Archive for January, 2016

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ பரந்த படி -திருமந்திர பிரகரணம் —

January 31, 2016

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

——————————————————————————————-

திருமந்திர பிரகரணம் -உபோத்காதம் –

நித்யோ நித்யா நாம் -என்றும் –
ஜ்ஞாஜ் நௌ த்வாவஜாவீசசௌ-என்றும் –
ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ வித்தய நாதி -என்றும் சொல்லுகிறபடியே
ஆத்ம ஸ்வரூபம் நித்தியமாய் இருக்கச் செய்தேயும் -அசந்நேவ ச பவதி என்கிறபடியே
அநாதிகாலம் அசத் வ்யவஹாரத்துக்கு விஷயமாய்ப் போந்தது –
பகவத் விஷய ஜ்ஞான ராஹித்யத்தாலே யாகையாலே -சந்தமேனம்-என்கிறபடியே சத் வ்யவஹாரத்துக்கு விஷயமாம் போது
பகவத் விஷய ஜ்ஞான சத் பாவத்தாலே ஆக வேணும் –

இப்படிப்பட்ட ஜ்ஞான விசேஷம் ஆகிறது –
ஈஸ்வரனுடைய சேஷித்வ விஷய ஜ்ஞானமும்
உபாயத்வ விஷய ஜ்ஞானமும்
உபேயத்வ விஷய ஜ்ஞானமும் இறே –
ஈத்ருசமான ஜ்ஞான விசேஷத்துக்கு உத்பாதகமாய் இருப்பது அபௌருஷேயமாய்-நித்ய நிர்தோஷமாய்-ஸ்வத பிரமாணமான வேதம் –
அந்த வேதம் தான் -அநந்தா வை வேதா -என்கிறபடியே அசங்க்யாதமாய் இருக்கையாலும் –
அல்பஸ்ச கால என்றும்
பூத ஜீவிதமத்யல்பம் -என்னும் -நம்முடை நாள் -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
சேதனர் பரிமித கால வர்த்திகளாய் இருக்கையாலும்
உள்ள காலம் தன்னிலே வேதத்தில் சொல்லுகிற அர்த்தத்தை ஆராயவென்று இழிந்தால்
ஸ்ரேயாம்சி பஹூ விக்நாநி -என்றும் பஹவச்ச விக்நா -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரேய ப்ராப்தி பிரத்யூஹ பாஹூள்யத்தாலும் –
அந்த வேதத்தில் சார பூதமான அர்த்த நிர்ணயம் பண்ணுகைக்கு யோக்யதை யற்று இருக்கும் –

ஆனபின்பு -யத் சாரபூதம் ததுபாசிதவ்யம் -என்கிறபடியே
வேத தாத்பர்ய பூதமாய் இருப்பதொன்றாலே வேதத்தில் நிர்ணீதமான அர்த்தத்தை அறிய வேணும் –
அதில் -ருசோ யஜூம்ஷி சாமானி ததைவா அதர்வணா நி ச -சர்வம் அஷ்டாஷராந்தச் ஸ்தம்-என்கிறபடியே
சகல வேத தாத்பர்ய பூமியாய் இருப்பதொரு மந்த்ரம் ஆகையாலே
இம்மந்திர முகத்தாலே சேஷ சேஷி பாவாதி ஜ்ஞானம் உபாதேயமாகக் கடவது –

யதா சர்வேஷூ தேவேஷூ இத்யாதி பிரக்ரியையாலே சகல தைவங்களிலும் சர்வேஸ்வரன் பிரதானனாகிறாப் போலே
சகல மந்த்ரங்களிலும் இம் மந்திர விசேஷம் பிரதானமாய் இருப்பதொன்று –
ஆஸ்தாம் தே குணராசிவத்-என்றும் –
பகவோ ந்ருப கல்யாண குணா புத்ரச்ய சந்தி தே -என்றும்
தவா நந்த குணஸ் யாபி ஷடேவ ப்ரதமே குணா -என்றும் –
ஈறில வண் புகழ் என்றும் –
பஹூநி மே வ்யதீதா நி என்றும் –
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்றும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
சர்வேஸ்வரனுடைய குணங்களும் குண பரிவாஹங்களான அவதாரங்களும் அசங்க்யாதங்களாய் இருக்குமா போலே
அவற்றை அனுபந்தித்து இருக்கும் மந்திர விசேஷங்களும் பஹூபிர் மந்தரை என்கிறபடியே பஹூ விதங்களாய் இருக்கும் –

இப்படி பஹூ விதங்களான மந்திர விசேஷங்களில் வைத்துக் கொண்டு –
நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீமஹி தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்று
விஷ்ணு காயத்ரியிலே இம்மூன்று மந்தரத்தையும் ப்ரதான்யேன பிரதிபாதிக்கையாலே
வ்யாபக மந்திர த்ரயமும் பிரதானமாகக் கடவது –

அந்த வ்யாபக மந்த்ரங்களில் வைத்துக் கொண்டு –
பிரதமத்திலே நாராயண சப்தத்தை ப்ரதான்யேன பிரதிபாதிக்கையாலும்
மேல் தானும் வாஸூ தேவ விஷ்ணு சப்தங்களை அநாதரித்துப் பலவிடங்களிலும் நாராயண சப்தத்தை இட்டு
பகவத் ஸ்வரூபாதிகளை நிர்த்தேசிக்கையாலும்

இப்படி வேத புருஷன் ஆதரித்த அளவன்றிக்கே வேதார்த்த விசதீகரண பிரவ்ருத்தரான வ்யாசாதி பரம ருஷிகள் பலரும்
வேதார்த்த உப ப்ரும்ஹணங்களாய் இருக்கிற ஸ்வ பிரபந்தங்களிலே பலவிடங்களிலும்
ஆர்த்தா விஷண்ணா-என்றும் –
ஆபோ நாரா-என்றும்
மாபைர்மாபை -என்றும் –
சர்வ வேத ரஹாஸ் யே ப்ய-என்றும்
ஏகோ அஷ்டாஷரமே வலம் -என்றும்
சகல மந்திர ப்ரதானதயா இத்தை பிரசம்சிக்கையாலும் –

ஸ்வ யத்ன சாத்தியமான பகவத் பிரசாதத்தாலே லப்த சார்வஜ்ஞரான ருஷிகளைப் போல் அன்றிக்கே
மயர்வற மதிநலம் அருளினன் என்கிறபடியே -நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான
ஆழ்வார்கள் பலரும் ஸ்வ பிரபந்தங்களிலே பலவிடங்களிலும் இத்தையே பிரசம்சிக்கையாலும் –

ததனுசாரிகளான பூர்வாச்சார்யர்களும் இதர மந்த்ரங்களை அனாதரித்து இத்தையே தம்தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து
உபதேச வேளையிலும் தம்தாமைப் பற்றினவர்களுக்கு இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக உபதேசித்துப் போருகையாலும்
ததனுசாயிகளான நமக்கும் இதுவே அனுசந்தேயமாகக் கடவது –

விட்டுசித்தன் விரும்பிய சொல் -என்கையாலே இறே திருப்பல்லாண்டை நம் மனிச்சர் ஆதரிக்கிறது –
வாச்ய வைபவம் போல் அன்று வாசக வைபவம் -அவன் தூரஸ்தனானாலும் இது சந்நிதி பண்ணிக் கார்யம் செய்யும் –
த்ரௌபதிக்கும் பல சித்தி யுண்டாயிற்று திருநாம வைபாவத்தாலே இறே –
சாங்கே த்யம்-என்கிறபடியே இது தான் சொல்லும் க்ரமம் ஒழியச் சொன்னாலும் தன் ஸ்வரூபம் கெட நில்லாது –
ஓராயிரமாய் என்கிறபடியே அவன் தனக்கும் ரஷண பரிகாரம் இதுவே
ஜ்ஞான சக்த்யாதிகளைப் போல அல்லாத திரு நாமங்கள் –
ஜ்ஞான ஆனந்தங்களைப் போலே இது –
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா -என்றும்
நாமம் பலவுமுடை நாரண நம்பி -என்றும் சொல்லிற்றே-
இதுதான் சர்வாதிகாரம் -பிரணவ அர்த்தத்துக்கு எல்லாரும் அதிகாரிகள் –
இடறினவன் அம்மே என்னுமா போலே இது சொல்லுகைக்கு எல்லாரும் யோக்யர் –
பிராயச்சித்த அபேஷை இல்லை –

இது தான் பல ப்ரதமாம் இடத்ததில் -ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம் -கைவல்யம்
பகவந்தஞ்ச மந்த்ரோதயம் சாதயிஷ்யதி -என்றும்
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் சர்வார்த்த சாதக -என்றும் –
குலம் தரும் செல்வம் தந்திடும் -என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஐஸ்வர்ய கைவல்ய பகவச் சரணார்த்திகள் ஆகிற திரிவித அதிகாரிகளுக்கும்
தத்தத் ஸ்வ அபிமத பல விசேஷங்களை சாதித்துக் கொடுக்கக் கடவதாய் இருக்கும் –

பகவத் சரணார்த்திகளான அதிகாரிகளில் பக்தி யோக பரனுக்கு -கர்ம ஜ்ஞானங்களின் உடைய உத்பத்திக்கு
பிரதி பந்தகங்களாய் இருக்கிற பிரபல கர்மங்களை நிவர்த்திப்பித்து
அவன் தனக்கு உத்தரோத்தரம் அபிவ்ருத்திகளையும் பண்ணிக் கொடுத்து தத்த்வாரா உபகாரகமாய் இருக்கும் –

பிரபத்த்யாதி க்ருதனுக்கு ஆத்ம யாதாம்ய ஜ்ஞான ஜனகமாய்
கால ஷேப ஹேதுவாய்-
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் என்கிறபடியே
பிரதிபாத்ய வஸ்துவைப் போலே ஸ்வயம் போக்யமுமாய் இருக்கும் –

இப்படி அபேஷித பல சாதகத்வ மாத்ரமே யன்றிக்கே –
சர்வம் அஷ்டாஷரந்தஸ் ஸ்தம் -என்றும் –
நின் திருவெட்டு எழுத்தும் கற்று –மற்றெல்லாம் பேசிலும் -என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஜ்ஞாதவ்யங்களான நிகில த்ரய்யந்த ரஹச்ய பூத தத்வார்த்த விசேஷங்களையும்
சாகல்யேன ஜ்ஞாபிக்கக் கடவதாய் இருக்கும் –

ஜ்ஞாதவ்ய சகலார்த்தங்கள் எல்லாம் இதிலே புஷ்கலமாக பிரதிபன்னமாகில் மற்றை ரஹச்ய த்வயமும்
அனநுசந்தேயம் ஆகாதோ என்னில் -அது செய்யாது
இதிலே சங்க்ருஹீதங்களான அர்த்தங்களை அவை விசத்ருதங்களாக பிரதிபாதிக்கிறன வாகையாலே –
சகலார்த்தமும் இதிலே கண்டோக்தம் ஆகில் இறே அவை அனுசந்தேயங்கள் ஆவன –
இதிலே அச்பஷ்டங்களான அர்த்தங்களை அவை விசத்ருதங்களாக பிரதிபாதிக்கிறன வாகையாலே –
அவற்றினுடைய அனுசந்தேயத்துக்கு குறையில்லை —
வித்யா நுஷ்டான ரூபங்கள் ஆகையாலும் –
அவற்றை ஒழியப் பல சித்தி இல்லாமையாலும் -அவை அனுசந்தேயங்கள் –

இது தன்னிலே அவை அனுசந்தேயங்கள் ஆன போது இதினுடைய நைரபேஷ்யம் பக்நம் ஆகாதோ –
என்கிற சோத்யமும் பரிஹ்ருதம் –
ஆக இப்படி வேதங்களோடு
வைதிகரான ருஷிகளோடு
ஆழ்வார்களோடு
ஆசார்யர்களோடு வாசியற எல்லாரும் இத்தையே ஆதரிக்கையாலும்
எல்லா அதிகாரிகளுக்கும் நின்ற நிலைகளிலே அபேஷித பிரதானம் பண்ணக் கடவதாய் இருக்கையாலும் –
ஜ்ஞாதவ்யார்த்த ஜ்ஞாபகம் ஆகையாலும் இம்மந்திர விசேஷம் எல்லாவற்றிலும் பிரதானமாய் இருக்கும் –

இம்மந்த்ரம் தனக்கு பிரதானயேன ப்ரதிபாத்யமான அர்த்தம் ஆகிறது –
ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் உண்டான சேஷ சேஷி பாவ சம்பந்தம் ஆகையாலே
ஆத்ம பரமாத்மா ஸ்வரூப நிரூபணமும் –
விரோதி ஸ்வரூப நிரூபணமும் –
கைங்கர்ய ஸ்வரூப நிரூபணமும் இதுக்கு சேஷ தயா வரக் கடவது –

அந்த சேஷ சேஷி பாவ சம்பந்தம் -த்வி நிஷ்டமாய் இருக்கையாலே –
பகவத் ஸ்வரூப நிரூபணமும்
சேதன ஸ்வரூப நிரூபணமும் அபேஷிதமாகக் கடவது –

இதுதான் சித்தமாவது -அதுக்கு விரோதியான ஸ்வா தந்த்ர்யத்தினுடைய நிவ்ருத்தி யுண்டானால் ஆகையாலே
விரோதி நிவ்ருத்தி அபேஷித்தமாய் இருக்கும் –

ஆக பத த்ரயமும் –
ஆத்ம பரமாத்மா சம்பந்தத்தை யும் –
தத் சம்பந்த விரோதியான ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தினுடைய நிவ்ருத்தியையும்
தத் சாபல்ய ஹேது பூதமான கிஞ்சித் காரத்தையும் பிரதிபாதிக்கிறது –

இது தனக்கு -ஸ்வரூபம் சொல்லுகிறது -என்றும் –
பிராப்யம் சொல்லுகிறது -என்றும் வாக்யார்த்தம் –

ஸ்வரூபம் சொல்லுகிற இதுக்கு
விரோதி ஸ்வரூபமும் –
உபாய ஸ்வரூபமும்
பல ஸ்வரூபமும் அதிகாரி
ஸ்வரூபமும் பகவத் ஸ்வரூபமும் ஆகிற
அஞ்சு அர்த்தமும் சொல்லா நிற்கச் செய்தே -மற்றை நாலும் அதிகாரிக்காகையாலே அதிகாரி ஸ்வரூபமும்
பிரதமத்திலே அபேஷிதமாய் இருக்கையாலும்
பிரசித்தி ப்ராசுர்யத்தாலும் ஸ்வ ஸ்வரூபம் சொல்லுகிறது என்று பொருளாகக் கடவது –

இதில் பிரணவம் ஒன்றிலும் அன்றோ ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது –
நமஸ்ஸாலும்-நாராயண பதத்தாலும் உபாய ஸ்வரூபத்தையும்
உபேய ஸ்வரூபத்தையும் சொல்லா நிற்க
திருமந்தரம் முழுக்க ஸ்வரூபம் சொல்லுகிறது -என்று சொல்லும்படி எங்கனே என்னில் –

பிரணவத்தில் பிரதிபாதிக்கப் படுகிற பகவச் சேஷத்வம் ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆகிறாப் போலே
உத்தர பதத்திலும் ப்ரதிபாத்யமான பகவத் ஏக சாதனத்வமும்
பகவத் ஏக சாத்யத்வமும்
இவனுக்கு ஸ்வரூபமாய் இருக்கையாலே
பத த்ரயமும் ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது என்னக் குறையில்லை –

நாராயண பதத்தாலே பிரதிபதிகப் படுகிற சேஷ வ்ருத்தி ப்ராப்யம் ஆகிறாப் போலே
முன்பு சொல்லுகிற பகவச் சேஷத்வமும்-
அன்ய சேஷத்வ ராஹித்யமும்
ஸ்வ ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியும் –
சித்தோபாய ச்வீ காரமும் –
ததீய சேஷத்வமும் -அத பூர்வம் அப்ராப்தமாய் –
மேல் ப்ராப்தமாய் இருக்கையாலே தத் பிரதிபாதகமான பத த்வயமும் ப்ராப்ய ஸ்வரூபத்தை
பிரதிபாதிக்கிறது என்னக் குறையில்லை

பிரணவ நமஸ் ஸூக்களாலே ஸ்வரூபம் சொல்லி
நாராயண பதத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது என்னவுமாம் –

சதுர்த்யந்தமான பிரதம அஷரத்திலே ரஷகத்வ சேஷித்வங்கள் சொல்லி –
மத்யம அஷரமான உகாரத்திலே அந்ய சேஷத்வ நிவ்ருத்தியைச் சொல்லி
த்ருதீய அஷரமான மகாரத்திலே ப்ரக்ருதே பரமான ஆத்ம ஸ்வரூபத்தினுடைய ஜ்ஞானாந்த லஷணத்வம் சொல்லி –
நமஸ்ஸாலே -விரோதி ஸ்வரூபத்தின் உடைய த்யாஜ்யத்தைச் சொல்லி –
பகவச் சேஷத்வ பௌஷ்கல்ய ஹேதுவான பாகவத சேஷத்வம் சொல்லி
சேஷத்வ அனுரூபமான உபாய ஸ்வரூபம் சொல்லி
நாராயண பதத்தாலே சர்வாத்ம சேஷியான சர்வேஸ்வரன் ஸ்வரூபம் சொல்லி
சதுர்த்தியாலே சேஷ வ்ருத்தியை ப்ரார்த்தித்துத் தலைக்கட்டுகையாலே
ரஷகத்வம் தொடங்கி சேஷ வ்ருத்தி பர்யந்தமான நடுவுண்டான அர்த்த விசேஷங்கள் எல்லாம் பதார்த்தமாகக் கடவது –
ஈஸ்வரனுடைய சர்வ சேஷித்வ-சர்வ ரஷகத்வங்களும் -நிரதிசய போக்யத்வமும் தாத்பர்யார்த்தம் –

இத்திருமந்த்ரம் தான் –
அநாதி காலம் ஈஸ்வரனுக்கு ரஷ்ய பூதருமாய் சேஷ பூதருமாய் இருக்கிற சேதனர் பக்கலிலே
ரஷகத்வ சேஷித்வ புத்தி பண்ணியும் –
ஜடமாய் இதம் புத்தி யோக்யமாய் இருக்கிற பிரகிருதி தத்வத்திலே ப்ரக்ருதே பரமாய் –
ஜ்ஞானானந்த லஷணமாய் இருக்கிற
பிரத்யகாத்மா ஸ்வரூபத்துக்குப் பண்ணக் கடவ அஹம் புத்தியைப் பண்ணியும்
ஸ்வரூப விருத்தமான ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தை ஏறிட்டுக் கொண்டு உபாய ஆபாசங்களிலே உபாய புத்தியையும்
பிராப்ய ஆபாசங்களிலே ப்ராப்ய புத்தியையும் பண்ணி
சம்சரித்துப் போந்த சேதனனுக்கு

பகவத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களினுடையவும்
ரஷ்யத்வ சேஷத்வ ஜ்ஞானத்தைப் பிறப்பித்து
ஆத்ம ஸ்வரூபம் ப்ரக்ருதே பரமாய் ஜ்ஞான ஆஸ்ரயமாய் இருக்கும் என்னும் இடத்தையும் அறிவித்து
ஸ்வரூப விரோதியான ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தினுடைய நிவ்ருத்தி பூர்வகமாக
பகவச் சேஷத்வ பௌஷ்கல்யத்தைப் பிறப்பித்து
உபாய உபேய ஆபாசங்களில் உபாயத்வ புத்தி நிவ்ருத்தி பூர்வகமாக சமயக் உபாயமான சித்த சாதனத்திலே
யாதாவத் ஜ்ஞானத்தைப் பிறப்பித்து
புருஷார்த்தாந்திர நிவ்ருத்தி பூர்வகமாக நிரஸ்தாதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லஷணமான பகவத் கைங்கர்யமே
நிரதிசய புருஷார்த்தம் என்னும் இடத்தையும் அறிவிக்கிறது –

இத்திருமந்த்ரம் தான் -1-ஸ்வ ஸ்வரூப -2-பர ஸ்வரூப -3-விரோதி ஸ்வரூப -4-புருஷார்த்த -5-தத் உபாயங்களில்
அந்யதா பிரதிபத்தி பண்ணிப் போந்த சேதனனுக்கு யதாவத் பிரதிபத்தியைப் பிறப்பிக்கிறது –

1-ஸ்வ ஸ்வரூபம் ஆகிறது –
தேக இந்த்ரியாதிகளில் காட்டில் விலஷணமாய்-
நித்தியமாய் –
ஜ்ஞானானந்த லஷணமான ஆத்ம ஸ்வரூபம் –
அதில் யதாவத் பிரதிபத்தி யாவது –
பகவத் அனன்யார்ஹ சேஷபூதமாய்-
பகவத் ஏக ரஷ்யமாய் –
பகவத் ஏக போக்யமாய் இருக்கும் என்று அறிகை-

2-பர ஸ்வரூபமாவது-
ஹேய ப்ரத்ய நீகமாய்
கல்யாண குணாகரமாய்-
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டமான பகவத் ஸ்வரூபம் –
அதில் யதாவத் பிரதிபத்தியாவது –
சர்வ சேஷியாய்-
சர்வ ரஷகமாய் –
நிரதிசய போக்யமாய் இருக்கும் என்று அறிகை –

3-விரோதி ஸ்வரூபமாவது-
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞான ஜனன விரோதியாய்
யதாவத் ஜ்ஞான ஜனன விரோதித்வ மாத்ரமே யன்றிக்கே
ரஜஸ் தமஸ் ஸூக்களாலே அந்யதா ஜ்ஞான விபரீத ஜ்ஞான ஜனகமாய் இருக்கிற பிரகிருதி சம்பந்தம் –
அதில் யதாவத் பிரதிபத்தியாவது
ஏதத் அதீயங்களான சப்தாதி விஷயங்கள் அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதங்கள் ஆகையாலே
ஜூகுப்சா விஷயமாய் இருக்கும் என்றும்
அவற்றை ஸ்வ யத்னத்தாலே கழித்துக் கொள்ள ஒண்ணாதாப் போலே
பகவத் ஏக நிவர்த்தமாய் இருக்கும் என்றும் பிரதிபத்தி பண்ணுகை-

4-புருஷார்த்த ஸ்வரூபம் ஆகிறது –
அநாதி கால கர்ம ப்ரவாஹ ப்ராப்த பிரகிருதி சம்பந்த விதூ நந பூர்வகமாக –
அர்ச்சிராதி மார்க்கத்தாலே
அப்ராக்ருத திவ்ய தேசத்தை ப்ராபித்து
பகவத் குணைகதாரகரான ஸூரிகளோடே ஒரு கோவையாய் –
பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்தாலே ப்ரேரிதனாய்-
காமான் நீ காம ரூப்யநு சஞ்சரன் -என்றும் –
சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி -என்றும் –
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி -இத்யாதிப்படியே
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் உசிதமாக சர்வ பிரகாரத்தாலும் பண்ணும் சேஷ வ்ருத்தி –
அதில் யதாவத் பிரதிபத்தியாவது
தானுகந்த கைங்கர்யமாதல் –
தானும் அவனும் உகந்த கைங்கர்யமாதல் பண்ணுகை அபுருஷார்த்தம் என்றும்
தந்நியுக்த கரிஷ்யாமி -என்றும்
க்ரியதாமிதி மாம் வத -என்றும் –
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவன் ஏவச் செய்கையே புருஷார்த்தம் என்றும்
இப்படி செய்யா நின்றால் வேறே யொரு புருஷார்த்தத்துக்கு சாதநதயா செய்கை யன்றிக்கே
ஈஸ்வரனுடைய முக விகாசமே பிரயோஜனமாகச் செய்யுமது என்றும் பிரதிபத்தி பண்ணுகை –

5-உபாய ஸ்வரூபம் ஆகிறது ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணா விசிஷ்டமாய்
நித்ய மங்கள விக்ரஹோ பேதமாய் –
துஷ்கரத்வாதி தோஷ சம்பாவனா கந்த ஸூந்யமாய்-
அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாய்-
ஏக ரூபமாய்
பரம சேதனமாய் ஸ்வரூப அனுரூபமாய் இருக்கிற சித்த சாதனம் –
அதில் யதாவத் பிரதிபத்தி யாவது
இதர உபாய த்யாக பூர்வகமாக ஸ்வீகரிக்க வேணும் என்றும் ஸ்வீகார விசிஷ்டமான போது
பல பிரதமாகா நிற்கச் செய்தே தந் நிரபேஷமாய் இருக்கும் என்றும் பிரதிபத்தி பண்ணுகை –

அதில் ஸ்வ ஸ்வரூபம் சொல்லுகிறது பிரணவம் –
பர ஸ்வரூபம் சொல்லுகிறது நாராயண பதம் –
விரோதி ஸ்வரூபத்தையும் உபாய ஸ்வரூபத்தையும் சொல்லுகிறது நமஸ்ஸூ
நாராயண பதத்தில் சதுர்த்தி புருஷார்த்த ஸ்வரூபத்தையும் சொல்லுகிறது –

இவ்வதிகாரிக்கு ஜ்ஞாதவ்யார்த்த பிரகாசத்வேன அத்யந்த உபாதேயமாய் இருக்கிற
ரஹவய த்ரயத்திலும் வைத்துக் கொண்டு
சரம வலோஹத்தாலும் த்வயத்தாலும் பிரதிபாதிக்கப் படுகிற உபாய உபேயங்களுக்கு முன்னே
ஆத்ம ஸ்வரூப நிரூபணம் அபேஷிதமாய் இருக்கையாலே
பிரதம ரஹவயமான திருமந்தரம் பிரதமத்திலே அனுசந்தேயம் –

———————————————————————————-

அஷரபத விபாகாதிகள் –

திருமந்தரம் தான்
ஒமித்யேக அஷரம் -நம இதி த்வே அஷரே -நாராயணா யேதி பஞ்ச அஷராணி-
ஒமித்யக்ரே வ்யாஹரேத் நம இதி பச்சாத் நாராயணா யே த் யுபரிஷ்டாத் -என்றும்
நின் திரு எட்டு எழுத்தும் கற்று -என்றும் –
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே -என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே எட்டுத் திரு வஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் –

பத த்ரயமும் அர்த் தத்ரய பிரகாசகமாய் இருக்கும் –
இதில் பிரதம பதம்
ஸ்வரூப யாதாம்ய பிரதிபாதன பரமாய் இருக்கும் –
மத்யம பதம்
உபாய யாதாத்ம்ய பிரதிபாதன பரமாய் இருக்கும் –
உத்தர பதம்
உபேய யாதாம்ய பிரதிபாதன பரமாய் இருக்கும் –

சேஷத்வ அனுசந்தானத்தாலே அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பிறக்கும் –
பாரதந்த்ர்ய அனுசந்தானத்தாலே ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி பிறக்கும் –
கைங்கர்ய அனுசந்தானத்தாலே அப்ராப்த விஷய கிஞ்சித்கார நிவ்ருத்தி பிறக்கும் –
ஈஸ்வர சேஷித்வ ஜ்ஞானத்தாலே தேவதாந்திர பரத்வ பிரதிபத்தி நிவ்ருத்தி பிறக்கும் –
ஸ்வ பாரதந்த்ர்ய அனுசந்தானத்தாலே சாத்திய சாதனா சம்பந்த நிவ்ருத்தி பிறக்கும் –
ஈஸ்வர போகாதா அனுசந்தானத்தாலே ப்ராப்யாந்தர சம்சர்க்க நிவ்ருத்தி பிறக்கும் –

அதில் பிரதம பதமான பிரணவம்
மூன்று அஷரமாய் மூன்று பதமாய் மூன்று அர்த்த பிரகாசகமாய்
ஏகாஷரமாய் ஏக பதமாய் ஏகாரத்த பிரகாசகமுமாய் இருக்கும்

அதில் பிரதம பதமான அகாரம் – பகவத் வாசகமாய் இருக்கும் –
மத்யம பதமான உகாரம் அவதாரண வாசியாய் இருக்கும் –
த்ருதீய பதமான மகாரம் ஆத்ம வாசியாய் இருக்கும்

பிரணவம் தான் ஆத்ம ஸ்வரூபத்தையும் பர ஸ்வரூபத்தையும் பிரகாசிப்பியா நிற்கச் செய்தே
ஆத்ம ஸ்வரூபத்திலே தத் பரமாய் இருக்கும் –

ராஜ புருஷ – என்கிறவிடத்தில் ராஜாவும் பிரஸ்துதனாய்-புருஷனும் பிரஸ்துதனாய் இருக்கச் செய்தே
சப்தத்தாலே புருஷன் பிரதானனாய் அர்த்தத ராஜா பிரதானனாய் இருக்கும்
அப்படியே இவ்விடத்திலும் சப்த்தத்தாலே சேதனன் பிரதானனாய் அர்த்தத்தாலே ஈஸ்வரன் பிரதானனாய் இருக்கும்
என்று ஆழ்வான் அருளிச் செய்யும் –

ஆகையாலே சாப்தமான சேதன பிரதான்யத்தைப் பற்ற
ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத-என்று ஆத்ம வாசகமாகச் சொல்லும் –

ஆர்த்தமான ஈஸ்வர பிரதான்யத்தைப் பற்ற –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் –
ப்ரணவஸ் சர்வ வேதேஷூ -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே பகவத் வாசகமுமாய் இருக்கும் –

—————————————————————————-

அகாரார்த்த ஆரம்பம் –
அதில் பிரதம அஷரமான அகாரம் –
அவ ரஷணே -என்கிற தாதுவிலே பதமாய் நிஷ்பன்னமாகையாலே ரஷகனான ஈஸ்வரனுக்கு வாசகமாகக் கடவது –
தாத்வர்த்தம் ரஷணம் ஆகையாலே ரஷணம் ஆகிற தர்மம் சாஸ்ரயமுமாய் சவிஷயமுமாய் யல்லது இராமையாலே
அதுக்கு ஆஸ்ரயதயா பகவத் ஸ்வரூபம் தானே பத்த முக்த நித்ய ரூபமான த்ரிவிதாத்ம வர்க்கமும் புகுரும் –
ந ஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் -என்கிறபடியே
பாலன சாமர்த்தியம் சர்வேஸ்வர ஏக நிஷ்டமாய் இருக்கையாலே -பகவத் ஸ்வரூபம் ப்ரஸ்துதமாய்த்து-
இவன் இன்னார்க்கு ரஷகன் என்று வ்யவச்சேதியாமையாலே த்ரிவித ஆத்ம வர்க்கமும் ப்ரஸ்துதமாம்-
இன்ன தேசத்தில் ரஷகன் என்று சொல்லாமையாலே சர்வ தேச ரஷகத்வம் சொல்லிற்று –
ஒரு கால விசேஷத்தில் ரஷகன் என்று சொல்லாமையாலே சர்வ கால ரஷகத்வம் சொல்லிற்று –
இன்ன பிரகாரத்திலே ரஷகன் என்று சொல்லாமையாலெ சர்வ பிரகார ரஷகத்வம் சொல்லிற்று

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் -இத்யாதி ஜ்ஞான சக்த்யாதிகள் இல்லாத போது
ரஷகத்வம் அனுபபன்னம் ஆகையாலே ஜ்ஞான சக்த்யாதி குணங்கள் ப்ரஸ்துதமாம்
ஜ்ஞான சக்த்யாதிகள் உண்டானாலும்
பந்த விசேஷமும் காருண்யாதிகளும் இல்லாத போது பட்டது படுகிறான் என்று இருக்கலாம் இறே-
அது செய்யாதே ரஷிக்கும் போது இவை அபேஷிதம் ஆகையாலே ஸ்வாமித்வாதிகள் ப்ரஸ்துதங்கள் ஆம் –
ரஷிக்கும் போது கண் காண வந்து ரஷிக்க வேண்டுகையாலே திவ்ய மங்கள விக்ரஹம் ப்ரஸ்துதமாம் –
ரஷிக்கும் போது திவ்யாயுதங்கள் அபேஷிதங்கள் ஆகையாலே ரஷணத்துக்கு ஏகாந்தமான பரிகரமும் அனுசந்தேயமாகக் கடவது –

ரஷணம் ஆகிறது தான் –
இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமாய் இருக்கையாலே –
இஷ்டமும் தத் பிராப்தியும் அநிஷ்டமும் தந் நிவ்ருத்தியும் அனுசந்தேயம் –
இஷ்டாநிஷ்ட பிராப்தி பரிஹாரம் தான் அதிகார அனுரூபமாகையாலே
பத்தர்க்கும் முமுஷுக்களுக்கும் முக்தர்க்கும் நித்யர்க்கும் இஷ்டா நிஷ்டங்கள் ஆவன
வஸ்த்ர அன்ன பா நாதி போகங்களும் –
அப்ராக்ருத திவ்ய தேச பிராப்தியும்
உத்தரோத்தர அனுபவமும் –
பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமும்
சத்ரு பீடாதிகளும் பிரதிபந்தக கர்மமும் அனுபவ விச்சேத சங்கையும் அனுசந்தேயம் –

தர்மி ஸ்வரூபம் புகுந்த விடத்தில் ஸ்வரூப நிரூபக தர்மங்களும் பிரஸ்துதங்கள் ஆகையாலே
ஸ்ரீ நிவாசே -என்றும் –
ஸ்ரீ யபதி என்றும் –
நித்ய ஸ்ரீ என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஜ்ஞானானந்தங்களோ பாதி பகவத் ஸ்வரூபத்துக்கு
அந்தரங்க நிரூபகமாய் இருக்கிற பிராட்டி ஸ்வரூபமும் நிரூபகதையா ப்ரஸ்துதமாக ப்ராப்தம் ஆகையாலே
ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும் அனுசந்தேயம் –

ஆக
இப்படி யாவை சில அர்த்த விசேஷங்களை சாப்தமாகவும் ஆர்த்தமாகவும் இதினுடைய விவரணமான
நாராயண பதத்திலே அனுசந்தேயங்கள் ஆகிறன-
அவை இத்தனையும் தத் சங்க்ரஹமான இவ்வஷரத்திலேயும் அனுசந்தேயமாகக் கடவது –

ஆக
பிரதம அஷரத்தாலே சர்வ ரஷகனான சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபம் சொல்லப்பட்டது –

——————————————————————————

லுப்த சதுர்த்த்யர்த்தாரம்பம் –
இதின் மேல் ஏறிக் கழிந்த விபக்த்யம்சம் –
தத் பிரதி சம்பந்தியான சேதன சேஷத்வத்தை பிரதிபாதிக்கிறது
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே -என்றும் –
யஸ்யாஸ்மி-என்றும் –
பரவா நஸ்மி என்றும்
தாஸோ அஹம் -என்றும் இத்யாதி பிரமாணங்கள் சொல்லுகிறபடியே
சகலாத்மாக்களுக்கும் சேஷத்வம் இறே ஸ்வரூபம் –
ஸ்வா தந்த்ர்யம் ஔபாதிகமாய் த்யாஜ்யமாய் இறே இருப்பது –

சர்வம் பரவசம் துக்கம் -இத்யாதிகளில் படியே லோகத்தில் சேஷத்வம் துக்க ரூபமாய்
ஸ்வா தந்த்ர்யம் ஸூக ரூபமாய் யன்றோ கண்டு போருகிறது –
லோக திருஷ்டிக்கு விருத்தமாக ஸூக ரூபமான ஸ்வா தந்த்ர்யத்தை த்யாஜ்யம் என்றும் –
துக்க ரூபமான சேஷத்வத்தை உபாதேயம் என்றும்
சொல்லுகை அனுபபன்னம் அன்றோ என்ன ஒண்ணாது –

லோகத்தில் ஸ்வா தந்த்ர்யம் ஆகில் ஸூக ரூபமாய் -பாரதந்த்ர்யம் ஆகில் துக்க ரூபமாய் இருக்கும்
என்று ஒரு நியமம் இல்லாமையாலே –
லோகத்தில் ஸ்வ தந்த்ரன் ஆனவன் தனக்கே ஒரு வ்யக்தி விசேஷத்திலே பாரதந்த்ர்யம் தானே
போக ரூபமாகக் காணா நின்றோம் இறே –

ஆகையாலே சேஷத்வம் தானே ஸூக ரூபமாகில் உபாதேயமாகக் கடவது
ஸ்வா தந்த்ர்யம் தானே துக்க ரூபமாகில் த்யாஜ்யமாகக் கடவது

சேவா ஸ்வ வ்ருத்திர் வ்யாக்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜ யேத்-என்று நிஷேதித்தது –
நிஷித்த சேவையையும் அப்ராப்த விஷயத்தில் சேவையையும்
ப்ராப்த விஷயத்தில் சேவையை ஸா கிமர்த்தம் ந சேவ்யதே-என்றும் –
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து -என்றும் உபாதேயமாகச் சொல்லா நின்றார்கள் இறே

ஈஸ்வர சேஷத்வம் விஹிதமாய்
தாஸ்ய மகா ரசஜ்ஞ-என்றும்
தாஸ்ய ஸூ கைக சங்கி நாம் -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
போக ரூபமாய் இருக்கையாலே உபாதேயமாகக் கடவது –

—————————————————-

உகாரார்த்தாரம்பம் –
மத்யம அஷரமான உகாரம் சேஷத்வ விரோதியான அந்ய சேஷத்வத்தினுடைய நிவ்ருத்தியைப் பிரதிபாதிக்கிறது –
சதுர்த்தீ விபக்தியாலே -ஈஸ்வர சேஷத்வம் பிரதிபாதிதமாகச் செய்தே அந்ய சேஷத்வம் ப்ரஸ்துதம் ஆமோ வென்னில்
லோக த்ருஷ்ட்யா ஒரு அந்ய சேஷத்வ சங்கை யுண்டு அனுவர்த்திப்பது -லோகத்திலே ஒருவனுக்கு சேஷமான க்ருஹ ஷேத்ர புத்ர தாஸ தாஸிகள்
வேறேயும் சிலர்க்கு சேஷமாகக் காணா நின்றோம் –
அப்படிப்பட்ட அந்ய சேஷத்வம் இந்த ஸ்தலத்திலும் உண்டோ -என்றொரு சங்கை உதிக்கும் இறே -ஆகையாலே தாத்ருசமான அந்ய சேஷத்வம் இங்கு இல்லை
என்னும் இடத்தை பிரதிபாதிக்கிறது உகாரம் –
ததேவ பூதம் ததுபவ்யமா இதம் -என்றும் -ததேவாக் நிஸ் தத்வாயுஸ் தத் ஸூர்யஸ் தாது சந்த்ரமா -என்றும் இத்யாதிகளிலே
ஏவகார ஸ்தானத்திலே உகாரத்தை பிரயோகிக்கக் காண்கையாலே-இவ்வுகாரம் ஸ்தான பிரமாணத்தாலே அவதாரணார்த்த வாசகமாகக் கடவது –
உகாராஸ் சைவகாரார்த்த என்று அவதாரண வாசகம் என்னும் இடத்தை அருளிச் செய்தார் இறே பட்டர்
க்ருஹ ஷேத்ர புத்ர களத்ராதிகளினுடைய சேஷத்வம் போலே ஔபாதிகமாய் அநேக சாதாரணமாய் அநித்யமாய் ப்ருதக் சித்தமாய் இருக்கை யன்றிக்கே
நிருபாதிகமாய் அநந்ய சாதாரணமாய் நித்தியமாய் அப்ருதக் சித்தமான பகவச் சேஷத்வத்தை பிரதிபாதிக்கிறது –

———————————–

மகாரார்த்தாரம்பம் –
ஏவம் வித சேஷத்வம் சிதசித் சாதாரணமாய் இருப்பது -அதில் சேஷத்வ விஷய ஜ்ஞானம் தத் கார்யமாய் இருக்கிற ததநுகுண சாதனா ஸ்வீகாரம்-
தத் கார்ய அனுகுண சாத்ய அனுபவம் -தத் அனுபவ விரோதி பிரதிபந்தக நிபர்ஹணம் தொடக்கமான சேஷத்வ கார்யங்கள் பிறக்கைக்கு யோக்யதை
யுண்டாய் இருக்கிற ஜீவாத்மா ஸ்வரூபத்தை ப்ரதானதயா பிரதிபாதிக்கிற த்ருதீய அஷரமான மகாரம்
மன ஜ்ஞானே என்கிற தாதுவிலே பதமாய் நிஷ்பன்னமாகையாலே ஜ்ஞாதாவான பிரத்யகாத்மாவினுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது –
ஜ்ஞான வாசக சப்தம் தானே ஜ்ஞானைக நிரூபணீயனான ஆத்மாவை பிரதிபாதிக்கும் என்றும் சொல்லிற்று இறே
தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -என்கிற ஸூ த்ரத்திலே-
அங்கன் அன்றியே ககாராதி பகாராந்தமான இருபத்து நாலு அஷாரமும் இருபத்து நாலு தத்வத்துக்கும் வாசகமாகச் சொல்லி இருபத்தஞ்சாம் அஷரமான
மகாரத்தை பஞ்ச விம்சகனான ஆத்மாவுக்கு வாசகமாகச் சொல்லுகையாலே மகாரம் ஆத்ம வாசகம் ஆகவுமாம் –
இம்மகாரம் ஜீவ சமஷ்டி வாசகம் ஆகையாலே கீழ்ச் சொன்ன அனன்யார்ஹ சேஷத்வத்துக்கு ஆஸ்ரயமான பத்த முக்த நித்ய ரூபமான த்ரிவித ஆத்ம வர்க்கமும் அனுசந்தேயமாகக் கடவது –
ஆத்ம ஸ்வரூபமும் ஜ்ஞானானந்த லஷணமாய் இருக்கும் என்கையாலே ஜடமாய் துக்க ரூபமாய் இருக்கிற பிரகிருதி தத்வத்தில் காட்டில் வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –
ஜ்ஞானானந்தங்களுக்கு முன்னே பகவச் சேஷத்வத்தை நிரூபகமாகச் சொல்லிற்று ஆகையாலே அவற்றில் காட்டில் இது அந்தரங்க நிரூபகம்-ஒளிக்கு ஆஸ்ரயம் என்று மாணிக்கத்தை விரும்புமா போலேயும்
மணத்துக்கு ஆஸ்ரயம் என்று புஷ்பத்தை விரும்புமா போலேயும் சேஷத்வத்துக்கு ஆஸ்ரயம் என்று இறே ஆத்ம ஸ்வரூபத்தை விரும்புகிறது –
கீழ்ச் சொன்ன சேஷத்வம் உபய சாதாரணமாய் இருக்கையாலே சேதன பிரகாரமான அசித் தத்வமும் பகவச் சேஷத்வ ஆஸ்ரயதயா இவ்விடத்திலே அனுசந்தேயம் –

————————–

ஆக பிரணவத்தாலே
சேஷத்வ பிரதிசம்பந்தி தயா ப்ரஸ்துதமான ஈஸ்வரனை ரஷகத்வ தர்மத்தை இட்டு நிரூபித்து
அப்படிப்பட்ட ஈஸ்வரனுக்கு சேஷ பூதனான ஆத்மாவினுடைய ஜ்ஞானானந்த லஷணத்வத்தைச் சொல்லி
சர்வ சேஷியான சர்வேஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷ பூதன் ஆத்மா என்னும் இடத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது

———————————————————————————

நம பதார்த்த்ராரம்பம்
இப்படி ஸ்வா பாவிகமான பகவச் சேஷத்வத்தை அநாதி காலம் அபி பூதமாம் படி பண்ணின விரோதியினுடைய
ஸ்வரூபத்தை உபாதானம் பண்ணிக் கொண்டு தந் நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது நமஸ் ஸூ –
இது தான் சதுர்யந்தமான அகாரத்தில் சொல்லுகிற ஈஸ்வர சேஷத்வத்துக்கு விரோதியான அந்ய சேஷத்வத்தை நிவர்த்திப்பிக்கிற
உகாரத்தில் அந்ய தமதயா ப்ரஸ்துதமான ஸ்வ ஸ்வரூபத்தில் ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தியை விவரிக்கிறது –
இங்கே விசேஷித்துச் சொல்லுகையாலே இத்தை ஒழிந்த அந்ய சேஷத்வ நிவ்ருத்தியைச் சொல்லுகிறது ஆகவுமாம் –
இது தான் – ந- என்றும் -ம -என்றும் இரண்டு பதமாய் இருக்கிறது -இதில் பிரதம பாவியான நஞ்ஞாலே -வீடுமின் முற்றவும் என்னுமா போலே
த்யாஜ்ய ஸ்வரூப நிரூபணம் பண்ணுமதுக்கு முன்னே த்யாகத்தைப் பிரதிபாதிக்கிறது –
ஆத்ம ஸ்வரூபம் பகவத் அனன்யார்ஹ சேஷத்வைக நிரூபணீயமாய் இருக்கும் என்னும் இடம் தோற்ற பிரணவத்தில் ஆத்ம ஸ்வரூபத்தை பிரதிபாதிப்பதற்கு முன்பே
சேஷத்வத்தை பிரதிபாதித்தால் போலே
இவ்விடத்திலும் விரோதி ஸ்வரூபம் நிஷித்த தைக நிரூபணீயமாய் இருக்கும் என்னும் இடத்தை பிரகாசிப்பைக்காக
-நிஷித்த ஸ்வரூப பிரதிபாதனத்துக்கு முன்பே நிஷேத பிரதிபாதனம் பண்ணுகிறது –
ம என்கிற இது ஷஷ்டி யாகையாலே எனக்கு என்றபடி -எனக்கு என்கிறது தன்னை யாதல் தன்னுடைமையை யாதல்
அநு ஷங்கத்தாலே கீழ்ச் சொன்ன தன்னை எனக்கு
அனந்யார்ஹத்தாலே தன்னுடைமையை எனக்கு என்கை யாகிறது நான் ஸ்வாமி என்கை
ஸ்வா தந்த்ர்யாமாவது அசேஷத்வம்
ஸ்வாமி த்வமாவது-ஸ்வ அந்ய விஷயமாய் இருக்கும் தன்னை எனக்கு என்கிறது -ஸ்வ சேஷத்வம் ஆகவுமாம் –
ந என்கிற இது பிரதிஷேதத் யோதக மாகையாலே அத்தை நிஷேதிக்கிறது –
ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதி ஸ்ப்ருஹா விஷயமான ஆத்ம ஸ்வரூபம் அநாதி காலம் சம்சரித்துப் போந்தது –
அஹங்க்ருதிர்யா பூதா நாம் -என்றும் -அனாத்மன்யாத்ம புத்திரியா -என்றும் சொல்லுகிறபடியே அஹங்காரத்தாலும் மமகாரத்தாலுமாக அந்த சம்சார வ்ருத்தி பிறந்து –
அஹம் அன்னம் என்கிறபடியே ஈஸ்வரனுக்கு போக்யமாம் போது-அச்யுதாஹம் தவாஸ்மீதி -என்றும் ந மமேதி ச சாஸ்வதம் -என்றும் சொல்லுகிறபடியே அவை இரண்டும் நிவ்ருத்தமாக வேணும்
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மின் -என்கிறபடியே அஹங்கார மமகார ராஹித்யம் இல்லாத போது ஈஸ்வர சம்பந்த யோக்யதை இல்லை –

ஸ்வ ஸ்வாமின் ஸ்வத்வ அனுசந்தானம் இல்லாத போது ஸ்வாமி சந்நிதியில் நிற்கைக்கு அனர்ஹனாய் இறே இருப்பது –
அஹங்காரம் மமகாரங்கள் இரண்டும் அன்யோன்யம் ஆவி நா பூதமாகையாலே அஹங்காரம் வந்த இடத்தே மமகாரம் வந்து-மமகாரம் வந்த இடத்தே அஹங்காரம்
வரும்படி இருக்கையாலே அஹங்கார மமகாரங்கள் இரண்டும் ப்ரஸ்துதமாய்-இரண்டினுடைய நிவ்ருத்தியும் இவ்விடத்திலே அனுசந்தேயம்
யானே என் தனதே என்று இருந்தேன் என்று அஹங்கார மமகாரங்கள் இரண்டையும் அனுசந்தித்தவர் தாமே யானே நீ என் உடைமையும் நீயே -என்று
அனந்தரத்திலே அவற்றினுடைய நிவ்ருத்தியையும் அனுசந்தித்தார் இறே –
யச்யைதே தஸ்ய தத்த நம் -என்கிறபடியே அஹங்காரம் போனவாறே மமகாரம் போம் இறே
அஹங்கார மமகார நிவ்ருத்தி மாத்ரமே அன்றிக்கே பகவத ஏவாஹமச்மி -என்றும் தேஷாமபி நமோ நம -என்றும்
த்வதீய தர்சதே ப்யேயம் பவேத் -என்றும் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்றும்- அடியார்க்கு ஆட்படுத்தாய் -என்றும்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் இத்யாதியில் படியே பகவத் பாரதந்த்ர்யமும் தத் காஷ்டா பூமியான பாகவத பாரதந்த்ர்யமும் அனுசந்தேயமாகக் கடவது –

ததீய சேஷத்வ -அனன்யார்ஹ சேஷத்வங்கள் இரண்டினுடையவும் பரஸ்பர விரோதி நிபந்தனமாக ஏகத்ர சமாவேசாகட நத்தாலே
அந்ய தர பரித்யாகம் பிரசங்கிக்கும் என்று சொல்ல ஒண்ணாது -ததீய சேஷத்வ விஷய அன்வயத்வ அபாக பிரயுக்தமான பரஸ்பர விரோத
ராஹித்யம் அடியாக வருகிற ஏகத்ர சமாவேசோபாபத்தி யாலே உபய ச்வீகாரம் அவிருத்தம் ஆகையாலே –
இப்படி தர்ம த்வயத்தினுடையவும் விரோத ஹேதுவான அந்ய சப்தார்த்த ததீய சப்தார்த்தத்தை பிரதிஷேபித்துக் கொண்டு உபயத்துக்கும் ஏகத்ர சமா வேஷத்தை அங்கீகரித்து-
அவ்வழியாலே அந்ய தர பரித்யாக பிரசங்கத்தைப் பரிஹரிக்கும் போது பகவச் சேஷத்வ அபாவத்தை ஒழிய அந்ய சப்தார்த்த வ்யக்திக்கு அந்யத்வம் கடியாமையாலே
த்ருதீய அஷர வாச்யரான ஜீவர்களில் சிலருக்கு பகவச் சேஷத்வம் இன்றிக்கே ஒழியாதோ என்னில்
இங்கு விவஷிதமான ததீயத்வம் ஆகிறது பாகவத சேஷத்வ பர்யந்தமான மிதுன சேஷத்வ ஜ்ஞான அவஸ்தை யாகையாலும்
அந்யத்வம் ஆகிறது ஈத்ருசா ஜ்ஞான விசேஷ ராஹித்யம் ஆகையாலும் -சிலருக்கு சேஷத்வமாய் சிலருக்கு சேஷத்வம் இன்றிக்கே ஒழியாது –
இத்தால் பகவச் சேஷத்வ ஜ்ஞான அவஸ்தா மாத்ரம் ததீய சேஷத்வம் என்று நினைத்துப் பண்ணும் அதிபிரசங்கமும் பரிஹ்ருதம் –

இந்த நமஸ்ஸூ தான் பிரணவத்துக்கும் நாராயண பதத்துக்கும் நடுவே கிடக்கையாலே இரண்டு பதத்துக்கும் அபேஷிதமான விரோதி நிவ்ருத்தியைச் சொல்லக் கடவது –
ஆகையாலே ஸ்வரூப விரோதியும் சாதனா விரோதியும் ப்ராப்ய விரோதியும் ஆகிற விரோதி த்ரயத்தின் உடையவும் நிவ்ருத்தியை இப்பதத்திலே அனுசந்திக்கக் கடவது –
பூர்வ உத்தர பத த்வயத்திலும் ஸ்வரூபமும் பிராப்யமும் பிரதிபாதிதம் ஆகையாலே தத் விரோதி நிவ்ருத்தி இப்பதத்திலே அனுசந்தேயமாக பிராப்தம் –
சாதன ஸ்வரூபம் அபிரஸ்துதமாய் இருக்க தத் விரோதி நிவ்ருத்தி இவ்விடத்திலே அனுசந்தேயமாம்படி என் என்னில் கீழில் பதத்தில் சாதன ஸ்வரூபம் பிரஸ்துதம் ஆகையாலே
தத் விரோதி நிவ்ருத்தியை அனுசந்திக்கக் குறையில்லை –
மேலில் பதத்தில் சாப்தமாகச் சொல்லும் இப் பதத்திலே நிஷேத்யதயா ஸ்வா தந்த்ர்யம் பகவத் ஏக சாதன நைக வேஷமான ஸ்வ ஸ்வரூபத்துக்கு விரோதியாய்
ஸ்வ ரஷணத்தில் ஸ்வ அன்வயத்துக்கு ஹேது பூதமாய் இருப்பது ஓன்று இறே
தாத்ருசமான ஸ்வா தந்த்ர்யம் நிவ்ருத்தமாகை யாகிறது ஸ்வ ரஷணத்தில் ஸ்வ அன்வயம் ஸ்வரூப ஹானி என்று அறிகை இ றே –
ஸ்வ ஸ்வரூபம் ஈஸ்வரனைக் குறித்து அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கையாலே ஸ்வ ரஷணத்தில் தனக்கு அன்வயம் உண்டானால் ஈஸ்வரனைக் குறித்து
தனக்கு அத்யந்த பாரதந்த்ர்யம் இன்றிக்கே ஒழியும் ஆகையாலே ஈஸ்வர ஏக பரதந்திர விரோதியான ஸ்வ ரஷணத்தில் ஸ்வ அன்வயம் நிவ்ருத்தமானால்
பின்னை அன்வயம் உள்ளது அகாரத்திலே ஸ்வ ரஷகதயா பிரஸ்துதமான ஈஸ்வரனுக்கே யாகையாலே அவனுடைய உபாய பாவம் இவ்வழி யாலே இதிலே ப்ரஸ்துதமாம்
ஸ்வ ரஷணத்தில் தான் அதிகரித்தால் இறே ஈஸ்வரன் கை வாங்கி இருப்பது
தன்னுடைய ரஷணத்திலே தான் கை வாங்கினால் கஜேந்திர ரஷணம் பண்ணினால் போலே த்வரித்துக் கொண்டு இவனுடைய ரஷணத்திலே அதிகரிப்பான் ஈஸ்வரன் இறே
இப்படி ஆர்த்தமாக ஈஸ்வரனுடைய உபாய பாவம் சித்திக்கை அன்றிக்கே நமஸ் சக்ரூர் ஜனார்த்தனம் என்கிறபடியே ஸ்தான பிரமாணத்தாலே நமஸ் சப்தத்துக்கு
சரண சப்த பர்யாயத்வம் உண்டாகையாலே சாப்தமாக ஈஸ்வரனுடைய உபாய பாவம் சித்திக்கும்
இப்படி நமஸ் சப்தம் உபாய ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கையாலே தத் விரோதி நிவ்ருத்தியும் இப்பதத்திலே அனுசந்தேயம் –
ஸ்வ ரஷணே ஸ்வ அன்வய ஹேது பூதமான ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் நிவ்ருத்தமாகை சாதன விரோதி நிவ்ருத்தி பிறக்கை யாகிறது –

அனன்யார்ஹ சேஷத்வத்துக்கு பலம் சேஷி விஷய கிஞ்சித் காரம் ஆகையாலே சேஷத்வ அனுசந்தானத்துக்கு அனந்தரபாவியாய் இருப்பது
சேஷ வ்ருத்தி பிரார்த்தனை யன்றோ –ஆனால் சேஷத்வ வாசகமான பதத்துக்கு அனந்தரம் சேஷ வ்ருத்தி பிரார்த்தனா பிரதிபாதகமாய் இருக்க
உத்தர பதம் அனுசந்தேயமாக ப்ராப்தமாய் இருக்க அதுக்கு முன்பே நமஸ் ஸூ அனுசந்தேயம் ஆவான் என் என்னில் அப்பதத்தில் பிரதிபாதிதமான கைங்கர்ய கரணம்
விரோதி நிவ்ருத்தி பூர்வகமாய் இருக்கையாலும்
சேஷ வ்ருத்தி பிரார்த்தனைக்கு சேஷத்வ ஜ்ஞான பௌஷ்கல்யம் பிறக்க வேண்டும் ஆகையாலே உபேய சித்திக்கு உபாய அனந்தர பாவித்வம் உண்டாகையாலும்
விரோதி நிவ்ருத்தி யாதிகளுக்கு பிரதிபாதிதமான இந்தப் பதம் நாராயண பதத்துக்கு முன்னே அனுசந்தேயம்
உபேய சித்திக்கு உபாயாந்தர பாவித்வம் உண்டாகையாலே இறே உத்தர வாக்யத்துக்கு முன்னே பூர்வ வாக்கியம் அனுசந்தேயம் ஆகிறது –
ஈஸ்வரனுடைய உபாய பாவ அனுசந்தா னத்துக்கு ஈஸ்வரனுடைய ரஷகத்வ அனுசந்தானம் ஸ்வ சேஷத்வ அனுசந்தானம் தொடக்கமானவை -அபேஷிதங்கள் ஆகையாலே
நமஸ்ஸூ க்கு முன்னே தத் பிரதிபாதிதமான பிரணவம் அனுசந்தேயம் -இப்படி ஆகாத போது நமஸ்ஸூ உகார விவரணம் அன்றிக்கே ஒழியும் இறே

—————————————–

நாராயண பதார்த்தாரம்பம்
பிரணவ நமஸ் ஸூக்களாலே ஸ்வரூப சோதனமும் உபாய சோதனமும் பண்ணப் பட்டது –

இனி மேல் சதுர்த்யந்தமான நாராயண பதம் உபேய சோதனம் பண்ணுகிறது –
கைங்கர்ய பிரதிசம்பந்தி தயா உதிக்கும் பகவத் ஸ்வரூபமும் உபய விபூதி விசிஷ்டமாய் இருக்கையாலே உபய விபூதி யோகத்தையும் சொல்லுகிறது
நாராயண பதம் நர –நார -நாரா -என்று நித்ய பதார்த்தத்தையும் அதிநிடைய சமூஹத்தையும் சமூஹ பாஹூள்யத்தையும் சொல்லுகிறது –
பிரகிருதி புருஷ காலங்களோடு பரம பதத்தோடு முக்த நித்ய வர்க்கத்தோடு சத்ர சாமர பிரமுகமான பர்ச்சதங்களோடு-
ஆயுத ஆபரணங்களோடு பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமாரோடு திவ்ய மங்கள விக்ரஹத்தோடு ஜ்ஞான சக்த்யாதி குணங்களோடு
வாசியற சர்வத்தையும் நார சப்தம் பிரதிபாதிக்கிறது –
எண் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் என்றும் நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் என்றும் அருளிச் செய்கையாலே சேதன அசேதனங்கள் இரண்டும் நார சப்த வாச்யமாகக் கடவது –
ஈறில வண் புகழ் நாரணன் -என்றும் வாழ் புகழ் நாரணன் என்றும் அருளிச் செய்கையாலே குணங்களும் நார சப்த வாச்யமாகக் கடவது –
செல்வ நாரணன் -என்றும் திரு நாரணன் என்றும் சொல்லுகையாலே பிராட்டி ஸ்வரூபமும் நார சப்த வாச்யமாகக் கடவது
காராயின காள நன்மேநியினன் நாராயணன் -என்கையாலே திவ்ய மங்கள விக்ரஹமும் ஆயுத ஆபரணங்களும் காந்தி சௌகுமார்யாதி குணங்களும்
நார சப்த வாச்யம் என்னும் இடம் ஸூசிதம்-

அயன சப்தம் இவற்றுக்கு இருப்பிடமாய் இருக்கும் என்று ஈஸ்வரனை பிரதிபாதிக்கிறது –

நாராயணாமயநம் -என்கிற தத் புருஷ சமாசத்தில்-நித்ய பதார்த்தங்கள் எல்லா வற்றுக்கும் ஈஸ்வரன் இருப்பிடம் என்று பொருள்

நாரா அயனம் யஸ்ய -என்கிற பஹூ வ்ரீஹீ சமாசத்தில் நாரங்களை ஈஸ்வரன் இருப்பிடமாக யுடையவன் என்னும் அர்த்தத்தை சொல்லுகிறது

அயன சப்தம் ப்ராப்யத்துக்கும் வாசகமாய் ப்ராபகத்துக்கும் வாசகமாய் இருந்ததே யாகிலும் இவ்விடத்தில் ப்ராப்ய பரமாய் இருக்கும்

பஹூ வ்ரீஹி சமாசத்தில் அயன சப்தம் திவ்யாத்மா ஸ்வரூபத்தை ஒழிந்த சகல வஸ்துக்களுக்கும் வாசகமாய் இருக்கும்

ஷஷ்டி சமாசத்தில் திவ்யாத்மா ஸ்வரூபம் ஒன்றுக்கும் வாசகமாய் இருக்கும்

ஈஸ்வரனுடைய சர்வாத்மத்வ அபஹத பாப்மத்வ பரமபத நிலயத்வத் யோதகமாம் குண விசேஷங்கள் எல்லாம் இப்பதத்திலே அனுசந்தேயங்களாகக் கடவது

—————————–=–

வ்யக்த சதுர்த்தியின் அர்த்தம்
இதில் சதுர்த்தி பிரணவத்தில் சொன்ன அனன்யார்ஹ சேஷத்வத்தினுடையவும்
நமஸ் ஸில் சொன்ன உபாய ஸ்வீகாரத்தினுடையவும் பல ரூபமான கைங்கர்ய ப்ரார்த்தனத்தை பிரதிபாதிக்கிறது –
தேச கால அவஸ்தா பிரகார விசேஷ விதுரமாக ப்ரார்த்திக்கையாலே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களுக்கும் உசிதமான சகல சேஷ வ்ருத்தியையும் சொல்லுகிறது

————————————————————

திருமந்த்ரார்த்த நிகமனம்
பிரதம அஷரமான அகாரத்தாலே ஈஸ்வரனுடைய ரஷகத்வம் சொல்லி
சதுர்த்யம்சத்தாலே ஜீவாத்மாக்களுடைய சேஷத்வம் சொல்லி
உகாரத்தாலே அந்ய சேஷத்வ நிவ்ருத்தி சொல்லி
மகாரத்தாலே சேஷத்வ ஆஸ்ரயமாய் ப்ரக்ருதே பரமான ஆத்ம ஸ்வரூபத்தின் உடைய ஜ்ஞான ஆஸ்ரயத்தை பிரதிபாதித்து
நமஸ்ஸாலே அநாதி காலம் ஏவம் வித சேஷத்வத்துக்கு திரோதாயகமாய்ப் போந்த விரோதி ஸ்வரூபத்தை நிவர்த்திப்பித்து
பாகவத சேஷத்வ ப்ரதிபாதந த்வாரா பகவச் சேஷத்வத்தை ஸ்திரமாக்கி
சேஷத்வ அனுரூபமான சித்த சாதன ஸ்வீகாரத்தைச் சொல்லி
நாராயண பதத்தாலே நித்ய வஸ்து சமூஹ பாஹுல்யத்தை சொல்லி
தத் ஆஸ்ரயமான பகவத் ஸ்வரூபத்தின் உடைய சர்வ சேஷித்வ சர்வ ரஷகத்வ நிரதிசய போக்யத்வ
நிருபாதிக பாந்தவ நியந்த்ருத்வ தாரகத்வ பிரமுகமான குண விசேஷங்களைச் சொல்லி
சதுர்த்யம்சத்தாலே நிரதிசய ஆனந்த ரூபமான சஹஜ கைங்கர்யத்தினுடைய ஆவிர்பாவ ப்ரார்த்தனத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –

ஆக
திருமந்த்ரத்தாலே ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் உண்டான சம்பந்தத்தையும்
சம்பந்த அனுரூபமான உபாய ஸ்வீகாரத்தையும்
ஸ்வீகார அனுகுணமான உபேய பிரார்த்தனையும் சொல்லித் தலைக்கட்டுகிறது –
விடை ஏழு அன்று அடர்த்த -என்கிற பாட்டும்
மூன்று எழுத்ததனை-என்கிற பாட்டும் பிரணவார்த்தமாக அனுசந்தேயம்
யானே என்கிற பாட்டு நமஸ் சப்தார்த்தமாக அனுசந்தேயம்
எம்பிரான் எந்தை என்கிற பாட்டு நாராயண சப்தார்த்தமாக அனுசந்தேயம்
ஒழிவில் காலம் எல்லாம் என்கிற பாட்டு சதுர்த்த்யர்த்தமாக அனுசந்தேயம்
அகாரார்த்தா யைவ என்கிற ஸ்லோஹம் பத த்ரயத்துக்கும் அர்த்தமாக அனுசந்தேயம் –

————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தனி த்வயம் -உத்தர வாக்யார்த்தம் —

January 30, 2016

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

——————————————————————————————-

உத்தர வாக்யத்தின் தாத்பர்யம்–

இந்த உபாயம் தான் ஐஸ்வர் யாத் யுபேய ஆபாசங்களுக்கும் பொதுவாய் இருக்கையாலே
அவற்றினுடைய த்யாக பூர்வகமாக மேல் நிரதிசயமான
உத்தம புருஷார்த்தத்தை விவஷிக்கிறது -ஸ்ரீ மதே -என்று –

இவ்வைஸ்வர்யாதி புருஷார்த்தங்களை சாஸ்திரம் ஆதரியா நிற்க உபேய ஆபாசம் என்று கழிப்பான் என் என்னில்
இவைதான் அல்ப அஸ்திரத்வாதி
தோஷ தூஷிதங்களாய் இருக்கையாலும் –
ஸ்வரூப பிராப்தம் அல்லாமையாலும் த்யாஜ்யம் –

தேஹாத்ம அபிமானிக்கு புத்திர பச்வன்னாதிகள் புருஷார்த்தமாய் இருக்கும் –
தேஹம் அஸ்திரம் என்னும் ஜ்ஞானம் பிறந்தவாறே அவை அவனுக்கு த்யாஜ்யமாய் இருக்கும்
இனி பரலோக புருஷார்த்தங்களில் வந்தால்
நரகம் அநிஷ்டமாய் இருக்கையாலே அதில் ருசியே பிறந்ததில்லை –
ஐஸ்வர்யம் ஆகிற ஸ்வர்க்காத் யனுபவத்தில் வந்தால் ஊர்வசீ சாலோக்யத்திலே ஸூக பிராந்தி கிடக்கையாலே ருசி யுண்டாய் இருக்கும் –
அத்தை லபித்து அனுபவிக்கப் புக்கில் தேவதை துச்சீல தேவதை யாகையாலே தன்னை உபாசித்துத் தான் கொடுத்த பலத்தை அனுபவிக்கும்
சாம்யா பத்தி பொறுக்க மாட்டாமையாலே யயாதியை -த்வமஸ- என்று தள்ளினால் போலே தள்ளும் –
இது தப்பி அனுபவிக்கப் புக்கவன்றோ
ஷீணே புண்யே மர்த்யலோகம் விசந்தி -என்று புண்ய ஷயம் பிறந்து நரகத்திலே விழப் புகுகிறோம்
என்கிற பயத்தோடு இருந்து அனுபவிக்கையிலே
உயிர்க் கழுவில் ஸூ கம் போலே துக்க விசேஷமாய் இருக்கும் அத்தனை –
ஸூக லவம் உண்டானாலும் வகுத்த புருஷார்த்தம் அல்லாமையாலே ஸ்வரூப ப்ராப்தம் அன்று
லோக விநாசம் உண்டாகையாலே அஸ்திரம் –

இனி ப்ரம லோக-சத்ய லோகம் – பிராப்தியில் வந்தால் அனுபவம் செல்லா நிற்கச் செய்தே ஷூத்பிபாசையாலே
ஸ்வமாம்சத்தைப் பஷித்துப் பின்னையும் போயிருக்கும் என்று சொல்லுகையாலும்
பூரணமான நிஷ்க்ருஷ்ட ஸூகம் அல்லாமையாலும்
ஸ்வரூப ப்ராப்தம் அல்லாமையாலும் த்யாஜ்யம்

இங்கன் ஒத்த துரித பரம்பரைகளும் இன்றியிலே அசித் வ்யாவ்ருத்தி விசேஷமான ஆத்ம வஸ்து விலஷணம் ஆகையாலே
பிராப்தியிலே ருசி யுண்டாய் இருக்கும் –
அத்தை லபித்து அனுபவிக்கப் புக்கால் பகவத் அனுபவமும் அங்கு உள்ளாருடைய பரிமாற்றமும் பிரகாசியா நிற்க
அவ்வனுபவதுக்கு யோக்யதை யுண்டாய் இருக்கக் கிடையாமையாலே
கீழ்ச் சொன்ன வற்றில் காட்டில் தனக்கு உண்டான ஸூகம் அடைய விதவா லங்காரம் போலே
அவத்யமாய் துக்கமாய் முடிவில்லாத நரக சமானமாய் இருக்கையாலே அதுவும் த்யாஜ்யம்

கீழ்ச் சொன்னவை போலே அல்பம் இன்றியே நிரதிசயமுமாய் அஸ்திரமும் இன்றியே நித்யமுமாய்
ஸ்வரூபத்துக்கு அநனுரூபம் இன்றியே அனுரூபமுமாய்
புநரா வ்ருத்தி இன்றியே அபுநா வ்ருத்தி லஷண மோஷமுமான உத்தம புருஷார்த்தத்தை விவஷிக்கிறது உத்தர வாக்கியம் –
உத்தர வாக்யத்தின் தாத்பர்யம் முற்றிற்று

—————————————————-

உத்தர வாக்யத்தின் பிரதிபத வியாக்யாநாரம்பம் –

ஸ்ரீ மதே –
என்றது கீழ் புருஷகார பூதையானால் போலே நித்ய ப்ராப்யம் என்கிறது –
இவள் ப்ராப்யை என்னும் இத்தை இச் சப்தம் காட்டுமோ என்னில்

ஸ்ரீ மதே -என்கிற விபக்தியாலும்
ஆய -என்கிற சதுர்த்தியாலும்-தாதர்யத்தைக் காட்டும் இத்தனை –
இரண்டும் ஏக விபக்தி யாகையாலே நாராயண பதத்துக்கு ஸ்ரீ சப்தம் விசேஷணம் ஆகையாலே
ஸ்ரீ மன் நாராயணன் பொருட்டு என்றாய்த்து ஸ்ரீ சப்தம் காட்டுவது –

ப்ராப்யை என்று இச் சப்தம் காட்டாதாகில் அவனோபாதி ப்ராப்யை என்று சொல்லுகிற அர்த்தம் சேருகிறபடி எங்கனே என்னில்
அவன் பிரதான ப்ராப்யனாய்த்தும் ஸ்வாமி யாகையாலே இறே –
இவளும் இவனுக்கு மஹிஷி-
இவர்களைக் குறித்து ஸ்வாமிநி என்னும் இச் சப்தமே இவளுடைய ப்ராப்யதையைச் சொல்லத் தட்டில்லை –
எங்கனே என்னில்

கீழ் ஸ்ரீ சப்தத்திலே இவர்களைக் குறித்து ஸ்வாமிநி என்னும்-வ்யுத்பத்தியாலும்-
விஷ்ணுபத்நீ என்கிற பிரமாணத்தாலும் சித்தமான அர்த்தத்துக்கு வாசகமான ஸ்ரீ மச் சப்தத்தை
இங்கே பிரயோகிக்கையாலே இச் சப்தமே இவளுடைய ப்ராப்யதையைச் சொல்லுகிறது –
தன்னை ஒழிந்தார்க்கு ப்ராப்ய சித்திகள் இவளுடைய கடாஷமாய் இருக்கும் –
இது தன்னை நம்மாழ்வார் -கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடி -என்றும் –
இளைய பெருமாளும் பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ச்யதே -என்று
பெருமாள் ப்ராப்யரானவோ பாதி பெரிய பிராட்டியார் ப்ராப்யை என்றும் அருளிச் செய்தார்கள் –

இவ்வடிமை கொள்ளச் சேர இருக்கிற இருப்பை ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி -இத்யாதிகளாலே –
இவள் ப்ராப்யத்தை எங்கும் ஒக்க வ்யாப்தம் –
அவனுடைய ப்ராப்யத்தை ச்வதஸ் சித்தம் அதுக்கு ஏகாயனனும் இசையுமே –
இவளுடைய ப்ராப்யதையைச் சொல்லுகையாலே இறே இதுக்கு பிரதான்யம்-
மாதா பிதாக்கள் இருவரையும் சேர அனுவர்த்திக்கும் புத்ரனைப் போலே
ஸ்வாமியும் ஸ்வாமிநியும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்கை சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் –

சாதன தசையில் புருஷகாரத்தை அபேஷித்தவோபாதி-சாத்திய தசையிலும் இருவருமான சேர்த்தி அபேஷிதம்
ஸ்ரீ மதே என்கிற மதுப்பாலே கீழில் மத் பதத்தில் அர்த்தம் போலே இங்கும் இருவருமான சேர்த்தியால்
வந்த போக்யதை நித்யம் என்கிறது –
இப்படி இச் சேர்த்தி ஒழிய தனித்து அவளே ப்ராப்யை என்று பற்றுதலும்
அவனே ப்ராப்யம் என்று பற்றுமதுவும் விநாசம் எங்கே கண்டோம் என்னில்
பிராட்டி ஒழிய பெருமாள் பக்கலிலே போக்ய புத்தி பண்ணின ஸூர்ப்பணகை நசித்தாள்-
பெருமாளைப் பிரித்து பிராட்டி பக்கலிலே போக்ய புத்தி பண்ணின ராவணன் நசித்தான் –
உடலையும் உயிரையும் பிரித்தார்க்கு விநாசம் அல்லது இல்லை இறே –
அனந்யா ராகவேணா ஹம் பாஸ்கரேண பிரபா யதா –
அனந்யா ஹி மா சீதா பாஸ்கரேண பிரபா யதா -என்று இவருடைய சத்பாவமும் இதுவான பின்பு
இனி இவர்களைப் பிரிக்கை யாவது வஸ்துவினுடைய சத்பாவத்தை இசையாமை இத்தனை இறே –
இவ்வஸ்து சத்பாவத்தை இசைந்தார்க்கு மிதுநமே இறே ப்ராப்யம் –

————————————————————–

நாராயணன் –
என்று எல்லா வழியாலும் வகுத்த சர்வாத்ம ஸ்வாமி என்கிறது –
கீழ் பற்றுகைக்கு சௌலப்யம் பிரதானமானவோ பாதி
இங்கும் அடிமை செய்கைக்கு வகுத்த சப்தம் அபேஷிதம் ஆகையாலே ஸ்வாமி த்வத்திலே நோக்கு –
வகுத்த ஸ்வாமி என்கையாலே இவனை ஒழிந்த அசேவ்யசேவை அபுருஷார்த்தம் என்கிறது –

திருமந்த்ரத்திலே நாராயண சப்த வாச்யமான அர்த்த விசேஷங்கள் இந் நாராயண சப்தத்தில் உபதேசியாது ஒழிவான் என் என்னில்
அங்கு ஸ்வரூபம் சொல்லுகிறது ஆகையாலே
சேதன அசேதனமான நித்ய பதார்த்தங்களினுடைய சமூஹங்கள் பலவற்றுக்கும் ஆவாச பூமியாய் இருக்கிறான்
என்று சர்வ ஸ்வாமித்வம் சொல்லிற்று –
இங்கு அசித் வ்யாவ்ருத்தனான சேதனனுக்கு பிராப்யம் சொல்லுகையாலே சர்வ ஸ்வாமித்வம் சொல்லிற்று –
கீழ் நாராயண பதத்தில் சொன்ன குணங்களும் இப்பதத்தில் ப்ராப்யபரமாக அனுசந்தேயம் –
அவன் தான் நிற்கும் நிலையிலே குணங்கள் நிற்பது –
பிராப்யமான ஆகாரமும் ப்ராபகமான ஆகாரமும் அவன் தனக்கு உண்டானால் போலே அவன் குணங்களுக்கும் உண்டு –
அங்கும் தன் குணங்களை ப்ராப்யபரமாகச் சொல்லுகிறது –

சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதேதி -என்றும்
பிணங்கி யமரர் பிதற்றும் குணம் -என்றும் குண அனுபவமே பிராப்யமாகச் சொல்லிற்று இறே
நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கக் கடவ குணங்களை நித்ய சம்சாரியை முக்தனாக்கி இக்குணங்களை இவர்கள் அளவிலே
மட்டம் செய்து கொடுத்து சாஷாத் கரித்து அனுபவிப்பிகையாலே சௌலப்யம் ப்ராப்யம் –

சேறு தோய்ந்த இவனை ப்ராகல்ப்யமேயாய் இருக்கிற நித்ய ஸூரிகளுடைய கோவையிலே ஒருவனாக்கி
அனுபவிப்பைக்கையாலே சீல குணம் ப்ராப்யம்

அனுபவிக்கிற இவனுடைய தோஷம் பார்த்தல் தன் வைலஷண்யம் பார்த்தல் செய்யாதே இவனை
அனுபவிப்பிக்கையாலே வாத்சல்யம் பிராப்யம் –

இவனுடைய அசேவ்ய சேவைகளைத் தவிர்த்து ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தைக் கொடுத்து
அடிமை கொள்ளுகையாலே வகுத்த ஸ்வாமித்வம் பிராப்யம்

இந்த ஜ்ஞான சக்த்யாதி குணங்களை அனுபவிக்கிற இவனுக்கு போக்த்ருத்வ சக்தியையும் கொடுத்து
அனுபவிப்பைக்கையாலே அவற்றோடு இவற்றினுடைய கார்ய வஸ்தையான சீலாதி குணங்களோடு வாசியற
எல்லாம் கட்டடங்க இவனுக்கு பிராப்யம்
ஈஸ்வரன் தான் ப்ராப்யன் ஆகிறது -இக் குணங்களுக்கு ஆஸ்ரய பூதன் என்று இறே

நித்ய சம்சாரியை முக்தனாக்கி அனுபவிப்பிக்கையாலே வேறே குணங்கள் ப்ராப்யமாய்த்து என்னில்
ஸ்வேன ரூபேண குணங்கள் அடைய பிராப்யம் என்னும் இடம் கண்டோம் இறே
நித்ய ஸூரிகள் குமிழ் நீர் உண்கையாலே சம்சாரி சேதனனை இதுக்கு நிலவனாக்கி அனுபவிப்பிக்கிற
உபகார ச்ம்ருதிக்காக இட்ட பாசுரங்கள் இறே இவை –
ஒன்றும் செய்யாத போதும் போக்யதை இறே குணங்களுக்கு வேஷம் –
அவன் குணம் என்று இவை போக்யமான பின்பு குணா நாம ஆஸ்ரயமானவன் ஸ்வரூபத்துக்கு போக்யதையே
நிரூபகம் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே

நாராயண சப்தத்தில் அனந்தரத்தில் விக்ரஹத்தையே ஸ்பஷ்டமாகச் சொல்லாது ஒழிவான் என் –
விக்ரஹம் ப்ராப்யமாய் இருக்க என்னில்
இதுக்கு சாதனமான பூர்வார்த்தத்திலே விக்ரஹ வைலஷண்யத்தைச் சொல்லுகையாலே பிராபகமான வஸ்து
தான் ப்ராப்யம் ஆகையாலே இங்கு சப்தேன சொல்லிற்று
இல்லை யாகிலும் இங்கு உண்டு என்னும் இடம் அர்த்தாத் சித்தம்
விக்ரஹத்துக்கு போக்யதையே வேஷமாய் இருக்கையாலே இங்கு சித்தமாய் இருந்தது

அதிகாரியினுடைய கதி ஸூந்யதையாலே உபாயமாக வேண்டுகிறது -அதுவும் அவனுக்கு அபாஸ்ரயமாம் படி
உபதேசிக்க வேண்டுகையாலே சப்தேன சொல்லிற்று
பிரசித்தமான விஷயத்துக்கு பூரிக்க வேண்டாவே
இந்த விக்ரஹத்துக்கு இங்கனே இருப்பதொரு ஏற்றம் உண்டு –
மாணிக்கச் செப்பிலே பொன்னையிட்டு வைத்தால் போலே ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசகமாய் இருக்கையாலே
இக் குணங்களினுடைய போக்யதை எல்லை யறிந்து விக்ரஹத்து அளவும் செல்லப் பெற்றது இல்லை –
விக்ரஹத்தை அவன் தான் ஆவிஷ்கரித்து சதா பச்யந்திக்கு விஷயம் ஆக்கின போது அனுபவிக்கும் அத்தனை –

ஆக இந் நாராயண சப்தத்தாலே சர்வாத்ம ஸ்வாமித்வம் சொல்லிற்றாய்த்து –

——————————————————-

ஆய –
என்கிற இது சதுர்த்தியாகையாலே நித்ய கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறது –
இச் சதுர்த்திக்கு தாதர்த்யம் அர்த்தமாய் இருக்க
நித்ய கைங்கர்யத்தை பிரார்த்திக்கிறது என்கைக்கு கைங்கர்யத்தைக் காட்டுமோ என்னில்
வ்ருஷாய ஜலம்-என்றால் வ்ருஷத்தின் பொருட்டு என்னுமா போலே
நாராயணாயா என்றால் நாராயணனுக்கு சேஷம் என்று காட்டும் அத்தனை அன்றோ என்னில்

ஸ்வரூபம் தாதர்த்தமான போது ஸ்வரூப அனுபந்தியாய் வரும் ஸ்வ பாவங்களும் தாதர்த்தமாகக் கடவது இறே-
சேஷ பூதனுக்கு சேஷ வ்ருத்தி இறே ஸ்வ பாவம் –
புஷ்பம் பரிமளத்தோடே அலருமா போலே ஸ்வரூப பிராப்தி யாவது கைங்கர்ய பிராப்தியாகக் கடவது –
கைங்கர்யம் சஹஜமாகையாலே —
தாதர்த்தமாவது –
சேஷத்வம் சொன்னவிடத்தில் சேஷ வஸ்துவைச் சொல்லிற்றாய்-
அது சொன்னவிடத்தில் சேஷ வ்ருத்தியைச் சொல்லிற்றாய் –
அவ் வழியாலே கைங்கர்யம் சொல்லிற்றாய்க் கடவது –

ஆனால் சர்வ தேச சர்வ கால சர்வ தேச உசிதமான சகல கைங்கர்யங்களையும் பண்ணப் பெறுவேனாக வேணும் என்கிற
பிரார்த்தனையைக் காட்டுமோ இச்சப்தம் என்னில்
இந்த ஸ்வரூப ஸ்வபாவம் தானே ஒரே காலத்திலேயாய் வேறொரு காலத்திலேயே இன்றிக்கே இருக்குமோ -என்னில்
எல்லா தேசத்திலும் உண்டு என்று வந்து புகுந்து -உடனாய் மன்னி -என்கிறபடியே
இத்தேசங்களில் ஓரோர் அவஸ்தைகளில் ஓரோர் இடங்களிலேயாய்
ஓரோர் அடிமை இன்றிக்கே இருக்குமோ என்னில் –
சகல கைங்கர்யங்களும் உண்டு என்று வந்து புகுந்து வழு விலா வடிமை என்கிறபடியே
பிரணவத்தாலும் நமஸ் ஸாலும் ஸூத்த ஸ்வரூபரான நமக்கு என்று போகாதிகாரியைச் சொல்லுகிறது –

அவ்விடத்திலே செய்ய வேண்டும் நாம் -என்று திருப்பாவாடை இனிது என்று சொல்லுமா போலே
இவன் கைங்கர்யம் இனிது என்று இவன் எல்லா அடிமையையும் பாரித்தால் அவன் கொள்ளுமோ –
உத்துங்க தத்தவம் அன்றோ என்னில் இவன் இருந்து ப்ரார்த்திக்கவே அவன் கொள்ளும் இடத்தைப் பற்றவே பிரார்த்தனை புகுந்தது –

இச்சப்தத்துக்கு சேஷத்வம் அர்த்தமாய் இருக்க கைங்கர்யத்தை கால தேசங்கள் இட்டுப் பெருக்கி
அது சந்திக்கிறதற்கு பிரயோஜனம் என் என்னில்
கலியன் பையையாகக் குவிகிக்க வேணும் என்னுமா போலே தனக்கு ஸ்வரூப அனுரூபமாய் சர்வாதிகாரமுமான கைங்கர்யத்தில் இறே
போக்யதையில் வைபவத்தாலே வந்த அபி நிவேசம் –
பகவத் அனுபவமும் கைங்கர்யமாய் இருக்கச் செய்தே அது ஈஸ்வரனுக்கும் ஒத்து தனக்கும் ப்ரீதி உண்டாகையாலே
இப்பிரீதி காரிதமான கைங்கர்யம் உண்டாய்த்து -இனி கைங்கர்யத்துக்கு அவ்வருகு இல்லையே பிராப்யம் –

கீழ்ச் சொன்ன பிராட்டியும் குணங்களும் விக்ரஹமும் ஈஸ்வரனும் ப்ராப்யம் அன்றோ என்னில் –
இக்கைங்கர்யத்துக்கு வர்த்தகர் ஆகையாலே ப்ராப்யர் ஆனார்கள் இத்தனை
கைங்கர்யமே பிராப்யம் —
அர்ச்சிராதி சாலோக்யாதி பரபக்த்யாதிகள் பிராப்யம் ஆனவோபாதி பகவல்லாபமும் ப்ராப்யமான ஆகாரம் –
கைங்கர்யமே பிரதான ப்ராப்யம்

சாலோக்யாதிகளில் சாயுஜ்யம் பிரதானமாகச் சொல்லுகிறது கைங்கர்யம் ஆகையால் இறே –
சாயுஜ்யம் ப்ரதிபன்னா தீவ்ர பக்தாஸ் தபஸ்விந-கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா -என்கிறபடியே சாயுஜ்யமாவது கூட்டரவு-
கூடினால் அல்லது கைங்கர்யம் சித்தியாது -ச்த்ரீபுமாங்கன் ஒன்றானார்கள் என்றால் ஏகத்ரவ்யம் ஆனார்கள் என்று அன்று இறே
ஒரு மிடறு ஆனார்கள் என்று பொருளாய்த்து-
அப்படியே இக்கைங்கர்யம் கொள்ள இருக்கிற சேஷியுடைய நினைவும் –
கைங்கர்யம் செய்து ஸ்வரூபம் பெற இருக்கிற சேஷபூதனுடைய நினைவும் ஒன்றாய் –
அதாவது சேஷியினுடைய நினைவு தனக்கு நினைவாய் அவனுடைய போக்யமே தனக்கு போக்யமாகத் தலைக்கட்டுகை –

ஒரு மிதுனம் போக்யம் மிக்கு உன்மச்தக ரசமாய்க் கலவா நின்றால் பிறக்கும் இனிமை இருவர்க்கும் ஒக்கும் இறே –
அதில் பரதந்த்ரனான இவனுக்கு பிறக்கும் இனிமை பாரதந்த்ர்யத்தோடே சேர்ந்து இருக்க வேணும் இறே -அதாவது
இவன் செய்யும் அடிமை கண்டு அவன் உகந்தால்
பின்னை அவன் உகந்தபடி கண்டு உகக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம் –

கைங்கர்ய விஷயமாக வங்கிபுரத்து நம்பி பணிக்கும் படி –
கிம் குர்ம இதி கைங்கர்யம் -என்று பகவத் அனுபவ ப்ரீதியாலே தடுமாறி என் செய்வோம் என்று இருக்கை -என்று
அங்கன் இன்றிக்கே மானசமாயும் வாசிகமாயும் காயிகமாயும் இறே செய்யும் அடிமைகள் –

சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபிஸ்சிதா-என்று மானசமான அடிமை –
ஹாவு ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ -என்றும்
நாம இத்யேவ வாதி ந -என்னும் இவை வாசிகமான அடிமை
யதா தருணவத்சா வத்சம் வத்சோ வா மாதரம் சாயா வா சத்த்ச்வம் அனுகச்சேத்-கச்சன் தம நுவ்ரஜேத்-ததா பிரகாரம் யேன யேன
தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்னும் இவை காயிகமான அடிமை –

ஆக இவையாய்த்து கைங்கர்யம் -இவை செய்யும் இடத்தில் –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்கிறபடியே ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே
அவனுக்கு கைதொடுமானமாய் இருக்கை -அதாவது
விநியோகம் கொள்ளும் அவனுக்கே உறுப்பாய் தனக்கு என்ன வேறொரு ஆகாரம் இன்றிக்கே இருக்கை –
அப்படி -படியாய் -என்கிறபடியே
அசித் சமாதி யிலேயாம் படி தன ஸ்வரூபத்தை சிஷித்தால் பின்னை அவன் உகந்தபடி கண்டு உகக்கும்
என்னத் தட்டில்லை இறே புருஷகாரமாகைக்கு –

————————————————

இதுக்கு வரும் விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது நமஸ்ஸூ –
நம -என்கிறது
கைங்கர்யத்தில் நான் என்கிற விரோதியைப் போக்கித் தந்து அருள வேணும் என்கிறது
அஹங்கார கர்ப்பமான கைங்கர்யம் புருஷார்த்தம் அன்றே –
ஆகையாலே அவ்வளவும் செல்ல உள்ள அஹங்கார மமகாரங்களைப் போக்கித் தந்து அருள வேணும் என்கிறது –

அஹங்காரத்தை நிஷேதிக்கையாலே அத்தால் வந்த மமகாரமும் இந் நமஸ் ஸிலே நிஷேத்யமாய்த்து
அஹங்கார மமகாரங்கள் ஆகிற சேற்றிலே அநாதி காலம் புதையுண்டு கிடந்த சேதனனை நமஸ் சாகிற நீரிலே
கழுவுகையாலே ஆசும் மாசும் அற்றபடி –

இவன் முக்தனாய் ப்ராப்ய அனுபவம் பண்ணும் போதும் எனக்கு என்னுமது அங்கும் உண்டோ என்னில் -அங்கு இல்லை –
இக்கைங்கர்யம் பெற வேணும் என்று அபேஷிக்கிறவன் விரோதியோடே இருந்து அபேஷிக்கிறவன் ஆகையாலே
தேஹாத்மா அபிமானம் தொடக்கமாக கைங்கர்யத்தில் அஹங்கார கர்ப்பமீறாக நடுவுண்டான விரோதிகளைப் போக்கித்
தந்து அருள வேணும் என்று உபாசன வேளையாகைலே அபேஷிக்கிறான்
திருமந்த்ரத்திலே நமஸ்ஸி லே ஸ்வரூப விரோதி நிவ்ருத்தயை சொல்லிற்று —
இந் நமஸ்ஸிலே ப்ராப்ய விரோதியான ஸ்வ பிரயோஜநத்தை துடைத்தது –

கைங்கர்யம் ஆவது பிரகர்ஷயிஷ்யாமி -என்றும் –
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே -என்றும்
உந்தன் திருவுள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் -என்றும்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்றும் –
உனக்கே நாம் ஆட்செய்வோம் என்றும் –
தூயனவேந்தி -என்றும் –
நீத ப்ரீதி புரஸ் க்ருத -என்றும் –
சாயா வா சத்த்வம் அனுகச்சேத்-என்றும்
ப்ரீயதே சததம் ராம -என்றும்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்-என்றும் –
க்ரியதாம் இதி மாம்வாத -என்றும்
ஏவ மற்றமரர் ஆட்செய்வார் -என்றும்
ரமமாணா வனே த்ரய -என்றும்
இவை இறே இவன் அடிமை செய்யும் போது இருக்கும் படி –

இத்தால் சொல்லுகிறது பாரதந்த்ர்ய காஷ்டைகள் –

—————————————————————–

ஆக
புருஷகாரம் சொல்லி –
அதினுடைய நித்யத்வம் சொல்லி –
அப்புருஷகாரம் மிகை என்னும்படியான வாத்சல்யாதி குண யோகம் சொல்லி –
விக்ரஹ வைலஷண்யம் சொல்லி –
இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் நிரபேஷமான உபாயம் சொல்லி –
தத் ஸ்வீகாரம் சொல்லி –
ஸ்வாமித்வ பூர்த்தி சொல்லி –
கைங்கர்ய பிரார்த்தனை சொல்லி –
கைங்கர்ய விரோதி போனபடி சொல்லித் தலைக்கட்டுகிறது –

ஷட்குண ரசான்னமான அஹம் அன்னத்திலே நெஞ்சு வையாதே ஸ்வாமிக்காக்குகை –
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்பா
அங்கண்ணன் உண்ட என்னாருயிர்க் கோதிது-என்று பின்பு ஆபாதரணீயம் –

தனி த்வயம் முற்றிற்று –

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தனி த்வயம் -பூர்வ வாக்யார்த்தம் —

January 28, 2016

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

—————————————————————————————————————

இது தான் ஆறுபதமாய்-பத்து அர்த்தம் அனுசந்தேயமாய் இருக்கும் –
ஸ்ரீ மன் நாராயண சரனௌ-என்று சமஸ்த பதம் —
நாலிரண்டு அர்த்தம் சேர்ந்து இருக்குமது சமச பதம் –
இது தன்னில் முதல் பதம் பிரகிருதி பிரத்யயங்களாய் இருக்கும் –

ஸ்ரீ என்றவிடம் பிரகிருதி–மத்-என்றவிடம் ப்ரத்யயம் –
ஸ்ரீ என்கிற திருநாமத்துக்கு -ஸ்ரீ ஞ்-சேவாயாம் -என்கிற தாதுவிலே முடிக்கையாலே சேவ்யமானை என்கிறது –
ஆராலே சேவிக்கப்படும் ஆரை சேவிக்கும்-என்னும் அபேஷையிலே –
ஸ்ரீ யத இதி ஸ்ரீ -என்றும்
ஸ்ரயத இதி ஸ்ரீ -என்றும் வ்யுத்பத்தியாய்

இதில் ஸ்ரீ யதே என்று தன்னை ஒழிந்த த்ரிவித ஆத்ம வர்க்கத்தாலும் ஆஸ்ரயிக்கப் படுமவள் என்கிறது –
ஸ்ரயதே என்கையாலே இவள் தான் எம்பெருமானை ஆஸ்ரியா நின்றாள் என்று
ஸ்ரீ என்னும் திருநாமத்தை உடையவளாய் இருக்கும் –
இத்தால் தன்னை ஒழிந்த த்ரிவித சேதனருடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள்
இவளுடைய கடாஷாதீனமாய் இருக்கும் என்னும் இடத்தையும்
இவள் தன்னுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் இவனுடைய கடாஷாதீனமாய் இருக்கும்
என்னும் இடத்தையும் சொல்லுகிறது –

ஆக இவர்களைக் குறித்து தான் ஸ்வாமிநியாய் –
அவனைக் குறித்து தான் பரதந்த்ரையாய் இருக்கையையே
இவள் திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ஸ்திதி என்னும் இடத்தைச் சொல்லிற்று –

இத்திருநாமம் தான் புருஷகாரத்தைக் காட்டுகிறது –
தன்னை ஒழிந்தார்க்குத் தான் ஸ்வாமிநியாய் -அவனைக் குறித்து பரதந்த்ரை என்னும் காட்டில்
புருஷகாரத்தைக் காட்டுமோ
இச்சப்தம் -என்னில் புருஷகாரமாவாருடைய லஷணம் இதுக்கு உண்டாகையாலே –
புருஷகாரமாவார்க்கு இரண்டு இடத்திலும் குடல் துவக்கு உண்டாக வேணும் –
தன்னை ஒழிந்தாரோடு தனக்கு குடல் துடக்கு இல்லையாகில் கார்யம் தீரக் கழியச் செய்யக் கூடாது –
கார்யம் கொள்ளும் இடத்தில் தனக்கு பிராப்தி இல்லையாகில் கார்யம் வாய்க்கச் செய்விக்கக் கூடாது –
ஆக இரண்டு இடத்தில் பிராப்தியும் புருஷகாரமாவர்க்கு அபேஷிதமாகையாலே இத்திரு நாமம் தான் புருஷகாரத்தைச் சொல்லிற்று –

இன்னமும் நிருத்தத்திலே இவ்வர்த்தம் தன்னை முக்த கண்டமாகச் சொல்லிற்று என்று
நஞ்சீயர் அருளிச் செய்வது ஒன்றுண்டு –
அதாவது ஸ்ருணோதீதி-ஸ்ரீ என்றும் ஸ்ராவயதீதி ஸ்ரீ என்னும் வ்யுத்பத்தியாலும் –
அதில் -ஸ்ருணோதீதி-ஸ்ரீ -என்று சம்சார பயபீதரான சேதனர்கள்
தந்தாமுடைய ஆர்த்தியையும் அபராதத்தையும் ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யர்த்தையும் அனுசந்தித்து
இப்படி இருக்கிற எங்களை அவன் திருவடிகளிலே சேர்க்க வேணும் என்று திரு முன்பே விண்ணப்பம் செய்தால்
ஆபிமுக்யம் பண்ணிச் செவி தாழ்த்துக் கேட்கும் என்னும் இடத்தையும்

ஸ்ராவயதீதி ஸ்ரீ என்று தான் கேட்ட வார்த்தையை அவன் செவியில் படுத்திப் பொறுப்பித்துச் சேர்க்கும்
இடத்தையும் சொல்லுகிறது என்பர்கள்-
இவ்வர்த்தம் வ்யுத்பத்தி சித்தமே யன்று -பிரமாண சித்தமும் –
ஹரீஸ்ஸ தே லஷ்மீஸ்ஸ பத்ன்யௌ-என்றும்
அச்யேசாநா ஜகத-என்று ஜகத்துக்கு ஈசனை என்கையாலே
இவர்களைக் குறித்து ஸ்வாமிநி என்னும் இடத்தைச் சொல்லிற்று –
நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோஸ் ஸ்ரீர் அநபாயி நீ -என்றும்
விஷ்ணு பத்நீ என்றும் சொல்லுகையாலே அவனைக் குறித்து பரதந்த்ரை என்னும் இடம் சொல்லிற்று
இப்படி ஒழிய சேதனரோடு சமானை என்னுதல் ஈச்வரனோடு சமானை என்னுதல் சொல்லுவது சேராது –

ஆனால் பும்ப்ரதா நேச்வரேச்வரீம்-என்று அவனிலும் இவளுக்கு ஆதிக்யம் சொல்லுகிற
பிரமாணங்கள் சேருகிறபடி எங்கனே என்னில்
அவளுடைய போக்யதையில் உண்டான வைபவத்தைப் பற்ற அவனுக்கு உண்டான
பிரணயித்வ பாரதந்த்ர்யமாம் இத்தனை –
பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு -என்றும் –
மலராள் தனத்துள்ளான் -என்றும்
மா மலர் மங்கை மண நோக்கம் உண்டான் -என்றும்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -என்றும் சொல்லுகையாலே
தனது போக்யதையாலே அவன் நெஞ்சைத் துவக்கிக் கொண்டாய்த்து இருப்பது –

அவன் ஸ்வரூபம் எல்லை காண ஒண்ணாத வைபவம் போலே இவளுடைய ஸ்வரூபம் அணுவாய் இருக்கச் செய்தே
இவளுடைய போக்யதையில் உண்டான வைபவம் சொல்லிற்றாகக் கடவது –
அவன் ஸ்வரூபம் எல்லை காணிலும் காண ஒண்ணாது காணும் இவளுடைய போக்யதையில் ஏற்றம் இருக்கும் படி –
இவளுடைய ஸ்வரூபம் அணுவாய் இருக்கச் செய்தே போக்யதையாலே ஆவணத்தில் இவள் ஸ்வரூபத்துக்கு
வைபவம் சொல்லலாமோ என்னில் –
முருக்கம் பூவுக்கும் செங்கழுநீர் பூவுக்கும் நிறம் ஒத்து இருக்கச் செய்தே
தனக்கு விசேஷணமான பரிமளத்தாலே செங்கழுநீர் பெரு விலையனாய்த்து என்றால்
வேறொன்றால் வந்த உத்கர்ஷம் ஆகாது இறே-
அப்படி இவள் ஸ்வரூபமும் அவனுக்கு சேஷமாய் இருக்கச் செய்தேயும் அவனிலும் இவளுக்கு ஏற்றம் சொல்லிற்று
என்றால் வேறோன்றாலே வந்த ஏற்றம் ஆகாது இ –

ஆகையால் ஜகத்து இருவருக்கும் சேஷமாயிருக்கையாலே ஜகத்துக்கு பூஜ்யையாய் இருக்கும் –
ஸ்வரூபேண பிரணயித்வத்தாலே அவனுக்குப் பூஜ்யையாய் இருக்கும் –
த்ரயாணாம் பரதாதீ நாம் ப்ராத்ரூணாம் தேவதா ச யா -என்றும்–
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபஷா சமன்வித சப்தோஸ்அயம் -என்றும்
பூஜ்ய வாசகமாய் இருக்கையாலே பூஜ்யை என்கிறது –

இது பிரமாண சித்தமே யன்று -லோக சித்தம் எங்கனே என்னில்
பிரஜைகளைக் குறித்து தாய் ஸ்வாமிநியாய் பர்த்தாவைக் குறித்து பரதந்த்ரையாய் இருக்கச் செய்தே –
இவள் போக்யதைப் பற்ற அவன் பரதந்த்ரனானான் என்ன அவளுடைய ஸ்வா தந்த்ர்யம் சொல்லாது இறே –
இவன் பிரணயித்வமாம் அத்தனை இறே –
இப்பிரணயித்வத்தாலே பிரஜைகளுக்கு ரஷணமாய்த் தலைக் கட்டுகிறது -எங்கனே என்னில்

தாச தாசிகள் பணி செய்கைக்காகவும் புத்ராதிகளுடைய வ்யுத்பத்திக்காகவும் பிதாவானவள் நியமித்தால்
மாதாவின் நிழலிலே ஒதுங்கி நின்று அவன்
இவளுக்கும் உதவியவனான அளவிலே இவற்றின் குற்றத்தைப் பார்க்கக் கடவதோ -என்று
இவள் காட்டிக் கொடுக்கக் காணா நின்றோம் இறே
ஆகையாலே புருஷகாரமும் லோக சித்தம் -ஆக இப்பதத்தால் புருஷகாரம் சொல்லிற்று –

ஆக இங்குத்தை ஸ்ரீ மத் பதத்துக்கு அவனில் இவளுக்கு ஏற்றம் என் என்னில் –
பிராப்தி இருவருக்கும் ஒத்து இருக்கச் செய்தே
இவை தன்னுடைய அபராதங்களைப் பொறுப்பித்து-அவன் திருவடிகளிலே சேர்ப்பிக்கும் ஏற்றம் சொல்லிற்று –

இனி மேல் பிரத்யயம்–
ஸ்ரயதே என்கிற வர்த்தமானத்தை வியாக்யானம் பண்ணுகிறது –மன் -என்று மதுப்பைச் சொல்லுகிறது –
நித்ய யோகேமதுப் என்னக் கடவது இறே –
இறையும் அகலகில்லேன் -என்றும்
நித்ய அநபாயி நீ -என்றும் சொல்லுகிறபடியே ஒருகாலும் பிரியாது இருக்கும் என்கிறது –

இத்தால் பலித்தது என் என்னில்
புருஷகார பூதையான இவள் நித்ய வாசம் பண்ணுகையாலே ஆஸ்ரயிப்பார்க்கு காலம் பார்க்க வேண்டா என்கிறது –
அதாவது -ஈஸ்வரனுடைய ஸ்வா தந்த்ர்யத்தையும் தம்தாமுடைய சம்சாரித்வத்தையும் அனுசந்தித்துக்
கை வாங்க வேண்டாதபடி இருக்கை-
அவனுடைய சர்வஜ்ஞத்வத்தையும் தம்தாமுடைய சாபராதத்வத்தையும் அனுசந்தித்து இழக்க வேண்டாத படி இருக்கை –
ஆகையாலே அவனும் சர்வ காலமும் ஆஸ்ரயணீயனுமாய் இருக்கும் –
இவளுடைய சந்நிதியாலே சர்வகாலமும் ஆஸ்ரயிக்கலாய் இருக்கும்
ஏதேனும் காலமும் ஏதேனும் அதிகாரமுமாம் –
ருசி பிறந்த போதே இவர்களை அவன் திருவடிகளிலே சேர்ப்பிக்கும் பாசுரம் என் என்னில்

ஒரு தலை ஜன்மம் ஒரு தலை மரணம் நடுவே காம குரோத லோப மோஹ மத மாத்சர்யங்கள் –
தேவர் பெருமை இது அவற்றின் சிறுமை இது
உமக்கு சத்ருசமான பச்சை இவர்களால் இடப் போகாது –
இவர்கள் இடம் பச்சை கொண்டு வயிறு நிறையும் சாபேஷர் அல்லர் நீர் –
ஆன பின்பு இவர்களைப் பார்த்தால் உம்மை வந்து கிட்ட ஒண்ணாது –
உம்மைப் பார்த்தாலும் உம்மைக் கிட்ட ஒண்ணாது –
நாமே இவற்றுக்கு விலக்கடிகளைப் பண்ணி வைத்து இவர்களைக் கை விடுகையாவது
உம்முடைய நாராயணத்வம் ஒருவாயாய் உம்முடைய ரஷண ஸ்வரூபத்தையும் இழக்கும் இத்தனை காணும்
உம்முடைய ஸ்வரூப சித்த்யர்த்தமாக இவர்களைக் கைக்கொள்ள வேணும் காணும் –
உம்முடைய பேற்றுக்கு நான் காலைக் கட்டி இரக்க வேண்டிற்றோ-என்று இவள் சொன்னால்
அவன் சொல்லுமது ஏது என்னில் –

அதண்ட்யான் தண்ட்யன் ராஜா -என்கிறபடியே சாபராதரை தண்டிக்கச் சொல்லுகிற சாஸ்திரம்
ஜீவியாத படியோ நம் ஸ்வரூபம் சம்பாவிப்பது என்னும் –
ஆனால் சாஸ்திரம் ஜீவிக்க வேணுமாகில் உம்முடைய கிருபை ஜீவிக்கும் படி என் அத்தைச் சொல்லிக் காணும் -என்னும் இவள் –
ஆனாலும் சாஸ்திர அனுவர்த்தனம் பண்ண வேணும் காண்-என்னும் அவன் –
ஆனால் உம்முடைய கிருபையும் ஜீவித்து சாஸ்திரமும் ஜீவிக்கும் படி வழியிட்டுத் தருகிறேன் –
அத்தைச் செய்யப் பாரும் என்னும் இவள்
ஆனால் சொல்லிக் காண் என்னும் அவன் –
உம்முடைய பக்கலிலே வைமுக்யத்தைப் பண்ணி விஷய பிரவணராய் இருக்கிறவர்கள் பக்கலிலே
தண்டிக்கச் சொல்லுகிற சாஸ்ரத்தை விநியோகம் கொள்வது —
உம்முடைய பக்கலிலே ஆபிமுக்யத்தைப் பண்ணி என்னைப் புருஷகாரமாகக் கொண்டு உம்மை
ஆஸ்ரயித்தவர்கள் பக்கலிலே உம்முடைய கிருபையை விநியோகம் கொள்வது -என்று அவனைக் கேட்பித்துச் சேர விடும் –

இப்படி காரியப்பாடாகச் சொல்லி புருஷகாரமாகைக்காகவே நித்யவாசம் பண்ணுகிறது
அவனுக்கு போக ரூபமாக வன்றோ என்னில் -ஆம்
போக ரூபமாகை எங்கனே என்னில் அவளோட்டை சம்ச்லேஷத்தாலே அவனுக்குப் பிறந்த ஹர்ஷத்துக்குப் போக்குவீடாக
இவளுக்கு என்ன உபகாரத்தைப் பண்ணுவோம் என்று தடுமாறுவதொரு தடுமாற்றம் உண்டு –
அதுதான் பிரணய கலஹத்தில் பரிமாறும் பரிமாற்றத்திலே என்றும் தோற்றுமோபாதி இவன் தடுமாறி நோக்கும்
அந்நோக்கு இவன் கண்ணிலே தோற்றும் –
அப்போதைத் தடுமாற்றத்துக்குப் போக்கடி காட்டாத போது அவனுடைய ஆஸ்ரயம் இழக்க வரும் என்னும் அத்தாலே
இவற்றினுடைய அபராதத்தை பொறுத்துக் கைக் கொள்ளீர் -என்று தன் திருப்புருவத்தாலே ஒரு நெளி நெளிக்கும் –
இவன் அவள் புருவம் நெளிந்தவிடத்திலே குடிநீர் வழிக்குமவன் ஆகையாலே இவற்றையும் ரஷித்துத் தானும் உளனாம் –

இது காணும் இவளுக்கும் இவனுக்கும் உண்டான உண்டான சேர்த்தி இருந்தபடி –
ஆகையால் இரண்டு வகைக்கும் பிரணயித்வம் செல்லா நிற்கச் செய்தே
இருவருடைய ஹர்ஷமும் வழிந்து புறப்பட்டுச் சேதனருடைய ரஷணமாய்த் தலைக்கட்டும் –
ஆனால் இருவர்க்கும் பிரணய ரசம் உண்டான போது இவற்றின் உடைய ரஷணமாய் அல்லாத போது
ரஷணம் குறைந்தோ இருப்பது என்னில்
இவளோட்டை சம்ச்லேஷம் நித்யமாகையாலே அனுபவம் நித்யமாய் இருக்கும் –
அனுபவம் நித்யமாகையாலே ஹர்ஷமும் நித்யமாய் இருக்கும் –
ஹர்ஷமும் நித்யமாகையாலே ஹர்ஷத்தால் வந்த நோக்கும் நித்யமாய் இருக்கும் –
அந்த நோக்கு நித்யமாகையாலே ரஷணமும் நித்யமாய் இருக்கும் –

இந்நித்ய ரஷணம் மதுப்பில் நித்ய யோகத்தாலே வந்த ரஷணத்தில் ஏற்றம் -எங்கனே என்னில்
இது இறே சர்வாத்மாக்களுக்கும் பற்றாசு –
அங்கன் அன்றிக்கே த்ரிபாத் விபூதியையும் தன் ஸ்வரூப அநுரூப குண விபூதிகளாலே அனுபவித்துச் செல்லா நிற்கச் செய்தே
ஜகத் ரஷணமும் திரு உள்ளத்திலே பட்டு நிர்வஹித்துக் கொண்டு போருகிறாப் போலே –
இவளும் அவனுடைய போக்யதையை விளாக்குலை கொண்டு அனுபவியா நிற்கச் செய்தேயும்
பிரஜைகள் உடைய ரஷணமும் திரு உள்ளத்திலே பட்டு நிர்வஹித்துக் கொண்டு போரக் கடவதாய்த்து
வஸ்து ஸ்வ பாவம் இருக்கும் படி –

பிரஜைகள் விஷயத்தில் தான் தேவ தேவ திவ்ய மஹிஷீம் என்கிற மேன்மை அனுவர்த்தியாது –
பிராப்தி இறே அனுவர்த்திப்பது எல்லார்க்கும் ஒக்க வரையாதே தாயாய் இருக்கும் –
பூர்வ அவஸ்தையைப் பார்த்து அஞ்ச வேண்டாதபடி மடியிலே சென்று அணுகலாய் இருக்கும் –
அசரண்ய சரண்யை இ றே –
பகவத் விஷயத்திலும் புறம் புகலார்க்கும் புகலாய் இருக்கும் –
அந்த சர்வ சாதாரணமான ப்ராப்தி இன்றியே விசேஷ சம்பந்தம் உண்டு –

செய்தாரேல் நன்று செய்தார் -என்கிறவனுடைய கையும் வில்லுமாய்ச் சீறினாலும் இவள் திருவடிகளிலே புகலாய் இருக்கும்
ஆகையாலே ஜன்ம வ்ருத்தங்களில் உத்க்ருஷ்டரோடே அபக்ருஷ்டரோடு வாசியற நின்ற நிலையிலே
பகவத் சமாஸ்ரயணம் பண்ணலாவது
அவளோட்டை சம்பந்தத்தாலும் இவள் திரு மார்பிலே நித்ய வாசம் பண்ணுகையாலும் இறே
ஆகையாலே சர்வாதிகாரம் ஸூசிப்பிக்குமது இப்பதத்திலேயாய் இருக்கும் –

ஆக
இப்பதத்தாலே புருஷகாரம் சொல்லி
மதுப்பாலே அவனுக்கு மறுக்க ஒண்ணாத புருஷகாரத்தினுடைய நித்ய யோகம் சொல்லிற்று –

—————————–

இப்படி புருஷகார பூதையாய் இருக்கிற இவள் தான் ஒரு குறை சொல்லும் போதும் –
என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல் நன்று செய்தார் -என்னும்
வாத்சல்யாதிசயத்தை யுடையவன் ஆகையாலே மேல்
நாராயணன் -என்கிறது

தன்னடியார் திறத்தகத்து-
அவன் தன்னடியார் என்கைக்கும் இவள் சிதகுரைக்கைக்கும் ஒரு சேர்த்தி இல்லை இறே –
பெற்ற தாய் நஞ்சிடக் கூடாது இறே –
இனி இவள் அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தையும் இவற்றினுடைய சாபராதத்தையும் அனுசந்தித்து
இவற்றின் பக்கலில் என்னாய் விளைகிறதோ -என்று அதிசங்கை பண்ணி இவனைச் சோதிக்கிறாள் இறே
அவன் இவளுடைய மார்த்த்வத்தையும் ஔதார்யத்தையும் அனுசந்தித்து
இனி இவள் இவற்றின் பக்கல் எவ்வளவாய் இருக்கிறாளோ என்று இவளை அதிசங்கை பண்ணுமவன்-
தன் அபேஷைக்காக இவர்கள் ரஷணம் பண்ணுகிறானோ-
தன் அபேஷை இல்லாத போது ரஷணம் திரு உள்ளத்தில் உண்டோ இல்லையோ என்று சோதிக்கிறாள் ஆகவுமாம்-

ஆக இப்படி ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் நோக்கும்
இவருடைய நிழலையும் பற்றி இறே உபய விபூதியும் கிடக்கிறது –
தன்னைப் புருஷகாரமாகக் கொண்டு அவனை உபாயமாகப் பற்றின அநந்ய பிரயோஜனரை
ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் படி இறே –
இனி இவள் அவனை அதி சங்கை பண்ணிச் சிதகுரைக்கும் அன்று நம்மைப் பற்றினார்க்கு
அக்குறை இல்லை காண் என்று அவளோடும் கூட மன்றாடும் குணாதிக்யம் சொல்லுகிறது –

அக் குற்றம் -என்கிறான் இறே –
இவள் சொன்ன குற்றம் தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே
இல்லை நான் இப்போது கண்டேன் -என்று சாஷி பூர்வகமாகக் காட்டிக் கொடுத்தாலும்
ஆனால் அவர்கள் தான் தர்மா தர்மங்களும் ஒரு பரலோகமும்
ஒரு பர தேவதையும் இல்லை என்று செய்கிறார்களோ —
ப்ராமாதிகத்துக்கு நாம் உளோம் என்று அன்றோ செய்கிறது –
ஆன பின்பு கூட்டுகை உங்கள் தேவையாம் இத்தனை போக்கி ஒரு மிதுனத்துக்கு இவர்கள் குழைச்சரக்காய்
இருக்கப் பிரிக்கை உங்கள் தேவையோ என்று
கூட்டின ஸ்ரீ வைஷ்ணவர்களோடும் கூட்டின பிராட்டியோடும் மறுதலித்து நோக்கும் குணா திக்யம் சொல்லுகிறது –

நாராயண –
வாத்சல்ய சௌசீல்ய சௌலப்ய ஸ்வாமித்வங்கள்-இவை நாராயண சப்தார்த்தம் -ஆனாலும்
இந்நாராயண சப்தத்துக்கு சௌலப்யத்திலே நோக்கு –

வாத்சல்யம் ஆவது
வத்சத்தின் பக்கல் தாய் இருக்கும் இருப்பை ஈஸ்வரன் ஆ ஸ்ரீ தர் பக்கலிலே இருக்கும் என்கிறது -அதாவது
சுவடு பட்ட தரையிலே புல் தின்னாத பசு தன் கடையாலே புறப்பட்ட கன்றினுடைய தோஷத்தைத் தன் வாயாலே
தழும்பற நக்கித் தன் முலைப் பாலாலே தரிப்பிக்குமா போலே
ஆ ஸ்ரீ தருடைய தோஷங்களைத் தனக்கு போக்யமாக விரும்பித் தன் கல்யாண குணங்களாலே
அவர்களை தரிப்பிக்கை -எங்கே கண்டோம் என்னில்
தஸ்ய தோஷ -அவனுடைய தோஷம் அன்றோ -சரணாகதனுடைய தோஷம் அன்றோ –
அது நமக்கு அபிமத விஷயத்தில் அழுக்கு அன்றோ -என்று மேல் விழுந்து விரும்பும் படி இ றே வாத்சல்யம் இருப்பது —
தமக்குப் பரிவரான மஹா ராஜரையும் தம்பால் சக்தியான பிராட்டியையும் விட்டு அவன் தோஷம்
ஏதேனுமாகிலும் இன்று வந்த சரணாகதனை விடில் நாம் உளோம் என்று அனுகூலரோடேயும்
மலைந்து ரஷிக்கும் படி இறே வாத்சல்ய குணம் இருப்பது –

சீலம் ஹி நாம மஹதோ மனதைஸ் சஹ நீரந்த்ரேண சம்ச்லேஷ ஸ்வ பாவத்வம் சீலம் -அதாகிறது
சிறியவனோடே பெரியவன் வந்து கலவா நின்றால்
தன் பெருமை இவன் நெஞ்சில் படாமே நம்மோட்டையாவன் ஒருவன் என்று புரையறக் கலக்கலாம் படி இருக்கை –
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய சூரிகளுக்கும் அவ்வருகாய் அப்ராக்ருதனாய்
உபய விபூதி யோகத்தாலும் பெரிய ஏற்றத்தை யுடையனாய் அவன் எவ்விடத்தான் -என்னும்படி இருக்கிறவன்
நித்ய சம்சாரிகளுக்கும் அவ்வருகே கழியப் போனான் -என்னும் இவனோடு வந்து கலவா நின்றால்
இவன் அஞ்சி இறாய்க்க வேண்டாத படி தானே மேல் விழுந்து புரையறக் கலக்கை சீல குணமாவது –
இப்படி கலக்கப் பெற்றது இவனுக்கு கார்யம் செய்ததாக வன்றியே அது தன் பேறாக நினைத்து
இருக்கை ஸூ சீலம் –

ஸ்வாமி த்வமாவது-
கர்ஷகன் பயிர்த் தலையிலே குடில் கட்டி நோக்குமா போலே உடைமை உனக்கல்லேன் என்று முடித்துக் கொண்ட வன்றும்
தன்னுடைமையானது தோற்றுத் தான் இவற்றை விட மாட்டாதே இவற்றினுடைய ரஷண சிந்தை பண்ணி இருக்கிற இருப்பு –
அதாவது
இவனுக்குத் தன் சௌஹார்த்தத்தாலே
யாத்ருச்சிக ஸூக்ருதத்தை யுண்டாக்கி
அதடியாக அத்வேஷத்தை உண்டாக்கி
அதடியாக ஆபிமுக்யம் உண்டாக்கி –
அதடியாக ருசியை உண்டாக்கி —
அதடியாக சத் சம்பாஷணத்தை உண்டாக்கி –
அதடியாக ஆச்சார்ய சமாஸ்ரயணத்தை யுண்டாக்கி –
சம்யக் ஜ்ஞானத்தைப் பிறப்பித்து –
சித்த சாதனத்திலே நிஷ்டையைப் பிறப்பித்து
கண் அழிவற்ற ப்ராப்யத்திலே ருசியைப் பிறப்பித்து
விரோதி நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுத்து
அர்ச்சிராதி மார்க்க பிரவேசத்தை யுண்டாக்கி
லோக ப்ராப்தியைப் பண்ணிக் கொடுத்து
ஸ்வரூப பிரகாசத்தைப் பிறப்பித்து
பரபக்தி பரஜ்ஞான பரம பக்தியையும் பிறப்பித்து
இவை தொடக்கமான பகவத அனுபவத்தையும்
இவ்வனுபவ ஜனிதமான ப்ரீதியாலே பண்ணப் படுவதான நித்ய கைங்கர்யத்தை ஏவிக் கொள்வதாக வந்து
இப்படிக்குப் பரம சேஷித்வம் ஸ்வாமி த்வமாவது –

சௌலப்யம் ஆவது
அதீந்த்ரியமான பரம வஸ்து இந்த்ரிய கோசரமாம் படி எளிய சம்சாரிகளுக்கும் கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
தன்னை எளியனாக்கிக் கொடுக்கை –
அதாகிறது -மாம் -என்று கொண்டு –
சேநா தூளியும்-கையும் உழவு கோலுமாய் சாரதியாய் நிற்கிற நிலையை இறே உபாயமாகப் பற்று என்று விதி வாக்யத்தில் சொல்லிற்று –
அந்த சௌலப்யத்தை யாய்த்து இங்குச் சொல்லுகிறது –
அதுதான் பரத்வம் என்னலாம் படி இறே இங்குத்தை நாராயண சப்தத்தில் சௌலப்யம் –
எங்கனே என்னில் –
அங்கு மய்யாசக்தம நா பார்த்த -என்று கொண்டு
தன் பக்கலிலே ஆசக்தமான மனசை யுடைய அர்ஜுனன் ஒருவனையும் நோக்கி இறே ஸூலபனாய்த்து
இங்கு எல்லார்க்கும் ஒக்க ஸூலபனாய் இருக்கும் -அங்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை
நாம் அறியாத நாளிலும் உண்டாய்
நாம் அறிந்த நாளிலும் உண்டாய் இருக்கிற ஏற்றம் இந்த சௌலப்யம் –

இக்குணங்கள் உண்டானாலும் கண்ணுக்கு விஷயமானால் அல்லது போக்கி இக்குணங்கள் ஜீவியாமையாலே
சௌலப்யம் பிரதானம் ஆகிறது –
இக்குணங்கள் உபாயமாம் இடத்தில் –
சௌலப்யம் -எளியனான இவன் அளவிலே தன்னை எளியனாக்குகையாலே இவனே உபாயம் என்கிறது –
ஸூசீலம் -இப்படி கலக்கிற இது தன் பேறாகக் கலக்கையாலே அவனே உபாயம் என்கிறது –
ஸ்வாமித்வம் சம்சாரி சேதனனை நித்ய ஸூரிகள் கோவையிலே கொண்டு போய் வைத்தால்
நிவாரகர் இல்லாத நிரந்குச ஸ்வாமி த்வம் உபாயம் என்கிறது –

ஆக இங்குச் சொன்ன
நாலு குணங்களும் பற்றுகைக்குப் பற்றாசானவோபாதி
ஜ்ஞான சக்த்யாதி குணங்களும் மோஷ பிரதத்வத்திலே விநியோகம் -எங்கனே என்னில்
இவனும் விடுமது அறிந்து விடுகைக்கும் பற்றுமது அறிந்து பற்றுகைக்கும் சர்வஜ்ஞனாக வேணும் –
ஜ்ஞானம் உண்டானாலும் பிரயோஜனம் இல்லை சக்தன் அன்றாகில் –
அது அநாதி காலார்ஜிதமான பாபங்களைத் துணித்துத் தாவி அக்கரைப் படுத்தும் போது சர்வ சக்தியாக வேணும் –
சக்தனானாலும் பிரயோஜனம் இல்லை இறே நிரபேஷனன்றாகில்-
நிரபேஷனாகிலும் பிரயோஜனம் இல்லை இறே பிராப்தி இல்லையாகில் –

ஆக
சர்வஜ்ஞத்வமும் -சர்வசக்தித்வமும் -அவாப்த சமஸ்த காமத்வமும் சர்வ சேஷித்வமும் இவை நாலு குணமும்
சர்வ சாதாரணமான ரஷணத்துக்கு உடலாய் இருக்கும் –
ஓரளவிலே ஆ ஸ்ரீ தகத மோஷ பிரதத்வத்துக்கும் உடலாய் இருக்கும் –

சஹாயாந்தர நிரபேஷமாகப் பலப்ரதன் அவனாகில்
இவர்களுக்கும் அவனுக்கும் பிராப்தி ஒத்து இருந்ததாகில்
புருஷகார அபேஷை என் என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க –
வாரீர் ஜீயரே -அவள் சந்நிதிக்கும் அவன் சந்நிதிக்கும் உள்ள வாசி
அந்வய வ்யதி ரேகங்களில் கண்டு கொள்ளீர் -என்று அருளிச் செய்தார் –

அதாவது ஜனனி பக்கல் அபராதம் காகத்துக்கும் ராவணனுக்கும் ஒத்து இருக்கச் செய்தே அவள் சந்நிதி யுண்டாகையாலே
அபராதத்தில் கை தொடனான காகம் பிரபன்னர் பெரும் பேற்றைப் பெற்றுப் போய்த்து-
அத்தனை அபராதம் இன்றிக்கே கடக்க நின்று கதறிப் போந்த ராவணன் அவள் சந்நிதி இல்லாமையாலே தலை யறுப்புண்டான் –
இனித்தான் மாத்ரு சந்நிதியிலே பிரஜைகளை அழிக்க மாட்டாமையும் ஓன்று உண்டு இறே பிதாவுக்கு
இனி தமேவ சரணம் கத -என்றதும் –
ந நமேயம் என்றதும் அபிரயோஜகம் -எங்கனே என்னில் காகத்துக்கு உதவுகிற போது அகவாயில் நினைவு அது விறே
இல்லையாகில் ஸ்வ கமாலயம் ஜகாம-என்று போகப் பொறானே-செயல் மாட்சியாலே விழுந்தது இத்தனை இறே
இம்மாத்ரம் ராவணனுக்கும் உண்டாய் இருக்க அது கார்யமாய்த்து இல்லை இறே இவள் சந்நிதி இல்லாமையாலே –
இது காணும் அவள் சந்நிதிக்கும் அவன் சந்நிதிக்கும் வாசி என்று அருளிச் செய்தார் –

மற்றும் பற்றினாரையடைய ஆராய்ந்து பார்த்தவாறே இவள் முன்னாகவாய் இருக்கும் –
மஹா ராஜர் உள்ளிட்ட முதலிகளும் ஆச்சார்யர்களும் இவள் முன்னாகவாய்த்துப் பற்றிற்று –
அந்வய வ்யதிரேகங்களில் பலா பலங்கள் இன்றியே ஆஸ்ரயித்து ஏற்றம் உண்டு -எங்கனே என்னில் –
அவனுடைய சீலாதி குணங்களோடு ஹேய குணங்கள் கலசி இருக்குமா போலே யல்ல வாய்த்து
இவளுடைய சீலாதி குணங்கள் இருப்பது –
அவனுடைய நிரங்குச ஸ்வாதந்த்ர்யமும் –
குரோத மாஹாரயத் தீவரம் என்று அழித்துக் கார்யம் கொள்ளலாய் இருப்பன சிலவும் உண்டு இறே-
அதுவும் இல்லை இறே இவளுக்கு -அது உண்டாகில் இவளுக்கும் ஒரு புருஷகார அபேஷை வேண்டி இருக்கும் இறே –
அது இல்லாமையாலே இவள் புருஷகாரமாக வேணும் -இல்லையாகில் பல சித்தி இல்லை -எங்கே கண்டோம் என்னில் –

ராவண கோஷ்டியிலே ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ-என்று பிராட்டிக்காக பரிந்தும்
தூதரை ஹிம்சிக்கலாகாது என்று திருவடிக்காகப் பரிந்தும் வார்த்தை சொன்னவனைப் துறந்து –
த்வாம் துதிக் குல பாம்சனம் -என்று புறப்பட விட ராவண பவனத்தில் நின்றும் புறப்பட்டு வந்து
வாக் காயங்கள் மூன்றாலும் சரணம் புகுந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானைக் குறித்து –
ந த்யஜேயம் கதஞ்சன -என்று ரஷித்த நீர்மை இறே பெருமாளுக்கு உள்ளது –

இவளுக்கு அங்கன் அன்று – மநோ வாக் காயம் மூன்றிலும் ராவணாப ஜெயத்தையும் ஸ்வப்னம் கண்டோம்
என்று புறப்பட்டு த்ரிஜடை விண்ணப்பம் செய்ய அவளும்
அலமேஷா பரித்ராதும் ராஷச்யோ மகாதோ பாத் -என்றும்
ப்ரணிபாத பிரசன்னா ஹி மைதிலீ ஜனகாத்மஜா -என்றும்
நம்மாலே நலிவு படுகிற இவள் தானே நம்மை ரஷிக்கும் காணுங்கோள்-என்று சொல்லியும் –

இவ்வுக்தியே அன்றியே பிராட்டி தானும் இவர்கள் நடுவே இருந்து பவேயம் சரணம் ஹி வ -என்று
நானுளளாக நீங்கள் அஞ்ச வேண்டா என்று அருளிச் செய்தும்
இவ்வுக்தி மாத்ரமாய்ப் போகை யன்றியே ராமவிஜயம் உண்டாய் ராவணனும் பட்டான்
மஹா ராஜர் உள்ளிட்ட முதலிகளுக்கும் ஒரு குறையில்லை என்று நம் மைதிலிக்குச் சொல்லிவா என்று திருவடியை வரவிட
அவன் வந்து விண்ணப்பம் செய்ய
இதைக் கேட்டருளி ஹர்ஷத்தாலே இவனுக்கு என்ன உபகாரத்தைப் பண்ணுவோம் -என்று தடுமாறுகிற அளவில்
எனக்குப் பண்ணும் உபகாரம் ஆகிறது தேவர் விஷயத்தில் நலிந்த இவர்களை விட்டுக் காட்டித் தருகையே என்ன
அதைக் கேட்ட பின்பு அவன் பண்ணின உபகார பரம்பரைகளையும் பார்த்திலள் –
இவர்கள் இப்போது நிற்கிற ஆர்த்தியே திரு உள்ளத்திலே பட்டு –
க குப்யேத் வானரோத்தம -என்றும்
ந கச்சின் ந அபராத்யதி -என்றும்
பெருமாளுக்கு அந்தரங்க பரிகரமான திருவடியோடே மறுதலித்து ரஷித்த இவள்
நம்முடைய குற்றங்களைத் தன் சொல் வழி வரும் பெருமாளைப் பொறுப்பித்து
ரஷிப்பிக்கச் சொல்ல வேணுமோ இது இறே இவள் நீர்மை இருந்த படி –

இதுவே யன்று -தன் பக்கலிலே அபராதத்தைப் பண்ணின ராவணனைக் குறித்து
மித்ர மௌபயிகம் கர்த்தும் -என்றும் –
தேன மைத்ரி பவது தே-என்றும்
அவனுக்கு மாசூச என்னும் வார்த்தை சொன்னவள் இறே –

ஆகையாலே நித்ய சாபராத ஜந்துக்களுக்கு நித்ய சஹவாசம் பண்ணுமிவள் புருஷகாரமாக வேணும் –
கல்யாண குண விசிஷ்டனுமாய் இருக்கிற ஈஸ்வரன் உபாயமாம் இடத்தில்
இப்புருஷகார பூதையான இவள் இவனுடைய ஆபரணங்களோ பாதி அனன்யார்ஹ சேஷை பூதையாகில்
இவள் புருஷகாரம் ஆனால் அல்லது பல சித்தி இல்லை –

பலத்துப் பூர்வ ஷண வர்த்தியாய் இருக்குமதிலே இறே உபாய பாவம் இருப்பது –
ஆனால் இப்புருஷகாரத்துக்கு உபாய சரீரத்திலே அந்தர்பாவம் உண்டாக வேண்டாவோ என்னில்
குணங்களும் விக்ரஹங்களும் அசேதனம் ஆகையாலே உபாய ஸ்வரூபத்தில் அந்தர்பாவம் உண்டு
குணா நாம ஆஸ்ரய ஸ்வரூபம் ஆகையாலே இவளுக்கும் ஸ்வரூப அனுபந்தித்வம் உண்டேயாகிலும்
இவள் சேதநாந்தர கோசரை யாகையாலே உபாய சரீரத்தில் இவளுக்கு அந்தர்பாவம் இல்லை –
இவள் புருஷகாரத்திலே சாதன பாவம் கிடையாதே யாகிலும் இவள் சந்நிதியை அபேஷித்துக் கொண்டு யாய்த்து உபாயம் ஜீவிப்பது –
ஆகையால் இவள் பக்கல் சாதன பாவம் கிடையாது
எங்கனே என்னில் –
ராஜ மகிஷியை புருஷகாரமாகக் கொண்டு ராஜாவின் பக்கலிலே பல சித்தி உண்டாம் என்று சென்றால்
அவன் பக்கல் இரக்கம் இல்லாத போது புருஷகாரத்துக்கு பல பிரதான சக்தி இல்லாமையாலே
இப்புருஷகாரத்தில் சாதன பாவம் கிடையாது –
அந்ய நிரபேஷமாகப் பல பிரதன் ஆகையாலே அவனே உபாயம்

—————–

சரனௌ-என்று
மாம் என்கிற இடத்தில் சாரத்திய வேஷத்தோடு நிற்கிற விக்ரஹமும் இப்பதத்திலே அனுசந்தேயம் –
சரனௌ என்கிற இது திருவடிகள் இரண்டையும் -என்றபடி –
ஸ்தநந்த்ய பிரஜைக்கு ஸ்தநம் போலே அடிமையிலே அதிகரித்தவனுக்கு திருவடிகளினுடைய உத்தேச்யதையைச் சொல்லுகிறது –
சேஷபூதன் சேஷி பக்கல் கணிசிப்பது திருவடிகள் இரண்டையும் இறே –
மாதாவினுடைய சர்வ அவயவங்களிலும் பிரஜைக்கு ப்ராப்தி உண்டாய் இருக்க
விசேஷித்து உத்தேச்ய ப்ராப்தி ஸ்தநங்களிலே யுண்டாகிறது-தனக்கு தாரகமான பாலை மாறாமல் உபகரிக்கையால் இறே
அப்படி சேஷபூதனுக்கும் சேஷியினுடைய சர்வ அவயவங்களிலும் பிராப்தி யுண்டாய் இருக்க
விசேஷித்துத் திருவடிகளில் உத்தேச்ய பிராப்தி இவனுக்கு தாரகமான கைங்கர்யத்தை மாறாமல் கொடுத்துப் போருகை இறே –
இத்தால் திவ்ய மங்கள விக்ரஹ சத்பாவம் சொல்லிற்று –

கீழ்ச் சொன்ன புருஷகாரமும் குணங்களும் இல்லையே யாகிலும் விக்ரஹம் தானே போரும் உபாயமாகைக்கு –
எங்கே கண்டோம் என்னில் –
சிந்தயந்தி தன் ஸ்வரூப அனுசந்தானத்தைப் பண்ணி யன்று இறே முடிந்தாள்-
கிருஷ்ணனுடைய ஸ்வரூப குணங்களில் அகப்பட்டவள் அன்று –
காமுகை யாகையாலே அவன் விக்ரஹத்தில் அகப்பட்டாள்-
அவ்வடிவு அழகு தானே அவள் விரோதியையும் போக்கி அவ்வருகே மோஷத்தையும் கொடுத்தது இறே –
சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வ ரூபிணம்-நிருச்ச்வாசதயா முக்திம் கதான்யா கோப கன்யகா-என்கிறபடியே
ஸ்வரூப ஸ்வ பாவங்கள் அறியாத சிந்தயந்தி யாகையாலே
விக்ரஹம் தானே ஸ்வரூப குணங்களுக்கும் பிரகாசகமுமாய் –
சம்சாரிகளுக்கு ருசி ஜனகமுமாய் –
முமுஷூக்களுக்கு ஸூ பாஸ்ரயமுமாய் –
நித்யருக்கும் முக்தருக்கும் போக ரூபமாயும் இருக்கும் -எங்கே கண்டோம் என்னில்

ஆயதாச்ச ஸூவ்ருத்தாச்ச பாஹவ -என்று நெஞ்சு பறியுண்டு அகப்பட்டது விக்ரஹத்திலே-
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனூமத -என்று தான் மதித்தார்க்குப் பரிசிலாகக் கொடுப்பது விக்ரஹத்தை –
அங்குள்ளார் சதா பச்யந்தி இறே –

——————

ஆக இவ் வுபேத்துக்கும் உறுப்பாய் இருக்கையாலே அவற்றை ஒதுக்கிக் கூற்றறுத்து
உபாயத்திலே நோக்கும் என்னும் இடம் தோற்றச் சொல்லுகிறது
இச்சரண சப்தம்
உபாயே க்ருஹ ரஷித்ரோஸ் சப்தஸ் சரணம் இத்யயம்-வர்த்ததே சிஸ உபாயார்த்தைக வாசக -என்கிறபடியே
இச் சரண சப்தம் உபாயத்தையும் க்ருஹத்தையும் ரஷிதாவையும் சொல்லுகிறது –

ரஷகம் என்றும் உபாயம் என்றும் பர்யாயம் என்று சொல்லிப் போருவர்கள் –
அங்கன் அன்றியே ரஷகனும் வேறே இப்பிரமாணத்தால்-
ரஷகன் என்றால் சாதாரண ரஷணத்துக்கு உபாசகனுக்கும் பிரபன்னனுக்கும் பொதுவாய் இருக்கும் –
உபாயம் என்று விசேஷிததால் பிரபன்னனுக்கு உகவாய் இருக்கும்
எவ் வுபேயத்துக்காக என்னில்

இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் தப்பாத உபாயம் –
அநிஷ்டமாவது அபிமானம் தொடக்கமாக கைங்கர்யத்தில் அஹங்கார கர்ப்பம் ஈறாக நடுவுண்டான விரோதியான பாபங்கள் –
அவையாவன -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்கள் –
இவற்றின் கார்யமான கர்ப்பம் ஜன்மம் பால்யம் யௌவனம் ஜரை மரணம் நரகம்
இவற்றோடு ஒக்க அனுவர்த்தித்துப் போருகிற தாப த்ரயங்கள் –
இவற்றுக்குக் காரணமான அவித்யை –

இவற்றினுடைய ஸ்வரூபம் இருக்கும் படி என் என்னில் –
அவித்யை யாகிறது அஜ்ஞ்ஞானம் -அதாகிறது அனாத்மன யாத்ம புத்தியும் அஸ்வே ஸ்வ புத்தியும் –
அவையாகிறன தான் அல்லாததைத் தன்னது என்கையும்
ஈஸ்வரனை யுடைத்தான தன்னை அபஹரித்தும் விபூதியை அபஹரித்துக் கொண்டு இருக்கையும் –
இதுக்கு உள்ளே எல்லா விரோதியும் பிடிபடும் –
இது தன்னை உபதேசத்தில் நீர் நுமது என்றார் -எங்கனே என்னில்
அவித்யா வாசனை கர்ம வாசனை தேக வாசனை அவித்யா ருசி கர்ம ருசி தேக ருசி யதாஜ்ஞானம்
பிறந்தவாறே அவித்யை நசிக்கும் –
புண்ய பாபங்கள் பிரக்ருத் யனுகூலமாய் இருக்கையாலே அனுகூலங்கள் கண்டவாறே அவை நசிக்கும் –
அனுகூலமாவது பகவத் பக்தியாகவுமாம் திரு நாமம் சொல்லவுமாம்-
அன்றிக்கே அவன் தானே உபாயம் ஆகவுமாம் –

இனி இவற்றுக்கு அடியான பிரகிருதி யாகிறது –
இந்த சரீரம் நரகாத் யனுபவத்துக்கு வரும் யாதநா சரீரம்
ஸ்வர்க்காத் யனுபவத்துக்கு வரும் புண்ய சரீரம் –
இவற்றுக்கு கிழங்கான ஸூஷ்ம சரீரமும்
இவை இத்தனையும் நசிக்கை அநிஷ்ட நிவ்ருத்தி யாவது –

இனி இஷ்ட பிராப்தியாவது ப்ராபியாதத்தை ப்ராபிக்கை -அதாவது
பர ஹிம்சா நிவ்ருத்தி பூர்வகமாகக் கைங்கர்யம் எல்லையாக ஸ்வரூப அனுரூபமாக
இவ்வதிகாரிக்கு அவன் பிறப்பிக்கும் பர்வங்கள் -அவையாவன –
தேஹாத்மா அபிமானத்தைப் போக்கி
ஆத்மா யாதாம்ய ஜ்ஞானத்தை பிறப்பித்து
லோக பிராப்தியைப் பண்ணிக் கொடுத்து
ஸ்வரூப பிரகாசத்தையும் பிறப்பித்து
பரபக்தி பரஜ்ஞான பரமபக்தியையும் பிறப்பித்து இவை பூர்வகமாக
பகவத் அனுபவத்தையும் பிறப்பித்து
பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தையும் கொடுத்து விடுகை –

இவன் பற்றின உபாயத்தின் கிருத்யம்-நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்கிறது இவற்றிலே அந்தர்க்கதம் –
அபஹத பாப்மத்வாதி குண சாம்யமும் போக சாம்யமும் -இவை இறே சாம்யாபத்திகள் —
பரஞ்ஜ்யோதி ரூப சம்பத்திய ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே -என்கிறபடியே
கைங்கர்யமும் அபஹத பாப்மத்வாதி குணங்களும்
பரபக்த்யாதி குணங்களும் ஸ்வரூப ப்ராப்திகளிலே அந்தர்கதமாய் பிரகாசிக்குமவை-

இனி பரபக்தி பரஜ்ஞான பரமபக்திகளும் நித்தியமாய் இருக்கும் -ஸ்வரூபத்தோடே சஹஜமாய் இருக்கையாலே –
ஆனால் இவை நித்யமாகிற படி எங்கனே என்னில்
ஒருகால் அனுபவித்த குணங்கள் ஒரு கால் அனுபவியா நின்றால் நித்யாபூர்வமாய் வருகையாலே
பரபக்த்யாதி குணங்கள் நித்தியமாய் இருக்கும் –
சாலோக்ய சாரூப்ய சாயுஜ்யமானவை கைங்கர்ய உபயோகி யாகையாலே கைங்கர்யத்திலே அந்தர்கதம் –

அபஹத பாபமா-விஜரோ-விம்ருத்யுர் விஜகத்ஸோ அபிபாசஸ் சத்யகாமஸ் சத்ய சங்கல்ப –
அபஹத பாபமா -என்றது போக்கப்பட்ட பாபத்தை யுடையவன் –
விஜர-விடப்பட்ட ஜரயை யுடையவன் –
விம்ருத்யு -விடப்பட்ட ம்ருத்யுவை யுடையவன் –
விசோக -விடப்பட்ட சோகத்தை யுடையவன் –
விஜிகத்ச போக்கப்பட்ட பசியை யுடையவன்
அபிபாச -போக்கப்பட்ட பிபாசை யுடையவன் –
சத்யகாம -நினைத்தவை அப்போதே யுண்டாய் இருக்கை-
சத்ய சங்கல்ப -உண்டானவற்றைக் கார்யம் கொள்ளுமா போலே இல்லாதவற்றை உண்டாக்க வல்லனாகை –

இவை தான் ஸ்வத அன்றிக்கே இருக்கிற விஷயத்தைச் சொல்லுவான் என் என்னில்
கர்ம வச்யனுக்கு உள்ளது அகர்மவச்யனான ஈஸ்வரனுக்கு இல்லை என்று
இவனுக்கு ஜ்ஞானம் பிறக்கைக்காக-
குணங்கள் தான் சேஷ பூதனான சேதனனுக்கும் உண்டாய் அவனுக்கும் உண்டாய் இருக்கும் –
இவை எட்டு குணமும் சேதனனுக்கு உபாயகதம்
நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் இல்லை என்கை-
அவனுக்கு விநியோகம் ரஷணத்திலே –
சேதனனுக்கு சத்ய சங்கல்பங்கள் ஆகிறது அவன் நினைத்த கைங்கர்யம் உண்டாய் இருக்கை –

இனி ஜ்ஞான சக்த்யாதி குணங்கள் அவனுக்கு ஜகத் ரஷணத்திலே இவனுக்கு கைங்கர்யத்திலே –
அவனுக்கு ஜ்ஞானமாவது யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண -என்கிறபடியே எல்லாவற்றையும்
அறிந்து கொண்டு இருக்குமா போலே
இவன் செய்யக் கடவ கைங்கர்யங்களை ஒரு போகியாக அறிய வல்லனாய் இருக்கும் –
பலமாவது -அவன் இத்தை தரித்து ரஷிக்குமாகில் இவன் கைங்கர்யத்துக்கு தாரண சாமர்த்தியத்தை யுடையனாய் இருக்கும் –
ஐஸ்வர்யம் ஆவது அவன் ஸ்வ வ்யதிரிக்தங்களை நியமித்துக் கொண்டு இருக்குமாகில்
அவனுக்கு கரணங்களை நியமித்துக் கொண்டு அடிமை செய்ய வல்லனாய் இருக்கும் –
அதாவது கைங்கர்யத்துக்கு அனுரூபமாக அநேக சரீர பரிக்ரஹங்கள் நியமிக்க வல்லனாய் இருக்கை –
வீர்யமாவது அவன் இவற்றை ரஷிக்கும் இடத்தில் விகார ரஹிதனாய் ரஷிக்குமாகில்
இவனும் கைங்கர்யங்களைச் செய்யா நின்றால் ஒரு விகாரம் இன்றிக்கே இருக்கை –
சக்தியாவது அவன் சேராதவற்றைச் சேர்ப்பித்து ரஷிக்குமாகில்
இவனும் அநேகம் அடிமைகளை எக்காலத்திலும் செய்யவல்ல அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையனாகை
தேஜஸ்சாவது அவன் அநபிபவநீயனாய் இருக்குமாகில்
இவனும் கைங்கர்யங்களை ஒரு போகியாகச் செய்கிற தேஜஸ்சை யுடையனாய் இருக்கும்

இனி விக்ரஹத்தில் அவனுக்கும் இவனுக்கும் ஒக்கும் –
குணங்களும் அவனுக்கும் இவனுக்கும் ஒக்கும் –
ஜ்ஞான சக்த்யாதிகளும் அவனுக்கும் இவனுக்கும் ஒக்கும் –
ஆகையாலே பரம சாம்யா பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் என்கிறது –
சேஷித்வ சேஷத்வங்கள் கிடக்கச் செய்தே சாம்யா பத்தியும் உண்டாகிறது –
சஜாதீயம் கலந்தால் அல்லது ரச விசேஷம் உண்டாகாது –
இரண்டு தலைக்கும் போக்கியம் பிறக்கைக்காக சாம்யா பத்தி உண்டாய்த்து என்றால்
சேஷ சேஷித்வங்கள் என்கிற முறை மாறாது -எங்கனே -என்னில் –

இவனைக் கிஞ்சித் கரிப்பித்துக் கொண்டு அவனுக்கு சேஷித்வம் –
அவனுக்கு கைங்கர்யத்தைப் பண்ணிக் கொண்டு இவனுக்கு சேஷத்வம்
இருவர்க்கும் இரண்டும் வ்யவச்திதம் -அவனோடு சமம் என்ன ஒண்ணாது –

இஷ்ட பிராப்தி பண்ணிக் கொடுக்கை யாவது இவன் ஸ்வீகரித்த உபாயத்தில் நிலை நின்றவனுடைய
அதிகார அனுகுணமாக அவன் பண்ணிக் கொடுக்குமவை-

ஆக
இந்த சரண சப்தம் உபாய பாவத்தைச் சொல்லுகையாலே
கீழ்ச் சொன்ன நாராயண சப்தம் தொடங்கி இவ்வளவும் உபாய பரமாக அனுசந்தேயம் –
இவனுடைய உஜ்ஜீவன அர்த்தம் ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் அனுசந்தேயம் –

————————————————————

இப்படி உபாயம் சித்தமாய் இருக்க அநாதி காலம் பலியாது ஒழிந்தது இவனுடைய பிரபத்தி இல்லாமை இறே-
அந்த பிரபத்தியைச் சொல்லுகிறது மேல் –
பிரபத்யே -என்கையாலே –
பிரபத்யே -என்றது அடைகிறேன் -என்றபடி -அதாவது அங்குத்தை வ்ரஜ வினுடைய அனுஷ்டானம்
கத்யர்த்தா புத்த்யர்த்தா என்கிறபடியே அத்யவசாயமான ஜ்ஞான விசேஷத்தைச் சொல்லுகிறது –

பிரபத்யே –
இப்பிரபத்தி தான் மானசமோ வாசிகமோ காயிகமோ என்னில் மூன்றுமாம் -ஒன்றுமாம் –
ஓன்று அமையுமாகில் இரண்டும் இல்லை
மூன்றும் வேணுமாகில் ஓன்று போராது-ஆனால் என் சொல்லுகிறது என்னில்

ஓன்று உள்ள இடத்திலும் பல சித்தி கண்டோம் -மூன்று உள்ள இடத்திலும் பல சித்தி கண்டோம் –
ஆகையாலே இவற்றில் ஒரு நிர்பந்தம் பெரிசன்று –
ஒன்றிலும் சாதன பாவம் இல்லை -மூன்றிலும் சாதன பாவம் இல்லை –
அவனுடைய அனுக்ரஹமே ஹேதுவாம் இத்தனை –
ஜ்ஞானான் மோஷம் ஆகையாலே மானசமாகக் கொள்ளக் கடவோம் –
ஆனால் பலத்துக்கு சாதனம் அன்றாகில் இவை வேண்டுகிறது என் என்னில்

இவ்வதிகாரி முமுஷு என்று அறியும் போது-சம்சாரிகளில் வ்யாவ்ருத்தி வேணும் –
சேதனன் என்று அறியும் போது அசித் வ்யாவ்ருத்தி வேணும் –
இனி அசித் வ்யாவ்ருத்தமான ஜ்ஞானம் சேதன தர்மம் ஆகையாலே ஸ்வரூபமாம் அத்தனை –
ஸ்வரூபாதிரேகியான ஈஸ்வரன் பக்கலிலே உபாய பாவம் கிடக்கும் அத்தனை –

பிரபத்யே என்கிற பதம் மானசத்தைக் காட்டுமோ என்னில் –
பத்லு கதௌ-என்கிற தாதுவிலே ஒரு கதி விசேஷமாய் கத்யர்த்தமாய் புத்த்யர்த்தம் ஆகிறது –
புத்தியாகிறது வ்யவசாயாத்மிகா புத்தி என்றும் -புத்திரத்யவசாயி நீ -என்றும் சொல்லுகையாலே
மநோ வியாபாரமான அத்யவசாயத்தைச் சொல்லுகையாலே பிரபத்திக்கு மானசமே அர்த்தம் –

இம்மானச ஜ்ஞானம் இருக்கும் படி என் என்னில்
க்ரியாரூபமான கர்மமாதல் –
கர்மத்தாலே ஷீண பாபனாய்ப் பிறக்கும் ஜ்ஞானமாதல்
கர்ம ஜ்ஞான சஹக்ருதையான அனவரத பாவனா ரூபியான பக்தியாதல் –
இவை மூன்றும் கைங்கர்யத்துக்கும் உபயோகியாய் சாதன தயா விஹிதமாய் இருக்கையாலே
இவற்றில் உபாய புத்தி த்யாக பூர்வகமாய் –
தான் உபாயம் இன்றியிலே சித்தோபாய ச்வீகாரமுமாய்-அதிகாரிக்கு விசேஷணமுமாய்-
அத்யவசாயாத் மகமுமாய் இருப்பதொரு ஜ்ஞான விசேஷம் பிரபத்தி யாகிறது –

பிரபத்யே என்கிற வர்த்தமானம்
போஜன சய நாதிகளிலே அந்ய பரனான போது ஒழிய -சரீரமும் பாங்காய் சத்வோத்தரனாய் முமுஷுவாகையாலே
அவனை விஸ்மரித்து இருக்கும் போது இல்லை இறே
ஆகையாலே தான் உணர்ந்து இருந்த போது அவனே உபாயம் என்று இருக்கிற நினைவு மாறாது இருக்கும் இறே –
அத்தைச் சொல்லுகிறது –
சம்சார பயமும் ப்ராப்ய ருசியும் கனக்கக் கனக்க-
த்வமேவோபாயபூதோ மே பவேதி பிரார்த்தனா மதி -என்கிற லஷண வாக்யத்துக்கு உறுப்பாய்
பிரார்த்தனை உருவச் செல்ல வேணும் –

நினைக்கிறது அவனையாகையாலே நெஞ்சு விட்டுப் போம் படியாம் –
பரத்வம் எட்டாது -வ்யூஹம் கால்கடியார்க்கு -அவதாரம் அக்காலத்தில் உதவினார்க்கு
அர்ச்சாவதாரம் உகந்து அருளின நிலங்களிலே புக்க போது திருவடிகளைப் பிடித்துக் கொண்டு கிடக்கவும் போகாதே –
இனி இவனுக்கு எங்கும் ஒக்க செய்யலாவது ஜ்ஞான அனுசந்தானம் இறே –
அத்தைச் சொல்லுகிறது வர்த்தமானம் –

இதுவும் அப்படியே அனுவர்த்தனம் ஆகிறதாகில்
பல சித்தி யளவும் செல்ல அனுவர்த்திக்கிற உபாசனத்தில் காட்டில் இதுக்கு வாசி என் என்னில்
ரூபத்தில் பேதிக்கலாவது ஒன்றில்லை -ஹேதுவை விசேஷிக்கும் அத்தனை
நிதித்யாசிதவ்ய என்று விதி பரமாய் வருவதொன்று அது -இவ்வனுசந்தானம் ராக ப்ராப்தம் –
அது சாதன தயா விஹிதம் ஆகையாலே அனுசந்தான விச்சேதம் பிறந்தால் பல விச்சேதம் பிறக்கும் –
ராக அனுவர்த்தனம் ஆகையாலே அனுசந்தான விச்சேதம் பிறந்தால் பல விச்சேதம் இல்லை பிரபன்னனுக்கு –
சாதனம் அவனாகையாலே –

இதுக்கு வேதாந்தத்தில் ஞாயம் கோசரிக்கிறவிடம் எங்கனே என்னில் –
சம்போக ப்ராப்திரிதி சேன்ன வைசேஷ்யாத்-என்று ஜீவாத்மாவோபாதி பரமாத்மாவுக்கும்
அசித் வ்யாவ்ருத்தி ஒத்து இருக்கச் செய்தே –
இத்தோட்டை சம்சர்க்கத்தாலே வரும் துக்க ஸூகாத்யனுபவங்கள் அவனுக்கு வாராது –

ஸ்பர்சம் ஒத்து இருக்கச் செய்தே வாராது ஒழிவான் என் என்னில்
உபாயம் தன்னில் ராகம் பிறக்கிறது விஷய வைலஷண்யத்தாலே இறே
அவ்வோபாதி இந்த சாதனம் தானே
லஷ்மீ பதியாய்
குணா திகமுமாய்
விக்ரஹோபேதமுமாய்
சித்த ரூபமுமாய் இருப்பது ஒன்றாகையாலே
அசேதன க்ரியாகலாபமாய் இருக்கிற சாதனத்தில் காட்டில் இதிலே ராகம் பிறக்கச் சொல்ல வேணுமோ –

திரைமேல் திரையான மிறுக்குகள் மேல் வந்து குலைக்கப் பார்த்தாலும்
பிரமாணங்கள் வந்து குலைக்கப் பார்த்தாலும் –
அவள்
அவன் தானே வந்து குலைக்கப் பார்த்தாலும்
குலைக்க ஒண்ணாத படி யான நிஷ்டையைச் சொல்லுகிறது க்ரியா பதம் -பிள்ளை திரு நறையூர் அரையரைப் போலே

ஆக பூர்வார்த்தம் உபாயத்தைச் சொல்லுகிறது என்றதாய்த்து –
பூர்வ வாக்கியம் முற்றிற்று –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தனி த்வயம் -அவதாரிகை — —

January 27, 2016

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

———————————————————————-

அவதாரிகை –

சகல வேத சாஸ்திரங்களும் -தாமஸ ராஜச சாத்விக புருஷர்களுக்கு அவ்வோ  குண அநு குணமாக 
புருஷார்த்தங்களை விதித்தது
எல்லார்க்கும் ஒக்க அபிமதமான மோஷம் தான் துக்க நிவ்ருத்தியும் ஸூக பிராப்தியும் இறே-
இது விறே ப்ரியமாகிறது -இத்தை லபிக்கும் உபாயத்தை ஹிதம் என்கிறது –

இதில் தாமஸ புருஷர்கள் பர ஹிம்சையை சாதனமாகக்  கொண்டு அத்தாலே வரும் தநாதிகளை
பிரியமான புருஷார்த்தமாக நினைத்து இருப்பார்கள் –
இதுக்கு வழி யிட்டுக் கொடுக்கும் வேதமும் – ஸ்யேன விதி -என்கிற முகத்தாலே –

ராஜச புருஷர்கள் இஹ லோக புருஷார்த்தமாகப் புத்ர பஸ் வந்நாதிகளையும்  –
பரலோக புருஷார்த்தமாக ஸ்வர்க்காதி போகங்களையும் நினைத்து இருப்பார்கள் –
இதுக்கு உபாயமாக ஜ்யோதிஷ்டோமாதி முகங்களாலே வழி யிட்டுக் கொடுக்கும் வேதமும் –

சாத்விக புருஷர்கள்
அந்த ஜ்யோதிஷ்டோமாதி கர்மம் தன்னையே மோஷத்துக்கு சாதனமான அபிசந்தியைப் பண்ணி
பல சங்க கர்த்ருத்வ த்யாக பூர்வகமாக பகவத் சமாராதன புத்தி பண்ணி –
அத்தாலே -ஷீண பாபரே ஜ்ஞானம் பிறந்து அநவரத பாவன ரூபையான பக்தி பக்வமாய்
சாஷாத்கார சமாநமாய்ச் செல்லா நிற்க –
அந்திம அவஸ்தையில் பகவத் விஷயமான  அந்திம ஸ்ம்ருதி அநு வர்த்திக்குமாகில் பகவல் லாபமாய் இருக்கும் –
அதுக்கு இப்படி செய்வான் என்று வழி யிட்டுக் கொடுக்கும் வேதமும் –

ஸூத்த சாத்விக புருஷர்கள் –
நிர்ஹேதுக பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தாலே கர்ம ஜ்ஞான சஹ க்ருதையான பக்தி நிவ்ருத்தி பூர்வகமாக
சித்த ரூபனான ஈஸ்வரனே உபாயமாய் –
அநந்ய கதிகளுமாய்-ஸ்வ ரஷண ப்ராப்தி இல்லாத நமக்கு உபாயம் என்று அத்யவசித்து இருந்து
சாதகனான அவனைப் போலே கர்ம வாசனையாதல் -அந்திம ஸ்ம்ருதி யாதல் வேண்டாதே
ஈஸ்வரன் தலையிலே அந்திம ஸ்ம்ருதியை ஏறிட்டு
இஸ் சரீர அவசானத்திலே -திருவடி திரு வநந்த ஆழ்வான் பிராட்டி தொடக்கமானாருடைய
பகவத் அனுபவ  ப்ரீதி காரிதையான நித்ய கிங்கரதையை லபிப்பார்கள் –

இதுக்கு வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் தத் உபாய ஸ்வீகாரமான ப்ரபத்தியை சாதனமாக ஆதரித்து
அவனே உபாயம் என்று நிச்சயித்தார்கள் –
எங்கனே என்னில் –

ஸ்ருதி உபாசன  வாக்யத்திலே நின்று –
சத்யம் தபோ தமஸ் சமோ தானம் –தர்ம ப்ரஜந நமக்நய அக்னிஹோத்ரம் யஜ்ஞோ  
மாநாசம் நியாச-தை -நா -51-இத்யாதிகளைச் சொல்லிற்று –

சத்யமாவது-பூத ஹிதமானது –
தபஸ் ஸாவது -காய சோஷணம்-
தமம் -விரக்தி
சமம் -சாந்தி –
தானம் -சத்துக்கள் விஷயமாக கொடுக்குமவை-
இப்படிகளால் உபாசிக்கும் இடத்தில் யம நியம ஆசன ப்ராணாயாம ப்ரத்யாஹார தாரணா த்யான சமாதிகளான
அஷ்டாங்க யோகத்தையும் விதித்து –

இது தன்னை முக பேதத்தால் ஸ்ரவண மனன நிதித்யாசன தர்சனம் இத்யாதிகளையும் சொல்லக் கடவது –
ஸ்ரவணம் ஆவது  -தத்தவ ஹிதங்களை உள்ளபடி கேட்கை–
மனனம் ஆவது -அவ்வர்த்தத்தை விதேயமாகக் மனனம் பண்ணுகை-
நிதித்யாசனம் ஆவது -அவ்வர்த்தத்திலே நிஷ்டனாகை-
த்ருவாநு ஸ்ம்ருதி ஆவது -அவ்வர்த்தத்தில் அநவரத பாவநா-
தர்சன சமாநாகாரம்-ஆவது கண்டால் போலே இருக்கை-
இப்படிகளாலே அநேகங்களை ஒன்றுக்கு ஓன்று ஸ்ரேஷ்டமாகச் சொல்லிக் கொண்டு போந்து

மானஸ  என்கிற சப்தத்தாலே ஆத்ம ஜ்ஞானத்தைச் சொல்லிற்று –
அதுக்கு மேலான தர்சன சரம அவதியிலே வருந்திப் புகுந்தாலும்
அவ்வளவிலே பிரம்சம் யுண்டாகில் ஆதி பரதனைப் போலே அதபதிக்கும் அத்தனை –

இவ்வுபாயம் தான் -த்ரைவர்ணிக அதிகாரமுமாய் -அனுஷ்டிக்கும் இடத்தில் துஷ்கரமுமாயும் –
துர்லபமுமாயும் -அசாத்யமாயும் -பலவாயும் -விளம்பமாயும் -இருக்குமத்தனை –
பல ப்ரதான சக்தி இல்லாமையாலும் -ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் ஆகையாலும் -அந்திம ஸ்ம்ருதி வேண்டுகையாலும் –
பிரத்யவாய பரிஹார பிரசுரமாய் இருக்கையாலும் -இவ்வருமைகளை அநு சந்தித்துத் தளும்பினார்களுக்கு
மாதா பித்ரு சஹஸ்ரேஷூ வத்சல தரம் சாஸ்திரம் -என்கிற மாதா பிதாக்களிலும் ஆயிரம் மடங்கு ஏற்றமாக முகம்
கொடுக்கும் மாதாவாகையாலே வேதமும்
உபநிஷத்   பாகத்திலே நியாச சப்தத்தாலே ப்ரபத்தியை
நியாச இத்யாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மாணம்–நியாச இதி ப்ரஹ்மா-என்று நியாச சப்தத்தாலே பிரபத்தியைச் சொல்லிற்று

கீழ்ச் சொன்ன உபாயங்களோபாதி பிரபத்தியும் அந்ய தமம் ஆகிறதோ என்னும் அபேஷையிலே –
உத்க்ருஷ்ட உபாயம் பிரபத்தி என்னும் இடத்தை நியாச சப்தத்தாலே சொல்லிற்று –
பிரபத்தி பண்ணும் பிரயோகம் -இருக்கும்படி என்-என்னும் அபேஷையிலே –
பதிம் விச்வச்ய-என்றும் –
ப்ரஹ்மணே தவா மகாச ஒமித்யாத்மா நம் யுஞ்ஜீத -என்றும் பிரயோகம் சொல்லிற்று –
எங்கனே என்னில் –

விஸ்வ பதார்த்தங்களை உடையவனாய் இருக்கிற ப்ரஹ்மம் உண்டு -சர்வ ரஷகன் -அவன் திருவடிகளிலே –
ஒமித்யாத்மாநம் -என்று தனக்கு வாசகமான மந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு –
யுஞ்ஜீத -சமர்ப்பிப்பான் என்று சொல்லி மஹிமா வாகையாவது என் என்னும் அபேஷையிலே
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்றும் —
ப்ரஹ்ம வேதி ப்ரஹ்மைவ பவதி -என்றும் –
தத் பாவ பாவமா பன்ன -என்றும் –
மம சாதர்ம்ய மாகதா -என்றும் –
தம்மையே ஒக்க அருள் செய்வர் -பெரிய திரு -11-3-5-

இப்படி அவனோடு ஒத்த பரம சாம்யாபத்தி யாகிற பலத்தைச் சொல்லி –
ப்ரபத்திக்கு அதிகாரிகள் யார் என்னும் அபேஷையிலே
வதார்ஹனும் நின்ற நிலையிலே -சரணம் புக்கால் சரண்யன் சேதனனாகில் இவன் குற்றம் கண்டு விட்டுக் கொடான் -என்று
சரணாகதியினுடைய வைபவத்தை சுருதியிலே சொல்லிற்று -எங்கனே என்னில் –

தேவா வை யஜ்ஞாத் ருத்ர மந்தாரயன் ஸ ஆதித்யா நன்வாக்ராமத  தே த்விதை வத்யான் ப்ராபத் யந்த-தான்
ந பிரதிப்ராயச்சன் தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் -ந பிரதியச்சந்தி -யஜூஸ் காண்டம் -6-5-20-என்று –
தேவர்களுடைய யாகத்தில் ருத்ரன் தனக்கு ஹவிர்பாகம் உண்டு என்று வர –
இவனுக்கு அவர்கள் ஹவிர்பாகம் கொடோம் -என்ன
நீங்கள் வத்யர் -என்று அவர்களைச் சொல்லித் தொடர்ந்தான் –
அவர்களும் த்விதைவத்யர் என்கிற அஸ்வினிகள் பாடே போய் சரணம் புக –
அவர்களும் எங்கள் பக்கலிலே பிரபன்னரான இவர்களை  விட்டுக் கொடோம் -என்று ருத்ரனோடேயும் மலைந்து நோக்கினார்கள் –

தேவா வை  த்வஷ்டாரமஜிகாம் சந் ஸ பத்நீ ப்ராபத்யாத தம் ந பிரதிப்ராயச்சன் தஸ்மாதபி வத்யம்
பிரபன்னம் ந பிரதிப்ரயச்சந்தி -என்று
தேவர்கள் யாகம் பண்ணுகிற அளவிலே தேவதச்சன் தனக்கு ஹவிர்பாகம் யுண்டு என்று வர –
அவனுக்கு ஹவிர்பாகம் கொடோம் என்று
அவர்கள் எல்லாருமாகத் துரத்தினார்கள் -அவன் அசந்த தேவ பாதணிகள் பக்கலிலே போய் சரணம் புக்கான் –
இவன் வத்யன் -விட்டுத் தர வேணும் -என்ன –
தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந பிரதிப்ரயச்சந்தி -என்று
எங்கள் பக்கலிலே பிரபத்தி பண்ணின இவனை விட்டுத் தாரோம் என்று
அவர்களோடேயும் மலைந்து நோக்கினார்கள் என்னும் இவ்வர்த்தம் ஸ்ருதி சித்தமாகையாலே
வத்யனும் பிரபத்த்யதிகாரி என்னும் இடம் சொல்லிற்று –

பிரபத்தி  பண்ணுகைக்கு சரண்யர் யார் -என்னும் அபேஷையிலே –
ஸ்வேதாஸ்வதர உப நிஷத்திலே -யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்று
பிரசித்தமான ப்ரஹ்மாவை யாவன் ஒருவன் முன்பு யுண்டாக்கினான்-சர்வர்க்கும் சரண்யன் அவனே
என்னும் இடம் சொல்லிற்று –
சதுர்தச புவன ஸ்ரஷ்டாவான சதுர்முகனும் இவனாலே ஸ்ருஜ்யன் ஆகையாலே இவனை ஒழிந்தாருக்கு
ஸ்ருஜ்யத்வ கர்ம வச்யத்வங்கள் யுண்டாகையாலே அவர்களில் சரண்யராக வல்லார் இல்லை என்னும் இடம் சொல்லிற்று –

யோவை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -யாவன் ஒருவன் அந்த ப்ரஹ்மாவுக்கு வேதங்களைக் காட்டிக் கொடுத்தான் –
இத்தால் ருசி ஜனகனும் இவனே என்கிறது -ஜ்ஞான பிரதனாகையாலே ருசி ஜனகன் என்னத் தட்டில்லையே –
வேத சஷூஸ்சைக் கொடுத்து ஸ்ருஷ்டிப்பித்தான் என்கையாலும்-
இவர்களுக்கு சம்ஹர்த்தா வாகையாலும்
இவர்கள் பண்ணும் அவாந்தர சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு அந்தராத்மதயா நின்று பண்ணுகையாலும்-
இவர்கள் அவனுக்கு சரீர பூதராகையாலும் –
இவர்கள் அவனுக்கு சேஷமாகையாலும்
அவன் ஸூத்த சத்வமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன் ஆகையாலும் –
இவர்கள் குணத்ரய உபபேதமான ப்ராக்ருத  சரீரத்தை யுடையவர் ஆகையாலும் –
அவன் ஹேய ப்ரத்யநீக கல்யாண குணங்களை யுடையவன் ஆகையாலும் –
இவர்கள் ஹேய குண விசிஷ்டர் ஆகையாலும்
அவன் புண்டரீகாஷன் ஆகையாலும் இவர்கள் விருபாஷர் ஆகையாலும் –
அவன் ஸ்ரீ யபதி யாகையாலும் -இவர்கள் நிஸ் ஸ்ரீ கரராகையாலும்
அவன் உபநிஷத் சித்தனாகையாலும் -இவர்கள் ஆகம உக்த வைபவர் ஆகையாலும்
அவன் உபய விபூதி நாதன் ஆகையாலும் -இவர்கள் அண்டாந்தர வர்த்திகள் ஆகையாலும்
அவன் மோஷ ப்ரதன் ஆகையாலும் -இவர்கள் சம்சார வர்த்தகர் ஆகையாலும்
சிவா சம்ப்வாதிகளாலே சொல்லுகிற பரத்வமும் குண யோகத்தாலும் பிரகார வாசி சப்தங்கள்
பிரகாரி பர்யந்தமாகக் கண்டபடி யாலும் யாகையாலும்
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த ஆத்மாக்களும் இவனுக்கு ரஷ்யம்

ஸ்ரீ யபதியாய் புருஷோத்தமனான நாராயணனே சர்வ ரஷகன் -அவனே சரண்யன் -என்னும்
இடத்தைச் சொல்லிற்று –
இனி சரண்யன் பக்கலிலே இறே சரணம் புக அடுப்பது -ஆகையாலே வேதாத்மா சரணம் புகுகிறான் –
தம்ஹ தேவமாத்ம புத்தி பிரசாதம் -தானே உபாயம் என்கிற வ்யவசாயமான புத்தி பிரசாதத்தை
எனக்குப் பண்ணித் தந்தான் -என்கையாலே வ்யவசாய ப்ரதனும் அவன் என்னும் இடம் சொல்லிற்று –
முமுஷூர்வ சரணம் அஹம் ப்ரபத்யே -என்று
பிராப்ய ருசியுடையவன் அதிகாரி என்னும் இடம் தோற்றுகைக்காக- மோஷார்த்தியான நான் சரணம் புகுகிறேன் -என்கிறான் –

ஆக
இத்தால் மோஷ உபாயம் பிரபதனம் -என்னும் இடத்தையும்
ப்ரபத்திக்கு அதிகாரி முமுஷூ என்னும் இடத்தையும் சொல்லிற்று –

இப்படி ஸ்ருதி சித்தமான பிரபதனத்தை இவ் வுபநிஷத்தை அடியொற்றி உப ப்ரும்ஹணம் பண்ணின
ருஷிகளும் மஹா பாரத ராமாயணாதிகளிலே நின்றும் வெளியிட்டார்கள் -எங்கனே என்னில் –
கோந் வச்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கஸ்ஸ வீர்யவான் தர்மஜ்ஞ-என்று –
மூன்று குணத்தினுடைய விவரணம்  ஸ்ரீ ராமாயணம் –

குணவான் -என்கிறது சீல குணத்தை-
வீர்யவான் என்கிறது -அந்த சீலம் கண்டு ஒதுங்கினவர்களுடைய
விரோதி வர்க்கத்தைக் கிழங்கு எடுத்து -அவர்களைக் காத்தூட்ட வல்லனாகிறது –
தர்மஜ்ஞ என்று -சம்சாரிகளுடைய துர்க்கதியைக் கண்டு -இவற்றுக்கு நம்மை ஒழியப் புகலில்லை-
இனி நம்மாலே நம்மைப் பெறும் அத்தனை -என்று
சரணாகதி தர்மமே பரம தர்மம் -என்று இருப்பர் என்கிறது –

சீலவத்தை யாகிறது –
அபிஷேக விக்நம் பிறந்தது என்று வெறுப்பு இன்றியே -வனவாசோ மஹோதய-என்று காடேறப் புறப்பட்டுப் போவது –
ஆவாசம் த்வஹமிச்சாமி -என்று ரிஷிகள் பக்கலிலே தாழ நிற்பது –
கிங்கரௌ சமுபஸ்திதௌ-எனபது –
ஜன்ம வ்ருத்தங்களிலே குறைய நிற்கிறவர்களை -உகந்த தோழன் நீ -பெரிய திரு -5-8-1- எனபது –
இப்படிகளாலே சீலவத்தையை மூதலித்தது-

மாரீச ஸூபாஹூக்கள் வதம் தொடக்கமாக ராவண வத பர்யந்தமாக நடுவுண்டான பிரதிகூல
நிரசனத்தாலே வீர்யவதியை மூதலித்தது –

காக விபீஷணாதிகளை ஸ்வீ கரிக்கையாலே தர்மஜ்ஞதையை மூதலித்தது -எங்கே கண்டோம்  என்னில்
சர்வ லோக ஜநநியான பிராட்டி திறத்திலே காகம் அபராதம் பண்ணுகையாலே பரம க்ருபாளுவான பெருமாள் திரு உள்ளத்தாலும்
இவன் வத்யன் என்று ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட –
சதம் நிபதிதம் பூ மௌ சரண்யஸ் சரணாகதம் -வதார்ஹமாபி காகுத்ச்த க்ருபயா பர்யா பாலைத்
ஸ பித்ரா ஸ பரித்யக்தஸ் ஸூரைச்ச ஸ மஹர்ஷிபி-தரீன் லோகன் சம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத –  என்கிறபடியே
புறம்பு புகலற்று வந்து விழுந்த இத்தை சரணாகதி யாக்கி ரஷித்து விட்டான் சரண்யன் என்கையாலே
காக விஷயமான ஸ்வீகாரம் கண்டோம் –

ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ-என்று-பெருமாளையும் அவருடைமையையும் சேர்ந்து இருக்க இசையாய் -என்று
ராவணனுக்குக் ஹிதம் சொல்லக் கேளாதே –
த்வாம் து திக் குலபாம்சனம் -என்று பரிபவித்துப் புறப்பட விட –
பரித்யக்தா மயா லங்கா -என்று விட்டுப் புறப்படுகிற போது-
ஒரு தலை நெருப்புப் பட்டுப் பற்றி வேகப் புறப்படுவாரைப் போலே அங்கு அடி கொதித்துப் புறப்பட்டு –
ராவணோ நாம துர்வ்ருத்த -என்று -தன் நிகர்ஷத்தை முன்னிட்டுக் கொண்டு
ஸோ அஹம் பருஷிதஸ்தேந தாஸ வச்சாவமா   நித -த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ தாராம்ஸ்ஸ ராகவம் சரணம் கத -என்று
சரணம் புகுந்தவனை -முதலிகள் –
இவன் ஜன்ம வ்ருத்தங்கள் இருந்தபடியாலும் –
வந்த வரவு இருந்த படியாலும் –
இவனுடைய நினைவு இருந்தபடியாலும் –
வந்த காலம் இருந்த படியாலும் -சரணா கதனுடைய வார்த்தை ஜீவிக்கும் கோஷ்டி என்று அதிலே கலந்து
நலியலாம் என்று வந்து சரணம் புகுந்த படியாலும் –
கனத்த மதிப்பரோடே வரில் தட்டுப்படும் என்று பார்த்து தன் அவயவங்களோ  பாதி விரகு அறிந்து தப்பலாம் படி
நாலு பேரைக் கொண்டு வந்த படியாலும்
ராவணன் தம்பியாய் அவன் சோற்றை யுண்டு அவன் ஆபத் காலத்திலே விட்டுப் போர சம்பவம் இல்லாமையாலும் –
இவன் நம்முயிர் நிலையிலே நலிய வந்தான் என்று நிச்சயித்து –
வத்யதாம் -என்று கொண்டு -சர்வ பிரகாரத்தாலும் இவனைக் கைக் கொள்ள ஒட்டோம் -என்று நிற்க –

நீர் இவனை  -விடுகைக்கு உறுப்பாக யாதொரு அநுபபத்தி சொன்னீர் -அவை நமக்கு ஸ்வீகரிக்கைக்கு யுடலாம் இத்தனை
அவன் வத்யனே யாகிலும் மித்ரபாவம் யுடையவனே வந்தவனை –
ந த்யஜேயம்-என்று அவனை விடில் நமக்கு சத்பாவம் இல்லை என்று தன் பிரகிருதி இருந்த படியைச் சொல்லி
ஆர்த்தோவா  யதிவா த்ருப்த பரேஷாம் சரணாகத -என்கிறபடியே
ஆர்த்தனாய் வரவாம் -செருக்கனாய் வரவாம் -நம் பக்கலிலே சரணம் புகுந்தவனை –
அரிய பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா-பிராணனை அழிய மாறி ரஷிப்பன் –

ப்ராணா நபி -என்றாய் விட்டது   சரணாகதனுக்கும் தம்மை அழிய ரஷிக்குமது  தன்னேற்றம் செய்ததாக போந்து இராமையாலே –
க்ருதாத்மாநா -என்று பிராணனை அழிய மாறி ரஷிப்பன் –
சக்ருதேவ பிரபன்னாயா தவாஸ் மீதி ச யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம-என்று
ப்ரக்ருத்ய அநுரூபமான பிரதிஜ்ஞையைப் பண்ணி –
கண்டோர்வசமுத்தமம் -என்று கண்டு உபாக்யாநத்தைச் சொல்லி –
பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் -என்று –இவை தான் என் என்னில் –

பத்தாஞ்சலி புடம் -என்றது காயிகமான பிரபத்தி –
தீநம் -என்றது மானஸ பிரபத்தி
யாசந்தம் -என்றது   வாசகமான பிரபத்தி
சரணா கதம் -கீழே இவை மூன்றையும் சொல்லி வைத்து சரணா கதம் -என்கையாலே —
தே வயம் பவதா ரஷ்யா பவத் விஷய வாஸிந -என்று
உகந்து அருளின தேசங்களிலே அபிமானித்த எல்லைக்கு உள்ளே கிடந்தது விடுகையும் சரணாகதி –
அவற்றிலே ஓன்று யுண்டாகிலும் விடேன் என்ற இடத்திலும்
மஹா ராஜர்-தெளியாமையாலே -இவருடைய ப்ரக்ருத்ய அநு குணமாக இவரைத் தெளிவிப்போம் என்று பார்த்தருளி
பண்டு கலங்கின விடத்தில் நம்முடைய சக்தியைக் கண்டு தெளிந்தார் -அத்தைப் புரஸ்கரிக்கவே தெளிவர் என்று பார்த்து

பிசாசான்  தாநவான் யஷான் ப்ருத்தி வ்யாஞ்சைவ ராஷசான் -என்று இத்யாதிப்படியே எதிரிகள் அடைய
ஒரு கலத்திலே உண்டு ஒரு முகம் செய்து வந்தாலும் –
அங்குள்யக்ரேண தான் ஹன்யாம் -நம் சிறு விரலில் ஏக தேசத்துக்கும் இரை போரார்கள் காணும் -என்று
தம்முடைய பலத்தைச் சொல்லவே
ராம பாக்யத்தாலே மஹா ராஜர்   தெளிந்து வந்து -விபீஷணன்  நம்மிலும் பரியவனாய்  வந்தான் –
பெருமாள் கடுக கைக் கொண்டு அருளும் படி விண்ணப்பம் செய்வோம் என்று பெருமாள் பாடே வந்து
கடுக கைக் கொண்டு அருளீர் என்று விண்ணப்பம் செய்ய –
நாம் அவன் வந்த போதே கைக் கொண்டோம் -உம்முடைய அனுமதி பார்த்து இருந்தோம் இத்தனை காணும்
ஆநயைநம் -அவன் நிற்கிற நிலை கண்டால் எனக்கு ஆறி இருக்கலாய் இருந்ததோ -கடுகக் கொண்டு புகுரீர் -என்ன
மஹா ராஜரும் பரிகரமும் பஹிரங்கம் என்னும் படி ராம பரிசரத்தில் இவனே அந்தரங்கம் என்னும் படி கைக்கொண்டு –
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை -பெரிய திரு -6-8-5- என்கிற படியே அபிஷிக்தனாக்கி ரஷித்தான் என்கையாலே
சரண்யனுடைய ப்ரபாவமும் –
சரணா கதனுடைய ப்ரபாவமும் சொல்லிற்று –

இப்பிரகரணம் தன்னில் சொல்லிற்றாயிற்ற தாத்பர்யம் என் என்னில் –
ப்ரஹச்தாதிகளினுடைய வாக்யங்களிலே ஆஸூர பிரக்ருதிகளோடு சஹவாசம் பண்ணலாகாது என்னும் இடம் சொல்லி
தன்னை நலிய நினைத்தவனுக்கும் கூட ஹிதம் சொன்ன ஸ்ரீ விபீஷண ஆழ்வான் படியாலே சத்துக்களோடே
சஹவாசம்  பண்ண வேணும் என்னும் இடம் சொல்லி –
இவன் சொன்ன ஹிதம் கேளாத ராவணன் படியாலே ஆஸூர  பிரக்ருதிகளுக்கு ஹிதம் சொல்லலாகாது என்னுமிடம் சொல்லி –
யத்ர ராம -என்று பெருமாள் இருந்த இடத்தே வருகையாலே பகவத் சந்நிதி யுள்ள தேசமே ப்ராப்யம் -என்னும் இடம் சொல்லி –
பரித்யக்தா மயா லங்கா -என்று விட்டுப் போந்த படியாலே பகவத் குண அனுபவத்துக்கு விரோதியான தேசம் த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லி-
இருந்தபடியே எழுந்து இருந்து வருகையாலே அதிகாரத்துக்கு புரஸ் சரணாதிகள் இல்லை என்னும் இடம் சொல்லி –
சரணாகதனை-வத்யதாம் -என்கையாலே பகவத் விஷயத்தில் பரிவர் இருக்கும் படி சொல்லி –
வத்யதாம் என்றவர் -தம்மை அநுவர்த்தித்துப் புகுருகையாலே -ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டே பற்ற வேணும் என்னும் இடம்  சொல்லி –
மஹா ராஜரை இசைவித்துக் கொள்ளுகையாலே அவனும் ததீயரைப்  புருஷகாரமாகக் கொண்டல்லது கைக் கொள்ளான் என்னும் இடம் சொல்லி  –
ராவணோ நாம துர்வ்ருத்த -என்று சொல்லிக் கொண்டு வருகையாலே சரணம் புகுவார் தந்தாமுடைய நிக்ருஷ்டதயை முன்னிட்டுக் கொண்டு
சரணம் புக வேணும் என்னும் இடம் சொல்லி –
ஆக இப்படிகளாலே அதிகாரிக்கு வரும் விசேஷணங்கள் சொல்லிற்று –

பிரபத்தி பண்ணினார் விஷயத்தில் தாம் செய்யும் திறங்கள் அறிந்து இருக்கையாலே
ஸூகிரீவம் சரணம் கத -என்றும் –
ஸூகிரீவம் நாதமிச்சதி -என்றும் தமக்கு ஒரு ஆபத்து வந்தாலும் பிரபத்தியைப் பண்ணும் அத்தனை –
சரணாகதனும் தனக்குப் பலித்தது என்ன —
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி -என்று சரண்யனுக்கு உபதேசிப்பதும் இத்தையே –
ராவணனைப் போல் அன்றிக்கே ப்ரக்ருதயா தர்ம சீலச்து -என்று தர்மசீலராகையாலே அலச்சாயல் பட்டு இருந்தது –
சரணாகதி கொண்டுகந்த கடலுக்கு ஒரு குளப்படி யன்றோ இக்கடல் என்னாக் கடலின் காலிலே விழுந்து
சரணம் புகுவர் இவர் -அந்த நோயாசை இறே இது –

சர்வேஸ்வரன் ஸ்வா தந்த்ர்யத்தாலே முசித்து ஆஸ்ரீத பாரதந்த்ர்யத்தை ஆசைப்பட்டு –
பிதரம் ரோசயாமாச என்று வந்து பிறந்தான் –
அங்கே முடியை வைக்கப் பார்த்தார்கள் -கைகேயி வர வ்யாஜத்தாலே அத்தைத் தப்பினான்
ஆவாசம் த்வஹமிச்சாமி என்று ரிஷிகளுக்கு பரதந்த்ரனாக ஆசைப்பட்டான் –
அவர்களே -ந்யாய வ்ருத்தா யதா ந்யாயம் பூஜயா மா ஸூ ரீஸ்வரம்-என்று
ஸ்வா தந்த்ர்யத்தை வெளியிடத் தொடங்கினார்கள் –
அவர்களை விட்டு அறிவிலா குரங்கின் காலைப் பிடிப்போம் என்று பார்த்தான் —
அவன் தாசோஸ்மி என்று எதிரே காலைப் பிடித்தான் –
அத்தை விட்டு கடலொரு தேவதை நம்மைக் கும்பிடு கொள்ளும் என்று பார்த்து அதின் காலைப் பிடித்தான் –
அவன் சதிரன் அன்றோ –
வந்து முகம் காட்டினால் சரண்யர் ஆவுதோம் என்று முகம் காட்டானே-
இவருக்கு பழைய ஸ்வா தந்த்ர்யம் தலையெடா-கொண்டுவா தக்கானை -என்பரே
நாம் சரண்யராய்-அவன் நியாம்யனாய் வந்தால் அவன் தன் ஸ்வரூபம் நசிக்கும் –
தொடுத்த அம்புக்கு இலக்கானோம் ஆகில் ரூப நாசம் இறே உள்ளது என்று முகம் காட்டுமே
முகம் காட்டும் தனை போதும் இறே ஸ்வா தந்த்ர்யம் உள்ளது -வந்து முகம் காட்டினால் முன்புத்தை அபராதத்தை அறியானே –
கோழைகளைப் போலே உனக்கு அன்று காண்
இவ்வம்புக்கு இலக்காக உன் எதிரிகளைக் காட்டு -என்னும் இத்தனை இறே —
இது விறே ஸ்ரீ ராமாயணத்தில் சங்க்ரஹேண பிரபத்தி விஷயமாக நின்ற நிலை –

ஸ்ரீ மகாபாரதத்திலும் ஆபன்னரானவர்க்கு வசிஷ்டாதிகள் உபதேசிப்பது பிரபத்தியை –
எங்கனே என்னில் –
சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -கச்சத்வமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷப என்று விதிக்க
அனுஷ்டான வேளையிலே
த்ரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் என்று
நமஸ்ஸூ சரண பர்யாயம் ஆகையாலே பிரயோகித்தார்கள் –

திரௌபதியும் அந்தப் பெரிய சபையிலே துச்சாசனன் என்பான் ஒரு முரட்டுப் பயல் வாசா மகோசரமான பெரிய பரிபவத்தைப் பண்ண
தர்மம் ஜெயிக்கிறது என்று இருந்த பர்த்தாக்கள் ஐவரும் –
தர்மம் இல்லை என்று இருந்த நூற்றுவரும்
தர்மாதர்ம விவேகம் பண்ண மாட்டாத த்ரோண பீஷ்மாதிகளும்
இப்படி நிர் லஜ்ஜரான சபையிலே பிரபத்தியை வெளியிடப் பிறந்த பாக்யவதி யாகையாலே லஜ்ஜை உடையவனை நினைத்து
சங்க சக்ர கதா பாணே –
என்கையில் வளையோபாதியோ உன் கையில் ஆயுதமும் -என் பரிபவத்தைப் போக்குதல் –
உன் கையில் திருவாழியைப் போக்குதல் செய்ய வேணும்
த்யாகக் கொடி கட்டிக் கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப் போலே திருவாழி ஏந்தி இருக்க நான் பரிபவப் படுவதே –
எப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் இறே –
த்வாரகா நிலய –
இப்போது முதலியார் வர்த்திக்கிறது ஸ்ரீ வைகுண்டத்திலேயோ –
அச்யுத –
பற்றினாரைக் கைவிடோம் என்றது பண்டோ -இன்று அன்றோ –
கோவிந்த –
கோவிந்த அபிஷேகம் பண்ணிற்று தளர்ந்தாரை நோக்குகைக்கு அன்றோ –
கடலிலே வர்ஷித்தால் போலே நித்ய ஸூரிகளை ரஷிக்கவோ-
புண்டரீகாஷ-
இக்கண் படைத்தது ஆர்த்த ரஷணம் பண்ண வன்றோ –துச்சனாதிகளை யிடுவித்து பரிபவிக்கைக்கோ
ரஷமாம் சரணாகதாம் –
என் கை விட்டேன் -என்று பிரபத்தியைப் பண்ணினாள்-

கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம் –
ருணம் பிரவ்ருத்தம் இவமே ஹ்ருதயான்னாப சர்ப்பதி-என்று சரண்ய பிரபாவம் சொல்லிற்று இறே

அத பாதகபீதஸ்வம் சர்வ பாவேன பாரத விமுக்தான்ய சமாரம்போ நாராயண பராபவ -என்று
தர்ம புத்ரனுக்கு தர்ம தேவதை -சர்வ பர ந்யாசத்தைப் பண்ணி இறை என்றான் இறே
தஸ்மாத் தவம் லோகபர்த்தாரம் விஷ்ணும் ஜிஷ்ணும் ஸ்ரீ யபதிம் -கோவிந்தம் கோபதிம் தேவம் சத்தம் சரணம் வ்ரஜ -என்றும்
தமா நந்த மாசம் விஷ்ணும் அச்யுதம் புருஷோத்தமம் -பக்திப்ரியம் ஸூர ஸ்ரேஷ்டம் பக்த்யா தவம் சரணம் வ்ரஜ -என்றும் –
ஸோஅஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதௌ ஸ்து தௌ நச-சாமர்த்யவான் க்ருபா மாத்ர
மநோ வ்ருத்தி ப்ரசீத மே என்றும் சொல்லக் கடவது இறே –

ஸ்ரீ சாண்டில்ய பகவானும் சம்சாரிகள் உடைய துர்க்கதியையும்
பகவல் லாபத்தில் சீர்மையையும் அனுசந்தித்துத் தான் க்ருபாளுவாகையாலே
வ்ருதைவ பவதோ யாதா பூயசீ ஜன்ம சந்ததி தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ –
கெடுவிகாள் சம்சார பாந்தராய் ஜனித்துப் போருகிற நீங்கள் ஒரு ஜன்மத்தைப் பூவுக்கிட்டோம் போல வன்று –
ஒரு பிரபத்தியைப் பண்ணிப் பிழைக்க வல்லி கோளே-என்று தன் செல்லாமையாலே சொன்னான் இறே

ஸ்ரீ கிருஷ்ணனும் மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே -என்று
நான் கர்ம அனுகுணமாகப் பிணைத்த சம்சார துரிதம் ஒருவராலும் விடுத்துக் கொள்ள ஒண்ணாது —
என்னையே உபாயமாகப் பற்றினார்க்கு நானே போக்கிக் கொடுப்பேன் -என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும் தூசித் தலையிலே பிரபத்தியைப் பல இடங்களிலும் விதித்துப் போருகையாலும்
இம்மஹா பாரதத்துக்கும் இதுவே தாத்பர்யம் –

ஜிதந்தையிலும் ஸ்வேதா த்வீபவாசிகள் சர்வேஸ்வரனுடைய புறப்பாட்டிலே கண் அழகுக்குத் தோற்று
ஜிதந்தே புண்டரீகாஷ நமஸ்தே விஸ்வபாவன-எனபது –
சர்வதா சரணத்வந்த்வம் வ்ரஜாமி சரணம் பரம் -என்றும் –
ந காமகலுஷம் சித்தம் -என்றும்
தவ சரண த்வந்த்வம் வ்ரஜாமி -என்பதே அடிதோறும் அடிதோறும் பிரபத்தி பண்ணுவார்கள் –

இப்பிரபத்தி தன்னை –
அஹம் அச்ம்யபராதானாம் ஆலயோ அகிஞ்சனோ அகதி -த்வமேவோ பாய பூதோ மே பவதி ப்ரார்த்தனாமதி –
சரணாகதிரித்யுக்தா சா தேவே அஸ்மின் பிரயுஜ்யதாம் -என்று ருத்ரன்
அதிகாரி ஸ்வரூபத்தையும் பிரபத்தி லஷண்யத்தையும் சொல்லி
இத்தை சர்வேஸ்வரன் பக்கலிலே பிரயோகிப்பான் என்று சொன்னான் இறே –
-அநந்ய சாத்யே ஸ்வாபீஷ்டே மகா விஸ்வாச பூர்வகம் ததேகோபாயதா யாச்ஞா பிரபத்திஸ் சரணாகதிம் -என்று
இவ்விரண்டு ஸ்லோகங்களும் பிரபத்தியினுடைய லஷண வாக்கியம்
ஆனுகூலச்ய சங்கல்ப ப்ராதிகூல்யச்ய வர்ஜனம் ரஷிஷ்யதி விஸ்வாசோ கோப்த்ருத்வ வரணம் ததா –
ஆத்மா நிஷேப கார்ப்பண்யே ஷட்விதா சரணாகதி -என்று இது பிரபத்திக்கு அங்கம் –
பிரபன்னனான பின்பு பிறக்கும் சம்பாவித ஸ்வ பாவங்கள் சொல்லிற்று –

ஸ்ருதியும்
இத்தை உபப்ரும்ஹணம் பண்ணின ரிஷிகளும்
இத்தை ஆதரித்து அவர்கள் ஆதரிக்கும் அளவன்றிக்கே
தர்மஜ்ஞசமய பிரமாணம் வேதாச்ச -என்று ஆப்த பரிக்ரஹமே பிரபல பிரமாணம் –
வேதம் இவர்கள் பரிக்ரஹத்துக்கு சங்கோ சித்துப் போமித்தனை -என்கையாலே இதுக்கு ஆப்த பரிக்ரஹம் பிரபலம் –
எங்கனே என்னில் –
தர்ம புத்திரன் -ஸ்ருத்வா தர்மான சேஷண பாவ நாநி ச சர்வச -என்று
புருஷார்த்த சாதனங்களையும் மற்றும் பரம பாவனமான வற்றையும் ஸ்ரீ பீஷ்மரோடு அதிகரித்து
புனரேவாப்ய பாஷத -என்று திரியட்டுக் கேட்டான் –
கீழ் சர்வத்தையும் அதிகரித்தானாகில் திரியட்டுக் கேட்டதுக்கு கருத்தென் -என்னில்
நான் சாஸ்திர கம்ய ஜ்ஞானத்தால் அதிகரித்தது புருஷார்த்தம் ஆகமாட்டாது -என்று –
கோ தர்மஸ் சர்வ தர்மாணாம் பவத பரமோமத-என்று கீழ்ச் சொன்ன தர்மங்கள் எல்லாவற்றிலும் வைத்துக் கொண்டு
உமக்கு அபிமதமாக நிர்ணயித்து இருக்க வேணும் ஏதென்ன –
ஏஷமே சர்வ தர்மாணாம் தரமோ அதிகதமோமத-என்று தர்மங்களில் வைத்துக் கொண்டு
அதிகமாக நினைத்து இருக்கும் அர்த்தம் இதுவே காண் என்று சொன்னான் –
அசலையான பக்தியாலே ஆஸ்ரயிக்கப் பாராய் என்று உபதேசிக்கையாலே ஆசார்ய ருசி பரிக்ருஹீதமே பிரபல பிரமாணம் –

ஸ்வ சக்தியால் பிறந்த ஜ்ஞானம் இன்றிக்கே நிர்ஹேதுக பகவத் பிரசாத லப்த ஜ்ஞானம் உடையவராய்
நமக்கு பரமாச்சார்யர்களான ஆழ்வார்களும்
சம்சார பய பீதராய் பிரபத்தியைப் பண்ணுவது
ப்ராப்யத்தில் த்வரையாலே பிரபத்தியைப் பண்ணுவதாகா நிற்பர்கள் – எங்கனே என்னில்
நெறி வாசல் தானேயாய் நின்றானை -4-என்றும்
மாலடியே கை தொழுவான் –58-என்றும்
அந்தரம் ஒன்றில்லை யடை-58- -என்றும்
தன் விலங்கை வைத்தான் சரண் -59-என்றும் பொய்கையாழ்வார்

பணிமலராள் அங்கம் வலம் கொண்டான் அடி –பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் -4-என்றும்
அவர் இவர் என்றில்லை யரவணையான் பாதம் எவர் வணங்கி -12-என்றும்
அன்று இடர் அடுக்க ஆழியான் பாதம் பணிந்தன்றே -13-என்றும் பூதத்தார் –

அரணாம் நமக்கென்றும் ஆவலவன் -78-என்றும்
சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு -99-என்றும் பேயார் –

பழகியான் தாளே பணிமின் -நான்முகன் திருவந்தாதி 22-என்றும்
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சேல் என்ன வேண்டுமே -திருச்சந்த விருத்தம் -92-என்றும் திருமழிசை பிரான் –

திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் –5-4-7- என்றும்
உன்னருள் புரிந்து இருந்து -5-4-1- என்றும் -பெரியாழ்வார் –

நாராயணனே நமக்கே பறை தருவான் -1- என்றும்
வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் -8-7- என்றும் நாச்சியார் –

திருக் கமல பாதம் வந்து -என்று திருப் பாண் ஆழ்வார்

கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் -9-என்றும்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -7- என்றும்
உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை யுகத்தி -38-என்றும் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்-

உன் சரண் அல்லால் சரண் இல்லை -5-1- என்றும்
உன் பற்றல்லால் பற்றிலேன் -5-3- என்றும்
உன் இணை யடியே யடைய லல்லால் – -5-5-என்றும்
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி யடைந்தேன் –1-6-2- என்றும்
நாயேன் வந்தடைந்தேன் -1-9-1- என்றும்
ஆற்றேன் வந்தடைந்தேன் -1-9-8- என்றும்
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -5-8-9- என்றும்
கண்ணனே களை கண் நீயே -4-6-1- என்றும்
நின் அடியினை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே -திருவெழு கூற்று இருக்கை -என்றும் திருமங்கை ஆழ்வார் –

அலர்மேல் மங்கை யுறை மார்பா -6-10-10- என்றும்
புகல் ஓன்று இல்லா வடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10- என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -5-10-11- என்றும்
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -7-2-11- என்றும்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் -5-8-11- என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10- என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -5-8-3- என்றும்
ஆத்தன் தாமரை அடியன்றி மற்றிலம் அரணே-10-1-6- என்றும்
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னல்லால் அறிகின்றிலேன் -10-10-3- என்றும் நம்மாழ்வார் –

மேவினேன் அவன் பொன்னடி -2- என்றும்
அன்பன் தன்னை யடைந்தவர்கட்கெல்லாம் அன்பன் -11–என்று ஸ்ரீ மதுரகவிகள் –

ஆக இவ்வாழ்வார்களைப் பின் சென்ற ஆளவந்தாரும்
ந தர்ம நிஷ்டோச்மி —அகிஞ்சனோ அநந்ய கதி -என்றும்
தவ சரணயோ -என்றும்
அசரண்யா சரணாம் அநந்ய சரணஸ் சரணம் அஹம் பிரபத்யே -என்றும்

லோக விக்ராந்த சரனௌ சரணம் தேவ்ராஜம் விபோ – என்றும் எம்பெருமானாரும் –

ஆக இப்படி வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் –
லோகேச த்வம் பரோ தர்ம -என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -என்றும்
கிருஷ்ணம் தர்மம் சநாதனம்-என்றும்
விரோதி நிவ்ருத்தி பூர்வகமான நிரதிசய புருஷார்த்தமான கைங்கர்யத்தைப் பெற்று உஜ்ஜீவிக்கைக்கு
இதுவல்லாது சித்த உபாயம் இல்லை –
ஆதலால் இப்படி பிராமாணிகனான சேதனனுக்கு பிரபத்தியைப் பற்ற அடுக்கும் என்று அறுதியிட்டார்கள்-

நம் ஆச்சார்யர்களுக்கு இங்கனே இருப்பதொரு நிர்பந்தம் உண்டு –
லோக யாத்ரையில் பரிமாற்றங்கள் அடைய வேத யாத்ரையிலே சேர்ந்து அனுசந்திப்பதொன்று உண்டு
அது எங்கனே என்னில் –
பாதிரிக்குடியிலே பட்டர் ஒரு வேடன் அகத்திலே வர்ஷத்துக்கு ஒதுங்கி எழுந்து அருளி இருக்கச் செய்தே
வேடனைப் பார்த்து இவ்விடங்களில் விசேஷம் என் என்று கேட்டருள
இங்கே புதுசாக ஒரு விசேஷம் கண்டேன் -காட்டில் ஒரு மிருகம் பிடிக்கப் போனேன் –
அங்கே முயல் குட்டியைப் பிடித்துக் கூட்டிலே விட்டேன்
இதினுடைய தாய் பலகாலம் தொடர்ந்து வர அத்தைப் பின்சாய்ந்து உள்வாசல் அளவும் வந்து புகுரப் புக்கவாறே
முன்னே வந்து தண்டனிட்டுக் கிடந்தது
பின்னை இத்தை விட்டேன் -என்று இவ்விசேஷத்தை விண்ணப்பம் செய்தான் –
இத்தைக் கேட்டு பட்டரும் வித்தராய் அருளிச் செய்கிறார் –
மாமேகம் சரணம் வ்ரஜ -என்கிற ஜ்ஞானம் முயலுக்கு இல்லை –
அரி பிரானான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -என்கிற ஜ்ஞானம் வேடனுக்கு இல்லை –
இவை இன்றிக்கே இருக்க காதுகனாய் இருக்கிற இவன் இது செய்யக் கடவன் ஆனால்
பரம சேதனனானவன் பக்கலிலே பிரபத்தியை உபயோகித்தால் என்னாகக் கடவனோ என்று வித்தரானார் –

தானும் தன்னுடைய ஸ்த்ரீயுமாக ஒரு காட்டிலே இருக்க -நாம் சென்று புக்கவாறே
துணுக என்று எழுந்து இருந்து பஹூ மானங்களைப் பண்ணிச் செய்தான் இவன்
நம் வாசி யறிந்து செய்தான் ஒருவன் அல்லன் -இவன் ஜன்மம் இது -பர ஹிம்சை பண்ணி ஜீவிக்கும் வ்ருத்தம்-
இப்படி இருக்க இவன் நம்மைக் கொண்டாடிற்றுத் தான் அபிமானித்த நிழலுக்குள் ஒதிங்கினோம் என்று இறே –
இனி பரம சேதனனாய் பரம க்ருபாளுவான சர்வேஸ்வரன் அபிமானித்து
உகந்து அருளின திவ்ய தேசங்களைப் பற்றி வர்த்திக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே இவன்
என் நினைத்து இருக்கிறானோ என்று வித்தரானார் –

மற்றை நாளையில் பிரயாணத்திலே தூர எழுந்து அருளின ஆயாசத்தாலே அமுது செய்து
ஜீயர் மடியிலே கண் வளர்ந்து அருளினார் -அப்போது விடிந்தது
கெட்டேன்-என்னை எழுப்பிற்றிலர்-கால் நடையே வழி நடந்த விடாயை மதியாதே என் பக்கலிலே இத்தனை பரிவராய்
இருந்தவிடம் உமக்கு நாம் சொன்ன த்வயத்தை விஸ்வசித்த மனம் இறே -என்று அருளிச் செய்தார்

பட்டர் எம்பாரோடே ரஹச்யம் கேட்டாராய் இறே இருப்பது -இப்படி இருக்கச் செய்தே
எம்பெருமானார் இவர் பதஸ்தராகிற போது இவர் கையிலே புஸ்தகத்தைக் கொடுத்து
செவியிலே த்வயத்தைச் சொல்லி பெருமாள் திருவடிகளிலே கொண்டு புக்கு -நான் இவருக்கு வேண்டும் வித்யை கொடுத்தேன் –
நீர் இவருக்கு வேண்டும் ஆயுஸ் சைக் கொடுத்து அருள வேணும் என்று பெருமாள் திருவடிகளில் காட்டிக் கொடுத்து
த்வயத்தைச் சொல்லி சரணம் புக்கார் –

சிறியாத்தான் எம்பார் ஸ்ரீ பாதத்திலே ஸ்ரீ பாஷ்யம் வாசித்துச் சமைந்து போகக் காலமானவாறே
தீர்த்தமாடி ஈரப்புடைவையோடே தண்டன் இட்டுக் கிடந்தான் –
இதுவென் தாசரதி எழுந்திராய் உனக்கு அபேஷை என் -என்று கேட்டருள -மிலேச்ச தேசம் ஏறப் போகா நின்றேன் –
அங்கு நமக்குத் தஞ்சமாக ஒரு வார்த்தை கேட்கலாவார் இல்லை –
திரு உள்ளத்திலே ப்ரியதமமாகவும் ஹிததமமாகவும் அறுதியிட்டு இருக்கும் அர்த்தத்தை எனக்கு அருளிச் செய்ய வேணும் -என்ன
எம்பெருமானார் ஸ்ரீ பாதமே -பெரிய பிராட்டியார் ஸ்ரீ பாதமே –பெருமாள் ஸ்ரீ பாதமே –
த்வயத்தில் அறுதியிட்டு இருக்கும் அர்த்தத்துக்கு மேற்பட ஸ்ரேஷ்டமாய் இருப்பதொரு அர்த்தம் இல்லை என்று அருளிச் செய்தார் –

சிறியாத்தானை அழைத்து -திருக்கண்ண புரத்திலே ஆய்ச்சி ஸ்ரீ பாதத் தேறப் போய் வரவில்லையே –
உனக்குக் கூலி கொடுக்கும் -என்று அருளிச் செய்தார் –
அப்படியே அவ்வருகே போய் ஆய்ச்சி ஸ்ரீ பாதத்திலே சேவித்து விடை கொண்டு போரப் புக்கவாறே
சிறியாத்தானுக்கு அருளிச் செய்த வார்த்தை –
எம்பெருமான் நாராயணனாய் இருக்க அநாதிகாலம் அவ்வுறவை அறுத்து கொண்டிருந்த சேதனனை
அவன் திருவடிகளிலே பிணைக்கைக்கு பற்றாசு பிராட்டி உண்டு என்று நிர்பரனாய் இரு என்று அருளிச் செய்தார் –
இத்தைக் கேட்டருளி எம்பார் தட்டுக் கூலிக்கும் அவ்வருகே போய்த்து என்று அருளிச் செய்தார் –
இப்படியே இருப்பதொரு அர்த்தம் இல்லையாகில் சம்சாரி சேதனனுக்கு உள்ளதடைய எம்பெருமானுடைய நிக்ரஹத்துக்கு
ஹேதுக்களாய்க் கிடக்க எம்பெருமானை பிராபிக்க வேறொரு பொருள் இல்லை -என்று அருளிச் செய்தார் –

பெற்றி ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்தாள் ஒரு கொற்றியம்மைக்கு குருபரம்பரை முன்னாக த்வயத்தை அருளிச் செய்து விட்டார் –
அவள் சிறிது நாள் கழிததவாறே -எனக்கு பிராட்டி திருமந்த்ரத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்க –
இவளுக்கு இனி பிராட்டி திருமந்த்ரத்தைச் சொல்வோமாகில் இன்னும் ஒரு மந்த்ரத்தைச் சொல் என்று
இத்தை அநாதரித்துப் போம் என்று பார்த்து –
எல்லா மந்த்ரங்களில் உள்ளது எல்லாம் உண்டு என்னும் நிஷ்டை பிறக்கைக்காக பிராட்டி திருமந்த்ரமும்
உனக்குச் சொன்ன த்வயத்தில் அந்தர்க்கதம் – அங்கே சொன்னோம் காண் -என்று அருளிச் செய்தார் –
பிராட்டி திருமந்த்ரத்தை ஜபித்துக் கொள்ளும் பலத்தை இது தன்னையே ஜபித்துக் கொள் என்று அருளிச் செய்தார் –

வீராணத்து அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயிக்கைக்கு
நம்பிள்ளையைப் புருஷகாரமாகக் கொண்டு வந்தார் –
இவனைக் காட்டிக் கொடுத்து இவனுக்கு ஹிதத்தை அருளிச் செய்ய வேணும் என்ன –
சம்சாரிகளில் ஒருவருக்கும் ஹிதம் சொல்லலாகாது -என்று ஸ்வப்னம் கண்டேன் -அவனுக்கு நீர் சொல்லும் என்று அருளிச் செய்தார் –
ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயிக்க வந்தவனுக்கு எழுந்து அருளி இருக்கச் செய்தே நான் சொல்லுகையாவது என் –
அவனுக்கு ஸ்ரீ கோபால மந்த்ரத்தை யாகிலும் அருளிச் செய்யலாகாதோ
ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்தானாய் போந்தபடி என்று விண்ணப்பம் செய்ய –
ஆனால் அப்படி செய்கிறோம் என்று
ஆயர்தேவின் திருவடிகளிலே கொண்டு குருபரம்பரை முன்னாக த்வயத்தை அருளிச் செய்தார் —
இத்தைக் கண்டு அருளிச் செய்ய புக்கதொன்று -தலைக் கட்டிற்று ஒன்றாய் இருந்தது -என்ன –
என்னை ஒழியப் போமாகில் போகிறது என்று இருந்தேன்
இனித் தான் சொல்ல வேண்டின பின்பு நான் விச்வசித்து இருக்குமது ஒழிய வேறு ஒன்றைச் சொன்னாம் ஆகில்
அவனை விப்ரலம்பித்தேனாகாதோ -என்று அருளிச் செய்தார் –

நம்பிள்ளை நஞ்சீயரை அல்லாத தர்சனங்களுக்கு அதிகாரிகளும் போர யுண்டாய் –
பிரமாணங்களும் போர யுண்டாய் இரா நின்றது
நம் தர்சனத்துக்கு பிரமாணங்களும் சுருங்கி அதிகாரிகளும் சுருங்கி இருப்பான் என் -என்று கேட்க
அதிகாரிகள் அன்றியிலே ஒழிந்தது சம்சாரிகள் அஜ்ஞ்ஞர் ஆகையாலே -எங்கனே என்னில்
ஜ்யோதிஷ்டோமாதிகளைப் பண்ணி ஸ்வர்க்கத்தை லபிப்பான் -என்று சாஸ்திரங்கள் சொன்னால்
அவ்வளவும் போகாதே ஜ்யோதிஷ்டோமாதிகள் பண்ணிப் புத்திர பஸ் வன்னாதிகளைப் புருஷார்த்தமாகப் பற்றிப்
போரா நின்றார்கள் -ஸ்வர்க்கம் தான் நரக ஸ்தானம் யென்னும்படியாய் இருக்கிற
அபுநாவ்ருத்தி லஷண மோஷத்துக்கு அதிகாரம் உண்டாகப் போகிறதோ -என்று அருளிச் செய்தார் –

பிரபத்திக்கு பிரமாண அபேஷை இல்லை என்று இருப்பன்-
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -ஆனந்தோ ப்ரஹ்ம -சமஸ்த கல்யாண குணாத்மகோ அசௌ-என்கிற நிர்தோஷ பிரமாணத்தாலே
அவன் சர்வஜ்ஞன் சர்வசக்தன் ப்ராப்தன் சமஸ்த கல்யாண குணாத்மகன் என்னும் இடம் பிரசித்தம்
நாம் அஜ்ஞர் அசக்தர் என்னும் இடம் நமக்கே தெரியும் ஆகையால்
அமிழ்ந்துமவன் நெடியவன் கையைப் பிடிக்கச் சொல்ல வேணுமோ
தனது ஆபத்தே உபதேசிக்கும் என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானாருக்கு இங்கனே இருப்பதொரு நிர்பந்தம் உண்டு -எங்கனே என்னில்
கண்னழிவற்றான் ஒரு வைஷ்ணவனைக் கண்டால் அவனுக்கு பிரீதிக்கு போக்குவீடாக ஒரு த்வயத்தை அருளிச் செய்வர் –
பிறருடைய துர்க்கதியைக் கண்டால் திருவுள்ளத்தால் இரங்கி அருளிச் செய்வதும் த்வயத்தையே –
பெரிய கோயில் நாராயணன் மகனை ஏகாயனரோடே கூடி இருக்கக் கண்டார் -அவனைக் கையைப் பிடித்துக் கொண்டு
பெருமாள் திருவடிகளிலே புக்கு -பாலனாகையாலே உனக்கு ஒரு பிரமாணங்களால் ஸ்தாபிக்கப் போகாது –
நான் சகல வேத சாஸ்திரங்களையும் ஆராய்ந்து பார்த்தவிடத்தில் இவ்வாத்மாவுக்கு தஞ்சம் த்வயத்துக்கு அவ்வருகு கண்டிலேன் –
நீயும் அத்தையே விஸ்வசித்து இரு -என்று ஸ்ரீ சடகோபனை எடுத்து சூழறுத்து கொடுத்தார்
அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டராய்ப் போந்தார் –

எம்பெருமானார் வெள்ளை சாத்திப் போசல ராஜ்யத்தேற எழுந்து அருளித் திருநாராயண புரத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
அம்மங்கி அம்மாள் பிரிவாற்றாமையாலே திருமேனியும் வெளுத்து வைத்தியர்களும் பரிஹாரம் பண்ண வென்று உபக்ரமித்தவாறே
நிதானம் அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ
எம்பெருமானார் பிரிவாற்றாமையாலே வந்தது -அவர் திருவடிகளிலே கொண்டு போய் விடுங்கோள என்றார் –
அங்கேற நடந்து அவ்விடத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே அந்தவிடத்திலே எம்பெருமானாரைக் கண்டு
அவர் அணைத்துத் தழுவிக் கொண்டார் –
உடம்பில் சோகம் போய்த்து-என்னைப் பிரிந்து உடம்பு வெளுத்து இத்தனை தூரம் வந்தவருக்கு நாம் பண்ணும் உபகாரம் என்

ஆழ்வான் பரமபதத்தேறப் போகைக்கு பெருமாள் பாடே வீடு பெற்று கூட்டத்திலே வந்திருக்கச் செய்தே
இனிப் பெருமாளை நம்மாலே விலக்கப் போகாது
இனி அந்திம காலத்திலேயே என்னை அழைத்து வாருங்கோள்-என்று அந்திம சமயத்திலே எழுந்து அருளி
ஆழ்வானுக்கு செவியிலே த்வயத்தை அருளிச் செய்தார் –
அருகிருந்த முதலிகள் இச்சமயத்திலே த்வயத்தைச் சொல்ல வேணுமோ -என்று கேட்க
ஆழ்வான் பிரகிருதி அறியீர்களோ -இத்தசையில் த்வயத்தைச் சொன்னால்
கர்ப்பூர நிகரத்தை நாவில் இட்டால் போலே இருக்கும் காண் -என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானார் அந்திம தசையிலே முதலிகள் அடையத் திரண்டு இருந்து -எங்களுக்குத் தஞ்சமாய்த்
திருவுள்ளத்துக்கு பிரியமாய் இருப்பதொன்றை நாங்கள் விச்வசித்து இருக்கும் படி அருளிச் செய்ய வேணும் -என்று கேட்க –
எல்லோரும் ஸ்ரீ பாஷ்யத்திலே வாசனை பண்ணுகையே நமக்கு ப்ரியம்
அதுக்கு மாட்டாதார் திரு நந்தவனம் செய்து திருப்படித்தாமம் பறித்து திருமாலை எடுக்கையும் பிரியதரமாய் இருக்கும் –
அது எல்லாருக்கும் ஒக்கச் செய்யப் போகாது –
த்வயத்திலே வாசனை பண்ணி விஸ்வசித்து இருக்கை மிகவும் பிரியதமமாய் இருக்கும் என்று அருளிச் செய்தார் –

அனந்தாழ்வான் போசல ராஜ்யத்திலே எழுந்து அருளின போது ஜீயருடைய பூர்வாஸ்ரமத்தில் ஐஸ்வர்யமும்
இவர் செருக்கும் இருக்கும்படியை அனுசந்தித்துப் போந்தானாய்
ஜீயர் இவற்றை அடைய விட்டு சந்யசித்து எழுந்து அருளின போது -அவரைக் கண்டு
உன்னுடைய மார்த்தவமும் உன்னுடைய செருக்கும் கிடக்க சந்யசித்தாய் என்று அருளிச் செய்து இனி செய்யலாவது இல்லை இறே
என்று குளிர நோக்கி திருவேங்கடமுடையானே இவனைப் பார்த்து அருள வேணும் -என்று வேண்டிக் கொண்டு
திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய நிஷ்டனாவாய் என்று வாழ்த்தினான் –

கோயில் ஏறப் போனால் ஒரு மடமும் கார்யமுமாகக் கடவது –
அப்போது பட்டரை த்ருஷ்டாத்ருஷ்டங்கள் இரண்டுக்கும் கடவர் என்று நினைத்துப் போவதொரு போக்கு உண்டு
அதிலே ஓன்று பட்டரைக் கொண்டு கொள்வது -ஒன்றைப் பெருமாளைக் கொண்டு கொள்வது –
அங்கனே செய்யாத போது-நீர் ஒரு கோடி த்ரவ்யத்தை பட்டர் கையிலே கொடுத்தாலும் –
அவர் செருக்காலே அரை ஷணத்திலே அழித்து விடுவர் –
உம்முடைய கார்யத்தில் ஆராயாத போது நீர் பட்டரை வெறுப்புதிராகில் உமக்கு விநாசமாம்
பெருமாளோடு வெறுத்த போது பட்டரைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் –என்று பணித்தான் –

சிறியாண்டான் அம்மாள் அந்திம தசையிலே பணித்த வார்த்தை –
திருவேங்கடமுடையான் தன் ஸ்வரூபத்தை மறந்து என் ஸ்வரூபத்தை அனுசந்தித்தான் ஆகில்
எனக்குப் பழைய நரகம் போராது-இன்னமும் சில நரகம் சிருஷ்டிக்க வேணும் என்று இரா நின்றேன்
என் ஸ்வரூபத்தை மறந்து தன் ஸ்வரூபத்தை அனுசந்தித்தான் ஆகில்
எனக்குப் பழைய திருநாடு போராது-இன்னமும் சில திருநாடு சிருஷ்டிக்க வேணும் என்று இரா நின்றேன் –

மருதூர் நம்பி அந்திம தசையிலே தம்முடைய ஊரிலே எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கச் செய்தே
விண்ணப்பம் செய்த வார்த்தை –
மூன்று ஜன்மம் திருவடிகளிலே ப்ராதிகூல்யம் பண்ணின சிசூபாலன் திருவடிகளைப் பெற –
அநேக ஜன்ம அபராதத்தைப் பண்ணிப் போந்த நான் திருவடிகளைப் பெறாது ஒழிகை வழக்கோ என்ன
அப்போதே திருவடிகளைப் பெற்றார் –

நம்பி திருவழுதி வளநாடு தாசர்க்கும் பிள்ளை திருநறையூர் அரையர்க்கும் பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
பொய்யே யாகிலும் அவன் உகந்து அருளின தொரு கோயிலிலே புக்குப் புறப்பட்டுத் திரியவே
அந்திம தசையிலே எம்பெருமான் முகம் காட்டும் –
அவன் முகம் காட்டவே இவ்வாத்மா திருந்தும் -என்று –
எம்பெருமானுக்கு இல்லாததுமாய் இவ்வாத்மாவுக்கு உள்ளதுமாய் அவனைப் பெறுகைக்கு
பெரு விலையனுமாய் இருக்கும் உபாயம் அஞ்சலி -என்று அருளிச் செய்தார் –
கருட முத்ரைக்கு பாம்பு அகப்படுமா போலே சர்வ சக்திகனான சர்வேஸ்வரனும் அஞ்சலி பரமா முத்ரா -என்கிறபடி அகப்படும் –

ஆக இப்படி ஆசார்ய ருசி பரிக்ருஹீதமாய் ஆயத்து இருப்பது த்வயம் -இதினுடைய ஆநுபூர்வியைச் சொல்லி
அதுக்கு உள்ளீடான அர்த்தத்தைச் சொல்லிவிட அமையாதோ –
இவ்விதிஹாசங்கள் எல்லாம் திரள நீர் சொன்னதுக்கு பிரயோஜனம் என் -என்னில்
புறம்புள்ள பிரமாணங்கள் கிடக்கச் செய்தே இத்தனையும் ஆப்தர் பரிக்ரஹத்துக்குப் போந்தது ஒன்றாகாதே
என்று கேட்கிறவனுடைய நெஞ்சிலே இதினுடைய வைபவம் பட்டு ருசி விச்வாசங்களுக்கு உறுப்பாக

திருக்கண்ண புரத்திலே செருகவம்மாள் எல்லா அபராதங்களையும் -ஷமஸ்வ -என்று வேண்டிக் கொள்வதும் செய்தார்
ஷமித்தோம் என்று பகவத் உக்தியும் உண்டாய் இருந்தது –
ந ஷமாமி கதாசன -என்று என்னடியார் திறத்தில் அபராதம் பண்ணினவர்களை ஒருக்காலும் பொறேன் என்று உண்டாய் இருந்தது
இது சேருகிறபடி என் என்று கேட்க –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்திலே அபசாரத்தைப் பண்ணி வைத்துத் தன் முன் நின்று சரணம் புகுமன்று பொறேன் என்கிறது –
புருஷகாரத்தை முன்னிட்டு கொண்டு சரணம் புகுருகையாலே இவர்க்கு ஷமஸ்வ என்னத் தட்டில்லை –
ஆகையாலே அசஹ்யா அபசாரத்துக்கு இதுவே பரிஹாரம் –
பிரஜை பண்ணின குற்றம் தாய் பொறுத்தால் பின்னை ஆராய்வார் இல்லை இறே –

பக்தி நிஷ்டனுக்கு கர்ம அவசா நத்திலே மோஷமாவான் என்-
பிரபன்னனுக்கு சரீர அவசா நத்திலே மோஷமாவான் என் –
தஸ்ய தாவதேவ சிரம் -அவனுக்கு அவ்வளவே விளம்பம் -அத சம்பத்ச்யே-அநந்தரம் சம்பன்னனாகக் கடவன்
என்கிற ஸ்ருதி இருவர்க்கும் பொதுவன்றோ
கர்ம அவசானே மோஷம் என்னவுமாம் சரீர அவசானே மோஷம் என்னவுமாம் என்று இத்தை நியமிப்பார் யார் -என்ன

பக்தி நிஷ்டனுக்கு இருக்கவிருக்க உபாசனம் பக்வம் ஆகையாலே பலமுண்டு –
பிரபன்னனுக்கு கர்த்தவ்யம் ஓன்று இல்லாமையாலும்
ஈஸ்வரனுக்கு அஜ்ஞான அசக்திகள் இல்லாமையாலும்
இங்கு ஒரு பிரயோஜனம் இல்லாமையாலும் பிரபன்னனுக்கு சரீர அவசா நத்திலே மோஷம் –
ஆனால் ஜ்ஞானம் பிறந்த போதே சரீரம் போகாது ஒழிவான் என் என்னில்
பகவத் விஷயத்திலே தீவர சம்சர்க்கம் இல்லாமையாலே இவனுக்குள்ள மாத்ரம் தான் கர்ம ஷயம் பிறந்தவாறே
சரீரம் விடுமாகில் அநந்தரம் நரகமாய் இருக்குமாகில் அத்தைத் தப்பி எம்பெருமானைப் பெறலாய் இருக்குமாகில்
பெற்றால் ஆகாதோ என்று அன்றோ இவன் இருப்பது –
இப்போதே பிரக்ருதியை விட வேணும் என்னும் த்வரை பிரபத்தி காலத்தில் பிறவாமையாலும்-
இவன் இருந்தால் பின்னையும் சில அநுகூலரைக் கிடைக்கும் என்று ஈஸ்வரனும் இருக்கையாலும் பிரியமாய் இருக்கும்

ஆனால் இருக்கும் தனை நாளும் ஸூகோத்தரமாக வையாது ஒழிவான் என் என்னில்
துக்கோத்தரமாய் இருக்கச் செய்தேயும் இத்தை விட மாட்டாதவன் இதிலே அல்ப ஸூ கம் காணுமாகில்
பின்னை அவ்வருகு நினையானே -அவனுக்கு ஹிதமே பார்க்குமவன் ஆகையாலே –
உபாசகனுக்கு இருக்கவிருக்க இதிலே உபாசனம் பக்வம் ஆகிறவோபாதி
இவனுக்கும் இருக்கவிருக்க இதிலே ருசி பிறக்கைக்கு உடலாம் -நம்மையே உபாயமாகப் பற்றினான் ஆகில்
இனி மேல் ஒரு போகியான அனுபவம் கொடுக்க விருந்தோமாகில்-
இனி சரீரம் விடும் தனையும் கர்ம அநு குணமாக ஜீவிக்கிறான் என்று உதாசீனனாய் இருக்கும் –

நஞ்சீயர் உபாசகருக்குச் சொன்ன க்ரமம் அடைய பிரபன்னனுக்கு தேஹயாத்ரா சேஷமாக ரஹச்யத்தில் உண்டு என்று அருளிச் செய்வர் –
திருமந்த்ரத்தை இடக்கைப் பத்துக் கொண்டு எண்ணுகை கர்மயோகம் –
அதினுடைய அர்த்த அனுசந்தானம் பண்ணுகை ஜ்ஞான யோகம் –
அவ்வர்த்தம் இருக்கை பக்தியோகம் –
பக்தி பரவசராய் எம்பெருமானே நிர்வாஹகன் என்று துணிகை பிரபத்தி –

பிரபன்னர் தான் த்ரிவிதமாய் இறே இருப்பது –
பக்தி பரவசராய் சாதனா அனுஷ்டான ஷமர் அல்லாமையாலே சரணம் புகுவாரும் –
ஸ்வரூப ஜ்ஞானத்தால் அவனைப் பற்றி இருப்பாரும் –
இவை இரண்டும் ஒழியத் தந்தாமுடைய அஜ்ஞான அசக்திகளையும் முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுவாருமாய்
த்ரிவிதராய் இருப்பார் –
உபாயம் எம்பெருமானே –
அங்கம் அவனுடைய ஜ்ஞான சக்த்யாதி குணங்கள் –

திருமந்த்ரத்தை ஒழிந்த சாஸ்திரங்கள் அடைய சேதனனுடைய ஜ்ஞான சக்த்யாதிகள் கொண்டே எம்பெருமானைப் பெறலாம் என்றது –
திருமந்தரம் இவனுடைய பாரதந்த்ர்ய ஜ்ஞானத்தாலே பெறலாம் என்றது –
சரம ச்லோஹம் இவனுடைய பாரதந்த்ர்யமும் விலக்காமைக்கு உறுப்பாம் இத்தனை –
பகவத் பிரபத்தியே சரமமான உபாயம் -என்கிறது –
த்வயத்தில் இவனுக்கு விடச் சொன்ன அர்த்தமும் அழகியதாக விடவும் போகாது –
பற்றச் சொன்ன அர்த்தமும் அழகியதாகப் பற்றவும் போகாது
நாமோ அஜ்ஞ்ஞர் அசக்தர் அப்ராப்தர்
ஈஸ்வரன் ஸ்வதந்த்ரன் நாம் என் செய்யக் கடவோம் என்று அஞ்சுவார்க்கு
அஞ்ச வேண்டாதபடி தோஷமே பச்சையாக நின்ற நிலையிலே பெறலாம் என்கிறது –

ஆகையாலே கிரியையாலும் ஜ்ஞானத்தாலும் துணிவினாலும் பெற வேணும் –
ருசி மாத்ரம் உடையார்க்குப் பாசுர மாத்ரத்தாலே பெறலாம் என்கிறது த்வயம்
மாதவன் என்றதே கொண்டு –என்றும் –
சரணம் இதயம் வாசமுதைரிரம் -என்றும் சொல்லக் கடவது இறே –
வாச்யங்களில் சர்வேஸ்வரனுக்கு அவ்வருகு இல்லாதாப் போலே
உபாதேயமான வாசக சப்தங்களில் த்வயத்துக்கு அவ்வருகு இல்லை
மா சரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -என்னக் கடவது இறே
தன்னாலே எம்பெருமானைப் பெறப் பார்க்கை இளிம்பு –
தன்னைப் பொகட்டு எம்பெருமானாலே எம்பெருமானைப் பெறப் பார்க்கை சதிர் –
இவனுடைய அபராதமும் ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யமும் ஜீவியாதபடி பண்ண வல்ல பெரிய பிராட்டியார் சம்பந்தம் கொண்டே
எம்பெருமானைப் பெறப் பார்க்கை மா சதிர் –

ஜ்ஞான கர்ம அனுக்ருஹீதையான பக்தியோகத்தை முமுஷுவுக்கு பகவத் பிராப்தி சாதனம் என்று
சாஸ்திரங்கள் சொல்லா நிற்க
நம் ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும் இவர்களுக்கு உள்ள ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களில் குறைந்த பிரபன்னராய் இருப்பாரும்
இப்பிரபத்தியை விஸ்வசித்து நிர்ப்பரராய் இருக்கிறது என் கொண்டு என் என்னில்
அனாதிகாலம் பண்ணின புத்தி பூர்வாக அபராதங்களுக்கு பிராயச் சித்தம் ஆகையாலும்
சர்வாதிகாரம் ஆகையாலும்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையாலும்
கர்ம அவசானம் பார்த்து இராதே தேக அவசானத்திலே மோஷத்தைத் தருகையாலும் –
மற்றை உபாயங்களுக்கு அங்கமாக விதித்து இவ்வுபாயத்துக்கு அத்தைத் தவிர்த்துக் கொடுக்கையாலும்
விரோதியினுடைய ப்ராபல்யத்தாலும்
தன்னுடைய ரஷண்த்தில் தனக்கு பிராப்தி இல்லாமையாலும்
ரஷகனுக்கு ரஷிக்கை முறைமையாகையாலும்
நம் ஆச்சார்யர்கள் த்வயத்தையே தஞ்சகமாக நினைத்து இருப்பர்கள்-

எம்பெருமானுடைய கிருபை உபாயம் –
கிருபைக்கு அடி இவனுடைய கதி ஸூந்யதை-
இவனுடைய ஸூ க்ருதமானாலோ வென்னில் -ஸூ க்ருத துஷ்க்ருதங்கள் இரண்டும் அப்ரயோஜகம் –
எங்கனே என்னில் ருஷிகளையும் காக விபீஷணாதிகளையும் ஒக்க ரஷிக்கையாலே –

திருமந்தரம் பிராப்ய பிரதானம்
சரம ச்லோஹம் பிராபக பிரதானம் –
த்வயம் இவை இரண்டிலும் ருசி உடையார் இவ்விரண்டையும் சேர அனுசந்திக்கும் படி சொல்லுகிறது

திருமந்தரம் ஸ்வரூபம் சொல்லுகிறது –
ஸ்வரூப அனுரூபமான உபாய விதானம் பண்ணுகிறது சரம ச்லோஹம் –
விஹிதமான உபாயத்தினுடைய அனுஷ்டானம் த்வயம் –

திருமந்தரம் ஸ்வரூபம் சொல்லுகிறது என்கிற விடம்-ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறதோ பர ஸ்வரூபம் சொல்லுகிறதோ என்னில்
பர ஸ்வரூபம் சித்தமாகையாலே அதில் சாதிக்க வேண்டுவது இல்லை –
இவனுடைய ஸ்வரூபம் இறே திரோஹிதமாய்க் கிடக்கிறது
அத்திரோதாயகம் போய் நிஷ்க்ருஷ்ட வேஷமான ஸ்வரூபம் இன்னது என்று அறிய வேண்டுகையாலே
ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது –
பர ஸ்வரூபம் சொல்லுகிறது என்றாலும் ஈஸ்வர ஸ்வரூபம் சம்பாதிக்கிறது ஓன்று அன்று இறே-
அறியாதவனுக்குச் சொல்லுகிறது ஆகையாலே

பர ஸ்வரூபம் சொல்லுகிற திருமந்தரம் பிராப்ய பிரதானயம் என்ற போதே
பிராபகம் அப்ரதான்யேன உண்டாகக் கடவது -எப்பதத்திலே என்னில்
திருமந்த்ரத்தில் நமஸ் ஸி லே –
ம -என்று ஷஷ்டி விபக்தி எனக்கு என்கையாலே -அத்தை நகாரம் நிஷேதிகையாலே
தன்னோடு தனக்கு உண்டான அன்வயத்த்தைத் தவிர்க்கிறது
தான் என்று வைத்து தன்னோடு தனக்கு அந்வயம் இல்லை என்னும் இடத்துக்கு கருத்து என் என்னில் –
தன்னோடு தனக்கு அந்வயம் இல்லை என்றவிடம்
ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்த்ர்யத்தைச் சொன்னபடி –
இப்பர தந்திர வஸ்துவுக்கு ஸ்வ தந்த்ரன் ரஷகன் ஆக வேண்டுகையாலே அவ்வழியாலே ஈஸ்வரனுடைய
உபாய பாவம் ஆர்த்தமாகவும் சொல்லிற்றாகக் கடவது
அங்கன் அன்றியே ஸ்தான பிரமாணத்தாலே சாப்தமாகவும் சொல்லக் கடவது –
ஸ்தான பிரமாணம் கொண்டு சாப்தமாதல் -ஆர்த்தமாதல் செய்ய வேண்டுகையாலே அப்ரதானயேன ப்ராபகம் –
பிராப்ய பிரதானமே திருமந்தரம்

திருமந்தரம் ஸ்வரூப ஜ்ஞான வைசத்ய ஹேது என்று அனுசந்திகக் கடவோம்-
த்வயம் இவற்றினுடைய அர்த்த அனுசந்தானம் என்று அனுசந்திக்கக் கடவோம்
சரம ஸ்லோஹம் இவற்றுக்கு பிரமாணம் என்று அனுசந்திகக் கடவோம்

திருமந்தரம் சகல வேத தாத்பர்யம் என்று அனுசந்திகக் கடவோம் –
சரம ஸ்லோஹம் சரண்யனுக்கு அபிமதம் என்று அனுசந்திகக் கடவோம் –
த்வயம் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் என்று அனுசந்திகக் கடவோம் –

ஆக எல்லார்க்கும் அபிமத லாபத்துக்கும் அநபிமத நிவ்ருத்திக்கும் அவனே உபாயமாக ச்வீகரிக்கை –
இது தன்னில் நிஷ்டையில் அருமையாலே இது தான் ரஹச்யமுமாய்
அதிக்ருதாதிகாரமுமாய் இருக்கும் –

த்வயம் என்று திருநாமமான படி எங்கனே என்னில்
உபாய உபேயமான அர்த்த த்வயத்துக்கும் வாசகமான வாக்யத்வயத்தை யுடையதாகையாலே –
இத்தால் கர்மாத்யுபாய ஆபாச நிவ்ருத்தி பூர்வகமான உபாயத்துக்கும்
ஐஸ்வர் யாத் உபேய ஆபாச நிவ்ருத்தி பூர்வகமான உபேயத்துக்கும்
தந்த்ரேண புஷ்க்கலாமாகச் சொல்லுகையாலே வாக்யத்வயம் என்று திருநாமாய்த்து –
இது தான் நம் ஆச்சார்யர்களுக்கு நித்ய அனுசந்தானமுமாய் இருக்கும்
இது சொன்னவன் ஆச்சார்யனாகவும் கடவன்- கேட்டவன் சிஷ்யனுமாகவும் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு –

இது தான் வாக்யத்வயம் என்று மந்த்ரத்வயம் உண்டு –
திருமந்த்ரத்தின் உடைய விசத அனுஷ்டானம் ஆகையாலே –
மந்த்ரத்வமாவது -மந்தாத் மந்திர -ஆதல்
மந்தாரம் த்ராயத இதி மந்திர -ஆதல்
யாவதாயுஷம் மனனம் பண்ணினாரையும் தரிப்பிக்குமதாகையாலே மந்த்ரத்வம் உண்டு என்கிறது –

ருஷிச் சந்தோ தேவதைகள் இல்லை யாவன் என் என்று நஞ்சீயரைக் கேட்க
இது சொல்லுகிற அர்த்தத்துக்கு கூட்டு வேண்டும் அன்றதன்றோ
இதுக்கு கூட்டு வேண்டுவது என்று அருளிச் செய்தார் –

த்வயத்தில் அர்த்தத்தை புத்தி பண்ண இச் சப்தத்தாலே திரு முன்பே விண்ணப்பம் செய்யலாமோ என்று நஞ்சீயரைக் கேட்க
இச் சப்தம் தன்னாலே விண்ணப்பம் செய்ய வேணும் என்று அருளிச் செய்தார்
இப்பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம் வேறொரு பாசுரத்துக்கு சுரவாது காண் என்று அருளிச் செய்தார் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -27-மூல மந்த்ராதிகாரம் -இத்திருமந்த்ரத்தில் வாக்யமும் வாக்யார்த்தமும் பற்றிய விவரணங்கள் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

January 22, 2016

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

——————————————————————————–

இத் திருமந்த்ரத்தில் வாக்யமும் வாக்யார்த்தமும் இருக்கும்படி எங்கனே என்னில் –
இத்தை ஏக வாக்கியம் என்றும் –
வாக்யத்வயம் என்றும் –
வாக்ய த்ரயம் என்றும் -அவ்வோ சம்ப்ரதாயங்களாலே அனுசந்திப்பார்கள்
இப்படி வாக்யார்த்தத்தையும் பஹூ பிரகாரமாக வகுத்து அனுசந்தானம் பண்ணுவார்கள் –

1- ஏக வாக்யமாம் போது –
தஸ்ய வாசக பிரணவ -இத்யாதிகளில் படியே
பிரணவ பிரதிபாத்ய ஸ்வபாவ விசிஷ்டாய நாராயணாய நம என்று அந்வயமாம் –
இப் பிரணவம் தான் நாமமாக வற்றாய் நிற்க –அவ்யக்தார்த்தத யோங்கார கேவலம் நைவ சாதக -என்று
சாண்டில்யாத் யுக்த பிரக்ரியையாலே -வ்யாபக மந்த்ரங்களில் நாமாந்தரம் வ்யக்த யர்த்தம் -இந்த யோஜனா விசேஷம்
அஹிர்புத்ன்யாத் யுக்தமான ஸ்தூல அனுசந்தான பிரகாரத்தைப் பார்த்தால் உபாய பரம் –
இப்படியானாலும் ஸ்வரூப புருஷார்த்தங்கள் இதிலே அந்தர்கதங்கள் –

2-பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதின -இத்யாதிகளைப் பார்த்து பிராணயன்தர்கத
சேஷ வ்ருத்தி பரமாகவும் அனுசந்திப்பார்கள் –
இவ் விருத்தி விசேஷமும் ஸ்வரூப அனுசந்தான பூர்வகம் –
இதுவும் க்ருத உபாயர்க்கு இவ்வளவு ரசிக்கும் அவஸ்தையிலும் உப ஜீவ்யம் –

3-இவ்விரண்டு அனுசந்தானமும் பிரதிஷ்டமாம் போது ஸ்வரூப விவேகம் வேணும் —
அதற்காக வாக்ய த்வயமாக அனுசந்திக்கும் போது
அகார நாராயண சப்த வாச்ய சர்வதாரத்வாதி விசிஷ்டன் ஆனவனுக்கே நான் நிருபாதிக அனன்யார்ஹ சேஷ பூதன் –
எனக்கு உரியேன் அல்லேன் -ஒன்றைப் பற்ற நிருபாதிக ஸ்வாமியும் அல்லேன் –
நிரபேஷ ஸ்வ தந்த்ரனும் அல்லேன் -என்றதாம்

அகார நாராயண சப்தங்கள் இரண்டும் பகவன் நாமம் ஆகையாலே புனருக்தி வாராதோ வென்னில்
அப்போது வ்யுத்பத்தி விசேஷ சித்தமான
அர்த்த விசேஷத்தை விவஷித்து ஓன்று விசேஷணமாகக் கடவது –
அகார வாச்யனான நாராயணனுக்கு என்றும் புனருக்தி பரிஹரிக்கலாம்
பகவச் சப்தமும் நாமேதமாய் இருக்க வாஸூ தேவாதி சப்தத்தோடு சாமா நாதி காரணமாகா நின்றது இறே
சர்வ பீஜ அஷர வாச்யமான சர்வ காரணம் தேவதாந்தரமோ என்று சங்கியாதபடி நாராயணன் என்று
விசேஷிக்கையாலும் சபிரயோஜனம்
மந்த்ரங்களுக்கு பதக்ரம் அத்யயன நியதம் -அந்வயம் அர்த்த அனுகுணமாகக் கடவது –
இப்படி வாக்ய த்வயமானால் திருமந்தரம் முழுக்க ஸ்வரூப பரம் –

இந்த ஸ்வரூப பர யோஜனையைப் பற்ற -திரு மந்த்ரத்திலே பிறந்து -த்வயத்திலே வளர்ந்து
த்வயைக நிஷ்டனாவாய் -என்று பூர்வர்கள் அருளிச் செய்தார்கள் —
பிறக்கை யாவது ஸ்வரூப ஞானம் பிறக்கையாலே-
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின்பு மறந்திலேன் -என்கிற முன்புற்ற நிலை கழிகை-
அதாவது தன் இசைவாலும் அநந்ய சேஷனாய் -அநந்ய அதீனனாய் -அது அடியாக அநந்ய பிரயோஜனனாய் –
அநந்ய சரணனாகை- வளருகையாவது –
அதிகார விசேஷ அநுரூப கர்தவ்ய விசேஷ விஷய ஜ்ஞான விசேஷத்தாலே உபாய பரிக்ரஹம் பண்ணுகை –
த்வயைக நிஷ்டன் ஆகையாவது
த்வய அனுசந்தானத்தாலே உபாயாந்த்ரத்திலும் பிரயோஜனாந்தரத்திலும் துவக்கற இதில் சொன்ன உபாயத்திலும்
பிரயோஜனத்திலும் ப்ரதிஷ்டிதனாகை–
இப்படி திரு மந்த்ரமும் த்வயமும் கூட ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களைக் காட்டுகின்றன –

4-இவ்விரண்டு வாக்யமான யோஜனை தன்னிலே
திருமந்தரம் முழுக்க சபரிகர ஆத்ம சமர்ப்பண பரம் என்றும் அனுசந்திப்பார்கள் –
அப்போது பிரணவத்தில் மகாரம் பிரதமாந்தமேயாக அமையும் –
ஹவிஸ் சமர்ப்பண நியாயத்தாலே நிருபாதிகமான ஆத்ம ஹவிஸ்ஸூ நிருபாதிக தேவதையாய்-
அகார வாச்யனான நாராயணனுக்கே பரமாக சமர்ப்பிதம் என்றதாயிற்று –
இப்படி நிருபாதிகமான ஆத்மயாகத்தில் நம என்று தன்னோடு தன் துவக்கு அறுத்து
எனக்கு பரம் அல்லேன் என்றதாயிற்று —
இதம் இந்த்ராய ந மம-என்னுமா போலே இங்கும் பர சம்பந்த விதியிலும் ஸ்வ சம்பந்த நிஷேதத்திலும் ப்ரவ்ருத்தம் ஆகையாலே
வாக்ய த்வயமும் சபிரயோஜனம் –
இன் நமஸ் ஸூ சமர்ப்பணம் தன்னிலும் பர நிரபேஷ கர்த்ருத்வாதிகளை நிஷேதிக்கையிலே தத் பரம் ஆகவுமாம்
வேறு ஒருத்தருக்கும் பரம் அன்று -எனக்கும் பரம் அன்று -என்று வாக்ய த்வய அபிப்ராயம் ஆகவுமாம் –

திருமந்தரம் ஆத்ம நிவேதன பரம் என்னும் இடத்தை
நித்யத்திலே மூல மந்தரேண ஸ்வா த்மானம் தேவாய நிவேத்ய -என்று அருளிச் செய்தார் –
இப்படி -ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலும் -ஸ்ரீ மதா மூல மந்தரேண மாமைகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய –
பரிக்ருஹ்ணீஷ் வேதி யாசமான பிராணம்ய ஆத்மானம் பகவதே நிவேதயேத்–சூர்ணிகை -4–என்று இவ்வர்த்தம் தர்சிதம் –

5-வாக்கியம் தோறும் ஒரு பிரார்த்தனா பதத்தை அத்யஹரித்து திருமந்தரம் முழுக்க
த்வயத்தில் உத்தர கண்டம் போலே இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி
ரூப புருஷார்த்த பிரார்த்தனா பரமாயும் அனுசந்திப்பார்கள் –
அப்போதும் ஸ்வரூப அனுசந்தானம் இதிலே அந்தர்கதம் -ஸ்வரூப மாத்ர பரமான போதும்
புருஷார்த்த விசேஷம் ஸூசிதம்-
அதின் உபாயமும் பிரார்த்தனையும் தத்தத் பிரமாண வசத்தாலே வரும் –
இம் மந்திர உத்பாத்யங்களான சேஷத்வ ஜ்ஞானாதிகள் முன்பு பிராப்தங்கள் அல்லாமையாலே
இம் மந்த்ரம் முழுக்கப் பிராப்ய பரம் என்றது அந்ய பரம் -எங்கனே என்னில்
ப்ராப்ய பரம் என்றது அந்ய பரம் -எங்கனே என்னில் ப்ராப்ய பரம் என்றது ப்ராப்ய பிரதிபாதகம் என்றபடி யன்று
சப்தத்தால் உத்பாத்யமான ஜ்ஞானம் சப்தத்துக்கு பிரதிபாத்யம் அன்று இறே-

6- திருமந்தரம் -மூன்று வாக்யமான போது –
ஸ்வரூபமும் -புருஷார்த்தமும் -சொல்ல உபாயம் ஆர்த்தமாதல் –
ஸ்வரூபமும் உபாயமும் சொல்ல புருஷார்த்தம் ஆர்த்தமாதல் –
உபாயமும் புருஷார்த்தமும் சொல்ல ஸ்வரூபம் ஆர்த்தமாதல் –
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் அடைவே சப்தங்கள் ஆதல் ஆகக் கடவது -எங்கனே என்னில்
அகாரார்த்தாயைவ ஸ்வமஹமத மஹ்யம் ந நிவஹா-நராணாம் நித்யா நாமயநமிதி நாராயண பதம்
யமாஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலா ஸ்வ வஸ்தா ஸ்வா விஸ்ஸ்யுர்மம சஹஜ கைங்கர்ய விதய -என்கிறபடியே
பிரணவமும் நமஸ்ஸூம் ஸ்வரூபத்தை சோதிக்கிறன –
மூன்றாம் பதம் பிரணவத்தில் சொன்ன தாதர்த்யத்தை புரஸ் கரித்துக் கொண்டு அத்யாஹ்ருதமான
க்ரியா பதத்தோடு கூடிப் புருஷார்த்த பிரார்தனார்த்தம் –
அப்போது அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனை அர்த்த ஸ்வ பாவத்தாலே வரக் கடவது –

த்வயத்திலும் பாவாம் ஸ் து சஹ வைதேஹ்யா -இத்யாதிகளிலும் சொல்லுகிறபடியே
கைங்கர்ய பிரதி சம்பந்தியும் சபத்நீகன் ஆனபடியாலே
இங்கும் ச லஷ்மீ கணான நாராயணன் பொருட்டாவேன் என்றபடி —
நாராயணாய என்கிற இதுக்கு க்ரியாபேஷை உண்டாகையாலே
ஔசித்யத்தாலே பவேயம் என்று ஒரு பதம் அத்யாஹார்யம்–

வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்றும் –
அடியேனை ஆட்கொண்டு அருளே என்றும்
நித்ய கிங்கரதாம் ப்ரார்த்தயே -என்றும்
நித்ய கிங்கரோ பவானி -என்றும்
இப்பிரார்த்தனையை பிரயோகித்தார்களே இறே –

தாதர்த்யம் நித்ய சித்தம் ஆகையாலே ஆசாசிக்க வேண்டாமையாலும் -இஸ் சம்பந்த ஸ்வரூபம் பிரணவத்தில் சொல்லுகையாலும் –
இதின் பலமாய் சமுத்ரே கோஷ்ப தமஸ்தி என்னுமா போல புருஷார்த்தங்களை எல்லாம் விளாக்க்குலை கொண்டிருக்கிற
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவ பரிவாஹ ரூபமான கைங்கர்யம்
ஒழிவில் காலத்தில் படியே இங்கு அபேஷிக்கப் படுகிறது
அத்ர ஸ்வ லாப அபேஷாபி ஸ்வாமி லாபாவசாயி நீ -ஸ்வாமி பிரயோஜன அபேஷாப்யத ஸ்வா நந்த ஹேதுகா-
உன்னை உகப்பிக்கும் கைங்கர்யத்தை நான் பெற வேணும் என்பதாலும்
என்னை அடிமை கொண்டு நீ உகக்க வேணும் என்பதாலும் இருவருக்கும் பிரயோஜனம் சித்தம் –

த்ரை குண்யம் ஷட் குணாத்யம் ச த்விதான்னம் பரிகீர்த்திதம் -த்ரைகுண்ய மனனம் பத்தானாம் இதரேஷா மதேதரத் –
என்கிற ஷட் குணாத்யமான அன்னமாவது பகவத் குண அனுபவம் –
அது அடியாக வருகிற போக்யதம கைங்கர்ய விசேஷங்கள் ஆகவுமாம் –
போக மாத்ர சாம்ய லிங்காச்ச -என்கிறபடியே முக்த தசையிலே பர சாம்யம் போகத்திலும் ஜ்ஞானத்திலும் ஆகையால்
அப்போதும் ஸ்வரூப அனுபந்தியான சேஷத்வத்துக்கும் இதின் பலமான கைங்கர்யத்துக்கும் விரோதம் இல்லை
முமுஷூ தசையிலும் முக்தி தசையிலும் உண்டான அஹங்க்ரஹம் சரீராத்மா பாவத்தாலே என்று
பாஷ்யாதிகளிலே சமர்த்திதம் ஆகையாலே இவ் வஹங்காரம்
பரார்த்த காஷ்டை அடியாக வந்தது இறே-
இப்படி முக்த தசையில் வரும் கைங்கர்யம் ஸ்வத ப்ராப்தமாய் த்வந்த்வ ரஹிதமாய் நிரந்தரமாய் அநவச்சின்னமாய் இருக்கும்
முமுஷு தசையிலே ஸ்வயம் பிரயோஜனமாகப் பண்ணும் கைங்கர்யம் சக்ருத் விசேஷ ஔபாதிகமாய்
த்வந்த்வதிதி ஷாயுக்தமாய் நித்ராதிகளாலே அந்தரிதமாய் அவச்சின்ன ரசமாய் இருக்கும்
இங்கு இவன் கைங்கர்யம் ஒழியப் பண்ணும் வியாபாரங்களில் பகவத் ஆஜ்ஞ்ஞைக்கு பொருந்தாதவை எல்லாம்
ஏதேனும் ஒரு பிரதிகூல பலத்தைக் கொடுக்கும்
பகவத் அனுஜ்ஞாதங்களான காம்யங்களில் ஸ்வர்க்க பச்வாத் யர்த்தங்கள் ஆனவை எல்லாம்
அநேக தோஷ துஷ்டங்களான அனுகூல ஆபாசங்களைக் கொடுத்து அம்முகத்தாலே பாதகங்கள் ஆகும்

ஆகையாலே முமுஷுவுக்கு த்ரைவர்கான் த்யஜேத் தர்மான் என்கிறபடியே
பிரயோஜனாந்தர ஹேதுக்களை விட்டு பக்தி தத்வ ஜ்ஞானங்களையும்
பகவத் பாகவத சம்ருத்தியையும் பற்றச் செய்யும் காம்யங்களான பகவத் தர்மங்கள் சாதனமாக அனுஷ்டிக்கச் செய்தேயும்
பந்தகங்கள் அல்லாமையாலே உசிதமான கைங்கர்ய கோடியிலே சேர்ந்து கிடக்கும் –
பிரணவத்தில் சொன்ன பகவச் சேஷத்வம் நமஸ் ஸிலே ஔசித்ய ரூபமான அத்யந்த பாரதந்த்ர்ய பாரார்த்தங்கள் அடியாக
யதா பிரமாணம் ததீய பர்யந்தமாய் நிற்கையாலே
நாராயணாய என்கிற இடத்தில் அபேஷிக்கிற பகவத் கைங்கர்யமும் ததீய பர்யந்தம் –
மம மத்பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதிகா பவேத் -தஸ்மான் மத்பக்த பக்தாச்ச பூஜதீயா விசேஷத –
தஸ்மாத் விஷ்ணு பிரசாதாய வைஷ்ணவான் பரிதோஷயேத்-பிரசாத ஸூமுகோ விஷ்ணு தேநைவ
ஸ்யான்ன சம்சய -இத்யாதிகளிலும் இவ்வர்த்தம் சித்தம் –
சர்வம் பரவசம் துக்கம் இத்யாதிகள் தனக்கு பிராப்தம் அல்லாத ஷூத்ர விஷயத்தில்
கர்ம பலமாக வருகிற பாரவச்யம் துக்க காரணம் என்கின்றன –
பகவத் பாகவத விஷயத்தில் பாரதந்த்ர்யம் ஆத்ம அபிமான அனுகுண புருஷார்த்த வ்யவச்தையாலே நிரதிசய ப்ரீதி காரணம் –
இங்கு ததீயர் என்கிறது ததீயத்வ விவசாய ரசம் உடையவர்களை –

நாரங்களாலே விசிஷ்டனான நாராயணனை பற்றக் கைங்கர்யத்தை அபேஷிக்கும் போது
விசேஷணங்களான நாரங்களையும் பற்றக் கைங்கர்யம் அபேஷிக்கப் பட்டதாம்
என்னும் இடம் நியாய சித்தம் ஆகையாலே இங்கே ததீய கைங்கர்யம் சித்திக்கிறது என்று சிலர் சொல்லுவார்கள் –
இப்படி விசேஷணத்வமே பிரயோஜனமானால் நார சப்தார்த்தங்களாக இங்கு விவஷிதங்களான
ப்ரஹ்மாதி தேவதாந்த்ரங்களையும் பகவத் த்வேஷிகளையும் பச்வாதிகளையும் பற்றக் கைங்கர்ய அபேஷை பண்ணிற்றாம் –
நர பதியைப் பற்றக் கைங்கர்யத்தை அபேஷித்தான் என்றால் நரரைப் பற்றக் கைங்கர்யம் அபேஷிதம் ஆகாதாப் போலே
இங்கும் நியாய மாத்ரத்தால் நாரங்களைப் பற்றக் கைங்கர்ய அபேஷை சித்தியாது –
ஆன பின்பு பிரமாண முகத்தாலே ஸ்வாமியினுடைய அபிமதம் செய்ய அபேஷிக்கிறான் ஆகையாலே
அவனுக்கு பிரிய தமராய் இருக்கிற சேஷத்வ ஞானமுடைய அநந்ய பிரயோஜனரைப் பற்ற கைங்கர்யம் அபேஷிதமாம் இத்தனை –
அனுபாவ்யதையிலும் நார சப்தார்த்தமான சர்வமும் பிரவிஷ்டமாம் என்னும் இடம் பிரமாண பலத்தாலே வந்தது அத்தனை –
இப்படி திருமந்த்ரத்தில் வாக்ய த்ரயத்திலே
இரண்டு வாக்கியம் ஸ்வரூப பரமாய்
ஒரு வாக்யம் புருஷார்த்த பிரார்த்தனா பரமாய் யோஜித்தது –

7-இங்கன் அன்றிக்கே பிரணவம் ஸ்வரூப பரமாய் நமஸ் ஸிலே –
அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனையாய் -அநிஷ்டம் நிவர்த்தித்தால் வரும் புருஷார்த்தத்தை
நாராயணாய ச்யாம் என்றும் கணிசிக்கிறது என்று ஆகவுமாம்-
இந் நமஸ்ஸூக்கும் இப்படி த்வயத்தில் நமஸ்ஸூ க்குப் போலே விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனையிலே
தாத்பர்யமான யோஜனா விசேஷமும்
பிரணவோதித தச்சேஷ பாவோஹம் நிஜகர்மபி -அஹங்கார மமத்வாப்யாம் அபிபூதோப்யத பரம் –
தச் சேஷத்வ அனுசந்தான பூர்வ தச் சேஷ விருத்திக -பூயாசமித்யமும் பாவம் வ்ய நகதி நம இதயத்த -என்று
பட்டர் நித்யத்திலே பிரசித்தம் –
ஆகையாலே அஹம் ந மம ஸ்யாம் என்றாதல் ந மம கிஞ்சித் ஸ்யாத் என்றாதல் வாக்ய அந்வயமாய்-
இத்தாலே அஸ்ய ஜீவாத்மா நோ அநாத்ய வித்யா சம்சித புண்யபாப ரூப கர்ம ப்ரவாஹ ஹேது க
ப்ரஹ்மாதி ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மாக சதுர்வித தேக பிரவேச க்ருத தத்தத் ஆத்மாபிமான ஜனித
அவர்ஜநீய பவபய வித்வம்சநாய -வேதார்த்த சங்க்ரஹம் –என்றும்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் என்றும் சொல்லுகிற
அவித்யா கர்ம ததுபய வாசனா ருசி பிரகிருதி சம்பந்தாதி ரூபமான
சர்வ அநிஷ்டமும் அத்யந்த நிவ்ருத்தமாக வேணும் என்று அபேஷித்ததாயிற்று –

இப்படி அநிஷ்ட நிவ்ருத்தியைப் பிரார்த்தித்தால் இஷ்ட பிராப்தியை அபேஷிக்க வேணுமோ –
சம்பத்ய ஆவிர்பாவ ஸ்வேன சப்தாத் -ஸ்ரீ -ப்ரஹ்ம ஸூ தரம் –4-4-1–என்றும்
யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நாமல ப்ரஷாள நான்மணே -தோஷ ப்ரஹாணான் ந ஜ்ஞானம் ஆத்மன க்ரியதே ததா
யதோதபாந கரணாத் க்ரியதே ந ஜலாம்பரம் -சதேவ நீயதே வ்யக்திம் அசத சம்பவ குத-
ததா ஹேய குண த்வம்சாத் அவபோதாததயோ குணா -பிரகாச்யந்தே ந ஜன்யந்தே நித்யா எவாத்மானோ ஹி தே -என்றும்
சொல்லுகிறபடி இஷ்ட பிராப்தி தானோ வாராதோ என்னில்
ஸ்வத ஸ்வார்ஹம் யதா பாகம் புத்ர பிதுர பேஷதே-சாபராதஸ் ததா தாஸ கைங்கர்யம் பரமாத்மன -என்கிறபடியே
தன் அபராதத்தாலே ச்வத பிராப்தத்தை இழந்து கிடக்கிற இவன் -ஏன் கூறு நான் பெற வேணும் –
அதுக்காக என் அபராதத்தைப் பொறுத்து அருள வேணும் என்று அபேஷிக்கையில் விரோதம் இல்லை –
இத்தால் பிரதிபந்தக நிவ்ருத்தில் மாணிக்கத்தில் ஒளியும் –
இச்சாத ஏவ தவ விச்வபதார்த்த சத்தா -என்கிறபடியே நியதையான ஈஸ்வர இச்சையாலே பரம்புமா போலே
இங்கும் ஸ்வா பாவிகமான ஜ்ஞான விகாசாதிகள் சஹஜ காருண்ய ரூபையான ஈஸ்வர இச்சையாலே
வருகிறன வென்னும் இடம் தோற்றுகிறது

ஆனாலும் பாவாந்த்ராபாவத்தில் சர்வ அநிஷ்ட நிவ்ருத்தி தானே இஷ்ட பிராப்தியாய் இருக்க
தனித்துச் சொன்னால் புனருக்தி வாராதோ
அவித்யா நிவ்ருத்தி ரேவ ஹி மோஷ -என்று ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்திலரோ என்னில் –
ஏகமேவ ஸ்வரூபேண பரேண ச நிரூபிதம் -இஷ்ட பிராப்திர நிஷ்டச்ய நிவ்ருத்திச்சேதி கீர்த்யதே –
ஓன்று தன்னையே ஸ்வரூபத்தாலும் பிரதியோகியாலும் நிரூபித்து பிரயோஜன விசேஷ அபிசந்தியாலே
பிரியச் சொல்லக் கடவதாய் இருக்கும் –
சம்சார தசையில் ஒரு பிரதிகூல நிவ்ருத்தி பிரதிகூலாந்தரமாயும் அனுகூல பிரதிகூல உபய நிவ்ருத்தியாயும் இருக்கும் –
இங்கு சர்வ பிரதிகூல நிவ்ருத்தி யாகையாலே மேல் முழுக்க அனுகூலமாயாயே இருக்கும்
ஆகையால் பூர்வ அவஸ்தையினுடைய அநிஷ்ட தமத்வத்தையும்
கேவல அனுகூல ரூபையான உத்தர அவஸ்தையினுடைய இஷ்ட தமத்வத்தையும் தோற்றுவிக்கைக்காக
ஆதார அதிசயத்தாலே பிரிய அபேஷிக்கிறது
பகவன் நிக்ரஹாதி நிவ்ருத்தியும் ஜீவனுடைய ஜ்ஞான விகாசாதிகளும் வேறாகையாலே பிரிய அபேஷிக்கிற தாகவுமாம்-
ஜ்ஞான சங்கோ சாதிகளுக்கு ஹேதுவான பகவன் நிக்ரஹாதிகள் உடைய நிவ்ருத்தியும் –
நிக்ரஹ பலமான ஜ்ஞான சங்கோ சாதிகள் உடைய நிவ்ருத்தியான
ஜ்ஞான விகாச கைங்கர்யாதிகளும் வேறு பட்டவை யாகையாலே பிரிய அபெஷிக்க குறை இல்லை இறே-
சர்வ அநிஷ்ட நிவ்ருத்தி பிறந்தால் பாஷாண கல்பத்வாதி மதாந்திர சங்கை வாராமைக்கும் –
பகவத் பிராப்தியில் இந்த்ராதி பிராப்தியில் போலே துக்க சம்பந்தம் இல்லை என்று
தோற்றுவிக்கையில் தாத்பர்யத்தாலும் பிரித்துச் சொல்லுகிறதாகவுமாம்
இப்படி ஸ்வரூபமும் புருஷார்த்த ப்ரார்தனமும் சப்தமானால் இப் புருஷார்தத்ததுக்கு சாதனமாக சாஸ்திர விகசிதமான சாத்ய உபாயமும்
பரந்யாச பர்யந்தமாக அகிஞ்சனனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியைச் சொல்லுகிற நமஸ் ஸிலே ஆர்த்தமாக அனுசந்தேயம் –

8–இப்புருஷார்த்த பிரார்த்தனை இச்சா மாத்ரமாய் இருக்கை அன்றிக்கே
கோப்த்ருத்வ வர்ண ரூபை யாகையாலே சேஷம் உப லஷிதம் ஆகவுமாம்-
அப்போது திருமந்தரம் ஸ்வரூப உபாய பிரதானமாய் இருக்கும் –
அயன சப்தத்தில் கரண வ்யுத்பத்தியாலே ஈஸ்வரனுடைய உபாயத்வமும் சித்திக்கும் –

9-கேசித்து சரம ஸ்லோகே த்வயே சோக்த க்ரமாதிஹ பரந்யாச பரம் தாரம் சேஷம் பல பரம் விது-

10-இத் திருமந்த்ரத்தில் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் மூன்றும் அடைவே சப்தமாகவுமாம்-
அப்போது பிரணவம் ஸ்வரூப பரம் –நமஸ்ஸூ உபாய பரம் -சேஷம் புருஷார்த்த பிரார்த்தனா பரம் –
இம் மூன்றின் விரிவு எல்லாம் அத்யாத்ம சாஸ்த்ரங்களைக் கொண்டு தெளிந்து இங்கே அனுசந்தேயம் –
இந்த யோஜனைக்கு வேதாந்த சாஸ்த்ரத்தில் தத்வ உபாய புருஷார்த்தங்களை நிரூபித்த கிரமத்தோடு சேர்த்தி உண்டு –
எங்கனே என்னில் –
முதல் இரண்டு அத்யாயத்தாலே பராவர தத்வங்களைத் தெளிவித்து –
த்ருதீயத்தாலே பராவர தத்வங்களோடு கூடின உபாயம் சொல்லி –
சதுர்த்தத்தாலே பலம் சொல்லி இறே சாரீரக சாஸ்திரம் தலைக் கட்டிற்று –

அங்கே முதல் இரண்டு அத்யாயத்திலே சொன்ன பராவர தத்வ ஸ்வரூபமும் –
நான்காம் அத்யாயத்தில் சொன்ன பலமும் ஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டனுக்கும் துல்யம் –
மூன்றாம் அத்யாயத்தில் வைராக்ய பாதத்திலும் உபய லிங்க பாதத்திலும்
சொன்ன சம்சார தோஷமும் சரண்யனுடைய ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதா நத்வமும் முமுஷுவான
இவனுக்கு அவசியம் ஜ்ஞாதவ்யம்
மூன்றாம் பாதத்தில் உபாயமாகச் சொன்ன உபாசன பேதங்களை அவற்றுக்கு அதிகாரிகள் ஆனவர்கள்
அனுஷ்டிக்கக் கடவர்கள் –

அகிஞ்சனான அதிகாரி தனக்கு அவற்றின் அருமையைக் கண்டு –
நாநா சப்தாதி பேதாத் –3-3-56-என்றும் –
விகல்போ அவிசிஷ்ட பலத்வாத் -3-3-57–என்கிற அதிகரணங்களில்
சொன்ன கட்டளையிலே வித்யாந்தர வ்யாவ்ருத்தமாய் அவை கொடுக்கும் மோஷத்தைக் கொடுக்கும் இடத்தில்
நிரபேஷமுமான ந்யாசத்தையே பற்றக் கடவன்

நான்காம் பாதத்தில் சொன்ன வர்ணாஸ்ரம தர்மங்களை உபாசன நிஷ்டன் –
சஹகாரித்வேன ச -3-4-33-என்கிறபடியே வித்யா பரிகரமாக அனுஷ்டிக்கும் –
ஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டன் -விஹிதத்வாத் ஆஸ்ரம கர்ம அபி -3-4-32–என்கிறபடியே
பகவத் ஆஜ்ஞ்ஞா சித்தம் என்று ஸ்வயம் பிரயோஜனமாக அனுஷ்டிக்கும் –
இப்படியானால் சாரீரகத்தில் சொன்ன ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் எல்லாம் ஸ்ரீ மதஷ்டாஷர அந்தஸ்தங்கள் –
இதில் அர்த்த பஞ்சகாதிகள் கிடக்கிற வகுப்பு எல்லாம் கீழே சொன்னோம் –

இப்படி திருமந்தரம் ஏக வாக்யமான போது
1-உபாய பரம் என்றும் –
2-வ்ருத்தி பரம் என்றும் –
வாக்ய த்வயமான போது
3-ஸ்வரூப பரம் என்றும் –
4-அந்வய வ்யதிரேக முகேன சமர்ப்பண பரம் என்றும்
5- புருஷார்த்த பிரார்த்தனா பரம் என்றும்
வாக்ய த்ரயமான போது –
6- முதல் இரண்டு பதமும் ஸ்வரூபமாய் மேல் பதம் புருஷார்த்த பிரார்த்தனா பரம் என்றும் –
7-பிரணவம் ஸ்வரூப பரமாய் மேல் இரண்டு பதமும் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி பிரார்த்தனா பரம் என்றும் –
இக்கட்டளையிலே
8-பிரதம பதம் ஸ்வரூப பரமாய் மேல் இரண்டு பதமும் உபாய பரம் என்றும் –
9-பிரதம பதம் சமர்ப்பண பரமாய் மேல் இரண்டு பதமும் பல பிரார்த்தனா பரம் என்றும் –
10-பத த்ரயமும் அடைவே தத்வ உபாய புருஷார்த்த பிரார்த்தனா பரம் என்றும்
அனந்தாரத்த கர்ப்பமான இத் திருமந்த்ரத்தில் வாக்யார்த்தத்தைப் பத்துப் படியாக யதா சம்ப்ரதாயம் அனுசந்திப்பார்கள்
இப்படி சிலவற்றை பிரதானமாக அனுசந்தித்தாலும் மற்று உள்ளவையும் ஆர்த்தமாகக் கடவது –
ததேவம் பத வாக்யார்த்தை தத்வவித் குரு தர்சிதை -தத்தத் குத்ருஷ்டி கதிதம் நிரச்தம் யோஜநாந்தரம் –

இத் திருமந்த்ரத்தில் பாஹ்ய குத்ருஷ்டி மதங்களால் கலக்க ஒண்ணாத தெளிவுடையவனை
பிரஜ்ஞ்ஞா பிரசாத மாருஹ்ய ஹ்யசோச்ய சோசதோ ஜநான்-பூமிஸ் தானிவ சைலச்தோ
ஹ்யஜ்ஞான் ப்ராஜ்ஞ பரபச்யதி-என்கிறது –
ஜ்ஞாநேன ஹீன பசுபி சமான -என்கிற இடத்தில் ஞானம் என்கிறதும் இத் தெளிவை –
இப்படித் தெளிந்தவன் –
ந ப்ரஹ்ருஷ்யதி சம்மானே நாவமானே அனுதப்யதே -கங்காஹ் நத இவா ஷோப்யோ ய ச பண்டித உச்யதே -என்கிறபடியே
மாநாவமாநாதிகளில் கலங்கான் –
இத் திருமந்த்ரத்தில் யதார்த்த ஞானமும் நிஷ்டையும் உடையவனை ஆதரிக்கும் தேசத்திலும்
யத்ர அஷ்டாஷர சம்சித்தோ மஹாபாகோ மஹீயதே-ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிஷ தஸ்கரா – என்கிறபடியே
ஒரு தோஷமும் வாராது –
இஸ் ஸ்லோகத்தால் ராகாதி ரோகான் சதத அனுஷக்தான் அசேஷகாய ப்ரஸ்ருதான சேஷான்
ஔத் ஸூக்ய மோஹா ரதிதான் ஜகான யோ அபூர்வ வைத்தாய நமோஸ்து தஸ்மை -என்று
ஆயுர்வேத வித்துக்கள் பிரதான வியாதிகளாக எடுத்த ராகாதிகளும் சத்துக்களுக்கு ஸ்ரீ என்று ஓதப்பட்ட
ஜ்ஞான சம்பத்தின் உடைய சங்கோசமும்
பாஹ்யதஸ்கரர்க்கு நிலம் அல்லாத ஆத்மா அபராதிகளை பண்ணும் மாஹா தச்கரரான
அஹங்காராதிகளும் நடையாடா வென்றதாயிற்று –

1-இத்திருமந்த்ரத்தில் அறுதியிட்ட பொருளே
விஷ்ணு வாஸூ தேவ சப்த விசிஷ்டங்களான வ்யாபக மந்த்ராந்தங்களுக்கும் பொருள் –
வியாப்தி காந்தி பிரவேசேச்சா தத்தத் தாது நிபந்தனா -பரத்வே அப்யதிகா விஷ்ணோ தேவஸ்ய பரமாத்மன -என்று
அஹிர் புத்ந்யாதிகள் நிர்வசனம் பண்ணின படியே –
விஷல் வ்யாப்தௌ வஸ காந்தௌ விசா பிரவேசனே இஷூ இச்சாயாம் -என்கிற தாதுக்களிலே
நிஷ்பன்னமான விஷ்ணு சப்தத்தில் உள்ள பொருள்களும்
வாஸூ தேவ சப்தத்திலும் -வசதி வாசயதி -என்றும் -தீவ்யதி என்றும் தோற்றின சர்வ வியாபகத்வம் -சர்வ ஆதாரத்வம் –
தத்கத தோஷ ரஹித்வம்-க்ரீடா விஜிகீஷாதிமத்த்வம் -ஆகாரங்கள் எல்லாம் நாராயண சப்தத்தில் ஏக தேசம் –

2-ருசோ யஜூம்ஷி சாமானி ததைவா தர்வணா நிச -சர்வம் அஷ்டாஷராந்த ஸ்தம் யச்சான் யதபி வாங்மயம் -என்கையாலே
இத் திரு அஷ்டாஷரமே முமுஷுக்களுக்கு தத்வ ஹித அனுபந்திகளான சர்வ அபேஷிதங்களுக்கும் பிரகாசகம்

ருசோ யஜூம்ஷி சாமானி யோ அதீதே அசக்ருதஞஜசா-சக்ருத அஷ்டாஷரம் ஜப்த்வா ச தஸ்ய பலம் அஸ்நுதே -என்கையாலே
இதனுடைய சக்ருத் உச்சாரணம் சர்வ வேத ஜப துல்யம் –

3-யஸ்ய யாவாம்ச்ச விஸ்வாச தஸ்ய சித்தச்ச தாவதீ -ஏதாவா நிதி நை தஸ்ய பிரபாவ பரிமீயதே –என்கையாலே
தந்தம் விஸ்வாச தாரதர்ம்யத்துக்கு ஈடாக சித்தி தாரதம்யம் உண்டானாலும்
மகா விசுவாசம் உடையார் பக்கல் இத்திருமந்த்ரம் அனவச்சின்ன ப்ரபாவமாய் இருக்கும் –
இஸ் ஸ்லோகத்தில் இன்னாரால் பரிச்சேதிக்க ஒண்ணாது என்று விசேஷியாமையாலே-
நர நாரணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன் -என்கிறபடியே
இத் திருமந்த்ரத்துக்கு பிரவர்த்தகனுமாய் பிரதிபாத்யனுமாய் இருக்கிற ஸ்வத சர்வஜ்ஞனான நாராயணன் தானும்
இதின் பிரபாவத்தை பரிச்சேத யோக்கியம் அன்று என்று அறியும் அத்தனை –
இம் மந்த்ரத்துக்கு த்ரஷ்டாவுமாய் தேவதையும் ஆனவன் பக்கலிலே இத்தை சாரார்த்தமாகப் பெற்ற திருமங்கை ஆழ்வார்
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் -என்று அருளிச் செய்தார் –

எட்டு மா மூர்த்தி என் கண்ணன் எண்டிக்கு எட்டிறை எண் பிரகிருதி
எட்டு மாவரைகள் ஈன்ற எண் குணத்தோன் எட்டுஎனும் எண் குண மதியோர்க்கு
எட்டு மா மலர் எண் சித்தி எண் பத்தி எட்டு யோகாங்கம் எண் செல்வம்
எட்டு மா குணம் எட்டு எட்டு எணும் கலை எட்டிரத மேலனவும் எட்டினவே –

சர்வ காரண பூதனுமாய் அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதானுமான சர்வேஸ்வரனுக்கு பிரதிபாதகமான திரு அஷ்டாஷரத்தை
அனுசந்திக்கும் மகா மதிகளுக்கு ஆத்மா குணாதிகளிலும் அஷ்ட ஐஸ்வர் யாதிகளிலும்
யதா மநோரதம் துர்லபமாய் இருப்பது ஒன்றும் இல்லை என்கிறது
எட்டு மா மூர்த்தி-
ஆகாசாதி பூதங்கள் ஐந்தும் -சந்திர ஆதித்யர்களும் -யஜமானனும் தனக்கு மூர்த்திகளாக
வரம் பெற்று அஷ்ட மூர்த்தி என்று பேர் பெற்ற ருத்ரன் –
என் கண்ணன் –
சதுர்முகன் ஆகையாலே எட்டுக் கண்கள் உடைய ப்ரஹ்மா
எண்டிக்கு எட்டிறை எண் பிரகிருதி
எட்டு திக்குகள் -இந்த்ராதிகளான எட்டு திக் பாலகர்கள் -அவ்யக்த மஹத் அஹங்கா ராதிகளான-எட்டுத் தத்வங்கள்
எட்டு மாவரைகள் ஈன்ற எண் குணத்தோன்
எட்டு குல பர்வதங்கள் -இவை எல்லாவற்றையும் சிருஷ்டித்த குண அஷ்டக விசிஷ்டனான பரமாத்மா
இவனுக்கு எட்டு குணங்கள் என்கிறது –
கர்மவஸ்யத்வ ஜரா மரண சோக ஷூத் பிபாசைகள் அன்றிக்கே ஒழிகையும்-
நித்யங்களான போக்யங்கள் உடையனாகையும் -நினைத்தது முடிக்க வல்லனாகையும் –
எட்டு எனும் எண் குண மதியோர்க்கு
இப்படிப்பட்ட சர்வேஸ்வரனுக்கு பிரதான மந்த்ரமான திரு அஷ்டாஷரத்தை சாரார்தமாக கேட்டு அனுசந்திக்கும்
அஷ்டாங்க புத்தி உடைய அனந்யரான பிரதிபுத்தர்க்கு
புத்திக்கு எட்டு அங்கங்கள் ஆவன –
க்ரஹணம் தாரணம் சைவ ஸ்மரணம் பிரதிபாதனம் ஊஹ அபோஹ அர்த்த விஜ்ஞ்ஞானம்
தத்த்வஜ்ஞானோ ச தீ குணா -என்கிறவை –
எட்டு மா மலர்
அஹிம்சா ப்ரதமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ சர்வ பூத தயா புஷ்பம் ஷமா புஷ்பம் வேசிஷத
ஜ்ஞானம் புஷ்பம் தப புஷ்பம் த்யானம் புஷ்பம் ததைவ ச சத்யம் அஷ்டவிதம் புஷ்பம்
விஷ்ணோ ப்ரதீதிகரம் பவேத் என்கிற புஷ்பங்கள் –
எண் சித்தி
ஊஹஸ் தர்கோ அத்யயனம் துக்க விதாதாஸ் த்ரய ஸூஹ்ருத் ப்ராப்தி -தானம் ச சித்தயோ அஷ்டௌ-என்கிற எட்டு சித்திகள்
எண் பத்தி
மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாம் சாநு மோதனம்-மத்கதா ஸ்ரவணே பக்தி ஸ்வர நேத்ராங்க விக்ரியா
ஸ்வயம் ஆராதனே யத்னோ மமார்த்தே டம்ப வர்ஜனம் மமா நுஸ்மரணம் நித்யம் யச்சமாம் நோப ஜீவதி –
பக்திர் அஷ்டவிதா ஹி ஏஷா -என்கிற எட்டு விதங்களான பக்திகள் –
எட்டு யோகாங்கம் எண் செல்வம்
யோகாங்கமாகச் சொல்லப்பட்ட யம நியமாதிகள் –
அணிமா மஹிமா ச ததா லதிமா கரிமா வசித்வம் ஐஸ்வர்யம் ப்ராப்தி ப்ராகம்யம் சேத்ய அஷ்ட ஐஸ்வர் யாணி யோக
யுக்தஸ்ய -என்கிற எட்டு விபூதிகள் –
எட்டு மா குணம்
முக்தி தசையில் ஆவிர்பவிக்கும் குண அஷ்டகம் -அஷ்டௌ குணா புருஷம் தீபயந்தி –இத்யாதிகளில் சொன்னவை யாகும் –
எட்டு எட்டு எணும் கலை
சதுஷ்ஷடி கலைகள்
எட்டிரத மேலனவும்
ஸ்ருங்கார வீர கருணா அத்புத ஹாஸ்ய பயானக பீபதச ரௌத்ரௌ ச ரசா என்கிற ரசங்கள் எட்டுக்கும் மேலான சாந்தி ரசம் –
எட்டினவே
இவற்றில் இவனுக்கு இச்சை உள்ள போது எட்டாதவை ஒன்றும் இல்லை –

ஆத்மா குணாதிகள் நிரம்பாது ஒழிகிறது அனுசந்தானத்திலே ஊற்றம் போதாமையாலே –
அஷ்ட ஐஸ்வர் யாதிகள் வாராது ஒழிகிறது உபேஷையாலே
கடுக சம்சாரம் நிவர்த்தியாது ஒழிகிறது இசைவில் குறைவாலே
ஆகையால் இறே நமோ நாராயணா யேதி மந்திர சர்வார்த்த சாதக -என்கிறது –

அவித்யா பூத நோன்முக்தை அனவஜ்ஞாத சத்பதை அசதாச்வாத சவ்ரீடை ஆதிஷ்டமிதி தர்சிதம் –

உயர்ந்தனன் காவலன் அல்லார்க்கு உரிமை துறந்துயிராய்
மயர்ந்தமை தீர்ந்து மற்றோர் வழியின்றி அடைக்கலமாய்
பயந்தவன் நாரணன் பாதங்கள் சேர்ந்து பழவடியார்
நயந்த குற்றேவல் எல்லாம் நாடு நன் மனு வோதினமே –

இத்தம் சங்கடித பதை த்ரிபிரசாவேக தவி பஞ்சாஷரை அர்த்தைஸ்
தத்தவ ஹித பிரயோஜனமயை அத்யாத்ம சாரைஸ் த்ரிபி
ஆத்யஸ் த்ரயஷர வேத ஸூ தி ரஜஹத் ஸ்தூலாதி வ்ருத்தி த்ரய
த்ரை குண்ய பிரசமம் ப்ரயச்சதி சதாம் த்ரயயந்த சாரோ மநு –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -27-மூல மந்த்ராதிகாரம் -நாராயணாய விவரணங்கள் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

January 21, 2016

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

——————————————————————————–

இங்கு சப்தமாகவாதல் -அர்த்தமாகவாதல் நமஸ்ஸிலே தோற்றின சரணாகதி ஆகிற சாத்ய உபாயத்தாலே
பிரசாத நீயனாய் மேலில் சதுர்த்தியில் விவஷிதமான கைங்கர்யத்துக்கு பிரதி சம்பந்தியுமாய்
சர்வ ரஷகனாகவும் சர்வ சேஷியாகவும் பிரதம அஷரத்தில் பிரதிபன்னனான நிரபேஷ சரண்யனுடைய படியை வெளியிடுகிறது –

யோக ரூடமான நாராயண சப்தம் சுருங்கச் சொன்ன அர்த்தம் தன்னையே
அஜ்ஞ்ஞான சம்சய விபர்யயங்கள் கழியும்படி முகாந்த்ரத்தாலே தெளிவிக்கை விவரணம்
இச் சங்க்ரஹ விவரண பாவம் பிரதம அஷரம் முதலாக யதா சம்பவம் கண்டு கொள்வது –
இந் நாராயண சப்தம் சேஷ சேஷி தத்வங்கள் இரண்டையும் வெளியாகக் காட்டுகிற உபகார அதிசயத்தாலே
விஷ்ணு காயத்ரியிலும் திரு நாராயணீயத்தில் நாம நிர்வசனம் பண்ணுகிற இடத்திலும் –
மற்றும் உள்ள வியாபக நாமங்களும் முன்னே படிக்கப் பட்டது —

சர்வ பர வித்யா உபாச்யை விசேஷ நிர்ணயம் பண்ணுகிற நாராயண அனுவாகம் பரதத்வமாக சங்கிதரான
ப்ரஹ்ம சிவாதிகள் எல்லாம் சாமா நாதி கரண்யத்தாலே அங்குச் சொன்ன விச்வம் போலே
விபூதி யானார்கள் என்றும் இவர்களும் நார சப்தார்த்தம் என்றும் தெளிவிக்கைக்காக
இந் நாராயண சப்தத்தை பலகாலும் ஆதாரம் தோற்ற ஆவர்த்தித்தது -இச் சப்தத்தின் பிரபாவம் –
சங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம் -என்றும் –
நாராயணோதி யஸ் யாஸ்யே-என்றும் –
நாராயணோதி சப் தோஸ்தி -என்றும் –
குலம் தரும் செல்வம் தந்திடும் -என்றும் –
நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -இத்யாதிகளால் பிரசித்தம் –

நாராதீய கல்பத்திலும் -ரோகாபத்பய துக்கேப்யோ முச்யந்தே நாத்ர சம்சய -அபி நாராயணேத்
சப்த மாத்ர ப்ரலாபின -என்றும் சொல்லப்பட்டது
இது தன்னையே ஸ்வ ரவ்யஞ்ஜன பேதத்தாலே எட்டுத் திரு அஷரமாக பாவிக்க
திரு மந்த்ரத்தோடு ஒக்கும் என்று ப்ராணாந்தர ரோக்தம் –
நாராயண–நா–ந் +ஆ /ரா -ர் +ஆ / ய -ய் +அ / ணா-ண் +ஆ / அஷ்டாஷரம் -என்றபடி
நாராணாம் அயனம் -தத் புருஷ சமாசம் -வேற்றுமைப் புணர்ச்சி -நாரங்களுக்கு இருப்பிடமாக உள்ளவன் –
நாரா அயனம் -பஹூ வ்ரீஹி சமாசம் -அன்மொழித் தொகை -நாரங்களை இருப்பிடமாக உடையவன் –

ஈஸ்வரனோடு ப்ருதக் சித்தங்கள் அல்லாத நாரங்களுக்கு -நாரா அயனம் யஸ்ய -என்றும்-நாரணாம் அயனம் என்றும்
நிஷ்கர்ஷ விவஷையாலே வையதிகரண்யம் உண்டாயிற்று –
இச் சப்தத்துக்கு நம்மாழ்வார் –
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்றும்
நாரணன் மூ வேழ் உலகுக்கும் நாதன் -என்றும் பூர்வாபரங்களிலே சமாச த்வயத்தில் அர்த்தத்தை பிரதர்சிப்பித்தார் –

காரணத்வம் அபாத்யத்வம் உபாயத்வம் உபேயதா-இதி சரீரகஸ் தாப்யம் இஹ சாபி வ்யவஸ்திதம் –
இது எல்லாம் ஜ்ஞானானந்த அமலத்வாதி -என்று தொடங்கி பட்டர் நித்யத்திலே பிரதிபாதிதம் –
இவ்விடத்தில் -ஸ்ருஷ்ட்வா நாரம் தோய மந்த ஸ்திதோஹம் யேன ஸ்யான் மே நாம நாரயணோதி ஸ்ம்ருத –
இத்யாதிகளிலே அப்புக்களை எடுத்தது -தத்வாந்தரங்களுக்கு உப லஷணம் என்னும் இடம்
நராஜ்ஜாதாநி தத்த்வாநி நாராணீதி ததோ விது-தான்யேவ சாயனம் தச்யே தேனே நாராயண ஸ்ம்ருத -இத்யாதிகளாலே சித்தம்
இந்த பஹூ வ்ரீஹி சமாசமான நிர்வசனத்தில் –
நராஜ்ஜாதாநி தத்த்வாநி-என்று நார சப்தம் சொல்லுகையாலே மகா உபநிஷத் பிரப்ருதிகளில் சொல்லுகிறபடியே
ப்ரஹ்ம ஈச நாதி சர்வத்தையும் பற்ற நாராயணன் உடைய சர்வவித காரணத்வமும் -அயன சப்தார்த்தில் –
ஈயத இத்யயனம்-என்கிற கர்ம வ்யுத்பத்தியாலே இவற்றை வ்யாப்யமாக உடையவனுடைய சர்வ வ்யாபகத்வமும் –
அதுக்கு உபயுக்தமான நிரதிசய சூஷ்மத்வமும் சொல்லிற்று ஆயிற்று –

இப் பொருள்கள் ஈயதே அஸ்மின் -என்கிற அதிகரண வியுத்பத்தியிலும் வரும்
நாராணா மய நத்வாச்ச நாராயண இதி ஸ்ம்ருத -என்றும் –
நாரஸ் த்விதி சர்வ பும்ஸாம் சமூஹ பரிகீர்த்தித -கதிரா லம்பனம் தஸ்ய தே நாராயண ஸ்ம்ருத -என்றும்
நாரோ நராணாம் சங்க்யாத தஸ்யாஹ மயனம் கதி -தே நாஸ்மி முநிபிர் நித்யம் நாராயண இதீரித-என்றும்
நார சப்தேன ஜீவா நாம் சமூஹ ப்ரோச்யதே புதை -தேஷா மயன பூதத்வாத் நாராயண இஹோச்யதே
தாஸ்மான் நாராயணம் பந்தும் மாதரம் பிதரம் குரும்-நிவாசம் சரணம் சாஹூ வேத வேதாந்த பாரகா —

இங்கு ரீங் ஷயே -என்கிற தாதுவிலே
ர -என்று ஸ்வரூபத்தாலே ஷயிஷ்ணுவான அசித் பதார்த்தத்தைச் சொல்லி -அதில் வேறுபட்டு ஸ்வரூப விகார ரஹிதமான
சேதன வர்க்கத்தை நக நைகாதி சப்தம் போலே ந சமாசமான நர சப்தத்தாலே சொல்லி –
அதின் சமூஹங்களை நார சப்தத்தாலே சொல்லி –
இந்த சமூஹங்களுக்கு அயனம் என்கிற இத்தால்
ஸ்வா தீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதனானவன்
நர சப்த வாச்யரான த்ரிவித ஆத்மாக்கள் உடைய சமூஹங்களுக்கும் அபேஷித ஹேதுவுமாய்
ஸ்வயம் போக்யதையால் உபேயமுமாய்
விஷ்ண்வாதாரம் யதா சைதத் த்ரைலோக்யம் சமவஸ்திதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-2-
யோ லோகத்ரய மாவிச்ய விபர்த்யவ்யய ஈஸ்வர -ஸ்ரீ கீதை -15-17–இத்யாதிகளில் படியே
ஆதாரமுமாய் இருக்கிறபடி சொல்லப்பட்டது -எங்கனே என்னில்

இண் கதௌ -என்கிற தாதுவிலே ஈயதே அ நேன -என்று அயன சப்தத்தில்
கரண வியுத்பத்தியாலே ஈஸ்வரன் உபாயமாயும் –
ஈயதே அ சௌ-என்கிற அதிகரண வியுத்பத்தியாலே ஆதாரமாயும் தோற்றுகிறான்-
அயபய கதௌ -என்கிற அயதி தாதுவிலும் இவ் வயன பதம் நிஷ்பன்னமாம் –
இவ் உபாய உபேயத்வாதிகளுக்கு உபயுக்தமான சௌலப்யமும் பரத்வமும் இங்கே சித்தம் –

அயனம் என்று வாஸ ஸ்தானமாய் அப்போது பஹூ வ்ரீஹி சமாசத்தாலே அந்தர் வ்யாப்தியும் –
தத் புருஷனாலே பஹிர் வ்யாப்தியும் தோற்றுகிறது என்றும் அனுசந்திப்பார்கள்
இவை இரண்டும் ஸ்ருதி சித்தம் –
அந்தர் வ்யாப்தியாவது –
இவையுள்ள இடத்தில் தன்னை இல்லை என்ன ஒண்ணாத படி கலந்து நிற்கை –
பஹிர் வியாப்தி யாவது
இவை இல்லாத இடத்திலும் எங்கும் தான் உளனாகை-விபுக்களான காலாதிகளுக்கு பஹிர் வியாப்தி சொல்ல வேண்டா –
நாராயண மணீ யாம்சம் அசேஷா ணா மணீ யஸாம்-என்றது
அந்தர் வியாப்திக்கு அநுகுணமாய் நிற்கிற பிரதிகாதா நர்ஹத்வம் அல்லது அனு பரிமாணத்வம் அன்று –
இது சொல்லும் இடம் உபாயத் வச்சேதத்தாலே என்று ஸூத்ர பாஷ்யாதி சித்தம் –
வ்யாப்தனுக்கு பிரதிவஸ்து பூரணத்வம் ஆவது ஓரோர் உபாயத்வ சின்ன பிரதேசமே சர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல
சக்தி உடைத்தாய் இருக்கை-அல்லது வஸ்து தோறும் ஸ்வரூப சமாப்தி யன்று –
இது கொள்ளில் பஹிர் வியாப்திக்கு விருத்தமாம் –
இத்தை அகடிதகடநா சக்தியாலே நிர்வஹிக்கில் விருத்த சமுச்சயம் கொள்ளும் பரம பதங்களில் படியாம் –

இங்கு பிரதம அஷரத்தாலும்-
நார சப்தத்தில் பிரக்ருதியான நர சப்தத்தாலும் அயன சப்தத்தாலும் சர்வேஸ்வரனைச் சொல்லுகிற போது
ரஷகத்வ –காரணத்வ-நித்யத்வ -நேத்ருத்வ -ஆதாரத்வ -அந்தர்யாமித்வாதிகளான-ஆகார பேதங்களாலே மூன்றும் ஸ பிரயோஜனங்கள்-
பிரணவத்தில் த்ருதீய அஷரத்தாலே சேதனனை பிரகாசிப்பிக்கச் செய்தே இங்கு நார சப்தத்தாலே மீண்டும் சொல்வான் என் என்னில் –
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இலை -என்றும் –
ராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ஸ -என்றும்
சொல்லுகிறபடியே ஒன்றை இட்டு ஒன்றை நிரூபியா நின்றால்
அர்ஜூந ரதம் போலே பிரணவம் சேஷ பிரதானம் ஆகையாலும் புநருக்தி இல்லை –

பிரணவம் தன்னிலும் சாப்த பிரதான்யம் ஜீவனுக்கு ஆனாலும் ரஷகனான சேஷிக்கே அர்த்த பிரதான்யம் –
பிரணவத்தில் ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் ஜ்ஞானாகாரனாய் பிரத்யக்காய் அணுவாய்த் தோற்றின
ஜீவனுக்கு நார சப்தம் ஷயம் இல்லாதவன் என்று நித்யத்வம் சொல்லுகையாலும் –
நரருடைய சமூஹத்தைச் சொல்லுகையாலே ஜீவர்களுடைய அந்யோந்ய பேதத்தை வியக்தம் ஆக்குகையாலும்
நரஜ் ஜாதங்கள் நாரங்கள் என்ற போது விசிஷ்ட வேஷத்தாலே ப்ரஹ்ம கார்யத்வம் தோற்றுகையாலும்
பத த்வயத்துக்கும் பிரயோஜன பேதம் உண்டு –

நார சப்த சமா நாதி கரணமான அயன சப்தத்தாலே இவற்றுக்கு வியாப்தத் வாதிகளும் கண்டு கொள்வது –
நித்யரான பல சேதனருக்கு ஒரு நித்யரான சேதனன் அபிமத ஹேது -என்கிற ஸ்ருதி யர்த்தமும் இங்கே கண்டு கொள்வது –
நித்யனான பிரமாண சித்தமான ஜீவனுக்கு
ப்ரஹ்ம கார்யத்வம் விசேஷண த்வாரகம் -இப்படி நாராயணாத்மகாதி கல்பங்க ளிலே சொன்ன
வ்யுத்பத்யந்தரங்களும் எல்லாம் இவற்றோடு துல்யம் –
சேதன அசேதன சர்வம் விஷ்ணோர் யத்வய திரிச்யதே -நாரம் ததயனம் சேதம் நாராயணஸ்து ஸ -என்கையாலே
சர்வ பும்ஸாம் சமூஹ -என்றதுவும் உப லஷணம் ஆகையாலே –
ஷயிஷ்ணுக்கள் அல்லாமையாலே ஸ்வரூபத்திலே யாதல் பிரவாஹத்தாலே யாதல்
நித்யங்களாய் நர சப்த வாச்யங்களான சர்வ தத்த்வங்களுடைய சமூஹங்களும் நாரங்கள் –

சர்வ வியாபகத்வாதி விசிஷ்டனாய் இருக்கச் செய்தே
தத்கத தோஷங்களையும் தத் ப்ரயுக்த தோஷங்களையும் கழிக்கிற ஹயரஹிதன் என்கிற வியுத்பதியாதலும்
நூ நயே-இத்யாதிகளாலும்
ஜஹ்னுர் நாராயணோ நர -என்று நாமதேயமாகச் சொல்லுகையாலும் –
ஆபோ நாராயணோத் பூதா -தா ஏவாஸ் யாயநம் புன -என்கிற
வியாச ஸ்ம்ருதி வாக்யத்தாலே ஆ பௌ வை நர ஸூ நவ -இத்யாதிகளில்
நர சப்தமும் நாராயணனையே சொல்லுகிறது என்னும் இடம் ஸூ வ்யக்தம் ஆகையாலும்
நரன் என்று நித்யனாய் சர்வ நேதாவான சர்வேஸ்வரனுக்கு திரு நாமம் ஆகையாலே

நர சம்பந்தி நோ நாரா நர ஸ புருஷோத்தம -நய நத்யகில விஜ்ஞானம் நாசயத்யகிலம் தம –
ந ரிஷ்யதி ஸ சர்வத்ர நரஸ் தஸ்மாத் ஸ நாதன – நர சம்பந்தி ந சர்வே சேதன அசேதநாத்மகா –
ஈசிதவ்ய தயா நாரா தார்ய போஷ்யதயா ததா -நியாம் யத்வேன ஸ்ருஜ்யத்வ பிரவேச பரணைஸ் ததா
அயதே நிகிலான் நாரான் வ்யாப் நோதி க்ரியயா தயா
நாராச்சாப்ய யநம் தஸ்ய தைஸ் தப்தாவ நிரூபணாத்
நாராணா மயனம் வாசஸ்தே ஸ தஸ்யா யனம் சதா -மரமா ஸ கதிஸ் தேஷாம் நாராணா மாத்மநாம் சதா -என்று
அஹிர் புத் நயாதிகள் நிர்வசனம் பண்ணின படியே –

நர சம்பந்தி நாரம் -என்கிற வ்யுத்பத்தியாலே சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப நிரூபக தர்மங்களும்
நிரூபித ஸ்வரூப விசேஷண தர்மங்களும் வியாபாரங்களும் விக்ரஹ விசேஷங்களும்
மற்றும் உள்ள த்ரிவித சேதன அசேதனங்களும் நார சப்தார்த்தமான போது
ஸ்வவ்யதிரிக்த சர்வத்துக்கும் ஆச்ரயத்வாதி ரூபேண நிற்கும் பிரகாரம் விவஷிதம் ஆகையாலே
ஸ்வா நிஷ்டத்வாதிகளைச் சொல்லுகிறது –
இப்படி வ்யாபன பரண நியமன ஸ்வாம் யாதிகளாலே வேறு பட்டு இருக்கிற புருஷோத்தமனுக்கும்
தத் சம்பந்திகளுக்கும் குத்ருஷ்டிகள் சொன்ன
ஸ்வரூப ஐக்யாதி பிரமம் கழியும்படி சர்வ சரீரித்வ சர்வ சப்த வாச்யத்வாதிக வைபவமும் இங்கே பலிதம் –

நர சப்தத்தாலே நராஜ்ஜாதாநி தத்த்வாநி நாராணி என்கையாலே காரண வாக்யார்த்தமும் –
அயன சப்தத்தாலே அவ்வோ உபாசன வாக்யார்த்தங்களும் எல்லாம் இங்கே பிரகாசிதங்கள் ஆகிறன-
ஸூ பால உபநிஷத் பரப்ருதிகளிலே சர்வ அந்தர்யாமியுமாய் சர்வ வித பந்துவுமாய் இருக்கிற சர்வேஸ்வரன்
நாராயண சப்தத்தாலே தேவதாந்திர வ்யாவ்ருத்தனாக பிரதிபாதனானான் –
லோகத்தில் உள்ள சர்வ பந்துக்களும் பகவத் சங்கல்பத்தாலே பந்துக்கள் ஆனார்கள் –

த்வமேவ மாதா ஸ பிதா த்வமேத –என்றும்
எம்பிரான் தந்தை –என்றும் –
பிதா தவம் மாதா தவம் -இத்யாதிகளில் படியே
நிருபாதிக சர்வவித பந்து சர்வேஸ்வரன் ஒருவனுமே –
யஸ்ய பிரசாதே சகலா –என்றும்
பிரசன்னமபவத் தஸ்மை பிரசன்னாய சராசரம் -என்றும் –
பிரசன்னோ தேவ தேவேச -என்றும்
சொல்லுகையாலே அவன் பிரசன்னன் ஆனால் பிரதிகூலராவார் ஒருவரும் இல்லை –
இவ் வீச்வரனுக்கு ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் – என்கிற ஆகாரம் ஸ்வ பாவ சித்தம் –
ஆகாராந்த்ரம் சேதனருடைய ஆஜ்ஞாதி லங்கனம் ஆகிற உபாதி அடியாக வந்தது –
அதுவும் அல்ப வ்யாஜ்யத்தாலே மாறும்
இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய பித்தனை -என்றார்கள் இறே-

இந் நாராயண சப்தத்தில் சதுர்தியாலே
மேலே சொல்லப் புகுகிற வாக்யார்த்தங்களுக்கு ஈடாக ததர்த்யாதிகள் காட்டப் படுகின்றன –
ஸ்தூல அனுசந்தானத்தில் இச் சதுர்த்தீ நம சப்த யோகத்தாலும் கொள்ளலாம் –
அப்போது இச் சதுர்த்திக்கு பிரயோஜன அதிசயம் இல்லை –
ஷஷ்ட பஞ்ச தசாத்ய வர்ணாத் கேவல வ்யஞ்ஜ நீக்ருதாத் –
உத்தரோ மந்திர சேஷஸ்து சக்திரித் யஸ்ய கத்யதே -என்கையாலே
இது திரு மந்த்ரத்தில் பலசித்தி ஹேதுவான பிரதேசம் -யோஜனா விசேஷங்களில்
பல பிரார்த்தனையும் இவ்விடத்திலே யாகிறது –
அர்த்தாத் பிரகரணால் லிங்காத் ஔசித்யாத் தேச காலத-
சப்தார்த்தா பிரவிபஜ்யந்தே ந சப்தாதேவ கேவலாத் -என்கிறபடியே ஒரு சப்தத்துக்கே
பிரகரணாதிகளுக்கு ஈடாக அர்த்தபதம் கொள்ளுகை சர்வ சம்மதம் –

ஆகையாலே தீயமா நாரத்த சேஷித்வம் சம்ப்ரதா நத்வ மிஷ்யதே -இத்யாதிகளில் படியே
பரஸ்வதவ ஆபாதனம் இவ்விடத்தில் கூடாதாகிலும் –
ஈஸ்வரன் தனக்கு சேஷமான வஸ்துவை தானே ரஷித்துக் கொள்ளும்படி சமர்ப்பிக்கிற அளவைப் பற்ற
இவ் வ்யாபக மந்த்ரங்களில் சதுர்த்தியை சம்ப்ரதா நார்த்தையாக அஹிர் புத்ந்யன் வியாக்யானம் பண்ணினான் –
நிசீ பாவேன சந்த்யோத்வம் ஆத்மநோ யத் சமர்ப்பணம் விஷ்ண்வாதிஷூ சதுர்த்தீ சம்ப்ரதான பிரதர்சி நீ –
நீசீ பூதோ ஹ்யசாவாத்மா யத் சம்ரஷ்யதயா அர்ப்யதே –
தத் கஸ்மா இத்ய பேஷாயாம் விஷ்ணவே ஸ இதீர்யதே -என்கிற வசனத்தில் –
விஷ்ண்வாதிஷூ-என்கையாலே நாராயணாதி சப்தங்களில் சதுர்த்தியும் வியாக்யானம் பண்ணப் பட்டது –

இத் திருமந்த்ரத்தில் நகாரம் முதலான ஏழு திரு அஷரங்களுக்கும் ப்ரத்யேகம் மந்திர ஸ்ம்ருதிகளில் சொன்ன அர்த்தங்களை
நாயகத்வம் ஸ சர்வேஷாம் நாம நத்வம் பரே பதே நாசகத்வம் விருத்வா நாம் நகாரார்த்த ப்ரகீர்த்தித –
மங்களத்வம் மஹத்த்வம் ஸ மஹநம் கரோதி யத் -ஆஸ்ரிதா நாம் ததோ ஜ்ஞேயோ மகாரார்த்தஸ் ததோ புதை
நாஸ்திக்ய ஹா நிர் நித்யத்வம் நேத்ருத்வம் ஸ ஹரே பதே -நாகார சேவிநாம் ந்ருணாம் மந்த்ரவித்பி ப்ரகீர்த்தித –
ரஞ்ஜநம் பகவத்யாசு ராகஹா நிஸ்ததோ அந்யத-ராஷ்ட்ரத்ராணாதிகம் சாபி ப்ராப்யதே ரேபசேவயா
யோகோத்யோகே பலம் பாசு யகாராத் ப்ராப்யதே புதை -வர்ண நம் ஸ ததா விஷ்ணோ வாணீ சித்திர்ணகாரத –
யஷ ராஷஸ வேதாள பூதாதி நாம் பயாய ய ஏவமஷர நிர்வாஹோ மந்திர வித்பி ப்ரகீர்த்தித –
இத்யாதிகளாலே சில ஆசார்யர்கள் சங்க்ரஹித்தார்கள் –

இப்படி இப்பதங்களின் உடைய வியாகரண நிருக்தாதி சித்த வ்யுத்பத்தி பராமர்சத்தாலே
பரவாதி மூலமாக வரும் மாசற விளக்கப் பட்ட திருமந்தரம் ஆகிற கண்ணாடி —
பர ஸ்வரூபாதிகளையும் ஸ்வ ஸ்வரூபத்தில் காண வரிய நிலங்களையும் எல்லாம் ஸூவ்யக்தமாகக் காட்டும் –

இதுக்கு பிரதிபாத்ய தேவதையாய் ப்ராப்யமுமான பர ஸ்வரூபத்தை இத் திரு மந்த்ரத்தில்
சப்தங்களாயும் ஆர்த்தங்களாயும் உள்ள பிரகாரங்களோடே கூட
யதா பிரமாணம் அனுசந்திக்கும் போது ரஷகத்வம் -அதினுடைய ஸ்வ பாவ சித்தத்வம் –
அதில் சர்வ விஷயத்வம் -ரஷ்ய வஸ்து விசேஷ அனுரூபமாக
ரஷையினுடைய நாநா பிரகாரத்வம் -சர்வதா ரஷகத்வம் -சர்வத்ர ரஷகத்வம் -சர்வ பிரகார ரஷகத்வம் –
ஸ்வார்த்த ரஷகத்வம் -சர்வ ரஷகத்வ அபேஷிதமான சர்வஜ்ஞத்வம் -சர்வ சக்தித்வம் –
ஸ்வேச்சா வியதிரிக்த அநிவார்யத்வம்-அநதி க்ரமணீய ரஷண சம்ரம்பத்வம்
பரம காருணிகத்வம்-அவசர ப்ரதீஷத்வம் வ்யாஜமாத்ர சாபேஷ்த்வம் -ஆஸ்ரித ஸூ லபத்வம் – விச்வச நீயத்வம் –
சாபராத தடநாத்ய நுகுண விசேஷணத்வம் -சேஷித்வம் -அதினுடைய நிருபாதிகத்வ நித்யத்வ சர்வ விஷயத்வங்கள் –
அநந்ய சேஷித்வம் -குண க்ருத சேஷித்வம் -ச பத் நீக சேஷித்வம் -சமாப்ய திகாராஹித்யம் –
ஆத்மஹவிருத்தே சார்ஹத்வம் -அசித் பத்த முக்த நித்ய விலஷணத்வம்-பரவிசேஷித்வ ஹேதுத்வம்–
ஸ்வத கர்த்ருத்வம் –சக்த்யாதாயகத்வம் – பிரேரகத்வம் -அநந்ய ப்ரேர்யத்வம் –
அநு மந்த்ருத்வம் -கர்ம சாஷித்வம் -சஹகாரித்வம் -ப்ரியப்ரவர்த்தகத்வம் -ஹித ப்ரவர்த்தகத்வம் –
நிருபாதிக நந்தவ்யத்வம் -வசீகார்யத்வம் -சித்தோபாயத்வம்
சித்தோபாய ஹேதுத்வம் -சுருதி ஸ்ம்ருதி ரூபாஜ்ஞாவத்வம் -தண்டதரத்வம் -சர்வ சமத்தவம் –
ஆஸ்ரித பஷபாதித்வம் -அவித்யாதி ஹேதுத்வம் -அவித்யாத்ய நர்ஹத்வம் -ஆஸ்ரித அவித்யா நிவர்த்தகத்வம் –
ஸ்வரூப அந்யதாப ராஹித்யம் -ஸ்வ பாவ அந்யதா பாவ ராஹித்யம் -சர்வ நேந்த்ருத்வம் -சர்வ ஜகத் வியாபார லீலத்வம் –

சர்வ வேதாந்த பிரதான பிரதிபாத்யத்வம் -சர்வ உபாதனத்வம் -சர்வ நிமித்தத்வம் -சர்வ சங்கல்பத்வம் -சர்வ சரீரதவம் –
சர்வ சப்த வாசயத்வம் -சர்வ கர்ம சமாராத்யத்வம் -சர்வ பல ப்ரதத்வம் -சர்வ வித பந்துத்வம் -சர்வ வ்யாபகத்வம் –
நிரதிசய ஸூ ஷ்மத்வம் –சர்வ தாரத்வம் -ஸ்வ நிஷ்டத்வம் –சத்யத்வம் -ஜ்ஞானத்வம் –அனந்தத்வம் —
ஆனந்தத்வம் –அமலத்வம் -நிரூபித ஸ்வரூப விசேஷண அநுக்த அநந்த குணத்வம் –நித்ய திவ்ய மங்கள விக்ரஹத்வம் –
பர வ்யூஹாத் யாவஸ்தாவத்த்யம் –சத்ய அவதாரத்வம் -அஜஹத்ஸ்வ ஸ்வபாவத்வம் -அப்ராக்ருத அவதாரத்வம் —
அகர்ம வச்ய அவதாரத்வம் -அகால நியாம அவதாரத்வம் -ஆஸ்ரிதார்த்த குண பரீவாஹ அவதாரத்வம் -சர்வ அவஸ்த சுபாஸ்ர்யத்வம் –
சர்வ அவஸ்த லஷ்மி சஹ சரத்வம் -திவ்ய பூஷண ஆயுத மஹிஷீ ஸ்தான பரிஜன பரிச்சத த்வாரபால பார்ஷதாதி மத்த்வம் –
ஸ்தூல சரீர விச்லேஷகத்வம் -விஸ்ரம ஸ்தானத்வம் -அனுக்ரஹ விசேஷவத்த்வம் -ப்ரஹ்ம நாடீ த்வார பிரகாசகத்வம் –
தத் பிரவேசகத்வம் -ப்ரஹ்ம ரந்திர உத்க்ராந்தி ஹேதுத்வம் -அர்ச்சிராதி ஆதி வாஹிக நியோக்ருத்த்வம் –
ஸூ ரா த்வாராதி நேத்ருத்வம் -அண்ட ஆவரண பிரகிருதி மண்டலாதி க்ரம ஹேதுத்வம் –
திவ்ய அப்சரஸ் சத்காராதி பிரயோஜகத்வம் -ப்ரஹ்ம கந்தாதி பிரவேசகத்வம் –நித்ய முக்த சத்கார விசேஷ ஹேதுத்வம் —
பர்யங்காதி ரோஹண பர்யந்தா தரவத்வம் -பரிபூர்ண அனுபவ ஹேதுத்வம் –பிரதான ப்ராப்யத்வம் –
சதேஹ விதேஹ பஹூ தேஹ க்ருத சர்வவித கைங்கர்ய பிரதி சம்பந்தித்வம் -அவாப்த சமஸ்த காமத்வம் –
நிரதிசய ஆனந்தத்வம் –நிரதிசய போக்யத்வம் -சர்வ பிரகார போக்யத்வம் -சர்வதா அனுகூல ஸ்வ பாவத்வம் –
அத்யந்த துல்ய போக பிரதத்வம் -ஆஸ்ரித விஸ்லேஷ அசஹத்வம் -அபுநாவ்ருத்தி ஹேதுத்வம் -என்று
இவை பிரதானமாக மற்றும் இவற்றைத் துவக்கி வரும் ஏற்றங்களும் எல்லாம் அடைவே அனுசந்தேயங்கள் –

இஹ சங்க்ரஹத ஸ்ரீ மான் கோப்யதா சேஷீ சமாதிக தரித்ர-
சரணம் சர்வ சரீரீ ப்ராப்ய சேவ்யச்ச சாதுபிர் பவ்ய —

இப்படி பிராப்யனான பரமாத்மாவை பிராபிக்கும் ஜீவாத்மா இத் திருமந்த்ரத்தாலே அனுசந்தேயனாம் போது –
ஸ்ரீ மத் ரஷ்யத்வம் –அநந்ய ரஷ்யத்வம் -சர்வத்ர சர்வதா சர்வ பிரகார ரஷகவத்த்வம் -ஸூ சீல ரஷகத்வம் —
புருஷகாரவத்த்வம் –மகா விஸ்வாச யோகித்த்வம் –
ச லஷ்மீ கதாசத்வம் -நித்ய தாசத்வம் -நிருபாதிக தாசத்வம் -அனன்யார்ஹ தாசத்வம் -ஜ்ஞானத்வம் -ஆனந்தத்வம் –
ஸ்வயம் பிரகாசத்வம் -ஸ்வஸ்மைபாசமாநத்வம் –
அஹம் சப்த வாச்யத்வம் -அணு பரிமாணத்வம்-ஸூ ஷ்மத்வம் -சோத நாத்ய நர்ஹத்வம் -சதுர்விசதித்வ விலஷணத்த்வம் –
அமலத்வம் -ஈஸ்வராதன்யத்வம் –ஜ்ஞாத்ருத்வம் –ஆநு கூல்யாதி யோக்யத்வம் -பரம புருஷார்த்த அபேஷார்ஹத்வம்-
நியோக யோக்யத்வம் -கைங்கர்ய யோக்யத்வம் -சர்வ சாஷாத்கார யோக்யத்வம் –
நிரதிசய ஆனந்த யோக்யத்வம் -பராபேஷ கர்த்ருத்வம் -சோபாதிக ஸ்வாமித்வம் –பாகவத சேஷித்வம் -பாகவத கிங்கரத்வம் –
அநந்ய உபாயத்வம் -அவித்யாதிமத்த்வம் -கரணாதி சாபேஷ ஜ்ஞான விகாச வத்த்வம் -சம்சார பயாக்ராந்தத்வம்-
அவித்யாதி நிவ்ருத்தி சாபேஷத்வம்-அகிஞ்சனத்வம் -ஈஸ்வர சௌஹார்த்தாதிமத்த்வம் –
சதாசார்யா ப்ராப்திமத்த்வம் -சாத்ய உபாய அனுஷ்டான அர்ஹத்வம் -உபாய நிஷ்டத்வம் -மஹா ப்ரபாவத்வம் –
விசிஷ்ட வேஷத்தாலே சிருஷ்டி சம்ஹார விஷயத்வம் -அஷயத்வம் -ஸ்வதோ பஹூத்வம் -அசங்க்யாதத்வம் –
ஈஸ்வர வ்யாப்யத்வம் -ஈஸ்வர நியாம்யத்வம் -ஈஸ்வர தார்யத்வம் –

இவற்றின் நியமம் அடியாக வந்த ஈஸ்வர சரீரத்வம்-ஈஸ்வர லீலா ரச ஹேதுத்வம் -ஈஸ்வர போக உபகரண அர்ஹத்வம் –
தத் அதீன கதித்வம் -தத் அதீன தத் ப்ராப்தித்வம் -ஐஸ்வர்ய கைவல்ய நிரபேஷகத்வம்-பகவத் ப்ராப்த யர்த்தித்வம் –
சர்வா வித்யோன்முக்த்தத்வம் -ஆவிர்பூத ஸ்வரூபத்வம்-சர்வ த்ருஷ்டத்வம் –
சர்வ பிரகார பகவத் அனுபவ ஏக போகத்வம் -நிரதிசய ஆனந்தத்வம் -பகவத் போகார்த்த போக்த்ருத்வம் –
ஐ ச்சிக விக்ரஹாதிமத்வம் –இச்சாவிகாத ரஹிதத்வம் -ஈஸ்வர லஷண வ்யதிரிக்த பரம சாம்யம் -அசேஷ கைங்கர்யைக ரதித்வம் –
அபுநா வ்ருத்தி மத்த்வம் என்று இவை பிரதானங்களாகக் கொண்டு இவற்றைத் துவக்கி வரும்
மற்றுள்ள ப்ராமாணிக அர்த்தங்களும் எல்லாம்
இப் பதங்களின் அடைவே சப்த சாமர்த்தியத்தாலும் அர்த்த ஸ்வ பாவத்தாலும் அநுசந்தேயங்கள் –

பத த்ரயோ அத்ர சம்ஷேபாத் பாவ்யா அனன்யார்ஹ சேஷதா அநந்ய உபாயாதா ஸ்வஸ்ய ததா அநந்ய யுபமர்த்ததா –
இப்படி சர்வம் அஷ்டாஷராந்தஸ்தம்-என்னும் படி இருக்கிற இத் திருமந்த்ரத்திலே –
சித் அசித் ஈஸ்வர ஸ்வரூபங்களும்-ஜீவர்கள் உடைய அந்யோந்ய பேதமும் –
சேஷ சேஷி பாவாதிகளாலே நிரூபாதிக ஜீவேஸ்வர பேதமும் –
நிகில ஜகன் நிமித்த உபாதான பூத பர தேவதா விசேஷ நிர்த்தாராணாதிகளும் சித்திக்கையாலே-
இப்படி அனுசந்திப்பார் இருந்த ஊரில் இருக்குமவர்களுக்கும் ஈஸ்வரன் இல்லை என்றும் –
நிர் விசேஷன் என்றும் -அத்யந்த உதாசீனன் என்றும்
பிரதிபலன துல்ய ஐஸ்வர்யன் என்றும் –
கர்ம விசேஷ சித்த ஐஸ்வர்யன் என்றும் –
கதாசித் கர்மாதி பரவசன் என்றும் –
த்ரிமூர்த்திகளும் சமர் என்றும் –
ஏகர் என்றும் –
த்ரி மூர்த்த்யத் தீர்ணன் பரதத்வம் என்றும் –
ப்ரஹ்மாதிகளில் ஈஸ்வரன் ஒருவன் என்றும் –
ஸ்வரூப பரிணாமவான் என்றும் –
நிமித்த உபாதான ஐக்கியம் கொள்ள ஒண்ணாது என்றும் –
ஜீவ ஈச்வரர்கள் ஏகாத்மா என்றும் –
உபாதி சித்த பேத்தர் என்றும் –
நித்யாபின்ன அபின்னர் என்றும் –
ஜீவன் கர்மாத்ர அதீன சேஷ பாவன் என்றும் –
அநியத சேஷ பாவன் என்றும் -ஜடன் என்றும்
ஜ்ஞான மாத்ர ஸ்வரூபன் என்றும் –
நித்ய முக்தன் என்றும் –
ஆரோபித போகன் என்றும் –
கர்த்தா வல்லன் என்றும் –
ஈஸ்வர நிரபேஷ கர்த்தா வென்றும்
ஆப்ரலயஸ் தாயி என்றும் –
ஆமோஷஸ்தாயி என்றும் –
ஏகன் என்றும் –
ஸ்வ நிஷ்டன் என்றும் –
ஸ்வரூபத கார்ய பூதன் என்றும் –
கார்யத்வ பிரசங்க ரஹிதன் என்றும்
கர்மாத்ர உபாயன் என்றும் –
முக்த தசையில் பாஷாண கல்பன் என்றும் –
ஸ்வாத்ம ஆனந்த மாத்ர த்ருப்தன் என்றும்
அத்யந்த ஸ்வ தந்த்ரனாம் என்றும் –
ஈஸ்வரனுடன் ஏகி பூதானாம் என்றும்
வ்யாபாராதி ரஹிதனமாம் என்றும்
விபாகாவிபாகாதி சக்திமான் என்றும் –
ஆனந்த தாரதம்யவான் என்றும்-
வ்யவஸ்தித சாலோக்யாதி பேதவான் என்றும்
மற்றும் இப்புடைகளில் உள்ள பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள் ஒன்றாலும் கலக்கம் வாராது –

இப்படியே ரஷகனான ஸ்ரீ யபதியைப் பற்ற
விஸ்வாச மாந்த்யமும் -ரஷகாந்தரான்வேஷணமும்-தவம் மே அஹம் மே -என்று பிணக்கும் –
நிருபாதிக அந்ய சேஷத்வ ப்ரமமும்-தேவதாந்திர ப்ராவண்யமும்-
தத் ப-தேஹாத்மா பிரமாதிகளும் -ஸ்வ தந்த்ராத்மா பிரமாதிகளும்
அசதாசார ருசியும் -சத்ரு மித்ராதி விபாக நிரூபணமும் -பாந்த வாந்தர பரிக்ரஹமும் –
ப்ரயோஜ நாந்த்ர ருசியும் -பரம பிரயோஜன வைமுக்யமும்
மற்றும் ஸ்வ நிஷ்டா விரோதிகள் ஒன்றும் பின்னாடாது –

இஹ நிஷ பஷ விருத்தௌ ஈத்ருச நிஷ்டா விரோதி பிச்சான் யௌ-
த்வி சதுஷ்க சார வேதீ கங்கா ஹ்ருத இவ நகச்சதி ஷோபம் –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -27-மூல மந்த்ராதிகாரம் -பிரணவம் நமஸ் விவரணங்கள் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

January 5, 2016

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

——————————————————————————–

தாரம் பூர்வம் ததுநு ஹ்ருதயம் தச்ச நாராயணா யேதி
ஆம் நா யோக்தம் மதமவ யதாம் சார்த்த மாசார்யா தத்தம்
அக் நீ குர்வன் அலஸ மனஸாம் ஆத்ம ரஷாபரம் ந
ஷிப்ரம் தேவ ஷிபது நிகிலான் கிங்கரைச்வர்ய விக்நான் –

திருமந்த்ரார்த்தம் ஆசார்யர் உபதேசிக்க –நம் பரத்தை சர்வேஸ்வரன் இடம் ஒப்படைக்க
கைங்கர்யம் பெற வேண்டிய பிரதிபந்தகங்களையும் நீக்கி அருளுவான்

கல்யாண மாவஹது கார்த்த யுகம் ஸ்வ தர்மம்
ப்ராக்யபயன் பிரணி ஹிதேஷூ நராதிகேஷூ
ஆத்யம் கமப்யதிகதோ ரதம் அஷ்ட சக்ரம்
பந்து சதாம் பதரிகாஸ்ரமம் தாபஸோ ந–

நரன் நாரதர்களுக்கு -க்ருத யுகத்தின் தொடர்புடைய தன்னுடைய தர்மங்களை உபதேசம் செய்தும்
அஷ்டாஷர மூல மந்த்ரம் என்னும் ரதம் உடைய சான்றோர்களுக்கு பந்துவாயும்
பதரிகாஸ்ரிமத்தில் தவம் செய்த படியும் உள்ள
நாராயணன் நமக்கு மோஷம் அளிக்க வேண்டும் –

யதந்த ஸ்தம சேஷண வாங்மயம் வேதவைதிகம்
தஸ்மை வ்யாபக முக்யாய மந்தராய மஹதே நம –

வியாபக மந்த்ரங்களில் முக்கியமான -வேதம் ஸ்ம்ருதிகளில் உள்ள எல்லா பதங்களும் அடங்கிய –
திரு மந்த்ரத்துக்கு நமஸ்காரம் –

இஹ மூல மந்திர சம்வ்ருத மர்த்தமசேஷேண கச்சித நு பவதி
ஸ்படிகதல நிஹித நிதிமிவ தேசிக தத்தேந சஷூணா ஜந்து –

ஆசார்யர்கள் அருளால் உணர்ந்த திருமந்த்ரார்த்த புதையலை ஸ்படிகமாக முழுவதும் எடுத்து அனுபவிக்கிறான் –
சத் வஸ்தர்க்கு அனுசந்தேயங்களான சாரதமார்த்தங்களையும் அவற்றினுடைய ஸ்திரீ கரண பிரகாரங்களையும் பிரதிபாதித்தோம் –
இவற்றை எல்லாம் பிரகாசிப்பிக்கிற ரஹஸ்ய த்ரயத்தில் பத வாக்ய யோஜனைகள் இருக்கும் படி சொல்லுகிறோம் –

அவற்றில் முற்பட திருமந்தரம்
பர சேஷ தைகரச ஸ்வரூபாதிகளைத் தெளிவித்து அம் முகத்தாலே சமஸ்த பிரதிபந்தக நிவ்ருத்தி பூர்வக
பரம புருஷார்த்த பிராப்தியிலே ருசியையும் த்வரையையும் விளைப்பித்து உபாய அதிகார பூர்த்தியை யுண்டாக்கும்

இப்படி அதிகாரி யானவனுடைய பல அபேஷக பூர்வக உபாயா விசேஷ அனுஷ்டான பிரகாரத்தை த்வயம் விசதமாகப் பிரகாசிக்கும் –

இவ் வுபாய விசேஷத்தை விதிக்கிறது சரம ஸ்லோஹம் –

இவை மூன்றிலும் தனித்தனியே எல்லா அர்த்தங்களையும் சப்தமாகவும் ஆர்த்தமாகவும் காணலாம் ஆகிலும்
ஓர் ஒன்றிலே ஓர் ஒன்றுக்கு நோக்காய் இருக்கும் –
திரு மந்த்ரத்திலே பிரதம பதத்திலே பிரதம அஷரத்திலே சம்ஷிப்தமான சரண்ய பரதத்வத்தையும்
இதில் மத்யம த்ருதீய பதங்களிலே பிரதிபன்னமான உபாய உபேயங்களையும் அடைவே விசதம் ஆக்குகிறது த்வயம் –
இதில் பிரபத்யே -என்கிற பதத்தில் உத்தமனாலே விவஷிதமான அதிகாரி விசேஷத்தையும் –
அர்த்த சித்தமான உபாயாந்தர நைரபேஷ்யத்தையும்-உபேயத்தில்-நம -சப்த சம்ஷிப்தமான விரோதி நிவ்ருத்யம்சத்தையும்
வெளியிடுகிறது சரம ஸ்லோஹம் –

இவை மூன்றும் நமக்கு ஞான அனுஷ்டான பல நிதாநங்களாய்க் கொண்டு -தாரக போஷாக போக்யங்கள் –
வ்யக்தம் ஹி பகவான் தேவ சாஷான் நாராயண ஸ்வயம்
அஷ்டாஷர ஸ்வரூபேண முகேஷு பரிவர்த்ததே –என்கிறபடியே
தேசிக ஜிஹ்வையில் இருந்து சிஷ்ய ஹ்ருதய குஹாந்தகாரத்தைக் கழித்து பர சேஷ தைகரசமான பரிசுத்த ஸ்வரூபத்தை வெளியிட்டு
சத்தா லாபத்தை பண்ணுகையாலே திருமந்தரம் தாரகம் –
சரம உபாயத்தில் ப்ரவர்த்திக்கும் படியான ஞான விசேஷ உபசய ஹேதுவாகையாலே ஸ்ரோதவ்ய சேஷம் இல்லாதபடி
உபாய உபதேச பர்யவசானமான சரம ஸ்லோஹம் போஷகம் –
சக்ருத் உச்சாரணத்தாலே பரம புருஷ ஹேதுவாய்க் கொண்டு சதா அனுசந்தானத்தாலே க்ருதார்த்தன் ஆக்குகையாலே த்வயம் போக்யம் –

இவற்றில் திருமந்த்ரத்தின் உடைய ருஷி –
சந்தோ -தேவதா -பீஜ –சக்தி –வர்ண -விநியோக -ஸ்தான -ந்யாசாதிகள்-( அங்கங்கள்)அவ்வோ
கல்ப சம்ப்ரதாயங்களுக்கு ஈடாகக் கண்டு கொள்வது —
இத் திரு மந்த்ரம் ஆதர்வண கடாத்யுபநிஷத்துக்களிலும் மற்றும் மன்வாதி சாஸ்திரங்களிலும் -நாராயணாத்மாக ஹைரண்யகர்ப்ப
நாரதீய போதாய நாதி பஹூ வித கல்பங்களிலும் ஸூ பிரசித்த வைபவமாய் இருக்கும் –

மந்த்ராந்தரங்களில் காட்டில் பகவன் மந்த்ரங்கள் அதிகமானாப் போலேவும் –
அனந்தங்களான பகவத் மந்த்ரங்கள் தம்மில் வ்யாபக த்ரயம் அதிகமானாப் போலேயும்
மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யா நாம் குஹ்யாமுத்தமம் பவித்ரம் ஸ பவித்ராணாம் மூல மந்திர ஸநாதன-என்கையாலே
வ்யாபக மந்த்ரங்கள் எல்லா வற்றிலும் அதிகமாய் -சர்வ வேத சாரமாய் -சர்வ அநிஷ்ட நிவர்த்தன ஷமமாய்-சர்வ புருஷார்த்தங்களுக்கும் சாதகமாய் –
சர்வ உபாயங்களுக்கும் உபகாரகமாய் -சர்வ வர்ணங்களுக்கும் தம் தம் அதிகார அனுகுணமாக வைதிக ரூபத்தாலும் தாந்தரிக ரூபத்தாலும் உபஜீவ்யமாய்
வ்யாப்ய வ்யாபக கண்டோக்திமத்தாய் -சர்வ மந்திர நைரபேஷ்ய கரமாய் -சர்வ பகவன் மூர்த்திகளுக்கும் சாதாரணமாய் இருக்கையாலே
சர்வ ஆச்சார்யர்களும் இத்தையே விரும்பிப் போருவார்கள் –

ஆழ்வார்களும் –
நின் திரு எட்டு எழுத்தும் கற்று -என்றும் –
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -என்றும்
எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -என்றும்
நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய -என்றும்
நல் வகையால் நமோ நாராயணா -என்றும் திருமந்த்ரத்தை விரும்பிப் போந்தார்கள் –

ருஷிகளும்
பஹவோ ஹி மஹாத்மநோ முனய சனகாதய
அஷ்டாஷரம் சமாஸ்ரித்ய தே ஜக்மூர் வைஷ்ணவம் பதம் -என்றும்

யதா சர்வேஷூ தேவேஷூ நாஸ்தி நாராயணாத் பர
ததா சர்வேஷூ மந்த்ரேஷூ நாஸ்தி சாஷ்டாஷராத்பர -என்றும்

பூர்வோர்த்த்வ பாஹூரத்ராத்ய சத்யா பூர்வம் ப்ரவீமீ வ
ஹே புத்ர சிஷ்யா ஸ்ருனுத ந மந்திர அஷ்டாஷராத் பர -என்றும்

ததர்சி நபரோ நித்யம் தத் பக்தஸ்தம் நபஸ்குரு
தத் பக்தா ந வினச்யந்தி ஹ்யஷ்டா ஷர பராயணா-என்றும்

ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா
நமோ நாராயணா யேதி மந்த்ரைக சரணா வயம் -என்றும்

இத் திருமந்த்ரத்தை சர்வேஸ்வரன் ஸ்ரீ நாரத பகவானையிட்டு ஸ்ரீ புண்டரீகனுக்கு உபதேசிப்பிக்க –
அவனும் இதையே பரம ஹிதமாகக் கேட்ட படியாலே
புண்டரீக அபி தர்மாத்மா நாராயண பராயண
நமோ நாராயணா யேதி மந்த்ரஷ்டாஷரம் ஜபன் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே இம் மந்திர நிஷ்டனாய் முக்தனானான்
இம் மந்த்ரத்தை திருமங்கை ஆழ்வாருக்கு சர்வேஸ்வரன் தானே உபதேசித்தான் –

இது பிரணவ சதுர்த்திகளை ஒழிந்த போது சர்வாதிகாரம் என்னும் இடம் ஸ்ரீ வராஹ புராணத்தில் கைசிக த்வாதசீ மகாத்ம்யத்திலே
நமோ நாராயணேத் யுக்த்த்வா ச்வபாக புனராகமத் -என்கிற வசனத்தாலே காட்டப் பட்டது –
இவ் வர்த்தம்
நாமம் சொல்லில் நமோ நாராயணமே-என்றும்
நன் மாலை கொண்டு நமோ நாராயணா -என்றும்
நா வாயில் உண்டே நமோ நாராயணா வென்று ஓவாது யுரைக்கும் யுரை உண்டே -என்றும்
சொல்லுகிற பாசுரங்களாலும் பிரசித்தம்
இது ப்ரஹ்மணாதிகளுக்கு அதீதமான க்ரமத்திலே பிரணவத்தோடு கூடி அஷ்டாஷரமாய் இருக்கும் –

வைதிகம் தாந்தரிகம் சைவ ததா வைதிக தாந்தரிகம்
த்ரிவிதம் கர்ம சம்ப்ரோக்தம் பஞ்ச ராத்ராம் ருதார்ணவே

வைதிகம் ப்ராஹ்மணாநாம் து ராஜ்ஞாம் வைதிக தாந்தரிகம்
தாந்தரிகம் வைஸ்ய சூத்ராணாம் சர்வேஷாம் தாந்தரிகம் து வா

அஷ்டாஷரச்ச யோ மந்த்ரோ த்வாதசாஷர ஏவ ச
ஷடஷரச்ச யோ மந்த்ரோ விஷ்ணோ ரமித தேஜஸ

ஏதே மந்த்ரா ப்ரதா நாஸ்து வைதிகா பிராணவைர்யுதா
ப்ரண வேன விஹீ நாஸ்து தாந்த்ரிகா ஏவ கீர்த்திதா

ந ஸ்வர பிரணவ அங்கா நி நாப் யன்ய விதயஸ் ததா
ஸ்திரீ ணாம் து சூத்திர ஜாதீ நாம் மந்திர மாத்ரோக் திரிஷ்யதே –என்கிறபடியே பிரணவம் ஒழிந்த போது
தத்ரோத்தராயண ஸ்யாதி பிந்துமான் விஷ்ணு ரந்தத
பீஷம் அஷ்டாஷரஸ்ய ஸ்யாத் தேன அஷ்டாஷரதா பவேத்
என்கிற பிரக்ரியையாலே எட்டு எழுத்தும் அனுசந்தேயமாக விதிக்கப் பட்டது –

பிரணவம் ஒழிந்தாலும் அது கூடினாலும் உள்ள பலம் இவ் வதிகாரிகளுக்கு உண்டு என்னும் இடம்
கிம் தத்ர பஹூ பிர் வ்ரதை கிம் தத்ர பஹூ பிர் வ்ரதை
நமோ நாராயணா யேதி மந்திர சர்வார்த்த சாதக -இத்யாதிகளாலே சித்தம் –
இப்படி பிரணவம் ஒழிய அஷ்டாஷரம் ஆன போது பிரணவத்தில் அர்த்தம் எல்லாம் இப் பிரணவ பிரதிச்சந்தமாக சாஸ்திரம்
வகுத்த அஷரத்திலே பிரதம அஷத்ரம் சர்வ சங்க்ரஹமான கணக்கிலே சுருங்க அனுசந்தேயம் –
மத்யம அஷரத்திலே பொருளும் அர்த்த சித்தமாம் -இதில் த்ருதிய அஷரத்தில் சொல்லுகிற ஜ்ஞாத்ருத்வாதிகளும்
நமஸ்ஸில் த்வதீய அஷரத்தில் பிரக்ருதியாலே அனுசந்தேயம்-

பிரணவம் ஸ்வ தந்த்ரமான போது
ஏக மாத்ரம் த்வி மாத்ரம் த்ரி மாத்ரம் சார்த்த த்ரிமாத்ரம் என்றால் போலே பல பிரகாரமாய் அர்த்தங்களும் அப்படியே
கார்ய காரண அவஸ்த பரமாத்ம வாசகத்வாதி பிரக்ருதியையாலே பலவகைப்பட்டு இருக்கும் –
வ்யாபக மந்த்ரங்களிலும் பிரணவத்தை பரமாத்ம பிரதானமாகவும் சில சாஸ்திரங்கள் சொல்லும் –

இதின் பிரபாவம்
ஆதயம் து த்ரயஷரம் ப்ரஹ்ம த்ரயீ யத்ர ப்ரதிஷ்டிதா
ச குஹ்யோன் யஸ் த்ரி வ்ருத்வேதோ யஸ்தம் வேத ச வேதவித் -இத்யாதிகளிலே பிரசித்தம் –இது
ஹவிர்க்ருஹீத்வா ஆத்ம ரூபம் வஸூரண்யேதி மந்தரத
ஜூஹூயாத் ப்ரணவே நாக்நௌ அச்யுதாக்யே ஸநாதநே -என்கிறபடியே
நியாச வித்யையில் ஸ்வ தந்த்ரமாய் ஆத்ம சமர்ப்பண பரமாய் இருக்கும் –
அக் கட்டளையிலே இங்கும் சமர்ப்பண பரமாகவும் யோஜிப்பார்கள்-
இவ் விடத்தில் ஸ்வரூப ஜ்ஞான ப்ராதான்யத்தாலே சேஷத்வ அனுசந்தான மாத்ரம் உப ஜீவ்யம் என்றும் யோஜிப்பார்கள்
அப்போது இச் சேஷத்வ அனுசந்தானம் அதிகாரத்திலே சேரும் –
ஷேத்ரஜ்ஞஸ் யேஸ்வர ஜ்ஞாநாத் விசுத்தி பரமா மதா-என்றது -சேஷி தத்வ ஜ்ஞான மாத்ர பரமான போது
உபாயா நர்ஹத நிவ்ருத்தி பரம் –உபாய ரூபம் ஜ்ஞானாநந்த்ரத்தை விவஷிக்கும் போது மோஷ பரம் –

இப் பிரணவ அனுசந்தான க்ரமத்தை
ஈத்ருச பரமாத்மா அயம் பிரத்யகாத்மா ததேத்ருசா — தத் சம்பந்த அனுசந்தானம் இதி யோக பிரகீர்தித்த -என்று
ஸ்ரீ சாண்டில்ய பகவான் அருளிச் செய்தான் –

இத்தை -அகாரத்தோ விஷ்ணுர் ஜகதுதய ரஷா பிரளயக்ருத் –
மகார்த்தோ ஜீவ்ஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்
உகாரோ அனந்யார்ஹம் நியயமதி சம்பந்தம் அனயோ –
த்ரயீசாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமதிசத் -என்று விவரித்தார்கள்

கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவற்கு உரியேனோ -என்றதும் இப் பிரணவார்த்த விவரணம் –
பிரணவத்தில் அஷர த்ரயத்தையும் வேத த்ரய சாரமாக ஸ்ருதி ஸ்ம்ருதிகள் பிரபஞ்சித்தன –

இவ் வஷரங்கள் இவ் வர்த்தங்களைச் சொல்லுகிறபடி எங்கனே என்னில்
அஷ்டாஷர சரீராங்க பிரணவாத்யஷரேண து -அகாரேண அகிலா தாரா பரமாத்மா அபிகீயதே –
சமஸ்த சப்த மூலத்வான் அகாரஸ்ய ஸ்வ பாவத-சமஸ்த வாச்ய மூலத்வாத் ப்ரஹ்மணே அபி ஸ்வ பாவத –
வாச்ய வாசக சம்பந்த தயோரார்த்தாத் ப்ரதீயதே –என்று
ஸ்ரீ வாமன புராண வசனத்தாலே சர்வ வாசக ஜாத பிரக்ருதியான பிரதம அஷரத்துக்கு
சர்வ வாச்ய ஜாத பிரக்ருதியான நாராயணன் வாச்யன் என்ற பிரசித்தமான அர்த்தத்தை வேதார்த்த சங்க்ரஹத்தில் அருளிச் செய்தார் –
இத்தாலே காரண வாக்ய சித்தமான சகல ஜகத் உபாதான நிமித்தமான காரணத்வமும் –
அத்தாலே ஆஷிப்தமான-சர்வஜ்ஞத்வ சர்வ சக்தித்வாதி குண வர்க்கமும் இங்கே சித்தமாயிற்று –

இவ் வஷரம் பகவத் வாசகம் என்னும் இடம் –
அ நிஷேதே புமான் விஷ்னௌ-என்றும் –
அகாரோ விஷ்ணு வாசகா -என்றும்
அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதம அபிதாநம பிதததா கிம் நாம மங்கலம் ந க்ருதம்–என்றும்
நிகண்டங்களிலும் பிரயோகங்களிலும் பிரசித்தம் –

இது வியாகரண வியுத்பத்தியாலே சர்வேஸ்வரனைச் சொல்லும் போது
ரஷண ப்ரீணநீதி விஷயமான தாதுவிலே கர்த்ருவாசியான
பிரத்யயத்தாலே நிஷ்பன்னமான பதமாய் சர்வ ரஷகத்வாதி விசிஷ்டனாகக் காட்டும் –
இத் தாது அநேக அர்த்தமே யாகிலும் ரஷணார்த்திதில் பிரசித்தி பிரகர்ஷத்தாலும்
இவ் வர்த்தம் இங்கே அபேஷிதம் ஆகையாலும்
இங்கே நாநார்த்தங்கள் அனுசந்தேயங்களாக ஒரு நிருக்தி இல்லாமையாலும்
பிரதம படிதமான ரஷணம் சப்தமாய் மற்ற அபேஷித அர்த்தங்கள்
இத்தாலே ஆஷிப்தங்களாக அனுசந்திக்கை உசிதம் –
ரஷா பிரகாரங்கள் விஷயங்கள் தோறும் பிரமாணங்கள் காட்டின படியிலே விசித்ரங்களாய் இருக்கும்

இது ஹேது நிர்த்தேசம் பண்ணாமையாலே நிருபாதிகமாய்த் தோன்றினாலும் சாபராதரன சம்சாரிகளுக்கு மோஷாதி பிரதானத்தில்
ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் தான் சங்கல்பித்து வைத்ததொரு வியாஜ்யத்தை அபேஷித்து இருக்கும் –
நித்யர் பக்கலிலும் முக்தர் பக்கலிலும் நிருபாதிக சஹஜ காருண்ய மாத்ரத்தாலே ஸ்தித ஸ்தாபன ரூபேண ரஷை முழுக்க நடக்கும் –
இப்படி ஸ்வா பாவிகமான ரஷகத்வம் ப்ராதிகூல்யம் நடக்கும் காலத்தில் அநாதி அபராதத்தாலே பிறந்த நிக்ரஹ உபாதியாலே பிரதிபத்தமாம் –
பிரதிபந்தமான இவ் வுபாதியைக் கழிக்கைக்காகவே பிரபத்தி முதலான வ்யாஜங்கள் சாஸ்திர சித்தங்கள்
த்ராணே ஸ்வா மித்வம் ஔசித்யம் ந்யாசாத்யா சஹ காரிணா-பிரதான ஹேது ஸ்வாதந்த்ர்ய விசிஷ்டா கருணா விபோ —

சர்வ ரஷண தீஷிதனானவன் –
லஷ்ம்யா சஹ ஹ்ருஷீகேசா தேவ்யா காருண்ய ரூபயா-ரஷகா
சர்வ சித்தாந்தே வேதாந்தே அபி ஸ கீயதே –இத்யாதிகள் படியே சபத்நீகனாக சித்தனாய் இருக்கையாலே இங்கே
பிரமாண சித்த உபயோக விசேஷமான பத்னீ சம்பந்தம் ஆர்த்தம் –

இப்படி சந்நியோக சிஷ்ட நியாயத்தாலே எம்பெருமானைச் சொல்லும் இடம் எங்கும் பிராட்டியையும் சொல்லிற்றாம்
என்னும் இடத்தை ததந்தர்பாவாத்த்வாம் ந ப்ருதக பிதத்தே ஸ்ருதிரபி -என்று சமர்த்தித்தார்கள் –
ஆகையால் ஸ்வரூப நிரூபக தர்மங்கள் சர்வ வித்யைகளிலும் வருகிற கணக்கிலே அவற்றிலே பிரதானமான
இவ் விசேஷணமும் சர்வ வித்யைகளிலும் அனுசந்தேயம் –
இது தான் தேவதாந்திர வ்யாவ்ருத்தி யையும் பண்ணிக் கொண்டு சர்வாதிசாயியான ஸ்வ தந்திர ஸ்வரூபத்துக்கு நிரூபகமாம்
இவனுடைய ஸ்வத சித்த அதிசயங்களான ஸ்வரூப விக்ரஹ விபூதிகள் பாஸ்கரேண பிரபா யதா என்னும்படி விசேஷணமாய் நிற்கிற இவளுடைய
ஸ்வரூப விக்ரஹ விபூதி களாலும் லப்த அதிசயங்களாகக் கொண்டு விளங்கி இருக்கும் என்னும் இடம்
தேவதா பாரமார்த்ய வேதிகளான மகார்ஷிகளாலே ப்ரபஞ்சிதம்
இப்படி நாராயண சப்தத்திலும் பத்நீ சம்பந்தம் அனுசந்தேயம் -இப் பத்நீ சம்பந்தம் த்வயத்திலே கண்டோக்தம்
த்வய விவரணமான கத்யத்திலே பிரதமத்தில் பகவன் நாராயண -என்று தொடங்கி சொல்லச் செய்தே
நார வர்க்கத்தின் நடுவே இவளைச் சொல்லிற்றும்
பத்நீத்வ நிபந்தனமான பதி பாரார்த்யத்தாலும் -நர சம்பந்தி நோ நாரா -என்கிற வ்யுத்பத்தியாலும் ஆகக் கடவது –

இங்கு பிரதம அஷரம்
சதுர்த் ஏக வசன அந்தமாய் விபக்தி லோபம் பிறந்து கிடக்கிறது -அது எங்கனே என்னில்
பரமாத்மாவுக்கு ஸ்வ ஆத்மாவை சமர்ப்பிக்க விதிக்கிற இடத்திலே பிரணமத்தை மந்த்ரமாக விதிக்கையாலும்
இதுக்கு அனுஷ்டேயார்த்த பிரகாசம் பிராப்தம் ஆகையாலும் –
இதில் சமர்ப்பணீயமான ஆத்மா த்ருதிய அஷரத்திலே பிரகாசிக்கையாலும் –
இதுக்கு உத்தேச்யமான பர ப்ரஹ்மம் பிரதம அஷரத்திலே பிரக்ருதியாலே தோற்றுகையாலும்-
உத்தேச்ய காரகத்தையும் சமர்ப்பநணீய வஸ்துவையும் சமா நாதிகரித்து பிரயோகிகை உசிதம் அல்லாமையாலும்
உத்தேச்ய காரகத்துக்கு அநுரூபமான சதுர்த்தி விபக்தியை இவ்விடத்தில் கொள்ளப் பிராப்தம்
பிரதம த்ருதிய அஷரங்களை சமா நாதி கரணங்களாகக் கொண்டு ஜீவ பரமாத்கள் உடைய
ஸ்வரூப ஐக்யம் இங்கே சொல்லப் படுகிறது என்னும்
குத்ருஷ்டி பஷத்துக்கு பஹூ பிரமாண விரோதமும்
சமபிவ்யாஹ்ருத நமஸ் சப்த நாராயண சப்த சதுர்த்தி களுடைய ஸ்வ ரசாரத்த விரோதமும் வரும் –

இது பிரணவத்தை தனுஸ் சாகவும்
ஆத்மாவை சரமாகவும்
ஆத்மா சமர்ப்பணத்தை லஷ்ய வேதமாகவும் வகுத்துச் சொல்லுகிற வாக்யத்தாலும் சித்தம் –
இங்கு பர சமர்ப்பணம் பொருளாம் போது
ஸ்வ தந்திர பிரணவத்தில் கண்ட சதுர்த்தியில் படியே இச் சதுர்த்திக்கும் அர்த்தமாகக் கடவது –
இங்கு பிரணவம் பர சேஷ தைகரச ஸ்வரூப பிரதிபாதன பரமான பொருளில் இச் சதுர்த்தீ தாதர்யத்தை விவஷிக்கையாலே
ஆத்மா பரமாத்மாக்களுடைய சேஷ சேஷி பாவம் பிரகாச்யம் ஆகையாலே நிருபாதிக சர்வ சேஷியான ஈஸ்வரனைப் பற்றத்
தான் நிருபாதிகமான சேஷமானபடி அனுசந்தேயம்
த்வம் மே என்று ஸ்வாமியான சர்வேஸ்வரன் தொடர்ந்து பிடித்தாலும் -அஹம் மே -என்று திமிறப் பண்ணும் அஹங்கார விசேஷத்தாலே-
அசத் கல்பனான இஜ் ஜீவாத்மாவை சேஷத்வ அனுசந்தானம் உஜ்ஜீவிப்பிக்கிறது ஆகையாலே
இதன் பிரதான்யம் தோற்றுகைகாக தர்மிக்கு முன்னே சேஷியோடே சம்பந்தத்தைச் சொல்லிற்றே
நிச்சிதே பர சேஷத்வே சேஷம் சம்பரிபூர்யதே -அ நிச்சிதே புனஸ் தஸ்மின் அந்யத் சர்வமஸத்சமம்

இப்படி ஈஸ்வரன் சர்வ சேஷியாம் போது
அஸ்யா மம ஸ சேஷம் ஹி விபூதி ரூபயாத்மிகா இதி ஸ்ருதி ரஸ் சித்தம் மச்சாஸ் த்ரேஷ்வபி மாநத -என்றும்
உபயாதிஷ்டா நம் சிகம் சேஷித்வம் -என்றும் சொல்லுகிறபடியே ஸ பத்நீகனாய் இருக்கும் –
அக்நீஷோமீ யாதிகளில் போலே ஆத்ம ஹவிர் உத்தேச்ய தேவதாத்வம் இருவருக்கும் கூட வென்று தோற்றுகைக்காக
சேஷிகள் இருவராய் இருக்க சேஷித்வம் ஏகம் என்கிறது –
அகாரேணோச்யதே விஷ்ணு சர்வ லோகேச்வரோ ஹரி
உத்த்ருதா விஷ்ணு நா லஷ்மீ உகாரேணோ ச்யதே ததா
மகாராஸ்து தயோர் தாஸ இதி பிரணவ லஷணம் –

மத்யம அஷரத்தை லஷ்மி வாசகமாக சொல்லுகிற கட ஸ்ருதி வாக்யத்தை பராமர்சித்தால்
இருவரையும் பற்ற இவ்வாத்மா சேஷம் என்னும் இடம் சாப்தம்
சேஷத்வம் ஆவது தனக்கு ஒரு உபகாரத்தை பிரதானமாகப் பற்றல் அன்றிக்கே பர உபகார அர்ஹமாகை-
இத்தை -பரகத அதிசய ஆதான இச்சயா உபாதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ பர சேஷி —என்று
ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தார் –

இவ்விடத்தில் ஸ்ருதியில் தோற்றின ஷஷ்டீ த்வி வசனம் லுப்தம் –
இங்கு சம்பந்த சாமான்யத்திலே பிரவ்ருத்தியையான ஷஷ்டியானது
பிரமாண சித்தமாய் அபேஷிதமான விசேஷத்திலே விஸ்ரமிக்கக் கடவது
ததார்த்யம் ஆகிற உபயுக்தமான சம்பந்த விசேஷம் வ்யக்தமாகைக்காக சதுர்த்தி த்வி வசனம் ஏறி லோபித்துக் கிடக்கிறது ஆகவுமாம் –
அப்போது லுப்தமான சதுர்த்தி த்வி வசனத்தின் உடைய விவரணம் ஆகிறது இருவருக்கும் தாசன் என்கிற ஸ்ருதி
இப்படி ஹவிர் உத்தேச்ய தேவதா த்வந்த்வத்தில் ஹவுஸ் ஸூ போலே இருவரையும் பற்ற
இவ்வாத்மா சேஷம் என்னும் போது இங்கு அவதாரணம் அர்த்தம்
இவர்கள் இருவருக்கும் இவ்வாத்மா அனன்யார்ஹ நிருபாதிக சேஷம் என்றதாயிற்று –

இம் மத்யம அஷரம் ஸ்ரௌத பிரயோகத்தாலே அவதாரண பரமான போது இத் தம்பாதிகளை ஒழிந்தார்க்கு நிருபாதிக சேஷம் என்று
சங்கியாமைக்காக அந்யோக வ்யவச்சேதம் இங்கே சாப்தம்
இத்தாலே அந்யரைப் பற்ற சேஷத்வம் ஸ்வரூப பிராப்தம் அன்று என்னும் இடத்தை சொல்லுகையாலே யதாவஸ்தித
அஜ்ஞ்ஞானம் உடையவனுக்கு ததீய பர்யந்தமாக தேவதாந்திர ஸ்பர்சம் நிவ்ருத்தம் ஆயிற்று –
பகவத் அபிமதமான பாகவத சேஷத்வத்தாலே அந்ய சேஷத்வ தோஷம் வாராது என்னும் இடம் புருஷார்த்த காஷ்டையிலே சொன்னோம் –
இப்படி அந்ய யோக வியவச்சேதம் சப்தமாகப் பெற்றால் அயோக வியவச்சேதமும் கால சங்கோசகம் இல்லாமையாலே சித்தம்
இச் சேஷத்வ அயோக வியவச்சேதத்தாலே ஈஸ்வரனுக்கு ப்ருதக் சித்தி அனர்ஹா விசேஷமாய்த் தோற்றின
சேதன த்ரவ்யத்துக்கும் அசித்துக்குப் போலே சரீரதவம் பிரகாசிதம் –

த்ருதீய அஷரம் இங்கு அவசய அனுசந்தேயமான ஜீவனை முன்னாகக் கொண்டு
உக்தமான சேஷத்வத்துக்கு ஆஸ்ரயமான சர்வத்தையும் உபலஷிக்கிறது –
இது ஜீவாத்ம வாசகம் என்னும் இடம் -மகாரம் ஜீவ பூதம் சரீரே வியாபகம் ந்யசேத் -என்றும் –
பஞ்சார்ணா நாம் து பஞ்சா நாம் வர்க்காணாம் பரமேஸ்வர -சம்ஸ்தித காதி மாந்தா நாம் தத்த்வாத் மத்வேன சர்வதா -என்றும்
பூதா நி ஸ கவர்க்கேண சவர்க்கேண இந்த்ரியாணி ஸ டவர்க்கேண தவர்க்கேண ஜ்ஞான கந்தாத யஸ்த தா
மன பகாரேணை வோக்தம் பகாரேண மஹான் பிரக்ருதிருச்யதே
ஆத்மா து மகாரோயம் பஞ்ச விம்ச ப்ரகீர்த்தித -என்றும்
தத்வ சாகர சம்ஹிதாதிகளிலே பஞ்ச விம்சதி தத்த்வங்களுக்கும் ககாரம் முதலான இருபத்தைந்து அஷரங்களும்
வாசகங்களாக வகுத்துச் சொல்லுகையாலே சித்தம்

இத்தால் ஜடத்வா சேதனத்வாதி தோஷ ஆஸ்ரயங்களான இருபத்து நாலு தத்தவங்களை காட்டிலும்
சர்வ காரணமாகவும் சர்வ ரஷகனாகவும் சர்வ சேஷியாகவும் பிரதம அஷரத்தில் தோற்றின ஷட் விம்சகனில் காட்டிலும்
ஜீவாத்மாவுக்கு வேறுபாடு சித்தித்தது
இத் திருமந்த்ரத்தில் மகாரங்களும் நார சப்தமும் நிஷ்கர்ஷ விவஷையாலே விசேஷண மாத்ர பரங்கள்
இவ் வஷரம் வியாகரண ப்ரக்ரியைப் பார்த்தால் -மன ஜ்ஞான இத்யாதி தாதுக்களிலே நிஷ்பன்னமான பதம் ஆகையாலே
ஜ்ஞ அத ஏவ -ப்ரஹ்ம ஸூ தரம் -2-3-19–என்கிற அதிகரணத்தின் படியே –
ஜ்ஞான ஸ்வரூபனுமாய் ஜ்ஞான குணகனுமாய் அணுவான ஜீவாத்மாவைச் சொல்லுகிறது
ஜ்ஞான ஸ்வரூபகனாகப் பொதுவிலே சொன்னாலும் இவன் ஸ்வரூபம் அனுகூலமாகப் பிரமாண சித்தம் ஆகையாலே
ஆனந்த ரூபமான விசேஷமும் சித்திக்கும் –
ஜ்ஞான குணகன் என்னும் இடம் சொன்னால் பிரமாண அனுசாரத்தாலே முக்த தசையில் நிருபாதிக பிரசரணமாய்
சங்கோச ரஹிதமான ஜ்ஞானம் குணமானமை தோற்றும்

இப்படி பரிசுத்தமான ஸ்வா பாவிக ரூபத்தைப் பார்த்தால் அசேதனங்களில் உள்ள ஜடத்வாதிகளும் கழிந்து
சம்சார தசையில் உள்ள க்லேசாதிகளும் கழிந்து நிற்கையாலே ஸ்வரூப தர்மங்கள் இரண்டிலும் உள்ள நிர்மலத்வம் அநு சம்ஹிதமாயிற்று
இந்த பர சேஷதைகரச பரிசுத்த ஸ்வரூபமே முமுஷூ தசையிலே அனுசந்தேயம் என்னும் இடம் –
வ்யதிரேக தத்பாவ பாவித்வாத் ந து உபலப்திவத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -3-3-52-என்னும் ஸூத்ரத்திலே சித்தம்
இவனுக்கு முமுஷூ தசையிலே பல தச அனுசந்தானம் பல அபேஷைக்கு உறுப்பாம் –
புருஷார்த்த பேதங்களுக்கு ஈடாக அனுசந்தேய ஆகாரங்கள் வேறுபட்டு இருக்கும் என்னும் இடம்
ஸ்ரீ கீதையில் அஷ்டம அத்யாயத்திலும்
ஸ்ரீ பாஷ்யாதி களிலும் ஸூ வ்யக்தம் –

ஜீவ பேதம் பிரமாணிகம் ஆகையாலே இத் த்ருதீய அஷரம் –
நாத்மா ஸ்ருதே -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-18–இத்யாதிகளில் -போலே ஜாத் ஏகத்வ பரம் –
இப்படி ஜீவ தத்தவத்தை எல்லாம் இங்கு
தாஸ பூதாஸ் ஸ்வத -சர்வே ஹி ஆத்மன பரமாத்மன -என்கிறபடியே
சாமான்யேன பகவச் சேஷமாகச் சொன்னாலும் அதிலே தானும் அந்தர்கதன் ஆகையாலே –
அத அஹமபி சே தாஸ –என்னும் அனுசந்தானமும் சித்திக்கிறது –

சேஷத்வ ஜ்ஞானமும் ஸ்ய ஸ்வா தந்திர அபிமான நிவ்ருத்யாதிகளும் உபாய விசேஷ பரிக்ரஹமும்
பல பூத சேஷ வ்ருத்தி பிரார்த்தனையும்
தனக்குப் பிறக்கிறது ஆகையாலே தன்னைப் பிரதானமாகக் காட்ட வேண்டுகையால்
த்ருதீய அஷரத்துக்கு விசேஷ்ய பதமாக அஹம் சப்தத்தை
அத்யாஹரித்து அந்வயம் ஆகிறது என்றும் சில ஆசார்யர்கள் சொல்லுவார்கள் –
அப்போதும் பிரணவ விவரணமான
மம நாத யதஸ்தி யோஸ்ம்யஹ சகலம் தத்தி ததைவ மாதவ -ஸ்தோத்ர ரத்னம் -52-இத்யாதிகளில் படியே
குணங்கள் பிரதான அனுவர்திகள் என்கிற ந்யாயத்தாலே தனக்கு சேஷமான குணாதிகளும் உப லஷிதங்கள்

வேறே சில ஆசார்யர்கள் அஸ்மச் சப்தத்தில் வ்யஞ்ஜன மாத்ரமான மகாரத்தை எடுத்து
சாந்தச பிரக்ரியையாலே பூர்வ உத்தர பாகங்கள் லோபித்து நிற்கிறதாய்
த்ருதீய அஷரம் தானே அஹம் அர்த்தத்தை காட்டுகிறது என்றும் யோஜிப்பர்கள்-

பரமாத்மாவுக்கு அஹம் ஹவிஸ்சை சமர்ப்பிக்க விதிக்கிற
நியாச வித்தையிலே பிரணவத்தை மந்த்ரமாக ஒதுகையாலே இது அனுஷ்டேயார்த்த பிரகாசகம் ஆகைக்காக
இதிலே பராவராத்மா விஷயமான
வாசகாம்சம் அபேஷிதம் ஆனால் பிரமாண அநு சாரத்தாலே பிரதம அஷரம் உத்தேச்ய ஆகாரத்தை சொல்லுகையாலும்
மத்யம அஷரம் அன்யார்த்தம் ஆகையாலும் –
பரிசேஷ்யத்தாலே த்ருதீய அஷரம் சமர்ப்பணீயமான பிரத்யகாம ஹவிஸ்சைக் காட்ட வேண்டியதால்
இவ் வஷரத்துக்கு அஹம் என்று பொருளாகை மிகவும் உசிதம் —
ஆகையாலே இறே பட்டர் இங்குற்ற பிரணவத்துக்கு-அகாரார்த்தா யைவ ஸ்வ மஹம்-என்று வியாக்யானம் பண்ணிற்று –

இப்படியே நமஸ் சின் மகாரம் மூன்றத்தொரு பிரகாரத்தாலே பிரத்யகமாத்மாவைச் சொல்லுகிறது –
இது ஷஷ்டி விபக்த் யந்தம் யாகையாலும்
நகாரம் நிஷேதத்தைச் சொல்லுகையாலும் -ந மம -என்றதாயிற்று –
நிஷேதத்தில் ஆதாராதிசயம் தோற்றுகைக்காக நஞ்-முன்னே கிடக்கிறது
இது த்ருஷ்டா சீதா என்னுமா போலே இருக்கிறது –

இம் மகாரத்தில் ஷஷ்டி யானது சம்பந்த சாமான்ய முகத்தாலே உசித சம்பந்த விசேஷத்தை விவஷிக்கிறது
இவ் வபிப்ராயத்தாலே இறே பட்டரும் -அத மஹ்யம் ந -என்றது –
வாக்யங்களுக்கு அவதாரணத்திலே தாத்பர்யம் கொள்ளுகை உசிதம் ஆகையாலே
இப் பிரணவத்திலே மத்யம அஷர சித்தமான தாத்பர்யத்தோடே உறவாய் இருக்கிற இந்த நமஸ் சின் பொருளே
சர்வத்திலும் சாரம் என்னும் இடம்
த்வயஷரஸ்து பவேன் ம்ருத்யு த்ரயஷரம் ப்ரஹ்ம சாஸ்வதம் –
மமேதி த்வயஷரோ ம்ருத்யு ந மமேதி ஸ சாஸ்வதம் -இத்யாதிகளாலே சொல்லப் பட்டது –
சர்வ ஜிஹ்யம் ம்ருத்யுபதம் ஆர்ஜிவம் ப்ரஹ்மண பதம் –
ஏத வான் ஜ்ஞான விஷய கிம் பிரலாப கரிஷ்யதி -என்கிற ஸ்லோகத்துக்கும்
இந் நமஸ்சின் பொருளிலே ப்ராதான்யேன தாத்பர்யம் –

இங்கு ந மம என்கிறது எதை என்னில் –
பிரணவத்தில் த்ருதீய அஷரத்தை அநு ஷங்கித்து-நான் எனக்கு உரியேன் அல்லேன் -என்றதாயிற்று –
அத்யாஹாரத்தில் காட்டில் ஆநு ஷங்கம் உசிதம் என்னும் இடம் ஆநு ஷங்க அதிகரண சித்தம் –
இங்கு ந மமாஹம் என்று விசேஷிக்கையாலே
கீழ் அந்ய சேஷத்வத்தை கழிக்கிற மத்யம அஷரம் கோபாலி வர்த்த ந்யாயத்தாலே
ஸ்வ வ்யதிரிக்த விஷயம் -அஹம் ந மம என்கிற -வாக்யத்தாலே
தன் ஸ்வரூபமும் தனக்கு உரித்து அல்லாமையாலே குணங்கள் பிரதான அனுவர்திகள் என்கிறபடியே
வேறு ஒன்றையும் பற்ற தனக்கு நிருபாதிக ஸ்வாமித்வம் இல்லை என்று விசேஷித்து அனுசந்தானம் பலித்தது –

இது விசேஷ நிர்தேசத்துக்கு பிரயோஜனம் –
இப்படி ஆநு ஷங்கியாத பஷத்தில் பொதுவிலே தன்னோடு துவக்கு உண்டாய்த் தோற்றுகிறவற்றை எல்லாம்
என்னது அன்று என்று தன் துவக்கு அறுக்குகிறது-
இத்தால் தன்னையும் தன்னுடைய குண விக்ராஹாதிகளையும் பற்றத் தன் விசேஷங்களை கழிக்கையாலே
விபரீத அஹங்கார மமகாரங்கள் ஆகிற
சம்சார மூலங்கள் சேதிக்கப் பட்டன -இங்கு கழிக்கிற அஹங்காரம் பிரம ரூபமான புத்தி விசேஷம்
மற்றும் தத்துவங்களில் எண்ணின அஹங்காரம் விவேக மாத்ரத்தால் கழிவது ஓன்று அன்று —
சூஷ்ம சரீரம் விடும் அளவும் இவனைத் தொத்திக் கிடக்கும்
இவ் அசித் சம்பந்தம் இவனுக்குக் கழியாது இருக்க இதின் கார்யங்களாய் பிரம ரூபங்களான
அஹங்காராதி வியாதிகள் மூல மந்த்ராதிகளாலே
சித்தமான விவேகம் ஆகிற பேஷஜ விசேஷத்தாலே கழிகின்றன –

தனக்கு அந்ய சேஷத்வம் பிரணவத்தில் மத்யம அஷரத்தில் கழிகையாலே
அந்யனான தன்னைப் பற்ற தனக்கு சேஷத்வம் இல்லை என்று
பிரித்துச் சொல்ல வேண்டாமையாலே -அந்ய சேஷியாய்த் தோற்றின தனக்கு இங்கு ஏதேனும் ஒன்றையும் பற்ற
நிருபாதிக ஸ்வாமித்வம் கழிக்கையில் தாத்பர்யம் ஆகவுமாம் –
ஜீவனுக்கு சேஷமானவை எல்லாம் நிருபாதிக சர்வ சேஷியான சர்வேஸ்வரன் ஸ்வார்த்தமாக கொடுத்தவை இறே
ஜீவர்களுடைய நித்யங்களான குணாதிகள் ஈஸ்வரனுடைய நித்ய இச்சா சித்தங்கள் —
அசுத்த தசையிலும் சுத்த தசையிலும் உண்டான
அநித்ய விக்ரஹாதிகள் இவர்களுடைய கர்ம ஜன்யமாயும் கர்ம நிரபேஷமாயும் உள்ள அநித்ய இச்சா சித்தங்கள் –
பிரணவத்தில் அந்ய சேஷத்வம் கழிகையாலே
பரமாத்மாவில் காட்டில் அந்யனான தனக்கு தான் சேஷன் அல்லன் என்னும் இடம் சித்திக்கையாலும்
தான் வேறு ஒருத்தற்குச் சேஷம் அல்லாதாப் போலே
வேறு ஒன்றும் தன்னைப் பற்ற நிருபாதிக சேஷம் அன்று என்னும் இடம் இங்கே வருகையாலும்
பிரணவத்தில் தோற்றாத ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தியிலே நமஸ் ஸூ க்குத் தாத்பர்யம் ஆகவுமாம் –
அப்போது பூர்வ ப்ரயுக்த மகாரத்தை ஆநு ஷங்கித்து நான் எனக்கு நிர்வாஹகன் அல்லேன் என்று சொல்லிற்று ஆயிற்று –

ஸ்வா தந்த்ர்ய பதமாத்ரத்தை அத்யாஹரித்து -ந மம ஸ்வா தந்த்ர்யம் -என்றதாகவுமாம் –
இச் சேதனனுக்கு ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி யாவது-நிரபேஷ கர்த்ருத்வ அநர்ஹதை -இதுக்கு அடி
பத்த அவஸ்தையிலும் முக்த அவஸ்தையிலும் ஸ்வ புத்தி பூர்வக பிரவ்ருத்தி பண்ணா நின்றாலும்
ஈஸ்வரன் கொடுத்த கரணாதிகளைக் கொண்டு அவன் ப்ரேரகனுமாய் சஹ காரியமாக ப்ரவர்த்திக்க வேண்டுகை –
ஈஸ்வரனுக்கு பிரதம அஷரத்திலே பிரக்ருதியிலே சொன்ன சர்வ ரஷகத்வம் உபாய அதிகாரிகள் பக்கல்
ஏதேனும் ஓர் உபாயத்தில் ப்ரேரித்துக் கொண்டே வரக் கடவது –
ஜீவன் ஸ்வ ரஷண அர்த்தமான உபாய அனுஷ்டானத்திலும் பராதீன கர்த்தா வாகையாலும் –
இவ்வுபாயம் அனுஷ்டித்தாலும் பல பிரதான ரூப ரஷை பண்ணுவான் பிரசன்னனான சர்வேஸ்வரன் ஆகையாலும் –
பிரதம அஷரத்திலே பிரக்ருதியாலே சொல்லப்பட்ட அவனுடைய சர்வ ரஷகத்வமே இந் நம சப்தத்தாலும் த்ருடீக்ருதம்

இப்படி பிரதம சதுர்தியாலே பிரதிபன்னமான ஈஸ்வரனுடைய நிருபாதிக சர்வ சேஷத்வமும்
ஜீவனுக்கு ஏதேனும் ஒன்றையும் பற்ற நிருபாதிக சர்வ சேஷத்வம்
கழித்த முன்புற்ற யோஜனையாலே த்ருடீக்ருதம் ஆயிற்று –
இஜ் ஜீவனுக்கு உள்ள ஸ்வா தந்த்ர்யமும் -பரார்த்து தச்சேத -ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-3-40–என்கிற
நியாயத்தாலே நிருபாதிக ஸ்வா தந்த்ரனாய் சர்வார்த்த பிரவ்ருத்தனான பரமாத்மா வடிவாக வந்தது –
அப்படியே வஸ்த்வந்தரன்களைப் பற்ற இஜ் ஜீவனுக்கு சேஷத்வமும் நிருபாதிக சேஷியான
அவன் சர்வார்த்தமாக கொடுக்க வந்தது –

ஸ்ரீ மான் ஸ்வ தந்திர ஸ்வாமீ ஸ சர்வத்ர அந்யா நபேஷயா-
நிர பேஷ ஸ்வ தந்த்ரத்வம் ஸ்வா ப்யம் சாந்யஸ்ய ந க்வசித் —
தாஸஸ்ய நமஸச்சேமௌ சாரரௌ தேசிக தர்சிதௌ-
அநந்ய சரணத் வாதே அதிகாரஸ்ய சித்தயே–

லோகத்தில் ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யங்கள் அபிமதங்களாயும்-
தாசத்வ பார தந்த்ர்யங்கள் அநபிமதங்களாயும் தோற்றுகிறது கர்ம ஔபாதிகமாம் அத்தனை –
இங்கே பிரணவ நமஸ்ஸூக்களிலே சொன்ன தாசத்வமும் பார தந்த்ர்யமும்
தாஸ பூதா ச்வத சர்வே -இத்யாதிகளில் படியே
ஸ்வரூப பிராப்தங்கள் ஆகையாலே தத்வ வித்துக்களுக்கு அநு கூலங்கள்-
இப்படி அத்யந்த பரார்த்ய பார தந்த்ர்யங்கள் சித்திக்கையாலே –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே ஸ்வ தந்த்ரனான சேஷிக்கு
இஷ்ட விநியோக அர்ஹன் ஆனபடியாலே ததீய சேஷத்வமும் இங்கே சித்தம் –
சேஷியுமாய் ஸ்வ தந்த்ரனுமாய் ஆகையாலே ஈஸ்வரன் இவ்வாத்மாவை தனக்கு நல்லவரான அடியார்க்கு
தன் உகப்பாலே சேஷம் ஆக்கினால் இது பிராப்தம் அன்று என்ன ஒண்ணாது –விலக்க ஒண்ணாது –
சேஷி யாகையாலே இஷ்ட விநியோகத்துக்கு பிராப்தன் –
ஸ்வ தந்த்ரன் ஆகையாலே இதுக்கு சமர்த்தன் –
மற்றும் ஒரு தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கிற
பாட்டிலும் இவ்வர்த்தம் கண்டு கொள்வது –

ஸ்வேச்சயைவ பரேசாஸ்ய தாததீன்ய பலாத்து ந -பகவத் பக்த சேஷத்வம் ஸ்வேச்சயாபி க்வசித் பவேத் –
குணாதிகே ஹி விஷயே குண சாரஸ்ய வேதிந -ராமே ராமானுஜஸ் ஏவ தாஸ்யம் குணக்ருதம் பவேத் –
தாஸ்யம் ஐஸ்வர்யோகே ந ஜ்ஞானி நாம் ஸ கரோப்யஹம் -அர்த்த போக்தா ஸ போகா நாம் வாக்துரிக்தா நி ஸ ஷமே-
இதி ஸ்வ உக்தி நயா தேவ ஸ்வ பக்த விஷயே விபு -ஆத்மாத்மீ யஸ்ய சர்வஸ்ய சங்கல்பயதி சேஷதாம் –
அன்யோன்ய சேஷ பாவோபி பர ஸ்வா தந்த்ர்ய ஸ்வ பவ -தத்ததாகாரா பேதேந யுகத இத்யுபபாதிதம் –
இப்படி ஸ்வ தந்த்ரனான சேஷியிட்ட வழக்காய் அகிஞ்சனனாய் இருக்கிற இவனுக்கு
அவனாலே புருஷார்த்தம் பெற வேண்டுகையாலே அவனுடைய
வசீகரண அர்த்தமாக த்வயத்திலும் சரம ஸ்லோஹத்திலும் விசதமாகச் சொல்லுகிற சரண வரணம் இங்கே ஸூசிதம் –

ஆத்ம சமர்ப்பணமும் சரண வர்ணமும் அந்யோந்யம் பிரியாமையாலே
ஓர் ஒன்றைச் சொல்லும் சப்தங்களிலே இரண்டும் விவஷிதம் –
யா ஸ தேவோ மயா த்ருஷ்ட புரா பத்மாய தேஷண -ஸ ஏவ புருஷவ்யாக்ர சம்பந்தீ தே ஜனார்த்தன —
சர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ஸ மாதவ -கச்சத்வே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா —என்று உபதேசிக்க
ஏவ முகதாஸ் த்ரய பார்த்தா யமௌ ஸ பரதர்ஷப –
த்ரௌபத்யா சஹிதா சர்வே நமச்சக்ருர் ஜனார்த்தனம் -என்று சொல்லுகையாலும்

தமயந்தி விருத்தாந்தத்திலே -சரணம் பிரதி தேவா நாம் ப்ராப்த காலமமன்யத-என்று உபக்ரமித்து
வாசா ஸ மனசா சைவ நமஸ்காரம் பிரயுஜ்யசா -என்கையாலும்-

நம சப்தம் தானே சரணாகத சப்த ஸ்தானத்திலே படிதம் ஆகையாலே
இது தன்னோடு தன் துவக்கு அற்றுக் கொண்டு சபரிகரமான
ஸ்வ ரஷா பர சமர்ப்பணத்திலே தத் பரம் ஆகவுமாம் —

நமஸ் ஸூ ஆத்ம சமர்ப்பண பரமாய் இருக்கும் என்னும் இடம் –
சமித் சாதன காதி நாம் யஜ்ஞானாம் ந்யாசமாத்மன–நமஸா ய அகரோத்தேவ ஸ ஸ்வ த்வர இ தீரித-என்பதிலும்
நமஸ்காராத்மகம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம் -இத்யாதிகளாலும் பிரசித்தம்

நானும் எனக்கு உரியேன் அல்லேன் -என்னுடையதான வியாபாராதிகளும் எனக்குச் சேஷம் அன்று –
இவை எல்லாம் சர்வேஸ்வரனுக்கே சேஷம் -என்று இவை முதலான அர்த்தங்கள் எல்லாம் நம சப்தத்தில் விவஷிதம்
என்னும் இடம் நிருக்தத்தில் நமஸ்கார பிரகரணத்திலே ஒதப் பட்டது –

இந்த நம சப்தத்துக்கு ஸ்தூல சூஷ்ம பரங்கள் என்று மூன்று அர்த்தங்களை வகுத்து
அஹிர் புத்ன்யன் வியாக்யானம் பண்ணினான் –
ப்ரேஷாவத பிரவ்ருத்திர்யா ப்ரஹ்விபாவாத்மிகா ஸ்வத-உத்க்ருஷ்டம் பரமுதித்ச்ய தன்னம பரிகீயதே –
லோகே சேதன வர்க்கஸ்து த்விதைவ பரிகீர்த்யதே -ஜ்யாயாம்ச்சைவ ததா அஜ்யாயான் நைவாப்யாம் வித்யதே பர –
காலதோ குணதச்சைவ பிரகர்ஷோ யத்ர திஷ்டதி -சப்தஸ்தம் முக்யயா வ்ருத்தயா ஜ்யாயா நித்ய வலம்பதே –
அதச் சேதன வர்க்கோன்ய ஸ்ம்ருத பிரத்யவரோ புதை -அஜ்யாயாம்ச்சா நயோர்யோக சேஷ சேஷித யேஷ்யதே
அஜ்யாயாம்சோ பரே சர்வே ஜ்யாயா நேகோ மத பர -நந்த்ரு நந்தவ்ய பாவேன தேஷாம் தேன சமன்வய –
நந்தவ்ய பரம சேஷீ சேஷா நந்தார ஈரிதா-நந்த்ரு நந்தவ்ய பாவோயம் ந பிரயோஜன பூர்வக —
நீசோச்சயோ ஸ்வ பாவோயம் நந்த்ரு நந்த வ்யதாத்மாக -உபாதி ரஹிதே நாயம் யேன பாவேன சேதன
நமதி ஜ்யாயசே தஸ்மை தத்வா நம நமுச்யதே -பகவான் மே பரோ நித்யம் அஹம் பிரத்யவர சதா —
இதி பாவோ நம ப்ரோக்தோ நமஸ காரணம் ஹி ஸ -நாமயத்யாபி வா தேவம் ப்ரஹ்வீ பாவயதி த்ருவம்
ப்ரஹ்வீ பவதி நோ சே ஹி பரோ நைச்யம் விலோகயன் -அதோ வா நம உத்திஷ்டம் யத்தம் நாம யதி ஸ்வயம் –
வாசா நம இதி ப்ரோச்ய மநஸா வபுஷா ஸ யத் -தன்னம பூர்ண முத்திஷ்டம் அதோ அன்யன்ன்யூன முச்யதே –
இயம் கரண பூர்த்தி ஸ்யாத் அங்க பூர்த்தி மிமாம் ச்ருணு சாச்வதீ மம சம்சித்தி இயம் ப்ரஹ்வீ பவாமி யத் –
புருஷம் பரமுத்திச்சய ந மே சித்திரி தோன்யதா-இத் யங்க முதிதம் ஸ்ரேஷ்டம் பலேப்சோ தத்விரோதிநீ –
அநாதி வாஸ நாரோஹாத் அநைஸ்வர்யாத் ஸ்வ பாவஜாத் -மலாவ குண்டி தத்வாச்ச துஷ்க்ரியா விஹிதிர்ஹி யா
தத் கார்பண்யம் ததுத்போதோ த்விதீயம் ஹியங்கமித்ருசம் -ஸ்வ ஸ்வா தந்த்ர்யாவ போதஸ்து தத் விரோத உதீர்யதே
பரத்வே சதி தேவோயம் பூதா நாம நுகம்பன -அனுக்ரஹைகதீர்-நித்யம் இத்யேதத்து த்ருதீயகம்
உபேஷகோ யதாகர்ம பல தாயீதி யா மதி -விச்வாசாத் மகமே தத்து த்ருதீயம் ஹந்தி வை சதா –
ஏவம் பூதோப்யசக்த சந் ந த்ராணம் பவிதும் ஷம-இதி புத்தா யாஸ்ய தேவஸ்ய கோப்த்ருசக்தி நிரூபணம் –
சதுர்த்த மங்க முத்திஷ்டம் அமுஷ்ய வ்யாஹதி புன உதா ஸீ நோ குண பாவாத் இத்யுத் ப்ரேஷா நிமித்தஜா
ஸ்வஸ்ய ஸ்வாமிநி வ்ருத்திர்யா ப்ராதி கூல்யஸ்ய வர்ஜனம் -ததங்கம் பஞ்சமம் ப்ரோக்தம் ஆஜ்ஞா வ்யாகாத வர்ஜனம்
ஆசா ஸ்தரீயோ பசேவா து தத்விகாத உதீர்யதே சராசராணி பூதா நி சர்வாணி பகவத்வபு
அதஸ் ததா நுகூல்யம் மே கார்யமித்யேவ நிச்சய ஷஷ்ட மங்கம் சமுதிஷ்டம் தத்வ்யாகாதோ நிராக்ருதி –
பூர்ண மங்கை ரூபாங்கைச்ச நம நம் தே பிரகீர்த்திதம் -ஸ்தூலோயம் நமஸாஸ் த்வர்த்த சூஷ்ம மன்யம் நிசாமய
சேதனஸ்ய யதா ஸ்வஸ் மின் ஸ் வீயே ஸ வஸ்து நி -மம இத்யஷர த்வந்த்வம் ததா மம் யஸ்ய வாசகம்
அநாதி வாஸ நா ரூட மித்யா ஜ்ஞான நிபந்தனா -ஆத்மாத்மீய பதார்த்தஸ்தா யா ஸ்வா தந்த்ர்ய ஸ்வ தாமதி –
மே நேத்யேவம் சமீசீன புத்த்யா சாத்ர நிவார்யதே -நாஹம் மம ஸ்வ தந்த்ரோஹம் நாஸ் மீத் யஸ் யார்த்த உச்யதே
ந மே தேஹாதிகம் வஸ்து ஸ சேஷ பரமாத்மன -இதி புத்த்யா நிவர்த்தந்தே தாஸ்தா ஸ் வீயா ம நீ ஷிகா –
அநாதி வாசனா ஜாதை போதைஸ் தைஸ் தைர் விகல்பிதை -ரூஷிதம் யத்த்ருடம் தத்தத் ஸ்வா தந்த்ர்ய ஸ்வத்ய தீ மயம் –
தத் தத் வைஷ்ணவ சார்வாத்ம்ய பிரதிபோத சமுத்தயா -நேம் இத்யேதயா வாசா நந்தரா ஸ்வ ஸ் மாத போஹ்யதே –

இவ்வாறு ஸூஷ்மம் என்பதை விளக்கிற்று –
இனி பரம் என்பதை விளக்குகிறது –

இதி தே ஸூஷ்ம உத்திஷ்ட பரமந்யம் நிசாமய -மந்தா நகார உத்திஷ்டோ ம் பிரதான உதீர்யதே –
விசர்க்க பரமே சஸ்து தத்ரார்த்தேயம் நிருச்யதே -அநாதி பரமேசோ யா சக்தி மான் புருஷோத்தம
தத் ப்ராப்தயே ப்ரதா நோயம் மந்தா நமன நாமவான் -இதி தே த்ரிவிதி ப்ரோக்தோ நம சப்தார்த்த ஈத்ருச –
இவ் விடத்தில் நந்தவ்ய பரம சேஷீ -என்கையாலே நமஸ்ஸூக்கு பரம சேஷியே பிரதிசம்பந்தி என்னும் இடம் ஸ்வத பிராப்தம் –
பரம சேஷி இன்னார் என்று தெளிகைக்காக விசேஷ நாமதேயம்
இங்கு -அ சாஸ்த்ரீயோ பஸேவா து தத் விகாத உதீர்யதே -என்றும் –
தத் வியாகாதோ நிராக்ருதி -என்றும் சொன்ன வசனங்களுக்கு பிரபத்தி காலத்தில் புத்தி பூர்வ ப்ராதி கூல்யம் நடக்குமாகில்
ஆனுகூல்ய சங்கல்பமும் பிரதிகூல்யத்தில் அபிசந்தி விராமாதிகளும் இல்லை யாயிற்றாம் என்று தாத்பர்யம் –
பிரபத்யுத்தர காலத்தில் புத்தி பூர்வ ப்ராதிகூல்யம் நடந்ததாகில் இவன் ருசியோடு பொருந்தின
ஸ்வ தந்த்ர்ய பகவத் ஆஜ்ஞ்ஞைக்கு விருத்தமாம் –

இங்கு ஸ்தூலமான அர்த்தமாவது வ்யாகரணத்தைத் துவக்கி வருகிற ஸ்புட வ்யுத்பத்தியாலே தோற்றுமது
ஸூ ஷ்மமாவது வர்ண சாம்யாதிகளைக் கொண்டு இழிகிற நிருத்த பலத்தாலே தோற்றுமது
பரமாவது ரஹஸ்ய சாஸ்த்ரங்களில் சொல்லுகிற அஷர நிகண்டு பிரக்ரியையாலே தோற்றுமது –
இதில் முற்பட சேஷ பூதனுக்கு ஸ்வதா ப்ராப்த வ்ருத்தியும்-சாங்க நியாச ரூபமான சாத்திய உபாய சரீரமும் வகுத்தது –
அநந்தரம் மோஷ உபாய அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதமான நிரபேஷ ஸ்வா தந்த்ர்யாதி
நிவ்ருத்தி பூர்வக ஸ்வரூப சோதனம் பண்ணிற்று
பின்பு சாத்ய உபாய விசேஷத்தாலே வசீகார்யமுமாய் ப்ராப்யமுமாய் இருக்கிற சித்தம் இருக்கும் படியைச் சொல்லிற்று –
உபாயாந்தரங்களில் காட்டில் சமர்ப்பணத்தின் உடைய பிரதான உபாயத்வம் சொல்லிற்று ஆகவுமாம்

இவை எல்லாம் மேல் சொல்லப் புகுகிற வாக்யார்த்தங்களிலே யதா சம்பவம் அனுசந்தித்து கொள்வது
ஏவம் சிஷித நாநார்த்த நம சப்த சமன்விதா -சர்வே கரணதாம் யாந்தி மந்த்ரா ஸ்வா த்ம சமர்ப்பணே –
ஜீவ சாமான்ய முக்த ஸ்ருங்க க்ராஹி கயாபிவா -மகா ரௌ தார நமசோ ஸ்வா நுசந்தா நதாவிஹ
இஹ யா ஸ்வா நுசந்தான பிரக்ரியை கஸ்ய தர்சிதா -அன்யேஷமபி தத் சாம்யாத் நான்யோன்ய சரணா இமே
அத ஸ்வ பர ரஷாயாம் பராதீ நேஷூ ஜந்துஷூ நிரபேஷ சரண்யத்வம் நியதம் கமலா பதௌ

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கண்ணனின் மாயம் என்ன மாயமே -2015-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

January 4, 2016

ஸ்ரீ கீதாசார்யன் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புநர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜூன

அஜாயமான பஹூ தா விஜாயதே –பஹூ நி மே வ்யதீதானி ஜன்மானி –சன்மம் பல பல செய்து
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியுமானான்

ஆனை காத்தோர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேத்தி யானை யுண்டி அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மையரிக் கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –

வேண்டித் தேவர் இரக்க தான் வந்து -பிறப்பிலியான தானும் தன்னை பிறக்க வேண்டிக் கொண்டு சங்கல்பித்து அருளினான் –
மன்னு வடமதுரை -மதுரா நாம நகரீ புனா பாப ஹரி சுபா -மதுரையார் மன்னன் -விரும்பிய திரு நாமம்
நாம் நம் கர்மத்தின் விளைவாகப் பிறக்கிறோம் -நம் பிறப்பு இறப்பு சுழலைத் தடுப்பதற்காகவே அவன் கருணையால் இச்சையால் திருவவதரிக்கிறான்-

யது குலத்தில்-தேவகன் உக்ரசேனன் எனும் சகோதரர்களுக்கு தேவகியும் கம்சனும் பிறந்தனர் -சூரசேனனுக்கு வ ஸூ தேவர் பருத்தா -குந்தி பிறந்தனர்
விண் ஒலித்தது -கம்சனுக்கு வலித்தது –
சந்திரனின் குளுமையும் யதுவின் எளிமையும் சேரப் பிறந்தான் கண்ணன் -திருமாலின் மனத்தில் இருந்து உருவானவர் சந்தரன் –
ஆகவே சந்தரனைப் போலே நம் மனத்தையும் ஈர்க்கிறான் கண்ணன் –

கருவரங்கத்தில் திருவரங்கன் ஆன கண்ணன்
தேவகிக்கு அடுத்தடுத்து –கீர்த்திமான் -ஸூ ஷேணன்-பத்ர சேனன் -ருஜூ –சம்மர்த்தனன் -பத்ரன் -எனும் ஆறு குழந்தைகள் -அடுத்து யோகமாயா –
உலகத்தையே தன வயிற்றிலே கருவாக வைத்துக் காக்கும் இறைவன் தானே கருவில் இருந்த கருணையை என்ன வென்று சொல்வது —

விண்டது விலங்கு கண்டார் வ ஸூ தேவர் –
ஆவணி மாதத்து கிருஷ்ண பஷ அஷ்டமி திதியில் ரோஹிணி நஷத்ரத்தில் இரவுப் பொழுதில் நான்கு கரங்களுடன்
ஏந்திய சங்கு சக்கரங்கள் உடன் அனைத்து திரு ஆபரணங்கள் உடன் தோன்றிய தாமரைக் கண்ணன் –
ஸூ தபா ப்ருச்னி தம்பதியராய் இருந்து முதலில் ப்ருச்நிகர்ப்பன் -அடுத்து அதிதி காச்யபர் -தம்பதிக்கு வாமனன் –
-இப்போது தேவகி வ ஸூ தேவர் தம்பதிக்கு கிருஷ்ணன் -கண்ணனின் பிறப்பை த்யாநித்தால் நம் பிறவி எனும் விலங்கு அறுமே –

தூய பெரு நீர் யமுனை –
ஸூ ர்யனின் பெண் யமுனை -கண்ணனுக்குத் தக்க சமயத்தில் தொண்டு புரிந்தது -திருவடியைத் தொட்டுத் தூய்மை பெற்று வடிந்தது -ஆகவே நாமும் திருவடி பற்றினால் சம்சாரக் கடலே வடிந்து விடும் –

நஞ்சே அமுதாகும் நேர –
அவித்யா என்பதே பூதனை -அஹங்காரம் மமகாரம் ஆகிய இரண்டும் அவளுடைய மார்புகள் -அதனால் ஏற்படும் துன்பமே விஷப்பால் -கண்ணன் தன அருளால் நம் அறிவின்மையை ஒழித்து யான் எனது எனும் ஆணவத்தையும் அதனால் வரும் துன்பத்தையும் அழிக்கிறான்

பதம் புரிந்த பாதம் —
ஆயர் குலத்தினில் தோன்றிய அணி விளக்கில் விட்டில் பூச்சி போலே தாங்களாகவே வந்து மாய்ந்தனர்
ஜகத் சக்கரம் -படைப்பு அழிப்பு எனும் சுழற்சி -யுகங்களின் சுழற்சி -பிறப்பு இறப்பு கர்ம சக்கரம் சுழற்சி –
ஸூ தர்சன சக்கரத் தாழ்வான் ஏந்தி இருப்பவனுக்கு வண்டிச் சக்கரம் ஒரு பொருட்டோ
நமக்கு ஆபத்து வந்தால் இறைவனின் திருவடிகளே தஞ்சம் -இறைவனுக்கும் அவையே தஞ்சம் -திருக் காலாண்ட பெருமான் –

உத்தமன் பேர் –
கோபியர் குல குருவான கர்க்காசார்யர் -கிருஷி -பூமி – ண-மகிழ்ச்சியையும் -குறிக்கும் கிருஷ்ணன் –
-எங்கும் வசிப்பவன் -வ ஸூ –அத்தை விளையாட்டாகச் சொல்லுகிறபடியால் தேவன்
-கண் அழகு உடையவன் -காக்கும் இயல்வினன் கண்ணன்
-அண்ணன் பலசாலி -பல ராமன் -ஒருத்தி வயிற்றில் இருந்து கர்ப்பத்தை இழுத்து வந்து மற்று ஒருத்தி வயிற்றில் புகுத்துப் பிறந்த படியால் சங்கர்ஷணன்
பேராயிரம் பேருடை உத்தமனின் ஒரு பெயர் போற்றிப் பாடினாலும் நீங்காத செல்வம் நிறையுமே –

முழந்தாள் இருந்தவா காணீரே –
பலராமன் வெள்ளி மலையைப் போலே மோடு மோடு என்று விரைந்தோட -கண்ணன் கருத்த யானை மெதுவே அடியிடுவது போலே பின் தொடர
-முழு முதல் கடவுள் என்பதற்கு அடையாளமாக சங்கு சக்கர அடையாளம் அவன் நடந்த இடம் எங்கும் சித்திரம் எழுதினால் போலே பதிந்தது
-பகவத் பக்தியில் குழந்தைகளான நமக்கு மெதுமெதுவே அறிவூட்டித் தவழ வைத்து பக்திப் பாதையில் விரைந்து செல்ல அருளுகிறான் –
பெரும் பாசத்தோடு நன்மை செய்யும் தாயைப் போலே நாம் தடுத்தாலும் நமக்கு கிருஷ்ணன் நன்மையே செய்து அருளுகிறான் –

மண்ணை உண்டான் விண்ணைக் காட்டினான் –
மஞ்சாடு வரை எழும் கடல்கள் எழும் வானகமும் மண்ணகமும் மற்றும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் கண்டாள் பிள்ளை வாயுளே
-யசோதை மட்டும் அல்ல மற்ற ஆயர் மாதரார்களும் –உயர்ந்தவன் எளிமையாக இருந்தால் அனைவரும் அவனையே பற்றுவர் –

திருடியது வெண்ணெயையா மனத்தையா –
வெண்ணெய் போன்ற ஜீவாத்மாக்கள் -அவன் உடைமையே தானே -ஸ்வதந்தரமாக திரிந்தால் வலுக்கட்டாயமாக தன பால் ஈர்த்து
பக்தியை ஊட்டி தன்னிடம் சேர்த்து கொள்வான் –
சரீர தொடர்பை தள்ளி ஆத்மாவை மட்டும் அழைத்துச் செல்வதைப் போலே வெண்ணெயை மட்டும் விழுங்கி வெறும் கலத்தை உடைப்பான்
ஜீவன் ஸ்வயமாகவே இனியவன் -அவன் கண்ணன் திரு உள்ளத்துக்கு விருந்தானால் மட்டுமே பிறவிப் பயன் பெறுவான் –

கட்டுப் பட்டானா -கட்டை அவிழ்த்தானா –
அஞ்சிய அனநோக்கும் தொழுத கையும் தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே–சீர் மல்கும் ஆய்ப்பாடியில் பரம பதம் ஏக தேசம் என்னலாம் படி
பக்தி என்னும் கயிற்றை அவனே தந்து அருள்வான் –அவன் கட்டுப் பட்டதை த்யாநித்தால் நாம் பிறந்து சம்சாரத்தில் கட்டுப் பட வேண்டியதில்லை –

மரம் சாய்ந்தது –அறம் தழைத்தது –
குபேரனின் புதல்வர்கள் -மணிக்ரீவன் நள கூபரன் -முனிவர் சாபத்தால் மரங்களாக பிறக்க -கண்ணன் திருவடி பட்டதால் சாபம் நீங்கினர் –
தேவையற்ற இரட்டைகள் -விருப்பு வெறுப்பு /காமம் கோபம் /அஹங்காரம் மமகாரம் /இவற்றால் பீடிக்கப் பட்டு வலிய நெஞ்சு -உடையராய் நிற்க
நிர்ஹேதுக அருளால் அவற்றை முறித்து ஈர நெஞ்சினராக்கி -பக்தர்கள் ஆக்கி தம்முடன் சேர்த்துக் கொள்கிறான் –

ஒரு கன்று அழிந்தது -பல கன்றுகள் பிழைத்தன –
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி -உள் திருப்பாதங்களின் சிகப்பை காட்டி அருளினான் -ஆஸ்திக நாஸ்திகரை
அடையாளம் கண்டு கொள்வது கடினமே -கண்ணன் திருவடிகளே நமக்கு அந்த தெளிவை ஏற்படுத்த வேண்டும் –

எல்லாம் கண்ணன்
அகாசூரன் மலைப்பாம்பு -தலை வெடித்து மாயும் படி செய்து அருளி ஆயர் பிள்ளைகள் உடன் களித்து இருக்க
பரம் பொருள் என்பதையும் மறந்து அசூயைப் பட்டான் பிரமன் –
ஓராண்டு காலம் கண்ணன் தானே இடையர்களாகவும் மாடு கன்றுகளாகவும் வடிவு எடுத்து தினமும்
கோகுலத்துக்கும் ப்ருந்தாவனத்துக்குமாக சென்று வந்தான் –
பிரபஞ்சத்தையே தன உடலாக கொண்டவர் ஸ்ரீ கிருஷ்ணர் -இதை ஒரு பழக்காரி கூட உணர்ந்தாள்-ஆனால் பிரமன் இழந்தானே –

கோவிந்தா கோபாலா —
ஸ்ரீ ராமாவதாரத்தால் வீறு பெற்றது குரங்கினம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தால் வீறு பெற்றது கோ வினம்
விந்ததி -அடைந்தவன் -பாலனம் -காத்தல் -நித்ய சூரிகளுக்கு அதிபதியாவதைக் காட்டிலும்-திவத்திலும் பசு நிரை மேய்ப்பது உகப்பவன் –
கன்று மேய்த்து இனிது உகந்த காளை-நீரூட்டி விடுவானாம் -திமிறி ஓடும் பொழுது எழும் புழுதி அளைந்த பொன் மேனி காண உகக்குமே
-பசுக்கள் தங்களுக்குக் காப்பாளானாக தங்களையும் நம்பாது பிறரையும் நம்பாது கண்ணனையே நம்பும் -கண்ணனும் தப்பாது காப்பான்
-கண்ணன் தானாக நம்மை அருள வரும் பொழுது விலக்காமையே வேண்டுவது –

பிடித்தான் பாம்பை -அது எடுத்தது ஓட்டம் –
காளிங்கன் விருத்தாந்தம் -ஒவ் ஒரு ஜீவனும் இறைவனுக்கு அடங்கித் தொண்டு பிரிய வேண்டியவனே –
இதை மீறு நாம் ஸ்வ தந்திரமானவர்களே என்று நினைத்தால் கண்ணன் நம் தலையில் ஏறித் தன தலைமையை நிலை நாட்டுவார்

கொக்கும் கழுதையும் காளையும் –
நமக்கு உள் பகைவர்கள் -இவற்றைப் போக்க நாம் சக்தர்கள் அல்லர் -அவனை சரண் அடைந்து இவற்றை ஒழிக்க வேண்டும் -என்பதை உணர்த்தவே
பகாசூரன் கொக்கு -வடிவிலும் -தேனுகாசூரன் கழுதை வடிவிலும் அரிஷ்டாசூரன் -காளை வடிவிலும் -வந்தவர்களை கண்ணன் அளித்தார் –
இந்த அல்ப விலங்குகளை அழிக்க அவன் வர வேண்டிய தேவை இல்லையே -எனினும் பக்தர்களின் பகைவர்களை நானே அழிக்கிறேன்
என்பதை உணர்த்தவே இந்த லீலைகள் –
முதலில் உள் பகைவர்கள் அழிந்தால் வெளிப்பகைவர்களே இல்லாதபடி சாந்தமாகி விடுவோம் –

தட்டாமாலை
பிரலம்பாசூரன்-ஆயர் சிறுவனாகவே வேடம் பூண்டு -பலராமன் அவன் தலையிலே ஓங்கி அடித்து அவனை முடித்தான் –
ஆத்மா சம்சாரத்தை வென்று முக்தி அடைய ஒரே வலி -தோற்றோம் -நம -அவனைச் சரண் அடைந்து வணங்குவது தானே –
நாம் ஆணவத்துடன் இருந்தால் நம்மை தொர்கடிப்பான் -நாம் வணங்கினால் நம்மை தன தலையில் தூக்கி வைத்துக் கொண்டு மகிழ்வான் –

அதோர் அற்புதம் கேளீர் –
மூங்கில் பெருமிதம் -வேணுகோபாலன் -முரளீதரன்–வம்சிதரன் -நாவலம் பெரிய தீவினில் நங்கைமீர் இதோர் அற்புதம் கேளீர்
-குருவின் மூலம் உபதேசிப்பது போலே புல்லாங்குழல் -ஒரே காற்று வெளி வரும் துளைகளின் அமைப்புக்கு ஏற்ப ஸ்வரம் மாறும்
-ஆத்மாக்கள் அனைவரும் ஸ்வா பாவிகமாக ஒரே தன்மை -இருந்தும் ஏற்கும் உடலைப் பொறுத்து இயல்பில் மாறுவர் –
நாம் ஒவ் ஒருவருமே தேஹம் என்னும் புல்லாங்குழலில் உறைபவர்கள் -நம் இச்சைப்படி உழலாமல் அவன் கைப் புல்லாங்குழலாக இருந்தால் எத்தனை ஆனந்தம் –

உன்பேர் பாடி ஆடை உடுப்போம் –
ஒரு கையால் வணங்கினால் குற்றம் -வெட்கம் மறந்து இரு கைகளாலும் தொழுது ஆடைகளைப் பெற்றார்கள்
-உண்மையான பக்திக்கு வெட்கம் விளக்க வேண்டுமே –

உண்மை அறிந்த ரிஷி பாதணிகள் –
வேர்த்து நெடும் நோக்கு கொண்ட கண்ணன் கடாஷம் பட்ட ரிஷி பத்னிகள்-அப்போதே புனிதம் அடைந்தனர் –
வெற்றுச் சடங்காக ஜபம் பிரதஷினம் செய்வதால் என்ன பயன் -இறைவன் உடைய உகப்புக்காக என்னும் அறிவே முக்கியம்

கல் எடுத்து கல் மாரி காத்தான் –
ஸ்ரீ நாத த்வாரகை -ஸ்ரீ கோவர்த்தன கிரி தாரி சேவை -குன்று குடையாய் எடுத்த குணம் போற்றி –
அஹம் வோ பாந்தவ ஜாத-அவனுக்கு நைவேத்யம் செய்து கலத்தது உண்ண வேண்டும் –

கூத்தன் கோவலன் –
ராசக்ரீடை –குடக் கூத்தாட்டம் -அவன் ஒருவனே புருஷோத்தமன் -நாம் யாவரும் ஸ்திரீ ப்ராயர்கள்
-ஜீவாத்மா பரமாத்மா உறவேல் ஒழிக்க ஒழியாதது அன்றோ
எல்லையற்ற இந்த இறைப் பேரன்பை யன்றோ ஜ்ஞாநியரும் நல தவ முனிவரும் நாடுகின்றார்கள் இதுவே தர்மங்களுக்குள் தலையான தர்மம் –

மன்மதன் தோற்றான்
-கோபிகா கீதம் -ஆற்றாமை உடன் அருளி -சிகை அலங்காரம் புன் சிரிப்பு பீதாம்பரம் உடன் நடுவில் தோன்றி
மன்மதனும் பிச்சை எடுக்கச் செய்யும் அழகோடு மிளிர்ந்தான் –
தறி கேட்டு ஓடும் நம் மனதை அடக்க சாஸ்திரம் ஆசார்ய உபதேசம் உள்ளன -இவற்றுக்கு வசப் படாத போது தன் பேர் அழகைக் காட்டி
நம் மனத்தை கொள்ளை கொள்கிறான் –
தன் பால் ஆதாரம் பெருக வைக்கும் அழகன் அரங்கன் –

கோகுலம் ஒரு வழிப்பாதை —
பக்தர்கள் இங்கேயே இருப்பார் -எதிரிகள் நுழைந்து அழிந்து மீள மாட்டார்கள்
கேசி குதிரை வடிவுடன் இறுதியில் வர அநாயாசாமாக வாயைப் பிளந்து முடித்தான் -வ்ரஜ பூமிக்கே பெருமையான ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்
-விளையாடிய இடங்களை எல்லாம் இன்றும் நமக்கு அளித்து பிறவித் துயரை போக்குகிறது
-கண்ணன் 10 வருஷங்கள் பால்ய சேஷ்டிதங்கள் காட்டி அருளிய இடங்கள் நமக்கு சேம வைப்பு –

அழிக்க ஆள் இல்லை -அழைக்க அக்ரூரர் வந்தார் –
அழகனை தர்சிக்கும் ஆவல் உடன் தேரை செலுத்தினார் கண்ணனைக் கண்டு கட்டித் தழுவிக் கொண்டார் -கோபிகள் அவரை க்ரூரர் என்று ஏசினார்கள்
யமுனைக் கரையில் தேரை நிறுத்தி நீராட கண்ணனை உள்ளே கண்டார் -திகைத்து வெளியே நோக்கினார் -தேரிலும் கண்டார்
அனைத்தும் கண்ணனே -செய்பவனும் செய்விப்பனும் எல்லாம் கண்ணனே -இந்த உண்மையை அறிந்தால்
அவனது கையில் நாம் ஒரு கருவி என்பதை உணரலாம் –
வண்ணான் -த்ரிவிக்ரா மாலா காரர் -உள்ள குறுக்குத் தெரு தேடி சென்று அருளினான்
-நல்ல புஷ்பம் ஆடை ஆபரணம் கண்டாள் அது கண்ணனுக்கே என்னும் தூய மனம் கொள்வோம்

நெஞ்சில் ஈரம் இல்லை -எனவே நெருப்பென நின்ற நெடுமால் –
குவலையா பீடம் -முஷ்டிகன் சாணூரன் -முடித்து -காஞ்சனை பிடித்து இழுத்து நெஞ்சில் ஈரம் ஒரு மூலையிலாவது ஒட்டி உள்ளதா பார்த்து
அது இல்லாததால் தானே நெருப்பாக இருந்து அவனை அழித்தான்
உடனே நேராக தாய் தந்தையை வணங்கச் சிறைக்கு ஓடி அனைத்து சேஷ்டிதங்களையும் காட்டிய நெடுமால் அன்றோ
மனத்தாலும் அறிந்தே பாப்பம் புரிந்தால் தண்டிக்கிறான் -செய்த குற்றங்களுக்கு மனத்தால் இரங்கி பரிதவிப்பதே பிராயச் சித்தத்தின் முதல் படி –

மறுபடியும் முதலில் இருந்து
எல்லாம் நந்தன் பெற்றனன் நல வினை இல்லா வ ஸூ தேவன் இழந்தனனே –காணுமாறு அருளாய் –
அனைத்தையும் காட்டி அருளினான் -அப்போதே நடப்பது போலே தேவகியின் கண் முன்பே –அவன் குணங்கள் திருவிளையாடல்கள்
பற்றிய த்யானமே எப்போதும் உடன் இருந்து நம்மைக் காத்து அருளும்

64 நாள்கள் 64 கலைகள்
சாந்தீபினி -அவந்திகா -இன்றைய உஜ்ஜையினி-ஸூ தாமா உடன் பயின்றார் -ஆய கலைகள் 64 -64 நாள்களில் பயின்றார்
குரு மூலமே கற்க வேண்டும் என்பதைக் காட்டி அருளி -குரு தஷிணை யாக பிள்ளையை மீட்டுக் கொடுத்து அருளினார் –

கண்ணைத் திறந்தான் -கண்ணனைக் கண்டான் –
முசுகுந்தன் -இஷ்வாகு வம்ச மன்னன் -எழுப்பி ஒதுங்கி நிற்க -கண் விழித்து காலயவனன் பார்த்து அவனை சாம்பல் ஆக்கினான்
-இந்த்ரன் கொடுத்த வர பலன் -இன்று டாகூர் த்வாரகை சேவை -ரண சோட்ராய்-கண்ணனை அண்டியவர்க்கு என்றுமே பயம் இல்லையே

த்வராபதி மன்னன் –
120 mile கடலுக்குள் நிர்மாணிக்க சங்கல்பித்தான் -கோமதி நதி சங்கமம் ஆகும் இடம் –
குசஸ் தலீ-ரைத்தவர் குசங்களை தர்ப்பைப் புற்களை பரப்பி தவம் புரிந்த இடம் –
52 கோடி யாதவர்களை குடி ஏற்றினான்
இந்த்ரன் ஸூ தர்மா ராஜ சபையையும் பாரிஜாத மரத்தையும் கண்ணனுக்கு அர்ப்பணித்தான்
இன்று த்வாரகையில் இருக்கும் கோயில் கண்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ர நாபனால் ஸ்தாபிக்கப் பட்டது –
யயாதி சாபத்தால் பட்டாபிஷேகத்தை இழந்த யது குலத்தை மீண்டும் உயர்த்தி முடி சூடினான்
நாமும் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளை நம் தலையால் வணங்கினால் நாம் இழந்ததை எல்லாம் மீண்டும் பெறலாம்-

காணாமலே காதல் –
விதர்பா தேசம் -தலை நகர் -குண்டினபுரம் -பீஷ்மகன் திருமகள் ஸ்ரீ ருக்மிணி பிராட்டி
அண்ணன் ருக்மி -அத்தை மகன் -சிசுபாலன் –
ஏழு ஸ்லோஹங்கள் -ருக்மிணி சந்தேசம் –
தாருகன் -தேரோட்டி -கூட்டிக் கொண்டு கண்ணன் பிராட்டியை தேரில் ஏற்றிக் கொண்டு த்வாரகை அடைந்து அனைவரையும் கூட்டி
கோலாஹல திருமணம் புரிந்தார் -பெருமானை எப்போதும் பிரியாத ஸ்ரீ மகா லஷ்மி பிராட்டியே ஸ்ரீ ருக்மிணி பிராட்டி –
கருணையே உருவான திருமகளைத் தஞ்சமாகப் பற்றி அவள் அருளாலே பெருமானைச் சரண் புகுந்து முக்தி பெறுவோம் –

பழி துடைத்த விவாஹம் –
சத்ராஜித் -ஸ்யமந்தக மணி -ஜாம்பவான் மகள் ஜாம்பவதி திருக்கல்யாணம் –
ஸ்ய மந்தக மணி போன்ற ஜீவாத்மா கண்ணனின் திரு மார்பை அணி செய்யவே படைப்பப் பட்டவன் –
-நம் ஆத்மாவை நம் சொத்து என்று நினைக்காமல் அது கண்ணனின் உடைமை என்ற உண்மையை உணர வேண்டும் –

நரகன் அழிந்தான் -பண்டிகை பிறந்தது –
அதிதி குண்டலங்கள் -வருணன் குடை பறித்து -இந்த்ரனை வென்றவன் நரகாசூரன் -ப்ராக்ஜோதிஷா புரம் தலை நகராக கொண்டவன் –
16108 பெண்களை சிறை வைத்து இருந்தான் -முதலில் முரன் அசுரனை வென்று முராரி பெயர் பெற்றான்
நரகாசூரனை வென்று -அவன் வேண்டுகோள் படி நரக சதுர்த்தி -தீபாவளி –
ஒரு ஜீவனுக்கு பெருமாள் உடன் நடக்கும் திருமணமே முக்தி –ஆகவே ஒரு பக்தன் தன் வாழ்க்கை முடிவதை நினைத்துக் கலங்காமல்
தனக்கு மீண்டும் பிறவி இன்றி கண்ணன் உடன் என்றும் கூடி இருக்கவே விரும்புவான் –

குடும்பத் தலைவன் –
பிரபஞ்சத்துக்கே தலைவன் கண்ணன் –
ஸ்ரீ கிருஷ்ணரின் பிரதான மகிஷிகள் -ருக்மிணீ -ஜாம்பவதி -சத்யபாமா -காளிந்தீ -மித்ரவிந்தா -சத்யா என்னும் நப்பின்னை –பத்ரா –லஷ்மணா –
மற்றும் 16108 மனைவியர் -ஒவ் ஒருவருக்கும் பத்து பிள்ளைகள் –
கண்ணன் ருக்மிணி -திருக் குமாரர் -பிரத்யும்னன் -அவர் ருக்மியின் மகள் ருக்மவதியை மணந்தார் –
அவர்கள் திருக் குமாரர் -அநிருத்தன் -ருக்மியின் பேத்தி லோசனாவை மணந்தார்
என்னிடம் ஒன்றும் இல்லை -என் அடியார்கள் இடமும் ஒன்றும் இல்லை –நான் பூரணன் -அடைவதற்கு ஒன்றும் இல்லை –
என் பக்தர்கள் பூர்ணனான என்னை அடைந்த பின்பு அடைவதற்கு ஒன்றும் இல்லையே -வேறு ஒன்றையும் விரும்ப மாட்டார்கள் என்றபடி
அச்சுதனின் திருப்பாதம் அடைந்தவர்கள் மற்ற எதையும் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்களே –

கல்யாணத்தில் முடிந்த சண்டை –
பாணாசூரனின் புதல்வி உஷை -சித்ரா லேகா அவள் தோழி-மாயா சக்தியால் தூக்கி கொண்டு வரச் செய்து -மணம் புரிய –
பாணன் உடைய 998 கரங்களையும் வெட்டி -பாணனுக்கு உதவ வந்த பரம சிவன் அவன் புத்ரர்கள் அக்னி காலி க்ருதியை தோற்று ஓடினர்
திருமால் நம்மை காக்க வந்தால் எவரது உதவியும் தேவை இல்லை -அவரே தண்டிக்க வந்தால் மற்ற யார் உதவிக்கு வந்தாலும் பயன் இல்லை

முதல் பூஜை –
தர்மர் ராஜ சூய யாகம் -சகா தேவன் -கண்ணனைத் தவிர வேறு யாருக்கும் கொடுத்தால் காலால் உதைப்பேன் என்ன தேவர்கள் பூ மாரி பொழிந்தார்கள்
இவனே ஆதி வேர் தனி முதல் வித்து -தனக்கு ஒரு காரணம் இல்லாதவன் நான்முகனையும் தன் நாபி கமலத்தில் இருந்து படைத்த நாராயணன்
-மோஷ ப்ரதன் இவன் ஒருவனே -வேதைக சமைதி கம்யன்-காரண வஸ்துவையே த்யானித்து மோஷம் பெற வேண்டும் என்றது ஸ்ருதிகளும்
கண்ணனையே த்யானித்து கடைத்தேறுவோம்-

அச்சுவை பெறினும் வேண்டேன் –
த்வாராக நிலயா அச்யுதா கோவிந்தா புண்டரீகாஷா -சரண் அடைந்த திரௌபதிக்கு புடைவை சுரந்தது திருநாமம் இ றே
கண்ணன் அருகில் இருந்தால் கோபியர்களின் அஹங்காரம் ஆகிய ஆடையைப் பறிப்பான் –அவன் கருணையிலும் விஞ்சியது அன்றோ அவன் திருநாமம் –

கன்றைத் தேடி ஓடும் தாய்ப்பசு –
அஷய பாத்தரத்தை -ஸூ ர்யன் கொடுத்த பரிசு கொண்டு பலருக்கும் உணவு அளிப்பாள் த்ரௌபதி -துர்வாசர் சீடர்கள் உடன் மதியம் வர –
அதில் ஒட்டி இருந்த பருக்கை உண்டு அவர்கள் பசி தீர்ந்தது -பாசம் உள்ள பசு கன்றைத் தேடி ஓடிச் சென்று உதவுமே -கண்ணனே பசு -பாண்டவர்கள் கன்று
நாமும் அவனது பக்தர்கள் ஆனால் பாசத்துடன் நம்மை நாடி வந்து காத்து அருள்வான் கண்ணபிரான் –

கொடுத்துப் பெற்றாரா -பெற்றதுக்குக் கொடுத்தாரா –
குசேலர் -சேலா ஆடை -குசேலர் கிழிந்த ஆடை அணிந்தவர் அவல் கொடுத்தது செல்வம் பெறுவதற்கு அல்லவே -கண்ணன் காட்டிய அன்புக்கு
தன்னை சமர்ப்பிப்பதையே நோக்காக கொண்டவர் -பக்தியையும் முக்தியையும் தவிர வேறு எதற்காகவும் கை ஏந்த வேண்டாம் –

காட்டியது எளிமையினை -பெற்றதோ பெருமையினை
துர்யோதனனால் ஆண்ட முடியாத கண்ணன் விதுறர்க்கு வசப்பட்டு இருந்தார் -வலியவர்களின் ஆணவத்தை அடக்குவார்
-கண்ணன் எளியவர்களின் பக்திக்கோ என்றும் அடங்குவார் –

தேர்ப்பாகனின் போர்பாகு –
உடல் ஒரு தேர் -ஜீவன் பயணிப்பவன் தேரோட்டி கீதாசார்யன் -விஜய சாரதி -பார்த்த சாரதி -நம் வாழ்க்கை சரியான இலக்கை அடைய
அந்த பார்த்த சாரதி இடமே நம் பரங்களை ஒப்படைப்போம்

மாசுசா –
வேதாந்த கருத்துகளை தித்திக்கும் பாலாக கறந்து கொடுக்கவே கீதாசார்யன் –
விச்வத்தையே உருவகமாகக் கொண்ட அவன் திருக்கைகளில் ஒரு கருவியே நாம் -தன்னை சரண் அடைந்தவர்களின்
அனைத்து பாபங்களையும் போக்கி தூயவர் ஆக்கி அருளுகிறான் ஆதலால் சோகப் படாதீர் என்று அருளிச் செய்கிறான்
ஒரு ஆசார்யனாகவும் இருந்து கீதோபதேசம் செய்து அருளி நம்மை உஜ்ஜீவிப்பிக்க வந்த அவதாரமே ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்

அடியார்க்கு எளியவன் –
ஆழி கொண்டு மறைத்து ஜயத்ரதனை அழித்து -பீஷ்மரை அழிக்க சிகண்டியை நிறுத்தி
-துரோணரை முடிக்க தர்மபுத்ரரை பேசச் சொல்லி -ஆயுதம் எடேன் என்றாலும் பீஷ்மர் வார்த்தை மெய்ப்பிக்க ஆயுதம் எடுத்ததும்
அடியவர்க்கு மெய்யன் கண்ணன் எது வாயினும் அது மெய்யே
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -நிலை நின்ற தர்மம் அவனே-

பாதம் பட்டது உயிர் வந்தது –
அஸ்வத்தாமா எய்த அஸ்தரம் அபிமன்யுவின் மனைவி உத்தரை கர்ப்பத்தை கலக்க -உத்தரை சரண் புக –
கண்ணன் சக்ராயுதம் எனது நுண் வடிவில் கர்ப்பத்துள் புகுந்து காத்தார் -உயிர் அற்ற பிண்டம் போல் கரிக்கட்டையாய் பிறந்தது
-கண்ணன் -நான் ப்ரஹ்ம சாரி எனபது உண்மையானால் பொய்யே சொல்லாதவன் எனபது உண்மையானால் இக் குழந்தை உயிர் பெற்று எழட்டும்
-என்று கூறி திருவடியால் தீண்ட குழந்தை உயிர் பெற்றதே –
அவன் திருவடி பற்றி முக்தி பெறுவோம்

நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
பகவன் நாம சங்கீர்த்தனமே சிறந்த தர்மம் -யுதிஷ்ட்ரனே உன் அருகில் நின்று கொண்டு தனது திரு நாமத்தை கேட்டுக் கொண்டு இருக்கும்
இந்தக் கண்ணனே பரம் பொருள் -என்றார் பீஷ்மர்
கலியுகத்தில் அவன் திரு நாமங்களை பாடிக் கொண்டே அவனை மனக் கண்ணாலும் கோயில்களிலும் சாதுக்கள் உருவிலும் தர்சிப்பதே சிறந்த தர்மம் –

கையில் புல்லாங்குழல் ஆனால் உலக்கையில் புல்
மண்ணின் பாரத்தை போக்கி அருளினார் -இனி தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருள திரு உள்ளம் கொண்டார் —
அதற்காக திரு விளையாடல் ஓன்று நடத்தினார்
யாதவர்கள் ஆணவம் கொண்டனர் -சாம்பன் என்பவனுக்கு பெண் வேடம் இட்டு ரிஷிகள் இடம் கேலியாக இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும்
-சபிக்க உலக்கை பிறக்கும் உங்கள் குலம் அழியும் -என்றார்கள்
அப்படியே உலக்கை பிறக்க -தங்கள் குலம் காக்க அத்தை பொடியாக்கி கடலில் வீச
-மரப் பொடிகள் கோரைப் புற்கள் -இரும்பு பகுதி மீன் உண்ண -அத்தை ஒரு வேடன் எடுத்து கூராக்கி வைத்தான்
-யாதவர்கள் கோரைப் புற்களால் அடித்துக் கொண்டு மாண்டனர்
-ஆணவப் பட்டால் கடவுளுக்கே உறவானாலும் அழிவு வருமே -ஆணவம் அகன்றால் அழியா வாழ்வு கிட்டும் –

மண்ணின் பாரம் தீர்த்தார் விண்ணில் ஏகினார் —
கண்ணனும் யாதவனே -தான் சங்கல்பித்த படியே தன்னுடைச் சோதி எழுந்து அருள பிரபாச ஷேத்ரத்தை அடைந்தார் –
அங்கு ஒரு மரத்தடியில் ஒரு திருவடி மேல் மற்று ஒரு திருவடியை வைத்து சாய்ந்து கொண்டு இருந்தார் –
மானின் முகம் என்று அந்த வேடன் அம்பு எய்ய -அந்த உலக்கையின் இரும்பு பாகமே அம்பின் முனையாக
அதுவே காரணமாக மண்ணைத் துறக்க எண்ணினார் – பயந்து நின்ற வேடனுக்கு அபயம் தந்து ஸ்வர்க்க வாழ்வையும் அளித்தார் –
தன் தேரோட்டி இடம் தாருகா உடன் த்வாரகைக்கு சென்று த்வாரகையை கடல் விழுங்கப் போவதை சொல்லச் சொல்லி
அங்கு இருந்து பிரபாசத்துக்கு போக சொல்லி
யாரும் இல்லா தனிமையில் முதலில் தனது தேர் சங்கு சக்கரம் ஆகியவை விண்ணில் ஏற பின்னால் தன் அப்ராக்ருத திருமேனி உடன் ஸ்ரீ வைகுண்டம் அடைந்தார் –
ஸ்ரீ மத் பாகவதம் மற்றும் உள்ள புனித நூல்கள் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் வடிவிலே என்றும்
நம்முடனே இருந்து நல் வழி நடத்தும் கண்ணனின் மாயம் என்ன மாயமே –

——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமனின் பாதையில்-2014-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

January 3, 2016

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே சஹச்ர நாம தத்துல்யம் ராம நாம வரா நநே

ஆபத்தாம் அபஹர்தாரம் தாதாரம் சர்வசம்பதாம் லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

கோன்வச்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கஸ்ஸ வீர்யவான் தர்மஜ்ஞச்ச க்ருதஜ்ஞச்ச சத்யவாக்யோத்ருட வ்ரத
சாரித்ரேண ஸ கோ யுகத சர்வ பூதேஷு கோஹித வித்வான் க க ஸ் சமர்தஸ்ஸ கச்சைக ப்ரிய தர்சன
ஆத்மவான் க் ஜிதக்ரோத த்யுதிமான் கோ அன ஸூயக கஸ்ய பிப்யதிதே தேவாஸ்ஸ ஜாத ரோஷச்ய சம்யுகே –

குணவான்
-சௌசீல்யம் -பிறப்பு கல்வி செல்வம் அழகு -பாராமல் கலந்து -குகனோடு ஐவரானோம் முன்பு
-பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம் -அகனமர் காதல் ஐய நின்னோடும் எழுவரானோம்-

வீர்யவான்
-சத்ரோ பிரக்யாத வீர்யச்ய ரஞ்சநீயஸ்ய விக்ரமை
ராம -விராம -தேவர்கள் கொடுத்த வரம் ஒய்வு கொள்ள வேண்டிய படி வீர்யம் -வெட்டுவது மட்டும் வீரம் அல்ல விட்டுக் கொடுப்பதும் வீரமே –
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி சேனை காவலர் ஆயிரம் –
ஜய ஜய மஹா வீர -அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்ற திருமுகம் -இரட்டைகளைக் கண்டு கலங்காமல் –

தர்மஜ்ஞன்
-பொதுவான தர்மங்கள் -சிறப்பான தர்மங்கள் -கருணை தயை –குருவின் ஆனை -தாடகை வதம் -சரணாகத வத்சல்யன்
–இவள் சந்நிதியால் காகம் தலை பெற்றது -விபீஷண ஆழ்வான் இடம் தம் மதம் -குற்றமாகவே இருந்தாலும் ரஷிப்பேன்
-யதி வா ராவணஸ்ய -விபீஷணஸ்ய -மித்ரா பாவேன – வ்ரதம் மம –வானர முதலிகளை வில்லும் கையுமாக விழித்து இருந்து காத்து அருளினான் –
நகச்சின் நபராதயாதி -லுகுதரா ராமஸ்ய கோஷ்டி

க்ருதஜ்ஞன்
-உனக்கு ஏதேனும் ஓன்று நேர்ந்து இருந்தால் பின்பு சீதையை அடைந்தும் என்ன பயன் -என்பானே
-வானர பெண்களையும் புஷ்பக விமானத்தில் அயோத்யை கூட்டிச் சென்றானே
-இரண்டு உயிர்களையும் ரஷித்த ஆஞ்சநேயருக்கு என் செய்வேன் என்று துடித்த மிதுனம் –

சத்ய வாக்யவான்
ராமோ தவிர் நாபி பாஷதே -ஒரு வில் ஒரு இல் ஒரு சொல்- சக்ருத் ஏவ ஒரே தடவை பற்றினாலே போதும் –
பரத்வாஜர் ஆஸ்ரமம் தங்கி கொடுத்த வாக்கைக் காப்பாற்றி -ஆஞ்சநேயரை நந்திக்ராமம் அனுப்பி பரதனை ஆசவாசப் படுத்தி
-சூர்பணகை இடமும் ஆர்ஜவம் காட்டி அருளி –
சத்யேன லோகன் ஜயதி -வைகுந்தத்தை ஜடாயுவுக்கு அருளினான் –

த்ருட வ்ரதன்-
-உயிரை விட்டாலும் பிராட்டியை விட்டாலும் லஷ்மணனை விட்டாலும் சொன்ன சொல்லை விட மாட்டேன்
-புறா கதை –குரங்கு மனிதன் புலி -கதை –
உடல் வளைந்தால் ஆரோக்கியம் -உள்ளமும் உறையும் வளையாமல் உறுதியோடு இருந்தால் அதுவே உண்மையான வலிமை –

சாரித்ரேண யுக்தன் –
கிங்கரராகவே இருப்போம் -விஸ்வாமித்ரர் இடம் -அனுஷ்டானங்கள் ஒன்றும் குறையாமல்
-உடம்பில் புழு பூச்சிகள் ஊர்ந்தது கூட தெரியாமல் -சீதைக்காக உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து-
ராமனை அன்றி அறியாத பரதனை அன்றி அறியாத சத்ருக்னன் -உடை வாள் -போலே பாகவத சேஷத்வமும் பார தந்த்ர்யமே நமக்கு வகுத்தவை
-பிராட்டி நூபுரம் ஒன்றே அறிந்த இளைய பெருமாள் நிலை
-கல்வி செல்வம் பதவி முக்குறும்பு அறுத்து அடிப்படை தர்மங்களை அலட்சியம் செய்யாமல் கடைப்பிடித்தே வாழ வேண்டும் –

சர்வ பூதேஷு ஹிதன்-
அரக்கர்களையும் உயிர் மீட்க நினைத்தான் –
யதி வா ராவணஸ்ய விபீஷணஸ்ய -தீயவர்கள் திருந்தா விடில் உலகுக்குத் தீமை -அவர்களையும் திருத்துவதே அனைவருக்கும் நன்மை –
மரணாணி வைராணி பகைவர்கள் மாண்டு போகலாம் -ஆனால் மாண்டவன் பகைவனாக மாட்டான் அல்லவா –

வித்வான்
-நீண்ட கால தீர்க்க தர்சனம் -அம்மான் பின் போனால் தானே அவதரித்த கார்யம் நிறைவேறும்
–கற்றதையும் கேட்டதையும் மட்டும் ஆராயாமல் உள்ளத்தையும் ஊடுருவிப் பார்ப்பவனே வித்வான் –
கணை யாழி கொடுத்து பிராட்டி கடாஷாம் பெற்று துஷ்க்ருதவான் என்னப் பண்ணி அருளினான் –
குற்றம் பார்த்து கைவிடாமல் ஏற்றுக் கொள்பவர் –

சமர்த்தன்
-வலியவர்கள் நட்பை விட நல்லவர்கள் நட்பு நன்மை செய்யும் -கூடா நட்போ குழியில் தள்ளும்
வாலியை விட்டு ஸூ க்ரீவனை சகாவாகக் கொண்டான் –
கிஷ்கிந்தையும் அயோத்யைக்கு சேர்ந்த இடமே –தண்டிக்கும் பொழுதும் வேட்டை யாடும் பொழுதும் நேருக்கு நேர் செய்யத் தேவதை இல்லையே
மக்கள் அரசன் தொடர்பு உண்டே -குற்றத்துக்கு தண்டனை -தம்பி மனைவியை பறித்து -காலில் விழுந்து சரண் அடைந்தவனை காக்காமல் -வாலியே ஒத்துக் கொண்டான் –
-பாதுகையை பணயமாக பரத ஆழ்வானுக்கு ஈந்து காடேறினான்
-நல்லவர்கள் சாமர்த்தியமாக இருந்தால் உலகுக்கு நன்மையே –தீயவர்கள் சாமர்த்தியமாக இருந்தாலோ உலகுக்குத் தீமை தானே –
பர ப்ரஹ்மத்தை முழுவதும் அறிந்தேன் என்பவன் அறிவிலி -அறிவுக்கு எட்டாதவர் என்று அறிபவனே அறிவாளி –

ஏக் ப்ரிய தர்சனன்-
ரமயதி இதி ராம -லஷ்மண லஷ்மி சம்பன்னன் -ராம என்றால் நாவுக்கு தூய்மை -கண்டால் கண்ணுக்குக் குளிர்ச்சி
-வா போ வந்து இங்கு மீண்டும் போ -தளர்ச்சியைப் போக்கி முதியவனையும் உத்சாஹம் அடைவித்து இளமையும் அழகும் தருபவன் அன்றோ
-சபரி பெருமாள் கடாஷம் பெற்றாள்-
மூக்கு அறுபட்டவள் இளமை அழகு மென்மைப்பண்பு வலிமை தாமரைக் கண்கள் மான் தோல் மரவுரி அணிந்த ஒப்பனை அழகு கொண்டாடி பேசினாள்
இராமனை நாம் தர்சித்தால் பயன் -இராமன் நம்மை கடாஷித்தால் பெரும் பயன் உண்டே –

ஆத்மவான்
-ஜீவாத்மாவின் தன்மை யுடையவனைப் போலே தோன்றினாலும் பரத்வம் ஸ்புடமாக பொலியும் படி அதி மானுஷ சேஷ்டிதங்கள் –
ரிஷிகள் குடிலிலே ஒதுங்கி இருந்த பெருமாள் -ராமோ விக்ரஹவான் தர்ம –சக்கரவர்த்தி திருமகன் என்றே உகப்பவன்
-ஐந்து நாட்களில் நூறு யோசனை நீல சேது அணை கட்டி அருளி -தர்சித்தால் புண்யம் கிட்டும் -பெருமாளையே பாலமாக பற்றினால் முக்தியே கிட்டுமே
புல் எறும்பாதி எல்லாம் வைகுந்தத்து ஏற்றி அருளி -குப்தார்காட் -சரயு நதியில் இறங்கி தன்னுடைச் சோதி அடைந்தான்
பேச்சால் தெய்வம் போன்றும் செயலால் கீழ்த் தரமாக நடப்பதை விட பேச்சில் மனிதனாகவும் செயலில் தெய்வத் தன்மை உடன் இருத்தலே நலம் –
சாம்யா பத்தி அடைகிறான் முக்தன் -ஆனந்தத்திலே சாம்யம் -சாலோக்யம் சாமீப்யம் சாரூப்யம் சாயுஜ்யம் –

ஜிதக்ரோதன் –
-பரதன் என்னை எதிர்க்கிறான் என்ற நினைவே என்னைக் கொன்று விடுமே கோபத்தை விடு என்று இளைய பெருமாளுக்கு உபதேசித்தான்
-ரோஷராமன் இடம் –இராவணன் இடம் -காட்டிய கோபம் -கோபத்தை வசமும் படுத்துவார் -கோபத்தின் வசமும் ஆவார்
-விறகு நெருப்பைத் தூண்டும் -தண்ணீரோ நெருப்பை அணைக்கும் -கோபம் மென்மேலும் கோபத்தையே தூண்டும் –
ஆனால் பொறுமையோ கோபத்தையே அனைத்து மனதினைக் குளிர்வித்து குணவான் ஆக்கும் –

த்யுதிவான் –
ஒளி யுடையவன் -கல்யாண குணங்களையே ஒளியாக கொண்டவர் -நற் குணங்கள் வடிவான சீதா பிராட்டியே ஒளியாக கொண்டவர்
ரிஷிகள் இடம் வெட்கி -முன்னே வந்து ரஷித்தேன் அல்லேனே என்றார் -விளக்கு ஒளி வெளியிருளைப் போக்கும்
-இராமனின் பண்பு எனும் தூய பேரொளி உள்ளிருலான அறியாமையைப் போக்கி விடும்
அடியார்வர்கள் குற்றத்தை பொறுத்த -பெருமாள் சமுத்திர ராஜன் இடம் -தான் விட்ட அம்பு உனது எதிரிகளுக்கு என்றானே –
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -பொறுமை குணத்தால் எப்போதும் உலகை பிரகாசம் ஆக்குகிறார் –
மேகத்துக்கு மின்னல் -ஸூ ர்யனுக்கு ஒளி -பெருமாளுக்கு சீதா பிராட்டி
குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் -ராம திவாகரனுக்கும் ஒளி ஊட்டுபவள் பிராட்டி
பர்ணசாலை பார்த்து தந் தந்தை இறக்க வில்லை உன்னை எனக்கவே வைத்துச் சென்றார் என்றார் பெருமாள் இளைய பெருமாள் இடம் –
பூவுக்கு மணம் -ரத்னத்துக்கு ஒளி -ஆத்மாவுக்கு இறைத் தொண்டு –

அநஸூயன்
அஸூயை இல்லாமல் குற்றத்தையே குணமாக கொள்பவன் அன்றோ
பிறருக்கு கிடைக்கும் பெருமையைக் கண்டு அவர்களை விட மகிழ்ச்சி கொள்பவனும் இவனே –
பொன்முடி சூடும் அரசனாக இருப்பதை விட இராமன் திருவடி சூடும் அரசனாக இருப்பதே சாலச் சிறந்தது
அயோத்யா மக்கள் இன்ப துன்பங்களை தமதாக கொண்டவர் பெருமாள் –

ஜாத ரோஷன் –
எவருக்கு கோபம் வந்தால் தேவர்களும் நடுங்குவார்களோ அவனே ராமன் -கோபத்தை வென்றவன் -ஜிதக்ரோத –கோபப்பட நேரிடில்
-ஜிதக்ரிஷா -அதுவும் நன்மையிலே தான் முடியும்
இறைவனுடைய சினம் என்பது அடியவர்களுக்கு பேர் அருளே –பாகவத அபசாரம் பொறாமை தானே இவன் ஆனைத் தொழில்கள் செய்து அருளியவை
-சாது மிரண்டால் காடு கொல்லாதே
சீறி அருளாதே -நீ தாராய் -பறை -இறைத் தொண்டு -என்று ஆண்டாளைப் போலே நாமும் இறைஞ்சுவோம் –
கோபமும் அருளும் கலந்து இருப்பவன் இராமன் -கோபத்தை விலக்கி இராமனை அருள வைக்கும் கருணை உள்ளவள் சீதாப் பிராட்டி –
இணை பிரியா இவ்விருவரையும் ஒரு சேர நமக்கு நல்கி அருளுபவர் -காரேய் கருணை இராமானுசர்
-இளைய பெருமாள் திரு நாமத்தையும் கைங்கர்ய செல்வத்தையும் தனதாக்கிக் கொண்டு திருவவதரித்தவர்
இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசர் திருவடிகளையே புகலாகப் பற்றி
ஸ்ரீ ராமன் பாதையில் நன்னடை பயில்வோம்
நம் நன்னடத்தையால் சீதா மணாளனின் சீர் அருளுக்கு இலக்காவோம்

———————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ லஷ்மீ கடாஷம்–2011- -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

January 3, 2016

ஸ்ரீ லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமரஷிபி-

ஸ்ரீ -ஸ்ரீ ரெங்க நாச்சியார் –
அம்ருதோத்பவா-ஸ்ரீ அம்ருதபல வல்லித் தாயார் -திரு சோளிங்கர் –சிந்து கன்யா –ஸ்ரீ மோஹன வல்லித் தாயார் -திரு மோகூர்
கமலா -ஸ்ரீ கமல வல்லித் தாயார் -ஸ்ரீ உறையூர் –க -பெருமான் /ம -ஜீவாத்மா / லா -கொடுத்து வாங்குபவள் சேர்ப்பிப்பவள்-
சந்திர சோபனா -ஸ்ரீ பரிமள ரெங்க நாச்சியார் -சந்த்ரனுக்கும் சோபையை ஊட்டுபவள்
விஷ்ணு பத்நீ-ஸ்ரீ வஞ்சுள வல்லித் தாயார் -திரு நறையூர் –
வைஷ்ணவி –ஸ்ரீ யதுகிரி நாச்சியார் -ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் –
வராரோஹா –ஸ்ரீ வரமங்கை நாச்சியார் –
ஹரி வல்லபா -ஸ்ரீ ஆண்டாள் –
சார்ங்கிணீ–ஸ்ரீ கோமள வல்லித் தாயார்
தேவ தேவிகா –ஸ்ரீ பெரும் தேவித் தாயார்
ஸ்ரீ மஹா லஷ்மீ –ஸ்ரீ பத்மாவதிதாயார்
லோக ஸூ ந்தரீ -ஸ்ரீ சௌந்தர்ய வல்லித் தாயார்

ஸ்ரீ –
-ஸ்ரீ யதே –தஞ்சமாக அனைவராலும் பற்றப்பட்டு –ஸ்ரயதே -தான் நாராயணனை பற்றுகிறாள்
ஸ்ருணோதி -சரனாகதர் குறைகளை காது கொடுத்து கேட்கிறாள் -ஸ்ராவயதி -இவள் தனது பரிவு சொற்களை பகவான் காது கொடுத்துக் கேட்கும் படி செய்கிறாள் –
ஸ்ருணாதி-சரனாகதர்கள் உடைய பாபங்களை தந் அருளால் நீக்குகிறாள் —ஸ்ரீணாதி -ஜீவர்களை பெருமாள் உடன் சேர்த்து வைக்கிறாள் –

லஷ்யதே அநயா இதி லஷ்மீ –குளிர்ந்த கடாஷத்துக்கு இலக்காக்குகிறாள் –
அஸ்ய ஈஸாநா ஜகாத விஷ்ணு பத்நீ –
ஹரீஸ்ஸ தே லஷ்மீ ச பத்ன்யௌ-
லஷ்மீ தந்த்ரம் -இந்தரனுக்கு லஷ்மீ உபதேசித்து அருளினாள்

வக்த்ராப்ஜே பாக்ய லஷ்மீ கரதல கமலே சர்வதா தான லஷ்மீ
தோர் தண்டே வீர லஷ்மீ ஹ்ருதய சரசிஜே பூத காருண்ய லஷ்மீ
கட்காக்ரே சௌர்ய லஷ்மீ நிகில குண கணாடம்பரே கீர்த்தி லஷ்மீ
சர்வாங்கே சௌம்ய லஷ்மீ மய து விஜயதாம் சர்வ சாம்ராஜ்ய லஷ்மீ

அராயி காணே விக்டே கிரிம் கச்ச ஸதான்வே
ஸ்ரிம் பிடஸ்ய சத்வபி தேபிஷ்ட்வா சாதயாமசி–ரிக் வேதம் -8-8-13-

குற்றம் செய்யாதவர் யார் -மன்னியுங்கள் -ஸ்ரீ தேவி
உலகில் குற்றம் செய்தவரே இல்லையே -பூதேவி
உலகில் குற்றம் என்பதே இல்லையே -நீளா தேவி

நித்யை வேஷா ஜகன் மாதா -விஷ்ணோ ஸ்ரீ அநபாயி நீ –ராகவத்வே அபவத் சீதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா
சாஷாத் ஷாமாம் கருணா கமலாமிவ அந்யாம்-

லஷ்ம்யா சஹ ஹ்ருஷீகேச தேவ்யா காருண்யா ரூப்யா
ரஷக சர்வ சித்தாந்தே வேதாந்தேபி சகீ யதே –

பெருமாள் -சீதா / இளைய பெருமாள் -ஊர்மிளா /ஸ்ரீ பரத ஆழ்வான் –மாண்டவி /ஸ்ரீ சத்ருகன ஆழ்வான் –ஸ்ருத கீர்த்தி

ஸ்ரீ வத்ஸம்–பீடம் –கார் மேகத்தின் நடுவில் மின்னல் போல் -செய்யாள் -இவளைக் கடாஷித்தே தாமரைக் கண்ணன் சிவந்த கண்ணனாகவும்
அவனைக் கண்டு கொண்டே இவள் திருக்கண்கள் கருத்தும் உள்ளன -இவள் கரு விழிகளால் கண்டு கொண்டே இருப்பதால் திருமேனி கருத்ததாம்
-திருமாலின் சிவந்த திருக் கண்களால் நோக்கப் பெற்றே மலர்மகளது திரு மேனி சிவந்ததாம்

சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த்
தார் வாழ்வரை மார்பன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வ ண் தாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு –மூன்றாம் திருவந்தாதி -100-

நீள் நாகம் சுற்றி நெடுவரை நட்டு -ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையை
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டோமே —பெரிய திருமொழி -11-7-1-

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்கையை விண்ணகர் மேயவனே –பெரிய திருமொழி -6-1-2-

ஒரு மகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போலே வளர்த்தேன் செங்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகனாய்க் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை
மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப்
புறம் செய்யும் கொலோ –பெரியாழ்வார் –3-8-4-

சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு யுண்ணப் போந்து இமிலேற்று வன்கூன்
கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே –திருவிருத்தம் -21-

கர்ப்பம் -பிறப்பு -குழந்தை பருவம்-சிசு /விளையாட்டுப் பருவம் -பாலன் -படிக்கும் பருவம் குமாரன் –இளமை முதுமை
-ஏழு பருவங்களில் ஏற்படும் பாப புண்யங்களே ஏழு எருதுகளின் கொம்புகள் -இவற்றை முறித்து ஜீவனுக்கு முக்தி அளிக்கவே ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
சீர் மல்கும் ஆய்ப்பாடியில் குற்றமொன்றில்லா கோவலர் தம் குடில்களில் ஆயர் பாடிக்கு அணி விளக்காய் பிறந்து
கொத்தலர் பூம் குழல் -பந்தார் விரலி -நப்பின்னை பிராட்டியை திருமணம் புரிந்தான் –

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெரும் செல்வத்தராய்ர்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே –திருவாய்மொழி –5-6-11-

ஸ்ரீ மதே ரம்யஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மாநே
ஸ்ரீ ரங்க வாசிநே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்

——————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்