ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி –தொண்டை நாட்டுத் திருப்பதிகள் -74-95—/வட நாட்டுத் திருப்பதிகள் -96-107/ திரு நாட்டுத் திருப்பதி –108-

தொண்டை நாட்டுத் திருப்பதிகள்–22-

74-திருக்கச்சி -அத்திகிரி-

பொருள் ஆசை மண் ஆசை பூங்குழலார் போகத்து
இருள் ஆசை சிந்தித்து இராதே அருளாளன்
கச்சித் திருப்பதி ஆம் அத்தியூர்க் கண்ணன் தாள்
இச்சித் திருப்பது யாம் என்று –74–

பொருள் ஆசை மண் ஆசை பூங்குழலார் போகத்து
இருள் ஆசை சிந்தித்து இராதே
அருளாளன் கச்சித் திருப்பதி ஆம் அத்தியூர்க் கண்ணன் தாள்
இச்சித் திருப்பது யாம் என்று –உபாயமும் உபேயமுமாகச் சிந்தித்து எந்நாளோ –

பேற்றுக்கு த்வரிக்கிறார் -திணரார் சார்ங்கத்து உனபாதம் சேர்வது அடியேன் என்னாலே –
பிரமன் பூஜித்த ஸ்தலம் -பூமியான பெண்ணுக்கு அரையில் அணியும் அரைநூல் மாலைத் ஸ்தானம்
ஹஸ்திகிரி-கோயில் திருமலை பெருமாள் கோயில் -தியாக மண்டபம் –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பூஜித்து பெற்ற ஸ்தலம் –

—————————————————————

75-திருவட்ட புயங்கம் –

என்றும் துயர் உழக்கும் ஏழை காள் நீங்கள் இளங்
கன்று போல் துள்ளிக் களித்து இரீர் அன்று நடம்
இட்ட புயங்கத்து இரு சரணமே சரண் என்று
அட்ட புயங்கத் தாற்கு ஆள் ஆய் –75-

என்றும் துயர் உழக்கும் ஏழை காள் -எப்பொழுதும் தாபத் த்ரயங்களுக்குள் அடிபட்டு வருந்தும் அறிவற்ற ஜனங்களே
அன்று -ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில்
நடம் இட்ட புயங்கத்து-காளியன் மேலே நடனம் செய்து அருளிய
இரு சரணமே சரண் என்று
அட்ட புயங்கத் தாற்கு ஆள் ஆய்
நீங்கள் இளங்கன்று போல் துள்ளிக் களித்து இரீர் –பயம் அறியாமல் துள்ளிக் குதித்து அகம் மகிழ்ந்து இருங்கள் —
அஷ்ட புயவகரம் -அஷ்ட புஜன் எழுந்து அருளி உள்ள க்ருஹம் –
அட்ட புயவகரம் -அஷ்ட திருக்கைகளில் அஷ்ட திவ்யாயுதங்கள் ஏந்தி அருளி சேவை சாதிப்பவன் என்றுமாம் –

—————————————————————-

76-திருத் தண் கா -பிரிந்து ஆற்றாளாய தலைவி தலைவன் இடம் தனக்கு உள்ள அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –

ஆட்பட்டேன் ஐம் பொறியால் ஆசைப் பட்டேன் அறிவும்
கோட்பாட்டு நாணும் குறை பட்டேன் சேண் பட்ட
வண் காவை வண் துவரை வைத்த விளக்கு ஒளிக்கு
தண் காவைச் சேர்ந்தான் தனக்கு –76–

சேண் பட்ட -தேவ லோகத்தில் உள்ள
வண் காவை-வளப்பமான சோலை போலே தழைத்த பாரிஜாத விருஷத்தை
வண் துவரை -செழிப்பான தனது துவாரகா புரியில்
வைத்த-கொண்டு வந்து நாட்டிய
தண் காவைச் சேர்ந்தான் தனக்கு —
விளக்கு ஒளிக்கு -தீப பிரகாசர் என்னும் எம்பெருமான் திறத்தில்
ஆட்பட்டேன்
ஐம் பொறியால் ஆசைப் பட்டேன்-கண்ணால் அவனை தர்சித்து -செவியால் அவன் வைபவங்களைக் கேட்டு
வாய் அவனையே ஸ்துதித்து -மூக்கு அவனது திவ்ய திருத் துழாய் பரிமளத்தை முகர்ந்தும் -மெய்யால் வணங்கி பரிசித்தும்
தனக்காக தண் கா கொணர்ந்தான் எம்பெருமான் என்கிறார் சமத்காரமாக –
தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் அவனே –
அறிவும் கோட்பாட்டு -அந்த எம்பெருமானால் -கவரப்பட்டு நாணும் குறை பட்டேன் –
மகளிற்கு உரிய வெட்கம் குணமும் குறைந்து விடப் பெற்றேன் –

திருத் தண் கா -குளிர்ந்த சோலைகள் உடைய ஸ்தலம் -விளக்கொளி பெருமாள் –

———————————————————-

77-திரு வேளுக்கை –

தனக்கு உரியனாய் அமைந்த தானவர் கோன் கெட்டான்
உனக்கு உரியன் ஆய மைந்தன் உய்ந்தான் நினைக்கும் கால்
வேளுக்கை ஆள் அரியே வேறு உதவி உண்டோ உன்
தாளுக்கு ஆள் ஆகா தவர்க்கு –77–

வேளுக்கை ஆள் அரியே –
தனக்கு உரியனாய் அமைந்த -ஸவதந்த்ரனாய் தானே தெய்வம் என்று இருந்த
தானவர் கோன் கெட்டான்
உனக்கு உரியன் ஆய மைந்தன் உய்ந்தான்
நினைக்கும் கால்
வேறு உதவி உண்டோ உன் தாளுக்கு ஆள் ஆகாதவர்க்கு —
ஆள் அரியே– அழகிய சிங்கர் எம்பெருமான் திருநாமம்

————————————————————-

78-திருப்பாடகம் –

தவம் புரிந்த சேதனரை சந்திரன் ஆதித்தன்
சிவன் பிரமன் இந்திரனாச் செய்கை உவந்து
திருப் பாடகம் மருவும் செங்கண் மால் தன் மார்பு
இருப்பாள் தகவு உரையாலே –78–

உவந்து -திரு உள்ளத்தில் மகிழ்ந்து
திருப் பாடகம் மருவும் செங்கண் மால் –
தவம் புரிந்த சேதனரை –சந்திரன் ஆதித்தன் –சிவன் பிரமன் இந்திரனாச் செய்கை -தவம் செய்த ஆன்மாக்களை
அவர் அவர்கள் விருப்பத்தின் படியே சந்த்ரனாகவும் சூரியனாகவும் சிவனாகவும் இந்திரனாகவும் பிரமனாகவும் செய்து அருளுவது
தன் மார்பு இருப்பாள் தகவு உரையாலே –பிராட்டி புருஷகார பூதையாய் இருந்து கருணை வார்த்தை அருளிச் செய்வதாலே –

திருப்பாடகம் -பாண்ட தூதர் சந்நிதி –

————————————————————————-

79-திரு நீரகம் –

ஆலத்து இலை சேர்ந்து அழி உலகை உட்புகுந்த
காலத்தில் எவ்வகை நீ காட்டினாய் ஞாலத்துள்
நீரகத்தாய் நின் அடியேன் நெஞ்சகத்தாய் நீள் மறையின்
வேரகத்தாய் வேதியற்கு மீண்டு –79–

ஞாலத்துள் நீரகத்தாய்
நின் அடியேன் நெஞ்சகத்தாய்
நீள் மறையின் வேரகத்தாய்-நீண்ட வேதங்களில் பிரதிபாதிக்கப் படும் மூலப் பொருளாய் உள்ளவனே
வேதியற்கு -பிரளயக் காட்சியைக் காண விரும்பிய வேதம் வல்லவனான மார்கண்டேயனுக்கு
நீ –
உட்புகுந்த காலத்தில் -அவன் உனது திரு வயிற்றின் உள்ளே புகுந்த காலத்தில்
ஆலத்து இலை சேர்ந்து
அழி உலகை -அழிந்து போன லோகங்களை
எவ்வகை மீண்டு நீ காட்டினாய்–திவ்ய குணத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார் –

————————————————————————

80-திரு நிலாத் திங்கள் துண்டம் –

மீண்டும் தெளியார்கள் மேதினியோர் நின் அடிப் பூப்
பாண்டரங்க மாடிப் படர் சடை மேல் தீண்டி
கலாத் திங்கள் துண்டத்தின் மீது இருப்பக் கண்டும்
நிலாத் திங்கள் துண்டத் தானே –80–

நிலாத் திங்கள் துண்டத் தானே —-
நின் அடிப் பூப் -13 நாள் இரவில் அர்ஜுனன் உனது திருவடியில் சாத்திய புஷ்பங்கள்
பாண்டரங்க மாடிப் படர் சடை மேல் -பாண்ட ரங்க கூத்தாடிய சிவபெருமானது பரந்த சடையின் மீது –
பாண்டரங்கம் பதினோரு ஆடலுள் ஓன்று -திரிபுர சங்கர காலத்தில் ஆடினான்
தீண்டி -பொருந்தி
கலாத் திங்கள் துண்டத்தின் மீது
இருப்பக் கண்டும்
மீண்டும் தெளியார்கள் மேதினியோர் -நீயே பரம் பொருள் என்பதை அறியாமல் பேதையர்களாய் இருக்கிறார்களே –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே -நம்மாழ்வார்

—————————————————————–

81-திரு ஊரகம் —

நேசத்தால் அன்று உலகை நீர் வார்க்க வைத்து அளந்த
வாசத்தாள் என் தலை மேல் வைத்திலையேல் நாசத்தால்
பாரகத்துள் அன்றி யான் பாழ் நரகில் வீழ்ந்து என் கொல்
ஊரகத்துள் நின்றாய் உரை –81–

ஊரகத்துள் நின்றாய்
நீர் வார்க்க–அன்று–
நேசத்தால் உலகை வைத்து அளந்த -அளவு கருவியாக கொண்டு அளந்த
வாசத்தாள்-நறு மணம் மிக்க தாமரைத் திருவடிகளை
என் தலை மேல் வைத்திலையேல்
பாரகத்துள் அன்றி
நாசத்தால்
பாழ் நரகில் வீழ்ந்து என் கொல்
உரை –

சம்பந்த ஞானம் கொண்ட என் தலை மேல் உனது திருவடிகள் வைக்கலாகாதோ
நீ அறிந்த சம்பந்தம் கொண்டு அன்று நீ வைத்து அருளிய திருவடிகள்
நான் அறிந்த சம்பந்தம் கொண்டு வைத்து அருளால் ஆகாதோ –
ஊரக ரூபியாய் சேவை சாதிப்பதால் திரு ஊரகம்

———————————————————————–

82-திரு வெக்கா-

உரை கலந்த நூல் எல்லாம் ஓதி உணர்ந்தாலும்
பிரை கலந்த பால் போல் பிறிதாம் தரையில்
திரு வெக்கா மாயனுக்கே சீர் உறவு ஆம் தங்கள்
உரு வெக்கா உள்ளத்தினோர்க்கு –82–

தரையில் -இப் பூமியிலே
திரு வெக்கா மாயனுக்கே -சொன்ன வண்ணம் செய்து அருளிய பெருமானுக்கே
சீர் உறவு ஆம் -சிறந்த நீங்காத சம்பந்தம் பெற்ற
தங்கள் உரு-தங்கள் ஸ்வரூபத்தை
வெக்கா உள்ளத்தினோர்க்கு –விரும்பி அறியாத மனத்தை உடையாருக்கு
உரை கலந்த நூல் எல்லாம் ஓதி உணர்ந்தாலும்
பிரை கலந்த பால் போல் பிறிதாம் -திரியும் தன்மை உடையதாகும்

ஞானம் அனுஷ்டானம் இல்லாதார் -வீண்
நவ வித சம்பந்தம் உணராதார் வீண் -சீர் உரு -உன் தன்னோடு உறவேல் ஒழிக்க ஒழியாதே
திரு வேகா சேது–திரு வேக வணை-திரு வேகணை -திரு வெக்கா மருவி

—————————————————————————

83-திருக்காரகம் –

ஓராதார் கல்வி உடையேம் குலம் உடையேம்
ஆராதனம் உடையேம் யாம் என்று சீர் ஆயன்
பூங்காரகம் காணப் போதுவார் தாள் தலை மேல்
தாங்கார் அகங்காரத் தால் –83-

ஓராதார் -விவேகம் இல்லாத நாம்
கல்வி உடையேம் -வித்யா மதம் –
குலம் உடையேம் -குல மதம் –
ஆராதனம் உடையேம் யாம் என்று-கருதி
அகங்காரத் தால்
சீர் ஆயன்
பூங்காரகம் காணப் போதுவார் தாள் தலை மேல் தாங்கார் –

உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே –
அஜ்ஞ்ஞர் பிரமிக்கிற வர்ண ஆஸ்ரம வ்ருத்தங்களை-கர்த்தப ஜன்மம் ஸ்வபசாதமம் சில்பா நைபுணம் பஸ்மா ஹூதி
சவ விதவாலங்காரம் -என்று கழிப்பார்கள் -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்திகள்

———————————————————————

84-திருக் கார் வானம் –

தாலேலோ என்று ஆய்ச்சி தாலாட்டி தன் முலைப்பா
லாலே எவ்வாறு பசி ஆற்றினள் முன் மாலே பூங்
கார் வானத்து உள்ளாய் கடலோடும் வெற்பொடும் பார் வானம்
உண்டாய் நீ பண்டு –84-

மாலே
பூங்கார் வானத்து உள்ளாய்
கடலோடும் வெற்பொடும் பார் வானம் உண்டாய் நீ பண்டு –
தாலேலோ என்று ஆய்ச்சி தாலாட்டி தன் முலைப் பாலாலே எவ்வாறு பசி ஆற்றினள் முன்-
வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்த் தேனாகி பாலாம் திருமாலே
ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு –

அவ்வச் சாதிகளிலே அவதரித்து அதில் உள்ளாருடைய தாரகமே தனக்குத் தாரகமாய் இருக்கிற படி
ஸ்ரீ வராஹம் ஆனானால் கோரைக் கிழங்கு தாரகமாம் -இடையன் ஆனானாகில் வெண்ணெய் தாரகமாய் இருக்கிறபடி –
பிரளயம் கொள்ளாதபடி வயிற்றிலே வைத்து வெளிநாடு காண புறம்பே யுமிழ்ந்து ரஷித்த வயிறு
இத்தனை வெண்ணெயாலே நிறைக்க வேண்டி இருந்ததோ –

———————————————————————-

85–திருக் கள்வனார் –

பண்டே உன் தொண்டு ஆம் பழஉயிரை என்னது என்று
கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே மண் தலத்தோர்
புள் வாய் பிளந்த புயலே உன்னை கச்சிக்
கள்வா என்று ஓதுவது என் கண்டு –85-

புள் வாய் பிளந்த புயலே
பண்டே உன் தொண்டு ஆம் பழஉயிரை என்னது என்று
கொண்டேனைக்
கள்வன் என்று கூறாதே மண் தலத்தோர்
உன்னை கச்சிக் கள்வா என்று ஓதுவது என் கண்டு –

சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் –
ஆத்மா அபஹாரமே கள்ளத்தனம் -பிறர் நன் பொருள் அன்றோ –

———————————————————————-

86-திருப் பவள வண்ணம் –

கண்டு அறிந்தும் கேட்டு அறிந்தும் தொட்டு அறிந்தும் காதலால்
உண்டு அறிந்தும் மோந்து அறிந்தும் உய்யேனே -பண்டைத்
தவள வண்ணா கார் வண்ணா சாம வண்ணா கச்சிப்
பவள வண்ணா நின் பொற் பாதம் –86-

பண்டைத் தவள வண்ணா -கருத யுகத்தில் வெண்ணிறம் ஆனவனே -சத்வ பிரசுர மக்கள் ஆசைப்பட்ட படி
கார் வண்ணா -கலியுகத்தில் காள மேகம் போன்றவனே -ஸ்வாபாவிகமான வண்ணம்
சாம வண்ணா -துவாபர யுகத்தில் பசுமை நிறம் உள்ளவனே -ரஜஸ் தமோ-மிஸ்ர குண பிரசுரராய் இருப்பதால்
பாசியினுடைய புறப்பசுமை போலே இருப்பன்
த்ரேதா யுகத்தில் சிவந்த வடிவாய் இருப்பன் -ரஜஸ் பிரசுரர் ஆகையாலே
பாலின் நீர்மை -இத்யாதி –
கச்சிப் பவள வண்ணா நின் பொற் பாதம் –
காதலால் -பக்தியோடு
கண்டு அறிந்தும் கேட்டு அறிந்தும் தொட்டு அறிந்தும்
உண்டு அறிந்தும் மோந்து அறிந்தும் உய்யேனே
சிற்று இன்பத்திலே இன்னும் உழன்று கொண்டு இருக்கின்றேனே -இவற்றை நீக்கி அருளி ரஷித்து அருள வேணும்

———————————————————————–

87-திருப் பரமேச்வர விண்ணகரம் –

பதத் தமிழால் தன்னையே பாடுவித்து என்னைத் தன்
பதத்து அடியார்க்கே ஆட்படுத்தான் இதத்த
பரமேச்சுர விண்ணகரான் பல ஆன்
வர மேச்சு உரல் அணைந்த மால் –87-

பல ஆன் வர மேச்சு
உரல் அணைந்த மால் –
இதத்த பரமேச்சுர விண்ணகரான்-நித்ய சம்சாரிகள் அனைவரையும் கரை மரம் சேர்த்து அருள –
ஹிதம் காரணம்,ஆக -என்றவாறு
பதத் தமிழால் தன்னையே பாடுவித்து என்னைத் தன்
பதத்து அடியார்க்கே ஆட்படுத்தான்
விஷய கௌரவத்தாலும் ஸ்வாபாவிக இனிமையாலும் பதத் தமிழ் என்கிறார்
எம் தம்மை விற்கவும் பெறுவார்களே என்னும் படி அடியார்க்கு ஆட்படுத்தி அருளினான்
என்னால் தன்னை இன் தமிழ் பாடின ஈசன்
தேவாதி தேவன் -ஸ்ரீ வைகுண்ட பெருமாள் எழுந்து அருளி சேவை சாதிப்பதால் பரமேஸ்வர விண்ணகரம் –

—————————————————————-

88-திருப் புட்குழி –

மால் வேழமும் அரவும் மாயையும் வெற்பும் கடலும்
மேல் வீழ் படையும் விடமும் போய் பாலன்
நெருப்பு உள் குழி குளிர நின்றதும் கேட்டு ஓதார்
திருப் புட்குழி அமலன் சீர் –88-

ஹிரணியன் பிரகலாதனை துன்புறுத்த ஏவிய
மால் வேழமும் அரவும் மாயையும் வெற்பும் கடலும்
மேல் வீழ் படையும் விடமும் போய்
பாலன்
நெருப்பு உள் குழி குளிர நின்றதும் கேட்டு -பள்ளத்தில் மூட்டிய நெருப்பு சுடாமல் குளிரும்படி நின்றதும் கேட்டிருந்தும்
திருப் புட்குழி அமலன் சீர் -சிறப்புக்களை
ஓதார் -கூற மாட்டார்கள் -இது என்ன பேதைமை –

பெரிய உடையாரை குழியில் இட்டு சம்ஸ்கரித்தது போலே எம்பெருமான் சேவை சாதிக்கும் ஸ்தலம் என்பதால் திருபுட்குழி திரு நாமம் –

———————————————————————

89-திரு நின்ற ஊர் -தலைவி தோழி யார்க்கு அறத்தொடு நிற்றல் –

சீர் அறிந்து தோழி மீர் சென்று கொணர்ந்து எனக்குப்
போர முலை முகட்டில் பூட்டுமினோ நீர் அவுணர்
பொன்ற ஊர் புட் கழுத்தில் பொன்னை மாணிக்கத்தை
நின்ற ஊர் நித்திலத்தை நீர் –89-

தோழி மீர்
நீர்
அவுணர் பொன்ற
ஊர் -ஏறி நடத்துகின்ற
புட் கழுத்தில் பொன்னை -திருவடி மேலே பொன் போலே பிரகாசிப்பவனும்
மாணிக்கத்தை -இயற்கையிலே கரு மாணிக்கம் பொன்ற கரு நிறம் உள்ளவனும் ஆகிய
நின்ற ஊர் நித்திலத்தை-பத்தராவிப் பெருமாள் -முத்து போன்றவனை
பெறுவதற்கு அருமையாலும் ஒண்மையாலும் பொன்னாகவும்
கரு நிறம் என்பதால் மாணிக்கமாகவும்
ஸ்ரமஹரமாய் இருப்பதால் முத்தாகவும் அருளிச் செய்கிறார்
நின்ற ஊர் நின்ற நித்திலத் தொத்தினை -நின்ற ஊர் நித்திலத்தை
சீர் அறிந்து -அவனது சிறப்பை உணர்ந்து
சென்று -போய்க்கிட்டி
கொணர்ந்து எனக்குப் போர முலை முகட்டில் பூட்டுமினோ-பொன் மாணிக்கம் முத்து என்பதால் பூட்டுமினோ என்கிறாள் –

மலராள் தனத்துள்ளான்
மற்று ஒருவருக்கு என்னைப் பேசல் ஒட்டேன் மால் இருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் –
அனந்யார்ஹை-சிறப்பை அறிந்து என்றுமாம்
தனது நோயையும் நோயின் காரணத்தையும் நோய் தீர்க்கும் மருந்தையும் பிரயோகிக்கும் விதத்தையும் அறிவிக்கிறாள்

—————————————————————————

90-திரு எவ்வுளூர்-

நீர்மை கெட வைத்தாரும் நின்னோடு எதிர்ந்தாரும்
சீர்மை பெற நின் அடிக்கீழ்ச் சேர்க்கையினால் நேர்மை இலா
வெவ் உளத்தனேன் செய் மிகையைப் பொறுத்து அருளி
எவ்வுள் அத்தனே நீ இரங்கு–90-

எவ்வுள் அத்தனே
நீ
நீர்மை கெட வைத்தாரும்-சிசுபாலன் போன்றோர்
நின்னோடு எதிர்ந்தாரும் -தந்த வக்ரன் போன்றோர்
சீர்மை பெற
நின் அடிக்கீழ்ச் சேர்க்கையினால் -பரம காருண்யத்தினால் -இத்தையே வியாஜமாகக் கொண்டு அருளினாய்
எம்பெருமானது திருவடியே வீடு என்பதால் அடியேனுக்கும்
நேர்மை இலா வெவ் உளத்தனேன் செய் மிகையைப் பொறுத்து அருளி இரங்கு–
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே –

சாலிஹோத்ர மகரிஷிக்கு பிரத்யஷம் -உறைவதற்கு எவ்வுள் கேட்டு நித்ய சந்நிதி கொண்டு அருளிய திவ்ய தேசம் –

——————————————————————

91-திரு நீர் மலை –

இரங்கும் உயிர் அனைத்தும் இன் அருளால் காப்பான்
அரங்கன் ஒருவனுமே ஆதல் கரங்களால்
போர் மலை வான் வந்த புகழ் வாணன் காட்டினான்
நீர் மலை வாழ் எந்தை எதிர் நின்று –91–

இரங்கும் உயிர் அனைத்தும்-வருந்துகின்ற எல்லா உயிர்களையும்
இன் அருளால் காப்பான் அரங்கன் ஒருவனுமே ஆதல் கரங்களால் -ஆயிரம் கரங்களினாலும்
போர் மலைவான் வந்த-போர் செய்யும் படி வந்த –
புகழ் வாணன் காட்டினான்
நீர் மலை வாழ் எந்தை எதிர் நின்று —

தன்னை ஆஸ்ரயித்த வாணனை -தலையிலே பூ வாடாதே நோக்குகிறேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி தன்னைத் தொழுத கைகளை
கள்ளிக் காடு சீய்த்தால் போலே சீய்க்கக் கண்டு உயிர் உண்டால் உப்பு மாறி உண்ணலாம் என்று நெற்றியிலே
கண்ணைப் புதைத்துக் கொண்டு நழுவினான் ஆகையாலும் ரஷகன் ஆக மாட்டான் –
ஈஸ்வரன் மாதாக்கள் கை விட்ட அவஸ்தையிலும் பின்னி நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றான் —
நாராயணத்வ பிரயுக்தமான உதரத் தெரிப்பாலே அகவையில் நின்று சத்தையை நோக்கிக் கொண்டு போருகையாலே
இவனே எல்லாருக்கும் ரஷகன் -ப்ரபன்ன பரித்ராணம்
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலமே -நம்மாழ்வார் –

———————————————————————–

92-திரு இட வெந்தை —

நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து
கொன்று திரியும் கொடு வினையார் இன்று
வெருவிட எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன்
திருவிட வெந்தைக்கே செறிந்து –92-

நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து -ஸ்தாவரமும் ஜங்கமும்ஆகிய எல்லா பிறவிகளையும் எனக்கு உண்டாக்கி
கொன்று திரியும் கொடு வினையார் -வருத்திக் கொண்டு திரியும் கொடிய வினைகள்
இன்று வெருவிட-அஞ்சி ஓடும்படி
யான்
திருவிட வெந்தைக்கே செறிந்து
எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன் –

வானோ மறி கடலோ -இத்யாதி –

——————————————————————————-

93-திருக் கடன் மல்லை–

செறிந்த பணை பறித்து திண் களிற்றைச் சாடி
முறிந்து விழப் பாகனையும் மோதி எறிந்து
தருக்கு அடல் மல்லைக் மைத்தான் தஞ்சம் என்று நெஞ்சே
திருக்கடல் மல்லைக்குள் திரி –93–

நெஞ்சே
செறிந்த பணை பறித்து-தந்தங்களை பிடுங்கி அவற்றைக் கொண்டே
திண் களிற்றைச் சாடி முறிந்து விழப் பாகனையும் மோதி எறிந்து
தருக்கு அடல் மல்லைக் மைத்தான் -செருக்கையும் தேக வலிமையையும் உடைய மல்லர்களை பொருது கொன்றவனாகிய திருமாலே
தஞ்சம் என்று திருக்கடல் மல்லைக்குள் திரி —
அவனே விரோதிகளைப் போக்கி நல கதி அளித்து அருள்வான் –

——————————————————————————-

94- திருவல்லிக்கேணி —

திரிந்து உழலும் சிந்தை தனிச் செவ்வே நிறுத்தி
புரிந்து புகன்மின் புகன்றால் மருந்து ஆம்
கருவல்லிக்கு ஏணி ஆம் மாக்கதிக்கு கண்ணன்
திருவல்லிக்கேணி யான் சீர் –94-

திரிந்து உழலும்-ஐம் புலன் ஆசைகளில் சென்று அலைகின்ற
சிந்தை தனிச் செவ்வே நிறுத்தி
திருவல்லிக்கேணி யான்-கண்ணன் – சீர் -பார்த்த சாரதி-வேங்கட கிருஷ்ணன் உடைய கல்யாண குணங்களை
புரிந்து புகன்மின் -விரும்பிக் கூறுமின்
புகன்றால்
கருவல்லிக்கு -கர்ப்பம் ஆகிய கொடிக்கு மருந்து ஆம்
மாக்கதிக்கு ஏணி ஆம்-

—————————————————————————-

95-திருக்கடிகை -சோளிங்க புரம்–

சீர் அருளால் நம்மைத் திருத்தி நாம் முன் அறியாக்
கூர் அறிவும் தந்து அடிமை கொண்டதற்கே நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
தரு கடிகை மாயவனைத் தான் –95-

மனமே
சீர் அருளால் நம்மைத் திருத்தி
நாம் முன் அறியாக் கூர் அறிவும் தந்து
அடிமை கொண்டதற்கே
முத்தி தரு கடிகை மாயவனை
நேரே
ஒரு கடிகையும் -ஒரு நாழிகை பொழுதாவாது
உள்ளுகிலாய் -நினைக்க மாட்டாய் –
தான் -ஈற்று அசை –
கடிகாசலம் -சோழ தேசத்துக்கு வளம் மிக்க ஸ்ரீ நரசிம்ஹம் நித்ய வாசம் செய்து அருளும் ஸ்தலம்
என்பதால் சோளசிம்ஹபுரம்-
சோளசிம்ஹராஜன் உடைய புரம் என்றுமாம்

————————————————————————–

வட நாட்டுத் திருப்பதிகள்–12-

96-திருவேங்கடம் –

தானே சரணமுமாய் தானே பலமுமாய்
தானே குறை முடிக்கும் தன்மையான் தேன் ஏய்
திருவேங்கடம் தொழுதேம் தீய விபூதிக்குள்
மருவேம் கடந்தனெம் இவ்வாழ்வு –96–

தானே சரணமுமாய்
தானே பலமுமாய்
தானே குறை முடிக்கும் தன்மையான்
தேன் ஏய்திருவேங்கடம் தொழுதேம்
தீய விபூதிக்குள் மருவேம்
கடந்தனெம் இவ்வாழ்வு –சம்சார வாழ்வைக் கடந்து விட்டோம் –
தெளிவு பற்றி எதிர் காலத்தை இறந்த காலத்தில் அருளிச் செய்கிறார் -கால வழுவமைதி –

———————————————————

97-திருச் சிங்கவேள் குன்றம் -திரு அஹோபிலம் –

வாழ் குமரன் மேல் கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே
சூழ் கருணையும் முனிவும் தோன்றினவால் கேழ் கிளரும்
அங்கவேள் குன்ற அழல் சாபத்தைப் பிளந்த
சிங்கவேள் குன்றத்தினார்க்கு –97-

கேழ் கிளரும் -நிறம் விளங்குகின்ற
அங்கவேள் -அழகிய தேகத்தை யுடைய மன்மதன்
குன்ற அழல் சரபத்தைப் பிளந்த -சிவபிரானது ரூபமான சரபம் என்னும் விலங்கை பிளந்து அளித்து அருளிய
இரண்டு தலைகள் சிறகுகள் கூறிய நகங்கள் எட்டுக் கால்கள் மேல் நோக்கிய கண்களை யுடைய மிருக விசேஷம் –
சரபம் பறவையும் என்பர்
சிங்கவேள் குன்றத்தினார்க்கு —
வாழ் குமரன் மேல் -அருள் பெற்ற பிரகலாதன் மேல்
ஓர் முகத்தே சூழ் கருணையும்
கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே முனிவும் தோன்றினவால்
இப்படி மாறான குணங்களை ஓன்று சேர வைத்த அகடிகடநா சமர்த்தன் –
சிங்கமாகி அழகியவனாய் அனைவராலும் விரும்பத்தக்கவன் என்பதால் சிங்க வேள் குன்றம் –
நவ நரசிம்ஹ அஹோபில ஷேத்ரம் –

——————————————————————-

98-திருவயோத்தி –

ஆர்க்கும் இது நன்று தீது ஆனாலும் நெஞ்சே நீ
பார்க்கும் பல கலையும் பன்னாதே சீர்க்கும்
திரு ஐ யோதிப் புயலை சீரிய மெய்ஞ்ஞானத்து
உருவை ஒத்தின் பொருளை ஓர் –98–

நெஞ்சே இது -யான் சொல்லும் இவ்விஷயம் –
ஆர்க்கும் நன்று
தீது ஆனாலும் -ஒரு கால் தீமையே நேர்வதானாலும்
நீ
பார்க்கும் பல கலையும்-பலவகை சாஸ்திரங்களையும்
பன்னாதே-கண்டபடி கற்காமல்
சீரிய மெய்ஞ்ஞானத்து உருவை -தத்வ ஞான ஸ்வரூபி அன்றோ இவன்
ஒத்தின் பொருளை
சீர்க்கும் திரு ஐ யோதிப் புயலை
ஓர் –த்யாநிப்பாயாகா –
சாஸ்திர ஞானம் பஹூ கிலேசம் -புத்தே சலன காரணம் -உபதேசாத் ஹரிம் புத்வா விரமேத் சர்வ கர்ம ஸூ –

———————————————————

99-திரு நைமிசாரணியம் –

ஒரு அறிவும் இல்லாத என் போல்வார்க்கு உய்யலாம்
பேர் அறிவு உண்டேனும் பிறர்க்கு அரிது பார் அறிய
நைமிசாரண்யத்து நாதர் அடியாரோடும்
இம்மிசார்வு உண்டாயினால் –99-

பார் அறிய -உலகோர் அறியும்படி
நைமிசாரண்யத்து நாதர் அடியாரோடும் –
இம்மிசார்வு உண்டாயினால் -கொஞ்சமாவது சம்பந்தம் ஏற்படுமே யாயின்
ஒரு அறிவும் இல்லாத என் போல்வார்க்கு
உய்யலாம்
பேர் அறிவு உண்டேனும் பிறர்க்கு அரிது-அவ்வாறு பாகவத சம்பந்தம் கொஞ்சம் கூட இல்லாதார்க்கு
விசேஷ ஞானம் உளராய் இருந்தாலும் ஏறுவது அரிதாகும் –

பஸூர் மனுஷ்யா பஷீவா எச வைஷ்ணவம் ஆஸ்ரய தேனைவதே பிரயாச்யந்தி -தத் விஷ்ணோ பரமம் பதம் –
பாகவத சம்பந்தமே நிரபேஷ சாதனம் –
பாகவதர்கட்கு நிழல் கொடுத்த புளிய மரம் மா முனிகள் கடாஷத்தால் முக்தி பெற்றதே
தர்ப்ப ஆழியை மண்ணில் உருட்டி பிரமதேவன் தவம் செய்ய இடம் இந்த திவ்ய தேசம் என்று காட்டிக் கொடுத்தான் ‘
நைமிசம் -நேமி விழுந்த இடம் –

——————————————————————

100-திருச் சாளக்கிராமம் –

உண்டாம் முறைமை உணர்ந்து அடிமைப் பேர் பூண்டேன்
பண்டம் குடி குலத்தால் பல் மதத்தால் கொண்டாட்டால்
ஆளாம் கிராமத்தால் அல்லல் பேர் பூணாமல்
சாளக்கிராமத்தார் தாட்கு –100-

பண்டம் குடி குலத்தால்
பல் மதத்தால்
கொண்டாட்டால் -செய்யும் தொழில்கள் பொன்ற ஏற்றத்தாலும்
ஆளாம் கிராமத்தால் -உரிமை கொண்டு வசிக்கும் கிராமத்தாலும்
அல்லல் பேர் பூணாமல் -துன்பத்துக்கு இடமான பெயரை வைத்துக் கொள்ளாமல்
சாளக்கிராமத்தார் தாட்கு —
உண்டாம் முறைமை உணர்ந்து அடிமைப் பேர் பூண்டேன்-தாஸ்ய நாமத்தை பூணிக் கொண்டேன்

ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் ஸ்ரீ வைஷ்ணவ தாசன்
அஹங்காரம் ஆகிற ஆர்ப்பை துடைத்தால் அத்த்மாவுக்கு அழியாத பேர் அடியான் என்று இறே-
கிராம குலாதிகளால் வரும் பேர் அனர்த்த ஹேது —

——————————————————————–

101-திருவதரியாச்சிரமம் —

தாட்கு அடிமை என்று தமை உணரார்க்கு எட்டெழுத்தும்
கேட்க வெளியிட்டருளும் கேசவனை வேட்கையொடு
போவது அரிது ஆனாலும் போய்த் தொழுவோம் நெஞ்சமே
மாவதரியாச்சிரமத்து –101-

நெஞ்சமே
தாட்கு அடிமை என்று தமை உணரார்க்கு
எட்டெழுத்தும் கேட்க வெளியிட்டருளும் கேசவனை வேட்கையொடு போவது அரிது ஆனாலும்
போய்த் தொழுவோம் மாவதரியாச்சிரமத்து –
நர நாராணனாய் உலகத்து அறநூல் சிந்காமை விரித்தவன்
பதரி இலந்தை மரம் -இலந்தை மரங்கள் அடர்ந்த ஆஸ்ரமம்

————————————————————————–

102-திருக் கங்கைக் கறைக் கண்டம் என்னும் கடி நகர் –

மத்தால் கடல் கடைந்து வானோர்க்கு அமுது அளித்த
அத்தா எனக்கு உன் அடிப் போதின் புத்தமுதை
கங்கைக் கரை சேரும் கண்டத்தாய் புண்டரிக
மங்கைக்கு அரசே வழங்கு –102-

மத்தால் கடல் கடைந்து வானோர்க்கு அமுது அளித்த அத்தா
புண்டரிக மங்கைக்கு அரசே
எனக்கு உன் அடிப் போதின் புத்தமுதை
கங்கைக் கரை சேரும் கண்டத்தாய் வழங்கு —

தேனே மலரும் திருப்பாதம் –
திருத் தேவ பிரயாகை -ஸ்ரீ புண்டரீக மங்கை இத் ஸ்தலத்து திரு நாச்சியார் திரு நாமம் –

———————————————————————-

103-திருப்பிருதி –

வழங்கும் உயிர் அனைத்தும் வாரிவாய்ப் பெய்து
விழுங்கும் கவந்தன் விறல் தோட் கிழங்கை
பொருப்பு இருதிக்கும் கிடந்தால் போல் துணித்து வீழ்த்தான்
திருப்பிருதிக்கு என் நெஞ்சே செல் -103-

என் நெஞ்சே
வழங்கும் உயிர் அனைத்தும் -சஞ்சரிக்கும் எல்லா பிராணிகளையும்
வாரி வாய்ப் பெய்து -திரட்டி எடுத்து தனது திரு வாய்க்குள் தள்ளி
விழுங்கும் கவந்தன் விறல் தோட் கிழங்கை -விழுங்கும் கபந்தன் உடைய வலிமையுள்ள தோளின் மூல பாகத்தை
தோட் கிழங்கு – -புஜ மூலம் –
பொருப்பு இரு திக்கும் கிடந்தால் போல் துணித்து வீழ்த்தான்
திருப்பிருதிக்கு செல் –
யோஜனை தூரம் நீண்ட தோள்கள் என்பதால் இரு பொறுப்புகள் கீழே விழுந்தன போலே என்கிறார் –

——————————————————————–

104-திருவட மதுரை –

செல்வம் உயிர் உடம்பு சேர உரித்தாக்கி
வல்வினையை நீக்குமினோ மாந்தர்காள் தொல்லை
வடமதுரையான் கழலே வாய்த்த தஞ்சம் என்று
திடமது உரை செய்தான் திறத்து –104-

மாந்தர்காள்
கழலே வாய்த்த தஞ்சம் என்று
திடமது உரை செய்தான்-திடம் அது உறுதியாக -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று உபதேசித்து அருளினவன்
தொல்லை வடமதுரையான் திறத்து-திரு வடமதுரை திருவவதரித்த பெருமான் இடத்தில் –
செல்வம் உயிர் உடம்பு சேர உரித்தாக்கி -வல்வினையை நீக்குமினோ
கண்ணனுக்கு மதுரமாய் இருக்கும் ஸ்தலம் -மது அசுரனை நிரசித்த இடம் -மதுரை பெயர் காரணம் –

————————————————————————-

105-திருத் துவாரகை –

திறம் திறமாத் தாம் துய்க்கும் தீம் சுவையை நாடி
அறம் திறம்பி பாதகர் ஓர் ஐவர் நறுந்துளவ
மாதுவரை யோனே மனம் துணையாகக் கொண்டு என்னைக்
காதுவர் ஐயோ மெய் கலந்து –105-

நறுந்துளவ
மாதுவரையோனே
பாதகர் ஓர் ஐவர்
திறம் திறமாத் தாம் துய்க்கும் தீம் சுவையை நாடி
அறம் திறம்பி
மனம் துணையாகக் கொண்டு
மெய் கலந்து
என்னைக் காதுவர் ஐயோ —
அகன்ற துவாரத்தை யுடையது திருத் துவாரகா –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமதில் நாயகராய் வீற்று இருந்த மணவாளர் –

———————————————————

106-திருவாய்ப்பாடி –

கலந்து அமரரோடும் கரை கண்டாரோடும்
பொலிந்து திரு நாட்டு இருக்கப் போவீர் மலிந்த புகழ்
அண்டராய்ப் பாடி அமலர் அடியார் அடியார்
தொண்டராய்ப் பாடித் தொழும்–106-

மலிந்த புகழ்
அண்டராய்ப் பாடி -அண்டர் -இடையர்கள் வாழ்கின்ற ஆய்ப்பாடி திவ்ய தேசத்தில் எழுந்து அருளி இருக்கும்
அமலர்
அடியார் அடியார் தொண்டராய்ப் பாடித் தொழும்–தாசானுதாசராய் அடிமைப் பட்டவராய் -அவர்கள் குணங்களைப் பாடி
அவரை வணங்குங்கோள்-அப்படி வணங்கினால்
கலந்து அமரரோடும் கரை கண்டாரோடும் பொலிந்து திரு நாட்டு இருக்கப் போவீர்
கரை கண்டோர் துளக்கமில்லா வானவர் –
பெருமை மிக்க இடையர்கள் வசிக்கும் சேரி பொருளில் திரு ஆய்ப்பாடி -திரு கோகுலம் –

——————————————————————

107–திருப்பாற் கடல் –

தொழும் பாய நான் நல்ல சூது அறிந்து கொண்டேன்
செழும் பாய் அலை முத்தம் சிந்தி முழங்கும்
திருப்பாற் கடலான் தாள் சேர்ந்தார் அடி சேர்ந்து
இருப்பாற்கு அடலாம் இடர் –107-

தொழும் பாய நான்-எம்பிரானுக்கு அடியேனான நான்
நல்ல சூது அறிந்து கொண்டேன் -நல்ல உலவை அறிந்து கொண்டேன்
செழும் பாய் அலை முத்தம் சிந்தி முழங்கும் திருப்பாற் கடலான் தாள் சேர்ந்தார்
அடி சேர்ந்து இருப்பாற்கு அடலாம் இடர் -ஒழித்தல் எளிதாம்
அல்ப செயலால் பெரும் பேறு சித்திக்கும் என்பதால் நல்ல சூது என்கிறார் –

வ்யூஹ நிலை -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரத்த அர்த்தமாகவும்
சம்சாரிகள் சம் ரஷண அர்த்தமாகவும்
உபாசக அனுக்ரஹ அர்த்தமாகவும்
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்த ரூபேண நிற்கும் நிலை –

—————————————————————————–

திரு நாட்டுத் திருப்பதி -108-

இடருடையேன் சொல்ல எளிதோ பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே -தொடரும்
கருவைகும் தம் பிறவிக் கட்டு அறுத்து மீளாத்
திருவைகுந்தம் பெறுவார் சீர் –108-

தொடரும் -தொடர்ந்து வருவதும்
கருவைகும் -கர்ப்பத்தினுள் பிரவேசிக்க காரணமான
தம் பிறவிக் கட்டு அறுத்து
மீளாத் திருவைகுந்தம் பெறுவார் சீர் –
பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே
இடருடையேன் சொல்ல எளிதோ -கைமுதிக நியாயம் –

பரத்வமாவது அகால கால்யமான நலம் அந்தமில்லதோர் நாட்டிலே நித்ய முக்தருக்கு
போக்யனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு –

——————————————————————-

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற் பாதம் என் தலை மேல் பூ –

நூலோதி வீதி வாழி என வரும் திரளை வாழ்த்துவார் தம் மலர் அடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே –

———————————————————-

பதின்மர் உரைத்த பதி ஒரு நூற்று எட்டும்
துதி செய்ய அந்தாதி சொன்னான் அதிக
குணவாள பட்டர் இரு கோகனத் தாள் சேர்
மணவாள தாசன் வகுத்து

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: