ஸ்ரீ கீதா சாரம் -ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

ஸ்ரீ கிருஷ்ணாஸ்ரைய –ஸ்ரீ கிருஷ்ணபல –ஸ்ரீ கிருஷ்ண நாதாச்ச –பாண்டவா –
அஸ்தானே கலங்கிய -அர்ஜுனனை -ஸ்தி தோஸ்மி கத சந்தேஹ கரிஷ்யே வசனம் தவ -என்று சொல்ல வைத்து அருளினான்
ஜிதேந்த்ரியரில் தலைவனாய் ஆஸ்திக அக்ரேசரனாய்-கேசவஸ்யாத்மா என்று கிருஷ்ணனுக்கு தாரகனாய் இருக்கும் அர்ஜுனன் -ச்நேஹிதன் சிஷ்யன்–ஆக்கிக் கொண்டு இவனுக்கே ஸ்ரீ கீதா சாஸ்த்ரத்தை உபதேசிக்க -திரு உள்ளம் பற்றினான் –
சிஷ்யத்வம் உண்டாக நிர்வேதம் அங்கம் என்பதால் -தேர்ப்பாகனாகிக் கொண்டு பந்துக்களைக் கண்டு மோகிக்கச் செய்து -சோக விஷாதங்களை உண்டாக்கி –
அஹம் சர்வஸ்ய பிரபவோ மத்தஸ் சர்வம் ப்ரவர்த்ததே –என்று தானே அருளிச் செய்கிறபடி –
சிஷ்யஸ் தேஹம் சாதிமாம் த்வாம் பிரபன்னம் -மாயத்தேர் பாகனுடைய மாய மந்த்ரம் செய்வித்த செயல் அன்றோ –
ஜ்ஞான கர்மங்களை அங்கமாக உடைத்தான பக்தி யோகத்தை திருவவதரிப்பித்து அருளிச் செய்ய திரு உள்ளம் பற்றி ஸ்ரீ கீதா சாஸ்திரம் அருளிச் செய்தான்
இதுவே பிரதான லஷ்யம்
வேத வியாச பகவான் அருளிச் செய்த அனுக்ரஹத்தால் யுத்தரங்கத்தில் வந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் முகார விந்தத்தில் நின்றும்
கீதாம்ருதத்தை சாஷாத்தாக ஸ்ரவணம் பண்ணி விவித விசித்திர யுத்த விருத்தாங்களை எல்லாம் கரதலாமலமாக கண்டு உணர்ந்து
த்ருதார்ஷ்டனுக்கு யுத்தத் செய்திகளை சொல்லி –த்ருஷ்ட்ராஷ்ர உவாச -தொடங்கி
சம்வாத ரூபமாக ஸ்ரீ கீதா சாஸ்திரம் ஆரம்பித்து 18-74 /75/76/77/78–ஸலோஹங்கள் சஞ்சயன் சொல்லி முடிப்பதாக முடிகிறது
ஆத்மா மாயயா சம்பவாமி –இச்சாக்ருஹீ தாபி மதோரு தேஹ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்கிறபடி
இச்சையினால் திவ்ய மங்கள விக்ரஹங்களைக் பரிஹரித்துக் கொண்டு திருவவதரிக்கிறான் –

ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத –த்யக்த்வா தேஹம் புநர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜூன-
மாயை என்கிறது விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே –
ஓன்று போல் ஒன்றாய் அன்றிக்கே விசமாய நீயங்களான கார்யன்களை ஜனிப்பிக்கை –தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா–7-14-

2-12- முதல் சாஸ்திர ஆரம்பம் -நத்வே வாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா ந சைவ ந பவிஷ்யாமஸ் சர்வே வயமத பரம் -என்று
பரமாத்மா ஜீவாத்மாக்கள் உடைய நித்யத்வத்தையும் -பேதத்தையும் -ஜீவாத்மாக்களுக்குள் பரஸ்பர பேதத்தையும் வியக்தமாய் -கையிலங்கு நெல்லிக்கனியாக
-காட்டி அருளுகிறான் -யதா பூதஸ்வார்த்தா யதி ந்ருபதி ஸூ க்திர் விஜயதே –யதிராஜ சப்ததி-
அடுத்த ஸ்லோஹத்தில் பிராகிருதி ஆத்மா விவேகமும் காட்டப் படுகிறது -ஆத்மா நித்யம் -தேஹம் அநித்தியம் -சேதன அசேதனங்களின் சத்பாவம் –
என்று காட்டப் படுகிறது -விசிஷ்டாத்வைதிகளுக்கு கிடைத்த நிதி இந்த கீதா சாஸ்திரம்-

2-27-த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச –ஜா தஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யோ -என்றது அசேதனமான தேஹத்துக்கு -ஆத்மாவுக்கு அல்ல –
உத்பத்தி வி நாசம் -அவஸ்தா பேதங்கள் – தேஹம் உண்டாயிற்று என்பது பஞ்ச பூதங்கள் ஓன்று சேர்ந்த அவஸ்தையே
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் புண்ணாராக்கை –
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற அஞ்சு சேர் ஆக்கை —
சூஷ்ம அவஸ்தையை விட்டு ஸ்தூல அவஸ்தையை பஜிப்பதே உத்பத்தி -அத்தை விட்டு மீண்டும் மீண்டும் சூஷ்ம அவஸ்தை பஜிப்பதே வி நாசம் –
உள்ளது -அல்லது –சத் அசத் –இதனாலே வேதாந்திகள் சத் கார்ய வாதிகள் -சதேவ நீ யதே வியக்திம் –

2-45-த்ரை குண்ய விஷயா வேதா -நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜூன
இங்கு சங்கர பாஷ்யம் -த்ரை குண்யம் -சம்சாரம் -நிஸ்த்ரைகுண்யோ பவ -நிஷ்காமோ பவ -என்ற பொருள்
நம் ஸ்வாமி பாஷ்யம் -த்ரை குண்ய விஷயா வேதா-முக்குண மக்களைப் பற்றி சொல்லும் வேதங்கள் –
வேதங்கள் முமுஷுக்கள் புபுஷுக்களுக்கும் வழி காட்டும் நிஸ்த்ரைகுண்யோபவ -ரஜஸ் தமஸ் -குண வாங்கலுக்கு காட்டும் வழி அகற்றி
சத்வ குணநிஷ்டர்களுக்கு–முக்குணத்து அவை இரண்டு அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று —
மேலே நித்ய சத்வஸ்த-மூன்று குணங்களும் பிசிறி இருக்கப் பெறாதவன் –சத்வ குண வழியிலே வாழ்பவன் என்று அருளிச் செய்கிறார் –

2-47-கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷூ கதாசன -நித்ய நைமித்திக்க கர்மம் செய்வதிலேயே கண் வைத்து பலனை விரும்பக் கூடாது
-தன்னடையே வாய்த்தாலும் அனுபவிக்கலாமோ –
பிரயோஜனம் அநு த்திச்ய ந மந்தோபி ப்ரவர்த்ததே –பலனைக் கோலாதே-உத்தம பலனைக் கோல நமக்குத் தெரியாதே -அத்தை என்னிடம் விடு
-தன்னடையே வரும் உயர்ந்த பலனை அனுபவிக்கலாமே -என்கிறான் -இத்தையே -மா பலேஷூ கதாசன-என்று அருளிச் செய்கிறார் –

2-69-யா நிசா சர்வபூதா நாம் தஸ்யாம் ஜாகரத்தி சம்யமீ–யஸ்யாம் -ஜாக்ரதி பூதாநி சா நிஸா பஸ்யதோ மு நே —
சர்வ பிராணிகளுக்கு இரவானது -ஜிதேந்த்ரியன் விழித்துக் கொண்டும் -சர்வ பிராணிகள் விழித்துக் கொண்டு இருக்கும் பகல் இவனுக்கு இரவாகும்
ஸ்வரூப அநு ரூபமான விஷயங்களில் கண்ணோட்டம் செலுத்தி ஸ்வரூப நாசகங்களான விஷயங்களில் செலுத்தாமல் இருக்க வேண்டும் என்றதாயிற்று

3-10- சஹ யஜ்ஞை ப்ரஜாஸ் ஸ்ருஷ்ட்வா புரோவாச பிரஜாபதி அநேந பிரஸவிஷ்யத்வம் ஏஷ வோஸ்த்விஷ்ட காமதுக்-
சங்கர பாஷ்யம் -சஹயஜ்ஞை ஏக் பதம் -யஜ்ஞ சஹிதா –பிரஜா –பிரஜாபதி -நான் முகன்
சர்வேஸ்வரனே நிருபாதிக பிரஜாபதி -ஸ்ரீ மன் நாராயணனே பிரஜாபதி சப்தார்த்தம் -நம் ஸ்வாமி பாஷ்யம் -நான்முகனும் ஆஜ்ஞாப்ய கோடியிலே
சேர்ப்பதே உசிதம் -சிருஷ்டி காலத்தில் பிரஜைகள் உடன் யஜ்ஞங்களோடு கூடவே படைத்து இவற்றைக் கொண்டு அபிவிருத்தி அடையக் கடவீர்கள்
என்று நான்முகனுக்கும் சேர்த்து நமக்கு அருளிச் செய்கிறான்
இவையே நமக்கு மோஷம் மற்றும் அனைத்து இஷ்டங்களையும் தந்து அருளும் என்றவாறு -யஜ -தேவ பூஜாயாம் –
பகவத் ஆராதனத்தால் தான் அபீஷ்ட காமங்கள் நிறைவேறும் என்று அருளிச் செய்கிறான் அடுத்த ஸ்லோஹத்தால்
3-11-தேவான் பாவயதா நே ந தே தேவா பாவ யந்து வ பரஸ்பரம் பாவ யந்த ஸ்ரேய பரம் அவாப்ஸ்யத –
சரீர பூதர்களான தேவர்களை ஆராதித்து -பரஸ்பரம் திருப்தி பெறுவித்துக் கொண்டு ஸ்ரேயசான மோஷத்தை அடைவீர்கள் -என்றவாறு
நேராக தன்னை ஆஸ்ரயிக்கச் சொல்லாமல் படிப்படியாக கூட்டிச் செல்ல அருளுகிறான்
மேலே -9-22- அனந்யாச் சிந்தயந்தோ மாம் யே ஜநா பர்யுபாஸதே -என்று தன்னை ஆஸ்ரயிக்க அருளிச் செய்து
மேலே -9-23- யே த்வயன்ய தேவதா பக்தா யஜந்தே ஸ்ரத்தயா அந்விதா–தேபி மாமேவ கௌந்தேயே யஜந்த்ய விதி பூர்வகம் -என்று
இதர தேவதைகளை பஜிப்பவர்களும் ஒருவாறு தன்னையே பஜித்து ஆராதனை செய்கிறார்கள் என்று அருளிச் செய்து
மேலே 9-24-அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவச –என்று அருளிச் செய்து எந்த தேவதையை ஆராதனை செய்தாலும்
அது எல்லாம் தன்னிடமே சேருகிறது என்றும் தானே சத்வாரகமாக பலனும் கொடுப்பதாக அருளிச் செய்கிறான் –

3-12-இஷ்டான் போகான் ஹி வோ தேவா தாஸ் யந்தே யஜ்ஞ பாவிதா தைர்த்தான் அப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ-
ஆராதிக்கப் படும் தேவர்கள் சரீர பூதர்கள் -உங்கள் அபேஷிதங்கள் -போகங்களை கொடுப்பார்கள் -ஆராதன உபகரணங்கள் அவர்களால் கொடுக்கப் பட்டவை –
அவர்களுக்கு அர்ப்பணம் செய்யாமல் புஜிப்பவன் கள்வனாவான் –அவர்களுக்கு நரகமே பலிக்கும்
முந்தி வானம் மழை பொழிய மூவாவுருவின் மறையாளர் அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –

சிஷ்டாசார மகிமை -3-21-யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத் ததே வேதரோ ஜன -ஸ யத் பிரமாணம் குருதே லோகஸ் தத் அநு வர்த்ததே –
சங்கர பாஷ்யம் -ஸ்ரேஷ்டர் எத்தை பிரமாணமாகக் கொள்கிறார்களோ அது தன்னையே லோகமும் பிரமாணமாகக் கொள்ளுகிறது
-யத் தனிப்பதமாக கொண்டு சங்கரரும் மாத்வாசார்யர்களும் இவ்வண்ணமே அருளிச் செய்து இருக்கிறார்கள் –
நம் ஸ்வாமி -யத் பிரமாணம் -பஹூ வ்ரீஹி சமாசத்தால் -ஸ்ரேஷ்டராய் இருப்பார் எந்த கர்மங்கள் அனுஷ்டிக்கிரார்களோ அவற்றையே லோகம் பின்பற்றும் என்றபடி -மேலையார் செய்வனகள் கேட்டியேல் என்னாமல் -வேண்டுவன கேட்டியேல் -என்று ஆண்டாள் பிரயோகம் -கொண்டே இவ்வாறு அருளிச் செய்கிறார் நம் ஸ்வாமிகள் –

3-22-ந மே பார்த்தாஸ்தி கர்த்தவ்யம் த்ரிஷூ லோகேஷூ கிஞ்சன நானவாப்த மவாப்தவ்யம் வர்த்த ஏவ ஸ கர்மணி -என்று
தானும் கர்ம அனுஷ்டானத்தில் ஊன்றி இருப்பதை வற்புறுத்தி அருளிச் செய்கிறான் –
கௌசல்ய ஸூ ப்ரஜாராம் பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவமாஹ் நிகம் –
ப்ராதஸ் சந்த்யா அனுஷ்டானம் வழுவாமல் செய்த பெருமாள் போலே –

3-1/2-அர்ஜுனன் கேள்விகள் –3-3-முதல் 3-35- வரை பகவான் பதில்கள் -3-36- அர்ஜுனன் கேள்வி –3-37 முதல் 3-43-பகவான் பதில்கள்
மேலே நான்காம் அத்யாயம் -இந்த மோஷ சாதனமான யோகத்தை நான் 28 சதுர் யுகங்களுக்கு முன்பு விவஸ்வானுக்குச் சொன்னேன்
-விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான் – -மனு இஷ்வாகுக்குச் சொன்னான் -இவ்வாறு உபதேச முறையில் ராஜ ரிஷிகள் அறிந்து கொண்டார்கள் –
-இடையில் அதிகாரிகள் இல்லாமல் வி நஷ்ட பிராயமாய் இருந்தது -இத்தையே உன்னுடைய பக்தி நேசம் காரணமாக உபதேசிக்கிறேன்
வேதாந்த உசிதமான உத்தம ரஹஸ்யம் -அவரம் பவதோ ஜன்ம பரம் ஜன்ம விவஸ்வத–அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனை இடைப்பிள்ளை என்று
என்னாமல் சாஷாத் பரம புருஷனாகவே உறுதி கொண்டு இருக்கிறான் –
மேலே -4-5/6-ஸ்லோஹங்களால் திரு அவதார பிரகாரம் -திவ்ய மங்கள விக்ரஹ உண்மைத் தன்மை -திருவவதார ஹேதுக்கள்-தெரிவிக்கப் படுகின்றன –
அஜத்வம் அவ்யத்வம் சர்வேஸ்வரத்வம்-விடாமலே திருவவதரிக்கிறான்
இச்சையாலே திருவவதரிக்கிறான் -இதுவே ஹேது -பவித்ராணாயா-இத்யாதியால் -திருவவதார காலம் அருளுகிறான் –
ததா ஆத்மா நம் ஸ்ருஜாம்யஹம் –ஜ்ஞாநிகளை அவதரிப்பிக்கிறேன் -ரஹஸ்யார்த்தம் –ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் –
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா யுலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமானுசன் தோன்றிய
அப்பொழுதே நண்ணரு ஜ்ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆளானாரே –
தத்வ தர்சிகள் வாக்கியம் சிறக்கும் அடி பணிந்து கேட்டு அனுவர்த்தித்து உஜ்ஜீவிக்க வேண்டும் என்கிறான் மேலே –
பீதகவாடைப் பிரானார் பரம குருவாகி வந்து -என்றும்
சேமம் குருகையோ செய்ய திருப் பாற் கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ தாமம் துளவோ வகுளமோ தோள் இரண்டோ நான்கு உளவோ
பெருமான் உனக்கு -என்றும் சொல்லக் கடவது இ றே
4-8- திருவவதார பிரயோஜனம் -துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து –என்றும் –
-நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் -என்றும் சொல்லும் படி –
விளையாட்டாக அவதரிப்பதாக -லோகவத் து லீலா கைவல்யம் –என்பர்
நம் ஸ்வாமி -லோகவத் து லீலா -என்றது ஸ்ருஷ்டிக்காக -அருளிச் செய்தது -திரு வவதாரத்துக்காக இல்லை
அந்தர் அதிகரண பாஷ்யத்தில் சாது பரித்ராணத்துக்கவே-
எங்கே காண்கேன் ஈன் துழாய் யம்மான் தன்னை யான் என்று என்று –
காண வாராய் என்று என்றே கண்ணும் வாயும் துவர்ந்து –
கூராழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் ஒருநாள் –
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே –
ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ
தெய்வங்காள் என் செய்கேன் ஓர் இரவு ஏழு ஊழியாய்
ஊழியில் பெரிதால் நாழிகை என்னும்
காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் மேலும் எழா மயிர் கூச்சம் அறா
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
உள்ளெலாம் உருகி குரல் தழுத்து ஒளிந்து உடம்பு எலாம் கண்ண நீர் சோர –
மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய் தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஜ்ஞானமே படையாக மலருலகில் தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –
சங்கல்பத்தால் தீர்க்க முடியாதே –

கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யஞ்ச விகர்மண அகர்மணச்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி –4-17-
கர்ம -அகரமா -விகரம -மூன்று பதங்கள்

5-18- வித்யா விநய சம்பன்னே –ப்ராஹ்மணே –பண்டிதாஸ் தம தர்சின -சர்வத்ர சம தர்சித்வம் –
பிரியத்தால் ஹர்ஷன் அன்றிக்கே அப்ரியத்தால் வெறுப்பு கொள்ளாதவன் –

6-5- உத்தரேதாத்ம நாத்மானம் நாத்மா நமவ சாதயேத் ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து ஆத்மைவ ரிபுராத் மன –
உஜ்ஜீவனதுக்கு முக்கிய ஸ்தானம் மனமே யாம் -உறவாகவும் பகையாகவும் இருக்கும் –
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் –
ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று –
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி -கொண்டாடியும்
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் -இகழ்ந்தும் பேசுவர்
அர்ஜுனனும் 6-34-சஞ்சலம் ஹி மன கிருஷ்ண -பிரமாதி பலவத் த்ருடம் தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் –
இதற்கு கண்ணபிரான் -6-35-அசம்சயம் மஹா பாஹோ மநோ துர் நிக்ரஹம் சலம் அப்யாசேன து கௌந்தேய வைராக்யேண ஸ க்ருஹ்யதே –
–சஞ்சலத்வம் இயற்கைக் குணம் -ஒன்றில் வைப்பது முடியாத கார்யம் தான் இதில் சந்தேகம் இல்லை
-மனத்தை அடக்கிப் பழக்கம் செய்து நாளடைவில் சாதிக்க வேண்டும்-

7-15-ந மாம் துஷ்க்ருதி நோ மூடா ப்ரபத்யந்தே நராதமா -மாயயாபஹ்ரு தாஜ்ஞ்ஞான ஆ ஸூ ரம் பாவம் ஆஸ்ரிதா –என்று நிந்தித்து
7-16-சதுர்விதா பஜந்தே மாம் ஜ நாஸ் ஸூ க்ருதி நோர் ஜூனா ஆர்த்தோ ஜிஞ்ஞாஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ஸ பரதர்ஷப -ஸ்துதித்து –
பர நிந்தை பத்து அத்யாயம் -ஆத்மா ஸ்துதி ஆறு அத்யாயம் -இன்னும் வேறு ஏதாவது விஷயம் இரண்டு அத்யாயம் –என்று மருள் பட பேசுவர் –
மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கைப் பதிகமும் -ஏழாம் அத்யாயமும் ஒக்கும் -அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும்
அன்பிலா மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும் மாறன் பால்-
சதுர்விதா பஜந்தே மாம் –ஆர்த்தா ஜிஜ்ஞ்ஞா ஸூ அர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் -ஜ்ஞானிகள் /ஏடு நிலத்தில் இடுவதின் முன்னம் -கைவல்யார்த்திகள் /அண்டக்குலத்து அதிபதியாகி -அபூர்வ ஐஸ்வர்ய காமர் -பிரஷ்ட ஐஸ்வர்ய காமர் –
ஒரு நாயகமாய் -பதிகத்திலும் இந்த நால் வகை அதிகாரிகள் உண்டே -அஹம் அர்த்தத்துக்கு ஜ்ஞானானந்தங்கள் தடஸ்தம் என்று தாஸ்யம் இறே அந்தரங்க நிரூபகம் –
திருக் கோஷ்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே ஆள்வான் ஆறு மாசம் சேவித்து நின்று மஹா நிதியாக அர்த்தம் இ றே இது
ஜ்ஞானி -பகவச் சேஷ தைகரச-பகவத் சேஷ பூதன் என்பதை அறியுமவன் –
7-17-தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த —ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்தம் அஹம் ஸ மம ப்ரிய–அவன் ஞானிகள் இடம் கொள்ளும் பிரியமே அதிகம் என்பதால் –
ஜ்ஞாநின அஹம் ப்ரிய -ஸ ஸ மம அத்யர்த்தம் ப்ரிய –என்று அன்வயித்து பாஷ்யம் அருளிச் செய்தார் –

விஹித விஷய போகம் -நிஷித்த விஷய போகம் -இரண்டு வகை –அனன்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம்
-அதிகாரிக்கு விஹித விஷய போக்யத்வமும் த்யாஜ்யம் -என்பதை -8-3- /8-17 ஸ்லோஹங்களால் அருளிச் செய்கிறான் –

9-26-பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருத மஸ் நாமி பிரயதாத்மன -ஆராதனைக்கு எளியவன் –
வர்ஷ பிந்தோரி வாப்தௌ சம்பந்தாத் ஸ்வாத் மலாப –தான் சத்தை பெற மேகம் வர்ஷிப்பது போலே –
நாம் சத்தை பெற -ப்ரீதி பூர்வகமாக -ஒன்றே நியதம்
கள்ளார் துழாயும் கண வலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் அம்பலமும் முன் கண்டக்கால் புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கு இடந்தான்
பொன்னடிக்கு என்று உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே-
இடுகிற பொருளில் வாசி பார்ப்பது இல்லை -இடுகிறவன் நெஞ்சில் ஈரம் உள்ளதா என்பது ஒன்றையே பார்ப்பான் என்பதை ஸ்பஷ்டமாகக் காட்டி அருளுகிறான்
யோ மாம் பக்த்யா ப்ரயச்சதி -என்று சொல்லி -தத் பக்த்யுபஹ்ருதம் –என்று அருளி -தத் -என்று மட்டும் அருளிச் செய்யாமல் இத்தையே காட்டி அருளுகிறார் –

மன்மநா பவ -என்னிடம் மனசை வை –இடைவிடாமல் த்யானம் செய் -ப்ரீதி உடன் -மத பக்த மன்ம நா பவ -அன்பு செலுத்திக் கொண்டே த்யானம் செய் –
-மாரீசனைப் போலே அன்பு இல்லாமல் த்யானம் செய்யாதே -என்றபடி –
மத யாஜி -மத பக்த மன்ம நா பவ -என்னைப் பரி பூரணமாக ஆதரிக்கும் அளவுக்கு முதிர்ந்த அன்பு உடையவனாய் -த்யானம் செய்து ப்ரீதி அடைந்து
அத்தாலே தூண்டப் பட்டு பரி பூரணமாக ஆதரிக்க வேண்டும் என்றபடி
அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரித அசேஷ அவஸ்தோசித அசேஷ சேஷ தைகதி –
மாம் நமஸ் குரு -மூன்று சொற்களையும் கூட்டி கைங்கர்யத்தின் முதிர்ந்த தசை ஆத்மா சமர்ப்பணம்
இத்தையே ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் -ப்ரணம்ய ஆத்மானம் பகவதே நிவேதயேத் -என்று அருளிச் செய்கிறார் –

கீழே பக்தி யோகம் சாங்கமாக விவரித்து அருளி -மேலே 10-விபூதி அத்யாயம் -11- விஸ்வரூப அத்யாயம் -பக்தி உண்டாகவும் வளருவதற்காகவும்-
தானாகவே -10-1- பூவா ஏவ மஹா பாஹோ ச்ருணு மே பரமம் வாச —யத் தேஹம் ப்ரீயமாணாய வஹ்யாமி ஹித காம்யயா-
ப்ரீய மாணாய-ப்ரீதியாயும்-வஹ்யாமி ஹித காம்யயா–ஹிதமாயாயும் -இருக்கும் என்று அருளிச் செய்கிறான் –
10-19-ஹந்த தே கதயிஷ்யாமி விபூதீ ராத்மனஸ் சுபா ப்ராதான்யத குரு ஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே -என்று
விபூதிகளை சொல்ல முடியாது முக்கியமானவற்றைச் சொல்லுகிறேன் –
10-21- ஆதித்யானாம் அஹம் விஷ்ணு -என்று தொடங்கி 10-30 வரை அருளிச் செய்கிறான் –
இவற்றைக் கேட்ட அர்ஜுனன் -11-1- யத் த்வயோக்தம் வசஸ் தேன மோஹோயம் விகதோ மம -என்று மோஹம் தீர்ந்தது என்றும்
11-3- த்ரஷ்டும் இச்சாமி தே ரூபம் ஐஸ்வர்யம் -என்று கேட்க
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்ய மே யோகம் ஐஸ்வர்யம் -என்று கொடுத்து காட்டி அருள
11-38-த்வயா தத்தம் விச்வம் அநந்த ரூப -என்றும்
11-40- அநந்த வீர்யம் இதம் விக்ரமஸ்த்வம் சர்வம் சமாப் நோஷி ததோசி சர்வ -என்றும்
பிரபஞ்சம் எல்லாம் சத்யம் -என்று அத்வைதிகள் வாதம் நிரசனம் –

12-18/19-சமச் சத்ரௌ ஸ மித்ரே ஸ ததா மாநாவ மாநயோ சீதோஷ்ண ஸூ க துக்கேஷூ சமஸ் சங்க விவர்ஜித -துல்ய நிந்தாஸ் துதிர் மௌநீ சந்துஷ்டோ யேன கேநசித் அ நிகேத ஸ்திரமதிர் பக்திமான் மே ப்ரியோ நர —
இப்படி உள்ளவன் தனக்கு ப்ரீதிபூதன் -துர்லபன் -இப்படி இருக்க ஆசைப்பட்டு வாழ வேணும் என்று அருளிச் செய்கிறான் –

13-1-இதம் சரீரம் கௌந்தேய ஷேத்ரம் இத்யபிதீயதே ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹூ–ஷேத்ரஜ்ஞ தத்வீத –
13-2- ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி சர்வ ஷேத்ரேஷூ பாரத ஷேத்ர ஷேத்ரஜ்ஞயோர் ஜ்ஞானம் யத் தத் ஜ்ஞானம் மதம் மம
தேஹத்தில் காட்டிலும் ஆத்மா வேறுபட்டவன் என்று அறிந்தும் -தேவோஹம் மனுஷ்யோஹம் -தேஹம் அப்ருதக் விசேஷணம் -அஹம் ஆத்மார்த்தம்
தேஹத்துக்கு ஆத்மா போலே அசேதனம் சேதனம் இரண்டையும் சரீரமாக கொண்டவன்

14-24/25-குணாதி தஸ் ஸ உச்யதே –குணாதிதன் உத்தம அதிகாரி -குணங்களைக் கடந்தவன் –சமதமதாதி குணங்கள் அல்ல
-ரஜஸ் தமஸ் சத்வ குணங்கள் என்றவாறே –
சமதுக்க ஸூ கஸ் ஸ்வஸ்த சமலோஷ்டாச்மி காஞ்சன துல்ய ப்ரியப்ரியோ தீரஸ் துல்ய நிந்தாத்மா ஸம்ஸ்துதி
மா நாவ மா நாயோஸ் துல்யஸ் துல்யோ நிந்தாரி பஷயோ சர்வாரம் பபரித்யாகீ குணாதிதஸ் ஸ உச்யதே
ஸ்வஸ்த -தன்னிடத்திலேயே இருப்பவர் என்றபடி -சமலோஷ்டாச்ம காஞ்சன-லோஷ்டம் கல் பொன் சமமாக கொள்பவன்

15-18-யஸ்மாத் ஷரமதீ தோஹம்–அ தோஸ்மி லோகே வேதே ஸ பிரதித புருஷோத்தம –
லோகத்திலும் சாஸ்திரத்திலும் -சாதாரணமான பொருள்
லோகார்த்த அவலோக நாத் லோக இதி ஸ்ம்ருதி ரிஹோ ச்யதே ச்ருதௌ ஸ்ம்ருதௌ ஸ இத்யர்த்த
லோகம் -சாஸ்திரம் -எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே -உலகு சாஸ்திரம் என்றே பொருள்
தத்தத் கர்ம அநு ரூபம் பலவித ரணத -தாத்பர்ய ரத்னாவளி
அதோஸ்மி லோகே வேதே ஸ -லோக சப்தத்தை சாஸ்திரம் –
ஸ்தோத்ர தத்னம் -23-ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே —ஆயிர மடங்கு என்னால் பண்ணப் படாதது யாதொரு நிந்தித்த கர்மம் உண்டு
அதிபாதக மஹா பாதகாதிகள் –அது சாஸ்திரத்திலும் இல்லை —அனுஷ்டாதக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும்
சாஸ்த்ரத்தில் காணலாம் இ றே -பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஆளவந்தாரும் லோகே சாஸ்திரம் அர்த்தத்திலே அருளிச் செய்கிறார் –

16-6-த்வௌ பூத சர்கௌ லோகேஸ் மின் தாய்வ ஆ ஸூ ர ஏவ ஸ –தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாய ஆ ஸூ ரீ மாதா -16-5-
மா சுசஸ் சம்பதம் அபிஜாதோசி பாண்டவ –சோகப்படாதே- நீ உபதேசம் ருசி விச்வாசங்கள் உடன் கேட்டதால் தெய்வ வகுப்பு என்றானே
ந சௌ சம் நாபி சாசாரோ ந சத்யம் தேஷு வித்யதே அசத்யமப்ரதிஷ்டம் தே ஜகதா ஸூ ர நீஸ்வரம்–இத்யாதிகள் காண்க –

17-மூவகைப் பட்ட தபஸ் -காயிக -வாசிக தபஸ் –
அனுத்வேககரம் வாக்யம்சத்யம் ப்ரியஹிதம் ஸ யத் ஸ்வாத்யாயா த்யயனம் சைவ வாங்மயம் தப உச்யதே –
மன பிரசாதஸ் சௌம்யத்வம் மௌனமாத்மவி நிக்ரஹ பாவ சம்சுத்தி ரித்யேதத் தபோ மானஸ முச்யதே -மானஸ தபஸ் –
18-37-யத் ததக்ரே விஷமிவ பரிணாமே அம்ருதோபமம் தத் ஸூ கம் சாத்த்விகம் ப்ரோக்தம் ஆத்மசுத்தி பிரசாதஜம் -என்று
ஸூகம் சாத்விக ரஜஸ் -தமஸ் மூன்று வகைகள்
18-38-விஷய இந்த்ரிய சம்யோகாத் யத்ததக்ரே அம்ருதோபமம் பரிணாமே விஷமிவ தத் ஸூ கம் ராஜஸம் ஸ்ம்ருதம் –
இன்னமுது எனத் தோன்றி ஓரிவர் யாவரையும் மயக்க -திருவாய்மொழி -7-1-8–இதுவே ராஜஸ தமஸ் –
18-39-யதக்ரே சானு பந்தே ஸ ஸூ கம் மோஹந மாத்மன நித்ராலஸ்ய பிரமாதோத்தம் தத் தாமசம் உதாஹ்ருதம் –
அனுபவ வேளையிலும் விபாக தசையிலும் விஷம் -தாமச ஸூ கம்

ஷத்ரிய தர்மம் -சௌ ர்யம் தேஜோ த்ருதிர் தாஷ்யம்யுத்தே சாப்யபலாயனம் தானமீச்வர பாவஸ்ச ஷாத்ரம் கர்ம ஸ்வ பாவஜம்
சௌ ர்யம் –போர்க்களத்தில் கூசாமல் புகும் வல்லமை
தேஜஸ் -பிறரால் அசைக்கவும் முடியாமை
த்ருதி-இடையூறுகள் நிறைந்தாலும் சிலைக்காமல் நிறைவேற்றியே தீரும் மன உறுதி உடைமை
தாஷ்யம் -எந்த கார்யத்தையும் இனியதாக நிறைவேற்ற வல்லனாகை –
யுத்தே சாபி அபலாய நம் – போர் புகுந்த பின் மரணமே சம்பவிக்கும் என்று தோற்றினாலும் முது காட்டி உடைமை –
நஷ்டோமோஹ ஸ்ம்ருதிர் லப்தா த்வத் பிரசாதாத் மயா அச்யுத ஸ்தி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -என்று தானே சொல்லும் படி அருளிச் செய்தான்
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -திருவாய் -4-8-6–அன்றோ –

இதம் தே நாத பஸ்காய ந பக்தாய கதா சன ந சாகஷவே வாச்யம் ந ஸ மாம் யோப்ய ஸூ யதி
அதபச்கனுக்கு சொல்லாதே அபக்தனுக்கு சொல்லாதே அசுச்ரூஷூவுக்குச் சொல்லாதே என்னிடம் அ ஸூ யை உள்ளவனுக்குச் சொல்லாதே –
காணக் கண் ஆயிரம் வேண்டும் -கேட்கக் காதாயிரம் வேண்டும் நாவில் நாலாயிரம் வேண்டும் –

பிரபத்தியும் ஸ்ரீ கீதா சாஸ்த்ரத்தில் ஸூ பிஷம்
ஆரம்பத்தில் அர்ஜுனன் சாதிமாம் த்வாம் பிரபன்னம் –சரணாகதி செய்தான் –
கீதாச்சார்யனும் பழ இடங்களில் -மாமேவ யே ப்ரபத்யந்தே —தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே –தமேவ சரணம் கச்ச -மாமேகம் சரணம் வ்ரஜ —
என்று சரணா கதியின் பெருமையை அருளிச் செய்கிறான்
ஆசார்யன் பெருமையையும் -தத் வித்தி –உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞாநின தத்வ தர்சின —என்று அருளிச் செய்கிறான்
ததா ஆத்மானம் ஸ்ருஜாமி அஹம் – என்று தனக்கு ஆத்மாவான ஜ்ஞாநியையும் அவதரிப்பிக்கிறேன் என்றும் அருளிச் செய்து உள்ளான் –

நம்மை திருத்தி ஆட்கொள்ளவே சிருஷ்டித்து -சாஸ்திரங்கள் உபதேசித்து அருளி -திருவவதாரங்கள் செய்து அருளி -சோம்பாமல் செய்து அருளுவதை
தஸ்மின் கர்ப்பம் ததாம்யஹம் -என்றும்
அஹம் பீஜப்ரத பிதா -என்றும் ஸ்ருச்டியை அருளி
சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்த ஸ்ம்ருதி ஜ்ஞானம் அபோஹனம் ஸ -என்றும்
ஈஸ்வர சர்வ பூதானாம் ஹ்ருத்தேச அர்ஜூன திஷ்டதி -என்றும் இதயத்தில் வீற்று இருந்து ஜ்ஞானம் அளிப்பதை அருளிச் செய்தும்
ததாமி புத்தியோகம் -ஞானம் முதிர்ந்த பக்தி யோகமும் கொடுத்து அருளி -அஹம் அஜ்ஞ்ஞானம் தம நாசயாமி -அஜ்ஞ்ஞானம் போக்கி அருளியும்-
இவற்றுக்கு வேண்டிய போஷணமும்-யோகஷேமம் வஹாம் யஹம் -என்று அருளிச் செய்து –
சம்சார விமோசனம் செய்து அருளியவற்றை -தேஷமஹம் சமுத்தர்யா ம்ருத்ய சம்சார சாகராத் –என்று அருளிச் செய்து –
அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -என்று தலைக் கட்டி அருளினார் –
இந்த ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டே ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் அருளிச் செய்தார்கள் –
ஸ்ரீ கீதையே இந்த விசேஷ உபகாரத்துக்கு ஸூ சகம் -அர்ஜுன விஷாத யோகம் -விருப்பம் இல்லாமல் உபதேசிக்கக் கூடாதே
-அதனாலே சங்கல்பித்து கலக்கம் உண்டாக்கி அருளினான் –இவனும் கிருபா மாத்திர பிரசன்னாசார்யனே ஆகும் –
போக்தாரம் யஜ்ஞ தபஸாம் சர்வ லோக மகேஸ்வரம் ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் ஜ்ஞாத்வா மாம் சாந்திம்ருச்சதி -என்று
கர்மம் இவனுக்கு பூஜை என்றும் -அவனே வகுத்த சேஷீ என்றும் -சர்வ பூத ஸூ ஹ்ருத் என்றும் பாவித்து கர்மம் இன்பமாக ஆகுமே –
ஸூஹ்ருத ஆராத்நயா ஹி சர்வே பிரயதந்தே -என்று அருளிச் செய்கிறார் –
வகுத்த விஷயத்தில் கைங்கர்யம் துக்க ரூபம் இல்லை -என்பதைக் காட்டி அருளுகிறார்
பக்தியை அனுஷ்டித்து விக்னம் ஏற்பட்டாலும் அடுத்த ஜன்மத்தில் தொடர்ந்து பலன் பெறலாம் என்று காட்டி அருளுகிறான்

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: