவி ஸம்ரம்ப விஷயே
ந கஸ்ய இயம் ஹாஸ்யா ஹரி சரணதாத்ரி க்ஷிதிதலே
முஹுர் வாத்யா தூதே முக பவந விஷ்பூர் ஜிதமிவ—12-

மித ப்ரேஷா -மிக்க குறைந்த அறிவில்
லாப ஷண பரிணமத் பஞ்சஷபதா -அப்பப்ப தோன்றும் -ஐந்து ஆறு வார்த்தைகள் கொண்டு ஸ்தோத்ரம் பண்ண
மதுக்திஸ் த்வய்யேஷா -இப்படிப்பட்ட என்னுடைய கவிதைகள் இவ்வளவு தான் -வித்யா -விநயம் கொண்டு பேசுகிறார்
மகித கவி சம்ரம்ப விஷயே -உன்னைப் பற்றி கொண்டாடப்படும் கவிகள் ஆர்வத்துடன் -இலக்காக உள்ளாய்
ந கச்யேயம் ஹாஸ்யா -யாருக்கும் இது சிரிப்புக்கு உரிய விஷயம் அல்லவா
ஹரி சரண தாத்ரி
ஷிதிதலே -இந்த பூமியிலே
முஹூர் வாத்யா தூதே -அடிக்கடி பெரும் புயல் காற்றினால் கொஞ்சமே அசைக்கப் பட்ட மரம்
முக பவன விஷ் பூர்ஜித மிவ-வாய்க் காற்றால் ஊதி சாய்க்கப் பார்ப்பது போல் –

பெரும் காற்றுக்கும் சலியாத நீண்ட பருத்த மரத்தை தன் வாயால் ஊதிட ஒருவன் முயலுவது போலே
பெரும் கவிகளின் வாக்குக்கு விஷயமான அளவிட முடியாத உன் மகிமையை
ஒரு சில வரிகளில் கூறி விட முற்படும் என்னை மற்றவர் எள்ளி நகையாடுவர் –

ஒரு மரம் மிகவும் பெரியாதாயிருக்கிறது. அது எவ்வளவு பெருங் காற்றடித்தாலும் கொஞ்சம் தான் சலிக்கிறது.
அதை ஒருவன் வாயால் ஊதினான் ஆனால், அதைப் பார்த்த யாவரும் சிரிப்பார்கள்.
அது மாதிரி எவ்வளவோ பெரிய கவிகளால் ஸ்தோத்ரம் பண்ணக் கூடிய உன்னைப் பற்றி எனக்கு ஒரு சமயத்தில்
சில ஸங்கதிகள் தோன்றுகின்றன். அதைக் கொண்டு உன்னை ஸ்தோத்ரம் பண்ணினேனே யானால்,
அதைக் கண்ட எல்லோரும் சிரிப்பார்கள்.

ஸ்ரீ ஹரியான க்ருஷ்ணனின் பாதுகையே! அவனுடைய திருவடிகளைப் பாதுகாப்பவளே!
உன்னுடைய தன்மைகளைப் பற்றி, பல உயர்ந்த கவிகள், உயர்த்தியாக ஸ்தோத்ரம் செய்யப்படுபவளாக நீ உள்ளாய்.
இப்படி இருக்கையில் என்னைப் போன்றவர்களின் ஸ்தோத்ரங்கள் அற்பமானவையே –
காரணம் எனக்கு ஒரு நேரத்தில் ஐந்து அல்லது ஆறு பதங்கள் மட்டுமே தோன்றுகின்றன.
இப்படி இருந்தாலும் நான் துதி செய்ய முயற்சிப்பது எப்படி உள்ளது என்றால் –
பெரிய மரம் ஒன்றை வாய் மூலம் ஊதி அசைய வைப்பவனின் முயற்சி போன்றதாகும்.
வாய் மூலம் ஊதி மரத்தை அசைய வைப்பவனின் முயற்சி கண்டு உலகம் பரிகாசம் செய்வது போன்று,
எனது கவிதையையும் கண்டு உலகம் பரிகாசம் செய்யாதோ?

ஒரு பெரிய மரமானது பலத்த காற்று வந்தால் கூட சிறிதே அசையும் தன்மை உடையது.
அதனை ஒருவன் தனது வாயால் ஊதி அசைக்க முயன்றால் உலகம் அவனைக் கண்டு சிரிக்கும் அல்லவோ?
இந்த முயற்சி போன்றே தன்னுடையதும் உள்ளது என்றார். இங்கு மேலும் ஒரு கருத்து உள்ளது.
மரம் என்பதை ஸ்ரீரங்கநாதன் என்றும், காற்று என்பதை வேதங்கள் என்றும் கொள்ளலாம் .
உயர்ந்த வேதங்கள் கூட அவனை நெருங்கி உணர இயலாமல் உள்ளபோது, அற்பமான தன்னால் இயலுமோ என்றார்.

நம்மாழ்வார் –
மந்த புத்தியால் ஐந்து ஆறு வார்த்தைகள்
கொண்டாடப் பட்ட -மதித கவிகள் -மதுர கவி ப்ரக்ருதிகள் -சடகோபர் அந்தாதி
வள்ளுவரும் -அரங்கேற்றம் செய்ய – இடைக்காதர்
குறு முனிவன் நல் தமிழும் என் குறளும் நங்கை திரு முனி யவன் வாய் மொழியின் சேய் –
அகஸ்தியர் தமிழும் எனது குறளும்
சங்கப் புலவர்கள் -ஈ ஆடுவதோ இத்யாதி –சேமம் குருகையோ இத்யாதி –

————————————————————————————

நிஸ் ஸந்தேஹ நிஜ அபகர்ஷ விஷய உத்கர்ஷ: அபி ஹர்ஷ உதய
ப்ரத்யூட க்ரம பக்தி வைபவ பவத் வையாத்ய வாசாலித:
ரங்காதீச பதத்ர வர்ணந: க்ருத ஆரம்பை: நிகும்பை: கிராம்
நர்மாஸ் வாதிஷு வேங்கடேஸ்வர கவி: நாஸீரம் ஆஸீததி—-13-

நிஸ் சந்தேக -சந்தேகமே வேண்டாம்
நிஜாபகர்ஷ விஷயோத்கர்ஷோ அபி -அடியேனின் தாழ்விலும் உம்முடைய உயர்விலும்
ஹர்ஷோதய -மகிழ்ந்து -உகப்பு தூண்ட
ப்ரத்யூட க்ரம -எல்லை கடந்த
பக்தி வைபவ பவத் -பக்தியின் பெருமையாலுண்டான
வையாத்ய வாசாலித-இஷ்டப்படி பேசும் படி ஆனேனே
பித்தர் பேசவும் பேதையர் பேசவும் பத்தர் பேசவும் பன்னப் பெறுவதோ -கம்பர்
ரங்காதீச பதத்ர -பாதுகையை
வர்ணந க்ருதாரம்பைர் -வர்ணிப்பதில் ஈடுபட்ட
நிகும்பைர் கிராம் -கோர்வையாக பேசி
நர்மாஸ் வாதிஷூ -தாறு மாறாகப் பேசி பிதற்றும் மக்களுக்குள்
வேங்கடேஸ்வர கவிர் நாசீரமா சீததி-முதல்வன் ஆனேனே –
பக்தி உந்த வந்த எண்ணங்களின் வெளிப்பாடே கவி

ஸ்ரீ பாதுகைகள் மிக உயர்ந்தவை -அடியேன் மிகத் தாழ்ந்தவன் என்பதை சங்கை அற அறிவேன் –
ஆனால் ஸ்ரீ பாதுகைகளின் மேல் உண்டான பக்தியினால் தைர்யம் அடைந்து ஸ்துதிக்க துணிந்தேன் –
அப்படி விளையாட்டாக செய்ய முற்பட்டவர்களில் இந்த வேங்கடேஸ்வர கவி முன்னிலையில் நிற்கின்றான் –

எனது தாழ்மை என்பதையும், நான் ஸ்தோத்ரம் செய்ய முற்படும் பாதுகைகளின் உயர்த்தி என்பதையும் பற்றிச்
சந்தேகம் இன்றி நான் உணர்வேன். ஆயினும் எனது எல்லையற்ற மகிழ்வும், பாதுகைகள் மீது கொண்டுள்ள
எல்லையற்ற பக்தியும் காரணமாக எனக்கு மிகவும் துணிச்சல் வந்தது என்றே கூற வேண்டும்.
இதன் காரணமாகவே நான் ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் விஷயமாகத் தாறுமாறான சொற்களைக் கொண்டு இவற்றைக் கூறுகிறேன்.
இதன் மூலம் தாறுமாறாகக் கவிதை இயற்றக்கூடியவர்களில், வேங்கடேசன் என்கிற நான், முதல் இடத்தைப் பிடிக்கிறேன்.

ஏ பாதுகையே! நான் மிகவும் தாழ்ந்தவன் என்றும்,பாதுகைகள் அதிக உயர்ந்தவைகள் என்றும் தீர்மானமாய் தெரிந்திருக்கிறது.
ஆனாலும் பாதுகைகளிடத்தில் மிகவும் அதிகமான பக்தி யுண்டாக
அதனால் தலை தெரியாத ஸந்தோஷமுண்டாகி
ஒரு தைரியமுண்டாகி யிருக்கிறது.
அதனால் தாறு மாறாய் பிதற்றிக் கொண்டு
விளையாடுகிறவர்களுக்குள்ளே முதலாக இருக்கிறேன்.

நம்மாழ்வார் -பரமாகவும் -இவ்வாறே -ஆர்வத்துடன் ஸ்துதி –

——————————————————————–

ரங்கக்ஷ்மாபதி ரத்ந பாது பவதீம் துஷ்டூஷத: மே ஜவாத்
ஜ்ரும்பந்தாம் பவதீய சிஞ்ஜித ஸுதா ஸந்தோஹ ஸந்தேஹதா:
ஸ்லாகா கூர்ணித சந்த்ர சேகர ஜடா ஜங்கால கங்கா பய:
த்ராஸா தேச விஸ்ருங்கல ப்ரஸரண உத்ஸிக்தா: ஸ்வயம் ஸூக்தய—-14-

ரங்க ஷ்மா பதி ரத்ன பாது பவதீம் -மணி பாதுகா தேவியே
துஷ்டூஷதோ மே ஜவாத் -ஸ்துதிக்க விரும்பும் அடியேனுக்கு அருள் புரிவாய்
ஜ்ரும்பந்தாம் -வார்த்தைகள் வளரும் படி
பவதீய சிஞ்ஜித ஸூதா -சிலம்பு ஒலி -மணி த்வனி அமுதம் போல்
சந்தோஹ சந்தேஹதா -கவியின் வார்த்தைகளா -ஒலியின் அமுதமா என்று சங்கை பிறக்கும் படி
ஸ்லாகா கூர்ணித சந்திர சேகர ஜடா-சிவன் தலை அசைத்து கொண்டாடும் படி-சந்திரனை இறக்கி இத்தை வைத்துக் கொண்டு
ஜங்கால கங்கா பய த்ராசா தேச -கங்கைக்கும் பயம் வரும் படியான கவிதை வெள்ளம் பிரவாகம்
விஸ்ருங்கல -இடை விடாமல்
ப்ரசரணோத் -எங்கும் பரவியதாக
சிக்தா ஸ்வயம் ஸூக்தய-கம்பீரமாக தானாகவே வளர்ந்து- வரும் படி அருள வேண்டும் –

ரத்ன கசிதமான ஸ்ரீ ரங்க நாத பாதுகையே -உன்னைத் ஸ்துதிக்க முற்படும் எனக்கு அமுதம் போன்ற சப்தமோ
என வியக்கும் படியானதும் பரம சிவன் உடைய சிரஸ்ஸில் இருந்து தடையின்றி ப்ரவஹிக்கும் கங்கையினுடைய
வேகம் கொண்டதுமான வாக் சக்தி தானாகவே விருத்தியாக வேண்டும் –

ஏ பாதுகையே உன்னை ஸ்தோத்ரம் பண்ண வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்।
உன்னுடைய அமுதம் போல் இனிமையான சப்தமோ வென்று ஸந்தேஹத்தைக் கொடுப்பதாயும்,
பெருமாளிடத்தில் மிகவும் பக்தரான ஸர்வஜ்ஞனான சிவன் கொண்டாடும் படியுமிருக்கிற
உன்னைப் பற்றின வார்த்தைகள் எனக்கு அதிகமாய் மேன்மேலுமுண்டாக வேண்டும்

உயர்ந்த கற்களால் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
உன்னைத் துதித்து கவி பாட வேண்டும என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது.
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் மிக உயர்ந்த பக்தனான சிவபெருமான் தனது தலையை அசைக்கும் போது
அவனது சடை முடியில் மிகவும் வேகமாக ஓடிவரும் கங்கை நதியின் ஓசையானது,
உன்னுடைய அமிர்தம் போன்ற இனிய நாதத்தைப் போன்று உள்ளது.
அந்த கங்கை நதியானது, தான் ஓடிவரும் பாதையில் தனக்கு ஏதேனும் தடை வருமோ என்று அச்சம் கொள்ளாமல்
கர்வத்துடன் ஓடிவருகிறது. அப்படி ஓடி வரும் கங்கை நீரின் வேகம் போன்று உன்னைப் பற்றிய சொற்கள் எனக்கு வர வேண்டும்.

வைஷ்ணவாநாம் யதா சம்பு: ஸ்ரோதாயாம் ஜாந்ஹவி யதா – சிவனை விட உயர்ந்த வைஷ்ணவர் வேறு யாரும் இல்லை.
அப்படிப்பட்ட சிவனால் போற்றப்படும் பெருமாளின் பாதுகை என்றார்.
கங்கையின் வேகம் சிவனின் தலை அசைப்பால் மேலும் அதிகமாகிறது என்றார்.

தன்னிடமிருந்து வெளிவரும் பாதுகைகள் பற்றிய கவிதைகள் கண்டு, அந்தச் சொற்கள் தடை ஏதும் இல்லாத
தன்னையே தடுத்துவிடுமோ என கங்கை அஞ்சும் படியாக, கர்வத்துடன் சொற்கள் வெளி வர வேண்டும் என்றார் –
இப்படியாகவும் கருத்து உரைக்கலாம்.

நம்மாழ்வார் -உம்மை ஸ்துதிக்க விரும்பும் அடியேனுக்கு -அமுத மயமான திருவாய் மொழி பாசுரங்கள் போல்
இனிமையாக -பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுதான சொல் மாலைகள் போல் இருக்கும் படி அருள வேண்டும் –
சங்கத்தமிழ் புலவர்கள் சோம சுந்தர பாண்டியன்-சொக்க நாதர் முதல் புலவர் –
தாமர பரணி – நதிக்கரையில் பிரவாஹித்த திருவாய் மொழி போல் இருக்க அருள வேண்டும்
உமது திருவாய் மொழியோ -உம்மைப் பற்றிய ஸ்துதியோ என்று சங்கை வரும் படி –

———————————————————————————

ஹிமவந் நளஸேது மத்ய பாஜாம்
பரத அப்யர்ச்சித பாதுகா அவதம்ஸ:
அத போதந தர்மத: கவீநாம்
அகிலேஷு அஸ்மி மநோ ரதேஷு அபாஹ்ய:—15-

ஹிம வத் நள சேது -இமயம் முதல் சேது வரை
மத்ய பாஜாம் -நடுவில் உள்ள கவிகளுக்குள்
பரதாப் யர்ச்சித்த பாதுகாவ தம்ஸ-தலைக்கு அலங்காரமாக தரிக்கப் பட்டுள்ளேன்
அத போதன தர்மத கவீ நாம் -இவர்கள் தங்கள் தப பலத்தால் பெற்று
அகிலேஷ் வஸ்மி மநோ ரதேஷ் வபாஹ்ய-மநோ ரதம் -கற்பனைக்கு மேல் பண்ணப் போகிறேன்

ஸ்ரீ பரதாழ்வானால் ஆராதிக்கப் பெற்ற பாதுகையைத் தலையிலே தரித்துக் கொண்ட மாத்திரத்தில்
இமயம் முதல் சேது வரையில் எழுந்து அருளி இருக்கும் கவிகள் எல்லோரையும் காட்டிலும் எளிதில்
உயர்வாகக் கவிகள் செய்வேன் –
ஆசார்ய அனுக்ரஹம் இருப்பின் எக் கார்யத்தையும் சாதிக்கலாமே –

ஏ பாதுகையே உன்னைத் தலையில் வைத்துக் கொண்ட மாத்திரத்தில் ஹிமவத் பர்வதம் முதல்
ஸேது வரையிலுள்ள கவிகளெல்லாரைக் காட்டிலும் மேலாய் கவனம் பண்ணுவேன்.
அதாவது ஆசார்யானுக்ரஹத்தினால் எந்தக் கார்யத்தையும் ஸாதிப்பேன்.

பரதனால் ஆராதிக்கப்பட்ட ராமனின் பாதுகையை எனது தலைக்கு அலங்காரமாகக் கொண்டேன்.
உடனே ஏற்பட்டது என்ன? இமயம் தொடங்கி வானர வீரனான நளன் கட்டிய ஸேது வரை உள்ள
அனைத்து கவிஞர்களையும் விட நான் உயர்ந்த மேன்மை பெற்று விடுவேன்.

எனது விருப்பம் நிறைவேற நான் பாதுகையை எனது தலையில் ஏற்றேன். இதனால் உண்டாவது –
மற்ற கவிஞர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற எனது கவிதைகளை பின்பற்றுவர் என்று கருத்து.
அனைவருக்கும் தேவையான விவரங்கள் இந்த ஸ்லோகங்களில் கிட்டும் என்றார்.

நம்மாழ்வார்
பாவம் ராகம் தாளம் -நாத முனிகள் -பூஜிக்கப் பட்ட –
நம்மாழ்வார் திருவடிகளைத் தலையில் தரிக்கப்பட்ட பெருமையால் –
ஸமஸ்த மநோ ரதங்களும் அடைந்தவனாக ஆனேன் –
ஆச்சார்ய அனுக்ரஹம் பெற்று தருவது நிச்சயம் அன்றோ
தாள்கள் தலை மேல் வைத்த –பேர் உதவிக் கைம்மாறா –தோள்கள் ஆயிரத்தாய் -ஆழ்வார்
அவனை ஸஹஸ்ர பிரகாரமாக அனுபவித்து பாடினது போல் –
இவரும் இங்கு அருளிச் செய்கிறார் –

——————————————————————————

அநிதம் ப்ரதமஸ்ய சப்த ராசே:
அபதம் ரங்க துரீண பாதுகே த்வாம்
கத பீதி: அபிஷ்டுவந் விமோஹாத்
பரிஹாஸேந விநோதயாமி நாதம்–16-

அநிதம் ப்ரதமஸ்ய சப்த ராசே -தொடக்கம் இல்லாத வேதத்தினுடைய -ரிஷிகள் மந்த்ர த்ருஷ்டா தானே மந்த்ர கர்த்தாக்கள் இல்லையே –
சப்த ராசே -வார்த்தைக்கு கூட்டங்களாலும் கூட
அபதம் ரங்க துரீண பாதுகே த்வாம் -சொல்லி முடிக்க முடியாத -ஸ்ரீ ரெங்க நாத பாதுகா தேவியே -உன்னை –
கதபீதி ரபிஷ்டுவன் விமோஹாத் –பயமே இல்லாமல் -அறியாமையால் -ஸ்துதிக்கிறேன்
பரிஹாசேன விநோதயாமி நாதம்-ஸ்ரீ ரெங்க நாதனுக்கு ஏளன விஷயமாகும் -சேஷிக்கு மகிழ்வு கொடுக்கவே ஸ்துதி –

ஸ்ரீ பாதுகையே -அநாதி காலமாய் விளங்கும் வேதமும் எல்லை காண இயலாத உன்னை
அறியாத தன்மையால் நிர் பயமாக ஸ்துதிக்க ஆரம்பிக்கிறேன் –
எம்பெருமானைச் சிரிக்கச் செய்து இதன் மூலம் மகிழ்விக்கச் செய்கிறேன் –

ஏ பாதுகையே வேதங்களாலும் சொல்லி முடியாத உன்னை ஒன்றும் தெரியாத் தன்மையினால்
பயமில்லாமல் ஸ்தோத்திரம் பண்ண ஆரம்பிக்கிறேன்.
பெருமாளை சிரிக்கச் செய்து ஸந்தோஷப்படுத்துகிறேன்.

இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே போல்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எப்போது உண்டானவை என்று கூற இயலாதபடி எக்காலத்திலும் இருந்து வரும் வேதங்கள் கூட
உன்னை முழுவதுமாகக் கூறி முடிக்க இயலாது. இப்படிப்பட்ட உன்னை, எனது அறியாமை காரணமாக,
பயம் சிறிதும் இன்றி ஸ்தோத்ரம் செய்யத் தொடங்கிவிட்டேன்.
இதன் மூலம் ஸ்ரீரங்கநாதன் மனம் மகிழ்ந்து புன்முறுவல் செய்கிறான் (நான் அவனை மகிழ்விக்கிறேன்).

நம்பெருமாளின் வீரங்களைக் குறித்து புகழ்வது போன்று, அவனது ஹாஸ்யரஸம் வெளிப்படுத்த எண்ணுவதும்
அவனுக்குச் செய்யும் கைங்கர்யமே ஆகும். இதனால் நிகழ்வது – இந்த முழு ஸ்லோகத்தைக் கண்ட ஸ்ரீரங்கநாதன்
மற்றவர்களைப் பார்த்து, “இது போல் உங்களால் இயற்ற இயலுமா?”, என்று பரிகாசம் செய்து சிரிக்கப் போகிறான் என்பதாகும்.

வேதங்களாலும் நம்மாழ்வார் பெருமையை சொல்லி முடிக்க முடியாதே –
வேதம் அவனைத் தேடி பின்னே செல்லுமே புறப்பாடுகளில் -அவனையே சொல்லி முடிக்காதே
தத் உதித நாம -உத் -திருவாய் மொழிக்கு உள்ளே அடக்கி -உயர்வற –பிறந்தார் உயர்ந்தே –
எனவே அருளிச் செயல்களின் பின்னே இவனும் செல்வான் புறப்பாடுகளில் –
ஆழ்வீர் -உம்மை அன்றோ ஸ்துதிக்க -அறியாமையால்
நம்மாழ்வாரை ஸ்துத்தித்தால் -அவன் மகிழ்வான்
நம் ஆழ்வாரைப் பாடினாயோ -சடகோபர் அந்தாதி –

————————————————————————

வ்ருத்திபி: பஹுவிதாபி: ஆஸ்ரிதா
வேங்கடேஸ்வர கவே: ஸரஸ்வதீ
அத்ய ரங்க பதி ரத்ந பாதுகே
நர்த்த கீவ பவதீம் நிஷேவதாம்—17-

வ்ருத்திபிர் -கவி அணிகள் -அலங்கார சாஸ்திரம் –
பஹூ விதாபி ராஸ்ரிதா-பலவகையான வற்றைக் கொண்டதாக வேணும்
வேங்கடேஸ்வர கவே சரஸ்வதீ -அடியேனுடைய வாக்கு
அத்ய -இன்று இப்பொழுது
ரங்க பதி ரத்ன பாதுகே -ரத்தினங்கள் இழைக்கப்பட்ட்ட ஸ்ரீ பாதுகா தேவி
நர்த்தகீவ -நாட்டியம் போல் -தாண்டவம் ஆடி -செய்து அருள வேணும் –
பவதீம் நிஷேவதாம்-உன்ன ஸ்துதிக்க வேணும் –

ஸ்ரீ பாதுகையே -இந்த வேங்கடேஸ்வர கவியின் வாக்கு கூத்தாடும் நர்த்தகியைப் போலே
வெளிப்படையாகவும் மறைமுகமாகவும்
உன் தன்மைகளை பல வித செயல்களால் எடுத்துக் கூறி கூத்தாடி உன்னை மகிழ்விக்க வேண்டும் –

ஏ பாதுகையே ! என்னுடைய வாக்கு கூத்தாடுகிறவள் போல
சில சங்கதிகளை நேரில் சொல்லியும்
சில சங்கதிகளை ஜாடையாய்ச் சொல்லியும் உன்னிடத்தில் கூத்தாட வேண்டும்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்டவளாக அலங்கரிக்கும் பாதுகையே!
நாட்டியம் ஆடுபவள் எவ்வாறு பலவித பாவங்களை வெளிப்படுத்துவாளோ,
அது போன்று வேங்கடேசன் என்ற கவி மூலம் வெளிப்படும்,
உன்னைப் பற்றிய பலவிதமான புகழாரங்கள் அடங்கிய சொற்கள், உன்னை வணங்கிச் சேவிக்கவேண்டும்.

பொதுவாக நாட்டியம் ஆடும்போது, மஹாராணியை அழைத்து அமர வைப்பார்கள்.
அந்த மஹாராணி முன்பாக நாட்டிய நிகழ்ச்சி நடைபெற, அதனைக் கண்டு மஹாராணி மனம் மகிழ்ந்து இரசிப்பாள்.
இங்கு பாதுகையை மஹாராணியாக அமரவைக்கிறார்.
அந்தப் பாதுகை முன்பாக நாட்டியம் ஆடுபவள் போன்று தன்னை எண்ணிக் கொள்கிறார்.
நடனம் ஆடுபவள் பல அபிநயங்களைப் பிடிப்பது போன்று, இவர் பாதுகையைப் பற்றிய பல விவரங்களை வெளிப்படுத்துகிறார்.
அந்தச் சொற்கள் அனைத்தும் பாதுகையை வணங்கி நிற்கவேண்டும் என்று கூறுகிறார்.
இவ்விதம் பாதுகை தன்னுடைய சொற்களைக் கேட்டு மகிழ்ந்து அமர்வதாகக் கூறுகிறார்.

பலவித கோணங்களில் ஆழ்வாரை ஸ்துதிக்க வேண்டும் –
நீர் கண்ணனை க்ருஷ்ண த்ருஷ்ணா தத்துவமாக -உண்ணும் சோறு பருகும் நீர் ன்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனாக –
பலவிதமாக அனுபவித்தது போல் –
1-கண்ணன் -கண்ணாவான் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் —
2-உண்ட கண் நிர்வாகன்- -கண் -இடம் -எங்கும் உளன் கண்ணன் –
3-கண் -எளிமை -கண்ணன் விண்ணோர் இறை –
4-கார் முகுல் போல் கண்ணன் –
5-ஆனந்தம் -எல்லையில் மாயன் கண்ணன் –
6-கடல் மலி மாயப்பெருமான் கண்ணன்
7-கமலக் கண்ணன் -என் கண்ணுள் உள்ளான் –
8-அணி கொள் செந்தாமரைக்கண்ணன் -ஒன்பது விதமாக
அரையர் சேவை போல் அடியேன் நாவே -அரையராகி உம்மை ஸ்துதிக்க வேண்டும் –

கண்ணன் -பெயர் விளக்கம்
1- கண்ணன் கண்ணாக இருப்பவன்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
வீதிக்கு வாய்ச் செல்கின்றான் மேல் விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்களூடே வாவுமான் தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்ததோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே
ஓதிய பெயருக்குத் தானே உறுப் பொருள் உணர்த்தி விட்டான் -கம்பர்
கண்ணே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சம் எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்றி யம்பும் –
காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப்படும் விஷயமும் அவனே –

2- கண்ணன் -நிர்வாஹகன்
கணவன் போல் -கண் அ வ் அன்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லை யோர் கண்ணே
த்ருஷ்டி -நிர்வாஹகன் -களைகண் -என்று நிர்வாஹகரைச் சொல்லுவார்கள்
மணியை வானவர் கண்ணினை -பரமபத வாசிகளுக்கு நிர்வாஹகனை
எண்ணிலா யரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்-கண் அலால் ஓர் கண் இலேன் –திரு மழிசைப்பிரான்
தேவரீரை ஒழிய வேறு ஒரு நிர்வாஹகரை யுடையேன் அல்லேன்
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்க்கு எல்லாம் –அனைவருக்கும் நிர்வாஹகன் –

3-கண்ணன் -எங்கும் நிறைந்தவன்
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து –சிங்கப்பிரான்
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞான சோதிக் கண்ணன்

4- கண்ணன் -கண் அழகன்
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன்
தடம் தாமரை மலர்ந்தால் ஓக்கும் கண் பெரும் கண்ணன்
தகும் கோலத் தாமரைக் கண்ணன்
செந் கோலக் கண்ணன்
செய்ய கண்ணன்
கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –த்ருஷ்டி பூதனான கண்ணனே –

5-கண்ணன் -கண் நோட்டம் உடையவன் -கடாக்ஷம் –
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண
கார்த்தன் கமலக்கண் –விசேஷ கடாக்ஷம்
எங்கும் பக்கம் நோக்கு அறியான் என் தாமரைக் கண்ணன்

6-கண்ணன் -கையாளன் எளியவன் -ஸூ லபன்
உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து என் வள்ளலே கண்ணனே -உன்னை எனக்குக் கையாளாகத் தரும் உதாரனே
காண்பார் யார் எம்மீசன் என் கண்ணனை
கரிய மேனியன் கண்ணன் விண்ணோர் இறை
மெலியும் நோய் தீர்க்கும் எம் கண்ணன்
கற்கும் கல்வி எல்லாம் கரும்கடல் வண்ணன் என் கண்ணபிரான்
ஆச்ரித பரதந்த்ரன்-பவ்யன் -ஆவதற்க்கே திரு அவதாரம்

7-கண்ணன் -கரிய மேனியன்
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
காரார் கரு முகில் போல் என் அம்மான் கண்ணன்
காரமார் மேனி நம் கண்ணன்
கார்மலி மேனி நிறைத்து என் கண்ணபிரான்
காரார்ந்த திரு மேனி கண்ணன்
கார்த்திரள் மா முகில் போல் கண்ணன்

8- கண்ணன் -களிக்கச் செய்பவன்
அல்லலில் இன்பம் –எல்லையில் மாயனைக் கண்ணனை -ஆனந்தாவஹன்

9- கண்ணன் -ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன்
மாயன் என்ற சொல்லுடன் வரும் இடங்களில் இப்படியே வியாக்யானம்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன்
கண்ணனை மாயன் தன்னை
கடல் மலி மாயப்பெருமான் கண்ணன்

10-கண்ணன் -அறிவு அளிப்பவன்
மெய்ஞ்ஞானக் கண் அருள் செய் கண்ணன் -கம்பர்

இவ்வாறு
கண்ணாய் இருப்பவன்
நிர்வாஹகன்
எங்கும் நிறைந்தவன்
கண் அழகம்
விசேஷ கிருபா கடாக்ஷம் அளிப்பவன்
கையாளன்
கரிய மேனியன்
களிக்கச் செய்பவன்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் உடையவன்
ஞான பிரதனான கண்ணன்
இவன் மந்த ஸ்மித்துடன் விசேஷ கிருபா கடாக்ஷமே
தாபத்த்ரயங்களையும் போக்கி அருளும்
இவனையே சிந்தையிலே வைத்து ஆனந்திப்போம்

——————————————————————————

அபார கருணாம்புதே: தவ கலு ப்ரஸாதாத் அஹம்
விதாதும் அபி சக்நுயாம் சத ஸஹஸ்ரிகாம் ஸம்ஹிதாம்
ததாபி ஹரி பாதுகே தவ குண ஔக லேச ஸ்திதே:
உதாஹ்ருதி: இயம் பவேத் இதி மிதாபி யுக்தா ஸ்துதி:—-18-

அ பார கருணாம்புதே -எல்லை இல்லாத கருணைக் கடல்
தவ கலு பிரசாதாத் அஹம் -உம்முடைய திரு அருளாலே
விதாதும் சக்நுயாம் -எழுதக்கூடிய ஆற்றல்
சதா சஹஸ்ரிகாம் சம்ஹிதாம் அபி -நூறு மடங்கு ஆயிரம் -லக்ஷம் ஸ்லோகங்களால் கூட
ததாபி -அப்படி இருந்தாலும் கூட
ஹரி பாதுகே தவ குணவ் -உம்முடைய குணக்கூட்டங்களில்
கலேசஸ்திதே உதாஹ்ருதிரியம் பவேத் -அற்பமான சிறிய பகுதியையே காட்ட முடியும்
இதி மிதாபி யுக்தா ஸ்துதி-ஆகையால் தான் தேவரீர் ஆயிரம் ஸ்லோகங்களாக ஸ்துதிக்க நியமித்து அருளுகிறீர் –

ஸ்ரீ பாதுகையே -எல்லையற்ற கருணைக் கடலான உன் அனுக்ரஹத்தால் நூறாயிரம் ஸ்லோகங்கள் கூட கவனம் செய்ய இயலும்
அப்படியும் எல்லை காண இயலாத உன் குணங்களை வருணிக்க மாதிரிக்கு ஒரு ஆயிரம் மட்டுமே இருக்கட்டும் -இதுவே ஸ்துதியாகும் –

ஏ பாதுகையே! ஒரு ஸ்வாமி முகமாய் ஆயிரம் ஸ்லோகம் பண்ணும்படி நியமித்தாய்.
கருணைக் கடலான உன்னுடைய தயையினாலே லக்ஷம் ஸ்லோகமும் பண்ணலாம்.
லக்ஷம் பண்ணினாலும் உன்னுடைய குணங்கள் சொல்லிற்றாகுமா?
ஆகையினால் கொஞ்சமாகாத் தான் இருக்கட்டுமே என்று நியமித்தாய் போலும்.

ஸ்ரீஹரியான க்ருஷ்ணனின் பாதுகையே! நீ எல்லையற்ற கருணைக் கடலாக உள்ளாய்.
இதன் மூலம் உன் மீது பல லட்சம் ஸ்லோகங்கள் என்னால் இயற்ற முடியும்.
ஆயினும் இத்தனை லட்சம் ஸ்லோகங்களும் உன்னைப் பற்றி முழுமையாகக் கூற இயலாமல் இருக்கும்.
எனவே உதாரணமாக இங்கு சில ஆயிரம் மட்டுமே போதுமானது என்று முடிவு செய்தாய் போலும்.

பாதுகை ஸ்வாமியிடம், “எத்தனை ச்லோகங்கள் என் மீது இயற்றுவதாக நீ சபதம் மேற்கொண்டாய்?”, என்றாள்.
அதற்கு ஸ்வாமி, “1000 ச்லோகங்கள்”, என்றார்.
உடனே பாதுகை சற்று பரிகாசமாக, “உம்மால் அவ்வளவுதான் இயலுமோ?”, என்று கேட்டாள்.
அதற்கு ஸ்வாமி, “நம்பெருமாளின் பாதுகையே! உன்னைப் பற்றி உனது அருள் காரணமாக, அடியேனால்
ஒரு லக்ஷம் ச்லோகங்கள் கூட இயற்ற இயலும். நீ அனுமதி அளித்தால் செய்கிறேன்”, என்றார்.
இதனைக் கேட்ட பாதுகை, “என்னைப் பற்றி நீ உதாரணமாக உள்ள சிலவற்றை மட்டும் எழுதினால் போதுமானது”, என்றாள்.

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -ஆழ்வார் கருணை -உமது அருளால் –
திரு விருத்தம் -நூறே திருவாய் மொழி ஆயிரமாக விளக்க உரை -நூறு ஆயிரம் சத சஹஸ்ரம் ஸம்ஹிதை
உமது அனுக்ரஹத்தால் நூறு மடங்கு ஆயிரம் பாட வல்லவனாக இருந்தாலும்
அளவுக்கு உட்பட்டு இருப்பதே யுக்தம் பொருத்தம் ஆகும் என்றபடி -1102-உட்பட்டு 1000 பாடும்படி அருளுகிறீர்
ஸ்ரீ கோதா ஸ்துதியும் –29- பாடி ஆண்டாளுக்குள் அடங்கி இருப்பதைக் காட்டி அருளினார் அன்றோ

—————————————————————————–

அநுக்ருத நிஜநாதாம் ஸூக்திம் ஆபாதயந்தீ
மநஸி வசஸி ச த்வம் ஸாவதாநா மம ஸ்யா:
நிசமயதி யதா அஸௌ நித்ரயா தூரமுக்த:
பரிஷதி ஸஹ லக்ஷ்ம்யா பாதுகே ரங்கநாத:—-19-

அனுக்ருத நிஜ நாதாம் -அநு காரம் போல் உன்னுடைய த்வனியை –
ஸூக்திமாபாத யந்தி -ஸ்லோகங்களை நல்ல யுக்திகளை நீயே உருவாக்கித் தந்து அருள வேணும்
பகலிலே உன்னுடைய நாதம் போல் இரவில் இந்த ஸ்துதிகள் அமைய வேண்டும்
மனஸி வசசி ச த்வம் -மனசிலும் வாக்கிலும் நீயே
சாவதாநா மம ஸ்யா -கவனத்துடன் நீயே வந்து அமர வேண்டும் -சா அவதானம்
நிசமயதி யதா சௌ -எப்படி இருந்தால் இந்த அரங்கன் கேட்ப்பானோ
நித்ரயா தூரமுக்த -தூக்கத்தை விட்டு -ஆதிசேஷன் படுக்கையை விட்டு இந்த ஸ்லோகம் கேட்க வேணும்
பரிஷதி சஹ லஷ்ம்யா -தனிக்கேள்வியாக இல்லாமல் -சபையில் -ஆஸ்தானத்தில் -பெரிய பிராட்டியார் உடன் கூடி இருந்து மகிழும்படி
பாதுகே ரங்க நாத -நீயே அருள வேண்டும் –

ஸ்ரீ பாதுகையே இரவு வேளையில் இந்த கிரந்தத்தை பண்ணும்படி நியமித்தாய்
ஆழ்வாருடைய திவ்ய ஸூக்தி போலே இனிமையான வார்த்தைகள் வாக்கில் வர வேண்டும் –
அந்த ஸ்வாரஸ்யத்தால் தாயாரும் பெருமாளும் நித்திரை மறந்து இதை ரசிக்க வேண்டும்
என்னும்படி வாக்கிலும் நீ எழுந்து அருளி இருக்க வேண்டும் –

ஏ பாதுகையே இராத்ரியில் இந்த க்ரந்தத்தைப் பண்ணும்படி நியமித்தாய்.
உன்னுடைய சப்தம் போல (ஆழ்வாருடைய ஸூக்தி போல) பெருமாளுக்கு மிகவும் இன்பமான வார்த்தைகள்
தாமதமில்லாமல் மனதில் தோன்றி அதி வேகமாய் வாக்கில் வரும்படியாக நீ தயை செய்ய வேண்டும்.
இதின் ஸ்வாராஸ்யத்தாலே தாயாருக்கும் பெருமாளுக்கும் தூக்கம் மறந்து போய் ஸபையிலே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது மனதிலும் வாக்கிலும் சொற்கள் எப்படி வரவேண்டும் என்றால் –
உனது ஒலியானது, தான் (நம்பெருமாள்) நடக்கும் போது எத்தனை இனிமையாக உள்ளது என்று
ஸ்ரீரங்கநாதன் நினைத்துக் கொள்வானோ அதுபோல் இருக்கவேண்டும்.
இவ்விதம் உனது நாதத்தை என் மூலம் நீ வெளிப்படுத்தவேண்டும். இதன் சுவாரஸ்யத்தில் அவன் மயங்கி,
ஸ்ரீரங்கநாச்சியாருடன் விழித்திருந்து நான் கூறும் இவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பான்.
ஆகவே எனது வாக்குகள் அவனுக்கு இன்பமாக இருத்தல் வேண்டும்.

ஸ்வாமி தேசிகர் பாதுகையிடம், “இந்தச் ச்லோகங்களை நீ மட்டும், இங்கு உள்ளவர்கள் மட்டும் கேட்டால் போதாது.
நம்பெருமாள் அவனுடைய நாயகியான ஸ்ரீரங்கநாச்சியாருடன் எழுந்தருளியிருந்து கேட்டு மகிழ வேண்டும்”, என்றார்.
உடனே பாதுகை, “அதற்கு என்னிடமிருந்து நீவிர் என்ன எதிர்பார்க்கிறீர்?”, என்றாள். ஸ்வாமி உடனே வெகு சாமர்த்தியமாக,
“நீ நடக்கும்போது உனது இனிமையான சப்தத்தில் நம்பெருமாள் மயங்கி விடுகிறான் அல்லவா?
அந்த நாதத்தை எனது சொற்களுக்கு அளிப்பாயாக. அதன் மூலம் உறங்கச் சென்ற நம்பெருமாள்,
“நம்முடைய பாதுகையின் நாதம் போன்று உள்ளதே”, என்று விரைவாக இங்கு வருவான்.
இங்கு வந்தவன் ஸ்ரீரங்கநாச்சியாருடன் அமர்ந்து என்னுடைய ச்லோகங்களைக் கேட்டு ரசிப்பான்.
எனது சொற்கள் இரசிக்கும்படி இல்லையென்றால் அவன் மீண்டும் உறங்கச் சென்றுவிடுவான் அல்லவோ?”, என்றார்.

பாவின் இன்னிசை பாடித் தெரியும்படி
தேவனை விட்டு -குருகூர் நம்பி விட்டு -திருவாய் மொழியையும் விட்டு -பாவின் இன்னிசையே தெய்வம் –
அதே போல் இங்கும் நாதத்தைப் பற்றி அருளிச் செய்கிறார் –
ஆம் முதல்வன் இவன் என்று -தற்றேற்றி -என் நா முதல் வந்து புகுந்து -நல் இனி கவி –வாய் முதல் அப்பன் -போல்
இராப்பத்து திருவாய் மொழி திருச்செவி சாய்த்து அருளுவது போல் ரசித்து கேட்க வேணும் –

—————————————————————————-

த்வயி விஹிதா ஸ்துதிரேஷா
பத ரக்ஷிணி பவதி ரங்க நாத பதே
ததுபரி க்ருதா ஸபர்யா
நமதாம் இவ நாகிநாம் சிரஸி—20-

த்வயி விஹிதா ஸ்துதி ரேஷா -உன்னை ஸ்துத்தித்து
பத ரஷிணி -திருப்பாதத்தை ரக்ஷிக்கும் திருப்பாதுகா தேவியே
பவதி ரங்க நாத பதே -திரு பாதத்துக்கும் சேர்ந்து ஆகுமே
ததுபரி க்ருதா சபர்யா -தத் உவரி -திருவடிக்கு மேலே -வைக்கப்பட்ட மாலையானது
நமதாமிவ நாகிநாம் சிரஸி–திருவடிகளை வணங்கும் தேவர்களின் தலைக்கு மேல் இருப்பது போல் இருக்குமே –
தீர்த்தன் இத்யாதி -பார்த்தன் தெளிந்து ஒழிந்தது போல் –
உலகு அளந்தவன் திருப்பாதத்தில் சேர்த்த அதே மாலையையே சிவனது திருமுடியில் கண்டு தெளிந்தானே –

ஸ்ரீ பாதுகையே முன் ஒரு சமயம் அர்ஜுனன் –
உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சிவன் முடி மேல் கண்டது போலே
உன்னை ஸ்துதித்ததும் உடனுக்கு உடன் பெருமாள் திருவடியையும் ஸ்துதித்ததாகிறது-
திருவடியை ஸ்துதித்தால் ஒரு ஆயிரம் மட்டும் ஆகும் –
உன்னை ஸ்துதித்த ஆயிரம் ஸ்லோகங்கள் இரண்டாயிரமாக பரிணமிக்கும் –

ஏ பாதுகையே ! முன் ஒரு சமயத்தில் அர்ஜூனன் ஸ்ரீக்ருஷ்ணன் திருவடியில் சிவனுக்குப் பண்ண வேண்டிய பூஜையைச் செய்தானாம்.
அது மறுநாள் தன்னுடைய பூஜைப் பெட்டியிலிருக்கிற சிவன் தலையிலிருந்ததாம்.
அதைப் பார்த்து அதிகமாய் ஆச்சர்யப்பட்டானாம்.
பெருமாள் திருவடியிலே பூஜை செய்தபடியால் திருவடிக்கும் ஆயிற்று, சிவன் முடிக்கும் ஆயிற்று.
அந்த மாதிரி உன்னை நான் ஸ்தோத்ரம் பண்ணினால், உனக்கும் ஆகிறது–திருவடிக்கும் ஆகிறது.
ஆசார்யர்களை ஸ்துதித்தால் பெருமாளுடைய திருவுள்ளமுகக்கும்.
திருவடியைப் பற்றி ஸ்தோத்ரம் பண்ணுகிறவருக்கு ஒரு ஆயிரம் தானாகும்.
எனக்கோ இரண்டாயிரமாகிறது.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! பெருமாளின் திருவடிகளில் செய்யப்படும் பூஜையானது
தேவதைகளின் தலையில் சென்று சேர்ந்துவிடுகிறது. இதே போன்று நான் உன்னைத் துதித்து இயற்றும்
இந்தச் ஸ்லோகங்கள் அனைத்தும் பகவானின் திருவடிக்கும் சென்று சேர்கிறது.

பகவானின் திருவடிகளை அண்டுவதை விடுத்து சிலர் மற்ற தேவதைகளை நாடுவது உண்டு.
இதுபோல் அல்லவா இவர் செயல் உள்ளது – பகவானின் திருவடி மீது ஸ்துதி பாடாமல் பாதுகையின் மீது இயற்றுகிறாரே?
இதற்கு விடை தருகிறார் – பாதுகை மீது இயற்றிய ஸ்துதி,அவன் பாதங்களைச் சென்று அடையும் என்கிறார்.
எப்படி என்பதற்கு உதாரணம் கூறுகிறார்.
ஒரு முறை சிவனுக்காக இயற்ற வேண்டிய பூஜையை க்ருஷ்ணனின் திருவடிகளில் அர்ஜுனன் செய்தான்.
அப்போது அந்த மலர்கள் சிவனின் தலை முடியைச் சென்று அடைந்தன.
இதுபோன்று பாதுகைக்குச் செய்யும் ஸ்துதிகள் திருவடிகளுக்கும் பொருந்தும்.

ஆழ்வாரே -உம்மைப்பற்றிய ஸ்துதியானது
அரங்கன் திருவடிக்கு சேருமே
நிழலும் அடி தாறும் ஆனோம்
உபரி -மேலே -உயர்ந்த -தன்னைக்குறித்த வழி பாட்டிலும் பெரியதாகவே கொள்ளும் அவன் அன்றோ
உங்களை வணங்குபவர்களை -த்ரி தந்தாகிலும் தேவ பிரான் கரிய திருக்கோலம் காணும் படி அருளுவான் அன்றோ –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: