Archive for March, 2016

ஸ்ரீ பராசர பட்டர் அருளிய நம்பெருமாள் திருமஞ்சன கட்டியங்கள் — ஸ்லோஹங்கள்–13-20-

March 31, 2016

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீ வத்சாங்க ஸூத ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயசே-

ஸ்ரீ யபதியினுடைய கல்யாண குணங்களை -அசங்க்யேய கல்யாண குண கனௌக மஹார்ணவ -என்றும் –
அபார கருணாம்புதே -என்றும் -ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -என்றும்
எம்பெருமானார் ஸ்ரீ கத்ய த்ரயத்தில் அருளிச் செய்து இருக்கும் படி ஸ்ரீ பராசர பட்டரும்
இரண்டு ஸ்லோகங்கள் அருளிச் செய்து அவற்றுக்கு வியாக்யானங்களும் அருளிச் செய்துள்ளார் –

மரகத மணி ரம்யம் ரம்ய மாணிக்ய முக்தா
பலவில சித காத்ரம் ப்ரஸ் புரத் கந்த வாஹம்
விஹித விவித ஜந்தும் ப்ரோல்ல சந்மீ நலீலம்
ஸூ கம ஜல நிதிம் த்வாம் மன்மஹே ரங்க ராஜ –ஸ்லோகம் –13–

நாயந்தே –
தேவரீர் திருமஞ்சனமாட ஏறி யருளி எழுந்து அருளி நிற்கிற நிலை -இங்கனே ஒரு சமுத்ரத்தோடு
சாம்யா பன்னமாய் இரா நின்றது -எங்கனே என்னில் –

மரகத மணி ரம்யம் –
சமுத்ரமோ வென்று பார்த்தால் -மரகத மணி போலே பசுத்து ரம்யமாய் இருக்கும்
தேவரீரோ என்று பார்த்தால் -வாமனன் என் மரகத வண்ணன் -என்றும் -ராமம் மரகதச் யாமம் -என்றும்
சொல்லுகிறபடியே மரகத மணி போல ரம்யமாய் இருப்பீர் –

ரம்ய மாணிக்ய முக்தா பலவில சித காத்ரம்-
சமுத்ரமோ என்று பார்த்தால் அழகியதான மாணிக்கம் என்றும் முத்துக்கள் என்றும்
இவைகளாலே விளங்குகிற மெய்யை உடையதாய் இருக்கும் –
தேவரீரோ வென்று பார்த்தால் ரத்னாபரணங்களாலும் முக்தாபரணங்களாலும் விளங்கா நிற்கிற
திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையராய் இருப்பீர் –

ப்ரஸ் புரத் கந்த வாஹம் –
சமுத்ரமோ வென்று பார்த்தால் வாரிதிர்மாருதோத்ஷி ப்ததாங்க சதுராக்ருதி -என்கிறபடியே
எப்போதும் காணலாம் படியான காற்றின் அலைதலால் உண்டான அலைகளை யுடைத்தாய் இருக்கும்
தேவரீரோ வென்று பார்த்தால் சந்தன குங்கும கர்ப்பூராதிகளின் கந்தங்களை வஹித்து அருளா நிற்பீர் –

விஹித விவித ஜந்தும்-
சமுத்ரமோ வென்று பார்த்தால் சலில நிவ ஹங்களாலே மறைக்கப் பட்ட விவித ஜந்துக்களை யுடைத்தாய் இருக்கும்
தேவரீரோ வென்று பார்த்தால் ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர் யங்களாலே விஹிதரான
சகல ஜீவ வர்க்கங்களையும் யுடையராய் இருப்பீர் –

ப்ரோல்ல சந்மீ நலீலம்
சமுத்ரமோ வென்று பார்த்தால் விளங்கா நிற்கிற மீன்களின் லீலைகளை யுடைத்தாய் இருக்கும் –
தேவரீரோ வென்று பார்த்தால் அலை கடல் நீர் குழம்ப அகடாவோடியகல் வானுரிஞ்ச முதுகில் மலைகளை மீது
கொண்டு வருமீனை மாலை -என்னும்படி மத்ச்யவதாரத்தில் உண்டான லீலையை உடையயீராய் இருப்பீர் –

ஸூ கம ஜல நிதிம் த்வாம் மன்மஹே ரங்க ராஜ –
ஆக இப்படி மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலைகடல் போன்றிவர் ஆர் கொல்-என்னும் படியான
இந்நிலை சமுத்ரத்தோடு தேவரீருக்கு உண்டான சாதர்ம்யத்தை வாழ்வித்துக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற நிலை போலே இருந்தது –

————————————————————————–

மணி வரருசிவாஹீ மத்ஸ்ய ரூபம் ததாநோ
லலிததவள சங்கோ லங்க்யன்நேவ வேலாம்
வித்ருத புவன பாரோ வீஷ்யசே ரங்க தாமன்
அபர இவ வபுஷ்மா நாபகாநா மதீச –ஸ்லோகம் –14-

நாயந்தே –
ஆபோ வா இதமாக்ரே சலிலமேவாசீத்-என்றும் –
அப ஏவ ச சர்ஜா தௌதா ஸூ வீர்யமபாஸ் ருஜத்-ததண்ட மபவத்தைமம் சஹாஸ்ராம்சு சமப்ரபம் -என்றும் –
கடலாழி நீர் தோற்றி -என்றும் -தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும் -என்றும்
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -என்றும் சொல்லுகிறபடியே பிரதமத்தில் ஜலத்தை சிருஷ்டித்து -அதிலே
நாநா வீர்யா ப்ருதக் பூதாஸ் ததஸ்தே சம்ஹிதம் விநா
நாசக்நுவன் ப்ரஜாஸ் ஸ்ரஷ்டு மசமா கம்ய கருத்ஸ் நச
சமேத்யான் யோன் சம்யோகம் பரஸ்பர சமாஸ்ரயா
மஹதாத்யா விசேஷான் தாஹ்யண்ட முத்பாத யந்தி தே-என்கிற
பஞ்சீ கரண பிரகாரத்தாலே மூல பிரக்ருதியையும் மஹதாதிகளானபிரகிருதி விக்ருதிகளையும்
ஆகாசாதிகளான சுத்த விக்ருதிகளையும் ஆக இவை எல்லாவற்றையும் அண்டமாக சிருஷ்டித்து
அண்டாத் ப்ரஹ்மா சமபவத் தேன ஸ்ருஷ்டமிதம் ஜகத் -என்றும்
பத்மே திவ்யே அர்க்க சங்காசே நாப்யா முத்பாத்ய மாமபி ப்ராஜா பத்யம் த்வயா கர்ம பூர்வம் மயி நிவேசிதம் -என்றும்
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர் மிசைப் படைத்த மாயோனை -என்றும் சொல்லுகிறபடியே
அவ்வண்டத்திலே ப்ரஹ்மாவை சிருஷ்டித்து –
தத் அந்தர்யாமியாய்க் கொண்டு தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித சிருஷ்டியையும் நடத்தி-
தத் ரஷண அர்த்தமாக வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவ தாரங்களை சங்கல்ப்பித்து
சகல ப்ராணிகளுடையவும் ஞான விரோதியாய் இருக்கிற
அநாத்ம அன்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி -அவித்யா தரு சம்பூதி பீஜ மேதத்த்விதா ஸ் திதம் -என்றும்
நீர் நுமது -என்றும் பொய்ந்நின்ற ஞானம் -என்றும் சொல்லப்படுகிற அஜ்ஞானத்தை
மானம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி என்றும் -வேத நான்காய் -என்றும் சொல்லப்படுகிற
பிரமாண பிரதானத்தாலே சவாசனமாகப் போக்கி ரஷித்தும்
அந்த வேதத்தை மதுகைடபப்ரப்ருதிகள் அபஹரிக்க அவர்களை நிரசித்து ஹம்ச மத்ச்யாதிகளான விபவங்களாலே
ப்ரஹ்மா வுக்கு வேத உபதேசம் பண்ணி ரஷித்து தேவரீர்
ஷீராப்தேர் மண்டலாத்பாநோ யோகிநாம் ஹ்ருதயா தபி ரதிம் கதோ ஹரிர் யத்ர தத் ரங்கம் முநயோவிது -என்கிறபடியே
ஸ்ரீ ரங்க ஷேத்ரத்திலே அர்ச்சா ரூபியாய் அவதரித்து ஸூ லபராய் எழுந்து அருளி இருந்தது
இப்பொழுது சகல ஆத்மாக்களுடையவும் தாபத்ரய சாந்த்யர்த்தமாகத் திருமஞ்சனத்துக்கு ஏறி அருளின தேவரீரை
ஆதி கார்யமாய் ஜல தத்வ ரூபமான சமுத்ரத்தோடு ஒக்க வர்ணிக்கலாய் இருந்தது -எங்கனே என்னில் –

மணி வரருசிவாஹீ –
நாயந்தே
தேவரீர் மனிச்யாமபர புமான் -என்றும் மணியுரு -என்றும் -சொல்லுகிற க்ரமத்திலே -இந்திர நீலக் கல்லின் ஒளியை யுடையராய் இருந்தீர்
சமுத்ரமானது குவலயதள ச்யாமளருசி -என்கிறபடியே நீல வர்ணமாய் இரா நின்றது

மத்ஸ்ய ரூபம் ததாநோ
தேவரீர் –மத்யஸ்ய கமலா லோசன -என்றும் -மத்ஸ்யரூப நமோஸ்துதே -என்றும் -ஆபத் பஞ்சநமஞ்சலிம் விஜயிநே
மத்ஸ்யாய தித்சா மஹே-என்றும்
முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை -என்றும் -மீனாய் ஆமையுமாய் -என்றும் சொல்லுகையாலே
மத்ஸ்ய ரூபத்தை யுடையராய் இருந்தீர்
சமுத்ரமானது திமி மகர திமிங்கிலாதி மத்ஸ்யை அதிகஹநோ -என்றும் -நிதிரம்பசாம் கபீர -என்கிறபடியே
நாநா வித மஹா மத்ஸ்ய சரீரங்களை தரியா நின்றது –

லலிததவள சங்கோ
தேவரீர் சங்க சக்கர கதா பாணே -என்றும் -பச்சான் நாராயணச் சங்கீ -என்றும்
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையராய் இருந்தீர்
சமுத்ரமும் -க்லேசாத பக்யாமதி சங்க யூதம் -என்றும் -மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலை கடல் -என்றும்
சொல்லுகிற படியே பல சங்குகளை யுடையதாய் இருந்தது –

லங்க்யன்நேவ வேலாம் –
நாயந்தே
தேவரீர் மர்யாதா நாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ச -என்றும்
மர்யாதாஸ்தாபநாயா ச -என்றும் சொல்லுகிறபடியே தாம் கல்பித்த மரியாதையைத் தாமும் கடவாதவராய் இருந்தீர்
சமுத்ரமானது யதா வேலாம் ஹி சாகர -என்கிறபடியே கரையைக் கடவாதாய் இருந்தது –

வித்ருத புவன பாரோ –
தேவரீர் -விஷ்ணு நா வித்ருதே பூமி -என்றும் –
வ்யாதே ஹீதி விதாரிதே சிசுமுகே த்ருஷ்ட்வா சமஸ்தம் ஜகத் மாதா யஸ்ய ஜகாம விஸ்மய வசம் பாயாத் ச வ கேசவ -என்றும்
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -என்றும் சொல்லுகிறபடியே சகல லோகங்களையும் தரித்து எழுந்து அருளி இருந்தீர்
சமுத்ரமானது -ஜீவனம் புவனம் வனம் -என்று சொல்லுகிறபடியே
புவன சப்தம் ஜலம் பர்யாயம் ஆகையாலே தரிக்கப் பட்ட ஜல பரத்தை யுடைத்தாய் இருந்தது

வீஷ்யசே ரங்க தாமன் அபர இவ வபுஷ்மா நாபகாநா மதீச –
ஆகையால் வடிவுடை வானோர் தலைவனான தேவரீரை வடிவுடைத்தான வேறொரு சமுத்ரம் என விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

——————————————————————–

நாநாநுவ்ருத்தி விஷயம் நதராஜ ஹம்சம்
நாநாண்ட ஜாதசமதிஷ்டி தமப்ஜரம்யம்
சேவாவ தீர்ண ஸூ மருத்கண மத்ய ரங்கின்
பாவா நூரூப நதமித்ய நுமன்மஹே த்வாம் –ஸ்லோகம் –15–

நாயந்தே
நாராயண பரம் ப்ரஹ்மம் -என்றும் -நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் -என்றும் -சொல்லுகிறபடியே
நிரந்குச ஸ்வ தந்த்ரனாய் இருக்கச் செய்தேயும்
இமௌ ஸ் மமுநிசார்தூல -கிங்கரௌ சமுபஸ்திதௌ ஆஜ்ஞாபாய யதேஷ்டம் தே சாசனம் கரவாவகிம் -என்றும் –
உன்தனக்கு அன்பரானார் அவருகந்து அமர்ந்த செய்கை உன் மாயை -என்றும் சொல்லுகிறபடியே
ப்ரணத பரதந்திர சர்வ பிரவ்ருத்திகரர் ஆகையாலே
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்கிறபடியே
கிடை அழகு காண ஆசைப்பட்ட ஆஸ்ரிதர் அபேஷ அனுகுணமாக பெரிய பெருமாளாய்-
-திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொண்டு -அதற்கு மேலே
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் -என்கிறபடியே ஆசைக்கு ஈடான அழகிய மணவாளராயக் கொண்டு
திருமடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ நிலையார நின்று அருளி -பின்னையும் அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில் என்று
ஆசைப்படுகிற பிரணயிநீ பரிஜனங்களுக்காக திவ்ய உத்சவாபதேசத்தாலே மேனகை முதலானோர் வெள்கி ஆடல் மாறும்படி வீதி உலாவி அருளி
தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும் அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
-ஆடி அமுது செய் -என்று அபேஷிக்கிற அந்தரங்கருக்காக இப்போது திருமஞ்சனமாடி யருளி
சௌந்தர்ய பிரபாவத்தாலே சூழ்ந்து இருந்து ஏத்துவாரை
அறச் சுழியாறு படுத்திக் கொண்டு நிற்கிற நிலை
ஓர் ஆற்றோடு ச்லேஷித்து விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -அது எங்கனே என்னில் –

நாநாநுவ்ருத்தி விஷயம்
ஆறானது ஸ்நான பானாதி காமநயா நாநா வித பிராணிகளுடைய அனுவர்த்தனத்திற்கு விஷயமாய்
வேக வைபவ விவச விவித பதார்த்த சார்த்த அநுகம்யமானமுமாய் இருக்கும்
தேவரீர் -மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ் குரு -என்கிறபடியே
த்யான அர்ச்சன பிரணாமாதி ரூபேணவும் பஜன பிரபதன ரூபேணவும் நாநா விதமான ஆஸ்ரயணத்திற்கு விஷய பூதராய் இரா நின்றீர் –

நதராஜ ஹம்சம்
அன்ன மாடுலவு மலை புனல் -என்கிற ந்யாயத்தாலே சம்ச்லேஷத்தாலே துவண்ட வடிவை யுடைத்ததான
பரிசர ராஜ ஹம்சத்தை யுடைத்தாய் இருக்கும்
தேவரீர் -அனுகூல மஹீ பால வ்யானம்ர மௌளி பரம்பரா மணி மகரிகாரோசிர் நீராஜ தாங்க்ரி-என்கிறபடியே
திருவடிகளிலே ப்ரணதரான ராஜ ஸ்ரேஷ்டரை யுடையராய் இரா நின்றீர் –

நாநாண்ட ஜாதசமதிஷ்டிதம்
ஆறானது நாநா வித காரண்ட வாதி -நீர்க்காக்கை போன்றவை -அண்ட ஜங்களாலே -பறவைகளாலே அதிஷ்டிதமாய் இருக்கும்
தேவரீர் -ரோம கூபே ஹ்யநந்தாநி ப்ரஹ்மாண்டாநி ப்ரமந்தி தே -என்றும்
அண்டா நாம் த்வதுதரமா ம நந்தி சந்தஸ்தானம் -என்னும்படி அனந்தங்களான அண்டங்களாலே அடையப்பட்டு இரா நின்றீர் –

அப்ஜரம்யம் –
ஆறானது செவ்வித் தாமரைப் பூக்களாலே தரித்து இருக்கும் -செந்தலிருக்கும்-
தேவரீர் தவள வெண் சங்கு -என்னும்படி திரு நிறத்திற்கு பரபாகமான வெளுப்பை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தாலே அழகியராய் இரா நின்றீர் –

சேவாவ தீர்ண ஸூ மருத்கணம் –
ஆறானது ஆகந்துக பத்ம சௌகந்தி கங்களின் அபரிமிதமான பரிமளங்களை அணைத்து ஏறிட்டுக் கொள்ளுகைக்காக
இறங்கின அழகிய மந்த மாருத ப்ருந்தத்தை உடைத்தாய் இருக்கும்
தேவரீர் திருநாள் சேவிக்கைக்காக ஸ்வர்க்கத்தில் இருந்து இறங்கின வடிவுடை வானோரான ஸூந்தர வ்ருந்தாரக சந்தோகத்தை உடையராய் இரா நின்றீர் –

அத்ய ரங்கின் பாவா நூரூப நதமித்ய நுமன்மஹே த்வாம் —
ஆக இப்புடைகளாலே நாட்டில் காணும் ஆறோடு ஒத்து இருக்குமதாய்
அவை போலே தான் நினைத்த வாக்கிலே போகை யன்றிக்கே பச்யத மன ப்ரவண மோகமிவா ம்ருதஸ்ய -என்று
ஆஸ்ரிதருடைய அபிப்பிராயத்தை அனுசரிப்பதான அரங்க மா நகருள்ளான் -என்கிற அமுத வாறானது
அகில தாபங்களையும் ஆற்றும் படி அபிமுகமாய் நிற்கிற நிலை போலே இருந்தது –

——————————————————————————-

வ்ருத்திர் வேகவதீ சமாஸ்ரித ஜன த்ராணே பவச்சேதச
தாம்ரா குங்கும பத்ரிகா பஜதடீ தே துங்க பதரோ ஜ்ஜ்வலா
ரங்கா தீஸ்வர நர்மதாச பணிதி சோணஸ் ஸூஜாதோ தர
தஸ்மாத் ஸ்நாநவிதௌஜ நோஹி மநுதேத்வாம் சர்வ தீர்த்தாத்மகம் –ஸ்லோகம் -16-

நாயந்தே –
ஏக இத்ராஜா ஜகதோ பபூவ என்றும் -சர்வலோக மகேஸ்வர -என்றும் -சர்வஸ் யேசான-என்றும் –
தமீச்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தைவதா நாம் பரமம் ச தைவதம் -என்றும் -த்ரயாண மாபி ராகவோ ராஜ்யம் அர்ஹதி -என்றும்
வீற்று இருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல -என்றும்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான் செங்கோலுடைய
திருவரங்கச் செல்வனார் -என்றும் சொல்லுகிறபடியே
சகல லோக நாயகராய் இருக்கிற இருக்கிற தேவரீர் -அஜாயமா நோ பஹூ தா விஜாயதே -என்றும் –
பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ச்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றும்
ச உச்ரேயான் பவதி ஜாயமான -என்றும் -ஆதி யஞ்சோதி யுருவை யாங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -என்றும் சொல்லுகிறபடியே
சாதுக்களை ரஷிக்கைக்காகவும் விரோதிகளை நிரசிக்கைக்காகவும் தர்ம சம்ஸ்தாபனார்த்தமாகவும் இங்கு அவதரித்து அருளிற்று –

அப்பொழுது அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணி -விரோதிகளை நிரசித்து அருளினாப் போலே இப்போதும் யவ நாதிகளான
ஆஸ்ரித விரோதிகளை நிரசித்து அருளி சகல லோகத்தையும் க்ருதார்த்தராம் படி பண்ணி அருளிற்று –
இப்பொழுது ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ என்றும் -தேவிமாராவார் திருமகள் பூமி -என்றும் சொல்லுகிறபடியே
நாச்சிமாரோடு கூட சகல பிராணிகளுடைய தாபத்ரயங்களும் போம்படி
திருமஞ்சனத்துக்கு ஏறி அருளின தேவரீருடைய திருமநியிலே சகல தீர்த்தங்களும் கானலாய் இருந்தது -அது எங்கனே என்னில் –

வ்ருத்திர் வேகவதீ சமாஸ்ரித ஜன த்ராணே பவச்சேதச-
நாயந்தே
பரமாபதமா பன்னோ மநஸா சிந்தயத்தரிம் சது நாக வரச் ஸ்ரீ மான் நாராயண பராயண -என்றும்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்-என்றும் சொல்லுகிறபடியே –
பரமா பன்னனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷிக்கைக்காக எழுந்து அருளிய போது
கரிப்ரவரப்ரும்ஹிதே பகவதஸ் த்வராயை நம -என்கிறபடியே தேவரீருடைய திரு உள்ளத்திலே ப்ரவ்ருத்தி வேகவதியாய் இருந்தது
ஆகையாலே -வேகவதீ என்கிற தீர்த்தமாகச் சொல்லலாமே இரா நின்றது –

தாம்ரா குங்கும பத்ரிகா –
தேவரீர் திருமேனியில் சாத்தி அருளின குங்கும சர்ச்சையானது தாமர வர்ணையாய் இரா நின்றது
ஆகையாலே தாமர பரணீ என்ற தீர்த்தமாய்ச் சொல்லலாய் இரா நின்றது –

பஜதடீ தே துங்க பதரோ ஜ்ஜ்வலா –
உத்துங்க பாஹூ சிகர -என்றும் -பத்ர பாஹ -என்றும் -மணிவரைத் தோள் என்றும் -சொல்லுகிறபடியே
திருத் தோள்கள் ஆனவை உத்துங்கமாய் பத்திரமாய் உஜ்ஜ்வலமுமாய் இரா நின்றது
ஆகையாலே துங்க பத்ரா என்ற தீர்த்தமாகச் சொல்லலாய் இரா நின்றது –

ரங்கா தீஸ்வர நர்மதாச பணிதி-
மதுர பாஷீ என்றும் ப்ரியம்வத என்றும் -நர்மாலாபம் முஹூர நுவதன் -என்றும் சொல்லுகிறபடியே
தேவரீர் அருளிச் செய்யும் உக்திகள் நர்மத்தைக் கொடுக்குமதாய் இருந்தன
ஆகையாலே நர்மதா என்ற தீர்த்தமாகச் சொல்லலாய் இருந்தது –

சோணஸ் ஸூ ஜாதோ தர
வித்ரும சந்நிபாதர -என்றும் -பவளச் செவ்வாய் -என்றும் -வாயும் சிவந்து கனிந்து -என்றும் –
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டாம் கொலோ -என்றும் சொல்லுகிறபடியே தேவரீருடைய அதரமானது சோணமாய் இரா நின்றது
ஆகையாலே சோணம் -சிவப்பு -என்னும் நதம் என்று சொல்லலாய் இரா நின்றது –
தஸ்மாத் -த்வாம் – சர்வ தீர்த்தாத்மகம் –ஜ நோ மநுதே –
ஆகையாலே இப்படி எழுந்து அருளி இருக்கிற தேவரீரை சேவித்து நிற்கிற சகல சாத்விகர்களும் தேவரீரைத் திரு மணியிலே
சகல தீர்த்தங்களையும் வெளியிட்டுக் கொண்டு எழுந்து அருளி நிற்கிறவராக புத்தி பண்ணா நின்றார்கள் –

—————————————————————-

எனக்கே தன்ன்னோத் தந்த கற்பகம் அன்றோ -நம்பெருமாளை கற்பக விருஷமாக இரண்டு ஸ்லோகங்கள் அருளிச் செய்கிறார் மேல் –

அநேக சாகாச்ரித மாச்ரிதேப்யோ
தத்தாபி காங்ஷம் த்ரி தசைக போக்யம்
ஸூ பர்ண ரம்யம் ஸூ மனஸ் சமேதம்
ஸூ ரத்ருமம் த்வாம் ஸூ தியோ வதந்தி –ஸ்லோகம் -17-

நாயந்தே
சகல ஜகத் ஸ்ரஷ்டாவாய் -சர்வ ரஷகனாய் -சகல ஜகன் நியந்தாவாய் -சர்வ சேஷியாய் -சமாப்யதிக ரஹிதனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே
ஆள்கின்ற செங்கோலுடைய திருவரங்கச் செல்வரான தேவரீரை ஒரு கற்பகத் தருவாக விண்ணப்பம் செயலாய் இரா நின்றது –

அநேக சாகாச்ரித-
கல்பகமானது சர்வ ஆனந்தமான நந்த வனத்திலே சம்பவிக்கையாலே அனுகுல கந்தளிதமான சுவடுகளாலே பூரணமாய் இருக்கும்
தேவரீரும் -வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே சகல சாகா சிரஸ் ஸூ விதித சரண யுகள சரோஹராய் இருந்தீர் –

ஆச்ரிதேப்யோ தத்தாபி காங்ஷம் –
கற்பகமானது தன பக்கலிலே சென்று அபேஷித்தவர்க்கு அபேஷ அணு குணமாக பல பிரதான விலஷணமாய் இருக்கும்
தேவரீரும் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளலாய் இருந்தீர் –

த்ரி தசைக போக்யம் –
கற்பகமானது அம்ருதாசனராய் அத ஏவ அமர்த்யரான தேவ வர்க்கத்திற்கு அனுகூல தயா பாவ்யமாய் இருக்கும்
தேவரீரும் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா -என்றும் -விண்ணாட்டவர் மூதுவர் -என்றும் சொல்லுகிறபடியே
நிரந்தர அனுபவ காமுகரான நித்ய ஸூ ரிகளுக்கு நிரதிசய போக்யராய் இருந்தீர் –

ஸூ பர்ண ரம்யம் –
கற்பகமானது கண்டவர் கண்கள் உகந்து இருக்கும் படி கௌதுக்க ஜனகமான பத்ர விசேஷங்களாலே ரமணீயமாய் இருக்கும்
தேவரீரும் ஸூ பர்ணோசி கருத்மான் -என்கிறபடியே திருவடி மேல் கொள்ளுகையாலே
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்று உளர்வந்து காணீர் அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் -என்னும் படியாய் இருந்தீர் –

ஸூ மனஸ் சமேதம்
கற்பகமானது மதுகர குல கர்வ நிர்வாஹக மத முதித மனோ பவமான்ய சஸ்திர மாலாயமான மஞ்சரிகளாலே மாநநீயமாய் இருக்கும்
தேவரீரும் சத்வ நிஷ்டராய் -சதாசாரசேவா நிபுணராய் விதித சகல தத்வார்த்தராய் இருக்கிற வித்வத் சங்கங்களாலே சேவ்யமானராய் இருந்தீர் –

ஸூ ரத்ருமம் த்வாம் ஸூ தியோ வதந்தி –
ஆக இப்படி சகல சுருதி சிரோமான்யமாய் சகல பிரதான தீஷா தஷமாய் சர்வ ஸூ லபமாய் ஸூ ஜாதமாய்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்கிறபடியே சர்வ உபாய தரித்ரரான அடியோங்களுக்கு சர்வச வத்தையும்
கொடுக்கைக்கு ஒருப்பட்டு நிற்கிற ஒரு கற்பக தருவின் நிலை போலே இருந்தது –

——————————————————————-

ஸ்ரீ மத் ஸூ ரங்க தரணீச விசால சாகம்
ஸ்ரீ கௌஸ்துபஸ் புரித மீப்சிததா நதஷம்
ஹம்சாதி சத்த்வி ஜைவரை ருப சேவ்யமாநம்
த்வாம் மன்மஹே ஸூ ரதரும் ஸூ ர நாத நாத –ஸ்லோகம் –18-

நாயந்தே
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான நே மே த்யாவா ப்ருதிவீ -என்றும்
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் -என்றும் -அசத்வா இதமக்ர ஆஸீத் -என்றும்
நாசதா ஸீன் நோஸ தாசீத் -என்றும் சொல்லுகிறபடியே பூதர சரிதா சாகர பிரமுகமான சப்த த்வீபங்களும்
அதல விதலாதிகளான அதோலோகங்களும்
பூர்ப்புவாஸ் ஸூ வர மஹர் ஜனஸ் தபஸ் சத்யம் -என்று சொல்லப்படுகிற ஊர்த்வ லோகங்களும்
அவ்வோ லோக அந்தர்வர்த்திகளான தேவ மனுஷ்ய தெரியக் ஸ் தாவராதி சகல வஸ்துக்களும் உப சம்ஹ்ருதங்களாய்
தேவரீர் ஒருவருமே யாய் -ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா வன்று -என்னும்படி
சர்வ சூன்யம் என்னலாம் படியாய் இருந்துள்ள அக்காலத்திலே
பரம காருணிகராய் இருந்துள்ள தேவரீர் சதா பச்யந்தி ஸூரய -என்று நித்ய விபூதியில் உள்ள ஸூ ரிகள் நம்மை சதா அனுபவம் பண்ணச் செய்தே
லீலா விபூதியில் உள்ள இவ்வாத்மவர்க்கங்கள் நம்மைக் கண்டு அனுபவிக்கப் பெறாமல் இழவு படுவதே -என்று திரு உள்ளத்திலே நொந்து அருளி
யதா பூர்வமகல்பயத் -என்றும் -வித்தாய லோகான் விதாய பூதானி விதாய சர்வா பிரதிசோ திகச்ச -என்றும் சொல்லுகிறபடியே
யதா பூர்வம் சமஸ்த பிரபஞ்சத்தையும் உண்டாக்கி அருளி தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிசத்ததநு பிரவிச்ய -என்று
எடுத்ததொரு அகம் குடிபுகுவாரைப் போலே
தத்தத்த அண்டாந்தர்வர்த்திகளான சகல வஸ்துக்களையும் சகல வஸ்துக்களையும் அனுபிரவேசித்து அருளி
பரித்ராணாய சாது நாம் -என்கிறபடியே ஆஸ்ரித சம்ரஷணாதி பிரயோஜனத்தை திரு உள்ளத்திலே கொண்டு அருளி திருவவதரித்து
நித்ய விபூதி லீலா விபூதி வ்யாவ்ருத்த ஸ்ரீ ரங்க தரணிய தீசராய் இப்பொழுது எழுந்து அருளி நிற்கிற நிலை
கற்பக வ்ருஷத்தொடு சாம்யமாக விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -எங்கனே என்னில் –

ஸ்ரீ மத் ஸூ ரங்க தரணீச –

விசால சாகம்
நாயந்தே
அக்கற்பக தருவானது விசாலங்களான சாகைகளை உடைத்தாய் இருக்கும்
தேவரீரும் விஸ்த்ருங்களான வேத சாகைகளை உடைத்தாய் இருப்பீர் –

ஸ்ரீ கௌஸ்துபஸ் புரிதம்-
நாயந்தே
அக்கற்பக மானது ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஸ்புரிதமாய் இருக்கும் –
தேவரீரும் ஸ்ரீ தேவி என்ன ஸ்ரீ கௌஸ்துபம் என்ன இவைகளாலே விளங்கா நிற்பீர் –

ஈப்சிததாநதஷம்
அக்கற்பக மானது இச்சித்த வற்றை கொடுக்க வற்றதாய் இருக்கும்
தேவரீரும் சகல பல பிரதோ ஹி விஷ்ணு -என்கிறபடியே ஆஸ்ரிதர்களுக்கு சகல பலங்களையும் கொடுத்து அருளா நிற்பீர் –

ஹம்சாதி சத்த்வி ஜைவரை ருப சேவ்யமாநம் –
அக்கற்பக மானது ஹம்சம் முதலிய பஷி ஜாலங்களாலே சேவிக்கப் படா நிற்கும்
தேவரீரும் ஹம்சர் பரம ஹம்சர் தொடக்கமான சத்துக்களாய் உள்ள ப்ராஹ்மண உத்தமர்களாலே சேவிக்கப் படா நிற்பீர் –

த்வாம் மன்மஹே ஸூ ரதரும் ஸூ ர நாத நாத —
ஆக இப்படி அழகிய மணவாளப் பெருமாள் எனபது ஒரு கற்பக வருஷம்
ஆஸ்ரிதர்களுக்கு அபீஷ்ட பிரதானம் செய்கைக்கு ஒருப்பட்டு நிற்கிற நிலை போலே இருந்தது –

————————————————————————————————————

அத்யாயதே வசதி ஹல்லக புஷ்பமாலா
வஷச்தலே விநிஹிதா தவ ரங்க ராஜ
ஸ்வச் சந்த சாநி கமலா சரணார விந்த
மாணிக்ய நூபுர மயூக பரம்பரேவ –ஸ்லோகம் –19-

நாயந்தே
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ -என்றும்
யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ச -என்றும்
ப்ரத்யஸ் தமிதபேதம் யத் சத்தாமாத்ரா மகோசரம் வசஸா மாத்ம சம்வேத்யம் தத் ஜ்ஞானம் ப்ரஹ்ம சம்ஜ்ஞிதம் -என்றும்
தத்வேன யஸ்ய மஹிமார்ணவ சீகராணு சக்யோ நமாதுமபி சர்வபிதா மஹாத்யை-என்றும்
யசயாச்தே மகிமா நமாத்மன இவத்வத் வல்லபோபி பிரபு -நாலம் மாதுமியத்தயா-என்றும்
தனக்கும் தன தன்மை யறிவறியானை-என்றும் -அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருளாதல் -என்றும்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசைமுகற்கும் ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வன்னனையே -என்றும் சொல்லுகிறபடியே
தேவரீருடைய ஸ்வரூபம் அபரிச்சேத்யம் என்று சித்தமாக இருக்கச் செய்தே முமுஷூக்களான ஆத்மாக்களுக்கு
யதாவஸ்திதமான பரமாத்ம ஜ்ஞானத்தாலே மோஷம் பெற வேண்டுகையாலே
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும் -ப்ராணோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம காம் ப்ரஹ்ம -என்றும்
அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே சதைக ரூப ரூபாய விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே-என்றும்
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நரநாரணனே-என்றும் உணர் முழு நலம் -என்றும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுதமே -என்றும் சொல்லுகிற பிரமாணங்களாலே

ஸ்வரூபம் நிரூபிதம் ஆயினும் நிரூபித்த ஸ்வரூபத்துக்கு விசேஷணமான-
வசீ வதான்யோ குணவான் ருஜூச் சுசிர் மருதூர் தயாளூர் மதுர ஸ்திரஸ் சமை கருதீ க்ருதஜ்ஞஸ்
த்வமசி ஸ்வ பாவதஸ் சமஸ்த கல்யாண குணாம்ரு தோததி-என்று சொல்லப்படுகிற தர்மங்களில் பிரதான நிரூபகையான பிராட்டி
ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ -என்றும் அச்யேசா நோ ஜகதோ விஷ்ணு பத்னீ என்றும் -சரத்தா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்
நாராயண பரம் ப்ரஹ்ம சக்திர் நாராயநீச சா வா பகாவதி சம்ச்லேஷா தேக தத்வமிவஸ்திதௌ-என்றும்
அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபாயதா -என்றும்
வாரணி முலையாள் மலர்மகளோடு மண் மகளுடன் நிற்ப -என்றும் சொல்லுகிற படியே
நித்ய அனபாயிநியாய்க் கொண்டு திரு மார்பிலே எழுந்து அருளி இருக்கையாலே
இப்போது திருமஞ்சனம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு ஏறி அருளின தேவரீருடைய திரு மார்பிலே சாத்தின
செங்கழு நீர்த் திரு மாலையை இப்படி விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -எங்கனே என்னில்

அத்யாயதே வசதி ஹல்லக புஷ்பமாலா வஷச்தலே விநிஹிதா தவ ரங்க ராஜ
ஸ்வச் சந்த சாநி கமலா சரணார விந்த மாணிக்ய நூபுர மயூக பரம்பரேவ —
நாயந்தே
விசால வஷஸ்தல சோபி லஷணம்-என்றும்
பீநவஷா விசாலாஷ -என்றும்
கவாட விஸ்தீர்ண மநோரமோர -என்றும்
என் திருமகள் சேர் மார்பனே என்றும் சொல்லுகிற பிரகாரத்தாலே
நாச்சியாருக்கு ஹிரண்ய ப்ராகாரமாய் மிகவும் அகன்று இருக்கிற தேவரீருடைய திரு மார்பிலே சாத்தின செங்கழுநீர்
வேதாந்தாஸ் தத்வ சித்தாம் முரபிதுரசி யத்பாத சிஹ்னைஸ் தரந்தி -என்றும்
அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்றும் -சொல்லுகிறபடியே தாம் வேண்டினபடி உலாவா நிற்கிற
நாச்சியாருடைய மாணிக்கத் திருச் சிலம்பினது ஒளி ஒழுங்கு போலே இரா நின்றது –

———————————————————————————–

ரங்கே சரஜநீசர்சா ராஜதே தவ வஷசி
தேவா ஹிரண்ய வர்ணாய தேஹகாந்திரி வோதிதா –ஸ்லோகம் –20-

நாயந்தே
சர்வ ஜகத் காரண பூதராய்– சர்வ ஸ்வாமி யாய் -சர்வ கர்ம சமாராத்யராய் -சர்வ ரஷகராய் -சர்வ சேஷியாய்
-சர்வ உபாஸ்யராய் -சர்வ நியாமகராய் -இருக்கிற தேவரீர் -சைத்ர ஸ்ரீ மா நயம் மாச புண்ய புஷ்பித காநன-என்கிறபடியே
தேவரைப் போலே
ஸ்ரீ மானாய் -பாவனமாய் -திருமகள் சேர் மார்பனே -என்றும் -அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்றும் –
திருமகளார் தனிக் கேள்வன் பெருமை யுடைய பிரானார் -என்றும் அருளிய அபியுக்தர் பாசுரப்படியும்
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் என்று சொல்லும் ஸ்ருத்யர்த்தத்தின் படியேயும்
தேவரீர் திருமார்பில் எழுந்து அருளி இருக்கிற ஹிரண்ய வரணையான நாச்சியாரின் திரு மேனியின் பிரபை போலே இரா நின்றது –

சர்வகந்த சர்வரச என்று சொல்லப்படும் தம்மைப் போலே போக்யமுமான இம்மாசத்திலே பூ முடி சூடி
வசந்தே வசந்தே யஜேத -என்று சொல்லுகிறபடியே
தாமும் ஒரு யஜ்ஞம் பண்ணுவதாக தீஷித்து அருளி சுருதி ஸ்ம்ருதி சர்வமமை வாஜ்ஞா -என்று சொல்லுகிறபடியே
தேவரீருடைய ஆஜ்ஞா ரூபமான ஸ்ருதியின் அர்த்தங்களுக்கு உப ப்ருஹ்ணமான ஸ்ரீ பகவத் சாஸ்திர க்ரமத்தாலே
யஜ்ஞே ந யஞ்மய ஜந்த தேவா -என்கிறபடியே தேவரீர் நடத்தி அருளுவதும் யஜ்ஞமாய்
அதிலே தாமே பிராப்யமும் ப்ராபகமும் ஆவீர் என்னும் இந்த ரகஸ்ய அர்த்தத்தை வெளியிட வேண்டித் திருமஞ்சனமாடுவதாக
எழுந்து அருளி திரு மார்பினில் சாத்திய மஞ்சள் காப்பு இங்கனே சொல்லலாய் இரா நின்றது –

————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிய நம்பெருமாள் திருமஞ்சன கட்டியங்கள் — ஸ்லோஹங்கள்–5–12–

March 30, 2016

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீ வத்சாங்க ஸூத ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயசே-

சத் பஷபாதாத் புவநா ஸ்ரயத்வாத்
சந் மாநசா வாச நிபந்தனத்வாத்
பத்மாச்ரயத்வாச்ச பவாநிதா நீம்
ஹம்ஸோ யதா ராஜதி ரங்க ராஜ -ஸ்லோஹம் -5-

நாயந்தே
ஹம்சச்சுசிஷத் -என்றும் -அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் -என்றும் சொல்லுகிறபடியே
சகல சாத்வில லோக லோசா நாநந்த பாராவார ஹேதுவான வடிவழகை யுடைய தேவரீரை
ஒரு அன்னமாக விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது எங்கனே என்னில் –

சத் பஷபாதாத்
நாயந்தே
அன்னமானது தூவிசேர் அன்னம் என்று கொண்டு நன்றான பஷபாதத்தை யுடைத்தாய் இருக்கும்
தேவரீரும் மம ப்ராணா ஹி பாண்டவா -என்கிற கணக்கிலே சத்துக்களுக்கு பஷபாதியாய் இரா நின்றீர் –

புவநா ஸ்ரயத்வாத்
நாயந்தே
அன்னமானது அதிஹ்ருத்யமாய் நிர்மலமான ஜீவன சவித வர்த்தியாய் இருக்கும்
தேவரீரும் -வசந்தி சர்வ பூதா நி என்ற கணக்கிலே அகில சேதன அசேதனங்களுக்கும்
ஆஸ்ரயமாய் எழுந்து அருளி இருக்குமவராய் இருந்தீர் –

சந் மாநசா வாச நிபந்தனத்வாத்
நாயந்தே
அன்னமானது -மநோ ஹராமான மானஸ சரஸ்சிலே வர்த்தியா நிற்கும்
தேவரீரும் புகுந்து நம்முள் மேவினார் -என்கிறபடியே சத்துக்களுடைய மனசிலே எழுந்து அருளி இருக்குமவராய் இருந்தீர்

பத்மாச்ரயத்வாத்-பத்மாலயத்வாத் -பாட பேதம் -இதுவே சிறந்ததாகக் கொள்வர் –
நாயந்தே
அன்னமானது பங்கேருஹ பரிசர வர்த்தியாய் இருக்கும்
தேவரீரும் -என் திருமகள் சேர் மார்பனே -என்றும் -வடித் தடம் கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் -என்றும்
சொல்லுகிறபடியே பூவில் பரிமளமான பிராட்டி திரு மார்பிலே நித்ய வாஸம் பண்ணும்படியாய் இரா நின்றீர் –

பவாநிதா நீம் ஹம்ஸோ யதா ராஜதி ரங்க ராஜ –
ஆக இப்படி தேவரீர் நின்ற நிலை அத்யாச்சர்ய அவதாரமாய் -அதி மநோ ஹரமாய் -சத்கதியாய்
-சல்லாபசதுரமாய் -உரையாட வல்ல –நாரமத்ய வர்த்தியாய் இருப்பது
ஒரு அன்னம் அஞ்சாதே கொள் என்று அபய பிரதானம் பண்ணிக் கொண்டு நிற்கிற நிலை போலே இருந்தது –

————————————————————————————————–

அந்த ஸ்தித ஸூ மனசா மமரேசரத்ன
ச்சாயா விகல்பிதருசி நயனா பிராமம்
ஆபாதிதஸ் மரகுண பிரதி தப்ரசார
சாகாஸூ ரங்க ந்ருபதிர் மதுபோ விபாதி –ஸ்லோகம் -6-

நாயந்தே சஷூர் தேவாநா முதமர்தயாநாம் -என்றும்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்றும் சொல்லுகிறபடியே உபய விபூதியில் உள்ளார்க்கும் தர்சன ஹேது த்ருஷ்டி பூதராய்
உயர்வற உயர் நலம் உடையவன் -என்று ஆனந்த குண விசிஷ்டராய் அந்த ஆனந்த குண அதிசயத்துக்கு மேலே
மயர்வற மதிநலம் அருளினான் என்று பக்தி ரூப ஜ்ஞான பிரதானத்தாலே நிர்ஹேதுக உபகாரகராய்
அதுக்கு மேலே அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று சகல ஸூரி சம்சேவ்யமானரான தேவரீர்
சர்வ பிரகார விமுகரான சம்சாரி சேதனரை விஷயீ கரிக்கைக்காகத் திருவடி நிலை கோத்துப் புறப்பட்டு அருளி
ரூப ஔதார்ய குணை த்ருஷ்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே த்ருஷ்டி சித்த அபஹாரியான
திவ்ய மங்கள விக்ரஹ வைலஷணயத்தைக் காட்டி அருளி
சமஸ்த சேதனருடைய மனஸ்ஸூக்களும் பாஹ்ய விஷயங்களில் செல்லாதே தேவரீர் பக்கலிலே
ஒரு மடை கொள்ளும் படி பண்ணி அருளத் திரு உள்ளமாய்
மத் பக்த பாத தோ யேன மத் ஸ்நாபித ஜலேநவா நரா -பாபாத் ப்ரமுச்யந்தே ஸ்நானபாநாதி கர்மபி -என்று
தேவரீர் திரு மஞ்சனமாடி யருளின தீர்த்தாலும்
அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப்பொடி சூடுதலாலும் அடியோங்கள் அபாச்த சமஸ்த பாபராய் உஜ்ஜீவிக்கும் படி
தேவரீர் திருமஞ்சனமாடி யருளி சந்தன குங்கும பங்கா லங்க்ருதராய் நிற்கிற இந்நிலை
ஒரு மதுரமாக விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -எங்கனே என்னில் –

அந்த ஸ்தித ஸூ மனசாம்
நாயந்தே
மதுகரமானது பூம் கொத்துக்களின் உள்ளே நுழைந்து அந்த ஸ்திதமாய் இருக்கும் –
தேவரீரும் அந்தணர் தம் சிந்தையான் என்கிறபடியே அநந்ய பிரயோஜனருடைய அந்த கரணங்களிலே அநவரதம் எழுந்து அருளி இரா நின்றீர் –

அமரேச ரத்னச்சாயா விகல்பிதருசி
மதுகரமானது இந்திர நீலத்தின் கறுப்பை யுடையது என்னலாம் படி கறுப்பு நிறம் உடைத்தாய் இருக்கும்
தேவரீரும் சாமத்தின் நிறம் கொண்ட தாடாளன் -என்கிறபடியே ச்யாமமான திருமேனியை யுடையராய் இருந்தீர் –

நயனா பிராமம்
மதுகரமானது கண்டவர் கண்களுக்கு ஸ்ப்ருஹாஸ் பதமாய் இருக்கும் –
தேவரீரும் உன்னைக் காண விரும்பும் என் கண்கள் -என்கிறபடியே கண்டவர் கண்களுக்கு
ஆசை மிகும் படியான வடிவழகை யுடையராய் இருந்தீர் –

ஆபாதிதஸ்மரகுண
மதுகரமானது காமன் கார்முகத்துக்கு குணபூதமாய் இருந்தது –
தேவரீரும் காமனைப் பயந்த காளை-என்கிறபடியே அநங்கியான காமனுக்கு அங்கி யாம்படி குணாதானம் பண்ணி அருளினீர் –

பிரதி தப்ரசார சாகாஸூ –
மதுகரமானது மதுலோலுபம் ஆகையாலே -பூத்த கொம்புகள் தோறும் உலவித் திரியா நிற்கும் –
தேவரீரும் வேத சாகைகளிலே விவித விநோத சஞ்சாரம் பண்ணி யருளா நின்றீர் –

ரங்க ந்ருபதிர் மதுபோ விபாதி —
ஆக இப்புடைகளாலே ஸ்ரீ ரங்க ராஜரான தேவரீர் தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு -என்று நம்மாழ்வார்
அருளிச் செய்த படியே வண்டின் நிலையை அடியோங்களுக்கு வெளியிட்டுக் கொண்டு நிற்கிற நிலை போலே இந்நிலை இருந்தது –

————————————————————————–

சார்த்தம் த்விஜைச் ஸ்ராவண கர்ம ரங்கின்
கல்போசி தஸ் நாநா விதிம் கரோஷி
ச்ருதிம் ருத்ப்யாம் வ்யபதிச்யமாநம்
ஸ்வயம் மமாஜ்ஞம் அநுவர்த்தயாமி –ஸ்லோகம் -7-

நாயந்தே
ஸ்ரவண நஷத்ரமானது எல்லா நஷத்ரங்களில் காட்டில் பிரசச்தமாய் இருக்கக் கடவது –
இதுக்கு ப்ராசச்த்யம் எங்கனே என்னில் -ஸ்ரவண நஷத்ரம் விஷ்ணோ தேவதா என்கையாலே –
விச்வாத்மாக்களுக்கும் அதிபதியாய் இருக்கிற தேவரீர் தாமே இந்த நஷத்ரத்துக்கு அதி தேவதை யாகையாலே
இது எல்லா நஷத்ரங்களிலும் காட்டில் பிரசச்தமாய் இருக்கும்
சர்வேஷூ சாவதாரேஷூ ஸ்ரவணர் ஷேரிபூன் ப்ரதி
ஜயார்த்த முத்யமம் சக்ரே பகவான் மது ஸூ தன-என்கையாலே
எல்லா அவதாரங்களிலும் இந்த நஷத்ரம் பார்த்துப் புறப்படுகையாலும்
தஸ்மாத் ஸ்வா த்யாயோஸ் த்யே தவ்ய-என்று கொண்டு சொல்லுகிற நித்ய விபூதியிலும் உள்பட
ஸ்ராவணயாம் ப்ரஷ்டபத்யாம் வா உபாக்ருத்யயதா விதி யுக்தச் சந்தாம்ச்ய தீயீத -என்று கொண்டு சொல்லுகிற
அத்யய நாரம்ப காலமாக ஸ்ராவணி யான பௌர்ணமாசையைச் -ஆவணி அவிட்டத்தைச் -சொல்லுகையாலும்
உப நீய து யச்சிஷ்யம் வேதமத்யாப யேத் த்விஜ-ஸகல்பம் ஸரகஸ்யம் ச தமாசார்யம் பிரசஷதே -என்று கொண்டு
ஆசார்யன் தன்னுடைய கரணத்தை ப்ரகடீ கரிக்கைக்கு பிரதம ஆச்சார்யராய் இருக்கிற தேவரீர்
இந்த ஸ்ராவண கர்மத்தை ப்ரத்யஷமாக நாம் உள்பட அனுஷ்டிக்கக் கடவோம் என்று சொல்லி அருளினீர்
இதுக்கு ஹேது என் என்னில்
ஸ்ருதி ஸ்ம்ருதி மாமி வாஜ்ஞா என்று கொண்டு பிரதிஜ்ஞை பண்ணி அருளினீர்
ஸ்ருதி ஸ்ம்ருதி களுக்கு ஆரம்பம் இதிலேயாய் இருக்கும்
தேவரீரும் த்ரை வர்ணிகரோடு கல்ப உசித திரு மஞ்சனம் பண்ணி அருளி நம்முடைய ஆஜ்ஞை யான
ஸ்ருதி ஸ்ம்ருதி யுக்த கர்மங்களை நாம் உள்பட அனுஷ்டிப்போம் என்று எழுந்து அருளி நிற்கிற நிலை போலே இருந்தது

————————————————————————

சமுன் மிஷத் பத்மஜதார சம்ஸ்ரிதா
தவாவதாரக்ரம பாட தத்பரா
த்ரயீவ ரங்கேச சமர்த்யதே ஜனை
அசௌ ஜயந்தீத் யுதிதே யமஷ்டமீ –ஸ்லோகம் –8-

நாயந்தே
ஜெயந்தி சம்ஜ்ஞையான இந்த அஷ்டமியை த்ரயீ என்று சொல்லலாம் படி இருந்தது -எங்கனே என்னில் –

சமுன் மிஷத் பத்மஜதார சம்ஸ்ரிதா
ரோஹிணீ நஷத்ரம் பிரஜாபதிர் தேவதா என்கையாலே பிரஜாபதி தேவதாகமாகும்
இங்கு பத்மஜ சப்தம் ஸ்ரஷ்டா பிரஜாபதிர் வேதா -என்ற பர்யாயமான பிரஜாபதிக்கு வாசகமாய் இருக்கும்
தேவரீர் வஸூ தேவரை ஸ்தம்பாதிகளைப் போலே நிமித்தமாகக் கொண்டு அவதரித்து அருளிற்று –
இப்படி நியமித்த நிமித்த மாத்ரமான வஸூ தேவரும் காச்யப பிரஜாபதியின் அம்சம் ஆகையாலே ப்ரஜாபதியாய் இருந்தார்
இவரை நிமித்தமாகக் கொண்டு இந்த ஜயந்தி அஷ்டமியில் தேவரீர் அவதரித்து அருளுகையாலே
இவரையும் இதற்கு அதிதேவதை என்னலாய் இரா நின்றது
ஆக இந்த ஜெயந்தி என்னும் அஷ்டமி பத்மஜ தாரமுண்டு பிரஜாபதி தேவதாகமான ரோஹிணீ அத்தோடு கூடி இருக்கக் கடவதாய் இருக்கும்
த்ரயீ எனப்படும் வேதமும் பத்மஜனுண்டு ஆதி ப்ரஹ்மா அவனாலே உச்சார்யா மாணமான தாரம் உண்டு பிரணவம்
அத்தோடு சஹிதமாய் இருக்கும்
இந்த அஷ்டமியோ என்னில் பத்மஜ தாரமுண்டு ரோஹிணி அத்தோடு கூடி இருக்கக் கடவதாய் இருக்கும் –

தவாவதாரக்ரம பாட தத்பரா –
நாயந்தே
வேதம் தேவரீருடைய க்ரமத்தைச் சொல்லுகையாலே அதிலே தத் பரமாய் இருக்கும் -எங்கனே என்னில்
வேதம் த்ரீணி பதாவி சக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய -என்றது-க்ரமு-பாத விஷேபே -ஆகையாலே
தேவரீருடைய த்ரிவிக்ரம அவதாரத்தை அது சொல்லா நின்றது –

இந்த ஜெயந்த்யஷ்டமியும் யஸ்யாம் ஜாதோ ஜகந்நாத கிரீடீ கௌச்துபீ ஹரி -என்கையாலே தேவரீருடைய அவதார காலத்தைச் சொல்லா நின்றது
த்ரயீவ ரங்கேச சமர்த்யதே ஜனை அசௌ ஜயந்தீத் யுதிதே யமஷ்டமீ -ஆகையாலே தேவரீர் அவதரித்து அருளின
ஜெயந்த்யஷ்டமியை தேவரீர் அவதார ப்ரபாவத்தாலே சர்வ பிராணிகளும் த்ரயீ என்று கொண்டு அறுதி இடா நின்றார்கள்-

———————————————————————-

அம்ருதமயம நந்தம் சித்த சர்வார்த்த ஜாதம்
நியமித சகலார்த்தம் நிச்சிதாத்மாவ போதம்
கிமிஹ பஹூ நிருக்தை கீர்த்தா நாபீஷ்டதம் த்வாம்
நிகமமிவ மநோஜ்ஞம் ரங்க ராஜாத்ய மன்யே –ஸ்லோகம் –9-

நாயந்தே
சர்வே வேதா யத்ரைகம் பவந்தி -என்றும் -சர்வே வேதா யத்பதமாம நந்தி -என்றும் –
வேதைச்ச சர்வைரஹமேவ வேத்ய -என்றும் -மறையாய நாள் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே -என்றும் சொல்லுகிறபடியே
சகல வேத வேத்யராய் -ந சஷூ ஷா பச்யதி கச்ச நைனம்-என்றும்
-கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் கட்கரிய கண்ணன் என்றும் சொல்லுகிறபடியே கட்கரியராய் இருக்கிற தேவரீர்
வரதயதி ந புவ்யவாதரிஷ்ய -என்கிறபடியே நாம் அதீந்த்ரியராய் இருந்தால் நம்முடைய ஆராதன பரங்களான வைதிக தர்மங்கள் சங்குசிதங்களாம்
ஆகையால் நாமே நம்மை வெளியிடக் கடவோம் என்று திரு உள்ளம் பற்றி அருளி –
தென்னாடும் வடநாடும் தோழா நின்ற திருவரங்கம் திருப்பதியிலே அகில ஜன நயன விஷய தாங்கதராய் இப்பொழுது
தேவரீருடைய ஆராதனா ரூபமாகச் செஞ்சொல் வேள்விப்புகை கமழும் படி மறைப் பெரும் தீ வளர்த்து இருக்கிற
அறம் திகழும் மனத்தவர் திறத்தில் காருண்யம் கரை புரண்டு அவர்களைக் கடாஷிக்க வேணும் எனக் கருதித்
திருநாள் என்று பேரிட்டு புறப்பட்டருளி அபாங்க வீஷணங்களாலே அநந்ய பிரயோஜனரான தர்மசாரிகளை தன்யராக்கி –
கர்த்தா காரயிதா ச ச என்றும் -யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட தத்ததே வேதரோ ஜன -என்றும் சொல்லுகிறபடியே
தேவரீருடைய அனுஷ்டான முகத்தாலும் வைதிக தர்ம ஸ்தாபனம் செய்து அருளுகைக்காக சக்ரமமாகத் மாடியருளி
மிக்க வேதியர் பக்கல் அந்தஸ்தமான அனுகம்ப அனுராகங்கள் புற வெள்ளம் இட்டாப் போலே அழகிய
திரு மார்பைச் சந்தன குங்கும பங்கங்களாலே அலங்கரித்துக் கொண்டு நிற்கிற நிலை
வேதத்தோடு சாம்யம் விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -எங்கனே என்னில் –

அம்ருதமயம்-
நாயந்தே
வேதமானது வாசா விரூப நித்யயா-என்றும் -நிற்கும் நான்மறை -என்றும் -சொல்லுகிறபடியே நித்ய ஸ்வரூபமாய் இருக்கும் –
தேவரீர் ச தா ஆத்மா அந்தர்யாம்யம்ருத -என்றும் கேடிலீ என்றும் -சொல்லுகிறபடியே
நிரபாய ஸ்வரூபராயும்-எததேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -என்றும் -என்னரங்கத்து இன்னமுதர் என்றும் சொல்லுகிறபடியே
அம்ருதம் போலே நிரதிசய போக்ய பூதராயும் இரா நின்றீர் –

அநந்தம்-
வேதமானது -அநந்தா வைவேதா -என்றும் ஓதுவார் ஒத்து எல்லாம் -என்றும் சொல்லுகிறபடியே அபரிச்சேத்யமாய் இருக்கும் –
தேவரீர் -சத்யம் ஜ்ஞானம் ஆனந்தம் பிரம்மா -என்றும் -அச்சுதனை அனந்தனை -என்றும் சொல்லுகிறபடியே
த்ரிவித பரிச்சேத ரஹீதராய் இரா நின்றீர் –

சித்த சர்வார்த்த ஜாதம்
வேதமானது சாதுர்வர்ண்யம் த்ரயோ லோகா -என்கிறபடியே தன்னாலே பிரதிபாதிக்கப்பட்ட வர்ணாஸ்ரமாதி
சமஸ்த அர்த்தங்களையும் உடைத்தாய் இருக்கும்
தேவரீர் பதிம் விச்வச்ய இத்யாதிப்படியே சேஷிதயா சித்த சர்வார்த்த ஜாதருமாய் யோக சித்தருமாய் நித்ய சித்தருமாய் இருப்பார்க்கு
சர்வ புருஷார்த்த ரூபருமாய் சகல பல பிரதருமாய் ஆப்த காமஸ்ய கா க்ரியா என்றும் சத்யகாம என்றும்
வா ஸூ தேவோ சிபூர்ண -என்றும் சொல்லுகிறபடியே அவாப்த சமஸ்த காமருமாய் இரா நின்றீர் –

நியமித சகலார்த்தம்
வேதமானது -இதழ் குர்யாத் இதம் நகுர்யாத் -என்று நியமிக்கப் பட்டு இருக்கிற
விதி நிஷத ஆத்மகங்களான சகல கார்ய வாக்யார்த்தங்களை உடைத்தாய் இருக்கும் –
தேவரீர் -அந்த பிரவிஷ்டத் சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்கிறபடியே சங்கல்ப்பத்தாலே
நியமிக்கப் பட்டு இருக்கிற சித் அசித் ஆத்மாக சகல பதார்த்தங்களையும் உடையராய் இரா நின்றீர் –

நிச்சிதாத்மாவ போதம் –
வேதமானது பஞ்ச விம்சோயம் புருஷ பஞ்ச விம்ச ஆத்மா பவதி -என்று சதுர்விம்சதி தத்வாத்மகமான தேகாத்பரமாகவும் –
யஸ் யாஸ்மி பத்யு தமந்த்ரேமி -என்று பரதந்த்ரமாகவும் -யஸ் யாத்மா சரீரம் -என்று தேவரீருக்குச் சரீரமாகவும்
நிச்சயிக்கப் பட்ட ஜீவாத்மா ஜ்ஞானத்தையும்
பதிம் விச்வச்ய இத்யாதிப்படியே சேஷித்வாதி வேஷேண நிச்சயிக்கப்பட்ட பரமாத்மா ஸ்வரூப ஜ்ஞானத்தையும் யுடைத்தாய் இருக்கும்
தேவரீர் ஸ்ரீ கீதாமுக கிரந்த நிச்சிதாத்மா அவபோதருமாய் -த்வமேவ த்வாம் வேதத யோசி சோசி என்கிறபடியே
தேவரீராலே நிச்சயிக்கப்பட்ட தேவரீருடைய ஸ்வரூப ஜ்ஞானத்தை யுடையராய் இரா நின்றீர் –

கிமிஹ பஹூ நிருக்தை
அதிகம் பேசி என்னாவது –
கீரத்த நாபீஷ்டிதம் வேதமானது புறம் பார்க்க வேண்டாதபடி தன்னைக் கீர்த்தித்த மாத்ரத்திலே அபேஷித புருஷார்த்த பிரதமாய் இருக்கும்
தேவரீரும் நெடியான் தன் நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால்
கீர்த்தா நாபீஷ்டதம் த்வாம் தாம் வேண்டும் காமமே காட்டும் கடித்து -என்றும்
குலம் தரும் -என்றும் இத்யாதிப்படியே சாதநாந்தர நிரபேஷமாய் திருநாம சங்கீர்த்தன மாத்ரத்தாலே
த்ரிவர்க்க அபவர்க்க ரூப சர்வ அபேஷித ப்ரதராய் இருந்தீர் –

மநோஜ்ஞம்-
வேதமானது பூர்வ உத்தர பாகன்களாலே தேவரீருடைய ஆராதனா ரூப தர்மத்தையும் -ஆராத்யரான தேவரீருடைய
ஸ்வரூப ரூப குணா விபூதிகளையும் அறிவிப்பிக்கையாலே எழில் வேதம் என்னும் படி அழகியதாய் இருக்கும்
தேவரீர் -உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -என்கிறபடியே நினைவுக்கு வாய்த்தலையான நெஞ்சிலே
குடியிருந்து சர்வ அபிப்ப்ராயங்களையும் சாஷாத் கரித்துக் கொண்டு இரா நின்றீர் –

த்வாம் நிகமமிவ ரங்க ராஜாத்ய மன்யே –
ஆக இப்புடைகளாலே –
அரங்கத்து அமலன் -என்றும் -வைத்த மா நிதி என்றும் -சதுர்மூர்த்தி -என்றும் -பிறப்பிலி -என்றும்
-சொல்லப்படுகிற நம்மைப் போலே –
வசையில் நான்மறை -என்று ஹேய ப்ரத்ய நீகமாய் -ப்ராஹ்மணானாம் தனம் வேத -என்றும் -ருசஸ் சாமாநி யஜூம்ஷி சாஹி ஸ்ரீ ரம்ருதாசதாம் -என்றும்
அந்தணர் மாடு -என்றும் -சொல்லுகிறபடியே அறிவுடையார்க்கு நிதியாய் மறை நான்கு என்று சதுர் பிரகாரமாய்
முது வேதம் என்று பிறப்பற்று இருக்கிற வேதத்தை -பண்டை நான்மறையும் வேள்வியும் -என்று தொடங்கி-
-அண்டமும் தானே நின்ற வெம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தான் என்று சொல்லலாம்படியான நம்மைக் கண்டால் போலே
காணுங்கோள்-என்று தேவரீருக்கும் வேதத்திற்கும் உண்டான சாம்யத்தை வெளியிட்டுக் கொண்டு நிற்கிற நிலை போலே இந்நிலை இருந்தது –

———————————————————————————————————

ச்யாமாபம் மகுடோ பேதம் கட காஞ்சித முந்னதம்
சத்வாச்ராயம் ரங்கராஜம் மஹீதரம வைம் யஹம் –ஸ்லோகம் –10-

நாயந்தே
விஷ்ணு பர்வதாநாமதிபதி -என்றும் -மேரு சிகரினா மகாம் -என்றும் சொல்லுகிற படியே
தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பை ஒரு பர்வதம் என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –
எங்கனே என்னில் –

ச்யாமாபம்
நாயந்தே
பர்வதமானது ச்யாமளமாயும் கோமளமாயும் இருக்கும்
தேவரீரும் பச்சை மா மலை போல் மேனி என்கிறபடியே மரகத மலையை உருவகுத்தால் போலே இரா நின்றீர் –

மகுடோ பேதம் –
பர்வதமானது உயர்ந்த கொடு முடியோடு கூடி இருக்கும்
தேவரீரும் சேஷித்வ ஸூ சகமான துன்னு மா மணி முடி யுடனே கூடோ இரா நின்றீர் –

கட காஞ்சிதம்-
பர்வதமானது தாழ்வரைகள் உடன் கூடி இருக்கும்
தேவரீரும் ஆஸ்ரித விரோதிகளை விஹஸ்தமாக்கக் கடவதான கடகம் என்னும் ஹஸ்தாபரணத்தோடு கூடி இரா நின்றீர் –
விஹாச்தமாக்க -கை இழக்கும் படி -பலம் இழக்கும் படி என்றவாறு

உந்னதம் –
பர்வதமானது ஒருகாலும் அளவு கொள்ள ஒண்ணாது ஆகையாலே விஷ்ணு பதாஸ்ரயமாய் உயர்ந்து இரா நிற்கும்
தேவரீரும் -நெடியான் படி கடந்தான் -என்று பதக்ராந்தியாலே எட்ட ஒண்ணாத படியாய் இருந்தீர் –

சத்வாச்ராயம் –
பர்வதமானது சிம்ஹாதிகளான சத்வங்களுக்குப் புகலிடமாய் இருக்கும் –
தேவரீரும் சத்வம் விஷ்ணு பிரகாசகம் என்றும் சத்வம் ஆஸ்ரய க என்றும் சொல்லுகிறபடியே சத்வ குண பிரசுரராய் இரா நின்றீர் –

ரங்கராஜம் மஹீதரம வைம் யஹம் —
ஆக இப்படி அத்யாச்சர்யமாய் -அதி மநோ ஹரமாய் -அகில ஜன நயன குதூஹல பிரதமாய் –
அம்போருக வாசிநியான பிராட்டியினுடைய விளையாட்டுக்கு என்று பருவம் செய்து நிற்கின்ற ஒரு மலையின் நிலை போலே இருந்தது –

————————————————————————————-

சத்வோன்னதஸ் சகல சத்வ நிவாஸ பூமி
சௌவர்ண ரம்யா விபவஸ் ஸூமநோ மநோஜ்ஞ
சத்வ்ருத்த சங்க சமதிஷ்டித பார்ச்வதேச
சைலாத்மநா ஸ்புரசி ரங்க மஹீச்வர தவம் –ஸ்லோகம் -11-

நாயந்தே தேவரீர் திருமஞ்சனமாட ஏறி யருளி நிற்கிற நிலை இங்கனே ஒரு பர்வத்தின் நிலை போலே இரா நின்றது -எங்கனே என்னில் –

சத்வோன்னதஸ்-
பர்வதாமோ என்று பார்த்தால் பலத்தால் வந்த உயர்த்தியை உடைத்தாய் இருக்கும்
தேவரீரும் சுத்த சத்வாதி கோ விஷ்ணு -என்கிறபடியே சத்வோத்தரராய் இருப்பீர் –

சகல சத்வ நிவாஸ பூமி –
நாயந்தே
பர்வதமோ என்று பார்த்தால் நர மிருக பசு பஷி ஸ்தவராதி சத்வங்களுக்கு ஆவாச பூமியாய் இருக்கும்
தேவரீரும் பூதா வாச வா ஸூ தேவ -என்று கொண்டு சகல சேதன அசேதனங்களுக்கும் ஆஸ்ரய ஸ்தலமாய் இருப்பீர் –

சௌவர்ண ரம்யா விபவஸ்-
நாயந்தே
பர்வதமோ வென்று பார்த்தால் அழகிதான போன்படும் ஆகாரங்களை யுடைத்தாய் இருக்கும்
தேவரீரோ வென்றால் -ப்ராஹ்மணோஸ்ய முக மாசீத் பாஹூ ராஜன்ய க்ருத-யூரூத தஸ்ய யத்வைச்ய -பத்ப்யாம் சூத்ரோ அஜாயத-
என்கிறபடியே ஷாத்ரியாதிகளான சிறந்த வர்ணன்களுக்குப் பிறப்பிடமாய் இருப்பீர் –

ஸூமநோ மநோஜ்ஞ-
நாயந்தே
பர்வதமோ வென்று பார்த்தால் நாநா விதங்களான புஷ்பங்களாலே அழகியதாய் இருக்கும் –
தேவரீரோ வென்றால் சுத்த அந்தகரணர்களான வித்வான்களுக்கு மநோ ஹரராய் இருப்பீர்
அன்றியே புஷ்பங்களாலே அலங்கரிக்கப் பட்டு மநோ ஹரராய் இருப்பீர் –

சத்வ்ருத்த சங்க சமதிஷ்டித பார்ச்வதேச –
நாயந்தே
பர்வதமோ வென்று பார்த்தால் சத்வ்ருத்தரான தபஸ்வி ஜனங்களாலே அதிஷ்டிக்கப் பட்ட பார்ச்வ பிரதேசங்களை யுடையதாய் இருக்கும் –
தேவரீரோ வென்றால் சத்வ்ருத்தர்களான சாத்விக ஜாதியராலே சேவிக்கப் பட்டு இருக்கிற அழகு ஒலக்கத்தை யுடையராய் இருப்பீர்

சைலாத்மநா ஸ்புரசி ரங்க மஹீச்வர தவம் –
ஆக இப்படி அழகிய மணவாளப் பெருமாள் என்பதொரு அபி நவ சைலமானது ஆஸ்ரிதரை வாழ்விக்கைக்கு
ஒருப்பட்டு நின்ற நிலை போலே இந்நிலை இருந்தது –

———————————————————————————————————-

அசேஷ சாபூர்த்திம் விததம சேஷைஸ் ஸ்வ விபவை
பிரசித்த் யத் கல்யாணம் ப்ரகட தர பீதாம்பர ருசிம்
க்ருதஸ் வாஸ்த்யோத்சே கான்நிகில ஸூ மன ப்ரீதி ஜநகம்
பவந்தம் மன்யேஹம் ஸூ ரசி கரிணம் ரங்க ந்ருபதே–ஸ்லோகம் -12–

நாயந்தே
தேவரீர் –ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான நேமே த்யாவா ப்ருத்வீ -என்றும்
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஏக மேவாத்விதீயம் -என்றும்
அசாத்வா இதமஆக்ரா ஆஸீத் -என்றும்
தத்தேகம் தாஹ்ய வ்யாக்ருத மாசீத் -என்றும்
ஹந்தாஹி மிமாச்திஸ்ரோ தேவதா அநேன ஜீவேநாத்மா நானுப்ரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்றும்
ப்ரஹ்மாதிஷூ ப்ரலீதேஷூ நஷ்டே ஸ்தாவர ஜங்கமே ஏகஸ் திஷ்டதி விச்வாத்மா சது நாராயண பிரபு -என்றும் –
எதௌ த்வௌ விபுதச் சேஷ்டௌ ப்ரசாத க்ரோத ஜௌ ஸ்ம்ருதௌ–ததா தர்சிது பந்தாநௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா வன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு எழும் உண்ட அவன் கண்டீர் வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய் -என்றும்
சொல்லுகிறபடியே நிமித்த உபாதாச சஹாகாரிகள் என்கிற த்ரிவித காராணங்களும் தானேயாய் –

அதிஷ்டாத்ரந்தரத்தை அபேஷியாமையாலே நிமித்தமும் –
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டம் ஆகையாலே உபாதாநமும் –
கலாதியான சமஸ்த வஸ்துக்களுக்கும் அந்தர்யாமியாய்க் கொண்டு ப்ரேரகர் ஆகையாலே சஹகாரி காரணுமுமாய் –
ஐததாத்ம்யமிதம் சர்வம் -என்றும் -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலா நிதி சாந்த உபாசீத் -என்றும்
சர்வ கத்வாத நந்தச்ய ச ஏவாஹமவஸ்தித –மத்தஸ் சர்வேமஹம் சர்வம் மயிசர்வம் சநாதநே -என்றும்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்றும்
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்
பெருகிய புனலொடு நிலனும் கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் அண்டமும்
தானே நின்ற வெம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தான் -என்றும் சொல்லுகிறபடியே –ஸ்தூல சித் அசித் விசிஷ்டமான காரியமும் தானேயாய்
அசித விசேஷிதான் ப்ரலய சீமனி சம்சாத கரண கலே பரைர் கடயிதும் தயமாநமநா -என்கிறபடியே
அசித் கல்பங்களான ஆத்மாக்களை தயையாலே கரண களேபரங்களோடு கூட சிருஷ்டித்து அருளிற்று –

இப்படி ஸ்ருஷ்டமான ஜகத்திலே- பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாப நார்ததாய சம்பவாமி யுகே யுகே -என்றும் –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -என்றும்
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் -என்றும்
சொல்லுகிறபடியே ஆஸ்ரிதர்களுக்கு இஷ்ட ப்ராப்தியையும் அநிஷ்ட நிவ்ருத்தியையும் பண்ணுகைக்கு அவதீர்ணரான
தேவரீருக்கு பர்வதாதிகளும் திரு மேனி என்று சுருதி ச்ம்ருதிகளிலே பிரதி பாதிக்கப் பட்டு இரா நின்றது
விஷ்ணு பர்வதா நாமதிபதி -என்றும் மேரு ரூபாச்ச விஷ்ணோ -என்றும்
-செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி அஞ்சுடர் மதியம் பூண்டு பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய்த்
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம் -என்றும் திருமாலுரு வொக்கும் மேரு -என்றும் சொல்லுகையாலே
த்ரை லோக்ய ஆதாரமான மஹா மேருவும் தேவரீரே யாகையாலே
திருமஞ்சனத்திற்கு எழுந்து அருளி இருக்கும் தேவரீரை மஹா மேரு வென்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -எங்கனே என்னில் –

அசேஷ சாபூர்த்திம் விததம சேஷைஸ் ஸ்வ விபவை-
நாயந்தே
தேவரீர் மத்ச்யாதி ப்ராதுர்பாவ ரூப விபவங்களாலே -ஆயுர் ஆரோக்யம் அர்த்தாமச்ச போகாம்ச்சை வாநுஷங்கிகாத் –
ததாதி த்யாயதாம் நித்யம் அபவர்க்க ப்ரதோ ஹரி -என்றும்
சகலபல ப்ரதோ ஹி விஷ்ணு -என்றும் -வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல் -என்றும் சொல்லுகிறபடியே
சகல ஆஸ்ரிதர்களுடைய ஆபீஷ்டங்களையும் கொடுக்கையாலே அசேஷாசா பூர்த்தியையும் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்தீர்
மகா மேருவோ வென்றால் ஸ்ருங்கங்கள் ஆகிற ஸ்வ விபவங்களாலே எல்லாத் திக்குகளையும் நிறைத்துக் கொண்டு நின்றது –

பிரசித்த்யத் கல்யாணம் –
தேவரீர் பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே -என்றும் -சத்யகாம சத்யசங்கல்ப -என்றும்
சமஸ்த கல்யாண குணாத் மகோசௌ -என்றும் -அந் நலனுடை யொருவன் -என்றும் சொல்லுகிறபடியே
பிரசித்தமான கல்யாண குணங்களை யுடையராய் இரா நின்றீர்
மகா மேருவோ வென்றால் மிகவும் உண்டாகா நிற்கிற சௌவர்ண ரூபத்தை யுடைத்தாய் இரா நின்றது –

ப்ரகட தர பீதாம்பர ருசிம் –
தேவரீர் -மஹாரஜநம் வாஸ -என்றும் -பீதகவாடை யுடை தாழ-என்றும் -அந்திபோல் நிறத்தாடையும் -என்றும் சொல்லுகிறபடியே
சாத்தின திருப் பீதாம்பரத்தை யுடையராய் இருந்தீர்
மகா மேருவோ வென்றால் தன் நிறத்தாலே ஆகாசத்தை எல்லாம் பொற்கென்னப் பண்ணிக் கொண்டு இரா நின்றது –

க்ருதஸ் வாஸ்த்யோத்சே கான்நிகில ஸூ மன ப்ரீதி ஜநகம்
தேவரீர் -ந ச புனராவர்த்ததே -என்றும் ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
அத்யாபி ந நிவர்த்தந்தே த்வாசத சாஷர சிந்தகா -என்றும் -புணைக் கொடுக்கிலும் போக வொட்டாரே -என்றும்
தம்மையே ஒக்க அருள் செய்வர் என்றும் சொல்லுகிறபடியே க்ரமத்தாலே இதர புருஷார்த்தங்களில்
வ்யாவ்ருத்தமான அநந்த ஸ்திர பல மோஷ புருஷார்த்தத்தை கர்ம ஞான பக்திகளிலும்
விலஷணமான பிரபத்தியில் நிஷ்டையை யுடையரான சாத்விகருக்குக் கொடுத்து அருளி அவருக்கு ப்ரீதி ஜனகருமாய் இருந்தீர்
மகா மேருவோ வென்றால் ஸ்வர்க்கத்தை அளாவும் படியான உயர்த்தியை யுடையதாகையாலே
எல்லா தேவர்களுக்கும் பிரியத்தைக் கொடுக்குமதாய் இருந்தது –

பவந்தம் மன்யேஹம் ஸூ ரசி கரிணம் ரங்க ந்ருபதே–
ரங்கா தீசனே ஆக இப்புடைகளாலே தேவரீரை மகா மேரு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

—————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிய நம்பெருமாள் திருமஞ்சன கட்டியங்கள் — ஸ்லோஹங்கள்–1-4–

March 29, 2016

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீ வத்சாங்க ஸூத ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயசே-

பெருமாளை நதி மலை சமுத்ரம் கல்ப விருஷம் மேகம் சூர்யன் சந்தரன் -ஒன்றாக வருணித்து
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் காவ்யங்கள் அருளிச் செயல்கள் பூர்வாசார்யா ஸ்ரீ ஸூ கதிகள் மேற்கோள்கள் காட்டி
அமையப் பெற்ற திருமஞ்சனக் கட்டியங்கள்
ஸ்லோஹங்களும் அருளி அவற்றுக்கு ஸ்ரீ பராசர பட்டர் வ்யாக்டானங்களும் அருளிச் செய்து உள்ளார் –

அம்ருத பிரபவம் ப்ரபாப்ரபாவ
ப்ரஹதத்வான் தலசத் விலாச ஜாதம்
சகலம் சகலா நுமோத ஹேதும்
சசினம் த்வாம் கலயாமி ரங்க ராஜ –ஸ்லோஹம் 1-

நாயந்தே – ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்
அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -என்றும் –
ஆநீதவாதம் ஸ்வதயா ததேகம் -என்றும் ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்றும் ஸ்ரீ வத்ச வஷா நித்ய ஸ்ரீ என்றும்
சுவையன் திருவின் மணாளன் என்றும் சொல்லுகிறபடியே –ஸ்ரீ யபதியாய்
விஜ்ஞானமானந்தம் ப்ரஹ்ம -என்றும் -சந்தா நந்த சிதா நந்தம் -என்றும் -சுடரின்பம் -என்றும் சொல்லுகிறபடியே ஜ்ஞா நானந்த ஸ்வரூபனாய்
பராச்ய சக்தி விவிதைவச்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பலக்ரியா ச -என்றும் –
தேஜோ பலைச்வர்ய மஹாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைகராசி -என்றும்
ஈறில வணபுகழ் நாரணன் என்றும் சொல்லுகிறபடியே சமஸ்த கல்யாண குணாத் மகனாய்
பாருப -என்றும் இச்சாக்ருஹீதாபிமதோரு தேக -என்றும் -சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது என்றும் சொல்லுகிறபடியே
அதி விலஷண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டராய் –
யஸ்ய சாயாம்ருதம் சேஷாஹி யஸ்ய ம்ருத்யு -என்றும் அச்யா மமச சேஷாஹி விபூதிருபயாத்மிகா -என்றும் –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்றும் சொல்லுகிறபடியே லீலா போக பரிகார பூத விபூதி த்வய பூஷிதராய்
இப்படி விலஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூதிகளை உடையராய் இருக்கையாலே அவாப்த சமஸ்த காமராய் இருக்கச் செய்தேயும் –

அளவிறந்த அனர்த்தக் கடலிலே அழுந்திக் கிடந்தது அலைகிற அகில சேதனர் திறத்தில் -அருளுடையவன் -என்னும்படி
ஆஜான சித்தமான அழகிய அருளாலே அவர்களுக்கு ஆஸ்ரயணீயாராகைக்காக -ஏவம் பஞ்ச பிரகார அஹம் ஆத்மநாம் பததாமத -என்றும்
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் -என்றும் சொல்லுகிறபடியே
பரத்வாதி பிராகார பஞ்சகத்தைப் பரிக்ரஹித்து அருளின இடத்திலே
தமஸ பரஸ்தாத் -என்றும் -சேணுயர் வானத்து இருக்கும் -என்றும் அம்பச்ய பாரே -என்றும்
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும்-என்றும் சொல்லுகிறபடியே
பர வ்யூஹங்கள் தேச விப்ரக்ருஷ்டங்கள் ஆகையாலும் விபவங்கள் கதஸ் ஸ்வஸ் தானமுத்தமம் -என்றும் –
செய்து போன மாயங்களும் -என்றும் சொல்லுகிறபடியே விபவங்கள் கால விப்ரக்ருஷ்டம் ஆகையாலும்
யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் -என்றும் கட்கிலீ என்றும் சொல்லுகிறபடியே அந்தர்யாமி கரண விப்ரக்ருஷ்டம் ஆகையாலும் –

இங்கன் இன்றிக்கே அர்ச்சாவதாரம் சர்வ பிரகார சந்நிக்ருஷ்டமாய்
அர்ச்சாவதார விஷயே மயாப் யுத்தேசதஸ் ததா
உக்தா குணா ந சக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி -என்றும்
நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் -என்றும் சொல்லுகிறபடியே –
அனவதிக்க சௌலப்யாதி கல்யாண குண கண சீமா பூமி யாகையாலும்
அர்ச்சா ரூபியாய்க் கொண்டே அகில ஆத்மாக்களையும் அங்கீ கரிக்கக் கடவோம் என்று திரு உள்ளம் பற்றி அருளி

பக்தர்களும் பகைவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும் சித்தர்களும் தொழுது இறைஞ்சத் திசை விளக்காய்
நிற்கின்ற திருவரங்கம் -என்கிறபடியே
அஜ்ஞ சர்வஜ்ஞ விபாகம் அற அசேஷ லோக சரண்யராய்க் கொண்டு திருவரங்கப் பெரு நகரிலே
அழகிய மணவாளப் பெருமாளாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற தேவரீர்
இப்பொழுது திருநாள் என்கிற வ்யாஜத்தாலே திருவடி நிலை கோத்துப் புறப்பட்டு அருளி பஹூ வித கடாஷ அம்ருத வர்ஷத்தாலே
சேதனருடைய ப ஹூதா சந்தத துக்க வர்ஷத்தை மாற்றி அருளின விடாய் அறத் திரு மஞ்சனமாடி யருளி
மங்களாங்க ராகசங்கி திவ்யாங்க ராகராய் -ஸூ ர்யாம் சுஜா நிதம் தாபம் நிதயே தாராபதி சமம் -என்னும்படி கொடும் கதிரோன் கதிரால்
வந்த தாபத்தை அமுதுறு பசுங்கதிராலே அந்தி காவலன் -ஆற்றுமா போலே சர்வ ஜன தாபத்ரய நிர்வாபகராய்க் கொண்டு எழுந்து அருளி நிற்கிற நிலை
பத்ம உல்லாச கரத்தவ அதோஷா கரத்தவ –சக்ரவாக பஷிக்களுக்கு உகப்பாக இருத்தல் -ரதாங்க ப்ரியத்வாதிகளாலே
சந்திரனில் காட்டில் வைஷம்யம் உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஒரோ வகையாலே சந்த்ரனோடு சாம்யம் விண்ணப்பம் செயலாய் இரா நின்றது -அது எங்கனே என்னில்-

அம்ருதப்ரபவம்
நாயந்தே -சந்த்ரனானவன் ஸூ தா நிதியாகையாலே தேவ போக்யமான அம்ருததுக்கு பிறப்பிடமுமாய்
அங்கன் அன்றிக்கே அம்ருத சப்த வாச்யமான பயோநிதியின் பயஸ் சைப் பிறப்பிடமாய் உடையவனாய் இருக்கும்
தேவரீர் -அம்ருதஸ் யைஷ சேது -என்றும் -மோஷ மிச்சேத் ஜனார்த்தநாத் என்றும் –
வீடாம் தெளி தரு நிலைமையதொழிவிலன் -என்றும் சொல்லுகிறபடியே
அம்ருத சப்த வாச்யமான மோஷத்திற்கு நிர்வாஹகருமாய்
ததோ போஸ்ருஜத -என்றும் -அப ஏவ ச சர்ஜாதௌ-என்றும்
தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி -என்றும் சொல்லுகிறபடியே
அம்ருத சப்த வாச்யமான காரண ஜலத்துக்கு உத்பாதகருமாய் இரா நின்றீர் –

ப்ரபாப்ரபாவ ப்ரஹதத்வான் தலசத் விலாச ஜாதம்-
நாயந்தே
சந்த்ரனானவன் -ருந்தே சர்வதிசாம் நிரந்தர தமஸ் தந்த்ராளுதாம் சந்த்ரமா -என்கிறபடியே
தன்னுடைய சந்த்ரிகா வைபாவத்தாலே நிரஸ்தமான-பணிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்து பார் முழுதும் -என்னும் படியான
அந்தகாரத்தினுடைய விளங்கா நின்ற விஜ்ரும்பணத்தை உடையனாய் இருப்பன் –
தேவரீரும் சோபயன் தண்ட காரண்யம் தீப்தேன ஸ்வேன தேஜஸா -என்றும்
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி என்றும் -தேஷோமே வானுகம்பார்த்த மஹா மஜ்ஞானஜம் தம
நாசயாம் யாத்மா பாவஸ்தோ ஜ்ஞாநதீ பேன பாஸ்வதா -என்றும் –
அருள் புரிந்த சிந்தை யடியார் மேல் வைத்துப் பொருள் தெரிந்து கான் குற்ற வப்போது இருள் தெரிந்து நோக்கினேன் நோக்கி -என்றும்
சொல்லுகிற படிஎயான திவ்ய விக்ரஹ பிறப்பை யாளும் -ஸ்வரூப ப்ரபையான சங்கல்பத்தாலும்
தூரதோ நிவாரிதமான ஆஸ்ரிதர் உடைய பாஹ்ய அபாஹ்ய அந்த காரங்களை யுடையராய்
த இமே ஸ்ரீ ரங்க ஸ்ருங்கார தே பாவா யௌவன கந்தின -என்னும்படி
விளங்கா நின்றுள்ள யௌவன க்ருத திவ்ய விலாசத்தை யுடையருமாய் இரா நின்றீர்

சகலம்
சந்த்ரனானவன் ஸ்வ அம்ச ரூபமான ஷோடச கலைகளோடு கூடி இரா நிற்பன்
தேவரீர் விசேஷ நிரூபகத்தாலே கலாசப்த வாசான பிராட்டியோடும் திவ்யாயுதங்களோடும்
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -வேதாந்தக்ருத் வேத விதவ சாஹம் -என்றும் சொல்லுகிறபடியே
கலா சப்த வாச்யங்களான வேதங்களோடும் கூடி இரா நின்றீர் –

சகலா நுமோத ஹேதும் –
சந்த்ரனானவன் த்ரிஜகதாமாநந்த நாடிந்தம -என்கிறபடியே -சகலர்க்கும் ஆனந்த ஹேதுவாய் இரா நிற்பன்
தேவரீர் -சர்வ சத்வ மநோ ஹர -என்கிறபடியே சர்வ ஜன சம்மோத காரண பூதருமாய் -ப்ராஹ்மண ப்ரிய-என்கிறபடியே
விசேஷித்துக் கலா சப்த வாச்யமான அத்யாத்ம சாஸ்த்ரத்திலே நிலை நின்றவர்களுக்கு ஆனந்தயாதி என்கிறபடியே
ஆனந்த ஹேது பூதருமாய் இரா நின்றீர் –

சசினம் த்வாம் கலயாமி ரங்க ராஜ —
இதம் ரங்க சந்திர -என்று அறிவுடையாரால் அனுபபிக்கப்பட்ட தேவரீருடைய சந்திர சாம்யத்தை இப்போது அடியோங்களின்
ஆனந்த சாகரம் அபிவ்ருத்த மாம்படியாகவும் சேவமான ஜன லோசன சகோரங்கள் சரிதார்த்தங்கள் ஆம்படியாகவும்
ஸ்ரீ ரங்கா பர பர்யாயாமான விஷ்ணு பதத்திலே வெளியிட்டுக் கொண்டு நிற்கிற நிலை போலே இந்நிலை இருந்தது –

————————————————–

அநிசம் குமுதம் விகாஸ யந்தம்
சததம் பூர்ண மஹர் நிசம் ச த்ருச்யம்
அனுபப்லவ மத்ய ரங்க ராஜம்
மநுதே சந்த்ரமசம் ஜநோநுமாந்யம் –ஸ்லோகம் -2-

நாயந்தே
ஞானச் சோதி என்கிறபடியே அகில ஹேய ப்ரத்ய நீகராய் கல்யாணைகதானராய் -ஸ்வ இதர சமஸ்த வஸ்து விலஷணராய்-
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதி -ஸ்வரூபராய் இருக்கும் தேவரீர்
அசித விசேஷிதான் ப்ரலய சீமனி சம்சரத கரண களேபரைர் கடயிதும் தயமான மநா -என்கிறபடியே
தயாமானமானாவாய்க் கொண்டு அநாதியான கர்ம பிரவாஹத்தாலே சதுர்வித சரீரங்களிலும் பிரவேசித்து
சதுர்தச புவனங்களிலும் தட்டித் திரிகிற சேதனர்
த்ரிவித சரீரங்களை த்யஜித்து மனுஷ்ய சரீரத்தைக் கரண த்ரயத்தாலும் கால த்ரயத்தாலும் கர்ம த்ரயத்திலே அந்வயிப்பித்து
அசித் த்ரயத்துக்கு அவ்வருகான தான் குண த்ரயத்தாலே பத்தனாய் ஷூ பிதனாய் ஆசா த்ரயத்திலே-மண் பெண் பொன் ஆசைகள்- அகப்பட்டுக் கொண்டு
அஜ்ஞனாய் தத்வத்ரயத்தை அறியாதே தாபத்ரயத்தாலே தப்தனாய் இருக்க அவனை
-ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரம்ஸ் ஸ்வராட் -என்கிறபடியே
தேவதாந்திர த்ரயத்துக்கு சேஷியாய் மஹிஷீ த்ரயத்திற்கும் வல்லபனாய் –
ஆத்ம த்ரயத்துக்குக் காரண பூதனாய் சதா ஆனந்த ப்ரிதனாய் தோஷ கந்த ரஹிதனாய்-த்ரிவித காரண வஸ்துவாய் -ஸ்ரீ மானான தேவரீர்

நாயமாத்மா பரவசநேன லப்ய -ந மேதயா ந பஹூநா ஸ்ருதேன
யமேவைஷ வருணுதே தேன லப்ய த்ச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்கிறபடியே

விசேஷ கடாஷத்தினாலே விரோதித்ரயத்தை விடுவிக்கக் கோலி-ஸூக்ருத த்ரயத்தை -யாத்ருச்சிகம் ஆநுஷங்கிகம் ப்ராசங்கிகம் -தொடுமவனாக்கி
ஆகார த்ரயத்தை யுடைய ஆசார்ய உபதேச்யமான மந்திர த்ரயத்தாலே மாசருத்துப்
பதத்ரயத்தை அனுபவிப்பித்து அஜ்ஞான த்ரயத்தை தவிர்ப்பித்து
ஆகார த்ரயத்திலே அன்வயிப்பித்து பர்வ த்ரயத்தாலே பாகமாக்கி லோக த்ரயத்தை உபேஷித்துப்
பாத த்ரயத்திலே கொண்டு போய் -சந்மந்திர த்ரயத்தாலும் மோஷ உபாய போகத்தைப் புஜிப்பிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி

ததாபி புருஷாகாரோ பக்தா நாம் த்வம் பிரகாசசே -என்றும் -அர்ச்சாத்மா நாவதீர்ணோசி பக்தானுக்ரஹ காம்யயா -என்கிறபடியே
அடியோங்களுக்கு அர்ச்சாவதார ரூபியாய் -என்கிறபடியே
ஆதி ராஜ்ய மதிகம் புவ நா நாம் ஈசாதே பிசு நயன் கில மௌளி என்கிறபடியே
சகல புவன ஆதி ராஜ்ய ஸூ சகமாய்க் கொண்டு
குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியும் -அதனுள்ளே அடங்கித் தோற்றுகின்ற-மை வண்ண நறும் குஞ்சிக் குழல்களும்
ரூபா ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே மையல் ஏற்றி மயக்குகிற மாய மந்திரமான திரு முக மண்டலமும்
ஒரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டமும் -கற்பகக் காவான நரபல தோள்களும்
மடமகள் குயமிடை தடவரை யகலமும் அல்குலும் சிற்றிடையும்
அரைச் சிவந்த வாடையும் தேனே மலரும் திருப் பாதமுமாய்க் கொண்டு சந்நிதி பண்ணி
தேவரீர் சந்தன குங்கும பங்கா லிப்த சர்வாங்கராய் எழுந்து அருளி இருக்கும் நிலை
சந்த்ரனோடே வ்யதிரேகம் விண்ணப்பம் செயலாய் இரா நின்றது -எங்கனே என்னில் –

அநிசம் குமுதம் விகாஸ யந்தம்
நாயந்தே
சந்த்ரனானவன் ராத்ரியிலே குமுத சப்த வாச்யனான ஆம்பல் பூவை அலர்த்துமவனாய் இருப்பவன்
பார் வண்ண மடமங்கை பத்தராய் இருக்கும் தேவரீர்
குணா ரூபா குணாச்சாபி ப்ரீதிர் பூயோ வ்யவர்த்த வைதேஹ்யா பிரியமா காங்கஷன் ஸ்வம் ச சித்தம் விலோபயன் -என்றும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் -என்றும் சொல்லுகிறபடியே
கு -சப்த வாச்யையான பூமி பிராட்டிக்கு முத் சப்த வாச்யமான ஹர்ஷத்தை எப்பொழுதும் வ்ருத்தி பண்ணி அருளா நின்றீர்-

சததம் பூர்ணம்
நாயந்தே
சந்த்ரனானவன் ஒரு நாள் பூர்ணனாய் மற்றைப் போது அபூர்ணனாய் இருப்பான்
தேவரீர் -இதம் பூர்ணமத பூர்ணம் பூர்ணாத் பூர்ணாத் முத்ரிச்யதே –பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவாவ சிஷ்யதே -என்கிறபடியே
சததம் பூரணராய் இரா நின்றீர்

அஹர் நிசம் ச த்ருச்யம் –
நாயந்தே –
சந்த்ரனானவன் ராத்ரி காலங்களிலே த்ருச்யனாய் இருப்பவன்
தேவரீர் வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே என்கிறபடியே
அபீஷ்ட வரதராய் எல்லோராலும் எப்பொழுதும் காணப் படுபவராய் இருந்தீர் –

அனுபப்லவம்
நாயந்தே
சந்த்ரனானவன் ராஹூ க்ரஸ்தன் ஆகையாலே ஸோபப்லவனாய் -கேடு அழிவு -இரா நின்றான் –
தேவரீர் ராஹோச் சிரச்ச சிச்சேத் தேவா நாம் ப்ரபுரச்யுத -என்கிறபடியே
ராஹூ வைத் தலை யறுத்துப் போடுமவர் ஆகையாலே அனுபப்லாவராய் இருந்தீர் -அழிவில்லாதவர்-

அத்ய ரங்க ராஜம் மநுதே சந்த்ரமசம் ஜநோநுமாந்யம்
எல்லாக் காலத்திலும் குமுதோல்லா சாகரராய் -எல்லாக் காலத்திலும் பூரணராய் எல்லாக் காலத்திலும் காணப் படுபவராய் –
ஒருக்காலத்திலும் க்ரசிக்கப் படாதவர் ஆகையாலே -சந்த்ரே த்ருஷ்டி சமாகம -என்று நாம் சொன்னால் போலே
நீங்களும் நம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்திலே வைத்த கண் வாங்காத நம்மை யனுபவிக்கக் கடவீர்
நாம் புஷ்ணாமி சௌஷதீஸ் சர்வா– சோமோ பூத்வார சாத்மக -என்று சொன்ன படியே ரசாத்மக சந்திர சரீரகனாய்
ஔஷதிகளை ஆப்யாயனம் பண்ணுகிறாப் போலே உங்களையும் இவ்வர்ச்சா ரூபமான சரீரத்தாலே
ஆப்யாயனம் -போஷித்தல் -பண்ணக் கடவோம் என்று புறப்பட்டு நிற்கிற நிலை போலே இருந்தது –

————————————————

குங்குமாருண முதஞ்சித ஸ்ரியம்
கோமலாருண சரோஜா சம்ஸ்திதம்
ரங்க மந்திர தமோ நிவாரணம்
சங்கதே தபநதீதிதிம் ஜன –ஸ்லோகம் -3-

நாயந்தே
ஆதித்யனோ வென்று பார்த்தால் குங்கும வர்ணனான அருணனை உடையனாய் இருப்பன்
தேவரீரோ வென்று பார்த்தால் சாத்தின குங்குமத்தால் உண்டான சிவந்த நிறத்தை யுடையராய் இருப்பீர் –

உதஞ்சித ஸ்ரியம் –
நாயந்தே
ஆதித்யனோ வென்று பார்த்தால் பிரபாகரன் ஆகையாலே மிகுந்த அழகாய் யுடையனாய் இருப்பன்
தேவரீரோ வென்று பார்த்தால் சம்ச்லேஷ ஸ்லாக்யையான நாச்சியாரை யுடையராய் இருப்பீர் –

கோமலாருண சரோஜா சம்ஸ்திதம்
நாயந்தே
ஆதித்யனோ வென்று பார்த்தால் அழகியதான அருண அரவிந்தத்திலே இரா நிற்பன்
தேவரீரோ வென்று பார்த்தால் கோமல அருண பத்மாசனஸ்தராய் இருப்பீர்-

தமோ நிவாரணம் –
நாயந்தே
ஆதித்யனோ வென்று பார்த்தால் லோகத்தில் அந்தகார நிராசத்தைச் செய்யுமவனாய் இருப்பன்
தேவரீரோ வென்று பார்த்தால் சகல ஆத்மாக்கள் யுடையவும் தமஸ் சப்த வாச்யமான அஜ்ஞான நிவர்த்தகராய் இருப்பீர் –

ரங்க மந்திர–சங்கதே தபநதீதிதிம் ஜன —
ஆக இப்படி ஆதித்யாநாம் அஹம் விஷ்ணு என்கிறபடியே தேவரீர் ஆதித்யனான பிரகாரத்தை ஆதித்ய சாதர்ம்யத்தாலே
அடியோங்களுக்கு இத்திரு மஞ்சன சமயத்திலே வெளியிட்டுக் கொண்டு நிற்கிற நிலை போலே இருந்தது –

——————————————————–

பவந்தம் ஸ்ரீ மந்தம் ஹசித கலி காலாங்க்ருதமிஹ
அசோகம் குர்வந்தம் பிரமரஹித மத்யுத்சவகரம்
ஸூகஸ் பர்ச்ச லிஷ்யத் பவநஜ மஹா நந்த பரிதம்
வசந்தம் ரங்கே சப்ரகட ஸூ மனஸ்கம் மநுமஹே –ஸ்லோகம் -4-

நாயந்தே
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்றும் -நேஹ நா நாஸ்தி கிஞ்சன -என்றும் -ஐததாத்ம்யமிதம் சர்வம் என்றும்
யஸ் யாத்மா சரீரம் -யஸ்ய ப்ருத்வீ சரீரம் -என்றும் தாநி சர்வாணி தத்வபு -என்றும் யாவராய் நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்றும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ சரீரியாய் சர்வ அந்தர்யாமியாய் எழுந்து அருளி இருக்கிற தேவரீர்
நம்முடைய சரீர பூதர்களான சர்வ பிராணிகளும் இக்காலத்தில் ஆதித்யனுடைய அதி தீஷணங்களான கிரணங்களாலே
மிகவும் சந்தப்தராய் இரா நின்றார்கள் –
தேவரீர் -மாதா பிபதி கஷாயம் ஸ்தநந்தயோ பவதி நீ ரோக -என்கிற ந்யாயத்தாலே -இவர்களுடைய தாபம் போம்படி
சிசிரோபசாரங்களைக் கொள்ளக் கடவோம் என்று திரு உள்ளம் பற்றி இப்போது திரு மஞ்சனம் கண்டு அருளி
சந்தன குங்கும பங்கா லங்க்ருத சர்வகாத்ரராய் எழுந்து அருளி இருக்கிற நிலை
மதுச்ச மாதவச்ச வாசந்திகா புத்ரௌ என்கிறபடியே தேவரீர் இளையவர் ஆகையாலே
வசந்த காலத்தோடு ச்லேஷை விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -எங்கனே என்னில்-

பவந்தம் ஸ்ரீ மந்தம் –
நாயந்தே
வசந்த காலமானது -சைத்ர ஸ்ரீ மான் அயம் மாஸ -என்கிறபடியே மற்றுள்ள காலங்களில் காட்டில் பெரிதும் சபையை யுடையதாய் இருக்கும்
தேவரீரும்- ஸ்ரிய ஸ்ரியம் -என்றும் -திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே -என்றும் சொல்லுகிற படியே
சர்வஸ்மாத பரதவ ஸூ சகமாய் இருக்கிற ஸ்ரீ யபதித்வத்தை யுடையராய் இருந்தீர் –

ஹசித கலி காலாங்க்ருதமிஹ அசோகம் குர்வந்தம் பிரமரஹிதம்
நாயந்தே
வசந்த காலமானது அசோகம் என்கிற மரத்தை வண்டுகளுக்கு பூம் கொத்துக்களாலே அலங்க்ருதமாய்ப் பண்ணா நிற்கும்
தேவரீரும் -கலௌ கிருதயுகம் தஸ்ய -என்றும் –
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும் -என்றும் சொல்லுகிறபடியே
ஹசித கலி காலாங்க்ருதமிஹ அசோகம் குர்வந்தம் -அதி ஷேபிக்கப் பட்ட கலி காலத்தை யுடைத்தாய்
நித்யம் பிரமுதிதாஸ் சர்வே யதாக்ருத யுகே ததா -என்னும் படி க்ருத யுகத்திலே போலவே துக்க ரஹிதராய்ப் பண்ணி அருளா நின்றீர் –

அத்யுத்சவகரம் –
நாயந்தே
வசந்த காலமானது வசந்தே ஜ்யோதிஷா யஜேத -என்கிறபடியே ஜ்யோதிஷ்டோமாதிகளான அத்யுத்சவங்களைப் பண்ணா நிற்கும்
தேவரீரும் -ப்ரமரஹித மத்யுத்சவகரம் -என்றும் -கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர் -என்றும்
எண்ணாதனகள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப -என்றும் சொல்லுகிற படியே
ப்ரம ரஹிதர்களான பராங்குச பரகலாதி களுடைய திரு உள்ளத்திற்கு அதி ஹர்ஷங்களைப் பண்ணி அருளா நின்றீர் –

ஸூகஸ் பர்ச்ச லிஷ்யத் பவநஜ மஹா நந்த பரிதம்
நாயந்தே
வசந்த காலமானது -அங்கைரதங்க தப்தை ரவிரல் மா லிங்கிதும் பவன –என்றும் -சக்யமரவிந்த ஸூ ரபி -என்கிறபடியே
ஸூக ஸ்பர்சமாய்க் கொண்டு எல்லாவற்றையும் அலாவி வருகிற மந்த மாருதத்தாலே உண்டான ஆனந்தத்தை உடைத்தாய் இருக்கும்
தேவரீர் ஸ்ரீ ராமாவதாரத்திலே கண்டேன் பிராட்டியை என்று போந்த திருவடியை
ஏஷ சர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத–மயா கால மிமம்ப்ராப்ய தத்தம் தஸ்ய மஹாத் மன -என்றும்
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு
இல்லை கைம்மாறு -என்றும் சொல்லுகிற படியே
கடலைக் கடந்த திருவடியாலும் கடக்க ஒண்ணாத படி அனுகூல ஸ்பர்சனாய்க் கொண்டு ஆலிங்கனம் பண்ணப் பெற்ற திருவடியினால்
உண்டாகிய அலங்கநீயமான பெரிய ஆனந்தத்தாலே நிர்ப்பரராய் எழுந்து அருளி இருந்தீர் –

ப்ரகட ஸூ மனஸ்கம் –
நாயந்தே
வசந்த காலமானது புண்ய புஷ்பித காநந-என்கிறபடியே -மற்றுள்ள காலங்களுக்கு எல்லாம்
பிரதானமாய் பிரகடமாய் -பிரகாசமாய் -பூ முடி சூடி இரா நிற்கும்
தேவரீரும் -ச நோ தேவச்சுபயா ஸ்ம்ருத்யா சம்யுநக்து -என்றும் -ச்ரேயோ த்யாயீத கச்சான -என்றும் சொல்லுகிறபடியே
அதி பிரசித்தமாய் அதி சோபனகரமாய் இரா நின்ற திரு உள்ளத்தை யுடையராய் இருந்தீர் –

ரங்கேச பவந்தம் வசந்தம் மநுமஹே —
தேவரீருடைய இந்நிலை அர்ஜுனனுக்கு சாரதியேத் திருத் தேர்த் தட்டிலே எழுந்து அருளி இருந்து
-ருதூநாம் குஸூ மாகர -என்று அர்ஜுனனுக்கு உபதேசித்த ரகஸ்ய அர்த்தத்தை இப்போது
அடியோங்களுக்கு வெளியிட்டுக் கொண்டு நிற்கிற நிலை போலே இருந்தது –

———————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு -1-கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ண — ஸ்ரீ தம்பிரான் படி -அருளிச் செய்த வியாக்யானம் –

March 29, 2016

அவதாரிகை –

ஆழ்வாருடைய நிரதிசய போக்யதையைச் சொல்லுகிறது -ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர்
பிரதம அவதியான பகவத் விஷயத்திலே இழிவான் என் என்னில்
ஆழ்வாருடைய போக்யாதிசயம் தோற்றுகைக்காகவும் அவருடைய முக மலர்த்தி தோற்றுகைக்காகவும்
அவர் உகக்கும் பகவத் விஷயம் ஆகையாலும் பேசுகிறார் –

சரம அதிகாரி சேகரர் ஆகிறார் இவர் -ஆழ்வார் திருவடிகளே தாரகாதி -யாகக் கொண்டவர்
1-அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராமுதம் -இவர் -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -போக்யதா பிரகர்ஷம்
2-அவர் -மலக்கு நாவுடையேற்கு என்றார் -இவர் நாவினால் நவிற்று –
3-அவர் அடிக் கீழ் அமர்ந்து –இவர் மேவினேன் அவன் பொன்னடி
4-கண்ணன் அல்லல் தெய்வம் இல்லை -தேவு மற்று
5-பாடி இளைப்பிலம் என்றார் -பாடித் திரிவேனே -ஆனந்தப் பட்டார் வாசி உண்டே
6-இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றேன் -திரி தந்தாகிலும்
7-உரிய தொண்டர் தொண்டர் —நம்பிக்கு ஆள் உரியனே
8-தாயாய் தந்தையாய் -அன்னையாய் அத்தனாய்
9-ஆள்கின்றான் ஆழியான் -என்னை ஆண்டிடும் தன்மையான் -வெப்பம் இல்லை குளிர்ந்து அன்றோ
10-கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் -தக்க சீர் சடகோபன்
11-யானே என் தனதே என்று இருந்தேன் -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
12-எமர் கீழ் மேல் ஏழ் ஏழ் பிறப்பும் நம்முடிய வாழ்வு வாய்கின்றவா -மா சதிர் -இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
13-என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -நின்று தன புகழ் ஏத்த அருளினான்
14-ஒட்டுமே இனி என்னை நெகிழ்க -என்றும் என்னை இகல்விலன் காண்மின் -நீங்களே பாருமின் -சங்கையே இல்லை
15-மயர்வற மதிநலம் அருளினான் -ஒண் தமிழ் சடகோபன் அருளையே
16-அருள் உடையவன் -அருள் கண்டீர் இவ் உலகத்தில் மிக்கதே -உயர்ந்த அருள் என்கிறார் இவர்
17-பே ரே ன் என்று -நெஞ்சு நிறைய புகுந்தான் –நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணன் அங்கே திருவாய்மொழி இங்கே
18-வழு விலா அடிமை செய்ய வேண்டும் -ஆட்புக்க காதல் அடிமைப் பயன்
19-ஆராத காதல் -ஆட்புக்க காதல் -தாஸ்யம் ஸ்பஷ்டம் இங்கே தான்
20-பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி -அடிமை கொண்டான் -பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல்
21-கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ -தென் குருகூர் நம்பிக்கு அன்பன் -திருஷ்டாந்தம் இல்லை இங்கு -போட்டி இல்லை இங்கு
22-உலகம் படைத்தான் கவி -மதுர கவி -இவர்
23-உரைக்கவல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம்மூர் எல்லாம் -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே பிரத்யஷம் -சங்கையே இல்லையே –

பிரத்யுபகாரம் செய்ய இயலாமல் குண அனுசந்தானம் செய்து -முனிவர்கள் யோகிகள் -குண நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்
1-போக்யதா பிரகர்ஷம் -முதல் பாட்டில்
2-தேக யாத்ரைக்கு தாரகம் -பாவின் இன்னிசை பாடத் திரிவனே
3-பகவத் விஷயம் உத்தேச்யம் ஆழ்வார் உகந்த விஷயம் -திரி தந்தாகிலும்
4-விஷயீ கரித்து அருளி -அன்னையாய்
5-இதர விஷய பிராவண்யம் விட்டு தம் அளவு வரும் படி சாதுர்யம் -நம்பினேன்
6-ஆழ்வார் தம்மை விஷயீ கார உறுதி -ஆறாம் -இன்று தொட்டும் எழுமையும் -ஒன்பது குளிக்கு நிற்கும் -புகழ் ஏத்த அருளினான்
7-கிருபா பிரகாசம் -சடகோபன் அருளையே
8-ஆழ்வார் கிருபை விஞ்சி -அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
9-சகல வேத ரகசியம் -ஸூ பிரதிஷ்டியாக நெஞ்சில் நிறுத்தி -மிக்க -வேதத்தின் உட் பொருள் -நிற்கப்பாடி
10-உபகாரம் பிரத்யுபகார நிரபேஷம் -முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்

——————————————

வியாக்யானம்-

உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு –எத்திறம் -என்றும்
பிறந்தவாறும் என்றும் -பையவே நிலையும் வந்து -என்றும்
ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையால் அத்தைப் பேசுகிறார்

கண்ணி இத்யாதி
ஆழ்வார் பக்கல் இவருக்கு உண்டான உத்தேச்யத்தை இருந்தபடி
ஆழ்வாருடைய உத்தேச்ய வஸ்துவைக் கட்டினதொரு கயிற்றினுடைய உள் மானம் புறமானம் ஆராயும் படி யாய்த்து இவர் கை ஒழிந்த படி பகவத் விஷயத்தில்
கண்ணித்தாம்பு
என்றது -உடம்பில் கட்டப் புக்கால் உறுத்தும் படி பல பிணைகளை யுடைத்தாய் இருக்கை
நுண் தாம்பு
உடம்பிலே அழுந்தும்படி நேரிதாய் இருக்கை
சிறுத் தாம்பு
இவனைக் கட்டின பின்பு உரலோடு சேர்க்கைக்கு எட்டாம் போராது இருக்கை –

கட்டுண்ணப் பண்ணிய
உரலை நேராகச் செதுக்கப் போகாது
அப்போதாகக் கயிற்றை நெடுக விடப் போகாது
இனி இவனை விட்டு நெடிய கயிறு தேடி எடுக்கப் புகில் இவன் தான் எட்டான் காற்றில் கடியனாய் ஓடும்
இனிச் செய்வது என் -என்று அவள் தடுமாறுகிற படியைக் கண்டான்

கட்டுண்ணப் பண்ணிய
சதைக ரூப ரூபாய என்கிற தன்னுடைய திருமேனியை நெருக்கி இடம் கண்டு கட்டும் படி பண்ணினான்
கட்டுகைக்கு பரிகாரம் இல்லை என்று நிவ்ருத்தை யாமாகில் பிறந்து படைக்க நினைத்த குணத்தை இழக்கும் அத்தனை இ றே
ஆகையாலே திருமேனியிலே இடம் கொடுத்தான்
கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டு என்று இருந்தான்
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் என்றும் எல்லாரும் ஈடுபடும் துறை இ றே இது தான் –

தாம் நா சைவ –யதி சக் நோஷி என்று தாய் கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அல்லேன் என்று இருந்தான் இ றே
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது -என்று ஸ்வ வியதிரிக்தரை யடையக் கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேது வானவன் கிடீர்
இப்போது ஒரு அபலை கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் இன்றிக்கே இருக்கிறான்
செருக்கனான சார்வ பௌமன் அபிமத விஷயத்தின் கையில் அகப்பட்டு ஒரு கருமுகை மாலையாலே கட்டுண்டால்
அதுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருக்குமா போலே இ றே இவள் கட்டின கட்டுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாது இருக்கிற இருப்பும்
பிறருடைய கர்ம நிபந்தனமான கட்டு அவிழ்க்கும் அத்தனை அல்லது தன் அனுக்ரஹத்தால் வந்த கட்டு தன்னாலும் அவிழ்க்கப் போகாது என்கை
ஆழ்வார் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே உயர்வற உயர்நலம் உடையவன் என்று அவர் குணத்தை வர்ணித்தார்
இவர் முதல் அடியிலே ஆழ்வார் தம்மையே பற்றுகையாலே அவன் திருமேனியில் ஸ்பர்சித்த தொரு தாம்பை வர்ணிக்கிறார்
அவருடைய உத்தேச்ய வஸ்து வெளிறாய்க் கழிகிறது இ றே
அதவா
கட்டுண்ணப் பண்ணிய
பக்தி உண்டாகிலும் அவன் தானே தன்னை அனைத்துத் தர வேண்டும் படியாய் இது பின்னையும் சிறிதாய் இருக்குமாய்த்து
நாயமாத்மே த்யாதி –யமேவைஷா வ்ருணுதே தேன லப்யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்கிறபடியே
இனி இந்த பக்தி இவன் நெஞ்சில் அந்ய பரத்தையை அறுக்கும் அத்தனை
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி -என்கிறபடியே எட்டும் இரண்டும் பத்தாய் பக்தியைச் சொன்னபடி
எட்டு என்று திரு அஷ்டாஷரமாய் அத்தாலே யாதல் -இரண்டு என்று வாக்ய த்வயமாய் அத்தாலே யாதல் வசீகரித்து என்னவுமாம்
அல்லது எட்டும் இரண்டும் அறியாதார்க்குக் கட்டப் போகாதே-
இவன் தன்னைக் கட்டுவது -ஒரு வெண்ணெயைக் களவு கண்டான் -ஊரை மூலையடியே நடத்தினான் என்று இ றே
இவன் சாமான்யன் என்று இடுமீடு எல்லாம் இடுங்கோள்என்று இருந்தான் –அதாவது களவிலே தகண் ஏறின படி –
இவனைக் கட்டி வைத்து அடிக்கப் புக்கவாறே தொழுகையும் என்கிறபடியே தொழத் தொடங்கும்
எல்லாரையும் தொழுவித்துக் கொள்ளுமவன் இ றே தொழுகிறான்
இத்தசையில் அபிமத சித்திக்கு ஓர் அஞ்சலியே சாதனம் என்று அறியுமவன் இ றே
தாம் நா சைவோதரே பத்வா பிரத்யபத்நா து ஸூ கலே -யதி சக் நோஷி கச்ச தவம் -தான் தாயான பரிவு தோற்ற
இவனைக் களவிலே கண்டு பிடித்து தாம்பாலே உரலோடு அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தி
நீ வல்லையாகில் போய்க் காணாய் என்று உருக்கி விட்டால் போக மாட்டாதே இருக்கும்
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே என்று ஒதப்படுகிற வஸ்து இவளுக்கு எளிதான படி இ றே இங்கனே சொல்லுகிறாள்
அதி சஞ்சல சேஷ்டித -துறு துறுக்கையாய்க் கொண்டு ஊர் பூசல் விளைத்தவன் அல்லையோ
இத்யுக்த்வா -ஒரு சொல்லாலே விலங்கிட்டு வைத்து
அத நிஜம் கர்ம சா சகாரா -அவள் கறப்பது கடைவதாகத் தொடங்கினாள்
குடும்பி நீ -இவனைப் போலே நியமிக்க வேண்டுவன அநேகம் உண்டு இ றே இவளுக்கு –

பெருமாயன்
நிரதிசய ஆச்சர்ய யுக்தன்
இத்தால் அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை உண்டாய் அது தன்னை ஷூத்ரரைப் போலே களவாகிற வழி எல்லா வழியே இழிந்து
சர்வ சக்தியான தான் அது தன்னைத் தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு -பையவே நிலையும் -என்று
உடம்பு வெளுத்து நின்ற நிலை அளவும் செல்ல நினைக்கிறார்

என்னப்பனில்
ஆழ்வார் இவர்க்கு உத்தேச்யராய் நிற்க இங்கனே சொல்லுவான் என் என்னில் பகவத் சம்பந்தம் அற வார்த்தை சொன்னார் ஆகில்
ஆழ்வாரோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்டாராம் அத்தனை இ றே -அத்தாலே சொல்லுகிறார்
அதவா
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிணம்-என்கிறபடியே அவ்வருகு போவாரையும் துவக்க வல்ல விஷயம் ஆகையாலே
துவக்குண்டு சொல்லுகிறார் ஆகவுமாம் –

என்னப்பனில் நண்ணி
பகவத் விஷயத்தில் நின்றும் ஆழ்வார் பக்கல் கிட்டி –
சப்தாதி விஷய ப்ராவண்யங்களை விட்டு பகவத் விஷயத்தைக் கிட்டுகையில் உண்டான அருமை போல் அன்று பிரதம அவதியான பகவத் விஷயத்தை விட்டுப் புருஷார்த்தத்தில் சரம அவதியான ததீய சேஷத்வத்தைக் கிட்டுகை-
சப்தாதி விஷயங்களை விடலாம் -அதின் தோஷ தர்சனத்தாலே அங்கு -இங்கு அங்கன் ஒரு தோஷம் காண விரகில்லை-ஆகையாலே அதிலும் இது அரிது

தென் குருகூர் நம்பி –
நல்கி என்னை விடான் நம்பி என்று ஆழ்வார் தாம் உத்தேச்யமாகப் பற்றின விஷயத்தின் பூர்த்தி யளவன்று இ றே இவர் பற்றின விஷயத்தின் பூர்த்தி
எங்கனே என்னில் –பகவத் விஷயத்தைப் பற்றினால் அதினஎல்லையான ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்
ஆழ்வாரைப் பற்றினால் அவ்வருகு கந்தவ்யம் இல்லை இ றே
ஆசார்யர்களை நம்பி எண்ணக் கற்பித்தார் ஸ்ரீ மதுர கவிகள் இ றே என்று ஜீயர் அருளிச் செய்வர்

என்றக்கால்
மநோ வாக் காயங்கள் மூன்றும் வேண்டி இருக்கும் பகவத் விஷயத்துக்கு
ஓர் உக்தி மாத்ரமே அமையும் இவ்விஷயத்துக்கு
பூர்த்தியால் வந்த ஏற்றமே யன்று -சௌ லப்யத்தாலும் ஏற்றம் உண்டு என்கை-

அண்ணிக்கும்
தித்திக்கும்
பகவத் விஷயத்தை அனுபவித்தால் ஆஅல்வாருக்கு பிறக்கும் ஆனந்தம் எல்லாம் இவ்விஷயத்திலே ஓர் உக்தி மாத்ரத்தாலே எனக்கு சித்திக்கிறது

அமுதூறும்
அமுது ஊற்று மாறாதே நிற்கும்
ந ச புனராவர்த்ததே என்ற விஷயம் ஆழ்வாருக்கு தத் பிரசாதத்தாலே நித்யமாகச் செல்லுகிறாப் போலே
எனக்கும் ஆழ்வார் பிரசாதத்தாலே நித்ய அபூர்வமாய்ச் செல்லப் பெற்றேன்

என் நாவுக்கே
இது பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையீ என்னில்
முதல் அடியான பகவத் விஷயம் கூட ரசியாது இருக்கிற உங்களுக்கு அதின் எல்லையிலே நிற்கிற எனக்கு ரசிக்குமா போலே ரசிக்குமோ
என் நாவுக்கே
அநாதியாக விஷயாந்தரங்களை ரசித்துப் போந்த என் நாவுக்கே இவ்விஷயம் ரசிக்கிறது என்றுமாம் –

——————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு -11- அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம் — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 29, 2016

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

நிகமத்தில் இவர் அருளிச் செய்த பிரபந்தத்தைக் கற்றார்க்கு ஆழ்வார் ஆணை பரிமாறும் ஸ்ரீ வைகுண்டமே தேசம் என்கிறார் –

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–

 

அன்பன்- –
ஈஸ்வரத்வம் அன்று ஸ்வரூபம்-எம்பெருமான் இருந்ததே குடியாக எல்லாருக்கும் ஒரு தலையாய் இருக்கை-ரிபூணாமபி வத்சலா -என்கிறபடியே –

தன்னை அடைந்தவர்கட்கெலாம்-அன்பன்
ஏவம் குண விசிஷ்டணாஆணா எம்பெருமானை ஆச்ரயித்தார்க்கு எல்லாம் அன்பராய் இருக்கை ஆழ்வாருக்கு ஸ்வரூபம் -தம்தாம் சத்தையிலே யன்றோ எல்லாரும் ஸ்நேஹிப்பது –

தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
ஆழ்வாருக்கே அன்பராய் இருக்கை ஸ்ரீ மதுர கவிகளுக்கு ஸ்வரூபம்-ப்ரீதி ப்ரேரிதராய்க் காணும் சொல்லிற்று-தாம் காண வந்த சோழரோ பாதி ப்ரீதி காணும் சொல்லுவித்தது
இவர் முன் சொல்லும் எனபது பரிதியைக் காணும் –

நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே-
இது கற்றாருக்கு வாசஸ் ஸ்தானம் ககலங்கா பெரு நகரான பரமபதம் –
இது வ்யாஹத பாஷணமாய் இருந்ததீ-ஆழ்வாரை ப்ராப்யமாகச் சொன்னால் திரு நகரியே ப்ராப்ய தேசமாக வேண்டாவோ என்னில்
திரு நகரியிலே பொலிந்து நின்ற பிரான் ஆணையும் ஆழ்வார் ஆணையும் கூடச் செல்லுவது
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ என்கிறபடியே ஆழ்வார் ஆணை ஒன்றுமே யாய்த்து அங்குச் செல்லுவது –
சேதனனுக்கு ப்ராதி கூல்யத்தில் நின்றும் நிவ்ருத்தன் ஆனேன் என்று தோற்றும் போது ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்க விடுக்கும்
ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்கை யாவது அவன் அடியார் அளவும் ஸ்நேஹித்து இருக்கை
அவர்கள் எல்லாருக்கும் ப்ரியம் செய்கையாவது ஜ்ஞான ப்ரதன் பக்கலிலே ஸ்நேஹித்து இருக்கை இ றே-ஆகையாலே திரு நாட்டை ப்ராப்யமாகச் சொல்லிற்று
அதவா
நம்புவார் இருந்த இடமே வைகுந்தம் என்னவுமாம்
திரு நாடு என்றும் லீலா விபூதி என்றும் விபாகம் இல்லையோ வென்ன
நம்பி திருவழுதி வள நாடு தாசர் வார்த்தை -கூரத் தாழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச் சுவர் தள்ளி ஒரு போகியாய்த்துக் காண் -என்று பணித்தான் –

————————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

நிகமத்தில் இவர் பிரபந்தத்தைத் தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு வாஸ பூபி பரமபதம் என்கிறார் –

அன்பன் –
வாத்சல்யத்தை நிரூபகமாக யுடையவன்
இவனுடைய வாத்சல்யம் -ரிபூணாமபி -என்கிறபடியே சர்வ விஷயமாய்த்து இருப்பது
அதுக்கடி தேவா நாம் தாநவாநாஞ்ச சாமான்ய மதிதைவதம் -என்று சம்பந்தம் பொதுவாய் இருக்கையாலே –

தன்னை அடைந்தவர்கட்கெலாம் அன்பன் –
ஆழ்வாருடைய அன்பு அங்கன் பொதுவாய் யன்றாய்த்து இருப்பது
பரமனைப் பயிலும் திருவுடையார் யாவரேலும் கண்டீர் எம்மை ஆளும் பரமர் -என்று இ றே இருப்பது –

தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் –
பகவத் விஷயத்து அளவன்றிக்கே ததீயர் அளவிலும் அன்றிக்கே ஆச்சார்ய விஷயத்திலே சக்தராய்
தனக்குப் புருஷார்த்தம் வேண்டி இருக்கில் பகவத் விஷயத்தைப் பற்ற அடுக்கும்
அங்கன் தான் உகந்தது அன்றிக்கே அவன் உகந்தது செய்ய வேண்டி இருக்கில் பாகவதர்களைப் பற்ற வடுக்கும்
அவர்கள் எல்லாரும் உகந்தது செய்ய வேண்டி இருக்கில் ஆச்சார்யனைப் பற்ற வடுக்கும்
ஆசார்யன் முதலிலே அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே உத்தேச்யனாம்
பின்பு பகவத் குணங்களிலே அவகாஹித்து குண அனுபவத்தால் அல்லது செல்லாத படியானால்
போத யந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு உசாத் துணை யாகையாலே உத்தேச்யனாம்
ப்ராப்தி தசையிலே சாத்யவிருத்தி ரூபத்தாலே உத்தேச்யனாம் –

மதுரகவி சொன்ன சொல்
தமக்குப் பாசுரமே இனிதாய் இருக்கையாலே மதுர கவி என்கிறார்

நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
இனிதாய் இருந்தது இல்லை யாகிலும் இப்பிரபந்தத்தை தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு வச்தவ்ய தேசம் பரம பதம்
ஆழ்வார் உத்தேச்யர் ஆகில் இவருக்குத் திரு நகரி யன்றோ ப்ராப்யம் ஆவது என்னில்
திரு நகரியில் ஆழ்வார் ஆணையும் பொலிந்து நின்ற பிரான் ஆணையும் இரு புரியாயய்த்துச் செல்லுவது
அங்கன் அன்றியே ஆழ்வார் ஆணையே செல்லும் தேசம் பரமபதம்
அடியார் நிலாகின்ற வைகுந்தம் என்றும் வானவர் நாடு என்றும் சொல்லக் கடவது இ றே
நம்பி திருவழுதி வள நாடு தாசர் அவர்கள் இருந்த தேசம் தானே பரமபதம் என்று சொல்லுவர்
கூரத் தாழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச்சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒன்றாய்த்துக் காண்-
என்று பணித்தார் என்று பிள்ளை அருளிச் செய்வர் –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

நிகமத்தில்- இப்பாட்டில் இப்பிரபந்தம் கற்றார்க்கு வஸ்தவ்ய பூமி பரமபதம் என்கிறார்
1-ஆழ்வாருடைய போக்யதையும்-அவர் தமக்கு ஸ்வாமி என்னும் இடத்தையும்
2–தமக்கு கால ஷேப விஷயம் அவருடைய ப்ரபந்தம் என்னும் இடத்தையும்
3-ஆழ்வாரோட்டை சம்பந்தம் அடியாக ஈஸ்வரன் மேல் விழுந்து அனுபவித்த படியையும்
4-தம்முடைய தோஷம் பாராமல் ஆழ்வார் விஷயீ கரித்த படியையும்
5-தோஷம் தானே அவருடைய தேச பிரவேச மாத்ரத்திலே தம்மை விட்டுக் கழன்ற படியையும்
6-பின்பு அத்தோஷம் மேலிடாதபடி ஆழ்வார் குண கீர்த்தனமே தமக்குக் கால யாத்ரையாம் படி அவர் தம்மைத் திருத்தின படியும்
7-அவருடைய க்ருபா வைபவத்தை லோகம் அடங்கலும் தாம் பரப்ப வேண்டும்படி தமக்குப் பிறந்த ஆதரத்தையும்
8-பகவத் கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபை லோகத்திலே அதிசயித்த படியையும்
9-அக்கிருபை அடியாக அவர் உபகரித்த உபகாரமும்
10-அவ்வுபகார பரம்பரைகளுக்கு பிரத்யுபகாரம் தேடி அவருடைய பூர்த்தியாலே பிரத்யுபகாரத்துக்கு அவகாசம் காணாமல்-தாம் அலமருகிற படியையும் இ றே கீழ்ச் சொல்லி நின்றது –

இவ்வர்த்தங்களுக்கு வாசக சப்தம் இட்டுச் சொன்ன இப்பிரபந்தத்திலே ஆதரம் உள்ளார்க்கு நித்ய ஸூரிகள்-பரம பதத்திலே ஒரு பிராப்தி பண்ணிக் கொடுப்பார்கள் என்கிறார்-
இவர்களுக்குத் திரு நகரியே ப்ராப்ய ஸ்தலமாய் இருந்ததே யாகிலும் அவர்கள் ஆதரத்துக்காக அங்கே போய்-அங்கும் ஆழ்வாரை அனுபவிக்கப் பெறுவார்கள் –
கவி பாட்டுண்ட விஷயத்தையும்–கவி பாடின தம்மையும்–கவியையும் –
கவியை ஏதேனும் ஒரு வழியால் கற்றவர்களுக்குப் பலமும் சொல்லுகிறது –

தன்னை அடைந்தவர்கட்கெலாம் அன்பன் –
தம்முடைய திருவடிகளை ஆஸ்ரயித்த என் போல்வார்க்கு எல்லாம் வத்சலராய் இருக்குமவர்
எங்கள் தோஷங்களைப் பாராதே தம்முடைய குணங்களைத் தந்து தரிப்பிக்குமவர்
நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்றும்-நின்று நின் புகழ் ஏத்த அருளினான் என்றும் சொல்லுகிறபடியே
அன்றிக்கே
அன்பன் என்று சர்வேஸ்வரனுக்கு திரு நாமமாய்-அவனை ஆச்ரயித்தவர்க்கு எல்லாம் ஸ்நிக்தராய் இருப்பவர்-மத்பக்த ஜன வாத்சல்யம் -என்று இத்தை இ றே பிரதம லஷணமாகச் சொல்லிற்று –

அன்பன்
இன்னபடி அன்பன் என்கை அன்றியிலே எல்லாருக்கும் எல்லாப் படியாலும் நிசர்க்க ஸூ ஹ்ருத்தாய் இருக்கும்-ஏவம் நிசர்க்க ஸூ ஹ்ருதி ந சித்ரமிதமாஸ்ரித்த வத்சலத்வம் என்று சௌஹாரத்த கார்யம் இ றே வாத்சல்யம்-
(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் தொடங்கி  யத்ருஷா கடாக்ஷம் -சாது சமாகம் வரை ஆறு படிகள் -உண்டே )சர்வ லோகைக வத்சலா -என்றும் -சரணா கத வத்சலா -என்றும் -ரிபூணாமபி வத்சலா -என்னும் படி லோகத்துக்காக வத்சலனுமாய்-அதில் ஆஸ்ரிதர் அளவிலே தோஷோயத்யபி என்னும் படி வத்சல்யனுமாய் -ப்ராதி கூல்யமே பண்ணிப் போருமவர்களுக்கும்-வத்சலனுமாய் இருக்கும் -பிரதிபவமா பராத்துர் முக்த சாயுஜ்ய தோபூ-இ றே-அங்கு மௌக்த்யம் ஆவது தோஷம் படாது ஒழிகை யாவது –
அன்பன்
தன்னை ஸ்நேஹித்தார்க்குத் தான் ஒருவனுமே விஷய பூதனுமாய் தான் ஸ்நேஹிக்கும் இடத்தில் விபூதியாக ஸ்நேஹிக்குமவன்
தன்னை ஸ்நேஹித்தவன் புறம்பே சிலவற்றை ஸ்நேஹித்தால் அவனுக்குத் தன்னைப் பெற விரகு இல்லை-தான் எல்லாரையும் ஸ்நேஹியானாகில் தான் இன்றிக்கே ஒழியும்
நிரவதிக வாத்சல்ய ஜலதே -என்றும் -வாத்சல்ய மஹோததே -என்கிறபடியே கடலுக்கு உள்ளே மாணிக்கங்கள் அடைய மறைந்து கிடைக்குமா போலே-இவ்வாத்சல்ய குணத்தில் குணாந்தரங்கள் அடைய மறையும் படி யாய்த்து இது ஸ்வரூபத்தை விளாக்குலை கொண்டு கிடக்கும் படி
ஸ்வரூபம் தான் சர்வதா சாத்ருச்ய ரஹிதமானாப் போலே யாய்த்து இக்குணமும் சத்ருச்ய ரஹிதமாய் —நிகரில் புகழாய் இருக்கும் படி
அந்த – ஸ்வரூப –சாத்ருச ராஹித்யத்தால் பெற்றது பரதவ சித்தி -இந்த-வாத்சல்ய – சாத்ருச்ய ராஹித்யத்தால் பெற்றது சரண்யத்வ சித்தி –
அன்பன்
தன்னைப் பற்றிப் புறம்பே சிலவற்றை ஆசைப்பட்டவர்களுக்கும் -உதாரா என்று குணம் கொள்ளும் வ்யாமோஹத்தை யுடையவன் –
அன்பன்
உபக்ரமத்திலே கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன் -என்று-சீல சௌலப்ய ஸ்வாமித்வங்களை உபாதானம் பண்ணி
உப சம்ஹாரத்தில் வாத்சல்ய குணத்தோடு தலைக் கட்டுகிறார் அவை ஒரு தட்டு -இது ஒரு தட்டு இ றே-இத்தைப் பற்ற விறே சீலாதி குண சம்பன்னஸ் சர்வ லோகைக வத்சலா -என்று ரிஷிகளும் சொல்லிற்று -(கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன் -அன்பன் -நான்கு சப்தங்கள் நான்கு குணங்களைக் காட்டி அருள )

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன்-
இப்படி சர்வ லோக வத்சலனான சர்வேஸ்வரனுடைய குணத்துக்குத் தோற்று
குணைர் தாஸ்யம் உபாகத என்று அடிமை புக்கு அவன் திருவடிகளை உபாயத்வேன வரணம் பண்ணி இருக்கும் சாத்விக வர்க்கத்துக்கு நல்லராய் இருக்குமவர்
அவனுக்கு எல்லாரோடும் பந்தம் உண்டாகையாலே எல்லாரையும் ஸ்நேஹிக்கும்
இவர் பரமனைப் பயிலும் திரு யுடையார் யவரேலும் அவர் கண்டீர் -என்னை யாளும் பரமர் -என்று இருக்குமவர் யாய்த்து
இவரைப் போலே வைராக்ய பூர்வகமான ஸ்நேஹம் அன்றே அவனது
அவனுக்கு எல்லாரோடும் ஸ்வரூப நிபந்தன சம்பந்தம் -இவரது உபாதி நிபந்தன சம்பந்தம்
எல்லாம் அன்பன்
அவர்களுடைய ஜாத்யாதி நியமம் பாராதே தத் சம்பந்தமே ஹேதுவாக நல்லராய் இருக்குமவர்-
கும்பி நரகர்க ளேதத்துவரேலும் –எம் தொழு குலம் தாங்கள் -என்றும் எத்தனை நலம் தாம் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகள் -என்று இருக்குமவர் –

அன்பன்
அவன் அடியார் -நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -என்று பகவத் அனுபவ சூ கத்தை விட்டே யாகிலும்-வைஷ்ணவசமமாய் சம்ச்லேஷ ராசராய் இருக்குமவர்
அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன்
அவனை சேஷியாக வரிக்க்கவுமாம் -பந்துத்வன வரிக்க்கவுமாம் -உபாயத்வென வரிக்க்கவுமாம் -உபேயத்வென வரிக்க்கவுமாம்-இவருக்கு ஆதரிக்க வேண்டுவது ஏதேனும் ஒரு சம்பந்தம் ஆய்த்து

தென் குருகூர் இத்யாதி
இவருக்கு இப்படி பகவத் பாகவத விஷயத்தில் ஸ்நேஹத்துக்கு ஊற்றுவாய் திரு நகரியில் பிறப்பாய்த்து-துறை வாய்ப்பாலே பயிரும் வாய்க்கும் இ றே -இவருக்கு காதல் கடல் புரைய விளவிக்கைக்கு அடி அந்த நிலப் பண்பு யாய்த்து
நகர்
அந்நகர வாசத்தாலே யாய்த்து இவர் சார அசார விவேகஜ்ஞ்ஞர் யாய்த்து
நம்பி
இப்படி ஆத்ம குண பூரணரான ஆழ்வார்
அன்பனாய்
இப்படி இவருடைய பகவத் ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகிற ஆத்ம குணம் கண்டாய்த்து இவருக்கு ஸ்நேஹம பிறந்தது

அன்பனாய் மதுரகவி
அவருக்கு பகவத் ப்ரேமம் ஸ்வரூப பிரயுக்தமாய் -ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் என்று நிரூபகம் ஆனால் போலே-இவருக்கும் ஆழ்வாருக்கு நல்லவர் ஆனவர் என்று நிரூபகம்
அவர் பிரணவ நமஸ் ஸூ க்கள் இரண்டிலும் நிஷ்டராய்ப் போருவர்-இவர் மத்யம பதத்திலே நிஷ்டராய் இருப்பர்-
மதுரகவி
அவர் தத் விஷயத்தை கவி பாடுகையாலே -என்நாவில் இன்கவி என்றால் போலே இவரும் ஆழ்வாரைப் பாடுகையாலே தம்மை மதுர கவி என்கிறார் –
நம்பிக்கு அன்பனாய் மதுரகவி
நெஞ்சுக்குப் பணி ஆழ்வார் பக்கல் ஸ்நேஹமே –வாய்க்குப் பணி அவருடைய குண ஸ்தோத்ரமே ஆனவர்-(அன்பு -நெஞ்சுக்கு  / கவி வாய்க்கு )
சொன்ன சொல்
அவர் ப்ரபந்தீ கரித்த இந்த சப்த சந்தர்ப்பத்தை
சொன்ன சொல்
இதுவும் ஒரு சொல்லே என்று விஸ்மிதர் ஆகிறார்
நம்புவார்
இத்தை ஆசைப்படுமவர்கள்-இவ்வர்த்தத்தை வ்யுத்பத்தி பண்ணி விடுதல் செய்கை அன்றிக்கே இதிலே நசை யுடையராய் இவ்வியலிலே எப்போதும் பரிசயிப்பது
-இதுக்குள் ஓடுகிற ஆழ்வாருடைய ப்ரபாவங்களிலே வித்தராவது -இப்பிரபாவத்தை எப்போதும் ஒருவர் சொல்லக் கேட்க ஆசைப்படுவதாய்–இப்படி நசை பண்ணிப் போருவார்-
நம்புவார்
பகவத் ப்ரபாவத்தில் காட்டில் ஆழ்வார் பிரபாவத்தை விரும்புவார்-
ஆழ்வார் பிரபாவம் சொன்ன இது கைதவம் அன்று சத்யம் என்று இவ்வர்த்தத்தை தங்களுக்குத் தஞ்சமாக விஸ்வசித்து இருப்பார்-(-நம்புவார்-ஆசை விசுவாசம் வியப்பது )
பதி வைகுந்தம் காண்மினே
அவர்களுக்கு வஸ்தவ்ய பூமி பரம பதம்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு — 10- பயனன் றாகிலும் பாங்கலராகிலும் — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 28, 2016

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம்

பயிர்கள் எறி மறியக் கடவது இ றே -அப்படியே ஆழ்வார் பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கையாலே தாம் பண்ணின பக்தி-ஒன்றும் இல்லையாய்த் தோற்றி தேவரீர் திருவடிகளிலே இப்போது இ றே நான் ஸ்நேஹிக்கத் தொடங்கினேன் என்கிறார் –

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-

 

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
அனுத்தேச்யர் ஆகிலும் அபவ்யரே யாகிலும் எம்பெருமான் அன்றே அனாஸ்ரிதர் என்று கை விடுகைக்கும் அவிதேயர் என்று நிரசிக்கைக்கும் –

செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
நின்ற நிலையிலே துர்வ்ருத்தரையும் ஸூ வ்ருத்தர் ஆக்கிக் கொள்ளுவார் ஆழ்வார் அன்றோ-பகவத் விஷயம் போலே அதிகாரம் பார்த்துப் புகுகை யன்றியே நின்ற நிலையிலே புகுரலாம் படி இ றே ஆழ்வாருடைய நீர்மை இருப்பது –

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி-
நின்ற நிலையிலே கிட்டலாம் என்கைக்கு நிதர்சனம் சொல்லுகிறது-
இவரை அவகாஹித்த திர்யக்குகளும் களித்து வர்த்திக்கும் படி இவரைக் கிட்டினார்க்கும் உண்டு காணும்
ஏதத் சாம காயன் நாஸ்தே -என்கை பகவத் விஷயத்துக்காகில் இ றே ஒரு தேச விசேஷத்து ஏறப் போக வேண்டுவது
ஏற்றம் உள்ள விஷயத்தைப் பற்றினார்க்கு இங்கே கிடைக்கும் போலே காணும்
முக்தர்க்கு இ றே அங்குப் போக வேண்டுவது -முமுஷுக்களுக்கு கிடைக்கும் இடம் இ றே இவ்விடம்
எம்பெருமானோடு நித்யரோடு முக்தரோடு வாசியற ஹ்ருஷ்டராம் படி இ றே ஆழ்வாருடைய பூர்த்தி

முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-
உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளிலே ஸ்நேஹத்தைப் பண்ணுகைக்கு உத்சாஹியா நின்றேன்
பணி கொள்வானான குருகூர் நம்பி -என்னுதல்-பணி கொள்ளுகைக்காக முயல்கின்றேன் என்னுதல் –

————————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வார் தமக்கு உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்தவாறே தாம் இதுக்கு முன்பு ஆழ்வார் விஷயத்தில்-நின்ற நிலை யடங்க முதல் அடி இட்டிலராக தோன்றுகையாலே அவர் பண்ணின உபகாரத்தைப் பேசுகிறார்-
க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே ஆசார்ய விஷயத்தில் எல்லாம் செய்தாலும்-அவன் பண்ணின உபகாரத்தைப் பார்த்தால் ஒன்றும் செய்யப் பெற்றது இல்லை என்னும் படியாய்த்து இருப்பது –
அவன் இவனுக்கு உபகரித்தது சர்வேஸ்வரனை யானால் இன்னமும் ஒரு சர்வேஸ்வரன் உண்டாகில் இ றே
இவனுக்குக் கொடுத்து பிரத்யுபகாரம் பண்ணினான் ஆகலாவது
ஆகையால் என்றும் குறைப்பட்டே போம் அத்தனை –

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்-
ஒருவன் ஒருவனுக்கு உபகரிப்பது தனக்கு ஒரு பிரயோஜனத்தைப் பற்றி இ றே -அங்கன் ஒரு பிரயோஜனம் இல்லை யாகிலும்-
பிரயோஜனம் இல்லா விட்டாலும் சொல்லுகிற ஹிதம் கேட்கைக்கு பாங்காய் இருக்கலாம் இ றே-அங்கன் பாங்கு இன்றிக்கே இருந்தார்களே யாகிலும்
இப்படி இருக்கிறவர்களுக்கு ஹிதம் சொல்லுகிறதுக்கு பிரயோஜனம் என் என்னில் -இவர்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமை சொல்லுகிறது
ராவணனுடைய துர்தசையைக் கண்டு -மித்ர மௌபயிகங்கர்த்தும்-என்று அவனுக்கும் கூட ஹிதம் சொன்னாள் இ றே பிராட்டி-
ஒருவன் தலைக் கடையையும் புறக்கடையையும் அடைத்துக் கொண்டு கிடக்க அவ்வகம் நெருப்புப் பட்டு வேவா நின்றால்-கண்டு நிற்கிறவர்களுக்கு அவிக்க வேண்டி இருக்கும் இ றே -அப்படியே யாய்த்து ஆழ்வார் படியும் –

செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்-
தன்னுடைய செயலாலே இவை எல்லாம் நன்றாம் படி –
இவனுடைய செயலாலே -செயலிலே -எல்லாம் நன்றாம் படி என்னவுமாம்
தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல -என்று ப்ராப்யமும் ப்ராககமும் தானே என்று அத்யவசித்து-இருக்குமவர்களுடைய விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றது இ றே சர்வேஸ்வரனை –
அங்கன் இன்றிக்கே அவை ஒன்றும் இன்றிக்கே இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இ றே இவர்
பணி கொள்வான் –குருகூர் நம்பி -என்று அந்வயம்

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி-
இவர் ஆற்றாமையாலே ஒரு காலத்திலேயே காண வாராய் என்று கூப்பிடுவதுமொரு பாசுரம் உண்டு-
ஹர்ஷத்தாலே யாவர் நிகர் அகல் வானத்தே -என்று களித்துச் சொல்லுவதும் ஒரு பாசுரம் உண்டு-
இரண்டு பாசுரத்துக்கும் குயில் யாயிற்று பயிற்ருவன
இவர் பேச்சைக் கேட்க செவி ஏற்றாலே அவையும் இவர் பாசுரத்தைச் சொல்லும் யாயிற்று
குருகூர் நம்பி
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்று சேதனர் அளவின்றியே திர்யக்குகள் அளவிலும்-ஏறும்படி யாய்த்து ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது

முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-
உன்னுடைய ஸ்லாக்கியமான திருவடிகளுக்கு அன்பை முயலா நின்றேன் -யத்னியா நின்றேன்-என்னைத் தீ மனம் கெடுத்தாய் யுனக்கு என் செய்கேன் என்று அவர் தாம் அருளிச் செய்யுமா போலே-பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமையாலே தடுமாறுகிறார் –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

கீழ் பிரபந்தத்தில் ஓடின தாத்பர்யம் ஆழ்வாருடைய சர்வ பிரகார வைலஷண்யமும் (பிராப்யம் பிராபகம் ஞானம் பிரதத்வம் தோஷம் பிரதிபடத்வம் -நான்கும் உண்டே )இப்படி விலஷணரான ஆழ்வார் தம்-பக்கல் பண்ணின உபகார வைபவமும் இ றே -தம்முடைய தோஷத்துக்கு எதிர்த் தட்டான ஆழ்வார் வைலஷண்யமும்-தம்முடைய குறைக்கு எதிர்த் தட்டான உபகாரத்வமும் இவ்விரண்டையும் சொல்லிக் கொண்டு போந்தார் கீழ் –
இப்பாட்டில் அவ்வுபகாரத்துக்கு பிரத்யுபகாரம் தேடிக் காணாமையாலே தெகுடுகிறார்-(தடுமாறுகிறார் -எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் -என்கிறபடி முமுஷு திசையிலும் முக்தி திசையிலும் ) வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -யோ மா ததாதி ச இ தேவ மாவா -என்று-முமுஷு தசையோடு முக்த தசையோடு வாசியற உபகார ஸ்ம்ருதி நடக்குமது போக்கி பிரத்யுபகாரம் பண்ணித் தலைக் கட்டப் போகாது இ றே-
பரத்வ உபகார நிரபேஷத்வம் ஆசார்ய லஷணமாய் பிரத்யுபகார சாபேஷத்வம் சிஷ்ய லஷணம் ஆகையாலே-அதுக்கு வழி தேடிக் காணாமையாலே அலமருகிறார்-
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும் -உபகார கௌரவம் -பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும் -அதுக்கு சத்ருச பிரத்யுபகாரமாக வேணும் –
அது உண்டாகில் இ றே இவன் பண்ணலாவது-இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
இவன் திருத்தித் தருகையாலே பகவத் விஷயத்துக்கு ஆத்ம சமப்பர்ணம் பண்ணலாம் –
இவன் தானே திருத்தினவற்றை இவனுக்குச் கொடுக்கை சத்ருசம் அன்றே -(
ஆச்சார்யர் திருத்தி பகவான் இடம் கொடுக்கையாலே ஆத்மா ஆச்சார்யர் சொத்து ஆகி விட்டதே -அதனாலே அத்தை பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் -ஆச்சார்யருக்கு முடியாதே என்றபடி )

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்-
தர்மார்த்தௌ யத்ர ந ஸ்யாதாம் ஸூ ச்ருஷா வா ததாவிதா தத்ர வித்யா வக்தவ்ய -என்கிறபடியே தர்மார்த்த ரூபமான பிரயோஜனம் ஆதல்-
ஸூ ஸ்ருஷாவா என்கிற அதிகாரமாதல் எனக்கு இன்றிக்கே இருக்கச் செய்தேயும் அத்ருஷ்ட பிரயோஜனம் ஆதல் –
த்ருஷ்ட பிரயோஜனம் ஆதல் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் பகவத் ப்ரிய சித்திக்காதல் -பகவத் சமாராதன சேஷமாக-இவன் பக்கல் உண்டான த்ரவ்ய சித்திக்காதல் அன்றிக்கே ஸூஸ் ருஷையாகிற அதிகார பூர்த்தி கண்டதால் இ றே
பகவத் விஷயத்தை உபதேசிக்கைக்கு யோக்யதை யுள்ளது
அர்த்த தோ- தர்ம த- ஸூஸ்ரூஷூ ரத்யாப்ய -என்கிறபடியே நிரவதிக வத்சலனானவனும்-சிஷ்யாதே அஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் -என்ற பின்பு இ றே உபதேச ப்ரவர்த்தகனாய்த்து-இவர் அப்படி அன்றிக்கே துர்க்கதியே பற்றாசாக வி றே உபதேசித்தது-
புன்மையாகக் கருதினதே பற்றாசாக வாய்த்து இவர் அன்னையாய் அத்தனாய்த்து
இத்தலையில் ஒரு நன்மை பார்க்க வேண்டிற்று இல்லை புன்மையாகிற துர்க்கதி-
ஸ்வ பிரயோஜன நிரபேஷமாகப் பிறருடைய துர்க்கதியே பற்றாசாக வாய்த்து சத்துக்கள் உபதேசிப்பது –
ச்ரூயதாம் பரமார்த்தோ மே தைதேயா தநுஜாத்மஜா -ந சானியா தை தன்மந்தவ்யம் நாத்ர லோபாதி காரணம் -என்கிறபடியே
நாத்ர லோபாதி காரணம் -என்கிற இடம் ஸ்வ பிரயோஜன நிரபேஷத்வம் -தநுஜாத்மஜாஎன்கிற ஆ சூரா சம்பந்தம் -பிறருடைய துர்க்கதி
–ச்ரூயதாம் -என்கிற இடம் உபதேசம் -பரமார்த்தோ -என்கிற இடம் உபதேஷ்டவ்யமான அர்த்த கௌரவம்
-மே என்கிற இடம் உபதேஷ்டாவினுடைய ஆப்த பூர்த்தி –

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்-
நிஷ் பலமே யாகிலும் அநதிகாரிகளே யாகிலும்

செயல் நன்றாகத் திருத்திப்
அனுஷ்டான பர்யந்தமாக யுபதேசித்துத் திருத்தினார் -என்னளவு அன்றியிலே தம்முடைய அளவிலே உபதேசித்தார்
ஷத்ர பந்துவுக்கும் துர்க்கதியே பற்றாசாக வைஷ்ணவன் உபதேசித்த இடத்திலும் காலாந்தரத்திலே இ றே அவனுக்குப் பலித்தது
இவர் ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே யாக்குமவர் ஆகையாலே செயல் நன்றாகத் திருத்தினார்
செயல் நன்றாகத் திருத்தி-
இவர் உபதேசித்த அர்த்தம் என் நெஞ்சிலே பட்டு அது தான் அத்யவசாய பர்யந்தமாய் அவ்வளவு அன்றிக்கே அனுஷ்டான சேஷமாய்-அவ்வனுஷ்டானம் தான் சதசத நுஷ்டான மிஸ்ரமாகை யன்றிக்கே சத நுஷ்டானமே யாம்படி திருத்தினார்-( சத் அஸத் அனுஷ்டானம் இரண்டும் கலந்து போலே இல்லாமல் )
1-முற்படச்ரவணமும் –2-ஸ்ருதமான வர்த்தத்தில் மனனமும் -3- மதமான வர்த்தத்தில் மஹா விசுவாசமும் –4-விச்வச்தமான அர்த்தத்தில் அனுஷ்டானமும்-5-அதில் அசத நுஷ்டானம் கலசாதே சத நுஷ்டானமே யாய்ப் போருகையும் இ றே செயல் நன்றாகத் திருத்துகை யாவது
திருத்தி
இவற்றில் என் கையில் என்னைக் காட்டிக் கொடாதே தாமே கைத்தொடராய் நின்று இவ்வவஸ்தா பன்னமாக்கினார்-

பணி கொள்வான்
பகவத் பாகவத விஷயங்களில் கிஞ்சித் காரத்திலே மூட்டினார்-
திருத்தின பலம் விநியோகம் கொள்ள வேணுமே -இவரும் அவருக்கு உகப்பாக வாய்த்து பகவத் பாகவத விஷயங்களுக்கு அடிமை செய்வது
பகவத் கிஞ்சித் காரமும் வேணும் -ஆசார்ய கிஞ்சித் காரமும் வேணும் -வைஷ்ணவ கிஞ்சித் காரமும் வேணும்-
பகவத் பாகவத விஷயங்களுக்கு அடிமை செய்யும் -ஆசார்யனுக்குப் பிரியமாக
பகவத் பாகவத விஷயம் இரண்டும் உகக்கைக்கு ஆசார்யனுக்கு அடிமை செய்யும்
பதத்ரய நிஷ்டையைப் போலே கிஞ்சித்கார த்ரயமும் இவனுக்கு அபேஷிதமாய் இருக்கும் -ஸ்வரூபம் பகவத் கிஞ்சித் காரத்திலே மூட்டும் –
பகவத் ப்ரீதி பாகவத கிஞ்சித் காரத்திலே மூட்டும்-
பாகவத ப்ரீதியும் இவ்யக்தித்வயத்தினுடைய வைபவத்தை யுபதேசித்த உபகார ச்ம்ருதியால் வந்த இவன் தன்னுடைய ப்ரீதியும் ஆசார்ய கிஞ்சித் காரத்திலே மூட்டும்
இப்படி ஒன்றுக்கு ஓன்று ப்ரவர்த்தகமாய் யாய்த்து மூன்று விஷயமும் இருப்பது-(ஆச்சர்ய கைங்கர்யம் பிரதமம் -ஸ்ரீ வசன பூஷணம் -ஆச்சார்யர் திரு உள்ளம் உகக்கும் கைங்கர்யம் -மா முனிகள் -அதனால் பகவத் கைங்கர்யம் -அடுத்து பகவான் உகப்புக்கு பாகவதர் கைங்கர்யம் -மேலே பாகவதர்  உகக்கும் -ஆச்சார்யர் கைங்கர்யம் )
இதில் ஓன்று-(பகவத் சம்பந்தம்) நிருபாதிக சம்பந்தம் -மற்றவை இரண்டும் சோபாதிக சம்பந்தம்-அதில் ஓன்று-(பாகவத  ) உத்தேச்யத்தை உபாதியாகப் பிறக்கும் -ஓன்று (ஆச்சார்ய )உபகாரகத்வோபாதியாகப் பிறக்கும் –
பயனன் றாகிலும்  பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
அநதிகாரியான என்னை அதிகாரத்தின் மேல் எல்லையில் நிறுத்தி நிஷ்பலனான என்னை பகவத் பாகவத கைங்கர்யத்திலே-அன்வயிப்பித்துத் தாம் அருளின பிரயோஜனம் கொண்டார் –

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
அவன் தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ளும் இத்தனை
இவர் கருந்தரையிலே திருத்துமவர் யாய்த்து-
அவன் அதிகார நிஷ்பத்தி பிறந்தால் ப்ராப்ய விரோதிகளைப் போக்கிப் பணி கொள்ளும்-
அவ்வதிகார நிஷ்பத்தி தன்னையும் கொடுத்தாய்த்து இவர் அடிமை கொண்டது
அதிகார நிஷ்பத்தி ஆசார்யனாலே –புருஷார்த்த நிஷ்பத்தி ஈச்வரனாலே
அதிகாரம் ஆவது ஜ்ஞான அனுஷ்டானங்களில் புரை யறுதியாகையாலே செயல் நன்றாகத் திருத்தி என்று அவராலே இ றே இவருக்கு உண்டாய்த்து
இவனைத் தன் உபதேசத்தாலே வெளிச் செறிப்பித்து தான் அனுஷ்டித்துக் காட்டி தன்னில் விஞ்சின அனுஷ்டானம்-இவன் கையிலே கண்டாலாய்த்து அவன் இவனை பகவத் பாகவத கிஞ்சித் கார யோக்யன் என்று அறுதி இடுவது-(அதிகாரம் கொடுத்து கைங்கர்ய சிரத்தை ஆச்சார்யர் ஏற்படுத்த -அப்புறம் பிரதிபந்தகங்களை அவர்களுக்குப் போக்கி தான் கைங்கர்யம் பெற்றுக் கொள்வான் அவன் -)
ஆர்ந்த புகழ் அச்சுதன் -இவ்வளவிலே புகழ் படைத்து பற்றினாரை விடாதவன் என்கிற பட்டப் பெயரும் பெற்றாய்த்து அவன் இருக்கிறது –

பணி கொள்வான் குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
பணி கொள்ளுமவர்யாய்த் திரு நகரிக்கு நிர்வாஹகரானவரே என்று சம்புத்தி-(விளிச் சொல் -உன் திருவடிகளுக்கு அன்பு செய்ய முயல்கின்றேன் )

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி-
அசேதனமான பஷி ஜாதம் அடைய ஆழ்வார் பரிசரத்திலே திருந்தி திருவாய் மொழி பாடக் கற்றுப் பாடா நின்றால் சேதனான நான் திருந்தச் சொல்ல வேணுமோ
சாகா சம்பந்தம் உண்டாகையாலே அக்குயில்கள் திருவாய் மொழியைப் யாய்த்து பாடுவது (சாகா சம்பந்தம் -கிளை சம்பந்தம் ஆயிரம் பாசுரங்கள் சம்பந்தம் ) –அவை பாடும் குயில்கள் ஆகையாலே தம்பிரான்மாரைப் போலே ஆழ்வாருக்கு திருவாய் மொழி பாடுவான வாய்த்து-(விண்ணப்பம் செய்வார் முன்னே  இரண்டு பேர் சேவிக்க –அத்தை அரையர் அனுவதிக்குமா போலே ஆழ்வார் முன்னே முன்னுரு அனுசந்திக்க -குயில்கள் தம்பிரான் பாட ஆழ்வாரும் கூட பாடுகிறார் என்றவாறு )
ஒரு தேச சம்பந்தத்தாலே செவ்வாய்க் கிளி நான்மறை பாடுமானால்-(தில்லை திருச் சித்ரகூடம்    பாசுரம் கலியன் ) இத்தேச வர்த்திகளுக்குத் திருவாய் மொழி பாடச் சொல்ல வேண்டா வி றே-
தாம் மதுர வாக்காகை யாலே மதுர வாக்கான குயிலை இட்டுப் பொழிலை சிறப்பிக்கிறார்

குருகூர் நம்பி
பிரத்யுபகார நிரபேஷைதைக்கு அடியான பூர்த்தியை யுடையவரே -பகவத் கிஞ்சித் காரத்துக்கு த்வாரம் பெறிலும் ஆசார்ய-கிஞ்சித் காரத்துக்கு த்வாரம் இல்லை -இவன் த்ருஷ்டத்தைக் கர்மத்தின் கையிலே பொகட்டு-அத்ருஷ்டத்தை ஈஸ்வரன் கையிலே பொகட்டு இருக்குமவன் இ றே-(அவாப்த ஸமஸ்த காமன் ஆகையால் -கிஞ்சித் காரம் -வழி இல்லை யாக இருந்தாலும் சாபேஷை போலே அர்ச்சாவதாரத்தில் அபிநயனம் –
அங்கு கூடினாலும் ஆச்சார்யர் கிஞித்காரம் துவாரம் இல்லையே -)

முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-
உன்னுடைய பரம போக்யமான திருவடிகளில் உண்டான ஸ்நேஹம் அடியாக பிரத்யுபகாரம் தேடி உத்சாஹியா நின்றேன்
இவ் உத்சாஹத்துக்கு மேற்பட பிரத்யுபகாரம் பண்ணுகைக்கு விரகு இல்லையே -அவர் தாம் -உனக்கென் செய்கேன் -எனபது –
அப்பனுக்கு எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் என்றால் போலே
மொய் கழல்
மொய் கழலே ஏத்த முயல் என்று ஆழ்வார் அவ்விஷயத்தை அருளிச் செய்யக் கேட்டுப் போந்த வாசனையாலே இங்கும் மொய் கழல் என்கிறார்
கீழே அவன் பொன்னடி என்று ஆழ்வார் திருவடிகளின் பாவ நத்வம் சொன்னார்
இங்கே போக்யதை சொல்லுகிறார்
வகுளாபி ராமமாய் ஸ்ரீ மத்தாய் (போக்யத்வமும் பாவானத்வமும் -)-இ றே ஆழ்வார் திருவடிகள் இருப்பது-
மொய் கழற்கு அன்பையே
இத் திருவடிகளின் போக்யதை அன்பைக் கொடுத்தது-அன்பு பிரத்யுபகார்த்திலே மூட்டிற்று-அதுக்கு இடம் காணாமையாலே அலமரா நின்றேன்-இவ்வலமாப்பு யாவச் சைதன்யம் இ றே –மொய் கழற்கு அன்பையே-முயல்கின்றேன்-(வர்த்தமானம் யாவதாத்மா பாவி ப்ரபத்யே போலே )

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு –9- மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் – — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 28, 2016

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

சகல வேத தாத்பர்யமான பாகவத சேஷத்வத்தை -பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கடிமை-என்கிற-இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்து -என் நெஞ்சின் உள்ளே நிறுத்தினான் என்கிறார் –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-

 

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்-
எம்பெருமான் பக்கலிலே ஜ்ஞான பக்திகளைப் பூரணமாக வுடைய வைதிகர்-
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தீ தேவா -என்கிறபடியே-வேதத்துக்கு பிராணனான பிரமேயம்  (-இலக்கு -சார தமம் -)திருவாய்மொழி-திருவாய் மொழிக்கு பிரமேயம்-(-இலக்கு -சார தமம் -) பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை –

நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-
பண்ணோடும் இசையோடும் பாடி என் நெஞ்சிலே பிரதிஷ்டிப்பித்தான்
கல்லைக் குழித்து நீரை நிறுத்துவாரைப் போலே கிடீர் செய்தது –

தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு –
எல்லா மேன்மையும் சொன்னாலும் தகுதியான ஆழ்வார் எல்லாம் சொன்னாலும் அங்குத்தை பிரபாவத்தை-எல்லை காண ஒண்ணாத படி இ றே ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது –

ஆட் புக்க காதல் அடிமைப் பயன் அன்றே-
இவர் திருவடிகளில் உண்டான பக்தி யன்றோ இவருக்கு அடியேன் ஆனதில் உண்டான பிரயோஜகம் –(நான் -அடிமை யானதால் பலன் பக்தி -அடியேன் ஆனதால் ருசி ஏற்பட்டது –ருசி வந்தால் தானே அடிமை ஆவோம் –பொருந்தாமை நாயனார் காட்டி அருளுகிறார் மேல் )

————————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

உமக்கு அருளின அருளுக்கு அவதி ஏது என்ன -என்னுடைய தண்மை பாராதே சகல வேதங்களினுடைய ரஹஸ்யார்த்தத்தை-எனக்கு உபகரித்தான் என்று -நீசனேன் நிறை ஒன்றும் இலேன் நம் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே என்று
ஆழ்வார் அருளிச் செய்தால் போலே இவரும் உபகார ச்ம்ருதியாலே ஆழ்வார் திருவடிகளிலே அருளிச் செய்கிறார் –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்-
பிரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தையே நிரூபகமாக உடையவர்கள் –
அநேக சாகை அத்யயனனம் பண்ணினவர்கள் என்றுமாம்
வேதத்தினுடைய பொருள் -சகல வேதங்களினுடைய ரகஸ்ய அர்த்தத்தை –

நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
பிரதிபத்தி பண்ண அரிதாய் இருக்கிற வேத ரகஸ்ய அர்த்தத்தைக் கேட்டார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி பாடி-
மலையைக் குழித்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே நிஸ் ஸூ ஷிரமான என் நெஞ்சுக்கு இதுவே விஷயமாம் படி பண்ணினார் –

தக்க சீர் சடகோபன்-
சர்வேஸ்வரன் கவிகள் என்றால் தகுதியான கல்யாண குணங்களை யுடைய ஆழ்வார்
அயர்வறும் அமரர்கள் அதிபதி என்றால் போரும்படி சர்வேஸ்வரன் இருக்குமா போலே
சர்வேஸ்வரன் கவிகள் என்றால் தகுதியாய்த்து ஆழ்வார் இருப்பது
ஏற்கும் பெரும் புகழ்வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வ ண் குருகூர்ச் சடகோபன் -என்று தாமே அருளிச் செய்தார் இ றே –

என்னம்பிக்கு
என்னை விஷயீ கரிக்கைக்குத் தகுதியான பௌஷ்கல்யத்தை உடையவர்க்கு –

ஆட் புக்க காதல் அடிமைப் பயன் அன்றே –
அடிமையாக வேணும் என்று எனக்குப் பிறந்த ருசி –
அடிமையாகிற பிரயோஜனத்தொடே வ்யாப்தமாய் இருக்கும்
பகவத் விஷயத்தில் ருசி இவர்க்கு சரீர விச்லேஷம் பிறந்தால் அர்ச்சிராதி மார்க்கத்திலே ஒரு தேச விசேஷத்திலே-சென்றால் பெறக் கடவதே இ றே இருப்பது
ஆழ்வார் விஷயத்தில் பிறந்த ருசி அங்கன் அன்றிக்கே இச் சரீரத்தோடு ஆழ்வார் திருவடிகளிலே எல்லா அடிமைகளும்-செய்யலாம் படி பண்ணும்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு
முனியே நான்முகனுக்கு அவ்வருகே இ றே பேறு ஆய்த்து
இவ்விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பம் இல்லை என்கிறது
அன்றே -என்றது ஆமே என்றபடி -அன்று எனக் கிளவியாம் எனத் தகுமே –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

கீழே ஆழ்வாருடைய குண கீர்த்தனம் பண்ணும்படி அவர் தமக்கு கிருபை பண்ணும் படியைச் சொல்லி
அதுக்குத் தண்ணீர்த் துரும்பான அநாதி கர்மங்களை ஆழ்வார் தம்முடைய பார்வையாலே பாறு படுத்தியத்தைச்  சொல்லி
அப்படியான ஆழ்வாருடைய க்ருபா வைபவத்தை திக்குகள் தோறும் அறிவிக்கக் கடவேன் என்று தம்முடைய ஆதர விசேஷத்தைச் சொல்லி
கிருபா பர்யபாலயத் -என்றும் -அருளினன் -என்று தொடங்கி -ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் -என்றது முடிவாக
ருஷிகளும் ஆழ்வார் தாமுமாக பகவத் கிருபையை ஆதரித்துப் போரா நிற்க
நீர் ஆழ்வாருடைய கிருபா பிரசித்தியிலே பிரவணர் ஆனபடி என் என்ன
பகவத் கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபையே இந்த லோகத்தில் அபிவ்ருத்தம் ஆகையாலே என்றும் சொல்லி நின்றது கீழ் –

இதில் கீழே ஆழ்வாருடைய ஜ்ஞான பிரதானம் ப்ரஸ்துதம் ஆகையாலே அவர் சகல வேதாந்த தாத்பர்யமான அர்த்த விசேஷத்தை
தமக்கு அறிவித்த பிரகாரத்தைச் சொல்லி அதுக்கு ஈடான குணங்களை யுடையராகையாலே பூரணரான ஆழ்வார் விஷயத்தில்
சேஷ பூதன் பிரமமே யன்றோ அவர்க்கு அடிமை செய்கையிலே பிரயோஜனம் என்று உபகார ச்ம்ருதியாலே-அவருக்கு சேஷ பூதன் என்று பிரேம பூர்வகமாகப் பிறக்குமாதரம் அன்றோ அடிமையில் முடிந்த நிலம் என்கிறார் –(அன்பு -ஆதரவு -கைங்கர்யம் –மூன்று நிலைகள் –ஆதரவே ப்ரேமம் கைங்கர்யம் என்றுமாம் )

கீழ் நாலாம் பாட்டிலே ஆச்சார்ய விஸ்வாசம் சொன்னார்-
மேல் இரண்டு பாட்டாலே ஆச்சார்ய வைபவமும் அவனுடைய உபகார வைபவமும் சொன்னார்-
இதில் உபகார பிரகார உபபாதனம் பண்ணா நின்று கொண்டு தம்முடைய் க்ருதஜ்ஞதையைச் சொல்லுகிறார்-
ஆசார்யனுக்கு கிருபையே வேஷமாய் சிஷ்யனுக்கு க்ருதஜ்ஞதையே வேஷமாய் இருக்கும் –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-
ஆழ்வார் தமக்கு அறிவித்த அர்த்தத்தின் சீர்மையை அருளிச் செய்கிறார் –
வேதியர்
வேதியர் ஆகிறார் -பாஹ்ய சாஸ்த்ரங்களை -காண்பரோ கேட்பாரோ தான் என்று கண்ணாலும் பாராதே செவியாலும் கேளாதே-நித்ய நிர்த்தோஷமான வேத பிரமாண நிஷ்டர் ஆனவர்கள்-
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி -வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை என்று இருக்குமவர்கள்-(பரம் -வேறு -உயர்ந்த இரண்டும் -இங்கு வேதம் தவிர வேறு சாஸ்திரம் இல்லை -கேசவனை தவிர தெய்வம் இல்லை )
மிக்க வேதியர்
அவ்வேதத்திலும் வேத வாதரதா -என்றும் த்ரை வித்யா மாம் சோமபா பூத பாபா -என்றும் சொல்லுகிறபடியே-
ஆபாத ப்ரதீதமாய் அல்ப அஸ்திரங்களான ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும் தத் சாதனங்களான ஜ்யோதிஷ்டோமாதிகளையும்-புருஷார்த்த தத் சாதனங்களாக அறுதி இட்டிருக்கை அன்றிக்கே
உத்தம புருஷார்த்தமான பகவத் பிராப்தியே புருஷார்த்தம் என்றும் தத் சாதனமும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -இத்யாதி வாக்யோக்தமான வேதனம் ஆதல்
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே என்கிற சரணாகதி ரூபமான சரம சாதனமாதல் என்று-வேதாந்த விஜ்ஞ்ஞானத்தாலே ஸூ நிச்சிதார்த்தராய் இருக்குமவர்கள்-(வேத ஞானம் -வேத விஞ்ஞனம் -வேதாந்த  ஞானம் -வேதாந்த விஞ்ஞனம் -நான்கு நிலைகள் )
மிக்க வேதியர்
மிக்கார் வேதியர் என்று ஆழ்வார் பாடே கேட்கையாலே மிக்க வேதியர் என்கிறார் –
அன்றிக்கே மிக்க வேதியர் என்று சுடர் மிகு சுருதி என்கிறபடியே பிரதஷ்யாதிகளில் அதிகமான வேத பிரமாண நிஷ்டர் என்றுமாம்
வேதியர் வேதம்
ப்ரஹ்மணா நாம் தனம் வேத -என்றும்-அந்தணர் மாடு என்றும் சொல்லுகிறபடியே அவர்களுக்கு பரம தனமான வேதம்
வேதியர் வேதம்
வேதத்தை தங்களுக்கு நிரூபகமாகவும் தனமாகவும் உடையராய் இருப்பவர்கள்

வேதத்தின் உட்பொருள்
அந்த வேதத்தில் உண்டான அர்த்த விசேஷத்தை
வேதத்தின் பொருள்
அதாவது -வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்
வேதப் பொருளே என் வேங்கடவா -என்றும் -வேதாந்த விழுப் பொருள் -என்றும் சொல்லுகிறபடியே
சகல வேதங்களும் ஒரு மிடறாக ஓதித் தலைக் கட்டுவது பகவத் ஸ்வரூபாதிகளை இ றே
உட்பொருள்
அதில் தத் விஷய பிரதிபாதிதமான அம்சம் புறப்பொருளாய்-ததீய பிரதிபாதிதமான அம்சம் உட்பொருளாய் இருக்கும்
அதில் புறப் பொருளையே சொல்லி விடுகை அன்றிக்கே அதுக்கு ஹ்ருதயமான ததீய வைபவத்தை -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -இரண்டாலும் அருளிச் செய்தார்

நிற்கப் பாடி
1-துர்க்ரஹமான வேதார்த்தத்தை பிரதிபத்தி விஷயமாம் படி பாடி
நிற்கப்பாடி
2-கேட்டவர்கள் நெஞ்சிலே ஊற்று இருக்கும் படி பாடி என்றுமாம்
வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி
3-அது நிற்கும் நான்மறை யானாப் போலே அதில் அர்த்த ரூபமான இதுவும் சர்வ காலமும் அழிவின்றிக்கே நிற்கும் படியாகப் பாடி என்றுமாம்
வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி
4-வைதிகர் ஆனவர்கள் அதுக்கு ஹ்ருதயமான அர்த்த தாத்பர்யத்தை அறிந்து அதிலே நிஷ்டராம் படி பாடி

என்நெஞ்சுள் நிறுத்தினான்
அது தன்னை என் நெஞ்சிலே ஸூ பிரதிஷ்டிதமாம் படி பண்ணினார்
என் நெஞ்சுள் நிற்கப்பாடி நிறுத்தினான்
பாடுகிறபோதே என் நெஞ்சில் தங்கும் படிக்கு ஈடாக விரகிட்டுப் பாடி நிறுத்தினான்
நெஞ்சுள் நிறுத்தினான்-
அது தன்னிலும் மேல் எழச் சொல்லி விடுகை யன்றிக்கே அந்தரங்கமாக உபதேசித்தார்
என் நெஞ்சுள் நிறுத்தினான்
புன்மையே வேஷமான என் நெஞ்சிலே படுத்தினார்
நிறுத்தினான்
உபதேசித்தவர் தாமே குலைக்கிலும் குலையாத்படி திருட அத்யவசாயமாக உபதேசித்தார்
என் நெஞ்சுள் நிறுத்தினான்
தத் விஷயமும் உட்பட வூடு போகாத என் நெஞ்சிலே ததீய வைபவம் உட்பட நடையாடும்படி பண்ணினார் –
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
வேதார்த்தங்களை வகுத்து அதுக்குப் பாசுரம் இட்டுத் திருவாய் மொழி பாடினால் போலேயோ -அப்பரமார்த்தங்களை என் நெஞ்சிலே படுத்தின அருமை –
வேதார்த்தங்களைத் திருவாய் மொழியிலே சேர்த்து -அத் திருவாய் மொழியின் அர்த்தங்களை என் நெஞ்சிலே சேர்த்தார்
ஆசார்ய வைபவம் கைபட்டவனுக்கு ஆய்த்து சகல வேதார்த்தங்களும் வசப்படுவது
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
பிரமாண வைபவத்தையும்- ப்ரமேயமான தத் வைபவத்தையும்- ப்ரமாத்ரு வைபவத்தையும் -அபிமத வைபவத்தையும்-இவர் நெஞ்சிலே படும்படி பூர்ண உபதேசம் பண்ணினார் ஆய்த்து –

தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு
இப்படி உபதேசிக்க வல்ல ஜ்ஞானாதி பூர்த்தியைக் காட்டி என்னுடைய சாட்யத்தைப் போக்கித் தம்முடைய பூர்த்தியிலே நிலை நின்றவர் –
குறைவாளரைக் குறை வறுக்கை இ றே ஒருவன் பூர்த்திக்கு மேல் எல்லை-(பட்டர் பிரான் ஆனா பின்பு -பொற் கிழி- வித்வான்களுக்கு அபகரித்த பின்பு பெரிய ஆழ்வார் -தத்வம் நிர்ணயம் பொழுது பிரான் -அவனை அனுபவித்து -பொங்கும் பிரிவால் -ப்ரீதி உண்ட அருளி பெரியாழ்வார் ஆனார் போலே இவரும்-சட கோபன் இவர் முதலில் அப்புறம் நம்பி ஆனார் என்றபடி –தம் விரோதி போக்கி என் விரோதியையும் போக்கி அருளினார் )நம்பி -விபூதிக்காக உபதேசித்தாலும் தம்முடைய ஜ்ஞானாதிக்ளைத் தரைக் காண ஒண்ணாதவர்-
என் நம்பி
அவர் உபதேசித்த அர்த்தங்களிலும் அவருடைய பூர்த்தியிலே யாய்த்து இவர் தோற்றது
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு
தக்க கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியான அவருடைய் நம்பி யன்று இவருடைய நம்பி
அப்பூர்த்தி என்னளவில் வந்தது இல்லையே-

ஆட்புக்க காதல் அடிமைப் பயன் அன்றே
அவருக்கு அடிமை புக்கத்தால் உண்டான ஆதரம்–அடிமையே பிரயோஜனமாக யுடையதன்றோ-
முற்பட அடிமை புக்கு –அநந்தரம் ஆதரம் நடந்து– பின்பு அடிமை செய்யுமதுவே அவருக்கு பிரத்யுபகாரம்-
முற்பட சேஷ பூதனாய் -பின்பு ப்ரேமம் நடந்து -ப்ரேம அனுரூபமான கிஞ்சித் காரமும் நடக்க வேணும்-
ஆசார்யபவ்யதையும் -ஆசார்ய ப்ரேமமும்– ஆசார்ய கிஞ்சித் காரமும் -இம்மூன்றும் அபேஷிதம் இ றே சிஷ்யனுக்கு
அவர் பகவத் சேஷத்வத்தையும் -பகவத் பிரேமத்தையும் -பவகச் சேஷ வ்ருத்தியையும் உபதேசித்தார்
இவர் ஆழ்வாருக்கு சேஷமாய் -அவருக்கே ஸ்நிக்தராய்- அவருக்கே கிஞ்சித் கரிக்கத் தேடுகிறராய் நின்றது-இவர் கற்றது இதிலே யாய்த்து-
அவர் புறப் பொருளை விட்டு உட்பொருளைக் கொடுத்தார்-
இவர் உட்பொருளான பகவத் விஷயம் தன்னை புறப் பொருள் ஆக்கி அதிலும் உட்பொருளான ஆழ்வார் திருவடிகளிலே-சேஷ பூதராய் ப்ரேம பூர்வகமான கைங்கர்யத்திலே இழிகிறார் யாய்த்து
அடிமைப் அயன் அன்றே
அடிமை பிரயோஜனம் என்னும் இடம் ஆழ்வார் ஸ்ரீ பாதத்திலே கற்றார்
அன்றே
அதுவே யன்றோ அர்த்தம்
அந்த வழுவிலா வடிமை செய்கிறதில் காட்டில் இது ஆட்புக்க காதல் அடிமைப் பயன் -வன்றோ உறுவது –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு — 8-அருள் கொண்டாடும் அடியவர் இன்புற — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 28, 2016

ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –

வேத ரஹஸ்யத்தை வெளியிட்ட சர்வேஸ்வரன் கிருபையைக் காட்டில் -திருவாய்மொழியை அருளிச் செய்த-ஆழ்வாருடைய கிருபை ஜகத்துக்கு மிக்கது -என்கிறார் –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற-
சேஷ பூதனுக்கு ஆனந்திக்கையே ஸ்வரூபம்-சேஷ பூதராகையும் ஹ்ருஷ்டராகையும் வேறு இல்லை காணும்-இவன் அருளை அனுசந்தித்து ஹ்ருஷ்டா என்கிறபடியே ஹ்ருஷ்டராம் இத்தனை –

வருளினான் அவ் வருமறையின் பொருள்-
பரம ரஹஸ்யமான வேதார்த்தத்தை நிர்ஹேதுகமாகத் தன் பக்கல் ஆசாலேசம் உடையார் வாழும் படி-ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யனாய் நின்று வெளியிட்டான்
வேதங்கள் மறைத்த அர்த்தத்தை தீரோத்தகன் ஆகையாலே பிரகாசிப்பித்தான் (மூலையில் உள்ள உபநிஷத் அர்த்தங்களை நடு முற்றத்தில் இட்டு அருளி பதன் பதன் என்று அர்ஜுனனுக்கு  அருளிச் செய்தானே )

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-
ஆழ்வாருக்குத் திருவாய் மொழிக்கு உள்ளுறை போலே காணும் அருளிச் செய்தது-(சூத்ரம் -உபநிஷத் / விருத்திக்காரர் -கீதாச்சார்யன் / ஆழ்வார் ப்ரஹ்ம சூத்ரம் போலே )
இருவருக்கும் முழு நோக்காகப் பெற்றால் ஆழ்வாருக்கு செய்யப் போகாது இல்லை யாகாதே-வேத அதிகாரிகளுக்கு உஜ்ஜீவமாம் படி எம்பெருமான் செய்தது -அநாதிகாரிகளும் க்ருதார்த்தராம் படி ஆழ்வார் அருளிச் செய்தது

அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-
எம்பெருமான் அருளினது ப்ராதேசிகம் -ஆழ்வார் அருள் சார்வத்ரிகம்-
பாலேய் தமிழ் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்றும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் -என்றும் இ றே சொல்லிற்று –

——————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு அடி -ஆழ்வாருடைய அருள் கொண்டாடும் அருள்-சித் அசித் ஈஸ்வர தத்வத்ரயங்களையும் கபளீகரித்து இருக்கையாலே -என்கிறார் –

அருள் கொண்டாடும் அடியவர் –
இவ்வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் -அதுவும் அவனது இன்னருள் -என்றும்
-அருள் பெறுவார் அடியார் -என்றும் இங்கனே இ றே இவர் தாமும் அருளிச் செய்வது -அப்படி இருக்குமவர்கள்-

இன்புற-
எண்ணாதனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலைச் சிறப்ப -என்கிறபடியே ஆனந்த நிர்ப்பரராக –

வருளினான் அவ் வருமறையின் பொருள்-
பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறது-அருமறை
அவன் தன்னைப் பெறிலும் பெறுதற்கு அரிதாய் இருக்கை –
சா ஹி ஸ்ரீ ரப்ருதா சதாம் -என்கிறபடியே வேதார்த்தத்தை அருளிச் செய்தார்

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-
இவர் தாம் கை வந்தபடி பாடினார் அல்லர்
மயர்வற மதிநலம் அருளினன் என்கிறபடியே பகவத் பிரசாதத்தை முதலாகக் கொண்டு யாய்த்து இவர் கவி பாடிற்று
இவர் தாம் கவி பாடா நிற்கச் செய்தே -என்னாகியே தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி -என்கிறபடியே
பிறரோபாதி தாமும் விஸ்மயப்படும்படி நிரவத்யமாக இ றே கவி பாடுவித்துக் கொண்டபடி
ஆயிரம் இன் தமிழ்ப் பாடினான்
சதுர்விம்சாஸ் சஹஸ்ராணி ஸ்லோகா நாமுக்தவான் ருஷி -என்றாப் போலே ஆயிரமாக வாயிற்றுப் பாடிற்று
இன் தமிழ்ப் பாடினான்
பாட்யே கேயே ச மதுரம் -என்கிறபடியே இனிதாய் துரவகாஹமான அர்த்தத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும்-சப்தம் அதிக்ருதாதிகாரம் இன்றிக்கே சர்வாதிகாரமாம் படியும் பாடினார்

பாடினான் அருள் கண்டீர்-
மயர்வற மதிநலம் அறிலின வருள் போல் அன்றிக்கே அது தன்னை விளாக்குலை கொண்டு யாய்த்து இருப்பது

இவ் உலகினில் மிக்கதே-
சித் அசித் ஈஸ்வர தத்வத்ரயங்களையும் கபளீகரித்து இருக்கை –

————————————————————————-

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வாருடைய கிருபையை கீழில் பாட்டிலே -எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளை -என்று
இவர் சொல்லக் கேட்டிருக்குமவர்கள் பகவத் கிருபை யன்றோ நாட்டார் அடையக் கொண்டாடுவது -நீர் ஆழ்வாருடைய கிருபையை-எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு அடி என் என்ன-
பகவத் கிருபையையும் ஆழ்வார் கிருபையும் ஆனால் ப்ராப்தி சித்திக்கும் அன்று அன்றோ பகவத் கிருபை வேண்டுவது -அந்த ப்ராப்தி யுன்டாவது ஜ்ஞானத்தாலே அன்றோ -அந்த ஜ்ஞான சித்தி ஆழ்வாராலே யன்றோ -ஆகையாலே-ஆழ்வார் கிருபை யன்றோ லோகத்தில் விஞ்சி இருப்பது என்கிறார்-
பிராப்தி ஜ்ஞான சாபேஷமாய் இருக்கும் (ஆத்ம ஞானமும் -சேஷத்வ பாரதந்ரய ஞானம் இருந்து அதன் பலனாக -அப்ரதிஷேதம் விலக்காமை யும் வேண்டும் )-ஜ்ஞானம் ப்ராப்தி சாபேஷமாய் இராது-
கீழே நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் -என்று தம்முடைய புன்மையைச் சொல்ல அந்தப் புன்மை ஏது என்ன-
-அத்தை நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன் எலாம் -என்று இரண்டு வகையாகப் பேசி-
அநந்தரம் –பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்று அத்தை போக்கின படியைச் சொல்லி போக்கின பிரகாரத்தை இப்பாட்டிலே சொல்லுகிறார் –

அநாத்மன் யாத்ம புத்தியையும் அபோக்யங்களில் போக்ய புத்தியையும் அத்யாத்ம ஜ்ஞானத்தாலே போக்க வேணும்-
ஆச்சார்யன் ஜ்ஞான பிரதானம் பண்ணின வாறே -அந்த ஜ்ஞானம் மேல் உண்டான கர்மார்ஜனத்தை மாற்றும் –
முன்பு உண்டான அவித்யையாலே ஆர்ஜித்து வைத்த கர்மங்களை ஈஸ்வரன் போக்கும்படி பண்ணுவதுமது-
சங்கல்பஜத்தை இவன் போக்கும் -(மனசால் நினைத்த பாபத்தை அறிந்து -ஆச்சார்யர் சர்வஞ்ஞன் ஆகையால் போக்கும் என்றபடி )-கர்மஜத்தை அவன் போக்கும் -அவன் போக்குகைக்கு அடி இவன்-ஜ்ஞான சித்தியைப் பண்ணிக் கொடுக்கையாலே இ றே-
அத்தைப் பற்ற இறே- அம்ருதச்ய ஹி தாதானம் தமாசா பாரம் தர்சயதி சனத்குமார -என்றும் ஆச்சார்யனைச் சொல்லுகிறது –

எனக்கு அத்யாத்ம ஜ்ஞானத்தைப் பிறப்பிக்கக் கடவதாக வேதார்த்தங்களைத் திருவாய் மொழி முகத்தாலே வெளியிட்டு-அருளினார் என்னப் பார்த்து -அத் திருவாய்மொழி பாடினதற்கு வேறேயும் ஒரு பிரயோஜனம் சொல்லுகிறார் –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற-
திருவாய் மொழி பாடிற்றும் பகவத் ப்ரிணநார்த்தமாக வன்றிக்கே சாத்விக அக்ரேசருடைய முக மலர்த்திக்கு உறுப்பாக வாய்த்து –
அடியவர் -அருள் கொண்டாடும் அடியவர் -ஜ்ஞான விஷய பூதனான ஈஸ்வரனுடைய பிரியத்துக்கு அன்றிக்கே
ஜ்ஞான நிஷ்டரான சாத்விகர் உகக்கைக்காக வாயிற்று திருவாய் மொழி பாடினது
அடியவர்
சேஷவ்ருத்தி புருஷார்த்தம் என்னும்படி ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தவர்கள் -சேஷத்வ ஜ்ஞானம் சேஷவ்ருத்தி சேஷம் இ றே
அருள் கொண்டாடும் அடியவர்
அப்புருஷார்த்ததுக்கு சாதனமும் அவனுடைய கிருபை என்று இருக்கும் அவர்கள்
ஆகையாலே கைங்கர்யம் புருஷார்த்தம் -கருணை சாதனம் என்று இருக்குமவர்கள்
அருள் கொண்டாடும்
அல்லாத குணாந்தரங்களில் காட்டில் கிருபையைக் கொண்டாடுமவர்கள்
ஈஸ்வரனையும் கொண்டாடுகிறது தான் உண்டான போது ஜகத் உண்டாய் -இல்லாத போது இல்லையாம் என்று இட்டு இ றே
அப்படியே க்ருபா குணம் இல்லாத போது குணாந்தரங்களும் அகார்யகரமாய் -இது கூடினவாறே கார்யகரமாய் இருக்கையாலே-இத்தையே கொண்டாடா நிற்பவர்கள்
அப்படியே தேவ தாந்தரங்களில் காட்டில் ஈஸ்வரன் கொண்டாடத்துக்கு விஷயம் ஆனாப் போலே யாய்த்து-குணாந்தரங்களில் காட்டில் இது கொண்டாடத்துக்கு விஷயமான படி
மனஸ் தத்வம் இந்த்ரிய அந்தர்பூதமாய் இருக்கச் செய்தேயும் இது சஹகாரி யாகாத போது இந்த்ரிய வியாபாரம் கூடக் காணாமை-லோகத்திலே கண்டு போகிறாப் போலே இந்த கிருபையும் குணாந்தரப்பூதம் ஆகிலும் இது சஹ கரியாத போது-சேதனர் அளவில் குணாந்தரங்கள் ஜீவிக்கை யாகாது
ஸ்வரூபமும் நித்யம் குணங்களும் நித்யங்களாய் இருக்கச் செய்தே இவனுடைய சம்சார சம்பந்தம் ஒழுக்கு அறாமல் நடக்கையாலே-அத்தை மாற்றி இவனை உத்தரிப்பித்தது க்ருபா குணம் ஆகையாலே அத்தை யாய்த்து முமுஷுக்கள் கொண்டாடுவது –

சக்தனுக்கும் கிருபை வேணும் -அசக்தனுக்கும் கிருபை வேணும் –
சக்தனுக்கு நம்மைப் பெறுகைக்கு இப்படி வருத்தப்பட்டு சாதன அனுஷ்டானம் பண்ணுவதே என்னுமவன் நெஞ்சில் ஈரப் படாய்த்து பல சேஷம் ஆவது
அந்த ஈரப் பாடாய்த்து அவனை ப்ரீதனாக்குவதும் –
அசக்தனுக்கு நார்ச்ச நாதௌ ச்துதௌ ந ச -என்றால் க்ருபா மாத்திர மநோ வ்ருத்தி ப்ரசீத -என்னும்படி இருக்கும்-
அங்கு அவனுடைய அனுஷ்டானம் கண்டு பிறக்கிற கிருபை
இங்கு ஆகிஞ்சன்யம் கண்டு பிறக்கிற கிருபை
ஸ்வகதமான தொன்று சாதனம் ஆக வேண்டாவோ -பரகதமான குணம் சாதனம் ஆம்படி என் என்ன பாதகமே யாகிலும்-அருள் பெறுவார் அடியார்- என்கிறபடியே ஆஸ்ரயம் அவனாய் விஷயம் இவனாய் இருக்கும் -(இலக்கு அடியார் -அருள் அவன் இடம் -திருவட்டாறு சேவிக்கும் பொழுது இத்தை நினைத்து சேவிக்க வேண்டுமே -கடல் போன்ற அருள் இருக்க விலக்காமல் கொள்ள வேண்டுமே நாம் அவன் அடியாராக இருந்து)

அருள் கொண்டாடும்–அருள் கொண்டு ஆடும் — அடியவர்-
அன்றிக்கே அருளைத் தங்களுக்கு அவஷ்டம்பமாகக் கொண்டு நடையாடுமவர்கள் –
இவனுக்கு ஊன்று கோலானதும் விரோதிகளைச் சேதித்துத் தருவதும் அருளே யாய்த்து
அருள் என்னும் தண்டு -என்றும் -அருள் என்னும் ஒள் வாள் என்றும் -சொல்லுகிறபடியே அவர் தம்முடைய ப்ராஹ்மண்யம் தோற்றத் தண்டு என்கிறார்
இவர் தம்முடைய ஷாத்ரம் தோற்ற ஒள் வாள் என்கிறார்-(ப்ராம்மணரும்  இல்லை க்ஷத்ரியர் இல்லை -குணத்தால் -உப சாந்தர் ஆழ்வார் -பரம சாந்தர் -இவருக்கு கோபம் உண்டே)ஆகையால் இவர்கள் பக்த்யாதிகள் அவஷ்டம்பமாக்குதல் -அசங்க சஸ்த்ரத்தைக்-(அசங்க சஸ்த்ரேன -சம்சாரம் மரம் கோடரி -திடேன  சித்வா பற்று அற்ற தன்மை-திடமான வைராக்யம் கொண்டே -கீதை  )-விரக்தி யாகிற வாள் – கொண்டு திரிதல் செய்யுமவர்கள் அல்லர்
அவனும் தனக்கு- பலாதி குணங்கள் உண்டே யாகிலும் –உபகரண பூர்த்தி -(திவ்யாயுதங்கள் -)உண்டே யாகிலும் இக்கிருபை கொண்டாய்த்து பல ப்ரதன் ஆவது-ஆகையாலே யாய்த்து பாழியான் ஆழியான் அருளே நன்று என்ன வேண்டிற்று –

இன்புற-
அவர்கள் பரிதியைப் பெற அவர்கள் பண்டே அருள் கொண்டாடும் அடியவரே யாகிலும் இவ்வர்த்தம் ஆப்தரான-ஆழ்வார் அருளிச் செய்யப் பெற்றோமே என்று ப்ரீதர் ஆனவர்கள் –ராக சித்தம் விதி சித்தமாகப் பெற்றோமே என்று ப்ரீதர் ஆனவர்கள்

வருளினான் அவ் வருமறையின் பொருள்
மறையின் அந்த அரும் பொருளை அருளினான்
அப்பொருளை-
கருணை சாதனம் -கைங்கர்யம் புருஷார்த்தம் என்கிற அப்பொருளை-வழுவிலா வடிமை செய்ய வேண்டும் -எனபது -அடியை யடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்பதே இவற்றை உபதேசிக்ககை
பொருளை அருளினான்
தாம் வாக்ய உச்சாரணம் பண்ண மாட்டாமையாலே பொருளை அருளினார் (மூன்று எழுத்து -ஓம் நாலாயிரத்திலும் இல்லை உபதேச ரத்ன மாலையில் மட்டும் உண்டு -நாலாயிரம் அனைவருக்கும் -இது பரம பிரபன்னர்களுக்கு மட்டும் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று இருப்பவர்களுக்கு மட்டுமே )
அ -அரும் பொருளை -அருளினான் –
ப்ரவ்ருத்தி சீலர்க்கு பட அரிதான வர்த்தத்தை நிர்த்தோஷரான சத்துக்களுக்கு அருளினார்-(உய்யக் கொண்டார் -ராமா நுஜர் காலத்தில் இருந்தவர் -சாதன நிஷ்டர் -வாதம் பண்ணி -சரணம் பண்ண விருப்பம் இல்லை -வித்வான் ஆனதால் இசைந்தீர் -பகவத் கிருபை இல்லாமல் இழந்தீர் -அவர் போல்வார் பிரபத்தி சீலர் )-அது தான் ஸ்வார்த்தத்தை போதிப்பியா நிற்க இவர் வெளியிட வேண்டிற்று என் என்ன-மறை-ரஜஸ் தமஸ் பிரசுரர்க்கு ஸ்வார்த்தத்தை மறைத்து சத்வ பிரசுரர்க்கு போதிக்கும் படி-மறையாய நால் வேதம் ஆகையாலே அவ்வர்த்தத்தை வெளியிட்டார் -(விருப்பம் உள்ளாருக்கு வேதம் சொல்லும் -ஆழ்வார் சொல்லி விருப்பம் உண்டாக்குவார் )

இவர் இவ்வர்த்தத்தை வெளியிடுகிற விடத்தில் என்ன சப்த முகத்தால் வெளியிட்டது என்ன-அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-ஆயிரம் -இனிய -தமிழ் -மூன்று பெருமைகள் –அந்த சஹச்ர சாகா பிரதி பாதிதமான அர்த்தத்தை சஹச்ர காதா முகத்தாலே வெளியிட்டார்-
தமிழ் பாடினான்
துர்ப்போதா வைதிகாச்சப்தா -என்று துர்ப்போதமான வேத சப்தம் போல் அன்றிக்கே திராவிட பாஷையாலே வெளியிட்டார்
ஆயிரம் இன் தமிழ் பாடினான்
பிரணவம் போல் அதி சங்க்ரஹம் ஆதல் மஹா பாரதம் போலே அதி விச்த்ருதமாதல் அன்றிக்கே ஆயிரம் இன் தமிழாகப் பாடினார்
இன் தமிழ் பாடினான்
அவன் சொன்னதும் அறியலாய் இருக்கச் செய்தே அது வரை முறுகலாய் இருக்கும்
இது செவிக்கு இனிய செஞ்சொல்லாய் இருக்கும்-கீதா -வேதம் -மகா பாரதம் -பிரணவம் இவற்றில் வேறுபாடு –
பாடினான்
வேட்கையால் சொன்ன பாடல் -என்கிறபடியே தம்முடைய அனுபவ ஆனந்த சாகரத்துக்கு பரிவாஹ சுப வசனங்களைப் பண்ணினார்-(கிருஷ்ண அனுபவ ப்ரீதி சாகரம் –பராங்குச பயோதி -கடல் -பூமா ) ஆனால் ஒரு புருஷ புத்தி மூலமாக வந்த இது பிரமாணமாம் படி என் என்ன -தாம் சொன்னாராகில் அன்றோ அது சொல்ல வேண்டுவது-அவனுடைய அருள் மூலமாகச் சொன்னவர் ஆகையாலே அது சொல்லப் போகாது-மோஹ சாஸ்த்ராணிகாரய -என்கிற அந்த நிக்ரஹம் அடியாக வந்தது அன்றே இது-தெரியச் சொன்ன ஆயிரம் ஆகையாலே அருள் அடியாக வந்தாயிற்று
ஆம் முதல்வன் இவன் என்று தற்றேற்றி என் நா முதல் வந்து புகுந்து நல்லின்கவி தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன-என் வாய் முதல் அப்பனை -என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இ றே-
தன் புகழ் ஏத்த அருளினான் என்று ஆழ்வார் அருள் கொண்டு அவருடைய புகழை ஏத்தினாப் போலே யாயிற்று-ஆழ்வாரும் அவனுடைய அருள் கொண்டு ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்தைப் பாடிற்று -இவர் தாம் நெடியான் அருள் சூடும் படியான் ஆகையாலே அருள் ஒழிய இவர்க்குக் கைம்முதல் இல்லையே-

அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
அவருடைய அருள் அன்றோ இந்த லோகத்தில் அதிசயம் ஆயிற்று
பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
பாட்டும் அன்று
பாடினவரும் அன்று
பாட்டுக்கு அடியான அருளும் அன்று
இவர் அருள் யாய்த்து-இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
வரை முறுவலான ஸ்ரீ கீதை சொன்னவனுடைய அருள் அன்று
அவன் நெறி எல்லாம் எடுத்துப் பாடின இடத்திலும் அகப்பட்டாரும் அகப்படாதாருமாயிற்று
இவர் அருள் அப்படி இன்றியிலே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றப் பண்ணிற்று ஆயிற்று
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்தொரு மூர்த்தி
நெறி யுள்ளி யுரைத்த அம் பகவன் என்று
தான் தோன்றியான தன்னுடைய ஜ்ஞானம் கொண்டு சொன்னது அன்றிக்கே  அவனுடைய அருள் கொண்டு பாடின-தன்னேற்றமும் உண்டே இவர் அருளுக்கு-(தான் தோன்றி பாட்டு கீதை அருள் தூண்ட பாடியது அன்றோ திருவாய்மொழி )
இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல் -என்று அந்த லோகத்தில் இவருடைய பாட்டு மிக்கப் போலே-இந்த லோகத்தில் இவருடைய அருள் மிக்கது
இங்கு அருள் மிக்கு அங்கு போகம் மிகும் படி இ றே லோக ஸ்பாவங்கள் இருப்பது –

இவ்வுலகினில் மிக்கதே
அவனுடைய அருள் ஆழ்வார் அளவில் சுவரி விட்டது
இவருடைய அருள் சாம்ராஜ்யம் பண்ணா நின்றது
அவனுடைய அருளைக் கொண்டாடுமவர்கள் அடியவர்களாய்
இவர் அருள் லோகம் அடங்கக் கொண்டாடும் படி தேஜிஷ்டமாயிற்று
ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
ஸ்ரீ கீதை சொன்ன கிருஷ்ணன் என்றால் கை எடுப்பார் ( கூப்புவார் -)-இல்லை
திருவாய்மொழி பாடின ஆழ்வார் உடைய பேரைக் கேட்க இருந்ததே குடியாகக் கை எடா நின்றது-திருவாய் மொழி கேட்டால் ஈஸ்வர அபிமானிகளைக் கை எடார்கள் இ றே

கண்டீர்
இவ்வம்சம் நான் சொல்ல வேண்டி இருந்ததோ-ப்ரத்யஷம் அன்றோ
கண்டீர்
அவனுடைய அருள் சாஸ்திர கம்யம் -இது ப்ரத்யஷ சித்தம்
இவ்வுலகினில் –கண்டீர்
இப்போது இவ்வுலகத்தில் கண்டி கோளே-அந்த லோகத்தில் போனால் அங்குக் காண்கிறிகோள் (அவன் அருளை காண அங்கே போக வேண்டுமே -இங்கே கேடக்த் தானே முடியும் -என்றவாறு -இவர் அருள் இங்கேயே காணலாமே -மதுர கவி ஆழ்வார் சாக்ஷி அன்றோ -அங்கு ஆழ்வார் -ஓர் அரசு மட்டுமே -அதனால் தான் நம்புவார் பதி -வைகுந்தம் என்றார் )
இவ்வுலகினில் மிக்கது
இந்த லோகத்தையும் ஆழ்வாருடைய அருளையும் சீர் தூக்கிப் பார்த்தால் அதிலும் விஞ்சி இருப்பது இவர் அருள் அன்றோ-
கடல் மண் எல்லாம் விலையோ வென மிளிரும் படி இ றே இவருடைய கண்ணுடைமை இருப்பது-(அருள் பாலிப்பது திருக் கண்கள் தானே )

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு –7 – கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்- ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 28, 2016

ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –

என்னுடைய சகல பிரதிபந்தகங்களையும் போக்கின ஆழ்வாருடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தை ஸூ பிரசித்தம் ஆக்குவேன் என்கிறார் –

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–

கண்டு கொண்டு என்னை
இருந்தான் கண்டு கொண்டு -என்று எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டு இருந்தாப் போலே ஆழ்வாருக்கு அலாப்ய லாபம் ஆகிறபடி-காட்சி இத்தலைக்காக வன்றிக்கே தம் பேறாக இருக்கிறபடி-(பெருமாள் -அந்யோன்யம் அபிவிஷணை  மஹாராஜர் போலே-மூவர் அனுபவம் – )

காரி மாறப் பிரான்
பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்னுமா போலே இவரும் காரி மாறப் பிரான் என்கிறார் -பண்டை வல்வினை பாற்றி யருளினான்
ப்ரவாஹ அநாதி யாகையாலே அடி காண வல்லார் இல்லை
அந்தவத்தாகையாலே அடி யுண்டு என்று அனுபவிக்கும் இத்தனை இ றே
பிராயச்சித்த விநாச்யம் அன்று கர்மம் -அனுபவ விநாச்யம் என்கிற பிரமாணத்துக்கும் அவ்வருகாய்க் காணும் இருப்பது
கரிய கோலத் திருவுருக் காண்பன் என்னும் அத்தையும் தவிர்த்தாப் போலே காணும் ஆழ்வார்
உத்தேச்ய விரோதி பாபமாம் இத்தனை இ றே
மதி நலம் அருளினான் என்று தலை சீய்த்தார் ஆழ்வார்
இவரும் நமக்கு உபகரித்த இடத்தை அருளினான் என்கிறார் –

எண் திசையும் அறிய இயம்புகேன்-
விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –
இவ்வுபகாரம் நிரவதிகம் ஆனாப் போலே திக்குகளும் நிரவதிகமாகப் பெற்றிலோம்
இது என்னளவிலே பர்யவசிப்பதே என்கிறார் –

ஒண் தமிழ்
ஒள்ளிய தமிழ்
பெரிய ஆழத்தில் உள்ளுக் கிடந்த பதார்த்தங்கள் எல்லாம் தரையிலே காணுமா போலே அதிக்ருதாதிகாரமாய் அவகாஹிக்க ஒண்ணாதே
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை சர்வாதிகாரம் ஆக்குகையாலே ஒண் தமிழ் என்கிறது –

சடகோபன் அருளையே-
மயர்வற மதிநலம் அருளினதுக்கும் அகப்படாத என்னையும் ஆழ்வார் அங்கீ கரித்த அருளைக் கிடீர் சொல்லுகிறது –

—————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வார் தம் பக்கல் நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த விஷயீ காரத்தைக் கண்டு இத்தை நாட்டார் அறியாதே-அனர்த்தப் படுகிற படியைப் பார்த்து இத்தை எல்லாரும் அறியும் படி கூப்பிடுவேன் என்கிறார் –

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
கண்டு கொண்டு
கிட்டினவாறே தம்மைப் பெறுகைக்கு எதிர் சூழல் புக்குத் திரிந்தார் இவர் என்று தோற்றி இருந்து
என்னை –
இந்த நிர்ஹேதுக விஷயீ காரத்தை பிரதிபத்தி பண்ணவும் மாட்டாதே இருக்கிற வென்னை
காரி மாறப் பிரான்
உபகார ச்ம்ருதியாலே பிரான் என்கிறார்
காரி மாறன் என்கிற விசேஷணத்தாலே ஆழ்வாருக்கு உபகாரகனான ஈஸ்வரன் அளவிலே போகாமைக்காகச் சொல்லுகிறார் –

பண்டை வல்வினை –
அநாதி காலம் சஞ்சிதமான இதர விஷய ப்ராவண்ய ஹேதுவான பாபம் –
ஸூ ர்ப்பணகியைப் போலே வழி எல்லா வழியே பற்றுகைக்கு ஈடான ருசி -பிரதம அவதியான பகவத் விஷயத் தளவிலே
பிறந்த புருஷார்த்த புத்தி -இவை அடங்கலும்
வல்வினை –
பிராயச்சித்த சாத்யமும் அன்றிக்கே அனுபவ விநாச்யமும் அன்றிக்கே இருக்கை

பாற்றி யருளினான்
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடியும் அன்றிக்கே உருமாய்ந்து போம்படி பண்ணினான் –

எண் திசையும் அறிய இயம்புகேன்
விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு எல்லாரும் அறியும்படி சொல்லுகிறேன்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசனையால் சொல்லுகிறார் –

ஒண் தமிழ் சடகோபன் அருளையே-
மயர்வற மதி நலம் அருளின அருள் போல் அன்று இவருடைய அருள்
அவ்வருளுக்கும் கூடத் தப்பின எனக்கு அருளின வருள் இ றே
ஒண் தமிழ் -ஒள்ளிய தமிழ் –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

கீழ் மூன்றாம் பாட்டிலே தம்முடைய புன்மையைக் கண்டு பெரியவர்களும் தம்மை இகழ்ந்த  படி சொல்லி
இவனுக்கு நம்மை ஒழிய இனிக் கதி இல்லை என்று ஆழ்வார் மாதா பிதாவே நின்று தம்மளவிலே அபிமானித்த படியையும் சொல்லி
அநந்தரம் பாட்டிலே அந்தப் புன்மை தான் ஏது -ஆழ்வார் தம்மை நீர் கிட்டின வழி என் என்று கேட்க -அவற்றுக்கு உத்தரம் சொல்லி
கீழில் பாட்டிலே இப்போது கைக்கொண்ட ஆழ்வார் உம்முடைய குற்றம் கண்டு இன்னும் இகழில் செய்வது என் என்ன -இன்று தொடங்கி
கால தத்வம் உள்ளதனையும் என்னை இகழாதே தம்முடைய குண ஸ்துதியே கால யாத்ரையாம் படி பண்ணினார்
ஆனபின்பு என் குற்றம் மேலிடுமோ -மேலிட்டாலும் பரிபூர்ணர் ஆனவர் என்னை நெகிழப் புகுகிறாரோ என்றார் –
இதில் ஆழ்வார் என்னை அங்கீ கரிக்கிற போதே என்னுடைய துர்க்கதி கண்டு இவன் பக்கல் இவை கிட்டக் கடவது அல்ல
என்று பழையதாய் வலியதான பாபங்களைப் பாறிப் போம்படி பண்ணி யன்றோ கிருபை பண்ணிற்று –
இனி இவற்றுக்கு உயிர் உண்டோ என்று கீழ் உக்த்தத்தைப் பரிஹரித்துக் கொண்டு தன் புகழ் ஏத்த அருளினான் என்று
ஆழ்வாருடைய கிருபை கீழே ப்ரஸ்துதம் ஆகையாலே அவருடைய க்ருபா பிரபாவத்தை திகந்தரங்கள் தோறும் வெளியிடக் கடவேன் என்கிறார் –

குரும் பிரகாசயேந்நித்யம்-என்கிற வித்தய நுஷ்டானம் பண்ணக் கடவேன் என்கிறார்
இனி ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலே-1- பரத்வ புத்தி -2-தேவ தாந்தரங்களிலே பரத்வ புத்தி நிவ்ருத்தி -3-அப்பர வஸ்துவின் பக்கல் ததீய சேஷத்வ பர்யந்தை யான சேஷத்வ புத்தி –4-விஷயாந்தர விரக்தி-5- பகவத் விஷயத்தை விச்லேஷிக்கில் தரைப் படும்படியான ப்ராவண்யாதிசயம் -6-அவன் கை விடில் தமக்குப் புறம்பு போக்கில்லை என்னும் படியான விஸ்வாச அதிசயம் -7-சம்சார பீதி- 8-புருஷார்த்த லாபத்தில் அதிசயித்தவரை-அர்ச்சாவதாரங்களில் உண்டான ப்ராவண்யம் -என்றாப் போலே சொல்லுகிற ஆத்ம குணங்களில் காட்டில்
வீடு மின் முற்றவும் என்று தொடங்கி கண்ணன் கழலிணை ஈறாக பல இடங்களிலும்
சம்சாரி சேதனர் உடைய துர்க்கதி கண்டு பொறுக்க மாட்டாமே உபதேசிக்கைக்கு அடி கிருபை யாகையாலே-அந்த க்ருபா பிரபாவத்தை அனுசந்தித்து அத்தை எல்லாரும் அறியும் படி வெளியிடக் கடவேன் என்கிறார்
ஈஸ்வரன் நிரதிசய க்ருபாவானாய் இருந்தானே யாகிலும் ஸ்வாதந்த்ர்யா விசிஷ்டன் ஆகையாலே தோஷ தர்சனத்தாலே-உபேஷிப்பதும் ஒரு புடை யுண்டு- ஆழ்வார் அப்படி அன்றிக்கே பற்றினாரை இகழாதவர் ஆயிற்று –

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்-எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்று இவர் சொல்லக் கேட்டவர்கள் நீர் ஏத்துகிற படி தான் என்ன -ஆழ்வாருடைய கிருபை யன்றோ -என்கிறார் –
ஆழ்வாருக்கு ஞானம் பக்தி விரக்தி கிருபை என்று சில குணங்கள் உண்டு
அதில் ஞானம் -சித் அசித் ஈஸ்வர ரூபமான தத்வ த்ரய விஷயமாய் இருக்கும்
பக்தி -ஈஸ்வர ஏக விஷயமாய் இருக்கும்
விரக்தி தத்வத்ய விஷயமாய் இருக்கும்
ஞானம் த்யாஜ்ய உபாதேய விவேக விஷயமாய் இருக்கும்
பக்தி உபாதேயைக விஷயம்
விரக்தி த்யாஜ்யைக விஷயம்
கிருபை துர்க்கதி விஷயமாய் இருக்கும்
அதில்- ஞானம் -தத்வ ஞானம் -சாஷாத்கார ஞானம் –(தத்வ ஞானம் என்றது – சாஸ்திர ஜன்ய ஞானம் /பிரத்யக்ஷ சாமான்யகார சாஷாத்காரம் -முக்த தசையில் சாஷாத்காரம் –விஷய பேதங்கள் -உண்டே -அத்தை மேலே -)அதில் பகவத் ஸ்வரூப விஷயம் -குண விஷயம் -விபூத் விஷயம் -விக்ரஹ விஷயம்-என்றாப் போலே பல கப்புகளை உடைத்தாய் இருக்கும்
பக்தியும் -காதல் கடல் புரைய விளைவித்த -(பேரமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்க காதல் -5-3-/ -5-4-/-5-5-)-காதல் கடலின் மிகப் பெரிதால் -மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்–அதனில் பெரிய என்னவா -என்னும்படி அநேக பர்வையாய் இருக்கும்
விரக்தியும் -பிரக்ருத ப்ராக்ருத விரக்தி -தேவதாந்திர விரக்தி -தேவதாந்தர பரர் பக்கல் விரக்தி -சப்தாதி விஷய விரக்தி -ஆத்மானுபவ விரக்தி–பகவத் அனுபவத்தில் எனக்கு என்னுமத்தில் விரக்தி இப்படி பஹூ விதையாய் இருக்கும் –
இவை எல்லாவற்றிலும் விஞ்சியாய்த்து க்ருபா குணம் இருப்பது -ஈஸ்வரனுடைய ஜ்ஞான சக்த்யாதிகளும் சம்சாரிகளுடைய-ரஷண சேஷம் ஆகாமல் பாதன சேஷமாக அவற்றை ரஷணத்திலே புரிப்பித்துத் தருவது கிருபை யாய்த்து –
அந்த ஈஸ்வர கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபையினுடைய தன்னேற்றத்தை இப்பாட்டாலே அருளிச் செய்கிறார் –

கண்டு கொண்டு என்னை
தம்முடைய துர்க்கதியைச் சொல்லுகிறார்
என்னைக் கண்டு
சத்துக்களாலே அசமீஷ்யனான என்னைக் கூசாதே கடாஷித்து
என்னைக் கண்டு
இவருடைய யம் பச்யேத்-என்கிற பிரதம கடாஷம் இருக்கிற படி
கொண்டு
தோஷம் பட்டவாறே காற்கடைக் கொள்ளாதே கைக்கொண்டார்
என்னைக்கண்டு -என்னைக் கொண்டு-
பார்க்க ஒண்ணாத என்னைப் பார்த்தார்
எல்லாரும் கை விட்ட வென்னைக் கைக்கொண்டார்
இவர் ச்வீகரித்தால் அவனாலும் விடப் போகாதே
காரி மாறப் பிரான்-
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழு பிறப்பும் மேவும் தன்மையமாக்கின ஆழ்வார் உடைய பிரான் அன்று-அபிஜாதரான ஆழ்வார்
காரி மாறப் பிரான் –
அக்குடியிலே பிறந்து எனக்கு உபகரித்தவர்
காரி மாறப் பிரான்
தான் பிறந்து என் பிறவியை அறுத்தவர்-(ஜனக தசரத வாசு தேவ குலங்களுக்கு –மூத்த பெண் -புகழ் ஆக்கிய சீதா / நடுவில் பிள்ளை -பரதன் ஆக்கமும் ஆக்கி பரதந்த்ரன் முறை அறிவித்து / கடைக்குட்டி கண்ணன் அஞ்சிறை அறுத்தார் -போலே இல்லாமல் நமக்கு -பிரபன்ன ஜன கூடஸ்தர் புகழை ஆக்கி -பாரதந்தர்யம் அறுதி ஈட்டி -அஞ்சிறை அறுத்தார் -சம்சாரம் இங்கு அங்கு கால் விலங்கு தாய் தந்தைக்கு மட்டும் _

பண்டை வல்வினை பாற்றி யருளினான்
ஸ்வரூப அனுபந்தியோ என்னும் படி இவ்வாத்மாவோடே பழகிப் போந்த பாபம்
அநாதி சித்தமுமாய் அனுபவ விநாச்யமும் இல்லாத பாபம்
வல்வினை
சர்வ பூத ஸூ ஹ்ருத்தான ஈஸ்வரன் சௌஹார்த்தைப் பொகட்டு -ஷிபாமி என்னும் படியான பாபம்
வல்வினை
ஆழ்வார் ஒரு கடாஷம் நேர வேண்டும்படியான பாபம்
பாற்றி
அத்தைப் பாறப் பண்ணி -ஈஸ்வரனைப் போலே மோஷயிஷ்யாமி பண்ணி விடுகை அன்றிக்கே பாறு பாறாம் படி பண்ணினார்
எந்தத் தூற்றிலே புக்கது என்று தேடும்படி பாற்றினார்
என்னைக் கொண்டு பண்டை வல் வினை பாற்றி அருளினான்
ஈஸ்வரனைப் போலே மாமேகம் சரணம் வ்ரஜ மோஷயிஷ்யாமி என்கை அன்றிக்கே தாமே என்னை சுவீகரித்து என் பாப பந்தத்தையும் பாற்றி அருளினார்
அருளினான்
தம்முடைய புகழை ஏத்தும் படி அருளினார்-விரோதி நிவ்ருத்தியையும் பண்ணி அபிமத பிரதானமும் பண்ணினார்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
அநாதி சித்தமான பாபத்தைப் போக்கி தம்முடைய குண ஸ்துதியே எனக்கு யாத்ரையாம் படி பண்ணினார் –

எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே-
ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன்
எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம்
மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார்
ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார்
அறிய இயம்புகேன்
நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்
ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும்
தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது
ஒண் தமிழ் சடகோபன்
என்னளவில் பண்ணும் உபகாரத்தையோ நான் இயம்புவது
லோகத்தாருக்கு அவர் பண்ணின உபகாரத்தையும் சொல்லி யன்றோ
கருணையாலே என்னைத் திருத்தின படியையும் கவி பாடி லோகத்தைத் திருத்தின படியையும் இயம்புகேன்
சடகோபன் அருளையே
தெரியச் சொன்ன வாயிரம் -என்கிறபடியே திருவாய் மொழியைப் பாடி சம்சாரிகளுடைய சாட்யத்தைப் போக்கினவருடைய கிருபையை –
எண் திசையும் அறிய இயம்புகேன்
தேவாஸ் ஸ்வஸ்தா நமாயந்தி தைத்யாஸ் சர்வே ஹதா கதா -ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பாகவதா ஜகத் -என்று
ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் தரை விக்கிரம பிரசம்சையை சாற்றிக் கொண்டு திரிந்தால் போலே
அங்கு ஈஸ்வரனுடைய சக்தி பிரபாவம்
இங்கு ஆழ்வாருடைய கிருபா பிரபாவம்
அங்கு பிரயோஜனாந்த பரர் வாழ்ந்த படி -இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்த படி
அங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்
இனி பதக்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு அத்தனை –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு –6-இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 27, 2016

ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –

நீர் க்ருதக்ருத்யரான படி எங்கனே என்னில்-
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் என்கிறபடியே கால தத்வம் உள்ளதனையும்-ஆழ்வார் தம்மையே ஏத்தும் படி பண்ணினார் என்கிறார் –

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் -காண்மினே-6-

 

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்-நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
இன்று தொட்டும்
பகவத் விஷயத்தில் காட்டில் தத் சம்பந்தியான ஆழ்வார் உத்தேச்யர் என்று ருசி பிறந்த இன்று தொடங்கி –
எழுமையும் –
கால விச்சேதம் இன்றிக்கே எனக்கு உபகாரகரான ஆழ்வார் –
போன காலமும் எனக்கு ருச்யபாவத்தாலே இழந்தேன் இத்தனை

நின்று
ப்ராப்யத்தில் பிரதம அவதியாகில் இ றே கமன பிரசங்கம் உள்ளது
எல்லை நிலத்தில் புக்கார் நிலை நிற்கும் அத்தனை இ றே
மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்று ஆழ்வாருக்கு வ்யவர்த்ய விஷயம் மனுஷ்யர் இ றே
இவர்க்கு வ்யாவர்த்யம் எம்பெருமான் ஆனபடி –

குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
பர்வதங்கள் போலே இருந்துள்ள மாடங்களை யுடைய திருக் குருகூரில் நிரபேஷரான ஆழ்வார் –
ஆழ்வார் பூர்த்தி எல்லை காண ஒண்ணாதாப் போலே மாடங்களின் உயர்த்தி எல்லை காண ஒண்ணாத படி –

என்றும் என்னை இகழ்விலன் -காண்மினே
தாம் ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு ஹேது சொல்லுகிறார்
ஆழ்வார் சந்நிதி போலே காணும் இவரைப் பேசுவிக்கிறது
உங்களைப் போலே பகவத் விஷயத்தில் அன்றி நான் ஆழ்வார் கவியானபடி காண மாட்டி கோளோ-

——————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வார் இப்போது இங்கனே விஷயீ கரித்தார் ஆகிலும் நீர் தாம் அநாதி காலம் புறம்பே அந்ய பரராய்ப் போந்தேன் என்றீர்
இன்னமும் அப்படிப் புறம்பே போகிலோ வென்ன-அங்கனே போகலாம் படியோ ஆழ்வார் அருளிச் செயல் இருப்பது என்கிறார் –

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
மேல் ஒரு நாளிலே பலிப்பதாக விட்டு வைக்கிறாரோ
விஷயீ கரித்த இன்று தொடங்கி
ஏழு ஜன்மம் என்கிறது உப லஷணம்-மேல் உள்ள காலம் எல்லாம் என்றபடி
பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்று பகவத் விஷயத்திலே ஆழ்வார் சொல்லுமத்தை உபகார ச்ம்ருதியாலே –எம்பிரான்--என்று அவர் விஷயத்திலே சொல்லுகிறார் -(பிரான் அவர் பொதுவான உபகாரத்தை -இவர் எம்பிரான் தமக்கு செய்ததை )

நின்று தன் புகழ் ஏத்த அருளினான்-
உபகார ச்ம்ருதியாலே பகவல் லாபத்து அளவும் இவரைப் பற்றி நின்று
பின்னை அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றியே
தம்முடைய அனுபவத்துக்கு உள்ளே பகவத் அனுபவமாம் படி ஆழ்வார் எனக்கு அருளிற்று
தன் புகழ் ஏத்த
ஆழ்வார் தமக்கு உபகரித்த பகவத் விஷயத்தை ஒழியப் புறம்பே போனாராகில் இ றே
இவர் தம்மை ஏத்தினார் அன்றிக்கே ஒழிவது –

குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
ஆழ்வார் தம்மையும் ஏத்தி இன்னமும் ஒரு விஷயத்தை ஏத்த வேண்டும்படியோ ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது –
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி-
குன்றம் போல் மணி மாட நீடு திருக் குருகூர் -என்று ஆழ்வார் அருளிச் செய்யுமது இவர் நெஞ்சில் வாசிதமாய் இருப்பது –அது தன்னையே சொல்லும் அத்தனை இ றே

என்றும் என்னை இகழ்விலன் -காண்மினே
யாவதாத்மபாவி புறம்பு ஒன்றில் போகாதபடி யன்றோ என்னை விஷயீ கரித்தது
என் தண்மை பாராதே என்னை விஷயீ கரித்தவர் நான் புறம்பே போவேன் என்றால் போகலாம் படி என் வசம் என்னைக் காட்டித் தருவரோ –

——————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

கீழ் இரண்டு பாட்டாலே தம்முடைய தோஷ அதிசயத்தையும் -அத்தோஷமே பற்றாசாக தம்மை ஆழ்வார் அங்கீ கரித்த படியையும் –
-ஆழ்வார் அங்கீ கரித்த அநந்தரம் அத் தோஷங்களைத் தாம் வென்ற படியையும் -அவை போகையாலே-ஆழ்வார் திருவடிகளில் தமக்கு உண்டான ஆதரத்தையும் சொன்னார் –
இத்தைக் கேட்டவர்கள் இப்போது உம்முடைய குற்றம் கழிந்ததே யாகிலும் உமக்கு பிரகிருதி சம்பந்தத்தாலே பின்னையும் மறுவல் இடாதோ-(புகை நெருப்பு -பிரியா பாபங்கள்  / கண்ணாடி அழுக்கு -துடைக்க துடைக்க திரும்பும் /பனிக் குடம்  கர்ப்பம் -தானே உடைந்து வராதே -மூன்றும் பாபங்களை போக்க -)
-அதுக்குப் பரிஹாரமாக நீர் கண்டு வைத்தது என்ன -கீழ் உள்ள தோஷமும் நான் சாதனா அனுஷ்டானம் பண்ணிப் போக்கினேனோ-
ஆழ்வார் அங்கீ காரத்தால் போய்த்தாகில் அவ்வங்கீ காரம் மாறினால் அன்றோ அது மேலிடுவது
ஆழ்வார் என் தோஷம் கண்டு ஒரு காலும் இகழார்-இது காண மாட்டி கோளோ வென்று இப்பாட்டாலே உத்தரம் சொல்லுகிறார் –
கீழ்ப் பாட்டில் ஆழ்வார் திருவடிகளில் உண்டான தம்முடைய-1- ஜ்ஞான-2- பக்திகளைச் சொன்னார்-(சதிர்த்தேன் என்பதால் ஞான பக்தியை சொல்லி-ஆழ்வார் திருவடிகளில் கைங்கர்யமே பக்தி  )
இதில் அவர் பக்கல் தமக்குப் பிறந்த3- வ்யவசாயம் சொல்லுகிறார்-( உறுதி முக்கியம் -நின்று -என்பதால் உறுதி -)
தாம் அங்கீ கரித்த இன்று முதல் யாவதாத்மா பாவியாகத் தம்முடைய குண கீர்த்தனம் பண்ணிப் போரும்படி என் பக்கலிலே
கிருபையைப் பண்ணின ஆழ்வார் குற்றம் கண்டு கைவிடப் புகுகிறாரோ என்று இகழாமைக்கு அடி சொல்லுகிறார் இப்பாட்டின் முற்கூற்றாலே-

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்-
என் தோஷமே பச்சையாகக் கைக்கொண்ட இன்று தொட்டும்
மேல் உள்ள காலங்களிலும்
இப்போதை அங்கீகாரம் யாதொருபடி இருக்கிறது -இதன் கீழ் யாய்த்து மேல் உள்ள காலம் அடைய அவர் என்னை விடாத படி என்று தாத்பர்யம்-(தோஷமே பச்சையாக கொண்ட இன்று தொட்டும் மேலும் தோஷமே பச்சையாக கொள்ளுவார் அன்றோ )
இவருடைய நியமம் இருக்கிற படி ஒரு தேச விசேஷத்திலே போனாலும் ஆழ்வார் கீழே ஒதுங்குமவர் யாய்த்து இவர் -(பல்லவம் –புஷ்பித்தம் -பலிதம் மூன்று நிலைகள்)
மாதுல குலத்துக்குப் போன ஸ்ரீ பரதாழ்வானைப் பின் சென்ற ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானைப் போலே இவரும் நித்ய சத்ருக்னர் இ றே
திருக் குருகூர் நம்பிக்கு அன்பன் ஆகையாலே ப்ரீதி புரச்க்ருதத்வம் உண்டாய்த்து

எம்பிரான்
எனக்கு ஸ்வாமி யானவர் -ஸ்வாமி யானவன் ஸ்வ த்தைக் குற்றம் கண்டு இகழுமோ
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை -என்று ஆழ்வார் பகவத் விஷயத்தைச் சொல்லக் கேட்டுப் போந்த-வாசனையாலே தாமும் எம்பிரான் என்கிறார்
இன்று தொட்டும் எழுமையும் எனக்கு எம்பிரான் என்று கீழோடு கூட்டலாம்
ஒருகால் பகவத் ஸ்வம்மாய் ஒருகால் ஆழ்வார்க்கு ஸ்வம்மாய் இராதே சர்வ காலமும் ஆழ்வாருக்கு ஸ்வம் என்று தம்மை நினைத்து இருக்கிறார் யாய்த்து
எம்பிரான் –
எனக்கு உபகாரகர் ஆனார் –
என்னுடைய குன்றனைய குற்றத்தையே குணமாகக் கொண்டு நான் அதபதியாமல் நோக்கினவர்
என்னுடைய அஹங்கார அர்த்த காமங்களில் நசை அறுத்து ஆத்ம ஜ்ஞானாதிகளை உபகரித்த அளவன்றிக்கே
பகவத் விஷயத்தில் காட்டிக் கொடாதே தாமே கைக்கொண்ட மஹா உபகாரகர்

மேல் அந்த உபகாரம் தன்னை உபபாதிக்கிறார்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்-
தம்முடைய சத்குண சம்ஸ்துதியைப் பண்ணும் படி அருளைப் பண்ணினார்
தன் புகழ் ஏத்த அருளினான்
தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்-என்று தொடங்கி -முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கு அன்பையே
என்று இறுதியாக தம்முடைய புகழை ஏத்தும் படி அருளினார்-
ஏத்த
நற்பூவைப் பூவீன்ற வண்ணன் புகழ் இயற்றுவாய் -என்று தொடங்கி -மொய் கழலே ஏத்த முயல் -என்ற ஆழ்வார் தம்மைப் போலே
ஏத்த உத்யோகித்து விட்ட அளவன்றிக்கே பத்தும் பத்தாக ஏத்தும்படி அருளினார்-(வாசிக கைங்கர்யம் முடித்து காயிக கைங்கர்யம் உத்தியோகித்தார் இவர் – முயல்கிறேன் மொய் கழற்கு அன்பை என்பதால் )
தன் புகழ் ஏத்த
ஆழ்வார் பகவத் குணங்களையே புகழும் படித் திருத்தினாரே யாகிலும் இவர் தம்முடைய ப்ரீதியாலே தன் புகழ் ஏத்த அருளினார் என்கிறார் (ஆழ்வார் தம்மைப் பாட சொல்லிக் கொடுக்க மாட்டாரே -ஸஹபூஜ்யா மத் பக்தன் -நின்னொடு ஓக்க வழி பட அருளினாய் -என்பதால் -சாம்யம் -ப்ரீதி அதிசயத்தால் ஆழ்வாரை பாடுகிறார் -)
தன் புகழ் ஏத்த
பகவத் குணங்கள் போலே குற்றம் காண்கையும்-கண்டத்துக்கு தக்க தண்டம் பண்ணுகையுமாயோ ஆழ்வார் குணங்கள் இருப்பது
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் என்கிறபடியே வாத்சல்ய உத்தரமாய் அன்றோ இருப்பது-ஆழ்வாருடைய நிகரில் புகழ் இது இ றே-
தன் புகழ் ஏத்த அருளினான்
இவருடைய புருஷார்த்த சாதனங்கள் இருக்கிறபடி -( கண்ணே உன்னை காண கருதி -சாதனம் சாத்யம் -காண்கையே புருஷார்த்தம் -போலே இங்கும் )
இவ்வாசிக கைங்கர்யத்துக்கு சாதனம் ஆழ்வார் கிருபை என்று அறுதி இடுகிறார்
நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய் ஆ ஆ வென்று எனக்கு அருளி -என்று கடகர் அங்கீ காரத்துக்கும் கருணையே வேணும் என்று-ஆழ்வார் பாடே அறிந்து வைப்பரே
ஏத்தும் இடத்தில் -நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
ஆழ்வாருடைய குணங்களைப் புகழ்கையே  புருஷார்த்தம்
அது சித்திப்பதும் அவருடைய அருளாலே என்று அத்யவசிதனாய் ஏத்தும் படியும் அருளினார் –புருஷார்த்த பூதருமாய் சாதன பூதருமானவர்கள் இ றே அத்யவசாய ப்ரதரும் – (தன் புகழ் ஏத்த அருளினான் -புருஷார்த்தம் -சாதன-நின்று அருளி -உறுதிப்பாடு )
நின்று தன் புகழ் ஏத்த
அவருடைய குண அனுசந்தானத்தாலே மனஸ் சைதில்யம் பிறக்கையாலே -முனே வஷ்யாம்யஹம் புத்வா -என்கிறபடியே –நெஞ்சை ஒருங்கப் பிடித்து நின்ற ஏத்த என்றுமாம் –

குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி-
பர்வத சிகரங்களைக் கொண்டு வந்து வைத்தாப் போலே இருக்கிற மாடங்களை யுடைத்தான திரு நகரியிலே வர்த்திக்கிற பூரணரான ஆழ்வார்
கீழில் பாட்டில் செம்பொன் மாடம் என்று மாடங்களின் உடைய அலங்காரத்தைச் சொன்னார்
இதில் மாடங்கள் வெறும் புறத்திலே ஆகர்ஷகமாய் சர்வதாதுசமலங்க்ருதமாய் சம்சார பீதருக்கு அண்டை கொள்ளலாம் படி இருக்கும் என்கிறார்
நம்பி
யாவதாத்மா பாவி தம்முடைய புகழை ஏத்தா நின்றாலும் வரையிடாத குண பூர்த்தியை யுடையவர் –

என்றும் என்னை இகழ்விலன் –
எனக்கு தோஷம் மேலிட்ட போதோடு குணம் மேலிட்ட போதோடு வாசியற -என்னை அநாதரிக்கிறிலர்-(நம்மாழ்வாரால் அங்கீகாரம் பண்ணப் பட்ட குணம் உண்டே இப்பொழுது )
நம்பி என்னை என்றும் இகழ்விலன்
அவர் என்னை அநாதரிப்பார் ஆகில் அவருடைய பூர்த்தி நிறம் பெறும் படி என்
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன்
அம்மாடங்களுக்கு சலனம் உண்டானாலும் ஆழ்வார் திரு உள்ளம் சலியாது

காண்மினே
இவ்வர்த்தம் உங்களுக்கு ஏறக் காண மாட்டி கோளோ
காண்மினே
பகவத் குணங்களை யாராய்கிற நீங்கள் அத்தை விட்டு ஆழ்வார் குணங்களை நெஞ்சாலே காண மாட்டி கோளோ
காண்மினே
ப்ராப்த முத்தம குணாந பரித்ய ஜந்தி -என்றும் -பாணானார் திண்ணம் -என்றும் சொல்லுகிற பிரமாணங்களிலே-பார்த்துக் கொள்ள மாட்டி கோளோ –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –