மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த கலியன் -பிரபன்ன ஜன கூடஸ்தர் -பராங்குச பரகால அருளிச் செயல்கள் ஒப்புமை -ஸ்ரீ . P.B.A.ஸ்வாமிகள்

1-நம்மாழ்வார் விஸ்தரித்து அருளியதை திருமங்கை ஆழ்வார் சுருக்கமாக அருளிச் செய்யும் இடங்கள்

1-1–தூது விடுதல்

நம்மாழ்வார் தூது -திருவிருத்தத்திலும் -திருவாய் மொழியிலும் நான்கு பதிகங்கள்
-அஞ்சிறைய மடநாராய் -வைகல் பூம் கழிவாய் -பொன்னுலகு ஆளீரோ-எம் கானல் அகம் கழிவாய் –
திருமங்கை ஆழ்வார் தூது -தூவிரிய மலர் உழக்கி -வயலாலி மணவாளனுக்கு-3-6- நான்கு பாசுரங்கள் தூது விடுகிறார்
திருப்ப்புல்லாணி பதிகம் -9-4-2- புள்ளினங்காள் புல்லாணி அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே -ஒரே பாசுரம்-
-திருநெடும் தாண்டகத்திலும் தூது பாசுரங்கள் உண்டு

1-2—நர ஸ்துதி விலக்கல்
சொன்னால் விரோதம் பதிகம் -3-9–நம்மாழ்வார் –
திருமங்கை ஆழ்வார் -இப்பிறப்பு அறியீர் –கற்பகம் புலவர் களை கண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும் சொற்பொருள்
ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் -ஒரே பாட்டில் சுறுக்கமாக அருளிச் செய்கிறார்

1-3- அனுகரித்து -தரித்தல்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –5-6–திருத் தாயார் பேச்சால் அருளிய பதிகம்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்-8-2-6–இவரும் திருத் தாயார் பேச்சால் அருளிச் செய்கிறார்

———————————————————

2-நம்மாழ்வார் சுருக்கியத்தை திருமங்கை ஆழ்வார் விரித்து அருளிச் செய்யும் அருளிச் செயல்கள்

2-1- திருவயிற்றில் வைத்து ரஷித்து அருளியது

தளிர் மதிச் சடையனும் நான் முகக் கடவளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா —ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்படக் கரந்துஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமோ –திருவாசிரியம் -7-
மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி பதிகம் -11-6–தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும்
ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன -நிகமனப் பாசுரம் –

2-2- மடலூர்தல் –

குதிரியாய் மடலூர்துமே -5-3-9- என்றும் -யாம் மடலூர்த்தும் -5-3-10-என்றும் அதி சம்ஷேபமாக மாசறு சோதி பதிகத்தில் அருளிச் செய்ததை
சிறிய திருமடல் -பெரிய திருமடல் -இரண்டு திவ்ய பிரபந்தன்களால் விஸ்தரித்து அருளிச் செய்கிறார்

——————————————————————————————————————

3- இருவரும் சமமாக அருளிச் செய்தவை –

3-1- ததீய சேஷத்வம்

பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-இரண்டு பதிகங்கள் திருவாய் மொழியில்
நண்ணாத வாள் அவுணர் -2-6-கண் சோர வெங்குருதி –7-4- இரண்டு பதிகங்கள் பெரிய திருமொழியில் –

3-2- தலைமகள் எல்லாம் இழந்தவற்றை அருளிச் செய்யும் அருளிச் செயல்கள்

மாலுக்கு வையம் அளந்த பதிகத்தில் -6-6–இழந்தது சங்கே -இழந்தது மாமை நிறமே -இழந்தது பீடே —இழந்தது கட்டே –என்று திருத்தாயார் பேச்சு
கரை எடுத்த சுரி சங்கு -பெரிய திருமொழி -8-3- பதிகத்தில் -இழந்ததேன் என் வரி வளையே -இழந்ததேன் என் கன வளையே
இழந்தேன் என் சரி வளையே –இழந்தேன் என் பெய் வளையே –என்று தன வாயாலே அருளிச் செய்கிறார்

3-3- திருத்தாயார் என் நினைந்து இருக்கிறாய்

கங்குலும் பகலும் -7-2- பதிகத்தில் இவள் திறத்து என் செய்கின்றாயே –இவள் திறத்து என் சிந்தித்தாயே –என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு
திவளும் வெண் மதி போல் திருவிடவெந்தை பதிகத்தில் -2-7- உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு

————————————————————————————————

4- கட்டுவிச்சி பேச்சு

தீர்ப்பாரை யாமினி -4-6-தேவதாந்திர கட்டுவிச்சி வந்து புகுந்தமை சொல்லிற்று
சிறிய திரு மடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் வைஷ்ணவ கட்டுவிச்சியின் பேச்சு சொல்லிற்று

——————————————————————————————-

5- திருத் தாயாரை விட்டு செல்வது

உண்ணும் சோறு பதிகம் -6-7-பராங்குச நாயகி திருத் தாயாரை விட்டு தனியாகவே திருக் கோளூர் நோக்கி நடந்தமை சொல்லிற்று
கள்வன் கொல் பதிகம் -3-7-வயலாலி மணவாளன் வந்து பரகாலை நாயகியை திருத் தாயாரை விட்டு கூட்டிப் போனமை சொல்லிற்று ‘

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: