ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி –பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் —41-58–/மலை நாட்டுத் திருப்பதிகள் –59-71–/நடு நாட்டுத் திருப்பதிகள் -72-73–

பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் –18-

41- திரு மால் இருஞ்சோலை —

பணிந்தேன் திருமாலை பாமாலை தாளில்
அணிந்தேன் அருள் தஞ்சமாகத் துணிந்தேன்
திருமால் இருஞ்சோலை சேர்ந்தேன் எனக்கு
வருமால் இருஞ்சோதி வான் –41–

திருமால் இருஞ்சோலை சேர்ந்தேன்
பணிந்தேன் திருமாலை
பாமாலை தாளில் அணிந்தேன்
அருள் தஞ்ச மாகத் துணிந்தேன்
எனக்கு
வருமால் இருஞ்சோதி வான் -ஜோதிமயமான பரம பதம் கிட்டும் -இது திண்ணம் –

பணிந்தேன் திருமேனி பைங்கமலக் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது-

————————————————————-

42-திருக் கோட்டியூர் –

வான்பார்க்கும் பைங்கூழ் போல் வாளா உனது அருளே
யான் பார்க்க நீ பார்த்து இரங்கினாய்-தேன் பார்ப்பின்
ஓசைத் திருக் கோட்டி யூரானே இன்னமும் என்
ஆசைத் திருக்கு ஒட்டி ஆள் –42-

தேன் பார்ப்பின் ஓசைத் -இள வண்டுகளின் உடைய ரீங்கார ஓசை மிகுந்த
சாரக்ராஹி -எம்பெருமானார் திருக் கோட்டியூர் நம்பியின் இடத்தே திரு மந்த்ரத்தை உபதேசம் கொண்டு அருளி
வெளியிட்டு அருளியதை ஸூ சிப்பிக்கிறார்
திருக் கோட்டி யூரானே-
வான்பார்க்கும் பைங்கூழ் போல் –
வானத்து எழுகின்ற மழையையே எதிர் நோக்குகின்ற பசிய பயிரைப் போலே
வாளா -எப்பொழுதும்
உனது அருளே
யான் பார்க்க -ஆதாரத்தோடு எதிர் நோக்க
நீ பார்த்து இரங்கினாய்-நீ கடாஷித்து அருள் புரிந்தாய்
இன்னமும் என் ஆசைத் திருக்கு ஒட்டி ஆள் –இன்னமும் உலகப் பற்றாகிய மாறுபாட்டை போக்கி என்னை ஆட்கொள்வாயாக-

மண் ஆசை பெண் ஆசை பொன் ஆசை
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை -இருள் தரும் மா ஞாலம் –
திருக் கோஷ்டீ புரம்

———————————————————————-

43-திரு மெய்யம்-பிரிவாற்றாத தலைவி இரங்கிக் கூறுதல் –

ஆள் ஆய் உனக்கு அன்பு ஆய் ஆசை ஆய் நாணிலி ஆய்
வாளா மனைவி என்று வாழ்வேனைக் கேளாய்
திரு மெய்ய மாயா சிலைகால் வளைத்து
வரும் எய்ய மாயா மதன் –43-

திரு மெய்ய மாயா
உனக்கு
ஆள் ஆய்
அன்பு ஆய்
ஆசை ஆய்
நாணிலி ஆய் -யானே என் காமத்தை வெளியிட்டு புலம்பும் படி -வெட்கம் இல்லாமல் –
வாளா -பெயர் மாத்ரத்திலே -மனைவி என்று வாழ்வேனைக்
கேளாய் -நீ கேளாமல் உபேஷித்து விட்டாய்
மாயா மதன் -அழிந்து ஒழியா மன்மதன்
சிலைகால் வளைத்து வரும் எய்ய -என் செய்வேன்
நீ கேட்டால் தான் நான் வாழ்வு பெறுவேன் –

சத்ய கிரி -சத்ய தேவதைகள் -சத்ய கிரி நாதனை குறித்து -தவம் இருந்த ஸ்தலம் –

————————————————————————-

44-திருப் புல்லாணி –

மத யானைக் கோள் விடுத்து மா முதலை கொன்ற
கதையால் இதயம் கரையும் முதல் ஆய
புல்லாணி மாலே புறத்தோர் புகழ் இருப்பு
வல் ஆணி என் செவிக்கு மாறு –44-

முதல் ஆய புல்லாணி மாலே
மத யானைக் கோள் விடுத்து மா முதலை கொன்ற கதையால் இதயம் கரையும்
அது இல்லாமல்
புறத்தோர் புகழ்-தேவதாந்த்ரங்கள் யுடைய புகழ்
இருப்பு வல் ஆணி என் செவிக்கு மாறு –இரும்பு போன்ற வழிய ஆணி போலே
செவிக்கு இனாத கீர்த்தியார் –

த்ரஷ்டவ்யர் அல்லாரோ பாதி ஸ்ரோதவ்யரும் அல்லர் -கேட்க வேண்டி இருந்தி கோளேயாகிலும் -பித்ருவத பிரசத்தி என்ன –
தத் பலமான பிஷாட நசாரித்ர ப்ரதை என்ன -அத்வரத்வம்ச கதை என்ன -ஸ்வ ஸூ ரவதை கதை என்ன இத்யாதி
ஸ்ரவண கடுகமான கீர்த்தியை யுடையராய் இருப்பார் -ம்ருதனான புத்ரனை சாந்தீபனுக்கு மீட்டுக் கொடுத்தான்
புனராவ்ருத்தி இல்லாத தேசத்தின் நின்றும் விதிக்க புத்ரர்களை மீட்டுக் கொடுத்தான்
என்றும் இத்யாதிகளாலே சம்ச்ரவே மதுரமான கீர்த்தியன் இறே
திருப் புல்லணை மருவி திருப் புல்லாணி -தர்ப்ப சயன பெருமாள் –

———————————————————————————

41-திருத் தண் காலூர் -அலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்தி இரங்கல் –

மாறு பட வாடை எனும் வன்கால் எனமுலை மேல்
ஊறு பட ஊர்ந்த உளைவு எல்லாம் மாற
திருத் தண் காலூரான் திருத் தண் துழாயின்
மருத் தண் கால் ஊராதோ வாய்ந்து –45–

வாடை எனும் வன் கால்
மாறு பட-எனக்கு விரோதமாக வந்து
எனமுலை மேல் ஊறு பட ஊர்ந்த உளைவு எல்லாம் மாற
திருத் தண் காலூரான் திருத் தண் துழாயின்
மருத் தண் கால் ஊராதோ வாய்ந்து –வாசனை பொருந்திய -குளிர்ந்த காற்று இனிதாக பொருந்தி ஊராதோ -என் மீது தவழ்ந்து வீசாதோ

கந்தவஹன் -கந்தவாஹன் -வாடை எனும் வன்கால் -பிறரை வருத்த துணை வேண்டாத வன்மை உள்ளது என்றபடி
பகவத் சம்பந்தம் உள்ளவற்றை கொண்டு ஆறி இருக்கலாமே -என்றபடி –

—————————————————————————-

46-திருமோகூர் -அன்னத்தைத் தூது விடுத்த தலைவி அதனைக் குறித்து ஐயுறுதல் —

வாயால் மலர் கோதி வாவி தொறும் மேயுமோ
மேயாமல் அப்பால் விரையுமோ மாயன்
திரு மோகூர் வாய் இன்று சேருமோ நாளை
வருமோ கூர் வாய் அன்னம் வாழ்ந்து –46-

கூர் வாய் அன்னம்-என்னால் தூது விடப்பட்ட அன்னம் –
வாயால் மலர் கோதி -தாமரை மலரின் இதழ்களை கோதிக் கொண்டு
வாவி தொறும் மேயுமோ -இடை வழியில் உள்ள தடாகங்கள் தொறும் மேயுமோ
மேயாமல்
அப்பால் விரையுமோ
மாயன் திரு மோகூர் வாய் இன்று சேருமோ
நாளை வருமோ
வாழ்ந்து —

ஸ்ரீ மோஹன புரம் –

————————————————————————————–

47-திருக் கூடல் –

வாழ்விப்பான் எண்ணமோ வல்வினையில் இன்னம் எனை
ஆழ்விப்பான் எண்ணமோ அஃது உரையாய் தாழ்வு இலாப்
பாடல் அழகு ஆர் புதுவைப் பட்டர் பிரான் கொண்டாடும்
கூடல் அழகா நின் குறிப்பு –47–

அஃது அறியேன் -பாட பேதம் –
தாழ்வு இலாப் -இழிவு இல்லாத –
பாடல் அழகு ஆர் புதுவைப் பட்டர் பிரான் கொண்டாடும் கூடல் அழகா
நின் குறிப்பு —உனது திரு உள்ளக் கருத்து
என்னை –
வாழ்விப்பான் எண்ணமோ
வல்வினையில் இன்னம் எனை ஆழ்விப்பான் எண்ணமோ அஃது உரையாய் -அஃது அறியேன் -பாட பேதம்

அஷ்டாங்க விமானம் –வையம் தாய பெருமான் –

——————————————————————

48-ஸ்ரீ வில்லி புத்தூர் –

குறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கைத்தோ கோதை
நிறத்த ஊர் விண்டு சித்தர் நீடு ஊர் பிறப்பு இலி ஊர்
தாழ்வு இல் இ புத்தூர் என்று ஐவர்க்குத் தான் இரந்தான்
வாழ் வில்லி புத்தூர் வளம் –48-

கோதை நிறத்த ஊர் -ஆண்டாள் திருவவதாரத்தால் மேம்பட்ட திவ்ய தேசம்
விண்டு சித்தர் நீடு ஊர் -பெரியாழ்வார் வாழ்ந்த பெரிய திவ்ய தேசம் –
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார் அன்றோ -இவர்
பிறப்பு இலி ஊர் -ஜனனம் இல்லாதவன் உடைய திவ்ய தேசம்

பிரணவம் போலே ஆண்டாள் பெருமாள் பெரியாழ்வார் மூவரும் தன்னிடம் கொண்டு இருப்பதால் -இதன் பெருமை ஒருவரால் சொல்ல முடியுமோ
பொன்னும் முத்தும் மாணிக்கம் மூன்றும் இட்டுச் செய்த ஆபரணம் போலே -திவ்ய தேசம் –
பிராட்டிக்கு ஸ்ரீ மிதிலையும் ஸ்ரீ அயோத்தியும் போலேயும் -நப்பின்னை பிராட்டிக்கு கும்ப குலமும் திரு ஆய்ப்பாடியும் போலேவும் அன்று
இறே –ஆண்டாளுக்கு பிறந்தகமும் புக்ககமும் இங்கேயே இருக்கும் ஏற்றம் உண்டே

தாழ்வு இல் இ புத்தூர் என்று ஐவர்க்குத் தான் இரந்தான் –
தாழ்வு இல்லாத புதிய ஊர்களை பஞ்ச பாண்டவர்க்கு கொடுக்க -பாண்டிய தூதனாக சென்று இரந்து
வாழ் வில்லி புத்தூர் வளம் -செழிப்பானது
குறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கைத்தோ-ஒருவரால் நினைத்து பாராட்டும் தன்மை உடைத்து அல்லவே –

கோதை நிறத்தவூர் -விண்டு சித்தர் நீடூர் -பிறபபிலியூர்-குறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கைத்தோ –
தொடர் நிலை செய்யுள் குறி அணி –

——————————————————————-

49-திருக் குருகூர் –

வளம் தழைக்க உண்டால் என் வாசம் மணத்தால் என்
தெளிந்த கலை கற்றால் என் சீ சீ குளிர்ந்த பொழில்
தண் குருகூர் வாவிச் சடகோபன் ஊர் எங்கள்
வண் குருகூர் என்னாத வாய் –49-

குளிர்ந்த பொழில்
தண் குருகூர் வாவிச்
சடகோபன் ஊர்
எங்கள் வண் குருகூர் என்னாத வாய் — வளப்பம் பொருந்திய எங்கள் திருக் குருகூர் என்று
ஒரு தடவையாவது சொல்லாத வாயானது
வளம் தழைக்க உண்டால் என்
வாசம் மணத்தால் என்
தெளிந்த கலை கற்றால் என்
சீ சீ -இகழ்ச்சிக் குறிப்பிடைச் சொல்

க- பிரமனே இங்கே தவம் செய் என்று காட்டிக் கொடுத்தலால் -குருகா புரி -திரு நாமம் –
ஆழ்வார் திருவவதரித்ததால் ஆழ்வார் திருநகரி –
ஆழ்வார் திரு நகரி ஆதிதேவ நாதர் திருக் கோயில் உபய பிரதானம் –

———————————————————————

50-திருத் தொலைவில்லி மங்கலம் —

வாயும் மனைவியர் பூ மங்கையர்கள் எம்பிராற்கு
ஆயுதங்கள் ஆழி முதல் ஐம் படைகள் தூய
தொலை வில்லி மங்கலம் ஊர் தோள் புருவம் மேனி
மலை வில் இமம் கலந்த வான் –50–

எம்பிராற்கு
வாயும் மனைவியர்
பூ மங்கையர்கள் -தாமரை மலராள் -என்றும் ஸ்ரீ தேவி பூ தேவிமார் என்றுமாம்
பங்கய மின்னொடு பார் மகள் தேவி -பூ மடந்தையும் நில மடந்தையும் தேவியர் -தேவிமார் ஆவார் திருமகள் பூமி –
ஆயுதங்கள் ஆழி முதல் ஐம் படைகள்
தூய தொலை வில்லி மங்கலம் ஊர்
தோள் புருவம் மேனி –முறையே -மலை வில் இமம் கலந்த வான் –குளிர்ச்சி பொருந்திய ஆகாசம் -போலும்
பனி பொருந்திய விசும்பு என்றுமாம் –

———————————————————————

51-ஸ்ரீ வர மங்கை –

வானோர் முதலா மரம் அளவா எப்பிறப்பும்
ஆனேற்கு அவதியிடல் ஆகாதோ தேன் ஏயும்
பூவர மங்கை புவி மங்கை நாயகனே
சீ வர மங்கை அரை சே –51-

தேன் ஏயும் பூவர மங்கை
புவி மங்கை நாயகனே
சீ வர மங்கை அரை சே –
வானோர் முதலா ஆ
மரம் அளவா
எப்பிறப்பும் ஆனேற்கு -ஏழு வகை பிறப்பில் உழன்று -இருக்கும் எனக்கு
அவதியிடல் ஆகாதோ-இனி யாயினும் ஒரு முடிவை ஏற்படுதல் கூடாதோ –

வானமா மலை தோத்தாத்ரி -ஸ்ரீ வர மங்கை –

—————————————————————-

52-திருப்பேரை –

அரைசு ஆகி வையம் முழுது ஆண்டாலும் இன்பக்
கரைசார மாட்டார்கள் கண்டீர் முரைசு ஆரும்
தென் திரைப் பேரைப் பதியான் சீர் கேட்டு நாவில் அவன்
தன் திருப் பேரைப் பதியா தார் –52-

முரைசு ஆரும் -பேரிகை வாத்தியம் முழங்கப் பெற்ற -வெற்றி முரசு -கொடை முரசு -மங்கல முரசு -மூன்றையும் குறிக்கும்
தென் திரைப் பேரைப் பதியான்
சீர் கேட்டு -சிறப்பைக் கேட்டு
நாவில் அவன் தன் திருப் பேரைப் பதியா தார் –திருத்தமாக தமது நாக்கினிடத்தில் உச்சரியாதார்கள்
அரைசு ஆகி -ஒரு நாயகமாய்
வையம் முழுது ஆண்டாலும் இன்பக் கரைசார மாட்டார்கள் கண்டீர்
அரசை முரசை -எதுகை நோக்கி இடைப் போலி –

————————————————————————

53-ஸ்ரீ வைகுந்தம் –தலைவி இளமை கண்டு செவிலி இரங்குதல் –

தார் உடுத்துத் தூசு தலைக்கு அணியும் பேதை இவள்
நேர் உடுத்த சிந்தை நிலை அறியேன் போர் உடுத்த
பாவைகுந்தம் பண்டு ஒசித்தான் பச்சைத் துழாய் நாடும்
சீ வைகுந்தம் பாடும் தெளிந்து -53–

தார் உடுத்துத் -முடியில் சூட வேண்டிய பூ மாலையை அறையிலே உடுத்துக் கொண்டு
தூசு தலைக்கு அணியும்-அரையிலே அணிய வேண்டிய ஆடையை முடியின் மேல் தரித்து கொள்ளுகின்ற
பேதை இவள்
செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் -பெரியாழ்வார்
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய் கற்பு என்று சூடும் கரும் குழல் மேல் -பேயாழ்வார்
தெளிந்து -மனத் தெளிவு கொண்டு
போர் உடுத்த -போர் புரிவதற்கு சித்தமாய் நின்ற
பாவை -பெண்ணாகிய தாடகை யானவள் -சூர்பணகை தன் மீது எறிந்த
குந்தம் -சூலாயுதத்தை
பண்டு -ஸ்ரீ ராமாவதாரத்தில் கோதண்டம் ஏந்தி முறித்த திருமாலினது
பச்சைத் துழாய் நாடும் –
சீ வைகுந்தம் பாடும்
நேர் உடுத்த சிந்தை நிலை அறியேன் -நேர்மையாகச் சென்று கொண்டு இருந்த இவளது மனம்
இவ்வாறு மாறிய நிலையைப் பற்றி நான் அறிய கில்லேன் –

——————————————————————-

54-திருப் புளிங்குடி-தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல் –

தெளியும் பசும் பொற் சிறைக் காற்று வீச
விளியும் துயர் போய் விடுமே எளியேற்கு
அருளப் புளிங்குடி வாழ் அச்சுதனைக் கொண்டு
கருளப் புள் இங்கு வந்தக் கால் –54–

எளியேற்கு அருளப் புளிங்குடி வாழ்
அச்சுதனைக் கொண்டு
கருளப் புள் இங்கு வந்தக் கால் —
அப்போது –
தெளியும் பசும் பொற் சிறைக் காற்று வீச -பெரிய திருவடிகளின் இறகுகளின் நின்று காற்று வீச
விளியும் துயர் போய் விடுமே -இப்பொழுது எனக்கு நேர்ந்துள்ள பெரிய துயரமும் போய் விடும் –
நோய் தீர அருமருந்து அந்த காற்றே ஆகும் –
அவன் திருமுகம் கண்டு -கடாஷத்தால் உஜ்ஜீவிக்கலாம் என்றவாறு –

அவராவி துவரா முன் அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று அருளாழி யம்மானைக் கண்டக்கால்
இது சொல்லி அருளாழி வரி வண்டே —
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்பா நீ காண வாராயே -நம்மாழ்வார்
இந்த திவ்ய தேச மங்களா சாசனம் பாசுரம் –

——————————————————————-

55-திருவர குண மங்கை -பாங்கி வெறி விலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல் –

காலமும் நோயும் கருதாத அன்னைமீர்
வேலன் வெறியை விலக்குமின்கள் மால் ஆம்
வரகுண மங்கையன் தாள் வண் துழாய் மேல் ஆ
தர குணம் மங்கை தனக்கு –55–

காலமும்-இவளது பருவத்தையும்
நோயும் -இவளுக்கு இப்பொழுது நேர்ந்து உள்ள நோயின் தன்மையும்
கருதாத அன்னைமீர்
மங்கை தனக்கு
மால் ஆம் வரகுண மங்கையன் தாள் வண் துழாய் மேல் ஆதர குணம் -உளது ஆதலால்
வேலன் வெறியை விலக்குமின்கள் –

இது காண்மின் அன்னைமீர் கட்டுவிச்சி சொல் சொல் கொண்டு நீர் ஏதுவானும் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் அதுவே இவள் உற்ற நோய்க்கு அரு மருந்தாகுமே –
கூராழி வெண் சங்கு ஏந்தி வருபவனை காண ஆசைப் படும் இவளுக்கு கையும் வேலுமாக இவன் வந்து தோற்றுவதே
தலைவனது திருமேனி அழகிலும் திவ்யாத்மா குணங்களிலும் ஈடு பட்டு இருக்கிறாள்
சேஷ பூதம் இழியும் துறை சேஷியின் திருவடிகளே யாதலால் தாள் துழாய் மேல் ஆதாரம் -என்கிறார் –

————————————————————————-

56-திருக்குளந்தை

தனக்கு உடலம் வேறான தன்மை உணரார்
மனக் கவலை தீர்ந்து உய்ய மாட்டார் நினைக்கில்
திருக் குளந்தை யார் உரைத்த சீர்க் கீதை பாடும்
தருக்கு உளம் தையாமல் இருந்தால் –56-

நினைக்கில் -ஆராய்ந்து பார்க்கும் இடத்தில் –
திருக் குளந்தை யார் உரைத்த சீர்க் கீதை –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி
பாடும் -படிப்பதனால் உண்டாகும்
தருக்கு-மனக் களிப்பு
உளம் தையாமல் இருந்தால் -பதியாமல் இருந்தால்
தனக்கு -ஆத்மாவாகிய தன்னைக் காட்டிலும்
உடலம் வேறான தன்மை உணரார்
மனக் கவலை தீர்ந்து உய்ய மாட்டார் –

பெரிய குளத்தை யுடைய ஸ்தலம் -பெருங்குளம் -குளந்தை என்று மருவி உள்ளது –

————————————————————–

57-திருக் குறுங்குடி —

தாலத்து இழி குலத்துச் சண்டாளர் ஆனாலும்
மேல் அத்தவத்தோரின் மேன்மைத்தே -கோலக்
குறுங்குடி வாழ் மாயன் குறை கழற்கு ஆள் ஆகப்
பெறும் குடியாய் வாழ்வார் பிறப்பு –57-

கோலக் குறுங்குடி வாழ் மாயன் குறை கழற்கு ஆள் ஆகப்
பெறும் குடியாய் வாழ்வார் பிறப்பு –
தாலத்து இழி குலத்துச் சண்டாளர் ஆனாலும்
மேல் அத்தவத்தோரின் மேன்மைத்தே –

நம்பாடுவான் -ப்ரஹ்ம ராஜஸூ–கைசிக வ்ருத்தாந்தம் உட்கொண்டே இத்தை அருளிச் செய்கிறார்
ப்ரஹ்மண்யம் விலைச் செல்லுகிறது -வேத அத்யாய நாதி முகத்தாலே பகவல் லாப ஹேது வென்று
அது தானே இழவுக்கு உறுப்பாகில் த்யாஜ்யமாம் இறே
ஜன்ம வருத்தங்களின் யுடைய உத்கர்ஷமும் அபகர்ஷமும் பேற்றுக்கும் இழவுக்கும் அபிரயோஜகம்
பிரயோஜகம் பகவத் சம்பந்தமும் தத் அசம்பந்தமும் —
வாமன ஷேத்ரம் என்பதால் திருக் குறுங்குடி -வைஷ்ணவ நம்பி -வ்ருத்தாந்தம் பிரசித்தம் –
நம்மாழ்வார் திருவவதாரத்துக்கும் பீஜம்

————————————————————–

58-திருக் கோளூர் –

பிறப்பு அற்று மூப்புப் பிணி அற்று நாளும்
இறப்பு அற்று வாழ இருப்பீர் புறப்பற்றுத்
தள்ளுங்கோள் ஊர் அரவில் தாமோதரன் பள்ளி
கொள்ளும் கோளூர் மருவுங்கோள் –58–

பிறப்பு அற்று மூப்புப் பிணி அற்று நாளும் இறப்பு அற்று வாழ இருப்பீர்
புறப்பற்றுத் தள்ளுங்கோள்-அகப் பற்றுக்கும் உப லஷணம் -அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் –
ஊர் அரவில் தாமோதரன் பள்ளி கொள்ளும் கோளூர் மருவுங்கோள் –வைத்த மா நிதிப் பெருமாள் -பள்ளி கொண்டு அருளும் திவ்ய தேசம்
நவ நிதிகள் ஒழிந்து உள்ள இடம் குபேரனுக்கு கோள் சொல்லி அருளிய ஸ்தலம் -பி ஸூக ஷேத்ரம் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவவதார ஸ்தலம் –

————————————————————-

மலை நாட்டுத் திருப்பதிகள் -13-

59–திருவனந்த புரம் –

கோள் ஆர் பொறி ஐந்தும் குன்றி உடலம் பழுத்து
மாளா முன் நெஞ்சே வணங்குதியால் கேளார்
சினந்த புரம் சுட்டான் திசை முகத்தான் போற்றும்
அனந்த புரம் சேர்ந்தான் அடி –59–

நெஞ்சே
கோள் ஆர் பொறி ஐந்தும் -விஷயங்களில் உன்னை இழுத்துச் செல்லும் தன்மை பொருந்திய ஐம் பொறிகளும்
குன்றி-தமக்கு உரிய வலிமை குன்றி
உடலம் பழுத்து -முதுமையினால் தளர்ச்சி அடைந்து
மாளா முன் -இறப்பதற்கு முன்
கேளார் -.பகைவர்கள் ஆகிய அசுரர்கள்
சினந்த -கோபித்து பொருதற்கு இடமாய் இருந்த
புரம் சுட்டான் திசை முகத்தான் போற்றும்
அனந்த புரம் சேர்ந்தான் அடி –
வணங்குதியால் –
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனார் அன்றோ –

பிரமன் திரு நாபீ கமலத்தில் இருந்து கொண்டே எப்பொழுதும் ஸ்துதித்து கொண்டு இருக்கும் ஸ்தலம் அன்றோ
தடமுடை வயல் அனந்த புர நகர் புகுதுமின்னே -நம்மாழ்வார்
நெஞ்சே வணங்குதி -மனம் மொழி வாக் -முறையே -நினைத்து பேசி வணங்கும் –
ஒன்றின் செயலை வேறு ஒன்றில் ஏற்றி அருளிச் செய்கிறார்

——————————————————-

60-திரு வண் பரிசாரம் -பிரிவாற்றாது வருந்தும் தலைவியின் நிலை கண்ட செவிலி இரங்கல்

அடியும் குளிர்ந்தாள் அறிவும் குலைந்தாள்
முடிகின்றாள் மூச்சு அடங்கு முன்னே கடிது ஓடி
பெண் பரிசு ஆர் அங்குப் பிறப்பித்து மீளுவார்
வண் பரிசாரம் சிறந்த மாற்கு –60-

அடியும் குளிர்ந்தாள் அறிவும் குலைந்தாள் -கால்களும் குளிரப் பெற்று அறிவும் அழியப் பெற்று
முடிகின்றாள் -மரணம் அடையும் அந்திம தசையில் இருக்கிறாள்
மூச்சு அடங்கு முன்னே கடிது ஓடி பெண் பரிசு -பெண்ணின் தன்மையை
ஆர் அங்குப் பிறப்பித்து-விளங்கும் படி சொல்லித் தெரிவித்து –
மீளுவார் வண் பரிசாரம் சிறந்த மாற்கு –இருந்த மாற்கு -பாட பேதம் –

வீற்று இருந்த திருக்கோலம்
வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார் செய்வது என் -நம்மாழ்வார் –

————————————————————-

61-திருக் காட்கரை –

மாற்கமும் தாம் தாம் வழிபாடும் தெய்வமும்
ஏற்க உரைப்பார் சொல் எண்ணாதே தோற் குரம்பை
நாள் கரையா முன்னமே நல் நெஞ்சே நாரணன் ஆம்
காட்கரையார்க்கு ஆள் ஆகாய் காண் –61-

நல் நெஞ்சே
தாம் தாம்
வழிபாடும் மாற்கமும்
தெய்வமும்
ஏற்க -ஆகிய இவற்றுக்கு பொருந்துமாறு -உரைப்பார் சொல்
எண்ணாதே -மதியாமல்
வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பலவாக்கி
யவை யவை தோறும் அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
தோற் குரம்பை நாள் கரையா முன்னமே நாரணன் ஆம்
காட்கரையார்க்கு ஆள் ஆகாய் காண் –

——————————————————————

62- திரு மூழிக் களம் –

காண்கின்ற ஐம் பூதங்கட்கும் இரு சுடர்க்கும்
சேண் கலந்த இந்திரற்கும் தேவர்க்கும் -மாண் கரிய
பாழிக் களத்தாற்கும் பங்கயத்து நான்முகற்கும்
மூழிக் களத்தான் முதல் –62-

காண்கின்ற ஐம் பூதங்கட்கும் இரு சுடர்க்கும்
சேண் கலந்த -வான் உலகில் வாழும் -இந்திரற்கும் -அவனுக்கு கீழ் பட்ட மற்ற -தேவர்க்கும் –
மாண் கரிய -மாட்சிமை யுடைய கரிய -விஷம் உண்டதால் கறுத்த
பாழிக் களத்தாற்கும்-வலிமை யுடைய கழுத்தை யுடைய ருத்ரருக்கும்
பங்கயத்து நான்முகற்கும்
மூழிக் களத்தான் முதல் -மூல காரணம் ஆவார் -ஆதி மூலம் அன்றோ
காண்கின்ற -அடை மொழி அனைத்துக்கும் இயையும்

———————————————————

63-திருப் புலியூர் -தலைவி தோழியற்கு அறத்தொடு நிற்றல்

முதல் வண்ணம் ஆமே முலை வண்ணம் முன்னை
விதி வண்ணம் நீங்கி விடுமே சதுரத்
திருப் புலியூர் நின்றான் திருத் தண் துழாயின்
மருப்புலி ஊர் தென்றல் வரின் –63-

சதுரத் திருப் புலியூர் நின்றான் -அழகிய திருப் புலியூரில் நின்ற திருக் கோலத்தில் எழுந்து அருளி சேவை சாதிக்கும் மாயப்பிரான் உடைய
திருத் தண் துழாயின்
மருப்புலி ஊர் தென்றல் வரின் -நறு மனத்தைப் பொருந்தி -புல்லி -தவழ்ந்து செல்லும் தென்றல் காற்று வந்து வீசுமாயின்
அப்பொழுது எனக்கு
முலை வண்ணம் முதல் வண்ணம் ஆமே -பசலை நிறம் மாறும் என்றபடி –
முன்னை விதி வண்ணம் நீங்கி விடுமே -முற் பிறப்பில் செய்த தீ வினையின் பயனாக நேர்ந்த பிறவித் துயர்
முழுவதும் வாசனையோடு போய் விடும்
முன்னை விதி வண்ணம் -பாட பேதம் –

————————————————————–

64-திருச் செங்குன்றூர் –

வர வேண்டும் கண்டாய் மதி கலங்கி விக்குள்
பொரவே உயிர் மாயும் போழ்து பரமேட்டி
செங்குன்றூர் மாலே சிறைப் பறவை மேல் கனகப்
பைங்குன்று ஊர் கார் போல் பறந்து –64-

பரமேட்டி
செங்குன்றூர் மாலே
மதி கலங்கி -எனது அறிவு ஒடுங்கி
விக்குள் பொரவே -விக்கலானது உபத்தரவிக்க
உயிர் மாயும் போழ்து-அந்திம காலத்தில்
சிறைப் பறவை மேல் கனகப் பைங்குன்று ஊர் கார் போல் பறந்து –வர வேண்டும் –
பசும் பொன்மயமான மலையின் மீது வரும் காள மேகம் போலே விரைந்து எழுந்து அருளி வந்து சேவை சாதிக்க வேண்டும்
கண்டாய் -முன்னிலை அசை

சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்தினானே
உடலம் புயங்கதுரி போல் விடும் அன்று வணப் புள்ளினடலம் புயமிசை நீ வர வேண்டும் –
கருமுகில் தாமரைக் காடு பூத்து நீள் இருசுடர் இருபுறத்தேந்தி யேடவிழ்
திருவோடும் பொலிய வோர் செம் பொன் குன்றின் மேல் வருவ போல் கருடன் மேல் வந்து தோன்றினான் -கம்பர்

———————————————————————

65-திருநாவாய் –

பறந்து திரிதரினும் பாவியேன் உள்ளம்
மறந்தும் பிறிது அறிய மாட்டா சிறந்த
திரு நாவாய் வாழ் கின்ற தேவனை அல்லால் என்
ஒரு நாவாய் வாழ்த்தாது உகந்து –65–

பறந்து திரிதரினும் -ஒரு நிலை இல்லாது அலைந்து திரியும் தன்மை யுடையதாய் இருந்தாலும்
பாவியேன் உள்ளம்
மறந்தும் பிறிது அறிய மாட்டா -தான் உகக்கும் பொருளாக மதியாது
சிறந்த திரு நாவாய் வாழ் கின்ற தேவனை அல்லால் என்
ஒரு நாவாய் வாழ்த்தாது உகந்து -எனக்கு நா ஒன்றே –

மறந்தும் புரம் தொழாதவன்
வாய் அவனை அல்லாது வாழ்த்தாது –

—————————————————————-

66-திருவல்ல வாழ்

உகந்தார்க்கு எஞ்ஞான்றும் உளனாய் உகவாது
இகந்தார்க்கு எஞ்ஞான்றும் இலனாய் திகழ்ந்திட்டு
அருவல்ல வாழ் உருவம் அல்ல என நின்றான்
திருவல்ல வாழ் உறையும் தே–66-

திருவல்ல வாழ் உறையும் தே–திருமால்
உகந்தார்க்கு எஞ்ஞான்றும் உளனாய்
உகவாது இகந்தார்க்கு எஞ்ஞான்றும் இலனாய் திகழ்ந்திட்டு
அருவல்ல
வாழ் உருவம் அல்ல
என நின்றான்

உளன் எனில் உளன் அவன் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவும் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில் உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே
பாவ அபாவ -அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் -நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் –
உளன் -சர்வ அந்தராத்மாவாக உளன் –

———————————————————————-

67-திருவண் வண்டூர்-

தேவும் உலகும் உயிரும் திரிந்து நிற்கும்
யாவும் படைத்த இறை கண்டீர் பூவில்
திரு வண் வண்டூர் உறையும் தேவாதி தேவன்
மரு வண் வண்டு ஊர் துளவ மால் –67–

பூவில் -பூமியில் உள்ள
திரு வண் வண்டூர் உறையும் -நித்ய வாசம் செய்து அருளும்
தேவாதி தேவன்
மரு வண் வண்டு ஊர் துளவ மால் –வாசனையும் வளப்பமும் உடையதும் வண்டுகள் மொய்க்கப் பெற்றதுமான
திருத் துழாய் மாலை அணிந்த திருமால்
தேவும் உலகும் உயிரும் திரிந்து நிற்கும் யாவும் படைத்த இறை கண்டீர் -தேவ மனுஷ்ய ஜங்கமம் ஸ்தாவரம்-
சேதன அசேதனங்கள் எல்லாம் சிருஷ்டித்து அருளிய –

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா யன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாட நீடு திருக் குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் -நம்மாழ்வார்

———————————————————————–

68–திருவாட்டாறு –

மாலை முடி நீத்து மலர்ப்பொன் அடி நோவப்
பாலை வனம் புகுந்தாய் பண்டு என்று -சாலவும் நான்
கேட்டால் துயிலேன் காண் கேசவனே பாம்பணை மேல்
வாட்டாற்றுக் கண் துயில் கொள்வாய் –68-

கேசவனே
மாலை முடி நீத்து
மலர்ப்பொன் அடி நோவப் பாலை வனம் புகுந்தாய் பண்டு என்று –
சாலவும் நான் கேட்டால் துயிலேன் காண்
பாம்பணை மேல் வாட்டாற்றுக் கண் துயில் கொள்வாய் —

நதியால் இப்பெயர் பெற்ற திவ்ய தேசம்
ஆதி கேசவ பெருமாள் கண் வளர்ந்து சேவை சாதிக்கும் திவ்ய தேசம்

———————————————————————–

69-திரு வித்துவக் கோடு-

வாய்த்த கருமம் இனி மற்று இல்லை நெஞ்சமே
தோய்த்த தயிர் வெண்ணெய் தொட்டு உண்ட கூத்தன்
திரு வித்துவக் கோடு சேர்ந்தால் பிறவிக்
கருவின் துவக்கு ஓடும் காண் –69-

நெஞ்சமே
தோய்த்த தயிர் வெண்ணெய் தொட்டு உண்ட கூத்தன்
திரு வித்துவக் கோடு சேர்ந்தால்
பிறவிக் கருவின் துவக்கு -கர்ப்பத்தின் சம்பந்தம் -ஓடும் காண்
வாய்த்த கருமம் இனி மற்று இல்லை -செய்யக் கிடந்த தொழில் வேறு ஒன்றும் இல்லை
ஸூகரமான உபாயம் இருக்க வீணாக உழல்வது ஏனோ -கருத்து தொனிக்கும் –

———————————————————————–

70-திருக் கடித்தானம் –

காண விரும்பும் என் கண் கையும் தொழ விரும்பும்
பூண விரும்பும் என் தன் புன் தலை தான் வாணன்
திருக்கு அடித்தான் நத்தான் திகிரியான் தண்டான்
திருக் கடித் தானத்தானைச் சென்று –70-

வாணன்
திருக்கு அடித்தான் -மாறுபாட்டை ஒழித்தவனும் -இத்தாலே பரத்வம் இவனே என்றதாயிற்றே
நத்தான் -திருச் சங்கத்தை யுடையவனும்
திகிரியான்
தண்டான்
திருக் கடித் தானத்தானைச் சென்று -போய்க் கிட்டி
காண விரும்பும் என் கண்
கையும் தொழ விரும்பும்
பூண விரும்பும் என் தன் புன் தலை தான்–புன் தலை -நைச்ய அனுசந்தானம் –

———————————————————–

71–திரு வாறன் விளை –

சென்று புனல் மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
வென்று புலன் அடக்கி விட்டாலும் இன் தமிழால்
மாறன் விளைத்த மறை ஒதார்க்கு இல்லையே
ஆறன் விளைத் திருமால் அன்பு –71–

சென்று-தீர்த்த யாத்ரையாகச் சென்று
புனல் மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
வென்று புலன் அடக்கி விட்டாலும்
இன் தமிழால் மாறன் விளைத்த மறை ஒதார்க்கு இல்லையே
ஆறன் விளைத் திருமால் அன்பு —

ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே –
தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து எவன்
செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம் ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவும் உண்டே
யவம் செய்கை மாற்ற செவி யுண்டு நா வுண்டு அறிவும் உண்டே -சடகோபர் அந்தாதி

———————————————————————

நடு நாட்டுத் திருப்பதிகள்–2-

72-திருவயிந்த புரம் –

அன்பு அணிந்த சிந்தையராய் ஆய்ந்த மலர் தூவி
முன் பணிந்து நீர் எமக்கு மூர்த்தியரே என்பர்
எம் ஐயிந்திர புரத்தார்க்கு இன் தொண்டர் ஆனார்
தமை இந்திர புரத்தார் தாம் –72-

எம் ஐயிந்திர புரத்தார்க்கு இன் தொண்டர் ஆனார் தமை
இந்திர புரத்தார் தாம் -தேவர்கள்
அன்பு அணிந்த சிந்தையராய்
ஆய்ந்த மலர் தூவி -சிறந்த கற்பக மலர்களை சொரிந்து -தூவி -அர்ச்சித்து என்றுமாம் –
முன் பணிந்து
நீர் எமக்கு மூர்த்தியரே என்பர் –

மணி யாழி வண்ணன் உகந்தாரைத் தன் வடிவாக்கும் என்றே துணியாழிய மறை சொல்லும் -தெய்வ நாயக சமராவார்
வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா மொழி நின்ற மூர்த்தியரே யாவார்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமதிடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே –
அஹீந்த்ரம் -திரு வநந்த ஆழ்வான் பூஜித்த ஸ்தலம் என்பதால் -திருவஹீந்த்ர புரம் –

—————————————————————————

73-திருக் கோவலூர் –

தாமரையான் ஆதியாய்த் தாவரங்கள் ஈறு ஆன
சேம உயிரும் செகம் அனைத்தும் பூ மடந்தைக்கு
ஆம் கோ அலாயுதன் பின்னா அவதரித்த
பூங்கோ வல் ஆயன் பொருள் –73–

தாமரையான் ஆதியாய்த் தாவரங்கள் ஈறு ஆன
சேம உயிரும் செகம் அனைத்தும்
பூ மடந்தைக்கு ஆம் கோ
அலாயுதன் பின்னா அவதரித்த -கலப்பையை ஆயுதமாக யுடைய நம்பி மூத்த பிரானுக்கு பின்னாக திருவவதரித்த
பூங்கோ வல் ஆயன்
பொருள் –படைப்புப் பொருள்கள் ஆகும்
அனைத்தும் அவனால் படைக்கப் பெற்று அவன் இட்ட வழக்காகும் என்றவாறு

கோபாலபுரம் –
பா வரும் தமிழால் பேர் பனுவல் பா வலர் பாதி நாள் இரவின் மூவரும் நெருக்கி
மொழி விளக்கு ஏற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: