ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி -51-75-

மணவாளர் ஆவி நிகர் திரு மாதுக்கு மால் அழகர்
பணவாள் அராவில் கண் பள்ளி கொள்வார் திருப்பாதம் எண்ணக்
குணவாளர் ஆவீர் இன்றே உயிர்காள் உம்மைக் கூற்றுவனார்
நிணவாள் அராவி அறுக்கும் அப்போது நினைப்பு அரிதே –51–

உயிர்காள் -பிராணிகளே
மணவாளர் ஆவி நிகர்-உயிர் போன்ற – திரு மாதுக்கு
மால் அழகர்
பணவாள் அராவில் கண் பள்ளி கொள்வார் திருப்பாதம் எண்ணக் -தியானிக்குமாறு
குணவாளர் ஆவீர் இன்றே
ஏன் என்றால்
உம்மைக் கூற்றுவனார்
நிணவாள் அராவி அறுக்கும் -கொடு வினைக்கு ஏற்ப நிணம் தோய்ந்த -முன்பு அறுக்கப் பட்ட பிராணிகளின் கொழுப்பு தோய்ந்த –
வாள் ஆயுதத்தை கூர் செய்து அது கொண்டு அறுக்கும் படியான
அப்போது நினைப்பு அரிதே –அந்த அந்திம காலத்தில் நினைப்பது இயலாகாதாகும்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் –

————————————————————————–

நினைப்பு அரியாய் எளியாய் உம்பர் யார்க்கும் நின் அன்பருக்கும்
வினைப்பரி ஆனவன் வாய் பிளந்தாய் வியன் சோலை மலை
தனிப் பிரியாய நின்ற தாள் அழகா முன் சனனத் துள்ளும்
உனைப் பரியாமல் அன்றோ பரித்தேன் இவ் உடலத்தையே –52–

நினைப்பு அரியாய் எளியாய் உம்பர் யார்க்கும் நின் அன்பருக்கும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன் –
வினைப்பரி ஆனவன் வாய் பிளந்தாய்
வியன் சோலை மலை தனிப் பிரியாய நின்ற தாள் அழகா முன் சனனத் துள்ளும்
உனைப் பரியாமல் அன்றோ பரித்தேன் இவ் உடலத்தையே –
முன் ஜன்மத்தில் பக்தி செய்யாமல் அன்றோ இப்பிறவி எடுத்தேன்

————————————————————————–

உடலம் புயங்கத்து உரி போல் விடும் அன்று உவணப் புள்ளின்
அடம் அம் புயமிசை நீ வர வேண்டும் ஐ ஆனற்கும்
மடல் அம்புயற்கும் வரம் தரும் சோலை மலைக்கு அரசே
கடல் அம்பு உயர் வரையால் அடைந்தாய் என்னைக் காப்பதற்கே –53–

-ஐ ஆனனற்க்கும் -ஐந்து முகங்கள் யுடைய சிவனுக்கும்
மடல் அம்புயற்கும்-இதழ்கள் நிறைந்த தாமரை மலரில் தோன்றிய பிரமனுக்கும்
வரம் தரும் சோலை மலைக்கு அரசே
கடல் அம்பு உயர் வரையால் அடைந்தாய்
உடலம் புயங்கத்து உரி போல் விடும் அன்று-பாம்பு தனது தோலை விட்டு நீங்குவது போலே உயிர் உடம்பை விட்டு நீங்கும் அந்நாளில்
உவணப் புள்ளின்அடம் அம் புயமிசை நீ என்னைக் காப்பதற்கே –
சாமிடத்து என்னைக் குறிக்கோள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்தினானே -பெரியாழ்வார் –

————————————————————————-

காப்பவன் அந்த மலரோனையும் கறைக் கண்டனையும்
பூப்ப அனந்தரம் போக்க வைப்பான் புனல் பார் விசும்பு
தீ பவனம் தரும் தெய்வ சிகா மணி சேவடியை
நாப் பவம் நந்தப் புகழ் வார்க்கு ஒப்பு இல்லை நவ கண்டத்தே –54-

காப்பவன்-ரஷிக்கும் பெருமாள்
அந்த மலரோனையும் கறைக் கண்டனையும்
பூப்ப அனந்தரம் போக்க வைப்பான் -ஸ்ருஷ்டிக்கவும் சம்ஹரிக்கவும்
பூப்ப மலரோனையும் -போக்கக் கறை கண்டனையும் வைப்பான் -என்றவாறு
இருவரையும் காப்பவன் என்றுமாம்
புனல் பார் விசும்பு தீ பவனம் தரும் தெய்வ சிகா மணி -பஞ்ச பூதங்களையும் சிருஷ்டித்து தேவர்கட்கு சிரோ ரத்னம்
தேவாதிதேவன் -பரம ஸ்வாமி மூலவர்
போன்ற
சேவடியை
நாப் பவம் நந்தப் புகழ் வார்க்கு ஒப்பு இல்லை நவ கண்டத்தே
பவம் நந்த -தங்கட்கு பிறப்பு இல்லையாம் படி
நா புகழ் வார்க்கு
நவ கண்டத்து ஒப்பு இல்லை -கீழ் விதேகம் -மேல் விதேகம் -வட விதேகம் -தென் விதேகம் –
வட விரேபதம்-தென்னிரேபதம் -வட பரதம் -தென் பரதம் -மத்திமம் –
பஞ்சவர்கட்கு தூது நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே நாராயணா என்னா நா என்ன நாவே –

————————————————————————-

கண்டா கனன் கண்ணன் அல்லால் கதி இன்மை கண்டு அடைந்தது
உண்டாக நம்ப ஒட்டாது உங்கள் ஊழ் வினை உண்மை அறிந்து
அண்டா கன வண்ணனே அருளாய் என்று அழகனுக்கே
தொண்டு ஆக நல் நெஞ்சினால் உரைப்பீர் பிறர் தொண்டர்களே –55-

பிறர் தொண்டர்களே —
கண்டா கனன் கண்ணன் அல்லால் கதி இன்மை கண்டு அடைந்தது
உண்டாக -உளதாக இருக்க
நம்ப ஒட்டாது உங்கள் ஊழ் வினை -விதி அத்தை நம்ப ஒட்டாது
இனியாயினும் நீங்கள்
உண்மை அறிந்து
அண்டா கன வண்ணனே -இடைப்பிள்ளையாய் மேக சியாமள வண்ணனை
அருளாய் என்று அழகனுக்கே -தொண்டு ஆக நல் நெஞ்சினால் உரைப்பீர் –
எந்தை வானவர்க்கும் வணங்க அரியான் அன்றிக் காப்பார் இல்லாமை விண் மண் அறியும்
வண்ணம் கரியானவர் வாணன் கண்டாகர்ணன் மார்கண்டேயனே –
கண்ணன்-கிருஷ்ணன் -கரு நிறம் யுடையவன் -கண்டவர் மனத்தை கவர்பவன் -அனைத்தையும் செய்பவன் –

————————————————————————-

தொண்டு படார் திருமால் இருஞ்சோலையில் சோதிக்கு அன்பு
கொண்டு படா மலர் இட்டு இறைஞ்சார் மடக்கோதையரைக்
கண்டு படா முலை தோய் அனுராகம் கருதி இரா
உண்டு படா நிற்கும் போதும் நைவார் எங்கன் உய்வதுவே –56–

சிற்று அறிவாளர்கள் –
தொண்டு படார் திருமால் இருஞ்சோலையில் சோதிக்கு அன்பு கொண்டு
படா மலர் இட்டு இறைஞ்சார் -வாடாத மலர்களை இட்டு அர்ச்சித்து வணங்கார்
மடக்கோதையரைக் கண்டு -மகளிர்களைக் கண்டு -படா முலை தோய் அனுராகம் கருதி-
கச்சு அணிந்த கொங்கைகளில் அணையும் சிற்றின்பம் ஆசையை மனசில் கொண்டு
இரா உண்டு படா நிற்கும் போதும் நைவார் -இரவில் உணவு உண்டு படுத்துக் கொள்ளும் போதும் வருந்துவார்கள்
உலகோர் -லோகாயதிகன் -சார்வாகன்-நிலைமை கண்டு இகழ்ந்து அருளிச் செய்கிறார்
எங்கன் உய்வதுவே —-
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் –தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறு –திருமாலை –

————————————————————————-

உய்வம் தொழும்பு செய்து என்று இருப்போமை உய்யாமல் ஐவர்
பெய்வம் தொழு வினைக்கே என்பரால் பெருந்தேன் சிகரம்
தைவந்து ஒழுகும் மலை அலங்கார சதுமுகத்துத்
தெய்வம் தொழும் தெய்வமே என் கொலோ உன் திரு உளமே –57–

பெருந்தேன் சிகரம் தைவந்து ஒழுகும் மலை -தேன் சிகரத்தைத் தடவிக் கொண்டு பெருகப் பெற்ற
திருமால் இருஞ்சோலை யில் எழுந்து அருளி இருக்கிற
அலங்கார
சதுமுகத்துத் தெய்வம் தொழும் தெய்வமே -பிரமன் வணங்கும் பராத்பரன்
உய்வம் தொழும்பு செய்து என்று இருப்போமை -அடிமை செய்து உஜ்ஜீவிப்பொம் என்று இருக்கும் எங்களை
உய்யாமல் ஐவர் பெய்வம் தொழு வினைக்கே என்பரால் -ஐம் பொறிகள் கறுவி உஜ்ஜீவிக்க விடோம் என்று சொல்ல –
என் கொலோ உன் திரு உளமே -உனது திரு உள்ளக் கருத்து ஏதோ -எதுவும் நீ அன்றி அசையாதே –
வாழ்விப்பான் எண்ணமோ-வல்வினையில் இன்னம் என்னை ஆழ்விப்பான் எண்ணமோ அஃது அறியேன்
தாழ்விலார் பாடல் அழகார் புதுவைப் பட்டர் பிரான் கொண்டாடும் கூடல் அழகா நின் குறிப்பு –

—————————————————————————

திருவிளையாடு திண் தோள் செங்கண் மால் பல தேவருடன்
மருவு இளையான் திருமால் இருஞ்சோலை மலை என ஓர்
உரு விளையாமல் பிறப்பார் பலர் புகழ் ஓதி சிலர்
கரு இளையா நிற்க வித்தாவர் முத்தியில் காமம் அற்றே –58-

திருவிளையாடு திண் தோள் -வீர லஷ்மி எழுந்து அருளி இருந்து குலாவும் வலிய தோள்களை யுடைய
வெற்றித் திரு நீங்காத திருத் தோள்கள் –
பெரிய பிராட்டியார் தழுவி விளையாடப் பெற்ற திண்ணிய தோள்கள் –
திரு விளையாடு திண் தோள் திருமால் இருஞ்சோலை நம்பி -ஆண்டாள்
பெரிய பிராட்டியார்க்கு லீலார்த்தமாக சேண் குன்று சமைத்தால் போலே யாய்த்து திருத் தோள்கள் இருப்பது –
செங்கண் மால்
பல தேவருடன் மருவு இளையான் -நம்பி மூத்த பிரான் உடன் மனம் கலந்து பொருந்திய தம்பியாகிய எம்பெருமான்
பலதேவன் என்னும் தம் நம்பியோட பின் கூடச் செல்வான்
பட்டி மேய்ந்தோர் கார் ஏறு பலதேவர்க்கோர் கீழ்க் கன்றாய் இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே —
திருமால் இருஞ்சோலை மலை என
ஓர் உரு விளையாமல் -ஒரு தரமேனும் சொல்லாமல் –
பிறப்பார் -பிறந்து வருந்துவார் கர்மம் கழியப் பெறாமல் –
பலர் -பலரும் இப்படி இருக்க
புகழ் ஓதி சிலர் கரு இளையா நிற்க வித்தாவர் முத்தியில் காமம் அற்றே -சிலர் காமம் இல்லாமல் திருமலையின் மகிமையைச் சொல்லி
அதனால் கரு இளையா நிற்க -பிறப்புக்கள் சேர மாட்டாதவையாய் வலிகுன்றி நிற்க
முத்தியில் வித்து ஆவார் -வீட்டு உலகத்தில் முளைக்கும் விதை யாவார்கள் –முத்தி பெறத் தக்கவர் –

—————————————————————————-

காமத் தனை பொய் அழுக்காறு கோபம் களவு கொலை
ஆம் அத்தனையும் உடையேனை ஆறும் கொல் ஆன் பொருப்பு ஆம்
தாமத்து அனைவரும் போற்ற நின்றான் பண்டு தாமரையோன்
பூமத்தனைச் செய்த நோய் துடைத்தான் அடிப் போதுகளே –59-

ஆன் பொருப்பு ஆம் தாமத்து -ரிஷப கிரியில்
அனைவரும் போற்ற நின்றான்-அனைவரும் வணங்கிப் போற்றும் படி நின்று அருளும் பரம ஸ்வாமி
பண்டு தாமரையோன் பூமத்தனைச் செய்த நோய் துடைத்தான் அடிப் போதுகளே
முன்பு ஊமத்தம் பூவைச் சூடிய சிவ பிரானது பிரமஹத்தி தோஷத்தை போக்கி அருளிய திருவடிகள்
காமத் தனை -சிற்று இன்பம் ஆசை யுடையவனும்
பொய் அழுக்காறு கோபம் களவு கொலை
ஆம் அத்தனையும் உடையேனை ஆறும் கொல்-பாது காத்து அருளுமோ –
நைச்ய அனுசந்தானம் பண்ணி அருளுகிறார் –

——————————————————————-

போது அகத்தானும் வெண் போதகத்தானும் புராந்தகனும்
தீது அகத்து ஆனது தீர் தரும் காலை திரு அரை சேர்
பீதகத்தாய் அழகா அருளாய் என்பர் பின்னை என்ன
பாதகத்தால் மறந்தோ தனி நாயகம் பாவிப்பரே –60-

போது அகத்தானும் வெண் போதகத்தானும் புராந்தகனும்
பிரமனும் -ஐரா வதம் வெள்ளை யானையை யுடைய இந்திரனும் -திரிபுர அந்தகன் -சிவனும்
தீது அகத்து ஆனது தீர் தரும் காலை -அகத்து ஆனது தீது தீர் தரும் காலை -அரக்கர் அசுரர்
உபத்ரவங்களால் தம் மனத்தில் உண்டான துன்பம் நீங்க வேண்டிய சமயத்தில்
திரு அரை சேர் பீதகத்தாய் அழகா அருளாய் என்பர்
பின்னை
பெருமாளால் துயர் தீர்ந்த பின்பு
என்ன பாதகத்தால் மறந்தோ தனி நாயகம் பாவிப்பரே –செருக்கிப் பேசித் திரிவது ஏனோ -என்ன பேதமை –

——————————————————————–

பாவிக்கு அமல விரிஞ்சற்கு இறையவர் பத்தர் தங்கள்
ஆவிக் கமலத்து வீற்று இருப்பார் அளிப்பாடல் கொண்ட
வாவிக் கமல மண நாறும் சோலை மலையைக் கண்ணால்
சேவிக்க மலம் அறும் மனமே எழு செல்லுதற்கே –61-

மனமே-நெஞ்சை நோக்கி ஹிதம் அருளிச் செய்கிறார்
பாவிக்கு -நைச்ய அனுசந்தானம் இங்கும் -பாதகம் உடைய சிவனுக்கும் என்றுமாம்
அமல விரிஞ்சற்கு இறையவர்
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின் –
நீங்கள் ஈச்வரர்களாக சந்கித்த இவர்களும் நின்ற நிலை கண்டதே -ஒருவன் தலை கெட்டு நின்றான் -ஒருவன் ஓடு கொண்டு பிராயச் சித்தியாய் நின்றான்
ஓட்டை ஓடத்தொடு ஒழுகல் ஓடமாய் உங்கள் குறை தீரப் பற்றுகிற நீங்கள் உங்களிலும் பெரும் குறையாளரையோ பற்றுவது
பாதகியாய் பிஷை புக்குத் திரிந்தான் என்று நீங்களே சொல்லித் வைத்து அவனுக்கு பரத்வம் சொல்லுவதோ
ஒருவனுடைய ஈஸ்வரத்வம் தலையோடு போயிற்று -மற்றவனுடைய ஈஸ்வரத்வம் அவன் கை ஓடே காட்டிக் கொடுக்கிறார் –
பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய எங்கள் அடிகள் -திருமங்கை ஆழ்வார் –
பத்தர் தங்கள் ஆவிக் கமலத்து வீற்று இருப்பார்
அளிப்பாடல் கொண்ட வாவிக் கமல மண நாறும் சோலை மலையைக்
தாமரை போன்ற நீர்ப்பூக்களில் மொய்தற்கு வரும் வண்டுகளின் இசைப் பாட்டைக் கொண்ட தடாகங்களின் நீர் –
அம்மலர்களின் நறு மணம் வீசப் பெற்ற திருமால் இருஞ்சோலையை
கண்ணால் சேவிக்க மலம் அறும்
ஆதலால்
எழு செல்லுதற்கே –அங்கே போவதற்கு சித்தமாவாய்

—————————————————————-

செல்லுக் குவளை குழல் நாட்டம் என்று தெரிவையர் பால்
பல் உக்கு வளை முதுகு ஆம் தனையும் புன் பாட்டு உரைப்பீர்
அல்லுக்கு வளை உழும் பாண்டி நாட்டை அடைந்து நுங்கள்
சொல்லு கு அளை உண்டார்க்கு அலங்காரர்க்கு சூட்டுமினே–62-

குழல் நாட்டம் -மகளிரது கூந்தலும் கண்களும்
செல்லுக் குவளை-முறையே மேகத்தையும் நீலோற்பல மலரையும் போலே
சொல்லுப் போலும் குழல் குவளை போலும் நாட்டம் -முறை நிரல் நிறைப் பொருள்கோள்
என்று தெரிவையர் பால் -என்று அம்மாதர்களின் இடத்தில் –
பல் உக்கு வளை முதுகு ஆம் தனையும் புன் பாட்டு உரைப்பீர் –
பற்கள் விழுந்து -கூன் வளைந்த முதுகை யுடையராம் அளவும் இழிவான பாடல்களை பாடிப் புகழ்ந்து ஏங்கி நிற்பவர்களே
இனியானும் நீங்கள் –
அல்லுக்கு வளை உழும் பாண்டி நாட்டை அடைந்து-
இரவில் சங்குகள் நிலத்திலே உழுது செல்லப் பெற்ற பாண்டிய நாட்டைச் சேர்ந்து
நுங்கள் சொல்லு -உங்கள் சொல் மாலைகளை
கு அளை உண்டார்க்கு அலங்காரர்க்கு சூட்டுமினே-பூமியையும் வெண்ணெயையும் அமுது செய்து அருளிய அழகருக்கு சமர்ப்பியுமின் –

——————————————————————————————-

மேகவிடு தூது

சூட்டு ஓதிமம் சென்று சொல்லாது என் காதலை தும்பி இசைப்
பாட்டு ஓதி மங்கையரும் பணியார் பண்டு கல் மழைக்காகக்
கோட்டு ஓதி மம் எடுத்தார் சோலை மா மலைக்
கோவலனார் மாட்டு ஓதி மஞ்சினங்காள் உரைப்பீர் மறு வாசகமே –63–

மஞ்சினங்காள்-மேகக் கூட்டங்களே
சூட்டு ஓதிமம் -உச்சிக் கொண்டையை யுடைய அன்னப் பறவையானது
சென்று சொல்லாது என் காதலை -சொல்லாது
தும்பி இசைப் பாட்டு ஓதி மங்கையரும் பணியார் -மங்கையரும் சொல்ல மாட்டார்
பண்டு கல் மழைக்காகக் கோட்டு ஓதி மம் -உயர்ந்த சிகரம் -எடுத்தார்
சோலை மா மலைக் கோவலனார் மாட்டு ஓதி
உரைப்பீர் மறு வாசகமே –
கார்காலத்தில் மீண்டு வருவதாக காலம் குறித்துச் சென்ற தலைவனைக் குறித்து -வருந்தி -வானமே நோக்கும் மை யாக்கும்
-நைந்து அண்ணாந்து மேலே பார்க்க -வருமழை தவழும் மாலிருஞ்சோலை திருமலை -என்பதால்
-மேகங்களை -அவனது நிறம் போலவே -இருப்பதைக் கண்டு -உரைப்பீர் மறு வாசகமே -என்கிறார் –

——————————————————————

வாசம் பரந்த துழாயும் என் பாடலும் மாலை ஒளி
வீசு அம்பரம் பசும் பொன்னும் என் வேட்கையும் வீற்று இருக்கும்
தேசம் பரம பதமும் என் சிந்தையும் தீ வளி ஆ
காசம் பரவை கண் கண்டு உண்ட மால் அலங்காரனுக்கே –64–

தீ வளி ஆ காசம் பரவை கண் கண்டு-சிருஷ்டித்து -பின்பு உண்ட மால் அலங்காரனுக்கே –
வாசம் பரந்த துழாயும் என் பாடலும்
மாலை-சாத்தும் மாலையாம்
ஒளி வீசு அம்பரம் பசும் பொன்னும் என் வேட்கையும்
வீற்று இருக்கும் தேசம் பரம பதமும் என் சிந்தையும்
புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய் மாலையே –கண்ணி எனது உயிர்க்காதல் –பல்கலன்களும் ஏலும் ஆடையும் அக்தே
நெஞ்சமே நீள் நகராக விருந்த என் தஞ்சனே
புகழ் ஒப்புமை கூட்டணி என்பர் –

——————————————————————–

அலங்காரன் சுந்தரத் தோளன் அழகன் அணி முடியில்
இலங்கு ஆரன் ஏறு திரு உடையான் எட்டெழுத்தும் கற்றார்
கலந்கார் அனங்கன் கணையால் செல்வமும் காதலியார்
மலங்கார் அருந்துயர் மேவினும் ஆகுவர் வானவரே –65-

அலங்காரன் சுந்தரத் தோளன் அழகன்
அணி முடியில் இலங்கு ஆரன் -பூ மாலையை யுடையவன்
ஏறு திரு உடையான் -திருமார்பில் திருமகள் நித்ய வாஸம் கொண்டவன் –
நாள் நாள் செல்ல ஏறி வருகிற சம்பத்தை யுடையவன் என்றுமாம்
எட்டெழுத்தும் கற்றார்
கலந்கார் அனங்கன் கணையால்-மன்மத பாணங்களால் கலங்க மாட்டார்கள்
செல்வமும் காதலியார் –
மலங்கார் அருந்துயர் மேவினும்
ஆகுவர் வானவரே –
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் –

——————————————————————–

வால் நவதார் அணி சுந்தரத் தோளன் முன் மாவலியை
தானவ தாரணி தா என்ற மாயன் தரா தலத்து
மீன் அவதாரம் முதலானவை வினை இன்றி இச்சை
ஆன அது ஆர் அறிவார் அவரே முத்த ராமவரே –66-

வால் -ஒளியுள்ள -சுத்தமான என்றுமாம் –
நவதார்-புதிய அன்று பூத்த மலர் கொண்டு தொடுக்கப் பட்டதுமாகிய
அணி சுந்தரத் தோளன்
முன் மாவலியை தானவ தாரணி தா என்ற மாயன்
தரா தலத்து மீன் அவதாரம் முதலானவை
வினை இன்றி இச்சை ஆன அது ஆர் அறிவார்
அவரே முத்த ராமவரே —
அவதார ரஹச்ய ஞானமே பேற்றைக் கொடுக்குமே –

————————————————————————

பிரிவாற்றாது வருந்தும் தலைவியைக் குறித்துச் செவிலி இரங்கல்

ஆமவரைப் பணித்து ஆள்வார் அழகர் அயன் உமையாள்
வாம அரைப் பணியான் பணி பாதத்தை வாழ்த்தும் கொங்கை
ஏம வரைப் பணி பூணாள் சந்து ஏந்து இழையாள் உரைத்தால்
வேம் அவரைப் பணியாதே எனும் எங்கள் மெல்லியலே –67-

எங்கள் மெல்லியலே-மென்மையான தன்மை யுடைய எங்கள் பெண்
ஆமவரைப் பணித்து ஆள்வார் அழகர் -அனுகூலராய் வரும் அன்பர்களை அடிமை கொண்டு ஆள்பவர் ஆகிய அழகர்
அயன் உமையாள் வாம அரைப் பணியான்-பாம்பு கச்சமும் உடையவனுமாகிய – பணி பாதத்தை
வாழ்த்தும்-வாழ்த்துகிறாள்
கொங்கை ஏம வரைப் பணி பூணாள் -ஸ்தனங்களின் மேலே ஆபரணங்களை பூண வில்லை
அவனே வந்து ரஷிக்கும் வரை காத்து இருப்போம் என்ற பாரதந்த்ர்ய ஆத்ம குணங்கள் இல்லாதவள் –
சந்து ஏந்து இழையாள் உரைத்தால் வேம் -தரித்த ஆபரணங்களை யுடைய பாங்கி சமாதான வார்த்தையை சொன்னால் உள்ளமும் உடலும் தவிப்பாள்
ஆத்மகுணங்கள் நிறைந்த பாங்கி -என்றபடி –
அவரைப் பணியாதே எனும் –பிரியேன் பியில் தரியேன் என்று அருளிச் செய்து பின்பு
சிறிதேனும் அன்பும் அருளும் இல்லாமல் பிரிந்து சென்ற அவரது பிரஸ்தாபம் சொல்லாதே என்பாள் –

—————————————————————————-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்கல் –

மெல்லியலைப் பரி அங்கனையாரும் வெறுத்து வசை
சொல்லி அலைப்பர் இயங்க ஒட்டார் சுடர் மா மலையைப்
புல்லி அலைப் பரியங்கத்தில் ஏறும் புயல் பதின்மர்
நல் இயலைப் பரி அம் கழல் தாமம் நயந்த பின்னே –68–

சுடர் மா மலையைப் புல்லி-
அலைப் பரியங்கத்தில் ஏறும் புயல் -திருப் பாற் கடலில் திரு அனந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளும் மேகம் போன்ற அழகர்
பதின்மர் நல் இயலைப் பரி அம் கழல் -ஆழ்வார்கள் அருளிச் செயலை அழகிய திருவடிகளில் சாத்திய
தாமம் நயந்த பின்னே -மாலையை விரும்பிய பின்பு
மெல்லியலைப் பரி அங்கனையாரும் -இவளை பரிந்து நடத்தி வந்த செவித் தாயார் போல்வாரும்
வெறுத்து வசை சொல்லி அலைப்பர் இயங்க ஒட்டார் —

———————————————————————

பின் இறப்பும் பிறப்பும் நரை மூப்பும் பிணியும் மனை
முன் இறப்பும் பிரித்தான் இருந்தானவர் மூது இலங்கை
மன் இறப்புங்கக் கணை தொட்ட சோலை மலை அழகன்
பொன் நிறப் புண்டரிகத் திருத் தாள் அன்றி போற்றிலமே –69-

பின் இறப்பும் -பிறப்புக்கு பின் வரும் மரணத்தையும் -பிறப்பும் நரை மூப்பும் பிணியும்
மனை முன் இறப்பும் -இவற்றுக்கு காரணமான வீட்டின் மேல் இறப்பு போலே உயிரைக் கவர்ந்து கொள்ளும் கர்மங்களையும்
குடும்பத்தில் உழன்று தடுமாறுவதையும் என்றுமாம்
பிரித்தான் -இயல்பில் நீக்கி உள்ளவனும்
இருந்தானவர்-பெரிய அசுரர்களும்
மூது இலங்கை மன் இறப் புங்கக் கணை தொட்ட -சிறந்த அம்புகளை தொடுத்து அருளிய
சோலை மலை அழகன்
பொன் நிறப் புண்டரிகத் திருத் தாள் அன்றி போற்றிலமே-

———————————————————————

பிரிவாற்றாத தலைவி செவிலியரைக் குறித்து இரங்குதல்-

போற்றி இராம என்னார் சோலை மா மலை போத விடார்
மாற்றி இராவைப் பகல் ஆக்கிலார் வண் துழாய் குழல் மேல்
ஏற்றி இராசதமாக வையார் என் இடரை எல்லாம்
ஆற்றியிரார் அன்னைமார் என்னை வாய் அம்பு அளக்கின்றதே –70 —

அன்னைமார்-
எனது நோய்க்கு பரிகாரமாக
போற்றி இராம என்னார்
சோலை மா மலை போத விடார்
மாற்றி இராவைப் பகல் ஆக்கிலார் -இரவு பொழுதை மாற்றி பகல் ஆக்க மாட்டார்கள்
வண் துழாய் குழல் மேல் ஏற்றி இராசதமாக வையார்
என் இடரை எல்லாம் ஆற்றியிரார்
என்னை வாய் அம்பு அளக்கின்றதே —
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் அதுவே இவள் உற்ற நோய்க்கு அரு மருந்தாகுமே
தண்ணம் துழாய் கொண்டு சூட்டுமினே -ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமினே
மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூந்துளவின் வாசமே வண்டு கொண்டு வந்தூதுமாகில் -போலே –

————————————————————————

அளப்பதும் அங்கையில் நீர் ஏற்பதும் தந்து அளிப்பதும் பின்
பிளப்பதும் அங்கு ஐ யில் வெண் கோட்டில் கொள்வதும் பேர் உணவாக்
கிளைப்பதும் மங்கை எனத் தோள் புணர்வதும் கேட்கில் வையம்
வளப்பதுமம் கையம் சேர் சோலை மா மலை மாதவரே –71-

வளப்பதுமம் கையம்சேர் -செழிப்பான தாமரை மலர்கள் தடாகங்களில் பொருந்திய
சோலை மா மலை மாதவரே -திருமகள் கொழுனரான திருமால்
அளப்பதும்
அங்கையில் நீர் ஏற்பதும்
தந்து அளிப்பதும் -ஆதியில் சிருஷ்டித்து ரஷிப்பதும்
பின் பிளப்பதும்
அங்கு ஐ யில் வெண் கோட்டில் கொள்வதும்
பேர் உணவாக் கிளைப்பதும் -உணவாகக் கொள்வதும்
மங்கை எனத் தோள் புணர்வதும்
கேட்கில் வையம் -இவை எல்லாம் பூமியையே –
மண்ணை யுண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்தது
பார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை யாண்ட பேராளன் –

————————————————————–

மாதவரால் உம்பரால் அறியார் மதுரைப் பிறந்த
யாதவர் ஆலிலை மேல் துயின்றார் இருந்தாழ் சுனையில்
போதவரால் உகள் மாலிருஞ்சோலை யில் போம் பிறவித்
தீது அவரால் அன்றி எத்தேவராலும் தெறல் அரிதே –72-

மாதவரால் உம்பரால் அறியார்
மதுரைப் பிறந்த யாதவர்
ஆலிலை மேல் துயின்றார்
இருந்தாழ் சுனையில் போதவரால் உகள் மாலிருஞ்சோலை யில்-
ஆழ்ந்த சுனைகளில் மிகுதியாக வரால் மீன்கள் துள்ளப் பெற்ற திருமால் இருஞ்சோலை திருமலையில்
நீர் வளம் மிக்க திருமலை என்றவாறு –
போம்-நீங்கள் சென்று செருங்கோள்-
பிறவித் தீது அவரால் அன்றி எத்தேவராலும் தெறல் அரிதே –
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவித் தவிரத் திருத்தி யுன் கோயில் கடைப்புகப் பெய் திருமால் இருஞ்சோலை எந்தாய் –

——————————————————————

அரிய வரம் தந்து அயன் முதலோர்க்கு அருள் செய்து அவரைப்
பெரியவர் அந்தம் இல் வாழ்வினர் ஆக்கி தம் பேர் அருளால்
கரியவர் அந்தணர் கை தொழும் மால் அலங்காரர் வையத்து
உரியவர் அந்தரங்கத் துயர் தீர்க்க உலாவுவரே –73–

கரியவர்
அந்தணர் கை தொழும் மால் அலங்காரர் -அம் தண் அர் -அழகிய குளிர்ச்சியான அருளை யுடையவர் –
அந்த அணவு அர் -வேதாந்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பவர் –
பிராமணர் தெய்வம் என்றபடி
அரிய வரம் தந்து அயன் முதலோர்க்கு அருள் செய்து
அவரைப் பெரியவர் அந்தம் இல் வாழ்வினர் ஆக்கி-கல்பான்தரம் வரை வாழச் செய்து அருளி
தம் பேர் அருளால்
வையத்து உரியவர் அந்தரங்கத் துயர் தீர்க்க உலாவுவரே –அடியார்கள் மனத் துன்பங்களை நீக்குதற் பொருட்டு உலாவுவார் –
விபவம் அர்ச்சை அந்தர்யாமித்வம் இவைகளை யுடையராய் எங்கும் வியாபித்து இருப்பவர் –

————————————————————-

உலகு உதிக்கும்படி சிந்தித்துத் தந்து இவ் உலகில் உறும்
நலகுதிக்கும் படி நின்ற பிரான் இடம் நானிலமும்
இலகுதிக்கும் விசும்பும் தொழ ஓங்கி இறால் வருடை
பலகுதிக் குந்தொரும் தேன் பாயும் சோலைப் பருப்பதமே –74-

உலகு உதிக்கும்படி சிந்தித்துத் தந்து -சங்கல்பித்து சிருஷ்டித்து
இவ் உலகில் உறும் நலகுதிக்கும் படி நின்ற -மிக்க நன்மைகள் மேன்மேலும் பொங்கும் படி -திருவருள் கொண்டு நின்ற
பிரான் இடம்-உபகாரகன் திரு உள்ளம் உகந்து எழுந்து அருளி இருக்கும் இடம் எது என்றால்
நானிலமும் இலகுதிக்கும் விசும்பும் தொழ ஓங்கி
வருடை பலகுதிக் குந்தொரும் -இறால் -தேன் பாயும்-
மலையாடுகள் பல எழும்பிப் பாயும் தோறும் தேன் கூடுகளின் நின்றும் தேன் பெருகிப் பாயப் பெற்ற
குறிஞ்சி நில திருமலையின் வளம் அருளிச் செய்கிறார்
சோலைப் பருப்பதமே –திருமால் இருஞ்சோலை மலையே –

—————————————————————-

பருப்பதம் தாம் மன்னி நிற்பது பாற் கடல் பள்ளி கொள்வது
இருப்பது அம் தாமம் பண்டு இப்போது எலாம் இள ஞாயிறு அன்ன
உருப்பதம் தாமதர்க்கு ஈயாமல் அன்பர்க்கு உதவு அழகர்
திருப்பதம் தாமரை போல்வார் உகப்பது என் சிந்தனையே –75-

இள ஞாயிறு அன்ன உருப்பதம் தாமதர்க்கு ஈயாமல்-இளம் சூரியனைப் போன்ற திரு உருவத்தை யுடைய பரம பதத்தை தாமச குணம் உள்ளோர்க்கு கொடாமல்
அன்பர்க்கு உதவு அழகர் திருப்பதம் தாமரை போல்வார்
அழகர் –
பண்டு
பருப்பதம் தாம் மன்னி நிற்பது-நின்ற திருக் கோலத்துடன் நித்ய வாஸம் செய்வது -திருமால் இருஞ்சோலையாம்
பாற் கடல் பள்ளி கொள்வது –
இருப்பது அம் தாமம் -பரமபதமாம்
இப்போது எலாம் -நிற்கிற பள்ளி கொள்ளும் இருக்கும் -இடமாகிய அனைத்துமாக -உகப்பது
என் சிந்தனையே —
முன்பு நிலம் கர்த்தா இப்பொழுது செயப்பாடு பொருள் கர்த்தா வாக அருளிச் செய்கிறார் -அதுவும் அவனது இன்னருளே போலே
நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும் நல் பெரும் திரைக் கடலுள் நானிலாத முன் எலாம்
அற்புதன் அனந்த சயன் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்தகம் –

———————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: