ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தனி த்வயம் -அவதாரிகை — —

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

—————————————————————————————————————

அவதாரிகை –

சகல வேத சாஸ்திரங்களும் -தாமஸ ராஜச சாத்விக புருஷர்களுக்கு அவ்வோ  குண அநு குணமாக  புருஷார்த்தங்களை விதித்தது
எல்லார்க்கும் ஒக்க அபிமதமான மோஷம் தான் துக்க நிவ்ருத்தியும் ஸூக பிராப்தியும் இ றே-இது வி றே ப்ரியமாகிறது -இத்தை லபிக்கும் உபாயத்தை ஹிதம் என்கிறது –
இதில் தாமஸ புருஷர்கள் பர ஹிம்சையை சாதனமாகக்  கொண்டு அத்தாலே வரும் தநாதிகளை பிரியமான புருஷார்த்தமாக நினைத்து இருப்பார்கள் –
இதுக்கு வழி யிட்டுக் கொடுக்கும் வேதமும் – ஸ்யேன விதி -என்கிற முகத்தாலே –
ராஜச புருஷர்கள் இஹ லோக புருஷார்த்தமாகப் புத்ர பஸ் வந்நாதிகளையும்  -பரலோக புருஷார்த்தமாக ஸ்வர்க்காதி போகங்களையும் நினைத்து இருப்பார்கள் –
இதுக்கு உபாயமாக ஜ்யோதிஷ்டோமாதி முகங்களாலே வழி யிட்டுக் கொடுக்கும் வேதமும் –
சாத்விக புருஷர்கள் அந்த ஜ்யோதிஷ்டோமாதி கர்மம் தன்னையே மோஷத்துக்கு சாதனமான அபிசந்தியைப் பண்ணி
பல சங்க கர்த்ருத்வ த்யாக பூர்வகமாக பகவத் சமாராதன புத்தி பண்ணி -அத்தாலே -ஷீண பாபரே ஜ்ஞானம் பிறந்து அநவரத பாவன ரூபையான பக்தி பக்வமாய்
சாஷாத்கார சமாநமாய்ச் செல்லா நிற்க -அந்திம அவஸ்தையில் பகவத் விஷயமான  அந்திம ஸ்ம்ருதி அநு வர்த்திக்குமாகில் பகவல் லாபமாய் இருக்கும் –
அதுக்கு இப்படி செய்வான் என்று வழி யிட்டுக் கொடுக்கும் வேதமும் –

ஸூ த்த சாத்விக புருஷர்கள் -நிர்ஹேதுக பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தாலே கர்ம ஜ்ஞான சஹக்ருதையான பக்தி நிவ்ருத்தி பூர்வகமாக
சித்த ரூபனான ஈச்வரனே உபாயமாய் –
அநந்ய கதிகளுமாய்-ஸ்வ ரஷண ப்ராப்தி இல்லாத நமக்கு உபாயம் என்று அத்யவசித்து இருந்து சாதகனான அவனைப் போலே
கர்மவாசனையாதல் -அந்திம ஸ்ம்ருதி யாதல் வேண்டாதே ஈஸ்வரன் தலையிலே அந்திம ஸ்ம்ருதியை ஏறிட்டு
இஸ் சரீர அவசானத்திலே -திருவடி திரு வநந்த ஆழ்வான் பிராட்டி தொடக்கமானாருடைய பகவத் அனுபவ  ப்ரீதி காரிதையான நித்ய கிங்கரதையை லபிப்பார்கள் –
இதுக்கு வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் தத் உபாய ஸ்வீகாரமான ப்ரபத்தியை சாதனமாக ஆதரித்து அவனே உபாயம் என்று நிச்சயித்தார்கள் –
எங்கனே என்னில் –

ஸ்ருதி உபாசன  வாக்யத்திலே நின்று –
சத்யம் தபோ தமஸ் சமோ தானம் –தர்ம ப்ரஜந நமக்நய அக்னிஹோத்ரம் யஜ்ஞோ   மாநாசம் நியாச-தை -நா -51-இத்யாதிகளைச் சொல்லிற்று –
சத்யமாவது-பூத ஹிதமானது -தபஸ் ஸாவது -காய சோஷணம்-தமம் -விரக்தி சமம் -சாந்தி –
தானம் -சத்துக்கள் விஷயமாக கொடுக்குமவை-இப்படிகளால் உபாசிக்கும் இடத்தில் யம நியம ஆசன
ப்ராணாயாம ப்ரத்யாஹார தாரணா த்யான சமாதி களான அஷ்டாங்க யோகத்தையும் விதித்து –
இது தன்னை முக பேதத்தால் ஸ்ரவண மனன நிதித்யாசன தர்சனம் இத்யாதிகளையும் சொல்லக் கடவது –
ஸ்ரவணம் ஆவது  -தத்தவ ஹிதங்களை உள்ளபடி கேட்கை–மனனம் ஆவது -அவ்வர்த்தத்தை விதேயமாகக் மனனம் பண்ணுகை-
நிதித்யாசனம் ஆவது -அவ்வர்த்தத்திலே நிஷ்டனாகை-த்ருவாநு ஸ்ம்ருதி ஆவது -அவ்வர்த்தத்தில் அநவரத பாவநா-
தர்சன சமாநாகாரம்-ஆவது கண்டால் போலே இருக்கை-இப்படிகளாலே அநேகங்களை ஒன்றுக்கு ஓன்று ஸ்ரேஷ்டமாகச் சொல்லிக் கொண்டு போந்து
மானஸ  என்கிற சப்தத்தாலே ஆத்ம ஜ்ஞானத்தைச் சொல்லிற்று -அதுக்கு மேலான தர்சன சரம அவதியிலே வருந்திப் புகுந்தாலும்
அவ்வளவிலே பிரம்சம் யுண்டாகில் ஆதி பரதனைப் போலே அதபதிக்கும் அத்தனை –
இவ்வுபாயம் தான் -த்ரைவர்ணிக அதிகாரமுமாய் -அனுஷ்டிக்கும் இடத்தில் துஷ்கரமுமாயும் –
துர்லபமுமாயும் -அசாத்யமாயும் -பலவாயும் -விளம்பமாயும் -இருக்குமத்தனை –
பலப்ரதான சக்தி இல்லாமையாலும் -ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் ஆகையாலும் -அந்திம ஸ்ம்ருதி வேண்டுகையாலும் –
பிரத்யவாய பரிஹார பிரசுரமாய் இருக்கையாலும் -இவ்வருமைகளை அநு சந்தித்துத் தளும்பினார்களுக்கு
மாதா பித்ரு சஹஸ்ரேஷூ வத்சல தரம் சாஸ்திரம் -என்கிற மாதா பிதாக்களிலும் ஆயிரம் மடங்கு ஏற்றமாக முகம்
கொடுக்கும் மாதாவாகையாலே வேதமும் உபநிஷத்   பாகத்திலே நியாச சப்தத்தாலே ப்ரபத்தியை
நியாச இத்யாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மாணம்–நியாச இதி ப்ரஹ்மா-என்று நியாச சப்தத்தாலே பிரபத்தியைச் சொல்லிற்று

கீழ்ச் சொன்ன உபாயங்களோபாதி பிரபத்தியும் அந்யதமம் ஆகிறதோ என்னும் அபேஷையிலே –
உத்க்ருஷ்ட உபாயம் பிரபத்தி என்னும் இடத்தை நியாச சப்தத்தாலே சொல்லிற்று –
பிரபத்தி பண்ணும் பிரயோகம் -இருக்கும்படி என்-என்னும் அபேஷையிலே -பதிம் விச்வச்ய-என்றும் –
ப்ரஹ்மணே தவா மகாச ஒமித்யாத்மா நம் யுஞ்ஜீத -என்றும் பிரயோகம் சொல்லிற்று – எங்கனே என்னில் –
விஸ்வ பதார்த்தங்களை உடையவனாய் இருக்கிற ப்ரஹ்மம் உண்டு -சர்வ ரஷகன் -அவன் திருவடிகளிலே –
ஒமித்யாத்மாநம் -என்று தனக்கு வாசகமான மந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு –
யுஞ்ஜீத -சமர்ப்பிப்பான் என்று சொல்லி மஹிமா வாகையாவது என் என்னும் அபேஷையிலே
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்றும் –ப்ரஹ்ம வேதி ப்ரஹ்மைவ பவதி -என்றும் –
தத் பாவ பாவமா பன்ன -என்றும் -மம சாதர்ம்ய மாகதா -என்றும் -தம்மையே ஒக்க அருள்செய்வர் -பெரிய திரு -11-3-5-

இப்படி அவனோடு ஒத்த பரம சாம்யா பத்தி யாகிற பலத்தைச் சொல்லி -ப்ரபத்திக்கு அதிகாரிகள் யார் என்னும் அபேஷையிலே
வதார்ஹனும் நின்ற நிலையிலே -சரணம் புக்கால் சரண்யன் சேதனனாகில் இவன் குற்றம் கண்டு விட்டுக் கொடான் -என்று
சரணாகதியினுடைய வைபவத்தை சுருதியிலே சொல்லிற்று -எங்கனே என்னில் –
தேவா வை யஜ்ஞாத் ருத்ர மந்தாரயன் ஸ ஆதித்யா நன்வாக்ராமத  தே த்விதை வத்யான் ப்ராபத் யந்த-தான் ந பிரதிப்ராயச்சன்
தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் -ந பிரதியச்சந்தி -யஜூஸ் காண்டம் -6-5-20-என்று –
தேவர்களுடைய யாகத்தில் ருத்ரன் தனக்கு ஹவிர்பாகம் உண்டு என்று வர -இவனுக்கு அவர்கள் ஹவிர்பாகம் கொடோம் -என்ன
நீங்கள் வத்யர் -என்று அவர்களைச் சொல்லித் தொடர்ந்தான் -அவர்களும் த்விதைவத்யர் என்கிற அஸ்வினி கள் பாடே போய் சரணம் புக –
அவர்களும் எங்கள் பக்கலிலே பிரபன்னரான இவர்களை  விட்டுக் கொடோம் -என்று ருத்ரனோடேயும் மலைந்து நோக்கினார்கள் –
தேவா வை  த்வஷ்டாரமஜிகாம் சந் ஸ பத்நீ ப்ராபத்யாத தம் ந பிரதிப்ராயச்சன் தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந பிரதிப்ரயச்சந்தி -என்று
தேவர்கள் யாகம் பண்ணுகிற அளவிலே தேவதச்சன் தனக்கு ஹவிர்பாகம் யுண்டு என்று வர -அவனுக்கு ஹவிர்பாகம் கொடோம் என்று
அவர்கள் எல்லாருமாகத் துரத்தினார்கள் -அவன் அசந்த தேவ பாதணிகள் பக்கலிலே போய் சரணம் புக்கான் -இவன் வத்யன் -விட்டுத் தர வேணும் -என்ன –
தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந பிரதிப்ரயச்சந்தி -என்று
எங்கள் பக்கலிலே பிரபத்தி பண்ணின இவனை விட்டுத் தாரோம் என்று
அவர்களோடேயும் மலைந்து நோக்கினார்கள் என்னும் இவ்வர்த்தம் ஸ்ருதி சித்தமாகையாலே வத்யனும் பிரபத்த்யதிகாரி என்னும் இடம் சொல்லிற்று –

-பிரபத்தி   பண்ணுகைக்கு சரண்யர் யார் -என்னும் அபேஷையிலே -ச்வேதாஸ் வதர உப நிஷத்திலே -யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்று
பிரசித்தமான ப்ரஹ்மாவை யாவன் ஒருவன் முன்பு யுண்டாக்கினான்-சர்வர்க்கும் சரண்யன் அவனே என்னும் இடம் சொல்லிற்று –
சதுர்தச புவன ஸ்ரஷ்டாவான சதுர்முகனும் இவனாலே ஸ்ருஜ்யன் ஆகையாலே இவனை ஒழிந்தாருக்கு ஸ்ருஜ்யத்வ கர்ம வச்யத்வங்கள்
யுண்டாகையாலே அவர்களில் சரண்யராக வல்லார் இல்லை என்னும் இடம் சொல்லிற்று –
யோவை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -யாவன் ஒருவன் அந்த ப்ரஹ்மாவுக்கு வேதங்களைக் காட்டிக் கொடுத்தான் –
இத்தால் ருசி ஜனகனும் இவனே என்கிறது -ஜ்ஞான பிரதனாகையாலே ருசி ஜனகன் என்னத் தட்டில்லையே –
வேத சஷூஸ் சைக் கொடுத்து ஸ்ருஷ்டிப்பித்தான் என்கையாலும்-இவர்களுக்கு சம்ஹர்த்தா வாகையாலும்
இவர்கள் பண்ணும் அவாந்தர சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு அந்தராத்மதயா நின்று பண்ணுகையாலும்-
இவர்கள் அவனுக்கு சரீர பூதராகையாலும் -இவர்கள் அவனுக்கு சேஷமாகையாலும்
அவன் ஸூ த்த சத்வமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன் ஆகையாலும் -இவர்கள் குணத்ரய உபபேதமான ப்ராக்ருத  சரீரத்தை யுடையவர் ஆகையாலும் –
அவன் ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணங்களை யுடையவன் ஆகையாலும் -இவர்கள் ஹேய குண விசிஷ்டர் ஆகையாலும்
அவன் புண்டரீகாஷன் ஆகையாலும் இவர்கள் விருபாஷர் ஆகையாலும் –
அவன் ஸ்ரீ யபதி யாகையாலும் -இவர்கள் நிஸ் ஸ்ரீ கரராகையாலும்
அவன் உபநிஷத் சித்தனாகையாலும் -இவர்கள் ஆகம உக்த வைபவர் ஆகையாலும்
அவன் உபய விபூதி நாதன் ஆகையாலும் இவர்கள் அண்டாந்தர வர்த்திகள் ஆகையாலும்
அவன் மோஷ ப்ரதன் ஆகையாலும் -இவர்கள் சம்சார வர்த்தகர் ஆகையாலும்
சிவா சம்ப்வாதிகளாலே சொல்லுகிற பரத்வமும் குண யோகத்தாலும் பிரகார வாசி சப்தங்கள் பிரகாரி பர்யந்தமாகக் கண்டபடி யாலும் யாகையாலும்
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த ஆத்மாக்களும் இவனுக்கு ரஷ்யம்
-ஸ்ரீ யபதியாய் புருஷோத்தமனான நாராயணனே சர்வ ரஷகன் -அவனே சரண்யன் -என்னும் இடத்தைச் சொல்லிற்று –
இனி சரண்யன் பக்கலிலே இ றே சரணம் புக அடுப்பது -ஆகையாலே வேதாத்மா சரணம் புகுகிறான் –
தம்ஹ தேவமாத்ம புத்தி பிரசாதம் -தானே உபாயம் என்கிற வ்யவசாயமான புத்தி பிரசாதத்தை எனக்குப் பண்ணித் தந்தான் -என்கையாலே
வ்யவசாய ப்ரதனும் அவன் என்னும் இடம் சொல்லிற்று -முமுஷூர்வ சரணம் அஹம் ப்ரபத்யே -என்று
பிராப்ய ருசியுடையவன் அதிகாரி என்னும் இடம் தோற்றுகைக்காக- மோஷார்த்தியான நான் சரணம் புகுகிறேன் -என்கிறான் –
ஆக
இத்தால் மோஷ உபாயம் பிரபதனம் -என்னும் இடத்தையும்
ப்ரபத்திக்கு அதிகாரி முமுஷூ என்னும் இடத்தையும் சொல்லிற்று –

இப்படி ஸ்ருதி சித்தமான பிரபதனத்தை இவ் வுபநிஷத்தை அடியொற்றி உப ப்ரும்ஹணம் பண்ணின
ருஷிகளும் மஹா பாரத ராமாயணாதி களிலே நின்றும் வெளியிட்டார்கள் -எங்கனே என்னில் –
கோந் வச்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கஸ்ஸ வீர்யவான் தர்மஜ்ஞ-என்று -மூன்று குணத்தினுடைய விவரணம்  ஸ்ரீ ராமாயணம் –
குணவான் -என்கிறது சீல குணத்தை-வீர்யவான் என்கிறது -அந்த சீலம் கண்டு ஒதுங்கினவர்களுடைய
விரோதி வர்க்கத்தைக் கிழங்கு எடுத்து -அவர்களைக் காத்தூட்ட வல்லனாகிறது –
தர்மஜ்ஞ என்று -சம்சாரிகளுடைய துர்க்கதியைக் கண்டு -இவற்றுக்கு நம்மை ஒழியப் புகலில்லை-இனி நம்மாலே நம்மைப் பெறும் அத்தனை -என்று
சரணாகதி தர்மமே பரம தர்மம் -என்று இருப்பர் என்கிறது –
சீலவத்தை யாகிறது -அபிஷேக விக்நம் பிறந்தது என்று வெறுப்பு   இன்றியே -வனவாசோ மஹோதய-என்று காடேறப் புறப்பட்டுப் போவது –
ஆவாசம் த்வஹமிச்சாமி -என்று ரிஷிகள் பக்கலிலே  தாழ நிற்பது –
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ-எனபது -ஜன்ம வ்ருத்தங்களிலே குறைய நிற்கிறவர்களை -உகந்த தோழன் நீ -பெரிய திரு -5-8-1- எனபது -இப்படிகளாலே சீலவத்தையை மூதலித்தது-
மாரீச ஸூ பாஹூக்கள் வதம் தொடக்கமாக ராவண வத பர்யந்தமாக நடுவுண்டான பிரதிகூல நிரசனத்தாலே வீர்யவதியை மூதலித்தது –
காக விபீஷணாதிகளை சவீ கரிக்கையாலே தர்மஜ்ஞதையை மூதலித்தது -எங்கே கண்டோம்  என்னில்
சர்வ லோக ஜநநியான பிராட்டி திறபத்திலே காகம் அபராதம் பண்ணுகையாலே பரம க்ருபாளுவான பெருமாள் திரு உள்ளத்தாலும்
இவன் வத்யன் என்று ப்ரஹ்மாச்த்ரத்தை விட -சதம் நிபதிதம் பூ மௌ சரண்யஸ் சரணாகதம் -வதார்ஹமாபி காகுத்ச்த க்ருபயா பர்யா பாலைத்
ஸ பித்ரா ஸ பரித்யக்தஸ் ஸூ ரைச்ச ஸ மஹர்ஷிபி-தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத –  என்கிறபடியே
புறம்பு புகலற்று வந்து விழுந்த இத்தை சரணாகதி யாக்கி ரஷித்து விட்டான் சரண்யன் என்கையாலே காக விஷயமான ச்வீகாரம் கண்டோம் –

ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ-என்று-பெருமாளையும் அவருடைமையையும் சேர்ந்து இருக்க இசையாய் -என்று ராவணனுக்குக் ஹிதம் சொல்லக் கேளாதே –
த்வாம் து திக் குலபாம்சனம் -என்று பரிபவித்துப் புறப்பட விட -பரித்யக்தா மயா லங்கா -என்று விட்டுப் புறப்படுகிற போது-
ஒரு தலை நெருப்புப் பட்டுப் பற்றி வேகப் புறப்படுவாரைப் போலே அங்கு அடி கொதித்துப் புறப்பட்டு -ராவணோ நாம துர்வ்ருத்த -என்று
தன நிகர்ஷத்தை முன்னிட்டுக் கொண்டு ஸோ அஹம் பருஷிதஸ்தேந தாஸ வச்சாவமா   நித -த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ தாராம்ஸ்ஸ ராகவம் சரணம் கத -என்று
சரணம் புகுந்தவனை -முதலிகள் -இவன் ஜன்ம வ்ருத்தங்கள் இருந்தபடியாலும் -வந்த வரவு இருந்த படியாலும் -இவனுடைய நினைவு இருந்தபடியாலும் -வந்த காலம் இருந்த படியாலும் -சரணா கதனுடைய வார்த்தை ஜீவிக்கும் கோஷ்டி என்று அதிலே கலந்து நலியலாம் என்று வந்து சரணம் புகுந்த படியாலும் –
கனத்த மதிப்பரோடே வரில் தட்டுப்படும் என்று பார்த்து தன் அவயவங்களோ  பாதி விரகு அறிந்து தப்பலாம் படி நாலு பேரைக் கொண்டு வந்த படியாலும்
ராவணன் தம்பியாய் அவன் சோற்றை யுண்டு அவன் ஆபத் காலத்திலே விட்டுப் போர சம்பவம் இல்லாமையாலும் –
இவன் நம்முயிர் நிலையிலே நலிய வந்தான் என்று நிச்சயித்து -வத்யதாம் -என்று கொண்டு -சர்வ பிரகாரத்தாலும் இவனைக் கைக் கொள்ள ஒட்டோம் -என்று நிற்க –
நீர் இவனை  -விடுகைக்கு உறுப்பாக யாதொரு அநுபபத்தி சொன்னீர் -அவை நமக்கு ச்வீகரிக்கைக்கு யுடலாம் இத்தனை
-அவன் வத்யனே யாகிலும் மித்ரபாவம் யுடையவனே வந்தவனை –
ந த்யஜேயம்-என்று அவனை விடில் நமக்கு சத்பாவம் இல்லை என்று தன் பிரகிருதி இருந்த படியைச் சொல்லி
ஆர்த்தோவா  யதிவா த்ருப்த பரேஷாம் சரணாகத -என்கிறபடியே ஆர்த்தனாய் வரவாம் -செருக்கனாய் வரவாம் -நம் பக்கலிலே சரணம் புகுந்தவனை –
அரிய பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா-பிராணனை அழிய மாறி ரஷிப்பன் -ப்ராணா நபி -என்றாய் விட்டது   சரணாகதனுக்கும்
தம்மை அழிய ரஷிக்குமது  தன்னேற்றம் செய்ததாக போந்து இராமையாலே -க்ருதாத்மாநா -என்று பிராணனை அழிய மாறி ரஷிப்பன் –
சக்ருதேவ பிரபன்னாயா தவாஸ் மீதி ச யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம-என்று ப்ரக்ருத்ய அநுரூபமான பிரதிஜ்ஞையைப் பண்ணி –
கண்டோர் வசமுத்தமம் -என்று கண்டு பாக்யா நத்தைச் சொல்லி -பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் -என்று –இவை தான் என் என்னில் –
பத்தாஞ்சலி புடம் -என்றது காயிகமான பிரபத்தி -தீநம் -என்றது மானஸ பிரபத்தி யாசந்தம் -என்றது   வாசகமான பிரபத்தி
சரணா கதம் -கீழே இவை மூன்றையும் சொல்லி வைத்து சரணா கதம் -என்கையாலே –தே வயம் பவதா ரஷ்யா பவத் விஷய வாஸிந -என்று
உகந்து அருளின தேசங்களிலே அபிமானித்த எல்லைக்கு உள்ளே கிடந்தது விடுகையும் சரணாகதி -அவற்றிலே ஓன்று யுண்டாகிலும் விடேன் என்ற இடத்திலும்
மஹா ராஜர்-தெளியாமையாலே -இவருடைய ப்ரக்ருத்ய அநு குணமாக இவரைத் தெளிவிப்போம் என்று பார்த்தருளி
பண்டு கலங்கின விடத்தில் நம்முடைய சக்தியைக் கண்டு தெளிந்தார் -அத்தைப் புரஸ்கரிக்கவே தெளிவர் என்று பார்த்து
பிசாசான்  தாநவான் யஷான் பருத்தி வ்யாஞ்சைவ ராஷசான் -என்று இத்யாதிப்படியே எதிரிகள் அடைய ஒரு கலத்திலே உண்டு ஒரு முகம் செய்து வந்தாலும் –
அங்குள்யக்ரேண தான் ஹன்யாம் -நம் சிறு விரலில் ஏக தேசத்துக்கும் இரை போரார்கள் காணும் -என்று தம்முடைய பலத்தைச் சொல்லவே
ராம பாக்யத்தாலே மஹா ராஜர்   தெளிந்து வந்து -விபீஷணன்  நம்மிலும் பரியவனாய்  வந்தான் -பெருமாள் கடுக் கைக் கொண்டு அருளும் படி
விண்ணப்பம் செய்வோம் என்று பெருமாள் பாடே வந்து
கடுக் கைக் கொண்டு அருளீர் என்று விண்ணப்பம் செய்ய -நாம் அவன் வந்த போதே கைக் கொண்டோம் -உம்முடைய அனுமதி பார்த்து இருந்தோம் இத்தனை காணும்
ஆநயைநம் -அவன் நிற்கிற நிலை கண்டால் எனக்கு ஆறி இருக்கலாய் இருந்ததோ -கடுக் கொண்டு புகுரீர் -என்ன
மஹா ராஜரும் பரிகரமும் பஹிரங்கம் என்னும் படி ராம பரிசரத்தில் இவனே அந்தரங்கம் என்னும் படி கைக்கொண்டு –
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை -பெரிய திரு -6-8-5- என்கிற படியே அபிஷிக்தனாக்கி ரஷித்தான் என்கையாலே
சரண்யனுடைய ப்ரபாவமும் -சரணா கதனுடைய ப்ரபாவமும் சொல்லிற்று –

இப்பிரகரணம் தன்னில் சொல்லிற்றாயிற்ற தாத்பர்யம் என் என்னில் –
ப்ரஹச்தாதிகளினுடைய வாக்யங்களிலே ஆஸூர பிரக்ருதிகளோடு சஹவாசம் பண்ணலாகாது என்னும் இடம் சொல்லி
தன்னை நலிய நினைத்தவனுக்கும் கூட ஹிதம் சொன்ன ஸ்ரீ விபீஷண ஆழ்வான் படியாலே சத்துக்களோடே சஹவாசம்  பண்ண வேணும் என்னும் இடம் சொல்லி –
இவன் சொன்ன ஹிதம் கேளாத ராவணன் படியாலே ஆஸூர  பிரக்ருதிகளுக்கு ஹிதம் சொல்லலாகாது என்னுமிடம் சொல்லி –
யத்ர ராம -என்று பெருமாள் இருந்த இடத்தே வருகையாலே பகவத் சந்நிதி யுள்ள தேசமே ப்ராப்யம் -என்னும் இடம் சொல்லி –
பரித்யக்தா மயா லங்கா -என்று விட்டுப் போந்த படியாலே பகவத் குண அனுபவத்துக்கு விரோதியான தேசம் த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லி
இருந்தபடியே எழுந்து இருந்து வருகையாலே அதிகாரத்துக்கு புரஸ் சரணாதிகள் இல்லை என்னும் இடம் சொல்லி –
சரணாகதனை-வத்யதாம் -என்கையாலே பகவத் விஷயத்தில் பரிவர் இருக்கும் படி சொல்லி –
வத்யதாம் என்றவர் -தம்மை அநுவர்த்தித்துப் புகுருகையாலே -ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டே பற்ற வேணும் என்னும் இடம்  சொல்லி –
மஹா ராஜரை இசைவித்துக் கொள்ளுகையாலே அவனும் ததீயரைப்  புருஷகாரமாகக் கொண்டல்லது கைக் கொள்ளான் என்னும் இடம் சொல்லி  –
ராவணோ நாம துர்வ்ருத்த -என்று சொல்லிக் கொண்டு வருகையாலே சரணம் புகுவார் தந்தாமுடைய நிக்ருஷ்டதயை முன்னிட்டுக் கொண்டு
சரணம் புக வேணும் என்னும் இடம் சொல்லி -ஆக இப்படிகளாலே அதிகாரிக்கு வரும் விசேஷணங்கள் சொல்லிற்று –

பிரபத்தி பண்ணினார் விஷயத்தில் தாம் செய்யும் திறங்கள் அறிந்து இருக்கையாலே
ஸூ கிரீவம் சரணம் கத -என்றும் -ஸூ கிரீவம் நாதமிச்சதி -என்றும் தமக்கு ஒரு ஆபத்து வந்தாலும் பிரபத்தியைப் பண்ணும் அத்தனை –
சரணாகதனும் தனக்குப் பலித்தது என்ன –சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி -என்று சரண்யனுக்கு உபதேசிப்பதும் இத்தையே –
ராவணனைப் போல் அன்றிக்கே ப்ரக்ருதயா தர்ம சீலச்து -என்று தர்மசீலராகையாலே அலச்சாயல் பட்டு இருந்தது –
சரணாகதி கொண்டுகந்த கடலுக்கு ஒரு குளப்படி யன்றோ இக்கடல் என்னாக் கடலின் காலிலே விழுந்து சரணம் புகுவர் இவர் -அந்த நோயாசை இ றே இது –
சர்வேஸ்வரன் ஸ்வா தந்த்ர்யத்தாலே முசித்து ஆஸ்ரீத பாரதந்த்ர்யத்தை ஆசைப்பட்டு -பிதரம் ரோசயாமாச என்று வந்து பிறந்தான் –
அங்கே முடியை வைக்கப் பார்த்தார்கள் -கைகேயி வர வ்யாஜத்தாலே அத்தைத் தப்பினான்
ஆவாசம் த்வஹமிச்சாமி என்று ரிஷிகளுக்கு பரதந்த்ரனாக ஆசைப்பட்டான் -அவர்களே -ந்யாய வ்ருத்தா யதா ந்யாயம் பூஜயா மா ஸூ ரீஸ்வரம்-என்று
ஸ்வா தந்த்ர்யத்தை வெளியிடத் தொடங்கினார்கள் –
அவர்களை விட்டு அறிவிலா குரங்கின் காலைப் பிடிப்போம் என்று பார்த்தான் –அவன் தாசோஸ்மி என்று எதிரே காலைப் பிடித்தான் –
அத்தை விட்டு கடலொரு தேவதை நம்மைக் கும்பிடு கொள்ளும் என்று பார்த்து அதின் காலைப்பிடித்தான் -அவன் சதிரன் அன்றோ –
வந்து முகம் காட்டினால் சரண்யர் ஆவுதோம் என்று முகம் காட்டானே-இவருக்கு பழைய ஸ்வா தந்த்ர்யம் தலையெடா-கொண்டுவா தக்கானை -என்பரே
-நாம் சரண்யராய்-அவன் நியாம்யனாய் வந்தால் அவன் தன் ஸ்வரூபம் நசிக்கும் -தொடுத்த அம்புக்கு இலக்கானோம் ஆகில் ரூப நாசம் இ றே உள்ளது என்று முகம் காட்டுமே
-முகம் காட்டும் தனை போதும் இ றே ஸ்வா தந்த்ர்யம் உள்ளது -வந்து முகம் காட்டினால் முன்புத்தை அபராதத்தை அறியானே -கோழைகளைப் போலே உனக்கு அன்று காண்
இவ்வம்புக்கு இலக்காக உன் எதிரிகளைக் காட்டு -என்னும் இத்தனை இ றே –இது வி றே ஸ்ரீ ராமாயணத்தில் சங்க்ரஹேண பிரபத்தி விஷயமாக நின்ற நிலை –

ஸ்ரீ மகாபாரதத்திலும் ஆபன்னரானவர்க்கு வசிஷ்டாதிகள் உபதேசிப்பது பிரபத்தியை -எங்கனே என்னில் –
சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -கச்சத்வமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷப என்று விதிக்க
அனுஷ்டான வேளையிலே த்ரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் என்று நமஸ் ஸூ சரண பர்யாயம் ஆகையாலே பிரயோகித்தார்கள் –
திரௌபதியும் அந்தப் பெரிய சபையிலே துச்சாசனன் என்பான் ஒரு முறட்டுப் பயல் வாசா மகோசரமான பெரிய பரிபவத்தைப் பண்ண
தர்மம் ஜெயிக்கிறது என்று இருந்த பர்த்தாக்கள் ஐவரும் -தர்மம் இல்லை என்று இருந்த நூற்றுவரும் தர்மாதர்ம விவேகம் பண்ண மாட்டாத த்ரோண பீஷ்மாதிகளும்
இப்படி நிர் லஜ்ஜரான சபையிலே பிரபத்தியை வெளியிடப் பிறந்த பாக்யவதி யாகையாலே லஜ்ஜை உடையவனை நினைத்து
சங்க சக்ர கதா பாணே -என் கையில் வளையோபாதியோ உன் கையில் ஆயுதமும் -என் பரிபவத்தைப் போக்குதல் -உன் கையில் திருவாழியைப் போக்குதல் செய்ய வேணும்
-த்யாகக் கொடி கட்டிக் கிடக்கப் புறங்கால் வீங்கு வாரைப் போலே திருவாழி ஏந்தி இருக்க நான் பரிபவப் படுவதே –
எப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் இ றே –
த்வாரகா நிலய -இப்போது முதலியார் வர்த்திக்கிறது ஸ்ரீ வைகுண்டத்திலேயோ –
அச்யுத -பற்றினாரைக் கைவிடோம் என்றது பண்டோ -இன்று அன்றோ –
கோவிந்த -கோவிந்த அபிஷேகம் பண்ணிற்று தளர்ந்தாரை நோக்குகைக்கு அன்றோ -கடலிலே வர்ஷித்தால் போலே நித்ய ஸூ ரிகளை ரஷிக்கவோ-
புண்டரீகாஷ-இக்கண் படைத்தது ஆர்த்த ரஷணம் பண்ண வன்றோ –துச்சனாதிகளை யிடுவித்து பரிபவிக்கைக்கோ
ரஷமாம் சரணாகதாம் -என் கை விட்டேன் -என்று பிரபத்தியைப் பண்ணினாள்-
கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம் -ருணம் பிரவ்ருத்தம் இவமே ஹ்ருதயான்னாப சர்ப்பதி-என்று சரண்ய பிரபாவம் சொல்லிற்று இறே

அத பாதகபீதஸ்வம் சர்வ பாவேன பாரத விமுக்தான்ய சமாரம்போ நாராயண பராபவ -என்று தர்ம புத்ரனுக்கு தர்ம தேவதை
-சர்வ பரந்யாசத்தைப் பண்ணி இறை என்றான் இறே
தஸ்மாத் தவம் லோகபர்த்தாரம் விஷ்ணும் ஜிஷ்ணும் ஸ்ரீ யபதிம் -கோவிந்தம் கோபதிம் தேவம் சத்தம் சரணம் வ்ரஜ -என்றும்
தமா நந்த மாசம் விஷ்ணும் அச்யுதம் புருஷோத்தமம் -பக்திப்ரியம் ஸூர ஸ்ரேஷ்டம் பக்த்யா தவம் சரணம் வ்ரஜ -என்றும் –
ஸோஅஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதௌ ஸ்து தௌ நச-சாமர்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ப்ரசீத மே என்றும் சொல்லக் கடவது இ றே –
ஸ்ரீ சாண்டில்ய பகவானும் சம்சாரிகள் உடைய துர்க்கதியையும் பகவல் லாபத்தில் சீர்மையையும் அனுசந்தித்துத் தான் க்ருபாளுவாகையாலே
வ்ருதைவ பவதோ யாதா பூயசீ ஜன்ம சந்ததி தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ –
கெடுவிகாள் சம்சார பாந்தராய் ஜனித்துப் போருகிற நீங்கள் ஒரு ஜன்மத்தைப் பூவுக்கிட்டோம் போல வன்று –
ஒரு பிரபத்தியைப் பண்ணிப் பிழைக்க வல்லி கோளே-என்று தன செல்லாமையாலே சொன்னான் இ றே
ஸ்ரீ கிருஷ்ணனும் மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே -என்று நான் கர்ம அனுகுணமாகப் பிணைத்த சம்சார துரிதம்
ஒருவராலும் விடுத்துக் கொள்ள ஒண்ணாது –என்னையே உபாயமாகப் பற்றினார்க்கு நானே போக்கிக் கொடுப்பேன் -என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும் தூசித் தலையிலே பிரபத்தியைப் பல இடங்களிலும் விதித்துப் போருகையாலும் இம்மஹா பாரதத்துக்கும் இதுவே தாத்பர்யம் –

ஜிதந்தையிலும் ஸ்வேதா த்வீபவாசிகள் சர்வேஸ்வரனுடைய புறப்பாட்டிலே கண் அழகுக்குத் தோற்று
ஜிதந்தே புண்டரீகாஷ நமஸ்தே விஸ்வபாவன-எனபது –
சர்வதா சரணத்வந்த்வம் வ்ரஜாமி சரணம் பரம் -என்றும் -ந காமகலுஷம் சித்தம் -என்றும்
தவ சரண த்வந்த்வம் வ்ரஜாமி -என்பதே அடிதோறும் அடிதோறும் பிரபத்தி பண்ணுவார்கள் –
இப்பிரபத்தி தன்னை -அஹம் அச்ம்யபராதானாம் ஆலயோ அகிஞ்சனோ அகதி -த்வமேவோ பாய பூதோ மே பவதி ப்ரார்த்தனாமதி –
சரணாகதிரித்யுக்தா சா தேவே அஸ்மின் பிரயுஜ்யதாம் -என்று ருத்ரன் அதிகாரி ஸ்வரூபத்தையும் பிரபத்தி லஷண்யத்தையும் சொல்லி
இத்தை சர்வேஸ்வரன் பக்கலிலே பிரயோகிப்பான் என்று சொன்னான் இ றே –
-அநந்ய சாத்யே ஸ்வாபீஷ்டே மகா விஸ்வாச பூர்வகம் ததேகோபாயதா யாச்ஞா பிரபத்திஸ் சரணாகதிம் -என்று இவ்விரண்டு ஸ்லோகங்களும் பிரபத்தியினுடைய லஷண வாக்கியம்
ஆனுகூலச்ய சங்கல்ப ப்ராதிகூல்யச்ய வர்ஜனம் ரஷிஷ்யதி விஸ்வாசோ கோப்த்ருத்வ வரணம் ததா -ஆத்மா நிஷேப கார்ப்பண்யே ஷட்விதா சரணாகதி –
என்று இது பிரபத்திக்கு அங்கம் -பிரபன்னனான பின்பு பிறக்கும் சம்பாவித ஸ்வ பாவங்கள் சொல்லிற்று –

ஸ்ருதியும் இத்தை உபப்ரும்ஹணம் பண்ணின ரிஷிகளும் இத்தை ஆதரித்து அவர்கள் ஆதரிக்கும் அளவன்றிக்கே தர்மஜ்ஞசமய பிரமாணம் வேதாச்ச -என்று
ஆப்த பரிக்ரஹமெ பிரபல பிரமாணம் -வேதம் இவர்கள் பரிக்ரஹத்துக்கு சங்கோ சித்துப் போமித்தனை -என்கையாலே இதுக்கு ஆப்த பரிக்ரஹம் பிரபலம் –
எங்கனே என்னில் -தர்ம புத்திரன் -ஸ்ருத்வா தர்மான சேஷண பாவ நாநி ச சர்வச -என்று புருஷார்த்த சாதனங்களையும் மற்றும் பரம பாவனமான வற்றையும் ஸ்ரீ பீஷ்மரோடு
அதிகரித்து புனரேவாப்ய பாஷத -என்று திரியட்டுக் கேட்டான் -கீழ் சர்வத்தையும் அதிகரித்தானாகில் திரியட்டுக் கேட்டதுக்கு கருத்தென் -என்னில்
-நான் சாஸ்திர கம்ய ஜ்ஞானத்தால் அதிகரித்தது புருஷார்த்தம் ஆகமாட்டாது -என்று –
கோ தர்மஸ் சர்வ தர்மாணாம் பவத பரமொமத-என்று கீழ்ச் சொன்ன தர்மங்கள் எல்லாவற்றிலும் வைத்துக் கொண்டு
உமக்கு அபிமதமாக நிர்ணயித்து இருக்க வேணும் ஏதென்ன –
ஏஷமே சர்வ தர்மாணாம் தரமோ அதிகதமோமத-என்று தர்மங்களில் வைத்துக் கொண்டு அதிகமாக நினைத்து இருக்கும் அர்த்தம் இதுவே காண் என்று சொன்னான் –
அசலையான பக்தியாலே ஆஸ்ரயிக்கப் பாராய் என்று உபதேசிக்கையாலே ஆசார்ய ருசி பரிக்ருஹீதமே பிரபல பிரமாணம் –

ஸ்வ சக்தியால் பிறந்த ஜ்ஞானம் இன்றிக்கே நிர்ஹேதுக பகவத் பிரசாத லபத ஜ்ஞானம் உடையவராய் நமக்கு பரமாச்சார்யர்களான ஆழ்வார்களும்
சம்சார பய பீதராய் பிரபத்தியைப் பண்ணுவது ப்ராப்யத்தில் த்வரையாலே பிரபத்தியைப் பண்ணுவதாகா நிற்பர்கள் – எங்கனே என்னில்
நெறிவாசல் தானேயாய் நின்றானை -4-என்றும்
மாலடியே கை தொழுவான் –58-என்றும்
அந்தரம் ஒன்றில்லை யடை-58- -என்றும்
தன் விலங்கை வைத்தான் சரண் -59-என்றும் பொய்கையாழ்வார்
பணிமலராள் அங்கம் வலம் கொண்டான் அடி –பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் -4-என்றும்
அவர் இவர் என்றில்லை யரவணையான் பாதம் எவர் வணங்கி -12-என்றும்
அன்று இடர் அடுக்க ஆழியான் பாதம் பணிந்தன்றே -13-என்றும் பூதத்தார் –
அரணாம் நமக்கென்றும் ஆவலவன் -78-என்றும்
சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு -99-என்றும் பேயார் –
பழகியான் தாளே பணிமின் -நான்முகன் திருவந்தாதி 22-என்றும்
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சேல் என்ன வேண்டுமே -திருச்சந்த விருத்தம் -92-என்றும் திருமழிசை பிரான் –
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் –5-4-7- என்றும்
உன்னருள் புரிந்து இருந்து -5-4-1- என்றும் -பெரியாழ்வார் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -1- என்றும்
வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் -8-7- என்றும் நாச்சியார் –
திருக் கமல பாதம் வந்து -என்று திருப் பாண் ஆழ்வார்
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் -9-என்றும்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -7- என்றும்
உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை யுகத்தி -38-என்றும் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்-
உன் சரண் அல்லால் சரண் இல்லை -5-1- என்றும்
உன் பற்றல்லால் பற்றிலேன் -5-3- என்றும்
உன் இணை யடியே யடைய லல்லால் – -5-5-என்றும்
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி யடைந்தேன் –1-6-2- என்றும்
நாயேன் வந்தடைந்தேன் -1-9-1- என்றும்
ஆற்றேன் வந்தடைந்தேன் -1-9-8- என்றும்
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -5-8-9- என்றும்
கண்ணனே களை கண் நீயே -4-6-1- என்றும்
நின் அடியினை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே -திருவெழு கூற்று இருக்கை -என்றும் திருமங்கை ஆழ்வார் –
அலர்மேல் மங்கை யுறை மார்பா -6-10-10- என்றும்
புகல் ஓன்று இல்லா வடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10- என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -5-10-11- என்றும்
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -7-2-11- என்றும்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் -5-8-11- என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10- என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -5-8-3- என்றும்
ஆத்தன் தாமரை அடியன்றி மற்றிலம் அரணே-10-1-6- என்றும்
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னல்லால் அறிகின்றிலேன் -10-10-3- என்றும் நம்மாழ்வார் –
மேவினேன் அவன் பொன்னடி -2- என்றும்
அன்பன் தன்னை யடைந்தவர்கட்கெல்லாம் அன்பன் -11–என்று ஸ்ரீ மதுரகவிகள் –

ஆக இவ்வாழ்வார்களைப் பின் சென்ற ஆளவந்தாரும்
ந தர்ம நிஷ்டோச்மி —அகிஞ்சனோ அநந்ய கதி -என்றும்
தவ சரணயோ -என்றும்
அசரண்யா சரணாம் அநந்ய சரணஸ் சரணம் அஹம் பிரபத்யே -என்றும்
லோக விக்ராந்த சரனௌ சரணம் தேவ்ராஜம் விபோ – என்றும் எம்பெருமானாரும் –
ஆக இப்படி வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் -லோகேச த்வம் பரோ தர்ம -என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -என்றும்
கிருஷ்ணம் தர்மம் சநாதனம்-என்றும் விரோதி நிவ்ருத்தி பூர்வகமான நிரதிசய புருஷார்த்தமான கைங்கர்யத்தைப் பெற்று உஜ்ஜீவிக்கைக்கு
இதுவல்லாது சித்த உபாயம் இல்லை -ஆதலால் இப்படி பிராமாணிகனான சேதனனுக்கு பிரபத்தியைப் பற்ற விடுக்கும் என்று அறுதியிட்டார்கள்-

நம் ஆச்சார்யர்களுக்கு இங்கனே இருப்பதொரு நிர்பந்தம் உண்டு -லோக யாத்ரையில் பரிமாற்றங்கள் அடைய வேதா யாத்ரையிலே சேர்ந்து அனுசந்திப்பதொன்று உண்டு
-அது எங்கனே என்னில் -பாதிரிக்குடியிலே பட்டர் ஒரு வேடன் அகத்திலே வர்ஷத்துக்கு ஒதுங்கி எழுந்து அருளி இருக்கச் செய்தே வேடனைப் பார்த்து இவ்விடங்களில்
விசேஷம் என் என்று கேட்டருள இங்கே புதுசாக ஒரு விசேஷம் கண்டேன் -காட்டில் ஒரு மிருகம் பிடிக்கப் போனேன் -அங்கே முயல் குட்டியைப் பிடித்துக் கூட்டிலே விட்டேன்
இதினுடைய தாய் பலகாலம் தொடர்ந்து வர அத்தைப் பின்சாய்ந்து உள்வாசல் அளவும் வந்து புகுரப் புக்கவாறே முன்னே வந்து தண்டனிட்டுக் கிடந்தது
பின்னை இத்தை விட்டேன் -என்று இவ்விசேஷத்தை விண்ணப்பம் செய்தான் -இத்தைக் கேட்டு பட்டரும் வித்தராய் அருளிச் செய்கிறார் –
மாமேகம் சரணம் வ்ரஜ -என்கிற ஜ்ஞானம் முயலுக்கு இல்லை -அரி பிரானான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -என்கிற ஜ்ஞானம் வேடனுக்கு இல்லை –
இவை இன்றிக்கே இருக்க காதுகனாய் இருக்கிற இவன் இது செய்யக் கடவன் ஆனால்
பரம சேதனனானவன் பக்கலிலே பிரபத்தியை உபயோகித்தால் என்னாகக் கடவனோ என்று வித்தரானார் –

தானும் தன்னுடைய ஸ்த்ரீயுமாக ஒரு காட்டிலே இருக்க -நாம் சென்று புக்கவாறே துணுக என்று எழுந்து இருந்து பஹூ மானங்களைப் பண்ணிச் செய்தான் இவன்
நம் வாசி யறிந்து செய்தான் ஒருவன் அல்லன் -இவன் ஜன்மம் இது -பர ஹிம்சை பண்ணி ஜீவிக்கும் வ்ருத்தம்-இப்படி இருக்க இவன் நம்மைக் கொண்டாடிற்றுத் தான்
அபிமானித்த நிழலுக்குள் ஒதிங்கினோம் என்று இ றே –
இனி பரம சேதனனாய் பரம க்ருபாளுவான சர்வேஸ்வரன் அபிமானித்து உகந்து அருளின திவ்ய தேசங்களைப் பற்றி வர்த்திக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே இவன்
என் நினைத்து இருக்கிறானோ என்று வித்தரானார் –

மற்றை நாளையில் பிரயாணத்திலே தூர எழுந்து அருளின ஆயாசத்தாலே அமுது செய்து ஜீயர் மடியிலே கண் வளர்ந்து அருளினார் -அப்போது விடிந்தது
-கெட்டேன்-என்னை எழுப்பிற்றிலர்-கால் நடையே வழி நடந்த விடாயை மதியாதே என் பக்கலிலே இத்தனை பரிவராய் இருந்தவிடம் உமக்கு
நாம் சொன்ன த்வயத்தை விஸ்வசித்த மனம் இ றே -என்று அருளிச் செய்தார்

பட்டர் எம்பாரோடே ரஹச்யம் கேட்டாராய் இ றே இருப்பது -இப்படி இருக்கச் செய்தே எம்பெருமானார் இவர் பதஸ்தராகிற போது இவர் கையிலே புஸ்தகத்தைக் கொடுத்து
செவியிலே த்வயத்தைச் சொல்லி பெருமாள் திருவடிகளிலே கொண்டு புக்கு -நான் இவருக்கு வேண்டும் வித்யை கொடுத்தேன் -நீர் இவருக்கு வேண்டும்
ஆயுஸ் சைக் கொடுத்து அருள வேணும் என்று பெருமாள் திருவடிகளில் காட்டிக் கொடுத்து த்வயத்தைச் சொல்லி சரணம் புக்கார் –

சிறியாத்தான் எம்பார் ஸ்ரீ பாதத்திலே ஸ்ரீ பாஷ்யம் வாசித்துச் சமைந்து போகக் காலமானவாறே தீர்த்தமாடி ஈரப்புடைவையோடே தண்டன் இட்டுக் கிடந்தான் –
இதுவென் தாசரதி எழுந்திராய் உனக்கு அபேஷை என் -என்று கேட்டருள -மிலேச்ச தேசம் ஏறப் போகா நின்றேன் –
அங்கு நமக்குத் தஞ்சமாக ஒரு வார்த்தை கேட்கலாவார் இல்லை –
திரு உள்ளத்திலே ப்ரியதமமாகவும் ஹிததமமாகவும் அறுதியிட்டு இருக்கும் அர்த்தத்தை எனக்கு அருளிச் செய்ய வேணும் -என்ன
எம்பெருமானார் ஸ்ரீ பாதமே -பெரிய பிராட்டியார் ஸ்ரீ பாதமே –பெருமாள் ஸ்ரீ பாதமே -த்வயத்தில் அறுதியிட்டு இருக்கும் அர்த்தத்துக்கு மேற்பட
ஸ்ரேஷ்டமாய் இருப்பதொரு அர்த்தம் இல்லை என்று அருளிச் செய்தார் –

சிறியாத்தானை அழைத்து -திருக்கண்ண புரத்திலே ஆய்ச்சி ஸ்ரீ பாதத் தேறப் போய் வரவில்லையே -உனக்குக் கூலி கொடுக்கும் -என்று அருளிச் செய்தார் –
அப்படியே அவ்வருகே போய் ஆய்ச்சி ஸ்ரீ பாதத்திலே சேவித்து விடை கொண்டு போரப் புக்கவாறே சிறியாத்தானுக்கு அருளிச் செய்த வார்த்தை –
எம்பெருமான் நாராயணனாய் இருக்க அநாதிகாலம் அவ்வுறவை அறுத்து கொண்டிருந்த சேதனனை அவன் திருவடிகளிலே பிணைக்கைக்கு பற்றாசு பிராட்டி உண்டு என்று
நிர்பரனாய் இரு என்று அருளிச் செய்தார் -இத்தைக் கேட்டருளி எம்பார் தட்டுக் கூலிக்கும் அவ்வருகே போய்த்து என்று அருளிச் செய்தார் –
இப்படியே இருப்பதொரு அர்த்தம் இல்லையாகில் சம்சாரி சேதனனுக்கு உள்ள தடைய எம்பெருமானுடைய நிக்ரஹத்துக்கு
ஹேதுக்களாய்க் கிடக்க எம்பெருமானை பிராபிக்க வேறொரு பொருள் இல்லை -என்று அருளிச் செய்தார் –

பெற்றி ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்தாள் ஒரு கொற்றியம்மைக்கு குருபரம்பரை முன்னாக த்வயத்தை அருளிச் செய்து விட்டார் –
அவள் சிறிது நாள் கழிததவாறே -எனக்கு பிராட்டி திருமந்த்ரத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்க –
இவளுக்கு இனி பிராட்டி திருமந்த்ரத்தைச் சொல்வோமாகில் இன்னும் ஒரு மந்த்ரத்தைச் சொல் என்று இத்தை அநாதரித்துப் போம் என்று பார்த்து –
எல்லா மந்த்ரங்களில் உள்ளது எல்லாம் உண்டு என்னும் நிஷ்டை பிறக்கைக்காக பிராட்டி திருமந்த்ரமும் உனக்குச் சொன்ன த்வயத்தில் அந்தர்க்கதம் –
அங்கே சொன்னோம் காண் -என்று அருளிச் செய்தார் –
பிராட்டி திருமந்த்ரத்தை ஜபித்துக் கொள்ளும் பலத்தை இது தன்னையே ஜபித்துக் கொள் என்று அருளிச் செய்தார் –

வீராணத்து அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயிக்கைக்கு நம்பிள்ளையைப் புருஷகாரமாகக் கொண்டு வந்தார் –
இவனைக் காட்டிக் கொடுத்து இவனுக்கு ஹிதத்தை அருளிச் செய்ய வேணும் என்ன -சம்சாரிகளில் ஒருவருக்கும் ஹிதம் சொல்லலாகாது –
என்று ஸ்வப்னம் கண்டேன் -அவனுக்கு நீர் சொல்லும் என்று அருளிச் செய்தார் -ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயிக்க வந்தவனுக்கு
எழுந்து அருளி இருக்கச் செய்தே நான் சொல்லுகையாவது என் -அவனுக்கு ஸ்ரீ கோபால மந்த்ரத்தை யாகிலும் அருளிச் செய்யலாகாதோ
-ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்தானாய் போந்தபடி என்று விண்ணப்பம் செய்ய –
ஆனால் அப்படி செய்கிறோம் என்று ஆயர்தேவின் திருவடிகளிலே கொண்டு குருபரம்பரை முன்னாக த்வயத்தை அருளிச் செய்தார் —
இத்தைக் கண்டு அருளிச் செய்ய புக்கதொன்று -தலைக் கட்டிற்று ஒன்றாய் இருந்தது -என்ன -என்னை ஒழியப் போமாகில் போகிறது என்று இருந்தேன்
-இனித்தான் சொல்ல வேண்டின பின்பு நான் விச்வசித்து இருக்குமது ஒழிய வேறு ஒன்றைச் சொன்னாம் ஆகில் அவனை விப்ரலம்பித்தேனாகாதோ -என்று அருளிச் செய்தார் –

நம்பிள்ளை நஞ்சீயரை அல்லாத தர்சனங்களுக்கு அதிகாரிகளும் போர யுண்டாய் -பிரமாணங்களும் போர யுண்டாய் இரா நின்றது
நம் தர்சனத்துக்கு பிரமாணங்களும் சுருங்கி அதிகாரிகளும் சுருங்கி இருப்பான் என் -என்று கேட்க
-அதிகாரிகள் அன்றியிலே ஒழிந்தது சம்சாரிகள் அஜ்ஞ்ஞர் ஆகையாலே -எங்கனே என்னில்
ஜ்யோதிஷ்டோமாதிகளைப் பண்ணி ஸ்வர்க்கத்தை லபிப்பான் -என்று சாஸ்திரங்கள் சொன்னால் அவ்வளவும் போகாதே ஜ்யோதிஷ்டோமாதிகள் பண்ணிப்
புத்திர பஸ் வன்னாதிகளைப் புருஷார்த்தமாகப் பற்றிப் போரா நின்றார்கள் -ஸ்வர்க்கம் தான் நரக ஸ்தானம் யென்னும்படியாய் இருக்கிற
அபுநாவ்ருத்தி லஷண மோஷத்துக்கு அதிகாரம் உண்டாகப் போகிறதோ -என்று அருளிச் செய்தார் –
பிரபத்திக்கு பிரமாண அபேஷை இல்லை என்று இருப்பன்-யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -ஆனந்தோ ப்ரஹ்ம -சமஸ்த கல்யாண குணாத்மகோ அசௌ-என்கிற
நிர்தோஷ பிரமாணத்தாலே அவன் சர்வஜ்ஞன் சர்வசக்தன் ப்ராப்தன் சமஸ்த கல்யாண குணாத்மகன் என்னும் இடம் பிரசித்தம்
நாம் அஜ்ஞர் அசக்தர் என்னும் இடம் நமக்கே தெரியும் ஆகையால் அமிழ்ந்துமவன் நெடியவன் கையைப் பிடிக்கச் சொல்ல வேணுமோ
-தனது ஆபத்தே உபதேசிக்கும் என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானாருக்கு இங்கனே இருப்பதொரு நிர்பந்தம் உண்டு -எங்கனே என்னில் கண்னழிவற்றான் ஒரு வைஷ்ணவனைக் கண்டால் அவனுக்கு பிரீதிக்கு போக்குவீடாக
ஒரு த்வயத்தை அருளிச் செய்வர் -பிறருடைய துர்க்கதியைக் கண்டால் திருவுள்ளத்தால் இரங்கி அருளிச் செய்வதும் த்வயத்தையே –
பெரிய கோயில் நாராயணன் மகனை ஏகாயனரோடே கூடி இருக்கக் கண்டார் -அவனைக் கையைப் பிடித்துக் கொண்டு
பெருமாள் திருவடிகளிலே புக்கு -பாலனாகையாலே உனக்கு ஒரு பிரமாணங்களால் ஸ்தாபிக்கப் போகாது -நான் சகல வேத சாஸ்திரங்களையும் ஆராய்ந்து பார்த்தவிடத்தில்
இவ்வாத்மாவுக்கு தஞ்சம் த்வயத்துக்கு அவ்வருகு கண்டிலேன் -நீயும் அத்தையே விஸ்வசித்து இரு -என்று ஸ்ரீ சடகோபனை எடுத்து சூழறுத்து கொடுத்தார்
-அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டராய்ப் போந்தார் –

எம்பெருமானார் வெள்ளை சாத்திப் போசல ராஜ்யத்தேற எழுந்து அருளித் திருநாராயண புரத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே அம்மங்கி அம்மாள் பிரிவாற்றாமையாலே
திருமேனியும் வெளுத்து வைத்தியர்களும் பரிஹாரம் பண்ண வென்று உபக்ரமித்தவாறே நிதானம் அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ
எம்பெருமானார் பிரிவாற்றாமையாலே வந்தது -அவர் திருவடிகளிலே கொண்டு போய் விடுங்கோள என்றார் –
அங்கேற நடந்து அவ்விடத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே அந்தவிடத்திலே எம்பெருமானாரைக் கண்டு
அவர் அணைத்துத் தழுவிக் கொண்டார் -உடம்பில் சோகம் போய்த்து-என்னைப் பிரிந்து உடம்பு வெளுத்து இத்தனை தூரம் வந்தவருக்கு நாம் பண்ணும் உபகாரம் என்

ஆழ்வான் பரமபதத்தேறப் போகைக்கு பெருமாள் பாடே வீடு பெற்று கூட்டத்திலே வந்திருக்கச் செய்தே இனிப் பெருமாளை நம்மாலே விலக்கப் போகாது
இனி அந்திம காலத்திலேயே என்னை அழைத்து வாருங்கோள்-என்று அந்திம சமயத்திலே எழுந்து அருளி ஆழ்வானுக்கு செவியிலே த்வயத்தை அருளிச் செய்தார் –
அருகிருந்த முதலிகள் இச்சமயத்திலே த்வயத்தைச் சொல்ல வேணுமோ -என்று கேட்க ஆழ்வான் பிரகிருதி அறியீர்களோ -இத்தசையில் த்வயத்தைச் சொன்னால்
கர்ப்பூர நிகரத்தை நாவில் இட்டால் போலே இருக்கும் காண் -என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானார் அந்திம தசையிலே முதலிகள் அடையத் திரண்டு இருந்து -எங்களுக்குத் தஞ்சமாய்த் திருவுள்ளத்துக்கு பிரியமாய் இருப்பதொன்றை
நாங்கள் விச்வசித்து இருக்கும் படி அருளிச் செய்ய வேணும் -என்று கேட்க -எல்லோரும் ஸ்ரீ பாஷ்யத்திலே வாசனை பண்ணுகையே நமக்கு ப்ரியம்
-அதுக்கு மாட்டாதார் திரு நந்தவனம் செய்து திருப்படித்தாமம் பறித்து திருமாலை எடுக்கையும் பிரியதரமாய் இருக்கும் –
அது எல்லாருக்கும் ஒக்கச் செய்யப் போகாது -த்வயத்திலே வாசனை பண்ணி விஸ்வசித்து இருக்கை மிகவும் பிரியதமமாய் இருக்கும் என்று அருளிச் செய்தார் –

அனந்தாழ்வான் போசல ராஜ்யத்திலே எழுந்து அருளின போது ஜீயருடைய பூர்வாஸ்ரமத்தில் ஐஸ்வர்யமும் இவர் செருக்கும் இருக்கும்படியை அனுசந்தித்துப் போந்தானாய்
ஜீயர் இவற்றை அடைய விட்டு சந்யசித்து எழுந்து அருளின போது -அவரைக் கண்டு உன்னுடைய மார்த்தவமும் உன்னுடைய செருக்கும் கிடக்க சந்யசித்தாய் என்று
அருளிச் செய்து இனி செய்யலாவது இல்லை இ றே என்று குளிர நோக்கி திருவேங்கடமுடையானே இவனைப் பார்த்து அருள வேணும் -என்று வேண்டிக் கொண்டு
திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய நிஷ்டனாவாய் என்று வாழ்த்தினான் –

கோயில் ஏறப் போனால் ஒரு மடமும் கார்யமுமாகக் கடவது -அப்போது பட்டரை த்ருஷ்டாத்ருஷ்டங்கள் இரண்டுக்கும் கடவர் என்று நினைத்துப் போவதொரு போக்கு உண்டு
-அதிலே ஓன்று பட்டரைக் கொண்டு கொள்வது -ஒன்றைப் பெருமாளைக் கொண்டு கொள்வது –
அங்கனே செய்யாத போது-நீர் ஒரு கோடி த்ரவ்யத்தை பட்டர் கையிலே கொடுத்தாலும் -அவர் செருக்காலே அரை ஷணத்திலே அழித்து விடுவர் –
-உம்முடைய கார்யத்தில் ஆராயாத போது நீர் பட்டரை வெறுப்புதிராகில் உமக்கு விநாசமாம்
-பெருமாளோடு வெறுத்த போது பட்டரைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் –என்று பணித்தான் –

சிறியாண்டான் அம்மாள் அந்திம தசையிலே பணித்த வார்த்தை -திருவேங்கடமுடையான் தன ஸ்வரூபத்தை மறந்து என் ஸ்வரூபத்தை அனுசந்தித்தான் ஆகில்
எனக்குப் பழைய நரகம் போராது-இன்னமும் சில நரகம் சிருஷ்டிக்க வேணும் என்று இரா நின்றேன்
-என் ஸ்வரூபத்தை மறந்து தன ஸ்வரூபத்தை அனுசந்தித்தான் ஆகில்
எனக்குப் பழைய திருநாடு போராது-இன்னமும் சில திருநாடு சிருஷ்டிக்க வேணும் என்று இரா நின்றேன் –

மருதூர் நம்பி அந்திம தசையிலே தம்முடைய ஊரிலே எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கச் செய்தே விண்ணப்பம் செய்த வார்த்தை –
மூன்று ஜன்மம் திருவடிகளிலே ப்ராதிகூல்யம் பண்ணின சிசூபாலன் திருவடிகளைப் பெற -அநேக ஜன்ம அபராதத்தைப் பண்ணிப் போந்த நான்
திருவடிகளைப் பெறாது ஒழிகை வழக்கோ என்ன அப்போதே திருவடிகளைப் பெற்றார் –

நம்பி திருவழுதி வளநாடு தாசர்க்கும் பிள்ளை திருநறையூர் அரையர்க்கும் பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
பொய்யே யாகிலும் அவன் உகந்து அருளின தொரு கோயிலிலே புக்குப் புறப்பட்டுத் திரியவே அந்திம தசையிலே எம்பெருமான் முகம் காட்டும் –
அவன் முகம் காட்டவே இவ்வாத்மா திருந்தும் -என்று -எம்பெருமானுக்கு இல்லாததுமாய் இவ்வாத்மாவுக்கு உள்ளதுமாய் அவனைப் பெறுகைக்கு
பெரு விலையனுமாய் இருக்கும் உபாயம் அஞ்சலி -என்று அருளிச் செய்தார் -கருட முத்ரைக்கு பாம்பு அகப்படுமா போலே
சர்வ சக்திகனான சர்வேஸ்வரனும் அஞ்சலி பரமா முத்ரா -என்கிறபடி அகப்படும் –

ஆக இப்படி ஆசார்ய ருசி பரிக்ருஹீதமாய் ஆயத்து இருப்பது த்வயம் -இதினுடைய ஆநுபூர்வியைச் சொல்லி அதுக்கு உள்ளீடான அர்த்தத்தைச் சொல்லிவிட அமையாதோ –
இவ்விதிஹாசங்கள் எல்லாம் திரள நீர் சொன்னதுக்கு பிரயோஜனம் என் -என்னில் புறம்புள்ள பிரமாணங்கள் கிடக்கச் செய்தே இத்தனையும் ஆப்தர்
பரிக்ரஹத்துக்குப் போந்தது ஒன்றாகாதே என்று கேட்கிறவனுடைய நெஞ்சிலே இதினுடைய வைபவம் பட்டு ருசி விச்வாசங்களுக்கு உறுப்பாக
திருக்கண்ண புரத்திலே செருகவம்மாள் எல்லா அபராதங்களையும் -ஷமஸ்வ -என்று வேண்டிக் கொள்வதும் செய்தார்
-ஷமித்தோம் என்று பகவத் உக்தியும் உண்டாய் இருந்தது –
ந ஷமாமி கதாசன -என்று என்னடியார் திறத்தில் அபராதம் பண்ணினவர்களை ஒருக்காலும் பொறேன் என்று உண்டாய் இருந்தது
-இது சேருகிறபடி என் என்று கேட்க –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்திலே அபசாரத்தைப் பண்ணி வைத்துத் தன முன் நின்று சரணம் புகுமன்று பொறேன் என்கிறது -புருஷகாரத்தை முன்னிட்டு கொண்டு
சரணம் புகுருகையாலே இவர்க்கு ஷமஸ்வ என்னத் தட்டில்லை –
ஆகையாலே அசஹ்யா அபசாரத்துக்கு இதுவே பரிஹாரம் -பிரஜை பண்ணின குற்றம் தாய் பொறுத்தால் பின்னை ஆராய்வார் இல்லை இ றே –

பக்தி நிஷ்டனுக்கு கர்ம அவசா நத்திலே மோஷமாவான் என்-பிரபன்னனுக்கு சரீர அவசா நத்திலே மோஷமாவான் என் –
தஸ்ய தாவதேவ சிரம் -அவனுக்கு அவ்வளவே விளம்பம் -அத சம்பத்ச்யே-அநந்தரம் சம்பன்னனாகக் கடவன் என்கிற ஸ்ருதி இருவர்க்கும் பொதுவன்றோ
-கர்ம அவசானே மோஷம் என்னவுமாம் சரீர அவசானே மோஷம் என்னவுமாம் என்று இத்தை நியமிப்பார் யார் -என்ன
பக்தி நிஷ்டனுக்கு இருக்கவிருக்க உபாசனம் பக்வம் ஆகையாலே பலமுண்டு –
பிரபன்னனுக்கு கர்த்தவ்யம் ஓன்று இல்லாமையாலும் ஈஸ்வரனுக்கு அஜ்ஞான அசக்திகள் இல்லாமையாலும்
-இங்கு ஒரு பிரயோஜனம் இல்லாமையாலும் பிரபன்னனுக்கு சரீர அவசா நத்திலே மோஷம் -ஆனால் ஜ்ஞானம் பிறந்த போதே சரீரம் போகாது ஒழிவான் என் என்னில்
பகவத் விஷயத்திலே தீவர சம்சர்க்கம் இல்லாமையாலே இவனுக்குள்ள மாத்ரம் தான் கர்ம ஷயம் பிறந்தவாறே சரீரம் விடுமாகில் அநந்தரம் நரகமாய் இருக்குமாகில்
அத்தைத் தப்பி எம்பெருமானைப் பெறலாய் இருக்குமாகில் பெற்றால் ஆகாதோ என்று அன்றோ இவன் இருப்பது -இப்போதே பிரக்ருதியை விட வேணும் என்னும் த்வரை
பிரபத்தி காலத்தில் பிறவாமையாலும்-இவன் இருந்தால் பின்னையும் சில அநுகூலரைக் கிடைக்கும் என்று ஈஸ்வரனும் இருக்கையாலும் பிரியமாய் இருக்கும்
ஆனால் இருக்கும் தனை நாளும் ஸூ கோத்தரமாக வையாது ஒழிவான் என் என்னில் துக்கோத்தரமாய் இருக்கச் செய்தேயும் இத்தை விட மாட்டாதவன் இதிலே
அல்ப ஸூ கம் காணுமாகில் பின்னை அவ்வருகு நினையானே -அவனுக்கு ஹிதமே பார்க்குமவன் ஆகையாலே -உபாசகனுக்கு
இருக்கவிருக்க இதிலே உபாசனம் பக்வம் ஆகிறவோபாதி இவனுக்கும் இருக்கவிருக்க இதிலே ருசி பிறக்கைக்கு உடலாம் -நம்மையே உபாயமாகப் பற்றினான் ஆகில்
இனி மேல் ஒரு போகியான அனுபவம் கொடுக்க விருந்தோமாகில்-இனி சரீரம் விடும் தனையும் கர்ம அநு குணமாக ஜீவிக்கிறான் என்று உதாசீனனாய் இருக்கும் –

நஞ்சீயர் உபாசகருக்குச் சொன்ன க்ரமம் அடைய பிரபன்னனுக்கு தேஹயாத்ரா சேஷமாக ரஹச்யத்தில் உண்டு என்று அருளிச் செய்வர் –
திருமந்த்ரத்தை இடக்கைப் பத்துக் கொண்டு எண்ணுகை கர்மயோகம் -அதினுடைய அர்த்த அனுசந்தானம் பண்ணுகை ஜ்ஞான யோகம் –
அவ்வர்த்தம் இருக்கை பக்தியோகம் -பக்தி பரவசராய் எம்பெருமானே நிர்வாஹகன் என்று துணிகை பிரபத்தி –

பிரபன்னர் தான் த்ரிவிதமாய் இ றே இருப்பது -பக்தி பரவசராய் சாதனா அனுஷ்டான ஷமர் அல்லாமையாலே சரணம் புகுவாரும் –
ஸ்வரூப ஜ்ஞானத்தால் அவனைப் பற்றி இருப்பாரும் -இவை இரண்டும் ஒழியத் தந்தாமுடைய அஜ்ஞான அசக்திகளையும் முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுவாருமாய்
த்ரிவிதராய் இருப்பார் -உபாயம் எம்பெருமானே -அங்கம் அவனுடைய ஜ்ஞான சக்த்யாதி குணங்கள் –

திருமந்த்ரத்தை ஒழிந்த சாஸ்திரங்கள் அடைய சேதனனுடைய ஜ்ஞான சக்த்யாதிகள் கொண்டே எம்பெருமானைப் பெறலாம் என்றது –
திருமந்தரம் இவனுடைய பாரதந்த்ர்யா ஜ்ஞானத்தாலே பெறலாம் என்றது –
சரம ச்லோஹம் இவனுடைய பாரதந்த்ர்யமும் விலக்காமைக்கு உறுப்பாம் இத்தனை -பகவத் பிரபத்தியே சரமமான உபாயம் -என்கிறது –
த்வயத்தில் இவனுக்கு விடச் சொன்ன அர்த்தமும் அழகியதாக விடவும் போகாது -பற்றச் சொன்ன அர்த்தமும் அழகியதாகப் பற்றவும் போகாது
நாமோ அஜ்ஞ்ஞர் அசக்தர் அப்ராப்தர் ஈஸ்வரன் ஸ்வதந்த்ரன் நாம் என் செய்யக் கடவோம் என்று அஞ்சுவார்க்கு
அஞ்ச வேண்டாதபடி தோஷமே பச்சையாக நின்ற நிலையிலே பெறலாம் என்கிறது –

ஆகையாலே கிரியையாலும் ஜ்ஞானத்தாலும் துணிவினாலும் பெற வேணும் -ருசி மாத்ரம் உடையார்க்குப் பாசுர மாத்ரத்தாலே பெறலாம் என்கிறது த்வயம்
மாதவன் என்றதே கொண்டு –என்றும் -சரணம் இதயம் வாசமுதைரிரம் -என்றும் சொல்லக் கடவது இ றே –
வாச்யங்களில் சர்வேஸ்வரனுக்கு அவ்வருகு இல்லாதாப் போலே உபாதேயமான வாசக சப்தங்களில் த்வயத்துக்கு அவ்வருகு இல்லை
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -என்னக் கடவது இ றே
தன்னாலே எம்பெருமானைப் பெறப் பார்க்கை இளிம்பு -தன்னைப் பொகட்டு எம்பெருமானாலே எம்பெருமானைப் பெறப் பார்க்கை சதிர் -இவனுடைய அபராதமும் ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யமும் ஜீவியாதபடி பண்ண வல்ல பெரிய பிராட்டியார் சம்பந்தம் கொண்டே எம்பெருமானைப் பெறப் பார்க்கை மா சதிர் –

ஜ்ஞான கர்ம அனுக்ருஹீதையான பக்தியோகத்தை முமுஷுவுக்கு பகவத் பிராப்தி சாதனம் என்று சாஸ்திரங்கள் சொல்லா நிற்க
நம் ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும் இவர்களுக்கு உள்ள ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களில் குறைந்த பிரபன்னராய் இருப்பாரும் இப்பிரபத்தியை விஸ்வசித்து நிர்ப்பரராய்
இருக்கிறது என் கொண்டு என் என்னில்
அனாதிகாலம் பண்ணின புத்தி பூர்வாக அபராதங்களுக்கு பிராயச் சித்தம் ஆகையாலும் சர்வாதிகாரம் ஆகையாலும் ஆச்சார்யா ருசி பரிக்ருஹீதம் ஆகையாலும்
கர்ம அவசானம் பார்த்து இராதே தேக அவசானத்திலே மோஷத்தைத் தருகையாலும் -மற்றை உபாயங்களுக்கு அங்கமாக விதித்து இவ்வுபாயத்துக்கு அத்தைத் தவிர்த்துக் கொடுக்கையாலும் விரோதியினுடைய ப்ராபல்யத்தாலும் தன்னுடைய ரஷண்த்தில் தனக்கு பிராப்தி இல்லாமையாலும் ரஷகனுக்கு ரஷிக்கை முறைமையாகையாலும்
நம் ஆச்சார்யர்கள் த்வயத்தையே தஞ்சகமாக நினைத்து இருப்பர்கள்-
எம்பெருமானுடைய கிருபை உபாயம் -கிருபைக்கு அடி இவனுடைய கதி ஸூந்யதை-இவனுடைய ஸூ க்ருதமானாலோ வென்னில்
-ஸூ க்ருத துஷ்க்ருதங்கள் இரண்டும் அப்ரயோஜகம் -எங்கனே என்னில் ருஷிகளையும் காக விபீஷணாதிகளையும் ஒக்க ரஷிக்கையாலே –

திருமந்தரம் பிராப்ய பிரதானம் சரம ச்லோஹம் பிராபக பிரதானம் -த்வயம் இவை இரண்டிலும் ருசி உடையார் இவ்விரண்டையும் சேர அனுசந்திக்கும் படி சொல்லுகிறது
திருமந்தரம் ஸ்வரூபம் சொல்லுகிறது -ஸ்வரூப அனுரூபமான உபாய விதானம் பண்ணுகிறது சரம ச்லோஹம் -விஹிதமான உபாயத்தினுடைய அனுஷ்டானம் த்வயம் –
திருமந்தரம் ஸ்வரூபம் சொல்லுகிறது என்கிறவிடம்-ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறதோ பர ஸ்வரூபம் சொல்லுகிறதோ என்னில்
பர ஸ்வரூபம் சித்தமாகையாலே அதில் சாதிக்க வேண்டுவது இல்லை -இவனுடைய ஸ்வரூபம் இ ரே திரோஹிதமாய்க் கிடக்கிறது
அத்திரோதாயகம் போய் நிஷ்க்ருஷ்ட வேஷமான ஸ்வரூபம் இன்னது என்று அறிய வேண்டுகையாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது –
பர ஸ்வரூபம் சொல்லுகிறது என்றாலும் ஈஸ்வர ஸ்வரூபம் சம்பாதிக்கிறது ஓன்று அன்று இ றே-அறியாதவனுக்குச் சொல்லுகிறது ஆகையாலே
பர ஸ்வரூபம் சொல்லுகிற திருமந்தரம் பிராப்ய பிரதானயம் என்ற போதே பிராபகம் அப்ரதான்யேன உண்டாகக் கடவது -எப்பதத்திலே என்னில்
திருமந்த்ரத்தில் நமஸ் ஸி லே -ம -என்று ஷஷ்டி விபக்தி எனக்கு என்கையாலே -அத்தை நகாரம் நிஷேதிகையாலே தன்னோடு தனக்கு உண்டான அன்வயத்த்தைத் தவிர்க்கிறது
-தான் என்று வைத்து தன்னோடு தனக்கு அந்வயம் இல்லை என்னும் இடத்துக்கு கருத்து என் என்னில் -தன்னோடு தனக்கு அந்வயம் இல்லை என்றவிடம்
ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்த்ர்யத்தைச் சொன்னபடி –
இப்பர தந்திர வஸ்துவுக்கு ஸ்வ தந்த்ரன் ரஷகன் ஆக வேண்டுகையாலே அவ்வழியாலே ஈஸ்வரனுடைய உபாய பாவம் ஆர்த்தமாகவும் சொல்லிற்றாகக் கடவது
-அங்கன் அன்றியே ஸ்தான பிரமாணத்தாலே சாப்தமாகவும் சொல்லக் கடவது –
ஸ்தான பிரமாணம் கொண்டு சாப்தமாதல் -ஆர்த்தமாதல் செய்ய வேண்டுகையாலே அப்ரதானயேன ப்ராபகம் -பிராப்ய பிரதானமே திருமந்தரம்

திருமந்தரம் ஸ்வரூப ஜ்ஞான வைசத்ய ஹேது என்று அனுசந்திகக் கடவோம்- த்வயம் இவற்றினுடைய அர்த்த அனுசந்தானம் என்று அனுசந்திக்கக் கடவோம்
சரம ஸ்லோஹம் இவற்றுக்கு பிரமாணம் என்று அனுசந்திகக் கடவோம்
திருமந்தரம் சகல வேத தாத்பர்யம் என்று அனுசந்திகக் கடவோம் -சரம ஸ்லோஹம் சரண்யனுக்கு அபிமதம் என்று அனுசந்திகக் கடவோம் –
த்வயம் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் என்று அனுசந்திகக் கடவோம் –
ஆக எல்லார்க்கும் அபிமத லாபத்துக்கும் அநபிமத நிவ்ருத்திக்கும் அவனே உபாயமாக ச்வீகரிக்கை –
-இது தன்னில் நிஷ்டையில் அருமையாலே இது தான் ரஹச்யமுமாய் அதிக்ருதாதிகாரமுமாய் இருக்கும் –

த்வயம் என்று திருநாமமான படி எங்கனே என்னில் உபாய உபேயமான அர்த்த த்வயத்துக்கும் வாசகமான வாக்யத்வயத்தை யுடையதாகையாலே –
இத்தால் கர்மாத்யுபாய ஆபாச நிவ்ருத்தி பூர்வகமான உபாயத்துக்கும் ஐஸ்வர் யாத் உபேய ஆபாச நிவ்ருத்தி பூர்வகமான உபேயத்துக்கும் தந்த்ரேண
புஷ்க்கலாமாகச் சொல்லுகையாலே வாக்யத்வயம் என்று திருநாமாய்த்து -இது தான் நம் ஆச்சார்யர்களுக்கு நித்ய அனுசந்தானமுமாய் இருக்கும்
இது சொன்னவன் ஆச்சார்யனாகவும் கடவன்- கேட்டவன் சிஷ்யனுமாகவும் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு –

இது தான் வாக்யத்வயம் என்று மந்த்ரத்வயம் உண்டு -திருமந்த்ரத்தின் உடைய விசத அனுஷ்டானம் ஆகையாலே –
மந்த்ரத்வமாவது -மந்தாத் மந்திர -ஆதல் மந்தாரம் த்ராயத இதி மந்திர -ஆதல் யாவதாயுஷம் மனனம் பண்ணினாரையும் தரிப்பிக்குமதாகையாலே மந்த்ரத்வம் உண்டு என்கிறது –
ருஷிச் சந்தோ தேவதைகள் இல்லை யாவன் என் என்று நஞ்சீயரைக் கேட்க இது சொல்லுகிற அர்த்தத்துக்கு கூட்டு வேண்டும் அன்றதன்றோ
இதுக்கு கூட்டு வேண்டுவது என்று அருளிச் செய்தார் –

த்வயத்தில் அர்த்தத்தை புத்தி பண்ண இச் சப்தத்தாலே திரு முன்பே விண்ணப்பம் செய்யலாமோ என்று நஞ்சீயரைக் கேட்க
இச் சப்தம் தன்னாலே விண்ணப்பம் செய்ய வேணும் என்று அருளிச் செய்தார்
-இப்பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம் வேறொரு பாசுரத்துக்கு சுரவாது காண் என்று அருளிச் செய்தார் –

———————————————————-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: